04-03 12000/36000 Padi

மூன்றாந்திருவாய்மொழி

கோவைவாயாள் : ப்ரவேசம்

******

: மூன்றாந்திருவாய்மொழியில் – இவருடைய ஆர்த்தி தீரும்படிஸம்ஸ்லேஷித்த ஸர்வேஸ்வரன் இவருடைய அபிநிவேசஹேதுவான அநுராகவிசேஷத்தைக் கண்டு அவனும் இவர்பக்கலிலே அத்யந்தாபிநிவிஷ்டனாம்படி அநுரக்தனாம்படியை அநுஸந்தித்த இவர், அவனுடைய ப்ராப்தி ப்ரதிபந்தக ஸமஸ்தவிரோதிநிவர்த்தகத்வத்தையும், ரக்ஷகத்வப்ரயுக்த ஸம்பந்தத்தையும், ஸர்வாத்மபா4வாதியால் வந்த நாராயணத்வத் தையும், அநுகூலசத்ரு நிரஸந ஸாமர்த்யத்தையும், ஸௌசீல்யாதி குணயோகத்தையும், ரக்ஷணோபகரணவத்தையையும், அநந்யார்ஹமாக்கி அடிமைகொள்ளும் ஸ்வபா4வத்தை யும், ஸர்வ்யாபகத்வத்தையும், பாரமார்த்திகபரத்வௌஜ்ஜ்வல்யத்தையும், அபரிச்சேத்ய மாஹாத்ம்யத்தையும் அநுபவித்து, ஏவம்விதனான ஸர்வேஸ்வரன் தம்முடைய ஆத்மாத்மீ யங்களெல்லாம் ஸ்ரக்வஸ்த்ராபரணாங்கராகாதிகளோபாதி தனக்கு அதிசயித போக்யமாம்படி விரும்பின ப்ரணயித்வத்தை அருளிச்செய்து ஸந்துஷ்டராகிறார்.

ஈடு. – எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலுமுண்டான  அவன்படிகளெல்லாம் இப்போதே பெற்று அநுபவிக்கவேணுமென்று விடாய்ப்பாரொருவரைப் பெறுகை யாலே, இவர் ஸத்தையே தனக்கு எல்லாமாம்படியிருக்கிற தன் ப்ரணயித்வகுணத்தைக் காட்டிக்கொடுக்கக் கண்டு, இவரும் எல்லாம்பெற்றாராய் அநுபவிக்கிறார்.  ஸர்வேஸ்வரனுடைய ‘பாலனாயேழுலகு’ – இத்திருவாய்மொழி.  இதுதனக்கு மூன்றுபடியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்; எம்பார், ” ‘அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணும்’, என்று அழுத ப்ரஜைக்குத் தேங்காயைக்கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறொருகுணாவிஷ்காரத்தைப் பண்ணி அநுபவிப்பிக்க அநுபவிக்கிறார்” என்று அருளிச்செய்வர்.  திருமலைநம்பி, “ஒருவன் ஒன்றை அபேக்ஷித்தால், அவனும் அதுசெய்வானாகத் தலைதுலுக்கினால், பெற்றானாய்ப் பின்பு பின்னிலிழவுதோன்றும்படியன்று இருப்பது; ஆகையாலே, அவனும் `அப்படி செய்கிறோம்’ என்னக் கீழிலிழவை மறந்து எல்லாம் பெற்றாராய் அநுபவிக்கிறார்” என்று; ஸ்ரீகௌஸல்யையார், `பெருமாள் வநத்துக்கு எழுந்தருளுகிறபோது `ஏகபுத்ரையான நான் உம்மைப்பிரிந்திருக்கமாட்டேன்; கூடப்போமித்தனை’ என்ன, `ஆச்சீ, நீர் சொல்லுகிற இவை தர்மஹாநிகிடீர்’ என்று முகத்தைப்பார்த்து ஒருவார்த்தை அருளிச்செய்ய, இழவைமறந்து மங்களாசாஸநம்பண்ணி மீண்டாளிறே; க்ருஷ்ணன் (மாஸுச:) என்று ஒருவார்த்தை அருளிச்செய்ய, அர்ஜுநன் (ஸ்தி2தோஸ்மி க3தஸந்தே3ஹ:) என்று தரித்தானிறே.  பட்டர், “காலத்ரயத்திலுள்ளத்தையும் இப்போதே பெறவேணுமென்று விடாய்த்த இவர்க்கு அப்படியே அநுபவிக்கலாம்படி, காலசக்கரத் தானாகையாலே காலோபாதியைக் கழித்து.  வர்த்தமாநகாலத்திற்போலே அநுபவ யோக்யமாம்படி காலத்தை ஒருபோகியாக்கிக்கொடுக்க அநுபவிக்கிறார்” என்று அருளிச்செய்வர்.

முதல் பாட்டு

கோவைவாயாள்பொருட்டு ஏற்றினெருத்தமிறுத்தாய் மதிளிலங்கைக்
கோவைவீயச்சிலைகுனித்தாய் குலநல்யானைமருப்பொசித்தாய்
பூவைவீயாநீர்தூவிப் போதால்வணங்கேனேலும் நின்
பூவைவீயாம்மேனிக்குப் பூசும்சாந்துஎன்னெஞ்சமே.

: முதற்பாட்டில், ப்ராப்திவிரோதிகளை யழிக்கும் ஸ்வபா4வனான ஸர்வேஸ்வரனை நோக்கி, `என்நெஞ்சை உனக்கு அங்கராகமாகக் கொண்டாய்’ என்கிறார்.

கோவை – கோவைப்பழம்போலே சிவந்த, வாயாள்பொருட்டு – அதரத்தையுடைய நப்பின்னைப்பிராட்டிக்காக, ஏற்றின் – எருதுகளினுடைய, எருத்தம் – பிடரை, இறுத்தாய் – முறித்தவனாய்; மதிள் – மதிளையுடைய, இலங்கை – லங்கைக்கு, கோவை – நிர்வாஹகனான ராவணனை, வீய – முடியும்படியாக, சிலை – வில்லை குனித்தாய் – வளைத்தவனாய்; குலம் – ஜாதிவைலக்ஷண்யத்தையும், நல் – லக்ஷண வைலக்ஷண்யத்தையுமுடைய, யானை – குவலயாபீடத்தினுடைய, மருப்பு – கொம்பை, ஒசித்தாய் – (அநாயாஸேந) முறித்தவனே! (இப்படி நப்பின்னைக்கும் ஜநகராஜன் திருமகளுக்கும் மதுரையில் பெண் பிள்ளைகளுக்கும் ப்ராப்திவிரோதியைப் போக்கின உன்னை), பூவை – புஷ்பத்தை, வீயா – அகலாத, நீர் – ஜலத்தை, தூவி – (ப்ரேமத்தாலே அக்ரமமாகப்) பணிமாறி, போது – உக்தகாலங்களிலே, வணங்கேனேலும் – வணங்கிற்றிலேனேயாகிலும், நின் – உன்னுடைய, பூவை வீயாம் – பூவைப்பூநிறத்தையுடைய, மேனிக்கு – திருமேனிக்கு, பூசும் – சாத்தத்தகுதியான, சாந்து – அங்கராகம், என்நெஞ்சமே – என்நெஞ்சாவதே! ஆஸ்ரய தோஷம்பாராதே அநுராகலேசமே பற்றாசாக அங்கராகமாக்கினாய்; அதுக்குஅடி – அவஸ்தா ஸப்தகவிகாரத்தையும் கழித்து, தசேந்த்ரியாநநமான தீமனத்தையும் கெடுத்து, ப்ரவேசவிரோதியான துர்மாநத்தையும் அழிக்குமவனாதலால் என்று கருத்து.

ஈடு. – முதற்பாட்டில் – ‘நப்பின்னைப்பிராட்டி, ஸ்ரீஜநகராஜன்திருமகள் தொடக்கமானார் உனக்கு ப்ரணயிநிகளாயிருக்க, நீ அவர்கள்பக்கலிலேயிருக்கும் இருப்பை என்பக்கலிலே யிருக்கும்படி என்ஸத்தையே உனக்கு எல்லாமாய்விட்டது’ என்கிறார்.  அன்றிக்கே, ‘ஆஸ்ரிதவிரோதிகளை நிரஸிக்கிறவிடங்களில் அவ்வவஸமயங் களில் வந்து முகங்காட்டி அடிமைசெய்யப்பெற்றிலேன் நான்; இங்ஙனேயிருக்கவும் என்ஹ்ருதயத்தையே உனக்கு போக்யமாகக் கொள்ளுவதே’ என்கிறாராதல்.

