[highlight_content]

00 BV Pravesham

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நம்பிள்ளை திருவாய்மலர்ந்தருளின

ஈடுமுப்பத்தாறாயிரப்படியின் அவதாரிகை

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை வள்ளல்
வடக்குத்திருவீதிப்பிள்ளை அருளிச்செய்த

ஈடு – மஹாப்ரவேஸம்

முதல் ஸ்ரிய:பதி

ஸ்ரிய:பதியாய், அவாப்த ஸமஸ்தகாமனாய், ஸமஸ்தகல்யாண கு3ணாத்மகனான ஸர்வேஸ்வரன், “மாறிமாறிப்பலபிறப்பும் பிறந்து” (திருவாய்மொழி 2-6-8) என்கிறபடியே ஜந்மபரம்பரைகளிலே தோள்மாறி நித்ய ஸம்ஸாரி யாய்ப்போந்த இவரை, “அடியை அடைந்து உள்ளந்தேறி ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்” (திருவாய்மொழி 2-6-8) என்று முதலிலே தம் திருவாயாலே சொல்லவல்லராம்படியாக முதலடியிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளினான்.  “ப்3ருந்தா3வநம் ப43வதா க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா | ஸுபே4ந மநஸா த்4யாதம் க3வாம் வ்ருத்3தி4மபீ4ப்ஸதா ||” என்கிறபடியே ஸ்ரீப்3ருந்தா3வநத்தை, “உத்பந்ந நவஸஷ்பாட்4யம்” என்னும்படி கடாக்ஷித்தாற் போலே தத்த்வங்களை விஸத3மாக அறியவல்லராம்படி கடாக்ஷித்தான்.

இதர த3ர்ஸநங்களில் தத்த்வங்களைப் பதினாறென்பார், ஆறென்பாராய் ப3ஹுப்ரகாரங்களிலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள்.

எங்ஙனேயென்னில், லோகாயதிகன், “ப்ருதி2வ்யாதி3 பூ4தங்கள் நாலினுடைய கூட்டரவிலே சைதந்யமென்றொரு  த4ர்மம் பிறக்கும்; அதுக்குண்டான  ஸுக2து3:க்க2ங்களே ஸ்வர்க்க3நரகங்கள்; அவற்றினுடைய பிரிவிலே சைதந்யம் நஸிக்கும்; அவ்வருகொன்று மில்லை” என்பது அவனுடைய ஸித்3தா4ந்தம்.  ஆர்ஹதன், “கார்ய காரணரூபத்தாலே ஜக3த்து நித்யாநித்யமும் பி4ந்நாபி4ந்நமும் ஸத்யாஸத்யமுமாயிருக்கும்;  ஆத்மாக்கள், கர்மாநுரூபமான ஸரீரங்களினுடைய பரிமாணத்தையே தனக்குப் பரிமாணமாகக் கொண்டிருக்கும்; ஸம்ஸாரம் அநாதி3; மலதா4ரணாதி3களாலும் ஆத்ம ஞாநத்தாலும் ப்ரக்ருதி விநிர்முக்தராய் ஊர்த்4வக3தியை ப்ராபியா நிற்கை மோக்ஷமாகிறது” என்றான்.

பௌ3த்34 மதங்களில் வைத்துக் கொண்டு வைபா4ஷிகன், “பரமாணு ஸங்கா4தமாய், ப்ரத்யக்ஷ ஸித்34மாயிருக்கும் ஜக3த்து; தத்3விஷய ஞாநமும் க்ஷணிகம்: வேறோர் ஆத்மா இல்லை; இதில் ஸ்தி2ரத்வபு3த்3தி4 – ஸம்ஸாரம்; க்ஷணிக பு3த்3தி4 – மோக்ஷம்” என்றான்.

ஸௌத்ராந்திகனுக்கும் ஸித்3தா4ந்தம் அதுவேயாயிருகச்செய்தே, “அநுமாந ஸித்34ம் ஜக3த்து” என்றான்; அதுவே அவனுக்கு விசேஷம்.  யோகா3சாரன் – ஞாத்ரு ஞேயங்கள் ப்4ரமம், ஞாநமேயுள்ளது.  அதுவும் க்ஷணிகமென்றிருக்கை – மோக்ஷம்” என்றான்.  மாத்4யமிகன் “ப்ரமாணமும், ப்ரமேயமும், ப்ரமாதாவும் இவையுண்டென்றறிகை ப்4ரமம்; சூந்யத்தாலே சூந்யமென்ற்றிகை – மோக்ஷம்” என்றான்.

நையாயிக வைஸேஷிகர்கள் – “ஜக3த்துக்கு  உபாதா3நகாரணம் பரமாணுக்கள்; ஆநுமாநிகேஸ்வரன் நிமித்த காரணம்; ஸம்ஸாரம் அநாதி3; ஈஸ்வரோபாஸ்தியாலே ஸுக2து3:க2 ஞாநங்கள் நஸிக்கை – மோக்ஷம்” என்றார்கள்.

பாஸுபதன் “பரமாணுக்கள் ஜக3த்துக்கு உபாதா3நகாரணம்;  ஆக3ம ஸித்3தே4ஸ்வரன் நிமித்த காரணம்; ஸம்ஸாரம் அநாதி3.  ஆக3மோக்தமான கர்மாநுஷ்டா2நத்தாலே பசுபதி ஸாரூப்யத்தைப் பெறுகை – மோக்ஷம்” என்றான்.

ஸாங்க்2ய யோகி3கள் – “ப்ரக்ருதியே ஸ்வதந்த்ரமாய்க்கொண்டு ஜக3த்காரணமாகிறது; அந்த ப்ரக்ருதியோடு ஆத்மாவுக்குண்டான அநாதி3 ஸம்ப3ந்த4ம் ஸம்ஸாரம்; ப்ரக்ருதி புருஷவிவேகம் – மோக்ஷம்” என்றார்கள்.

பா4ட்ட ப்ராபா4கரர்கள் – நித்யராய், அநேகராய், ஸர்வக3தராய் அநாதி3 கர்மத்தாலே ஸம்ஸரிக்கிறார்கள் ஆத்மாக்கள்; ஜக3த்து ப்ரவாஹரூபேண நித்யம்; கர்மபூர்வமே ஆத்மப்ராப்திரூப மோக்ஷஹேது; ஈஸ்வர ஸத்3பா4வம் இல்லை” என்றார்கள்.

மாயாவாதி3 – “நிர்விசேஷ சிந்மாத்ரமே மாயாஸப3ளமாய்க்கொண்டு ப்4ரமிக்கை ஸம்ஸாரம்; “தத்த்வமஸி” இத்யாதி3 வாக்யஜந்ய ஞாநத்தாலே அந்த ப்4ரமம் போகை – மோக்ஷம்” என்றான்.

பா4ஸ்கரீயன், – “அந்த ப்3ரஹ்மந்தானே ஸத்யோபாதி4 மிஸ்ரமாய்கொண்டு ப்4ரமிக்கை – ஸம்ஸாரம்; வர்ணாஸ்ரம த4ர்மோபே43மாய் வாக்யஜந்யஞாந பூர்வகமாயுள்ள உபாஸநாத்மக ஞாநத்தாலே உபாதி4 நஸிக்கை – மோக்ஷம்” என்றான்.

யாத3வப்ரகாசன் – “அந்த ப்3ரஹ்மந்தானே ஸத்யமான சித3சிதீ3ஸ்வராத்மகமாய்க் கொண்டு ப்4ரமிக்கிறது; அதுக்கு உண்டான பே43ஞாநம் – ஸம்ஸாரம்; ஞாநகர்ம ஸமுச்சயத்தினாலே பே43 ஞாநம் போகை – மோக்ஷம்” என்றான்.

ப்3ரஹ்மம் ஜக3த்காரணமென்கிற வைதி3க ஸித்3தா4ந்தத்திற் காட்டில், ஏகாயநன் ப்3ரஹ்மத்தைக் கதிபயஸக்தி விசிஷ்டமாகக் கொண்டானத்தனை;  அதுவே அவனுக்கு விசேஷம்.

ஆக, ஸித்3தா4ந்தங்கள் பதினேழும் பா3ஹ்யங்களும் குத்3ருஷ்டிகளுமாகை யாலே வ்யர்த்த2ங்கள்.

நம் த3ர்ஸநத்துக்கு தத்த்வங்கள் மூன்று; அவையாவன – சித்தும், அசித்தும், ஈஸ்வரனும்.  ப்ரகாரப்ரகாரிகள் ஐக்யத்தாலே ஒன்றென்னலாய், ஸ்வரூப பே43த்தாலே பலவென்னலாயிருக்கும்.  அசித்தாகிறது – கு3ணத்ரயாத்மகமாய், நித்யமாய், விபு4வாய், ஸதத     பரிணாமியாய், ஹேயதயா ஞாதவ்யமாயிருக்கும்.  இப்படியிருக்கிற அசித்திலே போ4க்3யதா பு3த்3தி4பண்ணி, ஸம்ஸாரத்தை த்3ருட4மாக்கிக் கொள்ளவேணுமென்றிருகுமவனுக்கும் ஸர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்க வேணும்;  இது த்யாஜ்யமென்னும் ப்ரதிபத்தியுண்டாய், இத்தைக் கழித்துக்கொள்ள வேணுமென்றிருக்கும் ஸர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்க வேணும்.  “ஸம்ஸார ப3ந்த4ஸ்தி2தி மோக்ஷஹேது:” என்றும், “தை3வீஹ்யேஷா கு3ணமயீ மம மாயா து3ரத்யயா | மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயா மேதாம் தரந்தி தே ||” என்றும் சொல்லுகிறபடியே, ‘நான் பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்கப் போகாது; என்னையே கால்கட்டி அவிழ்த்துக்கொள்ளவேணும்’ என்றானிறே.  அது தன்னையே இவரும் “பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சி” (திருவாய்மொழி 3-2-3) என்றாரிறே.

“ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறதில்லை; ஸர்வசக்தி கர்மாநுகு3ணமாகப் பிணைத்த பிணையை அவனையே கால்கட்டி அவிழ்த்துக் கொள்ளுமித்தனைகாண்” என்று பிள்ளைதிருநறையூரறையர் வார்த்தை.

சேதநன் நித்யனாய், அணுவாய், ஞாநாநந்த3 லக்ஷணனாய், ஞாநகு3ண கனாய், ஏகரூபனாய், ப43வச்2சேஷபூ4தனாயிருக்கும்.

இப்படியிருக்கிற ஆத்மாவினுடைய வைலக்ஷண்யத்தை அநுஸந்தி4த்து “ஜராமரண மோக்ஷாய” என்கிறபடியே ஆத்மாநுப4வமமையுமென்றிருக்கு மவனுக்கும், ஸர்வேஸ்வரனை உபாஸிக்கையும் அந்திமஸ்ம்ருதியும் வேணும்; ஆத்மாநுப4வத்தை நெகிழ்ந்து ஸர்வேஸ்வரனுடைய கு3ணாநுப4வம் பண்ணவேணுமென்றிருக்குமவனுக்கும் அவன்றன்னையே உபாயமாகப்பற்றவேணும்.

