பிள்ளை லோகம்ஜீயர் 02

 

ஶ்ரீ:

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

ஶ்ரீமதே வரவரமுநயே நம:

 

யதிராஜ விம்ஶதி (Continued)

பாபேக்ருதே யதி34வந்தி ப4யாநுதாப

    லஜ்ஜா: புந:கரணமஸ்ய கத2ம் க4டேத

    மோஹேந மே நப4வதீஹ ப4யாதி3லேஶ:

    தஸ்மாத் புந:புநரக4ம் யதிராஜ குர்வே

பதவுரை –

யதிராஜ – யதிபதியே!

பாபே – பாபக்ருத்யமானது

க்ருதே ஸதி – (ஒருவனால்) செய்யப்பட்டவளவில்

பய – மேல் வரும் நரகாதிகளில் பயமும்

அநுதாப – செய்த பாபங்களை நினைத்து அநுதபிக்கையும்

லஜ்ஜா: – ஶிஷ்டகர்ஹையினாலுண்டாகும் லஜ்ஜையும்

பவந்தி யதி – உண்டாயிற்றாகில்

அஸ்ய – இந்த பாபத்துக்கு

புந:கரணம் – மீளவும் செய்கையானது

கதம் – எப்படி

கடேத – கூடும்

மே – புத்திபூர்வகமாக அக்ருத்யாதிகளைச் செய்கிற எனக்கு

மோஹேந – அந்த நரகாதிகளிலொன்றையும் நிரூபிக்க அறியாத அஜ்ஞாநத்தாலே

பயாதிலேஶ: – அந்த பயாதிகளின் லேஶமும்

ந பவதி – உண்டாகிறதில்லை

தஸ்மாத் – ஆகையாலே

(அஹம் – நான்)

புந:புந: – அடுத்தடுத்து

அகம் – பாபத்தையே

குர்வே – செய்யாநின்றேன்

வ்யாக்யானம் – (பாபேக்ருத இத்யாதி) பயமாவது மேல்வரக்கடவ அநர்த்தவிஶேஷங்களுக்கு ஸூசகமான சிந்ஹங்களைக் கண்டு பிறக்கும் து:க்கமன்றோ “இப்போது இதைச்செய்தால் மேல் நமக்கு அநர்த்தம் வரும்” என்று வெருவுமவனுக்கு அப்படிப்பட்ட பயமுண்டாம்.  “நாம் அக்ருத்யத்தில் அந்வயிக்கக் கடவோமல்லோம்”  என்று அபிஸந்தி விராமம் பிறந்திருக்கச் செய்தேயும் துர்வாஸனையாலே நெஞ்சு கலங்கி நினைவற அக்ருத்யத்திலேயிறங்கினவனுக்கு அநுதாபமுண்டாம்.  புத்திபூர்வம் ப்ரவர்த்தியாநிற்கச்செய்தேயும் ஶிஷ்டகர்ஹைக் கஞ்சினவனுக்கு லஜ்ஜையுண்டாம்.  இவற்றிலே ஏதேனுமொன்றுண்டாயிற்றாகில் மீளவும் பாபத்தைச்செய்கை எங்ஙனே கூடும்படி.

(மோஹேந மே ந பவதீஹ பயாதிலேஶ:) மேல்வரும் அநர்த்தத்தையாதல், இப்போதுண்டான ஶிஷ்டகர்ஹையை யாதல் ஒன்றையும் நிரூபிக்கவறியாத அஜ்ஞாநத்தாலே புத்திபூர்வகமாக அக்ருத்யாதிகளிலே மண்டிப்போருகிற எனக்கு ஏகதேஶமும் பயாதிகளுண்டானதில்லை.  (தஸ்மாதித்யாதி) ஆகையால் அடுத்தடுத்துப் பாபமே செய்யாநின்றேன்.

தாத்பர்யம் – யதிபதியே! ஒருவன் அஜ்ஞாநத்தாலேயாதல் அநவதாநத்தாலேயாதல் பாபத்தைச்செய்தானாகில், பிறகு ஜ்ஞாநமுண்டானபோது “இப்படி பாபத்தைப்பண்ணின நமக்கு என்ன நரகாநுபவமுண்டாமோ” என்கிற பயமும், “செய்யத்தகாத காரியம் செய்தோமே” என்கிற பஶ்சாத்தாபமும், “இது ஶிஷ்டர்களுக்குத் தெரிந்தால் நிந்திப்பார்கள்” என்கிற லஜ்ஜையும் உண்டானால் அவனுக்கு மறுபடியும் அக்ருத்யத்தில் ப்ரவ்ருத்தியுண்டாகாது.  இப்படியாயிருக்க, புத்திபூர்வகமாக அக்ருத்யாதிகளையே செய்துபோருகிற எனக்கு மேல்வரும் அநர்த்தத்தையாதல் ஶிஷ்டகர்ஹையையாதல் ஒன்றையும் நிரூபிக்கவறியாத அஜ்ஞாநத்தாலே அந்த பயாநுதாபாதிகளிலேகதேஶமும் உண்டாயிற்றில்லை;  ஆகையாலே மேன்மேல் பாபங்களையே செய்யாநின்றேனென்று தன்னுடைய நைச்யத்தை ஆவிஷ்கரிக்கிறார்.

அவதாரிகை – “ஸர்வேஶ்வரன் ஸகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாய் ஸமஸ்த ப்ரவ்ருத்திகளையும் பார்த்துக்கொண்டு எழுந்தருளியிருக்கிறபடியை அநுஸந்தித்தால் பாபகரணத்துக்கிடமில்லைகாணும்” என்ன, அதுவுமநுஸந்திக்கைக்கு யோக்யதையில்லாதபடி காமபரவஶநாந்த:கரணனாயிருக்கிறேனென்கிறார்.

  1. அந்தர்ப3ஹிஸ் ஸகலவஸ்துஷு ஸந்தமீஶ

     மந்த: புறஸ்ஸ்திதமிவாஹ மவீக்ஷமாண:

     கந்த3ர்ப்பவஶ்ய ஹ்ருதய ஸ்ஸததம் ப4வாமி

     ஹந்தத்வத3க்3ர க3மநஸ்ய யதீந்த்3ர நார்ஹ:

பதவுரை –

ஸகலவஸ்துஷு – ஸ்வபரவிபாகமற எல்லாவஸ்துக்களிலும்

அந்த: – உள்ளேயும்

பஹி: – வெளியிலும்

ஸந்தம் – வ்யாபித்திருக்குமவனாய்

ஈஶம் – எல்லாவற்றையும் தன்னதீநமாக நியமித்துக்கொண்டு போருகிற ஸர்வேஶ்வரனை

அந்த: – பிறவிக்குருடனானவன்

புர:ஸ்திதமிவ – தன்முன்னே நிற்கிறவனை (காணமாட்டாதாப்போலே)

அஹம் – தத்வஜ்ஞாநஶூந்யனான நான்

அவீக்ஷமாண: – காணமாட்டாதவனாய்

ஸததம் – ஸர்வகாலமும்

கந்தர்ப்ப – மன்மதனுக்கு

வஶ்ய: – பரதந்த்ரமான

ஹ்ருதய: – நெஞ்சையுடையனாக

பவாமி – ஆகாநின்றேன்

ஹந்த – கஷ்டம்

(ஆகையாலே)

யதீந்த்ர – யதிஶ்ரேஷ்டரானவரே!

த்வத் – ஜிதேந்த்ரியரால் ஸேவிக்கப்படும் தேவரீருடைய

அக்ர – திருமுன்பே

கமநஸ்ய – வருகைக்கு

(அஹம் – நான்)

நார்ஹ: – யோக்யனன்று

வ்யாக்யானம் – (அந்தர்ப்பஹிரித்யாதி) ஸ்வபரவிபாகமற ஸகலவஸ்துக்களிலும் உள்ளோடு புறம்போடு வாசியற வ்யாபித்திருக்குமவனாய் வ்யாப்ய வஸ்துக்களை ஸ்வாதீநமாக நியமித்துக்கொண்டு போருமவனை, உள்ளேயிருக்கிறபடியை அறிந்தால் “நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலிருக்கிறவன்  என் நினைந்திருக்கும்” என்று வெருவி நெஞ்சால் பாபசிந்தை பண்ணப்போகாது; புறம்பிருக்கிறபடியை அநுஸந்தித்தால் “உள்ளேயன்றோ அவன்; புறம்பில்லை” என்று பாஹ்யகரணங்கள் கொண்டு பாபம் செய்யப்போகாது.  உள்ளும் புறமும் உளனாயிருந்தாலும் செய்த பாபத்துக்கு உசித தண்டம் பண்ணி நியமிக்கைக்கு ஶக்தனல்லவாகில் பாபம் செய்யிலுமாம்;  அங்ஙனன்றிக்கே அபராதாநுகுணம் தண்டிக்கைக்குரிய நிரங்குஶஸ்வதந்த்ரனுமாய் இருந்தால் எங்ஙனே பாபம் செய்யலாவது.

(அந்த:புரஸ்ஸிதமிவாஹ மவீக்ஷமாண:) ஜாத்யந்தன் தன்னுடைய முன்னே நிற்கிறவனைக் காணமாட்டாதாப்போலே தத்வஜ்ஞாநஶூந்யனான நான்  ஸர்வத்ர ஸந்நிஹிதனாய்  ஸர்வநியந்தாவானவனைக் காணமாட்டுகிறிலேன்.

