Prk 01-Ayee Jananyacharyar

ஶ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம :

ஸ்ரீமல்லோககு3ரவே நம:

ஸ்ரீவசநபூ4ஷணத்திற்குத் திருநாராயணபுரம் ஆய் (ஜநந்யாசார்யர்) அருளிய வ்யாக்2யாநம்

அவதாரிகை

சரமார்த்த2ப்ரகாஶகமானவதுவே ப்ரமாண ஸாரமென்றும். சரமஶேஷியான ஸதா3சார்யனே ப்ரமேய ஸாரமென்றும், தச்சே2ஷ பூ4தரே ப்ரமாத்ருஸாரபூ4தரென்றும், தச்சே2ஷத்வமே சரமஸ்வரூபமென்றும், தச்சரணாரவிந்த3யுக3ளமே சரமோபாய மென்றும், தத்கைங்கர்யமே சரமோபேயமென்றும் அறுதியிட்டு, தந்நிஷ்ட2ராய்ப்போரும் சரமார்த்தா2பி4லாஷிகளான ஸ்ரீமது4ரகவிகள் தொடங்கித் திருத்தமப்பனார் பிள்ளையளவாக கு3ருபரம்பரயா லப்43மான சரமஶ்லோக சரமார்த்த2 விஶேஷத்தை ஸர்வஸாரஜ்ஞரும் உஜ்ஜீவிக்கும்படி லோகாசார்யபிள்ளை, வசநபூ4ஷணமுகே2ந  வெளியிட்டருளுகிறார்.

மூலத்தின் ப்ரகரணவிபா43 ப்ரகாரம்

ஆய்ப்படி அவதாரிகை தொடர்ச்சி

ப்ரப3லப்ரமாணமான வேத3த்தில் கர்மப்ரதிபாத3கமான அம்ஶத்தைப்பற்ற ப்3ரஹ்மப்ரதிபாதகமான அம்ஶம் ஸாரம். அத்தைப் பற்ற ப்3ரஹ்மநிஷ்ட2ப்ரதிபாத3கமான வசநம் ஸாரமென்றும்,  ஸர்வவிஶேஷணவிஶிஷ்ட ஸ்வரூபத்தைப்பற்ற, ஸர்வவிஶேஷ்ய ப்3ரஹ்மஸ்வரூபம் ப்ரமேய ஸாரமென்றும், அத்தைப்பற்ற ஸுலப் ப்3ரஹ்மவிஶேஷம் ப்ரமேயஸாரமென்றும், ஸாத4நாந்தரநிஷ்ட2ரில் ஸித்த4ஸாத4நநிஷ்ட2ர் ப்ரமாத்ருஸாரபூ4தர், அவர்களைப்பற்ற சரமோபாயநிஷ்ட்ட2ர் ப்ரமாத்ருஸாரபூத4ரென்றும். இப்படி ப்ரமாண ப்ரமேய ப்ரமாத்ரு ஸ்வரூபஶோத4நம் பண்ணுகிற ஸாரஸங்க்ரஹமாய், ஒன்பது ப்ரகரணமான இப்ரபந்தத்தில் (வேதார்த்தம்) ஸூ1) தொடங்கி, (அத்தாலே அது முற்பட்டது)(ஸூ4) அளவாக ஸாரார்த்த2 ப்ரமாண ப்ரகாஶிகையான ப்ரப3ந்தா4திஷ்டி2கை; • (இதிஹாஸ ஶ்ரேஷ்ட2ம்) (ஸூ5) தொடங்கி (ப்ரபத்யுபதே3ஶம் பண்ணிற்றும் இவளுக்காக) (ஸூ22) அளவாக (1) புருஷகாரவைப4வ ப்ரகரணம்: (ப்ரபத்திக்கு)(ஸூ23) என்று தொடங்கி(ப்ரவ்ருத்திசேரும்)(ஸூ114) அளவாக (2)உபாயவைப4வ ப்ரகரணம்; (ப்ராபகாந்தர) (ஸூ115) தொடங்கி/ஸுக2ரூபமாயிருக்கும்) (ஸூ141)அளவாக (3)உபாயாந்தர த்யாக3 ஹேதுவிஶேஷப்ரகரணம்; (இவனவனை) (ஸூ142)தொடங்கி (இடைச்சியாய்ப் பெற்றுவிடுதல் செய்யும்படியாயிருக்கும்) (ஸூ242) அளவாக (4) ஸித்த4 ஸாத4ந நிஷ்டா2வைப4வ ப்ரகரணம்: ( இப்படி ஸர்வப்ரகாரத்தாலும்) (ஸூ243) என்று தொடங்கி (உபேயவிரோதி4களுமாயிருக்கும்) (ஸூ307) அளவாக (5) ப்ரபந்நதி3நசர்யா ப்ரகரணம்: (தான் ஹிதோபதே3ஶம்) (ஸூ 308) தொடங்கி (ருசியாலே வருகையாலே) (ஸூ320) அளவாக (6) ஸதா3சார்ய லக்ஷணப்ரகரணம்: (ஶிஷ்யன்) (ஸூ 321) என்று தொடங்கி (உபகார ஸ்ம்ருதியும் நடக்கவேணும்) (ஸூ365) அளவாக (7)ஸச்சி2ஷ்யலக்ஷணப்ரகரணம்: (ஸ்வதோ3ஷாநுஸந்தா4நம்) (ஸூ366) தொடங்கி (அப4யஹேது) (ஸூ406) அளவாக (8) நிர்ஹேதுக ப்ரகரணம்; (ஸ்வதந்த்ரனை) (ஸூ407) தொடங்கி மேலடங்க (9) சரமப்ராப்ய ப்ராபக ப்ரகரணம்.

ஸித்3தோ4பாயத்தை வளைப்பிக்கும் புருஷகாரவேஷமும். தது3ந்மிஷித ஸித்3தோ4பாயவேஷமும். ததி3தரோபாய த்யாக3, புத்3தி4விசேஷமும். உபாயஸங்க்3ரஸஹ ஸித்3தோ4பாயநிஷ்டா ஸ்வபா4வ விஶேஷமும். தந்திஷ்டா2நுஷ்டா2ந நியதிவிஶேஷமும், தத்ப்ரதா3சார்யலக்ஷண விஶேஷமும், தந்நிஷ்ட2 ஸச்சி2ஷ்யலக்ஷண விஶேஷமும். தத்3பா4வோத3ய நிர்ஹேதுகத்வநிரூபண விஶேஷமும், தத்ஸ்வரூபாநுகு3ண சரமப்ராப்யப்ராபக நிர்ணய விஶேஷமும், ஆகிற அர்த்த2 விஶேஷஸம்ப3ந்த4முடைய – இப்ரப3ந்த4ம் மந்தர த்ரயார்த்த2மான ஸ்வரூப ஸாத4ந புருஷார்த்த2 விஶேஷ ப்ரகாஶகமாயிருக்கும். இதில் ப்ரபந்ந ஸ்வரூபமும். தச்சரம ஸ்வரூபமும் சொல்லுகிற சதுர்த்த2 ஸப்தம ப்ரகரணங்களில் ஸ்வரூபமும்,  ஸாத4ந தத3ங்க3, தத்ஸ்வீகாராபேக்ஷித தத்ப்ரத2மக்ருதி நிரூபகங்களான த்3வீதீய த்ருதீய ப்ரத2மாஷ்டம ப்ரகரணங்களில் ஸாத4நமும். சரமப்ரபந்நசரித சரமஶேஷி சரமப்ராப்ய ப்ரகாஶங்களான பஞ்சம ஷஷ்ட2, சரமப்ரகரணங்களில் புருஷார்த்த2 விஶேஷமும் ப்ரகாஶிக்கிறதிறே. ப்ரத2 மத்3விதீயப்ரகரணங்களால் த்3வயத்தில் ஸமாஸபதா3ர்த்த2மும்,  த்ருதீய ப்ரகரணத்தால் உத்தமனில் ஸ்வீகார பூர்வபா4வி த்யாக3 நிரூபணமும், சதுர்த்த2 ப்ரகரணத்தால் உத்தமனில் அநுஷ்டா2த்ருஸ்வரூபமும், பஞ்சம சரமப்ரகரணங்களால் சரமசது2ர்த்யர்த்த2மும், ஷஷ்ட2ப்ரகரணத்தால் சரமநாராயணபதா3ர்த்த2மும், ஸப்தம ப்ரகரணத்தால் சரமநாரஶப்3தா3ர்த்த2 மும், அஷ்டம ப்ரகரணத்தால் பஹுவ்ரீஹி ஸித்34 ஸம்ப3ந்தா4நுரூப ரக்ஷணநிர்ஹேதுகத்வமும், (தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவனல்லன்) [வா338) இத்யாதி3யாலே சரமநமஶ்ஶப்3தா3ர்த்த2மும்  ப்ரகாஶிக்கையாலே, இப்ரப3ந்த4ம் த்3வயசரமார்த்த2ப்ரகாஶகமுமாயிருக்கும். (ப்ராபகாந்தர பரித்யாக3த்துக்கும்) (வா115) இத்யாதி3யால் ல்யப்பிலர்த்த2மும். (எல்லாமாசார்யனே) (வா322) என்று அவதா4ரணார்த்த2மும். (மோக்ஷத்துக்கே ஹேதுவா யிருக்கும்) (வா433) என்று ணிச்சிலர்த்த2மும் ப்ரகாஶிக்கையாலே இது பாரண்யாபி4மததம சரமார்த்த2ப்ரகாமகமுமாயிருக்கும்.