இவற்றிலொன்றை அறியிலும் “ஒண்டாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” (முதல் திருவந்தாதி 67) என்கிறபடியே ஸர்வேஸ்வரனளவிலே பர்யவஸித்தன்றி நில்லாது.  ஞாநமாகில் ஸ்ரிய:பதியைப்பற்றியல்லது நில்லாது.  ப43வத்3வ்யதிரிக்த விஷயங்களைப் பற்றிப் பிறக்கும் ஞாநமெல்லாம் அஞாநகல்பம்;  “தத் ஞாநமஞாநமதோந்யது3க்தம்”, “தத் கர்ம யந்ந ப3ந்தா4ய ஸா வித்3யா யா விமுக்தயே | ஆயாஸாயாபரம் கர்ம வித்3யாந்யா ஸில்பநைபுணம் ||” என்கிறபடியே ப43வத்விஷயத்தையொழியக்கற்றவை எல்லாம் செருப்புக்குத்தக் கற்றவோபாதி.

இப்படியிருக்கிற சித3சிதீ3ஸ்வரர்கள் ஸ்வரூப ஸ்வபா4வங்களை அறியக்கடவாரொருவருமில்லை; இவற்றையுள்ளபடியறிவாரில் தலைவராயிற்று இவ்வாழ்வார்.

இவர்க்கு ஒப்புச்சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை  நித்யஸூரி களிலுமில்லை.  தம் படி தாமுமறியார்; ஸம்ஸாரிகளுமறியார்கள்; ஸர்வேஸ்வரனும் அறியான்.  ஒரு ஸாத4நத்தை அநுஷ்டி2த்து இந்த நன்மை நமக்கு வருமென்றிருக்க வந்ததல்லாமையாலே தாமுமறியார்;  இவரைப்போலே இருப்பாரை ஸம்ஸாரத்தில் காணாமையாலே ஸம்ஸாரிகளுமறியார்கள்;  தன் கு3ணங்கள் புறம்பொரு வ்யக்தியில் இப்படிப் ப2லிக்கக் காணாமையாலே ஸர்வேஸ்வரனுமறியான்.  ஸம்ஸாரிகளில் வ்யாவ்ருத்தரானவோபாதி நித்யஸூரிகளிலும் வ்யாவ்ருத்தர்.

“அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்” (திருவிருத்தம்–75) என்று உப4ய விபூ4தியிலுமடங்கா திருப்பர்.  “விண்ணுளாரிலும் சீரியர்” (திருவிருத்தம்-79) என்னும்படி யாயிற்று இவர் நிலை.  ப43வத3நுப4வத்துக்குப் பாங்கான தே3சத்திலே இருந்து அநுப4விக்கிறவர்களைப் போலன்றே, அவ்வநுப4வத்துக்கு மேட்டு நிலமான ஸம்ஸார்த்திலே இருந்து அநுப4விக்கிறவர்கள்.

 “கலௌ ஜக3த்பதிம் விஷ்ணும் ஸர்வஸ்ரஷ்டாரமீஸ்வரம் | நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ3பஹதா ஜநா: ||” என்கிறபடியே கலிகாலத்திலே ப43வத்3ருசி ஒருவர்க்கும் பிறக்கிறதல்ல.

“து3ர்லபோ4 மாநுஷோ தே3ஹோதே3ஹிநாம் க்ஷணப4ங்கு3ர: | தத்ராபி து3ர்லப4ம் மந்யே வைகுண்ட2ப்ரியத3ர்ஸநம்” என்கிறபடியே முதல் தன்னிலே மநுஷ்ய சரீரம் கிடையாது;  பெற்றாலும் ஸர்வேஸ்வரன் ப்ராப்யமென்று அவனைப் பெறுகைக்கு அநுரூபமாயிருப்பதொரு உபாயத்தை பரிக்3ரஹிக்க வேணுமென்னும் ருசி ஒருவருக்கும் பிறவாது;  இது உண்டாகிலும் உண்டாம்; பா43வத சேஷத்வம் உண்டாகாதென்னுமிடம் சொல்ல வேண்டாவிறே.

 “மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்3யததி ஸித்34யே | யததாமபி ஸித்3தா4நாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்த்வத: ||” என்று ஸர்வேஸ்வரன்தானும் அருளிச்செய்தான்.  இப்படியிருக்கிற ஸம்ஸாரத்திலே ஆழ்வார் வந்து அவதீர்ணரான இது சேதநர் பண்ணின ஸுக்ருத ப2லமாயிற்று.

“த்தோகி2ல ஜக3த்பத்3ம போ34யாச்யுத பா4நுநா” என்கிறபடியே ஸர்வேஸ்வரன் வந்து அவதரித்தாப்போலேயாயிற்று, ஆழ்வார் வந்தவதரித்தபடி.  ஆதி3த்யன் பா3ஹ்யமான அந்த4காரத்தைப் போக்கும்;  இவன் ஆந்தரமான அந்த4காரத்தைப் போக்கிக் கொண்டாயிற்றிருப்பது. அப்படியே இவரும் “ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் (6-7-2), “மரங்களுமிரங்கும் வகை” (6-5-9) என்றும், “பாலேய் தமிழரிசைகாரர் பத்தர்பரவும்” (1-5-11) படியாயும், “கேட்டாரார் வானவர்கள்” (10-6-11) என்றும், “பண்ணார் பாடலின்கவிகள் யானாய்த் தன்னைத்தான் பாடித் தென்னாவென்னும் என்னம்மான்” (10-7-5) என்னும்படியே தம்முடைய நன்மை எங்குமுண்டான எல்லார்க்கும் உண்டாம்படி பண்ணிக் கொண்டாயிற்றிருப்பது.

“ஹஸிதம் பா4ஷிதம் சைவ க3திர்யா யச்ச சேஷ்டிதம் | தத் ஸர்வம் த4ர்மவீர்யேண யதா2வத் ஸம்ப்ரபஸ்யதி || ”  என்கிறபடியே (ப்3ரஹ்மாவின் ப்ரஸாத3த்தாலே ஸ்ரீவால்மீகி ப43வான் ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்தாப்போலே இவரும்) ப4க3வத் ப்ரஸாத3த்தாலே ஸாக்ஷாத்க்ருதமான ப43வத் ஸ்வரூபரூபகு3ண விபூ4திகளையுடையராயிருப்பர்.

“ஞாநீ த்வாத்மைவ மே மதம்” – “ஐஸ்வர்யம், ஆத்மலாப4ம், ஏதேனுமொரு புருஷார்த்த2 மாகவுமாம் நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதா3ரர்,  ஞாநியானவன் எனக்கு தா4ரகன்” என்று ஸர்வேஸ்வரன் அருளிச்செய்த ஞாநிகளுக்கு அக்3ரேஸரராயிருப்பர்.

“பா3ல்யாத் ப்ரப்4ருதி ஸுஸ்நிக்3தோ4 லக்ஷ்மணோ லக்ஷ்மி வர்த4ந:” என்று பா3ல்யம் தொடங்கி பெருமாள் திருத்தொட்டிலோடு அணையத் திருத்தொட்டில் இடாதபோது பள்ளிகொள்ளாத இளையபெருமாளைப் போலே இவரும் பருவம் நிரம்புவதற்கு முன்பே ப43வத் கு3ணைக தா4ரகராயிருப்பர். “முலையோ முழுமுற்றும் போந்தில – பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகம்” (திருவிருத்தம் – 60) என்றும் சொல்லுகிறபடியே, “ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராக4வ |  முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவோத்3த்4ருதௌ ||” – “உம்மை ஒழிந்தவன்று பிராட்டியுமில்லை அடியேனுமில்லை, ஜீவித்தோமோ முஹூர்த்தம்; ‘என்போலே’ என்றால் ஜலாது3த்3த்4ருத மான மத்ஸ்யம் நீர்நசையறுமளவும் ஜீவிக்குமாபோலே, நீர் நிறுத்திப் போகிறோமென்கிற வார்த்தை உம்முடைய திருவுள்ளத்திலே உண்டென்றறியு மளவுங்காணும் நாங்கள் ஜீவிப்பது” என்றாரிறே.

அத்தலையில் நினைவாலேயிறே இத்தலை ஜீவிப்பது;  “எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையுமப்போதொழியும்” (நான்முகன் திருவந்தாதி – 38) என்கிறபடியே அவன் நினைவில்லாதவன்று இவையுமில்லையிறே.  அப்படியே இவரும் “நின்னலாலிலேன் காண்” (2-3-7) என்றிருப்பாரொருவர்.

“ந தே3வலோகாக்ரமணம் நாமரத்வமஹம் வ்ருணே | ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா ||” – “வானவர் நாடு என்கிற பரமபத3ம், ஆத்மலாப4ம், லோகாநாமைஸ்வர்யம், இவையித்தனையும் உமக்குப் புறம்பாய் வருமன்று வேண்டேன்” என்ற இளையபெருமாளை ப்போலே, இவரும் “திருவொடுமருவிய இயற்கை மாயாப்பெருவிற லுலகம் மூன்றினொடு நல்வீடு பெறினுங்கொள்வதெண்ணுமோ?” (திருவாசிரியம் – 2) என்றும், “எம்மா வீட்டுத் திறமும் செப்பம்” (2-9-1) என்றும், “பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ” (6-9-9) என்றும் இதர புருஷார்த்த2ப்ரஸ்தாவத்திலே வெருவும் ஸ்வபா4வருமா யிருப்பர்.  “அஹம் தாவந்மஹாராஜே பித்ருத்வம் நோபலக்ஷயே | ப்4ராதா ப4ர்த்தா ச ப3ந்து4ஸ்ச பிதா ச மம ராக4வ: ||” என்று பெருமாளையே எல்லா வுறவுமாகப் பிற்றின இளையபெருமாளைப் போலே, இவரும் “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையுமவரே” (5-1-8) என்று  ப43வதை3காந்த்யஸீமையாயிருப்பர்.  “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்3ரதஸ் ஸ்வபதஸ்ச தே | ப4வாம்ஸ்து ஸஹ வைதே3ஹ்யா க்3ரிஸாநுஷு ரம்ஸ்யதே ||” என்று இளைய பெருமாள் ஸர்வவித4 கைங்கர்யங்களும் செய்தல்லது த4ரியாதாப் போலே இவரும் “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்” (3-3-1) என்று எல்லாவடிமைகளும் செய்தல்லது த4ரியாத் தன்மையராயிருப்பர்.  “விஸ்தரணோத்மநோ யோக3ம் விபூ4திஞ்ச ஜநார்த3ந”, “ந ததர்ப்ப ஸமாயாந்தம் பஸ்யமாநோ நராதி4ப:” என்றும் சொல்லுகிற அர்ஜுந த3சரதா2தி3களைப்போலே காலதத்த்வமுள்ளதனையும் அநுப4வியாநின்றாலும் “அப்பொழுதைக் கப்பொழுதென்னாரவமுதம்” (2-5-4) என்னும்படி மேன்மேலெனப்பெருகி வருகிற “ஆராத காதலை” (2-1-11) யுடையராயிருப்பர்.