ஆசார்யோபதேஶாதி லப்தஜ்ஞாநமுண்டாயிருக்கக் காணமாட்டாமைக்கு ஹேதுவென்னென்ன வருளிச்செய்கிறார் (கந்தர்ப்பவஶ்யேத்யாதி) அவனைக் காண்கைக்கு ஸாதநமான நெஞ்சு காமபாரவஶ்யத்தாலே கலங்கினபின்பு காணவிரகுண்டோ?  விஷயப்ரவணமான நெஞ்சிலே ஆசார்யோபதேஶாதிலப்தமான ஜ்ஞாநத்தை ப்ரதிஷ்டிப்பிக்கை அரிதிறே.

(ஸததம்) மநஸ்ஸுக்கு காமபாரவஶ்யம் காதாசித்கமாயிற்றாகில் அல்லாத காலங்களிலேயாகிலும் பகவதநுஸந்தானம் பண்ணலாம், ஸர்வ காலங்களிலும் சித்தம் காமகலுஷமானால் எங்ஙனேயநுஸந்திக்கும்படி;  “பவாமி” என்கிற வர்த்தமான நிர்தேஶத்தாலே காலகலைகதேஶமும் காமபாரவஶ்யம் தவிர்ந்ததில்லை என்கிறது.

க்ஷணகாலமாகிலும் வாஸுதேவ சிந்தனத்துக்கு யோக்யமாகாதபடி பாழ்போவதே என்கிற விஷாதத்தாலே “ஹந்த” என்கிறார்.  (த்வதக்ரகமநஸ்ய யதீ்ந்த்ர நார்ஹ:) ஸாக்ஷாத்க்ருத பகவததத்வராய் நிரஸ்த ஸமஸ்தகாமரானவர்கள் கிட்டி ஸேவிக்கும்படியான வைபவத்தையுடைய தேவரீர் திருமுன்பே வருகைக்கு இப்படியிருக்கிற நான் அர்ஹனோ என்று தம்மை நிந்தித்துக்கொண்டருளுகிறார்.

தாத்பர்யம் – ஸகலபதார்த்தங்களிலும் உள்ளோடு புறம்போடு வாசியற வ்யாபித்து தன் வஶமாக நியமித்துப்போரும் ஸர்வேஶ்வரனை, பிறவிக் குருடனானவன் தன் முன்னே நிற்கிறவனைக் காணமாட்டாதாப்போலே தத்வஜ்ஞாந ஶூந்யனான நான் காணமாட்டாதவனாய், அவனைக் காண்கைக்கு ஸாதநமான நெஞ்சும் விஷயப்ராவண்யத்தாலே கலங்கி ஸர்வகாலமும் காமாதுரனாய்த் திரியாநின்றேன்.  “க்ஷணகாலமும் வாஸுதேவன் சிந்தனம் பண்ண யோக்யமில்லாமல் காலம் பாழ்போவதே” என்று ஹந்தவென்கிறார்.  இப்படியிருக்கிற நான் ஸங்கமற்றிருக்கிற மகான்களால் ஸேவிக்கப்படுமவரான தேவரீர் திருமுன்பே வருகைக்கு  யோக்யனோ” வன்று தம்மை நிந்தித்தருளுகிறார்.

அவதாரிகை – இ்ப்படி பாபார்ஜநபூமியுமாய் தத்பலமான து:க்காநுபவத்துக்கும் ஸ்தானமான  ஶரீரத்திலிருப்பைத் தவிர்த்துக்கொள்ளமாட்டீரோ? என்று எம்பெருமானாருக்குத் திருவுள்ளமாக, என்னுடைய பாபாதிஶயத்தாலே ஶரீரநிவ்ருத்தியிலபேக்ஷை பிறக்கிறதில்லை.  தாத்ருஶபாபத்தை தேவரீர் தாமே ஶீக்ரமாகப் போக்கியருளவேணுமென்கிறார்.

  1. தாபத்ரயீ ஜநித து:க்கநிபாதிநோபி

    தேஹஸ்தி2தௌ மமருசிஸ்து ந தந்நிவ்ருத்தௌ

    ஏதஸ்ய காரண மஹோ மம பாபமேவ

    நாத2 த்வமேவ ஹரதத் யதிராஜ ஶீக்4தரம்

பதவுரை –

தாபத்ரயீ – ஆத்யாத்மிகாதி தைவிகாதி பௌதிகமென்கிற ஸந்தாபங்களின் மூன்றினாலே

ஜநித – உண்டான

து:க்க – து:க்க பரம்பரைகளில்

நிபாதிநோபி – அழுந்தினவனாயிருக்கச் செய்தேயும்

மம – எனக்கு

தேஹ – (து:க்காஸ்பதமான) ஶரீரத்தின்

ஸ்திதௌ – ரக்ஷணத்தில் (இருப்பில்)

ருசி: – ஆசையானது (மேன்மேலும் உண்டாகாநின்றது)

தத் – அந்த ஶரீரத்தின்

நிவ்ருத்தௌ து – ரக்ஷணத்தில் நின்றும் மீளுகையில் (நாசத்தில்)

(ருசி: – ஆசையானது)

ந – இல்லை

ஏதஸ்ய – இதுக்கு

காரணம் – காரணமானது

மம – என்னுடைய

பாபமேவ – பாபந்தான்

அஹோ – கஷ்டம்

யதிராஜ – யதிபதியான

நாத – ஸ்வாமீ

தத் – அந்த பாபத்தை

த்வமேவ – தேவரீரே

ஶீக்ரம் – த்வரையாக

ஹர – போக்கியருளவேணும்

வ்யாக்யானம் – (தாபத்ரயீத்யாதி) இதிலநுபவிக்கிற து:க்கந்தான் ஒன்றிரண்டாய் அத்தைக் கழித்துக்கொள்ளாதொழிகிறதோ?  கர்மம் ஏகவிதமாகிலிறே தத்பலமான து:க்கமும் ஏகவிதமாயிருப்பது;  கர்மாநுகுணமாக அநுபாவ்யமான து:க்கம் ஆத்யாத்மிகாதிரூபேண த்ரிவிதமாயிருக்கும்.  இதில், ஆத்யாத்மிகந்தான் ஶாரீரமென்றும் மாநஸமென்றும் இரண்டு வகை.  ஶாரீரந்தான் – ஜ்வராதிவ்யாதிகளாலே  அநேகவிதமாயிருக்கும்.  மாநஸமாவது – காமக்ரோதாதிகளாலே வருகிற வ்யஸநம்.  ஆதிபௌதிகமாவது – ம்ருகபக்ஷ்யாதிகளால் வருகிற வ்யஸநம்.  ஆதிதைவிகமாவது – ஶீதோஷ்ணாதிகளால் வருகிற வ்யஸநம்.  இப்படி மூன்றுவகைப்பட்ட  தாபஸமூஹங்களாலே உண்டான து:க்கஸாகரத்திலே உத்தரோத்தரம் அவகாஹியாநிற்கச்செய்தேயும்.

(தேஹஸ்திதௌ மம ருசி:) “து:க்கம் மா பூவம்” என்கிற லௌகிகர்படியும் கடந்திருக்கிறவெனக்கு து:க்காஸ்பதமான ஶரீரத்தைக் குறைவற நோக்கிக்கொள்ளுகையாலேயாயிற்று இப்போது ருசி;  (து) லௌகிகர் படியில் தமக்குண்டான விஶேஷம்.  (தந்நிவ்ருத்தௌ) அந்த ருசி இதினுடைய நிவ்ருத்தியிலும் ஒருகாலுண்டாயிற்றதாகில் இத்தை விடுவித்துக்கொள்ளலாயிற்றுக்கிடீர்.

(ஏதஸ்யேத்யாதி) இதுக்குக் காரணமும் நான் பண்ணின பாபமேயித்தனை;  ஐயோ! (நாத) இது அநாதவஸ்துவாய்த் தான் இங்ஙனே எளிவரவுபடுகிறதோ?  (த்வமேவேத்யாதி) இஸ்ஸம்பந்தத்தைப் பார்த்து “து:க்கத்தையும் ஸுகமாக விரும்புகிறவிவன் மேன்மேலும் அநர்த்தத்தை விளைத்துக்கொள்ளும்” என்று சடக்கென அந்தப் பாபத்தைப் போக்கியருளவேணும்.

தாத்பர்யம் – யதிபதியான எம்பெருமானாரே! நான் ஆத்யாத்மிக ஆதிதைவிக ஆதிபௌதிகமான து:க்கபரம்பரைகளில் அழுந்தியிருக்கச்செய்தேயும்  இந்த து:க்கங்களுக்கு ஆஸ்பதமான ஶரீரத்தின் நாஶத்திலிச்சை யுண்டாகாமல் மேன்மேலும் இந்த ஶரீரத்தில் பொருந்தியிருப்பதிலேயே ஆசைமிகுந்திராநின்றது;  இதுக்குக் காரணம் நான் பண்ணின பாபம்தான்;  இந்த பாபத்தை ஸ்வாமியான தேவரீரே போக்கியருளவேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

அவதாரிகை – “இப்போதும் பயாநுதாபாதிகளுமற்று பாபார்ஜநத்தினின்றும் மீளாதபடியையுடையனாய் ஶரீரநிவ்ருத்தியிலும் அபேக்ஷையின்றிக்கே இருக்கிறவுமக்கு  நம்மாலே தத்தேதுவான பாபங்களைப் போக்கவென்றால் போக்கப்போமோ?  ஆனபின்பு நீர்தாமே உம்முடைய ரக்ஷணத்துக்கு வழிபார்க்க வேணுங்காணும்” என்ன, தோஷமே வேஷமானவெனக்கு  தேவரீர் க்ருபையொழிய  வேறுகதியில்லை என்கிறார், மேலிரண்டு ஶ்லோகத்தாலே.  அதில் முதல் ஶ்லோகத்தாலே ஸர்வஜ்ஞரான கூரத்தாழ்வான் வரதராஜஸ்தவாதிகளிலருளிச்செய்த தோஷங்களுக்கெல்லாம் ஏகாஶ்ரயமானவடியேனுக்கு தேவரீர் க்ருபையொழிய வேறுகதியில்லை என்கிறார்.

