03-06 12000/36000 Padi

ஆறாந்திருவாய்மொழிசெய்யதாமரை : ப்ரவேசம்

பன்னீராயிரப்படி – ஆறாந்திருவாய்மொழியில், கீழ் சேஷத்வ ஸாரஸ்யத்தால் பிறந்த ப்ரீதிவிகாரம் உத்தேஸ்யமென்று அருளிச்செய்தவர், அந்த இனிமையில்லாமையாலே அவிக்ருதரான ஸம்ஸாரிகளுக்கும் பகவச்சேஷத்வத்தை உபதேசிப்பதாக சேஷியினுடைய அர்ச்சாவதார பர்யந்தமான ஸௌலப்யத்தை உபபாதிப்பதாக நினைத்து, அந்த ஸௌலப்யத்துக்கு ஊற்றான ஜகத்ஸ்ரஷ்ட்ருத்வத்தையும், ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷணார்த்தமான அவதாரகந்தத்வத்தையும், அவதீர்ணனுடைய அதிசயிதசேஷ்டிதத்வத்தையும், ஈஸ்வராபிமாநிகளுக்கும் ஆஸ்ரயணீயனான சீலாதிசயத்தையும், அவதாரதசையிலும் அகிலவிபூதித்வம் தோற்றும்படியான ஆதிக்யத்தையும், ஆஸ்ரிதவிஷயத்தில் அதிசயித வாத்ஸல்யத்தையும், நிரவதிகபோக்யதையையும், பற்றினாரை நழுவவிடாத பக்ஷபாதத்தையும், ஸர்வவிதபந்துவுமாய்க்கொண்டு ஆஸ்ரிதரிட்ட வழக்கான அர்ச்சாவதார பார தந்த்ர்யத்தையும், ஆஸ்ரிதபரதந்த்ரனான அவன்பக்கல் தமக்குப் பிறந்த அபிநிவேசத்தையும் அருளிச்செய்து, பகவச்சேஷத்வத்தை ப்ரதிபாதித்தருளுகிறார்.

ஈடு: – ஸர்வேஸ்வரன் திருவடிகளில் கைங்கர்ய ருசியுடையார்க்கு அத்தைக்கொடுக்கக்கடவனுமாய், அத்வடிமைதான் அவன்தனக்கு இனியதா யிருக்கக்கடவதுமாய், அத்வழியாலே இச்சேதநனுக்கு உத்தேஸ்யமாகக்கடவதுமாயிருக்க, அத்தையிழக்கையாலே சிலரைநிந்திக்கவேண்டும்படியிறே – கீழில் திருவாய்மொழியில் நின்றது; இவ்வடிமையிலே அந்வயித்தாரைக் கூட்டிக்கொண்டு அதில்லாதாரை உபேக்ஷித்தாராய் நின்றார்; இனி, தாமே விழுவாரைத் தடிகொண்டு அடிக்குமோபாதி யென்றுபார்த்து _இவர்கள் பண்டே அறிவுகேட்டாலே வழிதப்பிப்போய் அநர்த்தப்படாநின்றார்கள்; நாம் இவர்களைக் கைவிடவொண்ணாது; ஹிதத்தைச் சொல்லுவோம்_ என்று பார்த்து ஹிதத்தை அருளிச்செய்கிறார். ராவணன் பிராட்டிபக்கல் ‘ஜநநி’ என்னும் ப்ரதிபத்தியின்றிக்கே திருமுன்பே சிலவற்றை ஜல்பிக்கப் புக்கவாறே, _ஐயோ! இவன் நினைவு இருந்தபடியென்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவாரின்றிக்கே யொழிவதே!_ என்று வெறுத்து, அவன் தனக்கே (மித்ரமௌபயிகம் கர்த்தும்) என்று பிராட்டி ஹிதம் அருளிச்செய்தாற்போலே, (த்வம்
நீசஸஸவத்) என்று வைத்துப் பின்னையும் அவன்தனக்கே ஹிதம் அருளிச்செய்தாற் போலே இருப்பதொன்றிறே – இவரும் கீழ்த்திருவாய்மொழியில் அவர்களைநிந்தித்து வைத்து, இங்கு ஹிதஞ்சொல்லுகிறவிடமும்.  _(மித்ரமௌபயிகம்  கர்த்தும் ராம:) – ‘பெருமாளை நீ சரணம்புகு’ என்றால் அப்பையல் அது தனக்கு எளிவரவாக நினைத்திருக்குமே; அதுக்காகத் ‘தோழமைகொள்’ என்கிறாள். தங்களைச் சரணம்புக்காரை, தங்களிற்காட்டில்  குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்; (மித்ரபா4வேந) என்றும்,  (மித்ரமௌபயிகம் கர்த்தும்) என்றுமிறே இருவர் படியும். (ஸ்தா2நம் பரீப்ஸதா) – வழியடிப்பார்க்கும் தரையிலே கால்பாவிநின்று வழியடிக்கவேணுமே; உனக்கு ஓரிருப்பிடம் வேண்டியிருந்ததாகிலும் அவரைப்பற்றவேணுங்காண். எளிமையாக எதிரிகாலிலே குனிந்து இத்விருப்பு இருப்பதில் பட்டுப்போக அமையுமென்றிருந்தாயோ?  (வத4ஞ்சாநிச்ச2தா கே4ாரம்) – அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னைவைத்து உன்முன்னே உன்ஸந்தாநஜாதரை ஹிம்ஸித்துப் பின்னை உன்னைச்சித்ரவதம் பண்ணுகையாகிற இத்வதத்தை இச்சித்திலையேயாகிலும் அவரைப் பற்றவேணுங்காண்; (த்வயா) – உன்நிலை இருந்தபடியால் விசேஷித்து உனக்கு அவரைப் பற்றவேணும். (அஸௌ) – உருவெளிப்பாட்டாலே முன்னிலையாயிருக்குமிறே, இவளுக்கு; அவனுக்குந்தானே மாயாம்ருகத்தின் பின்னே போகிறபோது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.  (புருஷர்ஷப4🙂 – ‘நான்பண்ணின அபகாரத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவரோ?’ என்றிருக்கவேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்; அவர் புருஷோத்தமர்காண். அஸௌ – புருஷர்ஷப4: – ராம: – த்வயா-மித்ரம்-கர்த்தும் – ஔபயிகம்_.  இப்படி பிராட்டி ராவணனுக்கு ஹிதம் அருளிச்செய்தாற்போலே இவரும் இவர்களுக்கு ஹிதம் அருளிச்செய்கிறார். ‘இவர்கள்தான் வழிதப்பிப்போய் அநர்த்தப்படுகிற முகம் ஏதோ? ப்ராப்தி ஒத்திருக்க’ என்று பார்த்தார்; பகவத்குணஜ்ஞாந மில்லாமையும் அவனுடைய ஸௌலப்யஜ்ஞாந மில்லாமையுமாயிருந்தது. _ஈஸ்வரனாகிறான் பெரியானொருவனன்றோ? அவன் விசைக்கொம்பு; நமக்கு அவனை எட்டப்போகா தொன்றாயிருந்தது_ என்று ஸம்ஸாரிகள் கைவாங்க, ‘அவனுடைய ஸௌலப்யத்தை உபபாதிப்போம்’ என்று பார்த்து, _நீங்கள் ‘அவன் அரியவன்’ என்று கைவாங்கவேண்டா; அவன் ஆஸ்ரிதஸுலபன்; அவனை ஆஸ்ரயியுங்கோள்_ என்கிறார். கீழ் ‘பத்துடையடியவர்’ (1-3) தொடங்கி ஸௌலப்யமேயன்?ேறா சொல்லிக் கொண்டு போந்தது; இப்போதாக ஸௌலப்யம் சொல்லவேண்டுகிற தென்?’ என்னில்; – அங்குச்சொன்ன ஸௌலப்யந்தான்  ‘பரத்வம்’ என்னும்படி அர்ச்சாவதார பர்யந்தமான ஸௌலப்யகாஷ்டையை அருளிச்செய்கிறார். _(அர்ச்ய:) – ஸம்ஸாரிகளுக்கும் அர்ச்சிக்கலாம்படி அர்ச்யனாயிருக்கும் : ஸம்ஸாரிகளாகில் அர்ச்சிக்கிறார்; அவர்கள் அபராதமேயன்றோ பண்ணுவது? என்னில், – (ஸர்வஸஹிஷ்ணு:) அவற்றையடையப் பொறுத்துக் கொண்டு நிற்கும்; ஆனாலும், நினைவு இரண்டா யிராநின்றதீ! என்னில், – (அர்ச்சகபராதீ4நாகி2லாத்மஸ்தி2தி:) – ‘நமக்கு ஒரு நினைவும் அவர்களுக்கு ஒரு நினைவு மாகிலன்றோ சேராச்சேர்த்தியாவது’ என்று, அவர்களுக்கு ஈடாகத் தன்னை அமைத்துநிற்கும்_.  _தமருகந்ததெத்வுருவ மத்வுருவந்தானே_ (முதல்.திருவ. 44)  இத்யாதி. _(யே யதா2 மாம் ப்ரபத்3யந்தே) – யாவர்சிலர் அதிகாரிகள் யாதொருபடியாக வேணுமென்று நம்மை பஜிக்கிறார்கள், அவர்களைக் குறித்து அப்படி கிட்டலாம்படிக்கு ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு நிற்போம்; (மம வர்த்மாநுவர்த்தந்தே) இத்யாதி – இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படியிருக்கையாலே அவர்களெல்லாம் நம்வழி போனாராவர்களிறே_.  _(ஸ்ம்ருதம் ஸங்கல்பநாமயம்) – பரமபதத்தில் அஸாதாரண விக்ரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்; விபவங்களில் வந்தால் அதுதன்னை இதரஸஜாதீயமாக்கிற்றாயிருக்கும்; இங்ஙனன்றிக்கே, ஆஸ்ரிதன் தான் உகப்பது ஏதேனும் ஒரு த்ரத்யத்தைத் திருமேனியாகக் கோலினால், அத்தையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அதிலே அஸாதாரணவிக்ரஹத்தில் பண்ணக்கடவ அபிமாநத்தைப் பண்ணி, இத்வழியாலே முகங்கொடுக்கும்படியாயிறே இந்நிலை இருப்பது._ ஸ்வத்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களினுடையவும் ஸ்வரூப ஸ்திதி ப்ரத்ருத்தி நித்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படியிருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஸ்ரிதாதீநமாம் படியாய், அவர்களுக்கு க்3ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே. இவனுக்கு ருசி பிறந்தபோது மற்றொருவிடத்திலே போகவேண்டாதே இங்கே அநுபவிக்கலாம்படி நிற்கிற நிலையாய், இஸ்சரீர ஸம்பந்தமற்று ஒருதேசவிசேஷத்திலே போய் அதுக்கு ஈடாயிருப்பதொரு சரீரத்தைப் பெற்றுச் செய்யக்கடவதான அடிமைகளை இதரவிஷயப்ராவண்யத்துக்கு உறுப்பான இத்வுடம்போடே செய்யலாம்படியாய், இவன் அந்யபரனான அன்றும் இவன்கையையே பார்த்திருக்கக்கடவனாய், இவன்தான் பசித்தபோது புஜிக்கும் த்ரவ்யத்தை ‘அமுதுசெய்யவேணும்’ என்று அபேக்ஷித்தால் அப்போதே அமுது செய்யக்கடவனாய், ஆஸநசயநபூஷணாதிகளெல்லாம் இவனிட்ட வழக்காக்கி, ஸ்ரிய:பதியாய் அவாப்தஸமஸ்தகாமனானவன் ஆஸ்ரிதபராதீநனாய், இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய், இப்படி தன்னை அமைத்துக்கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. பரத்வமே தொடங்கி அவதாரங்களிலே வர அவன்குணங்களைச் சொல்லிக்கொண்டுபோந்து அர்ச்சாவதாரபர்யந்தமான ஸௌலப்யகாஷ்டையை உபதேசிக்கிறார். இப்போது ஸௌலப்யமாகில் உபதேசிக்கப் புகுகிறது – பரத்வமே தொடங்கி உபதேசிக்க வேண்டுவானென்? என்னில்; – ‘மேன்மையையுடையவன் தாழநின்றான்’ என்றாலிறே குணமாவது; தாழ்வு ப்ரக்ருதியானவன் தாழநின்றால் ஸ்வரூபமா மித்தனையிறே; இப்படி தாழநிற்கிறவன் மேன்மையையுடையவன் என்கைக்காகச் சொல்லிற்று. உபாயங்களில் ப்ரபத்திபோலே ஸௌலப்யங்களில் அர்ச்சாவதார ஸௌலப்யம். ஜநநிக்கும் ஸ்த்ரீ ஸாமாந்யம் ஒத்திருக்கச்செய்தே பண்ணுகிற உபகாரங்களை ப்ரத்யக்ஷிக்கையாலும், சாஸ்த்ரஞ் சொல்லுகையாலுமிறே கௌரவிக்கிறது; அப்படியே ப்ராமாணிகனானவனுக்கு ஆஸ்ரயணீயஸ்தலம் அர்ச்சாவதாரம்போக்கி இல்லையென்று இத்வளவான ஸௌலப்யகாஷ்டையை உபதேசிக்கிறார்.