(கோவைவாயாள்பொருட்டு) – தன்னைப்பேணாதே அவனுக்கு இவ்வெருதுகளின் மேலே விழவேண்டும்படியாயிருக்கும் அவயவசோபை யென்கைக்காகச் சொல்லுகிறது.  ருஷபங்களை முன்னிட்டு `இவற்றையடர்த்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம்’ என்று, இவளை அலங்கரித்து முன்னேகொண்டுவந்து நிறுத்தினார்கள்; `இவளையணையலாமாகில் இவற்றை முறித்தாலாகாதோ?’  என்று, தன்னைப்பேணாதே அவற்றின்மேலே விழுந்தான்.  `நம்பிமூத்தபிரான் முற்பட வந்து கிட்டினவிடத்து இவன்தலையிலே வெற்றிகிடந்தால் செய்வதென்?’  என்று வெறுப்பாலே அவாங்முகியா யிருந்தாள்; க்ருஷ்ணன் வந்து தோற்றினவாறே ப்ரீதிப்ரகர்ஷத்தாலே
ஸ்மிதம்பண்ணினாள்; அப்போதை அதரத்தில் பழுப்பு இருந்தபடி.  அந்தஸ்மிதத்திலே தோற்றுத் தன்னை அவளுக்கு ஆக்கினான்.  (ஏற்றினெருத்த மிறுத்தாய்) – ஏற்றின்ககுத்தை முறித்தாய்:  எருத்தம் – அவற்றின்பிடர்.  அவற்றுக்கு அபிமாநஹேது ககுத்திறே; அத்தை முறித்தபடி.  வீரராயிருப்பார் எதிரிகையில் ஆயுதத்தை வெறுங்கையோடே சென்று வாங்குமாபோலேயிருப்பதொன்றிறே, இவன்செய்தது; அவைதான் ‘தலை’யான ஆயுதத்தோடேயிறே நிற்கிறது.  மாயாம்ருகத்தின் பின்னே பெருமாள் எழுந்தருளுகிற போது இளையபெருமாள் தெளிந்து நின்று, `இது மாயாம்ருகங்கிடீர்; ராக்ஷஸமாயை’ என்றாற்போலே, நானும் அவ்வளவிலே நின்று `இவை அஸுராவேசமுண்டு’ என்னவிறே அடுப்பது; அது செய்யப்பெற்றிலேன் என்கிறார்.  (மதிளிலங்கை) – `இம்மதிளும் ஊரும் உண்டே நமக்கு’ என்று சக்ரவர்த்திதிருமகனை எதிரிட்டானாயிற்று.  ஸர்வரக்ஷகரான பெருமாளை விட்டு, மதிளை `ரக்ஷகம்’ என்றிருந்தானாயிற்று; இதிறே தான் தனக்குப் பண்ணிக்கொள்ளும்ரக்ஷை. (இலங்கைக்கோவை வீய) – (லங்காம் ராவணபாலிதாம்).  மண்பாடுதானே ஒருவர்க்கும் ப்ரவேசிக்க அரிது; அதுக்குமேலே உள்நின்றுநோக்குகிறவனுடைய ப3லம். `மதிளையுடைத்தான லங்கைக்கு நிர்வாஹகனல்லேனோ?’  என்று அபிமாநித்திருக்கிற ராவணன் முடிய.  (சிலைகுனித்தாய்) – ராக்ஷஸர் மாயாப்ரயோகமல்லது அறியாதாபோலே, செவ்வைப்பூசலல்லது அறியார் இவர்; `நீர் தர்மயுத்தத்திலே குசலராயிருக்குமாபோலே, ராக்ஷஸர் மாயாப்ரயோககுசலர்கிடீர்’ என்று ஸ்ரீவிபீஷணாழ்வானைப்போலே அறிவிக்கப் பெற்றிலேன்.  (குலநல்யானைமருப்பொசித்தாய்) – ஆகரத்திலேபிறந்து ஸர்வலக்ஷனோ பேதமான குவலயாபீடத்தினுடைய கொம்பை அநாயாஸேந முறித்தவனே!  அவ்வளவிலே ஸ்ரீமதுரையில் பெண்களோடொக்க நின்று (ந ஸமம் யுத்34மித்யாஹு:) என்னப்பெற்றிலேன்.  (பூவை வீயா நீர்தூவி) – பூவைத் திருவடிகளிலே பணிமாறி நீரைத்தூவி யென்னுதல்; அன்றிக்கே, பூவையொழியா நீர் – பூவோடேகூடின நீர், அத்தைத் தூவி.  (போது) அவ்வவகாலங்களிலே பூவைவீயாநீர்தூவி வணங்கிற்றிலே னாகிலும்.  எருதேழடர்க்கை தொடக்கமான காலங்களிலே பிறந்த ஸ்ரமம் மாற
சிசிரோபசாரம்பண்ணிற்றிலேனாகிலும்.  (நின்பூவைவீயாமேனிக்கு) – பூவாலல்லது செல்லாத திருமேனிக்கு.  அன்றிக்கே, பூவைப்பூவோடொத்தமேனி யென்னுதல்.  வீயென்று – பூவுக்குப் பேர்.  புஷ்பஹாஸஸுகுமாரமான மேனிக்கு.  (மேனிக்குப் பூசும்சாந்து) – (ஆவயோர்கா3த்ரஸத்3ருசம்) என்கிறபடியே.  நம்பிமூத்தபிரானும் தானுமாக ஸ்ரீமதுரையிற்போய்ப் புக்கவாறே கூனியைக் கண்டு, `அண்ணர்க்கும் நமக்கும் பூசலாம்படி சாந்துஇடவல்லையோ?’  என்ன, வழக்கனாயிருக்கிற சாந்தைக் கொடுத்தாள்; (ஸுக3ந்த4மேதத்) இது உனக்காயிருந்தது; அதுக்கு மேல்தரமாயிருப்பதொன்றைக் காட்டினாள்; (ராஜார்ஹம்) இது கம்ஸனுக்காம்.  அதுக்கு மேல்தரமாயிருப்பதொன்றைக் காட்டினாள்; (ருசிரம்) நிறமே இதில் உபஜீவிக்கலாவது.  இப்படி அருளிச்செய்தவாறே, `வெண்ணெய்நாற்றத்திலே பழகினார் இரண்டுமுக்34ர் சாந்தின்வாசி அறிந்தபடிஎன்?’ என்று, அத்தால் வந்த ஹர்ஷம் தோற்ற ஸ்மிதம் பண்ணினாள்; (ருசிராநநே) நல்லசாந்திடுகைக்காக இது ஒருமுகமிருந்தபடி என்தான்! என்கிறான்: (ஆவயோர்கா3த்ரஸத்3ருஶம்) – நற்சரக்குப் பரிமாறுவார், அதுகொண்டு விநியோகங்கொள்ளுவா ருடம்பு வாசி யறியவேணுங்காண்; நம்உடம்புக்கும் அண்ணருடம்புக்கும் ஈடான சாந்து தா.  இப்படி தரம்இட்டுப் பூசுந் திருமேனிக்குப் பூசுஞ் சாந்து என் ஹ்ருதயமாய்விடுவதே!

இரண்டாம் பாட்டு

பூசும்சாந்துஎன்னெஞ்சமே புனையும்கண்ணிஎனதுடைய
வாசகம்செய்மாலையே வான்பட்டாடையும்அஃதே
தேசமானஅணிகலனும் என்கைகூப்புச்செய்கையே
ஈசன்ஞாலமுண்டுமிழ்ந்த எந்தைஏகமூர்த்திக்கே.

: அநந்தரம், `ஸர்வநியந்தாவாய் ஸர்வரக்ஷகனான ஸ்வாமிக்கு என் கரணத்ரயமும் போக்யமாகாநின்றது’ என்கிறாள்.

ஈசன் – நிருபாதிகநியந்தாவாய், ஞாலம் உண்டு உமிழ்ந்த – (ப்ரளயாபத்திலே) உண்பது உமிழ்வதாகையாலே ஸமஸ்தபதார்த்தத்துக்கும் ஸர்வ ப்ரகார ரக்ஷகனாய், எந்தை – (இவ்வபதாநத்தாலே என்னை யடிமைகொண்ட) அஸ்மத்ஸ்வாமியாய், ஏகம் – (நிரதிசய போக்யமாகையாலே) அத்விதீயமான, மூர்த்திக்கு – விக்ரஹத்தையுடைய வனானவனுக்கு, பூசும் – (கூனியிட்ட சாந்துபோலே) தகுதியான, சாந்து – சாத்துப்படி, என்நெஞ்சம் – என் நெஞ்சாகாநின்றது; புனையும் – (ஸ்ரீமாலாகாரர் மாலைபோலே உகந்து) சாத்தும், கண்ணி – திருமாலை, எனதுடைய – என்னுடைய, வாசகம் – வாக்த்ருத்தியான சப்தத்தாலே, செய் – தொடுக்கப்பட்ட, மாலை – மாலையாயிராநின்றது; (*பூம்பட்டாம்” என்கிறபடியே திருவநந்தாழ்வான் ஸமர்ப்பித்ததென்னலாம்படி), வான் – சீரியதான, பட்டாடையும் – பரிவட்டமும், அஃதே – அந்த வாக்த்ருத்தியே; தேசமான – தேஜஸ்கரமாம்படி, அணி – அணியப்பட்ட, கலனும் – ஆபரணமும், என் – என்னுடைய, கைகூப்புச்செய்கையே – அஞ்சலிபந்தமே.  வாசகம் பட்டாடையாவது – ஒப்பனைக்குப் பௌஷ்கல்யகரமாகை.  அஞ்சலி ஆபரணமாகையாவது – இவர் தலையிலே வைத்த அஞ்சலி அவன் திருமுடியில் அபிஷேகாத்யாபரணங்களோபாதி அவனுக்கு ஔஜ்ஜ்வல்யாவஹமாகை.

ஈடு. – இரண்டாம்பாட்டு.  ‘என்னுடைய கரணகார்யமான ஸ்ம்ருத்யாதிகளே, பரிபூர்ணனானவனுக்கு போகோபகரணங்களெல்லாமாயிற்று’ என்கிறார்.

(பூசும்சாந்து என்நெஞ்சமே) – இத்திருமேனியினுடைய வைலக்ஷண்யத்தையும், அவனுக்குத் தம்பக்கலுண்டான விருப்பத்தையும் அநுஸந்தித்துப் பின்னாடித் திரியவுஞ் சொல்லுகிறார்.  (புனையுங்கண்ணி) – வழக்கனான மாலை யன்றிக்கே சாத்தப்படும் மாலை.  (எனதுடைய வாசகஞ் செய்மாலையே) – இவர் `அவனுக்கு’ என்று சொல்லவேண்டா; இவருடைமையாகில் அவனுக்கே யாயிருக்கும்.  (வாசகஞ்செய்மாலையே) – இவர் நெஞ்சிற்காட்டிலும் வாக்கு பரிமளம் விஞ்சியிருக்கும்போலே காணும்.  பூக்கட்டியிறே சாந்து மணங்கொடுப்பது.  (வான்பட்டாடையுமஃதே) – அந்த உக்திதானே அவனுக்குப் பும்ஸ்த்வாவஹமான பரிவட்டமும்.  இவருடைய ‘பா’, நல்ல ‘நூலா’கையாலே வான்பட்டாடையாயிற்றுக்காணும்.  `நல்லநூலாகவேணும்’ என்று அடியிலே நோற்று நூற்றவரிறே.  (தேசமான அணிகலனும்) – தனக்குத் தேஜஸ்கரமான ஆபரணமும்.  (என்கைகூப்புச்செய்கையே) – சேரபாண்டியன்தம்பிரானோபாதி, அவனுக்குத் தேஜஸ்கரமாகாநின்றது இவருடைய அஞ்சலி.  இவற்றாலே நிறம்பெற்றானாயிருக்கிறவன் தான் ஒருகுறைவாளனா யிருக்கப் பெற்றதோ!  (ஈசன்) – ஸர்வேஸ்ரன்.  `ரக்ஷகன்’ என்னும் பேரேயாய் உடைமை நோவுபட விட்டிருக்குமோ?  என்னில், (ஞாலமுண்டுமிழ்ந்த) – ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகன்.  (எந்தை) – அந்த ரக்ஷணத்தாலே என்னை எழுதிக்கொண்டவன்.  (ஏகமூர்த்திக்கு) – அத்விதீயமான திருமேனியையுடையவனுக்கு.  (ஏகமூர்த்திக்கு – பூசும் சாந்து என்நெஞ்சமே) – (ஸர்வக3ந்த4🙂 என்கிற திருமேனிக்கு இது சேருமே?