  1. வாசாமகோ3சர மஹாகு3ண தேஶிகாக்3ர்ய

    கூராதி4நாத2 கதி2தாகி2ல நைச்யபாத்ரம்

    ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்3ருஶஸ்தத்

    ராமாநுஜார்ய கருணைவ து மத்33திஸ்தே

பதவுரை –

வாசாமகோசர – வாக்கினால் இவ்வளவென்று பரிச்சேதிக்கவொண்ணாதபடி இருப்பதான

மஹாகுண – அளவிறந்த கல்யாணகுணங்களை யுடையராய்

தேஶிகாக்ர்ய – ஆசார்யர்களில் தலைவரான

கூராதிநாத – கூரத்தாழ்வானாலே

கதித – அருளிச்செய்யப்பட்ட

அகில – ஸமஸ்தமான

நைச்ய – நீசக்ருத்யங்களுக்கு

பாத்ரம் – ஆஶ்ரயபூதன்

ஏஷ: – கீழ்ச்சொன்ன ஸ்வபாவத்தையுடைய

அஹமேவ – நானொருவனுமேயாயிற்று

ஜகதி – இந்த லோகத்திலே

ஈத்ருஶ: புந: – இப்படிப்பட்ட தோஷத்தையுடைய வேறொருவன்

ந – இல்லை

தத் – இப்படி தேவரீர் க்ருபை பண்ணத்தகுந்த தோஷபூர்த்தி உண்டாகையாலே

ஆர்ய – ஸர்வஜ்ஞரான

ராமாநுஜ – எம்பெருமானாரே

மத்கதிஸ்து – எனக்குப் புகலிடமானது

தே – தேவருடைய

கருணைவ – க்ருபைதான்

வ்யாக்யானம் –(வாசாமகோசரேத்யாதி) “மொழியைக்கடக்கும் பெரும்புகழான்” (இரா.நூ – 7) என்கிறபடியே இவ்வளவென்று வாக்கால் பரிச்சேதிக்க வொண்ணாதபடியிருப்பதாய் நிஸ்ஸீமமான ஜ்ஞாநஶக்த்யாதி கல்யாண குணங்களையுடையராய் தன் திறத்திலே தீரக்கழிய அபராதம் பண்ணின நாலூரானையும் பெருமாளோடு ஒருதலையாக மன்றாடி ரக்ஷிக்கும் பரமக்ருபாவானாகையாலே  ஆசார்யஶ்ரேஷ்டருமாயுள்ள கூரத்தாழ்வான் அருளிச்செய்த அந்த நைச்யத்துக்கும் பாத்ரம் கீழ்சொன்ன ஸ்வபாவத்தையுடையனான நானொருவனுமேயாயிருக்கும்.

(நபுநர்ஜகதீத்ருஶ:) ஆராய்ந்துபார்த்தால் இஜ்ஜகத்திலே இப்படிப்பட்ட தோஷத்தையுடையானொருவனுமில்லை;  (தத் ராமாநுஜேத்யாதி) தேவரீர் க்ருபைக்கு வயிறு நிறையும்படிக்கீடான தோஷபூர்த்தி எனக்குண்டாகையாலே தேவரீர் க்ருபையே எனக்குப் புகல்.  (ஆர்ய) இவ்வர்த்தம் தேவரீரறியாமல் அடியேன் விண்ணப்பம் செய்யவேணுமோ?  (ராமாநுஜ) தேவரீர் க்ருபையளவும் போகவேணுமோ?  மோக்ஷைகஹேதுவான சாதுர்யத்தையுடைய சதுரக்ஷரியான திருநாமமே போராதோ?  “ந சேத்ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ” (ஆழ்வான் முக்தகம்) என்னக்கடவதிறே.

தாத்பர்யம் – எம்பெருமானாரே! இவ்வளவென்று வாக்கினால் அளவிடமுடியாத  மிக்க புகழையுடைய ஆசார்ய ஶ்ரேஷ்டரான கூரத்தாழ்வானாலே அருளிச்செய்யப்பட்ட ஸமஸ்த நீசகர்மங்களுக்கு ஆஶ்ரயம் நானொருவனொழிய இந்த லோகத்திலே இப்படிப்பட்ட துர்குண முடையாரொருவருமில்லை.  இப்படி தேவரீருடைய மஹத்தான க்ருபைக்கு  வயிறுநிறையும்படியான  தோஷபூயிஷ்டன் நானொருவனேயாகையால் எனக்கு ரக்ஷகம் தேவரீருடைய க்ருபை தவிர வேறொன்றில்லை.  ஆகையால் என்னுடைய தோஷத்தைப் போக்கியருளவேணுமென்கிறார்.

அவதாரிகை – இவ்வளவன்றிக்கே பரமாசார்யரான ஆளவந்தாரும், கூரத்தாழ்வானும், அவருடைய திருமகனாரான பட்டரும் தாம்தாமருளிச்செய்த ப்ரபந்தங்களில் ப்ரதிபாதித்த தோஷங்களடைய எனக்கொருவனுக்குமே உண்டானபின்பு தேவரீர் க்ருபையே எனக்கு உபாயமென்கிறார்.  தோஷம் கனக்க கனக்க எம்பெருமானார் க்ருபை தம்மளவிலே முழுமடை கொள்ளுமென்றிருக்கிறார்.

  1. ஶுத்தா4த்ம யாமுந கு3ரூத்தம கூரநாத2

    ப4ட்டாக்2ய தே3ஶிகவரோக்த ஸமஸ்த நைச்யம்

    அத்3யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹலோகே

    தஸ்மாத்3யதீந்த்ர கருணைவ து மத்33திஸ்தே

பதவுரை –

ஶுத்த – பரிஶுத்தமான

ஆத்ம – மநஸ்ஸையுடையரான

யாமுந – ஆளவந்தாரும்

குரூத்தம – ஆசார்யஶ்ரேஷ்டரான

கூரநாத – கூரத்தாழ்வானும்

பட்டாக்ய – பட்டரென்று திருநாமமுடையரான

தேஶிகவர – ஆசார்ய ஶ்ரேஷ்டரும்

உக்த – (ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களில்) அருளிச்செய்த

ஸமஸ்த நைச்யம் – எல்லா தோஷங்களும்

இஹ – இந்த

லோகே – லோகத்தில்

அத்ய – இப்போது

மயி – என்னிடத்தில்

அஸங்குசிதமேவ – சுருங்குதலில்லாமல்

அஸ்தி – இராநின்றது

தஸ்மாத் – ஆகையால்

யதீந்த்ர – யதிபதியான எம்பெருமானாரே!

தே – தேவரீருடைய

கருணைவ – க்ருபைதான்

மத்கதி: – எனக்கு ரக்ஷகம்

வ்யாக்யானம் – (ஶுத்தாத்மேத்யாதி) பரிஶுத்தாந்த:கரணரான ஆளவந்தார், ஆசார்யோத்தமரான கூரத்தாழ்வான், அவர் திருமகனாரான பட்டர், இவர்கள் ஸ்வஸ்வப்ரபந்தங்களில், “அமர்யாத:” (ஸ்தோ.ரத் – 42) “புத்வாசநோச” (வா.ஸ்தா – 79) “அதிக்ராமந்நாஜ்ஞாம்” ( ர.ஸ்த – 41) இத்யாதிகளாலே அருளிச்செய்த எல்லா நைச்யமும்.

(அத்யாஸ்தீத்யாதி) இந்த லோகத்தில் இக்காலத்தில் நானொருவன் பக்கலிலுமே சுருக்கமற உண்டாகாநின்றதென்பது யாதொன்று, ஆகையாலே தேவரீர் க்ருபையே எனக்கு உஜ்ஜீவநோபாயம்.  (இஹலோகே) லோகாந்தரத்திலுண்டாகில் தெரியாது.  (அத்ய) காலாந்தரத்திலுண்டாகில் தெரியாது.  (அஸங்குசிதம்) உண்டாயிற்றாகிலும் இப்படிக் குறைவற வுண்டாகக்கூடாது.  ஆகையால் இங்ஙனொத்த விஷயம் தேவரீர் க்ருபைக்கு வேறில்லை.  அடியேனுக்கு தேவரீர் க்ருபையொழிய வேறு புகலில்லை  என்றபடி.  இத்தால், (நிகரின்றி நின்ற வென்னீசதைக்கு நின்னருளின்கணின்றிப் புகலொன்று மில்லை யருட்குமதே புகல்” என்றதைச் சொன்னபடி.