முதற்பாட்டு

செய்யதாமரைக்கண்ணனாய் உலகேழுமுண்டஅவன்கண்டீர்*

வையம்வானம்மனிசர்தெய்வம் மற்றும்மற்றும்மற்றும்முற்றுமாய்*

செய்யசூழ்சுடர்ஞானமாய் வெளிப்பட்டிவைபடைத்தான்* பின்னும்

மொய்கொள்சோதியோடாயினான் ஒருமூவராகியமூர்த்தியே.

  – முதற்பாட்டில், அப்யயபூர்விகையான ஸ்ருஷ்டி அவனிட்ட வழக்கு என்கிறார்.

செய்ய – (ஸர்வஸ்மாத்பரத்வத்தால் வந்த ஐஸ்வர்யஸூசகமாய்ச்) சிவந்த, தாமரை – தாமரைபோலும், கண்ணனாய் – கண்ணழகையுடையனாய்கொண்டு, (ஸம்ஹ்ருதிஸமயத்திலே _அத்தா சராசர க்ரஹணாத்_ என்கிறபடியே),உலகேழும்-ஸகலலோகங்களையும், உண்ட – தனக்குள்ளே யொடுக்கின, அவன்கண்டீர் – அவன்கிடீர், ஒரு – அத்விதீயமான, மூவராகியமூர்த்தி – ப்ரஹ்மவிஷ்ணு –வாத்மக மூர்த்தித்ரயத்தையுடையனாய்க்கொண்டு, வையம் – பூமியும், வானம்-ஊர்த்வலோகங்களும், (தத்வாஸிகளான), மனிசர் – மநுஷ்யரும், தெய்வம்-தேவரும், மற்றும்-மற்றும் திர்யக்குக்களும், மற்றும் – மற்றும் ஸ்தாவரங்களும், மற்றும் -மற்றும் பூதபஞ்சகமும், முற்றும் – மஹதாதி ஸமஷ்டியும், ஆய் – உண்டாம்படி உபாதாநமாய், செய்ய – (அமோகமாகையாலே) செத்விதாய், சூழ் – (ஸ்ருஜ்யபதார்த்தங்களை யடையச்) சூழ்வதாய்க்கொண்டு, சுடர் – ப்ரகாசிக்கிற, ஞானமாய் – ஸங்கல்பரூப ஜ்ஞாநஸ்வரூபனாய், வெளிப்பட்டு – ஸ்ருஷ்ட்யபிமுகனாய்க்கொண்டு தோற்றி, இவை – உக்தமான ஸமஸ்தபதார்த்தங்களையும், படைத்தான் – (நிமித்தமாய்க்கொண்டு) ஸ்ருஷ்டித்து, பின்னும் – அதுக்குமேலே, மொய்கொள் – செறிந்த, சோதியோடு – தேஜோமயமான தித்யதேசத்தோடு, ஆயினான் – கூடியிருந்தவன்.

‘முற்றுமாய் என்கிற ஸாமாநாதிகரண்யம் – கார்யகாரணபா4வத்தாலே. ‘ஞானமாய் என்கிற இடம் – கு3ணகு3ணிபா4வத்தாலே. ‘மூவர்’ என்று ப்ரஹ்மருத்ரேந்த்ரர்களைச் சொல்லவுமாம்.

ஈடு:-முதற்பாட்டு. _ஜகத்காரணத்வ புண்டரீகாக்ஷத்வாதி குணங்களையுடையவன் ஆஸ்ரயணீயன்; அவனை ஆஸ்ரயியுங்கோள்_ என்கிறார். ஜகத்காரண வஸ்துவை
உத்தேசித்து அவ்வஸ்துவுக்கே புண்டரீகாக்ஷத்வாதிகளை விதிக்கிறார். (செய்யதாமரைக் கண்ணனாய்) – *தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணீ* என்றும், *யஜ்ஞேஶோ யஜ்ஞபுருஷ: புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஜித:* என்றும் ஸ்ருதிஸ்ம்ருத்யாதிகளிற் சொல்லப்படா நின்றுள்ள அப்போதலர்ந்த செத்வித்தாமரை போலேயிருந்துள்ள திருக்கண்களை யுடையனாய். (உலகேழும் இத்யாதி) – வடிவழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் ப்ரளயாபத்ஸகத்வமும். (வையம் இத்யாதி) வையமென்கிறது – பூமியை. வானமென்கிறது – உபரிதநலோகங்களை. மனிசரென்கிறது – வையத்திலுள்ளாரை. தெய்வமென்கிறது – வானத்திலுள்ளாரை. மற்றுமென்கிறது – திர்யக் ஸ்த்தாவரங்களை. திரிய, மற்றும் என்கிறது அவற்றுக்கு ஆரம்பகமான பூ4தபஞ்சகங்களை. திரிய, மற்றும் என்கிறது, அவைதனக்கும் காரணமான மஹதா3தி3களை. முற்றுமென்றது – கீழ்ச்சொன்னவையெல்லா வற்றையும்.  _முற்றுமாய் வெளிப்பட்ட இவற்றை, ‘செய்ய சூழ்சுடர் ஞானமாய்’ படைத்தான்_ என்னுதல்; அன்றிக்கே; _தனிமாப்புகழே யெஞ்ஞான்றும் நிற்கும்படியாத் தான்தோன்றி (8-10-7)_  என்றும், *பஹுஸ்யாம்* என்றுஞ் சொல்லுகிறபடியே, முற்றவும் உண்டாகைக்காக இவையாய்க் கொண்டு தான் தோன்றி இவற்றைப்படைத்தானென்னுதல். அப்போது, ‘வெளிப்பட்டு’ என்கிறது ஸ்ருஷ்ட்யுந்முகனாய்த் தோற்றியென்றபடி. (செய்ய இத்யாதி) ஞானத்துக்குச் செத்வையாவது வருத்தமற்றிருக்கை. அன்றிக்கே, செத்வையாவது *யதாபூர்வ மகல்பயத்* என்கிறபடியே தத்தத்கர்மாநுரூபமாகப் படைத்த செத்வையாதல். (சூழ்) கார்யஜாதத்தையெல்லாம் வ்யாபித்திருக்கை. (சுடர்) ‘மழுங்காத ஞானமாய்’ (3-1-9) விசத3தமாயிருக்கை.  (ஞானமாய்)  இப்படிப்பட்ட ஸங்கல்பரூபஜ்ஞா நத்தையுடையனாய். (வெளிப்பட்டு இவை)யென்றது – ப்ரமாண ப்ரதிபந்நமான இவையென்றபடி. ஆக, இதுக்குக்கீழ் ஜகத்காரணத்வஞ்சொல்லிற்று. மேல் நித்யவிபூ4தியுக்தனாயிருக்கிறபடி சொல்லுகிறது. (பின்னும் இத்யாதி) லீலாவிபூ4தியுக்தனானதுக்குமேல் *அத்யர்க்காநலதீ3ப்தம் தத் ஸ்த்தாநம்* என்கிறபடியே செறிந்திருந்துள்ள தேஜஸ்ஸையுடைத்தான நித்யவிபூதியுக்தனாயிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. (மொய் கொள்சோதி) தேஜ:ப்ரப்ருதி கல்யாணகுணங்களை உடையனென்னவுமாம். தேஜஸ்ஸு குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.  இப்போது குணஞ்சொல்லுகிறதென்? என்றால், குணாதிக வஸ்துவிறே ஆஸ்ரயணீயமாவது. (ஒரு மூவராகிய மூர்த்தியே) ப்ரஹ்மருத்ரர்களுடைய சரீரத்தையும் ஆத்மாவையும் தனக்கு சரீரமாகக்கொண்டு அவற்றில் அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்டிஸம்ஹாரங்களைப் பண்ணியும், ஸ்வேநரூபேண நின்று பாலந கர்மத்தைப் பண்ணியும் போருகிற ஸர்வேஸ்வரன். மூர்த்திசப்தம் – பரத்வவாசி. அன்றிக்கே,  ப்ரஹ்மருத்ரர்களோடே இந்த்ரனையுங்கூட்டி மூவரென்று சொல்லவுமாம். ‘மொய்கொள்சோதியோடாயினான் ஒரு மூவராகிய மூர்த்தி – பின்னும்-வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் வெளிப்பட்டிவற்றை – செய்ய சூழ்சுடர் ஞானமாய் – படைத்தான், – செய்ய தாமரைக் கண்ணனாய், உலகேழுமுண்ட அவன்கண்டீர்;’ ஆனபின்பு அவனைப் பரவுங்கோள். (முற்றுமாய் என்கிற ஸாமாநாதிகரண்யம் கார்யகாரண பா4வத்தாலே. ஞானமாய் என்ற இடம் கு3ணகு3ணி பா4வத்தாலே)

இரண்டாம் பாட்டு

மூவராகியமூர்த்தியை முதல்மூவர்க்கும்முதல்வன்தன்னை*

சாவமுள்ளனநீக்குவானைத் தடங்கடற்கிடந்தான்தன்னை*

தேவதேவனைத் தென்னிலங்கையெரியெழச்செற்றவில்லியை*

பாவநாசனைப் பங்கயத்தடங்கண்ணனைப்பரவுமினோ.

:- அநந்தரம், ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷணார்த்தமாய் அவதாரகந்தமான க்ஷீரார்ணவசாயி ஆஸ்ரயணீயன் என்கிறார்.

மூவராகிய மூர்த்தியை _ஸப்ரஹ்மா ஸ–வஸ் ஸேந்த்ர:_ – என்கிறபடியே ப்ரஹ்மருத்ரேந்த்ரர்களும் தான் என்னலாம்படி அவர்களுக்கு சரீரியாயிருப்பானாய், முதல்மூவர்க்கு – (சரீரபூதராய்) லோகப்ரதாநரான அவர்கள் மூவர்க்கும், முதல்வன்தன்னை-காரணபூதனாய், சாவம் உள்ளன – (அவர்களுக்கு குருபாதகாதி) சாபங்கள் உள்ளவற்றை, நீக்குவானை – போக்குமவனாய், (பின்பு கூப்பிட்டகுரல் கேட்கும்படி), தடங்கடல் – இடமுடைத்தான க்ஷீராப்தியிலே, கிடந்தான்தன்னை – கண்வளர்ந்தருளி, தேவதேவனை – (ராவணவதார்த்திகளான) தேவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய்க்கொண்டு அவதரித்து, தென் இலங்கை எரி எழ – லங்கையில் செல்லப்பெறாத அக்நி தலையெடுக்கும்படி, செற்ற – சத்ருநிரஸநம்பண்ணின, வில்லியை – வில்லையுடையனாய், பாவநாசனை – (ஸேதுவில் வரதாநாதிமுகத்தாலே) பாபவிநாசகனான, பங்கயத்தடங்கண்ணனை – புண்டரீகாக்ஷனை, பரவுமின் – ஸ்தோத்ரமுகத்தாலே ஆஸ்ரயியுங்கோள்.

ஈடு: – இரண்டாம் பாட்டு.  ஜகத்காரணத்வ புண்டரீகாக்ஷத்வாதிகளைச் சொல்லி, ‘ஆஸ்ரயியுங்கோள்’ என்னா நின்றீர்; அவை பரத்வத்துக்கு ஏகாந்தமான லக்ஷணங்களாயிற்று; ஆனபின்பு, எங்களாலே அவனை ஆஸ்ரயிக்கப்போமோ? என்ன, ‘அப்படிப்பட்டவன்தானே உங்களோடு ஸஜாதீயனாய்ச் சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான்; அங்கே ஆஸ்ரயியுங்கோள்’ என்கிறார்.

