01-01 12000/36000 Padi

ஸ்ரீ:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பகவத் விஷயம்

திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள்

வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும், நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும்

முதல் திருவாய்மொழி
உயர்வற: ப்ரவேஶம்

*****

முதல் பாட்டு

*உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன்*
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்*
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்*
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே.

பன்னீராயிரப்படி

உயர்வு – (ஆநந்தவல்லியிற் சொல்லுகிற கணக்கிலே), அல்லாத உயர்த்திகள், அற – அஸத்கல்பமாம்படி, உயர் – அவாங்கமநஸகோசரமாய் உயர்ந்த, நலம் – ஆநந்தத்தை, உடையவன் – உடையனாக, யவன் அவன் – ப்ரமாணப்ரஸித்தனானவன் யாவனொருவன், மயர்வு – (ஸம்ஶயவிபர்யயாதி ரூபமான) அஜ்ஞாநம், அற – நசிக்கும்படி, மதிநலம் – ஸ்வாபாவிக ஜ்ஞாந ப்ரேமங்களை, அருளினன் – (தன் அருளாலே) தந்தருளினவனாக, யவன் அவன் (‘ப்ரஜ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ’ என்கிற ப்ரஸித்தியை யுடையவன்) யாவனொருவன், அயர்வு – விஸ்மரணப்ரஸங்கம், அறும் – இல்லாத, அமரர்கள் – (நிரந்தராநுபவயுக்தரான) நித்யஸூரிகளுக்கு, அதிபதி – நிரவதிகஶேஷியானவன், யவன் – யாவனொருவன், அவன் – அவனுடைய, துயரறு – ஸமாஶ்ரித து:கநிவர்த்தகமாய்,  சுடர் – நிரந்தரௌஜ்ஜ்வல்யவிஶிஷ்டமான, அடி – திருவடிகளைக் குறித்து, தொழுது – (‘பத்தாஜ்ஜலிபுடா:’ என்கிறபடியே) ஶேஷத்வாநுரூபவ்ருத்தியைப் பண்ணி, என்மனனே – “என்மநஸ்ஸே!, எழு – நித்யோச்ச்ராயரூபமான உஜ்ஜீவநத்தைப் பெறு” (என்று தம்•டைய திருவுள்ளத்தைக் குறித்து அநுஶாஸித்தருளினாராயிற்று).

இதில் முதலடியில் – ‘நலம்’ என்று ஆநந்தகுணத்தையாதல், ஆநந்தஹேதுவாக உபநிஷத்திற்சொன்ன யுவத்வாதிகுண விபூதிகளையாதல் சொல்லுகிறது.   இரண்டாமடியில் – ‘நலம்’ என்று பக்திரூபஸ்நேஹத்தைச் சொல்லுகிறது.  இப்பாட்டில் மூன்றடியிலும் ‘யவன்’ என்கிற ஶப்தத்தோடே ‘அவன்’ என்று தொடங்கி, நாலாமடியைத் தனித்தனியே அந்வயித்து, மூன்று வாக்யமாகவும் சொல்லுவர்; முதலடியில் யவனோடே ‘அவன்’ என்று தொடங்கி இரண்டாமடியைக் கூட்டி வாக்யமாக்கி, அவ்விரண்டாமடிதன்னை ஆவர்த்தித்து யச்சப்தத்தாலே நிர்த்தேசித்து, அத்தை “அவன்” என்று தொடங்கி மூன்றாமடியோடே கூட்டி, அதுதன்னையும் ஆவர்த்தித்து ‘யவன்’ என்று நிர்த்தேசித்து அத்தோடே ‘அவன்’ என்று தொடங்கி நாலாமடியிலே வினைமுடித்து வாக்யைகவாக்யமாகவும் சொல்லுவர்.  அங்ஙனன்றியே, “ஸ யஶ்சாயம் புருஷே யஶ்சாஸாவதி3த்யே – ஸ ஏக:” என்கிற கணக்கிலே ‘யவனவன்’ என்று யச்சப்தார்த்தமாய் ப்ரஸித்தியைக் காட்டி, அத்தை ‘அவன்’ என்று தொடங்கி நாலாம்பாதத்தாலே பராமர்ஶித்து முடிக்கையாலே ஏகவாக்யமாகவும் சொல்லுவர்.  இப்பாட்டு – ஸர்வஶாஸ்த்ரோபப்ரும்ஹணமான இப்ப்ரபந்தஸங்க்ரஹமாகையாலே, ஸகலஶாஸ்த்ரஸங்க்ரஹரூபமான மந்த்ரரஹஸ்யார்த்ததாத்பர்யத்தை ப்ரகாசிப்பிக்கிறது.  எங்ஙனேயென்னில், ‘உயர்நலமுடையவன்’ என்கிற ஸர்வாதிக ஶேஷித்வத்தாலே ப்ரதமபதார்த்தமான அநந்யார்ஹஶேஷத்வ ப்ரதிஸம்பந்தித்வத்தையும், ‘மதிநலமருளினன்’ என்று க்ருபாகார்யமாகச் சொன்ன உபகாரகத்வத்தாலே மத்யமபதார்த்தமான உபாயபாவத்தையும், ‘அமரர்களதிபதி’ என்று நித்யஸூரிஸேவ்யத்வத்தாலே சரமபதார்த்தமான ப்ராப்யத்வத்தையும், ‘தொழுதெழு’ என்கையாலே சதுர்த்த்யர்த்தமான கைங்கர்யத்தையும் சொல்லிற்றாயிற்று.

ஈடு முப்பத்தாறாயிரப்படி

முதற்பாட்டு.  “தான் ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகனா யிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்.  அக்கு3ணங்களும் தன்னைப்பற்றி நிறம்பெறவேண்டும்படியாய் இருக்கிற தி3வ்யாத்ம ஸ்வரூபவைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்.  இப்பேற்றுக்கு என்பக்கல் சொல்லலாவதொன்று மின்றிக்கேயிருக்க, நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகனானான்;  ஸ்வஸ்வரூபாபந்நராயிருக்கிறவர்களுக்கும் அவ்வருகாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்; தன்னுடைய தி3வ்யவிக்3ரஹவைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்” என்று அவன் பண்ணின உபகாரங்களடையச் சொல்லி, “இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்யகைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்” என்று தம் திருவுள்ளத்தோடே கூ(ட்)டுகிறார்.

“ஆறு கிண்ணகமெடுத்தால் நேர்நின்ற மரங்கள் பறியுண்டுபோய்க் கடலிலேபுகும்; நீர்வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்.  அதுபோலே ப43வத்3 கு3ணங்களினுடைய, எடுப்பிருந்தபடி கண்டோமுக்கு எதிரே நானென்று பிழைக்க விரகில்லை; அவன்திருவடிகளிலே தலைசாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே!”  என்கிறார்.  “உயர்வறவுயர்நல•டையவன் துயரறு சுடரடி தொழுதெழப்பாராய் (நெஞ்சே!)” என்கிறார்.

“அஹமஸ்யாவரோ ப்4ராதா கு3ணைர்தா3ஸ்ய முபாக3த:” என்னுமாபோலே இளையபெருமாளை “நீர் இவர்க்கென்னாவீர்” என்ன; “பெருமாளும் ஒருபடி நினைத்திருப்பர்; நானும் ஒருபடி நினைத்திருப்பேன்” என்றார்; “அவர் நினைத்திருக்கும்படியென்? நீர் நினைத்திருக்கும்படியென்?” என்ன; “அவர் தம் பின்பிறந்தவன் என்றிருப்பர்; நான் அவர்கு3ணங்களுக்குத் தோற்று அடியேனாயிருப்பன்” என்றாரிறே;  அப்படியே இவரும் “உயர்வற உயர்நலமுடையவன் துயரறு சுடரடி தொழுதெழப்பாராய் நெஞ்சே” என்கிறார்.

இவர்தாம் முற்பட கு3ணங்களிலே இழிவானென் என்னில்: தாமகப்பட்ட துறை அதுவாகையாலே.  இவரை கு3ணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

(உயர்வற இத்யாதி3) ப43வதா3நந்த3த்தைப் பேசப்புக்க வேத3ங்கள் மநுஷ்யாநந்த3ம் தொடங்கி ப்3ரஹ்மாநந்த3த்தளவும் சென்று பின்னையும் அவ்வருகே உத்ப்ரேக்ஷித்துக்கொண்டு சென்று, பின்னையும் பரிச்சே2தி3க்க மாட்டாதே “யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று மீண்டனவிறே; இது ஆநந்த3கு3ணமொன்றிலுமிறே; கு3ணங்கள் எல்லாம் இப்படியேயிறே இருப்பது; இக்கு3ணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய்ப் பேசுகிறாரிறே இவர்.

(உயர்வு) வருத்தம். எல்லார்க்கும் உயர்த்தியுண்டாம்போது வருத்த முண்டு; அப்படி வருந்தவேணுமோ? என்றால், உயர்வற உயராநிற்கும்.  இத்தைப் பற்றவிறே ஆளவந்தார் அருளிச்செய்த சந்தை.  ப43வத்3வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக3தமான ஸர்வப்ரகாரத்தாலுமுண்டான உச்ச்2ராயத்தை – உயர்வென்கிறது.  (அற) இன்றியிலேயொழிய.  இத்தால் அத்யந்தாபா4வத்தைச் சொல்லுகிறதன்று; பின்னை என்சொல்லுகிறதென்னில்; தன்னுடைய உச்ச்2ராயத்தையும் இவற்றையும் பார்த்தால், ஆதி3த்யஸந்நிதி4யில் நக்ஷத்ராதி3களைப் போலவும், மேருஶிக2ரத்திலே நின்றவனுக்குக் கீழுள்ள ஸர்ஷபாதி3கள் இருக்குமாபோலவும், உண்டாயிருக்கச்செய்தே இல்லையென்னலாம்படி இருக்கை.

இப்படி அல்லாதவற்றை இல்லையென்னலாம்படி பண்ணினால், தனக்கோரெல்லை உண்டாயிருக்குமோவென்னில், – (உயர்)  காலதத்த்வமுள்ளதனையும் அநுப4வியாநின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாங்மநஸ்ஸுக்களால் பரிச்சே2தி3க்கவொண்ணாதபடி உயராநிற்கும்.  ஆனால் “ஸர்வே க்ஷயாந்தா நிசயா: பதநாந்தாஸ்ஸமுச்ச்2ரயா:| ஸம்யோகா3 விப்ரயோகா3ந்தா: மரணாந்தஞ்ச ஜீவிதம்||” என்கிறபடியே இருக்கிறதோவென்னில்; அன்று, இயத்தாராஹித்யத்தைச் சொன்னபடி.

இப்படி கரைகட்டாக் காவேரிபோலே பரந்திருந்தால் இப்பரப்பெல்லாம் ப்ரயோஜநமாயிராதே காடுபட்டுக்கிடக்குமோவென்னில்; (நலம்) கண்டிட மெங்கும் பயிர்பட்டிருக்கும் நிலம்போலே எங்குமொக்க உபாதே3யமாயிருக்கும்.  நலமென்று ஆநந்த3கு3ணமொன்றையும் சொல்லுகிறதென்னுதல்; கு3ணஸமூஹத்தைச் சொல்லுகிறதென்னுதல்; ஆநந்தா3வஹமான விபூ4தியைப் பற்றச் சொல்லுகிறதென்னுதல்.

(உடையவன்) இக்கு3ணங்கள்தன்னை அஸ்தி என்றுவிடுமளவன்றிக்கே இவற்றையிட்டு நிரூபிக்கவேண்டும்படியாய் இருக்கும்.  அதாவது – ஆக3ந்துக மன்றிக்கே ஸ்வரூபாநுப3ந்தி4யாய் இருக்கும் என்றபடி.  ஆழ்வான், பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து “நிர்க்கு3ணமென்பார்மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!” என்று பணித்தான்.

இத்தால் “ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகோ‍ஸௌ” என்றபடி; “வர்ஷாயுதை:” இத்யாதி3.   “தா4தூநாமிவ ஶைலேந்த்3ரோ கு3ணாநாமாகரோ மஹாந்”.  “ப3ஹவோ ந்ருப கல்யாணகு3ணா: புத்ரஸ்ய ஸந்தி தே”. “ஸ்வாபா4விகாநவதி4காதிஶயாஸங்க்2யேய கல்யாணகு3ணக3ண:” என்று இதுக்கு ஆளவந்தார் அருளிச்செய்யும் சந்தை.

இப்படி கு3ணங்கள் கரைபுரண்டிருந்தால், இக்கு3ணங்களாலே தனக்கு நிறமாம்படி இருக்குமோ தி3வ்யாத்ம ஸ்வரூபமென்னில்; அங்ஙனிராது; அஸ்வரூபத்தைப் பற்றி  கு3ணங்களுக்கும் நிறம்பெறவேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது (யவன்) என்று.  “யதா2 ஸைந்த4வக4ந:” என்கிற ப்ரமாண ப்ரஸித்3தி4யைப் பற்ற “யவன்” என்கிறார்.

இத்தால் கு3ணநிரபேக்ஷமான ஸ்வரூபப்ரஸித்3தி4யைச் சொல்லுதல்; கு3ண விஶிஷ்டமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுதல்.  (அவன்) இதுக்கவ்வருகே ஓர் உபகாரத்தைச் சொல்ல நினைத்துக் கீழ் நின்ற நிலையை அமைத்து மேலே தோள்படிகொள்ளுகிறார்.

அந்த உபகாரம்தான் ஏது என்னில்; (மயர்வற) ஜ்ஞாநாநுத3யம், அந்யதா2 ஜ்ஞாநம், விபரீதஜ்ஞாநம் என்கிற இவை வாஸநையோடே போம்படியாக.  “ஜ்ஞாநாநுத3யமாவது – தே3ஹாத்மாபி4மாநம்.  அந்யதா2ஜ்ஞாநமாவது – தே3வதாந்தர ஶேஷமென்றிருக்கை.  விபரீதஜ்ஞாநமாவது – ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வபோ4க்3யமாகவும் நினைத்திருக்கிற கேவலனுடைய ஜ்ஞாநம்” என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.  தம் வாயாலே “மயர்வற” என்று சொல்லலாம்படி காணும் அவன்தான் இவர்க்கு அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கினபடி.

(மதிநலம்) “ஜ்ஞாநப4க்திகளிரண்டையும் தந்தான்” என்று நிர்வஹிப்பாரு முண்டு; அன்றிக்கே, “நலமான மதியைத் தந்தானென்றாய், முளைக்கும்போதே வயிரம்பற்றி முளைக்கும் பதா3ர்த்த2ம்போலே ப4க்திரூபாபந்நஜ்ஞாநத்தைத் தந்தானென்கிறார்” என்று பட்டர் அருளிச்செய்யும்படி.  கர்மஜ்ஞாநாநுக்3ருஹீதையான ப4க்திஸ்தா2நத்திலே ப43வத்ப்ரஸாத3மாய், அநந்தரம் கைங்கர்யத்துக்குப் பூர்வக்ஷணவர்த்தியான ப4க்தியாயிற்று இவரது.

