01-03 12000/36000 Padi

மூன்றாம் திருவாய்மொழி
பத்துடையடியவர்: ப்ரவேஶம்

     மூன்றாந்திருவாய்மொழியில் – முதல் திருவாய்மொழியில் பத்தாம்பாட்டிலே “நீர்தொறும்பரந்துளன்” என்று நாராயண ஶப்தார்த்தத்தை ஸூசிப்பிக்கையாலும், கீழில் திருவாய்மொழியில் பத்தாம்பாட்டில் “வண்புகழ்நாரணன்” என்று நாராயணஶப்தவாச்யதையைச் சொல்லுகையாலும், “தத்வம் நாராயண:பர:” என்றும், “த்யேயோ நாராயணஸ்ஸதா” என்றும் ஸகலஶாஸ்த்ரநிஷ்க்ருஷ்டமான க்ரமத்திலே தத்வஹிதங்கள் நாராயணனே என்றதாயிற்று; இப்படி பரனான நாராயணன் பஜநீயனாமிடத்தில் பஜநஸௌகர்யாவஹமான ஶுபாஶ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதாரப்ரயுக்த ஸௌலப்யத்தை ப்ரகாஶிப்பிக்கைக்காக ததுபபாதகமான நவநீத சௌர்யாபதாநத்தையும், அவதாரக்ருத ஸௌலப்யத்தினுடைய ஔஜ்ஜ்வல்யகரத்வத்தையும், அவதாராஶ்சர்யத்தினுடைய துரவபோகத்வத்தையும், அவதாரக்ருதரூப நாமங்களினுடைய அபரிச்சேத்யதையையும், ஸுலபனானவனுடைய பஜநத்துக்கு உண்டான ப்ராமாணிகத்வத்தையும், அவதாரத்திலும் த்ரிமூர்த்திஸாம்யம் விவேகிக்கை அரிதென்னுமிடத்தையும், அதினுடைய விவேகப்ரகாரத்தையும், விவேகித்து பஜித்தவனுடைய விரோதிநிவ்ருத்தியையும், பஜநீயனுடைய ஸாஜாத்யநிபந்தநமந:க்ஷோபகரத்வத்தையும், அவதாராஶ்சர்யம் அதிகஹநமென்னுமிடத்தையும் உபதேஶித்து, ஏவம்விதனான ஈஶ்வரனை நான் அநுபவிக்கப்பெறுவதே! என்று ப்ரீதராய், ஸர்வப்ரகாரத்தாலும் அநுபவிக்க உபக்ரமிக்கிறார்.

     ஈடு – ஸர்வஸ்‑மாத்பரனென்றார் முதல் திருவாய்மொழியில்.  பரனாகையாலே ப4ஜநீயனென்றார் இரண்டாம் திருவாய்மொழியில்.  “ப4ஜியுங்கோள் என்று பலகாலும் அருளிச்செய்யாநின்றீர்; இருகைமுடவனை ‘ஆனையேறு’ என்றால் அவனாலே ஏறப்போமோ? அப்படியே ஸர்வேஶ்வரனாய் அவாப்தஸமஸ்தகாமனாயிருக்கிற அவனை இந்த க்ஷுத்3ரனான ஸம்ஸாரிசேதநனாலே பற்றப்போமோ?” என்ன; ‘அவ்வானை தானே அவ்விருகைமுடவனுக்கும் ஏறலாம்படி படிந்துகொடுக்குமன்று ஏறத்தட்டில்லையே; அப்படியே இஸ்ஸம்ஸாரி சேதநனுக்கு ப4ஜிக்கலாம்படி அவன் தன்னைக் கொடுவந்து தாழவிட்டு ஸுலப4னாமாகில் இவனுக்கு ப4ஜிக்கத்தட்டில்லையே!’ என்கிறார்.

     அவதாரந்தன்னில் வந்தால், பா4க்3யஹீநர்க்கு ஸஜாதீயப்ரதிபத்திபண்ணி அநர்த்த2ப்பட்டுப் போகவுமாய், பா4க்3யாதி4கர்க்கு “அரியனெளியனாகப் பெற்றோமே!” என்று ஆஶ்ரயிக்கலாம்படி இரண்டுக்கும் பொதுவாயிறேயிருப்பது; “ஸர்வேஶ்வரன் அரியனென்றால் ஸம்ஸாரத்தில் ஆள் பற்றாதென்று அவனெளிமையை உபபாதி3த்துக்கொண்டு போந்தோம்; அதுதானே இவர்களுக்கு ‘இத்தனையெளியனோ’ என்று விடுகைக்கு உடலாயிற்று; அவ்வெளிமைதானே ஆத3ரிக்கைக்கு உடலாயிற்றது உமக்கொருவருக்குமேயிறே” என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தருளினாராம்.

