Thirumozhi 4-3

பெரிய திருமொழி

நான்காம் பத்து

மூன்றாம் திருமொழி

 

பேரணிந்து உலகத்தவர் தொழுதேத்தும்

பேரருளாளன் எம்பிரானை *

வாரணி முலையாள் மலர்மகளோடு

மண்மகளும் உடன் நிற்பச் *

சீரணிமாட நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

காரணிமேகம் நின்றதொப்பானைக்

கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே.      4.3.1      செம்பொன்செய் கோயில்

பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப்

பேதியா இன்பவெள்ளத்தை *

இறப்பெதிர்காலக் கழிவுமானானை

ஏழிசையின் சுவை தன்னைச் *

சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக்

கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.        4.3.2      செம்பொன்செய் கோயில்

திடவிசும்பெரி நீர் திங்களும் சுடரும்

செழுநிலத்துயிர்களும் * மற்றும்

படர்பொருள்களுமாய் நின்றவன் தன்னைப்

பங்கயத்தய னவனனைய *

திடமொழி மறையோர் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

கடல்நிற வண்ணன் தன்னை நான் அடியேன்

கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே.      4.3.3      செம்பொன்செய் கோயில்

வசையறு குறளாய் மாவலி வேள்வியில்

மண்ணளவிட்டவன் தன்னை *

அசைவறும் அமரரடியிணை வணங்க

அலைகடல் துயின்ற அம்மானைத் *

திசைமுகனனையோர் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

உயர்மணி மகுடம் சூடி நின்றானைக்

கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே.      4.3.4      செம்பொன்செய் கோயில்

தீமனத் தரக்கர் திறலழித்தவனே !

என்று சென்றடைந்தவர் தமக்குத் *

தாய் மனத்திரங்கி அருளினைக் கொடுக்கும்

தயரதன் மதலையை, * சயமே

தேமலர்ப் பொழில்சூழ் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்

கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே.      4.3.5      செம்பொன்செய் கோயில்

மல்லை மாமுந்நீ ரதர்பட, மலையால்

அணை செய்து மகிழ்ந்தவன் தன்னைக் *

கல்லின் மீதியன்ற கடிமதிளிலங்கை

கலங்க, ஓர் வாளி தொட்டானைச் *

செல்வ நான்மறையோர் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

அல்லிமாமலராள் தன்னொடும் அடியேன்

கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே.    4.3.6      செம்பொன்செய் கோயில்

வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும்

வெகுண்டிறுத் தடர்த்தவன் தன்னைக் *

கஞ்சனைக் காய்ந்த காளையம்மானைக்

கருமுகில் திருநிறத்தவனைச் *

செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

அஞ்சனக் குன்றம் நின்றதொப்பானைக்

கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே.    4.3.7      செம்பொன்செய் கோயில்

அன்றிய வாணனாயிரம் தோளும்

துணிய, அன்று ஆழி தொட்டானை *

மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்

மேவிய வேதநல் விளக்கைத் *

தென்திசைத் திலதமனையவர் நாங்கைச்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை

வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.        4.3.8      செம்பொன்செய் கோயில்,

திருவேங்கடம் திருப்பதி

களங்கனி வண்ணா ! கண்ணனே ! என்தன்

கார்முகிலே ! என நினைந்திட்டு *

உளங் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்

உள்ளத்துள் ஊறிய தேனைத் *

தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

வளங்கொள் பேரின்பம் மன்னி நின்றானை

வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.       4.3.9      செம்பொன்செய் கோயில்

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே *

வானவர் கோனைக் கண்டமை சொல்லும்

மங்கையார் வாட் கலிகன்றி *

ஊனமில் பாடல் ஒன்பதோடொன்றும்

ஒழிவின்றிக் கற்று வல்லார்கள் *

மானவெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு

வானவராகுவர் மகிழ்ந்தே.  4.3.10    செம்பொன்செய் கோயில்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.