03-07 12000/36000 Padi

ஏழாந்திருவாய்மொழி  –  பயிலும் சுடரொளிப்ரவேஶம்

பன்னீராயிரப்படி – ஏழாந்திருவாய்மொழியில், கீழ் சேஷத்வ ப்ரதிஸம்பந்தியினுடைய சேஷித்வம் அர்ச்சாவதாரபர்யந்த மென்று அருளிச்செய்தாராய், அந்த சேஷத்வப்ரீத்யபித்ருத்தியாலே சேஷத்வமும் தத்விஷயமாத்ரத்திலே நில்லாதே ததீயபர்யந்தமாக அபித்ருத்தமாக; அவர்களுடைய ஜந்மத்ருத்தாதிநிரபேக்ஷமான பகவத்ஸம்பந்தோத்கர்ஷத்தையே பற்றி, அந்த உத்கர்ஷத்துக்கு அடியான ஸர்வேஸ்வரனுடைய க்ஷீரார்ணவஶாயித்வத்தால் வந்த பாரம்யத்தையும், அவதார விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், அந்நிலையிலே விபூதித்வயத்துக்கும் அநுபாத்யமான போக்யதையையும், போக்யதாவர்த்தகமான ஆபரணசோபையையும், ஆஸ்ரிதாபேக்ஷிதார்த்த ப்ரதத்வத்தையும், அநந்யப்ரயோஜநர்க்குத் தன்னைக்கொடுக்கும் உபகாரகத்வத்தையும், கொடுக்குமிடத்தில் ஸ்வரூப ஆவிர்பாவத்தைப் பிறப்பித்து அடிமைகொள்ளும்படியையும், அடிமைக்கு விஷயமான ஸ்ரிய:பதித்வத்தையும், ஆஸ்ரிததோஷ நிவர்த்தகமான பாவநத்வத்தையும், ஆபத்ஸகத்வத்தையும் அநுஸந்தித்து, இந்த  குணங்களிலே ஈடுபட்ட பாகவதருடைய ஸம்பந்திபரம்பரா பர்யந்த சேஷத்வத்தை அநுபவிக்கிறார்.

ஈடு – ஏழாந்திருவாய்மொழியில் – அர்ச்சாவதாரஸௌலப்யத்தை அருளிச்செய்யச் செய்தேயும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றிக்கே விஷயப்ரவணராயிருக்கிற ஸம்ஸாரிகள் ஸ்வபாவத்தை அநுஸந்தித்தார்; _தேர்கடவியபெருமான் கனைகழல் காண்ப தென்றுகொல் கண்கள்_ (3-6-10) என்ற இவர்க்கு, ‘நிழலும் அடிதாறுமாய்’ (பெரிய.திருவ.31) இருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, உபதேச நிரபேக்ஷமாகவே பகவத்விஷயமென்றால் நெஞ்சு பள்ளமடையாயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டார்; அவர்கள்பக்கலிலே தம் திருவுள்ளம் சென்று, ‘இவர்களுஞ் சிலரே’ என்று அவர்களைக் கொண்டாடி, ‘நான் ஸர்வேஸ்வரனுக்கு அடிமை அன்று; ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை; அதுதன்னிலும் நேர்கொடுநேர் இவர்களுக்கு அடிமையாகவேணுமோ? இவர்களோடு ஸம்பந்திஸம்பந்திகள் அமையாதோ?’ என்று இங்ஙனே பாகவதசேஷத்வம் உத்தேஸ்யமாய் அவர்களை ஆதரிக்கிறார். _எம்மாவீட்டி_லே (2-9), ப்ராப்யநிஷ்கர்ஷம் பண்ணினார் – _தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே_ (2-9-4)  என்று; இங்கே – பாகவதஶேஷத்வம் உத்தேஸ்யமென்னாநின்றார்; ப்ராப்யம் இரண்டாயிருக்கிறதோ பின்னை? என்னில், – அன்று; _தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே_ (2-9-4) என்கிற அதினுள்ளேயாயிருக்கிறது. இதுவும்; பகவச் சேஷத்வத்தின் எல்லையாகிறது பாகவதசேஷத்வத்தளவும் வருகையிறே. நமக்கு ஜ்ஞாதத்யமான அர்த்தங்களில் திருமந்த்ரத்திற் சொல்லாததொன்றில்லையிறே; அத்தையறியும் திருமங்கையாழ்வாரும் இத்தை அதுக்கு அர்த்தமாக அருளிச்செய்தாரிறே; _நின்திருவெட்டெழுத்தும் கற்று நான் – உற்றது முன்னடியார்க்கடிமை_ (திருமொழி 8-10-3), என்றாரிறே. திருமந்த்ரத்துக்கு அர்த்தம் – இவனுடைய அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகையிறே. அதாவது – ததீயர்க்கு க்ரயவிக்ரயார்ஹமாம்படியாகையிறே; (தத்ப4க்திநிக்4நமநஸாம் க்ரயவிக்ரயார்ஹ:), _எந்தம்மை விற்கவும் பெறுவார்களே_ (பெரியா.திரு. 44-10). பிதாவுக்கு ஒருக்ஷேத்ரம் ஸ்வம்மானால் அது புத்ரனுக்கும் க்ரயவிக்ரயார்ஹமாயிருக்கும்; அப்படியிராதவன்று பிதாவினுடைய ஸ்வத்திலே கொத்தையாமிறே. (தத்34க்தைர்வா ஸமாக3ம:) என்கிறவிடத்தில், ‘வா’ என்றத்தை அவதாரணத்திலேயாக்கி, ‘உத்தேஸ்யந்தானே இங்கே ஸித்திக்குங்காண்’ என்று எம்பெருமானார் அருளிச்செய்த வார்த்தை. ப்ராப்யத்தில் ப்ரதமாவதி – பகவச் சேஷத்வத்தளவிலே நிற்கை; சரமாவதி – பாகவத சேஷத்வத் தளவிலே வருகை.  (க3ச்ச2தா) – இதுக்கு எம்பெருமானார், _ ‘பயிலும்சுடரொளி’ (3-7) யிலும்,  ‘நெடுமாற்கடிமை’ (8-10)யிலும் சொல்லுகிற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்_ என்று அருளிச்செய்வர்; இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்த்ரமாயிற்றிறே; அதுமூலமாக அநுஷ்டிக்கவே இதிற்சொன்னத்தைச் செய்த தாமிறே. ஆசாரப்ரதாநமான அவதாரமாய், அதில் பெருமாள், ‘பிதாசொல்லிற்றுப் புத்ரன் செய்யக் கடவன்’ என்கிற மர்யாதை குலையாதே அத்தை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசநபரிபாலநாதிரூபமான ஸாமாந்யதர்மத்தை அநுஷ்டித்தார்; ‘இதுதான் ப்ராப்தவிஷயத்திலே செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக்காட்டினார், இளையபெருமாள்; ‘அதுசெய்யுமிடத்தில்  அவனுகந்த அடிமை செய்யக்கடவது’ என்னுமிடத்தை ஸ்ரீபரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்; ‘அதுதான் பாகவத சேஷத்வ பர்யந்தமாயிருக்கும்’ என்னுமிடத்தை ஸ்ரீசத்ருக்நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான். பெருமாள், ‘பிதாசொல்லிற்றுச் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவை அநுவர்த்திக்கக்கடவது என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் (குருஷ்வ) என்று நிர்ப்பந்திக்கக்கடவரல்லர்; ‘ராஜ்யத்திலேயிரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமைசெய்யக்கடவதென்னுமிடத்தை அநுஷ்டித்தான் ஸ்ரீபரதாழ்வான்; அதினெல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீசத்ருக்நாழ்வான்; அவன்படிசொல்லுகிறது
இஸ்ஸ்லோகம். _(மாதுலகுலம் க3ச்ச2தா ப4ரதே4ந நீத:) – மாதுலகுலம் உத்தேஸ்யமாய்ப் போனான் அவன்; அவன்தான் உத்தேஸ்யமாய்ப் போனான் இவன்; யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானையிறே. (க3ச்ச2தா) – இத்வர்த்தமாந நிர்த்தேசத்தால், பூர்வக்ஷணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை; பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்ரவர்த்தியைக் கேள்விகொண்டமையும் இல்லையென்கை. (ப4ரதேந) – பெருமாளும் பொகட்டுப்போய், இளையபெருமாளும் அவரை அநுவர்த்தித்துப்போய், சக்ரவர்த்தியும் துஞ்சி, ஸ்ரீசத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதேயிருக்க, பெருமாளதான ராஜ்யத்தைப் ப4ரித்துக்கொண்டிருக்கையாலே – பரதனென்கிறது; (ப4ரத  இதி ராஜ்யஸ்ய ப4ரணாத்). (ததா3) – தானும் ராஜபுத்ரனாய் நாளும் வேறுபட்டிருந்தால், பிரித்துத் தனக்குப்பொருந்தும் முஹூர்த்தத்திலே போக ப்ராப்தமிறே; அதுசெய்யாதே அவன்புறப்பட்டதே தனக்கு முஹூர்த்தமாகப் போனான். (அநக4🙂 – அபாப:; அப்படைவீட்டில், அல்லாதாரதெல்லாம் பாபமிஸ்ரஜீவநம்போலே காணும். அதாவது – ராமபக்தி கலந்திருக்குமே. அத்தைப் பாபமென்னலாமோ? என்னில், – பாபத்திற்காட்டில் புண்யம் உத்தேஸ்யமாயிருக்கச்செய்தேயும், இரண்டும் த்யாஜ்யமாகாநின்றதிறே: மோக்ஷவிரோதித்வாத்; இங்கும் உத்தேஸ்யவிரோதி யாகையாலே சொல்லலாமிறே.  இது பின்னை உத்தேஸ்ய விரோதியோ? என்னில், ப்ரதமாவதியில் நிலை விரோதியிறே சரமாவதியைப் பற்ற. (சத்ருக்4ந:) – பிறந்தபோதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே இப்படி திருநாமஞ்சாற்றினான் வஸிஷ்டன். (நித்யசத்ருக்4ந:) – பாஹ்யசத்ருக்களை வெல்லுகையன்றிக்கே ஆந்தரசத்ருக்களான இந்த்ரியங்களைவென்றிருக்கும். அதாவது – (பும்ஸாம்  த்3ருஷ்டிசித்தாபஹாரிணம்) என்கிற விஷயத்தில் கண்வையாமை; அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுமித்தனை. (அநக4🙂 என்கிற இதுக்கும், (நித்யசத்ருக்4ந:) என்கிற இதுக்கும் வாசியென்? என்னில், – பாவநத்வத்தில் ஸ்ரீபரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது – அநக: என்கிற இத்தால்; (நித்ய சத்ருக்ந:) என்கிற இத்தால் – போ4க்3யதைக்கு ஸ்ரீபரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது. (நீத:) – ஒரு குற்றுடைவாள், சாயை உள்ளிட்டவையோ பாதியாய்ப் போனான். த்3ரவ்யத்துக்கு த்3ரவ்யாந்தரஸம்யோகம் உபயநிஷ்டமாயிறேயிருப்பது; த்ரவ்யமாயிருக்கச் செய்தேயும் ஜாதிகுணங்களோபாதி பரதந்த்ரனாய்ப் போனான். (ப்ரீதிபுரஸ்க்ருத:) ‘தமையன்பின்னே தம்பி போகக்கடவன்’ என்னும் முறையாலே தேவைபோலேயிருக்குமோ? என்னில், – அங்ஙனன்று; ‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன்சோற்றைப் பகுந்து உண்ணுமாபோலே படைவீடாகப் பெருமாளுக்கு அடிமைசெய்வர்கள்: ‘ஏகாந்தஸ்தலத்திலே நமக்கு எல்லாவடிமையும் செய்யலாம்’ என்று (அஹம் ஸர்வம் கரிஷ்யாமி) என்று இளையபெருமாள் காடேறப் போனாற்போலே, இவனும் ‘நமக்கு எல்லாவடிமையும் செய்யலாம்’ என்கிற ப்ரீதி பிடரி தள்ளத் தள்ளப் போனான்_. எம்பெருமானார் இஸ்ஸ்லோகத்துக்கு வாக்யார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி – பெருமாளைக் காற்கடைக்கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீபரதாழ்வானை யல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார். இது ப்ரயோஜகமானபின்பு, சொன்ன மிகையெல்லாம் பொறுக்குமிறே; அல்லது, ஒருசேதநனுக்கு ஒருசேதநன் உத்தேஸ்யனாகையாவது – ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமிறே; (அநந்யா:) – என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால், இவர்களை யநுவர்த்திக்குமது அவனையநுவர்த்தித்ததாமிறே. ப்ராஹ்மணஜாதி ஒன்றாயிருக்கச் செய்தே குலசரணகோ3த்ராதிகளாலே பிரித்து ஸம்பந்திக்குமாபோலே வைஷ்ணவர்களுக்கு நிரூபகம் – அவனுடைய குணசேஷ்டிதாதிகளிறே; அத்வழியாலே, அவனுடைய வடிவழகிலே துவக்குண்டிருக்குமவர்கள், குணங்களிலே துவக்குண்டிருக்குமவர்கள், சேஷ்டிதங்களிலே துவக்குண்டிருக்குமவர்கள் என்று இத்வழியாலே அவர்களைப் பிரித்து, அவர்களெல்லாரோடும் தமக்கு ஒரு ஸம்பந்தத்தை ஆசைப்பட்டு, அவர்களெல்லாரும் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.

