Thirumozhi 4-9

பெரிய திருமொழி

நான்காம் பத்து

ஒன்பதாம் திருமொழி

நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்*

இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே ! *

எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா ! என்றிரங்கி *

நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ?             4.9.1      இந்தளூர்

சிந்தை தன்னுள் நீங்காதிருந்த திருவே ! மருவினிய

மைந்தா ! * அந்தணாலி மாலே ! சோலை மழகளிறே ! *

நந்தா விளக்கின் சுடரே ! நறையூர் நின்ற நம்பி ! * என்

எந்தாய் ! இந்தளூராய் ! அடியேற்கு இறையும் இரங்காயே.        4.9.2      திருவாலி,

திருநறையூர்,

இந்தளூர்,

திருமாலிருஞ்சோலை

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த *

மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் ! * உம்மைக் காணும்

ஆசையென்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் * அயலாரும்

ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே !      4.9.3      இந்தளூர்

ஆசை வழுவாதேத்தும் எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்குத்

தேசமறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக் *

காசினொளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான் ! *

வாசி வல்லீர் ! இந்தளூரீர் ! வாழ்ந்தே போம் நீரே 4.9.4      இந்தளூர்

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இருநிலனு-

மாய் * எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் *

தாயெம் பெருமான் தந்தை தந்தையாவீர் * அடியோமுக்

கே எம்பெருமானல்லீரோ? நீர் இந்தளூரீரே !      4.9.5      இந்தளூர்

சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில் * நும்மடியார்

எல்லாரோடும் ஒக்க எண்ணி யிருத்தீர் அடியேனை *

நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ்வுலகத்து *

எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே !       4.9.6      இந்தளூர்

மாட்டீரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா

வீட்டீர் * இதனை வேறே சொன்னோம், இந்தளூரீரே ! *

காட்டீரானீர் நுந்தமடிக்கள் காட்டில் * உமக்கு இந்த

நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே ?  4.9.7      இந்தளூர்

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற *

பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் *

பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி *

இன்ன வண்ணமென்று காட்டீர் இந்தளூரீரே !            4.9.8      இந்தளூர்

எந்தை தந்தை தம்மா னென்றென்று எமரே ழேழளவும் *

வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் *

சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி *

இந்த வண்ணமென்று காட்டீர் இந்தளூரீரே !   4.9.9      இந்தளூர்

ஏரார் பொழில்சூழ் இந்தளூரில், எந்தை பெருமானைக் *

காரார் புறவின் மங்கை வேந்தன், கலியனொலி செய்த *

சீரார் இன்சொல் மாலை, கற்றுத் திரிவார் * உலகத்து

ஆராரவரே, அமரர்க்கு என்றும் அமரராவாரே.  4.9.10    இந்தளூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.