04-07 12000/36000 Padi

ஏழாம்திருவாய்மொழி

சீலமில்லா: ப்ரவேசம்

*******

:- ஆறாந்திருவாய்மொழியில், கீழ் “ஏத்துதலும்தொழுதாடும்” என்று பகவந் நாமஸ்ரவணத்தாற் பிறந்த ஆஸ்வாஸம் அவனைக் கிட்டியநுபவிக்கைக்கு உடலன்றியே அலாபத்தாலே ஆர்த்தராகைக்கு உடலாகையாலே அபிநிவேசாதிசயத்தையுமுடைய இவ்வாழ்வார் தமக்கு அநுபாவ்யனான ஸர்வேஸ்வரனுடைய – அகிலவஸ்து ஸத்தையும் அழியாமல் நோக்கும் அஸாதாரண ஸம்பந்தத்தையும், அநந்யார்ஹமாக்கி அநுபவிப்பிக்கும் ஔதார்யத்தையும், அநந்யார்ஹமான ஆஸ்ரிதர்பக்கல் அத்யந்தபத்யதையையும், அவர்களுக்கு ஆசாஜநகமான ஆபிரூப்யாதிசயத்தையும், அருந்தொழில் செய்தும் ஆஸ்ரிதர்க்கு அபேக்ஷிதங் கொடுக்கும்படியையும், ஆசைக்கு தீபகமான ஆந்தரஸ்திதியையும், அந்த அவஸ்த்தாநத்தினுடைய அதிசயித போக்யதையையும், போக்யதாநிபந்தநமான அபிநிவேசாதிசய ஜநகத்வத்தையும், அபிநிவிஷ்டர்க்கு அநுபாத்யமான அஸாதாரணசிஹ்நவத்தையையும், அகிலவேதவேத்யத்வத்தையும் அநுஸந்தித்து, ஏவம்விசிஷ்டனான போக்யபூதன்பக்கல் அநுப4வாபி4நிவேசத்தாற்பிறந்த ஆர்த்யதிசயத்தை அருளிச்செய்கிறார்.

ஈடு :- *வர்ஷேண பீ3ஜம்ப்ரதிஸஞ்ஜஹர்ஷ* என்று வர்ஷம் விழுந்தால் தன் உணர்த்தியாலன்றிறே பீஜம் பருவம் செய்கிறது; அப்படியே திருநாம ப்ரஸங்கத்திலே உணர்ந்தாரே.  “வண்துவராபதி மன்னனையேத்துமின்” (4.6.10) என்று அம்ருதஸஞ்ஜீவநியான திருநாமப்ரஸங்கமே ஸிஸிரோபசாரமாக உணர்த்தியுண்டாயிற்று; அத்தால் பெற்ற ப2லம் – முன்புத்தை மோஹத்தையும் இழக்கைக்கு உறுப்பான இத்தனை.  மோஹதசையில் அநநுஸந்தாநத்தாலே க்லேசமில்லை.  பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடலல்லாமையாலே க்லேசத்தை விளைக்க, அத்தாலே கூப்பிடுகிறார். உறக்கத்தில் பசி பொறுக்கலாம்.  உணர்ந்தால் உண்டன்றி நிற்கவொண்ணாதிறே.  உணர்ந்த அநந்தரம், பொறுக்கவொண்ணாதபடி தமக்குப் பிறந்த அலாப4க்லேசத்தையநுஸந்தித்து, அவன் ஆபத்துக்கு உதவும் ஸ்வபா4வனாயிருக்கிறபடியையும், ஆபத்துக்கு நிதாநமறிந்து பரிஹரிக்க வல்லனென்றும், ஆபத்துக்கு உதவுகைக்கீடான ப்ராப்தியையுடையனாவது, பிரிந்தால் பொறுக்கவொண்ணாதபடியான வடிவழகையுடையனாவது, ஆபத்துக்களிலே  விரோதியைப்போக்கி உதவுகைக்கு ஈடான சக்தியையுடையனாவது, அதுக்கீடான பரிகரமுடையனாவது, வரையாதே எல்லாரையுமொக்க ரக்ஷிக்கவல்லனாவது; இப்படியிருக்கத் தம் ஆற்றாமைக்கு உதவக்காணாமையாலே, பரமபதத்திலே யிருந்தானாகிலும் அவ்விருப்பு நிலைகுலைந்து வந்து முகங்காட்டும்படி ஆர்த்தியாலே, நிரம்பிற்று ஒரு கடல் கையெடுத்துக்கூப்பிட்டாற் போலே, கேட்டாரடைய நீராம்படி கூப்பிடுகிறார்; *ஹாராம ஹாலக்ஷ்மண ஹாஸுமித்ரே* என்றாப்போலே; *த2தாபி ஸூதேந *இத்யாதி – ஸ்ரீகௌஸல்யையார் பெருமாளைப் பிரிந்த ஆற்றாமையாலே கூப்பிட, ஸ்ரீஸுமந்த்ரன் ‘அவரைப் பிரிந்தோம் என்று கூப்பிட வேண்டா காணும், தாமேவந்து புகுருவர்காணும்’ என்று ஆஸ்வாஸவசநம் பண்ணினான்.  “ஸுதேந” – சொன்ன வார்த்தை ‘ஆப்தம்’ என்று கைக்கொள்ளவேண்டும்படி அந்தரங்கனாவது.  ஸாரதிகள் சொல்லுமதெல்லாம் ஆப்தமிறே.  “ஸுயுக்தவாதி3நா” – அதில்லையேயாகிலும் வார்த்தையைக்கேட்டால் ‘இது அப்படியே’ என்று விஸ்வஸித்து ஓடுகிற சோகம் தீரும்படி வார்த்தை சொல்லவல்லனாவது. “நிவார்யமாணா” – இவனாலே ‘இதுவேண்டா’ என்று தடுக்கப்படாநிற்கச் செய்தேயும். “ஸுதசோககர்–தா” – இப்படி இவன் இவனைப் போரப்பொலியச் சொல்லுங்காட்டில் நிவ்ருத்தமாகாதிறே, இவள் பிரிந்த விஷயத்தில் ஆற்றாமை – நெடுநாள் கூடிப்பெற்ற பிள்ளையைப் பிரிந்தால் த4ரிக்கப்போகாதிறே. “நசைவ தே3வீ விரராம கூஜிதாத்” – பிறர்கண்ணீரையும் மாற்றி, இதுக்குமுன்பு சோகமும் புதியதுண்ணாதே போந்தவள், கூப்பிடுகிற கூப்பீட்டில் நின்றும் ஓவிற்றிலள்; கூப்பிடுகிற போதுதான் கேட்டார்க்கடைய இரக்கம் பிறக்கும்படி குயில் கூவினாற்போலேகாணும் கூப்பிடுவது.  கூப்பிட்ட பாசுரம் “ப்ரியேதி புத்ரேதிச ராக4வேதிச” – பிரிந்தால் தரிக்க வொண்ணாதபடி எனக்கு இனியவரே! உம்மைப் பிரிந்தாருடைய ஆற்றாமைக்கு நிவர்த்தகரானவரே!  ஸர்வரக்ஷகர்குடியிலே பிறந்து பெற்ற தாயை நலியலாமோ!  என்று அவள் கூப்பிட்டாற்போலே இவரும் கூப்பிடுகிறார்.

முதல் பாட்டு

சீலமில்லாச்சிறியனேலும் செய்வினையோபெரிதால்
ஞாலமுண்டாய் ஞானமூர்த்தீ! நாராயணா! என்றென்று
காலந்தோறும்யானிருந்து கைதலைபூசலிட்டால்
கோலமேனிகாணவாராய் கூவியும்கொள்ளாயே.

:- முதற்பாட்டில், அகிலஸத்தையையும் நோக்கும் அஸாதாரண ஸம்பந்தத்தையுடைய நீ என்னை அங்கீகரியாதொழிகைக்கு நான் பண்ணின பாபாதிசயம் இருந்தபடியென்? என்கிறார்.

(அபேக்ஷாநிரபேக்ஷமாக ப்ரளயாபத்திலே), ஞாலம் – அகிலபதார்த்தத்தையும், உண்டாய் – அமுதுசெய்து ஸத்தையைநோக்கினவனே! ஞானம் – ஏவம்விதமான ரக்ஷணத்துக்கு விரகறிகைக்கு ஈடான விலக்ஷணஜ்ஞாநத்தை, மூர்த்தீ – வடிவாகவுடையவனே! நாராயணா – இப்படி விரகறிந்து ரக்ஷிக்கைக்கீடான அப்ருதக்ஸித்தஸம்பந்தத்தையுடையனானவனே! என்றுஎன்று – என்றென்று பலபடியும் உன் ஸ்வபா4வத்தைச் சொல்லி, காலந்தோறும் – ஒருகாலமொழியாமல் எல்லாக்காலத்திலும், யான் – (வ்யதிரேகத்திலழியும்படியான ஸ்வரூபத்தையுடைய) நான், இருந்து – (‘உன்னைக்காணவேணும்’ என்கிற ஆசாபந்தமடியாக) வருந்தியிருந்து, கைதலை பூசலிட்டால் – கை தலையிலேயாம்படி மஹாத்வநியாகக் கூப்பிட்டால், கோலம்மேனி – தர்சநீயாகாரமான உன்வடிவை, காண – நான் கண்டு அநுபவிக்கும்படி, வாராய் – வருகிறிலை; (அது உன்தரத்துக்குப் போராதாகில்) கூவியும் கொள்ளாய் – என்னை அங்கே அழைத்துங்கொள்ளுகிறிலை; (ஆதலால், நான்) சீலம் இல்லா சிறியன் ஏலும் – நன்றான சரிதம் இன்றியே அறிவிலியான க்ஷுத்ரனாயிருந்தேனேயாகிலும், செய்வினை – (நீ ஜகத்ஸ்ருஷ்டிபண்ணுமோபாதி ஸங்கல்பமாத்ரத்தாலன்றியே) காயிகபர்யந்தமாக அநுஷ்டித்த பாபம், பெரிதால் – அதிமஹத்தாயிருந்ததிறே.

ஓ என்னும் அசை – வெறுப்பின்மிகுதியைக் காட்டுகிறது.  சீலம் – ஸுசியான சரிதம்.

ஈடு:- முதற்பாட்டு.  நெடுங்காலம் கூப்பிடச்செய்தேயும், விஷயீகரியாதபடியாக நான் பண்ணின பாபத்தின் மிகுதி இருக்கிறபடி என்? என்கிறார்.