முதற்பாட்டு

பயிலுஞ்சுடரொளிமூர்த்தியைப் பங்கயக்கண்ணனை*

பயிலவினிய நம்பாற்கடற்சேர்ந்தபரமனை*

பயிலுந்திருவுடையார் யவரேலும் அவர்கண்டீர்*

பயிலும்பிறப்பிடைதோறு எம்மையாளும்பரமரே.

– முதற்பாட்டில், விலக்ஷணவிக்ரஹ குண விசிஷ்டனாய்க்கொண்டு க்ஷீரார்ணவஶாயியான ஸர்வாதிகனை ஸம்ஸ்லேஷிக்கும் ஸம்பத்தையுடைய பாகவதர்கள் ஜந்மத்ருத்தாதிகளில் தாழநின்றாரேயாகிலும் எனக்கு சேஷிகள் என்கிறார்.

பயிலும் – செறிந்த, சுடர் – (ஸௌந்தர்யலாவண்யாதிகளாகிற) சுடரையுடைத்தான, ஒளிமூர்த்தியை – தேஜோமய தித்யவிக்ரஹத்தையுடையனாய், பங்கயக்கண்ணனை – (ஸர்வஸ்மாத் பரத்வஸூசகமான) புண்டரீகாக்ஷத்வத்தையுடையனாய், பயில இனிய – (இத்வடிவழகிலே) செறிந்தார்க்கு நிரதிசயபோக்யனாய்க்கொண்டு, நம் – ஆஸ்ரிதார்த்தமாக, பாற்கடல்-திருப்பாற்கடலிலே, சேர்ந்த – கண்வளர்ந்தருளின, பரமனை – விக்ரஹகுணபோக்யதாபாரம் யத்தையுடையவனை, பயிலும் – நிரந்தராநுபவம் பண்ணிச்செறிகையாகிற, திரு – ஸம்பத்தை, உடையார் – உடையவர்கள், யவரேலும் – (அபிஜநவித்யாத்ருத்தங்களால் எத்தனையேனும்) குறைய நின்றாரேயாகிலும், அவர்-அந்நிலையிலே, பயிலும் – (எங்களுக்குமேன்மேலெனச்) செறிந்துவருகிற, பிறப்பிடைதோறு – ஜந்மாவகாசங்கள்தோறும், எம்மை – எங்களை, ஆளும் – அடிமையாகக்கொள்ளும், பரமர்கண்டீர் – பரமசேஷிகள்கிடீர். அவனுடைய பாரம்யாநுபவம் இவர்களுடைய பாரம்யத்துக்கு அடியென்று கருத்து.

ஈடு: – முதற்பாட்டில் – _வடிவழகிலும் குணங்களிலும் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள்_ என்று இத்திருவாய்மொழியின் அர்த்தத்தை ஸங்க்ரஹேண அருளிச்செய்கிறார்.

(பயிலும்)  பயிலுகை – செறிகை. அதில் வர்த்தமாநத்தாலே – இதர விஷயங்களில் ஒளி கர்ம நிபந்தநமாக வளருகையாலே, வளருமாபோலே குறைந்து வருமிறே; இது அங்ஙனன்றிக்கே, என்றுமொக்கப் புகர்விஞ்சி வாராநிற்குமென்கை. (சுடரொளி மூர்த்தியை) – நிரதிசயமான தேஜஸ்ஸையே வடிவாக உடையவனை. (பயிலுஞ்சுடர்) அன்றிக்கே, நித்யத்வமாவது – ஸர்வகாலவர்த்தித்வமாகையாலே, நித்யத்வத்தைச் சொல்லிற்றாகவுமாம். (சுடரொளி மூர்த்தியை) –  சுடரென்றும், ஒளியென்றும் – தேஜஸ்ஸாய், மிக்க தேஜஸ்ஸென்கை. அன்றியே,  ஒளியென்று – அழகுக்குப் பேராயிற்று. சுத்த ஸத்த்வமயமாய்,  ஸ்வரூப ப்ரகாசகமான விக்ரஹத்தையுடையனென்கை. நிஷ்க்ருஷ்ட ஸத்த்வமேயாய், *தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகம்* என்றும், *தேஜஸாம் ராசிமூர்ஜிதம்* என்றும், *தி3வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய* என்றும் சொல்லுகிறபடியே நிரவதிகதேஜோரூபமாய், * ஷாட்3குண்யவிக்3ரஹம்* என்று ப்4ரமிப்பார்க்கும் ப்4ரமிக்கலாம்படியாய், ஜ்ஞாநாதிகுணங்களுக்கும் ஸ்வரூபத்துக்கும் ப்ரகாசகமான விக்ரஹமிறே. (பங்கயக்கண்ணனை) வடிவழகெல்லாம் பாதியும், கண்ணழகு பாதியுமாயிருக்கும். *ராம: கமலபத்ராக்ஷ:* என்னுமாபோலே, வடிவிலே துவக்குண்பாரை வளைத்துக் கொள்வது கண்ணழகாயிற்று. ஒரு சுடர்க்கடல்போலே யாயிற்று வடிவு. அது பரப்புமாறத் தாமரை பூத்தாற்போலேயாயிற்றுக் கண்ணழகு. வடிவு தானே ஆகர்ஷிக்கவற்று; அதுக்கு மேலே அகவாயில் வாத்ஸல்யாதி குணங்களுக்கும் ப்ரகாசகமாயிருக்குமிறே கண். (பயிலும் இத்யாதி) நித்யமாய் நிரவதிகதேஜோரூபமான விக்ரஹத்தையும், அதிலும் ஆகர்ஷகமான கண்ணழகையுமுடையவனை. (பயில இனிய) இப்படி வடிவழகும் கண்ணழகும் கண்ணழிவற்றிருக்கையாலே இனியதாயிருக்குமிறே. இதர விஷயங்கள் கிட்டுந்தனையும் ஒன்றுபோலேயாய், கிட்டினவாறே அகல வழிதேடும்படியாயிருக்கும்; அவற்றினுடைய ஹேயதை அறிகைக்கும் அங்கே செறிய அமையும்; பகவத்விஷயத்தினுடைய நித்யப்ராப்யதை அறிகைக்கும் அங்கே நெருங்க அமையும்.  ஆகையாலேயிறே,  இவ்வஸ்து நித்யப்ராப்யமாகிறது. இவ்விஷயத்தில் அநுபூதமான அழகைப்பற்ற அநுபாத்யமான அழகு, *நோபஜநம் ஸ்மரந்* என்று – முக்தன் ஸம்ஸாரயாத்ரையை மறக்குமாபோலே, அநுபூதாம்சத்தை நினைக்க வொண்ணாதபடியிறே இருப்பது. _பண்டு இவரை_ (திருமொழி 8-1-9) இத்யாதி. முதல்நாள் கண்டால், ஸ்வாபாவிகசேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளியாலுமாக, காணாது கண்டவனுக்கும் ‘பண்டு கண்டுவிட்ட முகமோ?_ என்று தோற்றியிருக்கும்: சிலநாள் பரி—லித்தால், ‘பண்டு இவரை நாம் கண்டறியோமீ!’ என்று தோற்றியிருக்கும். _இரண்டுக்கும் சப்தம் ஒத்திருக்க, இத்வர்த்தத்தைக் காட்டும்படி எங்ஙனே?_ என்று நான் கேட்டேன்; ‘பயில்கின்றாளால்’ (திருமொழி 8-1-9) என்று ப்ரதம தசையோடு சரம தசையோடு வாசியற வார்த்தை இதுவேயாயிருந்தது கண்டீரே_ என்று அருளிச்செய்தார். (நம் இத்யாதி) வடிவழகு குறையற்றுக் குணத்திற் கொத்தையாலே கிட்ட வொண்ணாதபடியிருக்குமோ? என்னில்;-‘கலங்காப் பெருநகரத்தை’ (மூன்.திரு.51) இருப்பிடமாகவுடையவன் திருப்பாற்கடலிலே வந்து ஆஸ்ரிதர்க்கு முகங்கொடுக்கைக்கு ஒருப்பட்டிருக்கும். (நம்) ஆஸ்ரிதார்த்தமாக என்றபடி. அல்லாதார் வடிவுபடைத்தால் ‘வடிவில்வீறுடையோம்’ என்று, அணைய நசை பண்ணினால் அருமைப்படுத்தி புறப்படத் தள்ளுவர்கள்; இப்படி அழகுடையவன், தானே ஆஸ்ரிதரை அநுபவிப்பிக்கைக்காக அணித்தாக வந்து சாய்ந்தபடி. (பரமனை) வடிவழகாலும் குணங்களாலும் அல்லாதாரைக் கழித்து, இங்கே  ஓரேற்றம் சொன்னீர்; மேன்மைக்கு இவனுக்கு அவ்வருகேதான் ஒரு விஷயமுண்டோ? என்னில்; -மேன்மைக்கும் இவனுக்கு அவ்வருகு ஒரு விஷயமில்லை. (பரமனைப் பயிலுந்திருவுடையார்) – ‘நல்ல வாய்ப்பாயிருந்தது’ என்று முகங்காட்டுவித்துக்  கொண்டு ப்ரயோஜநத்துக்கு மடியேற்கையன்றிக்கே, அவன் தன்னையே ப்ரயோஜநமாகப் பற்றி நெருங்கும் ஸம்பத்துடையார். ஒரு ப்ரயோஜநத்துக்குப் பற்றினவர்கள் அது பெற்றவாறே அவனை விட்டுப் போவர்களிறே; அவன் தன்னையே பற்றினவர்கள் பின்னை அங்கே நெருங்குமத்தனையிறே. (திரு) அவன் சேஷித்வத்துக்கு எல்லையாய் முடி கவித்தாற்போலே இவர்கள் சேஷத்வத்துக்கு எல்லையாய் முடி கவித்திருப்பர்கள்; *அந்தரிக்ஷக3த: ஸ்ரீமாந்*, *ஸது நாக3வர: ஸ்ரீமாந்*, *லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந:* இத்யாதிகளிற்படியே. *அந்தரிக்ஷக3த: ஸ்ரீமாந்* – லங்கையை விட்டுப் பெருமாள்திருவடிகளிலே வரவென்று ஓரடியிட்டபோதே, ராவண ஸம்பந்தத்தாலே வந்த அஸ்ரீ போய் ஸ்வரூபாநுரூபமான ஸ்ரீ குடிபுகுந்ததிறே. *ஸது நாகவர: ஸ்ரீமாந்* – ஸர்வேஸ்வரன் அரைகுலையத்தலை குலைய வந்துவிழ வேண்டும்படியான ஆர்த்தி தன்னை ஒரு ஸம்பத்தாகச் சொல்லிற்றிறே, ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு.  *ஸர்வாத்மநா பர்யநுநீயமாந:*  என்று  இளையபெருமாளை ‘நீர் யௌவராஜ்யத்திலே முடிசூடாவிடில் நாம் முடிசூடோம்’ என்று பெருமாள் அருளிச்செய்யச்செய்தேயும் முடிவைக்க இசையாத இளைய பெருமாளையிறே, *லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந:* என்றது. ஸ்ரீ பரதாழ்வானை, _பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போதோ?_ என்று கேட்க, *யாவந்ந சரணௌ ப்ராது: பார்த்தி2வத்யஞ்ஜநாந்விதௌ, சிரஸா தா4ரயிஷ்யாமி* என்று _பெருமாளும் தமக்கு வகுத்த முடிசூடி, நானும் எனக்கு வகுத்த முடிசூடின அன்று ஆறும்_ என்றானிறே; _அரசமர்ந்தானடி சூடுமரசு_ (பெருமாள் திரு. 10-7) இறே. அடியிலே தலையாக வாழ அடியிடுகிறாரிறே.  (உடையார்) வைஸ்ரவணன் என்னுமாபோலே, பாரதந்த்ர்யமாகிற ஸம்பத்தையுடையவர்கள். இஸ்ஸம்பத்தையுடையராகிறார்கள்; மற்று என்ன ஏற்ற முண்டாகவேணும் இவர்களை ஆதரிக்கைக்கு? என்னில், – (யவரேலும்) ஜந்ம த்ருத்த ஜ்ஞாநங்கள் ஏதேனுமாகவுமாம்; இது உண்டாமத்தனையே வேண்டுவது. (அவர் கண்டீர்) ஜந்ம த்ருத்த  ஜ்ஞானங்களால் வரும் அபிமானம் பகவச்சேஷத்வத்துக்கு விரோதியாகையாலே அதில்லாதார் உத்தேஸ்யரென்கிறார். ‘ததீயர்’ என்றே தங்களை நிரூபிக்க வேண்டும்படியாய் வைஷ்ணவத்வ விரோதியான ஜந்மாதிகளால் வரும் அபிமாநமில்லாதார் நமக்குத் தேட்டமென்கிறார். அவர்கள் எத்தனை நாளைக்கு உத்தேஸ்யரென்ன, (பயிலும் பிறப்பிடைதோறு) மேன்மேலென நெருங்கி வருகிற ஜந்மங்களில் அவகாசங்கள் தோறும். _நின்பன்மாமாயப் பல்பிறவியிற்படிகின்றயான்_ (322) என்று த்யாஜ்யமாகச் சொன்ன ஜந்மந்தன்னையே விரும்புகிறாரிறே இப்போது, பாகவத சேஷத்வத்துக்கு உறுப்பாகையாலே. மேன்மேலென ஜந்மங்களுண்டாகவும் அமையும், ஒருபாகவதன்ஸ்ரீபாதத்திலே வர்த்திக்கப் பெறில் என்கிறார். (எம்மையாளும் பரமர்) என்னை அடிமைகொள்ளக்கடவ ஸ்வாமிகள். முன்பு அவனை ‘பரமன்’ என்றீர்; இங்கே இவர்களை ‘பரமர்’ என்னா நின்றீர்: இது இருக்கும்படி யென்?’ என்னில்,-அநுபாத்ய குணாதிக்யத்தாலே சொல்லிற்று அங்கு: இங்கு அக்குணத்துக்குத் தோற்றவர்களைச் சொல்லுகிறது; தத்ஸம்பந்த மொழியச் சொல்லில் பகவத்ஸம்பந்தம் அற்றதாம்.