“த4ர்மாத்மா ஸத்ய ஸௌசாதி3 கு3ணாநாமாகரஸ் ததா2 | உபமாந மஸேஷாணாம் ஸாதூ4நாம் யஸ்ஸதா34வத் ||” என்று, ஸ்ரீப்ரஹ்லாதா3ழ்வானை, ஸாது4க்களுக்கெல்லாம் உபமாநபூ4மியாகச் சொல்லுகிறாப்போலே எல்லார்க்கும் தம்முடைய ஓரோவகைகளாலே உபமாநபூ4மியாயிருப்பர்.

“அஹமஸ்யாவரோ ப்4ராதா கு3ணைர்தா3ஸ்யமுபாக3த:” என்று கு3ணங்களுக்குத்தோற்று அடிமைபுக்கஇளையபெருமாளைப்போலே இவரும் ப43வத் கு3ணங்களிலே தோற்று “உயர்வறவுயர்நலமுடயவன் – துயரறுசுடரடி தொழுதெழென் மன்னே” (1-1-1) என்றார்.

இப்படி ப43வத் ஸ்வரூப ரூப கு3ண விபூ4திகளை விஸத3 விஸத3தர விஸத3தமமாக அநுப4வித்து, அது உள்ளடங்காமை வழிந்து புறப்பட்ட சொல்லாயிற்று இப்ப்ரப3ந்த4ங்கள்.

இங்ஙனேயாகில் இப்ப்ரப3ந்த4ங்களுக்குப் பாட்டும், ஸங்க்2யையும், பாட்டுக்கு நாலடியாகையும், அக்ஷரங்கள் ஸமமாகையும் “எழுத்தசை சீர் பந்தமடி தொடை பாவினம்” என்றாப்போலே சொல்லுகிற ப்ரப3ந்த4 லக்ஷணங்கள் சேரவிழுந்தபடி எங்ஙனேயென்னில்; ஸோகவேக3த் தாலே பிறந்த “மாநிஷாத3” இத்யாதி3  ஸ்லோகமானது “மச்ச2ந்தா3தே3வ” என்கிற ஸ்லோகத்தின்படியே அத்திக்காயில் அறுமான்போலே ப43வத்3விபூ4தியில் ஏகதே3ஸஸ்த2னான ப்3ரஹ்மாவின் ப்ரஸாத3த் தாலே ஸர்வலக்ஷணோபேதமானாப்போலே ப43வத் ப்ரஸாத3மடியாகப் பிறந்த இப்ப்ரப3ந்த4ங்களுக்கு இவற்றில் கூடாததில்லை.

இவை என்ன கோடியிலே அடைக்கப்பட்ட ப்ரப3ந்த4ங்கள்? இவை பிறந்தபடி எங்ஙனே? இவற்றுக்கு மூலமென்? ஒன்றை மூலமாகச் சொன்னால் அது மூலமென்றறியும்படி எங்ஙனே? இவை ப்ரமாண மென்றறிவதெத்தாலே? இவற்றுக்கு ப்ரதிபாத்3யர் ஆர்? இப் பரப3ந்த4ங்கள் கற்றைக்கு அதி4காரிகள் ஆர்? இவற்றுக்கு போ4க்தாக்கள் ஆர்? இவை எதுக்காகப் பண்ணப்பட்டன? என்று சில அவ்யுத்பந்நர் கேட்க;

இவை புருஷார்த்த2 ப்ரகாஸகமான ப்ரப3ந்த4ங்களில் ப்ரதா4ந ப்ரப3ந்த4ங்கள்; ப43வத்3கு3ணாநுப4வஜநித ஹர்ஷப்ரகர்ஷ ப3லாத்காரம் சொல்லுவிக்கப் பிறந்தன; ப43வத் ப்ரஸாத3 லப்34மான தி3வ்யசக்ஷுர் மூலமாகப் பிறந்தனவென்னுமிடம் ஸ்வர வசந வ்யக்திகளாலே அறியலாம்.  வேதா3ர்த்த2 வித்துக்களான ஸர்வஸிஷ்டர்களும் பரிக்3ரஹிக்கையாலும், ஸம்ஸாரத்தில் உத்3வேக3ம் பிறந்தார்க்கு ஞாதவ்யமான வேதா3ர்த்த2ங்களை இப்ப்ரப3ந்த4ங்களிலே காண்கை யாலும் இவை உத்க்ருஷ்டதமமான ப்ரமாணமென்றறியலாம்.  எல்லார்க்கும் பரமப்ராப்யபூ4தனான ஸ்ரிய:பதி இப்ப்ரப3ந்த4ங்களுக்கு ப்ரதிபாத்3யன்.  ஸம்ஸாரத்தில் ருசியற்று எம்பெருமான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்யவேணுமென்றிருக்குமவன் இவை கற்கைக்கு அதி4காரி.  முமுக்ஷுக்களும், முக்தரும், நித்யரும், எம்பெருமான் தானும் இவற்றுக்கு போ4க்தாக்கள்.  ப43வத் கைங்கர்ய மாகிற நிரதிஸய புருஷார்த்த2ம் இன்னபடிப்படிருக்குமென்று அறிவிக்கைக்காகப் பிறந்த ப்ரப3ந்த4ங்களிவை – என்று சிரோபாஸித ஸத்3வ்ருத்34ராயிருப்பார்கள் பரிஹரித்தார்கள்.

நிஷித்34 பா4ஷையாகையாலும், இப்ப்ரப3ந்த4ங்களை வேத3த்தில் அநதி4காரிகள் அப்4யஸிக்கக் காண்கையாலும், கலிகாலத்திலே ஞாநத்துக்கு அடைவில்லாத சதுர்த்த2வர்ணத்திலே பிறந்தாரொருவ ராலே நிர்மிதங்களாகையாலும், தே3ஸாந்தரங்களிலின்றிக்கே ப்ராதே3ஸிகங்களாகையாலும், அவைதி3கர் பரிக்3ரஹிக்கையாலும், ஸ்ருதி ஸ்ம்ருதி விருத்34மான காம புருஷார்த்த2தயா சொல்லப்படுகிற ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொள்ளுகையாலும், இப்ப்ரப3ந்த4ங்கள் ப்ரமாணமாக மாட்டா என்று வைதி3ககோ3ஷ்டி2யில் பழக்கமில்லாதார் சில அறிவுகேடர் வந்து ப்ரத்யவஸ்தா2நம் பண்ண;

மாத்ஸ்ய புராணத்திலே, பா4ஷாந்தரத்தாலே பாடாநின்றுள்ள கைஸிகாதி3களைத் தன் நாட்டினின்றும் போகவிட்ட ராஜாவைக் குறித்து, “ஹரிகீர்த்திம் விநைவாந்யத் ப்3ராஹ்மணேந நரோத்தம | பா4ஷாகா3நம் ந கா3தவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் ||” என்ற யமவசநத்தின்படியே பா4ஷாநிஷேத4ம் ப43வத்3 வ்யதிரிக்த விஷயங்க ளிலேயாகையாலும், அங்ஙனன்றியே பா4ஷாமாத்ராவதி4யாக விதி4நிஷேத4ங்களை அங்கீ3கரிக்கில் ஸம்ஸ்க்ருத பா4ஷையான பா3ஹ்ய ஸாஸ்த்ராதி3களப்4யஸிக்க வேண்டுகையாலும், ஆழ்வார் தம்முடைய க்ருபாதிஸயத்தாலே வேத3த்தில் அநதி4காரிகளான ஸ்த்ரீ ஸூத்3ராதி3களும் இழவாதபடி வேதா3ர்த்த2த்தை த்3ராவிட3பா4ஷை யாலே அருளிச்செய்கையாலும்,  “எதிர்சூழல்புக்கு” (2-7-6) அநேக ஜந்மங்கள் எம்பெருமான் தானே தொடர்ந்து விஷயீகரிக்கைக்கடியான பா4க்3யத்தையுடையராய், நிரந்தர ப43வத் கடாக்ஷபாத்ரபூ4தருமாய், தத்த்வஹிதங்களில் நிபுணராய், அவற்றினுடைய உபதே3ஸத்திலும் ப்ரவ்ருத்தராய், விது3ர ஸப3ர்யாதி3களில் விலக்ஷணரான ஆழ்வார் பக்கலிலே இப்ப்ரப3ந்த4ங்கள் பிறக்கையாலும், இப்பா4ஷை நடையாடி ஸிஷ்டப்ரசுரமான தே2ஸங்க3ளெங்குமுண்டாய் பா4ஷாந்தரங்களிலே பிறந்து விலக்ஷணராயுள்ளாரும் இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கேட்டு, “இவற்றை அப்4யஸிக்கைக்கீடான இப்பா4ஷை நடையாடும் தே3ஸத்திலே பிறக்கப் பெற்றிலோமே” என்றிருக்கையாலும், இவற்றின் நன்மையைக் கண்டு வேதா3ர்த்த2 ஞாநத்துக்கு அடைவில்லாத அவைதி3கருங்கூடப் பரிக்3ரஹிக்கை ஸ்லாக்4யதா ஹேதுவாகை யாலும், வேத3நமென்றும் உபாஸநமென்ரும் உபநிஷத்துக்களிற் சொல்லுகிற ப4க்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகையாலும், ஐஸ்வர்ய கைவல்யங்களை தூ3ஷித்தது அல்பாஸ்தி2ரத்வாதி3 தோ3ஷத்தாலே யாகையாலும், ப்ரதிபாத்3யனான எம்பெருமானுடைய மாஹாத்ம்யத்தாலும், எம்பெருமானை ஸுஸ்பஷ்டமாக ப்ரதிபாதி3க்கையாலும், ப4க்திக்கு உத்பாத3கங்களாகையாலும், உத்பந்நையான ப4க்திக்கு வர்த்த4கங்களாய்கையாலும், ஸ்ரவாணாதி3 களில் அப்போதே நிரதிஸய ப்ரீதிஜநகங்களாகையாலும், இவற்றில் சொல்லுகிற அர்த்த2ங்களுக்கு வேத3த்தில் பலவிடங்களிலும் ஸாக்ஷியாகச் சொல்லுகையாலும், ப்3ரஹ்மகாரண வாத3த்தாலும், ப்3ரஹ்மஞாநாந் மோக்ஷத்தைச் சொல்லுகையாலும்,புருஷார்த்த2 விஷயமான ப்ரப3ந்த4ங்கள் எல்லாவற்றிலும் இப்ப்ரப3ந்த4ங்களை த்3ருட4தர ப்ரமாணங்களாக உப்பாதி3த்து வைதி3ககோ3ஷ்டி2யில் அபி4யுக்தரானவர்கள் பரிஹரித்தார்கள்.