(சீலமில்லா) – சீலமாவது – நன்மை.  அதாவது – வ்ருத்தம்.  வ்ருத்தத்தை – சீலமென்னக்கடவதிறே.  இப்போது நன்மையில்லாவிட்டால், மேல் ஒரு நன்மை உண்டாக்கிக் கொள்ளுகைக்கு ஓராஸ்ரயமுமில்லைகிடீர் என்கிறார்.  (சிறியனேலும்) – ஆத்மா அணுவாய், ஜ்ஞாநம் விபுவாயிறேயிருப்பது; ஆற்றாமையாலே ஜ்ஞாநப்ரபை அடங்கி, ஆத்மஸத்பா4வமாத்ரமே ஆயிற்றுக்காணும். இப்போதும் ஒரு நன்மையின்றிக்கே, மேலும் ஒரு நன்மை ஆர்ஜித்துக்கொள்ளுகைக்கு ஆஸ்ரயமில்லாதபடி சிறியனாயிருந்தேனேயாகிலும்.  (செய்வினையோ பெரிதால்) – பண்ணின பாபத்தைப் பார்த்தவாறே, சிதசிதீஸ்வரதத்த்வத்ரயத்தையும் விளாக்குலைகொள்ளும்படி பெருத்திருந்தது.  ஸம்ஸாரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கும் ஈஸ்வரனுடைய குணங்களிலும், அவன்தந்த பக்திரூபாபந்ந ஜ்ஞாநத்திலுங்காட்டில் பெரிதாயாயிற்று இருக்கிறது; அந்தஜ்ஞாநமும் அகிஞ்சித்கரமாய், அக்குணங்களும் நடையாடாநிற்கச் செய்தேயிறே பாபம் அநுவர்த்திக்கிறது.  லோகத்தில் பெரியது தத்த்வத்ரயமாயிற்று; அதிலும் பெரியதாயிற்று, இவருடைய ஜ்ஞாநம்; இத்தையும் விளாக்குலைகொள்ளும்படிகாணும் பாபத்தின்பெருமை (செய்வினை) – இதுதான் ஈஸ்வரனைப்போலே.  ஸங்கல்பித்து வந்ததன்றே, இதுஅடையச் செய்ததற்றதிறே.  (ஓ) – இதென்ன ஆஸ்சர்யம்! அன்றிக்கே, விஷாதஸூசகமாதல்.  திருநாமப்ரஸங்கத்திலே உணரும்படியானாராகில் இவர்க்குப் பாபமாவதென்? என்னில்; அப்படி ஸத்தாதா4ரகமான வஸ்துவை இப்போது யதாமநோரதம் அநுபவிக்கப்பெறாமையாலே இழக்கைக்கு அடி பாபமேயிறே.  “மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்” என்றாளிறே பிராட்டியும்.  விரோதிவர்க்கத்தைக் கிழங்கெடுத்து என்னை ரக்ஷிக்கைக்கீடான சக்தியையுடையராவது.  இதுக்கு முன்பெல்லாம் ப்ரதிபக்ஷம் மண்ணுண்ண வளர்ந்து போந்தவர்களாவது, நான்தான் தங்களை அழியமாறியும் ரக்ஷிக்க வேண்டும்படி அவஸந்நையாயிருப்பது; இப்படியிருக்க, அவர்கள் என்னைக் கடாக்ஷியாதிருந்தார்கள்; இதுக்குஅடி; அவர்கள் பக்கலிலேயாதல் என்பக்கலிலேயாதல் ஆகவேணுமிறே; அவர்கள் பக்கல் ஒருகண்ணழிவு சொல்லலாயிருந்ததில்லை; இனி என்னுடைய பாபமேயாமித்தனையிறே.  (கிஞ்சித்) – நாம் தாம் ஸர்வஜ்ஞைகளல்லோமிறே எல்லாம் அறிகைக்கு; அறியாதிருப்பது ஏதேனுமொன்று உண்டாகவேணுமிறே, கார்யகல்ப்யமிறே.

(ஞாலமுண்டாய்) – பாபப்ராசுர்யத்தை அநுஸந்தித்தால் ப்ராயஸ்சித்தம் பண்ண இழியுமத்தனையிறே, ‘தந்தாமுடைய யத்நத்தாலே பேறு’ என்று இருப்பார்; இவர் ‘அவன் கையிலே இதுக்குப்பரிஹாரம்’ என்றிறே அறுதியிட்டிருப்பது; ‘எப்போதும் “கைகழலாநேமியான்நம்மேல் வினைகடிவான்” (பெரியதிரு.87) என்றிறே சொல்லுவது; ‘இது’தான் ஸுதர்சநமாயிருக்குமிறே, “ப43வதோப3லேந” என்கிறபடியே; ஆகையாலே, அவன்படியை அநுஸந்திக்கிறார்.  “க3ஜம்வா வீக்ஷ்ய” இத்யாதி.  (ஞாலமுண்டாய்) ” ‘இனிப்பரிஹாரமில்லை’ என்னும்படியான ஆபத்துக்களிலே வந்து உதவுமவனன்றோ? பூமியாக ப்ரளயங்கொள்ளிலோ ரக்ஷிக்கையாவது, எல்லார்க்குமுண்டான ஆபத்து ஒருவனுக்கே உண்டானால் உதவலாகாதோ? தந்தாமுடைய ஆபத்து அறிந்து கூப்பிடாதார்க்கோ உதவலாவது? ஆபத்தறிந்து கூப்பிடுவார்க்கு உதவோம் என்னும் நிர்ப்பந்தமுண்டோ? ப்ரளயங்கொண்ட பூமி, தன்னைத்தானே எடுக்க யத்நம்பண்ணுமன்றிறே தந்தாம் கர்மங்களுக்குத் தாந்தாம் பரிஹரித்துக்கொள்ள ப்ராப்தியுள்ளது; ஸம்பந்தமும் ஆபந்நராகையுமன்றோ உனக்கு ரக்ஷிக்கைக்கு வேண்டுவது.”  “நாம் உதவும் ஸ்வபா4வரானாலும், பேறு இத்தலையாலேயானபின்பு பேற்றுக்கீடான ஜ்ஞாநம் வேணுங்காணும் உதவும்போது” என்ன, (ஞானமூர்த்தீ) – என்னை நித்யஸம்ஸாரியாக்கிக் கொள்ளுகைக்கு ஈடான அறிவன்றோ என்கையிலுள்ளது.  இத்தைக்கழித்து என்னையும் நல்வழிபோக்கும் அறிவுள்ளது உன்கையிலேயன்றோ? “ஆமாறொன்றறியேன்நான்” (4.9.2), “ஆமாறறியும்பிரானே”  (பெரியா.திரு. 2.7.8),   “நைவ கிஞ்சித் பரோக்ஷந்தே” இத்யாதி – நான் அறிவது ஒன்றுமில்லை, நீ அறியாதது ஒன்றுமில்லை; நான் செய்யவல்லது ஒன்றுமில்லை, நீ செய்யமாட்டாதது ஒன்றுமில்லையானால், ஆர் காரியம் ஆர்க்குப் பரம்? ஒருவனுக்குக் கண்தோற்றாதே காலும் நடைதாராதே யிருந்தது; ஒருவனுக்குக் கண்ணும் தோற்றிக் காலும் நடைதருவதுமாயிருந்ததானால், ஆர்க்கு ஆர் வழிகாட்டிக் கொடுபோவார்? நிதாநமறிந்து பரிஹரிக்கைக்கு ஈடான அறிவையே ஸ்வரூபமாகவுடையவனே! ஆபத்துக்கு உதவுமவனுமாய் அறிந்து பரிஹரிக்கைக்கு ஈடான ஜ்ஞாநமும் உண்டானாலும், ப்ராப்தியுள்ள விஷயங்களிலேயன்றோ உதவுவது என்ன, (நாராயணா) – இப்படி ரக்ஷிக்க ப்ராப்தனானவனே! இதுதான் சரீரதயா சேஷமென்றிறே இத்தால் சொல்லுகிறது.  ஆனால், கேவலம் சரீரமோ சரீரியோ பெறுகைக்கு யத்நிப்பது? உடையவனன்றோ உடைமைபெறுகைக்கு வ்யாபரிப்பான்?  (என்று என்று) – இவ்விரட்டிப்புக்குக் கருத்து – நாராயணசப்தத்துக்கு உபாயத்வோபயோகியான வாத்ஸல்யாதிகளும் உபேயத்வோபயோகியான சேஷித்வாதிகுணங்களும் அர்த்தமாகையாலே, அவ்விரண்டையும்பற்ற இவ்விரட்டிப்பு.  இனி இவர்தாம் ஒரு ப்ரயோஜநத்துக்காக ஒருகால் சொல்லி, ‘அது கைபுகுந்தது’ என்று ஆறியிருக்கு மவரல்லரே; நம் உபாயத்தில் வர்த்தமாநம்போலே இதுதான் ப்ரயோஜநமா யிருக்குமே இவர்க்கும்.  “நமோநாரணாவென்று ஓவாதுரைக்கும் உரை”  (முதல். திரு. 95) யிறே இதுதான்.

(காலந்தோறும்) – ஒரு காலத்திலே இத்தையுஞ்சொல்லி, வேறொருகாலத்திலே ‘வேறொருவஸ்து உபாஸ்யம்’ என்று அதிலே கால்வாங்குகிறேனோ? (யான்இருந்து) – படுவதெல்லாம் பட்டும் நூறேபிராயமாக இருக்கவேணுமோ? குணாதிகவிஷயத்தைப் பிரிந்தால் முடியவொட்டாது,  ‘இன்னமும் காணலாமோ?’ என்னும் நசை.  (கைதலைபூசலிட்டால்) – தலையிலே கைவைத்தால் மெய்காட்டவேண்டாவோ? தலையில் கைவைத்துக்கூப்பிட்டால் என்னுதல், கையும் தலையுமான பூசல் மாறாதே ஒருபடியே இருந்தாலும் என்னுதல்.  (கோலமேனி) – ஆசைப்பட்டார்க்கு அன்றாகில் அவ்வடிவு ஆர்க்கு? பக்தாநாமன்றோ? சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப்போலே; வேட்டார்க்கு உதவாத தண்ணீராவதே! ‘மரதகமணித்தட’ (10.1.8)மிறே.  (காண்) – கருமுகைமாலை தேடுவார், சூடவன்றிக்கே சும்மாட்டைக்கொள்ளத் தேடுவர்களோ? கிட்டினாலும் ஸதாபஸ்யந்தியிறே;  ‘காரார்திருமேனி காணுமளவு’ (சிறியதிருமடல் 69)மிறே இங்கும்.  ‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’ (நான்.திரு. 39) இத்தனையிறே; “த4ந்யா: பஸ்யந்தி மே நாதம்” – நாடாகக் கொள்ளைகொள்ளாநின்றதுகிடீர் என்சரக்கை என்றாளிறே.  (வாராய்) – அவ்வடிவைக்காணும்போது என்றும் அத்தலையாலே வரப்பெற இருக்கைபோலே காணும் முறை காணவென்று – ப்ராப்யம் சொல்லிற்று; வாராயென்று – ப்ராபகம் சொல்லுகிறது.  வருகிறிலை; வாராயென்றால், வளைக்கவொண்ணாதிறே.  நீ முறைசெய்யப் பார்த்திலையேயாகிலும் என் க்லேசம் தீருமத்தனையே எனக்கு வேண்டுவது.  (கூவியும்கொள்ளாயே) – முறைகெட அழைத்தாகிலும் கொள்ளுகிறிலை.  காலந்தோறும் யான்இருந்து கைதலைபூசலிட்டால் கோலமேனிகாணவருகிறிலை, கூவியும் கொள்ளுகிறிலை; அதுக்குஅடி, சீலமில்லாச்சிறியனேலும் செய்வினையோபெரிதால்.  நாராயணனென்கையாலே – ப்ராப்யம் சொல்லிற்று; சிறியனென்கையாலே – ப்ரத்யகாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று; வாராயென்கையாலே – உபாயம் சொல்லிற்று; காணவென்கையாலே – பலம் சொல்லிற்று; செய்வினையோபெரிதென்கையாலே – விரோதி சொல்லிற்று; ஆக, அர்த்தபஞ்சகமும் இதிலே சொல்லிற்று.

இரண்டாம் பாட்டு

கொள்ளமாளாஇன்பவெள்ளம் கோதிலதந்திடும் என்
வள்ளலேயோ! வையங்கொண்டவாமனாவோ! என்றென்று
நள்ளிராவும்நன்பகலும் நானிருந்தோலமிட்டால்
கள்ளமாயா! உன்னை என்கண்காணவந்து ஈயாயே.

