வ்யாக்யான ப்ரமாணத்திரட்டு

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமத்க்ருஷ்ணஸூரயே நம:

ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யான ப்ரமாணத்திரட்டு

  1. ஜிதந்த இதி மந்த்ரேண

[‘ஜிதந்தே’ என்னும்‌ மந்திரத்தினால்‌.]

  1. அவித்3யாதோ தே3வே பரிப்3ருட4தயா வா விதி3தயா

ஸ்வயப4க்தேர்பூ4ம்நா வா ஜக3தி 3திமந்யாமவிது3ஷாம்

3திர்3ம்யஶ்சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வயமநோ:

ரஹஸ்யம்வ்யாஜஹ்ரே 2லு 43வாந்‌ ஶௌநகமுநி:

(4ட்டர் முக்தகம்)

[ப43வத்‌3 விஷயத்தில்‌ அறியாமையினாலாவது, நன்றாக அறிந்திருப்பதினாலேயாவது, தன்‌ ப4க்தியின்‌ ஆதி4க்யத்‌தினாலேயாவது இவ்வுலகில்‌ வேறு உபாயத்தை ௮றியாதவர்களுக்கு, ‘உபாயமும்‌ உபேயமும்‌ இந்த ஹரியே’ என்று ‘ஜிதந்தே’ என்று பெயரையுடைய மந்த்ரத்தின்‌ ரஹஸ்‌யத்தை ப43வான்‌ ஶௌநகமுனி வெளிப்படுத்தினாரன்‌றோ.]

  1. ஸ்தோப்ர (298)

          ஸ்வத்ம மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்3ரஹ்மணி ஸ்தி2தம்

          உப4யோரேஷ ஸம்ப3ந்தோ4 ந பரோபி4மதோ மம ।। (விஷ்ணு தத்வம்)

[உடைமையாயிருக்கும் தன்மை ஆத்மாவினிடத்தில் உள்ளது; உடையவனாயிருக்கும் தன்மை ப்3ரஹ்மத்தினிடமுள்ளது; இருவருக்கும் இதுவே ஸம்ப3ந்த4ம்; வேறு ஸம்ப3ந்த4ம் எனக்கு இஷ்டமன்று]

  1. ஸ்தோப்ர (323)

          ஸ்வோஜ்ஜீநேச்சா2 யதி3 தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி3

          ஆத்மதா3ஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபா4வஞ்ச ஸதா3 ஸ்மர ।। (விஷ்ணு தத்வம்)

[உன்னுடைய உஜ்ஜீவனத்தில் உனக்கு விருப்பமிருக்குமாகில், உன் இருப்பில் ஆசையிருக்குமாகில், ஆத்மாவினுடைய தா3ஸனாயிருக்கும் தன்மையையும், ஹரியினுடைய ஸ்வாமியாயிருக்கும் தன்மையையும் (இவைகள்) இயல்வானவையென்பதையும் எப்போதும் நினைப்பாயாக.]

  1. ஸ்தோப்ர (224)

          த்3வயக்ஷரஸ்து 4வேந்ம்ருத்யுஸ் த்ர்யக்ஷரம் ப்3ரஹ்மண: பத3ம்

          மமேதி த்3வயக்ஷரோ ம்ருத்யுர் ந மமேதி ச ஶாஶ்வதம் ।। (பா3ரதம் ஶாந்தி 13-4)

[இரண்டு அக்ஷரத்தையுடையது ஸம்ஸாரமடையக் காரணமாகிறது. மூன்றக்ஷரங்களையுடையது ப்3ரஹ்மத்தையடையக் காரணமாகிறது. இரண்டெழுத்துச் சொல்லான ‘மம’ என்பது ஸம்ஸாரத்திற்குக் காரணம். மூன்றெழுத்துச் சொல்லான ‘ந மம’ என்பது நிலையான மோக்ஷத்திற்குக் காரணம்.]

  1. யோந்யதா2 ஸந்தமாத்மாநமந்யதா2 ப்ரதிபத்3யதே

கிம்‌ தேந ந க்ருதம்‌ பாபம்‌ சோரேணாத்மாபஹாரிணா ।।

(பா4ரதம் உத்3யோக3பர்வம். 42-35)

[ப43வானுடைய உடைமையாயிருக்கும்‌ ஆத்மாவை, எவனொருவன்‌ தனக்குச்‌ சொந்தமாக நினைக்கிறானோ, ஆத்‌மாவை அபஹரிப்பவனான அந்தத்‌ திருடனால்‌ செய்யப்‌படாத பாபம்‌ எது?]

  1. யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி3 ஸ்தி2:

தேந சேத3விவாத3ஸ்தே மா 3ங்கா3ம்மா குரூந்3:।। (மநுஸ்ம்ருதி 8-92)

[எல்லாரையும்‌ நியமிப்பவனும்‌, ஸுர்யமண்ட3லத்தின்‌ நடுவிலிருப்பவனும்‌, எல்லாருக்கும்‌ இனியவனாயிருப்பவனும்‌ எவனோ, அவன்‌ உன்னுடைய ஹ்ருத3யத்திலிருக்கிறான்‌. அவனுடன்‌ உனக்கு விவாத3மின்றியிலே இருந்ததாகில்‌, க3ங்கை3க்கும்‌, குருக்ஷேத்ரத்திற்கும்‌ நீ போகவேண்டியதில்லை.]

  1. க்ஷேத்ரஜ்ஞஸ்யேஶ்வரஜ்ஞாநாத்விஶுத்3தி4: பரமா மதா

(யாஜ்ஞவல்க்யஸ்ம்ருதி 3-1)

[ஜீவனுக்கு ஈஶ்வரனை அறிவதாலேயே மேலான ஶுத்3தி4 உண்டாவதாக எண்ணப்படுகிறது]

  1. பரமேஶ்வரஸம்ஜ்ஞோஜ்ஞ ! கிமந்யோ மய்யவஸ்தி2தே

ததா2பி மர்த்துகாமஸ்த்வம்‌ ப்ரப்‌3ரவீஷி புந: புந: ।।

(வி.பு. 1-17-23; ஹிரண்யவாக்யம்)

[மூடா4! பரமேஶ்வரன்‌ என்கிற பெயரையுடையவன்‌, நான்‌ இருக்கும்போது வேறு எவன்‌ உளன்‌? அப்படியிருந்த போதிலும்‌, சாவதற்கு விருப்பமுள்ளவனான நீ மறுபடியும்‌ மறுபடியும்‌ (அப்படியே) சொல்லுகிறாய்‌.]

  1. த்3விதா4 4ஜ்யேயமப்யேவம்‌ ந நமேயம்‌ து கஸ்யசித்

ஏஷ மே ஸஹஜோ தோ3: ஸ்வபா4வோ து3ரதிக்ரம: ।।

(ரா.யு. 36-11 ராவண வாக்யம்)

[இரண்டாகப்‌ பிளக்கப்பட்டாலும்‌, இம்மாதிரி ஒருவனுக்கும்‌ வணங்கமாட்டேன்‌. இது என்னுடன்‌ பிறந்ததான தோ3ஷம்‌. (அவரவர்களுடைய) ஸ்வபா4வம்‌ மீறமுடியாததன்‌றோ.]

11.- ஸ்தோப்ர (61)

        அஹமபி ந மம 43வத ஏவாஹமஸ்மீத்யேவம் அமமாதாம் யோஜ்யாத்யதோ நம இதி ।। (விஷ்ணுஷட3க்ஷரீ)

[“நான் எனக்குமுரியேனல்லேன்; ப43வானுக்கு அடியேனாகிறேன்” என்று இம்மாதிரியாக மமகாரமில்லாமையைத் தருவதால் ‘நம:’ எனப்படுகிறது]

  1. விலாஸலலிதம்ப்ராஹ ப்ரேமக3ர்ப்ப4 4ராலஸம்

வஸ்த்ரே ப்ரக்3ருஹ்ய கோ3விந்த3! மம கே3ஹம்‌ வ்ரஜேதி வை ।। (வி.பு. 5-20-11)

[அந்தக்‌ கூனியானவள்‌, கண்ணனுடைய வஸ்த்ரங்களைப்‌ பிடித்துக்கொண்டு, “கோவிந்தா! என்னுடைய வீட்டிற்‌குப்‌ போகவேணும்‌ என்று விளையாட்டாயிருப்பதும்‌, அழகானதும்‌, நிறைந்த அன்பை அடக்கிக்கொண்டிருப்பதால்‌ மெதுவாயிருப்பதுமான வார்த்தையைச்‌ சொன்னாள்‌.]

  1. புந: புந: ப்ரணம்யாஹ மாலாகாரோதிவிஸ்மித: (வி.பு. 5-19-23)

[மிகவும்‌ ஆச்சரியத்தை அடைந்தவரான மாலாகாரர்‌ மறுபடியும்‌, மறுபடியும்‌ வணங்கிச்‌ சொன்னார்‌.]