43வத்ப்ரஸாத3த்தாலே அவனை அநுப4வித்துப் பரிபூர்ணராயிருக்கிற இவர்க்கு எம்பெருமானைப் பிரிகையும், பிரிவாலே நோவுபட்டுக் கூப்பிடுகையும் கூடினபடி எங்ஙனேயென்னில் ஓரோகு3ணத்தை அநுப4வித்தால்  அநுபூ4தகு3ணங்களிலுண்டான ப்ரியத்வ ப்ரகர்ஷம் க்ஷுத்3ரவிஷயங்களில் வைராக்3யத்தைப் பிறப்பித்து, கு3ணாந்தரங் களிலே ஸ்ப்ருஹையைப் பிறப்பிக்கும்: “பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி” என்றும், “மாற்பால் மன்ஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு” (மூன்றாம் திருவந்தாதி -14) என்றும் சொல்லுகிற படியே, பின்னை அக்குணங்களில் கர்மப்ராப்தி பற்றாது, யாதொருபோது ஆசைமிக்கது, அப்போது ஆசைப்பட்ட பொருள் கிடையாமையாலும், ப43வத3நுப4வ விரோதி4யான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4 ஸ்மரணாதி3களாலு மாக ப43வத்3 விஷயத்தில் அநுப4வித்த அம்ஸத்தையும் இழந்து “எந்நாள் யானுன்னை இனிவந்து கூடுவன்” (3-2-1) என்றும், “பல நீ காட்டிப்படுப்பாயோ” (6-9-9) என்றும், “போர வைத்தாய் புறமே” (5-1-5) என்றும், “கூவிக்கொள்ளும் காலமின்னம் குறுகாதோ” (6-9-9) என்றும் கூப்பிடாநிற்பர்.

அவனை அநுப4விக்கப்புக்கால் “அடியேனடைந்தேன் முதன்முன்னமே” (2-3-6) என்றும், “பருகிக்களித்தேனே” (2-3-9) என்றும், “உண்டுகளித்தேர் கும்பரென் குறை” (10-8-7) என்றும், “தொண்டீரெல்லீரும் வாரீர் தொழுதுதொழுது நின்றார்த்தும்” (5-2-2) என்றும், “எமர் கீழ்மேலெழுபிறப்பும்” (2-6-7) “மாசதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” (2-7-1) என்றும் தாமும் தம்முடைய ஸம்ப3ந்தி4 ஸம்ப3ந்தி4களுமாய்க் கூடக்களிப்பர்.

இப்படி ப3ஹுகு3ணனான எம்பெருமான் பக்கலிலே நிரதிஸய ப3க்திமான்களாய், தத்ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுக2து3:க்க2ராய், அவனையல்லதறி யாதபடியாய், ப43வத3நுப4வ ஸுக2ம் மிக்கபோது இதரபதா3ர்த்த2ங்களு மெல்லாம் தம்மைப்போலே எம்பெருமானைப்பெற்று ஸுகி2க்கிறனவாக வும், விஸ்லேஷமென்று ஒருவகை உண்டென்றுமறியாதே லோகயாத்ரையோடொக்க மறந்து, விஸ்லேஷ வ்யஸநம் மிக்கால் ஸம்ஸ்லேஷரஸம் உண்டென்றுமறியாதே இதர பதா3ர்த்த2ங்களுமெல் லாம் தம்மைப்போலே எம்பெருமானைப் பிரிந்து நோவுபடுகிறனவாகக் கொண்டு “நீயும் திருமாலால் நெஞ்சங்கோட்பட்டாயே” (2-1-1) இத்யாதி3 யாலே அவற்றுக்குமாகத் தாம் நோவுபடாநிற்பர்.

இவருக்கு ப்ரியா ப்ரியங்கள் ஒருகாலும் முடியாதே பர்யாயேண உண்டாயிருக்கையாலே, இவர்க்கு சிந்தயந்திப்படி நித்யமாய்ச் செல்லுகையாலே இவரை ‘தீ3ர்க்க4சிந்தயந்தி’ யென்றாயிற்று நம்முதலிகள் அருளிச்செய்வது.

ஆனால் சேதநர்க்கு ஸ்த்யந்நபாநாதி3களே தா4ரகபோஷக போ4க்3யங்க ளாய்ச் செல்லாநிற்க, இவரை ப43வத்3கு3ணைக தா4ரகரென்னக் கூடுமோ? என்னில்; திருவயோத்3யையிலும், கோஸலஜநபத3த்திலு முள்ள ஸ்தா2வர ஜங்க3மங்க3ளடைய ராமகு3ணைக தா4ரகங்களா யிருக்கும்படியை அநுஸந்தி4த்து இதுவும் கூடுமென்று கொள்வது.  இப்படி இருக்கிற இவர்க்கு எம்பெருமானோடு ஸம்ஸ்லேஷமாவது – ப்ரத்யக்ஷஸமாநாகாரமான ஞாநஸாக்ஷாத்காரம்.  விஸ்லேஷமாவது – பா3ஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷைபண்ணி அது பெறாமையாலே மாநஸாநுப4வத்துக்கு வந்த கல்க்கம்.

ஸர்வஞனாய், ஸர்வஸக்தியாய், ஸர்வநியந்தாவாய், நிரவதி4க க்ருபா வானாயிருந்த எம்பெருமான் இவருடைய அநுப4வத்தை முடிய நடத்தாதே, இவ்வநுப4வத்தை விச்சே23த்துக்கு ப்ரயோஜநமென்னென் னில்; திருவயோத்4யையிலும், திருக்குரவையிலும் பிரிந்த பிரிவுபோலே இவர்க்கு அநுபூ4தகு3ணங்கள் ஸாத்மிக்கைக்காகவும் மேன்மேலென த்ருஷ்ணை பிறக்கைக்காகவும்.

எம்பெருமான் பக்கல் பிறந்த ஆசை முதிர்ந்து, நினைத்தபடி பெறாவிட்ட வாறே ஸோக மோஹங்கள் பிறக்கும்.

இப்படியுள்ள கலவியாலும் பிரிவாலும் ஆழ்வாருக்கு வந்த த3ஸை அந்யாபதே3ஸப்பேசைப் பேசுவிக்கும்.

இப்ப்ரப்3ந்த4ங்களில் ஸூக்திகள் ப்ராப்யனான எம்பெருமானுடைய ஸ்வரூப ப்ரதிபாத3நபரமாயிருக்கும் சில;  ப்ராப்தாவான ப்ரத்யகா3த்ம விஷயமாயிருக்கும் சில; ப்ராப்த்யுபாயத்தைச் சொல்லும் சில; ப2லத்தைச் சொலும் சில்; ப்ராப்தி விரோதி4யைச் சொல்லும் சில; அவஸிஷ்டமானவை இவற்றுக்கு உபபாத3கங்களாயிருக்கும்.  இவற்றில் உத்3தே3ஸ்யம் ப2லம்; தத3ர்த்த2மாக மற்றுள்ள நாலர்த்த2மும் சொல்லுகிறது.

இவற்றில் ப்ரத2ம ப்ரப3ந்த4மான திருவிருத்தத்தில் – த்வத3நுப4வ விரோதி4யான ஸம்ஸாரஸம்ப3ந்த4த்தை அறுத்துத் தந்தருளவேணு மென்று எம்பெருமானை அர்த்தி2க்கிறார்.

திருவாசிரியத்தில் – நிவ்ருத்த ஸம்ஸாரர்க்கு போ4க்3யமன தன்னுடைய வடிவழகை – கலம்பகன்மாலையைப் பணியாக எடுத்துக் காட்டுமா போலே காட்டிக்கொடுக்கக் கண்டு அநுப4வித்தார் பூர்ணமாக.

பெரியதிருவந்தாதியில் – நிரதிஸயபோ4க்3யனான எம்பெருமானை அநுப4விக்கையாலே, தத3நுகு3ணமாக த்ருஷ்ணை பிறந்து த்ருஷ்ணாநு கு3ணமாகப்பேசியும் நினைத்தும் த4ரிக்கிறார்.

திருவாய்மொழியில் – இவருடைய த்ருஷ்ணாநுகு3ணமக – ஸ்ரியஹ் பதியாய், ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகனாய், தனக்குத் தகுதியான தி3வ்ய தே3ஹத்தையுடையனுமாய், தி3வ்யபூ4ஷண பூ4ஷிதனுமாய், ஸங்க2சக்ராதி3 தி3வ்யாயுத44ரனுமாய், பரமவ்யோமத்திலே ஆநந்த3 மயமான தி3வ்யாஸ்தா2ந ரத்ந மண்டபத்திலே பெரியபிராட்டியாரும், தானும், பிரட்டிமாருங்கூட தி3வ்ய ஸிம்ஹாஸநத்திலே “ஏழுலகும் தனிக்கோல்செல்ல” (4-5-1) வீற்றிருந்தருளி, அஸ்தா2நே ப4யஸங்கிக ளான “அயர்வறும் அமரர்களாலே” (1-1-1) அநவரத பரிசர்யமாண சரண நளிநனாய்க் கொண்டு, அங்கு அங்ஙனே செல்லாநிற்க, ஸவஸங்கல் பாயத்த ஸ்வரூப ஸ்தி2தி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகமான ஸ்வேதர ஸமஸ்தத்தையும் தனக்கு ஸரீரதயா ஸேஷமாகவுடையனாய், அந்தராத்மதயா சேதநாசேதங்களை வ்யாபித்து, தத்33த தோ3ஷைரஸம் ஸ்ப்ருஷ்டனாய், நாராயணாதி3 நாமங்களைத் தனக்கு வாசகமாக வுடையனாய், ஏவம்வித4னாக “உளன்  சுடர்மிகு சுருதியுள்” (1-1-7) என்கிறபடியே உபநிஷத்ஸித்34னுமாய், இப்படி விஸஜாதீயனுமா யிருந்துவைத்து ஆஸ்ரித வாத்ஸல்யத்தாலே தே3வ மநுஷ்யாதி3 ஸஜாதீயனாய் வந்து தன்னுடைய பரமக்ருபையாலே திருவவதாரம் பண்ணும் ஸ்வபா4வனுமாய், தன்னுடைய அவதாரங்களிலும் உதவப் பெறாத க3ர்ப்ப4 நிர்ப்பா4க்3யர்க்கும் இழக்க வேண்டாதபடி ஸர்வாபராத4 ஸஹனாய், பத்ரபுஷ்பாதி3களாலே ஸ்வாராத4னாய்க்கொண்டு ஆஸ்ரிதர்க்கு அத்யந்த பரதந்த்ரனாய், அவர்களுடைய இச்சா2நுகு3ண மான போ4ஜந ஸயநாதி3களை உடையனாய், ஸமஸ்தகல்யாணகு3ண பரிபூர்ணனான தானே ஆஸ்ரித ஸுலப4த்வார்த்த2மாகக் கோயில் களிலே வந்து நின்றருளியும், இப்படியுள்ள ஸர்வேஸ்வரத்வத்துக்கும் ஆஸ்ரிதாநுக்3ரஹத்துக்கும் ஏகாந்தமான படிகளால் பரிபூர்ணனான எம்பெருமான், தன்னை நிர்ஹேதுகமாகக் காட்டியருளக் கண்டநுப4வித்து, தம்முடைய ப்ரக்ருதி ஸம்ப3ந்த4மாகிற ப்ரதிப3ந்த4கமற்று எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார்.  இனிச் சொல்ல வேண்டுமவையெல்லாம் அவ்வவ திருவாய்மொழிகள்தோறும் சொல்லக் கண்டுகொள்வது.

