Thiruvoymozhi 5-2

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் *

நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை *

கலியும் கெடும் கண்டுகொண்மின் கடல்வண்ணன்பூதங்கள் மண்மேல் *

மலியப் புகுந்து இசை பாடி ஆடி யுழிதரக் கண்டோம்.          5.2.1

கண்டோம் கண்டோம்கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் *

தொண்டீர் ! எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் *

வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல் *

பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே.    5.2.2

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து *

பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக் *

கரிய முகில் வண்ணன் எம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் *

இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.          5.2.3

இடங்கொள் சமயத்தையெல்லாம் எடுத்துக் களைவன போலே *

தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க் *

கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி *

நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.      5.2.4

செய்கின்றது என் கண்ணுக்கொன்றே ஒக்கின்றது இவ்வுலகத்து *

வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி *

ஐய மொன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீ ருள்ளீரேல் *

உய்யும் வகை யில்லை தொண்டீர் ! ஊழி பெயர்த்திடும் கொன்றே.    5.2.5

கொன்று யிருண்ணும் விசாதி பகை பசி தீயனவெல்லாம் *

நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் *

நன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார் *

சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர் ! சிந்தையைச் செந்நிறுத்தியே.     5.2.6

நிறுத்திநும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மையுய்யக்கொள் *

மறுத்தும் அவனோடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே *

கறுத்த மனமொன்றும் வேண்டா, கண்ணனல்லால் தெய்வமில்லை *

இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறுமினே.     5.2.7

இறுக்கும் இறை யிறுத்துண்ண எவ்வுலகுக்கும் தன் மூர்த்தி *

நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே *

மறுத் திருமார்வ னவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி *

வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மின் நீரே.           5.2.8

மேவித் தொழுதுய்ம்மினீர்கள், வேதப் புனித விருக்கை *

நாவில் கொண்டு அச்சுதன் தன்னை, ஞான விதி பிழையாமே *

பூவில் புகையும் விளக்கும், சாந்தமும் நீரும் மலிந்து *

மேவித் தொழும், அடியாரும் பகவரும் மிக்கதுலகே.        5.2.9

மிக்க உலகுகள் தோறும், மேவிக் கண்ணன் திருமூர்த்தி *

நக்க பிரானோடு, அயனும் இந்திரனும் முதலாகத் *

தொக்க அமரர் குழாங்கள், எங்கும் பரந்தன தொண்டீர் ! *

ஒக்கத் தொழ கிற்றிராகில், கலியுக மொன்று மில்லையே.          5.2.10

கலியுக மொன்று மின்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்யும் *

மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னை *

கலிவயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் *

ஒலிபுக ழாயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே.      5.2.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.