பிள்ளை ஒருநாள் வெள்ளத்திருமுற்றத்திலே (‘வெளித்திருமுற்றம்’ என்று வழக்கு) சரமார்த்த2த்தையருளிச் செய்யாநிற்க, திருச்சானூரில் நம்பியார் திருவடிகளிலே விழுந்து, பேரருளாளப்பெருமாள் தமக்கு ஸ்வப்நத்திலே இரங்கின சரமார்த்த2 ஸங்க்3ரஹத்தை விண்ணப்பம் செய்ய, தாமநுஸந்தி4க்கிற அர்த்த2மும் அது தானானமையைக்கண்டு வித்34ராய். அவரையும் அங்கீ3கரித்துப் போந்தருளுகிறவந்நாளிலே. பெரிய பெருமாளும் ஸ்வப்நத்திலே திருவாய்மலர்ந்தருளினபடியே ப்ரப3ந்தீ4கரித் தருளின பரமசரமரஹஸ்யமாய்த்து சரமப்ரபந்நஜந ஶ்ரவண மநந ரஸந(நா?) போ4க்3ய பூ4ஷணமான இந்த வசநபூ4ஷணம்.

ஆய்ப்படிவ்யாக்2யாநம்

  1. வேதா3ர்த்த2மறுதியிடுவது ஸ்ம்ருதீதி ஹாஸ புராணங்களாலே.
  2. அவதாரிகை:-இதில் ப்ரத2ம வாக்யத்தாலே, வேத3 தாத்பர்யம்-இப்ரப3ந்த4 விஷயம். அத்தையறுதியிடுகை-ப்ரயோஜநம். நிர்ணயக நிர்ணேயத்வாதி3 – ஸம்ப3ந்த4ம். ஸாரார்த்த2ஶ்ரோதா – அதி4காரி, என்னுமிவை ஸுசிதங்கள். இந்த ப்ரத2ம வாக்யத்தால், உபப்3ருமயோருபப்3ரும்ஹண விஶேஷத்தையருளிச்செய்கிறார்.

ஆய். வ்யா:- (வேதார்த்த2ம் இத்யாதி3) ப்ரத்யக்ஷாதி3 ப்ரமாண விலக்ஷணமாய், பரோக்ஷார்த்த2ப்ரகாஶகமாய். அபௌருஷேயமாய்x.

அவிச்சி2ந்நபாட2 ஸம்ப்ரதா3யஸித்34மாய், யதா2ர்த்த2ப்ரகாஶகமாய், ஸ்வத2ப்ரமாணமாய் ‘வேத3யதீதி வேத3:” என்று பு3பு4த்ஸுக்களுக்கு ஸ்வார்த்த2ப்ரகாஶகமான வேத3த்தின் கர்ம ப்3ரஹ்மமாகிற பூர்வாபர பா4கா3ர்த்தத்தை, ஸம்ஶய விபர்யயமற நிஶ்சயிப்பது.

வேதா3ர்த்தா2நுஸாரிணிகளான ஸதா3சாராதி3 நிர்ணாயகப்ரமாணமான மந்வாதி3 ஸ்ம்ருதிகளாலும், புராவ்ருத்தரூபங்களான இதிஹாஸங்களாலும், ஸர்க்கா3தி3 பஞ்சலக்ஷணோபேதங்களான புராணங்களாலும் என்கிறார். முதலிலே (வேத3ம்) என்று. “ஆதௌ3 வேதா3: ப்ரமாணம்” என்கிற ஆசார்யோக்தியை அநுஸந்திக்கிறார். வேத3ஶப்33ம்   உப4யபா43 ஸாமாந்யவாசியாகையாலே அர்த்த2ஶப்33மும் ஸாமாந்ய வாசியுமாமிறே. (அர்த்த2மறுதியிடுவது) என்று ஶப்33 மறுதியிடுகையை வ்யாவர்த்திக்கிறது. ” இதிஹாஸ புராணாப்4யாம் வேத3ம் ஸமுபப்3ரும்ஹயேத். பி3பே4தி அல்பஶ்ருதாத் வேத3: மாமயம் ப்ரதரிஷ்யதி” என்று அவிஶத3த்தை விஶதீ3கரிக்கும் ஸ்ம்ருத்யாத்3 யுபப்3ரும்ஹணங்களைக்கொண்டே வேதா3ர்த்த2த்தை நிர்ணயிக்கவேணுமென்றதிறே.

  1. ஸ்ம்ருதியாலேபூர்வபா43த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது. மற்றையிரண்டாலும் உத்தரபா43த்தில் அர்த்த2ம் அறுதியிடக்கடவது.

  1. அவ:- இவற்றில் எத்தால் எவ்வர்த்தம் அறுதியிடப்படுமென்ன, அருளிச்செய்கிறார் மேல் (ஸ்ம்ருதியாலே) இத்யாதி3யால்.

வ்யா:- மந்வாதி3 ஸ்ம்ருதியாலே. ப43வத3ர்ச்சாவிதி4பரமான பூர்வபா4கா3ர்த்த2 கர்மவிஶேஷம் அறுதியிடக்கடவது. இதிஹாஸ புராணங்களாகிற ஸ்ம்ருதிவ்யாவ்ருத்தங்களான மற்றையிரண்டா லும், ப43வத்ஸ்வரூபாதி3ஜ்ஞாபகமான உத்தரபா4கா3ர்த்த2 ப்3ரஹ்மம் அறுதியிடக்கடவது. இந்த ஸ்ம்ருத்யாதி3களுக்கு வேதா3ர்த்த2 நிர்ணயகத்வம் ஸமமாகிலும், அர்த்த2வ்யக்திபே43 நிர்ணயகத்வரூபமான தத்தத்3பா43 ப்ராதா4ந்யமுண்டென்றபடி. ‘ஆஸீதி33ம் தமோபூ4தம் ” ” ஆபோ நாரா இதி ப்ரோக்தா: ” என்றித்யாதி3யால் ஸ்ம்ருதிக்கு ப்3ரஹ்மபரத்வமுண்டேயாகிலும் கர்மபரத்வத்திலும், “ஸ்வகர்மணா தமப்4யர்ச்ய” ” வர்ணாஶ்ரமா சாரவதா ” என்றித்யாதி3யால் இதிஹாஸாதி3களுக்குக் கர்ம பரத்வமுண்டேயாகிலும் ப்3ரஹ்மபரத்வத்திலும் ப்ராதா4ந்யமாகக் கடவது. பூர்வபா4கோ3பப்3ரும்ஹண ப்ரதா4ந ஸ்ம்ருதியைப்பற்ற உத்தரபா4கோ3பப்3ரும்ஹண ப்ரதா4நங்களான இதிஹாஸபுராணங்கள் ஸாராம்ஶம் என்னுமத்தாலே (மற்றையிரண்டாலும்) என்று வ்யாவர்த்திக்கிறார்).

  1. இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரப3லம்.
  2. அவ:- இவைதான் தம்மில் ஒக்குமோவென்னில் ஒவ்வாது. இதிஹாஸமே ப்ரப3லம் என்கிறார் மேல். (இவை இரண்டிலும்) இத்யாதி3யால்.