இரண்டாம் பாட்டு

ஆளும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை*

தோளும் ஓர்நான்குடைத் தூமணிவண்ணன் எம்மான் தன்னை*

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர்கண்டீர்*

நாளும்பிறப்பிடைதோறு எம்மையாளுடைநாதரே.

– அநந்தரம், அவதாரவிக்ரஹ வைலக்ஷண்யத்துக்கு ஈடுபட்டு இறைஞ்சும் பாகவதர் எனக்கு நாதபூதர் என்கிறார்.

ஆளும் பரமனை – (ஆரிதரை) அடிமைகொள்ளுகைக்கு அடியான
சீலாதிபாரம்யத்தையுடையனாய், கண்ணனை – அதுக்கு ப்ரகாசகமான அவதார ஸௌலப்யத்தையுடையனாய், ஆழிப்பிரான்தன்னை – (ஆஸ்ரிதரக்ஷணார்த்தமாக அவதார தசையிலும்) கையும் திருவாழியுமாயிருக்குமவனாய், (அதுக்குமேலே ஆஸ்ரிதர்க்கு ஒதுங்க நிழலாய்),  ஓர் – அத்விதீயமான, நான்கு தோளும்உடை – நாலு திருத்தோளையுடையனாய், தூ – (அவர்களுக்கு) அநுபாத்யமாய், மணி – (முடிந்தாளலாம்படி) நீலரத்நம்போலே விலக்ஷணமான, வண்ணன் – வடிவையுடையனாய், எம்மான் தன்னை – (அவ்வடிவைக் காட்டி) என்னையடிமைகொண்ட ஸ்வாமியை, தடம் தாளும் கையும் கூப்பி – தங்களொடுக்கம் தோன்றும்படி காலையும் கையையும் கூட்டி, பணியுமவர் கண்டீர் – ப்ரணாமம்பண்ணுமவர்கள்கிடீர், நாளும் – என்றும், பிறப்பிடை தோறு – ஜந்மாவகாசந்தோறும், எம்மை ஆள் உடை – எம்மை அடிமையாகவுடைய, நாதர் – நாதபூதர்.

ஈடு: – இரண்டாம்பாட்டு.  அவனுடைய அவயவ சோபைக்குத் தோற்றிருக்குமவர்கள் எனக்கு நாதர் என்கிறார்.

(ஆளும்பரமனை) – நாம் உகந்தத்தை உகக்கிறோம்: இத்வஸ்துவையாளுமிடத்தில் இங்ஙன் அவன்தனை ஆளவல்லாரில்லை: _அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்_ (அமலனாதி-1) என்னக் கடவதிறே; இவ்வுகப்புக்கு அடி அவனென்கிறார்; ததீயரை விரும்புகிறது அவனடியாகவிறே. (கண்ணனை) ஆள் செய்து ஆட்கொள்ளவல்லார் அவன்தனையில்லை. தான் தூத்ய ஸாரத்யங்களைப் பண்ணியிறே ஆட்கொள்வது. _அஞ்சேலென்றடியேனை ஆட்கொள்ள வல்லானை_ (திருமொழி 8-9-6) என்றும், _ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை_ (பெரியாழ்.திரு.1-6-11) என்றுஞ்சொல்லுகிறபடியே; ‘எதிர்சூழல்புக்கு’ (2-7-6) ஒரு ஜந்மத்திலே இவனை அடிமை கொள்ளுகைக்காகத் தான் அநேக ஜந்மங்களைப் பிறந்து திரியுமாயிற்று. (ஆழிப்பிரான் தன்னை) தான் தாழநின்று ஆட்கொள்ளுமிடத்து, பகலை இரவாக்குகைக்கும், _ஆயுதமெடேன்_ என்று ஆயுதமெடுக்கைக்கும் பெருநிலைநிற்கும் பரிகரத்தை யுடையவனை: *ஸுத3ர்சநம் சிந்திதமாத்ரமாசு தஸ்யாக்3ரஹஸ்தம் ஸ்வயமாரு ரோஹ* என்று ஒருகையிலேயேறி விரோதிகளை அழியச்செய்யுமே. நினைவறிந்து கார்யஞ் செய்யுமவனிறே. கையுந்திருவாழியுமான அழகை ஆஸ்ரிதர்க்காக்கி, அத்தைக்கொண்டு விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி, அதுதன்னைக் கைகண்டு அநுபவிப்பார்க்கு அநுபவிப்பிக்கும் உபகாரகனை. (தோளும் இத்யாதி) விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்தானே அமைந்திருக்கை. *ஆயதாஸ்ச ஸுத்ருத் தாஸ்ச-கிமர்த்தம்* கோலின கார்யத்தளவல்ல இப்பாரிப்பு. (நான்கு) ப4ட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே அநந்தாழ்வான் கண்டு, ‘பரமபதத்தில் ஸர்வேஸ்வரன் சதுர்பு4ஜனாயோ?  த்3விபு4ஜனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன, ‘ஏகாயநர் _த்3விபு4ஜன்_ என்னா நின்றார்கள்; நம்முடையவர்கள் _சதுர்பு4ஜன்_ என்னா நின்றார்கள்’, என்ன, ‘இரண்டிலும் வழியேது?’ என்ன, ‘த்3விபு4ஜனாயிருந்தானாகில் பெரிய பெருமாளைப்போலேயிருக்கிறது; ‘சதுர்பு4ஜன்’ என்று தோற்றிற்றாகில் பெருமாளைப்போலேயிருக்கிறது’ என்று அருளிச்செய்தார்; நம்மளவன்றியே தெரியக்கண்டவர்கள் _கையினார் சுரிசங்கனலாழியர்_ (அமலனாதி-7) என்றார்களிறே பெரிய பெருமாளை. இடைப்பெண்களுக்கு நாலாய்த் தோற்றி, உகவாத கம்ஸாதிகளுக்கு இரண்டாய்த் தோற்றுமாபோலே; ‘ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த’ (3-5-5)விடத்துச் சதுர்ப்புஜனாயிறே வந்து அவதரித்தது; _உபஸம்ஹர_ என்னச் செய்ததிறே மற்றையது. நிலாத்துக்குறிபகவர், ப4ட்டரை, ஸ்ரீவைகுண்டத்திலே சதுர்பு4ஜனாயிருக்கு மென்னுமிடத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன, ‘*தமஸ: பரமோ தா4தா சங்க2சக்ரக2தாதர:* என்று உண்டாயிருந்ததே’ என்ன, உத்தரமில்லாமையாலே விக்ருதனாக, ‘ப்ரமாணகதி இதுவாயிருந்தது; பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச்செய்தார். கல்பகதரு பணைத்தாற்போலே அத்விதீயமான நான்கு தோள்களையுடைய. (தூமணி இத்யாதி) சிலரையகப் படுத்துகைக்குத் தோள்தானும் மிகையாம்படியாயிற்று வடிவழகு இருப்பது. பழிப்பற்ற நீலமணிபோலேயிருக்கிற வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹனாக்கினவனை. ததீ3யர்பக்கலிலே அபஹ்ருதராய்ப்போவாரை நடுவே வழிபறிக்கும் வடிவழகையுடையவனை. ததீ3யரை விரும்பும்படி பண்ணிற்றும் இவ்வடிவழகாலேயிறே. (தாளும் தடக்கையும் கூப்பி) – இவ்வழகை அநுபவித்துத்தொழவென்றால் தாளும் தோளும் பணைத்துக் கொடுக்குமவர்கள். தாள் கூப்புகையாவது-அநந்யகதியாகை; கைகூப்புகையாவது – அகிஞ்சநனாகை. ஆக,  இரண்டிலும் ஒக்க ஏறின ப்ரயோஜனம் -ப4க்3நாபி4மாநனாகையிறே. _*நிப்ருத:* – ஒரு அவயவத்திலே எல்லாவவயங்களும் ஒடுங்கும்படியாகை. *ப்ரணத:* – வேறே சிலர் எடுக்கவேண்டும்படி சிதிலனாய் விழுந்து கிடக்கை. *ப்ரஹ்வ:* -‘இப்படி கிடந்தோம்’ என்னுமது நெஞ்சில் நடையாடாதிருக்கை’ (நாளும் பிறப்பிடைதோறு) ஜந்மங்களில் அவகாசங்கள்தோறும். அதுதன்னில் நாள்தோறும். (எம்மை ஆளுடைநாதரே) வடிவழகாலேயாதல், குணங்களாலேயாதல், ஏதேனுமொரு ஹேதுவாலே அடிமைகொள்ளவேண்டுவது ஈஸ்வரனுக்காயிற்று: நிர்ஹேதுகமாக அடிமைகொள்வார் இவர்கள். அவனதானால், இவர்களுக்கு அடிமையாமிடத்தில் ஈஸ்வரனநுமதியும் வேண்டா, இவன் நினைவும் வேண்டா, இவ்வளவும் வந்தேயிருக்கும். _எந்தம்மை விற்கவும் பெறுவார்களே_ (பெரியாழ்.
திரு. 44-10)

மூன்றாம் பாட்டு

நாதனைஞாலமும்வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்

போதனை* பொன்னெடுஞ்சக்கரத்து எந்தைபிரான்தன்னை*

பாதம்பணியவல்லாரைப் பணியுமவர்கண்டீர்*

ஓதும்பிறப்பிடைதோறு எம்மையாளுடையார்களே.

– அநந்தரம், உபயவிபூதியும் மேல்விழுந்தநுபவிக்கும் போக்யதையிலே ஈடுபட்ட பாகவதர்க்கு சேஷபூதரானவர்கள் எம்மை அடிமைகொள்ளும் ஸ்வாமிகள் என்கிறார்.