“ஆழ்வார் ப்ரபந்நரோ? ப4க்திநிஷ்ட2ரோ?” என்று எம்பாரைச் சிலர் கேட்க, “ஆழ்வார் ப்ரபந்நர்; ப4க்தி இவர்க்கு தே3ஹயாத்ராஶேஷம்” என்று அருளிச்செய்தார்; என்போலவென்னில்; நாமுமெல்லாம் ப்ரபந்நராயிருக்கச் செய்தே, ஆண்டாறுமாஸத்துக்கு ஜீவநம் தேடுகிறாப்போலே; ‘உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ண’(6-7-1)னிறே இவர்க்கு.

(அருளினன்) நிர்ஹேதுகமாக அருளிக்கொண்டு நிற்கக்கண்டவித்தனை; எனக்கு அருளினனென்னாதொழிந்தது ப43வத்3விஷயீகாரத்துக்கு முன்பு தம்மை அஸத்கல்பராக நினைத்திருக்கையாலே.  (அருளினன்) இத்தலை அர்த்தி2க்க வன்றிக்கே  முலைக்கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப்போலே அருளிக் கொண்டு நிற்கக்கண்டவித்தனை;  “தா4து: ப்ரஸாதா3ந் மஹிமாநமீஶம்” என்கிறபடியே நிர்ஹேதுகமாக அருளிக்கொண்டு நிற்கக்கண்ட இத்தனை.

இத்தலையில் நினைவின்றிக்கேயிருக்க வந்து அருளினவன், தன்னருள் கொள்வாரில்லாதானொருவனோவென்னில்; (அயர்வறுமமரர்களதிபதி) தானருளாதவன்று ஸத்தையின்றிக்கே இருப்பாரை ஒரு நாடாகவுடையவன்; அயர்வாகிறது – விஸ்ம்ருதி; அதின்றிக்கே இருப்பவர்கள்.  ப்ராக3பா4வத்தைப் பற்றச் சொல்லுகிறது; ப்ரத்4வம்ஸாபா4வமுண்டிறே முக்தர்க்கு.

(அமரர்கள்) ப43வத3நுப4வ விச்சே23த்தில் தாங்களுளரன்றிக்கே இருக்குமவர்கள்.  “ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராக4வ” என்கிறபடியே.  (அமரர்கள்) த்ரிபாத்3விபூ4தியோக3த்தைப் பற்றச் சொல்லுகிறது.  பரமஸாம்யா பந்நராயிருக்கையாலே ஓலக்கமிருந்தாலாயிற்று அவர்களுக்கும் அவனுக்கும் வாசியறியலாவது; பிராட்டிமாராலேயாதல், ஸ்ரீகௌஸ்து பா4தி3களாலேயாதல் ஶேஷியென்றறியுமத்தனை.

ஆனால் இப்படியிருக்கிற அவர்கள் பலராய், தானொருவனானால், இவர்களை அநுவர்த்தித்துக்கொண்டு தன்னுடைய ஶேஷித்வமாம்படி இருக்குமோ? என்னில் (அதிபதி) அவர்களுக்கும் “தொட்டுக்கொள், தொட்டுக்கொள்” என்னவேண்டும்படி ஆனைக்குக் குதிரைவைத்து அவ்வருகாயிருக்குமென்னுதல்; ஸ்வாமிவாசகமென்னுதல்.

இதுக்கு அவ்வருகே விக்3ரஹவைலக்ஷண்யம் சொல்ல ஒருப்பட்டு, கீழ்நின்ற நிலையைக் குலுக்கி “அவன்” என்று அவ்வருகே போகிறார்.  (துயரறு) “துயரறுக்கும்”  என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்யும்படி; ஸமஸ்த து3:க்கா2பநோத3ந ஸ்வபா4வமான திருவடிகள்; ஸகலாத்மாக்களுடையவும் து3:க்க2த்தைப் போக்குகையே ஸ்வபா4வமான திருவடிகள்.  “துயரறு சுடரடி” என்று எம்பெருமானார் அருளிச்செய்யும்படி; “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்4ருஶம் ப4வதி து3:க்கி2த:” என்றால் து3:க்க2நிவ்ருத்தியும் அவனதாய் இருக்குமிறே.  இவர் துயரறத் தான் துயர்தீர்ந்தானாயிருக்கை.  இத்தால் இவர் மயர்வற அவன் துயரற்றபடி.

(சுடரடி) நிரவதி4க தேஜோரூபமான தி4வ்யமங்க3ள விக்3ரஹத்தைச் சொல்லுகிறது.  (சுடர்) பஞ்சஶக்திமயமான புகரைச் சொல்லுகிறது.  (அடி) ஶேஷபூ4தன் ஶேஷிபக்கல் கணிசிப்பது திருவடிகளையிறே.  ஸ்தநந்த4யப்ரஜை முலையிலே வாய்வைக்குமாபோலே இவரும் “உன் தேனே மலருந் திருப்பாதம்” (1-5-5) என்கிற திருவடிகளிலே வாய்வைக்கிறார்.

(தொழுது) நித்யஸம்ஸாரியாய்ப்போந்த இழவெல்லாம் தீரும்படி ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயித்து.  (எழு) “அஸந்நேவ ஸ ப4வதி” என்னும் நிலை கழிந்து “ஸந்தமேநம் ததோ விது3:” என்கிறவர்கள் கோடியிலே எண்ணலாம்படியாக உஜ்ஜீவிக்கப் பார்.  அடியிலே தொழாமையால் வந்த ஸங்கோசம் தீரும்படி ‘அடியிலே தொழுது உஜ்ஜீவி’ என்கிறார்.

(என் மனனே) இப்போதாயிற்று தம்மைக் கண்டது; “அருளினன்” என்று நின்ற இத்தனையிறே முன்பு.  இருவர் கூடப் பள்ளியோதி இருந்தால், அவர்களிலே ஒருவனுக்கு உத்கர்ஷமுண்டானால், மற்றையவன் தனக்கு அவனோடே ஒரு ஸம்ப3ந்த4த்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாபோலே.  “மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் ப3ந்த4மோக்ஷயோ:” என்கிறபடியே நெடுநாள் ப3ந்த4ஹேதுவாய்ப்போந்தது – இப்போது ‘முந்துற்ற நெஞ்சாய்’ (பெரிய திருவந்தாதி-1) முற்பட்டு நிற்கிறபடியாலே, அத்தோடே தமக்கொரு ஸம்ப3ந்த4த்தை ஆசைப்பட்டு “என் மனனே” என்கிறார்.

பாட்டை முடியச் சொல்லி “அவன்” என்ன அமையாதோ? அடிதோறும் சொல்லுகிற இதுக்குக் கருத்து என்னென்னில்; இவர்தாம் இத்திருவாய்மொழிதன்னில் ஈஶ்வரத்வமாயிற்று ப்ரதிபாதி3க்கிறது; அந்த ஈஶ்வரத்வத்துக்கு, ஓரோ கு3ணங்களே நிரபேக்ஷமாகப் போந்திருக்கையாலே சொல்லுகிறார்.

“உயர்வறவுயர் நலமுடையவன் – யவன், அவன் மயர்வற மதிநல மருளினன்” என்று இங்ஙனே வாக்யைக வாக்யபா4வத்தாலே யோஜிக்கவுமாம்.

அன்றிக்கே, “உயர்வறவுயர்நலமுடையவன் யவன், அவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்று வாக்யபே43ம்பண்ணி யோஜிக்கவுமாம்.  “நம: புரஸ்தாத32  ப்ருஷ்ட2தஸ்தே” என்னுமாபோலே.  ஆனால் “உயர்வறவுயர் நலமுடையவன் – அயர்வறும் அமரர்களதிபதி – மயர்வற மதிநலமருளினன்” என்னவேண்டியிருக்க, “உயர்வற உயர்நலமுடையவன்” என்ற அநந்தரம் “அயர்வறும் அமரர்களதிபதி” என்று அவ்வளவும் போகமாட்டாமை உபகாரஸ்ம்ருதியாலே “மயர்வற மதிநலமருளினன்” என்கிறார்.

கு3ணமில்லை, விக்3ரஹமில்லை, விபூ4தியில்லை என்று சொல்லுகிறவர்கள் எல்லாரும் நிரஸ்தர் இப்பாட்டாலே.  அவர்களை எதிரிகளாக்கிச் சொல்ல வேண்டாவிறே; ஸ்வபக்ஷத்தை ஸ்தா2பிக்கவே பரபக்ஷம் நிரஸ்தமாமிறே; நெற்செய்யப் புல் தேயுமாபோலே தன்னடையே நிரஸ்தராவர்களிறே அவர்கள்.

“உயர்வற உயர்நலமுடையவன் – அயர்வறும் அமரர்களதிபதி” என்கையாலே – ப்ராப்யவேஷம் சொல்லிற்று; “மயர்வற” என்கையாலே – விரோதி4 போனபடி சொல்லிற்று; “அருளினன்” என்கையாலே – அவனே ஸாத4நமென்றது; “தொழுதெழு” என்கையாலே – ப்ராப்திப2லமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று.

“என்மனனே” என்கையாலே – பரிஶுத்3தா4ந்த:கரணனே அதி4காரி என்னுமிடம் சொல்லிற்று.

இரண்டாம் பாட்டு

மனனகமலமற மலர் மிசையெழுதரும்*
மனனுணர்வளவிலன் பொறியுணர் வவையிலன்*
இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்*
இனனிலன் எனனுயிர் மிகுநரையிலனே

– அநந்தரம், ‘யவன்’ என்று சொன்ன ஸ்வரூபத்தினுடைய ஸ்வேதர ஸமஸ்த வைலக்ஷண்யத்தை அருளிச்செய்கிறார்.

மனனகம் – மநஸ்ஸினிடத்து, மலம் – மலமான காமக்ரோதாதிகள், அற – கழிய, மலர் மிசை எழுதரும் – அத்தால் மலர்ந்து மேலே வளர்ந்துவரக்கடவதான, மனன் உணர்வு – மாநஸஜ்ஞாநத்தாலே, அளவு இலன் – (அளவிடப்படும் ஆத்மாவின்படியன்றியே) அளவிறந்திருப்பானாய், பொறியுணர்வவையிலன் – (பாஹ்யேந்த்ரிய ஜநிதமான ஜ்ஞாநங்கள் தன்பக்கல் தட்டாதபடியாலே) இந்த்ரியகோசரமான அசித்தில் வ்யாவ்ருத்தனாய், இனன் – இப்படி சேதநாசேதந விலக்ஷணனானவனாய், உணர்முழுநலம் – முழுவுணர்வும் முழுநலமுமான ஜ்ஞாநாநந்த நிரூபணீயனாய், எதிர் – எதிரான பவிஷ்யத்காலத்திலும், நிகழ் – நிகழான வர்த்தமாநகாலத்திலும், கழிவினும் – கழிவான பூதகாலத்திலும், இனனிலன் மிகுநரையிலன் – இனத்திருப்பாரையும் மிகுத்திருப்பாரையும் உடையனல்லனானவன், எனன் உயிர் – எனக்கு தாரகபூதன்.

‘அவன் துயரறுசுடரடி தொழுதெழு’ என்று கீழிற்பாட்டில் வினையோடே அந்வயம்.  இப்படிப் பத்துப்பாட்டிலும் அந்வயமாகக்கடவது.  இத்தாலே ஶோதகமான ஸத்யஜ்ஞாநாதி வாக்யத்திலே ஸத்யஶப்தார்த்தமான சேதநாசேதந வைலக்ஷண்யத்தையும், ஜ்ஞாநஶப்தார்த்தமான அஸங்குசித ஜ்ஞாநாநந்தரூபத்வத்தையும், அநந்தஶப்தார்த்தத்தில் காலாபரிச்சேதரூபமான நித்யஸமாப்யதிக ராஹித்யத்தையும் சொல்லிற்றாயிற்று.  முதல் ‘இனன்’ என்றது – இப்படிப்பட்டவ னென்றபடி.  அநந்தரம் ‘இனனிலன்’ என்றது – ஒத்தாரில்லாதவன் என்றபடி.

ஈடு – இரண்டாம்பாட்டு. “யதோ வா இமாநி” இத்யாதி3 ஶ்ருதிப்ரக்ரியையாலே கார்யாகாரமான ஜக3த்தைப்பிடித்து ஜக3த்காரணவஸ்து உபாஸ்யமென்னுதல், அன்றிக்கே, ஸ்வரூபத்தை முற்படச்சொல்லிப் பின்னை விபூ4தியிலே போருதல் செய்யாதே முற்பட கு3ணங்களிலே இழிவானென்? என்னில்;

ஸர்வேஶ்வரன் தம்மை வஶீகரித்தது கு3ணங்களைக்காட்டியாகையாலே தாம் அகப்பட்ட துறையிலே முற்பட இழிந்து பேசினார்.  அக்கு3ணங்கள்தான் ஸ்வரூபத்தைப் பற்றியல்லதிராமையாலே அவற்றுக்கு ஆஶ்ரயமான ஸ்வரூபத்தை “அவன்” என்று ப்ரஸங்கி3த்தார் முதற்பாட்டில்;

அங்கு ப்ரஸ்துதமான தி3வ்யாத்மஸ்வரூபம் ஹேயப்ரத்யநீகதையாலும் கல்யாண கு3ணைகதாநதையாலும் சேதநாசேதநவிலக்ஷணமாயிருக்குமென்று அந்த ஸ்வரூபத்தை அநுப4விக்கிறார் இப்பாட்டில்.

(மனனகமித்யாதி3) ஜீவாத்ம ஸ்வரூபத்தில் ப43வத்ஸ்வரூபம் விலக்ஷணம் என்கிறார்.  ஆனால் “மனனகம்” என்று தொடங்கிச் சொல்லுகிற இதுக்குக் கருத்து என்னென்னில்; ஸ்வரூப வைலக்ஷண்யத்தை அநுப4விக்கிற இவருடைய ப்ரதிபத்தி க்ரமமிருக்கிறபடி.

மனனென்றது – மனமென்றபடி.  (அகம்) நிரவயவமாய் இருக்கிற மநஸ்ஸுக்கு ஓருள்ளும் புறம்புமில்லாமையாலே மனனகமென்றது – மநஸ்ஸிலே என்றபடி.  அன்றியே, பராக3ர்த்த2 விஷயமாயும், ப்ரத்யக3ர்த்த2விஷயமாயும் போருகையாலே பராக3ர்த்த2த்தைத் தவிர்ந்து, ப்ரத்யக3ர்த்த2 விஷயமானத்தை அகமென்கிறதாகவுமாம்.

