03-05 12000/36000 Padi

ஐந்தாம்திருவாய்மொழிமொய்ம்மா: ப்ரவேசம்

பன்னீராயிரப்படி –  அஞ்சாந்திருவாய்மொழியில், கீழ்ச்சொன்ன பகவத்ப்ரகாரதயா சேஷத்வத்தில் தமக்குப் பிறந்த ரஸாதிசயத்தாலே அத்யந்தஹ்ருஷ்டராய், ப்ரதிஸம்பந்தியான சேஷியினுடைய ஆபந்நிவாரகத்வத்தையும், அஸுரநிரஸநஸாமர்த்யத்தையும், ஆர்த்தஸம்ரக்ஷணத்தையும், அபிமத விரோதி நிவர்த்தகத்வத்தையும், அவதார ப்ரயோஜநத்தையும், அதிசயிதபோக்யதையையும், ஆஸ்ரிதபக்ஷபாதத்தையும், அர்ச்சாவதார ஸௌலப்யத்தையும், உபயவிபூதி நாதத்வத்தையும், விலக்ஷணவிக்ரஹயோகத்தையும் அநுஸந்தித்து ப்ரீதிப்ரகர்ஷத்தாலே ஸம்ப்ராந்தராகாதாரை நிந்தித்தும், உகந்தாடுவது பாடுவதாவாரை உகந்தும் இந்த சேஷத்வஸாரஸ்யத்தை உபபாதிக்கிறார்.

ஈடு – _புகழுநல்லொருவ_ (3-4) னிலே – பகவதநுபவத்தைப்பண்ணி, அத்தால் வந்த ஹர்ஷப்ரகர்ஷத்தாலே களித்து, அதில்லாதாரை நிந்தித்து, உடையாரைக் கொண்டாடிச் சொல்லுகிறது – ‘மொய்ம்மாம்பூம்பொழில்’. இவர்க்கு _முந்நீர்ஞால_ (3-2)த்தில் – ப்ரக்ருதிஸம்பந்தத்தை அநுஸந்தித்தும், இதரவிஷயப்ராவண்யத்தை அநுஸந்தித்தும், சோகித்த சோகம் சிலர்க்கு நிலமாகிலாயிற்று – இத்திருவாய்மொழியில் பகவதநுபவத்தாலே ஹ்ருஷ்டரான இவருடைய ஹர்ஷம் சிலர்க்கு நிலமாவது. ‘இவரும் பகவதநுபவம் பண்ணுகிறாராகில், நாமும் அத்விஷயத்திலே கைவைத்தோமாகில், – இவர்க்கு இங்ஙனிருப்பானென்? நமக்கு இங்ஙன் இராதொழிவானென்?’ என்னில்;
‘நாமாகிறோம் கண்டார்க்கு ஒளிக்கவேண்டுமவையாய், சாஸ்த்ரங்களெல்லாம் ஒருமுகஞ்செய்து நிஷேதிக்கிறவையாய், முதல்தன்னிலே கிடையாதவையாய், கிடைத்தாலும் நிலைநில்லாதவையாய், அநந்தரம் நரகத்திலே மூட்டி அநர்த்தத்தை விளைக்கக்கடவதான இதரவிஷயங்களுடைய லாபாலாபங்களில் பிறக்கும் சோகஹர்ஷங்களே யாயிற்று அறிவது.’ ‘வீதராகராய் ஸாத்த்விகாக்ரேஸரராயிருக்கிற இவர்க்கு, சாஸ்த்ரங்கள் ‘ஆகாது’ என்று நிஷேதித்த ஶோகஹர்ஷங்கள் கூடினபடி எங்ஙனே?’ என்னில், – இவரது, சாஸ்த்ரங்களிலே நிஷேதித்த சோகஹர்ஷங்களன்று; ஸமஸ்தகல்யாணகுணாத்மகனான ஸர்வேஸ்வரனை அநுபவித்து, அத்வநுபவஜநித ப்ரீதியாயிற்று – இவர்க்கு ஹர்ஷமாகிறது; _இப்படி வகுத்தவிஷயத்தை அநாதிகாலம் இழந்து இதரவிஷயப்ரவணராய் அநர்த்தப்படுவோமே_ என்னுமதாயிற்று சோகம். _காமம் ஆகாது_ என்று நிஷேதியாநிற்கச் செய்தேயும், (நிதி3த்4யாஸிதத்ய:) என்று கொண்டுபகவத் காமத்தை சாஸ்த்ரங்கள் விதியாநின்றதிறே;  இனி முக்தரும் பகவதநுபவத்தாலே (அஹமந்நமஹமந்நமஹமந்நம்) என்று களியாநிற்பர்களிறே; (ஸர்வஸம்சயநிர்முக்தோ நாரத3ஸ்ஸர்வத4ர்மவித்) என்று சொல்லப்படுகிற நாரதாதிகளும் பகவத்ஸந்நிதியிலே வந்தவாறே ஆடுவது பாடுவதாகாநிற்பர்களிறே; விரக்தரில் தலையான திருவடியும் பிராட்டியைக்கண்டுவந்த ஹர்ஷத்தாலே முதலிகளைப் பார்த்து _நீங்கள் மதுவநத்தை யழித்து புஜியுங்கோள்; (அஹமாவாரயிஷ்யாமி  யுஷ்மாகம் பரிபந்தி2ந:) என்று காத்திருந்த ததிமுகாதிகளை நான் தொட்டுத்தருகிறேன்_ என்றானிறே; மஹாராஜர்க்கு ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்றுஅறிவிக்க, ‘நம்மோடு பண்ணிப்போன ஸமயமுந் தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ணதண்டர்’ என்று அறியச்செய்தேயும்,  இவர்கள் காவற்காட்டை யழிக்கும்போது, (நைஷாமக்ருதக்ருத்யாநா மீத்3ருசஸ்ஸ்யாது3 – பக்ரம:) என்று ஸர்வதா பிராட்டியைத் திருவடிதொழுதார்களாக வேணுமென்று, அப்போது பிறந்த ஹர்ஷம் இருந்தவிடத்திலிருக்கவொட்டாமே, வாலானது ருஸ்யமூகபர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று; நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று ராஜபுத்ரர்களுடைய ஜீவநாத்ருஷ்டமாயிற்று: அன்றாகில் முதலிகளுடைய ஹர்ஷம் ராஜபுத்ரர்கள் முதுகோடே போமாயிற்று. அல்பம் வெற்றிலைச்சாறு, மிடற்றுக்குக்கீழேயிழிந்தவன், தன்னைத்தான் அறிகிறிலன்; ‘உள்கலந்தார்க்கு ஓர் அமுதமாய்’ (1-6-5), ‘அமுதிலுமாற்ற வினியனாய்’ (1-6-6), ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகமென்னமுதம்’ (2-7-11) என்று தாமே முற்றூட்டாக இத்வம்ருதத்தை புஜித்த இவர்க்கு ஹர்ஷமுண்டாகச் சொல்லவேண்டாவிறே. இப்படிப்பட்ட பகவதநுபவத்தால் வந்த ப்ரீதிப்ரகர்ஷத்தாலே – முதலிலே இதில் அறிவில்லாதாரையும், அறிவுண்டாய்ப் புறம்பே அந்யபரராயிருப்பாரையும், –ஷ்டாபிமாநங் கொண்டாடி _அநுஷ்டாநகாலங்களில் திருநாள் சேவிக்கலாகாது_ என்று இருப்பாரையும், அறிவுண்டாய்,  புறம்பே பரபரக்கற்று ‘அதுக்கும் இதுக்கும் வாசியென்?’ என்று ஸமாநபுத்தி பண்ணியிருப்பாரையும், தங்களை ஆஸ்திகராக புத்திபண்ணி அத்வாஸ்திக்யத்துக்குப் ‘புறம்பே விநியோகம்’ என்று இருப்பாரையும், ரஜஸ்தமஸ்ஸுக்களுக்கு அநுரூபமான க்ஷுத்ர பலங்களைக்கொண்டு போவாரையும், ததர்த்தமாகத் தாமஸதேவதைகளை ஆஸ்ரயிப்பாரையும் எடுத்து, _அவர்களுக்குப்புறம்பே எல்லாநன்மைகளுமுண்டேயாகிலும், பகவத்குணங்களை அநுஸந்தித்தால் அவிக்ருதராகில் ‘அவர்கள் அவஸ்துக்கள்’_ என்று அவர்களை நிந்தித்து, _ஒரு ஜந்மத்ருத்த ஜ்ஞாநங்களின்றிக்கே யிருக்கச்செய்தேயும் பகவத்குணாநுபவம்பண்ணி விக்ருதராமது உண்டாகில் அவர்களுக்கு நான் அடிமை_ என்று அவர்களைக் கொண்டாடி ப்ரீதராகிறார்.

முதற்பாட்டு

மொய்ம்மாம்பூம்பொழில்பொய்கை முதலைச்சிறைப்பட்டுநின்ற*

கைம்மாவுக்கு அருள்செய்த கார்முகில்போல்வண்ணன்கண்ணன்*

எம்மானைச்சொல்லிப்பாடி எழுந்தும்பறந்தும்துள்ளாதார்*

தம்மால்கருமமென்? சொல்லீர்தண்கடல்வட்டத்துள்ளீரே!

– முதற்பாட்டில், ஆபந்நமான ஆனைக்கு உதவினபடியை அநுஸந்தித்து ஹர்ஷவிகாரம் பிறவாத அங்கத்தையுடையரால் என்ன ப்ரயோஜநமுண்டு? என்று லௌகிகரைப் பார்த்து அருளிச்செய்கிறார்.

மொய் – செறிந்து, மா – உயர்ந்து, பூ – பூத்த, பொழில் – பொழில்களையுடைத்தான, பொய்கை – பொய்கையிலே, முதலை – முதலையாலே, சிறைப்பட்டு – சிறைப்பட்டு, நின்ற – (கரையேறமாட்டாமல் நி•சேஷ்டமாய்) நின்ற, கைம்மாவுக்கு – ஆனைக்கு, அருள்செய்த – (அதின்கையிற் புஷ்பத்தைச் செத்விகுலையாமல் அலங்கரிக்கையாகிற) அருளைப் பண்ணினவனாய், (அது தன் ஆர்த்தி தீரக் கண்டுகளிக்கும்படியாய் / உகக்கும்படியாய்), கார் – ஸ்ரமஹரமாய், முகில்போல் – காளமேகநிபமான, வண்ணன் – வடிவையும், கண்ணன் – (உள்ளேயிழிந்தெடுத்துக் கரையேற்றும்படியான)ஸௌலப்யத்தையும், எம்மானை-(இரண்டுக்கும் அடியான) உறவையுமுடையவனை, சொல்லி-வாயாலேபேசி, பாடி-உகப்பாலே பாடி,எழுந்தும் பறந்தும் – இருந்தவிடத்திலிராதே தரையில் கால்பாவாதபடி பறந்து, துள்ளாதார்தம்மால் – ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணாதாருடைய ஸத்பாவத்தால், என் கருமம் – என்ன கார்யமுண்டு? தண் – குளிர்ந்த, கடல் – கடலாலே சூழப்பட்ட, வட்டத்து – பூமியிலே, உள்ளீரே – (பகவதநுபவார்த்தமாக) உளரான நீங்களே, சொல்லீர் – சொல்லுங்கோள்.

இங்கு ‘கைம்மா’ என்று ஆனையைச் சொல்லிற்று – துதிக்கையொழிய அழுந்தினபடியை நினைத்து.

ஈடு: – முதற்பாட்டில், ஆஸ்ரிதன் இடர்ப்பட்ட மடுவின்கரையிலே, ‘கலங்காப் பெரு நகரில்’ (மூன்.திரு. 51) நின்றும் அரைகுலையத் தலைகுலைய வந்துவிழுந்த நீர்மையை அநுஸந்தித்தால் விக்ருதராகாதார் அவஸ்துக்களென்கிறார்.

