Thiruvoymozhi 2-6

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

வைகுந்தா ! மணிவண்ணனே !

என் பொல்லாத் திருக்குறளா ! என்னுள் மன்னி *

வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே ! *

செய்கும் தாவருந்தீமை உன்னடியார்க்குத்

தீர்த்து, அசுரர்க்குத் தீமைகள்

செய்குந்தா ! * உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.     2.6.1

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே * உலகுகள்

ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின் *

மிக்கஞானவெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்கற்று அமுதமாய் * எங்கும்

பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே.          2.6.2

தாமரைக்கண்ணனை

விண்ணோர் பரவும் தலைமகனைத் * துழாய் விரைப்

பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன் மலையை *

நாமருவி நன்கேத்தி உள்ளி வணங்கி

நாம் மகிழ்ந்தாட * நாவலர்

பாமருவி நிற்கத் தந்த பான்மையேய் வள்ளலே !     2.6.3

வள்ளலே ! மதுசூதனா ! என்மரதகமலையே ! * உன்னை நினைந்து

எள்கல் தந்த எந்தாய் ! உன்னை எங்ஙனம் விடுகேன் ? *

வெள்ளமே புரை நின்புகழ் குடைந்தாடிப் பாடிக்களித்து உகந்துகந்து *

உள்ள நோய்களெல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே.     2.6.4

உய்ந்து போந்து என்னுலப்பிலாத

வெந்தீவினைகளை நாசஞ் செய்து * உனது

அந்தமி லடிமை அடைந்தேன் விடுவேனோ ? *

ஐந்து பைந்தலையா டரவணை மேவிப்

பாற்கடல் யோக நித்திரை *

சிந்தை செய்த எந்தாய் ! உன்னைச் சிந்தை செய்து செய்தே.       2.6.5      திருப்பாற்கடல்

உன்னைச் சிந்தை செய்து செய்து

உன் நெடுமா மொழி இசை பாடியாடி * என்

முன்னைத் தீவினைகள் முழு வேரரிந்தனன் யான் *

உன்னைச் சிந்தையினா லிகழ்ந்த

இரணியனகல் மார்வம் கீண்ட * என்

முன்னைக் கோளரியே * முடியாததென் எனக்கே ?       2.6.6

முடியாததென் எனக்கேல் இனி ?

முழுவேழுலகும் உண்டான் * உகந்து வந்து

அடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லன் இனிச் *

செடியார் நோய்களெல்லாம் துரந்து

எமர் கீழ் மேலெழு பிறப்பும் *

விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே.      2.6.7

மாறிமாறிப் பலபிறப்பும்பிறந்து அடியையடைந்து உள்ளம்தேறி *

ஈறிலின்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன் *

பாறிப்பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறெழப் * பாய்பறவை யொன்று

ஏறி வீற்றிருந்தாய் ! உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் !             2.6.8

எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்!

இலங்கை செற்றாய் * மராமரம்

பைந்தாளேழுருவ ஒரு வாளி கோத்த வில்லா !*

கொந்தார் தண்ணந் துழாயினாய் ! அமுதே !

உன்னை என்னுள்ளே குழைத்த எம்

மைந்தா !* வானேறே ! இனி எங்குப் போகின்றதே?      2.6.9      திருவேங்கடம் திருப்பதி

போகின்ற காலங்கள் போய காலங்கள்

போகு காலங்கள் * தாய் தந்தை உயிர்

ஆகின்றாய் !* உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?*

பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்

நாதனே ! பரமா * தண்வேங்கடம்

மேகின்றாய் !* தண்துழாய் விரை நாறு கண்ணியனே !    2.6.10    திருவேங்கடம் திருப்பதி

கண்ணித் தண்ணந் துழாய் முடிக்

கமலத்தடம் பெருங்கண்ணனைப் * புகழ்

நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன *

எண்ணில் சோர்விலந்தாதி

ஆயிரத்துள், இவையும் ஓர் பத்து * இசையொடும்

பண்ணில் பாட வல்லாரவர் கேசவன் தமரே.             2.6.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.