  1. ஹ்ருஷீகாணீந்த்3ரியாண்யாஹுஸ்தேஷாமீஶோயதோ 4வாந்

ஹ்ருஷீகேஶ இதி க்2யாத:

[இந்திரியங்களை ‘ஹ்ருஷீகங்கள்‌’ என்று சொல்லுகிறார்கள்‌. நீர்‌ அவைகளுக்கு ஈஶனாயிருப்பதால்‌ ஹ்ருஷீகேஶன்‌ என்று பிரஸித்‌3தி4பெற்றிருக்கிறீர்‌.]

  1. யஶ் சக்ஷுஷி திஷ்ட2ந்‌–வாசி திஷ்ட2ந்‌ (ப்3ருஹ 5-7-22)

[எவனொருவன்‌ கண்ணிலிருக்கிறானோ, எவன்‌ வாக்கிலிருக்‌கிருனோ…]

  1. ஸ்தோப்ர (183)

          அத2 மத்4யமகக்ஷ்யாயாம் ஸமாக3ச்ச2த் ஸுஹ்ருஜ்ஜநை:

          ஸர்வாநர்த்தி2நோ த்3ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்3।। (ரா.அ. 16-27)

[அந்த ஶ்ரீராமன் யாசிப்பவர்களைக் கண்டு, (அவர்களை) எதிர்கொண்டு ஆநந்த3ப்படுத்திப் பிறகு நடுக்கட்டில் நண்பர்களுடன் சேர்ந்தார்.]

  1. ஸ்தோப்ர (115)

          ததை3க்ஷத 3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோஸ்ருஜத (சா2ந். உப. 6-2-3)

[அந்த பரப்3ரஹ்மம் ‘(நானே) பலவாக ஆகக்கடவேன்’ என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டிசெய்தது.]

  1. ஸ்தோப்ர (118) (மஹோபனிஷத்)

[(ப்ரளய காலத்தில்) ஒருவராயிருந்த அந்த நாராயணன் ஆனந்த3த்தை அடையவில்லை.]

  1. அஜோபி ஸந்நவ்யயாத்மா பூ4தாநாமீஶ்வரோபி ஸந்

ப்ரக்ருதிம்ஸ்வாமதி4ஷ்டா2 ஸம்ப4வாம்யாத்மமாயயா ।। (கீதை 4-6)

[பிறப்பற்றவனாகவும்‌, அழிவற்றவனாகவும்‌, பூதங்களுக்கு ஈஶ்வரனாகவுமிருந்தபோதிலும்‌, என்னுடைய ஸ்வபா4வத்‌தைக்கொண்டு, என்‌ ஸங்கல்பத்தாலே நான்‌ பிறக்கிறேன்‌.]

  1. ஸ்தோப்ர (187)

          . . . 3பூ4 கு3ணவத்தர:

          ஹி தே3வைருதீ3ர்ணஸ்ய ராவணஸ்ய வதா4ர்த்தி2பி4:

          அர்த்தி2தோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாதந: ।। (ரா.அ. 1-7)

[கொழுத்தவனான ராவணனுடைய வத4த்தை விரும்பும் தே3வர்களால் ப்ரார்த்திக்கப்பட்டவனும், பழமையானவனுமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் பிறந்தான்; (அப்படி அவதாரம் செய்த) அந்த ராமபிரானே (தன் பராவஸ்தை2யைக் காட்டிலும்) கு3ணத்தில் சிறந்தவனானான்.]

  1. பரித்ராணாய ஸாதூ4நாம்விநாஶாய து3ஷ்க்ருதாம்

4ர்ம ஸம்ஸ்தா2பநார்த்தா2 ஸம்ப4வாமி யுகே3 யுகே3 ।।(கீதை 4-8)

[ஸாது4க்களை ரக்ஷிப்பதற்கும்‌, தீயவர்களை அழிப்பதற்கும்‌, வைதி3கத4ர்மத்தை நிலைநிறுத்துவதற்கும்‌ யுக3ந்தோறும்‌ நான்‌ பிறக்கிறேன்‌.]

  1. ஸ்தோப்ர (119)

          உபாத3த்தே ஸத்தாஸ்தி2திநியமநாத்3யைஶ்சித3சிதௌ

                   ஸ்வமுத்3தி4ஶ்ய ஶ்ரீமாநிதி வத3தி வாகௌ3பநிஷதீ3

          உபாயோபேயத்வே ததி3 தவ தத்த்வம் து கு3ணௌ

                   அதஸ்த்வாம் ஶ்ரீரங்கே3ஶய ஶரணமவ்யாஜமப4ஜம் ।।

(ஶ்ரீரங்க3ராஜஸ்தவம் 2-88)

[ஹே ஶ்ரீரங்க3நாத2னே! ‘ஶ்ரீமந்நாராயணன் ஸ்ருஷ்டி, ஸ்தி2தி, நியமனம் முதலிய காரியங்களால் சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்’ என்று உபனிஷத்3 வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால், இவ்விஷயத்தில் உபாயத்வமும், உபேயத்வமும் உனக்கு இயல்வு; செயற்கையன்று. ஆகையால் உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.]

  1. ஸ்தோப்ர (249)

          வைகுண்டே2 து பரேலோகே ஶ்ரியா ஸார்த்த4ம் ஜக3த்பதி:

          ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா 4க்தைர் பா43வதைஸ்ஸஹ ।।  (ஶைவம்)

[மேலான உலகமான வைகுண்ட2த்தில் ஜக3த்பதியும், நினைக்கவொண்ணாத ஸ்வரூபத்தை உடையவருமான விஷ்ணு, ப4க்தர்களுடனும், பா44வதர்களுடனும் கூடியவராய், ஶ்ரீதே3வியுடன் கூட எழுந்தருளியிருக்கிறார்.]

  1. மநுஷ்யாணாம்ஸஹஸ்ரேஷு கஶ்சித்யததி ஸித்34யே

யததாமபி ஸித்3தா4நாம்‌ கஶ்சிந்மாம்‌ வேத்தி தத்த்வத: ।। (கீதை 7-3)

[மனுஷ்யர்களில்‌ ஆயிரக்கணக்கானவர்களில்‌ ஒருவனே ஸித்‌3தி4யடையும்‌ வரையில்‌ முயற்சி செய்கிறான்‌. ஸித்3தி4யடையும்‌ வரையில்‌ முயற்சி செய்பவர்களிலும்‌ (பல்லாயிரத்தில்‌) ஒருவன்தான்‌ என்னை உண்மையாக அறிகிறான்‌.]

  1. ஸ்தோப்ர (228)

          3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதே

          வாஸுதே3வஸ் ஸர்வமிதி மஹாத்மா ஸுது3ர்லப4: ।। (கீதை 7-19)

[பல ஜன்மங்களுக்குப் பின் ஜ்ஞானியானவன் “வாஸுதே3வனே (எனக்கு) எல்லாம்” என்று என்னை உபாஸிக்கிறான். அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும் கிடைத்தற்கரியவன்.]

  1. கிம்ஜபந்முச்யதே ஜந்துர்ஜந்மஸம்ஸாரப3ந்த4நாத்

(விஷ்ணு ஸஹஸ்ரநாமாத்4யாயம்)

[ஜந்துவானவன்‌ எதை ஜபிப்பதினால்‌ ஜன்மஸம்ஸாரங்‌களாகிற கட்டுகளிலிருந்து விடுபடுகிறான்‌ ?]

  1. பவித்ரம்பரமம்புண்யம்தே3ஶோயம்‌ ஸர்வகாமது4க்

யஸ்மிந்வாஸரமாத்ரேண வாஸம்வித34தாம்‌ ந்ருணாம்‌ ।।

4யாந்வயா விநஶ்யேயுர்லோப4 மோஹாத3யோ த்3விஜ ।।

(கா3ருட3 புராணம் 11)

[ப்‌3ராஹ்மணரே! யாதொரு தே3ஶத்தில்‌ ஒரு நாள்‌ மாத்‌திரம்‌ வாஸம்‌ செய்யும்‌ மனிதர்களுக்கு, ப4யகாரணங்களும்‌, லோப4ம்‌, மோஹம்‌ முதலியவைகளும்‌ நசிக்கின்‌றனவோ, அப்படிப்பட்ட இந்த தே3ஶம்‌ மிகவும்‌ புனிதமாகவும்‌, மனிதர்களுக்கு மோக்ஷோபாயமாகவும்‌, எல்லா இஷ்டங்களையும்‌ கொடுப்பதாகவுமிருக்கிறது.]

  1. விஷ்ணுப4க்திபரோ தே3வோ விபரீதஸ்ததா2ஸுர: (விஷ்ணுதர்மம்‌ 109-74)

[விஷ்ணுப4க்தியில்‌ ஈடுபட்டவன்‌ தே3வன்‌; அப்படியே ப4க்தியற்றவன்‌ அஸுரன்‌.]