(மூவராகிய மூர்த்தியை) ப்ரஸ்துதமான ஸாமாநாதிகரண்யத்துக்கு நிபந்தநஞ் சொல்லுகைக்காக அநுபாஷிக்கிறது. (முதல் இத்யாதி) இஸ் ஸாமாநாதிகரண்யம் ஸ்வரூபேண அன்று, கார்யகாரணபா4வநிப3ந்தநமென்கிறது. ஜகத்துக்குக் காரணபூ4தனாயிருந்துள்ள தன்னோடுகூடின மூவர்க்கும் காரணபூ4தனாயுள்ளவனை, ப்ரஹ்மருத்ரர்களுக்கும் காரணபூ4தனாகிறான், தனக்குக் காரணபூ4தனாகையாவதென்? என்னில்,-தான் இவர்களுக்குக் காரணபூ4தனானவோபாதி, தனக்கு அத்வருகு காரணாந்தரமின்றிக்கேயிருக்குமென்றபடி; *ஆத்மேஸ்வரம்* என்கிறபடியே. அன்றிக்கே, இந்த்ரனையுங் கூட்டி, ஜகத்துக்கு ப்ரதாநராயிருந்துள்ள ப்ரஹ்மருத்ரேந்த்ரர்களுக்கும் காரணபூ4தனாயுள்ளவனை யென்றுமாம். (சாவமுள்ளன நீக்குவானை) – *வேதா3பஹார கு3ருபாதக தை3த்யபீடா* என்றாற்போலே சொல்லுகிறவற்றைப் போக்கும் ஸ்வபா4வனாயுள்ளவனை. (உள்ளன) போக்குகிற அவன்பாரிப்புக்கு இவை அல்பமாயிருக்கிறபடி. (தடங்கடல் இத்யாதி) ‘இன்னம் இவற்றுக்கு ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித் திரியவொண்ணாது’ என்று ஏற்கவே கடலில் இடங்கொண்டவனை. (தேவ தேவனை) – ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டாயிற்றுக் கண்வளர்ந்தருளுகிறது. (தென் இலங்கை எரியெழச் செற்றவில்லியை), அவர்கள்கூப்பீடு கேட்டு எழுந்திருந்து செய்யும் தொழில் சொல்லுகிறது. அக்நியானது ராவணபயத்தாலே ப்ரவே–க்கமாட்டாத ஊரிலே தான் நினைத்தபடி வ்யாபரிக்கப்பண்ணவல்ல வில் வலியையுடையவனை. (‘தேவதேவனை தென்னிலங்கை எரியெழச்செற்ற வில்லியை’) என்று – மநுஷ்யத்வேபரத்வம் சொல்லிற்றாகவுமாம்; ‘நித்யஸூரிகளேத்துகிறவனை ஆஸ்ரயியுங்கோள்’ என்றுமாம். (பாவநாசனை) கையும் வில்லுமாயிருக்கிறபடியைக் காண, ஸர்வருடைய பாபங்களும் போம்: *பாவநஸ் ஸர்வலோகாநாம் த்வமேவ ரகு4நந்தந* என்கிறபடியே, அந்நிலையிலே சேதநருடைய ஸகலபாபங்களையும் போக்கும் ஸ்வபா4வனை. (பங்கயத்தடங்கண்ணனை) பாபவர்த்தகனானாலும் விடவொண்ணாத படியான கண்ணழகையுடையவனை. (பரவுமினோ) – அக்கண்ணழகிலே தோற்று *ஜிதந்தே புண்ட3ரீகாக்ஷ* என்று அக்ரமமாகப் புகழுங்கோள்.

மூன்றாம் பாட்டு

பரவிவானவரேத்தநின்ற பரமனைப்பரஞ்சோதியை*

குரவைகோத்த குழகனை மணிவண்ணனைக்குடக்கூத்தனை*

அரவமேறியலைகடலமரும் துயில்கொண்டஅண்ணலை*

இரவும் நன்பகலும்விடாது என்றும் ஏத்துதல் மனம்வைம்மினோ.

– அநந்தரம், அந்த க்ஷீரார்ணவஶாயியினுடைய ராமாவதாரத்திலுங்காட்டில் ஆஸ்ரிதார்த்த ப்ரத்ருத்திகளையுடைய க்ருஷ்ணாவதார ஸௌலப்யத்தை அநுஸந்தித்து ‘அவனை ஆஸ்ரயியுங்கோள்’ என்கிறார்.

(பூபாரநிர்ஹரணார்த்தமாக), பரவி – (குணகணங்களைப்)பரக்கச்சொல்லி, வானவர் – தேவர்கள், ஏத்த – ஸ்தோத்ரம்பண்ண, நின்ற – (அவர்களுக்கு ஸந்நிதிபண்ணி) நின்ற, பரமனை – பாரம்யத்தையுடையனாய், பரஞ்சோதியை – (அவதீர்ணதசையிலே _தேவதேவேச_ என்னும்படியான) நிரவதிக ஜ்யோதிஸ்ஸையுடையனாய், (அவதாரஸௌந்தர்யத்தில் அகப்பட்ட கோபகந்யகைகளுக்கு), குரவைகோத்த – திருக்குரவைகோத்த முகத்தாலே, குழகனை – இஷ்டவிநியோகார்ஹமாம்படி பத்யனாய், மணிவண்ணனை – மாணிக்கம்போலே முடிந்து ஆளலாம்படி ஸுலபமான வடிவையுடையனாய், (பெண்களேயன்றியே ஊராக அநுபவிக்கும்படி), குடக்கூத்தனை – குடக்கூத்தாடினவனாய், (இப்படி ஆஸ்ரிதகார்யஞ்செய்கைக்காக) அரவம் – திருவநந்தாழ்வான் மேலே, ஏறி – ஏறி, அலை கடல் – (தன்ஸந்நிதியாலே) கொந்தளித்து அலையெறிகிற கடலிலே, அமரும் – (ரக்ஷணசிந்தையிலே) பொருந்தின, துயில் கொண்ட – நித்ரையை ஸ்வீகரித்த, அண்ணலை – ஸ்வாமியை, நன் – (ஸ்தோத்ரோபயோகத்தாலே) நன்றான, இரவும் பகலும் – அஹோராத்ரவிபாகமின்றியே, விடாது – ஓவாதே, என்றும் – என்றும், ஏத்துதல் – ஸ்தோத்ரம்பண்ணுகையிலே, மனம் வைம்மின் – நெஞ்சை வையுங்கோள். விஷயவைலக்ஷண்யத்தாலே இதுதானே கொண்டு முழுகுமென்று கருத்து.

ஈடு: – மூன்றாம் பாட்டு. கீழ்ச்சொன்ன ராமாவதாரம் பரத்வமென்னும்படியான க்ருஷ்ணாவதாரத்திலே ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

(பரவிவானவரேத்தநின்ற பரமனை) – அக்ரமமாக நித்யஸூரிகள் ஏத்த, அத்தாலே ஸமாதி4க த3ரித்3ரனாய் நின்றவனை. நித்யஸூரிகள் ஏத்தினாலும் பரிச்சேதிக்க வொண்ணாதே அத்வருகாய் நின்றவனை யென்றுமாம். (பரஞ்சோதியை) அவர்களேத்த, அத்தாலே உஜ்ஜ்வலனாயிருக்கிறவனை. *விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே* என்று அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன்வடிவிலே தோற்ற இருக்கிறபடி. *பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய*. சேஷிக்கு அதிசயத்தைப்பண்ணுகை சேஷபூதனுக்கு ஸ்வரூபமிறே. (குரவைகோத்த குழகனை) நித்யஸூரிகளோடு பரிமாறும் பரிமாற்றத்தை இடைப்பெண்களோடு பரிமாறுமிடத்தில், வாசியறக் கலக்க வல்லவனை. குழகன் – பத்யன். (மணி வண்ணனை) அவர்களை வசீகரிக்கைக்கு மருந்திடும் பரிகரத்தை யுடையவனை. நீலமணிபோலே ஸ்ரமஹரமாயிருந்துள்ள விக்ரஹத்தையுடையவனை. (குடக்கூத்தனை)  திருக்குரவையில் அந்வயியாதார்க்கும் இழக்கவொண்ணாதபடிமன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை. (அரவமேறி) குடக்கூத்தாடின ஸ்ரமம் ஆறும்படிக்கு ஈடாகப் போய்த் திருப்பாற்கடலிலே சாய்ந்தருளினபடி. (அலைகடல்) ஸ்வஸந்நிதாநந்தாலே கிளர்த்தியையுடைத்தாயிருக்கை. (அமருந்துயில்) நாச்சிமாராலும் உணர்த்தவொண்ணாதிருக்கை. (அண்ணலை) அநந்தஶாயித்வத்தால் வந்த ஈஸ்வரத்வவுறைப்பையுடையவனை. (இரவும் இத்யாதி) காலம் நடையாடாத தேசத்தில் அநுபவத்தையன்றோ காலம் நடையாடுந்தேசத்திலே, நான் உங்களை அநுபவிக்கச்சொல்லுகிறது. ஏத்துகைக்கீடான காலமாகையாலே ‘நல்லிரவும் நன்பகலு’மென்கிறார். (என்று மேத்துதல்) – *விபந்யவ:* என்கிறபடியே. (மனம்வைம்மிறோ) _நீங்கள் அங்கே நெஞ்சை வைக்குமித்தனையே வேண்டுவது; விஷயம் தன்னடையேகொண்டு முழுகும். நீங்களேத்தவென்று ஒருப்படுமித்தனையே வேண்டுவது; பின்னை உங்களுக்கு உபதே–ப்பார் வேண்டா. நித்யஸூரிகளேத்தும் விஷயத்தையன்றோ நான் உங்களை யேத்தச்சொல்லுகிறது; ஸர்வாதிகனையன்றோ நான் உங்களை யேத்தச்சொல்லுகிறது.  நீங்களேத்துகிற இது தன் பேறென்னுமிடம் வடிவிலே தோற்ற இருக்கிறவனையன்றோ நான் உங்களை யேத்தச் சொல்லுகிறது; உங்களுடைய விலக்காமையே பற்றாசாக வந்து கலக்குமவனையன்றோ நான் உங்களை ஏத்தச்சொல்லுகிறது; யாதானும் நேர்ந்து அணுகவேண்டும் வடிவழகையுடைய வனையன்றோ ஏத்தச்சொல்லுகிறது; உங்களோட்டைக் கலவியாலே செருக்கியிருக் கிறவனையன்றோ ஏத்தச் சொல்லுகிறது. அநந்தசாயியையன்றோ ஏத்தச் சொல்லுகிறது; ஸர்வஸ்வாமியையன்?ேறா ஏத்தச்சொல்லுகிறது; ஒரு காலநியதியுண்டாயிருக்கிறீர்களோ? ஏத்துகைக்குப் பரிகரசூந்யராயிருக்கிறீர்களோ? அதில் அருமையுண்டாய்த் தானிருக்கிறீர்களோ? ஆயிட்டு, (மனம்வைம்மினோ) விஷயங்களிலே ஓடித்திரிந்த மநஸ்ஸை மீட்டு இத்விஷயத்திலே வைக்கப் பாருங்கோள்._

நான்காம் பாட்டு

வைம்மின்நும்மனத்தென்று யானுரைக்கின்றமாயவன்சீர்மையை*

எம்மனோர்களுரைப்பதென் அதுநிற்கநாடொறும்* வானவர்

தம்மையாளுமவனும் நான்முகனும்சடைமுடியண்ணலும்*

செம்மையால்அவன்பாதபங்கயம் சிந்தித்தேத்தித்திரிவரே.

