[highlight_content]

Thiruvoymozhi 2-9

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

எம்மா வீட்டுத் திறமும், செப்பம் * நின்

செம்மா பாத பற்புத், தலை சேர்த்து ஒல்லை *

கைம்மா துன்பம், கடிந்த பிரானே ! *

அம்மா! அடியேன் வேண்டுவது, ஈதே.       2.9.1

ஈ(இ)தே யானுன்னைக் கொள்வது, எஞ்ஞான்றும் * என்

மைதோய் சோதி மணிவண்ண எந்தாய் ! *

எய்தா நின்கழல், யானெய்த * ஞானக்

கை தா!, காலக்கழிவு செய்யேலே.          2.9.2

செய்யேல் தீவினை யென்று, அருள் செய்யும் * என்

கையார் சக்கரக், கண்ண பிரானே ! *

ஐயார் கண்டம், அடைக்கிலும் * நின் கழல்

எய்யாது ஏத்த, அருள் செய் எனக்கே.      2.9.3

எனக்கே யாட் செய், எக்காலத்தும் என்று * என்

மனக்கே வந்து, இடை வீடின்றி மன்னித் *

தனக்கேயாக, எனைக் கொள்ளும் ஈதே *

எனக்கே கண்ணனை, யான் கொள் சிறப்பே.       2.9.4

சிறப்பில் வீடு, சுவர்க்கம் நரகம் *

இறப்பில் எய்துக, எய்தற்க * யானும்

பிறப்பில், பல் பிறவிப் பெருமானை *

மறப்பொன்றின்றி, என்றும் மகிழ்வேனே.              2.9.5

மகிழ் கொள் தெய்வம், உலோகம் அலோகம் *

மகிழ் கொள் சோதி மலர்ந்த, அம்மானே ! *

மகிழ் கொள் சிந்தை, சொல் செய்கை கொண்டு * என்றும்

மகிழ்வுற்று, உன்னை வணங்க வாராயே.         2.9.6

வாராய், உன் திருப் பாத மலர்க் கீழ் *

பேராதே, யான் வந்து அடையும் படி

தாராதாய் ! * உன்னை என்னுள் வைப்பில், என்றும்

ஆராதாய் !* எனக்கு என்றும் எக்காலே.        2.9.7

எக்காலத் தெந்தையாய், என்னுள் மன்னில் * மற்று

எக் காலத்திலும், யாதொன்றும் வேண்டேன் *

மிக்கார் வேத விமலர் விழுங்கும் * என்

அக்காரக் கனியே ! உன்னை யானே.        2.9.8

யானே என்னை, அறியகிலாதே *

யானே என் தனதே, என்றிருந்தேன் *

யானே நீ, என்னுடைமையும் நீயே *

வானே யேத்தும், எம் வானவரேறே !        2.9.9

ஏறேல் ஏழும் வென்று, ஏர்கொளிலங்கையை *

நீறே செய்த நெடுஞ் சுடர்ச் சோதி ! *

தேறேன், என்னை உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை

வேறே போக * எஞ்ஞான்றும், விடலே.        2.9.10

விடலில், சக்கரத் தண்ணலை * மேவல்

விடலில், வண் குருகூர்ச் சடகோபன் சொல் *

கெடலிலாயிரத்துள், இவை பத்தும் *

கெடலில்வீடு செய்யும், கிளர்வார்க்கே.     2.9.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.