  1. த்3வெள பூ4தஸர்க்கௌ3 லோகேஸ்மிந்‌ தை3 ஆஸுர ஏவ ச (கீதை 16-6)

[இவ்வுலகில்‌ பூ4தங்களின்‌ உற்பத்தி– தை3வமென்றும்‌, ஆஸுரமென்றும்‌ இருவித4ம்‌.]

  1. ஸர்வலோகஶரண்யாய ராக4வாய மஹாத்மநே

நிவேத3யத மாம்க்ஷிப்ரம்விபீ4ஷணமுபஸ்தி2தம் (ரா.யு. 17-17)

[மஹாத்மாவும்‌, எல்லா உலகுக்கும்‌ ஶரணமடையத்தகுந்தவனுமான ராக4வனுக்கு இங்கு வந்திருப்பவனும்‌, விபீ4ஷணனென்ற பெயரையுடையவனுமான என்னை சீக்கிரமாக அறிவியுங்கள்‌.]

  1. ஸ்தோப்ர (202)

          ஸமோஹம் ஸர்வபூ4தேஷு மே த்3வேஷ்யோஸ்தி கஶ்சந (கீ3தை 9-29)

[(என்னை ஆஶ்ரயிக்கும் விஷயத்தில்) நான் எல்லா பூ4தங்களுக்கும் ஸமமாயிருப்பவன்; எனக்கு ஒருவனும் வெறுக்கத்தக்கவனல்லன்.]

  1. ஸ்தோப்ர (196)

          வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்4ருஶம் 4வதி து3:க்கி2:

        உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி  ।। (ரா.அ. 2-40)

[(ராமன்) மனுஷ்யர்களுடைய து3க்க2ங்களில், (அவர்களைக் காட்டிலும்) அதி4கமாக துன்புறுகிறான். (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும் தந்தையைப்போல் ஆனந்த3ப்படுகிறான்.]

  1. ஸ்தோப்ர (312)

          ஆநயைநம் ஹரிஶ்ரேஷ்ட2 3த்தமஸ்யாப4யம் மயா

          விபீ4ஷணோ வா ஸுக்3ரீவ! யதி வா ராவண: ஸ்வயம் ।।   (ரா.யு. 18-34)

[வானரர்களுள் சிறந்தவனான ஸுக்3ரீவனே! இவனை அழைத்து வா; விபீ4ஷணனாயிருந்தாலும், ராவணன் தானேயாயிருந்தாலும், இவனுக்கு என்னால் அப4யமளிக்கப்பட்டது.]

  1. பாபாநாம்வா ஶுபா4நாம்வா வதா4ர்ஹாணாம்ப்லவங்க3

கார்யம்கருணாமார்யேண கஶ்சிந்நாபராத்4யதி ।। (ரா.யு. 116-44)

[வானர! பாபிகளாயினும்‌. புண்யமுள்ளவராயினும்‌, கொல்‌லத் தகுந்தவர்களாயிருந்தாலும்‌ கு3ணவானாயிருப்பவனால்‌ (அவன்‌ விஷயத்தில்‌) கருணை காட்டப்படவேண்டும்‌. அபராத4ம்‌ செய்யாதவன்‌ ஒருவனுமில்லையே.]

  1. ௮நாலோசித விஶேஷாஶேஷ லோகஶரண்ய (ஶரணாக3தி 3த்3யம்-5)

[(ஆஶ்ரயிப்பவர்களின்‌) கு3ணாகு3ணங்களை நிரூபணம்‌ செய்‌யாமலிருப்பவனே! எல்லா உலகுக்கும்‌ ஶரண்யனே]

  1. ஸ்தோப்ர (44)

          ஸக்ருதே3 ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே

          அப4யம் ஸர்வபூ4தேப்4யோ 3தா3ம்யேதத்3 வ்ரதம் மம  ।। (ரா.யு. 18-33)

[ஒரு தடவை ஶரணமடைந்தவன் பொருட்டும், ‘உனக்கு அடியேனாகிறேன்’ என்று ப்ரார்த்திப்பவன் பொருட்டும், எல்லா ப்ராணிகளிடத்தினின்றும் அப4யமளிக்கிறேன். இது எனக்கு விரதம்.]

  1. ஸ்தோப்ர (83)

        அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே ஸலக்ஷ்மணாம்

          து ப்ரதிஜ்ஞாம் ஸம்ஶ்ருத்ய ப்3ராஹ்மணேப்4யோ விஶேஷத: ।। (ரா.ஆ.10-19)

[நான் உயிரையும், லக்ஷ்மணனோடுகூட உன்னையும் விடுவேனேயொழிய செய்த ப்ரதிஜ்ஞையை விடமாட்டேன்; அதிலும், விஷேஷமாக ப்3ராஹ்மணர்களுக்குக் கொடுத்த ப்ரதிஜ்ஞையை விடேன்.]

  1. ஹி தம்ப்ரதிஜக்3ராஹ பா4ர்யாஹர்த்தாரமாக3தம்

கபோதோ வாநரஸ்ரேஷ்ட2 ! கிம்புநர்மத்3விதோ4 ஜந: ।। (ரா.யு 18:25)

[வானரத்தலைவனே! மனைவியைக்‌ கொன்றவனும்‌, தன்னை அடைந்தவனுமான அவ்வேடனை அந்தப்‌ புறா வரவேற்றதன்றோ. என்னைப்போன்ற .மனிதனைப்பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?]

  1. ஸ்தோப்ர (322)

          மந்மநா 4 மத்34க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு

        மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே ।। (கீ3தை 18-65)

[என்னிடத்தில் மனத்தை வைத்தவனாகவும், என்னுடைய ப4க்தனாகவும், என்னை ஆராதி4ப்பவனாகவும் ஆவாயாக. என்னை நமஸ்கரிப்பாயாக. என்னையே அடைவாய்’ இது ஸத்யம். உனக்கு ப்ரதிஜ்ஞை செய்கிறேன். எனக்குப் பிரியனன்றோ நீ.]

  1. ஸ்தோப்ர (239)

          ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா மாத4:

          3ச்ச2த்4வமேநம் ஶரணம் ஶரண்யம் புருஷர்ஷபா4: ।। (பார. ஆர. பர்வம் 192-56)

[புருஷஶ்ரேஷ்ட2ர்களே! எல்லா உலகங்களுக்கும் தந்தையும், தாயும் லக்ஷ்மீநாத2னே; ஶரணமடையத்தகுந்த இவனை ஶரணமடையுங்கள்.]

  1. ஏவமுக்தாஸ்த்ரய: பார்த்தா2 யமளௌ 4ரதர்ஷபா4:

த்3ரெளபத்3யா ஸஹிதாஸ்ஸர்வே நமஶ்சக்ருர்ஜநார்த்த3நம்।।

(பார. ஆர. 192-56)

[இம்மாதிரியாகச்‌ சொல்லப்பட்டவர்களும்‌, ப4ரதகுலத்தில்‌ உதித்தவர்களுள்‌ சிறந்தவர்களுமான குந்தீபுத்ரர்கள்‌ மூவரும்‌, (மாத்3ரியின்‌) இரட்டைப்‌ பிள்ளைகளுமாகிய எல்‌லாரும்‌, த்‌3ரெளபதி3யுடன்‌ கூடியவர்களாய்‌ ஜனார்த3னனை நமஸ்கரித்தார்கள்‌ (ஶரணமடைந்தார்கள்‌).]

  1. ஸ்தோப்ர (121)

          காரணந்து த்4யேய: (அத2ர்வஶிகை2)

[காரணவஸ்துவே தியானிக்கத்தக்கது.]

  1. ஸ்தோப்ர (38)

          யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம்

                   யோ வை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை

          தம் தே3வமாத்மபு3த்3தி4 ப்ரஸாத3ம்

                   முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்3யே ।।  (ஶ்வே 6-18)

[எவன் பிரமனை முன் படைத்தானோ, எவன் வேத3ங்களையும் அவனுக்கு உபதே3ஶித்தானோ, அப்படிப்பட்ட தே3வனும், தன் விஷயமான ஞானத்தை ப்ரகாஶிப்பிப்பவனுமான பரமபுருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் ஶரணமடைகிறேன்.]

  1. ஆகாஶாத்‌ வாயு: வாயோரக்3நி:

அக்3நேராப: அத்3ப்4: ப்ருதி2வீ (ஸுபா3லோபநிஷத்-1)

[ஆகாஶத்திலிருந்து வாயு உண்டாயிற்று; வாயுவிலிருந்து அக்3நி உண்டாயிற்று; அக்3நியிலிருந்து ஜலம்‌ உண்டாயிற்று; ஜலத்திலிருந்து பூ4மி உண்டாயிற்று.]

  1. ப்3ரஹ்மா ஸ்ருஜத்யாதி3காலே மரீசி ப்ரமுகா2ஸ்‌ தத:

உத்பாத3யந்த்யபத்யாநி ஜந்தவஶ்ச ப்ரதிக்ஷணம்।।  (வி.பு. 1-22-35)

[பிரமன்‌ ஆதி3காலத்தில்‌ ஸ்ருஷ்டி செய்கிறான்‌; பிறகு மரீசி மூதலியவர்களும்‌, எல்லா ஜந்துக்களும்‌ மக்களை க்ஷணந்தோறும்‌ உண்டுபண்ணுகின்‌றனர்‌.]

