சதுஶ்ஶ்லோகீ வ்யாக்யானம்-பெரியவாச்சான்பிள்ளை

ஶ்ரீ:

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை
அருளிச்செய்த
சதுஶ்ஶ்லோகீ வ்யாக்யானம்

श्रीमत्कृष्णसमाह्वाय नमो यामुनसूनवे।

यत्कटाक्षैकलक्ष्याणामं सुलभ: श्रीधरस्सदा।।

ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப4 : ஸ்ரீத4ரஸ்ஸதா3 ||

அவதாரிகை:-நம் த3ர்ஶனத்துக்கு ப்ரதா4நம் ரஹஸ்ய
த்ரயமென்றும், ஶ்லோகத்3வய மென்றும், சதுஶ்ஶ்லோகீ
என்றும் நம் ஆசார்யர்கள் அருளிச்செய்துபோருவர்கள்.
இதில் திருமந்த்ரத்தாலே ஸ்வரூபமும் ஸ்வரூபா நுரூபமான புருஷார்த்த2மும் ப்ரதிபாதி3க்கப்படுகையாலே, அந்தப் புருஷார்த்த2த்துக்கு உபாயசிந்தை பண்ணுகிறது சதுஶ்ஶ் லோகியாலும், ஶ்லோகத்3வயத்தாலும். இவ்விடத்தில் சதுஶ்ஶ்லோகியால் செய்கிறது என்னென்றால்: நம்பெருமாளுக்கு தே3வதாந்தரங்களைக்காட்டிலும் வாசி மோக்ஷ ப்ரத3த்வம், ஜக3த்காரணத்வம் என்கிற இவை; இவைதான் சொல் எத்தாலே வந்ததென்றால்; ஶ்ரிய:பதித்வநாராயண த்வங்களாலே வந்த பரத்வாதி3கு3ணங்களாலே என்கை.
வேதா3ர்த்த2மாயிருந்துள்ள அர்த்த2 பஞ்சகத்துக்கு விவரண
மான ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற்கு……* பர்யாலோசனம்
பண்ணியிருந்துள்ள ஆளவந்தார் ஸ்தோத்ரீகரித்து,
ஶ்ரிய:பதித்வநிப3ந்த4நமான ஸௌலப்4யாதி3கு3ணங்களை அநு ப4விக்கிறார் சதுஶ்ஶ்லோகியாலே. இதில் முதல் ஶ்லோகத் தால் பிராட்டியினுடைய நாராயண ஸம்ப3ந்த4 நிப3ந்த4 நமான பரத்வம் ப்ரதிபாதி3க்கப்படுகிறது. இரண்டாம் ஶ்லோகத் தாலே அந்தப் பரத்வத்தை அனுப4வித்துக்கொண்டு பிராட்டியுடைய புருஷகாரத்வம் சொல்லப்படுகிறது. மூன்றாம் ஶ்லோகத்தாலே இப்படிக்கொத்த ஸௌலப்4யாதி3 கு3ணங்களையுடைய பெரிய பிராட்டியாருக்கு ஜக3த் காரணத்வத்திலும் அந்தர்பா4வமுண்டு என்னுமிடத்தைச் சொல்லி உபாயகீர்த்தனம் பண்ணப்படுகிறது. நாலாம்
ஶ்லோகத்தாலே கீழ்ச்சொன்ன உபாய……….* படுவதா
யிருந்துள்ள ப2லஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது.

ஆளவந்தார் அருளிச்செய்த சதுஶ்ஶ்லோகீ

  1. कान्तस्ते पुरुषोत्तम: फणिपति: शय्याऽऽसनं वाहनं

वेदात्मा विहगेश्वरो यवनिका माया जगन्मोहिनी।

ब्रह्मेशादिसुरव्रजस्सदयितस्त्वद्दासदासीगण:

श्रीरित्येव च नाम ते भगवति ब्रूम: कथं त्वां वयम्।।१।।

1. காந்தஸ் தே புருஷோத்தம:
2ணிபதிஶ்  ஶய்யாऽऽஸநம் வாஹநம்
வேதா3த்மா விஹகே3ஶ்வரோ
யவநிகா மாயா ஜக3ந்மோஹிநீ ।
ப்ரஹ்மேஶாதி3 ஸுரவ்ரஜஸ்
ஸத3யிதஸ் த்வத்3தா3ஸ தா3ஸீக3ண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே ப43வதி
ப்3ரூம: கத2ம் த்வாம் வயம் ।।

பதவுரை:-43வதி-கல்யாணகுணங்களால்
நிறைந்தவளே!, புருஷோத்தம:-புருஷோத்தமனான ப43
வான், தே-உனக்கு, காந்த:-பிரியனான கணவன்; ப2ணி
பதி: – நாக3ங்களுக்கு அரசனான ஆதி3ஶேஷன், ஶய்யா-
படுக்கை; வேதா3த்மா-வேத3த்தை ஶரீரமாக உடைய
வனும், விஹகே3ஶ்வர:- புள்ளரையனுமான பெரியதிருவடி, ஆஸநம் வாஹநம்-ஆஸனமாகவும், வாஹனமாகவுமிருப்ப வன்; ஐக3ந்மோஹிநீ – உலகத்தை

மோஹிக்கச்செய்வதான, மாயா-ப்ரக்ருதி, யவநிகா- (உனக்கு) முகத்திரையாயிருக்கிறது. ஸத3யித: – தங்களுடைய மனைவிமாருடன் கூடிய,
ப்3ரஹ்மேஶாதி3 ஸுரவ்ரஜ: -பிரமன், சிவா முதலிய தே3
ஸமூஹம், த்வத்3தா3ஸதா3ஸீக3ண: – உன்னுடைய தா3ஸ க3ணமாகவும், தா3ஸீக3ணமாகவும் இருக்கிறது. தே நாம ச-உன்னுடைய திருநாமமும், ஸ்ரீ: இதி ஏவ – ‘ஶ்ரீ:’ என்பதே யாயிருக்கிறது. த்வாம் –(இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய) உன்னை, வயம்-(அறிவிலிகளான) நாங்கள் கத2ம் ப்3ரூம:- எப்படிச் சொல்லுவோம்?

வ்யா– ( காந்தஸ்தே புருஷோத்தம: ) பிராட்டியை
நிரூபிக்கும்போது எம்பெருமானுடைய ஸம்ப3ந்த4 நிப3ந்த4
நிரூபணம் பண்ணவேனும். இவனையும் இவளுடைய
ஸம்ப3த்த4த்தாலே என்றும் நிரூபிக்கவேண்டும். அதெங்
ஙனே என்னில்: 1. “क: श्री: श्रिय:”  (க: ஸ்ரீ: ஶ்ரிய:)
என்றும், 2. “श्रिय:श्रियं भक्तजनैकजीवितं”  (ஶ்ரிய: ஶ்ரியம்
4க்தஜநைகஜீவிதம்) என்றும், (பெரியதிருமொழி 7-7-1)”திருவுக்கும் திருவாகிய செல்வா” என்றும், (திருவாய் 7-2-9) “என் திருமகள் சேர் மார்வனே என்னும்” என்றும் சொல்லுகையாலே. பிராட்டியை நிரூபிக்கும்போதும் “காந்தஸ்தே புருஷோத்தம:” என்னும் படியாயிறே இருப்பது, “ப4ர்த்தா தே புருஷோத்தம:”
என்னாதே, “காந்தஸ்தே புருஷோத்தம:” என்பானென்?
என்றால்: 3. “ राघवोऽर्हति वैदेहीं तं चेयमसितेक्षणा” (ராக4 வோர்ஹதி
வைதே3ஹீம்  தம் சேயமஸிதேக்ஷணா) என்றும், 4 -”भग
वन्नारायाणाभिमतानुरूपस्वरूपरूपगुणविभवैश्वर्यशीलाद्यनवधिकातिशयाऽ-

सङ्ख्येयकल्याणगुणगणां” (ப43வந்நாராயணபி4 மதாநுரூபஸ்வரூப

ரூப கு3ண விப4வைஶ்வர்ய ஶீலாத்3யநவதி4 காதிஶயாऽ
ஸங்க்2யேயகல்யாணகு3ணக3ணாம்) என்றும், 5. “श्रीवल्लभ”
(ஸ்ரீவல்லப4) என்றும், 6. “भोगोपोद्धातकेलीचुलकितभगवद्वैश्व-

रूप्यानुभावा” (போ4கோ3போத்3கா4தகேளீசுளகித ப43வத்3
வைஶ்வருப்யாநுபா4வா) என்றும், (திருவாய் 10-10-6) ‘உனக்கேற்கும் கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ!” என்றும், -( a. திருநெடுந்தாண்டகம் 18,) “பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு” என்றும் ப்ரயோக3ம் பண்ணுகிறார்களிறே.