:– அநந்தரம், என்னை அநந்யார்ஹமாக்கி அநுபவிப்பித்த ஔதார்யத்தைச் சொல்லிக் கூப்பிட்டால், என் கண்காண வந்து உன்னை எனக்குத் தருகிறிலையென்கிறார்.

வையம் – (அந்யாபிமாநவிஷயையான) பூமியை, கொண்ட – (அநந்யார்ஹையாம் படி) அளந்து கொள்ள அர்த்தித்வத்தையுடைய, வாமனாவோ – வாமநனே! (அந்த உபகாரகத்வத்தை என்னையநுபவிப்பித்து), கொள்ள – அநுபவிக்க அநுபவிக்க, மாளா – எல்லைகாணவொண்ணாத, இன்பவெள்ளம் – ஆநந்தஸமுத்ரத்தை, கோதுஇல – (அநுபவதசையில் த்ருப்தியாதல், அந்யாகாங்க்ஷையாதலாகிற) கோது இல்லாதபடி, தந்திடும் – ஆந்தரமாக உபகரிக்கும், என்வள்ளலேயோ – என்னுடைய மஹோதாரனே! என்றுஎன்று – என்றென்று விஷண்ணனாய்ச்சொல்லி, நள்இராவும் – மத்யராத்ரத்திலும், நன்பகலும் – பதார்த்தப்ரகாஶகமான பகலிலும், நான் – (உன்னை யொழியச்செல்லாமையையுடைய) நான், இருந்து – (அந்ய வ்யாபாரக்ஷமனன்றியே) இருந்து, ஒலமிட்டால் – கூப்பிட்டால், கள்ளம் மாயா – (கண்ணுக்குத்தோற்றாதே க்ருத்ரிமரைப்போலே) நெஞ்சுக்குள்ளே யிருக்கிற ஆஸ்சர்யபூதனே! உன்னை – (கண்டல்லது தரிக்கவொண்ணாத) உன்னை, என் கண் காண – (ஆசைப்பட்ட) என் கண்கள் காணும்படி, வந்து ஈயாய் – வந்து தருகிறிலை; தரவேணு மென்றுமாம்.  இங்கு,
ஓ என்கிறவைகள் – விஷாதத்தைக் காட்டுகிறன.

ஈடு:- இரண்டாம்பாட்டு.  பண்டுபண்ணின உபகாரங்களைச் சொல்லி, அப்படியுபகரித்து உன்சுவட்டையறிவித்து, இப்போது நான் கூப்பிட முகங்காட்டாதே எழவாங்கியிருக்கைபோருமோ? என்கிறார்.

(கொள்ளமாளா இன்பவெள்ளம்) – அநுபவிக்க அநுபவிக்கக் குறைபிறவாதபடியான ஆநந்தஸாகரம் “வீவிலின்பம்மிகவெல்லை நிகழ்ந்தனன்” (4.5.3) என்றதைச் சொல்லுகிறார்.  (கோதில தந்திடும்) – ஆநந்தத்துக்குக் கோதாகிறது – அநுபவித்தால் ‘அமையும்’ என்றிருத்தல், விஷயாந்தரத்திலே அபேக்ஷையைப் பிறப்பித்தல் செய்கை; இது அங்ஙனன்றிக்கே, அநுபவிக்க அநுபவிக்கத் தன் பக்கலிலே அபேக்ஷையைப் பிறப்பித்து, இதரவிஷயவைராக்யத்தையும் பிறப்பித்ததான ஆநந்தத்தை; ஆக, கோதிலவாய்க் கொள்ளக்கொள்ள மாளாதபடியான ஆநந்தவெள்ளத்தைத் தந்த  (என்வள்ளலேயோ) – தருகிறபோது உன்பேறாக உபகரித்து, இப்போது என்னது பேறாக்கி, நான்கூப்பிட இருக்கிறாயே? தன்பேறாக உபகரிக்கையிறே – வள்ளல்தனமாகிறது.  “ஆநந்த3மய:*, “ஆநந்தோ3ப்3ரஹ்ம” என்கிற தன்னை உபகரித்தபடியிறே.  இப்படி இப்போது கூப்பிடப்பண்ண நினைத்திருந்தால், “வீற்றிருந்தேழுல” (4.5)கிலே அப்படி என்னை அநுபவிப்பிக்கவேணுமோ? சிறியதுக்கு இனியது இட்டுக் கெடுத்தான்காணும்.  ‘சிறியன்’ (4.7.1) என்றாரே.  (வையங்கொண்ட வாமனாவோ) – இரந்தார்க்குக் கொடுக்கைக்காக நீ இரக்குமவனன்றோ? ‘த்ரைலோக்யத்தையுமிழந்தேன்’ என்று காலிலே விழுந்த இந்த்ரனைக் கண்ணநீரை மாற்றுகைக்காக, ஸ்ரிய:பதியான தன்னை இரப்பாளனாக்கினானிறே; நீ இரந்துதருகையொழிய நான் இரந்து கூப்பிட இருப்பதே இப்போது! (என்று என்று) – இந்த்ரனைப்போலே ராஜ்யம் பெற்றுப் போகிறாரன்று, மஹாபலியைப்போலே ஔதார்யங்கொண்டாடிப்போகிறாரன்று, எப்போதும் இத்தையே சொல்லி.  வையங்கொண்டபின்பும் வாமநவேஷமாயிற்று இவர் திருவுள்ளத்தில் ஊற்றிருந்தது.  (நள்ளிராவும் நன்பகலும்) – நள்ளென்று நடுவாதல், செறிவாதல், ராத்ரியில் அல்லாத பதார்த்தங்களினுடைய ஒலி மாறினால் வருவதோரொலி யுண்டு, அதினுடைய அநுகாரமாதல்.  எல்லாவற்றாலும் – மத்4யராத்ரமென்றபடி.  “ய ஏஷு ஸுப்தேஷு” என்று நீ உணர்ந்துநோக்குங்காலத்திலே, நான் உணர்ந்து கூப்பிடும்படி பண்ணுவதே! (நன்பகல்) – “தீர்ப்பாரையாமினி” (4.6)யோடு “வீற்றிருந்தேழுல” (4.5) கோடுவாசியற பகவத் ஸ்பர்சம் மாறாதேபோருகையாலே நன்பகலென்கிறார்.  புறம்பு ஒரு விஷயத்தை அநுபவித்தால், காணாதபோது மறந்து வேறொன்றிலேயும் நெஞ்சை வைக்கலாம்படி யிருக்குமிறே.  அன்றிக்கே, நன்பகலென்று செவ்வாய்க்கிழமையை ‘மங்களவாரம்’ என்னுமாபோலே, அவனைக் காணப்பெறாமையாலே ஸூந்யமான காலமென்னவுமாம்.  (நான் இருந்து) – கூப்பிடுகைக்கு க்ஷமனல்லாதபடி துர்ப்பலனான நான் இருந்து.  (நான் இருந்து) – வீவிலின்பமிகவெல்லை நிகழ்ந்த நான் இருந்து.  (ஓலமிட்டால்) – கூப்பிட்டால்.  (கள்ளமாயா) – கண்ணுக்கு அவிஷயமாக்கி, நெஞ்சில்மறக்கவொண்ணாதபடி பண்ணுகிற ஆஸ்சர்யபூதனே! (உன்னை) – கண்டல்லது தரிக்கவொண்ணாதபடி வைலக்ஷண்யத்தையுடைய உன்னை; கோலமேனியிறே; (என்கண்காண) – விரும்பும் என்கண்கள் காணும்படி.  (வந்தீயாயே) – நடையழகுகண்டு வாழும்படி முன்னே நடந்துவந்து தரவேணும்.  வந்துதோற்றும்போதுதான் “ந ஜீவேயம்*, “ஹ்ரீரேஷாஹி” என்னும்படியிருக்கையாலே, ‘இவன்பக்கல் ஒரு குறையில்லையாகாதே’ என்று தோற்றும்படியாயிற்று வருவது.  உன்னை நீயே கொண்டுவந்து ஈயவேணும்.  ஈகை – கொடுக்கை.  தந்தோமே – அல்லாதார் இப்படிக் கூப்பிடாதிருக்க, உம்மை நம்மையே சொல்லிக் கூப்பிடப்பண்ணினோமே யென்ன; அத்தால் போராது, (கண்காணவந்தீயாய்) மாநஸாநுபவத்தாலே போராது; கண்ணுக்கு இலக்காம்படி வரவேணும்.  ஈகிறிலை யென்னவுமாம்; “செய்வினையோபெரிதால்” (4.7.1) என்றத்தோடே அந்வயம் அப்போது.  அன்றிக்கே, ஈயவேணு மென்னவுமாம்.

மூன்றாம் பாட்டு

ஈவிலாததீவினைகள் எத்தனைசெய்தனன்கொல்?
தாவிவையங்கொண்டஎந்தாய்! தாமோதரா! என்றென்று
கூவிக்கூவிநெஞ்சுருகிக் கண்பனிசோரநின்றால்
பாவிநீயென்றொன்றுசொல்லாய் பாவியேன்காணவந்தே.

:– அநந்தரம், அநந்யார்ஹவிஷயத்தில் அத்யந்தபவ்யனான உன்னை அழைத்துக் கூப்பிட்டால், ‘பாபத்தைப் பண்ணின நீ கூப்பிடுகிறதென்?’ என்று என்முன்னே வந்து ஒரு வார்த்தை சொல்லுகிறிலை என்கிறார்.

(*யத்ப்3ரஹ்மகல்பநியுதாநுப4வேப்யநாஸ்யம்” என்று அநந்தகல்பம் அநுபவியா நின்றாலும்), ஈவு இலாத – விநாசமின்றியே, தீவினைகள் – (பரிதாபஹேதுவாம்படி) க்ரூரமான பாபங்களை, எத்தனை – அஸங்க்யாதமாம்படி எத்தனை, செய்தனன்கொல் – அநுஷ்டித்ததேனோ? (அது என்னென்னில்), தாவி – (திருவடிகளாலே) அளந்து, வையம் கொண்ட – ஜகத்தை அநந்யார்ஹமாக்கிக்கொண்ட, எந்தாய் – என்னுடைய ஸ்வாமியே! தாமோதரா – (அநந்யரானார்க்கு அத்யந்தபவ்யன் என்று தோன்றும்படி யசோதை கட்டின) தாம்பின்தழும்பை உதரத்திலேயுடையவனே!, என்றுஎன்று – என்றென்று, கூவிக்கூவி – இடைவிடாதே பலகாலும் அழைத்து, நெஞ்சு உருகி – நெஞ்சு நீராயுருகி, கண் பனி சோர – அது கண்ணீராய்ச் சோரும்படி, நின்றால் – (ஆர்த்தியோடே) முழுக்கநின்றால், பாவியேன் – (உன்னைக் காணப்பெறாத) பாபத்தையுடைய நான், காண – காணும்படி, வந்து – முன்னேவந்து, நீ – நீ, பாவி – ‘பாபிகாண்’, என்று – என்று, ஒன்றுசொல்லாய் – ஒருவார்த்தை சொல்லுகிறிலை.  காணவந்து சொல்லப்பெறில் அதுவும் அமையுமென்று கருத்து.  ஈவு – வ்யயம்.

