Thirumozhi 11-8

பெரிய திருமொழி

பதினோராம் பத்து

எட்டாம் திருமொழி

மாற்றமுள, ஆகிலும் சொல்லுவன் * மக்கள்

தோற்றக் குழி, தோற்றுவிப்பாய் கொல் ? என்று இன்னம் *

ஆற்றங்கரை வாழ் மரம் போல், அஞ்சுகின்றேன் *

நாற்றச் சுவை ஊறு ஒலியாகிய, நம்பீ !    11.8.1

சீற்றமுள, ஆகிலும் செப்புவன் * மக்கள்

தோற்றக் குழி, தோற்றுவிப்பாய் கொலென்றஞ்சிக் *

காற்றத்திடைப் பட்ட, கலவர் மனம்போல் *

ஆற்றத் துளங்கா நிற்பன், ஆழி வலவா !       11.8.2

தூங்கார் பிறவிக்கள், இன்னம் புகப்பெய்து *

வாங்காயென்று சிந்தித்து நான், அதற்கு அஞ்சிப் *

பாம்போடு ஒரு கூரையிலே, பயின்றாற் போல் *

தாங்காது உள்ளம் தள்ளும், என் தாமரைக் கண்ணா !           11.8.3

உருவார் பிறவிக்கள், இன்னம் புகப் பெய்து *

திரிவா யென்று சிந்தித்தி, என்றதற் கஞ்சி *

இருபாடெரி கொள்ளியினுள், எறும்பே போல் *

உருகா நிற்கும் என்னுள்ளம், ஊழி முதல்வா !               11.8.4

கொள்ளக் குறையாத, இடும்பைக் குழியில் *

தள்ளிப் புகப் பெய்தி கொல் ? என்று அதற்கு அஞ்சி *

வெள்ளத்திடைப் பட்ட, நரியினம் போலே *

உள்ளம் துளங்கா நிற்பன், ஊழி முதல்வா !       11.8.5

படை நின்ற, பைந்தாமரையோடு * அணிநீலம்

மடை நின்று அலரும், வயலாலி மணாளா ! *

இடைய னெறிந்த மரமே, ஒத்திராமே *

அடைய அருளாய், எனக்கு உன் தனருளே.      11.8.6    திருவாலி

வேம்பின் புழு, வேம்பன்றி யுண்ணாது *

அடியேன் நான் பின்னும், உன் சேவடி யன்றி நயவேன் *

தேம்பலிளந் திங்கள் சிறை விடுத்து * ஐவாய்ப்

பாம்பினணைப் பள்ளி கொண்டாய், பரஞ்சோதீ !            11.8.7

அணியார் பொழில்சூழ், அரங்க நகரப்பா ! *

துணியேன் இனி, நின்னருளல்லது எனக்கு *

மணியே ! மணிமாணிக்கமே !, மதுசூதா ! *

பணியாய் எனக்கு உய்யும் வகை, பரஞ்சோதீ !          11.8.8    திருவரங்கம்

நந்தா நரகத்து அழுந்தா வகை * நாளும்

எந்தாய் !, தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய் ! *

சந்தோகா ! தலைவனே ! தாமரைக் கண்ணா ! *

அந்தோ ! அடியேற்கு அருளாய், உன்னருளே.   11.8.9

குன்றமெடுத்து, ஆநிரை காத்தவன் தன்னை *

மன்றில் மலி புகழ், மங்கைமன் கலிகன்றி சொல் *

ஒன்று நின்ற ஒன்பதும், வல்லவர் தம்மேல் *

என்றும் வினையாயின, சாரகில்லாவே.              11.8.10

**************

பெரிய திருமொழி முற்றும்

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.