வ்யா:- ஸாரபா4கோ3பப்3ரும்ஹணத்வ ஸாம்யமுள்ள இதிஹாஸ புராணங்களாகிற இரண்டிலும் வைத்துக்கொண்டு. ” யஸ்மிந் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்3ரஹ்மணா புரா! தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே ||” என்றித்யாதி3ப்படியே ராஜஸ தாமஸ ஸங்கீர்ண புருஷ மாஹாத்ம்யத்தையும். ஸாத்விக பரமபுருஷ மாஹாத்ம்யத்தையும் கலந்து கட்டியாக வர்ணிக்குமதாய், பக்ஷபாதியாய், அந்யபரமாய். ப43வத்3 கு3ணமாத்ர ப்ரதா4நமாய். அபூர்ணார்த்த2முமான புராணத்திற் காட்டில், ‘ வேதே3 ராமாயணே புண்யே பா4ரதே ப4ரதர்ஷப4 । ஆதௌ3 மத்4யே ததா2ந்த்யே (தே?)ச விஷ்ணுஸ்ஸர்வத்ர கீ3யதே ।।” என்று ஆதி3மத்4யாவஸாநம் பரமபுருஷ மாஹாத்ம்யத்தையே வர்ணிக்குமதாய், அபக்ஷபாதியாய், அநந்யாரமாய, ப43வத்கு3ண சேஷ்டிதோப4யப்ரகாஶகமாய். ”யதி3 ஹாஸ்தே(தி?) தத3ந்யத்ர யந்நே ஹாஸ்தே(தி?) ந  தத் க்வசித்” என்று பூர்ணார்த்த2முமான இதிஹாஸம்  ப்ரப3லம் என்கிறார். (இரண்டு) என்கிற இணைப்பால் இவற்றின் ஏகபா4கோ3பப்3ரும்ஹணத்வ ஸாம்யமும். ஸ்வஸ்வலக்ஷணஸித்34 பே43மும். அந்யோந்ய ப்ரதியோகி3த்வமும் தோன்றுகிறது. 3.)

  1. அத்தாலே அது முற்பட்டது.
  2. அவ- இந்த ப்ராப3ல்ய ஸித்34மான இதிஹாஸத்தினுடைய ப்ராதா4ந்யத்தை மூதலிக்கிறார் மேல் (அத்தாலே) இத்யாதி3யால்

வ்யா:- ப்ரதிபாத்3யார்த்த2 விஶேஷஸித்34 ப்ராப3ல்யத்தாலே புராணங்களில் வ்யாவ்ருத்தமான இதிஹாஸமானது. “இதிஹாஸாந் புராணாநி கல்பாந் ” இதிஹாஸ புராணப்4யாம் ” என்று உப ப்3ரும்ஹ்ய உபப்3ரும்ஹணங்களிலே, புராணங்களில் முற்பட எடுக்கப்பட்டது என்று. இதின் ப்ராப3ல்யம் ஸ்தி2ரீகரிக்கப்படுகிறது. ஆக, வேத3த்தின் உப4யபா4கா3ர்த்தோ2பப்3ரும்ஹண பே43மும், பூர்வோபப்3ரும்ஹணத்தில் ப்ரப3லமான உத்தரோப ப்3ரும்ஹணத்3வயத்தில் ப்ரத2மோபப்3ரும்ஹணத்தின் ப்ராதா4ந்யமும் சொல்லிற்றாய்த்து. இவ்வளவும் இப்ரப3ந்தா4ரம்பம்.) 4.

  1. 5. இதிஹாஸ ஶ்ரேஷ்ட2மான ஸ்ரீராமாயணத்தால் சிறையிருந்தவளேற்றஞ் சொல்லுகிறது ; மஹாபா4ரதத்தால் தூதுபோனவனேற்றஞ்சொல்லுகிறது.
  2. அவ:- இப்படி ப்ரதா4நமான இதிஹாஸத்3வயந்தான். அர்த்த2 விஶேஷ தார தம்யமுடைத்தென்கிறார் மேல் (இதிஹாஸாதி3 வாக்யத்3வயத்தால்).

வ்யா:- மஹாபா4ரத ராமாயணமாகிற இதிஹாஸத்3வயத்தில், ப்ரதி3பாத்யார்த்த2 விஶேஷத்தைப்பற்ற ஶ்ரேஷ்ட2மான ஸ்ரீராமாயணத்தால் ”காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயாஶ்சரிதம் மஹத்” என்று பிறர் சிறையை விடுவிக்க. பெருமாளைப் பிரிந்து சிறையிருந்த பிராட்டியுடைய க்ருபாதிஶயத்தால் வந்த ஏற்றம் சொல்லுகிறது. “வேதா3நத்4யாபயாமாஸ மஹாபா4ரத பஞ்சமாந்” என்று பஞ்சமவேத3மான மஹாபா4ரதத்தால் – இன்னார் தூ3தனென்று கழுத்திலே மடக்கோலை கட்டி தூ3துபோன க்ருஷ்ணனுடைய ஸுலப4 ரக்ஷகத்வத்தால் வந்த ஏற்றம் சொல்லுகிறது. இதிஹாஸத்வம் இரண்டுக்கும் ஒத்திருக்க, ஸ்ரீராமாயணத்தின் ஶ்ரேஷ்ட2தை(க்குக் காரணம்)? ஶப்33வைஷம்யத்தாலன்று. உப4யமும் ஸம்ஸ்க்ருதமாகையால்; வக்த்ருவைஷம்யத்தாலுமன்று, உப4யவக்தாக்களும் ருஷிகளாகையால்; க்3ரந்த3பா3ஹூள்யத்தாலுமன்று. மஹாபா4ரதமே ப3ஹுளமாகையால். இனி தூ3த்ய ப்ரபா4வத்தைப் பகல் விளக்குப்படுத்தும் சிறையிருந்த ப்ரபா4வம் சொல்லுகையாகிற அர்த்த2 வைஷம்யமே காரணமாகக்கடவது. பிறர் காலில் விலங்கறச் சிறையிருந்தும், பிறரநர்த்த2ம் காணில் கால்நடை கெட்டும், ஸ்வாபா4விக பாரதந்த்ர்யமுடையளாயும் இருக்கும் இளநெஞ்சான புருஷகாரத்தின் ஏற்றம் சொல்லும் ஸாரதமத்தோடொக்குமோ.- தந்தை காலில் விலங்கற வந்தும் சிறைப்படாமல் நழுவியும், பிறரநர்த்த2ம் கண்டு கால் நடை தந்துபோய் கௌ3ண பாரதந்த்ரியம் பா4விக்கும் வன்னெஞ்சுடைய ஸ்வதந்த்ரோபாய வைப4வம் சொல்லும் ஸாரப்ரமாணம்? — இப்படி (இதிஹாஸஶ்ரேஷ்ட2ம்) என்று ஸாரதமப்ரமாணத்தை ப்ரத2மத்திலே உபாதா3நம் பண்ணின வித்தால் ஸாரதம ப்ரமாண வேத்3ய சரமஶேஷியாய். ஸம்ஸாரிகள் சிறையை விடுவிக்கைக்காக இக்கரைப்பட்டுச் சிறையிருந்தும், அவர்கள் வெஞ்சொல் பொறுத்தும். இன்சொல் சொல்வாரைத்தேடியும். ஆற்றாமை கரைபுரண்டும் பாரதந்த்ர்யத்தை நோக்கியும், ஸ்வஶக்தியைக் கைவிட்டும், ஶக்திமாந் பின்தொடரும்படியாயும், ஆஸுர ப்ரக்ருதிகளுக்கு ஹிதம் சொல்லியும். ததீ3யர் வரக்கண்டு ஸத்தையைப் பெற்றும், தத்ஸ்பர்ஶமுள்ளது பெற்றுப் பாடாற்றியும், ததீ3யவிக்3ரஹமங்க3ளாஶாஸநம் பண்ணியும், ததீ3யருடன் ஸல்ல(லா)பித்துத் தாபமாறியும். ஸாபராத4ரளவிலும் க்ருபாளுக்களாயும், அநந்யார்ஹராயும். அநந்யதை3வராயும், அங்யபோ43ராயும் போரும் பரமாப்த க4டகருடைய தன்னேற்றம் இப்ரப3ந்த4த்திலே ஆமூலசூட3ம் ப்ரதா4ந ப்ரமேயம் என்னுமிடம் தோற்ற முதலிலே பி4ந்து3ப்ரக்ஷேபம் செய்தருளுகிறார்”- என்று பிள்ளையருளிச்செய்வர். 5

  1. இவையிரண்டாலும் புருஷகாரவைப4வமும் உபாயவைப4வமும் சொல்லிற்றாய்த்து .
  2. அவ:- இவ்வேற்றமிரண்டின் ஊற்றத்தையருளிச்செய்கிறார் மேல் (இவையிரண்டாலுமித்யாதி3யால்).