தாத்பர்யம் – யதிபதியான எம்பெருமானாரே! பரமாசார்யரான ஆளவந்தாரும், கூரத்தாழ்வானும் அவர் திருமகனாரான பட்டரும், தங்கள் தங்கள் ப்ரபந்தங்களில் அருளிச்செய்த எல்லா துர்க்குணங்களும், இந்த லோகத்தில், இப்போது என்னொருவனிடத்திலேயே பரிபூர்ணமாயிராநின்றது.  ஆகையால் இப்படிப்பட்ட எனக்கு தேவரீருடைய நிர்ஹேதுகமான க்ருபையொழிய வேறு ரக்ஷக மில்லையென்கிறார்.

அவதாரிகை – இப்படி தோஷபாஹுள்யத்தையும் தோஷபூயிஷ்டரான தமக்கு உஜ்ஜீவநோபாயம் எம்பெருமானார் க்ருபையே என்னுமத்தையும் இவர் அருளிச்செய்தவாறே, எம்பெருமானர் இவரை விஶேஷ கடாக்ஷம் பண்ணி யருளி “உமக்கபேக்ஷிதமென்” என்று கேட்டருள, “வாசாயதீந்த்ர” என்றும், “அத்யாபி மே ந” என்றும் கீழிரண்டு ஶ்லோகத்தாலும் ப்ரார்த்திக்க அநிஷ்டநிவ்ருத்தியையும் இஷ்டப்ராப்தியையும் இஶ்ஶோகத்தில் பூர்வோத்தரார்த்தங்களாலே    ப்ரார்த்தித்த ருளுகிறார்.

  1. ஶப்3தா3தி3 போ43விஷயா ருசிரஸ்மதீ3யா

    நஷ்டா ப4வத்விஹ ப4வத்33யயா யதீந்த்ர

    த்வத் தா3ஸ தாஸக3ணநா சரமாவதௌ4 ய:

    தத்தா3ஸதைகரஸதா அவிரதா மமாஸ்து

பதவுரை –

யதீந்த்ர – யதிபதியே!

அஸ்மதீயா – என்னுடையதாய்

ஶப்தாதிபோகவிஷயா – (பகவத் கைங்கர்யவிரோதியான) ஶப்தாதிவிஷயாநுபவத்திலுண்டான

ருசி: – ஆசையானது

இஹ – இஶ்ஶரீரத்தோடிருக்கிற காலத்திலேயே

பவத் – தேவரீருடைய

தயயா – க்ருபையாலே

நஷ்டா பவது – நாஶமடையவேணும்

ய: – யாவரொருவர்

த்வத் – தேவரீருடைய

தாஸ தாஸ – ஶேஷபூதர்களுக்கு ஶேஷபூதர்களின்

கணநா – எண்ணிக்கையினுடைய

சரமாவதௌ – எல்லை நிலத்திலே (நிற்கிறார்களோ)

தத் – அவருடைய

தாஸதைகரஸதா – கைங்கர்யமொன்றிலுமே ஆசையுடையவ னாகையானது

மம – இதுவே புருஷார்த்தமென்றறுதியிட்டிருக்கிற வெனக்கு

அவிரதா – அவிச்சிந்நமாக

அஸ்து – நடக்கவேணும்

வ்யாக்யானம் – (ஶப்தாதீத்யாதி) த்ருதீய பதத்திற்சொன்ன அநந்யபோகத்வத்துக்கு ஶப்தாத்யநுபவ ருசியிறே விரோதி.  ஆகையாலே அவித்யா நிவ்ருத்தியை அபேக்ஷியாமல் விஷய ப்ராவண்ய நிவ்ருத்தியை யபேக்ஷிக்கிறார்.  (அஸ்மதீயா) இந்த ருசியாலேயன்றோ அநாதி காலம் ஸ்வரூபாநுரூப புருஷார்த்தத்தை  இழந்ததென்று அதின் பேர் சொல்லவும் அஸஹ்யமாயிருக்கிறதாயிற்று.  (நஷ்டா பவது) “யாது ஶததா விநாஶம்” (ஸ்தோ.ரத் – 57) என்னுமாபோலே உருக்காணவொண்ணாதபடி நஶிக்க வேணும்;  தேஹாவஸாநத்திலே தன்னடையே நஶியாதோவென்ன, (இஹ நஷ்டா பவது) என்கிறார். இஶ்ஶரீரத்தோடேயிருக்கிற காலத்திலே நஶிக்கவேணும்.  அன்றிக்கே, பேரளவுடையவர்களையும் தன் கீழேயாக்கி ஶப்தாதிகள் தனிக்கோல் செலுத்துகிற இவ்விபூதியிலே யென்னவுமாம்.

அநாதி காலமே பிடித்துக் கரம்பேறிக்கிடக்கிற இது நஶிக்கும்போதைக்கு ஒரு ஹேது வேண்டாவோ வென்ன, அருளிச்செய்கிறார் (பவத் தயயா) என்று.  “நமக்கு ஶேஷமாய்வைத்து இவ்வஸ்து இவ்விஷயங்களின் காலிலே துகையுண்பதே;  இதன் கையில் இனியிவன் நலிவுபடாதொழிவான்” என்று தேவரீர் க்ருபை பண்ணில் பிழைக்கலாமித்தனை, க்ருபா மாத்ரம் கொண்டு விஷய ருசியைத் தவிர்க்கப்போமோவென்ன, அருளிச்செய்கிறார் (யதீந்த்ர) என்று.  விஷயங்களைத் திரஸ்கரிக்கும் ஶக்திமான்களான யதிகட்குத் தலைவரான தேவரீர்க்கு முடியாதது உண்டோ?

“இவ்வளவோ?  மற்றுமபேக்ஷிதமுண்டோ” என்ன, “இது ஆநுஷங்கிகம், ப்ரதாந பலம் வேறே” என்று தமக்கிஷ்டமான புருஷார்த்தத்தை யபேக்ஷிக்கிறார்.  (த்வத்தாஸேத்யாதி) தேவரீர் திருவடிகளில் ஶேஷத்வமே நிரூபகமாகவுடைய  ஶேஷபூதருடைய பரம்பரையினெல்லை நிலத்திலே நிற்கிறவர்கள் யாவரொருவர், அவர் திருவடிகளில் ஶேஷத்வமொன்றிலும் ஒருபடிப்பட்ட ரஸத்தை யுடையனாகையே இடைவிடாமல் எனக்கு நடக்கவேணும்;  (மமாஸ்து) “இதுவே புருஷார்த்தம்” என்றறுதியிட்டிருக்கிற எனக்கு இரண்டாவதாக;  இந்த புருஷார்த்தத்தில் ருசி இல்லாதார் இழந்தார்களென்று ருசியுடைய எனக்கு மிழக்கவேணுமோ?

தாத்பர்யம் – யதிபதியே! இந்த உடம்போடிருக்கச் செய்தே எனக்கு பகவதநுபவ விரோதியான ஶப்தாதி விஷய ப்ராவண்யம் நஶிக்கும்படிக்கும், ப்ரதிபந்தகம் நிவ்ருத்தமானாலுண்டாகக் கடவதான, தேவரீருடைய தாஸபூதர்களின் எல்லை நிலத்திலிருக்கும்  மஹாத்மாக்களுக்கு நித்ய கைங்கர்யம் செய்கையாகிற மஹா புருஷார்த்தமானது இடைவிடாமல் எனக்கு நடக்கும்படிக்கும் தேவரீர் க்ருபை செய்யவேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

அவதாரிகை – இஷ்டங்களைக் கொடுக்கையும் அநிஷ்டங்களைப் போக்குகையும் உபாயபூதனான ஈஶ்வரன் க்ருத்யமன்றோ?  நம்மாலது செய்து தலைக்கட்டப்போமோ? வென்ன, “பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலைநின்று மண்ணின் தலத்துதித்து ஶ்ரீவிஷ்ணுலோக மணிமண்டப மார்க்கதாயியாயிருக்கிற தேவரீருக்கு முடியாதது உண்டோ?  ஆகிலும், அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக ஸர்வேஶ்வரன் தலையிலே ஏறிட்டருளினீராகிலும் அந்த ஈஶ்வரந்தான் தேவரீர்க்கு வஶ்யனன்றோ?  ஆனபின்பு ஆஶ்ரித பாபவிமோசநத்தில் ஶக்தி தேவரீர்க்கே யுள்ளதென்கிறார்.

  1. ஶ்ருத்யக்3ரவேத்3ய நிஜ தி3வ்யகு3ணஸ்வரூப:

    ப்ரத்யக்ஷதாமுபக3தஸ்த்விஹ ரங்கராஜ:

    வஶ்யஸ்ஸதா34வதி தே யதிராஜ தஸ்மாத்

    ஶக்தஸ்வகீய ஜந பாபவிமோசநே த்வம்

பதவுரை –

யதிராஜ – யதிஶ்ரேஷ்டரான எம்பெருமானாரே!