(மொய்ம்மாம்பூம்பொழில்) வண்டுகள் மொய்க்கப்பட்ட பொழில்; மா-வண்டு, மொய் என்று – நெருக்கமாய், சோலைச்செறிவு. அச்செறிவுதான் மநோஹரமாயிருக்குமிறே. (மா – பொழில்) மாவாலுண்டான பொழிலென்னுதல். பரந்த பொழிலென்னுதல்: (பூம்பொழில்) பூத்த பொழிலென்னுதல்; கீழ், செறிவுமாத்ரத்தைச் சொல்லிற்றாகில், இங்கு மநோஹரத்வத்தைச் சொல்லிற்றாகிறது. (பொய்கை இத்யாதி) – ‘பூவார்கழல்களிலே’ (6-10-4) பணிமாறப் பூத்தேடிக் கிடையாமையாலே இடர்ப்பட்டு வருகிறவன், தூரத்திலே குளிர்ந்த சோலையும் பூத்தபொய்கையுமாய்த் தோற்றக் கண்டு மேல்விழுந்து வந்து பறித்தானாயிற்று ‘உள்ளே துஷ்டஸத்த்வம் கிடந்தது’ என்று அறியாதே; அச்சோலையோடு பொய்கையோடு வாசியற இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறதாயிற்று, அப்போது அவனுக்கு உத்தேஸ்யமானாற்போலே; ‘தயரதன் பெற்ற மரகதமணித் தடத்து’க்குப் (10-1-8) போலியாயிருக்குமிறே  இப்பொய்கையும்; _தாமரைக்காடு மலர்க்கண்ணொடு கனிவாயுடையதுமாய்_ (திருவாசிரியம்-5) என்று உபமாநமுகத்தாலும் மநோஹரமாயிருக்குமிறே. பொய்கை முதலைச்சிறைப்பட்டு நின்றதாயிற்று – தன்னிலமல்லாததிலே விஸஜாதீயமானவதின் கையிலேயகப்பட்டது. வெளிநிலமாகில் ஆனையே வெல்லுமிறே; ஆனைக்கு ஆனையன்று; ஆனைக்கு ஸிம்ஹமன்று; க்ஷுத்ரமாயிருப்பதொரு நீர்ப்புழுவின்கையிலே அகப்பட்டது. (சிறைப்பட்டு நின்ற) *தித்யம் வர்ஷஸஹஸ்ரகம்* என்கிறபடியே அநேகமாயிரமாண்டு முதலை நீருக்கு இழுக்க, ஆனை கரைக்கு இழுக்க, இரண்டினுடையவும் த்யாபாரமாய்ப் போந்தது. *கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹஆகர்ஷதே ஜலே* என்கிறபடியே; பின்பு அதுதவிர்ந்து, முதலையின் த்யாபாரமேயாய் ஆனையின் த்யாபாரம் ஓவிநின்ற நிலை. ஆனைக்குத் தன் நிலமல்லாமையாலே ப3லக்ஷயம் பிறக்கும்; முதலைக்குத் தன் நிலமாகையாலும், அபிமதஸித்தியாலும், ப3லம்  இரட்டித்திருக்குமிறே; _முழுவலிமுதலை_ (திருமொழி 5-8-3) என்னக்கடவதிறே; – ‘தன் அபிமதஸித்திக்கு ஒரு கறையடி காணவல்லோமே’ என்று ஹ்ருதயக்லேசத்தோடே கிடக்கையாலே ப3லக்ஷயம் பிறந்திருக்கும்.  இப்போது அது பெறுகையாலே முழுவலியாமிறே.  தன் அபிமதஸித்திக்கு இது தான் கால்வாசியறிந்திறே பற்றிற்று; முன்பு ஒன்றைப் பிடித்ததில்லையே. நெடுங்கால மெல்லாம் ‘நம்ஶாபமோக்ஷத்துக்கு ஒரு கறையடி காணவல்லோமே’ என்று கிடக்கிறது, அது பெற்றால் விடாதிறே. கறையடியென்று ஆனைக்குப் பேர். (கைம்மாவுக்கு) ‘ஏதேனுமொன்று வந்தாலும் நம்மைக் கைமிஞ்சி வாராது’ என்று கைகண்டிருக்கிற இது நோவுபட்டதென்கையும், துதிக்கை முழுத்திற்றென்கையும், இடர்ப்படும்போதும் தன்க4னத்திலேயிறேபடுவது, _ஆனையின் துயரம்_ (திருமொழி 2-3-9) என்னக்கடவதிறே. (அருள்செய்த) துதிக்கை முழுத்தச் செய்தேயும் பூவுக்கு ஒரு வாட்டம் வாராதபடி எடுத்துப் பிடித்துக்கொண்டு நின்றதாயிற்று; அதிற்செத்வி மாறாதபடி திருவடிகளிலே இடுவித்துக்கொண்டு நின்ற நிலை. முதலையின் வாயிலே அகப்பட்ட ஆனையின் காலைத் திருக்கையாலே ஸ்பர்சித்துக் குளிரக் கடாக்ஷித்து நின்றநிலை. ஆனைக்கு நெடுங்கை நீட்டாகவொண்௰தென்று ‘தூவாய புள்ளூர்ந்து வந்திறே’ (திருமொழி 6-8-3) பூ இடுவித்துக்கொண்டது. (அருள்செய்த) ஆனையின் காலில் விலங்கையிறே வெட்டிவிட்டது; ‘கொடியவாய் விலங்கிறே’ (திருமொழி 5-8-3).  முதலையின் வாயிலே அகப்பட்ட ஆனையின்காலைத் திருக்கையாலே ஸ்பர்சித்து, அதனுடைய க்ராஹத்தைப் போக்கி நின்ற நிலை. *க்ராஹம் சக்ரேண மாதவ:* இறே. _காலைக்கதுவிடுகின்ற_ (நாச்.திரு. 3-5) – ஸ்ரீ கோபிமார் கரையிலே திருப்பரிவட்டங்களையிட்டு வைத்துப் பொய்கையில் இழிந்தவாறே பரிவட்டங்களையெல்லாம் வாரிக்கொண்டு ஒரு குருந்தின்மேலே ஏறிநிற்க, தங்களால் ஆனவளவெல்லாம் அநுநயித்துப் பார்த்தவிடத்திலும் அவன் பின்னையுங்கொடாதேயொழிய, அவர்களிலே ஈஸ்வரமர்மஜ்ஞையாயிருப்பாளொருத்தி சொல்லுகிற வார்த்தையாயிற்று; ‘கயலோடேகூட வாளையானது காலைக் கதுவாநின்றது.’ தன்னை ஆஸ்ரயித்ததொரு யானையை ஒருநீர்ப்புழு நலிய, அது பொறுக்கமாட்டாமே த்வரித்துக்கொண்டு வந்துவிழக்கடவ அவன், அந்தரங்கரான நாம் நோவுபடா நின்றால், வாராதிரானென்னுமத்தாலே சொல்லுகிறாள். ‘ஆனையை ஒரு நீர்ப்புழுவாயிற்று அங்கு நலிகிறது; அபலைகளான எங்களை இரண்டு நீர்ப்புழு கிடாய் நலிகிறது’ என்கிறாள்: இத்தைகேட்டபோதே பரிவட்டங்களையும் கொண்டு அரைகுலையத் தலைகுலைய விழுமென்றிருக்கிறாள்; வைஷ்ணவ ஸந்தாநத்திலே பிறந்தார்க்கு ஈஸ்வர மர்மங்கள் தெரியுமிறே – ‘இன்னதுக்கு வருவர் இரங்குவர்’ என்று அறிவர்களிறே. (கார்முகில் இத்யாதி) ஆனையினிடரைப் போக்கினபோது வடிவிற் பிறந்த துடிப்பும், குணத்திற்பிறந்த துடிப்பும், வடிவழகையநுபவிப்பித்து ஆனைக்குக் கையாளாய் நின்ற நிலை; ‘க்ருஷ்ணன்’ என்றால் தன்னையநுபவிப்பார்க்குக் கையாளாயிருக்குமென்னுமிடம் ப்ரஸித்தமிறே. ஆனையினிடரைப் போக்கின விஶல்யகரணியும் ஸந்தாநகரணியும் இருக்கிறபடி. தன்னையநுபவிப்பித்துத் தாழ நின்றானாயாயிற்றுப் போக்கிற்று. (எம்மானை) ஆனைக்கு உதவின அத்தாலே அதின்சிறைவிட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்பட்டார். ஒரு ஜந்மமாதல், ஒரு ஜ்ஞாநமாதல், ஒரு வ்ருத்தமாதல் ஒன்றுமின்றிக்கே ருசிமாத்ரமேயான ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்கு உதவினபடியை அநுஸந்தித்து, _இது என்ன நீர்மை?’ என்று அதிலேயாயிற்று இவர் அநந்யார்ஹராயிற்று. பட்டர் இத்விடத்தை அருளிச் செய்யா நிற்கச்செய்தே மேலேயும் இயலைச் சொல்லப்பண்ணி _அவன் நூறாயிரஞ்செய்தாலும் விக்ருதராகாதிருக்கும்போதும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்த விடத்திலே இருக்கமாட்டதே விக்ருதராம்போதும் அவனே வேணும்_ என்று அருளிச் செய்தார். (சொல்லி இத்யாதி) ஆனைக்கு உதவின நீர்மையை வாயாலே சொல்லி, ப்ரீதிப்ரேரிதராய்ப்பாடி, பின்னை உடம்பு இருந்தவிடத்தில் இராதே எழுந்தும், தரையில் கால்பாவாதே பறந்தும், இப்படி ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்௰தார். (தம்மாற் கருமமென்) தன்னுடைய உத்பத்தியால் ப்ரயோஜநங்கொள்வான் தானிறே; இவன் தன் ஸ்ருஷ்டியால் கொண்ட ப்ரயோஜநமென்? தான் ஶரீரபரிக்ரஹம் பண்ணின இத்தால் என்ன ப்ரயோஜநங் கொண்டானானான்? (தண்கடல்வட்டத்துள்ளீர் சொல்வீர்) எங்களைப் போலே த்யாத்ருத்தரன்றியே யிருந்திகோளாகிலும், ஶரீரபரிக்ரஹத்தைப் பண்ணி பகவத்பஜநம்பண்ணாதே இதரவிஷயப்ரவணராயிருக்கிறவர் களோடு ஸஜாதீயராய்ப் போருகிற நீங்கள்தான் சொல்லிக் காணுங்கோள். கடலுக்குட்பட்ட பூமியிலுள்ளாரடைய விசேஷஜ்ஞராயிரார்களிறே; விசேஷஜ்ஞரோடு அல்லாதாரோடு வாசியற எல்லார்க்கும் இத்வர்த்தம் ப்ரஸித்தமென்றிருக்கிறார்.

இரண்டாம் பாட்டு

தண்கடல்வட்டத்துள்ளாரைத் தமக்கிரையாத்தடிந்துண்ணும்*

திண்கழற்காலசுரர்க்குத் தீங்கிழைக்குந்திருமாலை*

பண்கள்தலைக்கொள்ளப்பாடிப் பறந்துங்குனித்துழலாதார்*

மண்கொளுலகிற்பிறப்பார் வல்வினைமோதமலைந்தே.

– அநந்தரம், விபூதியையழிக்கும் ஆஸுரப்ரக்ருதிகளை நிரஸிக்கும் ஸாமர்த்யத்தை அநுஸந்தித்து விக்ருதராகாதவர்கள் ஸம்ஸாரத்தில் மஹாபாபம் மேலிடப் பிறந்தவர்கள் என்கிறார்.

தண் – குளிர்த்தியை குணமாகவுடைய, கடல் – கடல்சூழ்ந்த, வட்டத்து – பூமியில், உள்ளாரை – உண்டானவர்களை, தமக்கு இரையா – தங்கள்  சரீரபோஷணமே ப்ரயோஜநமாக, தடிந்து – கொன்று, உண்ணும் – ஜீவிப்பாராய், (இந்தப்பாதகத்வத்துக்கு இட்ட), திண் – திண்ணிய, கழல் – வீரக்கழலை, கால் – காலிலேயுடையரான, அசுரர்க்கு – அஸுரர்க்கு, தீங்கு – (விநாசமாகிற) தீமையை, இழைக்கும் – நிரூபித்து, திருமாலை – (அத்தாலே) பிராட்டியுகப்புக்கு விஷயமானவனை, பண்கள் – பண்கள், தலைக்கொள்ள – மேலாம்படி, பாடி – பாடி, பறந்தும் – ஆகாசத்தே கிளம்பி, குனித்து – ஆடி, உழலாதார் – எங்குந்திரியாதார், மண்கொள் – மண்மிஞ்சின, உலகில்-லோகத்திலே, வல்வினை – கழிக்கவரிய மஹாபாபங்கள், மலைந்து – மேலிட்டு, மோத – தரையோடே எற்றும்படி, பிறப்பார் – பிறக்குமவர்கள். தடிதல் – கொல்லுதல்.

ஈடு: – இரண்டாம்பாட்டு. ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்கு உதவினது ஸூரிகளுக்கு உதவிற்றென்னலாம்படியன்றோ, ‘தங்களுக்கு இடருண்டு’ என்றறியாத ஸம்ஸாரிகள் விரோதியைப் போக்கும் நீர்மையை அநுஸந்தித்தால் அவிக்ருதராயிருப்பார், மஹாபாபம் அபி4ப4விக்கப் பிறக்கிறவர்கள் என்கிறார்.