“ஹரி:” என்னுதல், “விஷ்ணு:” என்னுதல் செய் யாதே “புருஷோத்தம:” என்பானென்? என்றால்: 7. “द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च।क्षरस्सर्वाणि भूतानि कूट-

स्थोऽक्षर उच्यते।।उत्तम: पुरुषस्त्वन्य: परमात्मेत्युदाहृत: । यो लोकत्रय

माविश्य बिभर्थ्यव्यय ईश्वर:।।यस्मात्क्षरं” (த்3வாவிமௌ புரு

ஷௌ லோகே க்ஷரஶ்சாக்ஷர ஏவ ச ।க்ஷரஸ் ஸர்வாணி
பூ4தாநி கூடஸ்தோ2ऽக்ஷர உச்யதே।।| உத்தம: புருஷஸ்
தவந்ய: பரமாதமேத்யுதா3ஹ்ருத: । யோ லோகத்ரய
மாவிஶ்ய  பி34ர்த்யவ்யய ஈஶ்வர: ।। யஸ்மாத் க்ஷரம் )
இத்யாதி3; “அசித்தானது, ஸ்வரூபாந்யதா2பா4வயுக்தமா
யிருக்கும்; சித்தானது ஸ்வபா4வாந்யதா2பா4வயுக்தமாயிருக்
கும்; ஆக, உப4யாந்யதா2பா4வரஹிதன் ஈஶ்வரன் என்று
கொண்டு, தனக்கு விபூ4திபூ4தமான சேதநாசேதந வில
க்ஷணனென் றிட்டு ‘ புருஷோத்தம: ‘ என்கிறதன்றோ”
என்கிறார்.

(ப2ணிபதிஶ்ஶய்யா ) ஒரு ராஜாவுக்கு அபி4மதையா
யிருப்பாளொருத்தி, கண்டபோது ரஸிப்பதித்தனையொழிய
ஒரு படுக்கையில் ஏறப்பெருதேயாய்த்து இருப்பது.
அங்ஙனன்றிக்கே, 4. “भगवन्नारायाणाभिमतानुरूपस्वरूपरूप”
– (ப43வந்நாராயணாபி4மதாநுரூபஸ்வரூபரூப), என்றும்,
(திருவாய் 10-10-6 )” உனக்கேற்கும் கோலமலாப்பாவை” என்றும், 3. “राघवोऽर्हति वैदेहीं” (ராக4வோऽர்ஹதி வைதே3ஹீம்) என்றும் இப்படி ப்ரமாணம் உண்டாகையாலே கேவலம் அபி4மதையான மாத்ரமன்றிக்கே, அநுரூபையுமாயிருக்கையாலே
அவனுக்கான படுக்கை இவளுக்கும் ப்ராப்தமென்கிறார்.
(ப2ணிபதி: ) என்கையாலே, 8. “अकारेणोच्यते विष्णुस्सर्व-

लोकेश्वरो हरि: ।उद्धृता विष्णुना लक्ष्मीरुकारेणोच्यते सदा।।मकारस्तु तयोर्दास इति प्रणवलक्षणम्।।(அகாரேணோச்யதே விஷ்ணுஸ் ஸ்ர்வலோகேஶ்வ்ரோ ஹரி: ।உத்3த்4ருதா விஷ்ணுநா லக்ஷ்மீருகரேணோச்யதே ஸதா ।। மகாரஸ்து தயோர்

தா3ஸ இதி ப்ரணவலக்ஷணம்।।), 9. “भवांस्तु सह वैदेह्या गिरिसानुषु रंस्यते। अहं सर्वं करिष्यामि” (ப4வாம்ஸ்து ஸஹ வைதே3ஹ்யா கி3ரிஸாநுஷு ரம்ஸ்யதே ।அஹம் ஸர்வம் கரிஷ்யாமி) என்று சொல்லுகிறபடியே ஆத்மவஸ்துவுக்கு

ஒரு மிது2நஶேஷத்வம் பரமபுருஷார்த்தமாகையாலே,

இங்கும் வாஸுகிதக்ஷக ப்ரப்4ருதிகளான அஷ்டமஹா

நாகங்களுக்குப் (*-பரிப்3ருட4ன் – தலைவன்) பரிப்3ருட4னாய், ஶேஷபூ4தருக்கும் தலையாயிருந்துள்ள திருவனந்தாழ்வான், இருக்கும்போது உன் திருப்படுக்கை என்கிறார்.

(ஆஸநம் வாஹநம் வேதாத்மா விஹகே3ஶ்வர:) 10.

“सुपर्नोऽसि गरुत्मान् त्रिवृत्ते शिरो गायत्रं चक्षु: स्तोम आत्मा साम ते तनूर्वामदेव्यं बृहद्रथन्तरे पक्षौ यज्ञा यज्ञियं पुच्छं छन्दांस्यङ्गानि धिष्णिया: शफा यजूंषि नाम” ( ஸுபர்ணோऽஸி க3ருத்மாந் த்ரிவ்ருத்தே ஶிரோ கா3யத்ரம் சக்ஷு: ஸ்தோம ஆத்மா ஸாம தே தநூர் வாமதே3வ்யம்

ப்3ருஹத் ரத2ந்தரே பக்ஷௌ யஜ்ஞா யஜ்ஞியம் புச்ச2ம் ச2ந்தா3ம்ஸ்யங்கா3நி தி4ஷ்ணியாஶ்ஶபா2 யஜூம்ஷி நாம) என்கிறபடியே நாக3ஜாதிகளுக்கு நாயகனான அநந்தன் திருப்படுக்கையானாப்போலே, இங்கும் வேத3மயனாய் பறவைகளுக்கு ஆதா4ரனாயிருந்துள்ள

பெரிய திருவடி இவளுக்கு ஆஸநவாஹனங்கள் என்கிறார்.

அபி4மதையானால் படுக்கையில் அணைக்க ப்ராப்தமா

யிருக்கும்; ஏகாஸநத்திற்கொண்டு இருக்க யோக்3யை

யன்றிக்கேயாய்த்து இருப்பது. அங்ஙனன்றிக்கே, 11.

“वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पति:।आस्ते विष्णुरचिन्त्यात्मा

भक्तैर्भागवतैस्सह।।” (வைகுண்டே2 து பரே லோகே ஶ்ரியா

ஸார்த்த4ம் ஜக3த்பதி: ।ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா

4க்தைர் பா43வதைஸ் ஸஹ ) என்கிறபடியே இவள்

அநுகூலரூபையாயிருக்கையாலே இவனுக்கான ஆஸநமும், வாஹனமும் இவளுக்கும் ப்ராப்தம் என்று அருளிச் செய்கிறார்.

ஆக, இப்படி கீழ்ச்சொன்ன யுக்திகளாலே பிராட்டிக்கு

நித்ய விபூ4திஸம்ப3ந்த4ம் சொல்லப்பட்டது. இனி மேல்

ஶ்லோகஶேஷத்தாலே லீலாவிபூ4தியோக3மென்ன,

தத3ந்தர்வர்த்திகளாயிருந்துள்ள ப்3ரஹ்மருத்3ராதி தே3

3ணங்களுடைய ஶேஷத்வமென்ன இவை சொல்லப்படுகிறது. அதெங்ஙனேயென்றால்,

(யவநிகா மாயா ஜக3ந்மோஹிநீ)

  1. “माायान्तु प्रकृतिं विद्यान्मायिनन्तु महेश्वरम्” (மாயாம் து ப்ரக்ருதிம் வித்3யாந் மாயிநம் து மஹேஶ்வரம்) என்றும், 13. “इन्द्रो मायाभि: पुरुरूप ईयते” (இந்த்3ரோ

மாயாபி4: புருரூப ஈயதே) என்றும், 14. “दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते ।।”(தை3வீஹ்யேஷா கு3ணமயீ மம மாயா து3ரத்யயா।

மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே।।)

என்றும் இதியாதி3களாலே ப்ரதிபாதி3க்கப்பட்டிருக்கிற

43வந்மாயையன்றோ உனக்கு யவநிகை. ஒரு திரையின்

உள்ளிருக்கும் பேரைப் புறம்பிலவர் காணாதபடி

யாயிற்று இருப்பது. அங்ஙனிருக்கையன்றிக்கே (ஜக3ந்மோஹிநீ) என்று எம்பெருமானுக்குத்

திரோதா4யிகையாயிருக்கையன்றிக்கே

ஜக3த்துக்குத் திரோதா4யிகையாயிருக்குமென்கிறார்.

