Thirumozhi 11-8
பெரிய திருமொழி பதினோராம் பத்து எட்டாம் திருமொழி மாற்றமுள, ஆகிலும் சொல்லுவன் * மக்கள் தோற்றக் குழி, தோற்றுவிப்பாய் கொல் ? என்று இன்னம் * ஆற்றங்கரை வாழ் மரம் போல், அஞ்சுகின்றேன் * நாற்றச் சுவை ஊறு ஒலியாகிய, நம்பீ ! 11.8.1 சீற்றமுள, ஆகிலும் செப்புவன் * மக்கள் தோற்றக் குழி, தோற்றுவிப்பாய் கொலென்றஞ்சிக் * காற்றத்திடைப் பட்ட, கலவர் மனம்போல் * ஆற்றத் துளங்கா நிற்பன், ஆழி வலவா ! […]
Thirumozhi 11-7
பெரிய திருமொழி பதினோராம் பத்து ஏழாம் திருமொழி நீணாகம் சுற்றி, நெடுவரை நட்டு * ஆழ்கடலைப் பேணான் கடைந்து, அமுதம் கொண்டுகந்த பெம்மானைப் * பூணார மார்வனைப், புள்ளூரும் பொன் மலையைக் * காணாதார் கண் என்றும் கண்ணல்ல, கண்டாமே. 11.7.1 நீள்வான் குறளுருவாய், நின்று * இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட, தக்கணைக்கு மிக்கானைத் * தோளாத மாமணியைத், தொண்டர்க் கினியானைக் * கேளாச் செவிகள் செவியல்ல, கேட்டாமே. […]
Thirumozhi 11-6
பெரிய திருமொழி பதினோராம் பத்து ஆறாம் திருமொழி மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி வானவரும் யாமுமெல்லாம் * நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்தது ஓரீர் * எந்நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர் ? * செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள் ! அண்டனையே ஏத்தீர்களே. 11.6.1 நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம் * மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட மகப்படுத்த காலத்து * அன்று எல்லாரும் அறியாரோ ? எம்பெருமானுண்டுமிழ்ந்த * எச்சில் தேவர் […]
Thirumozhi 11-5
பெரிய திருமொழி பதினோராம் பத்து ஐந்தாம் திருமொழி மானமரு மென்னோக்கி, வைதேவி இன் துணையாக் * கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான், காணேடீ ! * கானமரும் கல்லதர் போய்க், காடுறைந்த பொன்னடிக்கள் * வானவர் தம் சென்னி மலர் கண்டாய், சாழலே ! 11.5.1 தந்தை தளை கழலத் தோன்றிப், போய் * ஆய்ப்பாடி நந்தன் குலமதலையாய் வளர்ந்தான், காணேடீ ! * நந்தன் குலமதலையாய் வளர்ந்தான், நான்முகற்குத் தந்தை காண் * […]
Thirumozhi 11-4
பெரிய திருமொழி பதினோராம் பத்து நான்காம் திருமொழி நிலையிட மெங்கு மின்றி நெடு வெள்ளம், உம்பர் வள நாடு மூட * இமையோர் தலையிட மற்று எமக்கு ஓர் சரணில்லை யென்ன அரணாவனென்னும் அருளால் * அலை கடல் நீர் குழம்ப அகடாட வோடி அகல் வானுரிஞ்ச * முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே ! 11.4.1 செருமிகு […]
Thirumozhi 11-3
பெரிய திருமொழி பதினோராம் பத்து மூன்றாம் திருமொழி மன்னிலங்கு பாரதத்துத், தேரூர்ந்து * மாவலியைப் பொன்னிலங்கு, திண் விலங்கில் வைத்துப் * பொரு கடல் சூழ் தென்னிலங்கை யீடழித்த தேவர்க்கு, இது காணீர் * என்னிலங்கு சங்கோடு எழில், தோற்றிருந்தேனே. 11.3.1 இருந்தான் என்னுள்ளத்து, இறைவன் * கறைசேர் பருந்தாள் களிற்றுக்கு, அருள் செய்த * செங்கண் பெருந்தோள் நெடுமாலைப், பேர் பாடியாட * வருந்தாது என் கொங்கை, ஒளிமன்னும் அன்னே ! […]
Thirumozhi 11-2
பெரிய திருமொழி பதினோராம் பத்து இரண்டாம் திருமொழி குன்றமெடுத்து மழை தடுத்து, இளையாரொடும் * மன்றில் குரவை பிணைந்த மால், என்னை மால் செய்தான் * முன்றில் தனிநின்ற பெண்ணை மேல், கிடந்தீர்கின்ற * அன்றிலின் கூட்டைப், பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ ? ! 11.2.1 பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து, அரிமாச் செகுத்து * ஆங்கு வேழத்தின், கொம்பு கொண்டு * வன்பேய்முலை வாங்கியுண்ட, அவ்வாயன் நிற்க * இவ்வாயன் வாய் ஏங்கு […]
Thirumozhi 11-1
பெரிய திருமொழி பதினோராம் பத்து முதல் திருமொழி குன்ற மொன்று எடுத்தேந்தி * மாமழை அன்று காத்த, அம்மான் * அரக்கரை வென்ற வில்லியார், வீரமே கொலோ ? * தென்றல் வந்து தீ வீசும், என் செய்கேன் ? 11.1.1 காரும் வார்பனிக் கடலும், அன்னவன் * தாரும் மார்வமும், கண்ட தண்டமோ ? * சோரு மாமுகில், துளியினூடு வந்து * ஈர வாடை தான், ஈரும் என்னையே. […]