(தண்கடல் இத்யாதி) – அஸுரர்கள் ப்ராணிகளை ஹிம்ஸித்து ஜீவிப்பர்களாயிற்று. இவர்களை ஹிம்ஸிக்கைக்கு இவர்கள் பண்ணின அபகாரம் என்? என்னில்,- (தண்கடல் வட்டத்துள்ளார்) ஏகதேஶவாஸித்வத்தால் வந்த பாந்தவமே ஹேதுவாகவாயிற்று நலிவது. ஸர்வே•வரனுக்கு ரக்ஷிக்கைக்கு ஹேது3யாதொன்று, அதுவேயாயிற்று இவர்களுக்கு ஹிம்ஸாஹேதுவும்; * _தே வயம் பவதா ரக்ஷ்யா:* – ஆர்த்தரான நாங்கள் ஆர்த்தரக்ஷணத்திலே அதிகரித்த தேவர்க்கு ரக்ஷ்யர். _உங்களை நமக்கு ரக்ஷிக்கவேண்டுகிறதென்? பண்ணின உபாஸநங்கொண்டு வளைக்கிறிகோளோ?_ என்ன,-அதுசொல்லில் தேவர்க்குக் கண்ணழிவு சொல்லி விடலாம்; *பவத்விஷய வாஸிந:*  – தேவருடைய விஷயத்திலே நாங்கள் கிடக்கிறமையுண்டே, இதில் சொல்லலாம் கண்ணழிவு இல்லையிறே. ‘நாம் காக்கிற எல்லைக்குப் புறம்புகாண்’ என்று சொல்லலாமாகில் சொல்லிக்காணும்.  _இவற்றின்புறத்தாளென்றெண்ணோ_ (திருவிருத்தம்-33) என்னக் கடவதிறே_. இவர்கள், தங்கள் கண்வட்டத்திலே உண்டு உடுத்துத் திரிகிற இதுவே ஹேதுவாக ஹிம்ஸிப்பர்களாயிற்று. (தமக்கு இரையா) தங்களுடைய சரீரபோஷணத்துக்காகவாயிற்று.  (தடிந்துண்ணும்) ஹிம்ஸித்து ஜீவிக்கிற. (திண்கழற்காலசுரர்க்கு) திண்ணிய வீரக்கழலைக் காலிலேயுடைய அஸுரவர்க்கத்துக்கு. அவன் ரக்ஷிக்கைக்கு *ஏதத் வ்ரதம் மம* என்று தீக்ஷித்திருக்குமா போலேயாயிற்று, இவர்கள் பரஹிம்ஸைக்கு தீக்ஷித்து வீரக்கழலிட்டிருக்கும்படி. அவனுடைய ரக்ஷணத்துக்கு ஈடான க்ருபையைத் தவிர்க்கிலும், இவர்கள் பரஹிம்ஸைக்கு இட்ட வீரக்கழலைத் தவிர்க்கவொண்ணாது. (தீங்கிழைக்கும் திருமாலை) – _ ‘இவர்களும் நம்மாலே ஸ்ருஷ்டரன்றோ’ என்று குடல்தொடக்கைப் பார்த்திருப் போமாகில், நம்விபூதி அழியும்;  இவர்களையழியச்செய்தாகிலும் விபூதியை நோக்கும் விரகு ஏதோ_ என்று, *மித்ரபாவேந* என்னும் தானும், *பவேயம் சரணம்ஹிவ:* என்னுமவளுங்கூட இருந்து மநோரதிப்பர்களாயிற்று. ‘களைபிடுங்கி ஆஸ்ரிதரை ரக்ஷித்தோமாம் விரகு ஏதோ?’ என்று இருவருங்கூட விசாரியா நிற்பர்கள். (பண்கள் தலைக்கொள்ளப்பாடி) (திருமாலைப் – பண்கள் தலைக் கொள்ளப்பாடி)  _ஸ்ரிய:பதியைப் பாடா நின்றார்கள்_ என்று, பண்கள்தான், ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து தலைக்காட்ட; அதாவது பண்சுமக்கப்பாடி என்றபடி. அன்றிக்கே, பண்கள் தலைமை பெறும்படி பாடி. தலையான பண்ணிலேப்பாடி. அன்றிக்கே, ப்ரீதியாலே அடைவுகெட்டு, ஒருபண்ணிலே எல்லாப்பண்ணும் வந்து மெய்க்காட்டிடும்படி என்னவுமாம். (பறந்தும் இத்யாதி) – கால் தரையில் பாவாதே கூத்தாடி, அதுவே யாத்ரை யாய்த் திரியாதார். பறந்துகொண்டு குனித்து இதுவே யாத்ரையாகாதார். (மண்கொள் இத்யாதி) வல்வினை – மலைந்து – மோத – மண்கொளுலகிற் பிறப்பார்.  பகவத்குணாநுபவம் பண்ணும் அத்தனை போதுமிறே அவர்கள், ‘நாம் அவிக்ருதராயிருக்க வேணும்’ என்று குறிக்கொண்டு இறுக்குவாதம் பற்றினாப்போலேயிருப்பது; சாதுர்த்திகம் வந்தெடுத்தெடுத்து எற்றப்புக்கால் இவனாற் செய்யலாவதில்லையே. ‘பிறப்பு’ என்கிற  இது – அல்லாத து:க்கங்களுக்குமெல்லாம் உபலக்ஷணம்.

மூன்றாம் பாட்டு

மலையையெடுத்துக்கல்மாரிகாத்துப் பசுநிரைதன்னை*

தொலைவுதவிர்த்தபிரானைச் சொல்லிச்சொல்லிநின்றுஎப்போதும்*

தலையினோடாதனந்தட்டத் தடுகுட்டமாய்ப்பறவாதார்*

அலைகொள்நரகத்தழுந்திக் கிடந்துழைக்கின்றவம்பரே.

– அநந்தரம், ஆர்த்தங்களான கோக்களை ரக்ஷித்தபடியை அநுஸந்தித்து ஸம்ப்ராந்தராகாதார் நரகவாஸிகளாய் க்லேசிப்பர் என்கிறார்.

மலையை – கோவர்த்தநத்தை, எடுத்து – எடுத்து, கல்மாரி – (ஆராதநபங்கமடியாக இந்த்ரனால் வந்த) கல்மாரியை, காத்து-தகைந்து, பசுநிரைதன்னை – (அபேக்ஷிக்கவும் அறியாத) பசுத்திரளை,  தொலைவு – விநாசம், தவிர்த்த – (அணுகாதபடி) நீக்கின, பிரானை – உபகாரகனை, சொல்லிச்சொல்லி – பலகாலுஞ்சொல்லி, எப்போதும் – ஸர்வகாலமும், நின்று – ஓவாதே நின்று, ஆதனத்தோடு தலை தட்ட – தரையோடு  தலை தட்டும்படியாக, தடுகுட்டமாய் – கீழது மேலாய், பறவாதார் – பறவாதார், அலைகொள் – அநேகது:கங்களையுடைத்தான, நரகத்து – மஹாநரகத்திலே, அழுந்தி – (கரையேறாதபடி) அழுந்தி, கிடந்து – கிடந்து, உழைக்கின்ற – க்லேசிக்கிற, வம்பர் – புதுமைமாறாதவர்கள்.

தொலைவு – நாஶம். ஆதனம் – நிலம். தடுகுட்டம் – கீழது மேலதாகை. வம்பர்-புதியராகை.  ‘துலைவு’ என்றுமாம்.

ஈடு: –  மூன்றாம்பாட்டு.   உபகாரமறியாத பசுக்களுக்கும் தத்ப்ராயர்க்கும் வந்த ஆபத்தை நீக்கின மஹாகுணத்தை அநுஸந்தித்து அவிக்ருதராயிருக்குமவர்கள் நித்யஸம்ஸாரிகளாய்ப் போவர்கள் என்கிறார்.

(மலையை இத்யாதி) இந்த்ரனுக்கு ஆட்டைக்கு ஒரு போஜநமாயிற்று இடையர் இடுவது; அவனுக்கு விருந்திடுகைக்கு இவர்கள் பாரிக்கிறபடியைக் கண்டு, நீங்கள் செய்கிற இது என்னென்பது?’ என்று கேட்க, ‘வர்ஷார்த்தமாக இந்த்ரனுக்குச் சோறிடுகையாயிருக்கும்’ என்ன, ‘தான்பிறந்துவளருகிற ஊரில் ஒரு த்ரத்யத்தை ஒரு தேவதாந்தரம் கொள்ளுகையாகிற இது மஹிஷீஸ்வேதம் பிறரதானவோபாதி’ என்று பார்த்து, ‘அத்வாகாச வாயனுக்கோ இடுவது? நமக்கும் மழைக்கும் காற்றுக்கும் இடந்தந்து பசுக்களுக்கும் புகலாய்ப் புல்லுந்தண்ணீருமுண்டாயிருக்கிற இம்மலைக்கன்றோ இடுவது?’ என்று அருளிச் செய்ய,  இடையராகையாலே ‘அப்படியே செய்வோம்’ என்று அவர்களும் இசைந்து ‘துன்னுசகடத்தாற்புக்க பெருஞ்சோற்றை’ (பெரியதிருமடல் 140) அம்மலையோடொக்கக் குவித்தார்கள்; அத்தையடைய, அப்படியேயிருப்பதொரு வடிவைக்கொண்டு *கோவர்த்தநோணஸ்மி* என்று  அமுதுசெய்து விட்டான்; உண்ண இருந்தவன் உண்ணப் பெறாமையாலும் பசிக்கோவத்தாலுமாகக் கல்வர்ஷத்தை வர்ஷிக்க, மலையையெடுத்துக் கல்மாரிகாத்து – *ரக்ஷகம்* என்று சொன்ன
மலைதன்னையெடுத்து ரக்ஷித்தான். வினைமுடுகினால் எதிரியுடைய ஆயுதந்தன்னைக் கொண்டு அவரை வெல்லுவர்களிறே வீரராயிருப்பார்; அப்படியே முன்னேநின்ற ‘கல்லையெடுத்துக் கல்மாரியைக் காத்தான்’  (திருநெடு.13). அவன் பண்ணின அபகாரத்துக்குத் தோளைக் கழிக்கவேண்டியிருக்க, ‘பாவி, பசிக்கோவத்தாலே செய்தானாகில் செய்வதென்? ஆஸுரப்ரக்ருதிகள்பக்கல் செய்யுமத்தை இவனோடு செய்யவொண்ணாது; தானேகையோய்ந்துபோகிறான்’ என்று அவனால்வந்த நலிவைக் கணக்கிட்டு ஏழுநாள் ஒருபடிப்பட மலையையெடுத்துக்கொண்டு நின்றானாயிற்று. (கல்மாரிகாத்து) நீராலே வர்ஷித்தானாகில் கடலையெடுத்துக் காக்குமித்தனை காணும்! (பசுநிரைதன்னை) ஆனையையும் ஸம்ஸாரிகளையும் ரக்ஷித்தது, தான் நித்யஸூரிகளை ரக்ஷித்தவோபாதியாம்படியிறே இடையருடையவும் பசுக்களுடையவும் நிலை. ‘பசுநிரை தன்னைத்தொலைவுதவிர்த்த’ என்பானென்? என்னில்; ரக்ஷித்தவர்களில் ப்ரதாநரைச் சொல்ல வேணுமே, பண்ணின உபகாரத்தை யறிந்திருப்பாரைச் சொல்லவேணுமே; இடையரிளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்களிறே. *க்ருதாநுகாராநிவ கோ3பி4ரார்ஜவே* என்கிறபடியே. (தொலைவுதவிர்த்த) பசுக்களும் இடையரும் மாளாதபடி ரக்ஷித்த. (பிரானை) அன்று அம்மழையிலும் காற்றிலும் அடியுண்டாரும் தாமாய், உதவிற்றும் தமக்காக வென்றிருக்கிறார். (சொல்லிச்சொல்லி) ஒரு ப்ரயோஜநத்துக்காகச் சொல்லிலிறே ஸக்ருதுச்சாரணம் அமைவது. (நின்று) ஒருகால் சொல்லி விடுகையுமன்றிக்கே, ஒரு காலத்திலே பலகால்சொல்லிவிடுகையு மன்றிக்கே. (எப்போதும்) ஆள்கண்டபோதாக வன்றிக்கே ஸர்வகாலமும். (தலையினோடு ஆதனம் தட்ட) – தலை தரையிலே தட்டும்படி. (தடுகுட்டமாய்ப் பறவாதார்) தடுகுட்டமாவது – குணாலை. அதாவது அடைவுகெடப்பண்ணும் விகாரம். கால் தரையில் பாவாதபடி ஆடாதார். (அலைகொள் இத்யாதி) து:3க்கோர்மிபரம்பரைகளை யுடைத்தான நரகத்திலே தரை காணவொண்ணாதபடியாக அழுந்தி க்லேசப்படுகிற. (வம்பர்) என்றுமொக்க யமபடர்க்குப் புதியராவர். வம்பு – புதுமை. முனநாள் நலிந்தால், பிற்றைநாள் வந்துதோற்றினால், _முனநாள் நாம் நலிந்தவன்_ என்று க்ருபைண்ணாதே, மோம்பழம் பெற்றாற்போலே, _வாரீரோ! உம்மை யன்றோ தேடித்திரிகிறது_ என்னும்படியாவர். புநரபி, (மலையையெடுத்துக் கல்மாரிகாத்து) ஆஸ்ரிதார்த்தமான ப்ரத்ருத்தியாமித்தனையே வேண்டுவது, அரியனசெய்தாலும் எளிதாய்த் தோற்றும். (பசுநிரைதன்னை) அரியனசெய்து ரக்ஷிக்கைக்குப் பண்ணும் ரக்ஷணத்தை விலக்கா தொழியுமத்தனையே வேண்டுவது; இத்தலையில் தரமில்லையென்கிறது. (பிரானை) நிலவு,  தென்றல்,  சந்தநம், தண்ணீர் போலே பரார்த்தமாயாயிற்று வஸ்து இருப்பது. (சொல்லி இத்யாதி) *அவாக்யநாதர:* என்றிருக்கடவ தத்த்வம் _அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான்_ (பெரியாழ்வார் திருமொழி 2-1-2) என்னும்படி அலவலையாய்த் தன்னைத் தங்களுக்காக ஓக்கிவைத்தால், தங்கள் ‘வாய்கொண்டு மானிடம்  பாடாதே’ (3-9-9), _என்தஞ்சனே – நஞ்சனே – வஞ்சனே என்னும் எப்போதும் என்வாசகம்_ (3-8-2) என்கிறபடியே ‘வாய் படைத்த ப்ரயோஜநம் பெற்றோம்’ என்று ஏத்தாதார். (அலைகொள் இத்யாதி) இந்நரகத்திலே போய்ப் புகுவர்களென்கிறார். தடுகுட்டமாய்ப் பறவாமைதானே நரகமென்கிறார். *யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா.* ஸ்வர்க்க நரகங்கள்தான் த்யக்திகள்தோறும் த்யவஸ்த்திதமாயிறே இருப்பது. தமக்கு இருந்தபடியாலே சொல்லுகிறார்.