மூன்றாம் பாட்டு

ஏகமூர்த்தியிருமூர்த்தி மூன்றுமூர்த்திபலமூர்த்தி
யாகிஐந்துபூதமாய் இரண்டுசுடராய்அருவாகி
நாகமேறிநடுக்கடலுள்துயின்ற நாராயணனே! உன்
ஆகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல்மாய்த்ததே.

: அநந்தரம், ஸர்வாத்மபா4வாதியால் வந்த ஸம்பந்தத்தையுடைய உன் வடிவழகை இப்படியநுபவித்து என் ஆத்மாவானது கீழ் ப்ரக்ருதது:கம் தீரப்பெற்றதே என்கிறார்.

ஏகமூர்த்தி – (ஸூக்ஷ்மசிதசித்விசிஷ்டமாய் “ஏகமேவ” என்கிறபடியே) காரண ரூபத்தையுடையனாய், இருமூர்த்தி – (அந்தஅத்யக்தகார்யமான) மஹதஹங்காரங்களை வடிவாகவுடையனாய், மூன்றுமூர்த்தி – (*ஸாத்த்விகோ ராஜஸஸ்சைவ தாமஸஸ்ச த்ரிதா4 மஹாந்” என்றும், “வைகாரிகஸ்தைஜஸஸ்ச பூ4தாதி3ஸ்சைவ தாமஸ:*என்றும், அந்த மஹதஹங்காரங்களினுடைய த்ரைவித்யஹேதுவான) ஸத்த்வரஜஸ்தமோரூபகுணத்ரய வைஷம்யங்களை ப்ரகாரமாக வுடையனாய், பலமூர்த்தியாகி – (வைகாரிககார்யமான) ஏகாதசேந்த்ரியங்களை ப்ரகாரமாகவுடையனாய், ஐந்துபூதமாய் – (பூதாதியான தாமாஸாஹங்கார கார்யங்களான) பஞ்சபூதங்களை ப்ரகாரமாகவுடையனாய், இரண்டுசுடராய் – (அண்டாந்தர்வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்கு உதாஹரணமான “ஸூர்யா-சந்த்3ரமஸௌ” என்று சொல்லப்பட்ட சுடரிரண்டையும் வடிவாகவுடையனாய், அருவாகி – (அவற்றுக்கு அந்தராத்மதயா அநுப்ரவேசித்து) ஸூக்ஷ்மபூதனாய், (ஸ்ருஷ்டமான ஜந்துக்களினுடைய ரக்ஷணார்த்தமாக), நாகம் – திருவநந்தாழ்வான்மேலே, ஏறி – ஏறி, நடுக்கடலுள் – திருப்பாற்கடல்நடுவே, துயின்ற – கண்வளர்ந்தருளி, நாராயணனே – (இந்த அந்தராத்மத்வத்தாலும் ஸமுத்ரசாயித் வத்தாலும் ஸித்தமான) நாராயணசப்தத்துக்கு வாச்யனானவனே! (கீழ்ச்சொன்ன ப்ரக்ரியையாலே), உன் – உன்னுடைய, ஆகம் – வடிவையும், முற்றும் – (என்ஸகல கரணங்களையும் உனக்கு ஸர்வாலங்காரமுமாகக் கொண்ட) அழகையுமெல்லாம், அகத்து – என் நெஞ்சுக்குள்ளே, அடக்கி – கபளீகரித்து அநுபவித்து, ஆவி – என் ஆத்மாவானது, அல்லல் – (கீழிற்றிருவாய்மொழியிற்பட்ட) து:கத்தை, மாய்த்ததே – போக்கப்பெற்றதே!

`பலமூர்த்தி’ என்னுமளவும் – பரவ்யூஹ விபவ விக்ரஹங்களைச் சொல்லி, `ஐந்து பூத மிரண்டுசுடர்’ என்கிற இடம் – லீலாவிபூதிஸம்பந்தத்தைச் சொல்லுகிறது என்பாரு முளர்; அதில், ஸர்வப்ரதாநமாய் ப்ராப்யமாகையாலே அத்விதீயமான வாஸுதேவ மூர்த்தியாய், அதுதான் சாந்தோதித – நித்யோதித பேதத்தையுடைத்தாய்க்கொண்டு இருமூர்த்தியாய், நித்யோதிதவேஷந்தான் ஸங்கர்ஷணப்ரத்யும்நாநிருத்த பேதத்தாலே மூன்று மூர்த்தியாய் அவைதாம் கேசவாதி த்வாதசமூர்த்தியாயும் தஶாவதாரரூபமாயும் பலமூர்த்தியாயிருக்கு மென்றபடி.

ஈடு. – மூன்றாம்பாட்டு.  `இத்தலையை உனக்காக்கி அத்தாலே க்ருதக்ருத்யனாயிருக் கிறாயே’ என்கிறார்.

(ஏகமூர்த்தி) – (ஸதே3வ ஸோம்யேத3மக்3ரஆஸீத்) என்கிறபடியே – ஸ்ருஷ்டே:பூர்வ காலத்திலே இதம்சப்தவாச்யமாய்க்கிடந்த ப்ரபஞ்சமடைய அழிந்து ஸதவஸ்தமாய் சக்த்யவஸ்த ப்ரபைபோலே இவையடையத் தன்பக்கலிலே கிடக்கத் தானொருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.  (ஸ்ருஷ்டிக்குமுன்புத்தை ஸ்வாஸாதாரணவிக்ரஹத்தைச் சொல்லுகிறதாகவுமாம்.)  ஆக, ஸ்ருஷ்ட்யுந்முகனா யிருக்குமிருப்பைச் சொல்லுகிறது.  (இருமூர்த்தி) – ப்ரக்ருதிமஹான்களிரண்டையும் கடாக்ஷித்துக்கொண்டு அவற்றைத் திருமேனியாகக்கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.  கார்யகாரணங்களிரண்டையும் தனக்குத் திருமேனியாக வுடையனாயிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.  இரண்டுக்குமுண்டான அண்மையைப் பற்றச்சொல்லுகிறது.  அவ்யக்தத்தினுடைய வ்யக்ததசையிறே மஹானாகிறது.  (மூன்றுமூர்த்தி) – த்ரிவிதாஹங்கார சரீரனாயிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.  ஸாத்த்விகமாயும், ராஜஸமாயும், தாமஸமாயும் மூன்றுவகைப்பட்டிறே  அஹங்காரந் தான் இருப்பது.  (பலமூர்த்தியாகி ஐந்துபூதமாய்) – கீழ்ச்சொன்ன அடைவன்று இங்குச் சொல்லுகிறது.  ஸாத்த்விகாஹங்காரகார்யம் – ஏகாதசேந்த்ரியங்கள் : தாமஸாஹங்கார கார்யம் – ப்ருதித்யாதிபூதங்கள்: இரண்டுக்கும் உபகாரமாய்நிற்கும் – ராஜஸாஹங்காரம்; ஆக, ஏகாதசேந்த்ரியங்களையும், ஸகுணமான பூதபஞ்சகங்களையும் சொல்லி, அவற்றைத் திருமேனியாகவுடையனாயிருக்கும்படி சொல்லுகிறது.  (இரண்டுசுடராய்) – (ஸூர்யா- சந்த்3ரமஸௌதா4தா யதா2பூர்வமகல்பயத்) என்கிறபடியே, சந்த்ராதித்யர்கள் – கார்ய வர்க்கத்துக்கு உபலக்ஷணம்.  (அருவாகி) – இவற்றையுண்டாக்கி, (தத்ஸ்ருஷ்ட்வா, ததே3வாநுப்ராவிசத், தத3நுப்ரவிஸ்ய,  ஸச்சத்யச்சாப4வத்) என்கிறபடியே இவற்றினுடைய வஸ்துத்வநாமபாக்த்வங்களுக்காகத் தான் அநுப்ரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.  அசித்தைச் சொல்லிற்றாகில் – கீழ், அருவென்று – ஆத்மாவைச் சொல்லிற்றானாலோ?  என்னில்; (அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஸ்ய) என்று – ஜீவாந்தர்யாமிக்கு அநுப்ரவேசமாகையாலே, அதுவும் சொல்லிற்றாயிற்று.  (நாகமேறி) – ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கு ஸமாஸ்ரயணீயனாகைக்காகத் திருப்பாற்கடலின் நடுவே திருவநந்தாழ்வான்மேலே சாய்ந்தருளினவன்.  பயிரைச்செய்து செய்த்தலையிலே குடிகிடக்குமாபோலே, ஸ்ருஷ்டங்களான பதார்த்தங்களினுடைய ரக்ஷணார்த்தமாகக் கண்வளர்ந்தருளினா னென்னவுமாம்.  (நாராயணனே) – இப்படி ஸர்வகாலமும் ஒருபடிப்பட அநுக்ரஹசீலனாகைக்கு அடியான ப்ராப்தி சொல்லுகிறது.  (உன்ஆகமுற்றும் அகத்தடக்கி) – ஆகம் – உடம்பு.  உன்திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை பரிவட்டம் ஆபரணங்கள் இவையெல்லாம்; அகத்தடக்கி – என்னுள்ளே யுண்டாம்படிபண்ணி.  இதிறே ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜநம்.  இப்படிச் செய்தத்தால் நிர்த்து:கரானார் ஆர்?  என்னில், – அவனாயிற்று.  (ஆவியல்லல்மாய்த்ததே) – உன்திருவுள்ளத்திலுண்டான அல்லல் ஒருபடி நசிக்கப்பெற்றதே.  இத்தலையை ஒருபடி கரைமரஞ்சேர்த்து நீ க்ருதக்ருத்யனானாயே!  அன்றிக்கே, என் ஆவியானது நிர்த்து:கமாயிற்று என்றுமாம்.  அதவா, ஏகமூர்த்தி யென்று – பரத்வத்தைச் சொல்லி, இருமூர்த்தி யென்று – வ்யூஹத்தைச் சொல்லி வாஸுதேவஸங்கர்ஷணர்களை நினைத்து, மூன்றுமூர்த்தி யென்று – ப்ரத்யும்நரைச் சொல்லிற்றாய், பலமூர்த்தியென்று – விபவங்களைச் சொல்லிற்றாய், ஐந்துபூதமா யிரண்டுசுடராயென்று – இன்னார் ஸ்ருஷ்டிக்குக்கடவர், இன்னார் பாலநத்துக்குக்கடவர் என்கிறபடியாலே சொல்லுகிற தென்று நிர்வஹிப்பாரு முண்டு.