  1. ஸோபி4த்4யாய ஶரீராத்ஸ்வாத்ஸிஸ்ருக்ஷுர்விவிதா4: ப்ரஜா:

அப ஏவ ஸஸர்ஜாதெள3 தாஸு பீ3ஜமவாஸ்ருஜத்‌  ।। (மனு 1-8)

[அந்தப்‌ பரமாத்மா தம்முடைய ஶரீரத்தினின்றும்‌ பல வித4மான ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்ய விருப்பமுள்ளவராய்‌ ஸங்கல்பித்து, முதலில்‌ நீரையே ஸ்ருஷ்டித்தார்‌; அந்த ஜலத்தில்‌ (தன்‌ ஶக்தியாகிய) விதையை விதைத்தார்‌.]

  1. ஏவ ஸ்ருஜ்யஸ் ஸர்க்க3கர்த்தா

ஏவ பாத்யத்தி ச பால்யதே ச

ப்3ரஹ்மாத்3யவஸ்தா2பி4ரஶேஷமூர்த்திர்

விஷ்ணுர்வரிஷ்டோ2 வரதோ3 வரேண்ய:  ।। (வி.பு. 1-2-70)

[ஸ்ருஷ்டி செய்யப்படுபவனும்‌ அவனே; பிரமன்‌ முதலிய அவஸ்தை2களால்‌ ஸ்ருஷ்டி செய்பவனும்‌ அவனே; அவனே (உலகை) ரக்ஷிக்கிறான்‌; (உலகை) விழுங்குகிறான்‌; அவனே காப்பாற்றப்படுகிறான்‌. எல்லாவற்றையும்‌ ஶரீரமாகக்‌ கொண்ட விஷ்ணுவே மேலானவன்‌; வரங்களைத்‌ தருபவன்‌; வரிக்கத்தகுந்தவன்‌.]

  1. தத3பி4த்4யாநாதே3 து தல்லிங்கா3த்‌ ஸ: (ப்3ரஹ்ம ஸூத்ரம் 2-3-14)

[(மஹதா3தி3 வஸ்துக்களுக்கும்‌) புருஷோத்தமனே (காரணம்‌); அவனுடைய ஸங்கல்பரூபமான அந்த அடையாளத்தாலே.]

  1. ஸ்தோப்ர (148)

          ஸதே3 ஸோம்யேத3மக்3 ஆஸீதே3கமேவாத்3விதீயம் (சா2ந். உப. 6-2-1)

[குழந்தாய்! (நாமரூபங்களுடன் காணப்படும்) இந்த உலகம் ப்ரளயகாலத்தில் (நாமரூபங்கள் இல்லாமையால்) ஒன்றாகவும், (தன்னைப்போல் வேறொன்றில்லாததால்) இரண்டற்றதாகவுமிருந்த ‘ஸத்’ எனப்படும் ப்3ரஹ்மமாகவே இருந்தது.]

  1. 43வத்ஸ்வரூப திரோதா4நகரீம்‌ (ஶரணாக3தி 3த்3யம் -12)

[ப43வத்ஸ்வரூபத்தை மறைப்பதான (ப்ரக்ருதியை).]

  1. ஸத்த்வாத3யோ ஸந்தீஶே யத்ர ப்ராக்ருதா கு3ணா:

ஶுத்34ஸ்ஸர்வஶுத்3தே4ப்4: புமாநாத்3: ப்ரஸீத3து ।। (வி.பு. 1-9-44)

[எந்த ஈஶனிடத்தில்‌ ப்ராக்ருதகு3ணங்களான ஸத்வ, ரஜஸ்‌ தமோகு3ணங்கள்‌ இல்லையோ, ஶுத்34ர்களான எல்‌லோரையும்விட ஶுத்34னான ௮ந்த ஆதி3புருஷன்‌ உகக்‌தருளுவானாக.]

  1. ஸ்தோப்ர (230)

          அஹமஸ்ம்யபராதா4நாமாலயோகிஞ்சநோ3தி:

          த்வமேவோபாயபூ4தோ மே 4வதி ப்ரார்த்த2நாமதி: ।।

          ஶரணாக3திரித்யுக்தா ஸா தே3வேஸ்மிந் ப்ரயுஜ்யதாம் ।।

(அஹிர்பு3த்4ந்ய ஸம்ஹிதை 37-30, 31)

[“நான் குற்றங்களுக்கு ஓர் இருப்பிடமாயிருக்கிறேன். (என்னை ரக்ஷித்துக்கொள்ள) ஒரு உபாயமுமற்றவனாயிருக்கிறேன். உன்னையொழிய வேறு க3தியில்லாதவனாகயிருக்கிறேன். நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக” என்று ப்ரார்த்திக்கும் பு3த்3தி4யே ஶரணாக3தியெனப்படுகிறது. அது இந்த ப43வான் விஷயத்தில் செய்யப்படட்டும்.]

  1. ஸ்தோப்ர (47)

          மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே (கீ3தை 7-14)

[எவர்கள் என்னையே ஶரணமடைகிறார்களோ அவர்கள் இந்த ப்ரக்ருதியைத் தாண்டுகிறார்கள்.]

  1. ஸம்ஸாரார்ணவமக்3நாநாம்‌ விஷயாக்ராந்தசேதஸாம்‌

விஷ்ணுபோதம்விநா நாந்யத்கிஞ்சித3ஸ்தி  பராயணம்‌ ।।

(விஷ்ணு 4ர்மம் 1-59)

[ஸம்ஸாரமாகிற கடலில்‌ முழுகினவர்களும்‌, விஷயங்களினால்‌ சூழப்பட்ட மனத்தை உடையவர்களுமான மனிதர்‌களுக்கு, விஷ்ணுவாகிற ஓடத்தைத்‌ தவிர, (அக்கடலைக்‌கடக்க) மேலான ஸாத4னம்‌ வேறு ஒன்றுமில்லை.]

  1. மயி ப்4ருத்யே ஸ்தி2தே தே3வாநாஜ்ஞாபயத ௫ம்‌ ந்ருபை: (வி.பு. 5-21-12)

[நான்‌ உங்களுக்கு தா3ஸனாயிருக்கையில்‌, நீங்கள்‌ தே3வர்‌களுக்கே ஆஜ்ஞையிடலாமே! அரசர்களைக்‌ கணிசிக்க வேண்டாவே.]

  1. ஸ்தோப்ர (177)

          இமௌ ஸ்ம முநிஶார்தூ3! கிங்கரௌ ஸமுபஸ்தி2தௌ

          ஆஜ்ஞாபய யதே2ஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ।।  (ரா.பா. 31-4)

[முநிஶ்ரேஷ்ட2ரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கர்யம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம். (தேவரீருடைய) இஷ்டப்படி கட்டளையிடவேண்டும்; (தேவரீருடைய) எந்தக்கட்டளையை நாங்கள் செய்யவேண்டும்?]

  1. பரிஜநபரிப4ர்ஹா பூ4ஷணாந்யாயுதா4நி

ப்ரவரகு3ணக3ணாஶ்ச ஜ்ஞாநஶக்த்யாத3யஸ்தே

பரமபத3மதா2ண்டா3ந்யாத்மதே3ஹஸ்ததா2த்மா

வரத3! ஸகலமேதத்ஸம்ஶ்திதார்த்த2ம்சகர்த்த2 ।। (வரத3ராஜஸ்தவம் 63)

[வரதனே ! ( விஷ்வக்ஸேனர்‌. ஆதி3ஶேஷன்‌ முதலிய ) பரிஜனங்களும்‌, (ச2த்ரம்‌, சாமரம்‌ முதலிய) பரிச்ச23ங்‌களும்‌, ஆப4ரணங்களும்‌, ஆயுத4ங்களும்‌, ஜ்ஞானம்‌, ஶக்தி முதலிய அந்தச்‌ சிறந்த கு3ணஸமூஹங்களும்‌, ஸ்ரீவைகுண்‌ட2மும்‌, அண்ட3ங்களும்‌, உன்னுடைய தி3வ்யமங்க3ள விக்‌3ரஹமும்‌, தி3வ்யாத்மஸ்வரூபமுமாகிய இவையெல்லாவற்றையும்‌ அடியவர்களுக்கு ஆக்கிவைத்தாய்‌.]