நான்காம் பாட்டு

வம்பவிழ்கோதைபொருட்டா மால்விடையேழுமடர்த்த*

செம்பவளத்திரள்வாயன் சிரீதரன்தொல்புகழ்பாடி*

கும்பிடுநட்டமிட்டாடிக் கோகுகட்டுண்டுழலாதார்*

தம்பிறப்பாற்பயனென்னே சாதுசனங்களிடையே.

– அநந்தரம், அபிமதவிரோதி நித்ருத்தியால் வந்த ப்ரணயித்வத்திலே விக்ருதராகாதார் ஜந்மத்தாலே ப்ரயோஜநமென்? என்கிறார்.

வம்பு – செத்வியையுடைத்தாய், அவிழ் – மலர்ந்த, கோதை பொருட்டா – மாலையையுடையளான நப்பின்னைப்பிராட்டியைக் கிட்டுகையாகிற புருஷார்த்தமே ஹேதுவாக, மால் – மிகவும் பெரியதான, விடை ஏழும் – எருது ஏழையும், அடர்த்த – நெரித்துக்கொன்ற அத்தாலே, செம்பவளம் – சிவந்த பவளம்போலே, திரள் – திரண்ட, வாயன் – அதரத்தின் ஸ்புரத்தையையுடையனாய்க் கொண்டு, சிரீதரன் – (வீரஸ்ரீயோடே நின்ற) க்ருஷ்ணனுடைய, தொல் – ஸ்வாபாவிகமான, புகழ் – குணத்தை, பாடி – பாடி, கும்பிடு நட்டமிட்டாடி – தலைகீழாகக் கூத்தாடி, கோகு உகட்டு உண்டு – அக்ரமமான ஆரவாரத்தைச் செய்து, உழலாதார்தம் – திரியாதார் தங்களுடைய, பிறப்பால்-ஜந்மத்தால், சாதுசனங்கள் – ஸாத்த்விகஸங்கத்தின், இடையே – நடுவே, என் பயன் – என்ன ப்ரயோஜந முண்டு? கோகுகட்டுண்கை – ஆரவாரங்கொட்டுகை. ‘கோகு கொட்டு’ என்றும் பாடம்.

ஈடு: – நாலாம்பாட்டு. நப்பின்னைப்பிராட்டிக்காக எருதேழடர்த்து அவளோடே ஸம்ஸ்லேஷித்த ப்ரணயித்வகுணத்தை அநுஸந்தித்து ஈடுபடாதவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் நடுவே என்ன ப்ரயோஜநத்துக்காகப் பிறந்தார்கள்? என்கிறார்.

(வம்பு அவிழ் கோதைபொருட்டா) வம்பென்று – பரிமளம்.  அவிழ்கையாவது – அது ப்ரவஹிக்கையாய், கோதையென்று – மாலையாய், அத்தையிட்டு மயிர்முடியை லக்ஷிக்கிறது. நறுநாற்றம் கமழாநின்றுள்ள மாலையையுடையளென்றபடி. நப்பின்னைப் பிராட்டியை ஒப்பித்துநிறுத்தினார்களாயிற்று. _இந்த ருஷபங்களை வென்றார்க்கு இவளைக் கொடுக்கக்கடவோம்’ என்று – ஒப்பனையழகையும் மயிர்முடியையுங் கண்டவாறே தன்னைப்பேணாதே *தவாஸ்மி* என்று அவளுக்காகத் தன்னை ஓக்கினான். (மால்விடை) பெரிய ருஷபங்கள். வடிவில் பெருமைதன்னைக் கண்டபோதே பிற்காலிக்கும் படியாயிற்று இருப்பது. (ஏழும்) *ஸ்ரேயாம்ஸி பஹுவிக்நாநி* என்று சொல்லுகிறபடியே, ஒன்றிரண்டன்றிக்கே ஏழு விரோதிகளிறே. (அடர்த்த) – அநந்தரம் அணையப்புகுகிறது அவள்தோளையாகையாலே க்ரமப்ராப்தி பற்றாமே, ஒருகாலே ஊட்டியாக நெரித்தானாயிற்று. (செம்பவளத்திரள்வாயன்) – அபிமத விரோதி போகையாலே ஸ்மிதம் பண்ணினபடி. அன்றிக்கே, அவை திருத்தோளுக்கு இரை போராமையாலே ஸ்மிதம்பண்ணிநின்றபடியென்றுமாம். (சிரீதரன்) – இத்விடையேழையும்வென்று வீரலக்ஷ்மியோடே நின்ற நிலை. *பர்த்தாரம் பரிஷஸ்வஜே* – என்று அவள் அணைக்கும்படியாக நின்ற நிலை.  _*தம்  த்ருஷ்ட்வா* – ப்ரணயதாரையில் ரஸிகத்வமேயாயிற்று முன்புகண்டு போந்தது. அந்த போ4கத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்கவல்லர்_  என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன துஷ்ட ம்ருகத்தைக் கொன்றார், இன்ன ராக்ஷஸனைக் கொன்றார்’ என்று கூடப்போனவர்கள் சொல்லக்கேட்குமத்தனை முன்பு; அத்வளவன்றிக்கே, கண்ணாலேகண்டது இன்றாயிற்று. *ஶத்ருஹந்தாரம்* – தம் திருமேனியில் ஒருவாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே போகாமே எதிரிகளை முதலற மாய்த்து வந்தவரை. * மஹர்ஷீ௰ம் ஸுகாவஹம்* – பார்யை பக்கல் முகம்பெறுகைக்கு ப்ரஜையை யெடுத்துக்கொண்டு போவாரைப்போலே; ருஷிகளுக்கு விரோதிகளான ராக்ஷஸரைக் கொன்று, பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார். *பபூவ* – ராக்ஷஸருடைய க்ரௌர்யத்தையும் பெருமாள் ஸௌகுமார்யத்தையும் அநுஸந்தித்து, ‘என்புகுருகிறதோ?’ என்று ‘ஸத்தையில்லை’ என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள். *ஹ்ருஷ்டா* – தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. *வைதேஹீ*  – வீரவாசியறியுங் குடியிலே பிறந்தவளென்னுதல்; அன்றிக்கே, ‘ஒருவில்லை முறிக்க என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியேநின்று பதினாலாயிரம் ராக்ஷஸரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில் என்படுவரோ?’ என்று அவரை நினைத்தாளாகவுமாம். *பர்த்தாரம்* – * தாரா: பித்ருக்ருதா:* போலே, ‘ஐயர் நீர்வார்த்துக்கொடுத்தவர்’ என்று விரும்பிப்போந்தாள் முன்பு; இப்போதாயிற்று ‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; *ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்* என்றவளிறே. *பரிஷஸ்வஜே* – யுத்தவடு உள்ளவிடமெங்கும் திருமுலைத் தடத்தாலே வேதுகொண்டாள். அப்படியே அவள் அணைக்க நின்றபடி._ (தொல் புகழ்) – ஸ்வரூபாநுபந்தியான ப்ரணயித்வ குணத்தைப் பாடி; அந்த:புரபரிகரத்திலுள்ளாரைப்போலே; _மங்கையும் பல்லாண்டு_ (திருப்பல்லாண்டு-2) என்பர்களிறே. (கும்பிடு இத்யாதி) வணங்குவது, ஆடுவது. அஞ்சலியுடன் ஆடவுமாம்.  (கோகு உகட்டு) – அடைவுகேடு தலைமண்டையிட்டு. (உண்டு) – அதுவே  ஜீவநமாய். (உழலாதார்) – இதுவே யாத்ரையாக நடத்தாதார். (தம்பிறப்பால் இத்யாதி) கும்பிடு நட்டமிட்டாடிக் கோகுகட்டுண்டுழலுகிறவர்கள்நடுவே இவர்கள் பிறந்த இத்தால் தாங்கள் கொண்ட ப்ரயோஜநமென்? வைஷ்ணவர்கள்நடுவே இவர்கள் சரீரபரிக்ரஹம் பண்ணிற்று என்ன ப்ரயோஜநத்துக்காக? _திருப்புன்னைக் கீழே ஒருவர் இருக்குமிடத்திலே நம்முதலிகள் பத்துப் பேர் கூட நெருக்கிக் கொண்டிருக்கச் செய்தே, க்3ராமணிகள், மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலேசுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாபோலே காண்_ என்று பிள்ளைப்பிள்ளை.

ஐந்தாம் பாட்டு

சாதுசனத்தைநலியும் கஞ்சனைச்சாதிப்பதற்கு*

ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப்பிறந்த*

வேதமுதல்வனைப்பாடி வீதிகள்தோறும்துள்ளாதார்*

ஓதியுணர்ந்தவர்முன்னா என்சவிப்பார்மனிசரே?

– அநந்தரம், ஆஸ்ரிதவிரோதிநிரஸநார்த்தமாகிற அவதாரத்துக்கு <டுபடாதார் என்ன ஜபாதிகள் பண்ணுவது? என்கிறார்.

சாதுசனத்தை – ஸாத்த்விக ஜநமான தேவகீ வஸுதேவாதிகளை, நலியும் – நலியும், கஞ்சனை – கம்ஸனை, சாதிப்பதற்கு – நியமிக்கைக்காக, ஆதி – ப்ரதாநமாய், அம் – அப்ராக்ருதமான,  சோதி – தித்யதேஜஸ்ஸையுடைய, உருவை – விக்ரஹத்தை, அங்கு – பரமபதத்தில் வைத்த கணக்கிலே, இங்கு வைத்து-இத்விடத்திலும் வைத்துக்கொண்டு, பிறந்த-பிறந்தவனாய், வேதம் – ( _அஜாயமாந:_ இத்யாதியாலே) வேதப்ரதிபாத்யமான அவதாரவைலக்ஷண்யத்தையுடையனான, முதல்வனை – ப்ரதாநபூதனை, பாடி – (இத்வைலக்ஷண்யத்தைப்) பாடி, வீதிகள்தோறும் – எல்லா வீதியிலும், துள்ளாதார் – ஆடாதார், ஓதி – சாஸ்த்ராப்யாஸயுக்தரான, உணர்ந்தவர் முன்னா – ஜ்ஞாநாதிகர் ஸந்நிதியிலே, மனிசர் – மநுஷ்யரைப்போலே, என் சவிப்பார் – என்ன ஜபம்பண்ணுவது? மநுஷ்யருமல்லர், ஜபமும் நிரர்த்தகமென்று கருத்து.

ஈடு: – அஞ்சாம் பாட்டு. ஆஸ்ரிதவிரோதிநிரஸநார்த்தமாக அஸாதாரண தித்ய ரூபவி–ஷ்டனாய்க்கொண்டு திருவவதாரம்பண்ணின குணத்தை அநுஸந்தித்தால் விக்ருதராகாதார் அவஸ்துக்கள் என்கிறார்.