(மலமற) மனனகத்திலுண்டான மலமுண்டு – அவித்3யாதி3கள்; அவையற.  அவையாவன – “காம: க்ரோத4ஶ்ச லோப4ஶ்ச ஹர்ஷமாநமதா3 கு3ணா: | விஷாத3ஶ்சாஷ்டம: ப்ரோக்த இத்யேதே மநஸோ மலா: || ஆத்மஸ்வரூபமும் நித்யமாய், ஜ்ஞாநமும் நித்யமாகையாலே இத்தோ3ஷம் ஸ்வரூபக3தமுமல்ல, ஜ்ஞாநக3தமுமல்ல; ஆத்மாவினுடைய த4ர்மபூ4தஜ்ஞாநத்துக்கு உத3யாஸ்தமய வ்யவஹாரம் பண்ணுகிறது, ஜ்ஞாநப்ரஸ்ருதித்3வாரத்தைப் பற்றவாயிற்று; ஆக ஜ்ஞாநப்ரஸ்ருதித்3வாரமான மநஸ்ஸைப் பற்றிக்கிடக்கிற தோ3ஷமானது, யோக3ஶாஸ்த்ரத்தில் சொல்லுகிற க்ரமத்திலே பா3ஹ்யவிஷய ப்ரவணமான நெஞ்சை ப்ரத்யக்3விஷயமாக்கி யமநியமாதி3 க்ரமத்தாலே அநுஸந்தி4க்கப் புக்கவாறே கழியக்கடவது.  ‘அற’ என்றது – அறவற என்றபடி.  அநந்தரம், மலர் – விகஸிதமாய்.  மிசை – மேல்நோக்கி.  எழுதரும் – கொழுந்துவிட்டு மேன்மேலெனக் கிளராநின்றுள்ள.  மனனுணர்வுண்டு – மாநஸஜ்ஞாநம்; இப்படி விகஸிதமாய்க் கொழுந்துவிட்டு மேன்மேலெனக் கிளராநின்றுள்ள மாநஸஜ்ஞாந க3ம்யமாயிருக்கும் ஆத்மா; அளவிலன் – அதினளவல்லன் ஈஶ்வரன்.

மாநஸஜ்ஞாநக3ம்யமாயிருக்கும் ஜீவாத்மஸ்வரூபம், ப43வத்ஸ்வரூபம் அங்ஙனிராது என்றதுக்குக் கருத்து என்னென்னில்; ஏகேந்த்3ரிய க்3ராஹ்யத்வமும் இல்லை என்கை.  பொன்னுக்கும் கரிக்கும் அத்யந்தம் வைஷம்யமுண்டாயிருக்கச் செய்தே, க்3ரஹிக்கைக்கு ஸாமக்3ரி ஒன்றாயிருக்குமிறே.  அப்படி ஏகப்ரமாண க3ம்யத்வ ஸாம்யமுமில்லை என்கை.

ஆனால் “மநஸா து விஶுத்3தே4ந” என்று பரிஶுத்3தமான அந்த:கரணத்தாலே க்3ரஹிக்கலாமென்னாநின்றதே, அத்தோடு விரோதி4யாதோ வென்னில்;  “நேதி நேதி” என்று க்3ரஹிக்குமத்தனையல்லது ஈத்3ருக்தயா, இயத்தயா, பரிச்சே2தி3த்து க்3ரஹிக்கப்போகாதென்கை.

முதலிலே ஜ்ஞாநவிஷயம் அன்றென்னில் துச்ச2த்வம் வருமிறே.  அணு- த்3ரவ்யத்தை க்3ரஹிக்குமாபோலே விபு4த்3ரவ்யத்தை க்3ரஹிக்கப்போகாது என்கை.

(பொறியுணர்வவையிலன்) பொறியென்று – சக்ஷுராதி3கரணங்கள். அவற்றால் அறியப்படும் பதா3ர்த்த2ங்களின் படியல்லன்.   “யமாத்மா ந வேத3”, ‘யம் ப்ருதி2வீ ந வேத3”  என்கிறபடியே, இவ்வோபாதி ஜீவாத்மஸ்வரூபத்தில் விலக்ஷணனென்றதுவும் என்கை; ஜாத்யந்த4ன் பதா3ர்த்த23ர்ஶநம் பண்ணிற்றில னென்பதும், கண்ணில் வைஶத்3யமுடையவனும் கண்டிலன் என்பதும்; காணாமைக்கு இருவருமொக்குமிறே.  அப்படியே அசித்3விலக்ஷணனென்றவோபாதி சித்3விலக்ஷணனென்றதுவும் என்கைக்காகச் சொல்லுகிறது.

இப்படி உப4யவிலக்ஷணனாயிருக்குமாகில் அவனை ப்ரதிபத்தி பண்ணும்படி என்? என்னில், (இனன்) ஏவம்வித4ன் என்னுமித்தனை.  உக்தத்தைச் சொல்லவுமாம்; வக்ஷ்யமாணத்தைச் சொல்லவுமாம்.

எப்படிப்பட்டவன்? என்னில்: (உணர்முழுநலம்) உணர்வென்று – ஜ்ஞாநம்.  நலமென்று – ஆநந்த3ம்.  முழுவென்று – இரண்டிடத்திலும் அந்வயிக்கிறது.  கட்டடங்க ஜ்ஞாநமுமாய், கட்டடங்க ஆநந்த3முமாயிருக்கும்.  இத்தால் ஸ்வரூபத்தில் அப்ரகாஶமாயாதல், அநநுகூலமாயாதலிருக்குமிடமில்லை என்கை.  அன்றிக்கே, ஆநந்த3மாகிறதும் ஜ்ஞாநவிஶேஷமாகையாலே ஆநந்த3த்தைச் சொன்னபோதே ஜ்ஞாநத்தையும் சொல்லிற்றாய் வருமிறே; ஆகையாலே (இனனுணர் முழுநலம்) நேர்கொடுநேர் தன்னை அறியப்போகாமையாலே, என்றும் ஒக்க இனனாலே – உபமாநத்தாலே அறியப்படுவதான முழுநலமா யிருக்கும்;  “யதா2 ஸைந்த4வக4ந:” என்கிறபடியே நிரதிஶயாநந்த3மாயிருக்கும்.  “ஆநந்தோ3 ப்3ரஹ்ம” என்றும் “ஆநந்த3மய:” என்றும் சொல்லக்கடவதிறே.

(கடிசேர் நாற்றத்துள்ளாலை)(8-8-2)) கடியும், நாற்றமும், இரண்டும் – பரிமளம்.  ஆலையென்பது – மது4, ஸர்வரஸத்துக்கும் உபலக்ஷணம்.  ஸர்வ க3ந்த4த்துக்கும் உபலக்ஷணம் – நாற்றம்.  “கடிசேர் நாற்றத்துள்ளாலை இன்பத்துன்பக்கழி நேர்மை ஒடியா இன்பப் பெருமையோன்” என்று – பூவில் க3ந்த4த்தையும், மது4வில் ரஸத்தையும் பிடித்து, அவைதன்னிலும் அல்பாஸ்தி2ரத்வாதி3தோ3ஷங்களைக் கழித்து, ஸ்தி2ரமாக்கிச் சேர்த்துப்பார்த்தால் சிறிதொப்பாம் என்னுமாபோலே ஓருபமாநத்தாலே அறியில் அறியலாமத்தனை; தன்னையே இழிந்து அறியப்போகாது என்றபடி.  (உணர்முழுநலம்) முழுவுணர்வுமாய், முழுநலமுமாயிருக்கும்;  கட்டடங்க ஜ்ஞாநமுமாய், கட்டடங்க ஆநந்த3முமா யிருக்கும்.  அநுகூல ஜ்ஞாநமேயாகிலும், ஆநந்த3மாகிறது பிரித்து வ்யவஹரிக்கக் கடவதாயிருக்குமிறே.  (எதிர் நிகழ் கழிவினுமினனிலன்) காலத்ரயத்திலும், இனனுண்டு – ஒப்பு, அதில்லாதான்.  சித3சிதீ3ஶ்வர தத்வத்ரயமேயாயிற்று நம் த3ர்ஶநத்துக்கு உள்ளது; அதில் சித3சித்3விலக்ஷணம் என்னுமிடம் முன்பே சொல்லிற்று.  இங்குச் சொல்லிற்றாகிறது என்னென்னில்; “திரளவொப்பில்லை யாகில், ஒருவகையாலேதான் ஒப்புண்டோவென்னில், அதுவும் இல்லை யென்கிறது” என்று நிர்வஹிப்பாரும் உண்டு; அங்ஙனன்றிக்கே, ப4ட்டர் “ஸாத4ர்ம்ய த்3ருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; வைத4ர்ம்ய த்3ருஷ்டாந்த மில்லை என்கிறது இங்கு”  என்று.  வைத4ர்ம்ய த்3ருஷ்டாந்தத்துக்கு உதா3ஹரணம் – “ந பரேஷு மஹௌஜஸஶ் ச2லாத3பகுர்வந்தி மலிம்லுசா இவ”. (எனனுயிர்) இப்படி இருக்கிறவன் எனக்கு தா4ரகன்.  “யஸ்யாத்மா ஶரீரம்” என்கிறபடியே. இத்தைத் தனக்கு ஶரீரமாகக்கொண்டு, தான் ஶரீரியாய், தா4ரகனாயிருக்கும் என்னும் அர்த்த2முஞ் சொல்லவேண்டுவது ஒன்றிறே.

(மிகுநரையிலனே) மிக்காரை உடையனல்லன்.  தான் ஜீவாத்மாவை ஶரீரமாகக்கொண்டு தா4ரகனாய் நியாமகனாய் இருக்கிறாப்போலே, தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோவென்னில்; தனக்கு மேற்பட்டாரை உடையனல்லன்; “ந தத்ஸமஶ்சாப்4யதி4கஶ்ச த்3ருஶ்யதே” என்னுமாபோலே.

“மனனகமலமற மலர்மிசை யெழுதரும் மனனுணர்வளவிலன், பொறியுணர்வவையிலன், எதிர் நிகழ் கழிவினுமினனிலன், மிகுநரையிலன், உணர்முழுநலம், இனன், எனனுயிர்” என்று அந்வயம், அன்றிக்கே, “எனனுயிரானவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்.

மூன்றாம் பாட்டு

இலனது உடையனிது எனநினைவரியவன்*
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்*
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த* அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

      – அநந்தரம், வஸ்துபரிச்சேத ராஹித்யத்துக்கும் தேஶபரிச்சேதராஹித்யத்துக்கும் உபபாதகமான லீலாவிபூதியோகத்தை அருளிச்செய்கிறார்.

‘இலன் அது – (விப்ரக்ருஷ்டமாகையாலே அஸந்நிஹிதமான வஸ்துவை) உடையனல்லன். உடையன் இது – (ஆஸந்நதையாலே ஸந்நிஹிதமான) வஸ்துவையுடையவன்,’ என – என்று சிலவஸ்துவாலே பரிச்சேதித்து, நினைவு
அரியவன் – நினைக்கஅரியவனாய், நிலனிடை – பூமியிலும், விசும்பிடை – ஊர்த்வ லோகத்திலும், உருவினன் அருவினன் – ரூபயோக்யமான அசித்தையும் ரூபரஹிதமான சித்தையும் ப்ரகாரமாக உடையவனாய், புலனொடு – (இப்படி ப்ரமாண ப்ரஸித்ததயா) புலப்படும் பதார்த்தங்களோடே கலந்து நிற்கச்செய்தே, புலன் அலன் –
அவற்றின் ஸ்வபாவம் தனக்கு உடையவனல்லனாய், ஒழிவிலன் பரந்த – ஒன்றும் ஒழியாமல் பரந்துவ்யாபித்திருக்குமவனாய், அந்நலனுடை – கீழ்ச்சொன்ன ‘உயர்வறவுயர்நலத்தை’யுடையனான, ஒருவனை – அத்விதீயனை, நாம் நணுகினம் – நாம் கிட்டப்பெற்றோம்.

இப்பாட்டில் முதற்கூற்றால் வஸ்துபரிச்சேதராஹித்யத்தைச் சொல்லி, மேல் வ்யாப்தியாலே தேஶபரிச்சேத ராஹித்யத்தையும் சொல்லிற்றாயிற்று; ஆக, இப்பாட்டில் லீலாவிபூதியோகம் சொல்லுகிறது.

ஈடு – மூன்றாம் பாட்டு.  முதற்பாட்டிலே – ப்ரதா4ந்யேந கல்யாணகு3ண யோக3த்தையும், நித்யவிபூ4தி யோக3த்தையும், விக்3ரஹ வைலக்ஷண்யத்தையும் அநுப4வித்து, அவற்றுக்கு ஆஶ்ரயமான தி3வ்யாத்ம ஸ்வரூபம் சித3சித்3 விலக்ஷணமுமாய், உபமாநரஹிதமுமாய் இருக்குமென்று இரண்டாம் பாட்டாலே அருளிச்செய்து நின்றார்; அவற்றோடே சேர ஒருகோர்வையாய்த் தோற்றுமிறே ததீ3யத்வாகாரத்தாலே லீலாவிபூ4தியும் இவர்க்கு.  “நோபஜநம் ஸ்மரந்நித3ம் ஶரீரம்” என்னா நிற்கச்செய்தே ததீ3யத்வாகாரத்தாலே லீலாவிபூ4தியும் உத்3தே3ஶ்யமாகாநின்றதிறே முக்தனுக்கு; இவர்க்கும், கர்ம நிப3ந்த4நமான ஆகார•ம் கிடக்கச் செய்தே ‘மயர்வற மதிநலமருளப்’பெற்றவராகையாலே ததீ3யத்வாகாரமும் தோற்றி அநுப4விக்கிறார்.

ராஜாக்களுக்கு நாடெங்குஞ் செல்லாநிற்கச்செய்தே மஹிஷிகளும் தாங்களுமாகச் சில பூந்தோட்டங்களைக் குடநீர் வார்த்து ஆக்குவதழிப்பதாய், லீலாரஸம் அநுப4விக்குமாபோலே “திருவிண்ணகர் சேர்ந்தபிரான் பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகு” (6-3-5) என்கிறபடியே ஸர்வேஶ்வரனும் பெரிய பிராட்டியாருமாகக் கடாக்ஷித்தபோது உண்டாய், இல்லையாகில் இல்லையாய், அவர்களுக்கு லீலாரஸ விஷயமாய் இருக்கிற லீலாவிபூ4தியை அநுப4விக்கிறார்.

(இலனது உடையனிது என நினைவரியவன்)  “அது இலன், இது உடையன்” என நினைவரியவன்.  அநுபூ4தமாயிருப்பதொன்றைச் சொல்லி, அது இலனென்றவாறே அதொழிந்தத்தை உடையவனென்று தோற்றும்; ஒன்றைக் காட்டி இத்தை உடையவன் என்றவாறே இதொழிந்தது இல்லையாய்த் தோற்றும்; ‘இலனது’ என்றால் பரிச்சி2ந்ந விபூ4திகனாம்.  “உடையனிது” என்றால் இதொழிந்ததில்லாமையாலே அல்பவிபூ4திகனாம்; இரண்டு வழியாலுமாக ஐஶ்வர்யம் குறைந்து தோற்றும்.  (என) இப்படி இருக்குமென.  (நினைவரியவன்) அநுபபந்நங்களைச் சேர்த்து நினைக்கலாமிறே;  ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதின்மேலே கலஶமிருக்கிறதாகவும், அதின்மேலே சாலிருக்கிறதாகவும், அதின்மேலே மஹாமேருவிருக்கிறதாகவும், இப்படி அநுபபந்நங்களைச் சேர்த்து நினைக்கலாமிறே.  அப்படியேதான் மநோரத2த்துக்கு விஷயமாயிருக்குமோ வென்னில், மநோரத2 ஸமயத்திலும் பரிச்சே2தி3க்க அரியனாயிருக்கும்.