     சில தா4ர்மிகர் ஏரிகல்லினால் சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப்போகாநிற்பர் சிலர்.  விடாயர் அதிலே முழுகி விடாய் தீர்ந்து போகாநிற்பர்கள்; விளக்கை ஏற்றினால் அதிலே விட்டிலென்று சில பதா3ர்த்த2ங்கள் விழுந்து முடிந்து போம்; சிலர் அதினொளியிலே ஜீவியாநிற்பர்கள்.  ‘வேதநல் விளக்’(பெரிய திருமொழி 43-8)கிறே; இவன்தான் ‘ஆயர் குலத்தினில் தோன்றுமணிவிளக்’ (திருப்பாவை-5) கிறே. ‘வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்’(பெருமாள் திருமொழி 10-1)கிறே.

     அவன்தான் ‘அன்றிய வாணனாயிரந்தோளும் துணியவன்று ஆழி தொட்ட’ (பெரிய திருமொழி 43-8)தும் இப்படி வந்து அவதரித்து ஸுலப4னான நிலைதன்னிலேயிறே.  அப்படியே ஶிஶுபாலாதி3கள், பூதநா ஶகட யமளார்ஜுநாதி3களுக்கு எதிரிட்டு முடியவுமாய், அநுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவுமாயாயிற்று அவதாரந்தானிருப்பது.  பலகாலும் “அவனை ப4ஜியுங்கோள்” என்னாநின்றீர்; கண்ணாலே கண்டாலல்லது ப4ஜிக்க விரகில்லை; ப4ஜித்தாலல்லது காண விரகில்லை; ஆனபின்பு ஆஶ்ரயிக்கும்படி எங்ஙனே யென்ன;  “தஸ்மிந் த்3ருஷ்டே பராவரே” என்றும், “விஶதே தத3நந்தரம்” என்றும் சொல்லுகிறபடியே சில வருத்தத்தோடே காட்சியாய்த் தலைக்கட்டும் ஸாத4நப4க்தியையன்று இங்குச் சொல்லுகிறது; காணவேணுமென்னும் ஆஶாலேஶமுடையார்க்கு அவன் எளியனாம்படியையாயிற்று.

     ஸர்வாதி4கன் தாழநிற்குமன்று நிவாரகரில்லை.  “ப3ஹூநி மே வ்யதீதாநி” என்கையாலே அவதாரந்தன்னில் புரையில்லை; இச்சை2தானே யுண்டே; இதுதன்னை அவதார ரஹஸ்யத்திலே தானும் அருளிச்செய்தானிறே – “ஜந்ம கர்ம ச மே தி3வ்யம்” என்று.  “என்னுடைய ஜந்மங்கள் கர்மமடியாகவன்று, இச்சை2யடியாகவாயிருக்கும்;  நாம் பிறவாநிற்கச்செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்; அப்ராக்ருத ஸம்ஸ்தா2நத்தை இதர ஸஜாதீயமாக்கி வந்து பிறப்புதோம்; இவற்றிலே ஒன்றையறிந்தவர்களுக்குப் பின்னை ஜந்மமில்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்கவேணுமோ? ஈரிறையுண்டோ?” என்று அவன் சதுர்த்தா2த்4யாயத்திலே அருளிச்செய்தபடிகளை உபஜீவித்துக்கொண்டு “ராமக்ருஷ்ணாத்3யவதாரங்களைப் பண்ணிக்கொண்டு ஸுலப4னாம்; ஆனபின்பு ஆஶ்ரயணம் கூடும்; ஆஶ்ரயியுங்கோள்” என்கிறார்.

     அவதாரங்களை முன்னோட்டுக்கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லையான க்ருஷ்ணாவதாரத்திலே இழிந்து, அதுதன்னிலும் பரத்வத்தோடு ஒக்கச் சொல்லான நிலைகளைக் கழித்து, நவநீதசௌர்ய நக3ரக்ஷோப4த்திலே அகப்பட்டு இளமணற்பாய்ந்து, “எத்திறம்” என்று மோஹித்துக்கிடக்கிறார்; பரத்வத்தை அநுஸந்தி4த்தார், தெளிந்திருந்து பரோபதே3ஶம் பண்ணினார்; ஸௌலப்4யத்தை அநுஸந்தி4த்தார், “எத்திறம்” என்று மோஹித்துக் கிடக்கிறார்.

முதல் பாட்டு

*பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்*
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம் உரலினொடு இணைந்திருந் தேங்கிய எளிவே.