(சாதுசனத்தை நலியும்)  ஸாதுஜந மென்றது –  ஸ்ரீவஸுதேவரையும், தேவகியாரையும். *பிதரம் ரோசயாமாஸ* என்று தான் அவதரிக்க நினைத்த விஷயத்தையிறே அவன் நலிந்து நெடுநாள் சிறையிட்டுவைத்தது. *பரித்ராணாய ஸாதூநாம்* இத்யாதி. கம்ஸனை ஸாதிக்கைக்காக. (ஆதியஞ்சோதியுருவை) – இத்வருகுண்டான கார்யவர்க்கத்துக்கெல்லாம் மூத்தாய், ஜ்ஞாநாதிகுணங்களுக்கு ப்ரகாசகமாய், ‘குணஸமுதாயமே விக்ரஹம்’ என்று ப்4ரமிப்பார்க்கும் ப்4ரமிக்கலாம்படியிறே திருமேனிதான் இருப்பது. (அங்குவைத்து இங்குப் பிறந்த) அங்கு இருந்தபடியே வைத்துகொண்டு இங்கேவந்து பிறந்த. *ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்ட்டாய*. நித்யஸூரிகள் அநுபவிக்கிறபடியே லீலாவிபூதியிலுள்ளாரும் அநுபவிக்கும் படியாகவிறே அவதரித்தது. படியென்று – திருமேனிக்குப் பேர்;  _படிகண்டறிதியே_ (முதல்.திரு.85) என்றும், _செத்விப்படிக்கோலம்_ (இரண்.திரு.82) என்றும் அருளிச்செய்துவைத்தார்களிறே. ‘பல  படிகளாலும் இவர்களை நாம் ரக்ஷிக்கவேணும்’ என்று அவன் அவதரித்தால் ஒரு படியாலும் திருந்தாதபடியிறே இவர்கள் படியிருப்பது. * அஜாயமாநோ பஹுதா4விஜாயதே*, *ந பூ4தஸங்க4ஸம்ஸ்த்தாநோ தே3ஹோணஸ்ய பரமாத்மந:*,  *ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி:,* *கல்பேகல்பேஜாயமாநஸ் ஸ்வமூர்த்யா*, _முன்னைவண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற பின்னைவண்ணம் கொண்டல் வண்ணம்_ (திருமொழி 4-9-8) என்றும், _பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும்புறம், போலுநீர்மை பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலாம் நீலநீர்மை_ (திருச்சந்த. 44) என்றும் சொல்லுகிறபடியே பல படிகளாலேயிறே திருவவதரிப்பது; பல விக்ரஹங்களாலே யென்றபடி. இப்படி பிறவா நின்றாலும், *நைஷ கர்ப்பத்வமாபேதே ந யோந்யாமவஸத் ப்ரபு:* என்கிறபடியே கர்ப்பத்தில் அந்வயமில்லை. ‘இதுதான் கூடுமோ?’ என்னவொண்ணாதிறே; இக்ஷ்வாகு வம்ஶத்திலே யுவநாஸ்வன் என்பானொருவன் மந்த்ரபூதமான ஜலத்தைப் பாநம்பண்ண, அவன்வயிற்றிலே கர்ப்பமுண்டாயிற்றிறே ஒரு ஶக்தி விஶேஷத்தாலே; மிதுநமாய் ஸம்ஸர்க்கித்துப் பிறந்தமையில்லையிறே அங்கு; அப்படியே இங்கும் ஸர்வசக்தியோகத்தாலே இத்வர்த்தம் உபபந்நமாகத் தட்டில்லையிறே. இதில் ப்ரமாணம் *அஜாயமாந:* என்ற ஸ்ருதியிறே; அத்தைச் சொல்லுகிறார். (வேத முதல்வனை என்று) – வேதைகஸமதிகம்யனைப் பாடி, வேதங்களாலே முதல்வனாக ப்ரதிபாதிக்கப்பட்டவனைப் பாடி. ‘பிறந்தவாறு’ (5-1-1) ‘எத்திறம்’  (1-3-1)  என்னா, வளர்ந்தவாற்றில் போக மாட்டாதேயிறே இருப்பது. ‘எத்திறம்’  என்றால்; பின்னையும் ‘எத்திறம்’ என்னுமித்தனை; *தஸ்ய தீரா: பரிஜாநந்தியோநிம்* என்கிறபடியே அத்தைச் சுற்றும் சுற்றும் வாராநிற்குமத்தனை; (வீதிகள்தோறும் துள்ளாதார்) – மிளகாழ்வான் வார்த்தையைநினைப்பது. மனிசருள்ள பெருந்தெருவே யன்றிக்கே குறுந்தெருவோடு நெடுந்தெருவோடு வாசியற ஆடாதார். இப்படி ஆடாதாருமாய் அறிவுகேடருமா யிருப்பாரையோ நீர் நிந்திப்பது? என்னில்-(ஓதியுணர்ந்தவர்முன்னா) – கற்றுக் கேட்டு ஸர்வஜ்ஞராயிருக்கிறவர்கள் முன்னாக. *விதுஷோணதிக்ரமே தண்டபூய ஸ்த்வ* மிறே. (என்சவிப்பார்) – அவர்களிருந்து செவிப்பறை பறைந்து ஜபிக்கிறது என் என்பது? என்னுதல். (என் சவிப்பார்)  – அவர் சாபாநுக்ரஹஸமர்த்தரோ? என்னுதல். (மனிசரே) அவர்கள் சாஸ்த்ரவஸ்யராய் மநுஷ்ய ஜந்மத்தில் பிறந்தமையுண்டாகமாட்டாது என்னுமதிலும் நிஸ்சங்கை பண்ணுகிறார். -ஸ(மானிடவரல்லரென்று என்மனத்தே வைத்தேனே) (திருமொழி 11-7-9) மநுஷ்யஜந்மத்துக்குப் பலம் – பகவத் ஸமாஸ்ரயணமாயிருக்க, அது இல்லாதார் மநுஷ்யரேயல்லரென்கிறார்.  ஸ‘என் மனத்தே வைத்தேனே’ இனி ஈஸ்வரன்க்ருபையாலும் செய்யலாவதில்லை; _செம்பிலும் கல்லிலும் வெட்டிற்று_ என்னுமாபோலே. ஈஸ்வரன் கைவிட்டாலும் விடாத  என் நெஞ்சிலும் அவர்களை உபேக்ஷித்தேன் என்கிறார்.

கீழில் திருவாய்மொழியிலே ததீயத்வாகாரத்தாலே இத்விபூதியாக உத்தேஸ்யமென்று அநுபவித்தார்; இத்திருவாய்மொழியிலே, இத்விபூதிதன்னிலே, _எண்ணாத மானிடத்தை யெண்ணாதபோதெல்லாமினியவாறே_ (திருமொழி 11-6-7) என்றும் _பேராளன்பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே_
(திருமொழி 7-4-4) என்றும் சொல்லுகிறபடியே சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளாநின்றார்; இங்குச் செய்ததாகிறது என்? என்னில்;  – இத்வாகாரமும் கிடக்கச்செய்தே, கீழ் – உபாதேய மென்று அநுஸந்தித்தார்; ததீயத்வாகாரமே தோற்றி, ஆகாராந்தரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே. _இவர்தாம் எல்லார்படிகளுமுடையராயிறே இருப்பது, முக்தர்படியையுடையரென்னுமிடம் சொல்லிற்று, கீழ்த்திருவாய்மொழியாலே; முமூக்ஷுக்கள்படியை யுடையரென்னுமிடம் சொல்லிற்று, இத்திருவாய்மொழியாலே_ என்று அருளிச்செய்வர்.

ஆறாம் பாட்டு

மனிசரும்மற்றும்முற்றுமாய் மாயப்பிறவிபிறந்த*

தனியன்பிறப்பிலிதன்னைத் தடங்கடல்சேர்ந்தபிரானை*

கனியைக்கரும்பினின்சாற்றைக் கட்டியைத்தேனையமுதை*

முனிவின்றியேத்திக்குனிப்பார் முழுதுணர்நீர்மையினாரே.

– அநந்தரம், அவதாரத்திலும் அவதாரகந்தத்திலுமுண்டான போக்யதையை அறிந்து விக்ருதரானவர்களை ஸர்வஜ்ஞரென்கிறார்.

(ராமக்ருஷ்ணாதி ரூபேணவும் உபேந்த்ராதிரூபேணவும் மத்ஸ்யகூர்மாதி
ரூபேணவும்) மனிசரும் – மநுஷ்யரும், மற்றும் – மற்ற தேவஜாதியும், முற்றுமாய் – அல்லாத திர்யக்ஜாதியுமெல்லாமாய்க்கொண்டு, மாயம் பிறவி பிறந்த தனியன் – ஆஸ்சர்யமான அவதாரங்களைப் பண்ணி (ஸஜாதீயனாயிருக்கச்செய்தே) அத்யந்தத்யாத்ருத்தனான அத்விதீயனாய், பிறப்பிலிதன்னை- (இந்தத்யாத்ருத்திக்கு ஹேதுவான கர்மாதீந) ஜந்மராஹித்யத்தையுடையனாய், (இத்வவதாரார்த்தமாக)  தடங்கடல் – இடமுடைத்தான க்ஷீராப்தியிலே, சேர்ந்த – கண்வளர்ந்தருளும், பிரானை – உபகாரகனாய், கனியை – (கண்டபோதே நுகரவேண்டும்) கனியும், இன் – கோதற்ற இனிய, கரும்பின் சாற்றை – கருப்பஞ்சாறும், கட்டியை – (ஸர்வதோமுகமான ரஸத்தையுடைய) அதின் கட்டியும், தேனை – (ஸர்வரஸஸமவாயமான) தேனும், அமுதை – (போக்தாவை நித்யனாக்கும்) அம்ருதமும்போலே போக்யபூதனானவனை, முனிவு இன்றி – (அவதாரத்தில் நிகர்ஷபுத்தியாகிற)த்வேஷம் இன்றியே, ஏத்தி – (அவதாரப்ரயுக்த
—லஸௌலப்யாதிகளை) ஸ்தோத்ரம்பண்ணி, குனிப்பார் – (அந்தப்ரீதியாலே) ஸஸம்ப்ரமந்ருத்தம்பண்ணுவார், முழுது உணர் – ஸகலசாஸ்த்ரங்களையும் அறிந்த, நீர்மையினார் – ஸ்வபாவத்தையுடையவர்கள்.

‘கனியை’யென்று தொடங்கி, ‘தேன்’ என்னுமளவும் – போஜ்யமாயும், பேயமாயும், காத்யமாயும், லேஹ்யமாயுமுள்ள சதுர்விதபோஜ்யத்தையுஞ் சொல்லிற்றாகவுமாம்.

ஈடு: – ஆறாம்பாட்டு. ஈச்வரபோக்யதையை அநுஸந்தித்தால் விக்ருதராவர்களாகில், அவர்கள் எல்லாவறிவின் ப2லமும் கைவந்தார் என்கிறார்.

(மனிசரும் மற்றும் முற்றுமாய்) மநுஷ்யர், தேவர்கள், அநுக்தமான திர்யக்ஸ்த்தாவரங்க ளெல்லாமாய். *ஸுரநரதிரச்சாமவதரந்*. (மாயப்பிறவிபிறந்த)  ஒரு ஹேதுவின்றிக்கே யிருக்கச் செய்தே, ஹேதுவுடையார்க்கும் அத்வருகே பிறக்க வல்லவன். அகர்மவஸ்யனாயிருந்து கர்ம வஸ்யரும் பிறக்கமாட்டாத ஜந்மத்திலே வந்துபிறக்கை: ஆஸ்சர்யமான அநேகாவதாரங்களைப் பண்ணுமவன்.  (தனியன்) இப்படி அவதரித்தால், போமன்று உடுத்த ஒலியலோடேயாயிற்றுப் போவது. இத்வவதார பரம்பரைகளில் ராமாவதாரமொன்றிலும் ‘நாலிரண்டு பேர் கூடப்போனார்கள்’ என்று கேட்டோமித்தனையிறே. ‘இவன் நமக்காகப் பிறந்தான்’ என்று நினைக்கைக்கும் ஒருவருமில்லாதிருக்கிறதிறே; ‘பிறந்தான்’ என்றதுதன்னையே குற்றமாக உபபாதிப்பாரேயிறே  உள்ளது.  (பிறப்பிலி தன்னை)  இப்படிபரார்த்தமாக அவதரியா நின்றால், அது ப2லபர்யந்தமன்றிக்கேயொழிந்தாலும், ‘நாம் வருந்தச்செய்தேயும் இது பலித்ததில்லையே!’ என்று கைவாங்குகையன்றிக்கே, ‘இவர்களுக்கு ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்று பிறந்திலனாய்ப் பிறக்கைக்கு ஒருப்பட்டானாயிருக்கும். (தடங்கடல்சேர்ந்த பிரானை) இன்னமும் பிறக்கைக்கு தபஸ்சர்யை பண்ணுகிறபடி. திருப்பாற்கடலிலே அநிருத்தரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார கந்தமிறே. ‘வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தி’றே (திருப்பாவை-6). இவர்கள் ‘பிறவியென்னும் பெருங்கடலை’ப் (திருமொழி 8-9-8) போக்குகைக்கிறே அவன் கடலிலே வந்து கிடக்கிறது. (கனியை) – கடல் பழுத்தபடி, பாலிலே பழுத்தபடி. அங்குச்சாய்ந்துகிடக்கிற போதை வடிவழகால் வந்த போக்யதை. *ஸர்வரஸ:* என்று ஒரு சொல்லாலே சொல்லமாட்டார்; எல்லாம் சொல்லப்புக்கால் சொல்லித் தலைக்கட்டமாட்டார்; ப2லிதாம்சத்திலே சிலவற்றைச் சொல்லுமித்தனையாகையாலே ‘கனியை’ என்கிறார். கண்டபோதே நுகரலாம்படியாய், அதுதான் கோதுகழிந்த ரஸாம்சமாய், அதுதன்னைத் திரட்டினதாய், அதுதான் பருகலாம்படியாய், போக்யதையேயன்றிக்கே சாவாமல் காக்குமதாயிருக்கை. கீழில் திருவாய் மொழியில் ‘நலங்கடலமுதமென்கோ (3-4-5)’ என்று தொடங்கி அநுபவித்த போக்யதை பின் நாடினபடி. கண்டபோதே நுகர வேண்டும் கனியும், கோதற்ற இனிய கருப்பஞ்சாறும், ஸர்வதோமுகமான ரஸத்தையுடைத்தான கட்டியும், ஸர்வரஸஸமவாயமான தேனும், போக்தாவை நித்யனாக்கும் அம்ருதமும்போலே போக்யனானவனை. (முனிவின்றியேத்திக்குனிப்பார்)  முனிவின்றி – பகவத்குணங்களைக் கேட்டால் அஸூயைபண்ணாதே ஏத்துமவர்கள். தன்னோட்டையானொருவனுக்கு ஓர் உத்கர்ஷம் சொல்லுகையன்றிக்கே, ஈஸ்வரனுக்கு ஓர் உத்கர்ஷம் சொன்னால் அது பொறாதேயிறே இருப்பது; இம்மஹாகுணத்தில் ஒரு பொறாமை கொண்டாடாதே; குணம்கண்டவிடத்தே தோஷாவிஷ்கரணம் பண்ணுவர்கள் அநேகரிறே. *இதந்து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே*. _நம்முடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீலென்றிருந்திலை; உன்தனையதிகாரிகளைக் கண்டிலோம், இன்னம் சொல்லிச் சொல்லாதவையும் சொல்லும்படிகிட்டவாராய்_ என்றானிறே. சங்கநிதி பத்மநிதிகளைக் கொண்டு வந்து கொடுத்து, கடலைச்செறுத்துப் படைவீடுசெய்து, தங்களெதிரிகளோடே புறப்பட்டு மாரிலே அம்பேற்று, இப்படி ரக்ஷியாநின்றால், சோறு சுட்டவாறே _இது ஒரு க்ருஷ்ணனும், நடுவில் பெருங்குடியாட்டமும், என்னென்பதுதான்?’ என்னாநிற்பர்கள். *தா3ஸ்யமைஸ்வர்யவாதே3ந* – _ ‘ரக்ஷகத்வம்’ என்று ஒரு த்யபதேசமாத்ரமாய் இவர்களுக்கே தாழ்வு செய்து திரிந்தேன். நல்லது கண்டால் ‘எனக்கு’ என்று இராதே பகுத்திட்டு ஜீவித்துப் போந்தேன்: இங்ஙனேயிருக்கச் செய்தே இவர்கள் பண்ணும் பருஷபாஷணங்களை யெல்லாம் பொறுத்துப்போந்தேன்’ _ என்றானிறே. ஒரு மணி கெட்டு ஆரேனுங்கொண்டுபோக, க்ருஷ்ணன்தலையிலே ஏறிட்டு, நம்பிமூத்தபிரானும் இதுசுட்டித் தீர்த்தயாத்ரைபோக வேண்டும்படியாயிற்றே. அன்றிக்கே, ‘முனிவாகிறது’ – முநித்வமாய், அதின்றிக்கேயொழிகையாவது கலங்குகையாய், அடைவுகெட்டு ஏத்திக் குனிப்பாரென்னவுமாம்’ என்று அருளிச் செய்வர். (முழுதுணர் நீர்மையினாரே) *ஏகவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநம்* என்றபடி அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தார்களாகிறார்: அவர்கள் ஸர்வஜ்ஞர்களாகிறார்: ஜ்ஞாந பலமான இது உண்டான போதே அவர்களுக்கு ஜ்ஞாநாம்சத்தில் இல்லாததில்லையிறே. அவர்கள் சரீரத்தில் பிறந்த விகாரத்தைக் கொண்டே அவர்களுடைய ஜ்ஞாநாதிக்யம் அறியலாம். முழுதையும் உணர்ந்த ஸ்வபாவத்தை யுடையவர்களாகிறார்கள்.