நான்காம் பாட்டு

மாய்த்தலெண்ணி வாய்முலைதந்த மாயப்பேயுயிர்
மாய்த்த ஆயமாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண்மாலைகொண்டு உன்னைப்போதால்வணங்கேனேலும் நின்
பூத்தண்மாலைநெடுமுடிக்குப் புனையும்கண்ணிஎனதுயிரே.

: அநந்தரம், “அநுகூலசத்ருவான பூதநையை நிரஸித்து என்னை அநந்யார்ஹ மாக்கிக்கொண்ட ஸ்ரிய:பதியான உனக்கு, என்ப்ராணன், திருமுடிக்கு விசேஷாலங்காரமாவதே!” என்கிறார்.

மாய்த்தல் – முடிப்பதாக, எண்ணி – நினைத்து, வாய் – திருப்பவளத்திலே, முலைதந்த – முலையை வைத்த, மாயம் – (அநுகூலமான) மாத்ருவேஷபரிக்ரஹத்தையுடைய, பேய் – வஞ்சப்பேயினுடைய, உயிர் – ப்ராணனை, மாய்த்த – முடித்துவிட்ட, ஆயன் – கோபால பாலகத்வத்தில் புரையற்ற, மாயனே – ஆஸ்சர்யபூதனே!  வாமனனே – (இந்த அபதாநத்தாலே “ரஸ்யமாஸீத் ஜக3த்3கு3ரோ:*என்று ஜகத்தை அநந்யார்ஹமாக்கும் ஸ்வாமித்வத்தை ப்ரகாசிப்பிக்கிற) வாமநாவதாரத்தையும் ஸபலமாக்கி, மாதவா – (ஸ்வாபாவிகமான) ஸ்ரிய:பதித்வத்தையும் நிலை நிறுத்தினவனே! உன்னை – (இப்படி அநுகூலசத்ருநிராஸகனான) உன்னை, பூ – விலக்ஷணபுஷ்பயுக்தமாய், தண் – குளிர்ந்த, மாலை கொண்டு – மாலைகளைக் கொண்டு, போது – அவஸ்தாநுரூபமாக, வணங்கேனேலும் – ஆராதிக்கப் பெற்றிலேனேயாகிலும், நின் – உன்னுடைய, பூ – புஷ்பமயமாய், தண் – செவ்வியை யுடைத்தான, மாலை – மாலையாலே அலங்க்ருதமாய், நெடு – (ஆதிராஜ்யஸூசகமான) ஓக்கத்தையுடைய, முடிக்கு – திருமுடிக்கு, புனையும் – அலங்காரமாகச் சாத்தும், கண்ணி -மாலை, எனது உயிரே – என்னுடைய ப்ராணனாவதே!

ஈடு. – நாலாம்பாட்டு.  ‘பூதநாதிகளுடைய நிரஸநஸமயத்தில் ஸ்ரமந் தீர சிசிரோப சாரம் பண்ணப்பெற்றிலேனேயாகிலும்  சிசிரோபசாரத்தாலல்லது செல்லாத உன் ஸுகுமாரமான திருமேனிக்குச் சாத்தும் மாலை என்ஸத்தையேயாய்விடுவதே!’ என்கிறார்.

(மாய்த்தலெண்ணி) – அவள்கோலிவந்தபடி அவஸ்யம் சிலர்பரியவேண்டும்படி யாயிற்று.  இன்னாரை மாய்த்தலெண்ணி யென்னாமையாலே – ஜகதுபஸம்ஹரணம் பண்ணக்கிடீர் இவள் கோலிவந்தது என்கிறார்; ஶரீரியைநலிந்தால் சரீரம் தன்னடையே நசிக்குமிறே.  உயிரிலே நலிந்தால் அவயவந்தோறும் தனித்து நலியவேண்டாவிறே; உலகங்கட்கெல்லாம் ஓருயிரிறே.  (அஸ்மாந்ஹந்தும் ந ஸம்சய:) என்றாரிறே மஹாராஜர்.  (வாய்முலைதந்த) – அவன் திருப்பவளத்திலே நஞ்சைக்கொடுத்தது தம்முடைய திருப்பவளத்திலே நஞ்சைக் கொடுத்தாற்போலே யிருக்கையாலே – `தந்த’ என்கிறாராதல்; அன்றிக்கே, தருகையும், கொடுக்கையும் – பர்யாயமாய், கொடுத்த என்னும் பொருள் பெற்றுக்கிடக்கிற தாகவுமாம்.  (மாயப்பேய்) – ஜந்மத்தால்வந்த அறிவுகேட்டுக்குமேலே, வஞ்சநபரையாயும் வந்தாள்.  அதாவது – பேயாய் வருகையன்றிக்கே, தாயாய்வருகை.  “தாயாய்வந்தபேய்” (திருமொழி 1.5.6) என்னக்கடவதிறே.  (உயிர்மாய்த்த) – அவள் கோலிவந்ததுதன்னை அவள்தன்னோடே போக்கினபடி.  (ஆய மாயனே) – ஆஸ்சர்யசக்தியுக்தனான ஆயனே!  இவனும் பிள்ளையாயே முலையுண்டான், அவளும் தாயாய் முலைகொடுத்தாள்; வஸ்துஸ்வபாவத்தாலே முடிந்த இத்தனை.  (வாமனனே) – அந்த அவதாரத்தில், பூதநை முலைகொடுத்தால் அதுக்கு ப்ரத்யௌதஷமாக முலைகொடுக்கைக்கு ஒருதாயாகிலும் உண்டிறே அங்கு.  “வெங்கொங்கையுண்டானைமீட்டாய்ச்சியூட்டுவான், தன்கொங்கை வாய்வைத்தாள்சார்ந்து” (மூன்.திரு. 74) என்றும், “பேய்ச்சிபாலுண்டபெருமானைப் பேர்ந்தெடுத்து, ஆய்ச்சி முலைகொடுத்தாளஞ்சாதே” (மூன்.திரு. 29) என்றும்.  அதுவுமின்றிக்கே, இவனைப் பெற்றிட்டுவைத்துத் தாயும் தமப்பனும் தபஸ்ஸிலே அந்யபரராக, ஆஸுரப்ரக்ருதி களிருந்தவிடத்தே தானே போய்க் கிட்டும்படியாயிறே இருப்பது.  அவர்கள் தான் இருந்தவிடத்தே வந்துகிட்டினாற்போலேயன்றிறே தான் எதிரிகளிருந்தவிடத்தே சென்று கிட்டுமது; மிகவும் வயிறெரித்தலுக்கு உடலாயிருக்குமிறே.  அத்தையிறே “சீராற்பிறந்து சிறப்பால்வளராது, பேர்வாமனாகாக்கால் – பேராளா” (பெரிய திருவ. 16) என்று வயிறுபிடித்தது.  (மாதவா) – `தீநாள் திருவுடையார்க்கில்லை’ என்கிறபடியே, இவ்வபாயங்களில் இவன் தப்பிற்று அவள்‘நெஞ்சோ’டே கடாக்ஷிக்கையிறே.  ஓரபாயமுமில்லையேயாகிலும் பெரியபிராட்டியாரும் அவனுமான சேர்த்திக்கு மங்களாசாஸநம்பண்ணுவார் தேட்டமாயிருக்குமிறே; “வடிவாய்நின் வலமார்பினில்வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” (திருப்பல். 2) என்னாநின்றார்களிறே பரிவர்.  (பூத்தண் மாலைகொண்டு) – குளிர்த்தியை யுடைத்தான பூமாலையைக்கொண்டு.  பூதநாதிகள் வந்துகிட்டின அத்வவகாலங்களிலே திருவடிகளிலே வந்துவிழுந்து ––ரோபசாரம்பண்ணப் பெற்றிலேனேயாகிலும்.  (நின்பூத்தண்மாலைநெடுமுடிக்கு) – உன்னுடைய குளிர்ந்தபூமாலையாலல்லது செல்லாத படியாய் ஆதிராஜ்யஸூசகமான திருவபிஷேகத்துக்கு விரும்பிச்சாத்தும் மாலை, என் ப்ராணன் – என்ஸத்தையாய்விட்டது.

ஐந்தாம் பாட்டு

கண்ணிஎனதுயிர் காதல்கனகச்சோதிமுடிமுதலா
எண்ணில்பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே
நண்ணிமூவுலகும் நவிற்றுங்கீர்த்தியுமஃதே
கண்ணனெம்பிரானெம்மான் காலசக்கரத்தானுக்கே.

: அநந்தரம், போக்யனாய் ஸ்வாமியாய் உபகாரகனாய் ஸுலபனான க்ருஷ்ணனுக்கு என்னுடைய ப்ரேமாதிகள் ஆபரணாதிஸமஸ்தமு மாகாநின்றன என்கிறார்.

காலம் – காலநிர்வாஹகமான, சக்கரத்தான் – திருவாழியையுடையனாய், எம்மான் – (அவ்வழகைக்காட்டிக் காலவஸ்யனாகாதபடி) என்னையடிமைகொண்ட ஸ்வாமியாய், எம்பிரான் – (காலமுள்ளதனையும் அவ்வழகை அநுபவிப்பிக்கும்) மஹோபகாரகனாய்,  கண்ணனுக்கு – (காலாநுரூபமாக அவதரித்து ஸுலபனான) க்ருஷ்ணனுக்கு, எனது – என் அபிமாநாந்தர்க்கதமான, உயிர் – ஆத்மவஸ்து, கண்ணி – (சிரஸாவாஹ்யமான) மாலையாகாநின்றது; காதல் – (ஆத்மதர்மமான) ப்ரேமமானது, கனகம் – கநகமயமாய், சோதி – (ஆதிராஜ்யஸூசகமான) ஔஜ்ஜ்வல்யத்தையுடைய, முடி முதலா – முடிமுதலாக, எண்இல் பல் – அஸங்க்யேயமான, கலன்களும் – ஆபரணங்களுமாகாநின்றது; ஏலும் – அநுரூபமாய் (ஸர்வஸ்மாத்பரத்வஸூசகமான), ஆடையும் – திருப்பீதாம்பரமும், அஃதே – அதுவே: மூவுலகும் – த்ரிவிதாத்மவர்க்கமும், நண்ணி – கிட்டி, நவிற்றும் – வாய்புலற்றக்கடவ, கீர்த்தியும் – கீர்த்தியும், அஃதே – அதுவே.  இவருடைய ப்ரேமத்துக்குத் தான் விஷயீபவிக்கையை, பேரொப்பனையாகவும் பெரும்புகழாகவும் நினைத்தானென்று கருத்து.