வ்யா: சிறையிருத்தல், தூதுபோகல் ஆகிற இவையிரண்டாலும், அபராத44யரிவ்ருத்தி ஹேதுபூ4தமான புருஷகாரத்தின் த3யாளுத்வாதி3வைப4வமும். ஸித்3தோ4பாயத்தினுடைய ஸுலப4த்வாதி3வைப4வமும் ஹார்த3மாகச் சொல்லிற்றாய்த்து. மஹாபா4ரத, ராமாயணங்களை (இவையிரண்டாலும்) என்றருளிச்செய்வர் 6.

  1. புருஷகாரமாம்போதுக்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்.

அவ – இந்தப் புருஷகாரம் கார்யகரமாம்போது வேண்டுவது ஏதேன்ன, க்ருபாதி3கள் வேணும் என்கிறார் மேல் (புருஷகாரமாம் போது) இத்யாதி3யால்.

வ்யா:-ஸ்வதந்த்ரோபாயத்தின் இச்சா2நுவிதா4நம் பண்ணி, தத3திஶயகரமாய்க்கொண்டு புருஷீகரிக்கும்போது. (ஆம்போது) என்றது- உப4யஸம்ப3ந்த4மும், தத3நுரூப்புருஷகாரத்வமும் அநாதி3 யாயிருக்கச்செய்தேயும். தத்ஸ்வாதந்த்ர்ய விருத்34மான காலமன்றியே, க்ரூபாவிஶிஷ்ட ஸ்வாதந்த்ர்யம் கண்டு நிரோத4மற்றுப்புருஷீகரிக்கும்போது-என்றபடி, பரது3:க்கா2ஸஹிஷ்ணுதாருபையான க்ருபையும், பராதீ4நஸ்வரூபாதி3மத்த்வமாகிற பாரதந்த்ரியமும், அந்யார்ஹத்வ யோக்யதா ராஹித்ய ரூபமான அநந்யார்ஹத்வமும் உப4யஸம்ப3ந்தா4நுகு3ணமாக அவஶ்யம் வேணுமென்கிறார். நிரபேக்ஷமான ஸ்வதந்த்ரவஸ்துவின் க்ருபையும், ஸர்வஸாதா4ரணமான பாரதந்த்ரியமும், அதந்யார்ஹமான ஜ்ஞாநஶக்த்யாதி343வத்3 கு3ணமும் புருஷகாரஹேதுவாகக் கூடாமையால், அந்யோந்யஸாபேக்ஷமான இவை மூன்றும் புருஷகார வஸ்துவுக்கே உள்ள தொன்றே. ஆஶ்ரயணோந்முக2ர் து3:க்க2ம் பொறாமைக்கும். தத்34டகத்வம் ப4க்3நமாகாமல் ஸப2லமாகைக்கும். க்ருபாதி3மூன்றும் புருஷகாரத்துக்கபேக்ஷிதமிறே. இதில் பாரதந்த்ர்யாநந்யார்ஹத்வங்கள் ப43வந் நிரூபக வஸ்து ஸ்வரூப ஸ்வபா4வமாய், க்ருபை நிரூபகஸ்வரூபத்தைப்பற்றி நின்று, சேதநனை விஷயீகரித்து, ஜீவபர க4டகங்களாயிருக்கும். புருஷகாரஸ்வரூப ஸ்வபா4வவத் தத் க்ருத்யமும் பராதீ4நமுமாய், பரார்த்த2முமாயிருக்குமிறே.

 

  1. பிராட்டி முற்படப் பிரிந்தது, தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக; நடுவிற் பிரிந்தது, பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக; அநந்தரம் பிரிந்தது, அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.
  2. அவ:- இந்த க்ருபாதி,களின் புருஷகார ஹேதுத்வத்தை அநுஷ்டாக பேஷமாக மூதலிக்கிறார் மேல் ( பிராட்டி ) இத்யாதியால்.

வ்யா:-நித்யாநபாயிநியான பிராட்டி, ராவணாபஹ்ருதையாய் முற்படப் பெருமாளைப் பிரிந்து காட்டிற்று-”கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந்நாபராத்4யதி” என்று, தன்னை நலிந்துபோந்த ராக்ஷஸிகளை, செருக்கனான திருவடியுடன் மன்றாடி, குற்றமே நற்றமாக நோக்கினபடியாலே, புருஷகார முக்2யகாரணமான தன் க்ருபையை, ஸ்வாபராத4பீத4ரெல்லாரும் அறியும்படி வெளியிடுகைக்காக. இளையபெருமாளையிடுவித்துக் காட்டிலேவிட நடுவிற்பிரிந்தது.-“ந க2ல்வத்3யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீ ஜலே | த்யஜேயம் ராக4வம் வம்ஶே ப4ர்த்துர்மா பரிஹாஸ்யதி।।” என்று. கைவிட்ட

பெருமாள் நினைவைப் பின்சென்று அவரை விட்டிருந்தமையால், ஸ்வகார்யாநுகு3ணமான பாரதந்த்ர்யத்தை து3:ஸ்வதந்த்ரரும் அறியும்படி வெளியிடுகைக்காக. அஶ்வமேத4 யாக3த்திலே பெருமாள் திருமுன்பே பிறந்தகத்தைப்புக்கு, அநந்தரம் பிரிந்தது-“அநந்யா ராக4வேணாஹம்” என்கிற ஸ்வவ்ருத்த்யநுரூபமான அநந்யார்ஹத்வத்தை அந்யார்ஹருமறியும்படி வெளியிடுகைக்காக. பிரிவுக்கு யோக்3யதையற்றும் பிரிந்து காட்டிற்று-ஸ்வாஶ்ரயணத்தில் ருசி விளையும்படி ஸ்வஸ்வபா4வவிஶேஷத்தை வெளியிடுகைக்காக- என்றபடி.

  1. ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களிரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும்.

 

9.அவ:- ஸம்ஶ்லேஷத3ஶையிற்போல் விஶ்லேஷத3ஶையிலும் புருஷகாரத்வம் தோற்றுமோ? என்ன. தோற்றும் என்கிறார் மேல் (ஸம்ஶ்லேஷ) இத்யாதி3யால்.

வ்யா:- “ஸீதாமுவாச”,  ” மாழைமான் மடநோக்கி ” (பெரியதிரு 5-8-1) “தமேவ ஶரணங்க3த: ” என்று லக்ஷ்மண குஹ காகாதி3களுக்குப் புருஷகாரமானமை ஸம்ஶ்லேஷ தஶையில் தோற்றினாப்போலே. ராக்ஷஸீ குஶலவ பூ4மிகளுக்கு அபராத44ய நிவர்த்தக புருஷகாரமானமை விஶ்லேஷ த3ஶையிலும் விஶத3மாகத்தோற்றும். அத்த3ஶையில் ததீ3ய சித்த காலுஷ்யத்தை ஶமிப்பித்தமையுண்டிறே.

  1. ஸம்ஶ்லேஷ 3ஶையில் ஈஶ்வரனைத் திருத்தும் ; விஶ்லேஷ 3ஶையில் சேதநனைத் திருத்தும்.
  2. வ்யா :- தத்தத்33ஶைகளில் புருஷீகரிப்பிக்கும் ப்ரகாரம் ஏதென்ன. அவனைச் சிறாங்கிக்கும் ஸம்ஶ்லேஷத3ஶையில் நியந்தாவான ஸ்வதந்த்ரனைத் திருத்தும்; தன்னாற்றாமைக்கிறையான விஶ்லேஷ த3ஶையில் நியாம்யனான ஸ்வதந்த்ரனைத் திருத்தும். 10.
  3. இருவரையும் திருத்துவதும் உபதேஶத்தாலே.