ஏழாம் பாட்டு

நீர்மையில்நூற்றுவர்வீய ஐவர்க்கருள்செய்துநின்று*

பார்மல்குசேனையவித்த பரஞ்சுடரைநினைந்தாடி*

நீர்மல்குகண்ணினராகி நெஞ்சங்குழைந்துநையாதே*

ஊன்மல்கிமோடுபருப்பார் உத்தமர்கட்கென்செய்வாரே?

– அநந்தரம், ஆஸ்ரிதபக்ஷபாதத்துக்கு ஈடுபடாதார் பாகவதர்க்கு எதுக்கு உறுப்பு? என்கிறார்.

நீர்மை இல் – (_பந்துக்களோடே புஜிக்கவேணும்_ என்கிற) நீர்மை இல்லாத, நூற்றுவர் – துர்யோதநாதிகள் நூற்றுவரும், வீய – நசிக்கும்படி, ஐவர்க்கு – பாண்டவர்களைவர்க்கும், அருள்செய்து – நிரவதிக க்ருபையைப் பண்ணி, நின்று – _க்ருஷணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாஸ்ச பாண்டவா:_ என்னும்படி அவர்களுக்கு ஸர்வவிதப3ந்துவுமாய்) நின்று, பார் மல்கு – பூமி நிரம்பும்படி விஞ்சின, சேனை – சேனையை, அவித்த – (விளக்கு அவித்தாற்போலே) நசிப்பித்த, பரஞ்சுடரை-நிரவதிகௌஜ்ஜ்வல்யயுக்தமான வடிவழகையுடையவனை, நினைந்து – (இக்குண ஸௌந்தர்ய வித்தராய்க் கொண்டு) நினைந்து, ஆடி – (ப்ரேம பரவசராய்) ஆடி, நீர்மல்கு – ஆனந்தாஸ்ரு பூர்ணமான, கண்ணினராகி – கண்களையுடையராய், நெஞ்சம் – (நினைத்த) நெஞ்சு, குழைந்து – கட்டுக்குலைந்து, நையாதே – (ரோமாஞ்சாதிகளாலே)
–திலசரீரராகாதே, ஊன்மல்கி – மாம்ஸோத்தரமாய், மோடு பருப்பார் – பிடரியிற் பிசல்பருக்கும்படி உடம்பைவளர்ப்பார், உத்தமர்கட்கு – (ஜ்ஞாநாதிகராய்) உத்தமரான பாகவதர்களுக்கு, என் செய்வார் – ஏது செய்கைக்கு உறுப்பாவர்? அநுபயுக்த ஸ்வபாவரென்று கருத்து.

ஈடு: – ஏழாம்பாட்டு. ஆஸ்ரிதபக்ஷபாதமாகிற மஹாகுணத்தில் ஈடுபடாதே சரீர போஷணபரராய்த் திரிகிறவர்கள் வைஷ்ணவர்களுக்கு எதுக்கு உறுப்பாகப் பிறந்தார்கள்? என்கிறார்.

(நீர்மை இத்யாதி) முற்பட  ஸஞ்ஜயனைப் போகவிட்டு அநந்தரமாகத் தான்போய் ‘இவர்களையும் அவர்களையும் சேரவிடலாமோ?’ என்று பார்த்தவிடத்து, அவர்கள் ஒரு படியாலும் இசையாதே, ‘எங்கள் ப3ந்துக்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவிப்பதில்லை; அவர்களுக்கு ஒரு குடியிருப்பும் கொடோம்; நாங்கள் பலராகையாலே பூமிப்பரப்படங்க எங்களுக்கே இடம் போருமத்தனை; அவர்களுக்கு க்ருஷ்ணனும் த4ர்மமும் உண்டு; அதுக்குப் ப2லமான ஸ்வர்க்கத்தை யநுபவிக்கக்கடவர்கள்; நாங்கள் பூமியை ஆளுவோம்’ என்று வெட்டிதாக வார்த்தை சொல்ல, அவர்கள் நெற்றியைக்கீறிப் பார்த்தவிடத்தில் ரத்தம் புசியாமையாலே ‘அவர்களை அழியச்செய்வோம்’ என்று பார்த்தான். பாண்டவர்களை ரக்ஷிக்கைக்கு ஹேது – ‘நாங்கள் பந்துக்களையொழிய ஜீவிப்பதில்லை’ என்றது: *யேஷாமர்த்தே காங்க்ஷிதந்நோ ராஜ்யம் போகாஸ் ஸுகாநிச* – நாட்டார் அர்த்தம் தேடுகிறதும் ராஜ்யங்கள் ஸம்பாதிக்கிறதுமெல்லாம் ப3ந்துக்களும் தாங்களும்கூட ஜீவிக்கைக்கன்றோ? ஆனபின்பு, நாங்கள் ப3ந்துவதம்பண்ணி ஜீவிக்கப்பார்க்கிலோம் என்னும் நீர்மையாலேயாயிற்று. அவர்கள் இங்ஙனன்றிக்கே ‘இவர்களுக்கு ஒரு கோல்குத்துநிலமும் கொடுப்பதில்லை; அவர்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவியோம்’ என்ன, ‘இவர்கள் ஆஸுரப்ரக்ருதிகளாயிருந்தார்கள்; இவர்களை அழியச் செய்யாவிடில் விபூ4தியும் அழியும்’ என்று பார்த்து அதுக்கீடாக ஒருப்பட்டான். ஒரு படியாலும்  ஒரு நீர்மையில்லாத துர்யோதநாதிகள் முடிந்துபோம்படிக்கு ஈடாக. (ஐவர்க்கு அருள்செய்துநின்று) – தானல்லது தஞ்சமில்லாத பாண்டவர்களுக்கு. *க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாச்ச பாண்டவா:* என்றிருக்குமவர்கள். (நின்று) *யஸ்யமந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்த்தந:* என்று இவர்களிழந்த பரிகரமெல்லாம் தானேயாய் நின்று. (பார்மல்குசேனையவித்த) பூமி நெளியும்படிக்கு ஈடாக மிகைத்து வந்த ஆஸுரவர்க்கத்தை, விளக்கவித்தாப்போலே  பிணங்காணவொண்ணாதபடி முடித்துப்போகட்ட. (பரஞ்சுடரை)  ‘ஆயுதமெடுக்க வொண்ணாது’ என்றார்களே; அதுக்காக ஸேநாதூளியும், முட்கோலும், சிறுவாய்க் கயிறும், தேருக்குக்கீழே நாற்றின திருவடிகளும், சிறு சதங்கையுமாய் ஸாரத்த்யவேஷத்தோடே  நின்றநிலையைச் சொல்லுகிறது. (நினைந்தாடி) அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அநுஸந்தித்து, அத்வநுஸந்தாநம் இருந்தவிடத்தே இருக்க வொட்டாமையாலே ஆடி (நீர்மல்குகண்ணினராகி) *ஆஹ்லாத—த நேத்ராம்பு:* என்கிற படியே, கண்ணநீரையிட்டு நிரூபிக்கவேண்டும்படியான கண்ணையுடையராய். (நெஞ்சம் குழைந்து) (சரீரசைதில்யமேயன்றிக்கே ஹ்ருதயசைதில்யமுமுடையராய் நைந்துபோகாதே. (ஊன்மல்கிமோடுபருப்பார்) மாம்ஸளமாம்படி சரீரத்தைப் பருக்கப்பண்ணி, கனத்தபிசல்களும் நெடிய வலிய சரீரங்களுமாயிருக்குமவர்கள். (உத்தமர்கட்கு என்செய்வாரே) பகவத் குணாநுஸந்தாநத்தாலே மெலிகின சரீரத்தை யுடையராயிருந்துள்ள மஹாபுருஷர்களுக்கு  ‘போதயந்த: பரஸ்பரம்’ பண்ணுகைக்கு உசாத் துணையாவர்களோ? ஜந்மத்துக்கு ப்ரயோஜநம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவே என்கிறார். ஈஸ்வரன், தன்னையும் தன்விபூதியையும் ததீயசேஷமாக்கியிறே வைப்பது. ஆயிரத்தளியிலே ராஜா இருக்கச் செய்தே, பெரிய நம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான்மடியிலே சாய்ந்துகிடக்கச்செய்தே பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அத்வளவிலே ‘ஒருவருமில்லாதாரை ப்ரதிபத்தி பண்ணக் கடவோம்’ என்று திரிகிறார் சிலர் அங்கே வந்து ஆழ்வானைக்கண்டு ‘ஒருவனுண்டிறே’ என்று போகப்புக, ஒருவரையும் ஒருகுறை சொல்லியறியாதவன், ‘வாரிகோள் மாணிகாள்! வைஷ்ணவனுமாய் ஒருவனுமில்லாதானொருவனைத் தேடி ப்ரதிபத்திபண்ண இருக்கிறிகளோ நீங்கள்? ஈஸ்வரனும் ஈஸ்வரவிபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சித்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாயிருப்பானொருவனை நீங்கள் எங்கே தேடுவிகோள்?’  என்றானாம்.

எட்டாம் பாட்டு

வார்புனலந்தண்ணருவி வடதிருவேங்கடத்தெந்தை*

பேர்பலசொல்லிப்பிதற்றிப் பித்தரென்றேபிறர்கூற*

ஊர்பலபுக்கும்புகாதும் உலோகர்சிரிக்கநின்றாடி*

ஆர்வம்பெருகிக்குனிப்பார் அமரர்தொழப்படுவாரே.

– அநந்தரம், திருமலையிலே அர்ச்சாவதாரமாய் ஸுலபனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மைக்கு ஈடுபட்ட ப்ரத்ருத்திகளையுடையவர்கள் ஸூரிகளாலே ஆதரிக்கப்படுவார்கள் என்கிறார்.

