04-10 12000/36000 Padi

பத்தாம் திருவாய்மொழி

ஒன்றுந்தேவும் : ப்ரவேஶம்

*******

:- பத்தாம் திருவாய்மொழியில், கீழ் – ஸம்ஸாரதோஷாநுஸந்தாந பூர்வகமாக பகவத்ப்ராப்தியை ப்ரார்த்தித்தவர் ப்ராப்யமான பரதசையை அவன் ஆவிஷ்கரிக்கக் கண்டு ஸந்துஷ்டராய்,  ‘இப்பரத்வம் அறியாமல் ஸம்ஸாரிகள் இழக்கவொண்ணாது’ என்று பார்த்து, ப்ராப்யத்வபர்யந்தமான அவனுடைய பரத்வத்தை உபதேசிப்பதாக உத்யோகித்து, அதுக்கு உபகாரகமான ஸர்வகாரணத்வத்தையும், காரணத்வாநுகுணமான நித்யகல்யாணகுண யோகத்தையும், கார்யரூபமான ஜகத்விஷயரக்ஷணத்யாபாரம் பரத்வாவஹமான படியையும், ஸோபபாதகமான ஸர்வேஶ்வரத்வத்தையும், அந்த ஈஶ்வரத்வப்ரகாசகமான ஸௌலப்யாதிஶயத்தையும், ஸம்ஸாரநிர்வஹண ஸாமர்த்யத்தையும், பரத்வப்ரகாஶகமான கருடத்வஜத்வத்தையும், அல்லாத தேவதைகள் பலப்ரதத்வத்துக்கும் ஶக்த்யாதாயகன் அவனே யென்னுமிடத்தையும், அந்யது3ரவபே3ாத4னான அவன் வர்த்திக்கிறதேசமே உஜ்ஜீவநார்த்திகளுக்கு ஜ்ஞாதத்யமாம்படியையும், ஸர்வஶரீரியான அவன் திருவடிகளில் கைங்கர்யமே உத்தேஶ்யமான படியையும் உபதேசித்து, இப்படி பரமப்ராப்யபூதனான ஈஶ்வரனுடைய போக்யதாதிஶயத்தாலே இவ்வாத்மாவினுடைய ததேகப்ரியத்வத்தை உபபாதித்துத் தலைக்கட்டுகிறார்.

ஈடு:- ஒருநிலத்திலே ஒரு கூறு உவர்ந்துகிடக்க மற்றைக்கூறு விளைவதறுப்பதாமாபோலே, நித்யவிபூதியும் நித்யஸூரிகளும் பகவதநுபவமே யாத்ரையாய்ச் செல்லாநிற்க ஸம்ஸாரமாகிற பாலைநிலத்திலுள்ளார் ஶப்தாதிவிஷயங்களிலே ப்ரவணராய் இவற்றினுடைய லாபாலாபங்களே பேறுமிழவுமாய் பகவத்விமுகராய் க்லேஶப்படுகிறபடியை அநுஸந்தித்து, ‘அவர்களைத் திருத்துவோம்’ என்று பார்த்து, ‘ஸர்வேஶ்வரன் உளனாயிருக்க நாம் இருந்து க்லேஶப்படவேணுமோ?’ என்று ‘தேவர் உள்ளீராயிருக்க, இவை இப்படி நோவுபட விட்டிருக்கைபோருமோ? இவர்களையும் திருத்தி நல்வழிபோக்கவேணும்’ என்று அவன் திருவடிகளிலே விழ, ‘நம்குறையல்லகாணும்; இவை அசித்தாய் நாம் நினைத்தபடி காரியங்கொள்ளுகிறோமல்லோமே; சேதநரானபின்பு இவர்கள் பக்கலிலேயும் ருசி உண்டாகவேணுங்காணும், அபுநராத்ருத்திலக்ஷண மோக்ஷத்தைப் பெறும்போது; நாமும் உம்மோபாதி ஆவதெல்லாம்பார்த்து முடியாமை கண்ண நீரோடேகாணும் கைவாங்கிற்று’ என்ன, ‘இவர்களுக்கு ருசியில்லையானாலும், பேற்றுக்கு வேண்டுவது இச்சா மாத்ரமாயிற்றானபின்பு, இந்த இச்சையையும் நீயே பிறப்பித்துக் கொள்ளுமித்தனை யன்றோ?’ என்று – உதங்கன் துர்யோதநாதிகள் பக்கலுண்டான பக்ஷபாதத்தாலே, துர்யோதநாதிகளை அழியச்செய்து வெற்றிகொண்டு நிற்கச்செய்தே வந்து, ‘உனக்கு ப்ராப்தி ஒத்திருக்க, பாண்டவர்களுக்குப் பக்ஷபதித்து இவர்களை அழியச்செய்தாயே’ என்ன, ‘அவர்களை ஆந்தனையும் பொருந்தவிட்டுப் பார்த்தோம்; அவர்கள் ‘நாங்கள் பந்துக்கள் ஜீவிக்கில் ஜீவியோம்’ என்றபின்பன்றோ நாம் அவர்களை அழியச்செய்தது’ என்ன, ‘ஸர்வநியந்தாவானபின்பு அவர்களுக்கு இசைவைப் பிறப்பித்துப் பொருந்தவிட்டுக் கொள்ளாவிட்டதென்?’ என்று அவன் நிர்ப்பந்தித்தாற்போலே இவரும் நிர்ப்பந்திக்க, ‘சேதநரானபின்பு ருசிமுன்பாகச் செய்யவேணுமென்றிருந்தோமித்தனை காணும்; அது கிடக்க; உமக்குக் குறையில்லையே; உம்மைக்கொடுபோய் வைக்கப்புகுகிற தேசத்தைப் பாரீர்’ என்று பரமபதத்தைக் காட்டிக்கொடுக்க, கண்டு க்ருதார்த்தரானார், கீழில் திருவாய்மொழியிலே; பின்னையும், தம்செல்லாமையாலே, ஸர்வேஶ்வரன் கைவிட்ட ஸம்ஸாரத்தையும் திருத்தப் பார்க்கிறார்.  ‘ஸம்ஸாரத்தை அடியறுக்கவேணும்’ என்று பார்த்தார்; ஸம்ஸாரபீஜம் – இதரதேவதைகள்பக்கல் ப்ராவண்யமும், பகவத்பரத்வஜ்ஞாந மில்லாமையுமா யிருந்தது;  அதுக்கு உறுப்பாக பகவத்பரத்வ ஜ்ஞாநத்தை உபதேசிக்கிறார்.  எம்பார், “ஸகலவேதசாஸ்த்ரங்களையும் அதிகரித்துவைத்து, ‘பரதத்த்வம் இன்னது’ என்று அறுதியிடமாட்டாதே, ‘சேம்புக்குக் கூராச் சிற்றரிவா ளுண்டோ? நமக்கு உபாஸ்யரல்லாதாருண்டோ?’ என்று, கண்டவிடமெங்கும் புக்குத் தலைசாய்த்துத் தடுமாறித் திரியாநிற்க, எம்பெருமானார் தர்ஶநஸ்த்தரில் எத்தனையேனும் கல்வியில்லாத ஸ்த்ரீப்ராயரும் தேவதாந்தரங்களை அடுப்பிடுகல்லோபாதியாக நினைத்திருக்கிறது.  இவ்வொன்றுந்தேவும் இப்பக்ஷத்திலே உண்டாகையிறே” என்று அருளிச்செய்வர்; “த்ருணீக்ருதவிரிஞ்சாதி*.  ‘கார்த்தவீர்யார்ஜுநன் என்பானொருவன் தான் ராஜ்யம்பண்ணுகிற காலத்தில் ஆரேனுமொருவர் பாபசிந்தை பண்ணினாருண்டாகில் அவர்கள் முன்னே கையும் வில்லுமாய் நின்று அவற்றைத் தவிர்த்துப்போந்தான் என்றால், இது உபபந்நம்’ என்றிருப்பர்கள்; ஒருக்ஷுத்ரமநுஷ்யனுக்கு ‘இது கூடும்’ என்றிருக்கிறவர்கள், ‘ஸர்வஶக்தியாய் ஸர்வாந்தர்யாமியாயிருக்கிற ஸர்வேஶ்வரன் இப்படி த்யாபித்துநின்று நோக்கும்’ என்றால், சேதநர் ‘இது அநுபபந்நம்’ என்றிருப்பர்கள்.  ‘ஜாதி, த்யக்திதோறும் பரிஸமாப்ய வர்த்திக்கும்’ என்றால், ‘அசித்பதார்த்தத்துக்கு இது கூடும்’ என்றிருப்பர்கள்; ‘பரமசேதநனாயிருப்பானொருவன் பரிஸமாப்ய வர்த்திக்கும்’ என்றால், ‘இது கூடாது’ என்று ஸம்ஶயியாநிற்பர்கள்.

முதல் திருவாய்மொழியிலே – ஸ்வாநுபவத்துக்கு உறுப்பாக, அவன் காட்டிக்கொடுத்த பரத்வத்தை அநுஸந்தித்து, அது தன்னை ‘உளன்சுடர்மிகுசுருதியுள்’ (1.1.7) என்று – ஶ்ருதிச்சாயையாலே உபபாதித்தார்; ஸ்வாநுபவந்தான் பிறர்க்கு உறுப்பாயிருக்கையாலே சேதநராகில் இத்வளவு அமையுமிறே’ என்று பார்த்து, பின்பு இதிஹாஸபுராணப்ரக்ரியையாலே பரத்வத்தை அருளிச்செய்தார் – “திண்ணன்வீட்டில்” (2.2.1). அதிலும் அவர்கள் திருந்தாமையாலே, ‘அவர்கள் தங்களையே, உத்தேசித்தே பகவத்பரத்வத்தை உபபாதிப்போம்” என்று பார்த்து, அதுக்கு உறுப்பாக, இதர தேவதைகள் பக்கலுண்டான பரத்வஶங்கையை அறுத்துக்கொண்டு பகவத்பரத்வத்தை உபபாதிக்கிறார் – இதில்.  முதல் திருவாய்மொழியில் – பரத்வேபரத்வத்தை அருளிச்செய்தார்; அது  ஸம்ஸாரிகளுக்கு எட்டாநிலமாயிருந்தது; அதுக்காக, அவதாரத்திலே பரத்வத்தை அருளிச்செய்தார் –  “திண்ணன்வீ*ட்டில்; அதுவும் தத்ப்ராயமாய்ப் பிற்பாடர்க்கு எட்டிற்றில்லை; இரண்டும் தேஶகால விப்ரக்ருஷ்டமாயிருந்தது; அக்குறைகளொன்றுமின்றிக்கே, “பின்னானார்வணங்குஞ் சோதி” (திருநெடு.10) என்கிறபடியே பிற்பாடர்க்கும் இழக்கவேண்டாத அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை அருளிச்செய்கிறார் – இதில்.

இனி இவர்தாம் திருத்தப்பார்த்த வழி ஏது? என்னில்: – எல்லார்க்குமொக்க ஸூகங்களுண்டாகவும், து:கங்களின்றிக்கேயொழியவும் அபேக்ஷிதமா யிருக்கச் செய்தே, அபேக்ஷித்த ஸமயத்தில் அபிமதமானஸுகம் வரக்காணாமையாலும், அநபிமதமான து:கம் வரக்காண்கையாலும், ‘இவற்றுக்கு நியாமகனாய் நின்று அநுபவிப்பிக்கிறானொருவன் உளன்’ என்று கொள்ளவேண்டியிருந்தது.  அதுவென்? ஸுகது:கங்களுக்கு ஹேதுவான புண்யபாபங்கள் அநுபவிப்பிக்கிறன ஆனாலோ? என்னில்; – அவற்றினுடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்தவாறே, அவை – அசேதநமாயிருப்பன சில க்ரியாவிஶேஷங்களாகையாலே அப்போதே நசிக்கும்; இனி, த3ாருநிர்மாணத்தில்  வந்தால் கர்த்தாவையொழிய வாஶ்யாதிகளுக்கு ஒரு வ்யாபாரம் கூடாதாப்போலே, அந்த க்ரியைகளுக்கும் ஒரு சேதநனையொழிய ப2லப்ரதாநஶக்தி கூடாமையாலே ஒரு சேதநனைக்கொள்ள வேண்டிவரும்; இனி, ‘அபூர்வம்’ என்று ஒன்றைக் கல்பித்து ‘அது அத்ருஷ்டரூபேண நின்று பலப்ரதமாகிறது என்னுமதிற்காட்டில், ‘ஒருபரமசேதநன் நெஞ்சிலே பட்டு அவனுடைய நிக்ரஹரூபத்தாலும் அநுக்ரஹரூபத்தாலும் இவை பலிக்கிறது’ என்கை நன்றிறே.  இனி, ‘அந்தப் பரமசேதநன்தானாகிறான் ஆர்? அவன் ஸ்வரூபஸ்வபாவங்கள் இருக்கும்படி எங்ஙனே? அவன் சேஷ்டிதங்கள் இருக்கும்படி எங்ஙனே?’ என்னில், – அது ப்ரமாணங்கொண்டு அறியவேணும்.  அதில், ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்கள் அதீந்த்ரியார்த்தத்தில் கே3ாசரியாமையாலே அவை ப்ரமாணமாகமாட்டாது; இனி, ஆக3மாதிகள் ப்ரமாணமானாலோ? என்னில், அவற்றுக்குப் புருஷபுத்தி ப்ரபவமான விப்ரலம்பாதிதோஷம் உண்டாகையாலே அவையும் ப்ரமாணமாக மாட்டாது; இனி, சதுர்த்தஶவித்யாஸ்த்தாநப்ரதாநகமாய் நித்யமாய் அபௌருஷேயமாகையாலே விப்ரலம்பாதிதோஷஸம்பாவநாரஹிதமாய் ஸாத்த்விகபுராணங்களாலே உபப்ரும்ஹிதமான வேதம் ப்ரமாணமாகவேணும்.  ‘ஸாத்த்விகபுராணங்கள்’ என்று விஶேஷித்ததுக்குக் கருத்தென்? என்னில், புராணகர்த்தாக்களெல்லாரும் ப்ரஹ்மாவின் பக்கலிலே சென்று இவ்விரண்டு காதைகளையும் கேட்டுப்போந்து தாந்தாம் புராணங்கள் பண்ணினார்கள்; அந்த ப்ரஹ்மாதானும், “யோப்ரஹ்மாணம் விததாதிபூர்வம் யோவைவேதாம்ஶ்ச ப்ரஹிணோதிதஸ்மை” என்கிறபடியே – ஸர்வேஶ்வரனாலே ஸ்ருஷ்டனாய் அவனாலே லப்தஜ்ஞாநனுமாயிருக்கச்செய்தேயும், “ப்ருஷ்ட: ப்ரோவாச பகவாநப்ஜயோநி: பிதாமஹ:” என்று கொண்டு ருஷிகளைக்குறித்து உபதேசிக்கிறவிடத்திலே, ‘நான் குணத்ரயவஶ்யனாயிருப்பன்; தமோகுணம் உத்ரிக்தமானபோதும் ரஜோகுணம் உத்ரிக்தமான போதும் சொன்னவற்றைப் போகட்டு, ஸத்த்வகுணம் உத்ரிக்தமான ஸமயத்தில் சொன்னவற்றை ஸ்வீகரியுங்கோள்’ என்றானிறே; இனி “அக்நேஶ்–வஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷுப்ரகீர்த்யதே ஐ ராஜஸேஷுச மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோவிது: ஐ ஸாத்த்விகேஷ்வதகல்பேஷு மாஹாத்ம்யமதிகம்ஹரே: ஐஐ” என்னாநின்றதிறே; ஆகையாலே, குணபேதங்களாலே புருஷபேதங்களைக் கொண்டு அவ்வழியாலே புராணபேதம் கொள்ளலாயிருந்தது; ஆகையாலே, ஸாத்த்விகபுராணங்களாலே உபப்ரும்ஹிதமான வேதம் ப்ரமாணமாக வேண்டியிருந்தது.  அந்த வேதத்துக்கு குணத்ரயங்களால் வரும் தோஷம் இல்லையேயாகிலும், ஸவிபூதிகனான ஸர்வேஶ்வரனை உபபாதிக்கப்போந்த தாகையாலே, “த்ரைகுண்யவிஷயாவேதா:” என்கிறபடியே – குணத்ரயங்களுக்கும் ஆஶ்ரயபூதரான சேதநரை விஷயமாகவுடைத்தாய் அவர்களுக்கு ஹிதம்சொல்லப்போந்ததாகையாலே அவர்களுடைய குணாநுகுணமாக ஹிதம் சொல்லுமது உண்டாயிருக்குமதுக்கும்.  அது அங்ஙன் சொல்லிற்றேயாகிலும் “யாவாநர்த்த உதபாநேஸர்வதஸ்ஸம்ப்லுதோதகே ஐ தாவாந்ஸர்வேஷுவே- தேஷுப்ராஹ்மணஸ்ய விஜாநத:” என்கிறபடியே ஆறு பெருகியோடாநின்றால், தாபார்த்தனானவன் தன்விடாய் தீருகைக்குவேண்டுவது உபஜீவிக்குமத்தனையல்லது, ஆற்றுநீரை அடங்க வற்றுவிக்கவேணுமென்னும் நிர்ப்பந்த மில்லையிறே; அப்படியே முமுக்ஷூவானவன் இவற்றில் தனக்கு உபாதேயமான அம்சத்தையிறே க்ரஹிப்பது.  இனி இந்த வேதந்தான் ‘பூர்வபாகம்’ என்றும் ‘உத்தரபாகம்’ என்றும் இரண்டுவழியாலே பிரிவுண்ணக்கடவதாய், அதில் பூர்வபாகமானது – ஆராதநவேஷத்தைச் சொல்லியும் ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத்ஸாதநாதிகளையுஞ் சொல்லியும், அவற்றிலே நின்று பரக்குமதாயிருக்கும்; இனி, உத்தரபாகமானது – ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூபரூப குணங்களைப் பரக்க நின்று உபபாதிக்கும்.