11 அவ:- எத்தாலே திருத்துவதென்ன, தத்தது3சிதோபதேஶத்தாலே யென்கிறார்.

வ்யா:- “பிதேவ த்வத்ப்ரேயாந் ஐநநி பரிபூர்ணாக3ஸி ஜநே ஹிதஸ்ரோதோவ்ருத்த்யா ப4வதி ச கதா3சித்கலுஷதீ4:। கிமேதந்நிர்தோ3ஷ: க இஹ ஜக3தீதி த்வமுசிதைருபாயைர் விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத3ஸி ந: ।।” என்று, சேதநன் பண்ணும் எண்ணிறந்த குற்றங்களைக் கண்டு ‘இவனை அடக்கவேணும்’ என்று ஹிதபு3த்3தி4யாலே ஹிதைஷியானவன் சீற, கண்டாற்றத இவளும் ‘இச்சீற்றத்துக்கடியென்?’ என்ன, ‘இவன் தீரக்கழியப்பண்ணுகிற குற்றங்கள்’ என்ன. ‘இங்கு அதில்லாதாரார்’ என்ன, ‘குற்றவாளரைக் கைக்கொள்ளில் ஶாஸ்த்ரம் சிலுகிடாதோ’ என்ன, ‘குற்றம் கண்டு கைவிடில் க்ருபை குமரிராதோ’ என்ன. ‘இரண்டுங்குலையாமல் செய்யவடுப்பதென்?’ என்ன. ‘உம்முடைய ஶாஸ்த்ரமாயாதை3யை விமுக2ர் பக்கலிலும், க்ருபாகு3ணத்தை அபி4முக2ர் பக்கலிலும் விப4க்தமாக்கும்’ என்ன. அவனப்படிச் செய்யும்படி. ஈஶ்வரனையுபதேஶித்துத் திருத்தும்.

(மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம: ஸ்தா2நம் பரீப்ஸதா।

வத4ம் சாநிச்ச2தா கோ4ரம் த்வயாஸௌ புருஷர்ஷப4:।।

 விதி3தஸ்ஸ ஹி த4ர்மஜ்ஞ: ஶரணாக3தவத்ஸல:।

தேந மைத்ரீ ப4வது தே யதி3 ஜீவிதுமிச்ச2ஸி।।)

 என்று, உனக்குக்காலூன்ற இடம் வேண்டில், குட்டிக் குலையாக அறுப்புண்ணா தொழியவேண்டில், பெருமாளுடன் தோழமை கொள்ள அடுக்கும். ஆநுகூல்யலேஶம் கண்டு கைக்கொள்ளும் ப்ரஸித்34ராய். ‘ப்ராதிகூல்யநிவ்ருத்தியேயமையும் கைக்கொள்ள’ என்னும் த4ர்ம ஸூக்ஷ்மமறியுமவராய், தாமிருந்தவிடத்தையடைந்தவர்கள் குற்றம் நற்றமாகக்  கொள்ளுமவராய்க்காண் அவர் இருப்பது.  நீ குடி வாழவேண்டில் அவருடன் உறவுகொண்டு வாழ்ந்திடுவாயாக என்று க்ரூரசேதநனை உபதே3ஶித்துத் திருத்தும் என்கிறார். 11.

12 உபதே3ஶத்தாலே இருவருடையவும் கர்மபாரதந்தர்யம் குலையும்,

  1. அவ:- இந்த உபதே3ஶ த்3வயத்தால் ப2லித்தது இன்ன தென்கிறார் மேல் (உபதே3ஶத்தாலே) இத்யாதி3யால்.

வ்யா: “கர்த்தாவானவன் கர்மப2லம் அநுப4விக்க வேண்டாவோ? நாம் செய்வதென்” என்று கர்மத்தின் தலையிலே ஸ்வாதந்த்ர்யத்தைச் சுமத்தி மேல் நழுவுகிற ஈஶ்வரனுடைய கர்மபாரதந்த்ர்யமும்.-”கர்மமென்று ஒன்றுண்டோ ? தேவர் கற்பித்தவித்தனை யன்றோ. அசேதநமான இதுக்கு ப்ரேரகரும் ப2லப்ரத3ரும் வேறுண்டோ ? ஆன பின்பு மூச்சற்ற கர்மத்துக்கு ஒரு ஸ்வாதந்த்ர்யத்தைக் கற்பித்துப் பரதந்த்ரவஸ்துவைப் பாறடிக்கை உமக்குப் பழியாய்விடுங்காணும்; இவரைக்கைக்கொண்டருளீர்” என்னும் இவளுபதே3ஶத்தாலே குலையும். அநாதி3 காலமே பிடித்துப் பிறப்பிறப்பதாய்க்கொண்டு ஸ்வர்க்க3 நரகங்களிலே சுழன்று அலைந்து அலைப்படுகிற முக்34 சேதநனுடைய அநாதி3 கர்ம பாரதந்த்ர்யமும் – உன்னுடைய ஜ்ஞாத்ருத்வ நிப3ந்த4த கர்த்ருத்வமும், ப43வத3தீ4நமுமாய், தத்ப்ரேரிதமுமாய் வருகையால், அந்தக்கர்த்ருத்வமடியான கர்மமும் அப்படியிருக்குமத்தனையல்லது அதுக்கு ஸ்வாதந்த்ர்யக3ந்த4முமில்லை காண். ஆனபின்பு அவன் போ43 ரஸத்துக்கு உறுப்பாம்படி உன்னை ப43வதே3க பரதந்த்ரனாக அநுஸந்தி4த்து உஜ்ஜீவி’ என்னும் இவளுபதே3ஶத்தாலே குலையும். 12.

  1. உபதே3ஶத்தாலே மீளாதபோது சேதநனை அருளாலே திருத்தும். ஈஶ்வரனை அழகாலே திருத்தும்.
  2. அவ:- இவ்வுபதே3ஶவிஶேஷம் ப2லியாவிடில் ஸித்3தோ4பாய விஶேஷங்களாலே திருத்தும் என்கிறார் மேல்(உபதே3ஶத்தால்) இத்யாதி3யால்.

வ்யா:-உப4பாநுகு3ணமான உபதே3ஶத்தால் உப4ய பரதந்த்ரரும் மீளாதபோது, உபதே3ஶம் கேளாமல் திமிரித்திரியும் தன் புத்ரனான  சேதநனை, வத்ஸலையான தன் மாத்ருத்வ நிப3ந்த4நமான அருளாலே ப43வத3பி4 முக2னாம்படி திருத்தும்; ‘இவன் அபி4முக2னாய் உஜ்ஜீவிக்கவேணும்’ என்னும் இவளிரக்கம் இவனை அபி4முகீ3கரித்து உஜ்ஜீவிப்பிக்குமிறே. தன்னுபதே3ஶத்தை மீறவல்ல ஸ்வதந்த்ர நியந்தாவான தன் வல்லப4னை-ஆலோகாலாபாதி3களின் அளவிறந்த அழகாலே பித்தேறி. அவன் ‘உனக்கென் செய்கேன்’ என்று நீர்ப்பண்டமான த3ஶையிலே, ஓடமேற்றிக் கூலி கொள்வாரைப்போலே, ”இச்சேதநனை அங்கீ3கரித்தருளவேணும்” என்று காட்டிக்கொடுத்து, தானே சிதகுரைக்கிலும், ”என்னடியார் அது செய்யார்” (பெரியாழ்திரு4-9-2) என்று அவன், தன்னையும் உதறிக் கைக்கொள்ளும்படி- திருத்தியருளும். போ433ஶையில் திருப்பவளத்தில் கொடுக்கும் கர்ப்பூர நிகரமாகக் கைக்கொள்ளும்படி மெய்யான உபாயங்கொண்டிறே இவள் திருத்துவது. ஸ்வஸௌந்த3ர்ய காருண்யரூப ஸித்3தோ4பாய ஸாமர்த்2யம் காட்டவேணுமென்னுங் கருத்தைப் பின்சென்று உபதே3ஶம் ஸப2லமாகாமல் ஒழிகிறதித்தனை. ஸ்தநந்த4யனையும் நாயகனையும் அணைத்துக்கொண்டு ஶயிக்குமாப்போலே போ434டகத்வங்கள் ஏககாலத்திலே க4டிக்கையால் போ43புருஷகாரவிச்சே23ம் வருமென்று ஶங்கிக்க வேண்டா.