      – முதற்பாட்டில், ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரனுடைய அவதாரஸௌலப்யத்தை உபதேஶிக்க உபக்ரமித்து, ப்ரதமத்திலே நவநீதசௌர்யாபதாநத்தை அநுஸந்தித்து ஈடுபடுகிறார்.

     பத்துடை – பக்தியையுடைய, அடியவர்க்கு – அடியார்க்கு, எளியவன் – எளியனாய், பிறர்களுக்கு – அதில்லாத பிறர்க்கு, அரிய- கிட்ட அரியனாய், வித்தகன் – வித்தகனாய் (இவை யிரண்டாலும் உகந்து), மலர்மகள் – தாமரைப்பூவைப் பிறப்பிடமாகவுடைய லக்ஷ்மியானவள், விரும்பும் – விரும்பும்படியான, பெறல் அரும் – பெறுதற்கு அரிய, நம் அடிகள் – நம்ஸ்வாமியானவன், மத்து – மத்தாலே, உறு – (உற்று) – வருந்தி, கடை – கடைந்த, வெண்ணெய் களவினில், வெண்ணெயினுடைய களவினில், உரவிடை – மார்வினிடையிலே, ஆப்புண்டு – கட்டுண்டு, உரலினோடு இணைந்திருந்து – உரலோடொக்கச் சலியாதேயிருந்து, ஏங்கிய – (அச்சத்தாலே) ஏங்கின, (குரல் இரங்கமாட்டாத), எளிவு – எளிமை, எத்திறம் – என்னபடியாயிருக்கிறது!

     பத்தியை ‘பத்து’ என்றது – கடைக்குறைத்தல். வித்தகன் – ஆஶ்சர்யபூதன். உரவிடை – மார்பிடை. உரத்த ஏறுபோலச் செருக்க னென்னவுமாம்.  எளிவு – எளிமை.

     ஈடு – முதற்பாட்டில் – எம்பெருமானுடைய ஸௌலப்4யத்தை உபதே3ஶிக்கப் புக்கு அவனுடைய நவநீதசௌர்யசாரித்ரத்திலே அகப்பட்டு அழுந்துகிறார்.

     (பத்து) ப4க்தி.  பத்தென்று – ப4க்தியைக் காட்டுமோவென்னில், “எட்டி னோடிரண்டெனுங்கயிற்றினால் மனந்தனைக்கட்டி” (திருச்சந்த-83) என்னக்கடவதிறே: ஆகையாலே, பத்தென்று ப4க்தியைச் சொல்லுகிறதாய், அதுதன்னிலும் பரப4க்தியையன்று இங்குச் சொல்லுகிறது, ப4க்த்யுபக்ரமமாத்ரத்தை.  உபக்ரமமாத்ரமென்று இத்தை நியமிப்பாரார்? அதினுடைய சரமாவஸ்தை2யைக் காட்டினாலோ? என்னில்; அது ஒண்ணாது; இப்போது இங்கு சொல்லிக்கொண்டு போருகிற இது கு3ணப்ரகரணமாகையாலும், ஸர்வேஶ்வரனுக்கு ஒரு உத்கர்ஷஞ்சொல்லுகை இப்போது இவர்க்கு அபேக்ஷிதமல்லாமையாலும், தந்தாமையொழியச் செல்லாதார்க்கு ஸ்நேஹிக்குமது அல்லாதார்க்கும் உண்டாகையாலும், “மித்ரபா4வேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கத2ஞ்சந” என்னுமவனாகையாலும், உபக்ரமமாத்ரத்தையே சொல்லிற்றாகக்கடவது; ஆஶாலேஶமுடையார்க்குத் தன்னைக் கொடுப்பதாக ப43வது3க்தியுமுண்டாயிருந்ததிறே.  “எதிர்சூழல் புக்கு” (2-7-6) என்றும், “என்னில் முன்னம் பாரித்து” (9-6-10) என்றும் விலக்காமை தேடித் திரிகிறவனிறே.  (உடை) இந்த அப்ரதிஷேதா4த்3வேஷ மாத்ரத்தைக் கனத்த உடைமையாகச் சொல்லுகிறது; “விண்ணுளாரிலுஞ் சீரியர்” (திருவிருத்தம் -79) என்று – இங்கே ப43வத3நுப4வம் பண்ணுவாரை நித்யஸூரிகளிற் காட்டில் கனக்க நினைத்திருக்கும் ப43வத3பி4ப்ராயத்தாலே சொல்லுகிறது.  “இவர்கள் பக்கலிலே இம்மாத்ரமுண்டானால், பின்னை இவர்களுடைய ப4ரத்துக் கெல்லாம் நானே கடவன்” என்றிருக்குமாயிற்று இவன்; ராவணப4வநத்தை விட்டு ஆகாஶத்திலே கிளம்பினபோதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடிகொண்டபடியிறே “அந்தரிக்ஷக3தஶ்ஸ்ரீமாந்” என்றது; “லக்ஷ்மணோலக்ஷ்மி ஸம்பந்ந:” என்றதிறே இளையபெருமாளை;  இதிறே இவனுக்கு நிலைநின்ற ஐஶ்வர்யம்.  இத்தைப் பற்ற (உடை) என்கிறது.  (அடியவர்க்கு) இதுவும் ப43வத3பி4ப்ராயத்தாலே; “த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம” என்று – இன்று கிட்டிற்றொரு குரங்கை நித்யாஶ்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தானிறே.  ஒரு திருவடி திருவநந்தாழ்வானல்ல இவனுக்கு ஶேஷபூ4தராய் அதிஶயத்தைப் பண்ணுகிறவர்கள்;  இவ்விலக்காமையுடையவர்களாயிற்று;  உள்ள கு3ணத்தை அநுப4வித்திருக்குமித்தனையிறே அவர்கள்; கு3ணம் நிறம்பெறுவது இவர்கள் பக்கலிலேயிறே.