இனி, உபாஸ்யவஸ்து எது? என்றால், ஜகஜ்ஜந்மாதி காரணமென்று காரணவாக்யங்கள் ஒருங்கவிட்டுவைத்தன.  எங்ஙனேயென்னில்: “யதோவா இமாநி பூதாநி  ஜாயந்தே ஐயேந ஜாதாநி ஜீவந்தி ஐ யத்ப்ரயந்த்யபிஸம்விஶந்தி ஐ தத்விஜிஜ்ஞாஸஸ்வ ஐ தத்ப்ரஹ்ம” என்று கொண்டு அல்லாத தத்த்வங்களுக்கு அத்யேயதை* (=த்யாநம் பண்ணத் தகாததாகுகை) முன்னாக ஜகத்காரணவஸ்துவுக்கு த்யேயதையை விதித்துக்கொண்டு நின்றது; “காரணந்து த்யேய:” என்னக்கடவதிறே.  அந்த த்யேயவஸ்துதன்னை, “ஸதேவ ஸோம்யேதமக்ரஆஸீத்” என்று ஸச்சப்தத்தாலே சொல்லி, ஶாகாந்தரத்திலே நின்று, “ஆத்மாவாஇதமேகஏவாக்ரஆஸீத்” என்று ஆத்மஶப்தத்தாலே சொல்லி, அதுவும் பலவிடங்களிலே ஒட்டிக்கொள்ளலாயிருக்கையாலே, “ப்ரஹ்மவாஇதம் – ஏகமேவ – அக்ரஆஸீத்” என்று ப்ரஹ்மஶப்தத்தாலே சொல்லி, அந்த ப்ரஹ்மஶப்தந்தானும் அநேகதத்த்வங்களைவசிக்குமாகையாலே, “ஏகோஹவைநாராயண ஆஸீத்” என்று நாராயணஶப்தவாச்யனாகச்சொல்லி நின்றது; ஆனால், பின்னை, “நஸந்நசாஸச்சிவஏவகேவல:” என்றும் “ஶம்புராகாஶமத்யே த்யேய:” என்றும் ருத்ராதிகளுக்குக் காரணத்வமும் த்யேயதையும் விதியாநின்றதே; அவை செய்வதென்? என்னில், அவர்களை உத்தேசித்துச் சொல்லிற்றேயாகிலும் ஶுத்திகுணயோகத்தாலும் ஸுகப்ரதத்வத்தாலும், அவையும் விஶேஷ்யமான நாராயணஶப்தவாச்யன் பக்கலிலே சென்று சேரும்.  ஶம்பு –வாதி ஶப்தங்களை நாராயணஶப்தவாச்யனுக்கு விஶேஷணகுணமாக்கி யோஜித்தவோபாதி, இந்நாராயண ஶப்தத்தை ஶம்பு –வாதி ஶப்தவாச்யனானவனுக்கு விஶேஷணமாக்கினாலோ? என்னில் – குணயோகத்தாலே அவற்றை இங்கே சேர்க்கலாம்; இது யோகரூடியாகையாலே, த்யக்த்யந்தரத்தில் சேர்க்கவொண்ணாது.  சிலர்க்கே நாமதேயமாய் த்யவஸ்த்திதமாயிருக்கிறவற்றை வேறே சிலர்பக்கலிலே கொடுபோய்ச் சேர்க்கும்படியெங்ஙனே? என்னில்; இந்த்ரப்ராணாகாஶஶப்தங்களானவை – அவ்வோரளவில் பர்யவஸியாதே, ஸாக்ஷாத் வாச்யத்திலே சென்று பர்யவஸியாநின்றதிறே.  இப்போது, இந்த்ரன் என்றால், இஶ்ஶப்தம் – இவ்வாக்கனான இந்த்ரனிலன்றியே ஸர்வேஶ்வரன்பக்கலிலே பர்யவஸிக்கிறாப் போலேயும், ப்ராணஶப்தம் – பஞ்சத்ருத்தி ப்ராணங்களிலன்றிக்கே ப்ராணபூதனானவன் பக்கலிலே வர்த்திக்கிறாப்போலேயும், ஆகாஶஶப்தம் – பூதாகாஶமாத்ரத்திலன்றிக்கே அவனளவும் காட்டுகிறாப்போலேயும், ஶம்பு–வாதி ஶப்தங்களும் ஸர்வேஶ்வரன் பக்கலிலே பர்யவஸித்தல்லது இராது.  இனித்தான் ப்ரகாரவாசிஶப்தங்கள் ப்ரகாரிபர்யந்த ஸ்வார்த்தாபிதாநம் பண்ணக் கடவதாகையாலும், ப்ரகாரியானவன் பக்கலிலே பர்யவஸித்தன்றி நில்லாது.  இனி, “ததோயதுத்தரதரம்” என்று கொண்டு சொல்லுகிறவிடத்திற் செய்வதென்? என்னில், கீழே ஸர்வேஶ்வரனைப் புருஷஶப்தவாச்யனாகச் சொல்லி, இனி ‘உத்தரதரம்’ என்னும்போது புருஷோத்தமனென்றதாமத்தனை.  அதுக்கு அடியேன்? என்னில் “யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித்” என்று ஓதிவைத்து, ‘அதுக்குமேலே ஒன்றுண்டுகாண்’ என்னும்போது, அஜ்ஞனாய்ச் சொல்லுமத்தனை; முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை.  “தஸ்மிந் யதந்தஸ்ததுபாஸிதத்யம்” என்கிறது – வேறொன்று உபாஸ்யமென்கிறதல்ல; அவன்தன்னோபாதி அவன் குணங்களும் உபாஸ்யமென்றது.  இனித்தான், ஜகத்காரணவஸ்துவாய்க்கொண்டு உபாஸ்யமாவது என்றுமொக்க உண்டாகவேணுமிறே; அதில் ஸம்ஹாரத்தில் “ஏகோஹவைநாராயணஆஸீத்” என்று நாராயணஶப்தவாச்ய னொருவனுமே உளனாகச் சொல்லி, “நப்ரஹ்மா நேஶாந:” என்று – அவர்களை இல்லையாகச் சொல்லிற்றிறே.  இனி, அல்லாதாரில் அவர்களுக்கு ஓர் உத்கர்ஷமுண்டோ? என்று ஶங்கியாமைக்கு “நேமே த்யாவா ப்ருதிவீ நநக்ஷத்ராணி” என்று அவற்றோடொக்க இவர்களையும் ஸமாநாதிகரித்துவிடுகிறது.  ஸ்ருஷ்டியிலும், “நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப்பண்ணி” (7.5.4) என்று ஒருநீராக ஸமாநாதிகரித்திறே கிடக்கிறது.

ஆக, இப்படிகளாலே இதரதேவதைகள் பக்கலுண்டான பரத்வஶங்கையையறுத்து, ஸர்வஸ்மாத்பரனாய் ஸர்வஸ்ரஷ்டாவாய் ஸமஸ்தகல்யாணகுணாத்மகனாய் ஸர்வரக்ஷகனாய் ஸர்வாந்தர்யாமியாய் நாராயணஶப்தவாச்யனான ஸர்வேஶ்வரன், தன்பெருமைகளெல்லாவற்றோடுங் கூடக் கண்ணுக்குவிஷயமாம்படி திருநகரியிலே வந்து ஸந்நிஹிதனானான்; அவனை ஆஶ்ரயித்து எல்லாரும் க்ருதார்த்தராய்ப் போங்கோள் என்று அருளிச்செய்கிறார்.

முதல் பாட்டு

ஒன்றுந்தேவுமுலகுயிரும்மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன்தன்னொடு தேவருலகோடுயிர்படைத்தான்
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள்
நின்றவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்நாடுதிரே.

: முதற்பாட்டில், காரணவாச்யப்ரக்ரியையாலே ஸமஸ்தகாரணபூதனான ஸர்வேஶ்வரன் ஸந்நிஹிதனாயிருக்க, வேறு எந்த தேவதையைத் தேடுகிறிகோள்? என்கிறார்.

ஒன்றும் – (*தம: ஏகீ ப4வதி” என்கிறபடியே ஸ்வரூபத்திலே) ஒன்றும்படி லபிப்பதான, தேவும் – தேவஜாதியும், உலகும் – (அவர்கள் வாஸஸ்த்தாநமான) லோகமும், உயிரும் – (மநுஷ்யாதி) ப்ராணிவர்க்கமும், மற்றும் – (ஸமஷ்டிரூப மஹதாதி) ஸகலபதார்த்தங்களும்,  (*நேமேத்3யாவா ப்ருதி2வீ நக்ஷத்ராணி*என்கிறபடியே நாமரூபவிப4ாக3ரஹிதங்களாய்க் கொண்டு), யாதும் – ஸகல பதார்த்தங்களும், இல்லா அன்று – ஸம்ஹ்ருத்மான அன்று, (இவற்றினுடைய ஸ்ருஷ்டியோக்யதாநுஸந்தாநத்தாலே தயமாநமநாவாய்க் கொண்டு), நான்முகன் தன்னொடு – ஸமஷ்டிபுருஷனான ப்ரஹ்மாவோடே கூட, தேவர் – தேவதாவர்க்கம், உலகு – லோகம், உயிர் – ப்ராணிஜாதங்கள், (இவற்றை), படைத்தான் – (ஸ்வாஶ்ரயணார்த்தமாக) ஸ்ருஷ்டித்தவனாய், குன்றம்போல் – மலைகள் போலே, மணி – மாணிக்கமயமான, மாடம் – மாடங்கள், நீடு – உயர்ந்திருக்கிற, திருக்குருகூரதனுள் – திருநகரியிலே, நின்ற – (ஆஶ்ரயிப்பார்க்கு ஸுலபனாய் வந்து) நிற்கிற, ஆதி – ஸமஸ்தகாரணபூதனான, பிரான் – மஹோபகாரகன், நிற்க – ஸந்நிஹிதனாயிருக்க, மற்றை – ஸ்ருஷ்டிஸம்ஹாரங்களுக்குக் கர்மீபவிக்கிற, தெய்வம் – தேவதைகளை, நாடுதிரே – (வேறே ஆஶ்ரயணீயமாகத்) தேடுகிறிகோளே.

ஈடு:- முதற்பாட்டில், (ஏகோஹவைநாராயண ஆஸீத்) என்கிற காரணவாக்யப்ரக்ரியையை அநுஸந்தித்துக்கொண்டு; ஸர்வஸ்ரஷ்டாவான ஸர்வேஶ்வரன், மாத்ருஸந்நிதியொழிய ப்ரஜை வளராதாப்போலே தன் ஸந்நிதியொழிய இவை ஜீவிக்கமாட்டாது என்று பார்த்துத் திருநகரியிலே ஸர்வஸுலபனாய் நிற்க, ‘வேறே ஆஶ்ரயணீயதத்த்வமுண்டு என்று தேடித் திரிகிறிகோளே’ என்று க்ஷேபிக்கிறார்.

(ஒன்றுந்தேவும் இத்யாதி) – தேவஜாதியும் அவர்களுக்கிருப்பிடமான லோகங்களும், மநுஷ்யாதிகளான ஆத்மாக்களும், அண்டகாரணமான மஹதாதிகளும், இவையொன்று மில்லாதவன்று என்றுகொண்டு, ‘ஒன்றும்’ என்கிற இத்தை இங்கே சேர்க்கவுமாம்.  அங்ஙனன்றிக்கே, கார்யத்துக்குக் காரணத்திலே லயமாகச் சொல்லுகையாலே, காரணபூதனான தன்பக்கலிலே சென்று ஒன்றுகிற – தேவும் உலகும் உயிரும் மற்றும்யாதுமில்லாவன்று என்னவுமாம்.  “ஸதே3வ” என்னக்கடவதிறே.  (நான்முகன் இத்யாதி) – அல்லாதார் ஒருவனை ரக்ஷிக்குமிடத்தில் ஒருகைம்முதல்கண்டு, ‘இது நமக்கு ஒருநாளாகிலும் உதவும்’ என்றாயிற்று ரக்ஷிப்பது; வெறுமையே பச்சையாக ரக்ஷிப்பான் ஸர்வேஶ்வரனாயிற்று.  (நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர்படைத்தான்) – சதுர்முகனோடேகூட தேவஜாதியையும், அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும் சேதநவர்க்கத்தையும் ஸ்ருஷ்டித்தான்.  ஸர்வேஶ்வரன் சதுர்முகனை ஸ்ருஷ்டித்தான்; சதுர்முகன் பஞ்சமுகனை ஸ்ருஷ்டித்தான்; பஞ்சமுகன் ஷண்முகனை ஸ்ருஷ்டித்தான்; ஆக இதுதான் பஹுமுகமாயிற்றுக்காணும்.  நாட்டார் ருத்ரனுக்கு உத்கர்ஷஞ்சொல்லி ப்ரமியாநிற்கவும், இவர் அவன் பக்க லொன்றுங் காணாமையாலே, திருநாபிகமலத்திலே அத்யவதாநேந பிறக்கையால் வந்த ஏற்றத்தை உடையனாகையாலே ப்ரஹ்மாவை உபாதாநம்பண்ணி,  ருத்ரனை தே3வஸாமாந்யத்திலே கூட்டிப்போருகிறார். ஸம்ஹாரத்தில் மஹதாதிகளளவும் சொன்னார்; ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மாவைத் தொடங்கிச் சொன்னார்; இதுக்குக் கருத்து – மஹதாதிகளில் பரத்வஶங்கை பண்ணுவாரில்லை; ப்ரஹ்மாதிகள்பக்கலிலே பரத்வஶங்கை பண்ணுவர்கள் பாமரராயிருப்பார்; அதுக்காக அவ்விடமே பிடித்துக் கழிக்கிறார்.  சதுர்த்தஶபுவநஸ்ரஷ்டாவோடு, அவனாலே ஸ்ருஷ்டராய் நித்யஸ்ருஷ்டிக்குக் கடவரான தஶப்ரஜாபதிகளோடு, அவர்களுக்கு பே4ாக3ஸ்தாநமான லோகங்களோடு அவர்களுக்குக் குடிமக்களான மநுஷ்யாதிகளோடு வாசியறப்படைத்தான்; பே4ாக3மோக்ஷங்களை விளைத்துக்கொள்கைக்குக் கரணகலேபரங்களைக் கொடுத்தான்.  (குன்றம் இத்யாதி) – இப்படி ஸ்ருஷ்டித்தவன்தான் அஸந்நிஹிதனாய்நிற்கையன்றிக்கே மலைகளைக்கொடுவந்து சேரவைத்தாற்போலேயிருப்பதாய் மணிமயமான மாடங்களினுடைய ஓக்கத்தையுடைத்தான திருநகரியிலே நின்ற.  “ஆஶயாயதிவாராம: புநஶ்ஶப்தாபயேதிதி” என்னுமாபோலே, நாம் கொடுத்தகரணங்களைக் கொண்டு “ந நமேயம்” என்னாதே வணங்குவர்களோ? அன்றிக்கே, நாம் வளைந்து கூட்டிக்கொள்ளப்புக்கால் விலக்காதொழிவர்களோ? என்று அவஸரப்ரதீக்ஷனாய் நின்றபடி.  அங்கு ஶேஷியைப்பெறுகைக்கு ஶேஷபூதன் நின்ற நிலை; இங்கு ஶேஷபூதரைப் பெறுகைக்கு ஶேஷி நின்ற நிலையிறே.  (ஆதிப்பிரான்நிற்க) – இப்படி உங்கள்பக்கல் ஆசையாலே திருநகரியிலே வந்து நித்யவாஸம்பண்ணுகிற இவனைவிட்டு.  (மற்றைத்தெய்வம்நாடுதிரே) – தேடித்திரியுமதொழிய, ஆஶ்ரயணீயரைக் கிடையாது.  “வாஸுதேவம்பரித்யஜ்ய யோந்யம் தேவமுபாஸதே ஐ த்ருஷிதோ ஜாஹ்நவீதீரே கூபம் கநதி துர்மதி:” என்கிறபடியே த்ருஷிதனானவன், கங்கைபெருகி யோடாநிற்க அதிலே அள்ளிக்குடித்துத் தன்விடாய் தீரமாட்டாதே, அதன்கரையிலே குந்தாலிகொண்டு கிணறுகல்லித் தன்விடாய்க்கு உதவ நாக்குநனைக்க இருக்குமாபோலே; ப்ராப்தனுமாய் ஸுலபனுமாய் ஸ்வாராதனுமாய் ஸு—லனுமான இவனைவிட்டு, அப்ராப்தராய் துர்லபராய் துராராதராய் துஶ்—லராய், சீலித்து ஆராதித்தாலும் ‘சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்குமா’ (திருமாலை 10) போலே பலிப்பது மொன்றின்றிக்கேயிருக்கிற ‘திருவில்லாத்தேவரை’த் (நான்.திரு. 53) தேடி ஆஶ்ரயிக்கத் திரிவிகோளேயென்று க்ஷேபிக்கிறார்.