ஶ்ருத்யக்ர – வேதங்களின் ஶிரஸான உபநிஷத்துக்களாலே

வேத்ய – அறியத்தகுந்ததான

நிஜ – தன்னுடைய

திவ்ய – அப்ராக்ருதங்களான

குண – கல்யாணகுணங்களென்ன

ஸ்வரூப – திவ்யாத்ம ஸ்வரூபமென்ன

(இவைகளையுடையவராய்)

இஹ – இந்த ஸம்ஸாரது:க்காபரணமான கோயிலிலே

ப்ரத்யக்ஷதாம் – எல்லார் கண்ணுக்கும் விஷயமாயிருக்கையை

உபகத: – அடைந்திருக்கிற

ரங்கராஜ – பெரியபெருமாளானவர்

தே – தேவரீருக்கு

ஸதா – எப்போதும்

வஶ்ய: – விதேயராய்

பவதி – போராநின்றார்

தஸ்மாத் – இப்படி ஸர்வேஶ்வரன் தேவரீருக்குப் பரதந்த்ரனாயிருக்கையாலே

த்வம் – தேவரீர்

ஸ்வகீயஜந – தேவரீரை ஆஶ்ரயித்த ஜநங்களுடைய

பாபவிமோசநே – பாபங்களை போக்குகையிலே

ஶக்த: – ஸமர்த்தரன்றோ

வ்யாக்யானம் – (ஶ்ருத்யக்ரவேத்யேத்யாதி) அபௌருஷேயமாய் நித்யநிர்தோஷமான வேதாந்தத்திலே வேத்யமான தன்னுடைய கல்யாணகுணவிஶிஷ்டமான திவ்யாத்மஸ்வரூபத்தையுடையவன்;  ஸ்வரூபகுணங்களை யுடையவன்.  ஸ்ரூபகுணங்களைச் சொன்னவிது – உபவிபூதிகளுக்குமுபலக்ஷணம்.  “திவ்யகுணஸ்வரூப:” என்று கல்யாணகுண விஶிஷ்டமாக ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது – வஸ்து நிர்குணமென்பார்க்கு நாவெடுக்கவிடமறும்படியாக;  “நலமுடையவன்” (திருவாய் – 1.1.1) என்னுமாப்போலே;  “நிர்குணம்” “நிரஞ்சனம்” (ஶ்வேத – 6) இத்யாதிகளில் தோற்றுகிற குணஸாமாந்ய நிஷேதம் “யஸ்ஸர்வஜ்ஞஸ்ஸர்வவித்” (முண்டக – 1.1) இத்யாதிகளில் விதிக்கப்பட்ட கல்யாணகுணவ்யதிரிக்த ஹேயகுண விஷயமென்று தோற்றுகைக்காக “திவ்யகுணஸ்வரூப:” என்கிறார்.  இத்தால் அவனுடைய பரத்வம் சொல்லிற்று.

இப்படி என்றும் ஶாஸ்த்ரங்களிலே கேட்டுப்போகையன்றிக்கே கண்ணாலே கண்டு எல்லார்க்குமநுபவிக்கலாம்படி  கோயிலிலே வந்து கண்வளர்ந்தருளின ஸௌலப்யத்தைச் சொல்லுகிறது (ப்ரத்யக்ஷதாமுபகத:) என்று;  என்றேனும் கட்கண்ணால் காணாத தன் வடிவைக் கண்ணுக்கு விஷயமாக்கினபடி.  “ஞாலத்தூடே நடந்து நின்றும்” (திருவாய் – 6.9.3) என்பாரைப்போலே தன் வடிவில் வாசியறிந்து ஈடுபடுவாரில்லாத ஸம்ஸாரத்திலேகிடீர் தன் வடிவை ப்ரத்யக்ஷிப்பித்தது.

(ரங்கராஜ:)  விஸத்ருஶமான தேஶத்திலே வந்தால் தன் வைபவம் குன்றுகையன்றிக்கே துடித்தபடி (துடிப்பு – அதிஶயம்);  பரம ஸாம்யாபந்நர்க்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிற இருப்பிலும் இங்கே வந்து ஈரரசுதவிர்த்தபின்பாயிற்று ஶேஷித்வம் நிலை நின்றது.

(வஶ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ) இப்படி மேன்மை நீர்மை இரண்டாலும் பூர்ணரான பெரியபெருமாள் தேவரீர்க்கு எப்போதும் வஶ்யரன்றோ?  “நம் சேவகனார் மறுவிய பெரிய கோயில்” (திருமாலை – 11) என்கிறபடியே ஆஶ்ரிதர்க்குக் கையிலக்கைக்குச் (கையிலக்கு – அஞ்சலி) சேவிக்கும வனன்றோ?  உபயவிபூத்யைஶ்வர்த்தையும் தேவரீர்க்குத் தந்து, “நாம் பலபிறப்பும் பிறந்து திருத்தபார்த்தவிடத்திலும் திருந்தாத ஸம்ஸாரிகள் முருடைத் தீர்த்து நமக்காளாம்படி திருத்தித்தருகைக்கு இவரொருவரைப் பெற்றோமே!” என்று நிரதிஶய வ்யாமோஹத்தைப் பண்ணி, “ஒரு கார்யத்தில் எப்போதிவர் நம்மை நியமிப்பது” என்று அவரை ப்ரதீக்ஷராய்க்கொண்டு ஸர்வகாலமும் இங்குத்தைக்கு விதேயராய் போரா நின்றாரென்பது யாதொன்று;  (வஶ்ய: –  பவதி) இப்படி ஆஶ்ரிதபரதந்த்ரராய் அத்தாலே ஸத்தைப் பெற்றபடி.

“ஆத்மாநம் நாதி வர்தேதா:” (ரா.அயோ – 111. 6) “தேவுந்தன்னையும்” (திருவாய் – 2.7.9) என்னக்கடவதிறே.  நிரங்குஶ ஸ்வதந்த்ரனானவன்  ஒருகாலாகவிசைந்து நிற்கிலோவென்ன, “ஸதா பவதி” என்கிறார்.  ஸ்வாதந்த்ர்யத்தாலே தன் ஸத்தையின்றிக்கே தன் ஸ்வரூபஸ்திதியழியக் கார்யம் பார்க்குமோ?  தேவரீரளவில் வ்யாமோஹத்தாலே பரதந்த்ரனாகையன்றிக்கே தன் ஸ்வரூபஸ்திதிக்காக பரதந்த்ரனாகையாலே எப்போதும் இஸ்ஸ்வபாவத்துக்குக் குலைத்தலில்லை.  (தஸ்மாத்) ஆகையாலே தேவரீர் ஆஶ்ரித ஜநங்களின் பாபத்தைப் போக்குகைக்கு ஶக்தரன்றோவென்கிறார்.

தாத்பர்யம் – யதிபதியே! அபௌருஷேயமாய் நித்யநிர்தோஷங்களான வேதாந்தங்களாலே அறியத்தக்க கல்யாணகுணவிஶிஷ்டமான திவ்யாத்மஸ்வரூபத்தை யுடைய ஸர்வேஶ்வரன் மாம்ஸசக்ஷுஸ்ஸுக்களாலே எல்லாரும் கண்டு ஸேவிக்கும்படி கோயிலிலே பெரியபெருமாளாய்த் திருவவதரித்து “ஒரு காரியத்தில் எப்போது நம்மை நியமிப்பது” என்று அவஸரப்ரதீக்ஷனாய் தேவரீருக்கு விதேயனாயிருக்கையாலே தேவரீர்க்கு ஆஶ்ரித ஜனங்களின் பாபங்களைப் போக்குகையில் வருத்தமுண்டோ?  முதலிலே ஆஶ்ரித தோஷங்களை கணிசியான், ஒருகால் கணிசித்தாலும் தேவரீர் புருஷகாரம் செய்து ஆஶ்ரிதரை ரக்ஷிப்பதில் ஸமர்த்தரன்றோ வென்கிறார்.

அவதாரிகை – உபாயபூதனான ஈஶ்வரன் நமக்கு பவ்யனாயிருந்தாலும், அநாதிகாலம் ததாஜ்ஞாரூப ஶாஸ்த்ரமர்யாதையை உல்லங்கித்து கரணத்ரயத்தாலும்  அதிக்ரூரமான பாபங்களைக் கூடுபூரித்து இப்போதும் அதிலே முதிர நடவாநின்றவனளவில் ஈஶ்வரனுக்குண்டான சீற்றத்தை அவன்தன்னையே  இரந்து காற்கட்டி ஆற்றிக்கொள்ளவேண்டியன்றோ இவனுக்கிருப்பது” என்று எம்பெருமானுக்குத் திருவுள்ளமாக, தான் மருந்து குடித்துப் பிள்ளை நோயைப் போக்கும் வத்ஸலையான தாயைப்போலே இந்த தாயான தேவரீரும்  ஆஶ்ரிதரான அடியோங்களுக்காகப் பிராட்டிக்கு வல்லபனான எம்பெருமான் திருவடிகளிலே “ஸர்வாபராதங்களையும் பொறுத்தருளவேணும்” என்று ப்ரார்த்தித்தருளுகையாலே  அடியோங்களுக்கு அந்த குறையில்லை என்கிறார்.

18.காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி

பாபக்ரியஸ்ய ஶரணம் பகவத்க்ஷமைவ

ஸா ச த்வயைவ கமலாரமணேர்த்திதா யத்

க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்தர பவச்ச்ரிதாநாம்.