– அநந்தரம், ஈஸ்வராபிமாநிகளுக்கும் ஆஸ்ரயிக்கலாம்படியான
சீலாதிசியத்தையுடையவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

‘நும் மனத்து – உங்கள் நெஞ்சிலே, வைம்மின் – வையுங்கோள்,’ என்று – என்று, யான் உரைக்கின்ற – நான் சொல்லுகிற, மாயவன் – ஆஸ்சர்யகுணசேஷ்டிதங்களை யுடையவனுடைய, சீர்மையை – சீரிதான சீலவத்தையை, எம் அனோர்கள் – (ப்ரவணரான) எம்போல்வார், உரைப்பது – சொல்லுவது, என் – என்? அதுநிற்க – அதுகிடக்க; வானவர்தம்மை ஆளுமவனும் – (தனித்தனியே பதஸ்தரான) வானவர்தங்களையும் (தன்னளவிலே) ஆளும்படியான இந்த்ரனும், நான்முகனும் – (ஸர்வதோமுகமான ஸ்ருஷ்ட்யுபதேசாதிகளைப்பண்ணும்) ப்ரஹ்மாவும், சடைமுடி அண்ணலும் – ஜடாமகுடதரத்வத்தால் வந்த தபோமாஹாத்ம்யத்தாலே லோகத்துக்கு ஈஸ்வரனான ருத்ரனும், செம்மையால் – (தங்கள்துரபிமாநத்தால் வந்த அடைவுகேட்டைவிட்டு சேஷசேஷிபாவத்தால்வந்த) ஆர்ஜவத்தாலே, அவன்-(சேஷியான)அவனுடைய, பங்கயம் பாதம் – நிரதிசயபோக்யமான திருவடிகளை, நாடொறும் – நாள்தோறும், சிந்தித்து – சிந்தித்து, ஏத்தி – ஸ்தோத்ரம்பண்ணி, திரிவர் – (இதுதானேயாத்ரையாக) வர்த்தியாநிற்பர். ஆதலால், அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று கருத்து.

ஈடு: – நாலாம்பாட்டு. அபிமாநப்ரசுரரான ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் தடையின்றிக்கே புக்கு ஆஸ்ரயிக்கலாயிருக்கிற சீலவத்தையைப் பேசுகிறார்.

(வைம்மின் இத்யாதி) ‘உந்தம் ஹ்ருதயத்திலே வையுங்கோள்’ என்று நான் சொல்லுகிற ஆஸ்சர்யமான ஸௌந்தர்யாதி குண சேஷ்டிதங்களை உடையனானவனுடைய சீலவத்தையை. அன்றிக்கே, அதிகாரிபுருஷர்களான ப்ரஹ்மருத்ராதிகளெல்லாம் வந்து ஆஸ்ரயிக்கும்படியன்றோ அவன்பெருமை யென்று, ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக அவன் பரத்வத்தைச் சொல்லிற்றாகவுமாம். (எம்அனோர்கள் உரைப்பதென்) எம்போல்வார் சொல்ல வேண்டுகிறதென்? நாங்கள் சொன்னவாறே பக்திபாரவஸ்யத்தாலே சொன்னோம் என்பர்கள். (அது நிற்க) – அதுகிடக்க.  (நாடொறும் இத்யாதி) அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மருத்ராதிகளெல்லாம் அநந்யப்ரயோஜநரைப் போலே வந்து ஆஸ்ரயிக்கும்படியன்றோ அவனுடைய சீலவத்தை. அன்றிக்கே, அதிகாரிபுருஷர்களான ப்ரஹ்மருத்ராதிகளெல்லாம் வந்து ஆஸ்ரயிக்கும்படியன்றோ அவன்பெருமையென்று ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக அவன் பரத்வத்தைச் சொல்லிற்றாகிறது. ‘நாடொறும் சிந்தித்தேத்தித்திரிவரே’ என்று மேலே அந்வயம்: கீழே அந்வயம்: (வானவர்தம்மையாளுமவனும்) – தேவர்களைச் சனியும் புதனும் மெய்க்காட்டுக்கொண்டு அவர்கள் மிகுதிகுறைகள் ஆராய்ந்து போருகிற இந்த்ரனும், சதுர்த்தசபுவந ஸ்ரஷ்டாவான சதுர்முகனும். (சடைமுடியண்ணலும்) – ஸாதகவேஷங் கிடக்கச் செய்தே ஈஸ்வராபிமாநியான ருத்ரனும். (செம்மையால் இத்யாதி) – ப்ரயோஜநாந்தரபரதையும் நெஞ்சிலேகிடக்கச்செய்தே அநந்யப்ரயோஜநரைப்போலே வந்தாஸ்ரயியாநிற்பர்கள். பா4வ தோஷமும் கிடக்கச் செய்தே தன்னையே பற்றினாரைப் போலேயிருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படியன்றோ அவன்படி யிருக்கிறது என்கிறார். செம்மை – செத்வை. அதாவது – அநந்யப்ரயோஜநரைப்போலே அவன் திருவடிகளை அநுஸந்தித்து, ‘அத்வநுஸந்தாநம் வழிந்து புறப்பட்டசொல்’ என்று தெரியும்படி ஏத்தி, அத்தாலே தரித்துக் கால் நடைதந்தாராய் ஸஞ்சரியா நிற்பர்கள். _பாடித்திரிவனே_ (கண்ணிநுண் 2) என்னுமாபோலே.  ‘வானவர்தம்மை யாளுமவனும் நான்முகனும் சடைமுடியண்ணலும் செம்மையால் அவன்பாதபங்கயம் (நாடொறும்) சிந்தித்தேத்தித் திரிவ’ரென்று அந்வயம்.

ஐந்தாம் பாட்டு

திரியும்காற்றோடுஅகல்விசும்பு திணிந்தமண்கிடந்தகடல்*

எரியும்தீயோடுஇருசுடர்தெய்வம் மற்றும்மற்றும்முற்றுமாய்*

கரியமேனியன்செய்யதாமரைக்கண்ணன் கண்ணன்விண்ணோரிறை*

சுரியும்பல்கருங்குஞ்சி எங்கள்சுடர்முடியண்ணல்தோற்றமே.

– அநந்தரம், அவனுடைய அவதாரம் அகிலவிபூதியோடும் அவிநாபூதம் என்கிறார்.

கரிய மேனியன் – ஸ்யாமளமான வடிவையுடையனாய், செய்ய தாமரைக் கண்ணன் – (அதுக்குப்பரபாகமாய்ச்) சிவந்த தாமரைபோன்ற கண்களையுடையனாய், விண்ணோர் இறை – நித்யஸூரிகளுக்கு நித்யாநுபாத்யமான மேன்மையையுடையனாய், சுரியும் பல் கரும் குஞ்சி – சுருண்டு வெடித்து அலகலகாய்க் கருகின குழலையுடையனாய், எங்கள் – எங்களையும் அடிமைகொள்ளும், சுடர் – ஔஜ்ஜ்வல்யத்தையுடைய, முடி – திருவபிஷேகத்தையுடையனான, அண்ணல் – ஸ்வாமியாயுள்ள, கண்ணன் – க்ருஷ்ணனுடைய, தோற்றம் – ஆவிர்ப்பாவமானது,  திரியும் காற்றோடு – ஸதாகதியாயுள்ள வாயுவோடேகூட, அகல் விசும்பு – விஸ்தீர்ணமான ஆகாசம், திணிந்த மண் – கடிநையான பூமி, கிடந்த கடல் – கரைகடவாதுகிடந்த கடல், எரியும் தீயோடு – ஊர்த்வஜ்வலநமான அக்நியோடேகூட (வ்யஷ்டிஸ்ருஷ்டியந்தர்க்கதமான), இருசுடர் – சந்த்ராதித்யப்ரமுகமான, தெய்வம் – தேவதாவர்க்கம், மற்றும் – மற்றும் மநுஷ்யர், மற்றும் – மற்றும் திர்யக்குக்கள், முற்றுமாய் – ஸ்தாவரமான முற்றுமாயிருக்கும். ‘முற்றுமாய்’ என்ற ஸாமாநாதிகரண்யம்-விஸ்வரூபாத்யாய க்ரமத்திலே தார்யதாரகத்வாதி நிபந்தநமான சரீராத்மபாவப்ரயுக்தம். ‘அவனை – ஏத்துதல் மனம் வைம்மின்’ என்று அந்வயம்.

ஈடு: – அஞ்சாம்பாட்டு.  வாத்ஸல்யத்தாலே எப்போதும் விபூதியோடே கூடி மயில் தோகைவிரித்தாற்போலே ஸவிபூதிகனாய்க்கொண்டு அவனுடைய தோற்றரவு இருப்பது என்னுதல், *பூதாநாமீஸ்வரோணபி ஸந்* என்னும்படியாலே ஐஸ்வர்யாதிகளோடே வந்து அவதரிக்கும் என்னுதல்.

(திரியும் இத்யாதி) ஸததக3தியான வாயு, ஸ்வேதரஸமஸ்தவஸ்துக்களுக்கும் அவகாச ப்ரதாநம் பண்ணும் ஆகாசம், கடிநஸ்வபாவையான பூமி, பகவதாஜ்ஞையாலே கரையேற மாட்டாதே கிடக்கிற கடல், ஊர்த்வஜ்வலந ஸ்வபாவமான அக்நி, ப்ரகாசகரான சந்த்ரஸூர்யர்கள். (தெய்வம் இத்யாதி) தங்களையொழிந்தார்க் கெல்லாம் தங்களை ஆஸ்ரயித்து அபிமதம் பெறவேண்டியிருக்கிற தேவஜாதி, அவர்களை ஆஸ்ரயிக்கிற மநுஷ்யர்கள்,  திர்யக் ஸ்த்தாவரங்கள். (முற்றுமாய்) – இப்படி சொல்லலாம்படியாயிற்று அவனுடைய தோற்றம் இருப்பது. ஆய்-தச்சரீரியாய்: இத்தால் ஜகதாகாரத்வம் சொல்லுகிறது: மேல், அஸாதாரணவிக்ரஹயுக்தனா யிருக்கும் இருப்புச் சொல்லுகிறது, (கரியமேனியன்) – கண்டார்க்குத் தாபத்ரயங்கள் ஆறும்படி ஸ்ரமஹரமான திருமேனியையுடையவன். (செய்யதாமரைக் கண்ணன்) – அகவாயில் வாத்ஸல்ய ப்ரகாசகமான திருக்கண்களை யுடையவன். (கண்ணன்) – ஆஸ்ரிதர்க்குக் கையாளாயுள்ளவன். (விண்ணோரிறை) அந்நிலைதன்னிலே நித்யஸூரிகளுக்கு வந்து ஏத்தவேண்டும்படியான மநுஷ்யத்வே பரத்வத்தையுடையவன். (சுரியும் இத்யாதி) சுருண்டிருப்பதாய், அலகலகாக எண்ணிக்கொள்ளலாய்,  கண்டார் கண்களுக்கு அஞ்சந மிட்டாற்போலே குளிர்ந்திருந்துள்ள மயிர்முடியையுடையனாய். (எங்கள் சுடர்முடியண்ணல்தோற்றமே) அநந்யப்ரயோஜநர்க்கு அநுபா4த்யமாய் ஆதிராஜ்யஸூசகமான ஒளியையுடைத்தான திருவபிஷேகத்தையுடைய ஸர்வேஸ்வரனுடைய தோற்றம் – ப்ரகாசமென்னுதல், அவதாரமென்னுதல்.

ஆறாம் பாட்டு

தோற்றக்கேடவையில்லவனுடையான் அவனொருமூர்த்தியாய்*

சீற்றத்தோடருள்பெற்றவன் அடிக்கீழ்ப்புகநின்றசெங்கண்மால்*

நாற்றத்தோற்றச்சுவையொலி உறலாகிநின்ற* எம்வானவ

ரேற்றையேயன்றி மற்றொருவரையானிலேன்எழுமைக்குமே.

– அநந்தரம், ஆஸ்ரிதவிஷயத்தில் அநவதிகவாத்ஸல்யத்தையுடையவனை யொழிய எனக்கு ஸர்வகாலமும் ஸர்வப்ரகாரோத்தேஸ்யராயிருப்பார் வேறொருவரை உடையேனல்லேன் என்கிறார்

அவை – இதரஸஜாதீயமான, தோற்றக் கேடு – உத்பத்திவிநாஶங்கள், இல்லவன் – இல்லாதவனாய், உடையான் – (கார்யகாலங்களிலே ஆஸ்ரிதார்த்தமான ஆவிர்பாவதிரோபாவங்களை) உடையனாக, அவன் – ப்ரமாணப்ரஸித்தனானவன், ஒரு – (லோகத்தில்நடையாடாத) அத்விதீயமான, மூர்த்தியாய் – நரஸிம்ஹமூர்த்தியாய், சீற்றத்தோடு – (ஹிரண்யவிஷயத்தில்) சீற்றத்தோடே, அருள்பெற்றவன் – (ஸ்வவிஷயத்தில்) அருளைப்பெற்ற ப்ரஹ்லாதனானவன், அடிக்கீழ்-தன்திருவடிகளின்கீழே, புக – ஒதுங்கும்படி, நின்ற – (அவனுக்குஸுலபனாய்) நின்ற, செம் கண்-சிவந்த கண்களையும், மால் – வாத்ஸல்யத்தைமுடையவனாய், நாற்றத் தோற்றச் சுவை யொலி உறலாகி நின்ற எம்வானவரேற்றையேஅன்றி – கந்த, ரூப, ரஸ, சப்த, ஸ்பர்சங்களையுடைத்தான வஸ்துக்களுக்கு நியந்தாவாய்க்கொண்டு நின்று எங்களுக்கு ஸூரிகளை அநுபவிப்பிக்கும் மேன்மையோடொக்க அநுபாத்யனானவனையே ஒழிய, யான் – நான், எழுமைக்கும் – ஸர்வகாலத்திலும், மற்றொருவரை – வே?ெறாருவரை, இலேன் – (உத்தேஸ்யமாக) உடையேனல்லேன்,

ஆதலால் – தொழுமினென்று மேலே அந்வயம். சீற்றத்தோடு அருள்பெற்றவனென்று-சிசுபாலனாகவுஞ் சொல்லுவர்.

