[highlight_content]

Thirumozhi 4-5

பெரிய திருமொழி

நான்காம் பத்து

ஐந்தாம் திருமொழி

தூம்புடைப் பணைக்கை வேழம் துயர் கெடுத்தருளி * மன்னு

காம்புடைக் குன்றமேந்திக் கடுமழை காத்த எந்தை *

பூம்புனற் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட * எங்கும்

தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.   4.5.1      திருமணிக்கூடம்

கவ்வை வாளெயிற்று வன்பேய்க் கதிர்முலைசுவைத்து *இலங்கை

வவ்விய இடும்பை கூரக் கடுங்கணை துரந்த எந்தை *

கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த *

தெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.       4.5.2      திருமணிக்கூடம்

மாத்தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்து * வன்தாள்

சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை *

நாத்தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த * வண்கைத்

தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.     4.5.3      திருமணிக்கூடம்

தாங்கருஞ்சினத்து வன்தாள் தடக்கைம்மா மருப்பு வாங்கிப் *

பூங்குருந்தொசித்துப் புள்வாய் பிளந்து எருதடர்த்த எந்தை *

மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டிரிய * வாழைத்

தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.  4.5.4      திருமணிக்கூடம்

கருமகளிலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து * தன் மேல்

வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை *

பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத *

திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.            4.5.5      திருமணிக்கூடம்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் *

அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தைக் *

ஒண்திறல் தென்னனோட வடவரசோட்டம் கண்ட *

திண்திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.     4.5.6      திருமணிக்கூடம்

குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்களோடு *

நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை *

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு * எங்கும்

தென்றல் வந்துலவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.  4.5.7      திருமணிக்கூடம்

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும், இத்தரணி யோம்பும் *

பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை *

பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாயச் *

செங்கயலுகளும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.         4.5.8      திருமணிக்கூடம்

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பந் தானும் *

கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை *

மூவரில் எங்கள் மூர்த்தி இவனென முனிவரோடு *

தேவர் வந்திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே. 9               4.5.9                திருமணிக்கூடம்

திங்கள் தோய் மாடநாங்கூர்த் திருமணிக்கூடத்தானை *

மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன் வாயொலிகள் வல்லார் *

பொங்கு நீருலகமாண்டு பொன்னுலகாண்டு, பின்னும்

வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய், விளங்குவாரே. 10          4.5.10    திருமணிக்கூடம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.