(ப்3ரஹ்மேஶாதி3ஸுரவ்ரஜஸ் ஸத3யிதஸ் த்வத்3தா3ஸதா3ஸீக3ண:) பூ4லோகம் தொடங்கி

ஸத்யலோகபர்யந்தமாக மேலுள்ள லோகங்களென்ன

அதல விதல ஸுதல பாதாளோத்தால ரஸாதல போ43வதீ பர்யந்தமான கீழேழு லோகங்களென்ன, இவற்றில் காணப்பட்டுடையராயிருந்துள்ள

தே3வக3ணங்களென்ன, இவர்களுக்குக் கொத்து முதலிகளாயிருந்துள்ள ப்3ரஹ்மருத்3ராதி3களென்ன, ஸரஸ்
வதீருத்3ராணீபுலோ மஜாப்ரப்4ருதிகளாயிருந்துள்ள தே3
ஸ்த்ரீகளென்ன, அப்ஸரோக3ணங்களென்ன, இவர்களெல்
லாரும் ஆணடிமையும், பெண்ணடிமையுமாயிருக்கும் என்கிறார்.

‘இவையெல்லாம் யதா2ர்த்த2ம்  என்றோ? ஸ்தோத்ரம்
என்றோ? இது எங்கனே கூடும்படி? என்னால்: (ஸ்ரீ
ரித்யேவ ச நாம தே) ‘ஸ்ரீ:’ என்றன்றோ உனக்குத் திரு
நாமம் என்கிறார். “இத்தாலே இவளுக்கு ஸர்வஶேஷிணீ
த்வமும் தெரிவிக்கப்பட்டதோ?” என் ரூல் : ” ஸ்ரீங்-
ஸேவாயாம்” என்கிற தா4துவாலே, தன்னையொழிந்த
சேதநாசேதங்களாலே ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்திகளுக்காக
ஆஶ்ரயிக்கப்படுகிறாள் என்று கொண்டு ‘ஸ்ரீ: ‘ என்கிறது.
அதுக்கு ப்ரமாணம் 15. “ईश्वरीं सर्वभूतानां” (ஈஶ்வரீம்
ஸர்வபூ4தாநாம்) என்றும், 16 “अस्येशाना जगत:” (அஸ்
யேஶாநா ஜக3த:) என்றும் உண்டாகையாலே. (ப43வதி)
17. “तुल्यशीलवयोवृत्तां तुल्याभिजनलक्षणां” (துல்யஶீலவயோ
வ்ருத்தாம் துல்யாபி4ஜநலக்ஷணாம்) என்கிறபடியே எம்
பெருமானோடொக்க ஹேயப்ரதிப4டமாயிருந்துள்ள கல்
யாணகு3ணைகதாநத்வம் சொல்லப்படுகிறது. 18. “मैत्रेय!

भगवच्छब्दस्सर्वकारणकारणे।संभर्तेति तथा भर्ता भकारोऽर्थद्वयान्वित:।।

नेता गमयिता स्रष्टा गकारार्थस्तथा मुने।।एश्वर्यस्य समग्रस्य वीर्यस्य

यशस: श्रिय:।ज्ञानवैराग्ययोश्चैव षण्णां भग इतीरणा।।वसन्ति तत्र

भूतानि भूतात्मन्यखिलात्मनि।स च भूतेष्वशेषेषु वकारार्थस्तत्तोऽव्यय:।।

ज्ञानशक्तिबलैश्वर्यवीर्यतेजांस्यशेषत:।भगवच्छब्दवाच्यानि विना हेयैर्गुणा-

दिभि: ।। एवमेष महाशब्दो मैत्रेय भगवानिति।परमब्रह्मभूतस्य वासु-

देवस्य नान्यग:।।तत्र पूज्यपदार्थोक्तिपरिभाषासमन्वित:।शब्दोऽयं

नोपचारेण त्वन्यत्र ह्युपचारत:।।” (மைத்ரேய! ப43வச்ச2ப்33ஸ்
ஸர்வகாரணகாரணே । ஸம்ப4ர்த்தேதி ததா24ர்த்தா
4காரோऽர்த்த2த்3வயாந்வித: ।। நேதா க3மயிதா ஸ்ரஷ்டா
3காரார்த்த2ஸ் ததா2 முநே ।। ஐஸ்வர்யஸ்ய ஸமக்3ரஸ்ய

வீர்யஸ்ய யஶ ஸஶ்ரிய:। ஜ்ஞாநவைராக்3யயோஶ்சைவ
ஷண்ணாம் ப43 இதீரணா  வஸந்தி தத்ர பூ4தாநி பூ4தாத்
மந்யகி2லாத்மநி ஸ ச பூ4தேஷ்வஶேஷேஷு வகாரார்த்
2ஸ் ததோ வ்யய।। ஜ்ஞாநஶக்தி ப3லைஶ்வர்யவீர்யதேஜாம்
ஸ்யஶேஷத: । ப43வச்ச2ப்33வாச்யாநி விநா ஹேயைர்
கு3ணாதி3பி4: । ஏ வமேஷ மஹாஶபப்3தோ3 மைத்ரேய!
43வாநிதி । பரமப்3ரஹ்மபூ4 தஸ்ய வாஸுதே3வஸ்ய நாந்
யக3:। தத்ர பூஜ்யபதா3ர்த்தோ2க்திபரிபா4ஷாஸமந்வித:।
ஶப்3தோ3யம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:।।)
என்றுகொண்டு ப்ரமாணமுண்டாகையாலே. ஶ்ரிய:பதியை
நிர்தே3ஶிக்கும்போது 19. “प्रदिशतु भगवानशेषपंसां” (ப்ரதி3
ஶது ப43வாநஶேஷபும்ஸாம்) என்றும், 20. “स्मर्तव्यो भगवान्  हरि:” (ஸ்மர்த்தவ்யோ ப43வாந் ஹரி:) என்றும்,
21. “भगवान् भूतैर्बाल: क्रीडनकैरिव”  (ப43வாந் பூ4தைர் பா3ல:
க்ரீட3நகைரிவ) என்றும், 4. “भगवन्नारायण” (ப43வந்
நாராயண) என்றும் இப்படி வ்யவஹரிக்கவடுப்பதாயிறே
இருப்பது. அவளை நிர்தே3ஶிக்கும்போது 4. “भगवतीं श्रियं देवीं”

(ப43வதீம் ஶ்ரியம் தே3வீம்), “ஸ்ரீரித்யேவ ச நாம
தே ப43வதி” என்னும்படியாயிருக்கும்.

(ப்3ரூம: கத2ம் த்வாம் வயம்) ஈஶ்வரகு3ணஸ்தவம்
பண்ணும்போது 22. “अनन्ता वै वेदा:”  (அநந்தா வை
வேதா3🙂 என்கிற வேத3ங்களுமகப்பட, 23. “यतो वाचो निवर्तन्ते

अप्राप्य मनसा सह ” (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய
மநஸா ஸஹ) என்றுகொண்டு அளவுகோல் முறிந்து
மடங்கும்படியாயிறே இருப்பது. அவன் தன்னையுமகப்பட
(*ஶ்ரீகு3ண-4 (ப்ரமாண எண் 6) சுலகித ப43வத்3வைஶ்வரூப்யையாயிருந்துள்ள உன்னை
மந்த3மதிகளுக்கு அக்3ரேஸரராயிருந்துள்ள நாங்கள் என்
சொல்லி வ்யவஹரிப்பது ? என்றுகொண்டு பிராட்டியி
னுடைய பரத்வத்தை ப்ரதிபாதி3க்கிறார் ஆளவந்தார். 1.