ஈடு: – ஆறாம்பாட்டு.  இவர்களைப்போலே கேட்க இராதே, உபதேசநிரபேக்ஷமாக நித்யஸூரிகளைப்போலே, நிரதிசயபோக்யனான நரஸிம்ஹத்தையொழிய வேறொருவரை தா4ரகாதிகளாக உடையேனல்லேன், காலதத்த்வமுள்ளதனையும் என்கிறார்.

(தோற்றக்கேடவையில்லவன்) – உத்பத்தி விநாசங்களில்லாதவன். இதுதான் ஷட்3பா4வ விகாரங்களுக்கும் உபலக்ஷணம். (உடையான்) தோற்றக் கேடுள்ள பதார்த்தங்களடையத் தனக்கு ஶேஷமாகவுடையான்: நிருபாதிகசேஷி. (அவன் ஒருமூர்த்தியாய்) – கர்மமடியான ஜந்மமில்லாதவன் ஆஸ்ரிதார்த்தமாக ஒரு விக்ரஹத்தையுடையனாய். (ஒருமூர்த்தி) அத்விதீயமாய் அத்யந்த விலக்ஷணமான நரஸிம்ஹமாய், ‘அழகியான்தானே அரியுருவன் தானே’ (நான்.திரு.22)யிறே. (சீற்றத்தோடு அருள்பெற்றவன்) – ஒருவிக்ரஹத்தையுடையனானவதுக்கு மேலேயும் ஒன்றிறே சீற்றத்தையும் அருளையும் ஏககாலத்திலேயுடையனானதுவும்.  (சீற்றம் இத்யாதி) – ஹிரண்யன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்கச் செய்தே, அருளுக்குப் பாத்ரபூ4தனான ஸ்ரீப்ரஹ்லாதாழ்வானுக்குத் திருவடிகளின் கீழே வந்து புகுரலாம்படி நின்ற. சீற்றத்தோடே அருள்பெற்றவ னென்கிறதாயிற்று. ஹிரண்யன் த்வேஷத்துக்கு விஷயமானாற் போலேயாயிற்று, இவன் அருளுக்கு விஷயமானபடி. அவன் ஒரு மூர்த்தியாய்ச் சீற்றத்தோடு என்னவுமாம். (அடிக்கீழ்ப்புகநின்றசெங்கண்மால்) – ‘ஹிரண்யன்பக்கல் சீற்றமும் செல்லாநிற்க, ஸ்ரீப்ரஹ்லாதாழ்வானுக்கு கிட்டலாயிருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘ஸிம்ஹம் ஆனைமேலே சீறினாலும் குட்டிக்கு முலையுண்ணலாம்படி யிருக்குமிறே’ என்று அருளிச் செய்தார்; ‘ஆஸ்ரிதவாத்ஸல்யத்தாலே அவர்கள் விரோதிகள்மேலே சீறின சீற்றமானால் பின்னை அவர்களுக்கு அணையவொண்௰தபடி யிருக்குமோ?’ என்று அருளிச்செய்தார். (செங்கண்மால்) – இரண்டினுடையவும் கார்யம். ஹிரண்யன்பக்கல் சீற்றத்தாலும் சிவந்திருக்கும். ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான்பக்கல் வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்குமிறே. (மால்) – *மஹாவிஷ்ணும்* என்கிறபடியே, ஹிரண்யனுக்குக் கிட்டவொண்ணாதபடி பெரியனாயிருக்கும் இருப்பைச் சொல்லுதல்; ஸ்ரீப்ரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாம்படி த்யாமோஹத்தையுடையனாயிருக்குமென்னுதல். (நாற்றம் இத்யாதி) நாற்றம் – க3ந்தம். தோற்றம் – ரூபம். சுவை – ரஸம். ஒலி – ஶப்தம். உறல் – ஸ்பர்சம். (ஆகிநின்ற) சப்தாதிகளெல்லாம் எனக்குத் தானேயாய் நின்ற. ஆருக்குப் போலேயென்னில், (எம்வானவர் இத்யாதி) நித்யஸூரிகளுக்கு ஸர்வவிதபோ4க்3யமும் தானேயாய் நிற்குமாபோலே. (மற்று இத்யாதி) வேறொருவரை உத்தே•யமாக உடையேனல்லேன். ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில், (எழுமைக்குமே)  காலதத்த்வ முள்ளதனையும். அவன் நித்யஸூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என்பக்கலில் இருக்க, நான் வேறொன்றை போ4க்3யமாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனையொழிய வேறொன்றை போ4க்3யமாக நினைக்கிலன்றோ நான் வேறொன்றை போ4க்3யமாக நினைப்பது?

ஏழாம் பாட்டு

எழுமைக்கும்எனதாவிக்கு இன்னமுதத்தினைஎனதாருயிர்*

கெழுமியகதிர்ச்சோதியை மணிவண்ணனைக்குடக்கூத்தனை*

விழுமியஅமரர்முனிவர்விழுங்கும் கன்னற்கனியினை*

தொழுமின்தூயமனத்தராய் இறையும்நில்லாதுயரங்களே.

– அநந்தரம்,  இப்படி நிரதிஶயபோக்யனாய்க்கொண்டு ஸுலபனானவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

எழுமைக்கும் – ஸர்வாவஸ்தையிலும், எனது ஆவிக்கு – என் ஆத்மாவுக்கு, இன்அமுதத்தினை – நிரதிசயபோக்யபூதனாய், எனது உயிர் ஆர் – என்னுடைய ஸ்வரூபத்தோடே செறிய, கெழுமிய கதிர் – கலந்து அத்தாலே ப்ரகாசிதமான, சோதியை-தேஜஸ்ஸையுடையனாய், மணிவண்ணனை – (என்னோடுகலக்கைக்கு அடியான) வடிவழகையும், குடக்கூத்தனை – சேஷ்டிதத்தையுமுடையனாய், விழுமிய – சீரியரான, அமரர் – வைகுந்தத்தமரரும், முனிவர் – முனிவரும், விழுங்கும் – புஜிக்கும், கன்னல் கனியினை – கன்னல்சேர்ந்த கனிபோலே நிரதிசயபோக்யனானவனை, தூய மனத்தராய் – (ப்ரயோஜநாந்தரத்தாலே நெஞ்சை தூஷியாதே) அநந்யப்ரயோஜநராய்க்கொண்டு, தொழுமின் – ஆஸ்ரயியுங்கோள்; துயரங்கள் – (அநுபவப்ரதிபந்தகமான) துரிதங்கள், இறையும் – ஏகதேசமும், நில்லா – நில்லாது.

ஈடு: – ஏழாம்பாட்டு. இப்படிஸுலபனானவன்பக்கல் துர்லபத்வசங்கையைத் தவிர்ந்து அவனை ஆஸ்ரயியுங்கோள், உங்களுடைய ஸர்வது:க்கங்களும் போம்படி என்கிறார்.

(எழுமைக்கும் எனதாவிக்கு இன் அமுதத்தினை) – காலதத்த்வமுள்ளதனையும் தன் சுவடறியாதே இதர விஷய ப்ரவணமான என் நெஞ்சுக்குப் பரமபோக்யனானவனை. பெரியவற்றை ஏழேழாகச் சொல்லக்கடவதிறே; காலமெல்லாம் என்றபடி. (எனது ஆருயிர் இத்யாதி) – அநாதியாக ஸம்ஸரித்துப் போந்த என் ஆத்மாவோடே கலந்து அத்தாலே உஜ்ஜ்வலனானவனை. தாம் கிட்டுகை அத்தலைக்கு நிறக்கேடு என்றிருந்தார் இவர்; அது மற்றைப்படியாய்த் தம்மைச் செறியச் செறிய தீ3ப்தனாயிருந்தான். (மணிவண்ணனை இத்யாதி) – இத்தலையில் இசைவுபாராதே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு ஹேதுக்கள் இருக்கிறபடி. வடிவழகையும் மநோஹாரிசேஷ்டி தங்களையுமுடையவனை. வண்ணம் – நிறம். நீலமணி போலே முடிந்துஆளலாம்படி யிருக்கிறவனென்றுமாம். ஆக்கரான தேவர்களன்றிக்கே சீரியரான ‘வைகுந்தத்தமரர்க்கும் முனிவர்க்கும்’ (10-9-9) கன்னல்போலவும் கனிபோலவும் நிரதிசய போ4க்3யனானவனை. *ஸர்வக3ந்தஸ் ஸர்வரஸ:* என்னக்கடவதிறே. (கன்னல்கனியினைத் தொழுமின்) – _மாங்கனி_ என்னுமாபோலே, கன்னல் பழுத்த பழங்காணும் இது. இதுவன்றோ நான் உங்களுக்கு இடுகிற வேப்பங்குடிநீர்; பால்குடிக்கக் கால்பிடிக்கிறேனன்றோ? (தூயமனத்தராய்) – ‘கிட்ட அரியனோ? எளியனோ? அறியவரியனோ? எளியனோ? இவனைப்பற்றுவோமோ? அன்றிக்கே, ப்ரயோஜநத்தைக்கொண்டு அகலுவோமோ?’ என்று  இங்ஙனே ஸம்சயாக்ராந்தராய்ப் போகாதே, இவன்தன்னையே ப்ரயோஜநமாக ஆஸ்ரயியுங்கோள். (இறையும்நில்லா துயரங்களே) – இப்படி ஸம்சயிக்கைக்கு  அடியான மஹாபாபங்கள் வாஸனையோடே பறிந்துபோம்.  ஸாம்சாரிகமான து:க்கங்கள் நிஸ்சேஷமாகப்போம் என்றுமாம்.

எட்டாம் பாட்டு

துயரமேதருதுன்பவின்பவினைகளாய் அவையல்லனாய்*

உயரநின்றதோர்சோதியாய் உலகேழுமுண்டுமிழ்ந்தான்தன்னை*

அயரவாங்கும்நமன்தமர்க்கு அருநஞ்சினைஅச்சுதன்தன்னை*

தயரதற்குமகன்தன்னையன்றி மற்றிலேன்தஞ்சமாகவே.

– அநந்தரம், ஆஸ்ரிதரை நழுவவிடாத சக்ரவர்த்தி திருமகனையொழிய வேறு தஞ்சமில்லை என்கிறார்.

துயரமே தரு – (நிஷ்க்ருஷ்டபரிதாபத்தையே) தரக்கடவதான, துன்பம் – து:கத்துக்கும், இன்பம் – (து:கஸாத்யத்வ து:கமிஸ்ரத்வ து:கோதர்க்கத்வ வி–ஷ்டமாகையாலே நிஷ்க்ருஷ்ட பரிதாபகரமான) ஸுகத்துக்கும் ஹேதுவான, வினைகளாய் – பாபரூபமாயும் புண்யரூபமாயுமுள்ள கர்மங்களுக்கு நிர்வாஹகனாய், அவை – அவற்றுக்கு, அல்லனாய் – தான் வஸ்யனல்லனாய், உயர – (_விஸ்வத: ப்ருஷ்டேஷு ஸர்வத: ப்ருஷ்டேஷு_ என்கிற) உயர்த்தியையுடைத்தாய், நின்றது ஓர்-நித்யமாய் அத்விதீயமான, சோதியாய்-தேஜோமய தித்யதேஹத்தையுடையனாய், உலகேழும்-(கர்மவஸ்யமான) ஸகலலோகங்களுக்கும் ப்ரளயாபத்துவந்தால், உண்டு – உண்டு, உமிழ்ந்தான் தன்னை – உமிழ்ந்து ரக்ஷிக்குமவனாய், அயர – மோஹிக்கும்படி, வாங்கும் – ப்ரா௰பஹாரம் பண்ணும், நமன்தமர்க்கு – யமபடர்க்கு, அரு – மீட்க அரிய, நஞ்சினை – நஞ்சாய்க்கொண்டு, அச்சுதன்தன்னை – ஆஸ்ரிதரை நழுவவிடாத ஸ்வபாவனான, தயரதற்கு மகன் தன்னை – சக்ரவர்த்தி திருமகனை, அன்றி – ஒழிய, மற்று – மற்றொரு பகவத்த்யக்தியும் அகப்பட, தஞ்சமாக இலேன் – உடையேனல்லேன். தஞ்சம் – ஆபத்துக்கு உறுதுணை.