  1. யஸ்‌ ஸர்வஜ்ஞஸ்‌ ஸர்வவித்‌ யஸ்ய ஜ்ஞாநமயம்‌ தப: (முண்ட3கோபநிஷத் 1-1-10)

[எந்தப்‌ பரமாதமாவானவன்‌, எல்லா வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும்‌, ஸ்வபா4வங்களையும்‌ அறிகிறானோ, எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாயிருக்கிறதோ…]

  1. ஸ்தோப்ர (205)

          அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஶு: (ஸஹஸ்ரநாமம்)

[(அடியார்களின் தோ3ஷங்களைக் காண்பதில்) ஞானமற்றவனாயிருப்பவன். (அடியார்களின் நன்மைகளைக் காண்பதில்) அளவற்ற ஞானமுடையவனாயிருப்பவன்.]

  1. ஸ்தோப்ர (180)

          அநந்யாதீ4நத்வம் தவ கில ஜகு3ர் வைதி3ககி3:

                   பராதீ4நம் த்வாம் து ப்ரணதபரதந்த்ரம் மநுமஹே

          உபாலம்போ4யம் போ4: ஶ்ரயதி 3 ஸார்வஜ்ஞ்யமபி தே

                   யதோ தோ3ஷம் 4க்தேஷ்விஹ வரத3 நைவாகலயஸி  ।।

(வரத3ராஜஸ்தவம் 20)

[வரத3னே! வேத3வாக்கியங்கள் உனக்குப் பிறர்க்கு வஶப்பட்டிராமையாகிய ஸ்வாதந்த்ரியத்தைப் பேசியுள்ளன; நாங்களோவென்னில் அடியவர்களுக்கு ஆட்பட்டவனான உன்னைப் பரதந்திரனாகவே நினைக்கிறோம். இம்மாதிரியான நிந்தை3 உன்னுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும் பற்றுகிறது; ஆஶ்சர்யம்! ஏனெனில், இவ்வுலகிலுள்ள ப4க்தர்களிடத்தில் நீ குற்றத்தைச் சிறிதும் பார்க்கிறாயில்லையன்றோ.]

  1. மே ஸ்நாநம்3ஹுமதம்வஸ்த்ராண்யாப4ரணாநி `

தம்விநா கைகயீபுத்ரம்4ரதம்3ர்மசாரிணாம்‌  ।। (ரா.யு. 124-6)

[த4ர்மவழிப்படி நடப்பவனும்‌, கைகேயியின்‌ புத்திரனுமான அந்த ப4ரதனில்லாமல்‌ . எனக்கு ஸ்நானமும்‌, வஸ்த்ரங்‌களும்‌, ஆப4ரணங்களும்‌ இஷ்டமில்லை.]

  1. ஸ்தோப்ர (169)

          தே நாகம் மஹிமாநஸ் ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்4யாஸ் ஸந்தி தே3வா: (புருஷஸூக்தம் 1-18)

[யாதொரு பரமபத3த்தில் ஸாத்4யர்கள் எனப்படும் தே3வர்கள் இருக்கிறார்களோ, அந்தப் பரமபத3த்தை அவர்கள் மஹிமையுடையவர்களாய் அடைகிறார்கள்.]

  1. புருஷ ஏவேத3ம்‌ ஸர்வம்‌ யத்‌ பூ4தம்யச்ச 4வ்யம்

உதாம்ருதத்வஸ்யேஶாந: யத3ந்நேநாதிரோஹதி ।। (புருஷ ஸூக்தம் 1-2)

[எந்த ஜக3த்தானது முன்‌ கல்பத்திலிருந்ததோ, எது பின்‌வரும்‌ கல்பத்தில்‌ உண்டாகப்போகிறதோ, எது இந்தக்‌கல்பத்திலிருக்கிறதோ, எந்த உலகம்‌ அன்னத்தினால்‌ மறையாமலிருக்கிறதோ, இந்த எல்லா உலகும்‌ புருஷனாகிற நாராயணனே. மோக்ஷத்திற்கும்‌ இவனே ப்ரபு4.]

  1. ஸஹஸ்ரஶீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌

பூ4மிம்‌ விஶ்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட2த்தஶாங்கு3லம்।।

(புருஷ ஸூக்தம் 1-1)

[புருஷன்‌ ஆயிரம்‌ தலைகளையுடையவன்‌; ஆயிரம்‌ கண்‌களை உடையவன்‌; ஆயிரம்‌ கால்களை உடையவன்‌; அவன்‌ பூ4மியை முழுவதும்‌ வியாபித்து, அனந்தயோஜனப்ரமாணமான ப்‌3ரஹ்மாண்ட3த்தை ஆக்ரமித்தான்‌.]

  1. ஸ்தோப்ர (82)

          யத்3விநா 4ரதம் த்வாம் ஶத்ருக்4நஞ்சாபி மாநத3

          4வேந்மம ஸுக2ம் கிஞ்சித் 4ஸ்மஸாத் குருதாம் ஶிகீ  ।। (ரா. அ. 97-8)

[பெருமையைத் தருபவனே! ப4ரதனையும், உன்னையும், ஶத்ருக்4நனையுமில்லாமல் ஏதாவது எனக்கு ஸுக2முண்டாகுமானால், அதை அக்3நி சாம்பலாக்கட்டும்.]

  1. த்வம்ஹி ஸத்யவ்ரதஶ் ஶுரோ தா4ர்மிகோ த்3ருட4விக்ரம:

பரிக்ஷ்யகாரீ ஸ்ம்ருதிமாந்‌ நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸு ச

(ரா.யு. 17-34)

[நீர்‌ பழுதாகாத வ்ரதத்தையுடையவர்‌; சூரர்‌; த4ர்மிஷ்ட2ர்‌; திடமான பராக்ரமமுள்ளவர்‌; (எல்லாமறிந்தவராயிருந்தும்‌) ஆலோசித்துக்‌ காரியங்களைச்‌ செய்பவர்‌; (உம்மிடம்‌ ஆஶாலேஶம் உடையவரையும்‌) எப்போதும்‌ நினைவிற்  கொண்டிருப்பவர்‌; நண்பர்களுக்குத்தம்மையே கொடுப்பவர்.]

  1. பராஸ்ய ஶக்திர்‌ விவிதை4 ஶ்ரூயதே ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா

(ஶ்வே-6)

[இந்தப்‌ பரமாத்மாவுக்குப்‌ பலபடிப்பட்டதும்‌,மேலானதுமான ஶக்தியும்‌, இயற்கையான ஞானமும்‌, ப3லமும்‌, (ஸ்ருஷ்‌டித்தல்‌ முதலிய) காரியங்களும்‌ உண்டென்று அறியப்‌படுகிறது.]

  1. யோ வேத்தி யுக3பத்ஸர்வம்ப்ரத்யக்ஷண ஸதா3 ஸ்வத:

தம்‌ ப்ரணம்ய ஹரிம்‌ ஶாஸ்த்ரம் ந்யாயதத்த்வம்‌ ப்ரசக்ஷ்மஹே  ।।

(நாத2முனிகள் அருளிய ந்யாயதத்வம்)

[எவனொருவன்‌, எப்போதும்‌ எல்லா வஸ்துக்களையும்‌ ஒரே சமயத்தில்‌ தானாகவே ௮றிகிறானோ, ௮ந்த ஹரியை வணங்கி, ந்யாயதத்வம்‌ என்னும்‌ ஶாஸ்திரத்தை இயற்றுகிறோம்‌.]

  1. ஸ்ந்த்3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி க்ஶ்சநைநம்

          (தைத். நாரா. 1-10)

[இவனுடைய ரூபம்‌ கண்ணால்‌ காணும்படி இராது; ஒருவனும்‌ இவனைக்‌ கண்ணால்‌ பார்க்கிறதில்லை.]

  1. ஸ்தோத்ரரத்னம்‌-30.

          விலாஸ விக்ராந்த பராவராலயம்

                   நமஸ்யதா3ர்த்திக்ஷபணே க்ருதக்ஷணம்

          4நம் மதீ3யம் தவ பாத3பங்கஜம்

                   கதா3 நு ஸாக்ஷாத்கரவாணி சக்ஷுஷா ।।

[விளையாட்டாக அளக்கப்பட்ட மேலானவரான தே3வர்களுடையவும், கீழான மனுஷ்யாதி3களுடையவும் உலகங்களை உடையதும், வணங்கினவர்களின் து3க்க2ங்களைப் போக்கும் விஷயத்தில் காலத்தைச் செலவிடுவதும், எனக்குச் செல்வமாயிருப்பதுமான உன்னுடைய திருவடித்தாமரையை எப்போதுதான் கண்ணாலே காணப்போகிறேன்?]

  1. ஸஞ்ஜீவயந்நபி ம்ருதம்ஸுதமுத்தராயாஸ்

ஸாந்தீ3பிநேஶ் சிரம்ருதம்‌ ஸுதமாநயம்ஶ்ச 

தா4ம்நோ நிஜாத்த்3விஜஸுதாந்புநராநயந்வா

ஸ்வாமேவ தாம்தநுமஹோ கத2மாநயஸ்த்வம்‌  ।।

(அதிமானுஷஸ்தவம் 58)

[இறந்துபோன உத்தரையின்‌ புத்திரனைப்‌ பிழைப்பித்தும்‌, நெடுங்காலத்திற்கு முன்‌ உயிர்‌ துறந்த ஸாந்தீ3பிநி குமாரனை மீட்டுக்கொண்டுவந்தும்‌, தன்னுடைய பரமபத3த்‌திலிருந்து வைதி3கன்‌ பிள்ளைகளை மறுபடி அழைத்து வந்தும்‌ போந்த நீ அவரவர்களுடைய அந்த ஶரீரத்தையே எப்படிக்‌ கொண்டுவந்தாய்‌ ? ஆச்சரியம்‌.]