நாதனை – நிருபாதிகஸ்வாமியாய், ஞாலமும் – (அவிசேஷஜ்ஞரான) ஸம்ஸாரிகளோடு, வானமும் – (விசேஷஜ்ஞரான) நித்யஸூரிகளோடு வாசியற, ஏத்தும் – கொண்டாடும்படி, நறும்துழாய்ப்போதனை – பரிமளப்ரசுரமான திருத்துழாய்த்தாராலே அலங்க்ருதனாய், பொன் – தர்சநீயமாய், நெடும் – (போக்யதையால்) விஞ்சியிருக்கிற, சக்கரத்து – திருவாழியுங் கையுமான அழகாலே, எந்தைபிரான்தன்னை – எனக்கு நிரவதிகஸ்வாமியானவனை, பாதம் – திருவடிகளிலே, பணிய வல்லாரை – தாழவல்லாரை, பணியுமவர் கண்டீர் – தாழ்ந்து அநுவர்த்திக்குமவர்கிடீர், ஓதும் – (சாஸ்த்ரங்களிலே) ஓதப்பட்ட, பிறப்பு இடைதோறு – பிறப்பினுடைய அவகாசந்தோறும், எம்மை – எங்களை, ஆளுடையார்கள் – அடிமையாகவுடையவர்கள்.

ஈடு: – மூன்றாம்பாட்டு. தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றிருக்குமவர்களுக்கு சேஷபூதரானவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.

(நாதனை) நிருபாதிக சேஷியாயுள்ளவனை. (ஞாலம் இத்யாதி) தோளும் தோள்மாலையுமான அழகைக் கண்டால் திருத்திரையெடுத்த அநந்தரம்போலே, நித்யஸூரிகளோடு நித்யஸம்ஸாரிகளோடு வாசியறப் புகழாநிற்பர்கள் *ஸ்த்ரீபா3லயுவ த்ருத்3தா4நாம்*, – ‘தந்தாம் கற்பழியும், வார்த்தைசொன்னால்’ என்று இருக்கும் ஸ்திரீகள், முதலிலே வார்த்தைசொல்ல அறியாத பா3லர்கள், வாய்விட்டு ஒன்றுஞ்சொல்லாத யுவாக்கள், கரணபாடவமில்லாத வ்ருத்34ர்கள், இவர்களித்தனைபேரும் வாய்விட்டு ஏத்தும்படியாயிற்றுப் பெருமாளழகு. (நறுந்துழாய்ப் போதனை) திருமேனியின் ஸ்பர்சத்தாலே நறுநாற்றத்தை யுடைத்தாய்ச் செத்விபெற்றிருக்கிற திருத்துழாய்ப் பூவையுடையவனை. (பொன் இத்யாதி) பொன்போலே ஸ்ப்ருஹணீயமாய், அழகுக்கும் ஆபரணத்துக்கும் மிடுக்குக்கும் தனக்கு அத்வருகின்றிக்கேயிருப்பதாய், போ4க்யதை அளவிறந்திருப்பதான திருவாழியையுடையனாய், அவ்வழியாலே என்னை யெழுதிக் கொண்ட உபகாரகனை. போ4க்தாக்களுக்குப் பிடிதோறும் நெய் வேண்டுமாபோலே, அடிக்கடி கையுந்திருவாழியுமான சேர்த்தியை அநுபவிக்கிறார், _ஆழிப்பிரான்_
(3-7-2) என்பது _பொன்னெடுஞ்சக்கரத் தெந்தைபிரான்_ என்பதாய். (பாதம் இத்யாதி) இவ்வழகைக்கண்டு இதிலே அஸூயைபண்ணாதே, இதிலே தோற்றுத்திருவடிகளிலே விழவல்லவர்களை. விஷயத்தைப் பாராதேயிறே அஸூயைபண்ணுகிறது. ஸர்வேஸ்வரனும் *அநஸூயவே* என்றும் *ந ச மாம் யோணப்4யஸூயதி* என்றும் அருளிச்செய்தானிறே. முன்புள்ளார் அநுஷ்ட்டிக்கையாலே நமக்கெளிதான இத்தனையல்லது, புறம்புள்ளார் பக்கலிலேயிறே இதினருமை தெரிவது. (வல்லாரைப் பணியுமவர்கண்டீர்) ஈஸ்வரன் பக்கலுட்பட அஸூயை பண்௰நின்றால் ததீயர்பக்கல் சொல்லவேணுமோ? ஈஸ்வரத்வப் பிடாராலே வணங்கவுமாம்; அன்றிக்கே, *ந நமேயம்* என்றிருக்கவுமாம், அவன்பக்கல்; அந்நபாநாதிகளாலே த4ரிக்கிற இவர்கள்பக்கல் பணியக்கூடாதிறே. தோற்றுகிற ஆகாரத்தைப் போகட்டுத் ததீ3யத்வாகாரத்தையே பார்த்து விரும்பும்போது அதுக்குத்தக்க அளவுடையனாக வேணுமிறே. ஸௌலப்யந்தானே நறுகுமுறுகென்று முடிந்துபோகைக்கு உடலாயிற்றிறே சிசுபாலாதிகளுக்கு. _பிள்ளையாத்தான் என்று போர நல்லனாயிருப்பானொருவன், சீயர்ஸ்ரீபாதத்திலே வந்து ‘எனக்கு ஓருரு திருவாய்மொழி அருளிச்செய்யவேணும்’ என்ன,  ‘உனக்கு விஶதமாவன பிள்ளையோடே கேட்டாலாயிற்று; அங்கே கேள்’ என்ன, ‘அவரைத் தெண்டனிட வேணுமே;’ என்ன, ‘அது ஒன்று உண்டோ? வேணுமாகில் செய்கிறாய்’ என்று என்னையழைத்து, ‘இவனுக்குப்பாங்கானபடி ஓருரு திருவாய்மொழி சொல்லும்’ என்ன, இவ்வளவும் வரக் கேட்டவாறே என்னை மிகவும் அநுவர்த்திக்கப்புக,  நான் ஒட்டாதொழிய, சீயர் பாடே சென்று ‘இத்வர்த்தத்தினுடைய சீர்மையறியாமையாலே முன்பு அப்படி சொன்னேன்; இனி நான் அநுவர்த்தித்ததுக்கு இசையும்படி அருளிச்செய்யவேணும்’ என்று சீயரையிட்டு நிர்ப்பந்தித்து அநுவர்த்தித்தான்_ என்று அருளிச்செய்வர். (ஓதும் இத்யாதி), ‘பிறந்தான், செத்தான்’ என்கிற வ்யபதேசமாத்திரமான ஜந்மமும் அமையும், இதுபெறில் என்னுதல்; அன்றிக்கே, சாஸ்த்ரங்களிலே நிஷித்ததயா ஓதிப்போருகிற ஜந்மங்களில் அவகசந்தோறு மென்னவுமாம். (எம்மையாளுடையார்களே) _அடியார்கள்குழாங்கள்_ (23-10) என்றும்,  _அந்தமில் பேரின்பத் தடியரோடிருந்தமை_ (10-9-11) என்றும் ஒரு தேச விசேஷத்திலே அடிமை செய்வது இவர்களுக்கிறே; அத்தை இங்கே கொள்ளக்கடவர்கள் இவர்கள்.  (எம்மை) – *தே3வாநாம் தா3நவாநாஞ்ச* என்று பொதுவான சேஷித்வமிறே அவனது; ‘மயர்வறமதிநலமருளி’ (1-1-1) விசேஷ கடாக்ஷம் பெற்ற என்போல்வார்க்கு சேஷிகள் இவர்களிறே. இவ்வருகுள்ளவை பார்க்கவொண்ணாதபடியிறே பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் இருப்பது: *து3ராசாரோபி* – ஏதேனும் தண்மையுண்டானாலும், அவனை ஆஸ்ரயித்தானாகில் இவனை நிர்த்தோ3ஷனாக ப்ரதிபத்தி பண்ணவேணும். தோஷங்கிடக்கச்செய்தே நிர்த்தோ3ஷனாக நினைக்கவேண்டுகிறதென்? என்னில்,- *ப்ரபா4வாத் பரமாத்மந:*; பின்பு இவனைக்குறைய நினைக்கையாவது- ‘இவனை சுத்தனாக்குகைக்கு ஈடான சக்தி அவனுக்கில்லை’ என்று பகவத்ப்ரபாவத்தைக் குறைய நினைக்கையாமிறே. வீரப்பிள்ளையும், பாலிகைவாளிப் பிள்ளையும் என்று இருவர் சீயர்ஸ்ரீபாதத்துக்கு ஏகாந்தராய், தங்களிலே செறிந்து போந்தார்களாய், தேஶாந்தரம் போனவிடத்தே வெறுப்புண்டாய்த் தங்களில் வார்த்தைசொல்லாதேயிருக்க, இவர்களைப்பார்த்து, _பிள்ளைகாள்! அர்த்தகாமங்கள் த்யாஜ்யமல்லாமையோ, பகவத்விஷயம் அராட்டுப்பிராட்டாயோ, ஒரு ஸ்ரீவைஷ்ணவனும் ஸ்ரீவைஷ்ணவனும் தங்களிலே வார்த்தை சொல்லாதே வெறுத்திருக்கிறது?_ என்ன, இருவரும் எழுந்திருந்து தெண்டனிட்டு ஸங்கதராய்ப்போனார்கள்.

நான்காம் பாட்டு

உடையார்ந்தஆடையன் கண்டிகையன்உடைநாணினன்*

புடையார்பொன்னூலினன் பொன்முடியன்மற்றும்பல்கலன்*

நடையாவுடைத்திருநாரணன் தொண்டர்தொண்டர்கண்டீர்*

இடையார்பிறப்பிடைதோறு எமக்கு எம்பெருமக்களே.

– அநந்தரம், அவனுடைய ஆபரணசோபையில் <டுபட்டு அடிமைபுக்கவர்களுடைய அடியார் எங்களுக்குப் பெரிய ஶேஷிகள் என்கிறார்.

உடை ஆர்ந்த – உடையோடு பொருந்தின, ஆடையன் – திருப்பரிவட்டத்தையுடையனாய், கண்டிகையன் – கண்டாபரணத்தையுடையனாய், உடை நாணினன் – பரிவட்டத்தின்மேலே சாத்தின கோவைநாணையுடையனாய், புடை ஆர் – ஒருபக்கத்திலே சேர்ந்த, பொன்நூலினன் – பொற்பூணூலையுடையனாய், பொன் முடியன் – ஸ்ப்ருஹணீயமான அபிஷேகத்தையுடையனாய், மற்றும் – மற்றும், பல் கலன் – பலவகைப்பட்ட ஆபரணங்களையும், நடையா உடை – ஸ்வாபாவிகமாக உடையனாய், திரு நாரணன் – ஸ்ரீமானான நாராயணனுக்கு, தொண்டர் – சேஷபூதரானவர்களுக்கு, தொண்டர்கண்டீர் – சேஷபூதரானவர்கள்கிடீர், இடைஆர் – நிரந்தரமான, பிறப்பு இடைதோறு – பிறப்பினுடைய அவகாசந்தோறும், எமக்கு – எங்களுக்கு,  எம்பெருமக்கள் – அஸாதாரணபரமசேஷிகள். இந்நாலுபாட்டாலும் பாகவதருடைய சேஷித்வம் சொல்லிற்று.

ஈடு: நாலாம்பாட்டு. அவனுடைய ஆபரண சோபையிலே தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சேஷபூதரானவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.