முதல் திருவாய்மொழியில் சொல்லிற்றாவது –  நாநாரத்ந பரிபூர்ண மாய், அபரிச்சே2த்3யமான கடலை முந்துற திரளக்கண்டாப்போலே ஸ்வரூபரூபகு3ண விபூ4திகளாலே பரிபூர்ணனாய், எல்லாப்படியாலும் எல்லாரிலும் மேற்பட்டு, ஸர்வேஸ்வரனாய், ஸ்ரியஹ் பதியாக, அபௌருஷேயமான ஸுத்3ருட3மான ஸ்ருதிகளாலே ப்ரதிபாதி3க்கப் பட்டுள்ள எம்பெருமானை பா3ஹ்யகுத்3ருஷ்டிகளல் அவிசால்யமாம்படி அவன் ப்ரஸாத3த்தாலே ஸாக்ஷாத்கரித்து அநுப4வித்து, அவ்வநுப4வ ஜநிதப்ரீதி உள்ளடங்காமை அநுப4வித்தபடியே ஸவிபூ4திகனான எம்பெருமானைப் பேசி, ‘ஏவம்வித4னானவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவி’யென்று தம் திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்.

கடலைத் திரளக் கண்டானொருவன் அதிலுண்டான முத்து மாணிக் காதி3க்ளையும் தனித்தனியே காணுமாபோலே முதல் திருவாய்மொழி யிலே திரள அநுப4விக்கப்பட்ட எம்பெருமானுடைய கு3ணங்களை ஓரோவகைகளிலே ஓரோ திருவாய்மொழியாய்ச் சொல்லுகிறது இரண்டாம் திருவாய்மொழி தொடங்கிமேலெல்லாம்.

இப்படிச் செய்தாரிவரேயல்லர்.  பா4ரத ராமாயணாதி3களைப் பண்ணின வ்யாஸாதி3களும் ஸ்ங்க்ஷேபவிஸ்தரங்களாலே தங்கள் ப்ரப3ந்த4ங்களை ப்ரப3ந்தீ3கரித்தார்கள்.

பரஸ்வரூபம் – அகி2ல ஹேய ப்ரத்யநீகத்வத்தாலும் கல்யாணைக தாநத்வத்தாலும் ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலக்ஷணமாய், விபு4த்வாத்3 தே3ஸதஹ பரிச்சே23ரஹித்மாய், நித்யத்வாத் காலத: பரிச்சே23ரஹிதமாய், ஸர்வமும் தனக்கு ப்ரகாரமாகத் தான் ப்ரகாரியாய், தனக்கொரு ப்ரகார்யந்தரமில்லாமையாலே வஸ்து பரிச்சே23 ரஹிதமுமாய், ஞாநாநந்த3மயமாய், ஞாநப3லைஸ்வர்ய ஸீலாத்3யநந்த கல்யாணகு3ணக3ண மஹோத3தி4யாய், ஸ்ரியஹ் பதியாய், ஸ்வேதர ஸமஸ்தத்தையும் வ்யாபிக்குமிடத்தில் – அப்ராக்ருத மாய், ஸுத்34 ஸத்த்வமயமாய், ஸ்வாஸாதா4ரணமாய், புஷ்பஹாஸ ஸுகுமாரமாய், புண்யக3ந்த4 வாஸிதாநந்ததி33ந்தராளமய், ஸர்வா பாஸ்ரயமாயிருந்துள்ள தி3வ்ய விக்3ரஹம்போலே வ்யாபித்து த4ரித்து நியமித்து, இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகமாய்க்கொண்டு ஸேஷியாயிருக்கும்.

ப்ரக்ருதி ஸ்வரூபம் – மஹதா3தி3 விகாரங்களையுடைத்தாய், நித்யமாய், த்ரிகு3ணாத்மிகையாய், ஸுக்ல க்ருஷ்ண ரக்த்வர்ணையாய், அநேக ப்ரஜைகளுக்கு ப்ரஜநநபூ4தையாய், எம்பெருமானுக்கு ஸரீரதயா ஸேஷமாய், சேதநர் கர்மாநுகு3ணமாக இச்சி2க்க, இந்த இச்சா2நுகு3ண மாக ப43வத் ஸங்கல்பத்தாலே சதுர்விம்ஸதி தத்த்வமாய்க்கொண்டு விகரிக்கக்கடவதாய், இப்படி எம்பெருமானுக்கு இஷ்டவிநியோகா3ர்ஹமாயிருக்கும்.

ஆத்மஸ்வ்ரூபம் – அணுபரிமாணமாய், தேஜோத்3ரவ்யமாய், ஞாதாவாய், ஞாநாநந்த3 கு3ணகமாய், நித்யமாகையலே காலபரிச்சே23ரஹிதமாய், ஞாநத்3ரவ்யமாகையாலே வஸ்துபரிச்சே23ரஹிதமாய், அப்ருத2க் ஸித்34யர்ஹ ப்ருத2ங்நிர்தே3ஸாநர்ஹ அநந்யார்ஹ ஸேஷமுமாய், பரஸேஷதைகரஸமுமாய், அத்யந்த பரதந்த்ரமுமாய் இருக்கும் எம்பெருமானுக்கு, இத்தையுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவர்.

இவ்வாழ்வார் திருவாய்மொழி ப்ரப3ந்த4த்தால் செய்ததாயற்ற அர்த்த2ம் ஏதென்னில்; முதல் திருவாய்மொழியிலே “உயர்வற வுயர்நல முடையவன்” (1-1-1) என்று தொடங்கி, “உணர்முழுநலம் – மிகுநரை யிலன்” (1-1-2), நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்” (1-1-3), ஆமவைஆயவையாய் நின்ற அவர்” (1-1-4), என்று சொல்லிக்கொண்டு போந்து, “கரவிசும்பெரி வளி நீர் நிலமிவைமிசை வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்” (1-1-11) என்று தலைக்கட்டுகையாலே, நாராயணனே பரதத்த்வமென்கைக்காக நாராயண ஸப்3தா3ர்த்த2த்தை அருளிச்செய்தார்;  ஸர்வாதி4கத்வமும் ஸமாஸத கல்யாண கு3ணாத்மக த்வமும் உப4யவிபூ4தி நாத2த்வமுமிறே நாராயண ஸப்3தார்த்த2ம்.  இதினுடைய ஸேஷமிறே ‘ஒன்றுந்தேவும்’ (4-10), ‘திண்ணன்வீடு’ (2-2)ம்.

அநந்தரத் திருவாய்மொழியிலே – இவ்வர்த்த2த்துக்கு வாசகமான திருநாமந்தன்னை “வண்புகழ்நாரணன்” (1-2-10) என்று அருளிச்செய்தார்; வ்யாபகாந்தரங்களிலும் இவ்வர்த்த2த்தை அறியலாயிருக்குமே; அங்ஙன ன்றிக்கே, இதுவே வாசகமென்று தம் திருவுள்ளத்திலே அறுதியிட்ட ஆகாரந்தோற்ற “செல்வநாரணன்” (1-10-8), “திருநாரணன்” (4-1-1), “நாரணன் முழுவேழுலகுக்கு நாதன்” (2-7-2), “காராயின காள நன்மேனியினன் நாராயணன்” (9-3-1), “திண்ணம் நாரணம்” (10-5-1) என்று ஆத3ரித்துக்கொண்டுபோந்து “வாழ்புகழ் நாரணன்” (10-9-1) என்று, வழிப்போக்கில் வார்த்தையும் இதுவேயாய்த் தலைக்கட்டுகையாலே இதுவே வாசகமென்கிற நிர்ப3ந்த4த்தை அருளிச்செய்தார்.

இனி “மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்” (1-3-1) என்று தொடங்கி “திருவுடையடிகள்” (1-3-8) என்றும், “மையகண்ணாள் மலர் மேலுறைவாளுறை மார்பினன்” (4-5-2) என்றும், “நமக்கும் பூவின்மசை நங்கைக்கும் இன்பன்” (4-5-8) என்றும், “கோலத்திருமாமகளோடுன்னைக் கூடாதே” (6-9-3) என்றும் சொல்லிக்கொண்டுபோந்து, “திருவாணை” (10-10-2) என்றும், “கோலமலர்ப்பாவைக்கன்பாகிய என்னன்பே” (10-10-7) என்றும் தலைக்கட்டுகையாலே ஸ்ரீமானான நாராயணனே பரதத்த்வமென்றும் சொல்லிற்று.  இத்தால் நம்மாசார்யர்கள் ரஹஸ்யத்தில் பத3த்3வயத் தாலும் அருளிச்செய்து கொண்டுபோரும் அர்த்த2த்துக்கு அடி இவ்வாழ்வாராயிருக்கும் என்றதாயிற்று: ஆஸ்ரயண வேளையிலே “மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்” (1-3-1) என்று தொடங்கி, போ43வேளையிலே “கோலமலர்ப்பாவைக்கான்பாகிய என்னன்பே” (10-10-7) என்று சொல்லுகையாலே , ஆஸ்ரயணவேளையோடு போ43வேளையோடு வாசியற ஒரு மிது2நமே உத்3தே3ஸ்யம் என்னுமிடம் சொல்லிற்றாயிற்று.