  1. यस्यास्ते महिमानमात्मन इव त्वद्वल्लभोऽपि प्रभु:

नालं मातुमियत्तया निरवधिं नित्यानुकूलं स्वत:।

तां त्वां दास इति प्रपन्न इति च स्तोष्याम्यहं निर्भयो

लोकैकेश्वरि! लोकनाथदयिते! दान्ते! दयान्ते विदन् ।।२।।

  1. யஸ்யாஸ்தே மஹிமாநமாத்மந
    இவ த்வத்3வல்லபோ4ऽபி ப்ரபு4:
    நாலம் மாதுமியத்தயா
    நிரவதி4ம் நித்யாநுகூலம் ஸ்வத: ।
    தாம் த்வாம் தா3ஸ இதி ப்ரபந்ந
    இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்ப்ப4 யோ
    லோகைகேஶ்வரி ! லோகநாத23யிதே !
    தா3ந்தே! த3யாந்தே வித3ந் ।।

பதவுரை:- லோகைகேஶ்வரி-லோகத்திற்கு ஒரே
ஈஶ்வரியாயிருப்பவளே !, லோகநாத23யிதே-லோகங்களுக் கெல்லாம் ஸ்வாமியான எம்பெருமானுக்கு ப்ரியமஹிஷியா யிருப்பவளே! தா3ந்தே- கருணாகல்பவல்லியே! யஸ்யா தே- எந்த உன்னுடைய, நிரவதி4ம்-அளவற்றதும், ஸ்வத நித்யாநுகூலம்-இயற்கையாகவே (ப43வானுக்கு) எப்போ
தும் அனுகூலமாயிருப்பதுமான, மஹிமாநம்– பெருமையை ப்ரபு4: த்வத்3வல்லப4: அபி-ஈச்வரனான உன்னுடைய வல்ல ப4னும், ஆத்மந: இவ-தன்னுடைய பெருமையைப்போல் இயத்தயா-இவ்வளவென்று, மாதும் ந அலம் – அளவிட்டறிய மாட்டானோ, தாம் த்வாம்-அப்படிப்பட்ட உன்னை. தாஸ: இதி -‘தா3ஸன்’ என்றும், ப்ரபந்ந: இதி ச-ஶரண மடைந்தவன்’ என்றும், தே த3யாம் வித3ந் அஹம் – உன் னுடைய கருணையை அறியும் நான், நிர்ப்ப4ய:-ப4ய மற்றவனாய், ஸ்தோஷ்யாமி – துதிக்கிறேன்.

வ்யா:– (யஸ்யாஸ்தே மஹிமாநமாத்மந இவ த்வத்3வல்ல போ4ऽபி ப்ரபு4ர் நாலம் மாதுமியத்தயா

நிரவதி4ம் நித்யாநு கூலம் ஸ்வத:)

  1. “यस्यायुतायुतांशांशे विश्वशक्तिरियं स्थिता”
    (யஸ்யாயுதாயுதாம்ஶாம்ஶே விஶ்வஶக்திரியம் ஸ்தி2தா )
    என்றும், 25. “स्वशक्तिलेशोद्धृतभूरसर्ग:” (ஸ்வஶக்திலே
    ஶோத்3த்4ருதபூ4தஸர்க்க3🙂 என்றும், 26. “मनसैव जगत्सृष्टिं

संहारञ्च करोति य:” (மநஸைவ ஜக3த்ஸ்ருஷ்டிம் ஸம்ஹாரஞ்ச
கரோதி ய:) என்றும், 27. “परास्य शक्तिर्विविधैव श्रूयते स्वाभाविकी

ज्ञानबलक्रिया च” (பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே
ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச) என்றும், 28. “एको ह वै

नारायाण आसीत् ” (ஏகோ ஹ வை  நாராயண ஆஸீத்) என்றும், 29. “दिव्यो देव एको नारायण:” (தி3வ்யோ தேவ ஏகோ
நாராயண 🙂 என்றும், இப்படி ப்ரமாணங்களாலே ப்ரதி
பாதி3க்கப்பட்ட பரத்வத்தை உடையவனாய், உனக்கு
வல்லப4னான ஸர்வேஶ்வரனுமகப்பட, யச்ச2ப்33த்தாலே
அவாங்மநஸகோ3சரமாயிருக்கிற உன்னுடைய அளவிறந்
திருக்கிற பெருமையை இவ்வளவென்று நிரூபிக்குமளவில், (திருவாய் 8-4-6) “தனக்கும் தன் தன்மையறிவரியான்”  என்கிறபடியே தன் வைப4வநிரூபணம் பண்ணத் தான் மாட்டாதாப்போலே உன்னுடைய வைப4வநிரூபணம் பண்ணும்போது அஸமர்த்த2னாயிருக்கும். ‘ஆனால் ஜகத்துக்கு ஶேஷி த்3வித்வம் உண்டோ ?’ என்றால்: (நித்யாநுகூலம் ஸ்வத:) 16. “अस्येशाना जगतो विष्णु पत्नी” (அஸ்யேஶாநா ஜக3தோ விஷ்ணுபத்நீ) என்கையாலே ஜக3த்தைப் பற்ற இவளுக்கு ஶேஷிணீத்வமும், அவனைப்பற்ற ஶேஷத்வமும் ப்ரதி
பாதி3க்கப்படுகையாலே ஶேஷித்3வித்வமில்லை. ஆனால்
இவனைப்பற்ற இவள் ஶேஷபூ4தையாகில், இவளுடைய
வைப4வநிரூபணம பண்ணவொண்ணாதே’ என்னவொண்
ணாது. அதெங்ஙனேயென்றால்: 30. “अपूर्वनानारसभावनिर्भर-

प्रबद्धया मुग्धविदग्धलीलया” (அபூர்வநாநாரஸபா4வநிர்ப்ப4ரப்ர
3த்34யா முக்34வித3க்34லீலயா) என்று அதிவித3க்34மா
யிருந்துள்ள க்ரீடா3வைப4வத்தாலே (திருநெடுந்தாண்டகம் 18) “பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு” என்கிறபடியே

ப்ரேமபரவஶனாயிருக்கையாலே ஸர்வஜ்ஞனாயிருந்தானேயாகிலும் நிரூபிக்கமாட்
டாதேயாய்த்து இருப்பது.

(தாம் த்வாம்) கீழ் ப்ரதிபாதி3க்கப்பட்ட பரத்வத்தை
நிரூபகத4ர்மமாக உடையையாயிருக்கிற உன்னை என்றபடி, (தா3ஸ இதி) ‘அடியேன்’ என்று கொண்டு ஆஶ்ரயிக்கிறேன் என்கிறார். 15. “ईश्वरीं सर्वभूतानां” (ஈஶ்வரீம் ஸர்வபூ4தாநாம்) என்றும், 16. “अस्येशाना जगत:” (அஸ்யேஶாநா ஜக3த:) என்றும் சொல்லுகையாலே, நமக்கு ஜக3த்தைப் பற்ற ஶேஷிணீத்வம் ஸாதா4ரணமன்றோ? உமக்கு அவர்களிற்காட்டில் விஶேஷமென் ? என்று பிராட்டி அருளிச்செய் தார். ‘அவர்களிற்காட்டில் நெடுவாசியுண்டே; ஸ்வரூபாநு ரூபமான ஶேஷத்வபூர்வகமாக ப்ரபந்நனானேன்’ என்  கிறார், – (ப்ரபந்த இதி ச) என்றுகொண்டு. (ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்ப4ய:) அதினாலே நிர்ப்ப4யனாய்க்கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்கிறார். ஸ்தோத்ரமாகிறது
இல்லாததொன்றைச் சொல்லுகையாயிருக்கும். இங்குத்
தைக்கு அங்ஙனல்ல; 31. “भूतार्थव्याहृतिस्सा हि न स्तुति: परमेष्ठिन:” (பூ4தார்த்த2வ்யாஹ்ருதிஸ் ஸா ஹி ந ஸ்துதி:
பரமேஷ்டி2ந:) என்கிறபடியே உள்ள கு3ணங்களைத்தான்
யதா2வத் ப்ரதிபாதி3க்கப் போகாதேயாய்த்து இருப்பது.
இவையும் எத்தாலேயென்றால் : (லோகைகேஶ்வரி) ஜக3த்
தைப்பற்ற இவள் ஶேஷிணியாகையாலே. இவளுக்கு
ஜக3த்தைப்பற்ற ஸ்வாமிநீத்வம் எத்தாலே வந்ததென்றால்:
(லோகநா23யிதே) லோகநாத2னாயிருக்கிற நாராயணனுக்கு தி3வ்யமஹிஷியாகையாலே.

இங்ஙனொத்த மேன்மையை உடையோமான
நம்மை உம்மால் பரிச்சே2தி3க்கப்போமோ?” எனப்
பிராட்டி திருவுள்ளமாக, “அது ஒக்கும்; உம்முடைய
மேன்மையை நிரூபித்தோமாகிலன்றோ நாங்கள் ப4ங்கு3ரதீ4 (भङ्गुरधी)களாவது. உம்முடைய நீர்மையை நிரூபிக்கும்
போது மந்த3மதிகளாயிருந்துள்ள அஸ்மதா3தி3களுக்கும்
ஸ்தோத்ரம் பண்ணுகையிலே யோக்3யதையுண்டாம்”
என் கிறார். (தா3ந்தே) (*கருணாம்ருதஸம்வர்த்தி4தையான கற்பகக் கொடியே” என்று இவருடைய குமாரரான நாயனாராச்சான் பிள்ளையின் வ்யாக்2யான பாட2ம்.)   கருணோஜ்ஜ்வலஸம்வர்த்தி4 தையா யிருக்கிற கற்பகக் கொடியே! (த3யாம் தே வித3ந்) த3யையாவது, “ஸ்வார்த்த2 நிர்பேக்ஷா பரது3:க்கா2ஸஹிஷ்ணுதா” என்றிறே த3யாலக்ஷணமிருக்கும்படி. அங்ஙனொத்திருந்
துள்ள உன்னுடைய த3யையை அறியாநின்றுகொண்
டேன் என்றபடி.  ‘அங்ஙனொத்த க்ருபை நம் பக்க
லுண்டோ?” என்று திருவுள்ளமாக, 32. “पापानां वा . .