ஈடு:- மூன்றாம்பாட்டு.  எனக்கு உன்னைக் காட்டாதொழிந்தால், ‘நீ என்னைக் காண்கைக்கு பா4க்யம்பண்ணிற்றிலை’ என்றாகிலும் என்கண்முகப்பே வந்து ஒன்று சொல்லுகிறிலை என்கிறார்.

(ஈவிலாத தீவினைகள்) – நான்தான் பெரியபாபத்தைப் பண்ணுகிறேன்; அநுபவித்தாலும் மாளாதபடியான பாபத்தைப் பண்ணவேணுமோ? “நாபு4க்தம் க்ஷீயதே கர்ம” என்கிற வசநமும் என்னளவிலே பொய்யோ? புஜித்தாலும் குறையாதிருக்கவேணுமோ? புஜித்ததோவென்னில்; எல்லாம் புஜித்தாரிறே, அரைக்ஷணம் முகம் மாறவைத்தபோதே.  (தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்) “செய்வினை” என்று ஒன்றாயிருந்ததோ? எத்தனை கோடி பாபத்தைப் பண்ணினேனோ? (தாவிஇத்யாதி) – அரியசெயல்களை வருத்தமறச் செய்யவல்லவனன்றோ? அது செய்யுமிடத்தில் வரையாதே எல்லாரையும் ரக்ஷிக்குமவனன்றோ? அவன் இவற்றை ரக்ஷிக்க அடியிட்டான், அச்செயலிலே இவரும் அநந்யார்ஹராய் எந்தாய்! என்கிறார்.  (தாமோதரா) – ‘நீ எங்களுக்குப் பிள்ளையாய் வந்து பிறக்கவேணும்’ என்று சிலர் இரக்க, அவர்களுக்குக் கட்டவும் அடிக்கவுமாம்படி உன்னை விதே4யமாக்கினவனன்றோ. உன்வயிறு வாழாமலன்றோ இப்படி களவுகண்டு கட்டுண்டு அடியுண்டது.  (என்றுஎன்று) – இத்தை ஒருகால் சொல்லி, பின்பு வேறொன்றைச் சொல்லுமவரன்றே.  (கூவிக் கூவி) – இவ்வபதாநங்களைச் சொல்லிக் கூப்பிட்டுக்கூப்பிட்டு.  (நெஞ்சு உருகி) – முந்துறக்கூவுகிற இது பிற்படக்கூவுமதுக்கு வர்த்தகமாம்படி கூவுகிற தம்மிடற்றோசை செவிவழியே புக்கு, நெஞ்சானது த்ரவத்ரவ்யமாய் உருகுமாயிற்று.  (கண்பனிசோர நின்றால்) – உருகின நெஞ்சுக்குப் போக்குக் கண்டுவிடுமாபோலே கண்ணநீர் ப்ரவஹிக்கும்படி நின்றால்.  (பாவி இத்யாதி) – நான் நிராசனாய் தரிக்கும்படியாக; ‘இந்த்ரனுக்கு உதவினோம், யசோதாதிகளுக்கு உதவினோமென்றத்தை நினைத்து நசைபண்ணுகிறதென்? ‘அவன் ஸத்த்வநிஷ்டன், அவள் தாய், நீ பாவி’ என்று ஒருவார்த்தை சொன்னாலாகாதோ? தேவாஸுரவிபாகத்தைப் பண்ணினவாறே அவனையும் ‘ஸத்த்வநிஷ்டன்’ என்னலாமிறே. (ஒன்றுசொல்லாய்) – ‘நீ பாக்யவான்’ என்னவுமாம், (பாவி என்னவுமாம்;) அதிலர்த்தங் கொண்டு கார்யமில்லை; உன்மிடற்றோசை கேட்குமித்தனையே எனக்கு வேண்டுவது.  நிர்ப்பந்தமுள்ளதொன்று உண்டு, சொல்லுமிடத்தில்.  (பாவியேன்காணவந்து) – என் கண்ணுக்கு இலக்காம்படி வந்து சொல்லவேணும்.  நெஞ்சிலே மறைந்திருந்து சொல்லிலுமாமிறே, அத்தால் போராது.  (பாவியேன்) – நாடடைய உண்டு உடுத்துத் திரியாநிற்க, இப்படிகேளாவிடில் ஜீவியாதபடியான பாபத்தைப் பண்ணின நான்.  (காணவந்து) – இவருடைய சப்தாதிவிஷய ப்ராவண்யம் இருக்கிறபடி; ‘சொல்லாய்’ என்பது, ‘காண’ என்பதாகிறார்.  சொல்லாயென்றது – சொல்லவேணுமென்னவுமாம்; சொல்லுகிறிலை, “ஈவிலாத தீவினைகளெத்தனை செய்தனன் கொல்” என்று அந்வயிக்கவுமாம்.

நான்காம் பாட்டு

காணவந்துஎன்கண்முகப்பே தாமரைக்கண்பிறழ
ஆணிசெம்பொன்மேனியெந்தாய்! நின்றருளாயென்றென்று
நாணமில்லாச்சிறுதகையேன் நானிங்கலற்றுவதென்?
பேணிவானோர்காணமாட்டாப் பீடுடையப்பனையே.

:- அநந்தரம், ப்ரஹ்மாதிதேவதைகளும் காணமாட்டாத பெரியவனை; ஸ்ப்ருஹணீயமான வடிவழகோடே என்முன்னே வந்து நிற்கவேணுமென்று நிர்லஜ்ஜனாய்க் கூப்பிடுகிற இதற்கு என்ன ப்ரயோஜநமுண்டு? என்கிறார்.

வானோர் – ப்ரஹ்மாதிகளான தேவர்கள், பேணி – தங்கள் ஜ்ஞாநப்ரேமாநுரூபமாக ஆதரித்து, காணமாட்டா – தாங்கள் காண்கைக்கும் சக்தரன்றியேயொழியும்படி, பீடு உடை – பெருமையையுடையனான, அப்பனை – ஸ்வாமியை, ஆணிசெம்பொன் – ஒட்டற்ற ஆணிச்செம்பொன்போலே ஸ்ப்ருஹணீயமான, மேனி – வடிவையுடைய, எந்தாய் – என்நாயனே! தாமரை – (நிரதிசயபோக்யமான) தாமரைபோன்ற, கண் – கண்ணானவை, பிறழ – விளங்கும்படி (என்னைப்பார்த்துக்கொண்டு), காண – (ஆரம்பமே தொடங்கி நான்) காணும்படியாக, வந்து – வந்து, என்கண்முகப்பே – என்கண்முகப்பே, நின்றருளாய் – நின்றருளவேணும், என்று என்று – என்று பலகாலும் சொல்லி, நாணம் இல்லா -நிர்லஜ்ஜனாய்க்கொண்டு, சிறுதகையேன் – க்ஷுத்ரஸ்வபா4வனான, நான் – நான், இங்கு – பகவத்விஷயத்தையகற்றும் தேசத்திலேயிருந்து, அலற்றுவது – அலற்றுவதற்கு, என் – என்னப்ரயோஜநமுண்டு? பிறழ்தல் – விளங்குதல்.

ஈடு:– நாலாம்பாட்டு.  தாம் காணும்படியாக வரவேணு மென்றார்; அஸ்ப்ருஷ்டஸம்ஸாரக3ந்த4ரான நித்யஸூரிகள் அநுபவிக்கும் வடிவை, ப்ரஹ்மேந்த்ராதிகளும் காணமாட்டாதத்தை ‘நான் காணவேணும்’ என்று ஆசைப்படுகிற இத்தால் என்ன ப்ரயோஜநமுண்டு? இதுக்கு அடி – என்னுடைய லஜ்ஜாஸூந்யதையும் அளவில்லாமையுமிறே என்கிறார்.

(காணவந்து) – மாநஸாநுப4வமாத்ரமன்றிக்கே, கண்ணாலே காணும்படிக்கு ஈடாக வந்து என்னுதல்; ப்ரதமபரிஸ்பந்தமே தொடங்கி நான் கண்டு அநுபவிக்கும்படிக்கு ஈடாக வந்து என்னுதல்.  ‘ஆணிசெம்பொன்மேனியெந்தாய் – என்கண்முகப்பே – நின்றருளாய்’ என்பாராயிற்று.  “மற்றொப்பாரையில்லா ஆணிப்பொன்னே” (திருவிரு.85) என்கிற இவ்வாணியையிட்டுப் பார்த்தவாறே, ‘சுட்டுரைத்த நன்பொன்னுன்றிருமேனி யொளியொவ்வாது’ (3.1.2) என்றதுவும் மழுங்கிக்காட்டிற்று.  நாவாகிற உரைகல்லிலே யுரைத்து, நெஞ்சாகிற மெழுகிலேயிட்டுப் பார்த்தால் அதுதள்ளுண்ணுமே.  (செம்பொன்மேனியெந்தாய்) – “பொன்னானாய்” (திருநெடு.10) என்கிற தன்னைக்காட்டிக்காணும் இவரை எழுதிக்கொண்டது.  எப்போதும் ஏகரூபமாயிருக்கும் அவன் வடிவிலே ஆழ்வாரைக் கண்டால் பிறக்கும் விகாரம் சொல்லுகிறது; இவர்தாம் கண்ணாணியாகவிறே காண்பது.  (தாமரைக்கண்பிறழ) – கடல் கலங்கினாற்போலே, இவரைக்கண்ட காட்சியிலே திருக்கண்கள் மிளிரவென்னுதல்; அன்றிக்கே, விளங்கவென்னுதல்.  மாற்றற்ற பொன்போலே யிருக்கும் திருமேனியிலழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவனே! (நின்றருளாய்) – என்கண்வட்டத்திலே நிற்கவேணும்.  (என்றென்று) – அவன்கண்வட்டத்திலே வந்தால், இவன் போவதுக்கு முன்பே ப்ரயோஜநத்துக்கு மடியேற்போமன்று (தே3ஹிமே த3தா3மிதே) என்னுமவர்களிறே ஒருகால் சொல்லுவார். (நாணமில்லா) – ஆர்சொல்லும்வார்த்தை ஆர் சொல்லுகிறார்? என்னுடைய பூர்வத்ருத்தத்தை ஸ்மரிக்கமாட்டாத லஜ்ஜாஸூந்யனான நான்.  (சிறுதகையேன்) – அதிக்ஷுத்ரனான நான்.  தகை – அளவு; சிறுதகை – அளவிலியென்றபடி.  (நான் இங்கு அலற்றுவதென்) – அவனுக்கு அடியிடவொண்ணாத நிலத்திலே யிருந்து கூப்பிடுகிற இதுக்கு என்னப்ரயோஜநமுண்டு? (பேணி இத்யாதி) – பூமியில் காலிடாதவர்களாலேதான் காணப்போமோ? “தது3பர்யபி பா33ராயணஸ்ஸம்ப4வாத்” என்று – ப்ரஹ்மாதிகளும் உபாஸிப்பர்களென்று சொல்லாநின்றதிறே.  பேணுகை – ஆசைப்படுகை.  அத்தாலே – உபாஸநத்தைச் சொல்லுகிறது.  ‘பேணிவானோர் காணமாட்டாப் பீடு’ உண்டு – பெருமை; அத்தையுடைய ஸர்வேஸ்வரனை – ‘நாணமில்லாச் சிறுதகையேன் நான் இங்கு அலற்றுவதென்?’ ப்ரஹ்மாதிகளும் நித்யஸூரிகளுடைய கோடியிலேயாம்படியாகவிறே இவர் தம்மைச் சிறுக நினைத்திருக்கும்படி.

