[highlight_content]

Thirumozhi 4-8

பெரிய திருமொழி

நான்காம் பத்து

எட்டாம் திருமொழி

கவளயானை கொம்பொசித்த கண்ணனென்றும் * காமருசீர்க்

குவளை மேகமன்ன மேனி கொண்ட கோன், என்னானை யென்றும் *

தவளமாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும் *

பவளவாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.  4.8.1      பார்த்தன்பள்ளி

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளை யென்றும் *

வஞ்சமேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயனென்றும் *

செஞ்சொலாளர் நீடு நாங்கைத் தேவதேவ னென்றென்றோதிப் *

பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே.      4.8.2      பார்த்தன்பள்ளி

அண்டர்கோன் என்னானையென்றும்

ஆயர் மாதர் கொங்கை புல்கு

செண்டனென்றும் * நான்மறைகள்

தேடியோடும், செல்வனென்றும் *

வண்டுலவு பொழில் கொள் நாங்கை

மன்னு மாயனென்றென்றோதிப் *

பண்டு போலன்று என் மடந்தை

பார்த்தன்பள்ளி பாடுவாளே.  4.8.3      பார்த்தன்பள்ளி

கொல்லையானாள் பரிசழிந்தாள்

கோல்வளையார் தம் முகப்பே*

மல்லை முந்நீர் தட்டிலங்கை

கட்டழித்த மாயனென்றும் *

செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்

தேவதேவ னென்றென்றோதிப் *

பல்வளையாள் என்மடந்தை

பார்த்தன்பள்ளி பாடுவாளே.  4.8.4      பார்த்தன்பள்ளி

அரக்கராவி மாள, அன்று ஆழ்கடல் சூழிலங்கை செற்ற *

குரக்கரசனென்றும் கோலவில்லியென்றும் * மாமதியை

நெருக்குமாட நீடு நாங்கை நின்மலன் தானென்றென்றோதிப் *

பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.  4.8.5      பார்த்தன்பள்ளி

ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாதனென்றும் * நானிலம் சூழ்

வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும் * மேலெழுந்து

சேலுகளும் வயல்கொள் நாங்கைத் தேவதேவ னென்றென்றோதிப் *

பாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே.        4.8.6      பார்த்தன்பள்ளி

நாடி என்தனுள்ளம் கொண்ட நாதனென்றும் * நான்மறைகள்

தேடி, என்றும் காணமாட்டாச் செல்வனென்றும் * சிறைகொள் வண்டு

சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவதேவ னென்றென்றோதிப் *

பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே.    4.8.7      பார்த்தன்பள்ளி

உலகமேத்தும் ஒருவனென்றும் ஒண்சுடரோடு உம்பரெய்தா

நிலவும் * ஆழிப் படைய னென்றும் நேசனென்றும் * தென் திசைக்குத்

திலதமன்ன மறையோர் நாங்கைத் தேவதேவ னென்றென்றோதிப் *

பலருமேச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.       4.8.8      பார்த்தன்பள்ளி

கண்ணனென்றும், வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் *

எண்ணனென்றும் இன்பனென்றும் ஏழுலகுக்காதி என்றும் *

திண்ணமாட நீடு நாங்கைத் தேவதேவ னென்றென்றோதிப் *

பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே.      4.8.9      பார்த்தன்பள்ளி

பாருள் நல்ல மறையோர் நாங்கைப்

பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை *

வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்

தாய் மொழிந்த மாற்றம் *

கூர்கொள் நல்ல வேல் கலியன்

கூறு தமிழ்ப் பத்தும் வல்லார் *

ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்

இன்பம் நாளும் எய்துவாரே.       4.8.10    பார்த்தன்பள்ளி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.