ஈடு. – அஞ்சாம்பாட்டு.  தம்முடைய ஸ்நேஹாதிகள் ஓரொன்றே ஆபரணாதி ஸர்வ பரிச்சதங்களுமாயிற்று அவனுக்கு என்கிறார்.

(கண்ணி எனதுயிர்) – நான் `என்னது’ என்றிருக்கிறதைக்கிடீர் அவன் தனக்கு மாலையாகக் கொண்டது.  “மார்வத்துமாலை” (10.10.2) என்கிறவளைத் தனக்கு மாலையாகக் கொள்ளுகை ப்ராப்தம்; அது ஒழிய என்ஸத்தையைக்கிடீர் தனக்கு மாலையாகக் கொள்ளுகிறது.  (காதல்இத்யாதி) – ஸ்ப்ருஹணீயமாய் ஆதிராஜ்யஸூசகமான திருவபிஷேகம் முதலான எண்ணிறந்து பலவகைப்பட்ட திருவாபரணங்களும் என்னுடைய காதல்.  இவருடைய ஸ்நேஹம் ஆபரணமாவதென்?  என்னில், – இவருடைய ஸ்நேஹத்துக்குத் தான் விஷயமாகப்பெற்ற இத்தையே, தனக்கு அநேகாபரணங்கள் சாத்தினாற் பிறக்கும் புகருண்டாக அவன் நினைத்திருக்கையாலே, அத்தைப்பற்றச் சொல்லுகிறது.  (ஏலும் ஆடையும்அஃதே) – திருவரைக்குத் தகுதியான திருப்பீதாம்பரமும் அக்காதலே.  ஒருநாள் ஸ்ரீவைஷ்ணவவண்ணாத்தான், திருப்பரிவட்டங்களை அழகியதாக வாட்டிக்கொண்டு வந்து எம்பெருமானார்க்குக் காட்ட, போர த்ருப்தராய் அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டுபுக்கு `நாயன்தே! இவன் திருவரைக்கு ஈடாம்படி வாட்டின படி திருக்கண்சாத்தியருளவேணும்’ என்று இவற்றைக் காட்டியருள, கண்டு உகந்தருளி உடையவரை அருள்பாடிட்டருளி, `இவனுக்காக ரஜகன் நம்திறத்தில்செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமாயருளினார்.  (ஏலுமாடையுமஃதே) – ஏகஜாதீயங்கள் பலவாகை தவிர்ந்து, விஸஜாதீயங்களும் பலவாகத்தொடங்கிற்று.  புருஷோத்தமலக்ஷணமான திருப்பீதாம்பரமும் அக்காதலே.  இவர் நெடுங்காலங்கூடிப் பண்ணுகிற திருவாபரணமும் திருப்பரிவட்டமுமிறே.  “அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து” (2.3.3) என்று இவருடைய காதல் ஸத்தாப்ரயுக்தமிறே.  (மஹாரஜதம்  வாஸ:).  ‘பொய்யில்பாடலா’(4.3.11)கையாலே, `இதுகூடுமோ?’ என்று ஸம்சயிக்கவேண்டா.  (நண்ணிமூவுலகும் இத்யாதி) – விசேஷஜ்ஞரேயன்றிக்கே, மூவுலகிலுள்ளாரும் வந்து கிட்டிக் கடல்கிளர்ந்தாற்போலே ஸ்துதிக்கிற கீர்த்தியும் அக்காதலே.  `இவர்காதலித்தபின்பு அந்யபரரும் அநந்யபரராய் ஏத்தாநின்றார்கள்’ என்றாயிற்று அவன் நினைத்திருக்கிறது.  இக்காதலுக்குக் கைதொட்டு க்ருஷிபண்ணினபடி சொல்லுகிறது மேல்; வ்ருத்தவான்களைக் காட்டிக்காணும் இவரை த்ருத்திபரராக்கிற்று.  (காலசக்கரத்தான் எம்பிரான் எம்மான் கண்ணனுக்கு) – கையும் திருவாழியுமான அழகைக் காட்டி எனக்கு அநந்யபரத்வ மஹோபகாரத்தைப் பண்ணி, “கழிவதோர்காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதல்” (திருவிரு.97) என்னப்பண்ணின என்ஸ்வாமியான க்ருஷ்ணனுக்கு.  (காலசக்கரம்) – பகலை இரவாக்க வல்லவனிறே.  காலத்தைநடத்துகிற திருவாழி.  காலவஸ்யதையைப்போக்கும் திருவாழியென்னுதல்.  (நார்ச்சயிஷ்யந்தி) என்கிற காலத்திலும் இருள்தருமாஞாலத்திலும் இருளை யோட்டி ‘அருளார் திருச்சக்கரமாய்,’ (திருவிரு.33) திருக்கையைத் தான் பிரியாதாற்போலே திருவடிகளை நான் பிரியாதபடியான ருசிஜநகமான திருவாழி.  அவன்கையிலேநின்றே, இவன்காலிலே விழும்படி பண்ணுமவனிறே.

ஆறாம் பாட்டு

காலசக்கரத்தொடு வெண்சங்கம்கையேந்தினாய்
ஞாலமுற்றும்உண்டுமிழ்ந்த நாராயணனே என்றென்று
ஓலமிட்டுநானழைத்தால் ஒன்றும்வாராயாகிலும்
கோலமாம்என்சென்னிக்கு உன்கமலமன்னகுரைகழலே.

: அநந்தரம், ஆஸ்ரிதவிரோதிநிரஸநபரிகரத்தையுடைய ரக்ஷகனான நீ என் அபேக்ஷாநுரூபமாக முகங்காட்டிற்றில்லையேயாகிலும், உன்திருவடிகளில் ஸம்பந்தமே இத்தலையில் ஸத்தைக்கு அதிஶயகரமென்று, ப்ரணயியான அவன்பக்கல் தமக்கு உண்டான ப்ரணயத்தை அருளிச்செய்கிறார்.

காலன் – (விரோதிகளையழிக்கைக்குக்) காலனாம்படியான ஸ்வபாவத்தையுடைய, சக்கரத்தொடு – திருவாழியோடே, வெள் சங்கு – (பரபாகரஸாவஹமான) வெளுப்பை யுடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தை, அம் – (அவற்றுக்குஶோபாவஹமான) அழகிய, கை – திருக்கையிலே, ஏந்தினாய் – ஏந்தினவனாய், (இப்படி ரக்ஷணபரிகரவானாயிருக்கச் செய்தே), ஞாலம் – (ரக்ஷ்யமான) ஜகத்துக்கு (ஆபத்து வந்தால் அந்தப்ரளயாபத்தில் அகப்படாதபடி), முற்றும் – ஒன்று ஒழியாமல், உண்டு – தன்வயிற்றிலேவைத்து ரக்ஷித்து, உமிழ்ந்த – (அதுபோனவாறே வெளிநாடுகாண) உமிழ்ந்த, நாராயணனே – (நிருபாதிக பந்தத்தையுடைய) நாராயணனே!, என்று என்று – என்று இந்தஸ்வபாவங்களைத் தனித்தனியேசொல்லி, ஓலமிட்டு – கூப்பிட்டு, நான் – (இருந்தவிடத்தில்நின்றும் எழுந்திருந்து வருகைக்கு யோக்யதையில்லாத) நான், அழைத்தால் – அழைத்தாலும், ஒன்றும் – (*அருகும்சுவடும்தெரிவுணரோம்” என்கிறபடியே நீமுகங்காட்டுகைக்கு ஈடாயிருப்பது) ஒரு அடையாளம் தெரியாதபடி, வாராயாகிலும் – வாராதிருந்தாயே யாகிலும், என்சென்னிக்கு – (*அன்பேபெருகும்மிக” என்கிற கணக்கிலே உன்னையொழியச் செல்லாத ஸத்தையையுடைய) என்தலைக்கு, உன் – (சேஷியான) உன்னுடைய, கமலம்அன்ன – கமலம்போலேநிரதிசயபோக்யமான, குரை – (ஆஸ்ரிதரக்ஷணப்ரஸித்தி தோற்றும்படி) த்வநிக்கிற வீரக்கழலையுடைய, கழல் – திருவடிகள், கோலம் ஆம் – அலங்காரமாய்க்கொண்டு தேஜஸ்கரமாகநின்றது.  உன்திருவடிகளிலே ப்ரேமம் எனக்கு ஸத்தாப்ரயுக்த மென்று கருத்து.

ஈடு. – ஆறாம்பாட்டு.  ‘இப்படி ப்ரணயியாயிருந்துள்ள நீ என்னைக் கிட்டாதேயொழிந்தாயேயாகிலும் உன்ஸத்தையே எனக்கு தாரகாதிகள்’ என்கிறார்.  ‘உனக்கு நான் உதவப்பெற்றிலேனாகிலும் என் ஸத்தை உனக்கு தாரகாதிகளானாற் போலே, நீ வாராயாகிலும் உன்ஸத்தை எனக்கு தாரகாதிகள்’ என்கிறார்.  அவன் ப்ரணயித்வம் சொல்லாநிற்க, நடுவே தம்முடைய ப்ரணயித்வம் சொல்லுவானென்?  என்னில்; – இரண்டுசேதநர் கூடிக்கலந்து பரிமாறாநின்றால், பிறக்கும் ரஸங்களும் இரண்டு தலையிலும் உண்டாயிருக்குமிறே; அதில், கீழெல்லாம் அவன்ப்ரணயித்வம் சொல்லிக்கொண்டு போந்தார்; இப்போது அவன்ப்ரணயித்வாதிஶயம் தம்மையும் ப்ரணயியாக்கிற்று என்கைக்காக.