இரண்டாம் பாட்டு

நாடிநீர்வணங்குந்தெய்வமும் உம்மையும்முன்படைத்தான்
வீடில்சீர்ப்புகழாதிப்பிரானவன் மேவியுறைகோயில்
மாடமாளிகைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப்
பாடியாடிப்பரவிச்சென்மின்கள் பல்லுலகீர்பரந்தே.

:- அநந்தரம், அந்ததேவர்களோடு உங்களோடு வாசியற ஸ்ருஷ்டிக்கைக்கடியான நித்யமங்களகுணாஶ்ரயபூதன் வர்த்திக்கிற திருநகரியை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

நீர் – (ரஜஸ்தம:ப்ரசுரரான) நீங்கள், நாடி – (உங்கள்குணாநுகுணமாக) நிரூபித்து, வணங்கும் – ஆஶ்ரயிக்கும், தெய்வமும் – தேவதைகளையும், உம்மையும் – (ஆஶ்ரயணோந்முகரான) உங்களையும், முன் – ஸ்ருஷ்டிகாலத்திலே, படைத்தான் – உத்பாதித்தவனாய், வீடில்சீர் – (அதுக்கடியான) ஜ்ஞாநஶக்த்யாதி நித்யகல்யாணகுணங்களையுடையனாக, புகழ் – (வேதாந்தப்ரஸித்தமான) புகழையுடைய, ஆதிப்பிரான் அவன் – ப்ரதமோபகாரகனானவன், மேவி – (ஆஶ்ரிதாபிமுக்யார்த்தமாகப்) பொருந்தி, உறை – வர்த்திக்கிற, கோயில் – ஸ்த்தாநமாய், மாடம் – மாடங்களும், மாளிகை – மாளிகைகளும், சூழ்ந்து – சூழ்ந்து, அழகாய – அத்தாலே அழகையுடைத்தான, திருக்குருகூரதனை – திருநகரிதன்னை, பல் உலகீர் – (குணருசிபேதங்களால்) பலவகைப்பட்ட லோகங்களிலுள்ளீர்! (ப்ரீதிப்ரேரிதராய்), பாடி – பாடி, ஆடி – (ஹர்ஷத்தாலே) விக்ருதராய் ஆடி, பரவி – (பஹுமுகமாக) ஸ்துதித்து, பரந்து சென்மின்கள் – (உகப்பாலே) ஸர்வப்ரதேசத்திலும் த்யாபரியுங்கோள்.

ஈடு:- இரண்டாம்பாட்டு.  ஆஶ்ரயிக்கிற உங்களோடு, ஆஶ்ரயணீயரான அவர்களோடு வாசியற எல்லாரையும் உண்டாக்கினவன் நின்றருளுகையாலே ப்ராப்யமான திருநகரியை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

(நாடிநீர்வணங்கும்தெய்வமும்) – வசநாபாஸங்களாலும்; யுக்த்யாபாஸங்களாலும் ஸ்வத: உத்கர்ஷமில்லாமையாலே அவை தான் இறாயாநிற்கச்செய்தே, நீங்கள் பொரிபுறந்தடவி வருந்திச்சேமம் சாத்திவைத்து ஆஶ்ரயிக்கிற தேவதைகளையும்.  (நாடி) – கள்ளரைத் தேடிப் பிடிக்குமாபோலே, தேடிப்பிடிக்கவேண்டியிருக்கிறபடி.  ஆடுதிருடின கள்ளரிறே இவர்கள்தான்; ‘அணங்குக்கு அருமருந் தென்று’ (4.6.7) அங்கே ஆடுகட்டினவர்களாகையாலே தேடிப்பிடிக்கவேணுமே.  ‘கள்ளரச்சம் காடுகொள்ளாது’ என்று, தன்னை ஆஶ்ரயிக்க வருகிறவர்களையும் தன்னைக்கட்ட வந்தார்களாகக் கொண்டுபோகிறபடி.  (நீர்) – ராஜஸராயும் தாமஸராயுமுள்ள நீர்.  நீரென்று – அவர்களோடு தமக்கு ஒட்டறச் சொல்லுகிறார்.  உங்கள் ப்ரதிபத்தியொழிய அவற்றின்பக்கல் ஓருயிரில்லை (நீர்வணங்கும் தெய்வமும் உம்மையும்) – நீங்கள் ஆஶ்ரயிக்கிற ராஜஸராயும் தாமஸராயுமுள்ள தேவதைகளையும் உங்களையும் படைக்கிறவிடத்தில்.  (முன்படைத்தான்) – ஸ்ருஷ்டிக்கிறவிடத்தில் முற்பட அவர்களை ஸ்ருஷ்டித்துப் பின்னை உங்களை ஸ்ருஷ்டித்தான்.  “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்”  என்கிறபடியே ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்துப் பின்பிறே இவ்வருகுள்ளாரை ஸ்ருஷ்டித்தது.  (நீர்வணங்கும் தெய்வமும் உம்மையும் முன்படைத்தான்) – அவன் ஸ்ருஷ்டித்திலனாகில் நீங்கள் இதர தேவதைகளை ஆஶ்ரயிக்கும்படி எங்ஙனே? (படைத்தான்) – ‘அவன் படைத்திலனாகில்’ எங்ஙனே உண்ணவிருந்திகோள்? உங்களுக்கு ஆஶ்ரயணீயத்வ முண்டாமன்றிறே, அவர்கள் ஆஶ்ரயணீயராவது.  (வீடில்சிர் இத்யாதி) – நீங்கள்தேடிஆஶ்ரயிக்கிற தேவதைகளுடைய ஐஶ்வர்யம்போலே ஒருவனுடைய புத்த்யதீநமாய் அவன் நினைத்திலனாகில் இல்லையாய், அதுதனக்கு அடி கர்மமாய், அக்கர்மக்ஷயம் பிறந்தவாறே நசிக்கையன்றிக்கே ஸ்வதஸ்ஸித்தமான ஸம்பத்தையுடையவன்.  (வீடில்சீர்) – நீங்கள் ஆஶ்ரயிக்கிறவர்களுடைய ஸம்பத்துப்போலே ஸாவதியல்ல; கர்மமடியாய் அதிலே ஒன்று குறையக் குறைதல், பல ப்ரதனானவனுடைய அநுக்ரஹம் குறையக் குறைதல் செய்யுமதில்லையிறே.  “பலமத:” இறே.  (வீடில்சீர்) – நித்யஸித்த கல்யாணகுணங்களை உடையவனென்னுதல். “தஸ்மிந் யதந்தஸ் ததுபாஸிதத்யம்” என்கிறபடியே, அவன் தன்னோபாதி அவன்குணங்களும் உபாஸ்யமென்னுமிடம் சொல்லுகிறது.  (புகழ்) – எல்லாரையும் ரக்ஷித்து, அந்தரக்ஷணத்தால் வந்த புகழையுடையவன்.  ரக்ஷணத்தால் புகழ்படைத்தவனன்றோ ஆஶ்ரயணீயனாவான்? “யஶஸஶ்சைகபாஜநம்*.  (ஆதிப்பிரான்) – ரக்ஷித்துப் புகழைப்படையாதே பழிபடைத்தாலும் விடவொண்ணாத ப்ராப்தியைச் சொல்லுகிறது.  (பிரான்) – கேவலம் ப்ராப்தியேயல்ல, உபகாரகன்.  உபகாரகனுமாய் ப்ராப்தனுமாய் யஶஸ்வியுமாய்; ஐஶ்வர்யம், நித்யஸித்தமான கல்யாணகுணங்களென்ன, இவற்றையுடையவனை யொழிய, இவையில்லாதாரை ஆஶ்ரயிக்க ப்ராப்தியில்லை.  காரணவஸ்துவிறே உபாஸ்யமாவது; “காரணந்து த்யேய:” என்னாநின்றதிறே.  (அவன்மேவியுறைகோயில்) அவன் பரமபதத்தில் உள்வெதுப்போடேபோலே காணும் இருப்பது.  ஸம்ஸாரிகள் படுகிற க்லேசத்தை அநுஸந்தித்து  ‘இவை என் படுகிறனவோ?’ என்கிற திருவுள்ளத்தில் வெறுப்போடே யாயிற்று அங்கு இருப்பது.  “நோபஜநம் ஸ்மரந்” என்றுகொண்டு – இங்குத்தை து3:க2த்தை நினையாதொழிய வேண்டுவது, பண்டு து:கியாயிருந்து ஸம்ஸாரத்தில் நின்றும் போனவனுக்கிறே.  இங்குத்தை து3:க2த்தை நினைக்குமாகில் அநுபவிக்கிற ஸுகத்துக்குக் கண்ணழிவாகாதோ? என்னும் கண்ணழிவில்லையிறே அவனுக்கு.  ‘பரமபதத்திலும் ஸம்ஸாரிகள் படுகிற க்லேசத்தை அநுஸந்தித்துத் திருவுள்ளத்தில் வெறுப்போடே யாயிற்று எழுந்தருளியிருப்பது’ என்று பட்டர் அருளிச்செய்ய ‘ஆச்சானும் பிள்ளையாழ்வானும் இத்தைக்கேட்டு பரமபதத்திலே ஆநந்தநிர்ப்பரனாயிருக்கிற இருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு த்யஸநத்தோடேயிருந்தானென்கை உசிதமோ? என்றார்கள்’ என்று ‘பண்டிதர்’ என்கிறவர் வந்து விண்ணப்பம்செய்ய, “த்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்4ருஶம்ப4வதி து3:கி2த:” என்றது குணப்ரகரணத்திலேயோ? து:கப்ரகரணத்திலேயோ? என்று கேட்க மாட்டிற்றிலீரோ? இது குணமாகில், ‘குணம்’ என்று பேர்பெற்றவற்றில் அங்கு இல்லாத தொன்றுண்டோ? என்று அருளிச்செய்தார்.  “ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகோஸௌ” என்னக் கடவதிறே.  தன்னிச்சையொழிய கர்மநிபந்தநமாகவருமவை இல்லையென்னுமத்தனை போக்கி, அநுக்ரஹகார்யமாய் வருமவை இல்லையென்னில், முதலிலே சேதநனன்றிக்கே யொழியுமிறே.  “ஸ ஏகாகீ ந ரமேத” என்றது நித்யவிபூதியும் குணங்களு முண்டாயிருக்கச் செய்தேயிறே.  (ஆதிப்பிரானவன்மேவியுறைகோயில்) – பரமபதத்தில் தன்னில் குறைந்தாரில்லாமையாலே அவ்விடத்தை விட்டு, நல்ல படுக்கையையும் போகத்துக்கு ஏகாந்தமானவற்றையும் காற்கடைக்கொண்டு, ப்ரஜையினுடைய தொட்டிற்காற்கடையிலே கிடக்கும் தாயைப்போலே, ரக்ஷகாபேக்ஷரான ஸம்ஸாரிகள் இருக்கிற இட மாகையாலே விரும்பி வர்த்திக்குமிடம் இவ்விடமாயிற்று.  (மாடமாளிகை இத்யாதி) – உங்களுக்குத்தான் நல்லதேசம் தேட்டமே; ‘முக்தப்ராப்யதேஶம்’ என்று தோற்றுகிறதில்லையோ? மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து தர்ஶநீயமாயிருக்கும் திருக்குருகூர்.  (அதனைப்பாடியாடி) – “அதனுள்நின்ற ஆதிப்பிரான்” (4.10.1) என்றவிடம் மிகையென்கிறார்.  “விஷ்ணோராயதநே வஸேத்” “தேஶோயம் ஸர்வகாமதுக்” என்கிறபடியே இதுதானே ப்ராப்யம்.  (பாடியாடி இத்யாதி) – ப்ரீதிப்ரேரிதராய்க் கொண்டு பாடி, உடம்பு இருந்தவிடத்திலிராமை ஆடி, அக்ரமமாகக் கூப்பிட்டுக்கொண்டு, அத்தேசமென்றால் தம் திருவுள்ளம் இருக்குமாபோலே இருக்குமென்றிருக்கிறார்காணும் ஸர்வர்க்கும்.  (பல்லுலகீர்) – ஒருவன் ஸமித்பாணியாய் த3ாந்தனாய் வர, அவனுக்கு ஹிதோபதேசம் பண்ணுகிறாரன்றே; “இவையென்னவுலகியற்கை” (4.9) என்று லோகம் க்லேசப்படுகிற படியைக் கண்டு எல்லார்க்கும் சொல்லுகிறாரிறே.  (பரந்தே) – பெரியதிருநாளுக்கு ஸர்வதோதிக்கமாக வந்தேறுமாபோலே, நாநாதிக்கமாகப் பாடியாடிப் பரவிச்சென்மின்கள்.

மூன்றாம் பாட்டு

பரந்ததெய்வமும்பல்லுலகும்படைத்து அன்றுஉடனேவிழுங்கிக்
கரந்துமிழ்ந்துகடந்திடந்தது கண்டும்தெளியகில்லீர்
சிரங்களாலமரர்வணங்கும் திருக்குருகூரதனுள்
பரன்திறமன்றிப்பல்லுலகீர்! தெய்வம்மற்றில்லைபேசுமினே.

:- அநந்தரம், ‘கார்யரூபஜகத்தினுடைய ரக்ஷணார்த்தவ்யாபாரங்களே பரத்வப்ரதி- பாதகங்கள்’ என்கிறார்.

பரந்த – (ஸ்வவிபூதிநியமநத்தாலே ஈஶ்வரத்வஶங்கைபண்ணும்படி) விஸ்தீர்ணமான, தெய்வமும் – தேவதாவர்க்கத்தையும், பல்உலகும் – (அவர்களுக்கு விபூதியான) பஹுவித லோகங்களையும், படைத்து – ஸ்ருஷ்டித்து, அன்று – (ப்ரளயம்வந்த) அன்று, உடனே – (இக்ரமம்பாராதே) கூட, விழுங்கி – விழுங்கி, கரந்து – (ப்ரளயம் காண ஒண்ணாதபடி) ஒளித்து வைத்து, உமிழ்ந்து – (ப்ரளயாநந்தரம் வெளிநாடுகாண) உமிழ்ந்து, கடந்து – (மஹாபலியபிமாநம் கழியும்படி அளந்துகொண்டு) அநந்யார்ஹமாக்கி, இடந்தது – (அவாந்தரப்ரளயத்திலே வராஹரூபியாய்) இடந்தெடுத்த இது, கண்டும் – (ப்ரமாணமுகத்தாலே விசதமாகக்) கண்டிருக்கச்செய்தேயும், (ரஜஸ்தமோபிபவத்தாலே), தெளியகில்லீர் – நிர்ணயிக்கமாட்டுகிறிலீர்; அமரர் – (நித்யரான ப்ரஹ்மாதி) தேவர்கள், (தங்கள் பதஸித்யர்த்தமாக பஹுமுகமாக), சிரங்களால் – தலைகளாலே, வணங்கும் – வணங்கும், திருக்குருகூரதனுள் – திருநகரிக்குள்ளே நிற்கிற, பரன் – ஸர்வஸ்மாத்பரனுக்கு, திறமன்றி – ப்ரகாரமாயல்லது, மற்று – வேறு ஸ்வதந்த்ரமா யிருப்பதொரு, தெய்வம் – தைவம், இல்லை – இல்லை; பல் – (நாநாமதிபேதங்களாலே) பலவகைப்பட்ட, உலகீர் – லோகத்திலுள்ளீர்!, பேசுமின் – (உண்டாகில் வந்து) சொல்லுங்கோள்.

ஈடு:- மூன்றாம்பாட்டு.  ஜகந்நிகரணாதி திவ்யசேஷ்டிதங்களாலும் இவனே பரன்; இது இசையாதார் என்னோடேவந்து கலந்து பேசிக்காணுங்கோள் என்கிறார்.