ஆனால் இவனைஶ்வர்யத்தைப் பேசும்படி என்? என்னில் (நிலனித்யாதி3) “பதிம் விஶ்வஸ்ய” என்னுமித்தனை.  “நிலனிடை” என்கிற இது பாதாளத்தளவும் நினைக்கிறது.  “விசும்பிடை” என்கிற இது – பரமபத3த்துக்கு இவ்வருகுள்ளத்தையெல்லாம் நினைக்கிறது.  (உருவினன்) உருக்களை உடையான்.  (அருவினன்) அருக்களை உடையான்.  “இனன்” என்ன, உடையவன் என்று காட்டுமோ? என்னில்; “காராயின காளநன்மேனியினன்”  (9-3-1) என்றால் – மேனியை உடையவன் என்று  காட்டுமாபோலே.  ஆக, கீழ் மேலுண்டான சேதநாசேதநங்களை உடையான் என்றபடி.  இத்தால் ப்ராதே3ஶிகமான ஐஶ்வர்யம் உடையவர்களதன்று லீலாவிபூ4தி; ஸர்வாதி4கனது என்கை.

இப்படி ஸர்வத்தையும் உடையனாய், தான் போ43த்திலே அந்யபரனாய்க் கோயிற்சாந்து பூசி, நித்யவிபூ4தியிலே இருக்குமோவென்னில்; (புலனொடு) இவை பட்டத்தைத் தானும் பட்டு உடன்கேடனாய் நின்று நோக்கும் என்கிறது.  “புலன்” என்கிறது – புலப்படும் பதா3ர்த்த2ங்களை. “த்3ருஶ்யதே ஶ்ரூயதே‍பி வா” என்கிறபடியே ப்ரமாணகோ3சரங்களான பதா3ர்த்த2ங்களை.  (ஒடு) “தத்ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே இவற்றை உண்டாக்கி, ஜீவத்3வாரா அநுப்ரவேஶித்து, பின்னை இவற்றுக்கு வஸ்துத்வ நாமபா4க்த்வங்களுண்டாம்படி பண்ணி, “அந்த: ப்ரவிஷ்டஶ் ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” என்கிறபடியே ஸர்வாந்தராத்மாவாய் நிற்கும்படியைச் சொல்லுகிறது.  ஆனால், பின்னை தான் ஸர்வாத்மாவாய் நின்றால் அசித்தினுடைய பரிணாமாதி3களாதல், சேதநருடைய ஸுகி2த்வ  து3:க்கி2த்வங்களாதல், தனக்கு ஸ்பர்ஶிக்கும்படி இருக்குமோ? என்னில் (புலனலன்) தத்34ர்மாவல்லன்.  “த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே | தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்த்யநஶ்நந்நந்யோ அபி4சாகஶீதி ||” என்று தான் ஒட்டற்று நின்று விளங்காநிற்கும்.

(ஒழிவிலன் பரந்த) ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வ்யாபித்திருக்கும் என்னவுமாம்.  அன்றியே, காலபரமாக்கி, எக்காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வ்யாபித்திருக்கும் என்னவுமாம்.

(அந்நலனுடையொருவனை) கீழ் இரண்டு பாட்டாலும் சொன்ன கு3ண விஶிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து “அந்நலனுடையொருவனை” என்கிறார்.  (நணுகினம்) “மயர்வறமதிநலமருளினன்” என்கிற ஜ்ஞாநமாத்ரம் அன்றிக்கே கிட்டப்பெற்றோம்.  (நாமே) இது பொய்யோ? “கிந்நு ஸ்யாச்சித்தமோஹோஸ்:யம்” இது ஏதேனும் ப்4ரமஸ்வப்நாதி3களோ? என்றாப்போலே.  இவர் “ஈஶ்வரோ‍ஹம்” என்றால் அவனுக்கும் குடிவாங்கவேண்டும்படியாயிறே இருப்பது.  அஹமென்றால் அவனளவிலே பர்யவஸிக்கவேண்டும்படியாயிருக்க, தே3ஹத்தளவிலேயாம்படியாகவிறே முன்பு போந்தது.  “மந்யே ப்ராப்தாஸ்ஸ்ம தம் தே3ஶம் ப4ரத்3வாஜோ யமப்3ரவீத்” கைகேயி “ராஜந்” என்று ஸம்போ3தி4க்கும்படி பிறந்து, ஸ்ரீப4ரத்3வாஜ ப43வான் “அவள் மகனாய்க் கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ” என்று “கச்சிந்ந து3ஷ்டோ வ்ரஜஸி” என்னும்படியான நான், அவன் சொன்ன ஆஶ்ரமத்திலே புகுந்தேனோ? என்று ஶங்கியாநின்றேன் என்றானிறே.  “வாநராணாம் நரணாஞ்ச கத2மாஸீத் ஸமாக3ம:”- “காட்டிலே வர்த்திக்கக்கடவ குரங்குகளுக்கும், நாக3ரிகரான சக்ரவர்த்தி பிள்ளைகளுக்கும், ஒரு சேர்த்தியுண்டானபடி எங்ஙனே?” என்ன, “ராமஸுக்3ரீவயோரைக்யம் தே3வ்யேவம் ஸமஜாயத” – பெருமாளும் மஹாராஜரும் சேர்ந்த சேர்த்தி, பின்னே பிறந்த இளையபெருமாள் நிற்க, அடியேன் அந்த:புரகார்யத்துக்கு வரும்படியாகவிறே; நானும் இங்ஙனே கூடிக்கொண்டு நிற்கக் கண்டேனித்தனை.

(நாமே) இவ்வநுப4வத்துக்குப் புறம்பான நாம்: ப43வத்கதா23ந்த4 ரஹிதரான நாம்.  (நாமே) இது பொய்யோ?

நான்காம் பாட்டு

நாமவ னிவனுவன் அவளிவ ளுவளெவள்*
தாமவ ரிவருவர் அதுவிது வுதுவெது*
வீமவை யிவையுவை அவைநலந் தீங்கவை*
ஆமவை யாயவை ஆய்நின்ற அவரே.   

      – அநந்தரம், மூன்றுபாட்டாலே விபூத்யந்தர்கத ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபஸ்திதிப்ரவ்ருத்த்யாதிகள் பகவததீநங்கள் என்கிறார்.  அதில் முதற்பாட்டில், ஸமஸ்தபதார்த்தங்களினுடைய ஸ்வரூபமும் தததீநமென்று ஸாமாநாதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.

நாம் – (மேல் சொல்லுகிற தூரத்வாத்யுபாதிகளுக்கு த்ருவமான) தாமும், அவன் – அதுக்கு தூரஸ்தனும், இவன் – அந்திகஸ்தனும், உவன் – அதூரவிப்ரக்ருஷ்டனும் என்று புல்லிங்கஶப்த நிர்த்திஷ்ட பதார்த்தமும், அவள் – (ஸ்த்ரீலிங்கஶப்த நிர்த்திஷ்டையான) தூரஸ்த்தையும், இவள் – ஸந்நிஹிதையும், உவள் – அதூரவிப்ரக்ருஷ்டையும், எவள் – வினவப்படுமவளும், தாம் – கௌரவ்யதயா பூஜ்யரும், அவர் – அவர்களில் விப்ரக்ருஷ்டரும், இவர் – அந்திகஸ்தரும், உவர் – அநதிதூரவர்த்திகளும், அது இது உது – நபும்ஸகலிங்கஶப்த நிர்த்திஷ்டமான தூரஅந்திகஅவிதூரஸ்தமும், எது – வினவப்படும் வஸ்துவும், வீமவை – நஶ்வரமாய் அப்ரக்ருஷ்டங்களான, இவை உவை அவை – ஆஸந்ந அநதிதூர விப்ரக்ருஷ்ட வஸ்துக்களும், நலம்தீங்கவை – உத்கர்ஷஅபகர்ஷரூப தர்மங்களும், ஆமவை ஆயவை – ஆகாமிகளாயும் அதீதங்களாயுமுள்ள ஏவம்விதவஸ்துக்களும், ஆய்நின்ற அவர் – தாமேயாய் நின்ற அவர்.  இதாநீந்தநங்களான இவ்வஸ்துக்களுமானார் என்றதாயிற்று.  ‘எவன், எவர்’ என்று இல்லாதவிடங்களுக்கு அழைத்துச் சொல்லிக்கொள்வது.  இத்தால், காலத்ரயவர்த்தி ஸகலபதார்த்தங்களும் தததீநமென்று கருத்து.

ஈடு – நாலாம் பாட்டு.  கீழிற்பாட்டிலே, ததீ3யத்வாகாரத்தாலே அவன் கு3ணங் களோபாதி உத்3தே3ஶ்யமாய்த் தோற்றுகையாலே லீலாவிபூ4தியோக3த்தை அநுப4வித்தார்; இனி, மேலிற்பாட்டுக்கெல்லாம் லீலாவிபூ4தி விஷயமா யிருக்கிறது.  நித்யவிபூ4தியில் வந்தால் அவ்விபூ4தி பா4வஜ்ஞமாய் அவனுடைய ச2ந்த3த்தைப் பின்செல்லுமதாய் இருக்கும்; “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப” (4-9-10) என்னும்படியாயிறே இருப்பது;  கர்மநிப3ந்த4நமான அசித்ஸம்ஸர்க்க3த்தோடே கூடி ஈஶ்வரஸங்கல்பத்தைப் பின்செல்லுமதாயிருக்கும் இந்த விபூ4தி.  அந்த விபூ4தியில் வந்தால் அவ்விருப்புக் கண்டு உகக்குமதுக்கு அவ்வருகு ஒன்றுமில்லை; அந்யஶேஷத்வ ஸ்வஸ்வாதந்த்ர்யங்கள் நடையாடுகிறது இவ்விபூ4தியிலேயாகையாலே, இரண்டையும் தவிர்த்து ப43வத3தீ4நமென்று சொல்லவேண்டுவது இங்கேயாய் இருந்தது.

இனி, ஒரு மூன்று பாட்டாலே, இதினுடைய ஸ்வரூப ஸ்தி2தி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ப43வத3தீ4நமாயிருக்கும் என்று, ஜக3த்துக்கும் ஈஶ்வரனுக்கும் ஸம்ப3ந்த4ம் ஶரீராத்மபா4வம் என்று, குத்3ருஷ்டிகளை நிரஸித்து, ஶூந்யவாதி3யை நிரஸித்து, வ்யாப்தி ஸௌகர்யத்தைச் சொல்லி, ப2லத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.  அதில் ஸ்வரூபம் அவனதீ4நம் என்கிறார் இப்பாட்டில்.  அதாகிறபடி எங்ஙனே யென்னில்; ஸ்ருஷ்டிகாலத்திலே வந்தவாறே இவற்றை உண்டாக்கி, ஜீவத்3வாரா அநுப்ரவேஶித்து, வஸ்துத்வ நாமபா4க்த்வங்களும் உண்டாம்படி பண்ணியும், இது அடங்கலும் அழிந்தவன்று ஶக்த்யவஸ்த2 ப்ரபை4போலே தன்பக்கலிலே ஸூக்ஷ்மரூபேண கிடக்கும்படி ஏறிட்டுக் கொண்டு த4ரித்தும்,  காரணத3ஶையோடு கார்யத3ஶையோடு வாசியறத் தன்னைப் பற்றி ஸ்வரூபஸ்தி2த்யாதி3களாம்படி இருக்கையாலே ஸ்வரூபம் அவனதீ4நமென்கிறது.

அதில், லோகத்தில் ஸகலபதா3ர்த்த2ங்களையும் தனித்தனியே சொல்லி, இதினுடைய ஸ்வரூபம் அவனாலே, இதினுடைய ஸ்வரூபம் அவனாலே என்னில், பணிப்படுமிறே ஜீவாநந்த்யத்தாலே; இனி ப்ரயோஜகத்திலே சொல்லிவிடுமன்று ப்ரதிபத்திக்கு விஷயமாகாது; ஆகையாலே, தே3வாதி3பதா3ர்த்த2ங்களை நாலுமூன்று வகையாலே சேர்த்து, அவற்றினுடைய ஸ்வரூபம் அவனதீ4நம் என்கிறார்.

(நாமவனித்யாதி3) நானென்றும், நாமென்றும், யானென்றும், யாமென்றும், தந்தாமைச் சொல்லக்கடவது.  ஸந்நிஹிதமென்ன, தூ3ரஸ்த2மென்ன, அதூ3ர விப்ரக்ருஷ்டமென்ன, வினவப்படுகிறதென்ன.  (அவளிவளுவளெவள்) ஸ்த்ரீலிங்க3நிர்தி3ஷ்ட வஸ்துக்களைச் சொல்லுகிறது.  (தாம்) ப3ஹுமந்தவ்யரை.  (அது) நபும்ஸகலிங்க3நிர்தி3ஷ்டவஸ்துக்களைச் சொல்லுகிறது.  (வீமவை) நஶ்வர பதா3ர்த்த2ங்கள்.  (நலந்தீங்கு) நன்மை தீமை என்னுதல்; நன்றானவை, தீதானவை என்னுதல்.  (ஆமவை ஆயவை) கழிந்தவற்றிலும் வருமவற்றிலும் அடைப்புண்ணுமிறே வர்த்தமாநம்.  (ஆய்நின்ற) ஆய்நின்ற பதா3ர்த்த2ங்கள்;  இவற்றைப் பதா3ர்த்த2த்தளவிலே கொண்டபோது மேல் ஐக்யஞ் சொல்லப் போகாது; அசித்தும், அசித3பி4மாநியான ஜீவனும், ஜீவாந்தர்யாமியான பரமாத்மாவுமான இஸ்ஸங்கா4தம் இத்தனைக்கும் வாசகமாயிருக்கிறது இஶ்ஶப்33ம்.  (அவர்) இவையாய் நிற்கிறார் அவர்.  “இத3ம் ஸர்வம் ப்3ரஹ்ம க2லு” என்னுமாபோலே.  “தத் த்வமஸி” என்றாப்போலே இருக்கிறது.

முதற் பாட்டிலே கல்யாணகு3ணயோக3த்தையும் நித்யவிபூ4தி யோக3த்தையும் விக்3ரஹவைலக்ஷண்யத்தையும் சொல்லி, இரண்டாம் பாட்டிலே ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் சொல்லிற்று; தச்ச2ப்33ம் ப்ரக்ருதபராமர்ஶியாகையாலே “அவர்” என்று கல்யாணகு3ண விஶிஷ்டவேஷத்தைச் சொல்லி, “ஆய்நின்ற” என்று அசிஜ்ஜீவவிஶிஷ்டபரமாத்மாவைச் சொல்லி, ஸாமாநாதி4கரண்யத்தாலே ஐக்யம் சொல்லுகிறது; ஆக, ஸ்த்ரீபுந்நபும்ஸக பே43த்தாலும், பூஜ்யபதா3ர்த்த2ங்கள் நஶ்வரபதா3ர்த்த2ங்களென்கிற பே43த்தாலும், விலக்ஷணாவிலக்ஷண
பே43த்தாலும், பூ4தப4விஷ்யத்3வர்த்தமாந காலபே43த்தால் வந்த விஶேஷங்களாலும் ஸகல சேதநாசேதநங்களையும் ஸங்க்3ரஹித்து, அவற்றினுடைய ஸ்வரூபம் ப43வத3தீ4நமென்றதாய் விட்டது.