பதவுரை –

யதீந்த்ர – யதிபதியே

காலத்ரயேபி – பூதபவிஷ்யத்வர்த்தமாநங்களான மூன்று காலங்களிலும்

கரணத்ரய – மநோவாக்காய ரூபங்களான மூன்று கரணங்களாலும்

நிர்மித – செய்யப்பட்ட

அதிபாபக்ரியஸ்ய – அக்ருத்யகரண பகவதபசாராதி பாபங்களையுடையவனுக்கு

பகவத் – ஸர்வேஶ்வரனுடைய

க்ஷமைவ – அபராதஸஹத்வமாகிற க்ஷமைதானே

ஶரணம் – ரக்ஷகம்

ஸா ச – அந்த க்ஷமைதான்

த்வயைவ – தேவரீராலே

கமலாரமணே – ஶ்ரீய:பதியினிடத்தில்

அர்த்திதா – (மநோவாக்காயை: என்கிற வாக்யங்களாலே) ப்ரார்த்திக்கப்பட்டது.

இதியத் – என்கிற யாதொன்று உண்டோ

ஸ ஏவ ஹி – அந்த ப்ரார்த்தனைதான்

பவச்ச்ரிதானாம் – தேவரீரை ஆஶ்ரயித்தவர்களுக்கு

க்ஷேம: – நிர்ப்பரரா இருக்கைக்குக் குறுப்பான ரக்ஷகம்.

வ்யாக்யானம் – (காலத்ரயேபி) பூதகாலத்திலுள்ள பாபமாத்ரமன்றிக்கே காலத்ரயத்திலுமுண்டான பாபங்களுக்கும் பொறைகொள்ளவேணுமாயிற்று.  “க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம்ஶ்ச” (ஶரணாகதி கத்யம்) என்றத்தைச் சொன்னபடி.  (கரணத்ரயேத்யாதி) ஒரு கரணத்தால் பண்ணினவற்றுக்குப் பொறைகொள்ளுகை யன்றிக்கே கரணத்ரயோபார்ஜிதங்களானவற்றுக்குப் பொறைகொள்ளவேணும்.  இத்தால், “மநோவாக்காயை:”  என்றத்தைச் சொல்லுகிறது.  நிர்மித வென்கையாலே – இவைதான் ஸங்கல்பித்தமாத்ரமன்றிக்கே பத்தும் பத்தாகச் செய்தவை என்கை;  “பாபக்ரிய” என்கையாலே – அக்ருத்யகரணத்தையும், “அதிபாப” என்கையாலே பகவதபசாராதிகளையும் சொல்லுகிறது;  இத்தால் “அக்ருத்யகரண க்ருத்யாகரண பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாராந்” என்றத்தைச் சொன்னபடி;  (ஶரணம் பகவத் க்ஷமைவ) இப்படியிருந்துள்ள பாபத்தை உடையவனுக்கு எம்பெருமானுடைய அபராத ஸஹத்வமாகிற க்ஷமையொழிய வேறு புகலில்லை.

(ஸாசேத்யாதி) அந்தப் பொறைதானும் தேவரீர் தம்மாலே ஶ்ரீய:பதி திருவடிகளிலே “மநோவாக்காயை:” என்று தொடங்கி “ஸர்வாநஶேஷத: க்ஷமஸ்வ” என்று ப்ரார்த்திக்கப்பட்ட தென்பது யாதொன்று, அது தேவரீர் திருவடிகளைப் பற்றியிருக்கும்  ஆஶ்ரித ஜநங்களுக்குப் பிழைக்கலாம்படி வைத்த தண்ணீர்ப்பந்தலிறே.

(த்வயைவ) “அபிமாநாந்தர்ப் பூதர்க்குக் கார்யம் செய்யவேணும்” என்று ஈஶ்வரனோடே மன்றாடும்படியான  ஸ்வரூபத்தை யுடைய தேவரீரன்றோ ப்ரார்த்தித்தருளிற்று.  “இனியாமுறாமை – அடியேன் செய்யும் விண்ணப்பம் – மெய்நின்று கேட்டருளாய்” என்று ப்ரதமாசார்யர் ப்ரார்த்தித்தபடி கண்டால் அவரடிபணிந்த இவர்க்கும் இதுவன்றோ அநுஷ்டானம்.

(கமலாரமணே அர்த்திதா) அஹ்ருதயமான உக்தியையும் ஸஹ்ருதயமாக்கிக் கார்யம் கொள்ளுமவளும், அவள் தன்னையும் அதிஶங்கை பண்ணி ஆஶ்ரிதரை நோக்குமவனுமான சேர்த்தியிலேயன்றோ ப்ரார்த்தித்தது.

(அர்த்திதா) தாமுமவனுமறிந்ததாக நெஞ்சாலே அபேக்ஷித்தவளவன்றிக்கே பின்புள்ளார்க்கும் இதுகொண்டு வழக்குப் பேசலாம்படி பாஶுரமிட்டன்றோ ப்ரார்த்தித்தது. அர்த்தித்தார் காரியம் செய்தே நிற்கவேண்டும்படி பல்காட்டியன்றோ போந்தது.

(பவச்ச்ரிதானாம் – ஸ ஏவ ஹி – க்ஷேம:) தேவரீருடைய ஸ்வபாவத்தையும் அபிமானவிஷயஸ்வபாவத்தையும் ப்ரார்த்தனா ப்ரகாரத்தையும் அநுஸந்தித்தால் தேவரீர் திருவடிகளைப் பற்றினவர்க்கு ஆனைக்கழுத்தி லிருப்பாரைப்போலே நிர்ப்பரராயிருக்கைக்கு உறுப்பான ரக்ஷை அதுவேயிறே.

தாத்பர்யம் –  யதிபதியே! பூத பவிஷ்யத் வர்த்தமான காலங்களிலும் மநோவாக்காயங்களால் அக்ருத்யகரண பகவதபசார பாகவதாபசாராதிகளைச் செய்பவனுக்கு ஸர்வேஶ்வரனுடைய எல்லா அபராதங்களையும் பொறுக்கும் தன்மையான க்ஷமாகுணந்தான் ரக்ஷகம்.  அப்படிப்பட்ட க்ஷமாகுணத்தை பரமகாருணிகரான தேவரீர் ஶ்ரீய:பதியான அழகியமணவாளன் திருவடிகளில் “ஆஶ்ரிதருடைய அபராதங்களைப் பொறுத்தருளவேணும்” என்று ப்ரார்த்தித்தருளிற்று என்பது யாதொன்று, அத்தை அநுஸந்தித்தால் தேவரீர் திருவடிகளை ஆஶ்ரயித்தவர்களுக்கு நிர்ப்பரராயிருக்கைக்குறுப்பான  ரக்ஷகம் அதுவேயிறே.

அவதாரிகை – இப்படி எம்பெருமானாருடைய திவ்ய வைபவத்தைத் தம்முடைய ப்ரேமாநுகுணமாகப் பேசுகையிலே இறங்கினவர் முதலிரண்டு ஶ்லோகத்தாலே ஆழ்வார்களளவிலும் அவர்களுகந்த விஷயமான எம்பெருமானளவிலும் எம்பெருமானார்க்குண்டான ப்ராவண்யாதிஶயத்தையும் ஸ்வாஶ்ரிதர்க்கு ப்ராப்ய ப்ராபகபூதராயிருக்கிற படியையும் பேசி, மேல் மூன்று ஶ்லோகத்தாலே தமக்கபேக்ஷிதங்களான புருஷார்த்தங்களை அவர் திருவடிகளிலே ப்ரார்த்தித்து, அநந்தரம் ஶ்லோகத்தாலே உடையவர் திருவடிகளிலே ப்ரேமாபாவத்துக்கும் இதர விஷய ப்ராவண்யத்துக்கு மடியான பாபத்தைப்போக்கி  யருளவேணுமென்று விண்ணப்பம் செய்து, மேலாறு ஶ்லோகத்தாலே பதத்ரயார்த்த நிஷ்டைக்கு விரோதிகளான அக்ருத்யகரணாதிகளையும், அபசாராதிகளையும் பரக்கப் பேசி, மேலொரு ஶ்லோகத்தாலே அநந்தக்லேஶபாஜநமான தேஹத்தோடே பொருந்தியி ருக்கைக்கடியான  பாபத்தைப் போக்கவேணுமென்றும், அநந்தரம் இரண்டு ஶ்லோகத்தாலே யாமுனாசார்ய ப்ரப்ருதிகளருளிச்செய்த தோஷஸமூஹங்களுக்கெல்லாம் கொள்கலமானவெனக்கு தேவரீருடைய க்ருபையொழிய வேறுபுகலில்லை என்றும், மேல் மூன்று ஶ்லோகத்தாலே அடியேனுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டத்தைத் தந்தருளவேணுமென்றும், அவர் தம்முடைய கார்யங்களைச் செய்கைக்கு ஶக்தரென்றும், அவர் கத்யத்ரயத்தில் ஸர்வேஶ்வரன் திருவடிகளில் பண்ணின ப்ரபத்தியே தமக்குப் பேற்றுக்குடலென்று மருளிச்செய்தாராய் நின்றார் கீழ்.

இனி மேலிரண்டு ஶ்லோகத்தாலும் எம்பெருமானார் திருவடிகளில் ஸேவையாகிற பரம ப்ராப்யம் நித்யாபிவ்ருத்தமாய்ச் செல்லவேணுமென்றும், அதுக்கு ப்ரதிபந்தகமான துர்விஷயஸங்கம் நஶிக்கவேணுமென்றும், உடையவர் திருவடிகளிலே ப்ரார்த்தித்து, இப்ரபந்தமுகேன அடியேன் விண்ணப்பம் செய்தவித்தை ஸாதரமாக ஆங்கீகரித்தருளவேணுமென்று அபேக்ஷித்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டுகிறார்.