  1. அஹம்ஸ்மராமி மத்34க்தம்நயாமி பரமாம்3திம்।। (வராஹ சரமஶ்லோகம்)

[என்னுடைய ப4க்தனை (அவன்‌ சாகும்‌ சமயத்தில்‌) நான்‌ நினைக்கிறேன்‌. மேலான: க3திக்கு (அவனை நான்‌ ) அழைத்துச்‌ செல்லுகிறேன்‌.]

  1. அஹமந்நமஹமந்நமஹமந்நம்‌

அஹமந்நாதோ3ஹமந்நாதோ3ஹமந்நாத3: ।। (தை-ப்4ருகு3 10-6)

[நான்‌ ( பரமாத்மாவுக்கு ) அன்னம்போல்‌ போ4க்3யமாயிருப்பவன்‌ ) நான்‌ (பரமாத்மாவுக்கு) அன்னம்‌; நான்‌ (பரமாத்மாவுக்கு) அன்னம்‌. நான்‌ (பரமாத்மாவின்‌ உகப்‌பாகிற) அன்னத்தைப்‌ பு4ஜிப்பவன்‌ நான்‌ அன்னத்தை பு4ஜிப்பவன்‌; நான்‌ ௮ன்னத்தை பு4ஜிப்பவன்‌.]

  1. பராவரேஶம்ஶரணம்வ்ரஜத்4வமஸுரார்த3நம்

ப்ரதா4நபும்ஸலோரஜயோ: காரணம்கார்யபூ4தயோ: ।। (வி.பு. 1-9-35, 37)

[மேலானவர்களுக்கும்‌, தாழ்ந்தவர்களுக்கும்‌ ஈஶனும்‌, அஸுரர்களை ஹிம்ஸிப்பவனும்‌, கார்யபூ4தங்களும்‌, பிறப்பற்றவையுமான ப்ரக்ருதிக்கும்‌, புருஷனுக்கும்‌ காரணமானவனுமான விஷ்ணுவை ஶரணமடையுங்கள்‌.]

  1. யத: ப்ரஸூதா ஜக3: ப்ரஸூதீ தோயேந ஜீவாந்வ்யஸஸர்ஜ பூ4ம்யாம்

(தை-நா 1-4)

[உலகத்தை உண்டுபண்ணும்‌ -ப்ரக்ருதியான து எவனிடமிருந்து உண்டாயிற்றோ, எவன்‌ ஜலம்‌ முதலிய பூ4தங்‌களுடன்‌ பூ4மியில்‌ ஜீவர்களை ஸ்ருஷ்டித்தானே…]

  1. யஸ்மிந்நித3ம்ஸஞ்ச விசைதி விஶ்வம்

யஸ்மிந்தே3வா அதி4 விஶ்வே நிஷேது3:

ததே3 பூ4தம்தது3 4வ்யமா இத3ம்

தத3க்ஷரே பரமே வ்யோமந்‌  ।। (தை-நா 1-2)

[எதனிடத்தில்‌ இவ்வுலகம்‌ ( ஸம்ஹாரகாலத்தில்‌ ) உள்‌ளடங்குகிறதோ, (ஸ்ருஷ்டிகாலத்தில்‌) வெளிப்படுகிறதோ, எல்லா தே3வர்களும்‌ ஆஶ்ரயித்திருக்கிறார்களோ, அந்த ப்‌3ரஹ்மமே முன்னிருந்த வஸ்துக்களுக்கும்‌ அந்தர்யாமி; பின்‌ வரப்போகும்‌ வஸ்துக்களுக்கும்‌ அந்தர்யாமி, அதுவே அழியாததான பரமபத3த்தில்‌ ( எழுந்தருளியிருக்கிறது ).]

  1. ஸேயம்தே3வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்‌ திஸ்ரோ

தே3வதா அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணீதி ।।

(சா2ந். உப 6-3-2)

[அப்படிப்பட்ட இந்த தே3வதை  “நான்‌ (நெருப்பு, நீர்‌, பூ4மி என்னும்‌) இந்த மூன்று தே3வதைகளையும்‌ இந்த ஜீவஸமஷ்டிபுடன்‌ கூடிய என்னுடைய ஸ்வரூபத்தால்‌ வியாபித்து நகாமரூபங்களைச்‌ செய்யக்கடவேன்‌.” என்று ஸங்கல்பித்தது.]

  1. தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாதுப்ராவிஶத் தத3நுப்ரவிஶ்ய

ஸச்ச த்யச்சா4வத்…ஸத்யஞ்சாந்ருதஞ்ச ஸத்யமப4வத்‌  ।। (தை. ஆந 6)

[அதை ஸ்ருஷ்டித்தவுடன்‌ ( ௮ந்த ப்3ரஹ்மம்‌) அதை வியாபித்தது; அதை வியாபித்தவுடன்‌ விகாரமற்றதான சேதனமாகவும்‌, விகாரமுள்ளதான ௮சேதனமாகவுமாயிற்று. (விகாரமின்மையினால்‌ ) ஸத்யம்‌ எனப்படும்‌ சேதனமாகவும்‌, (விகாரமடைதலால்‌) அஸத்யமெனப்படும்‌ அசேதன மாகவும்‌ (ஆகிய ப்3ரஹ்மம்‌) விகாரமற்றதாகவே இருந்தது.]

  1. சராசரவ்யபாஶ்ரயஸ்து ஸ்யாத்தத்3வ்யயதே3ஶோ

பா4க்தஸ்தத்3பா4 வபா4வித்வாத் (ப்3. ஸூ. 2-3-17)

[சராசரங்களைச்‌ சொல்லும்‌ ௮ந்தந்த ஸப்‌33ங்கள்‌ ( ப்3ரஹ்ம விஷயத்தில்‌) முக்கியங்களே. ப்3ரஹ்மத்தின்‌ அனுப்ரவேஶித்திருக்கும்‌ தன்மையினாலே ஏற்படுவதாகையால்‌.]

  1. ஸ்தோப்ர (223)

          அநாத்மந்யாத்மபு3த்3தி4ர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி:

          ஸம்ஸாரதருஸம்பூ4திபீ3ஜமேதத் த்3விதா4 ஸ்தி2தம்  ।। (வி.பு. 6.7-11)

[ஆத்மாவல்லாத தே3ஹத்தில் ஆத்மா என்னும் பு3த்3தி4யும், தனதல்லாத பொருளில் தன்னுடையது என்னும் பு3த்3தி4யும், ஸம்ஸாரமாகிய வ்ருக்ஷத்தின் வ்ருத்3தி4க்கு இருவகையாயிருக்கும் விதையாகும்.]

  1. பூ4மெள நிபாத்யமாநோத்3ரேரந்தராஸ்தே ஸ்வபந்நிவ

[மலையிலிருந்து பூ4மியில்‌ தள்ளப்பட்டு நடுவில்‌ தூங்குபவன்‌ போலிருக்கிறான்‌.]

  1. ஹாராம! ஹாலக்ஷ்மண! ஹா ஸுமித்ரே !

ஹா ராமமாத:! ஸஹ மே ஜநந்யா

ஏஷா விபத்3யாம்யஹமல்ப பா4க்3யா

மஹார்ணவே நெளரிவ மூட3வாதா  ।। (ரா. ஸு. 28-8)

[ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸுமித்ரே! என்‌ தாயுடன்‌ கூடிய ராமமாதாவே। அல்பபா4க்3யமுள்ள நான்‌ பெருங்கடலில்‌ காற்றினால்‌ அடிக்கப்பட்ட கப்பல்‌ போல்‌ கஷ்டப்படுகிறேன்‌.]

  1. ஏஹி பஶ்ய ஶரீராணி முநீநாம்பா4விதாத்மநாம்

ஹதாநாம்ராக்ஷஸைர்கோ4ரைர்3ஹூநாம்3ஹுதா4 வநே ।। (ரா.ஆ. 6-16)

[ராம! (இங்கு) வருவாயாக; பரமாத்மாவை தியானம்‌ செய்பவர்களும்‌, வனத்தில்‌ கோ4ரமான ராக்ஷஸர்களால்‌ பலவித4மாக ஹிம்ஸிக்கப்பட்டவர்களுமான பல முனிவர்களுடைய ஶரீரங்களைப்‌ பார்ப்பாயாக ]

  1. ஸ்தோப்ர (219)

          ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்யஶ் ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:

(ப்3ருஹ 6-5-6)

[கேட்கத்தக்கதும், நினைக்கத்தக்கதுமான ஆத்மா தியானிக்கத்தக்கது; பார்க்கத்தக்கது.]