     (எளியவன்) அவர்கள் பாபத்தைப் போக்குதல், புண்யத்தைக் கொடுத்தல், தன்னைக் கிட்டலாம்படி இருத்தல் செய்கையன்றிக்கே தன்னை அவர்களுக்கு இஷ்டவிநியோகா3ர்ஹமாக்கி வைக்கும்; தன்னையொழிந்ததொன்றைக் கொடுத்தல், தன்னை அழைத்துக்கொடுத்தல் செய்யான்; “இமௌ ஸ்ம முநிஶார்த்தூ3ல கிங்கரௌ ஸமுபஸ்தி2தௌ” என்கிறபடியே “நான் உங்களடியான்; என்னை வேண்டினபடி ஏவிக்கார்யம் கொள்ளுங்கோள்” என்று நிற்கும்.

     “ப4க்த்யா த்வநந்யயா ஶக்ய அஹமேவம் விதோ4ர்ஜுந” – பீ4ஷ்மாதி3கள் சொல்ல “பரம் ப்3ரஹ்ம பரம்தா4ம” என்று, கனக்கக்கேட்டிருந்தபடியாலே “நீ ஒருவன் ப4க்திக்கு எளியவனாவதென்?” என்ன, “ஒருவன் கறுத்திருக்க ஒருவன் சிவந்திருக்கிறபடி கண்டாயே, அப்படியே எனக்கு இது நிலைநின்ற ஸ்வபா4வம்” என்றானிறே; “ப4க்திக்ரீதோ ஜநார்த3ந:” ஸார்வபெ4ளமனான ராஜபுத்ரன் க்ஷாமகாலத்திலே அல்பத்3ரவ்யத்துக்குத் தன்னை எழுதிக் கொடுத்தால், பின்னை தன் செல்வக்கிடப்புக் காட்டி மீட்கவொண்ணாதாப் போலே, ஸர்வேஶ்வரனும் ப4க்திநிஷ்ட2னுக்குத் தன்னை அறவிலை செய்து கொடுத்தால் பின்னை மேன்மைகாட்டி அகலமாட்டான்; கழுத்திலே ஓலையைக் கட்டி “தூதுபோ” என்னலாம்படி தன்னைக் கையாளாக்கி வைக்கும்.  இவ்வெளிமை உகவாதார்க்கும் பொதுவாகிறதோ? என்னுமித்தைப் பரிஹரிக்கிறது மேல்; (பிறர்களுக்கரிய வித்தகன்) பிறர்களாகிறார் – “இவனைக் கொண்டு கார்யம் கொள்ளோம்” என்றிருக்குமவர்கள்.  (வித்தகன்) விஸ்மயநீயன்.   இங்கு விஸ்மயநீயமென்னென்னில், யஶோதா3தி3களுக்கு ப4வ்யனான நிலைதன்னிலே பூதநாஶகடயமளார்ஜுநாதி3களுக்கு அநபி44வநீயனாயிருக்கை; இன்னமும் பள்ளிகொண்டருளாநிற்கச் செய்தே அர்ஜுநனும் து4ர்யோத4நனும் கூட வர, அர்ஜுநனுக்குத் தன்னைக் கொடுத்து, து3ர்யோத4நனுக்குப் பங்களத்தைக் கொடுத்து விட்டானிறே; நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாகப் பற்றாநிற்க, அல்லாதார் அசேதநக்ரியாகலாபங்களைப் பற்றுகிறாப்போலேயிறே து3ர்யோத4நன்நிலை; ராமாவதாரத்திலும் “ஹிமவாந் மந்த3ரோ மேரு:” இத்யாதி3 “ஶத்ரூணாமப்ரகம்ப்யோபி லகு4த்வமக3மத் கபே:” – ராவணன் ஸபரிகரனாய்க் கொண்டு எடுக்கப்புக்கவிடத்தில் நெஞ்சில் ஶாத்ரவத்தாலே எடுக்கமாட்டிற்றிலன்; திருவடி தனியனாயிருக்கச் செய்தேயும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகைமாலைபோலே எடுத்து ஏறிட்டுக்கொண்டுபோனான்; இங்ஙனன்றாகில் “ராவணனுக்குக் கனக்கவேணும்” என்றும், “திருவடிக்கு நொய்தாக வேணும்” என்றும் அன்று; வஸ்துஸ்வபா4வமிருக்கும்படியாயிற்று இது.