அதில் முதல் ஶ்லோகத்தாலே தேவரீர் திருவடிகளில் ஸேவையாகிற பரமப்ராப்யமே நமக்கு நித்யாபிவ்ருத்தமாம்படியாகவும் அதுக்கு இடைச்சுவரான இதரொவிஷயஸங்க மறும்படியாகவும் தேவரீரே செய்தருளவேணுமென்று எம்பெருமானாரை ப்ரார்த்தித்தருளுகிறார்.

  1. ஶ்ரீமந்யதீந்த்3ர தவ தி3வ்ய பதா3ப்3ஜ ஸேவாம்

     ஶ்ரீஶைலநாத2 கருணாபரிணாம த3த்தாம்

     தாமந்வஹம் மம விவர்த்த4யநாத2 தஸ்யா:

     காமம் விருத்த4மகி2லஞ்ச நிவர்த்தயத்வம்

பதவுரை –

ஶ்ரீமந் – பகவத் கைங்கர்யமாகிற ஸம்பத்தையுடையவராய்

யதீந்த்ர – இந்த்ரிய ஜயம் செய்பவரில் தலைவரான எம்பெருமானாரே

ஶ்ரீஶைலநாத – திருவாய்மொழிப்பிள்ளையினுடைய

கருணா பரிணாம – நிர்ஹேதுக க்ருபா விஶேஷத்தாலே

தத்தாம் – (அபேக்ஷையின்றிக்கேயிருக்கத் தம்பேறாக) உபகரித்தருளின

தாம் – அப்படிப்பட்ட

தவ – தேவரீருடைய

திவ்ய – நிரதிஶயபோக்யமான

பதாப்ஜ  – திருவடித்தாமரைகளில்

ஸேவாம் – நிரந்தராநுபவஜநிதமான கைங்கர்யத்தை

அந்வஹம் – நாடோறும்

மம – கைங்கர்யமொழியிற் செல்லாத ப்ரக்ருதியையுடைய எனக்கு

விவர்த்தய – உத்தரோத்தரம் தழைத்துச் செல்லும்படி வளர்த்தருளவேணும்

நாத – ஸ்வாமீ!

த்வம் – தேவரீர்

தஸ்யா: – அந்த கைங்கர்யத்துக்கு

விருத்தம் – ப்ரதிபந்தகமாய்

அகிலம் – ஶப்தாதி விஷயபேதத்தாலே பஹுவிதமான

காமம் – விஷயப்ராவண்யரூபமான காமத்தையும்

நிவர்த்தய – ஸவாஸநமாகப் போக்கியருளவேணும்

வ்யாக்யானம் – (ஶ்ரீமந்யதீந்த்ரேத்யாதி) (ஶ்ரீமந்) பகவதநுபவ கைங்கர்யமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையவரே;  (யதீந்த்ர) அந்த ஸ்வரூபாநுரூபமான ஸம்பத்தை புஜிக்குமளவில் எனக்கென்று நாக்கு நீட்டாதபடி இந்த்ரியங்களை நியமித்துக்கொண்டு போரும்படியைப்பற்ற “யதீந்த்ர” என்று ஸம்போதிக்கிறார்.  “ஆம்பரிசறிந்துகொண்டு” (—?) என்று ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொன்னவநந்தரம்,  “ஐம்புலனகத்தடக்கி”  (—?) என்று அதிலே ஸ்வப்ரயோஜன புத்தியாலே ப்ரவணமாகிற இந்த்ரியங்களை நியமித்துக்கொண்டுபோரும்படியைச் சொல்லிற்றிறே.  அன்றிக்கே, தமக்கபேக்ஷிதமான ப்ராப்யத்தைத் தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையவரென்றும், அதுக்கு விரோதியைப் போக்கவல்ல ஶக்தியையுடை யவரென்றும் நினைத்து “ஶ்ரீமந்யதீந்த்ர” என்று ஸம்போதிக்கிறாராகவுமாம்.

(தவதிவ்யபதாப்ஜஸேவாம்) தம்முடைய ப்ராப்யவேஷமிருக்கிறபடி;  வகுத்த ஶேஷியான தேவரீருடைய நிரதிஶய போக்யமான திருவடிகளில் நிரந்தராநுபவமாகிற ஸேவையை;  “இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ” என்றும், “நம் தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமாநுசனடிப்பூ  மன்னவே”  (—?) என்றும் பிள்ளையமுதனார் உபக்ரமோபஸம்ஹாரங்ளில் பேசின ப்ராப்யத்தைக் கணிசிக்கிறது.

இந்த ப்ராப்யம் நீர் உம்முடைய யத்நத்தாலே ஸாதித்துப் பெற்றதோவென்ன, அன்று;  தயாப்ராப்தமென்கிறார்.  (ஶ்ரீஶைலநாத கருணாபரிணாமதத்தாம்)  எங்களுடைய ஆசார்யரான பிள்ளை தாம் எப்போதும் அநுபவித்துக்கொண்டு போருகிற இந்த பரம ப்ராப்யத்தை உபகரித்தே நிற்கவேண்டும்படி தடையறப்பெருகுகிற தம்முடைய நிர்ஹேதுக க்ருபைக்குப் போக்குவீடாக முலைக்கடுப்பாலே பாலைத் தரையிலே பீச்சுமாப்போலே எனக்கபேக்ஷையின்றிக்கேயிருக்கத் தம்முடைய பேறாக ஸர்வஸ்வதானம் பண்ணியருளினார்.  அத்தாலே எனக்கு வந்து கைகூடிற்று.

“பிள்ளையருளாலே பெற்றீராகில் இப்போது நம் பக்கல் அபேக்ஷிக்கிறதென்” என்ன அருளிச்செய்கிறார். (தாமந்வஹம் மம விவர்த்தய) என்று.  தேவரீரிப்போது புதுக்கவொன்றுண்டாக்க வேண்டுவதில்லை.  பிள்ளையருளாலே உபகரித்தவற்றை நாடோறும் வளர்த்தருளுகையேயுள்ளது.  அவரும் “அப்படியே  செய்யக்கடவோம்” என்னுமிடம் தோற்ற கருணாம்ருத   பரிணாமரூபகடாக்ஷ வ்ருஷ்டிகளாலே குளிரவழியப் பார்க்க, அத்தாலே நிரஸ்த ஸமஸ்த து:க்கராய்   பூர்ணமாக உபசரியாநின்றுகொண்டு உத்தரோத்தரம் தழைத்துச் செல்லும்படி வளர்ந்தருளவேணுமென்கிறார்.  (தாமன்வஹம் மமவிவர்த்தய) என்று.

உபகரிக்கிற ப்ராப்யத்தின் கௌரவமாதல், இவ்வுபகாரத்துக்கிலக்கான என்னுடைய லாகவமாதல் பாராதே  தம்மளவிலே உபகரித்தருளுவதே என்று வித்தராகிறார் (தாம்) என்று;  இப்படிச் செய்யவேண்டும் நிர்ப்பந்தமென்னென்ன, அருளிச்செய்கிறார்.  (நாத) உடைமையானதின் கார்யம் செய்கை உடையவனுக்கே பரமிறே.  ஸர்வாஶ்ரித ஸாதாரணரான நமக்கு இவனொருவனையும் பார்த்திருக்கப்போமோ?  என்று உபேக்ஷித்தருளாதே தேவரீர் திருவடிகளிலநுபவத்தாலல்லது செல்லாத என் ப்ரக்ருதியைத் திருவுள்ளம் பற்றியருளி எனக்கொருவனுக்குமே முற்றூட்டாம்படி அவ்வநுபவத்தை இடைவிடாமல் வர்த்திப்பித்தருளவேணுமென்கிறார்.

இப்படி நாம் அநுபவத்தை வளர்த்துக் கொடுக்கிலும் இதுக்கிடைச்சுவரான விரோதியைத் தானே கழித்துக்கொள்ளுகிறானென்று விரோதி நிவ்ருத்திக்கு என் கையாலே என்னைக் காட்டித்தரவொண்ணாது, அதுவும் தேவரீர் தாமே  செய்தருளவேணுமென்கிறார்.  (தஸ்யா: காமம்  விருத்தமகிலஞ்ச நிவர்த்தய த்வம்) என்று;  தேவரீர் திருவடிகளில் ஸேவையாகிற இந்த பரமப்ராப்யத்துக்கு  விருத்தமாய் விஷய பேதத்தாலே பஹுவிதமாயிருந்த  விஷய ப்ராவண்ய ரூபமான காமத்தை ஸவாஸமாகப் போக்கியருளவேணும்.

இங்ஙனன்றிக்கே இதுக்கு விருத்தமான ஐஶ்வர்யாநுபவமாகிற காமத்தையும் ஆத்மாநுபவத்தையும், பகவதநுபவமாகிற ப்ரதிபந்தகங்களெல்லாவற்றையும் போக்கியருளவேணுமென்கிறாராகவுமாம்.

இதில் முற்பட்ட யோஜனைக்கு ஔசித்யமுண்டு;  “ஶப்தாதிபோகருசி ரந்வஹமேததே ஹா”  “ஶப்தாதிபோகருசிரஸ்மதீயா” என்று ஶப்தாதிவிஷய ப்ராவண்யமே   இதுக்கு ப்ரதிபந்தகமாக கீழே அருளிச்செய்ததுக்குச் சேருகையாலே.