(காலசக்கரம் இத்யாதி) – இதுவாயிற்று இவர் கூப்பிட்ட பாசுரந்தான்.  ப்ரதிபக்ஷத்துக்கு ம்ருத்யுவாம் திருவாழியோடே கூட, ஸ்யாமளமான திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைத்தான ஸ்ரீபாஞ்சஜந்யத்தை, வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்கவேண்டும்படியிருக்கிற அழகிய திருக்கையிலே பூவேந்தினாற்போலே ஏந்தினவனே!  ஸ்ரீபாஞ்சஜந்யத்துக்கு வெளுப்பு நிரூபகமானாற்போலேகாணும், திருவாழிக்கு ப்ரதிகூலநிரஸநமும் நிரூபகமாயிருக்கும்படி.  (ஞாலமுற்றும் இத்யாதி) – இவற்றை ஆபரணமாகக்கொண்டு ஒப்பித்து, விபூதி நோவுபடத் தான் ஒப்பனை யழியாதேயிருக்கையன்றிக்கே, ஆபத்ஸகனாயிருக்கும்.  ப்ரளயாபத்திலே வரையாதே திருவயிற்றிலேவைத்து ரக்ஷித்து, அதுகழிந்தவாறே வெளிநாடு காணப் புறப்பட விட்டு இப்படி வரையாதே ரக்ஷிக்கும்.  (நாராயணனே) – இப்படி வரையாதே ரக்ஷிக்கவும் `இவன் நம்மை ரக்ஷித்தான்’ என்று ப்ரத்யுபகாரம்தேடி நெஞ்சாறல்படவும் வேண்டாதபடி ப்ராப்தி இருந்தபடி.  `மாதா நம்மை வயிற்றிலே ரக்ஷித்தாள், என்செய்வோம் நாம் இவளுக்கு?’  என்று நெஞ்சாறல்படுவாரில்லையிறே; ப்ராப்தியிறே அதுக்குஅடி; அப்படியேயிறே அவனும் *தாயிருக்கும்வண்ணமே உம்மைத்தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்டவனிறே (திருமொழி 1.6.6).  (என்றுஎன்று) – கையும்ஆழ்வார்களுமான அழகையும், காலாநுகூலமான ஆபத்ஸகத்வத்தையும், இவையில்லாவிடிலும் விடவொண்ணாத ப்ராப்தியையும் சொல்லி.  வீப்ஸையாலே – தனித்தனியே ஆழங்காற் பட்டபடி.  (ஓலமிட்டு நான் அழைத்தால்) – பலஹீநனான நான் கூப்பிட்டு அழைத்தக்கால்.  பரமபதத்திலே இருந்தாலும் நிலை குலைந்து வரவேண்டும்படி பெருமிடறுசெய்து கூப்பிட்டால்.  (ஒன்றும்வாராயாகிலும்) (குசஸ்த2லே நிவஸதிஸச ப்ராதரிஹைஷ்யதி) என்கிறபடியே அங்கு நின்றும் புறப்பட்டான், இங்கே வந்துவிட்டான் என்று வருகைக்கு ப்ரஸங்கமில்லையேயாகிலும். (நாமக்3ராஹஞ்ச  நாத2ஸ்யசீதல: காஹளத்வநி:) என்னக் கடவதிறே.  (கோலமாம் என்சென்னிக்கு) –
(சிரஸா தா4ரயிஷ்யாமி ந மே சாந்திர் ப4விஷ்யதி) என்றிருக்கிற என்சென்னிக்குக் கோலமாம்.  (உன்கமலமன்ன) – `செவ்விப்பூச் சூடவேணும்’ என்று ஆசைப்படுவாரைப் போலே.  (குரைகழலே) – குரையென்று பரப்பாய், அத்தாலே போக்யதா ப்ரகர்ஷத்தைச் சொல்லிற்றாதல்; ஆபரணத்வநியைச் சொல்லிற்றாதல்.  “வாராயாகிலும் கோலமாம்” என்பானென்?  என்னில், வாராதொழியக்கூடாது, கூடாததுகூடிலும் என் நினைவு இது வென்கிறார்.  என்னை ‘அடி’யிலே இப்படியாக்கினாயே என்று கருத்து.  அடிவிடில், “நின்னலாலிலேன்காண்” (2.3.7) என்பரே.

ஏழாம் பாட்டு

குரைகழல்கள்நீட்டி மண்கொண்டகோலவாமனா!
குரைகழல்கைகூப்புவார்கள் கூடநின்றமாயனே!
விரைகொள்பூவும்நீரும்கொண்டு ஏத்தமாட்டேனேலும் உன்
உரைகொள்சோதித்திருவுருவம் என்னதாவிமேலதே.

: அநந்தரம், ‘நான் அகிஞ்சித்கரனாயிருக்கிலும் அநந்யார்ஹமாக்கி அடிமை கொள்ளும் ஸ்வபாவத்தையுடைய உன் வடிவு என் ஆத்மாவை விஷயீகரித்திராநின்றது’ என்கிறார்.

குரை – (அநந்யார்ஹதாபாதநப்ரஸித்திக்குஇட்ட) வீரக்கழலையுடைய, கழல்கள் – திருவடிகளை, நீட்டி – நிமிர்ந்து, மண் – ஜகத்தை, கொண்ட – அளந்துகொண்ட, கோலம் – வடிவழகையுடைய, வாமனா – வாமநனாய், (*த்வத3ங்க்4ரிமுத்3தி3ஸ்ய” என்கிறபடியே), குரைகழல் – அத்திருவடிகளை உத்தேசித்து, கைகூப்புவார்கள் – ஓர் அஞ்சலிபந்தம்பண்ணினார், கூட – (தன்னையே) ப்ராபிக்கும்படி, நின்ற – (உபாயமும்உபேயமுமாய்) நின்ற, மாயனே – ஆஸ்சர்யபூதனே!  விரைகொள் – பரிமளப்ரசுரமான, பூவும் – புஷ்பத்தையும், நீரும் – (பாத்யாதி) ஜலத்தையும், கொண்டு – கொண்டு, ஏத்தமாட்டேனேலும் – (உன்னை யாராதிக்கைக்குஉறுப்பாக ஆபிமுக்யார்த்த) ஸ்தோத்ரம் பண்ண சக்தனல்லேனாகிலும், உரை – வேதாந்தவசநங்களால், கொள் – அபரிச்சேத்யமான, சோதி – தேஜஸ்ஸையுடைய, உன் – உன்னுடைய, திருஉருவம் – திருமேனியானது, என்னது ஆவிமேலது – என் ஆத்மாவின்மேலே அபிநிவிஷ்டமாயிராநின்றது.

ஈடு. – ஏழாம்பாட்டு.  ‘கீழ்ச்சொன்ன ப்ரேமமும் ததநுகூலமான த்ருத்திகளுமின்றிக் கேயிருக்கிலும் என்ஸத்தையே உனக்கு ஜீவநஹேதுவாவதே!’  என்கிறார்.

(குரைகழல்கள்நீட்டி) – “மண்முழுதுமகப்படுத்துநின்ற” (திருநெடு.5) என்கிறபடியே, பூமிப் பரப்படையத் திருவடிகளுக்குள்ளேயாம்படி திருவடிகளை நிமிர்த்து.  `குரை’ என்பது – பரப்பும், ஓசையும்.  (மண்கொண்டகோலவாமனா) – மண்கொண்டபின்பும் வாமநவேஷம் இவர்திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி.  இந்த்ரனுக்கு ராஜ்யங்கொடுக்கை யன்றிக்கே, தம்மையநுபவிப்பிக்கைக்காக அவ்வடிவுகொண்டா னென்றிருக்கிறார்.  கீழ் – ப்ராப்தியைச் சொல்லிற்றாய், அஞ்சலிமாத்ரஸாத்ய மென்கிறது – மேல்.  (குரைகழல் கைகூப்புவார்கள்) – உன்திருவடிகளிலே அஞ்சலிபண்ணினவர்கள், உன்னைக் கூட நின்ற என்னுதல்; உன்னைக் கைகூப்புவார்கள் குரைகழல்கள் கூட நின்ற மாயனென்னுதல்; திருவடிகள்தான் அஞ்சலிஸாத்யமுமாய் அஞ்சலிக்கு விஷயமுமாயிறே இருப்பது.  இந்த்ரனுக்கு ராஜ்யம் கூறுபட்டாற்போலே இவர்க்கும் அத்திருவடிகளிலழகு கூறுபட்டது.  அவனுக்கு ஸாதநமானது இவர்க்கு ஸாத்யமாயிற்று.  (மாயனே) – ஓரஞ்சலிமாத்ரத்தாலே த்வத்ப்ராப்தியாம்படி யிருப்பதே!  இதுஎன்ன ஆஸ்சர்யந்தான்!  என்கிறார்.  (விரைஇத்யாதி) – ஓரஞ்சலிமாத்ரத்தாலே உன்னை ப்ராபிக்கலாம்படி நீ இருந்தால், புஷ்பாத்யுபகரணங்களைக்கொண்டு அடிமை செய்யவிறே சேதநனாகில் ப்ராப்தம்; அப்படிசெய்யப்பெற்றிலேனேயாகிலும்.  பரிமளத்தையுடைத்தான பூவையும் நீரையுங் கொண்டு, (ஸிஞ்சந்து வஸுதா4ம் க்ருத்ஸ்நாம் ஹிமசீதேந வாரிணா) என்கிறபடியே வகுத்தஅடிமை செய்யமாட்டிற்றிலேனேயாகிலும்.  (உன்உரைகொள் சோதித்திருவுருவம்) – உரைகொள்ளுகையாவது – `அது, அது’ என்று வாய்புலற்றும்படியாயிருக்கை; (ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம பவந்கதா: |  ராமபூதம் ஜகதபூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி) என்னாநிற்பர்களிறே.  அன்றிக்கே, பேச்சுக்கு அவிஷயமான திருமேனியென்னுதல், மாற்றும் உரையும் அற்ற திருமேனியென்னுதல்:  “சுட்டுரைத்தநன் பொன்னுன் திருமேனியொளியொவ்வாது” (3.1.2) என்னக்கடவதிறே.  (என்னதுஆவிமேலதே) – இப்படி விலக்ஷணமான உன்திருமேனி என்ஸத்தையின்மேலது.  ஸூரிபோக்யமான வடிவுக்கு தாராகாதிகள் என்ஆத்ம ஸத்தையாவதே!  “கலியர் சோற்றின்மேலே மனம்” என்னுமாபோலே.  இவர்தாம் (அஹமந்நமஹமந்நமஹமந்நம்) என்றிருக்குமவரிறே.

எட்டாம் பாட்டு

என்னதாவிமேலையாய் ஏர்கொளேழுலகமும்
துன்னிமுற்றுமாகிநின்ற சோதிஞானமூர்த்தியாய்
உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும்
இன்னவண்ணமேநின்றாய் என்றுரைக்கவல்லேனே.

: அநந்தரம், ‘எனக்காக ஸர்வலோகத்தையும் வ்யாபித்து என்னை அங்கீகரித்த உன்படியைச் சொல்லப்போமோ?’ என்கிறார்.