(பரந்ததெய்வமும்) – கொள்கொம்பு மூடப்படர்ந்து நியாமகரோடோக்க எடுத்துக்கழிக்கவேண்டும்படி, கைவிஞ்சின தேவஜாதியும்.  (பல்உலகும்) – அவர்கள் பரப்புக்கெல்லாம் போரும்படியான லோகங்களும்.  அவர்கள் நியாமகராகைக்கு அடியாக நியாம்யரான அல்லாத சேதநரையும்.  (படைத்து) – ஸ்ருஷ்டித்து.  இவர் தமக்கு அவர்களோடு அல்லாதாரோடு வாசியற்றிருக்கிறபடி.  (அன்று உடனே விழுங்கி) – ஸ்ருஷ்டிக்கிறபோது க்ரமத்திலே ஸ்ருஷ்டித்தான்; “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்று, ஆபத்து வந்தால் அங்ஙன் க்ரமம்பார்த்திருக்கவொண்ணாதே.  ப்ரளயாபத்திலே ஒருகாலே வயிற்றிலே வைத்து, ப்ரளயம் வந்தாலும் ‘இங்குண்டோ?’ என்று இளைத்துக்காட்டலாம்படி கரந்து, ‘உள்ளேயிருந்து நோபுபடுகிறனவோ?’ என்று வெளிநாடுகாண உமிழ்ந்து, நடுவே மஹாபலிபோல்வார் பருந்திறாஞ்சினாற்போலே பறித்துக்கொள்ள எல்லைநடந்து மீட்டுக்கொண்டு, ப்ரளயத்திலே அழுந்தி அண்டபித்தியிலே சேர்ந்த இத்தை மஹாவராஹமாய்ப் புக்கு ஒட்டுவிடுவித்து எடுத்து இப்படி செய்த இவற்றை.  (கண்டும்) – ப்ரத்யக்ஷத்திலும் விசதமாயிருக்கிறதுகாணும் இவர்க்கு ஶாஸ்த்ரம்.  இவ்வதிமாநுஷசேஷ்டிதங்களைக்கொண்டே ‘அவன் ஆஶ்ரயணீயன்’ என்று அறியலாயிருக்க, அறியமாட்டுகிறிலிகோள்.  (தெளியகில்லீர்) – இவர்கள் தெளிகையும் தெளியாமையும் ஒழிய, அர்த்தஸ்த்திதியில் மாறாட்ட மற்றிருக்கிறபடி. அவனை அநீஶ்வரனாக்குதல், இவர்களை ஈஶ்வரர்களாக்குதல் செய்யவொண்ணாதிறே, உங்கள் தெளிவும் கலக்கமுமொழிய.  (சிரங்கள் இத்யாதி) – ‘ஸர்வஸ்ரஷ்டாவுமல்லன், ஆபத்ஸகனுமல்லன்’ என்று இருந்திகோளேயாகிலும், நீங்கள் ஆஶ்ரயிக்கிற தேவதைகள் செய்கிறது முன்னம் உங்களுக்குக் கண்டால் தெளியலாமே; அவர்கள் ‘தலைபடைத்த ப்ரயோஜநம் பெற்றோம்’ என்று வணங்குகிறபடியைக் கண்டாகிலும் நீங்கள் ஆஶ்ரயிக்கப்பாருங்கோள்.  “பாதேந கமலாபேந ப்ரஹ்மருத்ரார்ச்சிதேந ச” “பின்னிட்டசடையானு பிரமனு மிந்திரனும் துன்னிட்டுப்புகலரிய*(பெரு.திரு.33), “நாத்தழும்பநான்முகனுமீசனுமாய் முறையாலேத்த” (திருமொழி 1.7.8).  (திருக்குருகூரதனுள்பரன்) – மநுஷ்யத்வே பரத்வத்துக்கும் அவ்வருகே ஒரு பரத்வமிறே இது.  இவ்வருகே போரப்போர உத்கர்ஷம் மிகுமத்தனை.  குணத்தாலேயிறே வஸ்துவுக்கு உத்கர்ஷம்; குணாதிக்யமுள்ளது இங்கேயிறே.  (அதனுள் பரன்) – “அநஶ்நந்நந்ய:” என்று சேதநர் ப்ரக்ருதியோடே கலசக்கலச ஒளிமழுங்கி வாராநிற்கச்செய்தே, அவனுக்கு நியாமகத்வத்தால் வந்த புகர் அறவிஞ்சிவருமாபோலே; ஸம்ஸாரிகள் நடுவே போரப்போரவாயிற்று பரத்வம் ப்ரகாசிப்பது.  (திறமன்றி) – அவனுக்கு ப்ரகாரமாயல்லது.  திறம் – ப்ரகாரம்.  (தெய்வம்மற்றில்லை) – தேவதைகளுடைய ஸ்வரூபநிஷேதம் பண்ணுகிறாரன்றிறே, ‘அவனுக்கு விபூதி வேணும்’ என்றிருக்கிறவராகையாலே; அவர்களுடைய ஸ்வாதந்த்ர்யநிஷேதம் பண்ணுகிறார்.  ஸ்வதந்த்ரமாய்த் தனக்கு உரித்தாயிருப்பதொரு தேவதையில்லை.  அவனுக்கு ப்ரகாரபுத்தி பண்ணி ஆஶ்ரயித்திகோளாகில் அவனுடைய ஆஶ்ரயணத்திலே புகும்; ஸ்வதந்த்ரபுத்திபண்ணி ஆஶ்ரயித்திகோளாகில் ஸ்வதந்த்ரமா யிருப்ப தொன்றில்லை; “நேஹநாநாஸ்தி*, “யேயஜந்தி” இத்யாதி.  (பேசுமினே) – நான் ‘அவனுக்கு ப்ரகாரமாயல்லது ஸ்வதந்த்ரமாயிருப்பதொரு தேவதையில்லை’ என்றேன்; ‘இப்படி அநந்யாதீநமாயிருக்கிற நியாமகத்வத்தை யுடையனாயிருக்கிற இவனைத் தனக்கு ப்ரகாரமாக வுடையதொரு தைவ முண்டு’ என்று சொல்ல வல்லார் உண்டாகில் வாய்படைத்தார் என்முன்னே நின்று சொல்லிக்காணுங்கோள் என்கிறார்.

நான்காம்பாட்டு

பேசநின்றசிவனுக்கும் பிரமன்தனக்கும்பிறர்க்கும்
நாயகனவனே கபாலநன்மோக்கத்துக்கண்டுகொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்தழகாய திருக்குருகூரதனுள்
ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவது? இலிங்கியர்க்கே.

:- அநந்தரம் ஈஶ்வரதயா ப்ரஸித்தமான தேவதாந்தரங்களுக்கும் ஈஶ்வரனாக நிர்த்தோஷப்ரமாணோபபத்திஸித்தனான ஸர்வேஶ்வரன் விஷயத்தில் அநீஶ்வரத்வம் சொல்லுகிற ஆநுமாநிகேஶ்வரவாதிகளான நையாயிகாதிகளுக்கு என்ன ப்ரயோஜநமுண்டு? என்கிறார்.

பேசநின்ற – (ப்ரமாணாபாஸங்களாலும் ஸமாக்யைகளாலும் ஈஶ்வரத்வஶங்கை பண்ணிச்) சொல்லப்பட்ட, சிவனுக்கும் – ருத்ரனுக்கும், பிரமன்தனக்கும் – (அவனுக்கும் உத்பாதகனாய் ஸ்வஸ்ருஜ்யமான விஸ்தீர்ணவிபூதியுக்தனான) ப்ரஹ்மாதனக்கும், பிறர்க்கும் – (இவர்களுக்கும் ஏவிற்றுச்செய்யும்) அல்லாத தேவாதிகளுக்கும், நாயகன் – (தத்ஸ்வரூபவிபூதி நிர்வாஹகனாய்க் கொண்டு) நாயகனானவன், அவனே – (நிர்த்தோஷ ப்ரமாணவேதாந்த ஸித்தனான) ஸர்வேஶ்வரனே; (இவ்வர்த்தத்தை), கபாலம் – (ப்ரஹ்மாவினுடைய சிரஸ்ஸையறுத்துப் பாதகியான ருத்ரன்கையில் பிக்ஷார்த்தமான) அந்த –ஸிர:கபாலத்தை, நல் – (ஸஹஸ்ரதாவாக ஸ்புடிதமாம்படி) நன்றாக, மோக்கத்து – போக்கின (அபதாநத்தை யெழுதுகிற பஞ்சமவேதமான) மஹாபாரதத்திலே, கண்டுகொண்மின்-அபரோக்ஷித்துக் கண்டு கொள்ளுங்கோள்.  (இப்படியிருக்க), தேசம் – தேஜோமயமாய், (பேரொளியையுடைத்தாய்ப் பெருத்த), மா – அத்யுந்நதமான, மதிள் – மதிளாலே, சூழ்ந்து – சூழப்பட்டு, அழகாய – அத்தாலே அழகையுடைத்தான, திருக்குருகூரதனுள் – திருநகரிக்குள்ளே, ஈசன்பால் – (அந்தக் கபாலவிமோசகத்வம் தோற்ற எழுந்தருளியிருக்கிற) நிருபாதிக ஸர்வேஶ்வரன் விஷயத்திலே, ஓர் அவம் – அநீஶ்வரத்வாபக்ருஷ்டோக்திகளை, பறைதல் – பண்ணுகிற இத்தால்.  இலிங்கியர்க்கு – லிங்கப்ரமாணவாதிகளான ஆநுமாநிகர்க்கு, என்னாவது – என்ன லாபமுண்டு? ப்ரபல ப்ரமாணப3ாதி4தமாகையாலே அநுமாநத்தால் ஸ்வாபிமதேஶ்வரஸித்தியில்லையென்று கருத்து.

ஈடு:- நான்காம்பாட்டு.  த்யோமாதீத நையாயிக வைஶேஷிகாதிகள் வந்து ப்ரத்யவஸ்த்திதராய், “ஜகத்து ஸாவயவத்வாத் கார்யரூபமா யிராநின்றது; ஆகையாலே, இதுக்கு ஒருகர்த்தாவேணும்; இஜ்ஜகத்துத்தான் விசித்ரஸந்நிவேசத்தை யுடைத்தாயிருக்கையாலே இதுக்குத் தக்க “உபாதாநோபகரண ஸம்ப்ரதாநப்ரயோஜநாபிஜ்ஞ: கர்த்தா” என்கிறபடியே – உபாதாநமும் உபகரணமும் ஸம்ப்ரதாநமும் ப்ரயோஜநமும் அறிகைக்கீடான விசித்ரமான ஜ்ஞாநஶக்த்யாதிகளை யுடையனாயிருப்பா னொருவன் கர்த்தாவாகவேணும்” என்று இங்ஙனே அநுமாநத்தாலே ஒருவனைக் கல்பித்து, வேதத்தை ஆப்தவசநமாக்கி இதுக்கு ஸஹகரிக்கிறதாகக் கொண்டு – அநுமாநப்ராதாந்யத்தாலே ஈஶ்வரனை ஸாதித்து, ‘அவனாகிறான், ஈஶன், ஈஶாநன்’ என்று இங்ஙனே வேதத்திலே ப்ரஸித்தவந்நிர்த்தே- ஶமுண்டாயிராநின்றது; இந்த ஸமாக்யையாலே அவற்றால் சொல்லப்படுகிற அவனே ஈஶ்வரனாகிறான்’ என்று, அநுமாநத்தாலும் ஸமாக்யையாலுமாக பகவத்த்யதிரிக்தனொருவனுக்கு உத்கர்ஷத்தை ஸாதித்தார்கள்; அவர்களைப்பார்த்து: – ‘நீங்கள் சொல்லுகிற அநுமாநம் ஶ்ருதியின் முன்பு நேர்நில்லாது; லிங்கத்தின்முன்பு ஸமாக்யை நேர்நில்லாது’ என்று ஶ்ருதி லிங்கங்களாலே அநுமாநத்தையும் ஸமாக்யையையும் தள்ளி பகவத்பரத்வத்தை ஸாதிக்கிறார்.  அதுசெய்கிறவழிதான் என்? என்னில் – “யத்வேதாதௌ” – வேதாதியிலும் வேதாந்தத்திலும் சொல்லப்பட்ட ஸ்வரமாகிறது – ப்ரணவம்; லோகத்தில் வாசகஜாதமடைய அதிலே லீநமாயிருக்கிறது; அதுதான் ஸ்வப்ரக்ருதியான அகாரத்திலே லீநமாயிருக்கிறது; அதுக்கு வாச்யதயா பரனாயிருக்கிறான் யாவனொருவன், அவன் மஹேஶ்வரன் என்கிற ஶ்ருதியாலும்; ‘ஈஶன், ஈஶாநன்’ என்கிற ஸமாக்யைகளால் தோற்றுகிறவர்களும் தலையறுப்புண்பாரும் தலையறுத்துப் பாதகியாய் நிற்பாருமாயிராநின்றார்கள்; இவன் அவர்களுக்கு து3:க2நிவர்த்தகனாயிராநின்றான்; ஆனால் அவர்களை ‘பரன்’ என்னவோ? இவனை ‘பரன்’ என்னவோ? என்று, ஶ்ருதியாலும் லிங்கத்தாலுமாக அநுமாநத்தையும் ஸமாக்யையையும் தள்ளி பகவத் பரத்வத்தை ஸ்தாபிக்கிறார்.  ஆக, இப்படிகளாலே ஸகலோபநிஷத்ப்ரஸித்தனான நாராயணனே பரதத்த்வம் என்று நிஷ்கர்ஷித்து காலாத்யயாபதிஷ்டமாகிற தூஷணத்தாலே அவர்களை நிராகரிக்கிறார்.

(பேசநின்ற சிவனுக்கும்) – ‘நீர் ஶ்ருதி சொன்னீராகில் நாங்களும் ஒரு ஶ்ருதி சொல்லுகிறோம்’ என்று; ‘அநந்யபரமான நாராயணாநுவாகஸித்தன்’ என்று நான்சொன்னால் அதுக்கு ப்ரதியாக, புறம்பே விநியுக்தமாய் கர்மவிதிசேஷமாயிருப்பன சில அர்த்தவாதங்களாலும் தாமஸபுராணங்களாலும் சொல்லலாம்படி முட்டுப்பொறுத்து நின்ற ருத்ரனுக்கும்; நீங்கள் ‘பரன்’ என்று பேசுகிற ருத்ரனுக்கும் என்னவுமாம். அர்த்தம் முட்டுப்பொறாது; பேசுகைக்கு ஆலம்பநமாத்ரமே உள்ளதென்கை.  அல்லாதாரை ‘ஈஶ்வரர்கள்’ என்னாதே இவர்களைச் சொல்லலாம்படியிருக்கிறது ஓரேற்ற முண்டிறே.  (பிரமன் தனக்கும்) – அவனுக்கும் ஜநகனான ப்ரஹ்மாவுக்கும்.  “ப்ரஹ்மண:புத்ராய ஜ்யேஷ்டாய ஶ்ரேஷ்டாய” என்றும், “ப்ரஹ்மணஶ்சாபி ஸம்பூதஶ் ஸிவ:” என்றும் சொல்லாநின்றதிறே.  ருத்ரனுடைய ஈஶ்வரத்வம் ப4கவத்ப்ரஸாதாயத்த்தம், “மஹாதேவஸ்ஸர்வமேதே மஹாத்மா ஹுத்வாத்மாநம் தேவதேவோ பபூவ*.  (பிறர்க்கும்) – இவர்தந்திருவுள்ளத்தால் அவர்களோடு இவர்களோடு வாசியற்றிருக்கிறபடி.  அவர்கள் தாங்கள் தங்கள் நினைவாலும் அப்படியேயிறே, “தவாந்தராத்மா மமசயேசாந்யே தேஹி ஸம்ஜ்ஞிதா:” என்றானிறே ருத்ரனைநோக்கி ப்ரஹ்மா. (பேசநின்ற சிவனுக்கும் பிரமன்தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே) – இக்கார்யத்துக்கு அநுரூபமான காரணத்தைக் கல்பிக்கிலும் அவனையே கொள்ளவேணும்.  அவனே யென்று – ஶ்ருதிப்ரஸித்தி. அநந்யபரமான நாராயணாநுவாக ப்ரஸித்தியையும், “ய:பரஸ்ஸமஹேஶ்வர:” என்கிற அகாரார்த்த ப்ரஸித்தியையும் நினைக்கிறார்.  ‘அவனே’ என்பானென்? இவனையும் ஒக்கச் சொல்லாநிற்கவென்னில், (கபாலநன்மோக்கத்துக் கண்டுகொண்மின்) – என்று ‘கை’யோடே’ காட்டிக்கொடுக்கிறார்.  நீங்கள் இப்படிசொன்னால் மறுமாற்றம் சொல்லுகைக்கு இதொன்று உண்டாகப்பெற்றோமே.  “தத்ரநாராயண: ஸ்ரீமாந் மயா பிக்ஷாம் ப்ரயாசித:” – ‘தாந்தாம்பண்ணின கர்மபலம் தாந்தாம் அநுபவிக்கிறார்களாகில் நாமென்?’ என்றிருக்கும் ஈஶ்வரஸ்வாதந்த்ர்யம் ஜீவியாதபடி “நகஶ்சிந்நாபராத்யதி” என்பாரும் அருகேயுண்டென்கிறான்.  “விஷ்ணுப்ரஸாதாத் ஸுஶ்ரோணிகபாலம் தத்ஸஹஸ்ரதா ஐ ஸ்புடிதம் பஹுதாயா தம் ஸ்வப்நலப்தம் தநம்யதா ஐஐ”  “ஸுஶ்ரோணி” – உன் வடிவழகால் வந்த ஸௌபாக்யம் நான் ஸர்வேஶ்வரன்பக்கலிலே சென்றவளவிலே உதவிற்றுக்காண். “ஸ்வப்நலப்தம்” – அநுபவம் செல்லாநிற்கச்செய்தே விழித்துப்பார்க்குங் காட்டில் இல்லையாயிருந்தது; ஆகையாலே, நன்மோக்கம் என்கிறது.  உங்களுக்கு இப்போது மறுமாற்றம் சொல்லலாம்படியாக இதொன்று உண்டாயிற்றென்கிறாராதல், “ஸ்வப்நலப்த தநம் யதா” என்ற போனவழி தெரியாமே போயிற்றென்றாதல்.  நீங்கள் ஈஶ்வரர்களாக சங்கித்தவர்களிருவரும் நின்ற நிலை கண்டதே; ஒருவன் தலைகேட்டு நின்றான், ஒருவன் ஓடு கொண்டு ப்ராயஶ்சித்தியாய் நின்றான்.  ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய், உங்கள் குறை தீரப்பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெருங்குறைவாளரையோ பற்றுவது? ‘பாதகியாய் பிக்ஷைபுக்குத் திரிந்தான்’ என்று நீங்களே சொல்லிவைத்து, அவனுக்கே பரத்வத்தைச் சொல்லவோ? ஒருவனுடைய ஈஶ்வரத்வம் தலையோடே போயிற்று.  மற்றவனுடைய ஈஶ்வரத்வம் அவன் கையோடே காட்டிக் கொடுக்கிறார்; (கண்டுகொள்மின்) – உந்தாமகங்களிலே நீங்கள் எழுதியிட்டுவைத்த க்ரந்தங்களைப் பார்த்துக்கொள்ள மாட்டிகோளோ? முன்னே நின்று பிதற்றாதே யென்கிறார்.