ஐந்தாம் பாட்டு

அப்பனே அடலாழியானே ஆழ்கடலைக்கடைந்த
துப்பனேஉன்தோள்கள்நான்கும் கண்டிடக்கூடுங்கொலென்று
எப்பொழுதும்கண்ணநீர்கொண்டு ஆவிதுவர்ந்துதுவர்ந்து
இப்பொழுதேவந்திடாயென்று ஏழையேன்நோக்குவனே.

:- அநந்தரம், தேவர்களுக்கும் துர்லபனாயிருக்கச்செய்தேயும் ஆஸ்ரிதரானவர்களுக்கு அருந்தொழில் செய்தும் அபேக்ஷிதங்கொடுத்தவனென்று நினைத்து, காண்கைக்கு மிகவும் த்வரியாநின்றேன் என்கிறார்.

அப்பனே – (ஆஸ்ரிதவிஷயத்தில் ஸத்தையேதொடங்கி) உபகரிக்கும் ஸ்வபா4வனே! அடல் ஆழியானே – அவர்களுக்கு விரோதியை நிரஸிக்கும் ஸ்வபா4வத்தையுடைய திருவாழியையுடையவனே! ஆழ்கடலை – அகாதமான கடலை, கடைந்த – கடைந்து அவர்களுக்கு அபேக்ஷிதங்கொடுக்கும், துப்பனே – பெருமிடுக்கனே! (அக்காலத்திலவர்களுக்கு அநுபா4வ்யமான), உன் தோள்கள் நான்கும் – உன்தோள்கள் நாலையும், கண்டிட கூடுங்கொல் – கண்டதாய்விடக் கூடுமோ? என்று – என்று நினைத்து, எப்பொழுதும் – ஸர்வகாலமும், கண்ணநீர்கொண்டு – கண்ணும் கண்ணீருமாய், ஆவி – ப்ராணனானது, துவர்ந்து துவர்ந்து – உலர்த்திமேலுலர்த்தியாக சோஷித்து, இப்பொழுதே – (ஸத்தையழிவதற்குமுன்னே) இக்ஷணத்திலே, வந்திடாய் – வரவேணும், என்று – என்று த்வரித்து அபேக்ஷித்து, ஏழையேன் – சபலனான நான், நோக்குவன் – (‘இவ்வவஸ்த்தையில் வரக்கூடும்’ என்று நினைத்து ஸம்பா4வனையுள்ள ப்ரதேசத்தைப்) பாராநின்றேன்.

ஈடு:- அஞ்சாம்பாட்டு.  ப்ரஹ்மாதிகளுக்கும் காணமுடியாதிருக்கிற உன்னுடைய வடிவழகைக் காணவேணும் என்று ஆசைப்படாநின்றேன்.  என் சாபலம் இருந்தபடியென்? என்கிறார்.

(அப்பனே) – நீ முகங்காட்டாதபோதும் நான் உன்னையே சொல்லிக் கூப்பிடும்படி எனக்கு இவ்வளவான மஹோபகாரத்தைப் பண்ணினவனே! (அடல் இத்யாதி) – அடல் – மிடுக்கு.  எப்போதுமொக்க யுத்தோந்முகமாய், விரோதிநிரஸநசீலமாய். என் ப்ரதிபந்தகத்தைப் போக்குகைக்குப் பரிகரமான திருவாழியையுடையவனே! (ஆழ்கடல் இத்யாதி) – ‘உன்னை உகவாதே ப்ரயோஜநாந்தரமே அமையும்’ என்னுமவர்களுக்கும், “அப்ரமேயோ மஹோத3தி4;” என்று – ஒருவரால் அளவிடவொண்ணாதபடியான கடலைக் கடைந்து கொடுத்த ஸாமர்த்யத்தையுடையவனே! (உன் இத்யாதி) – அவர்களைப்போலே உப்புச்சாறு கொண்டு போமவரல்லரே இவர்.  அக்கடலைக் கடைகிறபோது வ்யாபரித்த தோள்களைக் காணக்காணும் இவர் ஆசைப்படுகிறது.  ‘மதுரக்கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத்தோளி’ (நாச்.திரு.9.1)றே.  உன் தோள்கள் நாலையும் கண்டேனாய்விடக் கூடுமோ? என்று.  (எப்பொழுதும்) – கிடைக்கைக்கு ஸம்பாவநையுள்ள நிலம்போலே கண்ணநீர் பாயாநிற்பராயிற்று.  (ஆவி) – என்ப்ராணனானது.  (துவர்ந்து துவர்ந்து) – பசையற உலர்ந்து; இங்ஙனே உலர்ந்து முடிந்துபோகவும்பெறாதே, குணாதிகவிஷயமாகையாலே ‘காணலாம்’ என்னும் நசை முடியவும் ஒட்டாமையாலே; த4ரிப்பது திரிய உலருவதான நிலை உருவச்செல்லுமாயிற்று; ‘சென்றற்றது, சென்றற்றது’ என்னும்நிலை உருவச்செல்லுமாயிற்று.  (இப்பொழுதே வந்திடாயென்று) – தம் ஆர்த்தியே செப்பேடாக அரைக்ஷணம் தாழாதே வரவேணுமென்று.  (நோக்குவனே) – வர ஸம்பாவனையுள்ள திக்கைப் பாராநிற்பன்.  வருகைக்கு அவன்பக்கலிலும் ஏதேனும் நினைவு உண்டாயோ இவர் இப்படி செய்கிறதென்னில், (ஏழையேன்) – அதொன்றில்லை; என்சாபலமேயிறே உள்ளது.  ஆழ்வான் பணித்த வரதராஜ ஸ்தவத்திலே ஒரு ஸ்லோகத்தைக் கேட்டு எம்பெருமானார் ‘இப்பாசுரங்கேட்டால் பெருமாள் இரங்காமையில்லை; ஆழ்வான், உன்முகத்தைக் காட்டிக்காணாய்’ என்று பார்த்தருளினார்.

ஆறாம் பாட்டு

நோக்கிநோக்கிஉன்னைக்காண்பான் யானெனதாவியுள்ளே
நாக்குநீள்வன்ஞானமில்லை நாள்தோறும்என்னுடைய
ஆக்கையுள்ளும்ஆவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும்
நீக்கமின்றிஎங்கும்நின்றாய் நின்னையறிந்தறிந்தே.

:- அநந்தரம், என்பக்கலிலே ஸர்வதா ஸந்நிஹிதனாய்க்கொண்டு என்னுள்ளே நிற்கும்படி அறிந்திருக்க, ‘கண்ணாலே காணவேணும்’ என்று ஆசைப்படுகிறது என் அறிவுகேடிறே என்கிறார்.

நாடோறும் – ஒரு நாள் ஒழியாமல்.  என்னுடைய – என்னுடைய, ஆக்கையுள்ளும் – சரீரத்துக்குள்ளான ஹ்ருதயத்திலும், ஆவியுள்ளும் – (அதுக்கபிமாநியான) ஆத்ம ஸ்வரூபத்தினுள்ளும், அல்ல – (அதுக்குக்கரணங்களாய்) இவையிரண்டுமன்றியே, புறத்தினுள்ளும் – (ஸ்வரூபபஹிர்ப்பூதமான) இந்த்ரியாதிகளிலும், நீக்கம் இன்றி – ஒன்றையும் விடாதே, எங்கும் – எல்லாஸ்தலத்திலும், நின்றாய் – (அந்தராத்மாவாய்) நின்றவனே! (இப்படி ஸதாஸந்நிஹிதனாக) நின்னை – உன்னை, அறிந்து அறிந்து – எப்போதும் அறிந்துவைத்து, உன்னை – (போக்யமான வடிவையுடைய) உன்னை, காண்பான் – கண்ணாலேகாண்கைக்காக, நோக்கிநோக்கி – பலகாலும் பார்த்து, யான் – (சபலனான) நான், எனது – என்னுடைய, ஆவியுள்ளே – நெஞ்சுக்குள்ளே, நாக்கு நீள்வன் – ஆசைப்படாநின்றேன்; ஞானம் – (‘அந்தராத்மாவானவன் அதீந்த்ரியன்’ என்கிற) அறிவு, இல்லை – இல்லாமையாலே.  நாக்கு நீளுகையாவது – ஆசைப்பாட்டுக்கு ஸூசகம்.

ஈடு:- ஆறாம் பாட்டு.  ‘என்பக்கலிலே ஸதாஸந்நிஹிதனாயிருந்தே உன்னைக் காட்டாதொழிகிறது நீ நினையாமை’ என்று அறிந்துவைத்தே, காண ஆசைப்படாநின்றேன்; அதுக்கு அடி என் அறிவுகேடு என்கிறார்.

(நோக்கி நோக்கி) – அடுத்தடுத்து அவன் வரும் திக்கையே பார்ப்பராயிற்று.  இப்படி பார்க்கிறது என்னப்ரயோஜநத்துக்கு? என்னில், – (உன்னைக்காண்பான்) – உன்னைக் காணவேணுமென்னும் நசையாலே. (யான் இத்யாதி) – ஒருவிஷயத்திலே சபலரானாரை, ‘இவன் இவ்விஷயத்திலே நாக்குநீட்டாநின்றான்’ என்பர்களிறே; அப்படியே என் ஹ்ருதயத்திலே ஆசைப்படாநின்றேன்.  வாய்விட்டுச் சொல்லமாட்டாதே.  அதுக்குஅடியென்? என்னில், (ஞானமில்லை) – இது இருந்தபடியால் என்தனை அறிவுகேடரில்லை. ‘இவ்விஷயத்தைக் காணவேணும்’ என்று ஆசைப்படுகிற இது அறிவுகேடாகவேண்டுகிறதென்? என்னில் (நாடோறும் இத்யாதி) எல்லாக்காலத்திலும் உன்னைப் பெறுகைக்கு ப்ரதிபந்தகமான என் சரீரத்திலும், பெறவிருக்கிற ஆத்மாவிலும், இவையொழிந்த ப்ரதிபந்தகமான கரணங்களிலும் விடாதே எங்கும் புக்குநின்றாய்.  கிழிச்சீரையிலே தநம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர்படி.  (நின்னை அறிந்தறிந்து) – ‘இதின்ரக்ஷணத்துக்கு ப்ராப்தனாவது, நிதாநமறிந்து பரிஹரிக்கைக்கு ஸர்வஜ்ஞனாவது, தொடங்கினது தலைக்கட்டவல்ல ஸர்வசக்தியாவது ‘ஐயோ’ என்று இரங்குகைக்கு நீர்மையுடையனாவது, ஸதாஸந்நிதியுண்டாவது; இப்படியிருக்க,  இவன் முகங்காட்டாதொழிகிறது, செய்யநினையாமையிறே’ என்று இருக்கமாட்டாதொழிகிறது என் அறிவுகேடா மித்தனையிறே. நான் ப்ராப்தனாய் நீ அப்ராப்தனாயிருக்கிறாயல்லை; நான் ஸர்வஜ்ஞனாய் நீ அஜ்ஞனாயிருக்கிறாயில்லை; நான் ஸர்வ சக்தியாய் நீ அசக்தனாயிருக்கிறாயல்லை; நான் விபுவாய் நீ அணுவாயிருக்கிறாயல்லை; இத்தலைநோவுபடவிட்டு நிர்க்ருணனாயிருக்கிறாயல்லை;  உடையவனாய்வைத்து,  உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையிறே’ என்று ஆறியிருக்கமாட்டாதொழிகிறது என் அறிவுகேடாமித்தனையிறே.