(உடையார்ந்த ஆடையன்) திருவரை பூத்தாற்போலேயிருக்கை. *கௌசேயபுஷ்பித கடீதடம்*, *பீதாம்பரத4ர:* _*தாஸாமாவிரபூ4த்* – ஸ்ரீப்ருந்தாவநத்திலே உலாவாநிற்கச் செய்தே, அவர்கள் படும் அலமாப்புக் காண்கைக்காக மறைய நின்றான்; ‘இனி இவர்கள் த4ரிக்கமாட்டார்கள்’ என்று தோற்றினவாறே வந்து தோற்றினான். *தாஸாம்* – கமர் பிளந்தவிடத்தே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலேயிருக்கை. *ஸ்மயமாநமுகாம்புஜ:* – தன்னையொழியச் செல்லாமையுண்டானால், பின்பு அவன்முக மிருக்கும்படி  இதுபோலேகாணும். *பீதாம்பரதர: * – இவன் பக்கல் இடைப்பெண்கள் நெஞ்சிற்பிறந்த ப்ரணயரோஷத்தாலுள்ள மறமெல்லாம் ஆறும்படியாயிற்று, உடைவாய்ப்பு இருப்பது. நெஞ்சுகளிற் பிறந்த புண்ணெல்லாம் தீர்ந்து இத்தோடே பணிபோரும்படியாயிற்று இருப்பது. _படிச்சோதியாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொற்கடிச்சோதி கலந்ததுவோ_ (3-1-1) என்று இதுவே பணிபோந்திருக்குமிறே. *ஸாக்ஷாந்மந்மத மந்மத:* – *பும்ஸாம் த்ருஷ்டிசித்தாபஹாரிணம்* – என்கிறபடியே_. (கண்டிகையன்)’ கூறையுடையழகு மேலே எழவீசிப் போகாநிற்க, நடுவே வழிபறித்துக்கொள்ளும் திருக்கழுத்தில் ஆபரணம் – இவரை மடி பிடித்துக்கொண்டுபோய்க் கழுத்தளவு ஸௌந்தர்யத்திலே நிறுத்திற்று. மடியென்பது – புடைவை. கண்டிகை – ஆரம்; கண்டத்திலே சாத்துமவை. (உடைநாணினன்) அரை நூல் வடம். கழுத்தே கட்டளையாக அநுபவியாநிற்க, கண்டக3தமான ஸௌந்தர்ய தரங்கங்கள் கீழே போரவீச,  நடுவேநின்று அநுபவிக்கிறார். (புடையார் பொன்னூலினன்) தான்கிடந்த பக்கத்துக்கு வேறொரு ஆபரணம் வேண்டாதே, காளமேகத்திலே மின்னினாற்போலேயிருக்கிற திருயஜ்ஞோபவீதத்தையுடையவன். இந்த ஸௌந்தர்ய ஸாகரத்தின் நடுவே அலையப் புக்கவாறே, தமக்கு ஆலம்பநமாக ஒரு நூலைப்பற்றினார் காணும். (பொன்முடியன்) _தேர்கடவிய பெருமான்_ (3-6-10) என்கிறபடியே, ஆஸ்ரிதர்க்கு ஆட்செய்கைக்கு முடிகவித்திருக்கிறவன். ஒருநூலைப் பற்றி நின்றவர்களை அதுதானே ஒருதலை சேர்த்து விடுகை நிஸ்சிதமிறே. பொன்முடி – ஸ்ப்ருஹணீயமான முடி. (மற்றும் பல்கலன் நடையாவுடை)  வேறும் எண்ணிறந்த திருவாபரணங்களை ஸ்வாபாவிகமாகவுடையவன். ஒருதலை சேர்ந்தால் பின்னை எல்லாம் வேண்டினபடி அநுபவிக்கலாமிறே. (மற்றும் பல்கலன்) – மின்மினி பறவா நின்றது காணும். அபரிமிதமாகையாலே முடியச் சொல்லமாட்டார்; ஆசையாலே சொல்லாதொழிய மாட்டார்; இதிறே படுகிறபாடு! (திருநாரணன்) அத்வாபரணங்களோபாதி காணும் லக்ஷ்மீஸம்பந்தமும் அங்குத்தைக்கு. _மார்வத்துமாலை_ (10-10-2) என்னக்கடவதிறே. திருவாபரணாழ்வார்களாகிறார் நித்யஸித்த புருஷர்களாகையாலே,  இவர்களையுடையவன்  திருநாரணனென்கையாலே, இம்மிதுநமே ஜகத்துக்கு சேஷியென்கிறார். (தொண்டர் தொண்டர் கண்டீர்) சேஷித்வத்துக்கு எல்லை அம்மிதுநமாயிருக்கிறாப்போலே, சேஷத்வத்திலும் எல்லையாயிருக்கிறவர்கள். (இடையார் இத்யாதி) உச்சி வீடும் விடாதே நடு நெருங்கிவருகிற ஜந்மங்களில் அவகாசந்தோறும், ஓர் ஒப்பனையாலன்றிக்கே வெறும் புறத்திலே நமக்கு சேஷிகள். ஸ்ரீமானான நாராயணனுக்கு அடிமை புக்கிருப்பார்க்கு, ‘இச்சேர்த்தியறிந்து இவர்கள் ஆஸ்ரயிப்பதே’! என்று இவர்களுக்கு அடிமைபுக்கார்க்கு அடியே னென்கிறார். அவர்கள் தங்களையெண்ணாதேயிருந்தபோதும் நமக்கு ஸ்வாமிகள் என்கிறார். எங்களுக்கு அஸாதாரண சேஷிகள்.

ஐந்தாம் பாட்டு

பெருமக்களுள்ளவர் தம்பெருமானை* அமரர்கட்கு

அருமையொழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை*

பெருமைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர்*

வருமையும் இம்மையும் நம்மையளிக்கும்பிராக்களே.

– அநந்தரம், ஆஸ்ரிதர் ப்ரயோஜநாந்தரத்தை அபேக்ஷிக்கிலும்அவர்கள் அருமைப்படாமற் கொடுக்குமவனுடைய உபகாரத்வாதிசயத்தை ஸ்துதிப்பாரை ஸ்துதிக்குமவர்கள் உபயவிபூதியிலும் தமக்கு உபகாரகர் என்கிறார்.

பெருமக்கள் உள்ளவர் – பரமஸாம்யாபத்தியாலேவரும் பெருமையையுடைய நித்யஸூரிகளுக்கு, தம் பெருமானை – அஸாதாரணனான அதிபதியாய், அமரர்கட்கு – சாவாமை வேண்டியிருக்கும் தேவர்களுக்கு, அருமை ஒழிய – அருமைப் படாதபடி, அன்று – (துர்வாஸஸ் சாபோபஹதரான) அன்று, ஆர் அமுது ஊட்டிய – பூர்ணமாக அம்ருதத்தைப் புஜிப்பித்து, அப்பனை – ஸத்தையைநோக்கினவனை உத்தேசித்து, பெருமை – அவனுபகாரத்வமஹத்தையை, பிதற்றவல்லாரை – (ப்ரீதிபாரவஸ்யத்தாலே அக்ரமமாகப்) பிதற்றவல்லாரை, பிதற்றுமவர்கண்டீர் – (தாங்களும் ப்ரீதிபரவசராய்ப்) பிதற்றுமவர்கிடீர், வருமையும் இம்மையும் – ஐஹிகாமுஷ்மிகங்களில், நம்மை அளிக்கும் – நம்மை உஜ்ஜீவிப்பிக்கும், பிராக்கள் – உபகாரகர்.

ஈடு: அஞ்சாம்பாட்டு. ‘ப்ரயோஜநாந்தரபரர்க்கும் அபேக்ஷிதஸம்விதாநம் பண்ணுமவன் ஔதார்யத்திலே தோற்றவர்கள் ஸ்வபாவத்துக்குத் தோற்றவர்கள் எனக்கு ஸ்வாமிகள்’ என்கிறார்.

(பெருமக்கள்) நித்யஸூரிகள்: பெரியோரென்றபடி; _பேராளன் பேரோதும் பெரியோர்_ (திருமொழி 7-44) என்னக்கடவதிறே. *மஹாத்மாநஸ்து* என்றும், *ஸமஹாத்மா ஸுதுர்லப:* என்றும், *ஏதேவை ஸுமஹாத்மாந:* என்றுமிறே சேஷிவார்த்தையும். ஸம்ஸாரத்திலே முமுக்ஷுவாய் ஆபிமுக்க்யம் பண்ணின மாத்ரத்திலே சொல்லுகிறபடி இதுவானால், நித்யஸூரிகளை இப்படிச் சொல்லக் கேட்க வேண்டாவிறே.  (உள்ளவர்) *அஸந்நேவ* என்பது ஒரு நாள் வரையிலே *ஸந்தமேநம்* என்பதாகாதே, என்று மொக்க உள்ளவர்கள். அதாவது – ஸ்வரூபமான சேஷத்வம் அழியாமையாலே. நிரூபகமில்லையானால் நிரூப்யம் இல்லையாமிறே. சேஷத்வ ப்ரதிபத்திக்கு ஒருநாளும் குறைதல் வாராதவர்கள். (தம்பெருமானை) அவர்களுக்கு ஸத்தாஹேதுவாய் அந்த உண்மையை நடத்திக் கொடுக்குமவனை. (அமரர்கட்கு) நம்மிற் காட்டில் நாலுநாள் சாவாதேயிருக்கிறத்தையிட்டு அவர்கள்பேரைச் சுமந்து கொண்டிருக்கிற இந்த்ராதிகளுக்கு. (அருமையொழிய) அஸுரர்கள்கையிலே படும் எளிவரவு தீரும்படியாகக் கடலைக் கடைந்து அவர்கள் ப2லத்திலே அந்வயிக்கும்படி பண்ணினவனிறே. கடலைக் கடையும் வருத்தத்தைத் தன்பக்கலிலேயாக்கி, இவர்களுக்கு அம்ருத போ4கத்திலே அந்வயமாம்படி பண்ணினபடி. (அன்று) துர்வாஸஸ்சாபோப ஹதரான தசையிலே. (ஊட்டிய அப்பனை) ‘வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானாரிறே’ (திருமொழி 2-6-1)  அப்பன் – உபகாரகன். ப்ரஜைக்குத் தாய் பண்ணும் உபகாரமாவது – அதின் முகம் வாடாமே வளர்க்கையிறே.   (பெருமை இத்யாதி) *உதா3ரா* என்கிறபடியே, தன்னையே ப்ரயோஜநமாகப் பற்றினார்க்குப் போலே, ஐஸ்வர்யாதிகளை உகந்தார்க்கும் ‘இத்தையாகிலும் நம்பக்கலிலே கொள்ளப் பெற்றோமே; இவர்கள் நமக்கு ஸர்வஸ்வதாநம் பண்ணுகிறார்களன்றோ’ என்றிருக்கும் பெருமை. நாட்டார்படியல்ல இவனது; நாட்டில் கொடுப்பார் உதாரராயிருப்பர்: இங்குக் கொள்வார் உதா3ரராயிருப்பர். ஏதேனுமாகக் குறைதீர்ப்பார் உதாரராமித்தனையிறே. (பிதற்றவல்லாரை) _அறவனை_ (1-7-1) என்கிறபடியே ‘ப்ரயோஜநாந்தரபரரளவிலும் இப்படியிருப்பதே!’ என்று இத்தை நெஞ்சிலே யநுஸந்தித்து அடைவுகெடக் கூப்பிட்டு ஏத்துமவர்களை. (பிதற்றுமவர்கண்டீர்) ‘இந்நீர்மை இவர்களுக்கு நிலமாவதே’!  என்று அவர்கள் அவன் பக்கலிருக்கும் இருப்பை அவர்கள்பக்கலிலே இருக்குமவர் கிடீர்.  ‘இவர்கள் உத்தேஸ்யராவது எத்தனை நாளைக்கு?’ என்ன, (வருமையும் இம்மையும்) – *அத்ர பரத்ர சாபி* இஹலோக பரலோகங்களிரண்டிலும்.  இஹலோகத்தில் ‘நாட்டாரோடியல் வொழித்து’(10-6-2) பரலோகத்தில் ‘நாரணனை நண்ணுவித்து’ (10-6-2), ‘அடியார்கள் குழாங்களிலே – உடன்கூட்டும்’ (23-10) உபகாரகர். (நம்மையளிக்கும் பிராக்கள்) நம்மை உஜ்ஜீவிப்பிக்கும் ஸ்வாமிகள். ஸர்வேஸ்வரன் ஒருநாள்வரையிலே உபஸம்ஹரித்திட்டு வைத்து, ஒருநாள் வரையிலே ஸம்ஸாரத்திலே ‘தருதுயரந்தடாதே’ (பெருமாள்.திரு.5-1) வைக்குமிறே; ஸ்ரீவைஷ்ணவர்களோடே ஸஹவாஸம் பண்ணப் பெறில், ‘ஸம்ஸாரந்தானே நன்று’ என்னும்படியிறே அவர்கள் படி. _நறுமாவிரை நாண் மலரடிக்கீழ்ப் புகுதலுறுமோ_ (8-10-3) என்றாரிறே.

ஆறாம் பாட்டு

அளிக்கும்பரமனைக்கண்ணனை ஆழிப்பிரான்தன்னை*

துளிக்கும் நறுங்கண்ணித் தூமணிவண்ணன் எம்மான்தன்னை*

ஒளிக்கொண்டசோதியை உள்ளத்துக்கொள்ளுமவர்கண்டீர்*

சலிப்பின்றியாண்டுஎம்மைச் சன்மசன்மாந்தரங்காப்பரே.

