Thiruvoymozhi 5-6

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

கடல் ஞாலம் செய்தேனும் யானே யென்னும்

கடல் ஞாலமாவேனும் யானே யென்னும் *

கடல் ஞாலம் கொண்டேனும் யானே யென்னும்

கடல் ஞாலம் கீண்டேனும் யானே யென்னும் *

கடல் ஞாலம் உண்டேனும் யானே யென்னும்

கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ ? *

கடல் ஞாலத்தீர்க்கு இவையென் சொல்லுகேன் ?

கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே.         5.6.1

கற்கும் கல்விக்கு எல்லை யிலனே யென்னும்

கற்கும் கல்வியாவேனும் யானே யென்னும் *

கற்கும் கல்வி செய்வேனும் யானே யென்னும்

கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே யென்னும் *

கற்கும் கல்விச் சாரமும் யானே யென்னும்

கற்கும் கல்வி நாதன் வந்தேறக் கொலோ? *

கற்கும் கல்வியீர்க்கு இவையென் சொல்லுகேன் ?

கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.      5.6.2

காண்கின்ற நிலமெல்லாம் யானே யென்னும்

காண்கின்ற விசும்பெல்லாம் யானே யென்னும் *

காண்கின்ற வெந்தீ யெல்லாம் யானே யென்னும்

காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே யென்னும் *

காண்கின்ற கடலெல்லாம் யானே யென்னும்

காண்கின்ற கடல் வண்ணனேறக் கொலோ ? *

காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் ?

காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.        5.6.3

செய்கின்ற கிதியெல்லாம் யானே யென்னும்

செய்வானின்றனகளும் யானே யென்னும் *

செய்து முன் இறந்தவும் யானே யென்னும்

செய்கைப் பயனுண்பேனும் யானே யென்னும் *

செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்

செய்ய கமலக் கண்ணனேறக் கொலோ ? *

செய்ய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன் ?

செய்ய கனிவா யிளமான் திறத்தே.       5.6.4

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே யென்னும்

திறம்பாமல் மலை யெடுத்தேனே யென்னும் *

திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே யென்னும்

திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே யென்னும் *

திறம்பாமல் கடல் கடைந்தேனே யென்னும்

திறம்பாத கடல் வண்ணனேறக் கொலோ ? *

திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் ?

திறம்பாது என் திருமகள் எய்தினவே.    5.6.5

இனவேய் மலை யேந்தினேன் யானே யென்னும்

இனவேறுகள் செற்றேனும் யானே யென்னும் *

இனவான் கன்று மேய்த்தேனும் யானே யென்னும்

இனவாநிரை காத்தேனும் யானே யென்னும் *

இனவாயர் தலைவனும் யானே யென்னும்

இனத்தேவர் தலைவன் வந்தேறக் கொலோ? *

இனவேற்கண் நல்லீர்க்கு இவையென் சொல்லுகேன்?

இனவேற் கண்ணி என் மகள் உற்றனவே.        5.6.6

உற்றார்கள் எனக்கு இல்லை யாரு மென்னும்

உற்றார்கள் எனக்கு இங்கெல்லாரு மென்னும் *

உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும்

உற்றார்களை அழிப்பேனும் யானே யென்னும் *

உற்றார்களுக்கு உற்றேனும் யானே யென்னும்

உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ ? *

உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் ?

உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.      5.6.7

உரைக்கின்ற முக்கண் பிரான் யானே யென்னும்

உரைக்கின்ற திசைமுகன் யானே யென்னும் *

உரைக்கின்ற அமரரும் யானே யென்னும்

உரைக்கின்ற அமரர் கோன் யானே யென்னும் *

உரைக்கின்ற முனிவரும் யானே யென்னும்

உரைக்கின்ற முகில் வண்ணனேறக் கொலோ ? *

உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் ?

உரைக்கின்ற என்கோமள வொண் கொடிக்கே.        5.6.8

கொடிய வினை யாதுமிலனே யென்னும்

கொடிய வினை யாவேனும் யானே யென்னும் *

கொடிய வினை செய்வேனும் யானே யென்னும்

கொடிய வினை தீர்ப்பேனும் யானே யென்னும் *

கொடியானிலங்கை செற்றேனும் யானே யென்னும்

கொடிய புள்ளுடையவனேறக் கொலோ ? *

கொடிய உலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன் ?

கொடியேன் கொடி, என் மகள் கோலங்களே.     5.6.9

கோலம் கொள் சுவர்க்கமும் யானே யென்னும்

கோலமில் நரகமும் யானே யென்னும் *

கோலம் திகழ் மோக்கமும் யானே யென்னும்

கோலம் கொளுயிர்களும் யானே யென்னும் *

கோலம் கொள் தனிமுதல் யானே யென்னும்

கோலம் கொள் முகில் வண்ணனேறக் கொலோ ? *

கோலம் கொளுலகத்தீர்க்கு என் சொல்லுகேன் ?

கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.        5.6.10

கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்

குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை *

வாய்ந்த வழுதி வளநாடன், மன்னு

குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து *

ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்

இவையும் ஓர் பத்தும் வல்லார் * உலகில்

ஏய்ந்த பெருஞ் செல்வத்தராய்த், திருமால்

அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.          5.6.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.