नापराध्यति” (பாபா நாம் வா ……. நாபராத்4யதி) என்று
கொண்டு, எம்பெருமான் தே3வகார்யார்த்த2மாக யாதொரு
தி3வ்யமங்க3ளவிக்3ரஹத்தைக் கொண்டான் தத3னுகூலமாக
தேவரீரும் வடிவைக்கொள்ளக் கடவதாயிருக்கையாலே,
அவன் ராக4வனாய்க்கொண்டு அவதரித்தபோது, தேவரீரும்
ஸ்ரீ ஜநகராஜன் திருமகளான ஸீதையாய்க்கொண்டு
அவதரித்து, ராவணனைப் புத்ரமித்ரகளத்ராதி3களோடு
தரைப்படுத்துகைக்காகவும், ஸ்ரீ விபீ4ஷணாழ்வானை ஸ்தா2
பிக்கைக்காகவும் அஶோகவனிகையிலே இருந்து, காட்டை
வெட்டி நாடாக்கினாப்போலேயும், களைபறித்துப் பயிராக்கு
மாபோலேயும், அஸந்நிராஸபூர்வகமாக ஸத்பாலனம்
பண்ணுகைக்காக ராவணனைக் கொன்றருளினவனந்தரமாக,
தர்ஜநப4ர்த்ஸநாதி3களைப் பண்ணின ராக்ஷஸிகளைக் கொல் லுகையிலே உத்3யுக்தனாயிருந்துள்ள திருவடியைக்
குறித்து உம்  பரமக்ருபையை ப்ரகடீகரித்தபடியை பு3த்தி4
பண்ணிக்கொண்டு நிர்ப்ப4யனாய் ஸ்தோத்ரம் பண்ணினே
னென்கிறார் ஆளவந்தார்.   2

  1. ईषत्त्वकरुणानिरीक्षणसुधासन्धुक्षणाद्रक्ष्यते

नष्टं प्राक्तदलाभतस्त्रिभुवनं संप्रत्यनन्तोदयम्।

श्रेयो नह्यरविन्दलोचनमन:कान्ताप्रसादादृते

संसृत्यक्षरवैष्णवाध्वसु नृणां संभाव्यते कर्हिचित्।।

  1. ஈஷத் த்வத்கருணாநிரீக்ஷண
    ஸுதா4ஸந்து4 க்ஷணாத் ரக்ஷ்யதே
    நஷ்டம் ப்ராக் தத3லாப4தஸ்
    த்ரிபு4வநம் ஸம்ப்ரத்யநந்தோத3யம் ।
    ஶ்ரேயோ ந ஹ்யரவிந்த3 லோசநமந:-
    காந்தாப்ரஸாதா3த்3ருதே
    ஸம்ஸ்ருத்யக்ஷரவைஷ்ணவாத்4 வஸு
    ந்ருணாம் ஸம்பா4வ்யதே கர்ஹிசித் ।।

பதவுரை:- தத் அலாப4த: அந்தக் கடாக்ஷம்
இல்லாமையாலே, ப்ராக் நஷ்டம் – முன் நசித்துக் கிடந்த
தான, த்ரிபு4வநம் – மூவுலகமும், ஸம்ப்ரதி – இப்போது,
ஈஷத்-சிறிதுபோது, த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா4 ஸந்
து4க்ஷணாத் – உன்னுடைய கருணாகடாக்ஷமாகிற அம்ருத
வர்ஷத்தினால், அநந்தோத3யம் – அளவற்ற பெருமையை
உடைத்தாகும்படி, ரக்ஷ்யதே–காப்பாற்றப்படுகிறது ;
ந்ருணாம் – மனிதர்களுக்கு, ஸம்ஸ்ருதி அக்ஷர வைஷ்ணவா த்4வஸு- ஐஶ்வர்யம், கைவல்யம், பரமபத3ம் இவைகளில், ஶ்ரேய:- மேன்மையானது, அரவிந்த3 லோசந மந: காந்தா ப்ரஸாதா3த் ருதே-தாமரைக்கண்ணனின் மனத்துக்கினிய வளான ஸ்ரீதே3வியின் அருளில்லாமல், ந ஹி ஸம்பா4
வ்யதே-ஏற்படாதன்றோ.

வ்யா:—(ஈஷத் த்வத்கருணாநிரீக்ஷணஸுதா4 ஸந்து4
க்ஷணாத் ரஷ்யதே நஷ்டம் ப்ராக் தத3லாப4தஸ் த்ரிபு4வநம்) “पृथिव्यप्सु प्रलीयते।आपस्तेजसि लीयन्ते।तेजो वायौ लीयते।

वायुराकाशे लीयते।आकाशमव्यक्ते लीयते।अव्यक्तमक्षरे लीयते।अक्षरं

तमसि लीयते।तम: परे देव एकीभवति ।।” (ப்ருதி2வ்யப்ஸு
ப்ரலீயதே ।ஆபஸ்தேஜஸி லீயந்தே। தேஜோ வாயௌ
லீயதே। வாயுராகாஶே லீயதே ।ஆகாஶமவ்யக்தே
லீயதே ।அவ்யக்தமக்ஷரே லீயத। அக்ஷரம் தமஸி லீயதே।
தம: பரே தே3வ ஏகீப4வதி।।) என்றும், 28. “न ब्रह्मा नेशान:।

नेमे द्यावापृथिवी” ( ந ப்3ரஹ்மா நேஶாந:। நேமே த்3யாவா
ப்ருதி2வீ) என்றும், 34. “आनीदवातं स्वधया तदेकं।तस्माद्धन्यं न पर: किञ्चनास।”(ஆநீத3வாதம் ஸ்வத4யா ததே3கம்।
தஸ்மாத்3தா4ந்யம் ந பர: கிஞ்சநாஸ।) என்றும், 35.
“तद्धेदं तर्ह्यव्याकृतमासीत्”(தத்3தே43ம் தர்ஹ்யவ்யாக்ருத
மாஸீத்) என்றும், 36. “आसीदिदं तमोभूतमप्रज्ञातमलक्षणम्।

अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वत:।।” (ஆஸீதி33ம் தமோபூ4தம்
அப்ரஜ்ஞா தமலக்ஷணம் । அப்ர தர்க்யமவிஜ்ஞேயம் ப்ரஸுப்த மிவ ஸர்வத:।।) என்றும் : (திருவாய் 4-10-1)  “ஒன்றும் தேவுமுலகுமுயிரும் மற்றும் யாதுமில்லா வன்று” என்றும் ஶ்ருதியோடு ஸ்மருதியோடு ஆழ்வார் பாசுரத்தோடு வாசியற ப்ரதி பாதி3க்கிற ப்ரளயத்திலே, 37. “नारायणात्ब्रह्मा जायते। नारायणाद्रुद्रो जायते।” (நாராயணாத் ப்3ரஹ்மா ஜாயதே। நாரா யணாத் ருத்3ரோ ஜாயதே।) என்றும், 28. “स एकाकि न रमेत” ( ஸ ஏகாகீ ந ரமேத) என்றும், 38. “बहुस्यां प्रजायेयेति”

(ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி ) என்றும், 39. “तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्” ( தத் ஸ்ருஷ்ட்வா ததே3வா நுப்ராவிஶத்)
என்றும், 35. “तन्नामरूपाभ्यां व्याक्रियत” (தந்நாமரூபாப்4யாம்
வ்யாக்ரியத) என்றும், 40. “सर्वाणि रूपाणि विचित्य धीर:

नामानि कृत्वाऽभिवदन् यदास्ते” (ஸர்வாணி ரூபாணி விசித்ய
தீ4ர: நாமாநி க்ருத்வாऽபி4வத3ந் யதா3ஸ்தே) என்றும்,
41. “सर्वे निमेषा जज्ञिरे विद्युत: पुरुषादधि” (ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்3யுத: புருஷாத3தி4) என்றும், 42. “अप एव

ससर्जादौ तासु वीर्यमवासृजत्।तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् ।।