ஏழாம் பாட்டு

அறிந்தறிந்துதேறித்தேறி யான்எனதாவியுள்ளே
நிறைந்தஞானமூர்த்தியாயை நின்மலமாகவைத்துப்
பிறந்தும்செத்தும் நின்றிடறும் பேதைமைதீர்ந்தொழிந்தேன்
நறுந்துழாயின்கண்ணியம்மா! நானுன்னைக்கண்டுகொண்டே.

:- அநந்தரம், என்நெஞ்சுக்குள்ளே நிற்கச்செய்தே ப்ரகாசிப்பித்த உன்வடிவழகை அநுஸந்தித்து ஸாம்ஸாரிகமான அறிவுகேடு தீர்ந்தேனித்தனை; அந்த போக்யமான வடிவைக் கண்ணாலே காணவேணுமென்றன்றோ இப்போது ஆசைப்படுகிறது என்கிறார்.

நறு – பரிமளப்ரசுரமான, துழாய் – திருத்துழாயையுடைத்தான, கண்ணி – திருமாலையையுடைய, அம்மா – ஸர்வாதிகனே! நான் – (உன்போக்யதையிலே சபலனான) நான், உன்னை – (நிரதிசயபோக்யனாய் ப்ராப்தனான) உன்னை, கண்டுகொண்டு –
(நீ ப்ரகாசிப்பிக்க  என் நெஞ்சாலே அபரோக்ஷித்துக்) கண்டுகொண்டு, அறிந்து அறிந்து – இப்படி தந்த ‘மயர்வறமதிநல’த்தாலே உன்னுடைய ப்ராப்யபாவத்தையும் ப்ராபகபாவத்தையும் அறிந்தறிந்து, தேறித்தேறி (தத்தத்விஷயமான வ்யவஸாயபர்யந்தமான) தெளிவுகளையுடையேனாய், யான் – (இப்படி லப்தஜ்ஞாந வ்யவஸாயனான) நான், எனது ஆவியுள்ளே – என் ப்ராணாஸ்ரயமான நெஞ்சுக்குள்ளே, நிறைந்த ஞானமூர்த்தியாயை – பரிபூர்ணஜ்ஞாநஸ்வரூபனான உன்னை, நின்மலமாக – ஸம்சயவிபர்யயமாகிற மலம் அறும்படி, வைத்து – (ப்ரதிஷ்டிதமாக) வைத்து, பிறந்தும் செத்தும் – பிறப்பதுசாவதாய், நின்று – நின்று, இடறும் – அலமருகிற, பேதைமை – அறிவுகேடு, தீர்ந்தொழிந்தேன் – தீர்ந்து விட்டேனித்தனை.  மார்வும் மாலையுமான வடிவழகைக் கண்ணிட்டுக் காணப்பெற்றிலே னென்று வாக்யசேஷம்.

ஈடு:- ஏழாம்பாட்டு.  ‘நீர் நம்மைப் போர இன்னாதாகாநின்றீர்; உமக்கு ஒன்றும் உதவிற்றிலோமோ? நாம் ஒன்றும் உபகரித்திலோ மென்றேயோ நீர் நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சிறிது செய்தமை உண்டு; இவ்வம்சம்பெற்றேன்; எனக்கு இத்தால் போராது’ என்கிறார்.

(அறிந்து அறிந்து தேறித்தேறி) – முதல் திருவாய்மொழியிலே பரத்வத்தை அநுஸந்தித்தார்; அதுவிஷயமானவாறே பிறப்பதொரு தெளிவுண்டிறே; அநந்தரம் – பஜநீயனென்று அநுஸந்தித்தத்தாலே பிறப்பதொரு தெளிவும், அநந்தரம் – ஸுலபனென்று அநுஸந்தித்தத்தாலே பிறப்பதொரு தெளிவும், பின்பு – அபராதஸஹனென்று அநுஸந்தித்தத்தாலே பிறப்பதொரு தெளிவும், இப்படி க்ரமத்திலேயிறே திருவாய்மொழி முடியநடந்தது; இதெல்லாம் மாநஸாநுப4வமிறே.  அன்றிக்கே, (அறிந்து அறிந்து தேறித்தேறி) – நீ ‘மயர்வற மதிநலம் அருளு’கையாலே, பரஸ்வரூபம் – ” ‘மனனுணர்வளவிலன்’, ‘பொறியுணர்வவையிலன்’, ‘எதிர்நிகழ்கழிவினு மினனிலன்’, ‘மிகுநரையிலன்’, ‘உணர்முழுநலம்’, ‘இனன்’ ” (1.1.2) என அறிந்து, அந்தப்பரஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யம் “அது நமது விதிவகையே” (10.6.1), “நெஞ்சினால் நினைப்பான் யவனவனாகும் நீள்கடல்வண்ணன்” (3.6.9) என்கிறபடியே “அர்ச்சாவதார பர்யந்தமான ஆஸ்ரிதபாரதந்த்ர்யம்” என்று அறிந்து அத்தாலே பிறப்பதொரு தெளிவும்; ஸ்வஸ்வரூபம் “சென்று சென்று பரம்பரமா யாதுமின்றித்தேய்ந்தற்று நன்றுதீதென்றறிவரிதாய் நன்றாய்ஞானம் கடந்திருக்கும்” (8.8.5) என்று அறிந்து, அதினுடைய யாதாத்ம்யம் – “சிறுமாமனிசராயென்னை- யாண்டாரிங்கேதிரிய – நறுமாவிரைநாண் மலரடிக்கீழ்ப் புகுதல் – உறுமோ” (8.10.3) என்றும்; “தம்மடியாரடியோங்களே” (3.7.10) என்றும் “ததீயசேஷத்வபர்யந்தமா- யிருக்கும்” என்று அறிந்து அத்தாலே பிறப்பதொரு தெளிவும்; உபாயஸ்வரூபம் – “நாகணைமிசைநம்பிரான் சரணே சரண்நமக்கு” (5.10.11) என்று அறிந்து, அதினுடைய யாதாத்ம்யம் “சைதந்யக்ருத்யமாய் அதிகாரி விசேஷணமான ஸ்வீகாரத்தையும் பொறாத ஸஹகாரிநைரபேக்ஷ்யம்” என்று அறிந்து அத்தால் பிறப்பதொரு தெளிவும்; ப2லஸ்வரூபம் – “ஒழிவில்காலமெல்லாம் உடனாய்மன்னி வழுவிலாவடிமைசெய்கை” (3.3.1) என்று அறிந்து, அதினுடைய யாதாத்ம்யம் – “உன்தன் திருவுள்ள மிடர்கெடுந்தோறும் நாங்கள் வியக்க வின்புறுதும்” (10.3.9) என்று அறிந்து அத்தால் பிறப்பதொரு தெளிவும்; விரோதிஸ்வரூபம் – “யானே என்தனதே  என்றிருக்கை” என்று அறிந்து, அதினுடைய யாதாத்ம்யம் – “கைங்கர்யத்தில் அஹங்காரகர்ப்பமான மமகாரம்” என்று அறிந்து, அத்தாலே பிறப்பதொரு தெளிவும்.  (யான்) – இப்படி நீயறிவிக்க அறிந்த யான்.  (எனதாவியுள்ளே) – என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே.  (நிறைந்தஞான மூர்த்தியாயை) – பரிபூர்ணஜ்ஞாந ஸ்வரூபனான உன்னை.  பெற்ற அம்சத்தால் த்ருப்தனாகவொண்ணாதபடியான வைலக்ஷண்யத்தையுடைய உன்னை.  (நின்மலமாகவைத்து) – விசததமமாக அநுஸந்தித்து.  (பிறந்தும் இத்யாதி) – அறிவுபிறந்த அநந்தரம், “இந்நின்றநீர்மையினியாமுறாமை” (திருவிரு.1) என்று அபேக்ஷித்த அதுபெற்றேன்.  சாவதுபிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவுகேடு தவிரப்பெற்றேன்.  (நறுந்துழாய் இத்யாதி) – இவ்வறிவு பிறக்கைக்கு அவனிட்ட பச்சை இருக்கிறபடிவைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுலவாஸத்தைப் பண்ணுவித்து அறிவுபிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக்கொண்டது (பரிமளப்ரசுரமான திருத்துழாயையுடைத்தான திருமாலையையுடைய ஸர்வாதிகனே!) (நான் உன்னைக் கண்டுகொண்டு) – உன் போக்யதையை அறிந்த நான், நிரவதிகபோக்யபூதனான உன்னைக் கண்டுகொண்டு.  ‘நறுந்துழாயின் கண்ணியம்மா! நான் உன்னைக் கண்டுகொண்டு – அறிந்தறிந்து தேறித்தேறி யான் எனதாவியுள்ளே நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து, பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்; இது நான்பெற்ற அம்சம்’ என்கிறார்.

எட்டாம் பாட்டு

கண்டுகொண்டென்கைகளார நின்திருப்பாதங்கள்மேல்
எண்டிசையுமுள்ளபூக்கொண்டு ஏத்தியுகந்துகந்து
தொண்டரோங்கள்பாடியாடச் சூழ்கடல்ஞாலத்துள்ளே
வண்டுழாயின்கண்ணிவேந்தே! வந்திடகில்லாயே.

:- அநந்தரம், உக்தமான போக்யதையில் அபிநிவேசத்தாலே கண்டு அநுபவித்து அடிமைசெய்ய ஆசைப்படுகிறார்.

கண்டுகொண்டு – (*நானுன்னைக்கண்டுகொண்டு” என்கிற நெஞ்சிற்காட்சியளவன்றியே கண்ணாலே) பரிபூர்ணமாகக்கண்டு அநுபவித்து, என்கைகள் – (*தாயவனேயென்றுடவும்*) என்கைகள், ஆர – பூர்ணமநோரதமாம்படி, நின் – (ப்ராப்தனான) உன்னுடைய, திருப்பாதங்கள் மேல் – திருவடிகளின்மேலே, (ஆதராநுரூபமாக), எண்திசையும் – ஸகலதிக்குக்களிலும், உள்ள – உண்டான, பூக்கொண்டு – புஷ்பங்களை ஸம்பாதித்து, ஏத்தி – ஸ்தோத்ரபூர்வமாகப் பரிமாறி,  உகந்து உகந்து – தத்தத்ப்ரத்ருத்திகள்தோறும் ப்ரீதிபரவசராய், தொண்டரோங்கள் – (உன்பக்கலிலே) அத்யந்தாபிநிவேசரூபபக்தியையுடைய நாங்கள், பாடியாட – (ப்ரீதிக்குப்போக்குவீடாகப்) பாடுவதாடுவதாம்படி, கடல்சூழ் ஞாலத்துள்ளே – கடல்சூழ்ந்த பூமியான ஸம்ஸாரத்துக்குள்ளே, (முன்பு எனக்கு நெஞ்சில் ப்ரகாசிப்பித்த), வண் – விலக்ஷணமான, துழாய்க்கண்ணி – திருத்துழாய்மாலையையுடைய, வேந்தே – நாயகனே! வந்திடகில்லாய் – வந்திடுகிறிலை.

ஈடு:- எட்டாம்பாட்டு.  பெற்றஅம்சம் சொன்னாராய், பெறாத அம்சம் இதுவென்கிறார் இதில்.