– அநந்தரம், அநந்யப்ரயோஜநர்க்குத் தன்வடிவழகை அநுபவிப்பிக்கும் உஜ்ஜ்வலஸ்வபாவனை அநுபவிப்பார் நமக்கு ரக்ஷகர் என்கிறார்.

அளிக்கும் பரமனை – (உபகரிக்குமிடத்தில்), மேலில்லாதபடியாகத் (தன்னை) உபகரிப்பானாய், கண்ணனை – (அவர்களிட்டவழக்காம்படி)பத்யனாய், ஆழி – கையுந் திருவாழியுமான அழகையும், துளிக்கும் நறும் கண்ணி – மதுஸ்யந்தியாய்ப் பரிமளோத்தரமான மாலையழகையும், தூமணி – அழுக்கற்ற மாணிக்கம்போன்ற, வண்ணம் – வடிவையும், பிரான்தன்னை – உபகரித்து, எம்மான் தன்னை – என்னையெழுதிக்கொண்ட ஸ்வாமியாய், ஒளிக்கொண்ட – (அத்தாலே) மிகவும் நிறம்பெற்ற, சோதியை – தேஜஸ்ஸை யுடையனானவனை, உள்ளத்து – நெஞ்சாலே, கொள்ளுமவர் கண்டீர் – அநுபவிக்குமவர்கள்கிடீர், எம்மை – எம்மை, சலிப்பு இன்றி – (ப்ரயோஜநாந்தரங்களிற்போகாமல்) நிஸ்சலமாக, ஆண்டு – அடிமைகொண்டு, சன்மம் – இஜ்ஜந்மத்தோடு, சன்மாந்தரம் – ஜந்மாந்தரங்களோடு வாசியற, காப்பர் – ரக்ஷிக்குமவர்கள்.

ஈடு: ஆறாம்பாட்டு. ‘கீழ்ச்சொன்ன ஸௌந்தர்யாதிகளைத் திரள அநுபவிக்குமவர்கள் எனக்கு ரக்ஷகர்’ என்கிறார்.

(அளிக்கும் பரமனை) – இத்வாத்மாக்களை ரக்ஷிக்குமிடத்தில் தனக்கு அத்வருகில்லாதவனை. (அன்றிக்கே, உபகரிக்குமிடத்தில் மேலில்லாதவனென்னுதல். அளிக்கை – ரக்ஷிக்கையும் கொடுக்கையும்) (கண்ணனை) – அளிப்பது தன்னையிறே; _எனக்கே தன்னைந்தந்த கற்பகம்_ (2-7-11). (ஆழிப்பிரான் தன்னை) – *நாயுதாநி* என்கிறபடியே தன்னோடு ஆயுதத்தோடு வாசியற *பக்தாநாம்* என்றிருக்குமவனை; _ஆளும் பரமனை_ (3-7-2) என்கிற பாட்டை நினைக்கிறது. (துளிக்கும் இத்யாதி) – அவ்வளவிலகப்படாதாரை அகப்படுத்துகைக்கு ஈடான கண்ணியிருக்கிறபடி. (துளிக்கும் நறுங்கண்ணி) – திருமேனியில் ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்று மதுஸ்யந்தியாநிற்பதாய், நறு நாற்றத்தையுடைய திருத்துழாய்மாலையையுமுடையனாய்; _நறுந்துழாய்ப்போதனை_ (3-7-3) என்கிறத்தை நினைக்கிறது. (தூமணிவண்ணன் எம்மான் தன்னை) – பழிப்பற்ற நீலமணிபோலேயிருக்கிற திருநிறத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவனை: _மணியை வானவர் கண்ணனை_ (1-10-11) என்கிறபடியே நித்யஸூரிகளை எழுதிக் கொண்டபடியே காணும் இவரையும் எழுதிக்கொண்டது; _படிகண்டறிதியே_ (முதல்.திரு.85) என்னக்கடவதிறே; _தோளுமோர் நான்குடைத் தூமணிவண்ணன்_ (3-7-2) என்றத்தை நினைக்கிறது. (ஒளிக்கொண்ட சோதியை) – நிரவதிக தேஜோரூபமான விக்ரஹத்தையுடையவனை; _பயிலுஞ்சுடரொளி_ (3-7-1) என்றத்தை நினைக்கிறது.  (உள்ளத்துக்கொள்ளுமவர் கண்டீர்) குணங்களை யநுஸந்தித்து வித்தராய் வாய்விடமாட்டாதே யிருக்குமவர்கள் கிடீர். (சலிப்பின்றி ஆண்டு எம்மை) பகவத்ஸமாஸ்ரயணம் பண்ணினால் ப்ரஹ்மாத்யைஸ்வர்யங்களைக்கொண்டு மீளவுமாம்; ததீ3யஶேஷத்வபர்யந்தமானாலாயிற்று மீளாதொழிவது. மீண்டார்களாகிலும் ‘திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக் காணு’ (கண்ணி-3) மித்தனையிறே. _தெரிவைமாருருவமே மருவி_ (திருமொழி 1-1-3) என்கிறபடியே, பலவுருச் சொல்லிப் போகவேண்டாதே இத்வோருருவிலும் போரும்படியிறே அவர்கள் சொல்லுவது. (சன்ம சன்மாந்தரம் காப்பரே) ஜந்மபரம்பரைகளிற் புகாதபடி ரக்ஷிப்பார்கள். கீழிற் பாட்டுக்களிலே, ஜந்மத்தை ஆதரித்தார், ஸ்ரீவைஷ்ணவர்கள்பக்கலாதரத்தாலே; இங்கு அவர்கள்செய்யும்படி சொல்லுகிறார்;

ஏழாம் பாட்டு

சன்மசன்மாந்தரம்காத்து அடியார்களைக்கொண்டுபோய்*

தன்மைபெறுத்தித் தன்தாளிணைக்கீழ்க்கொள்ளும் அப்பனை*

தொன்மைபிதற்றவல்லாரைப் பிதற்றுமவர்கண்டீர்*

நன்மைபெறுத்துஎம்மை நாளுய்யக்கொள்கின்றநம்பரே.

– அநந்தரம், ஸ்வாநுபவம்பண்ணுவாரை ஸ்வரூபாவிர்பாவத்தைப் பிறப்பித்து அநுபவிப்பிக்குமவனைப் புகழுமவரைப் புகழுமவர்கள் நமக்கு நித்யபுருஷார்த்தப்ரதர் என்கிறார்.

சன்மசன்மாந்தரம் – ஜந்மபரம்பரைகள், காத்து – (வாராதபடி) பரிஹரித்து, அடியார்களை – சேஷத்வஜ்ஞாநமுடையவர்களை, கொண்டுபோய் – (ஒருதேசசேவிஷத்திலே) கொண்டுபோய், தன்மைபெறுத்தி – ஸ்வரூபாவிர்பாவத்தைப் பிறப்பித்து, தன் தாளிணைக்கீழ் – தன்திருவடிகளின்கீழே, கொள்ளும் – அடிமைகொண்டருளும், அப்பனை – ஸ்வாமியானவனை, தொன்மை-ஸ்வாபாவிகோபகாரகத்வத்தை, பிதற்ற வல்லாரை – சொல்லி அக்ரமமாகப் புகழவல்லாரை, பிதற்றுமவர்கண்டீர் – தாங்களும் ப்ரேமவித்தராய்ப் புகழுமவர்கள்கிடீர், எம்மை-நம்மை, நன்மைபெறுத்து – (அந்தமில்பேரின்பத்தடியரோடிருக்கும்) நன்மையைப் பெறும்படிபண்ணி, நாள் – யாவதாத்மபாவி, உய்யக்கொள்கின்ற – உஜ்ஜீவிப்பித்துக்கொள்வாராக, நம்பர் – விஸ்வஸிக்கப்படுமவர்கள். நம்பர் – நம்பப்படுமவர்கள். இம்மூன்றுபாட்டாலும் – பாகவதருடைய சரண்யத்வம் சொல்லிற்று.

ஈடு: – ஏழாம்பாட்டு. ஆஸ்ரிதவிஷயத்தில் அவன்பண்ணும் மஹோபகாரங்களிலே வித்34ரானவர்களுக்குத் தோற்றிருக்குமவர்கள்கிடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகள் என்கிறார்.

(சன்மசன்மாந்தரம் காத்து) பஞ்சாக்நிவித்யையிற் சொல்லுகிறபடியே, மேகத்திலே புக்கு வர்ஷரூபத்தாலே பூ43தமாய், வ்ரீஹியிலே புக்கு அந்நரூபத்தாலே புருஷன்பக்கலிலே புக்கு, பின்பு பஞ்சமியான ஆஹுதியிலே புக்கு, பின்பிறே க3ர்ப்பமாவது; இப்படிவருகிற ஜந்மபரம்பரைகளை வேர்ப்பற்றோடே அறுத்து. வர்த்தமாநதே3ஹாவதியாக்கிப் பின்பு ஒரு தேஹத்திற் புகாதபடி பண்ணி. இப்படி செய்வது ஆரையென்னில் – (அடியார்களை) தன் திருவடிகளிலே ஸர்வ ப4ரந்யாஸம் பண்ணியிருக்குமவர்களை. (கொண்டுபோய் இத்யாதி) _மரணமானால்_ (9-10-5) என்கிறபடியே சரீரவிஸ்லேஷத்தளவும் பொறுத்திருந்து அந்திமஸ்ம்ருதியும் பக்தியும் இவர்களுக்குப் பணியாக்காதே *அஹம் ஸ்மராமி* என்கிறபடியே – தானே நினைத்து, வழிதெரியாதபடியிருக்கிற சதாதிகையான நாடியாலே *ஹார்தா3நுக்ருஹீத:* என்கிறபடியே தான்கூடக்கொண்டு புறப்பட்டு, அந்த சரீரவிஸ்லேஷ ஸமயத்தில் இவன்பட்ட க்லேசமெல்லாம் தீரும்படியாக அவ்வளவிலே ஒரு பரமாத்மப்ரவேசத்தைப் பண்ணுவித்து, சிறு ப்ரஜைகள் நொந்தால் தாயானவள் சிசிரோபசாரம் பண்ணுமாபோலே அவ்வளவிலே மேல் வழி போகைக்குத் தரிப்புண்டாம்படிபண்ணி; _உயிர்கொண்டுடலொழிய ஓடும்போதோடி அயர் வென்றதீர்ப்பான்_ (நான்.திரு.88) என்கிறபடியே, சென்று முகங்கொடுத்து, கர்மஸம்பந்தமறச் செய்தேயும் வித்யாமாஹாத்ம்யத்தாலே விரஜையளவும் ஸூக்ஷ்மசரீரம் நிற்கும்படிபண்ணி, அர்ச்சிராதி கணங்களோடொக்க ஆளிட்டிராதே, *நயாமி* என்கிறபடியே தானே வந்து, _மாதவன் தன் துணையா நடந்தாள்_ (திருமொழி 3-7-4) என்கிற _கள்வன்கொல்_லில் (திருமொழி 3-7) பிராட்டியைப்போலே தன் சிறகின்கீழே கொண்டு, வழியிலுள்ளார் –ரஸாவஹிக்கும்படி இத்வருகுள்ளவற்றைக் கழித்துப் பரமபதத்திலேகொண்டு புக்கு, *ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே* என்கிறபடியே ஸ்வஸ்வரூபப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து, பின்னையும் விடாதே பாதோ3பதா4நமாகத் தன் திருவடிகளின்
கீழேயிட்டுக்கொண்டு, இதுதான் இவனுக்கு உபகரித்தானாயிருக்கையன்றிக்கே தன்பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை. *ஸாயுஜ்யம் ப்ரதிபந்நாயே* இத்யாதி. (தன்மைபெறுத்தி)  ஸ்வஸ்வரூபாவிர்பா4வத்தைப் பிறப்பித்து. (அப்பனை) இதுதன்னை இவன் சேதநனாகையாலே உபகாரமாக நினைத்திருக்கும்; பாரதந்த்ர்யத்தாலே அவன் தனக்காகச் செய்தானா யிருக்கும். (தொன்மைபிதற்றவல்லாரை) ஸ்வாபாவிகமான ஔதார்ய குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாகப் புகழுமவர்களை. *தாநஹம்த்3விஷத:* என்று தள்ளுமது இவன்செய்த குற்றங்களைக் கண்டாகையாலே ஔபாதிகமிறே; ஸ்வாபாவிகமான நிலையாவது – இப்படி ரக்ஷிக்கை. (பிதற்றுமவர் கண்டீர்) ‘அந்த:புரத்ருத்தாந்தம் இவர்களுக்கு நிலமாவதே!’ என்று அவர்கள் விஷயத்திலே ஈடுபட்டு ஏத்துமவர்கள்கிடீர்; (நன்மைபெறுத்து) பாகவதசேஷத்வபர்யந்தமான பகவஸ்சேஷத்வஸம்பத்தை யுண்டாக்கி. (எம்மை நாளுய்யக்கொள்கின்ற நம்பரே) நமக்கு அவன்திருவடிகளில் கைங்கர்யத்தை யாவதா3த்மபா4வி நடத்தக்கடவ விஸ்வஸநீயர்; முதலிகளென்றுமாம்.