(தேசமாமதிள் இத்யாதி) – சத்ருக்களுக்கு அநபிபவநீயமான தேஜஸ்ஸையுடைத்தாய், அரணாகப்போரும்படியான மதிளையுடைத்தாய், தர்ஶநீயமாயிருக்கிற.  (திருக்குருகூரதனுள் ஈசன்பால்) – அஜஹத்ஸ்வபாவனாகையாலே, ஸௌலப்யத்திலே அம்மேன்மை குலையாதிருக்கிறபடி.  (ஈசன்பால்) – “ய:பரஸ்ஸமஹேஶ்வர:” என்கிற ஸர்வேஶ்வரன் பக்கலிலே.  கீழே நாராயணஶப்தார்த்தத்தை ப்ரஸ்தாவித்துவைத்து, அகாரவாச்யனாய்ப் பரனானவனையே மஹேஶ்வரனென்கையாலே, நாராயணனே மஹேஶ்வரஶப்தவாச்யனென்று ஶ்ருதியாலே ஸித்தமாயிருக்கையால், இந்த ஶ்ருதியாலே உன்னுடைய அநுமாநம் அபஹ்ருத விஷயம்; ‘கண்டுகொண்மின்’ என்கிற அர்த்தஸாமர்த்யத்தோடு விரோதித்த ஸமாக்யை ஜீவியாது; ஆகையால், இவனே
பரன் என்கிறார்.  (ஓர் அவம்பறைதல்) – மற்றுள்ள க்ஷேத்ரஜ்ஞரோடொக்க அநீஶ்வரத்வ ஸாதகமாக ஏதேனும் ஓராபாஸயுக்திகளைச் சொல்லுமது. அது தம்வாயால் சொல்லமாட்டாமையாலே, ‘அவம்’ என்கிறார்.  (பறைதல்) – ஸ்வகோஷ்டிகளிலே ரஹஸ்யமாகச் சொல்லுமதொழிய ஸதஸ்யமன்றிக்கேயிருக்கை.  “யதா மே
–ரஶஶ் சேதாதிதம் குருதரம் வச:” – மஹாபலி ஸ்ரீப்ரஹ்லாதாழ்வான்பக்கலிலே வந்து ‘ராஜ்யமடைய ஒளிமழுங்கிவாராநின்றது; என் பலமும் குறைந்து வாராநின்றது; இதுக்கு அடி என்?’ என்ன, ‘நீ  ஸர்வேஶ்வரன்பக்கல் பண்ணின அபராதத்தாலேகாண்’ என்ன, “கோயம் விஷ்ணு:” என்றாற்போலே சில அநாதரோக்திகளைப் பண்ண; என் தலையை யறுத்து என்கையிலே தந்தாயாகில் ‘என்பேரன் பண்ணின உபகாரம்’ என்று இருக்கலாயிற்று; ‘என் முன்பே பகவந்நிந்தையைப் பண்ணினாய், நீ ராஜ்யப்ரஷ்டனாவாய்’ என்று சபித்துவிட்டான்.  இத்தை இப்படியே பட்டர் அருளிச்செய்தவாறே, ‘ப்ரக்ருதிபுருஷவிவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்மாவுக்கு ஸங்கோசம் வருவதொன்றை ஶபியாதே “ராஜ்யப்ரஷ்டஸ்ததாபத” என்பானென்? என்றுகேட்க, நாயைத் தண்டிக்கையாகிறது அமேத்யத்தை விலக்குகையன்றோ;  சாந்தை விலக்குகை அதுக்கு அநபிமதமன்றே; இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதிறே’ என்று அருளிச்செய்தார்.  (என்னாவதிலிங்கியர்க்கே) ஆநுமாநிகர்க்கு என்ன ப்ரயோஜநமுண்டு? அந்தத்தேவதைக்கு உத்கர்ஷம் பெற்றிகோளன்று, ஸமாஶ்ரயணத்துக்கு ஒரு பலம் பெற்றிகோளன்று, உங்களுக்கு இத்தாலேதான் ஒரு உத்கர்ஷம் பெற்றிகோளன்று, என்றியப்பட்டிகோள்? என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும்
வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகிநின்றான்
மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள்
பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும்பொய்யில்லைபோற்றுமினே.

:- அநந்தரம், பாஹ்யகுத்ருஷ்டிகளை நிரஸித்து, திருநகரியில் நிற்கிற ஸர்வேஶ்வரனே ஸர்வஸ்மாத்பரன் என்கிறார்.

இலிங்கத்து இட்ட – லிங்கார்ச்சநத்தை உத்தேஶ்யமாக ப்ரதிபாதிக்கிற, புராணத்தீரும் – தாமஸபுராணநிஷ்டராகையாலே குத்ருஷ்டிகளான நீங்களும், சமணரும் – (பாஹ்ய ஸ்ம்ருதிநிஷ்டரான) அமணரும், சாக்கியரும் – பௌத்தரும், வலிந்து – ஶுஷ்கதர்க்கங்களாலே மேலிட்டு, வாதுசெய்வீர்களும் – வாதஞ்சொல்லுகிற வைசேஷிகாதிகளான நீங்களும், மற்றும் – வேறு, நும் – உங்களுக்கு உத்தேஶ்யமாக ப்ரதிபத்திபண்ணியிருக்கிற, தெய்வமும் – தத்தத் தேவதாவிசேஷங்களும், ஆகி – ஸ்வாதீநமாம்படி ப்ரவர்த்திப்பித்து, நின்றான் – நின்றான், செந்நெல் – செந்நெலானது, மலிந்து – மிகுந்து, கவரிவீசும் – (தன்கதிர்க்கனத்தாலே) கவரிபோலே அசைகிற, திருக்குருகூரதனுள் – திருநகரிக்குள்ளே, பொலிந்து நின்ற – (பரத்வப்ரகாஶகமான குணங்களோடே ஶீலஸௌலப்யாதிகளுங் கூடி ப்ரகாசிக்கும்படி) பரிபூர்ணனாய் நிற்கிற, பிரான்கண்டீர் – ஸர்வேஶ்வரனே காணுங்கோள்; (அர்ச்சாவதாரத்தில் பரத்வம்ப்ரகாசிக்குமோ? என்று ஶங்கிக்கவேண்டா, “தாமர்சயேத்” இத்யாதி ப்ரமாணத்தாலே இவ்வர்த்தத்தில்), ஒன்றும் – ஒன்றும், பொய் இல்லை – பொய் இல்லை; போற்றுமின் – (ஆகையால் உங்கள் பாஹ்யகுத்ருஷ்டி ஸ்பர்ஶங்களை விட்டு அவனையே) ஸ்துதியுங்கோள்.

ஈடு:- அஞ்சாம்பாட்டு.  லைங்கபுராணம்தொடக்கமான குத்ருஷ்டிஸ்ம்ருதிகளையும், பாஹ்யஸ்ம்ருதிகளையும் ப்ரமாணமாகக் கொண்டு வந்தவர்களை நிஷேதிக்கிறார்.

(இலிங்கத்திட்ட புராணத்தீரும்) – ராஜஸமாயும் தாமஸமாயுமுள்ள புராணங்களுக்கு ஸாத்த்விக புராணங்களிற்காட்டில் வாசி இதுவாயிற்று.  அவற்றினுடைய நிஷ்கர்ஷம் அந்த அந்தப் புராணங்களினுடைய உபக்ரமத்திலே காணலாயிருக்கும்; “யந்மயஞ்ச ஜகத்ப்ரஹ்மந்” என்று பொதுவிலே ப்ரஶ்நம்பண்ண, “விஷ்ணோஸ்ஸகாஶாதுத்பூதம்” என்றுகொண்டு கோல்விழுக்காட்டாலே பரிஹாரமாயிருக்கையன்றிக்கே, ஒருத்யக்தியை நிர்த்தேஸித்து ‘அதுக்கு உத்கர்ஷத்தைப் பண்ணித்தரவேணும்’ என்று சொன்னவனும் தமோகுணாபிபூதனாய்ச் சொல்லி, கேட்டவனும் தமோகுணாபிபூதனாய்க் கேட்க, ஒரு லிங்கவிஷயமாக இடப்பட்ட புராணமாயிற்று.  ‘இளிகண்ணனைப் புண்டரீகாக்ஷனாகக் கவிபாடித் தரவேணும்’ என்றும், ‘எருமையை யானையாகக் கவிபாடித் தரவேணும்’ என்றும் சொல்ல, அப்படியே கவிபாடுவாரைப்போலே யிருப்பதொன்றிறே, அவர்களுக்கு இல்லாத உத்கர்ஷங்களையிட்டுச் சொல்லுமது; தான் சொல்லப்புக்க வஸ்துவுக்கு உத்கர்ஷத்தை ஸாதிக்கமாட்டாதே, மற்றுள்ளவற்றினுடைய உத்கர்ஷத்தைக் கழிக்கமாட்டாதேயிருப்பதொன்றாயிற்று.  (சமணரும்) – ஆர்ஹதரும்.  (சாக்கியரும்) – பௌத்தரும்.  (மற்றும் வலிந்துவாதுசெய்வீர்களும்) – உத்க்ருஷ்டதமமான ப்ரமாணத்தை அங்கீகரித்துக்கொண்டு நின்று ப்ரமாணாநுக்ராஹகமான  தர்க்கங்களையொழியக் கேவல தர்க்கங்களைக் கொண்டு அர்த்தத்தை ஸாதிக்கப் பார்க்கும் பாஹ்யரில் ஶேஷித்துள்ளாரும்.  “யாவேதபாஹ்யாஸ்ஸ்ம்ருதய:” இத்யாதியாலே – தாமஸத்வம் எல்லார்க்கும் அவிசிஷ்டமிறே; ஆகையாலே, பாஹ்யகுத்ருஷ்டிகளை யொக்கச் சொல்லுகிறது.  (நுந்தெய்வமுமாகிநின்றான்) – உங்களோடு நீங்களாஶ்ரயிக்கிற தேவதைகளோடு வாசியற ஆத்மதயா நின்றான்.  நீங்கள் அவ்வவர்க்கு உத்கர்ஷம் சொல்லும்போது பகவத்பரத்வத்தை அங்கீகரித்துக்கொண்டு நின்று சொல்லவேணும்.  அதுக்கு அடி என்? என்னில்: – அவ்வவருடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் அவனதீநமாயிருக்கையாலே.  இனித்தான் பக்ஷங்கள்தோறும், ‘ஸர்வஜ்ஞன்’,  ‘ஈஶ்வரன்’ என்றாற்போலே ஓரோதேவதைகளையும் கொள்ளக்கடவர்களாயிருக்குமிறே.  ‘அவர்களுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் அவனதீநம்’ என்ற இது ஸ்வபக்ஷத்தாலே சொல்லுகிறதோ, பரபக்ஷத்தாலே சொல்லுகிறதோ வென்னில்: – இரண்டுமொழிய ப்ரமாணக3தியாலே சொல்லுகிறது.  ஒரு தேவதைபக்கலிலே அதிமாநுஷமாயிருப்பதொரு த்யாபாரத்தைக் கண்டு, ‘இதுக்கு அடி என்?’ என்ன, “விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய” என்று ஸர்வேஶ்வரன் அந்தராத்மாவாய் நிற்கையாலே யென்றதிறே; அதர்வ–ரஸ்ஸிலே நின்று, ருத்ரன், ஸர்வேஶ்வரன் தன் ஸர்வாத்மபாவத்தைச் சொல்லுமாபோலே தன்படிகளைச் சொல்லா, ‘அவன்தானே இங்ஙனே சொல்லுகைக்கு அடி என்?’ என்று ஶங்கியா, “ஸோந்தராதந்தரம் ப்ராவிஶத்” என்று பரமாத்மப்ரவேஶத்தாலே சொன்னேனென்றானிறே; “மத்தஸ்ஸர்வமஹம் ஸர்வம்” என்றானிறே ப்ரஹ்லாதன்; ப்ரஹ்லாதன்பக்கல் பரத்வ முண்டாமன்றாயிற்று, இவர்கள் பக்கல் பரத்வமுள்ளது. (மலிந்து இத்யாதி) – இப்படி ஸர்வாந்தராத்மாவாயிருக்கிற ஸர்வேஶ்வரன் ‘அஸந்நிஹிதன்’ என்னும் கண்ணழிவு மில்லாதபடி திருநகரியிலே வந்து ஸந்நிஹிதனானான்.  ஸர்வஸமாஶ்ரயணீயனான அவன் இங்கேவந்து நிற்கையாலே, சேதநாசேதந விப4ாக3மற “ஸ்ருஷ்டஸ்த்வம்வநவாஸாய” என்று சொல்லப்பட்ட இளையபெருமாளைப்போலே அநுகூலத்ருத்திகளைப் பண்ணாநிற்குமாயிற்று.  செந்நெலானது கதிர்க்கனத்தாலே அத்வருகுக்கு இத்வருகு அசைகிறபோது சாமரைவீசினாற்போலே யாயிற்று இருப்பது.  (பொலிந்துநின்றபிரான் கண்டீர்) – பரமபதத்தைவிட்டு ஸம்ஸாரிகள்நடுவே வந்து புகுந்தவிடத்தில் அவர்கள் படுகிற க்லேஶத்தைத் தானும் ஒக்கப்படுகையன்றிக்கே ஸ்வரூபரூப குணவிபூதிகள் இவ்வருகே போரப்போர மேன்மேலென விஞ்சிவாராநின்றதாயிற்று.  சொன்னார்சொன்ன யுக்திகளுக்கு அவ்வருகாயிருக்குமென்னுதல். (ஒன்றும் பொய்யில்லை) – இதரதேவதைகளுக்குச் சொல்லும் உத்கர்ஷம் ஒன்றொழியாமல் பொய்யாயிருக்குமாபோலே, இவ்விஷயத்திற் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை.  அவ்வோதேவதைகளுக்கு ஸ்வத: உத்கர்ஷமில்லாமையாலே மெய்யொன்று மில்லை; இவனுடைய உத்கர்ஷத்துக்கு அவதியில்லாமையால் பொய்சொல்லுகைக்கு அவகாசமில்லை.  (போற்றுமினே) – நீங்கள் அபேக்ஷியாதிருக்க, நானே இப்படி சொல்லுகிறது, எனக்கு உங்கள் பக்கலுண்டான அநுக்ரஹாதிஶயத்தாலேயிறே; அவ்வநுக்ரஹகார்யம் பிறக்கவேணுமே; ‘க்ரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறியிராதே, சடக்கென அவன் திருவடிகளை ஆஶ்ரயிக்கப் பாருங்கோள்.

 ஆறாம் பாட்டு

போற்றிமற்றோர்தெய்வம் பேணப்புறத்திட்டு உம்மைஇன்னே
தேற்றிவைத்தது எல்லீரும்வீடுபெற்றால்உலகில்லையென்றே
சேற்றிற்செந்நெல்கமலமோங்கு திருக்குருகூரதனுள்
ஆற்றவல்லவன்மாயங்கண்டீர் அதறிந்தறிந்தோடுமினே.

ப:- அநந்தரம், இவ்வர்த்தம் உங்களுக்கு ப்ரகா–யாதொழிகிறது கர்மாநுரூபமாக அவன் ஸம்ஸாரத்தை நிர்வஹிக்கிற ஸாமர்த்யம் என்கிறார்.

மற்று ஓர் – வேறு ஒரு, தெய்வம் – தேவதையை, போற்றி – ஸ்தோத்ரம்பண்ணி, பேண – ஆதரிக்கும்படியாக, புறத்திட்டு – (தனக்குப்) புறம்பாக்கி, உம்மை – (தத்ப்ரவணரான) உங்களை, இன்னே – (நான் தன்விஷயத்திலே விஶ்வஸித்திருக்குமாபோலே) இப்படி, தேற்றி வைத்தது – (இதரதேவதா விஷயத்திலே) விஶ்வஸிப்பித்து வைத்தது, எல்லீரும் – எல்லாரும், வீடுபெற்றால் – பகவத்ப்ராப்திரூபமோக்ஷத்தைப் பெற்றால், உலகு – (‘கர்மாநுரூபமாக ப2லபே4ாக்தாக்களாய் நடக்கக்கடவர்கள்’ என்கிற) லோகமர்யாதை, இல்லை – குலையும், என்றே – என்றாயிருக்கும்; (அதுக்கு மூலம்), சேற்றில் – சேற்றுநிலத்தில், செந்நெல் – செந்நெலும், கமலம் – கமலமும், ஓங்கு – இசலி வளரக்கடவ, திருக்குருகூரதனுள் – திருநகரியிலே வர்த்திக்குமவனாய், ஆற்றவல்லவன் – அதிஶயித விவிதஶக்தியுக்தனாய்க் கொண்டு கர்மபலாநுபவத்தைப் பண்ணுவிக்கிறவனுடைய, மாயங்கண்டீர் – (லீலோபகரணமாய் துரத்யயையாய்) மாயாஶப்தவாச்யமான ப்ரக்ருதியோடு உண்டான ஸம்பந்தமாயிருக்கும்; அது – அத்தை, அறிந்து அறிந்து – அறிந்து (தந்நிஸ்தரணோபாயமான ப்ரபத்திஜ்ஞாநத்தை) உடையீர்களாய், ஓடுமின் – (அந்த மாயாநிஸ்தரணத்தைப் பண்ணி) கடக்கப் பாருங்கோள்.  உலகில்லையென்றே யென்று – லோகமில்லையாமென்று நினைத்தோ; அதல்லவிறே, ப்ரக்ருதிஸம்பந்த மிறே யென்றுஞ் சொல்லுவர்.