இப்படி பரஸ்வரூபம் நிர்ணீதமாயிற்று; பரஸ்வரூப ப்ரதிஸம்ப3ந்தி4யான ஸவஸ்வரூபமிருக்கும்படி என்னென்னில், – “உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்து” (1-1-7) என்று, ஸரீராத்மபா4வத்தைத் தாம் அநுஸந்தி4த்துப் பிறருக்கு உபதே3ஸிக்கிறவிடத்திலே “உம்முயிர் வீடுடையானிடை” (1-2-1) என்று அந்த ஸரீராத்மபா4வந்தன்னையே உபதே3ஸித்து, இந்த ஸரீராத்மபா4வத்தால் ப2லிக்கிறது அநந்யார்ஹ ஸேஷத்வமென்னுமிடத்தை “தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” (2-9-4) என்றும், “அடியேனுள்ளான் உடலுள்ளான்” (8-8-2) என்றும் சொல்லி, இது தச்சே2ஷத்வத்தளவிலே நிற்பதொன்றல்ல, ததீ3யஸேஷத்வ பர்யந்த மானாலாயிற்று தச்சே2ஷத்வ ஸித்3தி4யென்னுமிடத்தை ‘பயிலுஞ் சுடரொளி’ (3-7), ‘நெடுமாற்கடிமை’ (8-10)யிலே பரக்க அருளிச்செய்து, “அடியார்கள் குழாங்களை – உடன் கூடுவதென்றுகொலோ” (2-3-10) என்று ப்ரார்த்தி2த்து, ப்ரார்த்தி2த்தபடியே “அடியரோடிருந்தமை” (10-9-11) என்று தலைக்கட்டுகையாலே, பா43வத ஸேஷத்வ பர்யந்தமான ப43வச் சே2ஷத்வமே ஸ்வரூபமென்னுமிடம் சொல்லிற்று.

ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்த2ம் இருக்கும்படியென்னென்னில்: – “தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” (2-9-4) என்று தொடங்கி, “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” (3-3-1) என்றும், “பணிமானம் பிழை யாமே அடியேனைப்பணிகொண்ட” (4-8-2) என்றும், “முகப்பே கூவிப் பணிகொள்ளாய்” (8-5-7) என்றும் இப்படிகளாலே அடிமையே புருஷார்த்த2ம் என்னுமிடத்தை நிர்ணயித்து, “இதுதான் ஸாஸ்த்ரவிஹித மென்று  செய்யுமளவல்ல, ஸ்வரூபப்ராப்தமென்று செய்யுமளவல்ல, ராக3ப்ராப்தம்” என்று சொல்லுகைக்காக, அடியிலே “உயர்வற உயர்நல  முடையவன்” (1-1-1) என்றுகொண்டு ப்ராப்யமான கு3ணங்களைச் சொல்லி, “சுவையன் திருவின் மணாளன்” (1-9-1) என்றும், “தூய அமுதைப் பருகிப்பருகி” (1-7-3) என்றும், கு3ணவிஸிஷ்டவஸ்துவி னுடைய போ4க்3யதையையும், சொல்லி, “அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதம்” (2-5-4) என்றும், “ஆராவமுதே” (5-8-1) என்றும், “ஆராவமுதானாயே” (10-10-5) என்றும் இந்த போ43த்தினுடைய நித்யாபூர்வதையைச்சொல்லி, “உகந்து பணிசெய்துனபாதம் பெற்றேன்” (10-8-10) என்று கு3ணாநுப4வஜநித ப்ரீதிகாரித கைங்கர்யமே புருஷார்த்த2 மென்னுமிடத்தைச் சொல்லி, இதுதான் யாவதா3த்மபா4வியான புருஷார்த்த2மென்கைக்காக “ஈதே இன்னம் வேண்டுவதெந்தாய்” (10-8-10) என்று தலைக்கட்டுகையாலே ப43வத்3கு3ணாநுப4வஜநித ப்ரீதிகாரித கைங்கர்யமே புருஷார்த்த2மென்று அருளிச்செய்தார்.

இப்புருஷார்த்த2த்துக்கு இடைச்சுவரான விரோதி4வேஷத்தை இரண்டாம் திருவாய்மொழியிலே “வீடுமின் முற்றவும்” (1-2-1) என்று கட்டடங்கச் சொல்லி, அது தன்னையே மேல் மூன்று திருவாய்மொழியாலே விஸ்தரித்து அருளிச்செய்தார்; அவையெவை? என்னில்; அஸேவ்ய ஸேவை த்யாஜ்ய மென்றார் ‘சொன்னால் விரோத’(3-9)த்திலே; ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்றார் ‘ஒரு நாயக’(4-1)த்திலே; ஸரீர ஸம்ப3ந்த4நிப3ந்த4நமாக வரும் பரிக்3ரஹங்கள் த்யாஜ்யமென்றார் ‘கொண்டபெண்டி’(9-1)ரிலே.  அங்ஙனே சொல்லலாமோ? ஸாஸ்த்ர ஸித்34மான ஐஸ்வர்ய கைவல்யங்கள் புருஷார்த்த2மாகத் தட்டென் னென்னில்:- பரமப்ருஷார்த்த2 லக்ஷண மோக்ஷத்திலே அதி4கரித்தவனு க்கு ‘ஐங்கருவிகண்ட வின்பம்’ (4-9-10) ஆகையாலும், ‘தெரிவரிதாய் அளவு’ (4-9-10)  இறந்திருந்ததேயாகிலும் ப43வத3நுப4வத்தைப்பற்ற ‘சிற்றின்பம்’ (4-9-10) ஆகையாலும், முமுக்ஷுவுக்கு இவை த்யாஜ்யம் என்றார்.  ஆக த்யாஜ்யவேஷத்தை அருளிச்செய்தார்.

த்யாக3ப்ரகாரமிருக்கும்படி எங்ஙனேயென்னில்:- த்யாஜ்யமென்றால் விடுமத்தனையன்றோ, த்யாக3ப்ரகாரமிருக்கும்படி அறிய வேணுமோ? என்னில்; வேணும்; விஷயங்களில் நின்றும் தான் கடக்க வர்த்திக்கவோ?  அன்றியே விஷயங்களை நஸிப்பித்து வர்த்திக்கவோ? என்றால், இரண்டும் ஒண்ணாது; கடக்க வர்த்திக்கவென்று நினைத்தால் லீலாவிபூ4திக்கு அவ்வருகே போகவேணும்; நஸிப்பித்து வர்த்திக்கவோ? என்றால், ப43வத்3 விபூ4தியை அழிக்கையாய்விடும்; இரண்டுமொழிய விஷ ஸந்நிதி4யில் நின்றும் நிர்மாநுஷ்யமான காட்டிலே வர்த்தித்தாலோ என்றால், ஸர்வத்தையும் விட்டுக் காட்டிலே இருந்த ஆதி34ரதனுக்கு மானின்பக்கலிலே ஸங்க3ம் உண்டாய், ஞாநப்4ரம்ஸம் பிறந்தது; ஸௌப4ரி, நிருக்குள்ளே முழுகிக்கிடக்கச் செய்தே, அங்கே சில மத்ஸ்ய ஸ்ஞ்சாரத்தைக்கண்டு விஷயபர்வணனா னான்;  ஆகையாலே த்யாக3ப்ரகாரம் இவையல்ல.  ஆனால் ஏதாவ தென்னில்:- “நீர்நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து இறைசேர்மின்” (1-2-3) என்று தே3ஹத்தில் ஆத்ம பு3த்3தி4யையும், தே3ஹாநுப3ந்தி4களான பதா3ர்த்த2ங்களில் மமதாபு3த்3தி4யையும் தவிருகை – த்யாக3ப்ரகார மென்று பிறருக்கு உபதே3ஸித்தார்;  “யானே என்னை அறியகிலாதே யானேயென்றனதே என்றிருந்தேன்” (2-9-9) என்று தாமும் அநுஸந்தி4த்தார்.

“நிவ்ருத்தராக3ஸ்ய க்3ருஹம் தபோவநம்” என்று – நிவ்ருத்தராக3னா யிருக்குமவனுக்குத் தானிருந்த தே3ஸமே தபஸ்ஸுக்கு ஏகாந்தஸ்த2ல மென்றதாயிற்று.  இப்படி எங்கே கண்டோமென்னில்; ஸ்ரீஜநகராஜன் பக்கலிலும் ஸ்ரீகுலசேக2ரப்பெருமாள் பக்கலிலும் கண்டுகொள்வது; ஆகையாலே பு3த்3தி4த்யாக3மே த்யாக3மென்றபடி.

இவ்விரோதி4 நிவ்ருத்திக்கும் புருஷார்த்த3 ஸித்3தி4க்கும் உபாயமே தென்னில்:- த்ரைவர்ணிகாதி4காரமான ப4க்தியும் அகிஞ்சநாதி4காரமான ப்ரபத்தியுமென்று இரண்டிறே வேதா3ந்த ஸித்34மான உபாயம்; இதில் ப்ரபத்தியே உபாயமென்று தமக்கு ஸித்3தா4ந்தமென்னும் ஆகாரந் தோற்ற உபாயவேஷத்தை அருளிச்செய்தார்.

“நோற்ற நோன்பிலேன்” (5-7-1) என்று தொடங்கி, “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத்தந்தொழிந்தாய்” (5-7-10) என்றும், “உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான் கழல்களைவையே சரணாகக்கொண்ட” (5-8-11) என்றும், “நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன்” (5-9-11) என்றும், “நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” (5-10-11) என்றும் சொல்லிக்கொண்டு போந்து, “ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்” (10-10-3) என்று தலைக்கட்டுகையாலே திருவடிகளே உபாயமென்று அருளிச்செய்தார்.

இத்தைப் பிறர்க்கு உபதே3ஸிக்கிறவிடத்திலும் “திருநாரணன்தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” (4-1-1) என்றார்; “ஆறெனக்கு நின் பாதமே” (5-7-10) என்றும், “கழல்களவையே” (5-8-11) என்றும், “சரணே சரண் நமக்கு” (5-10-11) என்றும் அவத4ரிக்கையாலே, உபாயபூர்த்தியை அருளிச்செய்தார்;  இவ்வுபாயத்துக்கு அதி4காரிகளாவாராரென்னில்:- “மயர்வற மதிநலமருளினன்” (1-1-1) என்ற இடத்தில் எனக்கருளினன் என்கைக்குத் தம்மைக் காணாமையாலே ஆகிஞ்சந்யத்தையே புரஸ்கரித்து, உபாய நிர்ணயவேளையிலே “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” (5-7-1) என்று த்ரைவர்ணிகாதி4காரமான உபாயாந்தரங்க்ளில் அநந்வய முக2த்தாலே ஆகிஞ்சந்யத்தைப் பேசி, ஆஸ்ரயண வேளையிலே “புகலொன்றில்லாவடியேன்” (6-10-10) என்று சொல்லி, போ43 வேளையில் தமக்கு உண்டானதடங்க ப43வத் ப்ரஸாத3லப்34 மென்கைக்காக “நீசனேன் நிறையொன்றுமிலேன்” (3-3-4) என்று, கருந்தரையைப் பேசி, “ஒப்பில்லாத் தீவினையேனை உய்யக் கொண்டு” (7-9-4) என்று, ஸாபராத4 ஜந்துக்களுக்கும் புகுரலாமென்று தோற்றுகையாலே ஸர்வாதி4காரமென்றதாயிற்று.