तस्मिन् जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामह:।।तत: स्वयंभूर्भगवानव्यक्ते
व्यञ्जयन्निदम्।महाभूतादि वृत्तौजा: प्रादुरासीत्तमिनुद:।।” (அப ஏவ
ஸஸர் ஜாதௌ3 தாஸு வீர்யமவாஸ்ருஜத்। தத3ண்ட3

மப4வத்3தை4மம் ஸஹஸ்ராம்ஶுஸமப்ரப4ம் ।। தஸ்மிந் ஜஜ்ஞே ஸ்வயம் ப்3ரஹ்மா ஸர்வலோகபிதாமஹ: ।। ததஸ் ஸ்வயம் பூ4ர் ப43வாநவ்யக்தே வ்யஞ்ஜயந்நித3ம்। மஹாபூ4தாதி3 வருத்தௌஜா: ப்ராது3ராஸீத் தமோ நுத3: ।।) என்றும், (திருவாய் 4-10-1) “நான்முகன் தன்னொடு தேவருலகோடுயிர் படைத்தான (நான்முகன் திருவந்தாதி-1)  “நான்முகனை நாராயணன் படைத்தான்
தான் முகமாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்” என்றும்
இப்படி ப்ரதிபாதி3க்கப்பட்ட ப்3ரஹ்மா முதலான
ஸ்ருஷ்டியை ஈஶ்வரன் உகக்கும்போது 6. “यद्भ्रूभङ्गा: प्रमाणं

स्थिरचररचना तारतम्ये मुरारे: वेदान्तास्तत्वचिन्तां मुरभुदुरसि

यत्पादचिह्नैस्तरन्ति।” (யத்3ப்4ரூப4ங்கா3: ப்ரமாணம் ஸ்தி2ரசரரசநா தாரதம்யே முராரேர் வேதா3ந்தாஸ் தத்த்வசிந்தாம் முரபி4 து3ரஸி யத்பாத3 சிஹ்நைஸ் தரந்தி। ) என்றும், 43. “उल्लास पल्लवितपालित सप्तलोकी निर्वाहकोरकितनेम कटाक्षलीलां ”  (உல்லாஸ- பல்லவிதபாலிதஸப்தலோகீ நிர்வாஹகோரகிதநேமகடாக்ஷ
லீலாம்) என்றும்  இவள் கடாக்ஷமடியாகவாய்த்து உண்டாவது.

(இந்த ஐதிஹ்யம் நாயனாராச்சான் பிள்ளையின் வியக்2யானத்திலும் காணப்படுகிறது.) இன்னமும், “பிராட்டிக்கு ஜக3த்காரணத்வத்திலே அந்வயமுண்டோ?” என்று நடா தூரம்மாள் பிள்ளானை ப்ரஶ்நம் பண்ண, “ஆவதென் ? இவ்வர்த்த2த்தில் ஸந்தே3ஹமுண்டோ? 44. “आवाभ्यां करमाणि कर्तव्यानि। प्रजाश्च उत्पादयितव्या:”

( ஆவாப்4யாம் கர்மாணி கர்த்தவ்யாநி।
ப்ரஜாஶ்சோத்பாத3யிதவ்யா:।।) என்றன்றோ இருப்பது.
இவள் ஸஹத4ர்ம சாரிணியன்றோ” என்று அருளிச்செய்தார் பிள்ளான்.

ஆக, இப்படி ஶ்ருதி ஸ்ம்ருதிகளென்ன, ஆழ்வார்
பாசுரமென்ன, இவற்றை அடியொற்றினவர் பாசுரமென்ன
இவற்றாலே ஈஶ்வரன் 38. “तदैक्षत बहुस्यां प्रजायेयेति”
(ததை3க்ஷத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி ) என்று
ஸ்ருஷ்டிக்கக்கடவதாகப் பார்த்தருளின போது, ( ஈஷத்
த்வத்கருணாநிரீக்ஷணஸுதா4ஸந்து4க்ஷணாத் ரக்ஷ்யதே) அவன் பார்வைக்கு அனுகூலமாய், கருணா ஜலபரிபூர்ணமாயிருந்துள்ள உன்னுடைய கடாக்ஷ விக்ஷேபங்களாலேயன்றோ ஜக3த்து ரக்ஷிக்கப்படுகிறது. (நஷ்டம் ப்ராக் தத3லாப4த:) அம்ருதஜலவர்ஷங்களாயிருக்கிற அந்தக் கடாக்ஷமின்றியே இருக்கையாலேயன்றோ 45. “असन्नेव स भवति” (அஸந்நேவ ஸ ப4வதி) என்கிறபடியே நாமரூபவிபா4கா3நர்ஹமாய்க்
கொண்டு இருந்தது. ( ஸம்ப்ரத்யநந்தோத3யம் ) கடுங்
கோடையிலே நொந்த பயிர் மேக4மேறி வர்ஷித்தால்
தேறுமாபோலே, நீர் பார்த்தருளுகையாலே இப்போது
அநந்தோத3யமாய்த்து. ‘ஆவதென்?’ என்றால்: மஹீமஹீ
4ரஜலநிதி4 ரூபமான ஜக3த்தென்ன, தத3ந்தர்வர்த்திகளான
தே3வதிர்யங்மநுஷ்யஸ்தா2வரரூபமான சதுர்வித4தே3
ப்ரவேஶம் பண்ணியிருக்கிற ஆத்மகோடிகளென்ன,
இவற்றை உடைத்தாயிற்று.

(ஶ்ரேயோ ந ஹ்யரவிந்த3 லோசநமந:காந்தாப்ரஸாதா3த்ருதே) 46. “तस्य यथा कप्यासं पुण्डरीकमेवमक्षिणी” (தஸ்ய
யதா2 கப்யாஸம் புண்ட3 ரீகமேவம்க்ஷிணீ) என்றுகொண்டு
ஈஶ்வரனுடைய உத்பு2ல்லமான தாமரைப்பூப்போலே
இருந்துள்ள திருக்கண் மலரில் அழகு. 47. “मत्स्य: कमल-

लोचन:” (மத்ஸ்ய: கமலலோசந:) என்றும் 48. “महावराह:

स्फुटपद्मलोचन:” (மஹாவராஹ: ஸ்பு2டபத்3மலோசந:) என்
றும், 49. “रामो राजीवलोचन:” (ராமோ ராஜீவலோசந: )
என்றும், 50, “कृष्ण: कमललोचन:” (க்ருஷ்ண: கமலலோசந:)
என்றும் இப்படி மத்ஸ்யமநுஷ்யாதி3விக்3ரஹபரிக்3ரஹம்
பண்ணினாலும் கண்ணை மறைக்கப்போகாதேயிறேயிருப்
பது. ஸர்வாங்க3ங்களும் மறையும்படியாகக் கவசமிட்டா
லும் கண்ணைக் கவசமிடுவானிலனிறே. ஆக, தாமரைக்
கண்ணன் என்கையாலே இவனுக்கு அவாப்தஸமஸ்த
காமத்வம் சொல்லப்பட்டது.

(அரவிந்த3 லோசநமந:காந்தா ) இங்ஙனொத்த வைப4
வத்தை உடையனாயிருந்துள்ள ஈஶ்வரனுடைய திருவுள்
ளத்திற்கு உகப்பைப் பண்ணுமவளாயிருக்கும். “பா4ர்யை
என்னாதே “காந்தை” என்பானென்? என்றால்: (திருவாய் 10-10-6) .”உனக் கேற்கும் கோலமலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்
பேயோ!” என்றும், (திருநெடு-18).“பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு” என்றும், 51. “अस्या देव्या मनस्तस्मिंस्तस्य चास्यां प्रतिष्ठितम्”
(அஸ்யா தே3வ்யா மநஸ்தஸ்மிம்ஸ்தஸ்ய சாஸ்யாம் ப்ர
திஷ்டி2தம்) என்றும் ப்ரமாணமுண்டாகையாலே காந்தா
ஶப்33ப்ரயோக3ம் பண்ணுகிறார். (ப்ரஸாதா3த்3ருதே) இங்ங
னொத்திருந்துள்ள இவளுடைய ப்ரஸாத3த்தையொழிய.