ஈடு:- ஆறாம்பாட்டு.  பகவத்பரத்வம் நீர் அருளிச்செய்யக் கேட்டபோது வெளிச்சிறத்து அல்லாதபோது தேவதாந்தர ப்ராவண்யம் உண்டாகாநின்றது; இதுக்கு அடி எது? என்ன, உங்கள் பாபமென்கிறார்.  எம்பெருமானே ஸர்வேஶ்வரனாகில் எங்களை தேவதாந்தரப்ரவணராக்கி வைப்பானென்? என்ன; உங்களை இங்ஙனே வைத்தது ஸதஸத்கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோகர்மாநுகுணபலங்களை அநுபவிக்கக் கடவதான ஶாஸ்த்ரமர்யாதை  அழியுமென்று; ஆனபின்பு, அத்தையறிந்து எம்பெருமானை ஸமாஶ்ரயித்து அவன் வஞ்சநத்தைத் தப்புங்கோள் என்கிறார்.

(போற்றி) – நான் பகவத்விஷயத்தில் செய்யுமதடைய நீங்கள் இதரதேவதைகள் பக்கலிலே செய்து போருவுதிகோள்; உங்கள் பக்கல் ஒருகுறையில்லை; அப்ராப்தமானதுவே குறை.  (மற்றோர்தெய்வம்) – “யேப்யந்யதேவதாபக்தா:” என்னுமாபோலே.  (பேண) – அவை தனக்கென்ன ஒன்றில்லாமையாலே, ஆஶ்ரயிக்கிற உங்களுக்கே ப4ரமிறே, அவற்றுக்கு உத்கர்ஷத்தை ஸாதிக்கை.  (புறத்திட்டு) – தனக்குப் புறம்பாம்படி பண்ணி.  (உம்மை இன்னே தேற்றிவைத்தது) – உங்களை இப்படியே தெளியும்படிபண்ணி வைத்தது.  “ந பிபேதி குதஶ்சந” என்கிறபடியே நான் மேல்வரும் அநர்த்தங்களுக்கு அஞ்சாதே நிர்ப்பரனாயிருக்கிறாப்போலே, ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமான இதரதேவதைகளை ஆஶ்ரயித்து உங்களுக்கு அவர்கள் பக்கலிலே ருசிவிஶ்வாஸங்களுண்டாம்படி பண்ணிவைத்தது.  (எல்லீரும் இத்யாதி) – எல்லாரும் இருந்ததே குடியாக மோக்ஷத்தைப் பெற்றால், லீலைக்கு அடியான ஶாஸ்த்ரம் நிரர்த்தகமாய் விடும்.  ஸத்கர்மத்தைப் பண்ணுவாரும் அஸத்கர்மத்தைப் பண்ணுவாருமாயிறே நாடுதான் இருப்பது; பாபம்பண்ணினவர்களும் புண்யம்பண்ணினவர்களுடைய பலத்தையநுபவிக்குமன்று,  “புண்ய:புண்யேந கர்மணா – பாப: பாபேந” என்கிற ஶாஸ்த்ர மர்யாதை குலையுமென்கை.  பாபம்பண்ணினவர்கள் அதின் பலத்தை அநுபவிக்கவும், புண்யம்பண்ணினார் அதின்பலத்தை அநுபவிக்கவு மாகிற ஶாஸ்த்ரமர்யாதை குலையாதபடியாக.  “அதோஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:” என்கிறவிடத்தில், லோகஶப்தத்தால் – ப்ரமாணத்தைச் சொல்லிற்றென்று கொண்டவோபாதி, இங்கும் லோகஶப்தம் – ஶாஸ்த்ரத்தைச் சொல்லுகிறது.  (சேற்றில் இத்யாதி) – அவ்வூரிலே பதார்த்தங்களில் ஒன்றி லொன்று குறைந்திருப்பதில்லையாயிற்று.  ‘உரம்பெற்றமலர்க்கமலம்’ (பெரியா.திரு. 4.8.) இத்யாதிபோலே.  அவ்வூரில் பதார்த்தங்களுள்ளவையடைய ஒன்றுக்கொன்று இசலி வளராநிற்கும்.  (ஆற்றவல்லவன்) – மிகவும் வல்லவன்.  அதிஶயிதஶக்திகன்.  ஸம்பந்தமொத்திருக்கச் செய்தே, புண்யம் பண்ணினார் அதின்பலம் அநுபவிக்கவும் பாபம் பண்ணினார் அதின்பலம் அநுபவிக்கவும் பண்ணவல்லவன்.  (மாயங்கண்டீர்) – “மமமாயா துரத்யயா” என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரைத் தன்பக்கல் வந்துகிட்டாதபடி ப்ரக்ருதியையிட்டு வஞ்சித்துவைத்தபடி கிடிகோள்.  (அது அறிந்து) – இது அவனுடைய மாயமென்னுமத்தை அறிந்து (அறிந்தோடுமினே) – “மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாந்தரந்திதே” என்கிறபடியே, மாயாதரணோபாயமான ப்ரபத்தியையும் தானே அருளிச்செய்துவைத்தான்; அத்தையறிந்து, அவ்வழியாலே அவனைப்பற்றித் தப்பப் பாருங்கோள் இந்த மாயையை.  இது அவன் செய்துவைத்ததான பின்பு, அவனைவெல்லவேண்டில் அவனோடு பிரியநின்று வெல்லப்பாராதே அவனையே காற்கட்டி இத்தைத்தப்பப் பாருங்கோள்.

ஏழாம்பாட்டு

ஓடியோடிப்பலபிறப்பும்பிறந்து மற்றோர்தெய்வம்
பாடியாடிப்பணிந்து பல்படிகால்வழியேறிக்கண்டீர்
கூடிவானவரேத்தநின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடியாதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே.

ப:- அநந்தரம், நீங்கள் இதற்குமுன்பு ஆஶ்ரயித்துப்பெற்ற ப2லமிறே இனி ஆஶ்ரயித்தாலும் பெறுவது; ஆனபின்பு, பரத்வசிஹ்நமான கருடத்வஜத்தையுடைய ஸர்வகாரணபூதனுக்கு அடிமைபுகுங்கோள் என்கிறார்.

மற்று ஓர் தெய்வம் – வேறே சொல்லப்பற்றாததொரு தேவதையை, பாடியாடி – (ப்ரீதிப்ரேரிதராய்க் கொண்டு) பாடுவது ஆடுவதாய், பணிந்து – வணங்கி, பல்படிகால் – பலப்ரகாரத்தாலும், வழி – (ஆஶ்ரயிக்கச்சொல்லுகிற) ஶாஸ்த்ரமார்க்கத்தாலே, ஏறி – மேன்மேலும் ஆஶ்ரயித்து, ஓடியோடி – (அதன்பலமான கர்ப்பநரகங்களிலே) ஓடி, பலபிறப்பும்பிறந்து – பலவகையாகப்பிறந்து, கண்டீர் – அபரோக்ஷித்துக் கண்டீர்; (ஆனபின்பு), வானவர் – (நீங்கள் ஆஶ்ரயிக்கிற) தேவர்களெல்லாரும், கூடி – கூடி, ஏத்த – (தங்களாபந்நித்ருத்யாதிகளுக்காக) ஸ்தோத்ரம்பண்ணி ஆஶ்ரயிக்கும்படி, திருக்குருகூரதனுள் – திருநகரியிலே, நின்ற – நிற்குமவனாய், ஆடு – (பகவதநுபவ ப்ரீதியாலே) ஆடிவருகிற, புள் – பெரியதிருவடியை, கொடி – (பரத்வப்ரகாஶகமான) கொடியாகவுடையனாய், ஆதி மூர்த்திக்கு – ஸர்வகாரணபூதனான ஸர்வேஶ்வரனுக்கு, அடிமைபுகுவது – அடிமைபுகுங்கோள். புகுவரென்றது – புகுகவென்றாய், விதியாயிருக்கிறது.

ஈடு:- ஏழாம்பாட்டு.  ‘அது செய்கிறோம், இதர தேவதைகளுக்கும் சில உத்கர்ஷமுண்டு’ என்று நெடுநாள் அவற்றுக்குப் பச்சையிட்டுப் போந்தோம்; அப்பச்சை வெறுமனாகாமே இன்னம் சிலநாள் அவை பலிக்கும்படி கண்டு பின்னை பகவத்ஸமாஶ்ரயணம் பண்ணுகிறோம்’ என்ன, ‘அவையும் எல்லாம் செய்து கண்டிகோளிறே; இனி அமையும் காணுங்கோள்’ என்கிறார்.

(ஓடியோடி இத்யாதி) – “கதா கதம் காமகாமா லபந்தே” என்கிறபடியே, போவது, ஜந்மங்களோடே வருவதாய்த் திரிந்ததித்தனையிறே.  (பல பிறப்பும்பிறந்து) – ஆத்மா நித்யன்; அசித்தும் அப்படியே; அசித் ஸம்ஸர்க்கமும் நித்யமாய், கர்ம ப்ரவாஹத்தாலே ஜந்மபரம்பரையும் உருவப்போருகிறது; நீங்கள் முன்னும் பின்னும் அறியாமலிறே ‘இது ஒரு ஜந்மமே யுண்டாயிற்று’ என்று இருக்கிறது.  (மற்று ஓர் இத்யாதி) – இப்படி அநாதியாய்ப் போருகிற ஜந்ம பரம்பரைகளில் ஒரு ஜந்ம மொழியாமல் இதர தேவதாஸமாஶ்ரயணம் பண்ணிப்போந்திகோள்.  அதுசெய்கிறவிடத்தில் த்ரிவித கரணங்களாலும் செய்தும்.  ஆஶ்ரயணத்தில் குறையால் பலியாதிருந்ததன்று, அதில் குறையில்லை.  ப்ரீதிப்ரேரிதராய்ச் சொல்லி, அவ்வளவில் பர்யவஸியாதே விக்ருதராய்,  “மாம் நமஸ்குரு” என்று பகவத் விஷயத்தில் அவகாஹிக்குமளவும் உட்புகுந்து.  (பல்படிகால்) – ஒருபடி ஆஶ்ரயித்துவிட்டிகோளோ? அநேகம் ப்ரகாரங்களாய் ஆஶ்ரயித்து.  (வழியேறிக்கண்டீர்) – அவ்தேவதைகளை ஆஶ்ரயிக்கச்சொன்ன ஶாஸ்த்ரமர்யாதை தப்பாமல் ஆஶ்ரயித்து அதன்பலமும் கண்டிகோளன்றோ? ‘பல்படிகால் வழியேறிக்கண்டீர்’ என்கைக்கு, ‘இவர்கள் ஒரு ஜந்மத்திலும் பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணிற்றிலர்கள்’ என்று அறிந்தபடி எங்ஙனே இவர்? என்னில்: – இப்போது தாம் இவ்வர்த்தம் உபதேசிக்க வேண்டும்படி இவர்களிருக்கக் காண்கையாலே, ‘இதுக்குமுன்பு பகவத் ஸமாஶ்ரயணம் பண்ணிற்றிலர்கள்’ என்று அறியத் தட்டில்லையிறே; “மோக்ஷமிச்சேஜ்ஜநார்த்தநாத்” என்கிறபடியே பகவத்ஸமாஶ்ரயணம் பண்ணினார்களாகில் முக்தராவர்களிறே.  இதரதேவதாஸமாஶ்ரயணம் பண்ணுகையாலே இவ்வளவும்வர ஸம்ஸரித்துப்போந்திகோள்.  “ப்ரஹ்மாணம் ஸிதிகண்டஞ்ச” இத்யாதி, “ப்ரதிபுத்தா ந ஸேவந்தே*.  ‘மோக்ஷபலம் ஸித்திக்கவேணும்’ என்றிருக்கிறவர்கள் க்ஷுத்ர தேவதைகளைப் பின்செல்லார்களிறே; அதுக்குஅடி – அவை தரவல்லது அநித்யபலங்களாகையாலே.  “ஸ்கந்தருத்ரமஹேந்த்ராத்யா: ப்ரதிஷித்தாஸ்துபூஜநே” என்றதிறே.  “த்வயாபி ப்ராப்தம்” இத்யாதி – ஒருவன் பகவத்ஸமாஶ்ரயணம் பண்ணா நிற்கச்செய்தே, ‘இவன் ஸமாதி நின்றநிலை அறியவேணும்’ என்று பார்த்து ஸர்வேஶ்வரன் இந்த்ரவேஷ பரிக்ரஹம்பண்ணி ஐராவதத்திலே ஏறிவந்து  முன்னேநின்று, ‘உனக்கு வேண்டுவதென்?’ என்ன, ‘ஒருபுழுவும் தானுமாய் வந்து நிற்கிறவன் ஆர்?’ என்றான்; ‘ஸர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்’ என்னுமிடம் அறியானிறே; கொண்டுவந்த வேஷம் இதுவாகையாலே; அவனைப்பார்த்து, ‘நீ யாவனொருவனை ஆஶ்ரயித்து இந்த ஐஶ்வர்யமடையப் பெற்றாய், அப்படிப் பட்டவனைக் காண் நான் ஆஶ்ரயிக்கிறது; இப்படி வழி போவார்க்கெல்லாம் பச்சையிட்டுத் திரியுமவனல்லேன்காண்; இப்போது முகங்காட்டாதே போகவல்லையே பிரானே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றானிறே.  பகவத்ஸமாஶ்ரயணம்பண்ணி ஜ்ஞாநாதிகரா யிருப்பா ரொருவர் இருந்து தம்முடைய வஸ்த்ரத்தைப் புரையா நின்றாராய், அவ்வளவிலே தேவனும் தேவியுமாகப் போகாநிற்க அநாதரித்திருந்தாராய், தேவியானவள், ‘நீர் ஸர்வாதிகராயிருக்க, உம்மைக்கண்ட விடத்தில் இவன் அநாதரித்துக் காலை நீட்டிக்கொண்டிருந்தானே’ என்ன, ‘அவன் பகவத்பக்தன்போலே காண்’ என்ன, ‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்’ என்று இருவரும் இவர்பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மநுஷ்யர்கள் கண்டால் அநுவர்த்தித்து வேண்டும் வரங்களும் வேண்டிக் கொள்ளக் கடவர்களாயிருப்பர்கள்; நீ நம்மைக் கண்டவிடத்தில் நீட்டின காலை முடக்குதல், சில உபசாரங்களைப் பண்ணுதல், சிலவற்றை வேண்டிக்கொள்ளுதல் செய்யாதே யிருந்தாயீ’ என்ன, ‘அழகிது! அவை யெல்லாம் செய்யக்கடவேன், மோக்ஷம் தரலாமோ?’ என்ன, ‘அது நம்மாலே செய்யலாமதன்று; பகவத்ஸமாஶ்ரயணம்பண்ணி அவன் ப்ரஸாதத்தாலே பெறவேணும்’ என்ன, ‘ஆகில், இன்று சாவாரை நாளைச் சாவப்பண்ணலாமோ?’ என்ன, ‘அதுவும் கர்மாநுகுணமாயிறே யிருப்பது; நம்மால் செய்யப்போகாது’ என்ன, ‘ஆகில், நீ செய்யுமது, இவ்வூசிபோனவழியே நூலும்போம்படி அநுக்ரஹித்து நடக்குமித்தனை’ என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற்கண்ணைக்காட்ட, இவரும் காலிலே அநேகங்கண்ணை உண்டாக்கிக் காட்டினார்.  (கூடி இத்யாதி) – நீங்கள் ஆஶ்ரயிக்கிற தேவதைகள் இவ்வளவும் உங்களைக் கும்பீடுகொண்டு, இத்தனைபோதுபோய் அங்கே ஆஶ்ரயியா நிற்பர்கள்.  அவர்கள் செய்கிறவற்றைக் கண்டாகிலும் நீங்களும் அவனை ஆஶ்ரயிக்கப்பாருங்கோள்; தலையறுப்பாரும் அறுப்புண்பாருமாய், க்ராமணிகளைப்போலே ஒருவரை யொருவர் வேரோடே அலம்பிப்போகடவேண்டும்படியான விரோதம் செல்லா நிற்கச்செய்தேயும், ஆபத்து எல்லார்க்கு மொத்திருக்கையாலே எல்லாரும் ஒரு மிடறாய் ஆஶ்ரயிப்பர்கள்.  பரஸ்பரவிரோதமுங் கிடக்கச்செய்தே ‘ஊராகக் கூடிவந்தது’ என்பார்களிறே.  (ஆடுபுட்கொடி) – வெற்றிப்புட்கொடி.  ஆடு – வெற்றி, வெற்றிப்புள்ளைக் கொடியாக வுடையவன்.  ‘ஸர்வேஶ்வரவாஹநம்’ என்கிற ஹர்ஷப்ரகர்ஷத்தாலே மதித்து ஆடாநின்ற புள் என்றுமாம்.  ஆஶ்ரிதவிரோதி நிரஸநத்துக்கு ஸர்வேஶ்வரனுக்குச் செய்யவேண்டுவதில்லை; திருவடி திருத்தோளிலே சலியாமல் இருக்குமத்தனையே வேண்டுவது.  ‘கருடத்வஜன், கருடவாஹநன்’ என்று சொல்லப்படுமவனாயிற்று மோக்ஷப்ரதனாவான்.  (ஆதிமூர்த்திக்கு) – “காரணந்து த்யேய:” என்கிறபடியே  ஜகத்காரணவஸ்துவேயிறே உபாஸ்யமாவது.  மோக்ஷப்ரதனுமாய் ஸர்வநியந்தாவுமான ஸர்வேஶ்வரனுக்கு. (அடிமைபுகுவதுவே) – அடிமைபுகுமதுவே கர்த்தத்யம்.  உங்களுக்குச் செய்யவேண்டுவதொன்றில்லை; அவனுடைமையை அவனுக்காக இசைய அமையும்.  அவன் இத்தை ‘என்னுடைமை’ என்றிருக்க, நீங்களும் ‘என்னுடைமை’ என்றிராதே ‘அவனது’ என்று இசைய அமையும்.  அடிமை புகுவது என்கிற இடம் – விதியாய், கண்டீரென்கிற இடம் – அதுவும் செய்து பார்த்திகோளிறே; இனி இவன் திருவடிகளிலே அடிமைபுகப்பாருங்கோளென்கிறார்.  யயாதிசரிதத்தை பட்டர் வாசித்துப்போந்திருக்கச் செய்தே, பிள்ளைவிழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூரரையருங்கூட ‘வேதோபப்ரும்ஹணார்த்தமாக ப்ரவ்ருத்தமான ப்ரபந்தங்களில் இது எவ்வர்த்தத்தை விஶதீகரிக்கிறது?’ என்று கேட்க, ‘க்ஷுத்ரதேவதைகள் தந்தாமை ஆஶ்ரயித்துப் பெற்றாலும் பிறர்பக்கலிலே ஓர் உத்கர்ஷம் கண்டால் அது பொறுக்கமாட்டார்க ளென்றும், ஸர்வேஶ்வரனே ‘பிறர்வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பானென்றும் சொல்லி, ஆனபின்பு, இதரதேவதைகள் ஆஶ்ரயணீயரன்று, இவனொருவனுமே ஆஶ்ரயணீய னென்னு மர்த்தத்தைச் சொல்லுகிறது’ என்று அருளிச் செய்தார்.  “இமௌஸ்ம” என்று தாழ நிற்கவல்லான் இவனேயிறே.  ‘யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை யிட்டு ஒருவரை யொருவர் எறிந்து முடிந்து போனார்கள்’ என்று கேட்டவாறே, ‘க்ருஷ்ணன் இவர்கள் விஷயமாக ஶங்கநிதி பத்மநிதி தொடக்கமானவற்றைக் கொடுவந்து கொடுத்துச் செய்யாதனவில்லை; பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியேயாயிருந்தது; ‘நம்முடைய பகவத்ஸமாஶ்ரயணத்துக்கும் ப2லம் அங்ஙனேயாகிறதோ? என்று அஞ்சியிருந்தோம்’ என்ன, ‘அங்ஙனாகாது; அஞ்சவேண்டா; அவர்கள், ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று தேஹ ஸம்பந்தத்தைக்கொண்டு விரும்புகையாலே அவர்களுக்கு தேஹாவதியாய் விட்டது; நாம் ஸ்வரூபஜ்ஞாநத்தாலே, நித்யனான ஆத்மாவுக்கு வகுத்த பேறு பெறவேணும் என்று பற்றுகையாலே பேறும் யாவதாத்மாபாவியாயிருக்கும்’ என்று அருளிச்செய்தார்.