எட்டாம் பாட்டு

நம்பனைஞாலம்படைத்தவனைத் திருமார்பனை*

உம்பருலகினில்யார்க்கும் உணர்வரியான்தன்னை*

கும்பிநரகர்களேத்துவரேலும் அவர்கண்டீர்*

எம்பல்பிறப்பிடைதோறு எம்தொழுகுலம்தாங்களே.

– அநந்தரம், ப்ராப்யபூதனான ஸ்ரிய:பதியை ஸ்துதிக்குமவர்கள் எங்களுக்குக் கைங்கர்யப்ரதிஸம்பந்திதயா ப்ராப்யர் என்கிறார்.

நம்பனை – (நிருபாதிகமாகத்) தஞ்சமானவனாய், ஞாலம்படைத்தவனை – (தன்னையாஸ்ரயித்து அநுபவிக்கைக்கு உறுப்பாக) ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணுவனாய், திருமார்பனை – (ஸ்ருஷ்டிதசையோடு ஆஸ்ரயணதசையோடு ப்ராப்யதசையோடு வாசியற அநுத்ருத்தமான) ஸ்ரிய: பதித்வத்தையுடையனாய், உம்பருலகினில்-(ஸ்வஸ்ருஷ்டமான) உபரிதநலோகங்களில், யார்க்கும் – எத்தனையேனும் அதிசயிதஜ்ஞாநர்க்கும், உணர்வு அரியான்தன்னை – அறியவரிய பெருமையை யுடையவனை, கும்பிநரகர்களும் – கும்பீபாகநரகவாஸிகளான பாபப்ரசுரர்களும், ஏத்துவரேல் – ஏத்தினார்களாகில், அவர் தாங்கள் கண்டீர் – அவர்கள் தாங்கள்கிடீர், எம் பல் பிறப்பிடைதோறு-எங்கள் பலவகைப்பட்ட ஜந்மாவகாசந்தோறும், எம் தொழுகுலம் – எங்கள் சேஷத்ருத்திக்கு ப்ரதிஸம்பந்தியான குலம்.

இப்பாட்டு – ப்ராப்யபரம். இதினுடைய விவரணம் – _நெடுமாற்கடிமை_.

ஈடு: – எட்டாம்பாட்டு. அவனுடைய ஸ்ரிய:பதித்வத்திலே தோற்றிருக்குமவர்கள் எனக்கு நாதர் என்கிறார்.

(நம்பனை) நம்பப்படுமவனை. ஏதேனும் து3ர்த3சையிலும் ஆத்மாவுக்குத் தஞ்சமானவனை. கீழ்ச்சொன்னவர்களும் நம்பராகைக்கு அடியானவனை. இவனை யொழிந்த ப3ந்துக்கள் விஸ்வஸநீயரல்லரென்கை; *ஸ பித்ரா ச* – _பெற்றார் பெற்றொழிந்தார்_ (திருமொழி 8-9-7) இத்யாதி. மஹாத்யாதியாளனானவன், ‘எனக்கு இன்ன போதிலே இன்ன த்யாதி வந்து நலியும்; அப்போது நான் என்னையறியேன்; பிரானே! அப்போது என்னை ரக்ஷிக்கவேணும்’ என்று ஸ்வஸ்த்த த3ஶையிலே அறிவித்துவைத்தால் அவர்கள் உணர்ந்திருந்து நோக்குமாபோலே, தான் தனக்கு உதவாத தசையிலும் ஈஸ்வரன் ரக்ஷிக்கும்படி. _(ஸபித்ராச இத்யாதி) – ஈஸ்வரன் தனக்கும் ஆகாதவன்றும் தஞ்சமாவான் தானேயாயிற்று. பெருமாள் பக்கல் பண்ணின அபகாரத்தைக் கண்டு தமப்பன் கைவிட்டான். ‘ச’காரத்தாலே தாயும் கைவிட்டாளென்கிறது; அவள் பற்று முன்னாகப்பற்றும் இவன் விடும் போது அவளும் விட்டாளாக வேணுமிறே. வாத்ஸல்யம் உறைத்த இடத்திலேயிறே முந்துற விழுவது; ஆகையாலே, அவள் காலிலே முந்துற விழுந்தான்; அவள் மையெழுதி மஞ்சள் பூசிப்புறப்பட்டு நின்றாள்; இவனும்குடநீர்வழித்து நின்றான். *பரித்யக்த:* – இவன் த்ருத்தஹாநி கண்டு பண்டே விட்டிலோமோ? என்றார்கள்; *ஸுரைச்ச* – மாதாபிதாக்கள் கைவிட்டாலும் ஸஜாதீயர் விடாதே கைக்கொள்ளுவர்களாயிற்று. ‘இவர்கள் முடியவிடுகிறார்களோ?’ என்னுமத்தாலே ‘அவர்களுக்கு ப்ரியம்’ என்று நினைத்து. *ஸமஹர்ஷிபி:* – அவர்கள் விட்டாலும் விடாத ஆந்ருசம்ஸ்யப்ரதாநரான ருஷிகளும் விட்டார்கள். ஆந்ருசம்ஸ்யத்துக்கு விஷய வ்யவஸ்த்தை உண்டிறே. பெற்றவர்கள் கைவிட்டால் நாட்டார்க்குப் பணியன்றிறே காக்கை நோக்குகை; ஆகையாலே *த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய* – லோகங்களில் திறந்து கிடந்த வாசலெல்லாம் ஒரு கால் நுழைந்தாப்போலே ஒன்பதின் கால் நுழைந்தானாயிற்று; ‘ஒருகாலல்லா வொருகாலாகிலும் க்ருபை பிறக்கக்கூடுமோ?’ என்று; இவன் புகப்புகத் தள்ளிக் கதவையடைத்தார்கள். *தமேவ சரணங் கத:* – தன்மேலே ப்ரஹ்மாஸ்த்ரத்தைத் தொடுத்துக் கொண்டு நிற்கிறவர் திருவடிகளிலே வந்து விழுந்தானாயிற்று. அதாவது- _அரிசினத்தாலீன்றதாயகற்றிடினும் மற்றவள்தனருள் நினைந்தே அழுங்குழவி_ (பெருமாள்.திரு. 5-1) என்கிறபடியே அவன்திருவடிகளையொழியப் புகலில்லாமை_ இப்படி எல்லாவவஸ்த்தைகளிலும் விஸ்வஸநீயன் ஸர்வேஸ்வரனே. எங்கே கண்டோம்? என்னில், – (ஞாலம் படைத்தவனை) தனக்கு, தானுமின்றிக்கே பிறருமின்றிக்கே அசிதவிசேஷமாய்க் கிடக்கிற தசையிலே, புருஷார்த்தோபயோகியான சரீரத்தை யுண்டாக்கினவனை. அது ஆருக்கு ப்ரியமாக? என்னில், (திருமார்பனை) அவளுக்கு ப்ரியமாக: *யஸ்யா வீக்ஷ்ய முகந் ததிங்கித பராதீந:* என்னக்கடவதிறே. (உம்பர் இத்யாதி) உபரிதந லோகங்களில் எத்தனையேனும் அதிசயிதஜ்ஞாநர்க்கும் அறிய வொண்ணாதவனை. (கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்) – மஹாபாப ப2லமாகக் கும்பீபாகமான நரகத்திலே கிடந்தும் அங்கே திருநாமத்தைச் சொல்லுவர்களாகில். (அவர் கண்டீர்) – ஏதேனும் து3ர்க்கதரேயாகிலும், அவ்விருப்பிலே நமக்கு ப்ராப்யரென்கை. (எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்களே) நம்முடைய பலவகைப்பட்ட ஜந்மங்களில் அவகாசங்கள் தோறும் திருநாமத்தைச் சொன்னவர்களேயன்று எனக்கு உத்தேஸ்யர்; அவர்கள் குலங்களாக எங்கள் குலத்துக்கு ஆசார்யஸந்தாநம். ‘அந்த து:க்காநுபவம் பண்ணா நிற்க, திருநாமத்தைச் சொல்லக் கூடுமோ?’ என்னில், க்லேசாதிசயத்தாலே, ‘அம்மே! அப்பா! என்னக் கூடாதோ?’ என்று காணும் இவர்க்கு நினைவு.

ஒன்பதாம் பாட்டு

குலந்தாங்குசாதிகள்நாலிலும் கீழிழிந்து* எத்தனை

நலந்தானிலாத சண்டாளசண்டாளர்களாகிலும்*

வலந்தாங்குசக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று*உள்

கலந்தாரடியார்தம் அடியார் எம்அடிகளே.

– அநந்தரம், ஆஸ்ரிதருடைய ஜந்மாத்யபகர்ஷ தோஷநிவர்த்தகமான பரமபாவநத்வத்தை யுடையவனை அநந்யப்ரயோஜநராய் அநுபவிப்பார் த்ரிபுருஷம் எனக்கு ஶேஷிகள் என்கிறார்.

குலம் – (அநுலோம ப்ரதிலோம விவாஹத்தாலே) ஸகலகுலங்களுக்கும், தாங்கு – ஆதாரபூதரான, சாதிகள் – (ப்ராஹ்மணாதி) ஜாதிகள், நாலிலும் – நாலிலும், கீழ் இழிந்து – கீழே போந்து, எத்தனை நலந்தான் இலாத – மிகவும் (‘நாம் அபக்ருஷ்டஜந்மாக்கள்’ என்கிற) அறிவுமின்றியேயிருக்கும்,சண்டாளர்-சண்டாளர், (ப்ராஹ்மணஸ்த்தா நத்திலேயாம் படி), சண்டாளர்கள் ஆகிலும் – (அவர்களுக்கும் அநாதரணீயர்களான) சண்டாளர்களாகிலும், வலம் தாங்கு-வலத்திலே ஏந்தப்பட்டு, சக்கரத்து – (_சரணம் பவித்ரம்_  என்கிறபடியே பவித்ரபூதனான) ஆழ்வானையுடைய, அண்ணல் – ஸ்வாமியாய், மணி – (ஸ்வஸம்பந்தத்தாலே எல்லாரையும் பரிசுத்தராக்கும்) ரத்நம்போலே பவித்ரமாய், வண்ணற்கு – (உஜ்ஜ்வலமான)வடிவையுடையவனுக்கு, ஆள் – (நாம்) சேஷபூதர், என்று – என்று நினைத்து, உள்கலந்தார் – அநந்யப்ரயோஜநராய்க் கலந்தவர்களுக்கு, அடியார்தம் – அடியார்க்கு, அடியார் – அடியாரானவர்கள், எம் – எங்களுக்கு, அடிகள் – ஸ்வாமிகள்.

ஈடு: – ஒன்பதாம் பாட்டு. ‘கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சேஷபூதரானவர்கள் எனக்கு ஸ்வாமிகள்’ என்கிறார்.

(குலம் இத்யாதி) க்ரமவிவாஹத்தாலும் அநுலோமப்ரதிலோம விவாஹத்தாலுமுள்ள குலங்களை த4ரிப்பதான ப்ராஹ்மணாதியான நாலு ஜந்மத்திலும் கீழேகீழே போய். (எத்தனை இத்யாதி) அந்த சண்டாள ஜந்மத்துக்கு அடைத்த ஜ்ஞாந வ்ருத்தமின்றிக்கே யிருப்பாருமாய், நாம் ‘சண்டாளர்’ என்றால் நோக்காதே போமாபோலே, அவர்கள்தாங்கள் விலங்குமவர்களாகிலும். இவர்கள் உத்தேஸ்யராகைக்கு என்ன வலக்குறியுண்டு? என்ன; வ்ருத்தவான்களன்றோ இவர்களென்று கைமேலே காட்டிக் கொடுக்கிறார் மேல்; (வலந்தாங்கு சக்கரம் இத்யாதி) – _வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு_ (திருப்பல். 2) என்னா, _வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு_ (திருப்பல்.2) என்னுமாபோலே; இவரும் கீழ்ப்பாட்டிலே _திருமார்பனை_ என்றார்; இங்கே_வலந்தாங்கு சக்கரம்_ என்றார். வலவருகே த4ரிக்கப்பட்ட திருவாழியையுடையனாய் அதுக்கு ஆஸ்ரயமான நீலமணிபோலே ஸ்ரமஹரமான வடிவழகை யுடைய ஸர்வாதிகனுக்கு. (ஆளென்று) ‘ஸ்வரூபஞ்ஞாநம் முன்பாக ‘அடிமை செய்கையே ப்ரயோஜநம்’ என்றிருக்குமவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள்’ என்கிறார். வ்ருத்தவான் அபிமாநத்திலே ஒதுங்கும் இதுவேயிறே வேண்டுவது. அவர்கள் அவனிலும் உத்தேஸ்யராவர்களிறே.