  1. அறியாத அர்த்தங்களையடைய அறிவித்து, ஆசார்ய க்ருத்யத்தையும், புருஷகார க்ருத்யத்தையும், உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபா4ரதத்தில் உபாயவைப4(மு)ம் சொல்லிற்றாய்த்து.
  2. அவ:- கீழ் (மஹாபா4ரதத்தால்) (வா 5) என்று ப்ரஸ்துதமான உபாயவைப4வஹேதுக்களை அருளிச்செய்கிறார் மேல் (அறியாத) இத்யாதி3யால்.

வ்யா:-அர்ஜுநன் முன்பு கேட்டறியாத தத்வவிவேகாதி3யாய் ப்ரபத்த்யந்தமான ஷட்கத்ரயார்த்த2ங்களை – ஒன்றும் நழுவாதபடி “கரிஷ்யே வசநம் தவ”  என்று துணிந்து நிற்கும்படி விஶதமாக அறிவித்து, அஜ்ஞாத ஜ்ஞாபநமான ஆசார்ய க்ருத்யத்தையும். அபராத44யநிவர்த்தகமான க4டகத்வமாகிற புருஷகார க்ருத்யத்தையும். இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரகத்வமாகிற உபாய க்ருத்யத்தையும், நிரங்குஶஸ்வாதந்த்ரனாய், நிரபேஷோபாயமாய். நித்யோபேயமான தான் வலிய ஏறிட்டுக் கொள்ளுகையாலே உபாய ப்ரபா4வபரமான மஹாபா4ரதத்தால் ஸித்3தோ4பாய வைப4வமும் சொல்லித் தலைக்கட்டிற்று என்கிறார். உபதே3ஷ்டாவான ஸ்வாசார்ய பரதந்த்ரனுடைய க்ருத்யத்தை. உபதே3ஶ விஷயபூ4தனாய் ஆசார்ய பாரதந்த்ர்ய யோக்3யதையற்ற தானே செய்கையாலும். ஸ்வவிஶேஷண க்ருத்யமான க4டகத்வத்தை விஶேஷ்யமான தானே செய்கையாலும், நித்யோபேயமாயிருக்க, உபாயத்தின் காதா3சித்க க்ருத்யத்தைத் தானே செய்கையாலும் மூன்றையும் ஏறிட்டுக் கொண்டது என்னலாமிறே. கீ3தோபநிஷத் ஸாரத்தை உபதே3ஶிக்கையாலும், “மாம் ஶரணம் வ்ரஜ” என்று தன்னைப் பற்றுவிக்கையாலும், விரோதி4 நிவ்ருத்தி பூர்வகப2லஸித்3தி4யைப் பண்ணிக்கொடுக்கையாலும், இவற்றை ஏறிட்டுக் கொண்டமை காணலாமிறே. (பக்கம் 251ல் தொடரும்)

ஆசார்யத்வம் ஸ்வகு3ணமாயிருக்க ஏறிட்டுக்கொள்ளுகையாவது.– அத்யந்த ஸுலபா4வதாரத்தில் செய்யும் க்ருத்யத்தைப் பரத்வ ஸௌலப்4ய க்லுப்தமான அவதாரத்திலே செய்த மாத்ரத்தைப் பற்ற- என்றேகொள்ள வேணும் இவன்கார்யம் தானே செய்யவல்ல ஶக்தனுமாய் ப்ராப்தனுமாயிருந்தானேயாகிலும். இவன் ஸ்வாபராத4 பீ4தனாய்த் தளும்புகிறவளவிலும், இவனை “அஞ்சேல்” என்று. அவனை முகம் கொண்டு, வணக்கிச் சேர்ப்பிக்கும் புருஷகாரம் வேண்டுகையாலும். “அத்தை முன்னிட்டே உபாயமாகக் கடவோம்” என்று நித்ய நியத ஸங்கல்பத்தாலும். “மாம்” என்கிற விடத்துப் புருஷகார விஶிஷ்டமேயாகிலும், தோன்றி நின்று புருஷீகரி(ப்பி)க்கக் காணாமையாலும், தத்ஸாபேக்ஷனுமாய் தத் க்ருத்யத்தை ஏறிட்டுக்கொண்டான் என்னவும் தட்டில்லை. “உபாயோபேயத்வே ததி3ஹ தவ தத்வம் ந து கு3ணௌ ” என்று உபேயத்வம்போலே உபாயத்வமும் ஸ்வதஸ்ஸித்34மாய். தத்க்ருதயமும் ஸ்வக்ருத்யமாயிருந்ததேயாகிலும். உபாயாந்தரங்கள் உபாயமாகத் தான் உபேயமானாப்போலன்றியே, கருமுகைமாலையைச் சும்மாடாக்குவாரைப்போலே செயலறுதியாலே உபேயமான தானே உபாயமாய், ஆகந்து3கதத்க்ருத்யமும் செய்யவேண்டினமை யைப்பற்ற ‘ஏறிட்டுக்கொண்டான்’ என்னலாமிறே. “அநாதி3 ஸங்கல்ப ஸித்34மான உபாயக்ருத்யத்தை “மோக்ஷயிஷ்யாமி” என்று மீண்டும் ஸங்கல்பிக்கிற இத்தைப்பற்ற ஏறிட்டுக்கொண்டது என்கிறார்” என்றும் அருளிச்செய்வர். ஆக. ஸித்3தோ4பாயமான தானே அஜ்ஞாதஜ்ஞாபகனுமாய் க4டகனுமாகவற்று என்னும் உபாயவைப4வமும் மஹாபா4ரததாத்பர்யம் என்றதாய்த்து என்கிறார்.

  1. புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைப4வமாவதுதோ3ஷத்தையும் கு3ணஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே, அங்கீ3காரத்துக்கு அவைதன்னையே பச்சையாக்குகை.
  2. அவ:- கீழ்ச்சொன்ன வைப4வம் போலன்றியே. உப4ய ஸாதா4ரணமான வைப4வ விஶேஷத்தை அருளிச்செய்கிறார் மேல் (புருஷகாரத்துக்கும்) இத்யாதி3யால்.

வ்யா:- ஈத்3ருஶ வைப4வமுடைய உபாய பூர்வபா4வியான புருஷகாரத்துக்கும், தத்பூர்வக நிரபேஷோபாயத்துக்கும் ஸாதா4ரண வைப4வமாவது-ஆஶ்ரயணேந்முக2னுடைய அநாதி3காலார்ஜிதமான அக்ருத்ய கரணதி3 தோ3ஷத்தையும். நிர்தோ3ஷ ப்ரமாண ப்ரமாதாக்கள் சொல்லிற்றுச் செய்யாமையாகிற கு3ணஹாநியையும் முழுநோக்குச் செய்து. ” தோ3ஷ தூ3ஷிதனாய் நாஸ்திகனான இவனைக்கொண்டு கார்யமென்? ” என்று உபேக்ஷியாதே. கருணையாலே காணாக்கண்ணிட்டு அங்கீ3கரிக்குமளவன்றிக்கே, இவனைச் சேர்ப்பித்துக் கைக்கொள்ளுகையாகிற ஸ்வஸ்வாங்கீ3காரத்துக்கு உபேக்ஷாகாரணங்களாய் காழ்ப்பேறின தோ3ஷகு3ணஹாநிகளாகிற அவைதன்னையே, முகமலர்ந்து அங்கீ3கரிக்கைக்கடியான பச்சையாக்குகையாய்த்து. சிறையிருக்கை, க்ருபாதி கு3ணங்களை வெளியிடுகை. த3ஶாவிபா43மறப் புருஷீகரிக்கை. உப4யரையும் ஸ்வவஶமாக்குகை – புருஷகார வைப4வமென்றும். தூதுபோகை, ஆரோபிதங்களான உபதே3ஷ்ட்ருத்வ க4டகத்வமுடையனாகை, உபேயமான தான் உபாயமாகை-உபாயவைப4வமென்றும் கீழ்ச்சொன்ன அஸாதா4ரண வைப4வத்தைப் பகல்விளக்குப்படுத்தும் உப4ய ஸாதா4ரணவைப4வமிறேயிது. ஶக்யமானவற்றைச் செய்கையிறே கீழில் வைப4வம். து3ஸ்ஸ்வபா4வங்களை ஸுஸ்வபா4வங்களாகவே விரும்பி மேல்விழவேண்டும் அருமையுள்ள வைப4வமிறே இது. 15.