ஐந்தாம் பாட்டு

 

அவரவர் தமதமது அறிவறி வகைவகை*
அவரவர் இறையவர் எனவடி யடைவர்கள்*
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்*
அவரவர் விதிவழி அடையநின் றனரே.

      அநந்தரம், ரக்ஷணரூபையான ஸ்திதி, தததீநையென்று வையதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.

(அவ்வோபுருஷார்த்தங்களுக்காக), அவர் அவர் – அதிகாரிகள், தமதமது – தந்தாமுடைய, அறிவு அறி வகை வகை – அறிவினறிவின் வகையாலே, அவர் அவர் – ருசிக்கு ஈடான தேவதைகளை, இறையவர் என – பலந்தரும் சேஷிகளாக, அடி அடைவர்கள் – ஆஶ்ரயிப்பார்கள்; அவர் அவர் – அவ்வவ தேவதைகள், இறையவர் – பலங்கொடுத்து ஸ்வாமிகளாக, குறைவிலர் – குறையில்லை; இறையவர் – ஸர்வஸ்வாமியானவர், அவரவர் – அவ்வோ அதிகாரிகள், விதிவழி – விதிமார்க்கத்தாலே, அடைய – பலத்தை அடையும்படி, நின்றனர் – (அத்தேவதைகளுக்கு அந்தராத்மாவாய்) நின்றார்.  அன்றியே, ‘அவரவர்விதிவழியடைய’ என்று அவ்வோதேவதைகள் தந்தாமுடைய பலப்ரதத்வாதி பதஸித்த்யர்த்தமாக வித்யுக்தமார்க்கத்தாலே ஆஶ்ரயிக்கும்படி இறையவர் ஆஶ்ரயணீயராய்நின்றா ரென்றுமாம்.

ஈடு – அஞ்சாம் பாட்டு.  ஸ்வரூபம் அவனதீ4நமானவோபாதி ஸ்தி2தியும் அவனதீ4நை என்கிறார் (அவரவரித்யாதி3) ஒருவன் ஒரு க்3ருஹத்துக்குக் கடவனாயிருக்கும்; ஒருவன் ஒரு க்3ராமத்துக்குக் கடவனாயிருக்கும்; ஒருவன் ஒரு ஜநபத3த்துக்குக் கடவனாயிருக்கும்; ஒருவன் த்ரைலோக்யத்துக்குக் கடவனாயிருக்கும்; ஒருவன் சதுர்த3ஶபு4வநத்துக்கும் கடவனாயிருக்கும்; ஆக சதுர்த3ஶ பு4வநத்துக்குக் கடவனானவனோடு, ஒரு க்3ருஹத்துக்குக் கடவனானவனோடு வாசியற அவர்கள் ரக்ஷகராகிறதும், இவை ரக்ஷ்யமாய் உபகாரங்கொண்டதாகிறதும், ஸர்வேஶ்வரன் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே; அவன் இப்படி நடத்திக்கொண்டு போராதவன்று இவர்கள் ரக்ஷகராகமாட்டார்கள் என்கிறார்.  “ந ஸம்பதா3ம் ஸமாஹாரே விபத3ாம் விநிவர்த்தநே | ஸமர்த்தே2ா த்3ருஶ்யதே கஶ்சித் தம் விநா புருஷோத்தமம் ||”, “நஹி பாலநஸாமர்த்2யம் ருதே ஸர்வேஶ்வரம் ஹரிம்” – எல்லா நன்மைகளையும் பண்ணித்தர வல்லனாய் விரோதி3களையும் போக்க வல்லனானவனையொழிய வேறொருவர் பக்கலில் இந்த ரக்ஷகத்வம் கிடவாது.

“யத்3வேதா3தெ3ள ஸ்வர: ப்ரோக்தோ வேதா3ந்தே ச ப்ரதிஷ்டி2த:” செப்பிலே கிடந்த ஆப4ரணத்தை வாங்கிப்பூண்டு, பின்னையும் அவ்வாப4ரணத்தை  வாங்கிச் செப்புக்குள்ளே இட்டுவைக்குமாபோலே.  ஆத்3யந்த பீ3ஜமாயிருக்கிறது யாதொன்று.  (தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய)   அது தன்னுடைய ப்ரக்ருதியிலே லீநமாயிருக்கிறதாகிறது – அகாரம்.  அது – ரக்ஷகனைக் காட்டுவதொன்றிறே.  (ய:பரஸ்ஸ மஹேஶ்வர:) அதுக்கு வாச்யதயாபரனா யிருக்கிறான் யாவனொருவன், அவன் ஸர்வேஶ்வரனென்றதிறே.

(அவரவர்) தம்முடைய அநாத3ரமும், அவர்களுடைய வைவித்4யமும் தோற்றுகிறது.  (தமதமது) கு3ணபே43த்தால் வந்த ப2லபே43த்தைச் சொல்லுகிறது.  (அறிவறி) அதுக்கடியான ஜ்ஞாநபே43த்தைச் சொல்லுகிறது.  (வகை வகை) மார்க்க3பே43ங்களாலே.  (தமதமதறிவறி வகைவகை) சேதநபே43த்தோபாதியும் போருமாயிற்று ருசிபே43ங்களும்.  தந்தாமுடைய கு3ணாநுகு3ணமாகப் புறம்பே ஆஶ்ரயிப்பாரும், ஆஶ்ரயணீயராய் இருப்பாருமாய் இருக்குமிறே.  ரஜோகு3ண ப்ரசுரராய் இருப்பாரும், தமோகு3ண ப்ரசுரராய் இருப்பாரும் அளாவனான ஸத்த்வத்தை உடையராயிருப்பாருமாயிறே இருப்பது; அப்படியே கு3ணாநுகு3ணமாகப் பிறந்த ஜ்ஞாநமும்.  அறிந்த அறிந்த வகைகளாலே, (அவரவரிறையவரென) அவ்வவர் ஆஶ்ரயணீயரென்று.  (அடியடைவர்கள்) அவ்வவ தே3வதைகள்தான் து3ராராத4 தே4வதைகளாய், “ப்ரஜையை அறுத்துத்தா, ஆட்டை அறுத்துத்தா” என்னா நிற்கச் செய்தேயும், ஆஶ்ரயணமாவது  – அவற்றின் காலிலே குனியுமதுக்கு அவ்வருகில்லையென்று இருக்கிறார் இவர் – ஸ்வகோ3ஷ்டீ3 ப்ரஸித்3தி4யாலே. ஓர் அஞ்ஜலிஸாத்4ய வஸ்துவோடேயிறே தமக்கு வாஸநை. “அஞ்ஜலி: பரமா முத்3ரா க்ஷிப்ரம் தே3வப்ரஸாதி3நீ|”,  “க்ருதாபராத4ஸ்ய ஹி தே நாந்யத் பஶ்யாம்யஹம் க்ஷமம்| அந்தரேணாஞ்ஜலிம் ப3த்3த்4வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாத3நாத்||” – இளைய பெருமாளுடைய ஜ்யாகோ4ஷத்தைக் கேட்டு மஹாராஜர் கழுத்தில் மாலையை அறுத்துப் பொகட்டுக் காபேயமாய்ச் சில வ்யாபாரங்களைப் பண்ணி, அருகே நின்ற திருவடியைப் பார்த்து, “இவ்வளவில் நமக்குச் செய்யவடுப்பதென்?” என்ன; “அபராத4காலத்திலே அநுதாபம் பிறந்து மீண்டோமாய், எளியன சில செய்கிறோமல்லோம்; தீரக்கழிய அபராத4ம் பண்ணினபின்பு, இனி ஓரஞ்ஜலி நேராமற் போகாது” என்றானிறே.  இப்படி கு3ணாதி4கனாய், ப்ராப்தனாயிருக்கிறவனோட்டை வாஸனையாலே “அடியடைவர்கள்” என்கிறார்.  ‘மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு தொழுதெழுதுமென்னுமிது மிகையா’(9-3-9)யிறே இவர் பற்றின விஷயமிருப்பது.

(அவரவரிறையவர் குறைவிலர்) ஆஶ்ரயிக்கிறவர்களுடைய இறையவ ரென்னுதல், அவ்வவ ஆஶ்ரயணீயரானவர்களென்னுதல்.  அவர்களுக்கு ஆஶ்ரயணீயரானவர்கள் அவர்களுக்குப் ப2லப்ரதா3நஶக்தராகைக்குக் குறையுடையரல்லர்.  அதுக்கடி என்னென்னில், (இறையவர்) பொதுவிலே “இறையவர்” என்கிறார்; அவர்களோடு, அவர்கள் ஆஶ்ரயிக்கிற தே3வதைகளோடு, தம்மோடு வாசியற எல்லார்க்குமொக்க இறையவராகையாலே; “பதிம் விஶ்வஸ்ய” என்கிறபடியே எல்லார்க்குமொக்க ஸ்வாமியானவர்.  (அவரவர் விதிவழியடைய நின்றனரே) அவ்வவ ஆஶ்ரயணீயர் தந்தாமுடைய ஆக3மாதி3களிலே விதி4த்துவைத்த ப்ரகாரங்களிலே அடையும்படியாக நம் இறையவர் அந்தராத்மாவாய் நின்றார்.

அன்றிக்கே, ஸர்வேஶ்வரன் காமநாதி4காரத்தில் அருளிச்செய்தபடியே அவர்கள் அடையும்படியாக என்னுதல்.  ஸர்வேஶ்வரன் இராமடமூட்டுவாரைப் போலே முக2ம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே அவர்களும் ஆஶ்ரயித்தார்களாய், இவர்களும் ப2லப்ரதா3ந ஶக்தராகிறார்களித்தனை; அவனை ஒழிந்தவன்று இவர்கள் ஆஶ்ரயிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் ப3லப்ரதா3நம் பண்ணவும் மாட்டார்கள் என்கிறார்.  ஐயன்பாழியில் ஆனை போர்க்கு உரித்தாமன்றாயிற்று, அவ்வோ தே3வதாமாத்ரங்களுக்குப் ப2லப்ரதா3நஶக்தி உள்ளது.

ஆறாம் பாட்டு

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்*
என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்*
என்றுமொ ரியல்வொடு நின்றவெம் திடரே.

      – அநந்தரம், ஸர்வ ப்ரவ்ருத்தி, நிவ்ருத்திகளும் தததீநைகளென்று ஸாமாநாதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் – நிற்றலும் இருத்தலும் கிடத்தலும் திரிதலுமாகிற ப்ரவ்ருத்திக்கு ஆஶ்ரயமான பதார்த்தங்களும், நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்தலர் – நிவ்ருத்திக்கு ஆஶ்ரயமான பதார்த்தங்களுமாய், (இத்தாலே), என்றும் – என்றுமொக்க, ஓர் இயல்வினர் – ஒரு ஸ்வபாவத்தை யுடையவர், என – என்று, நினைவு அரியவர் – நினைக்கைக்கு அரியராயிருப்பர், என்றும் – என்றுமொக்க, ஒரியல்வொடு நின்ற – ஸ்வேதரஸமஸ்த வ்யாவ்ருத்தமான, எம் திடர் – நம்முடைய த்ருடப்ரமாணஸித்தர்.

ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளான தர்மங்களினுடைய தததீநத்வம் சொல்லாநிற்க தர்மிபர்யந்தமாகச் சொல்லிற்று – இத்தர்மங்கள் ஆஶ்ரயத்தை யொழிய ப்ரதிபத்திபண்ணவொண்ணாமையாலும், கீழே தர்மிஸ்வரூபம் தததீநமென்று சொல்லுகையாலும்; தர்மிபர்யந்த ஶப்தமேயாகிலும் தர்மத்திலே தாத்பர்யமாகக்கடவது.  இவ்விடத்தில் ‘ப்ரவ்ருத்தி ஈஶ்வராதீநையானாலும் ஏறிட்ட கட்டி விழுகைக்கு ப்ரேரகர் வேண்டாதாப்போலே நிவ்ருத்திக்கு ததபேக்ஷையுண்டோ?’ என்னில், த்ரி­ஶங்கு நிவ்ருத்திக்கு ப்ரதிபந்தம் காண்கையாலே நிவ்ருத்திக்கும் ஈஶ்வராபேக்ஷையுண்டு.  இப்படி பாபாதிகளில் ப்ரவ்ருத்தருடைய நிவ்ருத்திக்கும் ஈஶ்வராபேக்ஷை உண்டாகையாலே ஸர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் ஈஶ்வராபேக்ஷை யுண்டு.

ஈடு – ஆறாம்பாட்டு. லீலாவிபூ4தியினுடைய ஸ்தி2தியும் ப43வத்ஸங்கல்பாதீ4ந மென்றார் கீழ்; அதினுடைய ப்ரவ்ருத்திநிவ்ருத்தியும் ப43வத்ஸங்கல்பாதீ4
மென்கிறார் இதில்.

(நின்றனரித்யாதி3) நிற்றல், இருத்தல், கிடத்தல், திரிதல் என்றும், நில்லாமை, இராமை, கிடவாமை, திரியாமை என்றும் சொல்லக்கடவதிறே – ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளை; ப43வத்3வ்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களுடையவும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளைச் சொல்லுகிறது இப்பன்மையால்.

ஆக்ருதிவாசகஶப்33ம் வ்யக்தியிலே பர்யவஸித்துநிற்குமாபோலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான ஶப்33மும்; அபர்யவஸாநவ்ருத்த்யா அவனளவிலே சென்றல்லது நில்லாது.

“அருணயா பிங்க3ாக்ஷ்யா ஸோமம் க்ரீணாதி” என்கிறவிடத்திலே கு3ணவிஶிஷ்ட வஸ்து தோற்றாநிற்கச்செய்தேயும், ஆருண்யாம்ஶத்திலே தாத்பர்யமாகிறாப்போலே, ப்ரவ்ருத்திநிவ்ருத்திகளுக்கு ஆஶ்ரயமான வஸ்துக்களினுடைய ஸ்வரூபமும் அவனதீ4நமென்று முன்னே சொல்லுகையாலே ப்ரவ்ருத்திநிவ்ருத்த்யம்ஶத்திலே நோக்கு என்று சொல்லுவாரும் உண்டு; அப்போது ஸாமாநாதி4கரண்யம் ஸித்3தி4யாது; ஆக, ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இஶ்ஶப்33ம் – அவற்றுக்கு ஆஶ்ரயமான சேதநனைக் காட்டி, அவன்தனக்கு ஈஶ்வரனை ஒழிய ப்ருத2க்ஸ்தி2தியாதல் உபலம்ப4மாதல் இல்லாமையாலே அவனளவும் காட்டுகிறது; ஆக, விஶிஷ்ட வஸ்துவையே காட்டுகிறது.  “ப்ரவ்ருத்தி அவனதீ4னையாகிறது வேணுமாகில்; நிவ்ருத்திக்கு அவன் வேணுமோ?” என்று எம்பாரைக் கேட்க “ஸ்வர்க்க3த்தினின்றும் விழுகிற த்ரிஶங்குவை ஶக்திமான் நிற்கச்சொல்ல நிற்கவேண்டிற்றுக் கண்டாயே; அப்படியே நிவ்ருத்திக்கும் அவன் வேணுங்காண்” என்று அருளிச்செய்தார்.