எட்டாம்பாட்டு

புக்கடிமையினால்தன்னைக்கண்ட மார்க்கண்டேயனவனை
நக்கபிரானுமன்றுய்யக்கொண்டது நாராயணனருளே
கொக்கலர்தடந்தாழைவேலித் திருக்குருகூரதனுள்
மிக்கவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்விளம்புதிரே.

ப:- அநந்தரம், மார்க்கண்டேயனுக்கு ருத்ரன் பலப்ரதனாயிற்றும் ஈஶ்வரன்க்ருபையாலே யென்று, ‘இதரதேவதைகளுக்கும் பலப்ரதாநசக்த்யாதாயகன் அவனே’ என்னுமிடத்தை உதாஹரணநிஷ்ட மாக்கி அருளிச்செய்கிறார்.

அடிமையினால் – சேஷத்ருத்திமுகத்தாலே, புக்கு – உட்புக்கு, தன்னை – (ஆஶ்ரயணீயனான) தன்னை, கண்ட – அபரோக்ஷித்துக்கண்ட, மார்க்கண்டேயன் – மார்க்கண்டேயனென்று, அவனை – புராணப்ரஸித்தனானவனை, நக்கன் – திகம்பரனாகையாலே நக்நனென்று பேராய், பிரானும் – (ஆஶ்ரிதருக்கு ம்ருத்யுவைஜயித்து நித்யத்வத்தைக் கொடுத்த) உபகாரகனாவானும், அன்று – ப்ரளயதசையிலே, உய்யக்கொண்டது – பிழைப்பித்து பகவத்பரனாக்கி உஜ்ஜீவிப்பித்தது, நாராயணன் – (அந்தராத்மபூதனான) நாராயணன், அருளே – (அவனுக்குபலப்ரதனாம்படி தன்னைப்பண்ணிவைத்த) க்ருபையாலேயாயிருக்கும்; (ஆதலால்), கொக்கு – கொக்கின்நிறம்போலே, அலர் – அலருகிற பூவையுடைய, தடம் – பெரிய, தாழை – தாழைகளை, வேலி – வேலியாகவுடைய, திருக்குருகூரதனுள் – திருநகரிக்குள்ளேநிற்கிற, மிக்க – ஸர்வாதிகனாய், ஆதி – நிரபேக்ஷகாரணபூதனான, பிரான் – மஹோபகாரகன், நிற்க – நிற்க, எ மற்று தெய்வம் – வேறு தத்ஸாபேக்ஷமான எத்தை தைவமாக, விளம்புதிர் – சொல்லுகிறிகோள்?

ஈடு:- எட்டாம்பாட்டு.  இங்ஙனே யிருக்கச்செய்தேயும், இதரதேவதாஸமாஶ்ரயணம் பண்ணியன்றோ மார்க்கண்டேயாதிகள் ஸ்வாபிலஷிதம்பெற்றது என்ன, – ஆகில் அது இருந்தபடியைக் கேட்கலாகாதோ? என்கிறார்.

(புக்கு அடிமையினால்) – அடிமையினால் புக்கு.  ‘ஸர்வேஶ்வரனுக்கு அடிமை’ என்று புக்கானல்லன்; ‘ருத்ரனுக்கு அடிமை’ என்று புக்கானாயிற்று.  (தன்னைக்கண்ட) – காணப்பெறாமையாலே தான் இழந்தானல்லன்; (புக்கு இத்யாதி) – ஆஶ்ரயணக்குறையா லிழந்ததல்ல; காணப்பெறாமையால் இழந்ததல்ல.  (மார்க்கண்டேயனவனை) – மார்க்கண்டேயனானவனை.  (நக்கபிரான்) – நக்கனென்றது – நக்ந னென்றபடி.  ஸ்வகோஷ்டிக்கு உபகாரகனா யிருக்கையாலேயாதல், ஜ்ஞாநப்ரதத்வத்தைப் பற்றவாதல் – பிரானென்கிறது.  மேல் நாராயணனென்கையாலே – ‘அவனுக்கு ஶேஷமாமிடத்தில் உன்னோடு என்னோடு வாசியில்லை’ என்று அவன் திருவடிகளிலே காட்டிக்கொடுத்தா னென்கை. (அன்று உய்யக்கொண்டது) – ஆபத்தசையிலே ரக்ஷித்தது.  (நாராயணனருளே) – ‘நீ நெடுநாள் பச்சையிட்டு ஆஶ்ரயித்தாய்; அவ்வாஶ்ரயணம் வெறுமன் போயிற்றதாக வொண்ணாது” என்று அவனையழைத்து, ‘நானும் உன்னோபாதி ஒருவனை ஆஶ்ரயித்துக்காண் இப்பதம் பெற்றது. இனி ஊண்கொடுத்தல்,
உபதேசங்கொடுத்தலிறே’ அவனைக் கொண்டுபோய் ஸர்வேஶ்வரன் பக்கலிலே காட்டிக்கொடுத்தானாயிற்று.  அருளென்கிறவிடம் – எல்லா விபக்தியிலும் ஒட்டலாயிருக்கையாலே, அருளாலே யென்னுதல்; அவன் இவனை ரக்ஷித்துக் கொண்டது ஸர்வேஶ்வரன் ப்ரஸாதத்தைப் பண்ணிக்கொடுத் தென்னுதல்.  (கொக்கலர் இத்யாதி) – கொக்குப்போலே வெளுத்த நிறத்தையுடைய அலரையுடைத்தாயிருப்பதாய்ப் பெருத்திருந்துள்ள தாழைகளை வேலியாகவுடைத்தாயிருந்துள்ள திருநகரியாயிற்று.  நிலத்தியல்பு இருக்கிறபடி.  (மிக்க ஆதிப்பிரான்நிற்க) – ஸர்வாதிகனாய் ஜகத்காரணபூதனானவன் நிற்க.  (மிக்க) – சொல்லும்போது கனக்கச் சொல்லி, கிட்டினவாறே குறைந்திரா தொழிகை.  நெடுநாள் ஆஶ்ரயிப்பித்துக்கொண்டு, பின்பு கார்யகாலத்திலே வந்தவாறே வேறே யொருவன் வாசலேறக் கொண்டுபோக வேண்டாதிருக்கை.  (மற்றைத் தெய்வம் விளம்புதிரே) – ப்ரகாரங்களிலே ஒன்றை ஈஶ்வரனாகச் சொல்லுகிறிகோளே; அவனுக்கு ப்ரகாரமாயல்லது ஒன்றுக்கும் வஸ்துத்வ மின்றிக்கேயிருக்க, ப்ரகாரியாகச் சொல்லி அநர்த்தப்படுகிறிகோளே கெடுவிகாள்! (விளம்புதிரே) – ‘த்யவஹரிக்கைக்கும் யோக்யதை யில்லை’ என்று இருக்கிறாராயிற்று இவர்.

ஒன்பதாம் பாட்டு

விளம்பும்ஆறுசமயமும் அவையாகியும்மற்றும்தன்பால்
அளந்துகாண்டற்கரியனாகிய ஆதிப்பிரானமரும்
வளங்கொள்தண்பணைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை
உளங்கொள்ஞானத்துவைம்மின் உம்மைஉய்யக்கொண்டுபோகுறிலே.

ப:- அநந்தரம், இதர து3ரவபே3ாத4ன் வர்த்திக்கிற திருநகரியை உங்களுக்கு உஜ்ஜீவநார்த்தமாக அநுஸந்தியுங்கோள் என்கிறார்.

விளம்பும் – (தர்க்ககோலாஹலத்தாலே) ஶப்தமாத்ரஸாரமாயிருக்கிற, ஆறு சமயமும் – (சார்வாக ஶாக்ய க்ஷபணக வைஶேஷிக ஸாங்க்ய பாசுபத ரூபமான) ஆறு பாஹ்யஸமயமும், மற்றும் – மற்றுமுள்ள குத்ருஷ்டிவர்க்கமும், அவையாகியும் – ஸபையாகத்திரண்டாலும், தன்பால் – (அபரிச்சிந்நஸ்வபாவனான) தன்விஷயத்தில், அளந்து – (நிஷேத்யதயாவும்) பரிச்சேதித்து, காண்டற்கு – காண்கைக்கு, அரியனாகிய – அரிதான ஸ்வபாவத்தையுடைய, ஆதிப்பிரான் – ஸர்வகாரணபூதனான மஹோபகாரகன், அமரும் – பொருந்தி வர்த்திக்கும் தேஶமாய், வளம்கொள் – தர்ஶநீயமாய், தண் – ஶ்ரமஹரமான, பணை – நீர்நிலங்களாலே, சூழ்ந்து – சூழப்பட்டு, அழகாய – நிரதிஶயபே4ாக்3யமான, திருக்குருகூரதனை – திருநகரியை, (நீங்கள்), உம்மை – உங்களை, உய்யக்கொண்டு – உஜ்ஜீவிப்பித்துக்கொண்டு, போகுறில் – நடக்க வேண்டியிருந்தீர்களாகில், உளம்கொள் ஞானத்து – உங்கள் மாநஸஜ்ஞாநத்துக்குள்ளே, வைம்மின் – வையுங்கோள்.

ஈடு:- ஒன்பதாம்பாட்டு.  உங்களுடைய உஜ்ஜீவநத்துக்கு அத்வளவும் செல்லவேணுமோ? அவன் வர்த்திக்கிற திருநகரியை உங்கள் ஜ்ஞாநத்துக்கு விஷயமாக்க அமையும் என்கிறார்.

(விளம்பும் ஆறு சமயமும்) – சிலவற்றைச் சொல்லாநின்றால், தாங்களும் சில தர்க்கங்கள் சொல்லாநிற்குமத்தனை போக்கி, ப்ரமாணாநுகூல தர்க்கமல்லாமையாலே கேவலம் உக்தி ஸாரமேயாயிருக்கிற பாஹ்யஸமயங்களாறும்.  அவையாகிறன “ஶாக்யோலூக்யாக்ஷபாதக்ஷபணகபில பதஞ்சலிமதாநுஸாரிண:” என்று பாஷ்யகாரர் அருளிச்செய்தாரிறே.  (அவையாகியும் மற்றும்) – மற்றும் அவற்றோடொத்த குத்ருஷ்டிகளும்.  “தமோநிஷ்டாஹிதாஸ் ஸ்ம்ருதா:*.  (தன்பால்  இத்யாதி) – தன்னளவில் வந்தால் ‘இல்லை’ என்கைக்கும் ‘இவ்வளவு’ என்று பரிச்சேதிக்க அரிதாயிருக்கும்.  ‘இல்லை’ என்னும் போதும், வஸ்துவை ‘இது’ என்று பரிச்சேதிக்கவேணுமே.  அதாவது – இவனுடைய ஸ்வரூபரூப குணவிபூதிகள் பாஹ்யகுத்ருஷ்டிகளால் அவிசால்யமாயிருக்குமென்கை.  அதுக்கு அடி என்? என்றால், – (ஆதிப்பிரான்) – “மே மாதா வந்த்4யா” என்னவொண்ணாதிறே.  (அளந்து இத்யாதி) – துஸ்தர்க்கங்களால் ‘இவ்வளவு’ என்று பரிச்சேதிக்கவொண்ணாதபடியிருக்கிற ஜகத்காரணபூதனானவன் விரும்பி வர்த்திக்கிற.  (வளங்கொள் இத்யாதி) – ஸம்பத்தையுடைத்தாய் ஶ்ரமஹரமான நீர்நிலங்களாலே சூழப்பட்டு, கண்டார்க்கு வைத்த கண் வாங்கவொண்ணாதபடி தர்ஶநீயமான திருநகரியை.  (உளங்கொள் ஞானத்து வைம்மின்) – உளம்கொள் ஞானம் – மாநஸஜ்ஞாநம்.  ஜ்ஞாநம் உதித்து, பாஹ்யேந்த்ரியங்களாலே பாஹ்யவிஷயத்தை க்ரஹிப்பதுக்குமுன்னே, மாநஸஜ்ஞாநத்துக்குத் திருநகரியை விஷயமாக்குங்கோள்.  பஹிர்விஷயமாக்காதே ஜ்ஞாநத்தை ப்ரத்யக3ர்த்த ப்ரவணமாக்கப் பாருங்கோள்.  என்செய்ய வென்னில், (உம்மை உய்யக்கொண்டு போகுறிலே) – “ஸந்தமேநம்” என்கிறபடியே, உந்தாமுடைய ஸத்தைபெற்றுப் போகவேண்டியிருக்கில்.  “அஸந்நேவ” என்கிறபடியே ‘சென்றற்றது’ என்றேயிருக்கிறாராயிற்று இவர். “நேயமஸ்தி” என்னுமாபோலே.  “மஹாத்மநா” – தன்னில் தான் வாசி சொல்லுமித்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச்சொல்ல வொண்ணாதபடியான பெருமாளோடே.

பத்தாம் பாட்டு

உறுவதாவதெத்தேவும் எவ்வுலகங்களும்மற்றுந்தன்பால்
மறுவின்மூர்த்தியோடொத்து இத்தனையும்நின்றவண்ணம்நிற்கவே
செறுவிற்செந்நெல்கரும்பொடோங்கு திருக்குருகூரதனுள்
குறியமாணுருவாகிய நீள்குடக்கூத்தனுக்காட்செய்வதே.

ப:- அநந்தரம், ஸர்வஶரீரியாய் நிரதிஶயசீலவானாய் ஸர்வமநோஹரசேஷ்டிதத்தையுடையனானவனுக்கு அடிமைசெய்வதே உத்தேஶ்யமாய் உசிதமுமான புருஷார்த்தம் என்கிறார்.