  1. ஸ்தோப்ர (322)

மந்மநா 4 மத்34க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு

        மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே ।। (கீ3தை 18-65)

[என்னிடத்தில் மனத்தை வைத்தவனாகவும், என்னுடைய ப4க்தனாகவும், என்னை ஆராதி4ப்பவனாகவும் ஆவாயாக. என்னை நமஸ்கரிப்பாயாக. என்னையே அடைவாய்’ இது ஸத்யம். உனக்கு ப்ரதிஜ்ஞை செய்கிறேன். எனக்குப் பிரியனன்றோ நீ.]

  1. ஸர்வஸ்ய சாஹம்ஹ்ருதி3 ஸந்நிவிஷ்டோ

மத்தஸ்‌ ஸ்ம்ருதிர்‌ ஜ்ஞாநமபோஹநஞ்ச 

வேதை3ஶ்ச  ஸர்வைரஹமேவ வேத்3யோ

வேதா3ந்தக்ருத்வேத3விதே3 சாஹம்।। (கீதை 15-15)

[எல்லாருடைய ஹ்ருத3யத்திலும்‌ நான்‌ அமர்ந்திருக்‌கிறேன்‌. என்னிடமிருந்தே நினைவும்‌, ஜ்ஞானமும்‌, மறதியும்‌ உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும்‌ அறியப்‌படுபவன்‌ நானே. வேத3த்தில்‌ சொல்லப்பட்ட ப2லன்‌களைக்‌ கொடுப்பவனும்‌, வேத3த்தை ௮றிபவனும்‌ நானே.]

  1. க்ருதக்4 நோபி விஶுத்3த்4யதி

[செய்ந்நன்றி  மறந்தவன்கூட ஶுத்3தி4யடைகிறான்‌.]

  1. ஸ்தோப்ர (326)

          கோ3க்4நே சைவ ஸுராபே சோரே 4க்3நவ்ரதே ததா2

நிஷ்க்ருதிர்விஹிதா ஸத்3பி4: க்ருதக்4நே நாஸ்தி நிஷ்க்ருதி:।। (ரா.கி. 34-12)

[பசுவைக் கொன்றவன், ஸுராபானம் செய்தவன், வ்ரதப4ங்க3ம் செய்தவன், இவர்கள் விஷயத்தில் பெரியோர்களால் ப்ராயஶ்சித்தம் விதி4க்கப்பட்டிருக்கிறது. செய்ந்நன்றி மறந்தவன் விஷயத்தில் ப்ராயஶ்சித்தமில்லை.]

  1. அஶ்வத்த2ம்ஸிந்து4 ராஜஞ்ச

ஸதா3 ஸேவேத ந ஸ்ப்ருஶேத்‌

மந்த3வாரே ஸ்ப்ருஶேத்பூர்வம்

அபரம்‌ பர்வணி ஸ்ப்ருஶேத்‌  ।।

[அரசமரத்தையும்‌, கடலையும்‌ எப்போதும்‌ பார்க்கலாம்‌. (ஆனால்‌) எப்போதும்‌ தொடலாகாது, முன்‌ சொல்லப்‌பட்ட அரசமரத்தை சனிக்கிழமையில்‌ தொடலாம்‌; பின்‌ சொல்லப்பட்ட கடலை பர்வகாலங்களில்‌ தொடலாம்‌.]

  1. மது4ரா நாம நக3ரீ புண்யா பாபஹரீ ஶுபா4

யஸ்யாம்ஜாதோ ஜக3ந்நாத2ஸ்ஸாக்ஷாத்3 விஷ்ணுஸ்‌ ஸநாதந: ।।

[யாதொரு நக3ரத்தில்‌, உலகங்களுக்கெல்லாம்‌ நாயகனும்‌, அனாதி3யானவனுமான ஸாக்ஷாத்‌ விஷ்ணு (க்ருஷ்ணனாய்‌) திருவவதரித்திருக்கிறாரோ, அப்படிப்பட்ட மது4ரை என்னும்‌ நக3ரம்‌ அவனைத்‌ தருகைக்கு உபாயமாகவும்‌, பாபத்தைப்‌ போக்கடிப்பதாகவும்‌, ஸ்வயம்‌ ப்ராப்யமாகவுமிருக்கிறது.]

  1. ஶரீரமாத்3யம்2லு 4ர்மஸாத4நம்‌ (குமாரஸம்ப4வம்‌ 5-33)

[ஶரீரமன்றோ முதன்மையான த4ர்மஸாத4னம்‌]

  1. விசித்ரா தே3ஹஸம்பத்திரீஶ்வராய நிவேதி3தும்

பூர்வமேவ க்ருதா ப்3ரஹ்மந்ஹஸ்தபாதா3தி3ஸம்யுதா ।। (ஸ்ரீவிஷ்ணுதத்வம்‌)

[ப்3ராஹ்மணரே ! கைகால்‌ முதலியவைகளுடன்‌ கூடியதும்‌, விசித்திரமானதுமான தே3ஹமாகிற இச்செல்வம்‌, ஸர்‌வேஶ்வரனுக்கு ஸமர்ப்பிப்பதற்காக ஆதி3காலத்திலேயே செய்யப்பட்டிருக்கிறது.]

  1. ஶ்ரேயாந்ஸ்வத4ர்மோ விகு3: பரத4ர்மாத்ஸ்வநுஷ்டி2தாத்

ஸ்வத4ர்மே நித4நம்ஶ்ரேய: பரத4ர்மோ 4யாவஹ।। (கீ3தை 3.35)

[நிஹீனமாயினும்‌, ஸ்வத4ர்மம்‌, கு3ணத்துடன்‌ கூடினதும்‌ (சிறிதுகாலம்‌) அனுஷ்டி2க்கப்படுவதுமான பரத4ர்மத்தைக்‌காட்டிலும்‌ மேலானது, தன்னுடைய த4ர்மத்தை அனுஷ்டி2த்து இறப்பதும்‌ மேலானது; மற்றொருவனுடைய த4ர்மம்‌ ப4யத்தைத்‌ தருவது.]

  1. ஸ்தோப்ர (48)

          தமேவ ஶரணம் 3ச்ச2 ஸர்வபா4வேந பா4ரத (கீ3தை 18-62)

[ப4ரதகுலத்துதித்தவனே! எல்லா வித4த்திலும் அந்த ப43வானையே ஶரணமடை.]

  1. ஸ்தோப்ர (49)

          ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ

          அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:  (கீ3தை 18-66)

[(ப2லஸாத4நமான) எல்லா த4ர்மங்களையும் வாஸனையுடன் விட்டு, என்னை ஒருவனையே உபாயமாக அடை; நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்; து3க்கி2க்காதே.]

  1. ஶங்க சக்ர 3தா3பாணே! த்3வாரகாநிலயாச்யுத !

கோ3விந்த3; ! புண்ட 3ரீகாக்ஷ ! ரக்ஷமாம்ஶரணாக3தாம்।। (பா4ரதம்‌.ஸபா4– 66)

[(ஆஶ்ரிதரை ரக்ஷிக்க) ஶங்க2ம்‌, சக்ரம்‌, க3தை3 முதலிய ஆயுத4ங்களைக்‌ கையிலே த4ரித்திருப்பவனே! த்‌3வாரகையில்‌ வஸிப்பவனே ! அடியவரை (ஒருபொழுதும்‌) நழுவவிடாதவனே! கோ3விந்தா3 ! செந்தாமரைக்கண்ணா! ஶரணமடைந்த என்னை ரக்ஷிப்பாயாக.]

  1. ஸ்தோப்ர (110)

          நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்3தா4 த்வத்ப்ரஸாதா3ந் மயாச்யுத

          ஸ்தி2தோஸ்மி3தஸந்தே3: கரிஷ்யே வசநம் தவ ।।  (கீ3தை 18-73)

[அச்சுதனே! (விபரீதஞானமாகிய) மோஹம் நசித்தது. உன்னருளால் உண்மை அறிவு என்னால் அடையப்பட்டது. ஸந்தே3ஹம் நஶிக்கப்பெற்றவனாயிருக்கிறேன். உன் வசனத்தின்படி (யுத்34ம்) செய்கிறேன்.]

  1. ஸ்தோப்ர (228)

3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதே

          வாஸுதே3வஸ் ஸர்வமிதி மஹாத்மா ஸுது3ர்லப4: ।। (கீதை 7-19)

[பல ஜன்மங்களுக்குப் பின் ஜ்ஞானியானவன் “வாஸுதே3வனே (எனக்கு) எல்லாம்” என்று என்னை உபாஸிக்கிறான். அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும் கிடைத்தற்கரியவன்.]