(என்றுமொரியல்வினரென நினைவரியவர்) இப்படி அநேக ப்ரகாரரா யிருக்கையாலே, காலதத்த்வமுள்ளதனையும் ஆராயாநின்றாலும், இன்னபடிப்பட்ட ஸ்வபா4வத்தை யுடையவரென்று நினைக்கவுங்கூட அரியவர்.  (என்றுமொரியல் வொடுநின்ற) வ்ருஷலவிவாஹ மந்த்ரம்போலே என்றும் ஓரியல்வொடு நின்றவராவதென்னென்னில்; என்றும் ஒருபடிப்பட்ட ஸ்வபா4வத்தை யுடையவரென்று நினைக்க அரிதான நிலை என்றும் ஒருபடிப்பட்டிருக்கும் என்கை.  (எந்திடர்) அபௌருஷேயமான வேத3ப்ரதிபாத்3யனாகையால் வந்த தா3ர்ட்4யத்தைச் சொல்லுகிறது.  இப்படி ஸுத்3ருட4ப்ரமாண ஸித்34ரான நிலை தம்முடைய லாப4மாய்த் தோற்றுகையாலே (எந்திடர்) என்கிறார்.

(நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலரான இவையெல்லாம், என்றுமொரியல்வினரென நினைவரியவராய் என்றுமொரியல்வொடுநின்ற எந்திடரானவர்).

ஏழாம் பாட்டு

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை*
படர்பொருள் முழுவது மாய் அவை யவைதொறும்*
உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்*
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.

      அநந்தரம், இந்த ஸாமாநாதிகரண்யம் ஶரீராத்மபாவஸம்பந்த நிபந்தநம் என்கிறார்.

திடம் – (பூதாந்தரங்களிற்காட்டில் சிலகாலம் நிற்கையாகிற) சிக்கனவையுடைத்தான, விசும்பு – ஆகாசமும், எரி – அக்நியும், வளி – வாயுவும், நீர் – ஜலமும், நிலம் – பூமியும், இவை மிசை – இவை ஆஶ்ரயமாகக்கொண்டு, படர் – பரந்த, பொருள்முழுவதும் – பௌதிகபதார்த்தங்களுமெல்லாம், ஆய் – (தானாம்படி அவற்றுக்கு) உபாதாநமாய், அவை அவைதொறும் – அவ்வோபதார்த்தங்கள்தோறும், உடல்மிசை – சரீரத்தில், உயிர் என – ஆத்மா வ்யாபிக்குமா போலே, கரந்து – கரந்து, எங்கும் பரந்து – வ்யாபித்து, (இப்படி ஸகலபதார்த்தங்களிலும் வ்யாப்தனாய்),  சுடர் – ஸ்வத:ப்ராமாண்யௌஜ்ஜ்வல்யத்தாலும், மிகு – மிக்கிருப்பதாய், சுருதியுள் – (கேள்வியாலே வருவிக்கப்படுவதான) ஶ்ருதியினுடைய, உளன் – உள்ளானபொருளாய்க் கொண்டு தோற்றுமவன், இவையுண்ட – (இப்பதார்த்தங்க?ைள ஸம்ஹ்ருதிகாலத்திலே “அத்தா சராசரக்ரஹணாத்” என்று தன்னுள்ளே) விழுங்கின, சுரன் – தேவஶப்தவாச்யன்.  “தம: பரே தேவ ஏகீபவதி” என்னக்கடவதிறே.

விசும்புக்கு அநந்தரம் வளியை எடாதே எரியை எடுத்தது – தைத்திரியோபநிஷத்திலே “ஆத்மந ஆகாஶ: ஸம்பூத:” என்கிற ஆகாஶப்ராதம்யமும், சாந்தோக்யத்தில் “தத்தேஜோஸ்ருஜத” என்கிற தேஜ:ப்ராதம்யமும் தோற்றுகைக்காக.  இத்தால், ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களும் அநுப்ரவேஶநிபந்தநமான அந்தராத்மத்மும் தததீந மென்றதாயிற்று.

ஈடு – ஏழாம்பாட்டு.  (திடவிசும்பித்யாதி3) கீழ் ஸாமாநாதி4கரண்யம் சொன்ன இது – பா4விப்ரதிஸந்தா4நந்யாயத்தாலேயாய், அத்தால் ப2லித்த ஸம்ப3ந்த4ம் ஶரீராத்ம பா4வமென்கிறாராதல்; அன்றியே கீழே ஸாமாநாதி4கரண்யத்தாலும் வையதி4கரண் யத்தாலும் சொன்னார்.  அப்படி சொன்ன ஐக்யத்துக்கு நிப3ந்த4நம் ஶரீராத்மபா4வம் என்கிறாராதல்.

“அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி” என்கிறபடியே த்ரிவ்ருத்க்ருதமான அசித்திலே ஜீவத்3வாரா அநுப்ரவேஶித்து வஸ்துத்வநாமபா4க்த்வங்களுண்டாம்படி பண்ணி இவை ‘தான்’ என்னலாம்படி இருந்தால் “ம்ருதா3த்மகோ க4ட:” என்னும்படியிருக்கையன்றிக்கே, “அந்த: ப்ரவிஷ்டஶ்ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” என்கிறபடியே ஸர்வேஷாம் ஆத்மாவாய், இவற்றை நியமிக்குமிடத்தில் – இந்த ஶரீரத்துக்கு இந்த ஆத்மா தா4ரகனாய் நியாமகனாய் ஶேஷியாயிருக்கிறாப்போலே “யஸ்யாத்மா ஶரீரம்”, “யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம்” என்கிறபடியே தான் இரண்டுக்கும் தா4ரகனாய் நியாமகனாய் ஶேஷியாய் நின்று நடத்திக்கொண்டு போருமென்று கீழ்ச்சொன்ன ஸாமாநாதி4கரண்யத்துக்கு நிப3ந்த4நம் ஶரீராத்மபா4வமென்கிறார்.  ‘வ்ருக்ஷத்திலே தே3வத3த்தன் நின்றான்’ என்றால் அங்கு ஶரீராத்மபா4வமில்லை.  ஜாதிகு3ணங்கள் வ்யக்தியிலே கிடந்தது என்றால் அங்கு ஶரீராத்ம ப4ாவமில்லை.  விஶிஷ்டத்திலேயிறே ஶரீராத்மபா4வம் கொள்ளலாவது.

(திடவிசும்பு) இதுதான் அல்லாதவற்றிலும் ஏறி, த்3ருட4மான எரி, த்3ருட4மான காற்றென்று கிடக்கிறதாகவுமாம்; அன்றிக்கே “ஆத்மந ஆகாஶஸ் ஸம்பூ4த:” என்று சொல்லுகிறபடியே அல்லாத பூ4தங்களுக்கு முன்னேயுண்டாய், அவை அழிந்தாலும் சிலநாள் நிற்கக்கடவதாகையாலே த்3ருட4மான விசும் பென்னவுமாம்; அன்றிக்கே, “சத்வார்யேவ பூ4தாநி” என்கிறவனை நிராகரிக்கிறாராகவுமாம்.  ஆக, பூ4தபஞ்சகங்களையும் சொல்லுகிறது.

(இவைமிசை படர்பொருள் முழுவதுமாய்) இவற்றை அடியாகக் கொண்டு மேல் விஸ்த்ருதமாகாநின்றுள்ள பத3ார்த்த2ங்களெல்லாவற்றையும் உண்டாக்கி.  “ஆய்” என்றது – ஆக்கி என்றபடி.  “ஆய்” என்பானென்னென்னில்; “ப3ஹு ஸ்யாம்” என்கிற தன் விகாஸமேயாகையால்; வைதி3க நிர்தே3ஶமிருக்கிறபடி.

(அவையவைதொறும்) அவ்வோ பதா3ர்த்த2ங்கள்தோறும்.  அவற்றிலே வ்யாபிக்குமிடத்தில் பல தூணுக்காக ஒரு உத்திரம் கிடந்தாப்போலேயன்றிக்கே, ஜாதி வ்யக்திதோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமாபோலே எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வ்யாபித்துநிற்கும்.  இப்படி வ்யாபித்துநிற்குமிடத்தில் (உடல்மிசை உயிரென) இஶ்ஶரீரத்துக்கு ஆத்மா தா4ரகனாய் நியாமகனாய் ஶேஷியாயிருக்குமாபோலே, இஶ்ஶரீராத்மாக்களுக்குத் தான் தா4ரகனாய் நியாமகனாய் ஶேஷியாயிருக்கும்.  (கரந்து) இப்படி இருக்கச்செய்தே “யமாத்மா ந வேத3” என்கிறபடியே அந்யைரத்3ருஶ்யனாயிருக்கும்.  (எங்கும் பரந்து) அந்தர்ப3ஹிஶ்ச வ்யாபித்து.

இதில் ப்ரமாணம் என்னென்னில் (உளன் சுடர்மிகு சுருதியுள்) அபௌரு ஷேயமாய், நிர்தோ3ஷமாய் இருக்கிற வேத3த்தாலே ப்ரதிபாதி3க்கப்பட்டிருக்கும். ப்ரத்யக்ஷாதி3 ப்ரமாணங்கள்போலே ஹேத்வந்தரத்தாற் கழிக்கவொண்ணாத ஒளியை உடைத்தாயிருக்கை.  (சுருதி) பூர்வபூர்வோச்சாரணக்ரமத்தைப் பற்றி உத்தரோத்தரோச்சார்யமாணத்வத்தைப் பற்றச் சொல்லுகிறது.  இத்தால் முதற்பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்த2ங்களுக்கெல்லாம் ப்ரமாணம் நிர்தோ3ஷ ஶ்ருதி என்கிறது.

(இவையுண்ட சுரன்) இவற்றை ஸம்ஹரித்த தே3வன்.  முன்பே ஸ்ருஷ்டி ஸ்தி2திகள் அவனதீ4நமென்று சொல்லிற்று; ஸம்ஹாரம் வேறொரு சேதநாதீ4நமாகில் இது தன்னதல்லாமையால் வரும் ஐஶ்வர்யம் குறையுமிறே; அதுக்காக ஸம்ஹாரமும் அவனிட்ட வழக்கு என்கிறார்; இத்தால் – ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை ப்3ரஹ்மாதி3களே நடத்துகிறார்கள் என்கிற குத்3ருஷ்டிகளை நிரஸிக்கிறார்.  “திடவிசும்பு” என்கிற இத்தால் அவைதி3கமர்யாதை3யிலே நடக்கிற லோகாயதிகனை நிரஸிக்கிறார்.  “உடல் மிசையுயிர்” என்கிற இத்தால் ஸ்வரூபேண தாதா3த்ம்யம் சொல்லுகிறவர்களை நிரஸிக்கிறார்.  “சுடர்மிகு சுருதியுள்” என்கையாலே நாராயணாநுவாகாதி3களில் சொல்லுகிற பரத்வம், லக்ஷ்மீஸம்ப3ந்த4ம் இவையெல்லாவற்றையும் அங்கீ3கரித்தாராகிறார்.

எட்டாம் பாட்டு

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்*
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்*
புரமொரு மூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து*
அரனய னெனஉல கழித்தமைத் துளனே.

      – அநந்தரம், வ்யஷ்டி ஸ்ருஷ்டி ஸம்ஹர்த்தாக்களான ப்ரஹ்மருத்ரர்களும் தததீநர் என்கிறார்.

சுரர் – தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும், அறிவு அரும் – அறியவொண்ணாத, நிலை-நிலையையுடைத்தான, விண்முதல் – ஆகாஶம்முதலாயுள்ள, முழுவதும் – ஸமஷ்டிரூப ஸமஸ்த வஸ்துக்களுக்கும், வரன்முதலாய் – வரிஷ்டமான காரணமாய், அவை – அவற்றை, முழுது உண்ட – நிஶ்ஶேஷமாக உபஸம்ஹரிப்பதும் செய்கையாலே, பரபரன் – (வ்யஷ்டிஸ்ருஷ்டி ஸம்ஹாரகர்த்தாக்களாய்க்கொண்டு) பரரான ப்ரஹ்மருத்ராதிகளுக்கும் பரனானவன்; அரன் – ருத்ரனும், அயன் – ப்ரஹ்மாவும், என – என்று ப்ரஸித்தராம்படி, புரமொருமூன்று – அத்விதீயமான புரத்ரயத்தை, எரித்து – தஹித்தும், அமரர்க்கு – தேவர்களுக்கு, அறிவு இயந்தும் – ஜ்ஞாநத்தை உபதேசித்தும், உலகு – அண்டாந்தர்வர்த்திலோகங்களை, அழித்து – ஸம்ஹரித்தும், அமைத்து – அவற்றை ஸ்ருஷ்டித்தும், உளன் – (அவர்களுக்குள்ளே) ஆத்மாவாய்நிற்குமவன்.

‘விண்’ என்று – “கஸ்மிந்நு கல்வாகாஶ ஓதஶ்ச ப்ரோதஶ்ச” என்று கார்க்கிவித்யையில் சொல்லுகிற கணக்கிலே மூலப்ரக்ருதி யாகவுமாம்.  இயத்தல் – கொடுத்தல்.  இத்தால், ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கலிலே பரத்வஶங்கைபண்ணுகிற குத்ருஷ்டிகளை வ்யாவர்த்திக்கிறது.

ஈடு – எட்டாம்பாட்டு.  (சுரரித்யாதி3) ஶ்ருதிஸித்34ன் அவனே என்றும், ஸர்வ ஶரீரியாய் நிற்கிறான் அவனே என்றும் சொல்லாநின்றீர்.  அல்லாதாரும் ஓரோ கார்யங்களிலே அதி4கரித்து, அவையும் நடத்தியன்றோ போருகிறது; ப்3ரஹ்மா ஸ்ருஷ்டிக்குக் கடவனாய், ருத்3ரன் ஸம்ஹாரத்துக்குக் கடவனாயன்றோ போருகிறது.  இவற்றை ஒரு வ்யக்தியிலே ஏறிட்டால், நீர் பக்ஷபாதத்தாலே சொன்னீராகீரோ? என்ன; ஒரு வ்யக்தியில் பக்ஷபாதத்தாலே சொல்லுகிறேனல்லேன்.  ப்ரமாணக3திகளை ஆராய்ந்தால் அவை அவர்கள்பக்கலில் கிடவாமையாலே சொல்லுகிறேன் என்கிறார்.