ஈடு: – எட்டாம்பாட்டு. ஸம்ஸாரிகளுக்கும் ருசிபிறக்கைக்காக ‘நான் சக்ரவர்த்தி திருமகனையல்லது ஆபத்34நமாகப் பற்றியிரேன்’ என்று ஸ்வஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார்.

(துயரம் இத்யாதி) – து:க்கத்தையே தரக்கடவதான புண்யபாபரூபமான கர்மங்களுக்கு நியாமகனாய். துன்பவினையோடு இன்பவினையோடு வாசியற இரண்டும் து:க்கத்தையே பண்ணித்தரு மென்றாயிற்று இருக்கிறார் இவர்; பகவச்சேஷத்வ விரோதியாய்க் கொண்டு ப3ந்தகமாகை இரண்டுக்கும் ஒக்குமிறே; *புண்யபாபே விதூ4ய* என்னக்கடவதிறே. (அவையல்லனாய்) அகர்மவஸ்யனாய். *அந•நந்நந்ய:* என்கிறபடியே, தான் இவற்றால் வஸ்யனல்லாமையன்றிக்கே நியாமகத்வத்தால் வந்த புகரையுடையனாயிருக்கை. (உயர இத்யாதி) *க்ஷயந்த மஸ்ய ரஜஸ: பராகே* என்றும் *தமஸ: பரஸ்தாத்* என்றும் சொல்லுகிறபடியே, இங்குள்ளாரால் சென்று கிட்டவொண்ணாதாயிருக்கிற தமஸ: பரஸ்தாத் வர்த்தமாநதேஶத்திலே நிரவதிக தேஜோரூபமான தித்யவிக்ரஹத்தையுடையனாயிருக்கிற இருப்பைச் சொல்லுகிறது. *விஸ்வத: ப்ருஷ்ட்டேஷு ஸர்வத:ப்ருஷ்ட்டேஷு* என்கிற உயர்த்தியையுடைத்தாய், நித்யமாய், அத்விதீயமான தேஜோமய தித்யதேசத்தையுடையவனாய் என்றுமாம். (உலகு இத்யாதி) – இப்படி புஷ்கலனாயிருந்தானேயாகிலும், விபூத்யேகதேசமான ஸம்ஸாரத்தை ப்ரளயங்கொண்டதென்றால் இங்கேவந்து வயிற்றிலே எடுத்துவைத்து நோக்கி, _இத்தனைபோதும் காணப்பெறாமையாலே இவை என்படுகிறனவோ?_ என்று உமிழ்ந்து பார்க்குமவனை; வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய த4நங்களை விழுங்கி, பின்னை அமர்ந்தநிலத்திலே புக்கால் புறப்படவிட்டுப் பார்க்குமாபோலே. (அயர) தன்திருவடிகளை ஆஸ்ரயித்தாரை அறிவுகலங்கும்படிக்கு ஈடாக ப்ராணவியோக3த்தைப் பண்ணக் கடவராயிருந்துள்ள யமபடர்க்குக் காற்றவொண்௰த நஞ்சாயுள்ளவனை. (அச்சுதன் தன்னை) – தன்னையாஸ்ரயித்தாரை யமவஸ்யராக விட்டுக்கொடாதவனை.  ‘உயிர் கொண்டு உடலொழிய ஓடும்போது ஓடி அயர்வென்ற தீர்க்குமவனிறே’ (நான்.திரு.88) எங்ஙனே கண்டோம்? என்ன, (தயரதற்கு மகன்தன்னை) – தான் ராஜ்யம்பண்ணாநிற்கச் செய்தே ஒரு ப்ராஹ்மணகுமாரனுக்கு  அகாலம்ருதியுண்டாக, அவனை வாளாலே மீட்டும்; ராவணவதம் பண்ணிப் படைக்குறிகாணாநிற்கிறவளவிலே முதலிகளிலே சிலரைக் காணாதொழிய, இந்த்ரனை அழைத்துப்போகவிட்டு வரங்கேட்கிற த்யாஜத்தாலே அவனையிடுவித்து அவர்களையுங் கூட்டிக்கொண்டு போன சக்ரவர்த்திதிருமகனை; ஒரு ருஷிபுத்ரனுக்கு அகாலம்ருதி வர, அம்பாலே மீட்டுக்கொடுத்துஞ் செய்தவை. தயரதன் மகன் என்னாதே, ‘தயரதற்குமகன் தன்னை’ – என்கிறது ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘ராஜ்யத்தைத் தந்தேன்’ என்னா, புரிந்து ஸ்த்ரீபரதந்த்ரனாய் ‘நான் தந்திலேன், நீ காடேறப்போ’ என்னா, இப்படி சொல்லலாம்படி அவனுக்கு இஷ்ட விநியோகார்ஹனான புத்ரனை. (அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே) – இத்விடத்தை  ப4ட்டர் அருளிச்செய்யாநிற்க, சீயர் ‘இவர் புக்கவிடமெங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு  இது பணியிறே’ என்ன,  ‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது பாவநத்வத்தைப்பற்ற; இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்ரவர்த்தி திருமகனையே’ என்று அருளிச்செய்தார்; *பாவநஸ் ஸர்வலோகாநாம் த்வமேவ* என்கிறதில்லையோ இவரையும்? என்னில்,- _அவனும் இவரோடொத்தானொருத்தனிறே; இவர் ‘போ4க்3யவஸ்து வேறில்லை’ என்றிருக்குமோ பாதி, அவன் ‘பாவநத்வத்துக்கும் இவரொழிய வேறில்லை’ என்றிருப்பான் ஒருவனாயிற்று._ ப4ட்டர் ராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக, சிறியாத்தான் _பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததே யாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலைகட்டித்தூதுபோன க்ருஷ்ணனுடைய நீர்மையில்லையே சக்ரவர்த்திதிருமகனுக்கு_ என்ன, _அதுவோ! பெருமாள் தூது போகாமை யன்றுகாண்: இக்ஷ்வாகுவம்ஸ்யரைத் தூதுபோகவிடுவாரில்லாமைகாண்_ என்று அருளிச்செய்தார். _அத்வவதாரத்தில் இழவு தீருகைக்காகவிறே க்ருஷ்ணனாய் அவதரித்துத் தூதுபோயிற்று; _அவனே பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெரு நிலத்தார் இன்னார் தூதனென நின்றா_(திருமொழி 2-2-3) னிறே.  பாரதந்த்ர்யரஸம் அநுபவிக்கைக்காகப் போந்தபின்  இதில் ஒன்று குறைந்ததாகிறது என்று இருக்குமே. _எம்பெருமானார் திருவாராதநம் பண்ணிப் போருவது ஒரு பிள்ளையிறே. இங்ஙனேயிருக்கச்செய்தே ஒருநாள் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சக்ரவர்த்திதிருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய்; அவரைப்பார்த்து _இந்த *மாமேகம் சரணம் வ்ரஜ* என்று தேவையிடாதார் எழுந்தருளினார்_ என்றாராம்; ஆபி4முக்க்யத்தாலே பெறலாமென்றால், அத்வாபி4முக்க்யந்தானும் பரமபக்தியோபாதி அரியதாயிருக்குமிறே இச்சேதநனைப் பார்த்தால். _இத்தலையில் ஆபி4முக்க்யத்துக்கு மேற்படவேண்டா_ என்று சொல்லுகிறவையெல்லாம் சரண்யனுடைய நீர்மையைப்பற்றச் சொல்லுகிறது; இவனுக்கு வேண்டுவது சொல்லப்புக்கால் *மஹாவிஸ்வாஸபூர்வகம்* என்ன வேண்டும்படியாயிருக்குமிறே. _ஒருசிறாயை விஸ்வஸித்து ஆறுமாஸத்துக்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான். அத்வோபாதி விஸ்வாஸமாகிலும் வேண்டாவோ ப43வத்3விஷயத்தைப் பற்றுவார்களுக்கு?_ என்று அருளிச் செய்வர்.

ஒன்பதாம் பாட்டு

தஞ்சமாகியதந்தைதாயொடு தானுமாய் அவையல்லனாய்*

எஞ்சலிலமரர்குலமுதல் மூவர்தம்முள்ளுமாதியை*

அஞ்சிநீருலகத்துள்ளீர்கள் அவனிவனென்றுகூழேன்மின்*

நெஞ்சினால்நினைப்பான்யவன் அவனாகும்நீள்கடல்வண்ணனே.

– அநந்தரம், கீழ் உக்தமான பரத்வமும் அவதாரங்களும் அஸ்மதாதிகளுக்கு நிலமன்றென்று இறாயாதே, பிற்பட்டார்க்கும் ஆஸ்ரயிக்கலாம்படிஸுலபமுமாய் ஸர்வவிதபந்துவுமான அர்ச்சாவதாரத்தை ஸம்சயரஹிதராய்க் கொண்டு ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

தஞ்சமாகிய – (ஓரவஸ்தையிலே பொகட்டுப்போம் தாயுந் தந்தையு மன்றியே இவன் விடுமளவிலும் தான்விடாத) தஞ்சமாய், தந்தைதாயொடு – (ஹிதபரத்வத்தாலும் ப்ரியபரத்வத்தாலும்) தந்தையுந் தாயுமாய், (அவர்களோடுகூட) தானும் ஆய் – (தனக்கு விநாசகரனன்றித்தஞ்சமாய்த்)  தனக்குநன்மையைப்பார்க்குந் தானுமாய், அவை அல்லனாய்-அத்வளவல்லாத ஸர்வவிதபந்துவுமாய், எஞ்சல் இல் – அநுபவஸங் கோசரஹிதரான, அமரர் குலம் முதல் – நித்யஸூரிஸமூஹத்துக்கு ஸத்தாதிஹேதுபூதனாய், மூவர்தம்முள்ளும் – ப்ரஹ்மாதிமூர்த்தித்ரயத்திலும் வைத்துக்கொண்டு, ஆதியை – ப்ரதாநனாவனைப்பற்ற, உலகத்து உள்ளீர்கள் – லௌகிகரான, நீர்-நீங்கள், அஞ்சி – (மேன்மையைக்கண்டு) கலங்கி, அவன் – (அபரிச்சிந்நமஹிமனானவன்) அவன், இவன் – (நாம்நினைத்தது வடிவானவன்) இவன், என்று – என்கிற உத்கர்ஷாபகர்ஷபுத்தியாலே, கூழேன்மின் – (இவன் ஆஸ்ரயணீயனாகக்கூடுமோ? கூடாதோ? என்று) ஸம்சயியாதே, நெஞ்சினால் – நெஞ்சாலே, நினைப்பான் – நினைத்து  உகந்தருளுவிக்கப்பட்டவன், யவன் – யாவனொருவன், அவன் – அவன், கடல் – கடல்போலே, நீள் – அளவிறந்த, வண்ணன் – ஸ்வபாவத்தையுடைய ஸர்வேஸ்வரன், ஆகும் – ஆகும்.

_தாமர்ச்சயேத்_ என்கிற கணக்கிலே ஆஸ்ரயணீயமான இந்தவிக்ரஹத்துக்குள்ளே _தாமேவ ப்ரஹ்ம ரூபிணிம்_ என்று ப்ராப்யவிக்ரஹமும் அந்தர்ப்பூதமென்று கருத்து. கூழ்ப்பு – ஸம்ஶயம்.