(ஸம்ஸ்ருத்யக்ஷரவைஷ்ணவாத்4வஸு ந்ருணாம் ஸம்பா4வ்யதே கர்ஹிசித்) ஸம்ஸ்ருதியாவது ஐஶ்வர்யம்; அக்ஷரமாவது கைவல்யமோக்ஷம்; வைஷ்ணவாத்4வா வாகிறது.– 52. “न च पुनरावर्तते न च पुनरावर्तते” (ந ச புநராவர்த்ததே। ந ச புநராவர்த்ததே।।) என்றும், 53. “तद्विष्णो: परमं पदं” (தத்3 விஷ்ணோ: பரமம் பத3ம்) என்றும். (பெரியாழ்-திரு 4-5-2)  “பிணைகொடுக்கி லும் போகவொட்டார்” என்றும், இப்படி ஶ்ருதியோடு, ஆழ்வார் பாசுரத்தோடு வாசியற ப்ரதிபாதி3க்கிற பரமபத3ம் ஆக, இவ்வழிகளில் அரவிந்த3 லோசநமக:காந்தையுடைய ப்ரஸாத3த்தையொழிய மநுஷ்யரில் வைத்துக் கொண்டு ஒருவருக்கும் ஶ்ரேயஸ் வாராது என்கிறார் ஆளவந்தார். 3

  1. शान्तान्नदमहाविभूति परमं यद्ब्रह्म रूपं हरे:

मूर्तं ब्रह्म ततोऽपि तत्प्रियतरं रूपं यदत्यद्भुतम्।

यान्यन्यानि यथासुखं विहरतो रूपाणि सर्वाणि ता-

न्याहु: स्वैरनुरूपरूपविभवैर्गाढोपगूढानि ते।।४।।

  1. ஶாந்தாநந்த3 மஹாவிபூ4தி
    பரமம் யத் ப்3ரஹ்ம ரூபம் ஹரே:
    மூர்த்தம் ப்3ரஹ்ம ததோபி
    தத்ப்ரியதரம் ரூபம் யத3த்யத்3 பு4தம்
    யாந்யந்யாநி யதா2ஸுக2ம்
    விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாந்-
    யாஹு: ஸ்வைர நுரூபரூபவிப4வைர்
    கா3டோ4பகூ3டா4நி தே

பதவுரை:-ஶாந்த-ஷடூ3ர்மிகளற்றதாய், ஆநந்த3
ஆநந்த3 மயமாய், மஹாவிபூ4தி- பெரிய விபூ4திகளை உடையதாய், பரமம்- தனக்கு மேலானதற்றதாய், ப்3ரஹ்ம-
பெரிதாயிருப்பதாலும், (பிறரைப்) பெரிதாகச் செய்வ
தாலும் ப்3ரஹ்மஶப்33த்தாலே சொல்லப்படுவதாயிருக்
கும், ஹரே: யத் ரூபம்- ஹரியினுடைய யாதொரு ஸ்வரூப முண்டோ, தத: அபி-அதைக்காட்டிலும், தத்ப்ரியதரம்-அந்த ப43வானுக்கு மிகவும் பிரியமாயிருப்பதும், மூர்த்தம்
கண்ணால் காணக்கூடியதும், ப்3ரஹ்ம -ப்3ரஹ்மஶப்33த்
தால் சொல்லப்படுவதும், அத்யத்3பு4தம்-மிகவும் அத்3பு4
மானதுமான, ரூபம் யத்- யாதொரு ரூபம் உண்டோ,
யதா2ஸுக2ம் விஹரத:-இஷ்டப்படி விளையாடும் எம்பெருமானுக்கு, அந்யாநி ரூபாணி யாநி-மற்றும் யாவை சில ரூபங்களுண்டோ, தாநி ஸர்வாணி-அந்த ரூபங்களெல்லாம், தே-உனக்கு, ஸ்வை: அநுரூபரூபவிப4வை:-அஸாதா4ரணங்களாய் தகுந்தவையாயிருக்கும் தி3வ்ய ரூபங்களால், கா3டோ4பகூ3டா4நி ஆஹு:-நன்றாக ஆலிங்கனம் செய்யப்பட்டவையென்று ( ப்ரமாணங்கள் ) சொல்லுகின்றன.

வ்யா:– (ஶாந்தாநந்த3 மஹாவிபூ4தி பரமம் யத் ப்3ரஹ்ம ரூபம் ஹரே:) ஶாந்தியாவதென்னென்றால், -54. “अशना- याऽपिपासे च शोकमोहौ जरामृती। षडूर्मिभिर्विशुद्धा”  (அஶநாயாऽபி பாஸே ச ஶோகமோஹௌ ஜராம்ருதீ।

ஷடூ3ர்மிபி4ர் விஶுத்3தா4) என்றுகொண்டு ஶ்ருதியில் சொல்லப்பட்டபடி ஷடூ3ர்மிரஹிதமாயிருக்குமென் றபடி. இன்னமும், 55. “अपक्षय विनाशाभ्यां परिणामर्धिजन्मभि:।

वर्जित: शक्यते वक्तुं यस्सदाऽस्तीति केवलम्।।” (அபக்ஷயவிநாஶாப்4யாம் பரிணாமர்த்தி4 ஜந்மபி4:
வர்ஜித: ஶக்யதே வக்தும் யஸ்ஸதா3ऽஸ்தீதி கேவலம்।।) என்று கொண்டு பராஶர ப்3ரஹ்மர்ஷியாலே ப்ரதிபாதி3க்கப்பட்டபடி ஷட்3பா4வவிகாரரஹிதம் என்கிறதாகவுமாம். (ஆநந்த3)
56. “ज्ञानानन्दमयं यस्य स्वरूपं परमात्मन:” (ஜ்ஞாநாநந்த3மயம்
யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந:) என்கிறபடியே ஆநந்த3ரூப
மாயிருக்கும். ‘ஆநந்த3ரூபமாயிருக்கையாவதென்?’ என்
றால்: தன்னைத் தான் அநுப4விக்கும்போது ஸுகா2வஹமா
யிருக்கை. (மஹாவிபூ4தி) 57. “अङ्गुलस्याष्टभागोऽपि न सोऽस्ति

मुनिसत्तम।न सन्ति प्रणिनो यत्र कर्मबन्धनिबन्धना:।।” (அங்கு3லஸ்
யாஷ்டபா4கோ3ऽபி ந ஸோऽஸ்தி முநிஸத்தம। ந ஸந்தி
ப்ராணிநோ யத்ர கர்மப3ந்த4 நிப3ந்த4நா:।।) என்றுகொண்டு
மஹர்ஷியாலே ப்ரதிபாதி3க்கப்படுகையாலே, யாதோ
ரிடத்தில் ஜீவஸமூஹமுண்டு, அங்கே பரமாத்மஸந்நிதி4
உண்டாயிருக்கும். அதெங்ஙனேயென்னில்: 58. “यस्यात्मा

शरीरं।यस्य पृथिवी शरीरं।”  (யஸ்யாத்மா ஶரீரம் ।
ப்ருதி2வீ ஶரீரம் ।) என்றுகொண்டு ப்ரமாண முண்டாகை
யாலே. ஶரீரத்தையொழிந்தன்றிறே ஶரீரியிருப்பது.
ஆக, “மஹாவிபூ4தி” என்று தி3வ்யாத்மஸ்வரூபத்தினுடைய விபு4த்வம் ப்ரதிபாதி3க்கப்பட்டது.

(பரமம்) “பரோ மாऽஸ்யேதி பரம:” என்கிறபடி
இதுதன்னுடைய நிருபமத்வம் ப்ரதிபாதி3க்கப்படுகிறது.
‘இதுக்கு ப்ரமாணமென்?” என்றால்: 59. “न तत्समश्चाभ्यधिकश्चदृश्यते” (ந தத்ஸமஶ்சாப்4யதி4 கஶ்ச த்3ருஶ்யதே, ) 60. “ न सन्दृशे तिष्ठति
रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम्”
(ந ஸந்த்3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி
கஶ்சநைநம்) (திருவாய் 2.3.2) “ஒத்தார் மிக்காரையிலையாய மாமாயா” என்றுமுண்டாகையாலே. யச்ச2ப்33த்தாலே 61. “वचसा- मात्मसंवेद्यं” ( வசஸாமாத்மஸம்வேத்3யம்) என்கிறபடியே இதுதன்னுடைய அவாங்மநஸகோ3சரத்வம்

ப்ரதிபாதி3க் கப்படுகிறது. (ப்3ரஹ்ம) 62. “बृहत्त्वाद्बृंहणत्वाच्च ब्रह्म इत्यभिधीयते” (ப்3ருஹத்த்வாத் ப்3ரும்ஹணத்வாச்ச ப்3ரஹ்ம

இத்யபி4தீ4, யதே) என்று சொல்லுகிறபடியே,
கீழ்ச்சொன்ன மஹா
விபூ4திஶப்33த்தாலே ஆர்த்த2மாக ப்ரதிபாதி3க்கப்பட்ட
தி3வ்யாத்ம ஸ்வரூபவிபு4த்வம் ப்3ரஹ்மஶப்33த்தாலே ஶாப்33மாக ப்ரதிபாதி3க்கப்படுகிறது. ஆக, இப்படிப் பூர்வ
பாத3த்தாலே ஷடூ3ர்மிரஹிதமாய், தனக்கு ஸுகா2வஹ
மாய், நிருபமமாய், அவாங்மநஸ கோ3சரமாய், ப்3ருஹத்த்வ ப்3ரும்ஹணத்வகு3ணயோகி3யாயிருக்கிற தி3வ்யாத்மஸ்வரூபம் ப்ரதிபாதி3க்கப்பட்டது.

