Thiruvoymozhi 5-3

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

மாசறு சோதி, என் செய்ய வாய் மணிக் குன்றத்தை *

ஆசறு சீலனை, ஆதி மூர்த்தியை நாடியே *

பாசற வெய்தி, அறிவிழந்து எனை நாளையம் ? *

ஏசறும் ஊரவர் கவ்வை, தோழி ! என் செய்யுமே ?    5.3.1

என் செய்யும் ஊரவர் கவ்வை ? தோழி ! இனி நம்மை *

என் செய்ய தாமரைக் கண்ணன், என்னை நிறை கொண்டான் *

முன் செய்ய மாமை யிழந்து, மேனி மெலிவெய்தி *

என் செய்ய வாயும் கருங் கண்ணும், பயப்பூர்ந்தவே.        5.3.2

ஊர்ந்த சகடம் உதைத்த, பாதத்தன் * பேய்முலை

சார்ந்து சுவைத்த செவ்வாயன், என்னை நிறை கொண்டான் *

பேர்ந்தும் பெயர்ந்தும், அவனோடன்றி ஓர் சொல்லிலேன் *

தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே ?     5.3.3

ஊரவர் கவ்வை யெருவிட்டு, அன்னை சொல் நீர் படுத்தி *

ஈர நெல் வித்தி முளைத்த, நெஞ்சப் பெருஞ் செய்யுள் *

பேரமர் காதல், கடல் புரைய விளைவித்த *

காரமர் மேனி நம் கண்ணன், தோழீ ! கடியனே.       5.3.4

கடியன் கொடியன், நெடிய மால் உலகம் கொண்ட

அடியன் * அறிவரு மேனி, மாயத்தன் * ஆகிலும்

கொடிய என்னெஞ்சம், அவனென்றே கிடக்கும் எல்லே ! *

துடி கொளிடை மடத் தோழி ! அன்னை யென் செய்யுமே ?        5.3.5

அன்னைஎன்செய்யில்என்? ஊர்என்சொல்லில்என்? தோழிமீர் ! *

என்னை இனி உமக்காசை யில்லை, அகப்பட்டேன் *

முன்னை யமரர் முதல்வன், வண் துவராபதி

மன்னன் * மணிவண்ணன், வாசுதேவன் வலையுளே.       5.3.6      துவாரகை (துவரை)

வலையு ளகப்படுத்து, என்னை நல்நெஞ்சம் கூவிக் கொண்டு *

அலை கடற் பள்ளி யம்மானை, ஆழிப் பிரான் தன்னைக் *

கலை கொள் அகலல்குல் தோழீ ! நம் கண்களால் கண்டு *

தலையில் வணங்கவும் ஆங்கொலோ ? தையலார் முன்பே.      5.3.7      திருப்பாற்கடல்

பேய் முலை யுண்டு சகடம் பாய்ந்து, * மருதிடைப்

போய் முதல் சாய்த்துப் புள் வாய் பிளந்து, களிறட்ட *

தூமுறுவல் தொண்டை வாய்ப் பிரானை, எந்நாள் கொலோ? *

யாம் உறுகின்றது தோழி! அன்னையர் நாணவே.      5.3.8

நாணும் நிறையும்கவர்ந்து என்னைநல்நெஞ்சம் கூவிக்கொண்டு *

சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை *

ஆணை என் ? தோழி ! உலகுதோறு அலர் தூற்றி * ஆம்

கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே.        5.3.9      பரமபதம்

யாம் மடலூர்ந்தும், எம் ஆழியங்கைப் பிரானுடைத் *

தூமடல் தண்ணந் துழாய், மலர் கொண்டு சூடுவோம் *

யாம் மடமின்றித் தெருவு தோறு அயல் தையலார் *

நாமடங்காப் பழி தூற்றி, நாடும் இரைக்கவே.  5.3.10

இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை *

விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன *

நிரைக் கொளந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும் *

உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூரெல்லாம்.   5.3.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.