  1. இரண்டும், இரண்டுங்குலையவேணும் என்றிருக்கில் இரண்டுக்கும் இரண்டும் உண்டாய்த்ததாம்.16.

அவ: இந்தப் புருஷகாரோபாயங்கள். வைஷம்யாதி3 பரிஹாரார்த்த2மாக தோ3ஷாத்3யபி4ஸந்தி4 விராமமாத்ரத்தைப் பார்த்து இவனை அங்கீ3கரிக்க வேண்டாவோ? என்ன. அப்படிச் செய்யில் அவை அவர்களுக்கேயாய்விடும் என்கிறார் மேல் ( இரண்டும்) இத்யாதி3யால்.

வ்யா:-தோ3ஷ கு3ணஹாநிகள் பச்சையாகச் சேதநனை அங்கீ3கரிக்கும் புருஷகாரமும் உபாயமும். ஸ்வஸ்வாங்கீ3காரவேளையில் அந்த தோ3ஷ கு3ணஹாநிகள் இரண்டின் அபி4ஸந்தி4 குலைய வேணும் என்றிருக்கில் இப்படி, நினைக்கில் ஸம்ப3ந்த4த்தை அழிய மாறுகிற புருஷகாரத்துக்கும். உபாயத்துக்கும். அபி4முக2 சேதநக3த தோ3ஷ கு3ணஹாநிகளிரண்டும் அப்போதே உண்டாய்த்ததாம். இந்த “யதி3” ஶப்33ம் யதா2ஸ்மரண விபர்யயஸூசகம். அக4டித க4டநாரூடவ்யதிரேகார்த்த2ம்.புத்ரனை அநீதியிலே கைவளரவிடுகை மாதாபிதாக்கள் குற்றமாமாப்போலவும். த4ர்மமழுக்கு த4ர்மியதாமாப் போலவும் – இத்தலையில் தோ3ஷகு3ணஹாநி ஸத்3பா4வவ்ருத்3தி4கள் புருஷகாரோபாயங்களின் லீலா ரஸாபேக்ஷையாலும், தத3நுகு3ண உபேக்ஷையாலும் வருகையால் அவை அவர்களுக்கே என்னலாமிறே. ஸம்ப3ந்த4 வாத்ஸல்யஹாநி வருகையிறே அவர்களுக்கு தோ3ஷகு3ணஹாநிகள் உண்டாகையாகிறது.16.

  1. இரண்டும் குலைந்தது என்றிருக்கில் இத்தலைக்கு இரண்டும் உண்டாய்த்ததாம்.
  2. அபி4முக2னான தோ3ஷகு3ணஹாநிபூர்ண சேதநன்அநாதி3யே பிடித்து அபி4வ்ருத்34மாய் வருகிற தோ3ஷகு3ண ஹாநிகள் இரண்டும், ஸ்வாநுஷ்டா2நாஸ்திக்யங்களாலே நமக்குக் கட்டுக்குலைந்து போய்த்து என்று நிர்ப4ரனாய் இறுமாந்திருக்கில், அவைபடியற்றது என்று க3ர்வித்திருக்கிற இத்தலைக்கு. ஸாபேக்ஷ புருஷகாரோபாயங்களைப்பற்ற (அடியறத்?) தேடின அந்த தோ3ஷ கு3ணஹாநிகள் இரண்டும் பழையபடியே நிலைநிற்க உண்டாய்த்ததாம் என்கிறார். இனி இவன் ஸ்வயத்நத்தாலே அவை குலைந்ததென்றிருக்கை-தது34யோபேக்ஷைக்கு அடியாகையாலே அபி4வ்ருத்34மாகாதிராதிறே.

ஆக, ”தோ3ஷாதி3களுக்கு இசைந்தவனே ஆஶ்ரயணாதி4காரி; அவற்றை விரும்புமவர்களே புருஷகாரோபாயபூ4தர்; தோ3ஷாதி3 விராமாபேக்ஷை-உபாய பூர்வபா4வியான புருஷகாரத்துக்கு முற்பட்டு, பஶ்சாத்3பா4வியான உபாயத்துக்குப் பிற்படும். அதடியாக தோ3ஷாதி3கள் உண்டாகை – தத்ஸத்தா காரணமான உபாயத்துக்கு முற்பட்டு, தத்வ்ருத்3தி4 காரணமான புருஷகாரத்துக்குப் பிற்படும் : ப்ரவர்த்தகரான ஶக்தரே நிவர்த்தகர்; அப்ரவர்த்தகரான அஶக்தர் நிவர்த்தகராகமாட்டார்” என்றதாய்த்து. இதில் ஆஶ்ரயண விரோதி4நிவர்த்தகத்வ மாத்ரத்திலே புருஷகாரத்துக்கு அந்வயமுண்டத்தனை. ப்ராப்தி விரோதி4நிவர்த்தகத்வம் உபாயத்துக்கே உள்ள தொன்றிறே. சேதநனே கர்மப்ரவர்த்தகனாயிருக்க, ஈஶ்வரனைக் கர்மப்ரவர்த்தகன் என்கிறது. தத்காரயித்ருத்வத்தைப் பற்றவித்தனை. ”ஏஷ ஹ்யேவ ஸாது4 கர்ம காரயதி; ஏஷ ஹ்யேவ அஸாது4 கர்மகாரயதி” என்னா நின்றதிறே. 17

  1. ராக்ஷஸிகள் தோ3ஷம் ப்ரஸித்34ம்.
  2. அவ:- இந்தப் புருஷகாரோபாயங்கள் தோ3ஷாதி3களைப் பச்சையாக அங்கீ3கரித்த இடங்களைக் காட்டுகிறார் மேல் (ராக்ஷஸிகள்) இத்யாதி3யால்.

வ்யா:-க்ரூர கர்மஜந்மங்களுடையராகையாலே ராக்ஷஸிகளுக்கு தோ3ஷமுண்டென்னுமிடம் ஸுப்ரஸித்34ம். தோ3ஷமுள்ளவிடத்தில் கு3ணஹாநியுமுண்டிறே. த்ரிஜடை தொடக்கமானார் விலக்க விலக்க நலிந்து போந்தமையால் அதில்லாமையில்லையிறே. இப்படி, தோ3ஷாதி3 து3ஷ்டைகளான ராக்ஷஸிகளை, அதுவே பச்சையாகப் புருஷகாரம் அங்கீ3கரித்தமை காட்டப்பட்டது. 18.

  1. ஜிதேந்த்3ரியரில் தலைவனாய், ஆஸ்திகாக்3ரேஸரனாய், “கோஶவஸ்யாத்மாஎன்று க்ருஷ்ணனுக்கு தா4ரகனாயிருக்கிற அர்ஜுநனுக்கு தோ3ஷம் ஏதென்னில்; 3ந்து4க்கள் பக்கல் ஸ்நேஹமும், காருண்யமும், வத4பீ4தியும்.
  2. த்3ரௌபதீ3 பரிப4வம் கண்டிருந்தது க்ருஷ்ணாபி4ப்ராயத்தாலே ப்ரதா4 தோ3ஷம்.

21 பாண்ட3வர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்ததுத்ரௌபதி3 யுடைய மங்கள ஸூத்ரத்துக்காக.

  1. 20. 21. அவ:- ‘ஆகில், உபாயபூ4தனான க்ருஷ்ணன், தோ3ஷாதி3கள் பச்சையாக அங்கீ3கரிக்கக்கூடாது’ என்று ஶங்கித்துப் பரிஹரிக்கிறார் மேல் (ஜிதேந்த்3ரியரில்) இத்யாதி3யால்.