என்னது ஆவிமேலையாய் – என் ஆத்மவஸ்துவின்மேலே அபிநிவிஷ்டனாய்க் கொண்டு, (உனக்கு வ்யாப்யபூதமான), ஏர்கொள் – ஔஜ்ஜ்வல்யத்தை ஸ்வபாவமாக வுடைய, ஏழ்உலகமும் – ஸப்தவிதமான ஸர்வலோகங்களிலும், துன்னி – பூர்ணமாக வ்யாபித்து, முற்றும் – ஸமஸ்தபதார்த்தங்களும், ஆகி – (தனக்கு) ப்ரகாரமாம்படியாய், நின்ற – நின்ற, சோதி – ஸ்வயம் ஜ்யோதீரூபமான, ஞானம் – ஜ்ஞாநத்தை, மூர்த்தியாய் – ஸ்வரூபமாகவுடையவனே!,  என்னது ஆவி – என் ஆத்மஸ்வரூபம், உன்னதும் – உனது போக்யமும், உன்னது ஆவி – உன் திவ்யாத்ம ஸ்வரூபம், என்னதும் – எனதுபோக்யமுமான, இன்னவண்ணமே – இப்படியிலே, நின்றாய் – நின்றாய், என்று உரைக்க வல்லேனே – இதுக்கு என்னபாசுரமிட்டுச்சொல்லுவேன்?  என்று உபயாநுராகமும் சொல்லிற்றாயிற்று.

ஈடு. – எட்டாம்பாட்டு.  ஒருவரையொழிய ஒருவர்க்குச் செல்லாதபடி.  பிறந்த கலவி, பேச்சுக்கு நிலமன்று  என்கிறார்.

(என்னதாவிமேலையாய்) – என்ஸத்தையைப்பெற்று அத்தால்வந்த ப்ரீதி ப்ரகர்ஷத்தையுடையையாய் என்னுதல்; என்னைப்பெறவேணும் என்னும் அபிநிவேசத்தை யுடையையாய் என்னுதல்.  என்னதாவிமேலையா யென்று ஸம்போதநமாதல்.  (ஏர்கொள் இத்யாதி) – இவரைப்பெற்ற ப்ரீதியாலே வ்யாப்தியும் புதுக்கணித்த தென்னுதல்; ஒருவனைப்பிடிக்க நினைத்து அவன்பக்கலுண்டான அபிநிவேசத்தாலே ஊரைவளைவாரைப்போலே, தம்மையகப்படுத்துகைக்காக வ்யாப்தனானான் என்று இருக்கிறாராதல்.  (ஏர்கொள் ஏழுலகமும்) – இவரோடேவந்து கலந்த பின்பு ஜகத்துக்குப் பிறந்த புதுக்கணிப்பு.  “உண்டியுடல்காட்டும்” என்னுமா போலே, சரீரி பூர்ணனானவாறே சரீரமும் புதுக்கணிக்குமிறே; ஜகச்சரீரியிறே அவன்.  (துன்னிமுற்றுமாகிநின்ற) – ஜாதி, வ்யக்திதோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமாபோலே குறைவற வ்யாபித்துநின்றபடி.  (சோதி ஞானமூர்த்தியாய்) – ஜ்யோதீரூபமான ஜ்ஞாநத்தை ஸ்வரூபமாகவுடையவனே!  (உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவி யும்) – என்னுடைய ஆவி உன்னது.  உன்னுடைய ஆவி என்னது.  என் ஸ்வரூபம் நீயிட்ட வழக்கு, உன்ஸ்வரூபம் நானிட்ட வழக்கு.  இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச்செய்யா நிற்கச்செய்தே இருந்த முதலிகளிலே சிலர், `இவ்வாத்மாவின் ஸ்வரூபம் அவனிட்ட வழக்கென்றால் கூடுமே; அவன்ஸ்வரூபம் இவனிட்டவழக்காகையாவது என்?’  என்றுகேட்க, இவன் `தன்னை அவனுக்காக்குவன்’ என்றஅன்று கர்மம் தகையவுங்கூடும்; ஸர்வேஸ்வரன் தன்னை இவனிட்டவழக்காக்குமன்று நிவாரகரில்லை; ஆனபின்பு அதுவே நிலைநிற்பது.  இன்னம், `இவன்ஸ்வரூபம் அவனிட்ட வழக்காகக் கூடுமோ?  என்று இதிலேகாணும் ஸந்தேஹிக்கவேண்டுவது’ என்று அருளிச்செய்தார்.  (இன்னவண்ணமேநின்றாய்) – இப்ப்ரகாரத்திலே நின்றாய்.  (என்று உரைக்கவல்லேனே) – இப்படிப்பட்ட உன்ப்ரணயித்வகுணத்தை என்னால் பாசுரமிட்டுச் சொல்லலாயிருந்ததோ?  என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

உரைக்கவல்லேனல்லேன் உன்னுலப்பில்கீர்த்திவெள்ளத்தின்
கரைக்கணென்றுசெல்வன்நான் காதல்மையலேறினேன்
புரைப்பிலாதபரம்பரனே பொய்யிலாதபரஞ்சுடரே
இரைத்துநல்லமேன்மக்களேத்த யானுமேத்தினேன்.

: அநந்தரம், `பாரமார்த்திக பரத்வௌஜ்ஜ்வல்யத்தையுடைய உன்படி என்னாற் பேசிமுடிக்கப்போமோ?’  என்கிறார்.

உரைக்கவல்லேன் அல்லேன் – (ஆஸ்ரிதவிஷயத்தில் உன் ப்ரணயகுணத்தை) நான் பாசுரமிட்டுச்சொல்ல – சக்தன் அல்லேன்; (அது எத்தாலேயென்னில்), – உலப்பு இல் – முடிவு இல்லாத, உன் – உன்னுடைய, கீர்த்தி – ப்ரணயித்வப்ரதையாகிற, வெள்ளத்தின் – ஸமுத்ரத்தினுடைய, கரைக்கண் – கரையிடத்து, நான் – நான், என்று – என்று, செல்வன் – செல்வன்?  (அடியிலே பேச இழிந்தது), காதல் – (என்) ப்ரேமத்தாலே, மையலேறினேன் – மிக்க கலக்கத்தையுடையேனானேன்; புரைப்பு இலாத – புரையற்ற, பரம்பரனே – பாரமார்த்திக ஸர்வஸ்மாத்பரத்வத்தையுடையனாய், (என்னோட்டைக் கலவியில்), பொய் இலாத – பொய் இல்லாமையாலே, பரஞ்சுடரே – (அம்மேன்மையோபாதி) நிரதிசயமான!  நல்ல – விலக்ஷணஜ்ஞாநாதிஸ்வபாவராய், மேல் – ஸர்வோத்க்ருஷ்டரான, மக்கள் – நித்யஸூரிகள், இரைத்து – (பெருங்கடல் கிளர்ந்தாற்போலே) கோஷித்து, ஏத்த – “ஹா(3)வுஹா(3)ஹா(3)வு*ஏத்த, யானும் – (ப்ரேமபரவசனான) நானும், ஏத்தினேன் – ஏத்தினேனித்தனை.

ஈடு. – ஒன்பதாம்பாட்டு.  `அநுபூதமானது பேசத் தட்டு என்?’ என்ன, `உன்ப்ரணயித்வ ப்ரகர்ஷம் என்னுடையபேச்சுக்கு நிலமன்று’  என்கிறார்.

(உரைக்க வல்லேனல்லேன்) – உன்ப்ரணயித்வகுணத்தை அநுபவித்துக் குமிழி நீருண்டு போமித்தனைபோக்கிப் பேசித் தலைக்கட்ட மாட்டுகிறிலேன்.  எல்லாம்பேச வொண்ணாதாகில் பேசலாம் அம்ஶம் பேசினாலோ?  என்னில், – (உன்இத்யாதி) – உன்னுடைய முடிவில்லாத ப்ரணயித்வத்தால் வந்த கீர்த்திஸாகரத்தினுடைய கரையிலே தான் என்னாலே செல்லப்போமோ?  இப்படி கரையருகும் செல்ல அரிய விஷயத்தில் நீர் பேசுவதாக உத்யோகிப்பானென்?  என்னில், – (காதல்மையலேறினேன்) – என் ப்ரேமத்தாலே மிக்க கலக்கத்தை யுடையனானேன்.  பிச்சேறினாரை `நீ இப்படி செய்வானென்?’  என்னக்கடவதோ?  இவ்விஷயத்தில் நீர் ப்ரமிப்பானென்?  ப்ரமிப்பார்க்கு ஓராலம்பநம் வேண்டாவோ?  என்ன, – `நித்யஸூரிகள் பித்தேறி யேத்தக் கண்டேன்; அத்தாலே செய்தேன்’ என்கிறார்.  நித்யஸூரிகளோடு இவரோடு அவன் தன்னோடு வாசியற்றிறே இத்விஷயம் இருப்பது.  ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியான தான் அறியப்புக்காலும் தனக்கும் தன் தன்மை அறிவுஅரியனாயிறே இருப்பது; தன்னை யறியப்புக்க வேதங்கள் பட்டது படுமத்தனை தானும்.  (புரைப்பிலாதபரம்பரனே பொய்யிலாதபரஞ்சுடரே) – நீ ஸர்வஸ்மாத்பரனா யிருக்கிற இருப்பில் புரையில்லாதாப் போலே, என்னோட்டைக்கலவியால் வடிவிற்பிறந்த புகரிலும் புரையின்றிக்கே யிருக்கிறவனே!  அன்றிக்கே, நிரவதிகமான ப்ரணயித்வகுண ஸத்பாவத்தில் கண்ணழிவில்லாதாப்போலே என்னோட்டைக்கலவியிலும் பொய்யின்றிக்கே அத்தால் வந்த புகர் வடிவிலேதோற்ற இருக்கிறவனே!  என்னுதல்.  (இரைத்து இத்யாதி) – பரம பக்தியுக்தராய்க்கொண்டு கடல் கிளர்ந்தாற்போலே இரைத்துக்கொண்டு நித்யஸூரிகள் ஏத்தக் காண்கையாலே நானும் ஏத்தினேனல்லது நான் ஶக்தனாய் ஏத்தினேனோ?  என்கிறார்.

பத்தாம் பாட்டு

யானுமேத்தி ஏழுலகும்முற்றுமேத்திப் பின்னையும்
தானுமேத்திலும் தன்னையேத்தவேத்தஎங்கெய்தும்
தேனும்பாலும்கன்னலும் அமுதுமாகித்தித்திப்ப
யானும்எம்பிரானையேஏத்தினேன் யானுய்வானே.