எத்தேவும் – ஸகலதேவதாவர்க3மும், எவ்வுலகங்களும் – ஸமஸ்தலோகமும், மற்றும் – மற்றுமுண்டான சிதசித்வர்க3முமான, இத்தனையும் – இவையித்தனையும், தன்பால் – தன்ஸ்வரூபத்திலே, மறுஇல் – நிரவத்யமான, மூர்த்தியோடொத்து – அஸாதாரணவிக்ரஹத்தோபாதி அத்தலைக்கு அதிஶயகரமான ப்ரகாரமாய்க்கொண்டு, நின்றவண்ணம் – தான்நிற்கிற ஸ்வரூபபேதமும் ஸ்வபாவபேதமும் குலையாதபடி, நிற்கவே – நிற்கச்செய்தே, (அம்மேன்மையோடொக்க), செறுவில் – விளைநிலங்களில், செந்நெல் – செந்நெலானது, கரும்பொடு – கரும்போடொக்க, ஓங்கு – வளரும்படியான, திருக்குருகூரதனுள் – திருநகரிக்குள்ளே நிற்குமவனாய், குறிய – (ஆஶ்ரிதர்க்குச் சிறாம்பித்து அநுபவிக்கலாம்படி)வாமநனாய், மாணுருவாகிய – (அர்த்தித்வமே நிரூபகமென்னலாம் படியான) ப்ரஹ்மசாரிவேஷத்தையுடையனாய், நீள் – (கேட்டாரெல்லாரும் ஈடுபடும்படியான) நிரதிஶயபோக்யதா மாஹாத்ம்யத்தையுடைய, குடக்கூத்தனுக்கு – குடக்கூத்தைப்பண்ணின க்ருஷ்ணனுக்கு, ஆள்செய்வதே – அடிமைசெய்வதே, உறுவது ஆவது – சீரியதாயும் உசிதமாயுமுள்ள புருஷார்த்தம்.

ஈடு:– பத்தாம்பாட்டு.  தன் ஐஶ்வர்யத்தி லொன்றுங் குறையாமல் வந்து திருநகரியிலே நின்றருளின பொலிந்துநின்றபிரானுக்கு அடிமைசெய்கையே உசிதம் என்கிறார்.

(உறுவதாவது இத்யாதி) – நீள்குடக்கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவதாவது.  உறுவதும் இது, ஆவதும் இது, சீரியதும் இது, ஸுஶகமும் இது வென்னுதல்; உறுவதாவது – இதுவேயென்னுதல்.  (எத்தேவும் இத்யாதி) – எல்லாத்தேவதைகளும் , தேவதைகளுக்கு போகஸ்தாநமான எல்லாலோகங்களும்.  (மற்றும்) – மற்றுமுண்டான சேதநாசேதநங்களும்.  (தன்பால் மறுவில் மூர்த்தியோடொத்து) – தன்னிடத்து வந்தால் மறுவில்லாதபடி மூர்த்தியோடு ஒத்து.  இவை மூர்த்தியாமிடத்தில் அப்ராக்ருதமான விக்ரஹத்தோபாதி குறைவின்றிக்கேயிருக்கை.  மறுவாகிறது – குற்றம், அதாவது – குறைவு; அதின்றிக்கே யிருக்கை.  ப்ருதக்ஸ்தித்யாதிகளின்றிக்கே யிருக்கை.  அன்றிக்கே, மறுவையுடைத்தான மூர்த்தியுண்டு – ஸ்ரீவத்ஸத்தை யுடைத்தான விக்ரஹம்;   அத்தோடொத்து என்னுதல்.  அன்றிக்கே, மறுவில்மூர்த்தியுண்டு – ஹேயப்ரத்யநீகமான விக்ரஹம்.  அத்தோடொத்து என்னுதல்.  இவை ஶரீரத்தோடு ஒக்கையாவதென், என்னில் – ப்ருதக்ஸ்தித்யநர்ஹாத4ாராதே4யப4ாவ,  நியந்த்ருநியாம்யபாவ, ஶேஷஶேஷிபாவமான ஶரீரலக்ஷணங்கள் இவற்றுக்கு உண்டாகையாலே.  த்ருக்ஷத்திலே தே3வத3த்தன் நின்றால் அது அவனுக்கு ஶரீரமாகாதிறே; இங்கு அங்ஙனன்றிக்கேயிருக்கை.  (இத்தனையும் இத்யாதி) – இவையடங்கலும் இருந்தபடியே தன்பக்கலிலே நிற்க.  தன்னையொழிந்த ஸகலபதார்த்தங்களும் தனக்கு ஶரீரதயா ஶேஷமாம்படியிருக்கிற இத்வைஶ்வர்யத்தில் ஒன்றும் குறையாதபடி வந்துநிற்கை.  உபயவிபூதியுக்தனாகையால் வந்த ஐஶ்வர்யமடையத் தோற்றும்படிக்கு ஈடாகவாயிற்று இங்கு வந்து நிற்கிறது.  ராஜபுத்ரன் ஒரு ஒலியலை உடுத்துத் தாழவிருந்தாலும் ஐஶ்வர்யத்திற் குறைந்து தோற்றாதிறே.  (செறுவில் இதயாதி) – செய்களில் செந்நெற்களானவை கரும்போடொக்க ஓங்காநின்றுள்ள திருக்குருகூரதனுள்: அவ்வூரில் பதார்த்தங்களில் ஒன்றிலொன்று குறைந்திருப்பதில்லை; தேஶவிஶேஷத்தில் எல்லாரும் ஒருபடிப்பட்டிருக்குமாபோலே.  (குறிய) – கோடியைக் காணியாக்கினாற்போலே, கண்ணாலே முகக்கலாயிருக்கும்படி வடிவை அமைத்தபடி.  (மாணுருவாகிய) – இட்டபோதோடு இடாதபோதோடு வாசியற முகமலர்ந்து போம்படியாக இரப்பிலே தழும்பேறினபடி.  (நீள்குடக்கூத்தனுக்கு) – குடக்கூத்தாடி விட்டபின்பும், அம்மநோஹாரி சேஷ்டிதத்தைப் பிற்பட்டகாலத்திற் கேட்டார்க்கும் ஸமகாலத்திலே கண்டாற்போலே ப்ரீதிபிறக்கும்படியாயிற்றுக் குடக்கூத்தாடிற்று.  (ஆள்செய்வதே) – அச்சேஷ்டிதந்தானே அடிமையிலே மூட்டும்; நீங்கள் இசையுமத்தனையே வேண்டுவது.

பதினொன்றாம் பாட்டு

ஆட்செய்தாழிப்பிரானைச்சேர்ந்தவன் வண்குருகூர்நகரான்
நாட்கமழ்மகிழ்மாலைமார்பினன் மாறன்சடகோபன்
வேட்கையாற்சொன்னபாடல் ஆயிரத்துள்இப்பத்தும்வல்லார்
மீட்சியின்றிவைகுந்தமாநகர் மற்றதுகையதுவே.

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்

ப:- அநந்தரம், இத்திருவாய்மொழியை அப்யஸித்தவர்களுக்குப் பரமபதம் கையிலேயென்று பலத்தை அருளிச்செய்கிறார்.

ஆள்செய்து – (பரோபதேஶமுகமான) வாசிககைங்கர்யத்தைப் பண்ணி, ஆழிப்பிரானை – (ஆஶ்ரிதாநுப4ாத்யமான) திருவாழியைக் கையிலேயுடைய உபகாரகனை, சேர்ந்தவன் – ப்ராபித்தவராய், வண் குருகூர்நகரான் – விலக்ஷணமான திருநகரிக்கு நிர்வாஹகராய், நாள்கமழ் – அபிநவபரிமளத்தையுடைய, மகிழ்மாலை – திருமகிழ்மாலையை, மார்பினன் – மார்பிலேயுடையராய், மாறன் – மாறனென்கிற குடிப்பேரையும், சடகோபன் – (ப3ாஹ்யகுத்ருஷ்டிகளானஶடரை நிரஸிக்கையாலே) ஶடகோபரென்னும் திருநாமமுடைய ஆழ்வார், வேட்கையால் – (ப43வத்விஷயத்திலே) அபிநிவேசத்தாலே, சொன்ன – அருளிச்செய்த, பாடல் – க3ாநரூபமான, ஆயிரத்துள் – ஆயிரந்திருவாய்மொழியிலும்,  இப்பத்தும் – (பரோபதேஶமான) இப்பத்துப்பாட்டையும், வல்லார் – (அர்த்தாநுஸந்தாநத்தோடே) அப்யஸிக்கவல்லார்கள், கையது – கையது, மற்று – இதினுடைய அப்யாஸமாகிற ப்ரயோஜநத்துக்குமேலே, அது – அத்வருகுண்டாய், மீட்சியின்றி – புநராத்ருத்தியில்லாத, வைகுந்தம் – ஸ்ரீவைகுண்டமாகிற, மாநகர் – மஹாநகரமானது.  இது அறுசீராசிரியவிருத்தம்.

வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே ஶரணம்

ஈடு: நிகமத்தில்,  இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பரமபதம் ஸுலப மென்கிறார்.

(ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன்) – அடிமைசெய்து ஸர்வேஶ்வரனைக் கிட்டினவர்.  முறையிலே ஸர்வேஶ்வரனைப்பற்றினவ ராயிற்று இவர்.  அதாவது – “விசித்ராதேஹஸம்பத்திரீஶ்வராய” என்கிறபடியே, அவன்கொடுத்த உபகரணங்களைக் கொண்டு அப்ராப்த விஷயங்களிலே போகாதே, “தந்த நீ கொண்டாக்கினை” (2.3.4) என்கிறபடியே வகுத்த விஷயத்துக்கே ஶேஷமாக்கிக்கொண்டு கிட்டுகை.  ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டுபோலே காணும்.  தான் த்ருத்தவானாய்க்காணும் இவரை த்ருத்தியிலே அந்வயிப்பித்தது.  கையில் திருவாழி சேர்ந்தாற்போலேயாயிற்று இவரும் சேர்ந்தபடி.  (சேர்ந்த) – கெடுமரக்கலம் கரைசேர்ந்தாற்போலே. ஆட்செய்கையாவது – அடிமைசெய்கை.  அடிமைதான் த்ரிவிதம் – மாநஸ வாசிக காயிகங்கள்.  இவற்றில், மாநஸகாயிகங்களுக்கு ஆளல்லர்; என்றியவென்னில்: – “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” (பெரிய.திரு. 34) என்கையாலே.  இனி, வாசிகமொன்றுமேயானால்,  வாசிகமாகத் திருவாய்மொழிபாடி அடிமை செய்தா ரென்கிறதோ? என்னில்: – அன்று, அப்படியாமன்று இப்பாசுரம் “முனியே நான்முக” (10.10.1)னிலேயாகவேணும்; இல்லையாகில், ஸர்வஸங்க்ரஹமான முதல்திருவாய்மொழியிலேயாகிலும் ஆகவேணும்; இல்லையாகில் இவர் வாசிகமாக அடிமைசெய்த “புகழுநல்லொருவ” (3.4.1)னிலேயாகப்பெறில் முக்யம்.  ஆனால், தேவதாந்தரபரத்வநிரஸநபூர்வகமாக ஸர்வேஶ்வரனுடைய பரத்வத்தை அருளிச்செய்கையாலேயானாலோவென்னில்: – அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும்.  பரத்வநிர்ணயத்திலே பரோபதேஶமுமாகையாலேயானாலோ வென்னில்: – அதுவாகில், “திண்ணன்வீட்” (2.2.1)டிலேயாதல், “அணைவதரவணையி” (2.8.1)லே யாதலாக அமையும்.  ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்வம் அருளிச்செய்கையாலேயானாலோ வென்னில்; அதுவுமொண்ணாது; அது “செய்யதாமரைக்கண்ண” (3.6.1)னிலேயாக அமையும்.  பரோபதேஶம் பண்ணுகையாலே சொல்லிற்றானாலோவென்னில்: -அதுவு மொண்ணாது; “வீடுமின்முற்றவும்” (1.2.1) தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேஶம்பண்ணினார்; அவற்றிலுமாகப் பெற்றதில்லை.  ஆனால், ஏதாவதென்னில்; – இவ்*ஒன்றுந்தே*விலே, ” ‘திருக்குருகூரதனுள்’ ‘பரன்திறமன்றிப்’ ‘பல்லுலகீர்’ ‘தெய்வம்மற்றில்லை பேசுமினே’ ” என்று – பொலிந்துநின்றபிரானே ஸர்வஸ்மாத்பரனென்று இவர் அருளிச்செய்யக் கேட்டு, “கபாலநன்மோக்கத்துக்கண்டுகொண்மின்” (4.10.4) என்னக்கண்டு, ஜகத்தாகத் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்களாயிற்று; இவர்தாம் அவர்களுக்கு மங்களாஶாஸநம் பண்ணும்படியிறே அவர்கள்தாம் திருந்தினபடி.  “பொலிக பொலிக” (5.2.1) என்று இதுக்கென்ன ஒருதிருவாய்மொழி நேருகிறாரிறே.  ஸர்வேஶ்வரன் அவதரித்துத் திருத்தப்பார்த்தவிடத்தும் திருந்தாத ஸம்ஸாரத்திலே இவர்திருத்தத் திருந்தினபடி; இனி இவர்க்குத் தத்வநிர்ணயம் பண்ணவேண்டாதபடி “இடங்கொள் சமயத்தையெல்லா மெடுத்துக்களைவனபோலே தடங்கடற்பள்ளிப் பெருமான்தன்னுடைப் பூதங்களே” (5.2.4) யாம்படி(யாயிற்று.  இப்படி) திருத்துகையாலே – ஆட்செய் தாழிப்பிரானைச் சேர்ந்தவ னென்கிறார்.  (வண்குருகூர்நகரான்) – இந்நன்மைக்கு அடி அவ்வூரில் பிறப்பாயிற்று.  (நாள்கமழ் மகிழ்மாலைமார்பினன்) – “நண்ணாதார் முறுவலிப்ப” (4.9.1)விலே – ஸம்ஸாரிகள் படுகிற க்லேஶத்தை அநுஸந்தித்து, சாத்தின மாலையும் வாடியிருந்தது முன்பு; இப்போது – ப43வத்பரத்வத்தை உபபாதித்து, ‘இனி இவர்களுக்கு ஒரு குறையில்லை’ என்று தேறினபின்பு, இட்டமாலையும் செவ்விபெற்றதாயிற்று.  (மாறன்சடகோபன்) – ப43வத்ப்ராப்தி ப்ரதிபந்தகமானவற்றுக்கெல்லாம் ம்ருத்யுவானவர் .  (வேட்கை இத்யாதி) – சிலர் த3ாந்தராய் வந்துகேட்க,  சொல்லுகிறாரன்றே; தம்முடைய அபிநிவேஶாதிஶயத்தாலே அருளிச்செய்த பாடலாயிரத்திலும் இப்பத்தையும் வல்லார் கையது, மீட்சியின்றி வைகுந்தமாநகர்.  (மற்றது; லீலாவிபூதி) இரண்டும் இவர்கள் கையது.  மற்று என்கிற இது – ஒரு அத்யயமாய், புநராத்ருத்தியில்லாத பரமபதவிபூதியானது அவர்கள்கையது.  இப்பத்தும்பத்தாக அவர்கள்கையது பரமபதம்.  அன்றிக்கே, ப43வத்பரத்வ ஜ்ஞாநமே ப்ரயோஜநம்; ஜ்ஞாநாநுரூபமான தேசமும் அவர்களுக்கு ஸுலபம்.  மற்றதான வைகுந்தமாநகருண்டு – ஸம்ஸாரத்துக்கு எதிர்த்தட்டானது, அது அவர்கள் கையது என்னவுமாம்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்

வடக்குதிருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

 

த்ரமிடோபநிஷத் ஸங்கதி – ஒன்றுந்தேவும்

பந்தேஸமேபிஹரிணாநிகிலாத்மராஶே:

ஸம்ஸாரஹேதுமிதரேஷுபரத்வபோதம்।

வேதேதிஹாஸமுகத:பரிஹருத்யஶௌரே:

அர்சாதநோஸ்ஸதஶமேவ்யவ்ருணோத்பரத்வம்||     ||40||

வாதிகேஶரி அழகிய மணவாள சீயர் திருவடிகளே ஶரணம்

த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளி —- ஒன்றுந்தேவும்

 

கல்பாந்தேபிஸ்திதத்வாத்ஸகலஸுரகணஸ்ரஷ்ட்ருபாவாத்ஜ்ஜநாநாம் ரக்ஷாத்யாபாதகத்வாத்சிவவிதிபரணாத்ஸர்வவேதாத்மபாவாத் । தத்தத்கர்மாநுரூபம்பலவிதரணதோவைநதேயத்வஜத்வாத் மார்கண்டேயாவநாதே:ப்ரபுமதஶடஜித்ப்ராஹஸர்வாமரோச்சம் ||              4-13

நித்யைஶ்வர்யம்துதுர்யே ஸஹஜபஹுலஸத்போக்யமந்யோந்யஸக்தம் க்லேஶாபாதிஸ்வதுல்யம் ஸ்வஜநக்ருதக்ருதார்தீக்ருதிம்ஸ்நேஹிவைத்யம் । ஸம்யுக்தம்ஸத்குணௌகைஸ்ஸ்வஜநபரிஹ்ருதோபேக்ஷ்யமிஷ்டார்தரூபம் ஶ்ரேஷ்டம்நிஶ்ஶேஷபோக்யாதமநுதஶதகேதேவதாஸார்வபௌமம் ||    4-14

வேதாந்தாசார்யர் திருவடிகளே ஶரணம்

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஒன்றுமிலைத்தேவுஇவ்வுலகம்படைத்தமால்*

அன்றியென ஆரும் அறியவே* – நன்றாக

மூதலித்துப்பேசியருள்மொய்ம்மகிழோன்தாள்தொழவே*

காதலிக்கும்என்னுடையகை.    ||40||

பெரியஜீயர் திருவடிகளே ஶரணம்

ஆழ்வார் திருவடிகளே ஶரணம், எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்,
ஜீயர் திருவடிகளே ஶரணம்.

பகவத்விஷயம் நான்காம் பத்து முற்றிற்று.

 

********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.