  1. தஸ்மாத்3 வா ஏதஸ்மாத்விஜ்ஞாநமயாத்

அந்யோந்தர ஆத்மாऽऽநந்த3மய: (தை. ஆன-5)

[அப்படிப்பட்ட இந்த விஜ்ஞானமயனான ஜீவனைக்‌ காட்டிலும்‌, வேறுபட்டவனும்‌, (அவனுக்கு) அந்தராத்மாவாயிருப்பவனும்‌ ஆநந்த3மயனான பரமாத்மா.]

  1. ஸ்தோப்ர (116)

        ரஸோ வை ஸ: ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வாநந்தீ3 4வதி கோ ஹ்யேவாந்யாத் க: ப்ராண்யாத்   யதே3 ஆகாஶ ஆநந்தோ3 ந ஸ்யாத் ஏஷ ஹ்யேவாநந்த3யாதி

(தைத்திரீயம் ஆநந்த3வல்லீ-7)

[ரஸ (ஆநந்த3) ஸ்வரூபனன்றோ அந்தப் பரமபுருஷன். ரஸஸ்வரூபனான அவனை அடைந்து (இந்த ஜீவன்) ஆநந்தத்தை உடையவனாகிறான். பிரகாசிப்பவனும், ஆநந்த3ஸ்வரூபனுமான இப்பரமபுருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள ஸுக2த்தையோ, மோக்ஷஸுக2த்தையோ அடையமுடியும்? (ஆகையால்) இவனே (ஜீவனை) ஆநந்தி3ப்பிக்கிறான்.]

  1. ஸர்வக3ந்த3ஸ்ஸர்வரஸ: (சா2ந் 3-14-2)

[எல்லா க3ந்த3ங்களையுமுடையவன்‌ ; எல்லா ரஸங்களையுமுடையவன்‌ (பரமாத்மா).]

  1. ஸ்தோப்ர (41)

          தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு: (தை. நா. 50)

[ஆகையால் ந்யாஸத்தை (ஶரணாக3தியை) இந்தத் தபஸ்ஸுக்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்.]

  1. வ்யவஸாயாத்3ருதே ப்3ரஹ்மந்நாஸாத3யதி தத்பரம் (பா4. ஶாந்தி. 334-47)

[ப்‌3ராஹ்மணரே ! அத்‌4யவஸாயமில்லாவிடில்‌ அந்தப்‌ பரவஸ்துவை அடையமாட்டான்‌.]

  1. ஸ்தோத்ரரத்னம்‌-60.

          பிதா த்வம் மாதா த்வம் 3யிததநயஸ்த்வம் ப்ரியஸுஹ்ருத்

                   த்வமேவ த்வம் மித்ரம் கு3ருரஸி 3திஶ்சாஸி ஜக3தாம்

த்வதீ3யஸ் த்வத்3ப்4ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்33திரஹம்

ப்ரபந்நஶ்சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி 4: ।।

[உலகங்களுக்கெல்லாம் தந்தையும் நீயே; தாயும் நீயே; பிரியனான புத்ரனும் நீயே; நல்ல மனத்தையுடைய நண்பனும் நீயே; (ரஹஸ்யங்களைச் சொல்லத்தக்க) தோழனும் நீயே; ஆசாரியனும் நீயே; உபாயமும் (உபேயமும்) நீயே;  நானோவெனில், உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தா3ஸன்; உன்னையே பரமப்ராப்யமாக உடையவன்; உன்னையே உபாயமாகக் கொண்டவன்; இம்மாதிரியிருக்கையில், உனக்கே ரக்ஷிக்கத்தக்கவனாக இருக்கிறேனன்றோ]

  1. ஆஸீநா வா ஶயாநா வா திஷ்ட2ந்தோ யத்ர குத்ர வா

நமோ நாராயணாயேதி மந்த்ரைகஶரணா வயம்।। (நாரதீ3யம்)

[எங்காவது உட்கார்ந்திருந்தாலும்‌, படுத்துக்கொண்டிருந்தாலும்‌, நின்றுகொண்டிருந்தாலும்‌ ‘நமோ நாராயணாய’ என்னும்‌ திருமந்திரத்தையே உபாயமாகப்‌ பற்றியவர்கள்‌ நாங்கள்‌.]

  1. ப்ரமாணத்திற்கு மூலத்தைப்பார்க்கவும்‌ (பா43வதம் 10-32-21, 22,23 க்ருஷ்ணவாக்யம்)

[ஸகி2களே ! அவர்களுடைய தியானம்‌ இடைவிடாமலிருப்‌பதற்காக, என்னிடம்‌ ப4க்தி செய்யும்‌ ஜந்துக்களை நான்‌ அடைவதில்லை. பெண்களே ! பணமற்றவன்‌ அடைந்த பணத்தை இழந்தவுடன்‌ அந்த நினைவினால்‌ பூர்ணனாய்‌ வேறெதையும்‌ எப்படி நினைக்கிறதில்லையோ, அப்படியே எனக்காக லோகத்தையும்‌, வேத3த்தையும்‌, உடைமைகளையும்‌ விட்டவர்களான உங்களுக்கு என்னிடத்தில்‌ தியானமுண்டாவதற்காக, கண்முன்னால்‌ காட்சியளித்த நான்‌ மறைந்தேன்‌. பிரியைகளே! (என்னிடத்தில்‌) அதற்காக அஸுயை கொள்ளலாகாது, கபடமில்லாமல்‌ என்னுடன்‌ கூடிய உங்களுக்கு நன்றாக ப்ரத்யுபகாரம்‌ செய்ய தே3வர்களின்‌ ஆயுட்காலத்திலும்‌ நான்‌ ஶக்தனல்லன்‌. விடவொண்ணாததான க்3ருஹமன்னும்‌ விலங்கை வெட்டிவிட்டு என்னை அடைந்த உங்களுக்கு, அந்த விலங்கு மறுபடியும்‌ இப்போது கழலட்டும்‌. (ஸம்‌ஸாரமாகிய விலங்கைக்‌ கழற்றுகையே நான்‌ உங்களுக்குச்‌செய்யும்‌ கைம்மாறு என்று தாத்பர்யம்‌.)]

  1. ஸ்தோப்ர (295)

          யாஸ்யாமி தமந்தரேமி (யஜுர்ப்3ராஹ்மணம் 3.7)

[எவனுக்கு நான் தா3ஸனாயிருக்கிறேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்.]

  1. ஸ்தோப்ர (78)

          அஹமஸ்யாவரோ ப்4ரதா கு3ணைர் தா3ஸ்யமுபாக3: (ரா. கி. 4-12 லக்ஷ்மண வாக்யம்)

[நான் இவருடைய நினைவினால் (இவருக்குத்) தம்பி; (உண்மையில்) இவருடைய கு3ணங்களால் (இவருக்கு) அடிமைப்பட்டவன்.]

109, 110. ஸ்தோப்ர (288)

          ஏதமாநந்த3 மயமாத்மாநமுபஸங்க்ரம்ய

        இமாந் லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்

          ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே  ஹா வுஹா வுஹா வு ।। (தை. ப்4ரு. 10-5)

[ஆநந்த3மயனான இந்தப் பரமாத்மாவை அணுகி, இஷ்டப்பட்ட உருவங்களை உடையவனாய், இந்தக் காமங்களிலும், லோகங்களிலும் (பரமாத்மாவைப்) பின் தொடர்ந்து கொண்டு இந்த ஸாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான். ஹா வுஹா வுஹா வு]

  1. ஸ்தோப்ர (25)

          யேந யேந தா4தா 3ச்ச2தி தேந தேந ஸஹ 3ச்ச2தி

          தத் யதா2 தருணவத்ஸா வத்ஸம் வத்ஸோ வா

                   மாதரம் சா2யா வா ஸத்வமநுகச்சே2த் ததா2ப்ரகாரம் ।।  (பரமஸம்ஹிதை)

[இளங்கன்றையுடைய பசு கன்றையும், கன்று பசுவையும் (அல்லது குழந்தை தாயையும்) நிழல் பிராணியையும் எப்படிப் பிந்தொடர்கின்றனவோ அப்படியே எப்படி எப்படிப் பரமபுருஷன் செல்லுகிறானோ, அப்படி அப்படியே (முக்தனும்) கூடப்போகிறான்.]

  1. ஸ்தோப்ர (204)

          குருஷ்வ மாமநுசரம் வைத4ர்ம்யம் நேஹ வித்3யதே

          க்ருதார்த்தோ2ஹம்4விஷ்யாமி தவ சார்த்த2: ப்ரகல்பதே ।।  (ரா.அ. 31-24 லக்ஷ்மண வாக்யம்)

[என்னைக் கைங்கர்யபரனாக வைத்துக்கொள்ளும். இதில் தவறொன்றுமில்லை. (இதனால்) நானும் த4ந்யனாவேன். உம்முடைய காரியமும் நடைபெறும்.]

  1. ஸாக்ஷாத்தே3: புராணோஸெள

[பழமையானவனான இவனே நிருபாதி4கதே3வன்‌.]

ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்2யான ப்ரமாணத்திரட்டு முற்றிற்று

பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.