ஈடு: – ஒன்பதாம்பாட்டு. _பரத்வமே தொடங்கி அவதாரஸௌலப்யத்தளவும் வர உபதேசித்து ‘ஆஸ்ரயியுங்கோள்’ என்னாநின்றீர். பரத்வம் அவாங்மநஸகோ3சரம்; அவதாரத்துக்குப்பிற்பாடரானோம்; நாங்கள் எங்கே யாரை ஆஸ்ரயிப்பது?_ என்ன, _நீங்கள் உகந்தபடியே உகந்தருளப்பண்ண, அத்திருமேனியையே அப்ராக்ருத தித்யஸம்ஸ்த்தாநத் தோடொக்க விரும்பும் அர்ச்சாவதாரத்தை ஆஸ்ரயியுங்கோள்_ என்கிறார். இத்திருவாய்மொழிக்கு நிதாநம் இப்பாட்டு.

(தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய்) புறம்புள்ளார், ‘தாய் தமப்பன்’ என்று ஒருபேராய், இவனுக்கு ஓர் இடர் வந்தவாறே போகட்டுப் போவர்கள்; இவனுக்கு ஏதேனும் ஒரு இடர் வந்தாலும் அப்போது முகங்காட்டி ரக்ஷிப்பான் இவனொருவனுமேயாயிற்று. மாதாபிதாக்கள் ‘இவன் பிறந்த முஹூர்த்தம் பொல்லாதது’ என்று நாற்சந்தியிலே வைத்துப் போவாரும், ஆபத்காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாருமா யிருக்கும்; அவர்களைப் போலன்றிக்கே, தங்களை அழியமாறியும் நோக்கும் தாயும் தந்தையுமாய். இவர்களோடு உண்டான ப3ந்தந்தான் கர்மமடியாக வந்ததாகையாலே அக்கர்மம் க்ஷயிக்க க்ஷயிக்கும்; இங்கு அங்ஙனன்றிக்கே. *பூ4தாநாம் யோணத்யய: பிதா*, *ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதாமாதாச மாத4வ:* என்கிறபடியே ஸத்தாயோகி ஸகலபதார்த்தங்களுக்கும் பிதாவாயிருக்கும்; அதுதன்னிலும்  இழவுக்குக் கண்ணநீர் பாயவேண்டாத பிதாவாயிருக்கும்.  (தானுமாய்) தந்தையானவன் தாயாக மாட்டான்; தாயானவள் தந்தையாகமாட்டாள்;  இவர்களிருவரும் இவன்தானாக மாட்டார்கள்; இவன்தான் இவர்களிருவருமாக மாட்டான்; இவையெல்லாமாய். (தானுமாய்) மாதாபிதாக்கள் போகட்டுப் போனவன்றும் ‘நான் ஜீவிக்க வேணும், எனக்கு நன்மை உண்டாகவேணும்’ என்றிறே தான் இருப்பது; இப்படி தனக்கு நன்மைபார்க்கும் தானுமாய். ‘தஞ்ச’மாகிய தந்தை, ‘தஞ்ச’மாகிய தாய், ‘தஞ்ச’மாகிய தான் என்று எல்லாவிடத்திலும் தஞ்சம் வரக்கடவது. தாயும் தமப்பனும் வேணுமாகில் தஞ்சமன்றிக்கே யொழிகிறார்கள்; தான் தனக்குத் தஞ்சமன்றோவென்னில்; – அன்று, *விசித்ரா தே3ஹஸம்பத்திரீஸ்வராய நிவேதி3தும்* என்கிறபடியே ஸர்வேஸ்வரன் இவனுக்குக் கரசரணாத்3யவயவங்களைக் கொடுத்துவிட்டால், _அந்நாள் நீதந்த வாக்கையின் வழி யுழல்வேன்_ (3-2-1) என்கிறபடியே அபதே2ப்ரத்ருத்தனாமவனிறே; ஆகையாலே, தனக்குத்தான் தஞ்சமல்லன். (அவையல்லனாய்) – தந்தை, தாய், தான் என்னும் இத்வளவன்றிக்கே, *மாதா பிதா ப்4ராதா நிவாஸஸ்சரணம் ஸுஹ்ருத்3 க3திர் நாராயண:* என்றும், *பித்ரு மாத்ரு ஸுத ப்4ராத்ரு தா3ர மித்ராத3யோணபிவா, ஏகைகப2லலாபா4ய ஸர்வலாபா4ய கேஶவ:* என்றும் சொல்லுகிறபடியே ஸர்வோபகாரகனும் ஸர்வவித ப3ந்துவும் அவனேயிறே. (எஞ்சலில் அமரர் இத்யாதி) – இப்படியிருக்கிறவன் ஆர் என்னில்;-நித்யஸூரிகளுக்கு  ஜீவநஹேதுவானவ னென்கிறார். எஞ்சல் – சுருங்குதல். இல் – இல்லாமை. பகவதநுபவத்தில் ஸங்கோசமில்லாத நித்யஸூரிகள் குலமுண்டு-திரள். அதுக்கு நிர்வாஹகனை. (மூவர்தம்முள்ளும் ஆதியை) மூவர் தாம் உள்ளுகிற ஆதியை – த்யேயவஸ்துவை. *காரணந்து த்யேய:*இறே. ப்ரஹ்மருத்ரேந்த்ரர்களுக்கும் அந்தர்யாமியாய் நிர்வாஹகனுமானவனையென்றுமாம்; மூவரிலும் வைத்துக்கொண்டு ப்ரதாநனானவனையென்றுமாம். அப்போது இந்த்ரனையொழியக்கடவது. மூவரென்கிற இது கணநையாய், மூவரிலும்வைத்துக்கொண்டு காரணபூ4தனென்றபடி (அஞ்சி) கீழ்ச்சொன்னவையெல்லாம் அச்சத்துக்கு உடலிறே. ஜகத்துக்கு ஸர்வவித ப4ந்துவுமாயிருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ? நித்யஸூரிகளுக்கு ஸத்தாஹேதுவா யிருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ? ப்ரஹ்மருத்ரர்களுக்கு நிர்வாஹகனாயிருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ? என்று இங்ஙனே அஞ்சி. (நீர் உலகத்துள்ளீர்கள்) –  லௌகிகரான நீங்கள். (அவனிவனென்று கூழேன்மின்) அவனாகிறான் – தேசகாலவஸ்துக்களால் அபரிச்சிந்நனாய் அஸாதாரண விக்ரஹத்தோடே நித்யஸூரிகளுக்கு அநுபா4த்யனாய்க் கொண்டிருக்கிறானொருவன்; இவனாகிறான் – தேசகால வஸ்துக்களாற்பிற்பட்டு, நாம் உகந்ததொரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக்கொண்டு இத்வழியாலே நம் பு3த்3யதீ4நனாயிருப்பானொருவன். ஆன பின்பு, அவன் அபரிச்சிந்நன்; இவன் பரிச்சிந்நனென்று இங்ஙனே ஸம்சயாக்ராந்தராகாதே கொள்ளுங்கோள். (கூழ்ப்பு – ஸம்சயம்.) (நெஞ்சினால்நினைப்பான் யவன்) மநஸ்ஸாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினிகோள். (அவனாகும் நீள் கடல்வண்ணனே) அபரிச்சேத்யமஹிமனான ஸர்வே•வரன் அத்தையே தனக்கு அஸாதாரணவிக்ரஹமாகக் கொண்டு விரும்பும். *ப்ரதிமாஸ்வப்ரபு3த்3தா4நாம்* என்று ருஷிகளைப்போலே தம் வாயாற் சொல்ல மாட்டாமையாலே ‘அவனிவன்’ என்கிறார். _அங்குத்தைக்கு உகந்தருளின இடத்தை விபூ4தியாக நினையாதே,  இங்குத்தைக்கு அத்விடத்தை விபூ4தியாக நினையுங்கோள்_ என்று பணிக்கும் ஆண்டான்; *யேயதா மாம் ப்ரபத்யந்தே* என்றும், *மநஸாணபிக்லுப்த:* என்றும், *ஸ்ம்ருதம் ஸங்கல்பநாமயம்* என்றும். *ஸுவர்ணரஜதாதிபி:* என்றும் சொல்லுகிறபடியே அஸாதாரண விக்ரஹத்தை நாம் ஆதரிக்கிறதும் ‘அவன் பரிக்3ரஹித்தது’ என்றிறே; அத்வோபாதி இதுவும் அவன் பரிக்3ரஹித்தானானால் ஆதரிக்கத் தட்டில்லையிறே. முதல்தன்னிலே அவன் திருமேனியைப் பரிக்3ரஹித்ததும், *ப4க்தாநாம்* என்கிறபடியே ஆஸ்ரிதார்த்தமாகவிறே: அது கார்யகரமாமிடத்திலேயிறே மிகவும் உறைக்க இருப்பது; ஆகையாலே, நீள்கடல்வண்ணன் அவனாகும்.

பத்தாம் பாட்டு

கடல்வண்ணன்கண்ணன் விண்ணவர்கருமாணிக்கம் எனதாருயிர்*

படவரவினணைக்கிடந்த பரஞ்சுடர்பண்டுநூற்றுவர்*

அடவரும்படைமங்க ஐவர்கட்காகிவெஞ்சமத்து* அன்றுதேர்

கடவியபெருமான் கனைகழல்காண்பது என்றுகொல்கண்களே.

– அநந்தரம், இப்படி ஆஸ்ரித பராதீநதைக்குச் சிரமஞ்செய்த க்ருஷ்ணத்ருத்தாந்தத்தை அநுஸந்தித்து உபதேசாநந்தரம் தாம் அநுபவிக்க ஆசைப்படுகிறார்.

விண்ணவர் – பரமபதவாஸிகளுக்கு, கருமாணிக்கம் – நீலரத்நம்போலே அவிகாராகாரனாய்க்கொண்டு போக்யனாய், (லீலாவிபூதிநிர்வஹணார்த்தமாக), படம் – (ஸ்வஸ்பர்சத்தாலே விகஸித) பணங்களையுடையனாய், அரவின் – (ஜாதிப்ரயுக்தமான மென்மை குளிர்த்தி நாற்றங்களையுடைய) அநந்தனாகிற, அணைக் கிடந்த – அணையின்மேலே, பரஞ்சுடர் – (பரபாகத்தால் வந்த தேஜஸ்ஸாலே ஸர்வாதிகனென்று தோன்றும்படியான) பேரொளியையுடையனாய், (அபரிச்சிந்ந மாஹாத்ம்யத்தை உடையனாய்), கடல்வண்ணன் – கடல்போலே அளவிறந்த குணங்களையுடையனாய் ஸ்ரமஹரமான வடிவையுடைய, கண்ணன் – க்ருஷ்ணன், எனது – எனக்கு, ஆர் உயிர் – தன்னை யொழியச்செல்லாதபடி தாரகனாய்க் கொண்டு, பண்டு – முற்காலத்திலே, நூற்றுவர் – (துர்யோதநாதிகள்) நூற்றுவரதாய், அட வரும் – தன்பக்கலிலே தீங்குநினைத்து வருகிற, படை – படையானது, மங்க – நசிக்கும்படியாக, ஐவர்கட்கு – பாண்டவர்களைவர்க்கும், ஆகி – ஸர்வப்ரகார ரக்ஷகனாய், வெம் சமத்து – வெத்விதமான ஸமரத்திலே, அன்று – (சத்ருக்கள் மேலிட்டு வந்த) அன்று, தேர் கடவிய – தேரை (ஸாரதியாய்நின்று) நடத்தின, பெருமான் – சீலாதிகனுடைய, கனை கழல் – ஸுஸ்வநமான வெற்றிவீரக்கழல் செறிந்த திருவடிகளை, கண்கள் – கண்கள், காண்பது – (தம் ஆசைதீரக்) காண்பது, என்றுகொல் – என்றோ?

ஈடு: – பத்தாம்பாட்டு. தாம் உபதேசிக்கத்தொடங்கின ஸௌலப்யத்தை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச்செய்து, அநந்தரம், தன் துறையான க்ருஷ்ணாவதாரத்திலே போய், ‘நான் கண்ணாலே கண்டு அனுபவிக்கப்பெறுவது என்றோ?’என்னும் அநவாப்தியோடே தலைக்கட்டுகிறார். அருமையும் எளிமையும் பாரார்களிறே, ஓரோ விஷயங்களிலே ப்ரவணராயிருப்பார்; பரத்வத்துக்கு உத்கர்ஷமுண்டாய், போவாரும் பலருண்டாயிருக்கச்செய்தேயும் *பாவோ நாந்யத்ர கச்சதி* என்றானிறே திருவடி; அப்படி, க்ருஷ்ணாவதாரத்திற்காட்டில் அர்ச்சாவதாரத்துக்கு நீர்மைமிக்கிருந்ததேயாகிலும், இவர் _எத்திறம்!_ (1-3-1) என்று ஆழங்கால் பட்டது க்ருஷ்ணாவதாரத்திலேயாயிற்று. _தயரதற்கு மகன்தன்னையன்றி மற்றிலேன்_ (3-6-8) என்றது செய்வதென்? என்னில்,-இத்வருகில் நீர்மை காணுமளவுமிறே இது சொல்லுகிறது. ஆனால், அதில் நீர்மை மிக்க இடமன்றோ அர்ச்சாவதாரம்? என்னில்,-அதுக்குமுன்பே பரிஹாரஞ் சொல்லிற்றிறே.

