[highlight_content]

Thirumozhi 4-6

பெரிய திருமொழி

நான்காம் பத்து

ஆறாம் திருமொழி

தாவளந்து உலகமுற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு *

நாவளம் நவின்றங்கேத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் ! *

மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக் *

காவளம்பாடி மேய கண்ணனே ! களைகண் நீயே.    4.6.1      காவளம்பாடி

மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான் *

விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை யிரந்தாய் ! *

துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய *

கண்ணனே ! காவளந்தண் பாடியாய் !, களைகண் நீயே.       4.6.2      காவளம்பாடி

உருத்தெழு வாலி மார்வில் ஒருகணை உருவ வோட்டிக் *

கருத்துடைத் தம்பிக்கு இன்பக்கதிர் முடியரசு அளித்தாய் ! *

பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்தொழுகும் நாங்கைக் *

கருத்தனே ! காவளந்தண் பாடியாய் !, களைகண் நீயே.        4.6.3      காவளம்பாடி

முனைமுகத்து அரக்கன்மாள முடிகள் பத்தறுத்து வீழ்த்து*ஆங்கு

அனையவற் கிளையவற்கே அரசளித் தருளினானே ! *

சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேன் நுகரும் நாங்கைக் *

கனைகழல் காவளந்தண் பாடியாய் !, களைகண் நீயே.           4.6.4      காவளம்பாடி

படவரவுச்சி தன்மேல் பாய்ந்து பல்நடங்கள் செய்து *

மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே ! *

தடவரை தங்கு மாடத் தகுபுகழ், நாங்கை மேய *

கடவுளே ! காவளந்தண் பாடியாய் !, களைகண் நீயே.            4.6.5      காவளம்பாடி

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று *

பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் ! *

நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய *

கல்லரண் காவளந்தண் பாடியாய் !, களைகண் நீயே.         4.6.6      காவளம்பாடி

மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூதெழுந்தருளி *

மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய் ! *

பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்தொழுகும் நாங்கைக்

காத்தனே ! * காவளந்தண் பாடியாய் !, களைகண் நீயே.      4.6.7      காவளம்பாடி

ஏவிளங் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்றுக் *

காவளம் கடிதிறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய் ! *

பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக் *

காவளம் பாடி மேய கண்ணனே ! களைகண் நீயே.  4.6.8      காவளம்பாடி

சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி *

அந்தமாய் ஆதியாகி அருமறை யவையும் ஆனாய் ! *

மந்தமார் பொழில்கள் தோறும் மடமயிலாலும் நாங்கைக் *

கந்தமார் காவளந்தண் பாடியாய் !, களைகண் நீயே.   4.6.9      காவளம்பாடி

மாவளம் பெருகி, மன்னு மறையவர் வாழும் * நாங்கைக்

காவளம்பாடி மேய கண்ணனைக் கலியன் சொன்ன *

பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக் *

கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே.   4.6.10    காவளம்பாடி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.