வ்யா: ஊர்வஶி மேல்விழ, முறைகூற வல்லவனாய்க்கொண்டு ஜிதேந்த்3ரியர்க்கு முக்2யனாகையால் தோ3ஷப்ரஸங்க3மில்லை; “ஶிஷ்யஸ் தேऽஹம் ஶாதி4 மாம் த்வாம் ப்ரபந்நம்” என்று, க்ருஷ்ணன் அருளிச்செய்ததே ப்ரமாணமென்று ஆஸ்திக்யமுடையனாய்க் கொண்டு ப்ராமாணிகர்க்கு முன்நடக்குமவனாகையாலே கு3ணஹாநி ப்ரஸங்க3மில்லை; “அர்ஜுந: கேஶவஸ்யாத்மா க்ருஷ்ணஶ்சாத்மா கிரீடின: । அர்ஜுநே ச ஜயோ நித்யம் க்ருஷ்ணே கீர்த்திஶ்ச ஶாஶ்வதி।।” என்று நிர்தோ3ஷத்வகரனாய் ஸர்வதா4ரகனான க்ருஷ்ணனுக்கு தா4ரகன் என்னும்படி அபி4மதனான அர்ஜுனுக்கு தோ3ஷாதி3 ஸத்3பா4வ ஶங்கையும் கூடாமையால் ப்ரஸஜ்ஜ்ய ப்ரதிஷேதி4க்கப்படும் தோ3ஷாதி3 ஏதென்னில் என்று ஶங்கித்து- “அஸ்தா2ந ஸ்நேஹ காருண்ய த4ர்மாத4ர்மாதியாऽऽகுலம்। பார்த்த2ம் ப்ரபந்ந முத்3தி3ஶ்ய ஶாஸ்த்ராவதரணம் க்ருதம்।।” என்று ப்ராக்ருத ப3ந்து4க்கள்பக்கல் அஸ்தா2நேயுண்டான முன்பில்லாததொரு ஸ்நேஹமும், பஶ்வலாம்ப4நத்திற்போல் அவர்கள்பக்கல் அஸ்தா2நேயுண்டான ஹிம்ஸாऽஹத்வரூப காருண்யமும், ஸ்வவர்ண த4ர்மமாய்க்கொண்டு ப்ராப்தமான ப3ந்து4வத4ரூப த4ர்மத்தில் அத4ர்ம பு3த்3த்4யா வந்த பீ4தியும், “ரக்ஷ மாம் ஶரணாக3தாம்” என்று ஶரணாக3தையான த்3ரௌபதி3யை ஶத்ருக்கள் பரிப4விக்கிற பரிப4வத்தைக்கண்டும், ஸாமாந்ய த4ர்மஹாநியைப்பார்த்து உதா3ஸீநித்துப் பொறுத்திருந்ததும் இவையெல்லாம் தோ3ஷமிறே: இதில் ஶரணாக3தையின் பரிப4வம் கண்டிருந்ததொன்றுமே. ஶரணாக3த வத்ஸலனான க்ருஷ்ணனுடைய “நம்மை நினைத்துக் கூப்பிடுகிற அப3லையின் பரிப4வத்தைக் கண்டு ஆறியிருக்கவல்ல நிர்க்4ருணனான பாபிஷ்ட2னன்றோ இவன்” என்னும் அபி4ப்ராயத்தாலே பரித்யாக3 ஹேதுவான ப்ரதா4ந தோ3ஷம்; அஸ்தா2ந ஸ்நேஹகாருண்யாதி3கள் இவனுக்கு ப்ரதா4நதோ3ஷமன்று-என்று பரிஹரிக்கிறார்.

இத்தனை தோ3ஷமுள்ள விடத்து கு3ணஹாநியுமுண்டிறே. “அநாஶிநோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்3 யுத்4யஸ்வ பா4ரத” என்றருளிச்செய்தபோதே ”கரிஷ்யே வசநம் தவ” என்றிசைந்து யுத்3தோ4த்3யுக்தனாகாதே, பதினெட்டுச் சொல்லி இசைவிக்க வேண்டுகையால். கு3ணஹாநியுமுண்டென்னுமிடம் ஸுஸ்பஷ்டம். ப3ந்து4 ஸ்நேஹாதி3கள் மூன்றும் ஸ்வவர்ணதோ3ஷம். த்3ரௌபதி3 பரிப4வம் கண்டிருந்தது ஸ்வரூபதோ3ஷம். அது ப்ராயஶ்சித்த விநாஶ்யம்; இது அவிநாஶ்யம். அது ஸ்தூ2லதர்ஶிகள் காணும் தோ3ஷம்: இது ஸூக்ஷ்மதர்ஶிகள் காணும் தோ3ஷம். ஆகையால் இதுவே ப்ரதா4நதோ3ஷம்.

(21) இப்படி ஶரணாக3தையின் பரிப4வங்கண்டு கைவிட்டிருந்த பாண்ட3வர்களையும். அவளைப் பரிப4வித்த கௌரவாதி3களோ டொக்க பிரணிக்க ப்ராப்தியுண்டாயிருக்க, தலையையறாமல் வைத்தது. ஶரணாக3டிதையானவள் கழுத்தை மங்களஸுத்ர விரஹிதமாகக் காணமாட்டாமையாலே -என்கிறார். “ஶரணாக3தாம்” என்ற நாக்கு வேரூன்றின கழுத்துக்கு ஒரு கு3ணஹாநி வரக்காண மாட்டானே. இத்தால், பா43வதர்களைப் பரிப4பவித்தவர்களோடு அது கண்டிருந்தவர்களோடு வாசியற வத்4யர் என்றும். அவர்களுமுட்பட பா43வத ஸம்ப3ந்த4முண்டாகவே ப43வத3நுக்ரஹ விஷயமாவர்கள் என்றும் சொல்லிற்றுய்த்து. 19. 20. 21.

  1. அர்ஜுநனுக்கு தூ3த்ய ஸாரத்2யங்கள் பண்ணிற்றும், ப்ரபத்த்யுபதேஶம் பண்ணிற்றும் இவளுக்காக

22.அவ :-ஆகில் இப்படி நிரஸநீயனான இவனுக்கு இழிதொழில் செய்து கோ3ப்யத்தை வெளியிட்டதும், ஶரணாக3தையின் கார்யம் தலைக்கட்டுகைக்காக என்கிறார்மேல். (அர்ஜுநனுக்கு ) இத்யாதி3யால்.

வ்யா:-பா43வதையின் பரிப4வம் கண்டிருந்த தண்ணியனான அர்ஜுநனுக்கு, தண்ணிய தொழிலான தூ3த்ய ஸாரத்2யங்களைக் கூசாமல் பண்ணிற்றும். பரமஸத்வ நிஷ்ட2ர்க்கு அஷட்கர்ணமாக உபதேஶிக்கப்படும் சரமோபாயமான ப்ரபத்தியைப் பூசல்களரியிலே உபதே3ஶித்ததும், ப்ரபந்நையான இந்த த்3ரௌபதி3 குழல் முடிப்பிக்கைக்காக, க4டகன் போலத் தூதுபோய்ப் பூசல் விளைத்து,  இவன் ஸாரதி2 போல இருந்து அவள் மநோரத2த்தை நடத்தியும். ப்ரவ்ருத்தியிலே மூளும்படி நிவ்ருத்த்யுபாயோபதே3ஶம் பண்ணியும், ஶரணாக3தையின் அபேக்ஷையைத் தலைக்கட்டினானிறே. ஆகவிப்படி, தோ3ஷகு3ணஹாநிகள் பாராமல் அர்ஜுநனை ரக்ஷிக்கை யாலே, உபாயமும் அவை பச்சையாகக் கொள்ளும் என்னுமிடம் ஸுப்ரஸித்34மென்றதாய்த்து.

ஆக இப்ரகரணத்தால், தன்னைப் பேணாமே புருஷீகரித்தும் தது3பயோகி3 கு3ணங்களை ப்ரகாஶிப்பித்தும், அங்குணமாக சேதநேஶ்வரர்களை ஶிக்ஷித்து வஶீகரித்தும். சேதநதோ3ஷாதி3களை விரும்பும் புருஷகாரவைப4வம் சொல்லப்பட்டது. இதில் உபாய வைப4வபரமாய் வந்தவிடம். ப்ரதா4ந ப்ரமேயமான புருவகார வைப4வஶேஷமாயிருக்கும். 22.

 ‘ஆய்அருளிய ஸ்ரீவசநபூ4ஷண வ்யாக்2யாநத்தில்

ப்ரத2 ப்ரகரணம் ஸமாப்தம்.

ஜநந்யாசார்யர் திருவடிகளே ஶரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.