(கண்டுகொண்டு) – “காணவிரும்புமென்கண்கள்” (3.8.4) என்று காணப்பெறாதே பட்டினிவிட்ட கண் பட்டினி தீரும்படி கண்டுகொண்டு.  “அரவிந்தம்போன்று நீண்டகண்ணானைக் கண்ணாரக்கண்டுகொண்டு” (திருமொழி 2.5.8) என்கிறபடியே, இக்கண்களின் வயிறாரக் கண்டுகொண்டு.  (என் கைகளார) – “தாயவனேயென்றதுதடவு மென்கைகள்” (3.8.3) என்கிற கைகளின் உறாவுதல் தீரும்படியாக; கலியர் ‘வயிறாரவுண்ண’ என்னுமாபோலே.  (நின்திருப்பாதங்கள்மேல்) – உனக்கு தா4ரகமுமாய் போ4க்யமுமான திருவடிகளிலே ‘பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக்கமல’ (பெரியா. திரு.1.2.2)மிறே, தா4ரகம் தானேயாய் நின்றதிறே.  அன்றிக்கே, எனக்கு ப்ராப்தமுமாய் போக்யமுமான உன்திருவடிகளிலே. ‘உன் தேனே மலரும் திருப்பாதத்’ (1.5.5)திலே.  முன்பும் அநுவர்த்தித்துப் போருமதுஉண்டிறே விஷயங்களிலே; அங்ஙனன்றிக்கே, ப்ராப்தனான உன் திருவடிகளிலே.  “த்வத்பாத3பங்கஜபரிக்3ரஹத4ந்யஜந்மாபூ4யாஸம்” என்கிறதுக்கு ஆளவந்தார் ‘வார்த்தை அழகிது, வகுத்தவிஷயத்திலேயாகப் பெற்றிலோம்’ என்று அருளிச்செய்தார்.  (எண்திசையும் இத்யாதி) – விஷயாநுரூபமாகவும் என்னுடைய அபிநிவேசாநு ரூபமாகவும்.  தம்முடைய ஆசாநுரூபமாக ‘ஆசையிலுள்ளவையெல்லாம் வேணும்’ என்கிறார்.  அவ்வாசைதான் திக்குப்பட்டிறேயிருப்பது.  அங்ஙனேயிறே கைங்கர்யருசியுடையார் வார்த்தையிருப்பது; கலியர் ‘கலஅரிசிச்சோறு உண்ணவேணும்’ என்னுமாபோலே.  “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்றிறே  இருப்பது.  (உகந்து உகந்து) – ப்ரீதிமாறாதே செல்லும்படியாக.  (தொண்டரோங்கள்) – இக்கைங்கர்யத்திலே சுவடறிந்த நாங்கள், “கேசவன்தமர்” (2.7.1)க்குப் பின்பு தனியரல்லரிறே.  (பாடியாட) – ப்ரீதிப்ரேரிதராய்ப் பாடுவது ஆடுவதாம்படி.  இதுவாகில் முன்பே நாம்செய்வதாக இருந்ததொன்றன்றோ? இஸ்சரீரஸம்பந்த மற்றால் ஒரு தேசவிசேஷத்திலே கொண்டுபோய், “ஏதத்ஸாமகா3யந்நாஸ்தே” என்னும்படி பண்ணுகிறோமென்ன; அதுவோ நான் அபேக்ஷிக்கிறது? (சூழ்கடல்ஞாலத்துள்ளே) எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்கவோ? சூழ்கடல்ஞாலத்துள்ளே நான் காண வரவேணும்.  (வண்துழாயின்கண்ணிவேந்தே) – ஸம்ஸாரத்துக்குள்ளே காட்டுமிடத்தில், அங்குள்ளாருக்குக் காட்சிகொடுக்குமாபோலே காட்டவும் வேணும்; நித்யஸூரிகளுக்குக் காட்சிகொடுக்கும் ஒப்பனையோடே காட்டவும் வேணும்.  (வந்திடகில்லாயே) – “கூவியுங்கொள்ளாய்” (4.7.1) என்றது பற்றாதென்கிறார்.  வந்திடுகிறிலை.  இது நான்பெறாத அம்சம்.  இதுதான் இருந்தபடியென்? ப்ரக்ருதிஸம்பந்தமற்றமையும் இல்லை, கைங்கர்யம் பெற்றமையும் இல்லை; இங்ஙனேயிருக்க ‘இவ்வம்சம் பெற்றேன், இவ்வம்சம் பெற்றிலேன்’ என்கிறபடி என்? என்னில்; – ஒன்று உத்தேஸ்யமாய், மற்றையது அதுக்கு உறுப்பாக வருமதிறே. “நாமும் முதலிலே ‘இந்நின்றநீர்மை யினியாமுறாமை’ (திருவிரு.1) என்றோமாகில் அவனும் சக்தனாயிருந்தானாகில், இது கழிந்ததேயன்றோ” என்று அத்தைப் பெற்றாராக நினைத்திருந்தார்; கைங்கர்யம் அவஸ்யம் பெற்றல்லது நிற்கவொண்ணாமையாலே, அது கைப்புகுராமையைப் பற்றப்பெற்றிலோ மென்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

இடகிலேனொன்றட்டகில்லேன் ஐம்புலன்வெல்லகில்லேன்
கடவனாகிக்காலந்தோறும் பூப்பறித்தேத்தகில்லேன்
மடவன்னெஞ்சங்காதல்கூர வல்வினையேன்அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்எங்குக்காண்பன் சக்கரத்தண்ணலையே?

:- அநந்தரம், அநுபா4வ்யமான திருவாழியையுடைய என்நாயனை அகிஞ்சநனாய் வைத்து ஆசைப்பட்ட நான் எங்கே காண்பேன்? என்கிறார்.

ஒன்று இடகிலேன் ஒன்று அட்டகில்லேன் – பசியும் தாஹமுமுடையார்க்கு ஒருபிடி சோற்றை யிடுதல் ஒருமிடறுதண்ணீர்வார்த்தல் செய்யமாட்டுகிறிலேன்; (இப்படிதாநரூபமான கர்மயோகமில்லாமையாலே, ஜ்ஞாநயோகத்துக்கு உறுப்பாக), ஐம்புலன் – இந்த்ரியங்களைந்தையும், வெல்லகில்லேன் – (விஷயங்களிற்போகாமல்) நியமிக்க மாட்டுகிறிலேன்; கடவனாகி – (அதடியான பக்தியோகசரீரத்தில் அந்வயிக்கும்படி) நியதனாய்க்கொண்டு, காலந்தோறும் – (ஆராதநாநுரூபமான) காலந்தோறும், பூப்பறித்து – புஷ்பங்களை ஸம்பாதித்து, ஏத்தகில்லேன் – ஆராதித்து ஸ்துதிக்க மாட்டுகிறிலேன்; (இப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தே), மடம் – (பற்றின விஷயத்திலே) ப்ரவணமாய், வல் – ஒருவராலும் விடுவிக்கவொண்ணாத சிக்கனவையுடைத்தான, நெஞ்சம் – நெஞ்சானது, காதல்கூர – அபிநிவேசம் விஞ்சிவர, வல்வினையேன் – (ததுநுரூபமான அநுபவத்தைப்பண்ணப்பெறாத) ப்ரப3லபாபத்தையுடைய நான், அயர்ப்பாய் – அறிவுகேட்டையுடையேனாய்க்கொண்டு, சக்கரம் – போக்யமான திருவாழியையுடைய, அண்ணலை – நாதனை, தடவுகின்றேன் – (‘காணலாம்’ என்று) தேடாநின்றேன்; எங்குக்காண்பன் – எங்கே காணக்கடவேன்?

ஈடு:- ஒன்பதாம் பாட்டு.  எம்பெருமானைக் காண்கைக்கு ஈடான கர்மயோகாத்யுபாயங்களொன்றுமின்றிக்கேயிருக்கிற நான் ‘காணவேணும்’ என்று ஆசைப்பட்டால், காண்கைக்கு உபாயமுண்டோ? என்கிறார்.

(இடகிலேன்) ஆர்த்தவிஷயத்தைக் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்கிச் சிலஇடில், அது ஸர்வேஸ்வரன் திருவுள்ளத்துக்குச் சாலவுகப்பிறே; அங்ஙனொன்றும் செய்யப்பெற்றிலேன்.  (ஒன்று அட்டகில்லேன்) – கையில் த்ரவ்யத்தை அவிழ்த்திடாவிட்டால், உடம்புநோவத் தண்ணீர் சுமந்து வார்க்கலாமிறே; அதுவும் செய்திலேன்.  (ஐம்புலன்வெல்லகில்லேன்) – ‘பிறர்க்கு ஒன்று வேணும்’ என்று இராவிட்டால், ‘எனக்கு’ என்னுமதுதான் தவிரப்பெற்றேனோ? ஸ்ரோத்ராதிகள் விஷயங்களிலே பட்டிபோகாதபடி பரிஹரித்திலேன்.  (கடவனாகி) – சாஸ்த்ரங்களிற் சொல்லுகிறபடியே, அடைத்த காலங்களிலே புஷ்பாத்யுபகரணங்களைக்கொண்டு தேவர் திருவடிகளிலே ஸமாராதநம் பண்ணிற்றிலேன்.  இவர் ஸமாராதநம் பண்ணியறியாரோ? என்னில்; ‘நூல்பிடித்தாற்போலே’ சாஸ்த்ரங்களில் ஸாத4நரூபமாகச் சொல்லுகிற ஸமாராதநத்தில் இவர்க்கு அந்வயமில்லை; தேஹயாத்ரைக்கு உடலாகச் செய்யுமது உண்டு.  இவையுண்டாயிற்றாகில் பக்தி சரீரத்திலே நிவேசிப்பிக்கலாம், அதுவுமில்லையென்கிறார்.  இவற்றினுடைய ஸ்வரூபநிஷேதம் பண்ணுகிறதன்று, உபாயத்வத்தை நிஷேதிக்கிறது.  (மடவல்நெஞ்சம்) – மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது; அதாவது – ‘பகவத்விஷயம்’ என்றால் கடுகவிழுந்து கொண்டுநிற்கை.  வன்மையாவது – விழுந்தால் பின்னை அங்குநின்றும் மீட்க அரிதாயிருக்கை.  (காதல்கூர) – இப்படிப்பட்ட நெஞ்சானது ஸ்நேஹம் மிக.  (வல்வினையேன்) – ஸ்நேஹாநுகூலமாகக் காணப்பெறாத பாபத்தைப் பண்ணினேன்.  காதலுக்கு விஷயம் பெற்றேனல்லேன்; இத்தை அகஞ்சுரிப்படுத்தினேனல்லேன், ஆசாலேசமுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேனல்லேன்; என் பாபம் இருந்தபடியென்? (அயர்ப்பாய்) – அறிவுகேட்டையுடையேனாய்.  (தடவுகின்றேன்) – முன்னே வந்து நின்றாலும் காணமாட்டாதபடி தடவாநின்றேன்.  “நத்வா பஸ்யாமி கௌஸல்யே” என்கிறபடியே.  (எங்குக்காண்பன்) – ஒரு கைம்முதலின்றிக்கேயிருக்கக் கூப்பிடுகிற நான் எங்கே காணக்கூப்பிடுகிறேன்? (சக்கரத்தண்ணலையே) – கையிலே திருவாழியையுடைய ஸர்வேஸ்வரனை, எங்கே காணக்கடவேன்? யசோதைப்பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக்கொண்டாற்போலே, கையும் – ‘நெய்’யாராழியுமாகப் பிடித்துக் கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது.