(சுரரித்யாதி3) ப்3ரஹ்மாதி3களால் அறியவரிய ஸ்வபா4வத்தை உடைத்தா யிருக்கிற விண்ணுண்டு – மூலப்ரக்ருதி; அது தொடக்கமாக உண்டான எல்லா வற்றுக்கும் வரிஷ்ட2மான காரணமாய்.  “அக்ஷரமம்ப3ராந்தத்4ருதே:” என்று அம்ப3ராந்தம் என்று சொல்லக்கடவதிறே; கா3ர்க்கி3வித்3யையிலே “கஸ்மிந்நு க2ல்வாகாஶ ஓதஶ்ச ப்ரோதஶ்ச” என்று ஆகாஶஶப்33த்தாலே மூலப்ரக்ருதியைச் சொல்லுகையாலே இவரும் ஆகாஶஶப்33த்தாலே மூலப்ரக்ருதியை அருளிச்செய்கிறார்; ப்ரக்ருதிகார்யமான ஆகாஶவாசிஶப்33த்தையிட்டு, காரணமான மூலப்ரக்ருதியை உபசரிக்கிறது.

(வரன் முதலாய்) காரணத3ஶையிலும் ஸூக்ஷ்மரூபேண வ்யாபித்து, தன் மேலே ஏறிட்டுக்கொண்டு நோக்கியும், கார்யமாமளவிலே வந்தவாறே அவ்யக்தம்,  மஹாந், அஹங்காரமென்கிற இவற்றிலும் ஸூக்ஷ்மரூபேண வ்யாபித்தும், காரண பரம்பரையோடு கார்யபரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக்கொண்டு போருகையாலே வரிஷ்ட2மான காரணமாய் என்கிறது.  (அவை முழுதுண்ட) ஸம்ஹாரத்திலும் வந்தால் முழுக்க ஸம்ஹர்த்தாவாகிறானும் அவனே. “யஸ்ய  ப்3ரஹ்ம ச க்ஷத்ரஞ்ச உபே4 ப4வத ஓத3ந:| ம்ருத்யுர் யஸ்யோபஸேசநம்|” யாவனொருவனுக்கு ப்3ரஹ்மக்ஷத்ராத்மகமாயிருக்கிற இதெல்லாம் ஓத3நமா யிருக்கிறது, யாவனொருவனுக்கு ம்ருத்யு உபஸேசநகோடியிலே நிற்கிறான்; “க இத்தா2 வேத3 யத்ர ஸ:||” அப்படியிருக்கிறவன்பெருமை ஒருவர்க்கும் அறிய நிலமோ? என்னாநின்றதிறே.

(பரபரன்) ப்3ரஹ்மாதி3கள் அதி4காரிபுருஷர்களாயிருக்கையாலே நம்மைக் குறித்து அவர்கள் பரராயிருப்பதொன்றுண்டிறே.  “பர: பராணாம்” என்கிறபடியே, அவர்கள் தங்களுக்கும் பரனாயிருக்குமவன்.  “மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா” (8-1-5) என்னக்கடவதிறே.

(புரமித்யாதி3) ருத்3ரன் த்ரிபுரத3ஹநம் பண்ணினானென்றும்; (அமரர்க்கும் அறிவியந்து) அறிவை ஈந்து; அன்றிக்கே, வியத்தல் – கடத்தலும், கொடுத்தலு மாகையாலே அறிவைக்கொடுத்து என்னவுமாம்; ப்3ரஹ்மா தே3வர்களுக்கு ஜ்ஞாநப்ரதா3நம் பண்ணினானென்றும் – ஒரு ப்ரஸித்3தி4யுண்டிறே நாட்டிலே அவர்களுக்கு; அங்ஙனன்றோ? என்னில்; அவற்றை ஆராய்ந்தால் “விஷ்ணுராத்மா ப43வதோ ப4வஸ்யாமிததேஜஸ:| தஸ்மாத்34நுர்ஜ்யாஸம்ஸ்பர்ஶம் ஸ விஷேஹே மஹேஶ்வர:||” என்னாநின்றார்களிறே அத்தையடியறிவார்.  “நண்ணார் நகரம் விழ நனிமலை சிலை வளைவுசெய்து அங்கழல் நிற அம்பது ஆனவனே” (பெரியதிருமொழி 6-1-3) என்னாநின்றார்களிறே – ‘மயர்வற மதிநலமருளப்’ பெற்றவர்கள்; தான் பூட்டின நாணி-தன் கழுத்தை அறுத்துக் கொண்டு போகாதொழியும்போதும் ஈஶ்வரன் அந்தராத்மாவாய் நிற்கவேணும்.  ப்3ரஹ்மா தே3வர்களுக்கு ஜ்ஞாநப்ரதா3நம் பண்ணினானென்றொரு ப்ரஸித்3தி4 யுண்டு; அதுக்கடி ஆராய்ந்தால் “யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம்” என்கிறபடியே அவனடியாயிருக்கும்.  (அரனித்யாதி3) அரன் செய்தான், அயன் செய்தானென உலகழித்தமைத்துளன்.  (சுரரறிவரு நிலை விண்முதல் முழுவதும் வரன்முதலாய் அவை முழுதுண்ட பரபரன் – அரனென புரமொரு மூன்றெரித்து உலகத்தை அழித்து, அயனென அமரர்க்கும் அறிவியந்து உலகத்தை அமைத்து உளன்) “ஏதௌ த்3வௌ விபு34ஶ்ரேஷ்டெ2ள ப்ரஸாத3க்ரோத4ஜௌ ஸ்ம்ருதௌ| ததா33ர்ஶிதபந்தா2நௌ ஸ்ருஷ்டிஸம்ஹாரகாரகௌ ||” என்கிறபடியே ப்ரமாணக3திகளிருந்தபடியால் ஏகதே3ஶஸ்ருஷ்டியும் ஏகதே3ஶஸம்ஹாரமுமே ப்3ரஹ்மாதி3களுக்கு உள்ளது; அதுதானும் இவர்களுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைப் பண்ணுகிறான் ஸர்வேஶ்வரனாகையாலே சொன்னேனத்தனை; ஒரு வ்யக்தியில் பக்ஷபாதத்தாலே சொன்னேனல்லேன் என்று குத்3ருஷ்டிகளை நிரஸிக்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்*
உளனல னெனில் அவனருவம் இவ்வருவுகள்*
உளனென இலனென இவைகுண முடைமையில்*
உளனிரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே.

      – அநந்தரம், ஈஶ்வரதத்த்வத்தை இசையாதே வேதபாஹ்யரில் ப்ரதமகண்யராய் ஸர்வஶூந்யவாதிகளான மாத்யமிக பௌத்தரை நிராகரிக்கிறார்.

உளனெனில் – (ஸ்வமதத்தாலே) உளனெனிலும், உளனலனெனில் – (பரமதத்தாலே) உளனலனெனிலும், உளன் – (ஸத்பாவாஸத்பாவ தர்மங்களுக்கு ஆஶ்ரய விதுர ஸ்த்திதியில்லாமையாலே ப்ரதிஜ்ஞாவேளையிலும்) உளனென்றாய் ஸத்பாவங்கொள்ளவேணும்; (ஆனபின்பு), உளனென இலனென இவை – உளனென்றும் இலனென்றுஞ் சொல்லுகிற இவற்றை, குணமுடைமையில் – குணமாக உடையனாகையாலே, இவ்வுருவுகள் இவ்வருவுகள் – ரூபவத்தாயும் அரூபவத்தாயுமுள்ள இஜ்ஜகத்தில் வஸ்துக்கள், அவனுருவம் அவனருவம் – தனக்கு ப்ரகாஶரூபமாயும் அப்ரகாஶரூபமாயுமுள்ள ப்ரகாரமாயிருக்கிற, இருதகைமையொடு – இரண்டுஸ்வபாவத்தோடும், உளன் – உளனாய், பரந்து – அவற்றை வ்யாபித்து, ஒழிவிலன் – ஒழிவின்றியே நிற்குமவன்.

ஈடு – ஒன்பதாம்பாட்டு.  ஸர்வஶூந்யவாதி3யை நிரஸிக்கிறார்.  நிரஸிக்கிறபடி தானென்னென்னில், பா4ஷ்யத்திலே ஶூந்யவாதி3யை நிரஸித்த க்ரமத்திலே.  இவ்வாழ்வார்தாம் அடியாக பா4ஷ்யகாரர்க்கு அவனை நிரஸிக்கலாம்; இவர்தாம் அவனை நிரஸிக்கைக்கு அடியென்னென்னில்; அதுவும் இவ்வாழ்வார்(தம்) பக்கலிலே உண்டு.  புறம்பே சிலர் ப்3ரஹ்மாதி3கள்பக்கலிலே ஈஶ்வரத்வ ப்ரதிபத்தியைப் பண்ணி, ப்ரமாணங்களையும் அதுக்கு ஈடாக நியமித்துக்கொண்டு வந்து தோற்ற, தாம் அங்கீ3கரித்தவனே ஸர்வஸ்மாத்பரனென்றும், ஜக3த்து அவனுக்கு ஶரீரதயா ஶேஷமென்றும், தத்ப்ரதிபாத3கப்ரமாணம் வேத3மென்றும் தம்முடைய மதத்தை உபந்யஸித்துநின்றார் கீழ்.

இவை இத்தனையும் இல்லை என்னும்போது பூர்வபக்ஷமாக இவற்றை அங்கீ3கரித்து அநுபா4ஷித்துக் கழிக்கவேணுமிறே; அதில் இவற்றை அங்கீ3கரித்து அநுபா4ஷித்து அவனால் இல்லை என்னப்போகாது.  முதலிலே ஶூந்யமென்னில் ஸர்வஶூந்யவாத3ம் ஸித்3தி4யாது.

இனி உன்னைக் கேட்போம்.  நீதான், ஈஶ்வரனுளன் என்கிற சொல்லாலே அவனில்லாமையை ஸாதி4க்கப் பார்க்கிறாயோ? இல்லை என்கிற சொல்லாலே இல்லாமையை ஸாதி4க்கப் பார்க்கிறாயோ? என்ன; இங்ஙன் விகல்பிக்கைக்குக் கருத்தென்? என்ன, உளனென்கிற சொல்லாலே சொன்னால் உனக்கு அபி4மதமான அபா4வம் ஸித்3தி4யாத ஓபாதி, இல்லை என்கிற சொல்லாலும் உனக்கு அநபி4மதார்த்த2மேகாண் ஸித்3தி4ப்பது; ஆனபின்பு நீ இல்லை என்கிற சொற்கொண்டே அவன் உண்மையை ஸாதி4ப்பன்.

லோகத்தில் பா4வா‍பா4வ ஶப்33ங்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம், அப்படி கொள்ளில் நீ நினைக்கிற அர்த்த2ம் உன்னால் ஸாதி4க்கப் போகாது; அங்ஙனே கொள்ளாயாகில் வாத3ந்தன்னில் உனக்கு அதி4காரமில்லை.

(உளனெனில்) ஈஶ்வரஸத்3பா4வம் முதலிலே இல்லை என்கிற நீ, அவன் உண்மைக்கு இசையாயிறே.  நான் உளனென்கிறாப்போலே சொல்லில்தானே உளன்.  (அவனுருவம் இவ்வுருவுகள்) ஈஶிதவ்ய நிரபேக்ஷமாகவன்றிறே ஈஶ்வரன் உளனாவது; அவனுளனாமிடத்தில் “யஸ்யாத்மா ஶரீரம், யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம்” என்கிறபடியே ஜக3த்து அவனுக்கு ஶரீரதயா ஶேஷமாய் உண்டாம்.  உளனலன் என்பாயோ?, அப்போது அபா4வத4ர்மியாய்த் தோற்றும்.

(அவனருவம் இவ்வருவுகள்) அப்போது நாஸ்திஶப்33வாச்யமாய் அவஸ்தா2ந்தர பா4க்காய்க்கொண்டு இவற்றின்  உண்மை தோற்றும்.  “க4டோ‍ஸ்தி” என்றால் வாயும் வயிறுமான ஆகாரம் தோற்றும்.  “க4டோ நாஸ்தி” என்றால் நாஸ்தித்வத4ர்ம விஶிஷ்டமாய்த் தோற்றும்; இங்கில்லை என்றதாகில் வேறோரிடத்திலே உண்டாம்; இப்போதில்லை என்றதாகில் வேறொரு காலவிஶேஷத்திலே உண்டாம்; எங்கும் எப்போதும் ஒருப்ரகாரத்தாலும் க4டமில்லையென்னக் கூடாமையால் நிருபாதி4கநிஷேத4ம் இல்லையிறே.

(உளனென இலனென இவைகுணமுடைமையில்) உளனென்கிற இத்தையும், இலனென்கிற இத்தையும், இவையிரண்டையும் குணமாக உடையனாகையாலே, இவை இரண்டும் இரண்டு த4ர்மமாயிற்று.  (உளனிரு தகைமையொடு) உளனென்கிற சொல்லாலும் இலனென்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபா4வத்தாலும் உளனானான்.  (ஒழிவிலன் பரந்தே) நான் உளனென்கிற சொல்லாலே உண்மையை ஸாதி4த்தேன், நீ இலனென்கிற சொல்லாலே உண்மையை ஸாதி4த்தாய், ஆக இருவருமாக உண்மையை ஸாதி4த்தோம்.  இனி அவன் உளனானால் உளனாமாபோலே ஸவிபூ4திகனாயே உளனாக அமையாதோ? என்கிறார்.

பத்தாம் பாட்டு

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்*
பரந்தஅண் டமிதென நிலவிசும் பொழிவற*
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும்*
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

      அநந்தரம், கீழ்ச்சொன்ன வ்யாப்தியினுடைய ஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.

பரந்த – (எங்குமொக்கப்) பரந்த, தண் – (பூதாந்தரகார்யமான விகாரமில்லாமையாலே ஸ்வதர்மமான) சைத்யத்தையுடைத்தான, பரவையுள் – (காரணஜலரூபமான) ஏகார்ணவத்தின், நீர்தொறும் – (அதிஸூக்ஷ்மமான) ஜலபரமாணுக்கள் தோறும், பரந்த அண்டம் இது என – மஹாவகாஶமான இவ்வண்டத்திலிருக்குமாபோலே, பரந்துளன் – அஸங்குசிதமாக இருக்குமவனாய், (இப்படி), நிலம் – பூமியிலும், விசும்பு – ஊர்த்வலோகங்களிலும், ஒழிவற – ஒன்றொழியாமே, கரந்த – அதிஸூக்ஷ்மமாய், சில்இடந்தொறும் – அல்பமான ஸ்த்தலங்கள்தோறும், இடம் – அந்தஸ்த்தலங்களிலே, திகழ் – ஸ்வயம்ப்ரகாஶதயா உஜ்ஜ்வலமான, பொருள்தொறும் – ஆத்மவஸ்துக்கள்தோறும், கரந்து – (வ்யாப்யவஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து, எங்கும் – எங்குமொக்க, பரந்துளன் – வ்யாப்தனாயிருக்கும், இவையுண்ட கரன் – இவ்வஸ்துக்களை ஸம்ஹார தஶையிலும் தனக்குள்ளே அடக்கித் தான் ஸ்த்திரனாய் நின்றவன்.

இத்தால், காரணதஶையோடு கார்யதஶையோடு வாசியற அதிஸூக்ஷ்மமான சேதநாசேதநங்களிலும் அஸங்குசிதமாக வ்யாபித்திருக்கும் என்றதாயிற்று.

