Thirumozhi 4-10

பெரிய திருமொழி

நான்காம் பத்து

பத்தாம் திருமொழி

ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டு, ஒருகால்

ஆலிலை வளர்ந்த எம்பெருமான் *

பேய்ச்சியை முலையுண்டு இணை மருதிறுத்துப்

பெருநிலம் அளந்தவன் கோயில் *

காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்

எங்கும் மாம்பொழில்களின் நடுவே *

வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்

திருவெள்ளியங்குடியதுவே.  4.10.1    திருவெள்ளியங்குடி

ஆநிரை மேய்த்து அன்று அலைகட லடைத்திட்டு

அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக் *

கார்நிறை மேகம் கலந்ததோருருவக்

கண்ணனார் கருதிய கோயில் *

பூநிரைச் செருந்தி, புன்னை முத்தரும்பிப்

பொதும்பிடை வரிவண்டுமிண்டித் *

தேனிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும்

திருவெள்ளியங்குடியதுவே.  4.10.2    திருவெள்ளியங்குடி

கடுவிடமுடைய காளியன் தடத்தைக்

கலக்கி, முன் அலக்கழித்து * அவன்தன்

படமிறப் பாய்ந்து பல் மணி சிந்தப்

பல்நடம் பயின்றவன் கோயில் *

படவரவல்குல் பாவை நல்லார்கள்

பயிற்றிய நாடகத்தொலி போய் *

அடைபுடை தழுவி அண்டம் நின்றதிரும்

திருவெள்ளியங்குடியதுவே.  4.10.3    திருவெள்ளியங்குடி

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த

காளமேகத் திருவுருவன் *

பறவை முன்னுயர்த்துப் பாற்கடல் துயின்ற

பரமனார் பள்ளிகொள் கோயில் *

துறைதுறை தோறும் பொன்மணி சிதறும்

தொகுதிரை மண்ணியின் தென்பால் *

செறிமணி மாடக்கொடி கதிரணவும்

திருவெள்ளியங்குடியதுவே.  4.10.4    திருவெள்ளியங்குடி,

திருப்பாற்கடல்

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து

பாரதம் கை யெறிந்து * ஒருகால்

தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த

செங்கண்மால் சென்றுறை கோயில் *

ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி

எமக்கிடமன்று இதென்றெண்ணிச் *

சீர்மலி பொய்கை சென்றணைகின்ற

திருவெள்ளியங்குடியதுவே.  4.10.5    திருவெள்ளியங்குடி

காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை

யுறக், கடலரக்கர் தம் சேனை *

கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த

கோல வில்லி ராமன் தன் கோயில் *

ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்

ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டிச் *

சேற்றிடைக் கயல்களுகள் திகழ் வயல் சூழ்

திருவெள்ளியங்குடியதுவே.  4.10.6    திருவெள்ளியங்குடி

ஒள்ளிய கருமம் செய்வனென்றுணர்ந்த

மாவலி வேள்வியில் புக்கு *

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு

திக்குற வளர்ந்தவன் கோயில் *

அள்ளியம் பொழில்வாய் இருந்து வாழ்குயில்கள்

அரியரி யென்றவை யழைப்ப *

வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான்

திருவெள்ளியங்குடியதுவே.  4.10.7    திருவெள்ளியங்குடி

முடியுடை அமரர்க்கு இடர் செய்யும்

அசுரர் தம்பெருமானை * அன்று அரியாய்

மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட

மாயனார் மன்னிய கோயில் *

படியிடை மாடத் தடியிடைத் தூணில்

பதித்த, பன்மணிகளி னொளியால் *

விடிபக லிரவென் றறிவரிதாய

திருவெள்ளியங்குடியதுவே.  4.10.8    திருவெள்ளியங்குடி

குடிகுடியாகக் கூடிநின்று, அமரர்

குணங்களே பிதற்றி நின்றேத்த *

அடியவர்க்கருளி அரவணைத் துயின்ற

ஆழியான் அமர்ந்துறை கோயில் *

கடியுடைக் கமலம் அடியிடை மலரக்

கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய *

வடிவுடை அன்னம் பெடையொடும் சேரும்

வயல், வெள்ளியங்குடியதுவே.          4.10.9    திருவெள்ளியங்குடி

பண்டு முன் ஏனமாகி, அன்றொருகால்

பாரிடந்து எயிற்றினில் கொண்டு *

தெண்திரை வருடப் பாற்கடல் துயின்ற

திருவெள்ளியங்குடியானை *

வண்டறை சோலை மங்கையர் தலைவன்

மானவேல் கலியன் வாயொலிகள்

கொண்டு * இவை பாடும் தவமுடையார்கள்

ஆள்வர் இக்குரை கடலுலகே.     4.10.10  திருவெள்ளியங்குடி,

திருப்பாற்கடல்

**********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.