அதி4காரியைப் பெற்றாலும், உபாயம் ஸித்34மானாலும், ஸ்வீகார மில்லாதபோது ஜீவிக்கையாகாமையாலே, அந்த ஸ்வீகாரவேஷத்தை “கழல்களவையே சரணாகக்கொண்ட” (5-8-11) என்றும், இதினுடைய ஸாங்கா3நுஷ்டா2ந வேளையிலே “அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்” (6-10-10) என்றும் அருளிச்செய்தார்;  இந்த ஸ்வீகாரஸித்3தி4தானும் அவனாலே என்னுமிடத்தை “நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” (5-7-10) என்றும், “அதுவுமவனதின்னருளே” (8-8-3) என்றும் அருளிச்செய்தார்;  இந்த ஸ்வீகர்த்தாவினுடைய அத்4யவஸாயவேஷத்தை “களைவாய் துன்பங்களையாதொழிவாய் களைகண்மற்றிலேன்” (5-8-8) என்றும், “நாடொறும் ஏகசிந்தையனாய்” (5-10-11) என்றும் அருளிச்செய்தார்.

இவ்வுபாயத்த்தைப் பிறர்க்கு உபதே3சிக்கிறவிடத்திலே “சிற்றவேண்டா சிந்திப்பேயமையும்” (9-1-7) என்று உபாய ஸௌகர்யத்தை அருளிச் செய்து, இது தன்னை ஸப்ரகாரமாக அருளிச்செய்கிற இடத்திலே “இது ப4க்த்யங்க3மன்று; ஸ்வதந்த்ரோபாயம்” என்கைக்காக “சரணமாகும்” (9-10-5) என்று தொடங்கி, “மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்” (9-10-5)  என்று ப்ராப்திபர்யந்தமாக முடிய நடத்தும் என்றருளிச்செய்தார்; இவ்வுபாயாத்4யவஸாயம் பண்ணியிருக்குமவனுக்குக் காலக்ஷேப ப்ரகாரமிருக்கும்படி என்னென்னில்:- “தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” (9-4-9) என்று திருவாய்மொழிதானே காலக்ஷேப ப்ரகாரம் என்று அருளிச்செய்தார்.

இப்படி உபாயத்தை ஸ்வீகரித்து, இதுவே போதுபோக்காகத் திரியும் அதி4காரிக்குப் ப2லவேஷமிருக்கும்படி என்னென்னில்:- ஜிதேந்த்3ரியத் வம் ப்ரத2மமாய் கைங்கர்யஸித்3தி4 சரமமாயிருகுமித்தனையும் உபாய ப2லமென்னு மிடத்டை அருளிச்செய்தார்.  ப்ரத2மத்திலே இழியும்போது ஜிதேந்த்3ரியனாய்க் கொண்டு இழியவேணும் உபாஸகனுக்கு.  ஜிதேந்த்3ரியத்வமும் உபாயப2லம் இவ்வதி4காரிக்கு எங்ஙனேயென்னில்; “என்னைத் தீமனங்கெடுத்தாய்” (2-7-8) “மருவித்தொழும் மனமே தந்தாய்” (2-7-7) என்று – ஜிதேந்த்3ரியத்வம் அவனாலே என்னுமிடத்தைச் சொல்லி, ஜிதேந்த்3ரியனானவாறே, ப43வதநுப4வத்துக்கு உபகரணமான ப4க்த்யாதி3கள் தனக்குத்தானே உண்டாகிறதோ? என்னில், “மயர்வறமதி நலமருளினன்” (1-1-1) என்று – ப4க்திரூபாபந்ந ஞாநத்தையும் தானே தந்தானென்கையாலே ப4க்த்யுத்பத்தியும் அவனாலே என்னுமிடமும் சொல்லிநின்றது; ஆனால் உத்பந்நையான ப4க்திக்கு வர்த்த4கர் ஆரென்னில்:- “காதல் கடல்புரைய விளைவித்த காரமர்மேனி நங்கண்ணன்” (5-3-4) என்று அவனே வர்த்த4கனென்னுமிடஞ்சொல்லி, வ்ருத்3தி4க்கு எல்லையேதென்னில், “அதனிற் பெரிய என்னவா” (10-10-10) என்று தத்த்வத்ரயங்களையும் விளாக்குலைகொள்ளும்படி பெருகினபடி சொல்லி “என் அவாவறச் சூழ்ந்தாய்” (10-10-10) என்று தம் திருவாயாலே அருளிச்செய்கையாலே ஸரீரஸம்ப3ந்த4த்தை அறுத்து, தே3ஸ விஸேஷத்திலே கொண்டுபோய் ஸம்ஸ்லேஷித்துத் தலைக்கட்டினான் என்றதாயிற்று.

ஆக இவ்வைந்து அர்த்த2முமே திருவாய்மொழியால் ப்ரதிபாதி3க்கிறது; அல்லாதவை ஆநிஷங்கி3க ஸித்34மாய் வந்ததித்தனை; எங்ஙனேயென்னில்:- பரதத்த்வம் ஸ்ரீமந் நாராயணனென்றும், அந்யார்ஹ ஸேஷத்வமே ஸ்வரூப மென்றும், கு3ணாநுப4வஜநித ப்ரீதிகாரித கைங்கர்யமே புருஷார்த்த2மென்றும், அஹங்கார மமகாரங்கள் தத்3விரோதி4யென்றும், தந்நிவ்ருத்திக்கும் கைங்கர்ய ஸித்3தி4க்கும் ஸர்வஸுலப4னான ஸர்வேஸ்வரன் திருவடிகளே உபாயமென்றும், ஜிதேந்த்3ரியத்வம் தொடக்கமாக கைங்கர்ய பர்யந்தமாக உபாய ப2லமென்றும் சொல்லிநின்றது.

“ப்ராப்யஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகா3த்மந: | ப்ராப்த்யுபாயம் ப2லம் ப்ராப்தேஸ் ததா2 ப்ராப்ர்திவிரோதி4 ச || வத3ந்தி ஸகலா வேதா3ஸ் ஸேதிஹாஸ புராணகாஹ | முநயஸ்ச மஹாத்மாநோ வேத3வேதா3ர்த்த2 வேதி3நஹ ||” என்று ஸகலவேத3தாத்பர்யம் இவ்வர்த்த2 பஞ்சகமென்னுமிடத்தைப் பெரியவங்கிபுரத்துநம்பி திருவாய்மொழிக்கு வாக்யார்த்த2மாக அருளிச்செய்தார்.

முதல் ஸ்ரிய:பதி முற்றிற்று

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஸ்ரீ:

ஈடுமஹாப்ரவேஸம்

இரண்டாம் ஸ்ரிய:பதி

ஸ்ரியஹ்பதியாய் அவாப்த ஸமஸ்தகாமனாய், ஸமஸ்தகல்யாண கு3ணாத்மகனான ஸர்வேஸ்வரன் – “மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து” (2-6-8) என்கிறபடியே ஜந்மபரம்பரைகளிலே தோள்மாறித் திரிகிற இவரை இவ்வர்த்த2 பஞ்சகத்தையும் விஸத3தமமாக அறியவல்லராம் படி முதலடியிலே நிர்ஹேதுகமாக விஸேஷகடாக்ஷம் பண்ணியருளினான்.

நம்மாழ்வார் திருவாய்மொழி ப்ரப3ந்த4த்தாலே த்3வய விவரணம் பண்ணுகிறார்; இதில் முதலிட்டு மூன்று பத்தாலே உத்தரார்த்த4த்தை விவரிக்கிறார்; மேலிட்டு மூன்று பத்தாலே பூர்வார்த்த4த்தை விவரிக்கிறார்; மேலிட்டு மூன்று பத்தாலே உபாயோப யோகி3யான கு3ணங்களையும் ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசையற்ற படியையும், அவனோடு தமக்குண்டான நிருபாதி4க ஸம்ப3ந்த4த்தையும் அருளிச்செய்தார்; மேலிற்பத்தாலே தாம் ப்ரார்த்தி2த்தபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

இதில் முதற்பத்தாலே – “உயர்வறவுயர்நலமுடையவன் – அயர்வறு மமரர்களதிபதியவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” (1-1-1) என்று ஸமஸ்த கல்யாணகு3ணாத்மகனாய், ஸூரிபோ4க்3யனானவன் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்த2மென்று நிர்ணயித்து, உக்தமான அர்த்த2த்துக்கும் வக்ஷ்யமாணமான அர்த்த2த்துக்கும் ப்ரமாணம் – “உளன் சுடர்மிகு சுருதியுள்” (1-1-7) என்று நிர்தோ3ஷமான ஸ்ருதியே ப்ரமாணம் என்றும், ஏவம்வித4னானவன் ஆரென்ன, “வண் புகழ் நாரணன்” (1-2-10) என்றும், “திருவுடையடிகள்” (1-3-8) என்றும், “செல்வநாரணன்” (1-10-8) என்றும், விஸேஷித்து, “தொழுதென் மனனே” (1-1-1) என்று உபக்ரமித்து, “அயர்ப்பிலனலற்றுவன் தழுவுவன் வணங்கு வனமர்ந்தே” (1-3-10) என்று த்ரிவித4கரணங்களாலும் அடிமைசெய்து தலைக்கட்டுகையாலே ‘ப43வத் கைங்கர்யமே புருஷார்த்த2ம்’ என்று அறுதியிட்டார்.

இரண்டாம் பத்தால் – இந்த கைங்கர்யத்துக்கு விரோதி4யான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4த்தையுங்கழித்து, “ஒளிக்கொண்ட சோதியமாய்” (2-3-10), இக்கைங்கர்யத்துக்கு தே3ஸிகரான “அடியார்கள் குழாங்களை – உடன் கூடுவதென்றுகொலோ?” (2-3-10) என்று தாமும் ப்ரார்த்தி2த்து, “நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்” (2-8-4) என்று பிறர்க்கும் உபதே3ஸிக் கையாலே “இவர்க்குப் பரமபத3த்திலே நோக்காயிருந்தது” என்று ஈஸ்வரன் பரமபத3த்தைக் கொடுக்கப்புக, “எம்மாவீட்டுத் திறமும் செப்பம்” (2-9-1) என்று – எனக்கு அதிலொரு நிர்ப்ப3ந்த4மில்லை; “தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே” (2-9-4) என்று ‘உனக்கேயாயிருக்குமிருப்பே எனக்கு வேண்டுவது’ என்று இப்புருஷார்த்த2த்தை ஓடவைத்தார்.