: அநந்தரம், `ஒருவராலும் எல்லைகாணவொண்ணாத அபரிச்சேத்ய மாஹாத்ம்யத்தையுடையவனை என்ஸத்தாஸித்3த்4யர்த்2தமாக ஏத்தினேன்’  என்கிறார்.

யானும் – (அவன் மயர்வறமதிநலமருளப்பெற்ற) நானும், ஏத்தி – ஏத்தி, முற்றும் – அஜ்ஞஸர்வஜ்ஞவிபாகமற, ஏழுலகும் – இந்தலோகங்களெல்லாம், ஏத்தி – ஏத்தி, பின்னையும் – அதுக்குமேலே, தானும் – (ஸர்வஜ்ஞனாய் ஸர்வர்க்கும் ஜ்ஞாநப்ரதனான) அவன்தானும், ஏத்திலும் – ஏத்தினாலும், தன்னை – (அபரிச்சிந்நஸ்வபா4வனான) தன்னை, ஏத்தஏத்த – (ஒருகால்சொன்னவிடம் ஒருகால்சொல்லாமல்) மேன்மேலென ஏத்தினால், எங்கு – எங்கே, எய்தும் – முடிவெய்தும்?  (ஆகிலும் ஏத்துகைக்கடி), தேனும் – தேனும், பாலும் – பாலும், கன்னலும் – கன்னலும், அமுதுமாகி – அமுதும்போலே, தித்திப்ப – (ஸர்வப்ரகாரத்தாலும்) ரஸிக்க, எம் – என்னையநுபவிப்பித்த, பிரானையே – மஹோபகாரகனையே, யான் – நான், உய்வான் – உஜ்ஜீவிக்கைக்கு, யானும் – யானும், ஏத்தினேன் – ஏத்தினேன்.

ஈடு. – பத்தாம்பாட்டு.  `நானும் ஸமஸ்தலோகங்களும், ஸர்வேஸ்வரனும் ஏககண்டராய் ஏத்தினாலும் ஏத்தப்போகாத விஷயத்தை என்செல்லாமையாலே ஏத்தினேன்’  என்கிறார்.

(யானும் ஏத்தி) – ‘மயர்வறமதிநலமருளப்பெற்ற’ நானும் ஏத்துவது.  (ஏழுலகும்முற்று மேத்தி) – விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசியற `சிறியார் பெரியார்’ என்னாதே ஸர்வரும் ஏத்துவது.  (பின்னையும் தானுமேத்திலும்) – ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனாய், தொடங்கின கார்யம் செய்துதலைக்கட்டுகைக் கீடான ஸர்வசக்தியுமான தானும் ஏத்துவது.  இப்படி எல்லாரும் ஒருமிடறாய் ஏத்தினாலும், பின்னையும் ஏத்தினவிடம் அளவுபட்டு ஏத்தாத இடம் விஞ்சியாயிற்று இருப்பது விஷயம்.  அந்யபரரோடு அநந்யபரரோடு அளவுடையாரோடு அளவிலிகளோடு வாசியில்லை, விஷயத்தை எல்லைகாண வொண்ணாமைக்கு.  ஆனால், நீர் ஏத்த இழிவானென்?  என்னில், – (தேனும் இத்யாதி). “ஸர்வரஸ:”  என்கிற விஷயத்தினுடைய ரஸ்யதையாலும், `நாம் இத்விஷயத்திலே இழிந்து ஏத்துவோம்’ என்னும்படி தன்ப்ரணயித்வகுணத்தை உபகரித்த உபகாரகனாகையாலும் ஏத்தினேன்.  இனிதென்றும் உபகாரகனென்றும் அசக்தரான நீர் இதிலிழியக் கடவீரோ?  என்ன, – (யான் உய்வானே) – ஏத்தாவிடில் பிழையாதாரேத்துமத்தனை யன்றோ?

பதினொன்றாம் பாட்டு

உய்வுபாயம்மற்றின்மைதேறிக் கண்ணனொண்கழல்கள்மேல்
செய்யதாமரைப்பழனத் தென்னன்குருகூர்ச்சடகோபன்
பொய்யில்பாடலாயிரத்துள் இவையும்பத்தும்வல்லார்கள்
வையம்மன்னிவீற்றிருந்து விண்ணும்ஆள்வர்  மண்ணூடே.

ஆழ்வார் திருவடிகளே சரணம்

: அநந்தரம், இத்திருவாய்மொழி வல்லவர்கள் உபயவிபூதியும் ஸ்வநியமநத்திலே நிர்வஹிப்பார்களென்று பலத்தை அருளிச்செய்கிறார்.

உய்வு உபாயம் – உஜ்ஜீவநோபாயம், மற்று இன்மை – வேறு இல்லாமையை, தேறி – அறுதியிட்டு, கண்ணன் – (ஆஸ்ரிதப்ரணயியான) க்ருஷ்ணனுடைய, ஒள் – பரமபோக்யமான, கழல்கள்மேல் – திருவடிகள்விஷயமாக, செய்ய – சிவந்த, தாமரை – தாமரையையுடைய, பழனம் – நீர்நிலங்களையுடைத்தாய், தென் – தெற்குத்திக்கில், நல் – ஸ்லாகநீயமான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வாருடைய, (ப்ரணயித்வகுணத்தில்), பொய் இல் – பொய் இல்லாதபடி, பாடல் – பாடின, ஆயிரத்துள் – ஆயிரந்திருவாய்மொழியில், இவை பத்தும் – இவைபத்தையும், வல்லார்கள் – (அர்த்தாநுஸந்தாநத்தோடே) அப்யஸிக்கவல்லவர்கள், வையம் – பூமியிலே, மன்னி – சிரகாலம்ஸ்திரமாம்படி, வீற்றிருந்து – (தங்கள்த்யாத்ருத்திதோன்ற) இருந்து, மண்ணோடே – இந்த பூமியோடே, விண்ணும் – பரமபதத்தையும், ஆள்வர் – (தங்கள் நியமநத்தின்படி) நிர்வஹிப்பர்கள்.  இது – அறுசீராசிரியவிருத்தம்.

வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே சரணம்

ஈடு. – நிகமத்தில் – `ஈஸ்வரனுடைய உபயவிபூதியும் இத்திருவாய்மொழி அப்யஸித்தார் இட்ட வழக்கு’  என்கிறார்.

(உய்வுஉபாயம்மற்றின்மைதேறி) – அவனுடைய ப்ரணயித்வகுணத்தைப் பேசித் தலைக்கட்டவல்லராயன்று இவர்பேசிற்று:  இது ஒழிய தரிக்கைக்கு உபாயமில்லை யென்று தெளிந்து.  (கண்ணனொண்கழல்கள்மேல்) – பரமப்ரணயியானத்தை அவதரித்து ஆவிஷ்கரித்த க்ருஷ்ணன் திருவடிகளிலே.  (செய்ய இத்யாதி) – அவனுடைய ப்ரணயித்வகுணாநுஸந்தாநத்தாலே இவர் தரித்தவாறே, ஊரும் (அகாலப2லி நோத்ருக்ஷா:) என்கிறபடியேயாயிற்று.  சிவந்ததாமரையையுடைய பழனங்களை யுடைத்தாய்த் தெற்குத்திக்குக்கு ஸ்லாக்யமான திருநகரியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த.  (பொய்யில்பாடல் இத்யாதி) – (ந  தே  வாக3ந்ருதா காத்யே காசித3த்ர ப4விஷ்யதி) என்கிறபடியே திருவாய்மொழியெல்லாவற்றுக்குமாதல்; அவாப்தஸமஸ்த காமனான ஸர்வேஸ்வரன் ஒருநித்யஸம்ஸாரியோடே இப்படி விரும்பிவந்து கலந்து, இவருடைய ஸத்தாதிகளே தனக்கு   போ4கோ3பகரணமாக இருந்தானென்கிற ப்ரணயித்வ குணத்தில் பொய்யின்றிக்கேயிருக்கிற பத்து என்னுதல்.  `பொய்யில்லாத ஆயிரம்’ என்றபோது, அவ்வோபாதி இதுக்கும் வருமிறே.  (வையம்மன்னி இத்யாதி) – பூமியிலே எம்பெருமானாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயோடே நெடுங்காலம் இருந்து, (விண்ணும்ஆள்வர்மண்ணூடே) – இங்கேயிருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்; அங்கே போனால் “ஆண்மின்கள் வானகமாழியான்தமர்” (10.9.9) என்கையன்றிக்கே இங்கேயிருக்கச்செய்தே தாங்களிட்ட வழக்காகப் பெறுவர்.  `வையம்மன்னிவீற்றிருந்து’ என்கிறவிடத்தே “நம்மைப்போலே வாய்புகுசோறாகப் பறிகொடாதே, நெடுங்காலம் பூமியிலே ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயோடே “நாட்டாரோடியல்வொழிந்து” (10.6.2) என்கிறபடியே தங்கள்வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கப் பெறுவர்கள் என்று சீயர் உருத்தோறும் அருளிச்செய்வர்.  பால்யத்திலே பட்டரைப்பறி கொடுத்தாரிறே அவர்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

த்ரமிடோபநிஷத் ஸங்கதி கோவைவாயாள்

ப்ரீத:பரம்ஹரிரமுஷ்யததாஸ்வபாவாத்

ஏகந்மநோவசநதேஹக்ருதக்ரியாபி:।

ஸ்ரக்சந்தநப்ரமுகஸர்வவிதஸ்வபோக்ய:

ஸம்ஶ்லிஷ்டவாநிதமுவாசமுநிஸ்த்ருதீயே।।    ||33||

 

த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி   —  கோவைவாயாள்

 

சேதோகந்தாநுலேபஸ்ஸ்துதிவசநக்ருதஸ்ரக்படோऽஞ்ஜல்யுபாத்த-

அலங்கார:ப்ராணவாஸீகலிதவரஶிரோபூஷணஶ்சேதநேந ।

ஶீர்ஷ்ணாஸத்பாதபீடஸ்ஸ்வதநுஸதநதாமாத்மரூபே

விதந்வந்நந்யோந்யாத்மத்வயோகாத் ப்ரபுரகணிமிதஶ்ஶ்லிஷ்டபாவோऽதேந|| 4-3

திருவாய்மொழி நூற்றந்தாதி

கோவானவீசன் குறையெல்லாந்தீரவே

ஓவாதகாலத்து உவாதிதனை -மேவிக்

கழித்தடையக்காட்டிக்கலந்தகுணமாறன்

வழுத்துதலால் வாழ்ந்த்து இந்தமண்.         ||33||

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்

******

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.