பத்தாம் பாட்டு

அடியார்ந்தவையமுண்டு ஆலிலையன்னவசஞ்செய்யும்*

படியாதுமில்குழவிப்படி யெந்தைபிரான்தனக்கு*

அடியாரடியார்தம்மடியாரடியார் தமக்கு

அடியாரடியார்தம்* அடியாரடியோங்களே.

– அநந்தரம், ப்ரளயாபத்ஸகனான வடதளசாயிக்கு சேஷபூதரானவர்களுடைய ஸம்பந்திபரம்பரையான ஏழுபடிகாலுக்கு நாம் அடிமை என்கிறார்.

(த்ரைவிக்ரமாபதாநத்திலே), அடி – தன்திருவடிகளோடு, ஆர்ந்த – சேர்ந்த, வையம்-பூமியை, உண்டு-(ப்ரளயாபத்திலே) அமுதுசெய்து, ஆலிலை – ஓராலிலையிலே, அன்னவசஞ்செய்யும் – (உண்டதுஜரியாதபடி) கண்வளர்ந்தருளக்கடவனாய், படி யாதும் இல் – ஒப்பு ஒன்றும் இல்லாத, குழவிப்படி – முக்தசிசுவிக்ரஹத்தையுடையனாய், பிரான் எந்தை தனக்கு – (அந்தஸ்வபாவத்தாலே) எங்களுக்கு ஸ்வாமியானவனுக்கு, அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார் தம்அடியார் – அடியாரானவர்களுடைய  ஸம்பந்திபாரம்பர்யத்தின் எல்லைநிலத்துக்கே, அடியோங்கள் – அடியோங்கள் (நாங்கள்). பாட்டு முடிந்தவாறே ஏழுபடிகாலிலே நின்றாரித்தனை. சேஷத்வப்ரீதிக்கு முடிவில்லாமையாலே, ததீயரானசேஷிபாரம்பர்யத்துக்கு முடிவில்லையென்று கருத்து. படி – ஒப்பு. குழவிப்படி – குழவிவடிவு.

ஈடு: – பத்தாம்பாட்டு. ‘அவனுடைய அக4டிதக4டநாஸாமர்த்த்யத்திலே தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேஷத்வத்தின் எல்லை நிலம் நான்’ என்கிறார்.

(அடியார்ந்த  வையம் உண்டு) அமுதுசெய்ய, முன்பே அடியிட்டபடியிறே இது. தன் படிக்குக்காற்கூறும் போராதத்தையிறே அமுதுசெய்தது. திருவடிக்கு அளவான பூமியை அமுதுசெய்து. (ஆலிலை அன்னவசஞ்செய்யும்) ஒரு பவனான ஆலந்தளிரிலே உணவுக்கீடாக இடம்வலங்கொள்ளும். அமுதுசெய்தபடி ஜரியாமே வலக்கை கீழ்ப்படவாயிற்று கிடப்பது. எல்லார்க்கும் ஒக்குமே தந்தாம் ஜீவநஹாநிவாராமற் பரிஹரிக்கை. ‘கூழாட்படுகை’ (திருப்பல்.3) அவனுக்கும் ஒத்திருக்கிறபடி. (படியாதுமில்குழவிப்படி) ஒப்பொன்று மின்றிக்கேயிருக்கிற பிள்ளைத் தனத்தாலே. யசோதா ஸ்தநந்தயமும் ஒப்பன்று, வடதளசாயிக்கு; ‘தொட்டில் நின்றும் தரையிலே விழப்புகுகிறோம்’ என்று அஞ்ச அறியாத பா3ல்யமிறே அங்கு. ‘ஆலிலையினின்றும் ப்ரளயத்திலே விழுகிறோம்.’ என்று அஞ்சவறியாத மௌக்3த்4யமிறே இங்கு. (எந்தைபிரான்) அந்த அக4டிதக4டநா ஸாமர்த்த்யத்தாலே என்னைத் தோற்பித்த உபகாரகன். (அடியார் இத்யாதி) *தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம்* என்று சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகில்லாதாப்போலே, சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகில்லாதபடி அதினெல்லையிலே நிற்கிறார். ஐஸ்வர்யத்தையாசைப்பட்டவர்கள் தன்னோடு ஸஜாதீயரிலேற்றத்தை ஆசைப்பட்டு, க்ஷத்ரியர்க்குமேலே ஆசைப்பட்டு, இந்த்ரபதத்தை ஆசைப்பட்டு, ப்ரஹ்மாவினளவில் ஆசைப்படுமாபோலே,  இவரும்  இவ்வருகு எல்லையை ஆசைப்படுகிறார். இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதியுண்டாய் இத்வளவிலே நின்றாரல்லர்; ச்சந்தஸ்ஸில் இதுக்கு அவ்வருகு போகவொண்ணாமே நின்றதித்தனையிறே. ‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது லௌகிகரோடு சேராதிருந்ததாகில் ஆழ்வார் விரும்பினத்தை விஸ்வஸித்தோமாகிறோம்’ என்று சீயர் அருளிச்செய்யும்படி.

பதினொன்றாம் பாட்டு

அடியோங்குநூற்றுவர்வீய அன்று ஐவர்க்கருள்செய்த

நெடியோனை* தென்குருகூர்ச்சடகோபன் குற்றேவல்கள்*

அடியார்ந்த ஆயிரத்துள் இவைபத்துஅவன்தொண்டர்மேல்

முடிவு*ஆரக்கற்கிற்கில் சன்மம்செய்யாமைமுடியுமே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் பலமாக ஜந்மநித்ருத்தியை அருளிச்செய்கிறார்.

அடி ஓங்கு – தங்கள் ராஜ்யப்ரதிஷ்டை உயர்ந்துவரும்படியான, நூற்றுவர் – துர்யோதநாதிகள் நூற்றுவரும், வீய – முடியும்படி, அன்று-(அவர்களாலே நிரஸ்தரான) அன்று, ஐவர்க்கு-பாண்டவர்களைவர்க்கும், அருள்செய்த – ஸர்வப்ரகாரோபகாரத்தைப் பண்ணி, நெடியோனை – (பின்பு ஒன்றுஞ்செய்யாதாரைப்போலே) பெரிய பாரிப்பையுடையவனைப்பற்ற, தென்குருகூர் – கட்டளைப்பட்ட திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வாருடைய, குற்றேவல்கள் – அந்தரங்கத்ருத்திரூபமாய், அடி ஆர்ந்த – பாதபந்தாதிலக்ஷணங்களால் பூர்ணமான, ஆயிரத்துள்-ஆயிரத்துள்ளும், அவன் தொண்டர்மேல் – அவன் தொண்டர்மேல், முடிவு – முடிவான, இவைபத்து – இவைபத்தையும், ஆர-(நெஞ்சிலே) பொருந்த, கற்கிற்கில் – அப்யஸிக்கவல்லாராகில், சன்மம் செய்யாமை – (ததீய சேஷத்வப்ரதிபந்தகமான) ஜந்மம் உண்டாகாதபடி,  முடியும் – முடிந்துபோம். இது கலித்துறை.

ஈடு: – நிகமத்தில் பா43வத சேஷத்வ ப்ரதிபாதகமான இத்திருவாய்மொழியை அப்யஸித்தவர்கள் இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான ஸம்ஸாரத்தைக் கடப்பர்கள் என்கிறார்.

(அடியோங்கு நூற்றுயர் வீய) பாண்டவர்களை அரக்கு மாடத்திலே அகப்படுத்தியும், சூதிலே தோற்பித்தும், வநவாஸாதிகளைப் பண்ணுவித்தும், தாங்கள் புத்த்ர மித்த்ராதிகளாலே பல்கி ராஜ்யத்திலே வேர் விழுந்த துர்யோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி. (அன்று) – அவர்களாலே நிரஸ்தரான அன்று. (ஐவர்க்கு அருள்செய்த நெடியோனை) இரண்டிடத்திலும் ஒக்குங்காணும் ஐவர்க்கு அருள்செய்கை. இங்கு ‘திசைதிசை வலித்தெற்றுகின்ற’ (7-1-10) ஐவர்க்கு அருள்செய்தானிறே. அங்கு அவர்களாலே எற்றுண்ட ஐவர்க்கு அருள் செய்தான். (ஐவர்க்கு) – இவர்களுடைய ஆனை குதிரை யுள்ளிட்டவை அவர்கள் பறித்துக்கொள்ள, *யஸ்ய மந்த்ரீச கோ3ப்தாச* என்கிறபடியே இழந்தவை யெல்லாம் தானேயாய் நின்றான். (நெடியோனை) பாண்டவர்கள் கார்யஞ்செய்து போகிற அன்றும், *நாதிஸ்வஸ்த்தமநா:* என்று அவர்கள் கார்யமொன்றும் செய்யப் பெற்றிலோம் என்றிருந்தபடி. (தென்குருகூர் இத்யாதி) ஆழ்வார் பா4கவத3 சேஷத்வ பர்யந்தமான கைங்கர்யத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க வ்ருத்தியாயிற்று ஸர்வேஸ்வரனுக்கு. (அடியார்ந்த ஆயிரத்துள்) ருக்3 வேத3ம் போலவும், *பாத3பத்3தோ4க்ஷரஸம:* என்கிற ஸ்ரீராமாயணம் போலவும், பாதங்கள் பூர்ணமான ஆயிரம். (அவன்தொண்டர்மேல் முடிவு) – இதில் ஸர்வேஸ்வரனைச் சொன்ன விடங்கள் – உபஸர்ஜ்ஜநகோடியிலே யாமித்தனை. (ஆரக் கற்கிற்கில்) நெஞ்சிலே படியும்படி கற்க சக்தராகில். இதில் ஒரு பாட்டும் விழ விடாதே என்றும். (சன்மஞ் செய்யாமை முடியும்) ததீ3ய சேஷத்வ விரோதியான ஜந்மாந்வயம் அறும்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

த்ரமிடோபநிஷத் ஸங்கதி

தத் ஶொகஶாந்தி விதயெ ஹரிணா ப்ரஸாதாத்

ஆவிஷ்க்ருதாந் ஸ்வகுணசெஷ்டித பொகஶீலாந்।

ஆலொக்யவைஷ்ணவ ஜநாந் முநிராத்மநாதாந்

ஆக்யாயதாந் அதிஜஹர்ஷ ச ஸப்தமெ ஸ:||

த்ரமிடோபநிஷத்-தாத்பர்யரத்நாவலீ

40 ஸ்பீதாலோகாதிபூம்நா ப்ருதுபஹுபுஜயா திவ்யமால்யாஸ்த்ரபாஜா

ஸத்வஸ்த்ராகல்பக்ல்ருப்த்யா த்ரிதஶரஸக்ருதா ரக்ஷணௌந்முக்யவத்யா ।

முக்தைருத்தம்ஸிதாங்க்ர்யா ஸ்திரத்ருதரமயா ஶ்யாமயா நித்யஸத்யா

ஶௌரே: காந்த்யா ஜிதாநாம் ஸ்வபஹுமதஜநஸ்வாமிதாமந்வமம்ஸ்த || (3-7)

திருவாய்மொழி நூற்றந்தாதி

பயிலுந் திருமால் பதந்தன்னில்* நெஞ்சம்

தயலுண்டு நிற்கும் ததியர்க்கு* இயல்வுடனே

ஆளானார்க்காளாகும்  மாறனடியதனில்*

ஆளாகார்சன்மம் முடியா. 27

ஆழ்வார் திருவடிகளே சரணம். எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

ஜீயர் திருவடிகளே சரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.