இனி, உத்தரவாக்யத்தாலே தி3வ்யமங்க3ளவிக்3ரஹம்
ப்ரதிபாதி3க்கப்படுகிறது. (மூர்த்தம் ப்3ரஹ்ம ததோऽபி தத்ப்ரிய தரம் ரூபம் யத3த்யத்3பு4தம்) கீழ் ப்ரதிபாதி3க்கப்பட்ட அமூர்த்த
மான ப்3ரஹ்மத்திற்காட்டில் ப43வானுக்கு அத்யந்தம் ப்ரீதி
ப்ரகர்ஷஜநகமாய், மூர்த்தமாய், ப்3ரஹ்ம ஶப்33வாச்யமாய்,
அத்யாஶ்சர்யமாயிருக்கிறது யாதொரு தி3வ்யமங்கள
விக்3ரஹம் அது ப்ரதிபாதி3க்கப்படுகிறது. “விக்3ரஹோ….*”
என்றும், 63. “अरूपि हि जनार्दन:” (அரூபீ ஹி ஜநார்த்த3ந:)
என்றும், 64. “न ते रूपं न चाकार:” (ந தே ரூபம் ந சாகார:)
என்றும் இப்படி ஈஶ்வரனுக்கு விக்3ரஹமில்லையென்று
கொண்டு ப்ரமாணங்கள் உண்டாயிருக்க, தி3வ்யம் ஸ்வ
ரூபம் என்றும், தி3வ்யமங்க3ளவிக்3ரஹமென்றும் எங்ஙனே ? இப்படிச்சொல்லுவார் வேதா3ந்தநிஷ்ட2ருடைய
கோ3ஷ்டி2யில் ப3ஹிஷ்க்ருதரான பேரிறே. “ஆவதென் ?

சோத்3யம் பண்ணினால் பரிஹரிக்குமித்தனையொழியப் பரிவாதி3யாநின்றீர். இப்படி ப்ரமாணமுண்டோ?” என்றால்—உண்டு. அதெங்ஙனே யென்றால் : 46. “य एषोऽन्तरादित्ये हिरण्मय: पुरुषो दृश्यते” (ய ஏஷோऽந்தராதி3த்யே ஹிரண்மய:
புருஷோ த்3ருஶ்யதே) 41. “सर्वे निमेषा जज्ञिरे विद्युत:

पुरुषादधि” (ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்3யுத: புருஷா

3தி4). 65. “आदित्यवर्णं तमस: परस्तात्” (ஆதி3த்யவர்ணம்

தமஸ: பரஸ்தாத்) 66. “ध्येयस्सदा सवितृमण्डलमध्यवर्ती

नारायणस्सरसिजासनसन्निविष्ट:।केयूरवान् मकरकुण्डलवान् किरीटी

हारी हिरण्मयवपुर्धृतशङ्खचक्र:।।” (த்4யேயஸ்ஸதா3 ஸவித்ருமண்
3லமத்4யவர்த்தீ நாராயணஸ் ஸரஸிஜாஸநஸந்நிவிஷ்ட:।
கேயூரவாந் மகர குண்ட3லவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய
வபுர் த்4ருதஶங்க2 சக்ர :।।), 67. “किरीटकौस्तुभधरं मित्राणाम-

भयप्रदम्” ( கிரீடகௌஸ்துப44ரம் மித்ராணாமப4யப்ரத3ம் ),
(திருவாய் 5.5.7) ” நீண்டபொன் மேனியொடும் நிறைந்தென்னுள்ளே
நின்றொழிந்தான்” என்றுகொண்டு இப்படி ப்ரமாண
முண்டாகையாலே உன்னுடைய அபி4மதம் ஸித்3தி4யாது.

(யாந்யந்யாநி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி) 68. “अजायमानो बहुधा विजायते”
(அஜாயமாநோ ப3ஹுதா4
விஜாயதே) என்றும், (திருவாய் 2-9-5) “பிறப்பில் பல் பிறவிப் பெருமான்’ என்றும் இப்படி ப்ரமாணமுண்டாகையாலே ஜநிஜராதி3 து3ரித தூ3ரனாயிருந்துள்ள ஸர்வேஶ்வரன் தன்னுடைய ஸௌலப்4யம் என்கிற கு3ணத்தை ஒப்பமிடுகைக்காக, 38. “बहु स्यां प्रजायेय” (ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேய) என் றும், 69. “एष नारायण: श्रीमान् क्षीरार्णवनिकेतन:।नागपर्यङ्कमुत्सृज्य

ह्यागतो मथुरां पुरीम्” (ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ
நிகேதந:।  நாக3 பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாக3தோ மது2ராம் புரீம்।। ) என்றும், 70. “स हि देवैरुदीर्णस्य रावणस्य वधार्थिभि:। अर्थितो मानुषे लोके जज्ञे विष्णुस्सनातन:।।”

(ஸ ஹி தே3வை ருதீ3ர்ணஸ்ய ராவணஸ்ய வதா4ர்த்தி2பி4: ।அர்த்தி2தோ மாநுஷே லோகே ஜஜ்ஞே

விஷ்ணுஸ் ஸநாதந:।।) 71.
“संभवामि युगे युगे” (ஸம்ப4வாமி யுகே3 யுகே3) என்றும்,
25. “इच्छागृहीताभिमतोरुदेह: संसाधिताशेषजगद्धितोऽसौ” (இச்
சா2க்3ருஹீதாऽபி4மதோருதே3ஹஸ் ஸம்ஸாதி4தாऽஶேஷ
ஜக3த்3தி4தோऽஸௌ) என்றும், 72. “विष्णुत्वमुपजग्मिवान्”
(விஷ்ணுத்வமுபஜக்3மிவாந்) என்றும் இப்படி ப்ரமாண
முண்டாகையாலே, அதி3திக்கு த்3வாத3ஶ புத்ரனாய்க்
அவதரித்த அவதாரத்தோடும், (திருவாய் 10-1.8) “தயரதன்
பெற்ற மரதக மணித்தடம்” என்கிற ராமாவதாரத்
தோடும், (திருவாய் 9-1.10) “மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்” என்கிறபடியே தே3வகார்யார்த்த2மாக அவ தரித்தருளின ராமக்ருஷ்ணாத்3யவதாரங்களோடும் வாசியற.

(தாந்யாஹு: ஸ்வைரநுரூபரூபவிப4 வைர் கா3டோ4பகூ3டா4நி தே). 73. “राघवत्वेऽभवत्सीता रुक्मिणी कृष्णजन्मनि।अन्येषु चावतारेषु विष्नोरेषाऽनपायिनी।।” (ராக4வத்வऽப4வத் ஸீதா
ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி ।அந்யேஷு சாऽவதாரேஷு
விஷ்ணோரேஷாऽநபாயிநீ।।) என்கிறபடியே அவ்வோ அவ
தாரவிக்3ரஹங்களுக்கு அநுரூபமான உன்னுடைய அவ்வோ அவதாரங்களிலுண்டான தி3வ்யமங்க3ளவிக்3ரஹத்தாலே,
74. “उपेतं सीतया भूयश्चित्रया शशिनं यथा”  (உபேதம் ஸீதயா
பூ4யஶ் சித்ரயா ஶஶிநம் யதா2) என்றும், 75. “भर्तारं परिषस्वजे”
(ப4ர்த்தாரம் பரிஷஸ்வஜே) என்றும் இப்படி
ப்ரமாணமுண்டாகையாலே கா34மாக ஆலிங்க3நம் பண்
ணும்படியிறே இருப்பது. ஆக, இந்நாலு ஶ்லோகத்தால்
லக்ஷ்மீவிஶிஷ்டமான வஸ்துவே உபேயமாகக்கடவது
என்றத்தை அருளிச்செய்கிறார் ஆளவந்தார்.

ஆளவந்தார் திருவடிகளே ஶரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே ஶரணம்.
பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த
சதுஶ்ஶ்லோகி வ்யாக்2யாநம் முற்றிற்று.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.