(கடல்வண்ணன் இத்யாதி – விண்ணவர்கருமாணிக்கம்) – நித்யஸூரிகளுக்கு அநுபா4த்யமான விக்ரஹத்தையுடையவன். (படவரவினணைக் கிடந்த பரஞ்சுடர்) – அங்கு நின்றும் பேர்ந்து, ப்ரஹ்மாதிகள் கூக்குரல்கேட்கைக்காகத் திருப்பாற்கடலிலே அணித்தாகவந்து கண்வளர்ந்தருளினவன். (கடல்வண்ணன் கண்ணன்) – அங்குநின்றும் பேர்ந்து எல்லார்க்கும் அநுபவிக்கலாம்படி க்ருஷ்ணனாய் வந்து அவதரித்தவன். நித்யஸூரிகளுக்கு போக்யனானவன். ‘கலங்காப் பெருநகரத்தை’ (மூன்.திரு.51) விட்டு ப்3ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயனாகைக்காக ஸ்வஸ்பர்சத்தாலே விகஸித2பணனான திருவநந்தாழ்வான்மேலே க்ஷீராப்தியிலே கண்வளர்ந்தருளி, அவனோட்டை ஸ்பர்சத்தாலே தகட்டிலழுத்தின மாணிக்கம்போலே மிக்க அழகையுடையனாய் ‘ஸர்வாதிகன்’ என்று தோற்றும்படியாய், ஸ்ரமஹரமான வடிவையுடையனாய் அபரிச்சேத்ய மஹிமனான க்ருஷ்ணன். (எனது ஆருயிர்) – எனக்கு தா4ரகாதிகளெல்லாம் தானேயானவன். (படவரவு இத்யாதி) – தன்னோட்டை ஸ்பர்சஸுகத்தாலே விகஸிதமான ப2ணங்களையுடையனாயிருக்கும் இவன்; இவனோட்டை ஸ்பர்சம் தனக்கு ஆகர்ஷகமாயிருக்கும்படி சொல்லுகிறது – ‘அரவு’ என்கையாலே; நாற்றக்குளிர்த்தி மென்மைகள் ப்ரக்ருதியாயிருக்குமிறே ஸர்ப்பஜாதிக்காக. (பரஞ்சுடர்) – இவன்மேலே சாய்ந்தாலாயிற்று, இவன் ஸர்வாதிகனென்று தோற்றுவது. (பண்டு) முன்பு ஒரு நாளிலே, (நூற்றுவர் இத்யாதி) துர்வர்க்கமடையக் குடிகொண்டதிறே துர்யோதநாதிகளோடே. (அடவரும் படைமங்க) – ‘ஸாரதீ ஸாரதீ என்று வாய்பாறிக் கொண்டிறே பையல்கள் வருவது. கொல்லவருகிற படை நசிக்கும்படியாக. *அஸ்மாந் ஹந்தும்* என்கிறபடியே தம்மை முடிக்கவந்தாற் போலேயிருக்கிறதாயிற்று, அங்கே நலிய வருகிற இது. (ஐவர்கட்காகி) *க்ருஷ்ணாஸ்ரயா:* என்கிறபடியாலே தானல்லது தஞ்சமில்லாத ஐவர்கட்காகி. (வெஞ்சமத்து) – யுத்தத்திலே ‘நம்முடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை லோகமாகக் காண வேணும்’ என்றுபார்த்து *பார்த்தம் ரதிந மாத்மாநஞ்ச ஸாரதிம் ஸர்வலோகஸாக்ஷிகஞ் சகார* என்கிறபடியே எல்லார்கண்ணுக்கும் இலக்காக்கினான். (அன்று) – ‘உகவாதாரும் கண்டு வாழ்ந்த நாளிலே இழந்த நான் இனிப்பெறுகை என்று ஒன்றுண்டோ?’ என்று வெறுக்கிறார் இழவுக்கு. (தேர் இத்யாதி) – ஸேநாதூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழேநாற்றின திருவடிகளும் அதிலே சாத்தின சிறுச்சதங்கையுமாய் ஸாரத்த்ய வேஷத்தோடே நின்றபோதைத் திருவடிகளில் ஆபரணத்வநி செவிப்படவும் அத்வடிவைக் காணவுங்காணும் ஆசை. (கனைகழல்) – செறிந்த என்னுதல், த்வநிக்கிற என்னுதல். (காண்பது இத்யாதி) – இக்கண்கள் அடிப்படுவது எப்போதோ? இவை முடியப் பட்டினிவிட்டே போந்தவை இப்பட்டினிவிடக்கடவது என்றோ? ‘அவ்வடிவைக்காணவேணும்’ என்று விடாய்த்த கண்கள் காணப்பெறுவது என்றோ?

பதினொன்றாம் பாட்டு

கண்கள்காண்டற்கரியனாய்க் கருத்துக்குநன்றுமெளியனாய்*

மண்கொள்ஞாலத்துயிர்க்கெல்லாம் அருள்செய்யும்வானவரீசனை*

பண்கொள்சோலைவழுதிநாடன் குருகைக்கோன்சடகோபன்சொல்*

பண்கொளாயிரத்திப்பத்தால் பத்தராகக்கூடும்பயிலுமினே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவத்பக்திலாபத்தை அருளிச் செய்கிறார்.

கண்கள்-கண்கள், காண்டற்கு-அபரோக்ஷிக்கைக்கு, அரியனாய்-அரியனாய், கருத்துக்கு-நெஞ்சுக்கு, நன்றும் எளியனாய் – விஶதாநுபவவிஷயபூதனாய், மண்கொள் ஞாலத்து – ப்ருதிவீப்ரதாநமான லோகத்தில், உயிர்க்கெல்லாம் – ப்ராணிகளுக்கெல்லாம், அருள்செய்யும் – (அர்ச்சாவதாரமுகத்தாலே) உபகரித்துக்கொண்டு, வானவரீசனை – ஸூரிகளுக்குக்கொடுக்கும் அநுபவத்தைப் பண்ணுவிக்கும் ஸ்வாமியானவனை, பண்கொள் – (வண்டுகளொலியாலே) பண்விஞ்சின, சோலை – சோலையையுடைத்தான, வழுதிநாடன் – திருவழுதிநாட்டுக்கு நிர்வாஹகராய், குருகைக்கோன் – திருநகரிக்கு ஸ்வாமியான, சடகோபன் – ஆழ்வார், சொல் – அருளிச்செய்த, பண்கொள் – பண்ணோடு கூடின, ஆயிரத்து – ஆயிரத்தில், இப்பத்தால்-(அர்ச்சாவதாரஸௌலப்ய ப்ரகாஶகமான) இப்பத்தாலே, பத்தர் – (_ஸ மஹாத்மா ஸுது3ர்லப4:_ என்னும்படி பெறுதற்கரிய) பக்தியுடையர், ஆகக்கூடும் – ஆகை ஸித்திக்கும்; பயிலுமின் – (இத்திருவாய்மொழியை) அப்யஸியுங்கோள். இது எழுசீராசிரிய விருத்தம்.

ஈடு – நிகமத்தில்,  இத்திருவாய்மொழிஅப்4யஸிக்கவே ப43வத்ப்ரேமம் உண்டாம்; இத்தை அப்4யஸியுங்கோள் என்கிறார்.

(கண்கள் காண்டற்கரியனாய்க் கருத்துக்கு நன்று மெளியனாய்) – காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார். கண்௰ற்காண அரியனாய், ‘காணவொண்ணாது’ என்று மறந்து பிழைக்கவொண்௰தபடி நெஞ்சுக்கு முன்னிலையாய் மிகவும். இவர்க்கு விஸ்லேஷமாவது – பா3ஹ்யஸம்ஸ்லேஷாபேக்ஷையாலே மாநஸாநுபவத்துக்கு வரும் கலக்கம். ஸம்ஸ்லேஷமாவது – ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான ஜ்ஞாந ஸாக்ஷாத்காரம். (மண்கொள் இத்யாதி) – நித்யஸூரிகளுக்கு அநுபாத்யனானாற்போலே, ஸம்ஸாரிகளென்று வாசி வையாதே அர்ச்சாவதார முகத்தாலே வந்து ஸுலபனானவனை. (பண்கொள் சோலை) – வண்டுகளின் மிடற்றோசையாலே பண்மிக்கிருந்துள்ள சோலை. முக்கோட்டை போலே காணும் சோலையிருப்பது. (வழுதிநாடன்) – திருவழுதிநாட்டுக்கும் திருநகரிக்கும் நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த. (பண்கொளாயிரம்) வண்டுகளின் நினைவின்றிக்கே அவற்றின் மிடற்றோசை பண்ணானாப்போலே, பகவத்குணாநுபவம் வழிந்த பேச்சுக்கள் விழுக்காட்டாலே பண்ணானபடி. (பத்தராகக்கூடும் பயிலுமினே) எல்லாம் கிடைக்கிலும் கிடையாததாயிற்று, சேதநர்க்கு பகவத்பக்தி; அதுவும் கிடைக்கும் இத்திருவாய்மொழியை அப்யஸிக்க. பரத்வ
ஜ்ஞாநத்துக்கு அடியான ஸுக்ருதமாதல், சாஸ்த்ரஜ்ஞாநமாதல், ஸதாசார்யோப தே3சமாதல், நிர்ஹேதுக ப43வத் கடாக்ஷமாதல், இவையனைத்துமில்லாதார்க்கும் அர்ச்சாவதார ஸௌலப்யத்தை அநுஸந்திக்கவே பகவத்பக்தி யுண்டாகக்கூடும்; அவாப்த ஸமஸ்த காமனான ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித வாத்ஸல்யத்தாலே ‘இவனுகந்ததொன்றைத் திருமேனியாக விரும்பி, இவன் அமுது செய்வித்ததை அமுது செய்து அகங்கள் தோறும் புக்கு விடமாட்டாதேயிருந்தால், ‘இவன் நம்மை விடமாட்டாதேயிருந்த பின்பு நாமும் இவனுக்கு ஸ்நேகித்தாலாகாதோ?’ என்னக்கூடுமிறே.’ ‘நிதி இங்கே உண்டு’ என்று சொல்லக்,  கல்லுவர்களிறே; அப்படியே ‘பக்தியுண்டு’ என்ன,  ‘அப்யஸிப்பர்கள்’ என்று அருளிச் செய்கிறார்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

த்ரமிடோபநிஷத் ஸங்கதி

தாந்நிந்திதாநபி விஹாதுமஸௌ அஶக்த:

ஶௌரெர்துராஸததயா விமுகாந் விசார்ய।

அர்சாவதார ஸுலபத்வம் உவாச தெஷாம்

ஏவம் ச தெஷு விமுகெஷு ஶுஶொச ஷஷ்டெ||

த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ

39 பத்மாக்ஷீம் பாபஹந்த்ரீம் மணிருசிம் அமராதீஶசிந்த்யாங்க்ரிபத்மாம்

தத்தாத்ருக்குந்தலஶ்ரீஸுகடிதமகுடாம் பாவுகப்ராப்யபாதாம் ।

ஶுத்தாஸ்வாத்யஸ்வபாவாம் யமபடமதநீம் பக்ததீவ்ருத்திப(ா)வ்யாம்

நீசோச்சாபீஷ்டவ்ருத்திம் ஹரிதநுமவதத் நிர்மலார்சாநுரக்த: || (3-6)

திருவாய்மொழி நூற்றந்தாதி

செய்யபரத்துவமாய்ச்  சீரார்வியூகமாய்*

துய்யவிபவமாய்த் தோன்றிவற்றுள்* எய்துமவர்க்கு

 இந்நிலத்தில்  லர்ச்சாவதாரம் எளிதென்றான்*

பன்னுதமிழ்மாறன் பயின்று. 26

ஆழ்வார் திருவடிகளே ஶரணம், எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்,

ஜீயர் திருவடிகளே ஶரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.