ஈடு – பத்தாம்பாட்டு.  (பரந்த இத்யாதி3) ஜக3த்தை ஶரீரதயா ஶேஷமாக உடையனாய், எங்கும் வ்யாபித்து, தா4ரகனாய், நியாமகனாய், ஶேஷியாய் இருக்கும் என்று கீழே சொன்னார்; இப்படி வ்யாபித்துநின்றால் அசித்ஸம்ஸர்க்க3த்தாலே சேதநனுக்கு ஒரு ஸங்கோசம் பிறவா நின்றதிறே;  அப்படியே அவனுக்கும் இவற்றோட்டை ஸம்ஸர்க்க3த்தாலே ஸங்கோசம் பிறக்குமோவென்னில்; அது செய்யாது; அஸங்குசிதமாக வ்யாபித்துநிற்கும் – என்று வ்யாப்திஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.

(பரந்த தண் பரவை இத்யாதி3) பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் ஜலபரமாணுக்கள்தோறும் வ்யாபித்திருக்கும்.  நீர்ச்செறிவாலே திரண்டு தோற்றுகிற இத்தனையிறே; பரமாணுஸங்கா4தமிறே. “ஜ்யாயாநந்தரிக்ஷாத்” என்கிற வஸ்து, ஜலபரமாணுக்களிலே வ்யாபியாநின்றால் அல்பாவகாஶமாய் நெருக்குப்பட்டிருக்குமோ என்னில் (பரந்த அண்டமிதென) அந்த ஜலபரமாணுக்கள்தான் பரந்த அண்டமிது எனவாயிற்று வ்யாபித்திருப்பது.  ஓரண்ட3த்தைச் சமைத்து, அதிலே ஓர் ஏகாகியை வைத்தாப்போலே இருக்கும்.

இப்படி ஜலபரமாணுக்களிலே வ்யாபித்துவிடுமித்தனையோ என்னில் (நிலவிசும்பு ஒழிவற) பூ4ம்யந்தரிக்ஷங்களிலும் அப்படியே.  இவை மூன்றும் அஞ்சுக்கும் உபலக்ஷணமாய், அஞ்சாலும் ஆரப்34மான அண்ட3த்தளவும் நினைத்து, மேல் கார்யமான பத3ார்த்த2ங்களில் வ்யாபித்திருக்கும்படி சொல்லுகிறது. (கரந்த சிலிடந்தொறும்) இமையோடு இமை பொருந்தும்போதைக் காற்றிலே முடியும்படியான ஸூக்ஷ்மமான அல்பஶரீரங்கள்தோறும்.  (இடந்திகழ் பொருள்தொறும்) அவ்வவ ஶரீரங்களிலே ஜ்ஞாநாநந்த3லக்ஷணமாய்க் கொண்டு மிளிருகிற ஆத்மாக்கள்தோறும்.

(கரந்து) வ்யாப்யபதா3ர்த்த2ங்களுக்குத் தெரியாதபடி, அந்யைரத்ரு3ஷ்டனாய். (எங்கும் பரந்துளன்) சேதநன்  ஶரீரத்திலே வ்யாபிக்கும்போது அதில் ஏகதே3ஶத்திலே நின்று ஜ்ஞாநத்தாலே எங்கும் வ்யாபிக்கக் கடவனாயிருக்கும்; இவன் அங்ஙனன்றிக்கே ஸ்வரூபத்தாலே எங்கும் வ்யாபித்திருக்கும்.  விபு4த்வத்தை அவனுக்குச் சொல்லி, அணுத்வத்தை இவனுக்குச் சொல்லி, இதுக்குள்ளே அவன் குறைவற வ்யாபித்திருக்கும் என்றால் அது கூடுமோ? என்னில், (இவையுண்ட கரனே) சிறுவடிவைக்கொண்டு பெரியவற்றையெல்லாம் தன்வயிற்றிலே வைத்தால் “தயிருண்ட பொன் வயிறு இவ்வேழுலகுமுண்டும் இடமுடைத்தால்” (பெரியதிருமொழி 11-5-3) என்கிறபடியே பின்னையும் அவ்வயிறே இடமுடைத்தாம்படி இருக்கவல்ல ஸர்வஶக்தி, சிறியவற்றிலே குறைவற இருக்கமாட்டானோ? என்கிறார்.  (கரன்) இப்படி ஸுத்3ருட4ப்ரமாணஸித்34ன்.  “இவையுண்ட கரன் – பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்த அண்டமிதெனப் பரந்துளன், நிலவிசும்பொழிவறப் பரந்துளன், கரந்த சில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும் எங்கும் கரந்து பரந்துளன்” என்று அந்வயம்.

பதினொன்றாம் பாட்டு

*கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை*
வரனவில் திறல்வலி அளிபொறை யாய்நின்ற*
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்*
நிரனிறை யாயிரத்து இவைபத்தும் வீடே.

      – அநந்தரம், கீழ் உபபாதித்த பரத்வத்தை நிகமியாநின்றுகொண்டு இத்திருவாய் மொழிக்கு பலம் மோக்ஷமாக அருளிச்செய்கிறார்.

கரம் – (ஸூக்ஷ்மமாகையாலே) கரத்தலையுடைய, விசும்பு – ஆகாஶம், எரி – அக்நி, வளி – வாயு, நீர் – ஜலம், நிலம் – பூமி, இவைமிசை – இவற்றை ஆஶ்ரயமாகவுடைத்தாய், இவற்றுக்கு ஸ்வபாவங்களாயுள்ள, வரன் – ஶ்ரேஷ்ட்டமான, நவில் – ஶப்தம், திறல் – தாஹகத்வம், வலி – பலம், அளி – தண்ணளியான குளிர்த்தி, பொறை – தாரகத்வம், ஆய்நின்ற – இத்தர்மிகளோடு தர்மங்களோடு வாசியறத் தனக்கு ப்ரகாரமாம்படிநின்ற, பரன் – ஸர்வஸ்மாத்பரனுடைய, அடிமேல் – துயரறுசுடரடிவிஷயமாக, குருகூர்ச் சடகோபன் – திருநகரியைப் பிறப்பிடமாகவுடையராய், ஶடரான பாஹ்யகுத்ருஷ்டிகளை வெல்லும் ஸ்வபாவரான ஆழ்வார், சொல் – அருளிச்செய்ததாய், நிரனிறையாயிரத்து – (சொல்லும் பொருளும் இயலும் இசையும் தாளமும் அபிநயமும் ஒன்றுக்கொன்று சேருகையாலே) நிரந்து நிறைந்த ஆயிரத்து, இவைபத்தும் – பரத்வப்ரதிபாதகமான இவைபத்தும், வீடே – (பரனடிமேல்) விடப்பட்டன; ஸமர்ப்பிக்கப்பட்டன என்றபடி.

இவைபத்தும் வீடான மோக்ஷத்தைக் கொடுக்கையாலே ‘வீடு’ என்று காரணத்திலே கார்யோபசாரமாகவுமாம்.  “வால்மீகிர் பகவாந் ருஷி:” என்று அநுபவத்தாலும் ஜ்ஞாநாதிவைபவத்தாலும் அவனுக்குப் பூர்த்திசொன்னாற்போலே ‘குருகூர்ச்சடகோபன்’ என்று ப்ரபந்தகர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்தி சொல்லுகிறது.  ‘நிரனிறை’ என்று அடைவே நிறைந்த என்றுமாம்.  ‘ஆயிரம்’ என்கிற ஸங்க்யாநிர்த்தேஶத்தாலே கர்த்தாவான இவருடைய பகவததீநத்வம் ஸூசிதமாகிறது.  இத்திருவாய்மொழி நாற்சீராய் அளவடி நான்கும் ஒத்திருக்கையாலே கலிவிருத்தம் என்பது.

ஈடு – நிக3மத்தில்-முதற்பாட்டிலே கல்யாணகு3ணயோக3த்தையும், நித்ய விபூ4தியோக3த்தையும் விக்3ரஹவைலக்ஷண்யத்தையும் சொல்லி, இரண்டாம் பாட்டிலே இவற்றுக்கு ஆஶ்ரயமான தி3வ்யாத்மஸ்வரூபம் சேதநாசேதந விலக்ஷணம் என்று, மூன்றாம் பாட்டிலே நித்யவிபூ4தியோபாதி ததீ3யத்வாகாரத்தாலே  அவனுக்கு அந்தரங்க3மாய்த் தோற்றுகிற லீலாவிபூ4தியோக3த்தை அநுப4வித்தார்; நாலாம் பாட்டிலே அந்த லீலாவிபூ4தியினுடைய ஸ்வரூபம் அவனதீ4நம் என்றார்; அஞ்சாம் பாட்டிலே அதினுடைய ஸ்தி2தியும் அவனதீ4னை என்றார்; ஆறாம் பாட்டிலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும் ப43வத3தீ4நம் என்றார்; ஏழாம் பாட்டிலே ஶரீரஶரீரிகளுக்குண்டான லக்ஷணம் ஜக3த்துக்கும் ஈஶ்வரனுக்கும் உண்டாகையாலே, இதுக்கும் அவனுக்கும் சொன்ன ஐக்யத்துக்கு நிப3ந்த4நம் ஶரீராத்மபா4வம் என்றார்;  எட்டாம் பாட்டிலே குத்3ருஷ்டிகளை நிரஸித்தார்; ஒன்பதாம் பாட்டிலே ஶூந்யவாதி3யை நிரஸித்தார்; பத்தாம் பாட்டிலே வ்யாப்தி ஸௌகர்யத்தை அருளிச்செய்தார்; இப்படிகளாலே அவனுடைய  பரத்வத்தை நிஷ்கர்ஷித்தாராய் நின்றார் கீழ்.  இத்திருவாய்மொழியில் அந்வயித்தவர்களுக்குத் தாம் பெற்ற பேறே பேறென்னுமிடத்தை அருளிச்செய்கிறார்.

(கரவிசும்பு) க2ரமான விசும்பு; த்3ருட4மான விசும்பு என்றபடி.  அன்றியே (கரவிசும்பு) கரந்த விசும்பு.  அச்ச2மான விசும்பு என்னுதல்.  “அத்ர க்3ருத்4ர:பததி” என்று நிரூபிக்கவேண்டும்படியாயிருக்குமிறே.  (எரி) தேஜஸ் தத்த்வம்.  (வளி) காற்று.  (நீர்) ஜலம்.  (நிலம்) பூ4மி.  (இவைமிசை) இவற்றின் மேலே உண்டான.  (வரன்) வரனான – ஶ்ரேஷ்ட2மான.  (நவில்….) வரிஷ்ட2மான ஶப்33ம், அக்3நியினுடைய த3ாஹகத்வஶக்தி, காற்றினுடைய மிடுக்கு, ஜலத்தினுடைய தண்ணளி, பூ4மியினுடைய பொறை.  இப்படி ஸஸ்வபா4வமான பூ4தபஞ்சகங்களையும் சொல்லி, இத்தாலே லீலாவிபூ4தியைச் சொல்லிற்றாய், ரஜஸ்தமஸ்ஸுக்களைக் கழித்து நிஷ்க்ருஷ்டஸத்த்வமேயாய் இருக்குமிறே நித்யவிபூ4தி; அதுக்கும் இதுதானே உபலக்ஷணமாய், ஆக உப4யவிபூ4தியுக்தனா யிருக்கிற ஸர்வஸ்மாத்பரன் திருவடிகளிலே.  (இவை பத்தும் பரனடி மேல் வீடு) அவன் திருவடிகளிலே விடப்பட்டன – ஸமர்ப்பிக்கப்பட்டன.  (குருகூர்ச் சடகோபன்) “வால்மீகிர் ப43வாந் ருஷி:” என்னுமாபோலே ஆப்திக்கு உடலாக அருளிச்செய்கிறார்.

நிரல் நிறை என்னுதல், நிரன் நிறை என்னுதல்.  நிரல் நிறை என்ற போது – ஶப்33ங்களும் நிறைந்து, அர்த்த2ங்களும் புஷ்கலமாயிருக்கை.  நிரன் நிறை என்றபோது – நேரே நிறுத்தப்படுகை. “ப்ரமாணைஸ்த்ரிபி4ரந்விதம்”, “பாத3பத்3தோ‍4க்ஷர ஸமஸ்தந்த்ரீலயஸமந்வித:” என்கிறபடியே லக்ஷணங்களிற் குறையாமே எழுத்தும் சொல்லும் பொருளும் அந்தாதியும் க்ரமத்திலே நிறுத்தப்படுகை.

(ஆயிரம்) “காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நமீத்3ருஶை: கரவாண்யஹம்” என்னுமாபோலே. ‘மயர்வற மதிநல மருளப்’பெற்றவராகையாலே, மேலுள்ளதடையத் தோற்றாநின்றது.  வாச: க்ரமவர்த்தித்வாத் அடைவே சொல்லுமத்தனையாகையாலே “ஆயிரம்” என்கிறது.  அன்றிக்கே, ஆயிரமும் சொல்லியல்லது நிற்கவொண்ணாத விஷய ஸ்வபா4வத்தாலே சொல்லுகிறாராதல். (இவை பத்தும் வீடே) இவை பத்தும் பரனடிமேல் விடப்பட்டன வென்னுதல்; அன்றிக்கே, “இச்செய்யடைய நெல்” என்றால் நெல்லை விளைக்குமதென்று காட்டுமாபோலே, இவை பத்தும் வீடென்றது – வீட்டை விளைக்குமென்றபடியாய், மோக்ஷப்ரத3மென்கிறாராதல்.

43வத்ப்ரஸாத3த்தாலே தமக்கு பரத்வஜ்ஞாநம் பிறந்தபடியையும், அந்த ஜ்ஞாநத்துக்குப் ப2லம் மோக்ஷம் என்னுமிடத்தையும், இப்ப்ரப3ந்த4த்தில் ஏதேனும் ஒருபடி அந்வயமுடையார்க்குப் ப2லம் தம்முடைய ப2லமென்னுமிடத்தையும் அருளிச்செய்கிறார்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத்திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3திஉயர்வற

தத்ராதி3மே து ஶதகேத3ஶகே ததா3த்3யே
ஸம்யக்3கு3ணாக்ருதிவிபூ3திஸமேதமீஶம் ந
அத்4யக்ஷயந் பரமநுக்3ரஹதஸ்ததீ3யாத்
தத்3தா3ஸ்யயோஜிதமநா: ஶட3ஜித்33பூ4வ நந                1

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிஉயர்வற

நிஸ்ஸீமோத்3யத்3 கு3ணத்வாத3மிதரஸதயா‍நந்தலீலாஸ்பத3த்வாத்
ஸ்வாயத்தாஶேஷஸத்தாஸ்தி2தியதநபி4தா3வைப4வாத் வைஶ்வரூப்யாத்  |
த்ர்யக்ஷப்3ரஹ்த்மாபா4வாத் ஸத3ஸத3வக3தே: ஸர்வதத்த்வேஷு பூர்த்தே:
பஶ்யந் யோகீ3 பரம் தத்பத3கமலநதாவந்வஶாத்3 ஆத்மசித்தம் ||     1

திருவாய்மொழி நூற்றந்தாதி

உயர்வே பரன்படியை யுள்ளதெல்லாம் தான் கண்(டு)
உயர்வேத நேர்கொண் டுரைத்து — மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன்சொல்
வேராகவே விளையும் வீடு. 1

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.