இப்படி எம்பெருமானார் திருவடிகளிலே தமக்கபேக்ஷிதமாய் ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தை அநாதிகாலமிந்த புருஷார்த்ததுக்கு இடைச்சுவராய் இப்போது மநுவர்த்தித்துப் போருகிற அர்வாசீநவிஷய ப்ராவண்யநிவ்ருத்தி பூர்வகமாக பலபடியாக ப்ரார்த்தித்துக்கொண்டு போந்தார்.

தாத்பர்யம் – ஸ்வார்த்தகந்தரஹிதரான பகவதநுபவகைங்கர்யமாகிற  ஸம்பத்தையுடைய எம்பெருமானாரே! ஸ்வாசார்யரான பிள்ளை தம் பரம க்ருபையாலே என்னுடைய லாகவம் பாராதே தம் பேறாக உபகரித்தருளின தேவரீர் திருவடித்தாமரைகளில் நித்யகைங்கர்யமான ப்ராப்யத்தை, அதில் நிரதிஶய ப்ரீதியுடைய எனக்கு நாடோறும் தழைத்துச் செல்லும்படி வளர்த்தருளவேணும்.  இப்படி பரமப்ராப்யத்தை  உபகரிக்குமளவில் அதுக்கிடைச்சுவரான ஶப்தாதிவிஷய ப்ராவண்யத்தையும், ஸ்வாமியான தேவரீரே  ஸவாஸநமாக போக்கியருளவேணுமென்று     ப்ராப்யத்தையும் ப்ராப்யவிரோதி நிவ்ருத்தியையும் ப்ரார்த்தித்தருளுகிறார்.

அவதாரிகை – என்னுடைய சாபலத்தாலே அடைவுகெட விண்ணப்பம் செய்த இந்த ஸ்தோத்ரத்தை அடியேனுடைய தோஷங்களைப் பார்த்து உபேக்ஷியாமல் அங்கீகரித்தருளவேணுமென்று ஸ்தோத்ரத்தை நிகமித்தருளுகிறார்.

  1. விஜ்ஞாபநம் யதி33 மத்3ய து மாமகீநம்

     அங்கீ3குருஷ்வ யதிராஜ த3யாம்பு3ராஶே

     அஜ்ஞோயமாத்ம குணலேஶ விவர்ஜிதஶ்ச

     தஸ்மா த3நந்யஶரணோ ப4வதீதி மத்வா

பதவுரை –

தயாம்புராஶே – பரது:க்கது:க்கித்வமாகிற  தயைக்கு ஆஶ்ரயபூதரான

யதிராஜ – யதிபதியே

அத்ய – இப்போது

மாமகீநம் – அடியேன் தேவரீர் திருவடிகளில் ப்ரார்த்தித்தருளின

இதம் – இப்படி ஸஹ்ருதயமாய்ச்சொன்ன

விஜ்ஞாபநம் – விண்ணப்பமானது

யத் – யாதொன்று உண்டோ

(தத் – அத்தை)

அயம் – இவன்

அஜ்ஞ: – ஸ்வரக்ஷணோபயோகியான ஜ்ஞாநமில்லாதவன்

ஆத்மகுணலேஶ – ஸத்துக்களங்கீகரிக்கைக்கு யோக்யமான ஆத்மகுணலேஶத்தாலும்

விவர்ஜிதஶ்ச – ஶூந்யனானவன்

தஸ்மாத் – ஆகையாலே

அநந்யஶரண: – நம்மையொழிய வேறு புகலிடமில்லாதவனாய்

பவதி – ஆகிறான்

இதி – என்று

மத்வா – திருவுள்ளம்பற்றி

(தேவரீர்) அங்கீகுருஷ்வ – அங்கீகரித்தருளவேணும்.

வ்யாக்யானம் – (விஜ்ஞாபநம்) தம்முடைய அபேக்ஷிதங்களைத் திருவடிகளிலே விண்ணப்பம் செய்ய அது ப்ரபந்தமாய்த் தலைக்கட்டிற்று.  (இதம்) ஆர்க்கும் ஸாதரமாக இருக்கிறபடி.  “செவிக்கினிய செஞ்சொல்” என்கிறபடியே ஒன்றை நினைத்தொன்றைச் சொன்ன தன்றிக்கே நினைவும் சொல்லும் சேர்ந்திருக்கும்படி சொன்னதாயிருக்கை.

(அத்யது) பூவலரும்போதுபோலே பேசுகிற தசையில் செவ்வியைச் சொன்னபடி;  இச்சுவடு போவதற்குமுன்பே திருச்செவி சாற்றி “இளையபுன்கவிதை” என்கிறபடியே ஶப்தார்த்த விஷய வைபவத்தையுள்ளபடி அறிந்து பேசுகைக்குத் தக்க ஜ்ஞாநஶக்திகளின்றிக்கே  இருக்கச் செய்தேயும்  தன்னுகப்பாகப்பண்ணும் வைலக்ஷண்ய மற்றிருந்தாலும் “நம்மடியார் சொன்னதன்றோ” என்று திருவுள்ளமுகந்து கேட்டருளத்தக்கதென்கை.

(அங்கீகுருஷ்வ) ஆருடைய ப்ரயோஜனத்துக்கு ஆர் ப்ரார்த்திக்கிறார்;  இவன் வாக்கிலிப்படிகூடாது;  இதுக்கு க்ருஷி பண்ணிப்போந்த நம்மதன்றோ ப்ரயோஜநமென்று அங்கீகரித்தருளவேணுமென்கிறார்.  (யதிராஜ) இத்தலையில் தோஷத்தைப் போக்கவல்ல உடையவரன்றோ தேவரீர்  (தயாம்புராஶே) சீறியெடுத்தெறியும்படியான  தோஷம் இத்தலையிலே யுண்டானாலும் திருவடிகளைப் பூண்டுகொள்ளலாம்படி இருக்கிற அருட்கடலன்றோ தேவரீர்.  (அஜ்ஞோயம்) இவன்தான் ஸ்வரக்ஷணத்துக்கு நம்மையொழிய வேறு கைம்முதலுண்டு என்றிருக்கு மவனோ?  நம்மையொழிய மற்றொன்றை யறியுமோ?  (ஆத்மகுணலேஶ விவர்ஜிதஶ்ச)  தனக்கு சில ஆத்மகுணமுண்டாக நினைத்து அது தன் பேற்றுக்கு உடலென்றிருக்குமவனோ?  நம் க்ருபைக்குத் தண்ணீர் துரும்பாகச் சொல்லத்தக்கதொரு ஸத்குணலேஶமுண்டோ?

(தஸ்மாதநந்யஶரண:) ஆகையால் இவனுக்கு உம்மையொழிய வேறு புகலுண்டோ?  ஸ்வரக்ஷணத்துக்கொரு உபாயாந்தரமறிந்திருத்தல் செய்யத்தக்க ஜ்ஞாநமில்லாதவனுமாய் ஸத்துக்களங்கீ கரிக்கைக்குறுப்பான ஆத்மகுணஸம்பந்தரஹிதனுமா யிருக்கையாலே வேறொரு புகலில்லாதவனும் (இதி மத்வா) இப்படி பகவதநுபவாதிகளில் அந்யபரதையைத் தவிர்த்து திருவுள்ளம்பற்றியருளி இத்தை அங்கீகரித்தருள வேணுமென்று ப்ரார்த்தித்தருளினாராயிற்று.

தாத்பர்யம் – பரமதயாநிதியான எம்பெருமானாரே! அடியேனுடைய அபேக்ஷிதங்களை தேவரீர் திருமுன்பே இப்போது ஸஹ்ருதயமாக விண்ணப்பம் செய்த இந்த ப்ரபந்தத்தை “இவன் ஸ்வரக்ஷணோபயோகியான  உபாயாந்தர ஜ்ஞாநமில்லாதவன், ஸத்துக்களங்கீகரிக்கைக்கு உறுப்பான ஆத்மகுணலேஶமு மில்லாதவன்;  ஆகையாலே நம்மையொழிய வேறொரு புகலிடமில்லாதவன்”  என்று திருவுள்ளம் பற்றி, என்னுடைய தோஷங்களைக் கணிசியாமல் ஆஶ்ரிதனுடைய வார்த்தையன்றோவென்று அங்கீகரித்தருளவேணுமென்று ப்ரார்த்தித்து ப்ரபந்தத்தை நிகமித்தருளுகிறார்.

                   ஜீயர் திருவடிகளே ஶரணம்.

                       பதவுரை முற்றிற்று.

                    திருநக்ஷத்திர தனியன்

மேஷார்த்ராஸம்பவம் விஷ்ணோர் தர்ஶநஸ்த்தாப நோத்ஸுகம் துண்டீரமண்டலே ஶேஷமூர்த்திம் ராமாநுஜம் பஜே.

கல்யப்தே திவ்யகும்பே புதஜனவிதிதே வத்ஸரே பிங்களாக்யே சைத்ரேமாஸேகதேச த்ரியுததஶதிநே தீப்யமாநே ஹிமாம்ஶௌ பஞ்சம்யார்த்ராசமே ஸுரகுருதிவஸே கர்கடாக்யேசலக்நே ஶ்ரீமாந்ராமாநுஜார்யஸ் ஸமஜநி நிகமாந்தார்த்த ஸம்ரக்ஷணார்த்தம்.

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம

வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே

அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:

ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.