Thirumozhi 4-10

பெரிய திருமொழி நான்காம் பத்து பத்தாம் திருமொழி ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டு, ஒருகால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான் * பேய்ச்சியை முலையுண்டு இணை மருதிறுத்துப் பெருநிலம் அளந்தவன் கோயில் * காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் மாம்பொழில்களின் நடுவே * வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளியங்குடியதுவே.  4.10.1    திருவெள்ளியங்குடி ஆநிரை மேய்த்து அன்று அலைகட லடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக் * கார்நிறை மேகம் கலந்ததோருருவக் கண்ணனார் கருதிய கோயில் * […]

Thirumozhi 4-9

பெரிய திருமொழி நான்காம் பத்து ஒன்பதாம் திருமொழி நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்* இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே ! * எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா ! என்றிரங்கி * நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ?             4.9.1      இந்தளூர் சிந்தை தன்னுள் நீங்காதிருந்த திருவே ! மருவினிய மைந்தா ! * அந்தணாலி மாலே ! சோலை மழகளிறே ! […]

Thirumozhi 4-8

பெரிய திருமொழி நான்காம் பத்து எட்டாம் திருமொழி கவளயானை கொம்பொசித்த கண்ணனென்றும் * காமருசீர்க் குவளை மேகமன்ன மேனி கொண்ட கோன், என்னானை யென்றும் * தவளமாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும் * பவளவாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.  4.8.1      பார்த்தன்பள்ளி கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளை யென்றும் * வஞ்சமேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயனென்றும் * செஞ்சொலாளர் நீடு நாங்கைத் தேவதேவ னென்றென்றோதிப் * பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி […]

Thirumozhi 4-7

பெரிய திருமொழி நான்காம் பத்து ஏழாம் திருமொழி கண்ணார் கடல்போல், திருமேனி கரியாய் ! * நண்ணார் முனை வென்றி கொள்வார், மன்னு நாங்கூர் * திண்ணார் மதிள்சூழ், திருவெள்ளக்குளத்துள் அண்ணா ! * அடியேனிடரைக், களையாயே.       4.7.1      திருவெள்ளக்குளம் கொந்தார் துளவ மலர் கொண்டு, அணிவானே ! * நந்தாத பெரும் புகழ், வேதியர் நாங்கூர் * செந்தாமரை நீர்த், திருவெள்ளக்குளத்துள் எந்தாய் ! * அடியேனிடரைக், களையாயே.     4.7.2      திருவெள்ளக்குளம் […]

Thirumozhi 4-6

பெரிய திருமொழி நான்காம் பத்து ஆறாம் திருமொழி தாவளந்து உலகமுற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு * நாவளம் நவின்றங்கேத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் ! * மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக் * காவளம்பாடி மேய கண்ணனே ! களைகண் நீயே.    4.6.1      காவளம்பாடி மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான் * விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை யிரந்தாய் ! * துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய […]

Thirumozhi 4-5

பெரிய திருமொழி நான்காம் பத்து ஐந்தாம் திருமொழி தூம்புடைப் பணைக்கை வேழம் துயர் கெடுத்தருளி * மன்னு காம்புடைக் குன்றமேந்திக் கடுமழை காத்த எந்தை * பூம்புனற் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட * எங்கும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.   4.5.1      திருமணிக்கூடம் கவ்வை வாளெயிற்று வன்பேய்க் கதிர்முலைசுவைத்து *இலங்கை வவ்விய இடும்பை கூரக் கடுங்கணை துரந்த எந்தை * கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த * தெய்வநீர் கமழும் […]

Thirumozhi 4-4

பெரிய திருமொழி நான்காம் பத்து நான்காம் திருமொழி மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் * தந்தை கால்தளையும் உடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் * நூற்றிதழ் கொளரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின் * சேற்றளையில் வெண்முத்தம் சிந்தும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.  4.4.1      திருத்தெற்றியம்பலம் பொற்றொடித்தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கிப் * பெற்றெடுத்த தாய் போல […]

Thirumozhi 4-3

பெரிய திருமொழி நான்காம் பத்து மூன்றாம் திருமொழி   பேரணிந்து உலகத்தவர் தொழுதேத்தும் பேரருளாளன் எம்பிரானை * வாரணி முலையாள் மலர்மகளோடு மண்மகளும் உடன் நிற்பச் * சீரணிமாட நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலினுள்ளே * காரணிமேகம் நின்றதொப்பானைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே.      4.3.1      செம்பொன்செய் கோயில் பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப் பேதியா இன்பவெள்ளத்தை * இறப்பெதிர்காலக் கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னைச் * சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலினுள்ளே * […]

Thirumozhi 4-2

பெரிய திருமொழி நான்காம் பத்து இரண்டாம் திருமொழி கம்பமா கடலடைத்து இலங்கைக்கு மன் கதிர்முடியவை பத்தும் அம்பினாலறுத்து * அரசு அவன் தம்பிக்கு அளித்தவனுறை கோயில் * செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் * வம்புலாம் கமுகோங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.  4.2.1      வண்புருடோத்தமம் பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் * ஒல்லை வந்திறப் பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர் கோனுறை கோயில் * நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் […]

Thirumozhi 4-1

திருமொழி நான்பெரிய காம் பத்து முதல் திருமொழி போதலர்ந்த பொழிற்சோலைப், புறமெங்கும் பொருதிரைகள் * தாதுதிர வந்தலைக்கும், தடமண்ணித் தென்கரைமேல் * மாதவன் தானுறையுமிடம், வயல் நாங்கை * வரிவண்டு தேதெனவென்றிசை பாடும், திருத்தேவனார் தொகையே.   4.1.1      திருத்தேவனார் தொகை யாவருமாய் யாவையுமாய், எழில்வேதப் பொருள்களுமாய் * மூவருமாய் முதலாய, மூர்த்தியமர்ந்து உறையுமிடம் * மாவரும் திண்படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை * தேவரும் சென்றிறைஞ்சு பொழில் திருத்தேவனார் தொகையே.          […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.