வார்புனல் – வீழாநிற்கிற புனலையுடைத்தாய், அம் – தர்சநீயமாய், தண் – குளிர்ந்த, அருவி – அருவிகளையுடைய, வடக்கு – (தமிழுக்கு) வடவெல்லையான, திருவேங்கடத்து – பெரிய திருமலையில் நிற்கிற, எந்தை – ஸ்வாமியுடைய, பேர் – (ஸ்வரூபரூபகுணவிபூதிவிஷயமான) திருநாமங்களை, பல – பலவும், சொல்லி – சொல்லி, பிதற்றி – அடைவுகெடப் பிதற்றி, (அத்தாலே), பிறர் – (பகவத்ப்ரேமமில்லாத)அந்யர், பித்தரென்று – பித்தரென்று, கூற – சொல்லும்படியாக, பலஊர் – (மநுஷ்யர்நடையாடுகிற) பல ஊர்களிலே, புக்கும் – புக்கும், புகாதும் – மநுஷ்யர்நடையாடாதவிடங்களிலும்,  உலோகர் சிரிக்க – லௌகிகர் சிரிக்கும்படியாக, நின்று – (பரவசராய்க்கொண்டு) நின்று, ஆடி – நடையாடி, ஆர்வம் பெருகி – அபிநிவேசம் விஞ்சி, குனிப்பார் – ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார், அமரர் – நித்யாநுபவபரான ஸூரிகளாலே, தொழப்படுவார் – ஆதரிக்கப்படுவார்கள்.

ஈடு: – எட்டாம்பாட்டு.  திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு   ஆர்? நித்யஸூரிகளன்றோ அவர்களைக்கொண்டாடுவார்கள்? என்கிறார்.

(வார்புனல் இத்யாதி) ஒழுகாநின்றுள்ள புனலையுடைத்தாய், தர்சநீயமாய், ஸ்ரமஹர மாயிருந்துள்ள அருவிகளையுடைத்தான வடக்குத்திருமலையிலே வந்துநின்றான் என்ஸ்வாமி. (பேர் இத்யாதி) அவனுடைய திருநாமம் பலவற்றையும் அக்ரமமாகச் சொல்லி. தாம் _ஒழிவில்காலத்_திலும் (3-3) _புகழுநல்லொருவ_(3-4)னிலுமாகச் செய்தவற்றைச் சொல்லுகிறார். (பலசொல்லி) – ஸ்வரூப ரூப குணங்களுக்கு வாசகமாயும், விபூதிக்கு வாசகமாயுமுள்ளவற்றை அடையப் பேசி. (பித்தரென்றே பிறர்கூற) பகவத்குணங்களைக் கேட்டால் அவிக்ருதராயிருக்குமவர்கள், ‘பொருவில்சீர்ப்பூமியென்கோ’ (3-4-1) என்னா, ‘கண்ணனைக்கூவுமாறே’ (3-4-1) என்பது; ‘குன்றங்களனைத்துமென்கோ’ (3-4-2) என்னா, ‘பங்கயக் கண்ணனையே’ (3-4 -2) என்பது; ‘ஞாலமுண்டுமிழ்ந்தமாலையெண்ணுமாறறிய மாட்டேன் யாவையும் யவருந்தானே’ (3-4-9) என்பதாகாநின்றார்; – ‘இவர் ப்ராந்தரோ?’ என்று தம்மைப் பிறர் சொல்லுமாபோலே, ‘இவர்கள் ப்ராந்தரோ’வென்று சொல்லும்படி. _அத்தா அரியே யென்றுன்னையழைக்கப் பித்தாவென்று பேசுகின்றார் பிறரென்னை_ (திருமொழி 7-1-8) என்றும், _பேயரே யெனக்கு யாவரும் யானுமோர் பேயனேயெவர்க்கும்_ (பெருமாள் திரு. 3-8) என்றும் சொல்லுகிறபடியே, அவர்கள்செயல் இவர்களுக்கு அடைவுகேடாய்த் தோற்றுமா போலே இவர்கள்செயலும் அவர்களுக்கு அடைவுகேடாய்த் தோற்றுமிறே. (பிறர் கூற) வைஷ்ணவர்களங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள், ‘இவன் நமக்கு உடலல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாயிருக்குமிறே: ராவணன் *த்வாந்து திக் குலபாம்ஸநம்* என்றதுதன்னை உத்தேஸ்யமாக நினைத்திருந்தானிறே விபீஷணாழ்வான்; மிளகாழ்வான் வார்த்தை-ராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல, ‘உமக்குப் பங்கில்லை’ என்ன, ‘அது என்? வேதபரீக்ஷைவேணுமாகில் அத்தைச் செய்வது, சாஸ்த்ரபரீக்ஷை வேணுமாகில் அத்தைப் பரீக்ஷிப்பது’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போதும், அதுக்கு உம்மைச் சொல்லவொண்ணாது’ என்ன, ‘ஆனால் எனக்குக் குறையென்?’ என்ன, ‘நீர் வைஷ்ணவரன்றோ, ஆகையாலே காண்’  என்ன, புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினானாயிற்று, தன்னை அவர்கள் கைவிட்டதுக்கு; ப்ராதிகூல்யஸ்ய வர்ஜ்ஜநமேயிறே வேண்டுவது. (ஊர்பல இத்யாதி), மநுஷ்யருள்ளவிடத்தோடு இல்லாத இடத்தோடு வாசியற எங்கும் புக்கு, இத்வாசி யறியாத லௌகிகர் ‘இவன் செய்யும்படியென்?_ என்று சிரிக்க, அதுவே தாளமாக நின்று ஆடி, அபிநிவேசமானது மேன்மேலெனக் கரைபுரண்டு குனிக்குமவர்கள். (அமரர்தொழப்படுவாரே) நித்யஸூரிகளாலே கொண்டாடப்படுவார். பகவத் ஸந்நிதியிலே யிருந்து *அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்* என்கிறபடியிலே களித்தாடுவது பாடுவதான நித்யஸூரிகள் இவர்களைக் கொண்டாடுவர்கள் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

அமரர்தொழப்படுவானை அனைத்துலகுக்கும்பிரானை*

அமரமனத்தினுள் யோகுபுணர்ந்து அவன்தன்?ேனாடொன்றாக*

அமரத்துணியவல்லார்களொழிய அல்லாதவரெல்லாம்*

அமரநினைந்தெழுந்தாடி அலற்றுவதேகருமமே.

– அநந்தரம், உபயவிபூதிநாதனானவன் விஷயத்தில் யோகஜநித பக்திவிகார யுக்தரானவர்களன்றியே, அது இல்லாத அல்லாதார்க்கும் அவர்களைக் கணிசித்தும் அவர்கள் த்யாபாரங்களைப் பண்ணுகை கர்த்தத்யம் என்கிறார்.

அமரர் – நித்யஸூரிகளுக்கு, தொழப்படுவானை-நிரதிசயபோக்யபூதனாய், அனைத்துலகுக்கும்-ஸமஸ்தலோகத்துக்கும், பிரானை-சேஷியானஸர்வேஸ்வரனை, அமர-ஸ்திரமாம்படி, மனத்தினுள் – மநஸ்ஸிலே, யோகு புணர்ந்து-யோகமுகத்தாலே செறிந்து, அவன்தன்னோடு ஒன்றாக – பரமஸாம்யாபத்திபெறும்படி, அமர துணியவல்லார்கள் – நிலைநின்ற அத்யவஸாயத்தைப் பண்ணவல்ல பக்திநிக்நர்கள், ஒழிய-அன்றியே, அல்லாதவர் எல்லாம்-(இந்த யோகஜந்யபக்தி) கைவாராதவர்களெல்லாரும், அமர – இதிலே அமரவேணுமென்று, நினைந்து – நினைத்து, எழுந்து – உத்யுக்தராய், ஆடிஅலற்றுவதே – (அவர்களைப்போலே) ஆடுவது அலற்றுவதாகையே, கருமம் – கர்த்தவ்யம்.

பக்திபாகம் பிறவாதார்க்கும் நிஷ்பந்நபக்திக ப்ரத்ருத்தியை அநுவிதாநம் பண்ணுகை ப்ராப்த மென்று கருத்து.

ஈடு: – ஒன்பதாம்பாட்டு. கைவல்யபுருஷார்த்தத்தை எடுத்து,     ‘சீலாதிகுண விசிஷ்டமான வஸ்துவைப் பற்றாதே மின்மினிபோலேயிருக்கிற ஆத்மாநுபவ மாத்திரத்திலே நிற்பதே!’ என்று அவர்களை நிந்தித்து; அவர்களை யொழிந்தாரையெல்லாம் _பகவத்த்யதிரிக்த லாபங்களை ‘புருஷார்த்தம்’ என்றிராதே, பகவத்குணங்களை அநுஸந்தித்து விக்ருதராய் ஆடுவது பாடுவ தாகுங்கோள்; இதுவே கர்த்தத்யம்_ என்கிறார்.

(அமரர்தொழப்படுவானை) ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் அத்வருகான நித்யஸூரிகளாலே தொழப்படுகிறவனை. (அனைத்துலகுக்கும் பிரானை) ஸர்வலோகேஸ்வரனை (அமர மனத்தினுள் யோகுபுணர்ந்து) நெஞ்சிலே  ஊன்றியிருக்கும்படி யோகாப்யாஸத்தைக் கனக்கப்பண்ணி. (அவன்தன்னோடு ஒன்றாக அமரத் துணியவல்லார்கள் ஒழிய) சரமதசையிலே வந்தவாறே, அவனோடே இவ்வாத்மவஸ்து ஸமாநமென்று புத்திபண்ணவல்ல ஹேயரையொழிய. ‘ஒன்றாக’ என்னுங்காட்டில் – ‘ஸமாநமாக’ என்னும் இவ்வர்த்தத்தைக் காட்டுமோ? என்னில்;- *ஸர்வபூ4தஸ்த்திதம் யோமாம் ப4ஜத்யேகத்வமாஸ்த்தித:* என்று – ஏகத்வத்தைச் சொல்லி, அதுதன்னை அநுபாஷிக்கிறவிடத்திலே *யோயம்யோகஸ் த்வயாப்ரோக்தஸ் ஸாம்யேந மதுஸூதந* என்று ஸாம்யத்தைச் சொல்லிற்றிறே. சரம தஶையில் இத்வஸ்து அவனோடொத்த ஸுத்தியையுடைத்தாக அத்யவஸிக்க வல்ல ஸாஹஸிகரையொழிய. இத்விடத்தில் – விலக்ஷணாதிகாரிகளைச் சொல்லிற்றாக்கி, (அல்லாதவரெல்லாம்) என்கிறவிடம் – ‘யாத்3ருசதாத்3ருசரானவர்களெல்லாம் அவனை அநுஸந்தித்துப் பாடுவது ஆடுவதாகுங்கோள் என்றுதானானாலோ?’ என்னில்:- அது செய்யவொண்ணாது; கீழே ‘ஓதியுணர்ந்தவர்முன்னா’ (3-5-5) என்று பகவத்குணங்களைக் கேட்டால் அவிக்ருதராயிருப்பர்களாகில் அவர்கள் ஜந்மத்ருத்தாதிகளாலே எத்தனையேனும் நன்மையுடையராகிலும் அவர்கள் அவஸ்துக்களென்றும் சொல்லி,  ஜந்மத்ருத்தாதிகளால் தண்ணியரேயாகிலும் பகவத்குணாநுஸந்தாநம்பண்ணி விக்ருதராம் ஸ்வபாவராகில் அவர்கள் ‘முழுதுணர்நீர்மையினார்’ (3-5-6) என்றும் சொல்லி,  இவர்களைக் கொண்டாடியும் அவர்களை _என் சவிப்பார் மனிசரே_ (3-5-5) என்று நிந்தித்தும் வருகிற ப்ரகரணமாகையாலே, இங்கு ஸர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து க்ஷுத்ரப்ரயோஜநங்களைக்கொண்டு அகலப்போகிறவர்கள் அவஸ்துக்களென்றதேயாக வேணும். (அல்லாதவரெல்லாம்) கேவலாத்மாநுஸந்தாநத்தைப் பண்ணி,
சீலாதிகுணவிசிஷ்டமான வஸ்துவிலே நெஞ்சுபோகாதபடி நெஞ்சை இறுகப் பிடிக்கவல்ல ஹேயரையொழிய நீக்கியுள்ளாரெல்லாம். (அமர நினைந்து எழுந்து ஆடி) அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு அவனை நெஞ்சிலே பொருந்த அநுஸந்தித்து, அத்வநுஸந்தாநத்தாலே வந்த ஹர்ஷம் கொண்டு கிளர, அக்கிளர்த்தியோடே ஆடி அக்ரமமாக ஏத்தும் இதுவே கர்த்தத்யம்.

பத்தாம் பாட்டு

கருமமும்கருமபலனுமாகிய காரணன்தன்னை*

திருமணிவண்ணனைச் செங்கண்மாலினைத்தேவபிரானை*

ஒருமைமனத்தினுள்வைத்து உள்ளங்குழைந்தெழுந்தாடி*

பெருமையும் நாணும்தவிர்ந்து பிதற்றுமின்பேதைமைதீர்ந்தே.

