Thirumozhi 11-3

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

மூன்றாம் திருமொழி

மன்னிலங்கு பாரதத்துத், தேரூர்ந்து * மாவலியைப்

பொன்னிலங்கு, திண் விலங்கில் வைத்துப் * பொரு கடல் சூழ்

தென்னிலங்கை யீடழித்த தேவர்க்கு, இது காணீர் *

என்னிலங்கு சங்கோடு எழில், தோற்றிருந்தேனே.      11.3.1

இருந்தான் என்னுள்ளத்து, இறைவன் * கறைசேர்

பருந்தாள் களிற்றுக்கு, அருள் செய்த * செங்கண்

பெருந்தோள் நெடுமாலைப், பேர் பாடியாட *

வருந்தாது என் கொங்கை, ஒளிமன்னும் அன்னே !    11.3.2

அன்னே ! இவரை அறிவன் * மறை நான்கும்

முன்னே யுரைத்த, முனிவரிவர் * வந்து

பொன்னேய் வளை கவர்ந்து, போகார் மனம் புகுந்து *

என்னே ? இவரெண்ணும் எண்ணம், அறியோமே.       11.3.3

அறியோமே யென்று, உரைக்கலாமே ? எமக்கு *

வெறியார் பொழில் சூழ், வியன் குடந்தை மேவிச் *

சிறியான் ஓர் பிள்ளையாய், மெள்ள நடந்திட்டு *

உறியார் நறுவெண்ணெயுண்டு, உகந்தார் தம்மையே.       11.3.4    திருக்குடந்தை (கும்பகோணம்)

தம்மையே நாளும் வணங்கித், தொழுவார்க்குத் *

தம்மையே யொக்க, அருள் செய்வர் ஆதலால் *

தம்மையே நாளும் வணங்கித், தொழுதிறைஞ்சித் *

தம்மையே பற்றா மனத்து, என்றும் வைத்தோமே.     11.3.5

வைத்தார் அடியார் மனத்தினில், வைத்து இன்பம்

உற்றார் * ஒளி விசும்பில், ஓரடி வைத்து * ஓரடிக்கும்

எய்த்தாது மண்ணென்று, இமையோர் தொழுதிறைஞ்சிக் *

கைத்தாமரை குவிக்கும் கண்ணன், என் கண்ணனையே.    11.3.6

கண்ணன், மனத்துள்ளே நிற்கவும் * கை வளைகள்

என்னோ கழன்ற ? இவை என்ன மாயங்கள் ?

பெண்ணானோம் பெண்மையோம், நிற்க * அவன் மேய

அண்ணல் மலையும் அரங்கமும், பாடோமே.  11.3.7    திருவரங்கம்,

திருவேங்கடம் திருப்பதி

பாடோமே ? எந்தை பெருமானைப் * பாடி நின்று

ஆடோமே ? ஆயிரம் பேரானைப் * பேர் நினைந்து

சூடோமே ? சூடுந் துழாயலங்கல் சூடி * நாம்

கூடோமே ? கூடக் குறிப்பாகில், நன்னெஞ்சே !        11.3.8

நன்னெஞ்சே ! நம்பெருமான், நாளும் இனிதமரும் *

அன்னம் சேர் கானல், அணியாலி கை தொழுது *

முன்னம் சேர் வல் வினைகள் போக, முகில் வண்ணன் *

பொன்னஞ் சேர் சேவடி மேல் போது, அணியப் பெற்றோமே.     11.3.9    திருவாலி

பெற்றாரார், ஆயிரம் பேரானைப் * பேர் பாடப்

பெற்றான், கலியனொலி செய் தமிழ் மாலை *

கற்றார் ஓ ! முற்றுலகாள்வர், இவை கேட்கல்

உற்றார்க்கு * உறுதுயரில்லை, உலகத்தே.       11.3.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.