மூன்றாம் பத்தால் – இவருக்குக் கைங்கர்யத்திலுண்டான ருசியையும் த்வரையையும் கண்ட ஈஸ்வர்ன, கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான திருமலையில் நிலையைக்காட்டிக்கொடுக்கக் கண்டு, “வழுவிலா வடிமை செய்யவேண்டும் நாம்” (3-3-1) என்று பாரித்து, பாரித்தபடியே பா43வதஸேஷத்வ பர்யந்தமாக வாசிகமாக அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.

நாலாம் பத்தால், இப்புருஷார்த்த2த்துக்கு உபாயம் ‘திருநாரணன் தாள்’ (4-1-1) என்றும், “குடிமன்னு மின் சுவர்க்கம்” (4-1-9), “எல்லாம் விட்ட இறுகல் இறப்பு (4-1-10) என்று ஐஸ்வர்ய கைவல்யங்களே விரோதி4 என்றும் பிறருக்கு உபதே3ஸித்து, “ஐங்கருவி கண்டவின்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்” (4-9-10) என்று தாமும் அநுஸந்தி4த்தார்.

அஞ்சாம் பத்தால், இந்த இஷ்ட ப்ராப்திக்கும், அநிஷ்ட நிவ்ருத்திக்கும் “ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” (5-7-10) என்று – தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார்.

அவன் தந்த உபாயத்தை க4டகரை முன்னிட்டு பெரியபிராட்டியார் புருஷகாரமாக “அலர்மேல் மங்கையுறைமார்பா – உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேன்” (6-10-10) என்று ஸ்வீகரித்தார் ஆறாம் பத்தால்.

ஏழாம் பத்தால், இப்படி ஸித்3தோ4பாய ஸ்வீகாரம் பண்ணியிருக்கச் செய்தேயும், சடக்கென ப2லியாமையாலே விஷண்ணராய், “கடல் ஞாலங்காக்கின்ற மின்னுநேமியினாய்” (7-1-2) என்று தொடங்கி உபாயோபயோகி3யான கு3ணங்களைச் சொல்லிகூப்பிட, “கூராராழி வெண்சங்கேந்தி – வாராய்” (6-9-1) என்று இவர் ஆசைப்பட்டபடியே ‘வெள்ளைச் சுரிசங்கொடாழி ஏந்தி’ (7-3-1) வந்த இது மாநஸாநுப4வ மாத்ரமாய் பா3ஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமையாலே, விஸ்லேஷித்த படியை அருளிச்செய்தார்.  எட்டாம்பத்தால், கீழ்ப் பிறந்த ஸம்ஸ்லேஷம் பா3ஹ்யஸம்ஸ்லேஷ யோக்3யமல்லாமையாலே “உமருகந்துகந்த உருவம் நின்னுருவமாகி உன்றனக்கன்பரானார் அவருகந்தமர்ந்த செய்கை உன் மாயை” (8-1-4) என்று – இப்படி ஆஸ்ரிதாதீ4ந ஸ்வரூப ஸ்தி2த்யாதி3களை உடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கை க்கு அடி, ஆத்மாத்மீயங்களில் ஏதேனும் நசை யுண்டாகவேணும்’ என்று அதிஸங்கைபண்ணி, அவற்றில் நசையற்றபடியை அருளிச்செய்தார். ஒன்பதாம் பத்தால் “நீர் என்றிய அதிஸங்கை பண்ணிப் படுகிறீர் இப்படி?” என்று தன்னுடைய நிருபாதி4கப3ந்த4த்தையும் காட்டி, “நான் நாராயணன், ஸர்வஸக்தியுக்தன், உம்முடைய ஸர்வாபேக்ஷிதங்களயும் செய்து தலைக்கட்டுகிறோம்” என்று அருளிச்செய்ய, “சீலமெல்லை யிலான்” (9-3-11) என்று அவனுடைய ஸீலகு3ணங்களிலே ஆழங்காற் பட்டார்.  பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றாமையைக்கண்டு திருமோகூரிலே தங்க்வேட்டையாக வந்து தங்கி, இவருக்கு அர்ச்சிராதி33தியையும் காட்டிக்கொடுத்து, இவர் ப்ரார்த்தி2த்தபடியே “என்னவாவறச் சூழ்ந்தாய்” (10-10-10) என்று இவர் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றைப் பண்ணிக்கொடுத்தபடியை அருளிச்செய்கிறார்.

இரண்டாம் ஸ்ரிய:பதி முற்றிற்று

 

 

ஸ்ரீ:

ஈடுமஹாப்ரவேஸம்

மூன்றாம் ஸ்ரிய:பதி

ஸ்ரியஹ்பதியாய் அவாப்த ஸமஸ்தகாமனாய், ஸமஸ்தகல்யாண கு3ணாத்மகனான ஸர்வேஸ்வரன் – “மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து” (2-6-8) என்கிறபடியே ஜந்மபரம்பரைகளிலே தோள்மாறி நித்யஸம்ஸாரி யாய்ப்போந்த இவரை – “அடியையடைந்து உள்ளந்தேறி ஈறிலின்பத் திருவெள்ளம் யான்மூழ்கினன்” (2-6-8) என்று தம் திருவாயாலே அருளிச் செய்யலாம்படி முதலடியிலே விஸேஷ கடாக்ஷத்தைப் பண்ணியருளி னான்.  முதல் தன்னிலே சித்ஸ்வரூபமாதல், அசித்ஸ்வரூபமாதல், ஈஸ்வர ஸ்வரூபமாதல் அறியாதேயிருக்கிற இவர்க்கு அசித3ம்ஸம் த்யாஜ்யமென்னுமிடத்தையும், சேதனன் உபாதே3யன் என்னுமிடத்தை யும், தான் உபாத்3யதமன் என்னுமிடத்தையும் அவன் தானே காட்டிக்கொடுக்கக்கண்டு, அவனோட்டை அநுப4வத்துக்கு இத்தே3ஹ ஸம்ப3ந்த4ம் விரோதி4யாயிருக்கையாலே, “ த்வத3நுப4வ விரோதி4யான இத்தே3ஹ ஸம்ப3ந்த4த்தை அறுத்துத்தந்தருளவேணும்” என்று அர்த்தி2த்தார் திருவிருத்தத்தில்; ஸம்ஸார ஸம்ப3ந்த4மற்று ஒரு தே3ஸ விஸேஷத்திலே போனால் அநுப4விக்கக்கடவ தன்னுடைய மேன்மை யையும், நீர்மையையும், வடிவழகையும் பரப்பற ஏழுபாட்டாலே அநுப4விக்கலாம்படி இங்கேயிருக்கச்செய்தே ஒரு த3ஸா வைஸத்3யத் தைப் பண்ணிக்கொடுக்க, அவ்வழகை அநுப4வித்தார் திருவாசிரியத் தில்; இப்படி அநுப4வித்த விஷயத்திலே விஷயாநு ரூபமான ஆசை கரைபுரண்டபடியைச் சொன்னார்  திருவந்தாதியில்; ஆமத்தையறுத்துப் பசியை மிகுத்துச் சோறிடுவாரைப்போலே தமக்கு ருசியைப் பிறப்பித்த படியையும், அந்த ருசிதான் பரப4க்தி ப்ரஞாந பரமப4க்திகளாய்க் கொண்டு பக்வமானபடியையும், பின்பு ப்ரக்ருதி ஸம்ப3ந்த4மும் அற்றுப் பேற்றோடே தலைக்கட்டினபடியையும் சொல்லுகிறார் திருவாய்மொழியில்,

கைங்கர்ய மநோரத2ம் பண்ணிக்கொண்டு வரக்கொள்ள, கைகேயி “ராஜந்” என்ற (என்று சொன்ன) சொற்கேட்டு ஸ்ரீப4ரதாழ்வான் பட்ட பாடுபோலே இருக்கிறதாயிற்று திருவிருத்ததில் நிலை; அவன் – திருச்சித்திரகூட்த்திலே பெருமாள் எழுந்தருளியிருந்தாரென்று கேட்டு (ஏபி4ஸ்ச ஸசிவைஸ்ஸார்த்த4ம்) என்கிறபடியே – “என்னொருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்கமாட்டாதவர் இத்தனைபேர் ஆற்றாமை கண்டால் மீளாதொழிவரோ? (ஸிரஸா யாசிதோ மயா) – என்னபி4மதம் தம் தலையாலே இரந்து செய்யக்கடவ அவர், நான் என்தலையாலே இரந்த கார்யத்தை மறுப்பரோ? (ப்4ராது:) நான் தம் பின்பிறந்தவனல் லேனோ? (ஸிஷ்யஸ்ய) – பின்பிறந்தவனென்று கூறுகொள்ள இருக்கிறேனோ? மந்த்ரஸம்ப3ந்த4மும் தம்மோடேயன்றோ? (தா3ஸ்ஸ்ய) – ஸிஷ்யனாய் க்ரயவிகரயார்ஹ்னன்றிக்கேயிருக்கிறேனோ? (ப்ரஸாத3ம் கர்த்துமர்ஹதி) – ஆனபின்பு என்பக்கல் ப்ரஸாத3த்தைப் பண்ணி யருளாரோ?” என்று மநோத்தி2த்துக் கொண்டு போகிறபோதை த4ரிப்புப்போலே திருவாசிரியத்தில் நிலை; ஸ்ரீநந்தி3க்3ராமத்திலே “ராமா க3மநாகாங்க்ஷயா” என்கிறபடியே பதினாலாண்டும் ஆசை வளர்த்துக் கொண்டிருந்தாப்போலே இருக்கிறது திருவந்தாதியில்; மீண்டெழுந் தருளி திருவபி4ஷேகம் பண்ணியருளி, அவனும் ஸ்வரூபாநுரூபமான பேறுபெற்றாப்போலேயிருக்கிறது  இவர்க்குத் திருவாய்மொழியில் பேறு.

திருவாய்மொழிக்காக ஸங்க்3ரஹம் முதல் திருவாய்மொழி; முதல் திருவாய்மொழியினுடைய ஸங்க்3ரஹம் முதல் மூன்று பாட்டு; முதல் மூன்று பாட்டினுடைய ஸங்க்3ரஹம் முதல் பாட்டு; முதல் பாட்டினுடைய ஸங்க்3ரஹம் முதலடி என்போல் என்னில், “ருசோ யஜும்ஷி ஸாமாநி ததை2வாத3ர்வணாநி ச| ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்ஸ்த2ம் யச்சாந்யத3பி வாங்மயம் ||” என்கிறபடியே ஸகலவேத3 ஸங்க்3ரஹம் திருமந்த்ரமாய், அதினுடைய ஸங்க்3ரஹம் ப்ரணவமாய், அதினுடைய ஸங்க்3ரஹம் அகாரமானாப்போலே. மற்றும் பா4ரத ராமாயாணாதி3களையும் ஸங்க்ஷேப விஸ்தரங்களாலே செய்தார்களிறே.

மூன்றாம் ஸ்ரிய:பதி முற்றிற்று

ஈடு மஹாப்ரவேஸம் முற்றிற்று

 

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.