– அநந்தரம், கீழ் – விலக்ஷணவிக்ரஹவி–ஷ்டனானவன் விஷயத்தில் உபாஸகருடைய பக்திபாரவஸ்யத்தை அதில் அந்வயமில்லாதாரும் அநுவிதாநம்பண்ண ப்ராப்தமென்றார். இதில் – அநந்யஸாதநரான அநந்யப்ரயோஜநரும் பகவத்ப்ராவண்ய பாரவஸ்யத்தாலே விக்ருதராய் வர்த்தியுங்கோள் என்கிறார்.

கருமமும் – (ஸாதநரூபமான) கர்மங்களும், கருமபலனும் – தத்ஸாத்யமான பலங்களும், ஆகிய காரணன்தன்னை – தானிட்ட வழக்காம்படி ஸமஸ்தகாரணபூதனாய், திரு – (தன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் பற்றுவார்க்கு) தர்சநீயமான, மணி – மாணிக்கம்போன்ற, வண்ணனை-(சுபாஸ்ரயமான) வடிவையுடையனாய், (அவர்களைப் பூர்ணகடாக்ஷம்பண்ணும்), செம் கண்-சிவந்த கண்களையும், மாலினை – வாத்ஸல்யத்தையுமுடையனாய், தேவபிரானை – ஸூரிகளுக்குப் போலே அவர்களுக்கு அநுபாத்யனானவனை, ஒருமை – (உபாயோபேயங்களில் பேதம் பிறவாதபடி) ஒருமைப்பட்ட, மனத்தினுள் – நெஞ்சிலே, வைத்து – வைத்து, உள்ளம்குழைந்து – (இத்வாகாரத்வயத்துக்கு <டுபட்டு) நெகிழ்ந்தநெஞ்சையுடையராய், எழுந்து – கிளர்ந்து, ஆடி – ஆடி, பெருமையும் – (துர்மாநகார்யமான) பெருமையையும், நாணும் – (அதடியான ‘மனிசர்முன்னே ஆடும்படியென்?’ என்கிற) லஜ்ஜையையும், தவிர்ந்து – தவிர்ந்து, பேதைமை – (இப்பாரவஸ்யம் நிகர்ஷமாகநினைக்கும்) அறிவு கேட்டையும், தீர்ந்து – தவிர்ந்து, பிதற்றுமின் – (அவனுடையகுணகணங்களை) அக்ரமமாகப் பிதற்றுங்கோள். அநந்யஸாதநர்க்கும் சேஷத்வஸாரஸ்யகாரிதமான பாரவஸ்யம் உத்தேஸ்யமென்று கருத்து.

ஈடு: – பத்தாம்பாட்டு. கீழே கேவலரை நிந்தித்தார்; இதில் ‘அநந்ய ப்ரயோஜநராய்க் கொண்டு அவன்குணங்களை யநுஸந்தித்து விக்ருதராகுங்கோள், உங்களுக்கு இதுவே புருஷார்த்தம்’ என்கிறார்.

(கருமமும் இத்யாதி) – புண்யபாபரூபமான கர்மங்களுக்கும் கர்மபலங்களுக்கும் நியாமகனாய். கர்மங்களுண்டானாலும் கர்மாநுஷ்ட்டாதாவாயிருப்பானொருவன் வேணுமே: கர்மாநுஷ்ட்டாதாவுமாய். அநுஷ்ட்டாத்ருத்வாரா கர்மநிர்வாஹகன் என்றபடி. (கருமபலனுமாகிய) – கர்மங்களையநுஷ்ட்டித்தாலும் அவற்றுக்கு ஒருவன் ப2ல ப்ரதாநம் பண்ணாதபோது அவை பழுதையோபாதியாய்க் கிடக்குமித்தனையிறே, அவை அசேதநக்ரியையாகையாலே; அவற்றுக்குப் ப2லப்ரதா3தாவுமாய். (காரணன்தன்னை) – புண்யங்களிலே ப்ரவர்த்திப்பிக்கவும் பாபங்களைப் போக்கவும் அவற்றுக்குப் பலங்கொடுக்கவும் ஒருகர்த்தா வேணுமே; அவற்றுக்குக் காரணபூதனாயுமுள்ளவனை. (திருமணிவண்ணனை) – உபாஸகனுக்கு விக்ரஹத்தை  சுபாஸ்ரயமாகச்சொல்லா நின்றதிறே; இவனுக்கு உத்தேஸ்யமாயிருந்துள்ள / (த்4யேயமாயிருந்துள்ள) விக்ரஹத்தையுடையவனை. திரு – என்று காந்தி, காந்தி மிக்கிருந்துள்ள நீலமணிபோலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனை. (செங்கண்மாலினை) அகவாயில் வாத்ஸல்யத்துக்கு ப்ரகாசகமான திருக்கண்களையுடையவனை. காரணவஸ்துவுக்கு லக்ஷணமாகப் புண்டரீகாக்ஷத்வத்தை விதியாநின்றதிறே. (தேவபிரானை) அத்வடிவழகையும் கண்ணழகையும் நித்யஸூரிகளை அநுபவிப்பிக்குமாபோலே என்னையநுபவிப்பித்து, எனக்கு உபகாரகனானவனை. (ஒருமைமனத்தினுள்வைத்து) ஒரு ப்ரயோஜநத்துக்காக வன்றிக்கே, நெஞ்சிலேயிருக்கைதானே ப்ரயோஜநமாக நெஞ்சிலே வைத்து. இத்தால், கீழிற்பாட்டிலே ப்ரயோஜநாந்தரபரரை நிந்தித்தாரென்னுமிடம்தோற்றுகிறதிறே. இப்படி அநந்யப்ரயோஜநராய்க்கொண்டு நெஞ்சிலே வைத்தவாறே, அகவாய்
சிதிலமாய் அந்தசைதில்யத்தோடே இருந்தவிடத்தில் இராதே ஆடி, ‘பகவத்குணங்களைக் கேட்டால் விக்ருதராகை நமக்குப் போருமோ?’ என்றிருக்கிற அபிமாநகார்யமான மேன்மையையும், ‘நாம் பிறரறிய விக்ருதராம்படி எங்ஙனே?’ என்றிருக்கிற லஜ்ஜையையும், ‘எல்லாவளவிலும் நம் அகவாய் ஒருவர்க்கும் தெரியாதபடி திரஸ்கரித்துக் கொண்டிருக்க வேண்டாவோ?’ என்றிருக்கிற அறிவுகேட்டையும், இவற்றையடையப் போகட்டு அடைவுகெட ஏத்துங்கோள். இதுவே உங்களுக்குப் புருஷார்த்தம் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

தீர்ந்த அடியவர்தம்மைத் திருத்திப்பணிகொள்ளவல்ல*

ஆர்ந்தபுகழச்சுதனை அமரர்பிரானைஎம்மானை*

வாய்ந்தவளவயல்சூழ் தண்வளங்குருகூர்ச்சடகோபன்*

நேர்ந்தவோராயிரத்திப்பத்து அருவினைநீறுசெய்யுமே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் பலமாக அநுபவவிரோதி நிவ்ருத்தியை அருளிச்செய்கிறார்.

தீர்ந்த – (ஈஸ்வரனுடைய உபாயோபேயத்வங்களில்) வ்யவஸிதராயிருக்கும், அடியவர்தம்மை – அடியவர்களை, திருத்தி – (ப்ரதிபந்தக நித்ருத்தி பூர்வகமாகப் பரபக்தி பரஜ்ஞாநாதிகளைக் கொடுத்துத்) திருத்தி, பணி கொள்ளவல்ல – நித்யகைங்கர்யத்தைக் கொள்ளவல்ல , ஆர்ந்த புகழ் – (ஸர்வசக்தியுக்தனாகையாலே) பரிபூர்ணமான குணகணங்களையுடையனாய், அச்சுதனை – ஆஸ்ரிதரை நழுவவிடாதவனாய், அமரர்பிரானை அம்மானை – நித்யஸூரிகளோடொக்க அடிமைகொள்ளும் ஸர்வேஸ்வரனை, வாய்ந்த – நன்றான, வளம் – வளப்பத்தையுடைய, வயல் – வயல், சூழ் – சூழ்ந்து, தண்- ஸ்ரமஹரமாய், வளம் – ஸர்வஸம்பத்ஸம்ருத்தமான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், நேர்ந்த – (பக்திபரவசருடைய உத்கர்ஷத்தையும் அல்லாதாருடைய நிந்தையையும்) நேர்ந்து அருளிச்செய்த, ஓர் – அத்விதீயமான, ஆயிரத்து – ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, இ பத்து-இந்தப்பத்தும், அருவினை – (பகவத்குணுநுஸந்தாநத்தில் விக்ருதராகாதபடி பண்ணும்) மஹாபாபங்களை, நீறுசெய்யும் – பஸ்மஸாத்தாம்படி பண்ணும். வளங்குருகூர் – வாய்ந்த – சடகோபன் என்றாகவுமாம். இது-அறுசீராசிரியவிருத்தம்.

ஈடு: – நிகமத்தில்,  இத்திருவாய்மொழிகற்றார் பகவத்குணாநுஸந்தாநம் பண்ணினால் அவிக்ருதராயிருக்கைக்கு அடியான மஹாபாபத்தை இதுதானே நிஸ்சேஷமாகப் போக்கும் என்கிறார்.

(தீர்ந்த அடியவர்தம்மை) ‘ப்ராப்யப்ராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்களாயிற்று – தீர்ந்தவடியவராகிறார். அவர்களைத் திருத்திப் பணிகொள்ளுகையாகிறது – அவர்களுடைய ப்ராப்யப்ராபகவிரோதிகளைப் போக்கி அடிமை கொள்கை. *அஹம் ஸர்வம் கரிஷ்யாமி* என்று இருந்தாலும், *க்ரியதாமிதிமாம்வத* என்று அடிமைகொள்ள வேணுமே. (ஆர்ந்தபுகழச்சுதனை) குறைவற்ற கல்யாண குணங்களையுடையவனாய், ‘தன்னை ஆஸ்ரயித்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒருநாளுங் கேட்டறியாதவனை. (அமரர்பிரானை எம்மானை) அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார க3ந்தரான நித்யஸூரிகளைக் கொள்ளும் அடிமையைத் தன்பக்கல் ஆசாலேசமின்றிக்கேயிருக்கிற என்னைக் கொண்டவனை. அச்யுதத்வம் கேட்டார்வாய்க் கேட்டன்றிக்கே, தன்பக்கலிலே அநுஷ்ட்டாநபர்யந்தமாகக்கண்டு சொல்லுகிறார். (வாய்ந்த) பகவத்குணங்களையநுஸந்திக்கையும், அத்வநுஸந்தாநத்தை யொழியச்செல்லாமையுமாகிற இத்வளவன்றிக்கே, பகவத்குணங்களைக் கேட்டால் அவிக்ருதராயிருப்பாரை நிந்தித்தும், விக்ருதராயிருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி அத்விஷயத்திலே அவகாஹித்துச் சொன்ன. வாய்கை – கிட்டுகை. (வளவயல் இத்யாதி) வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையுமுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த. தண் – குளிர்த்தி. நேர்ந்த – சொன்ன என்றபடி. பகவத்குணாநுஸந்தாநத்தாலே விக்ருதராய்க் கொண்டு சொன்ன ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்து. (அருவினை நீறுசெய்யும்) பகவத்குணங்களைக் கேட்டால் விக்ருதராகாதே திண்ணியரா யிருக்கைக்கு அடியான மஹாபாபங்களை பஸ்மஸாத்தாக்கும்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

 

த்ரமிடோபநிஷத் ஸங்கதி

பூர்வெண தாஸ்யவிதிநா புருஷார்தஸீம்நா

ஹர்ஷ ப்ரகர்ஷவிவஶ: கலு பம்சமெ ஸ:।

ஆநந்தநைரவிக்ருதாந்விநிநிந்தமூர்காந்

ஶௌரெர்குணைஸ்து விக்ருதாந் ப்ரஶஶம்ஸ பூய:||

 

த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ

38 க்ராஹக்ரஸ்தேபமோக்ஷே ஸுரரிபுதமநே கோகுலத்ராணகார்யே

கோதார்தோக்ஷாவமர்தே ஸதஹிதமதநே ஸிந்துபர்யங்கயோகே ।

க்ஷோணீபாரவ்யபோஹே க்ஷிதிதரவஸதௌ நிர்ஜராராத்யதாயாம்

விஶ்வாரம்பே ச ஶௌரே: ஶுபதநுஸுஷமோந்மாதகத்வம் ஜகாத || (3-5)

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

மொய்ம்பாரும்மாலுக்கு  முன்னடிமைசெய்துவப்பால்*

அன்பால்லாட்செய்பவரை ஆதரித்தும்* அன்பிலா

மூடரை நிந்தித்தும்  மொழிந்தருளும் மாறன்பால்*

தேடரியபத்தி நெஞ்சே! செய். 25

 

ஆழ்வார் திருவடிகளே சரணம், எம்பெருமானார் திருவடிகளே சரணம்,

ஜீயர் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.