பத்தாம் பாட்டு

சக்கரத்தண்ணலேயென்று தாழ்ந்துகண்ணீர்ததும்ப
பக்கம்நோக்கிநின்றலந்தேன் பாவியேன்காண்கின்றிலேன்
மிக்கஞானமூர்த்தியாய வேதவிளக்கினை என்
தக்கஞானக்கண்களாலே கண்டுதழுவுவனே.

:- அநந்தரம், வேதவேத்யனானவனைக் கையும்திருவாழியுமாகக் காண ஆசைப்பட்டுக் கிடையாதொழிந்தால், மறந்து பிழைக்கவொண்ணாதபடி மாநஸஜ்ஞாநத்துக்கு விஷயமாய் ப்ரகாசிக்கவேணுமோ? என்கிறார்.

சக்கரம் – கையும் திருவாழியுமான வடிவைக்காட்டி, அண்ணலே – அடிமைகொண்ட ஸ்வாமியே! என்று – என்றுசொல்லி, தாழ்ந்து – (அவனையநுபவிக்கப் பெறாமையாலே) தரைப்பட்டு விழுந்து, கண்நீர்ததும்ப – கண்கள்நீர் மிகைக்கும்படி, பக்கம்நோக்கி – சுற்றும் பார்த்து, நின்று – நின்று, அலந்தேன் – க்லேசித்தேன்; பாவியேன் – (காண்கைக்கு ப்ரதிபந்தகமான) பாபத்தைப்பண்ணின நான், காண்கின்றிலேன் – காணப்பெறுகிறிலேன்; (இவ்வளவில் மறந்துவிடவொண்ணாதபடி) மிக்கஞான மூர்த்தியாய – அபரிச்சிந்ந ஜ்ஞாநஸ்வரூபனான, வேதவிளக்கினை – வேதமாகிற தீபத்தாலே காணப்படுமவனை, என் – (கண்ணிட்டுக்காண ஆசைப்பட்டு க்லேசிக்கிற) எனக்கு, தக்க – தகுதியான, ஞானம் – ஜ்ஞாநமாகிற, கண்களாலே – கண்ணாலே, கண்டு – கண்டு, தழுவுவன் – ஸம்ஸ்லேஷியாநிற்பன்.  காணப்பெறாமையாலே ப்ரேமம் து:கஹேதுவான வோபாதி ஆந்தரப்ரகாசத்தாலே ஜ்ஞாநமும் து:கஹேதுவாயிற் றென்று கருத்து.

ஈடு:- பத்தாம்பாட்டு.  காணப்பெறாவிட்டால் மறந்துபிழைக்கவொண்ணாதபடி எனக்குத் தக்கதொரு ஜ்ஞாநத்ருஷ்டி எங்ஙனேயுண்டாயிற்று? என்கிறார்.

(சக்கரத்தண்ணலே என்று தாழ்ந்து) – திருவாழியைக்காட்டி என்னையெழுதிக்கொண்டவனே! என்று இவ்வுக்தியோடே தரைப்பட்டு.  (கண்நீர்ததும்ப) – கண்கள் நீர் மிகைக்கும்படி.  இவருடைய அவஸாதத்தினுடைய எல்லை காண்பது கண்ணநீரிலே.  (பக்கம்நோக்கிநின்று அலந்தேன்) – வருகைக்கு ஸம்பா4வனையுள்ள திக்கைப் பார்த்துநின்று வெறுத்தேன்.  “பரமாபதமாபந்ந:” என்னுமளவிறே.  (பாவியேன் காண்கின்றிலேன்) – ஆபத்ஸகனாயிருக்க, மஹாபாபியாகையாலே நான் காணப்பெறுகிறிலேன்.  காணப்பெறாதொழிந்தால் மறந்து பிழைக்கலாம்படி நெஞ்சில் ப்ரகாசியாதொழியத்தான் பெற்றேனோ? (மிக்கஞானமூர்த்தியாய்) – பரிபூர்ணமான ஜ்ஞாநத்தையே ஸ்வரூபமாகவுடையனான.  (வேதவிளக்கினை) – வேதமான விளக்காலே காணப்படுமவனை; வேதப்ரகாசகனானவனை யென்றுமாம்.  (என்தக்கஇத்யாதி) – எனக்குத் தக்காற்போலே ஒரு ஜ்ஞாநத்ருஷ்டியுண்டாய், அத்தாலே கண்டு அநுபவிப்பன்.  காணப்பெறாமையாலே ப்ரேமம் க்லேசஹேதுவாகிறாப்போலே, நெஞ்சில் ப்ரகாசமும் க்லேசஹேதுவாகா நின்றது.  “மயர்வறமதிநலமருளினன்” என்கிற ஜ்ஞாநப4க்திகளிரண்டும் கழுத்துக்கட்டியாய்விட்டது.  மறந்துபிழைக்கவொண்ணாதபடி எனக்குத்  தக்காற்போலே ஒரு ஜ்ஞாநமும் வேணுமோ? என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

தழுவிநின்றகாதல்தன்னால் தாமரைக்கண்ணன்தன்னைக்
குழுவுமாடத்தென்குருகூர் மாறன் சடகோபன்சொல்
வழுவிலாத ஓண்தமிழ்கள் ஆயிரத்துளிப்பத்தும்
தழுவப்பாடியாடவல்லார் வைகுந்தமேறுவரே.

:- அநந்தரம், இத்திருவாய்மொழியை அநுஸந்தித்து ப்ரேமபரவசராமவர்கள் பரமபதத்திலே யேறப்பெறுவர்களென்று பலத்தை அருளிச்செய்கிறார்.

தழுவி – ஸ்வரூபத்தோடு அவிநாபூதமாய், நின்ற – ஸ்திரமான, காதல்தன்னால் – பகவதநுபவாபி4நிவேசத்தாலே, தாமரைக்கண்ணன் தன்னை – அவ்வபிநிவேசத்துக்கு நிதாநமாய் நிரதிசயபோக்யமான தாமரைபோன்ற திருக்கண்களையுடையவனைப்பற்ற, குழுவும் – திரண்ட, மாடம் – மாடங்களையுடைத்தான, தென்குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, மாறன் – குடிப்பிறப்பையுடைய, சடகோபன் – ஆழ்வாருடையதாய், வழுஇலாத – (பகவத்குணங்களிலொன்றும்) வழுவாதபடியான, ஒள் தமிழ்கள் – போதகத்வவைலக்ஷண்யத்தையுடைத்தாய் ஸர்வாதிகாரமான த்ராமிடரூபமான, ஆயிரத்துள் – ஆயிரந்திருவாய்மொழியில், இப்பத்தும் – இப்பத்தையும், தழுவ – (பாவத்ருத்தியோடு) நெஞ்சுபொருந்தும்படி, பாடி – பாடி, ஆட – (ப்ரேமபாரவஸ்யத்தாலே) விக்ருதராய்ஆட,  வல்லார் – வல்லவர்கள், வைகுந்தம் ஏறுவர் – (அஸங்குசிதாநுபவஸ்த்தலமான) பரமபதத்திலே ஏறப்பெறுவர்கள். இது அறுசீராசிரியவிருத்தம்.

வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் திருவடிகளே சரணம்

ஈடு:- நிகமத்தில், இத்திருவாய்மொழி கற்றார் எம்பெருமானோடே நித்யஸம்ஸ்லேஷம் பண்ணலாந் திருநாட்டிலே செல்லப்பெறுவர் என்கிறார்.

(தழுவிநின்ற காதல்தன்னால்) – ‘நான் விடுவேன்’ என்றாலும் விடவொண்ணாதபடியாய், உடன்வந்தியான அதிமாத்ரமான காதலாலே.  (தாமரைக்கண்ணன் தன்னை) – இக்காதலுக்கு க்ருஷிபண்ணின நேத்ரபூதரைச் சொல்லுகிறார்.  (குழுவுமாடத்தென்குருகூர்) – “ஸர்வஞ்ச குசலம் க்3ருஹே” என்னுமாபோலே, ‘ஆழ்வார்க்கு ஆர்த்தி மிகமிக,  ஸர்வேஸ்வரன் வரவு தப்பாது’ என்று திருநகரி  குடிநெருங்கிக்குளிர்ந்து தேறினபடி.  [ (மாறன்) – ஸம்ஸாரத்தை மாற்றினவர்.  (சடகோபன்) – பகவத்விமுகருக்கு சத்ரு.]  (சொல்வழுவிலாத) – ப4கவத்விஸ்லேஷத்தாலே கூப்பிடுகிற இந்நன்மையில் ஒன்றுந் தப்பாதபடி [ (யாய், ஸுபோ3தமுமாய், ஸர்வாதிகாரமுமாம்படி) ] சொன்ன.  ஆயிரத்துள் இப்பத்தும் (தழுவப்பாடியாட வல்லார்) ஆழ்வார் பா4வ வ்ருத்தி ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதிறே; அதிலே சிறிது அணையநின்றாகிலும் இத்தை அப்யஸிக்க வல்லவர் [களாய், பாரவஸ்யத்தாலே விக்ருதராய் ஆடவல்லார்) ] கள்,  (வைகுந்தம் ஏறுவரே) – காணஆசைப்பட்டுக் கூப்பிடுகிற ஸம்ஸாரத்தைக் கழித்து, நித்யாநுபவம்பண்ணலாம் நித்யவிபூதியிலே புகப்பெறுவர்.  குழுவுமாடம் – நெருங்கினமாடம்.  தென்குருகூர் – அத ஏவ அழகிய திருநகரி.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

த்ரமிடோபநிஷத் ஸங்கதி  – சீலமில்லா

தபேஷஜாத்ஸஹரிநாமகதாப்ரஸங்காத்

ஸம்ஜ்ஞாமுபேத்யமுநிருத்படது:கபோத:।

ஆபத்ஸகத்வமுகவாசகதஸ்தமுச்சை:

ஆக்ருஶ்யவாஞ்சிதமயாசதஸப்தமேந।।  ||37||

த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்நாவளிசீலமில்லா

 

ஆபத்பந்துத்வதீப்தம்நிரவதிகமஹாநந்ததம் க்ராந்தலோகம்

துர்தர்ஶம்தேவதாநாம்பிதரமநுபதிம்ஸர்வபூதாந்தரஸ்தம் । பூர்ணஜ்ஞாநைகமூர்திம்த்ருதஶுபதுலஸிம்சக்ரநாதம்ஶ்ருதீநாம் விஶ்ராந்திஸ்தானமீஶம்விஶதபஹுகுணம்ப்ராஹகிந்நஶ்ஶடாரி ||  47

துஶ்ஶீலோமாம்ஸசக்ஷுர்நிரவதிதுரிதோ வீதலஜ்ஜோவிலோல:

ப்ரேஷாஹீநோளந்யஸங்காத்க்ருதமஶலக4யந் ஶீலமந்தர்ததாந: |

கர்மஜ்ஞாநாதிஶீந்யோநிருபதிவிஹிதாம் ஜ்ஞாநத்ருஷ்டிம்விநிந்தந்

ப்ரக்யாப்பைவம்ஸ்வதோஷாந்பதிகுணரஸிகஸ்தத்தித்ருக்ஷாம் ச சக்ரே || 4-8

திருவாய்மொழி நூற்றந்தாதி

சீலமிகு கண்ணன்  திருநாமத்தால்உணர்ந்து

மேலவன்தன் மேனிகண்டு மேவுதற்கு – சால

வருந்திஇரவும்பகலும் மாறாமல்கூப்பிட்டு

இருந்தனனேதென்குருகூரேறு.  37

 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

*******

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.