     (மலர்மகள் விரும்பும்) இவ்விரண்டுக்கும் அடி – இவளுடைய சேர்த்தியிறே.  புஷ்பத்தில் பரிமளம்போலே புஷ்பத்தை இருப்பிடமாகவுடையளாய், அதில் பரிமளந்தானொருவடிவுகொண்டாப்போலே இருப்பாளாய்; நாட்டார் பரிமளத்தை விரும்புவர்களாகில், பரிமளந்தான் “தண்ணீர் தண்ணீர்” என்னப் பிறந்தவன்.  (நம்) “உளன் சுடர்மிகு சுருதியுள்” (1.1.7) என்கிற ப்ரமாண ப்ரஸித்3தி4யைப்பற்றச் சொல்லுகிறது நாராயணாநுவாகாதி3களோடே சேர; “ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ” என்னக்கடவதிறே; “உளன்சுடர்மிகு சுருதியுள்” (1-1-7) என்று ஶ்ருதிவழியாலே அங்கீ3கரித்த லக்ஷ்மீஸம்ப3ந்த4த்தை வெளியிடுகிறார்.  (அரும்பெறலடிகள்) பெறுதற்கரிய ஸ்வாமிகள்.  (மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்) பெரியபிராட்டியார் விரும்பும்படி இருக்கைபோலேகாணும் ஸர்வாதி4கவஸ்துவுக்கு லக்ஷணம்.  “அப்ரமேயம் ஹி தத்தேஜ:” என்னக் கடவதிறே.

     (மத்துறு) கீழ்ச்சொன்ன எளிமையை உபபாதி3க்கிறார் மேல்.  மந்த3ரத்தைப் பிடுங்கி, கடலில் நடுநெஞ்சிலே நட்டு, நெருக்கிக்கடைந்து, வெளிகொடு வெளியே தேவர்களுக்கு அம்ருதத்தைக் கொடுத்துவிட்ட மஹாபா3ஹுகிடீர் இப்போது இடைச்சேரியிலே வந்து பிறந்து வெண்ணெய் களவுகாணப்புக்கு, கட்டுண்டு அடியுண்டு நின்றானென்கிறார்.  (மத்துறு கடைவெண்ணெய்) தயிர்ச் செறிவாலே மத்தாலே  நெருக்கிக் கடையப்பட்ட வெண்ணெய்.  “கடை வெண்ணெய்” என்றால் – காலத்ரயத்திலுள்ளத்தையும் காட்டும்.  “முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெய்” (பெரியாழ்வார் திருமொழி 3-1-5) என்னக்கடவதிறே; இங்கு வர்த்தமாநத்திலே ஒரு ஸௌகர்யமுண்டாகையாலே,  “கடையாநிற்கச் செய்தே, பசியராயிருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல் வெந்தது கொத்தையாக வாயிலிடுமாபோலே, கடையப் பற்றாமல் நடுவே அள்ளி அமுது செய்யும்படியைச் சொல்லுகிறது” என்று பிள்ளான் பணிக்கும்படி.  (களவினில்) கடைகிற பராக்கிலே நிழலிலே ஒதுங்கி, சாபலத்தாலே அள்ளி அமுதுசெய்தான் போலே காணும்.  (களவினில்) களவிடையாட்டத்தில்.  உபக்ரமஸமயத்திலேகிடீர் அகப்பட்டது.  (உரவிடையாப்புண்டு) உரம் என்று – மார்வு.  (மார்விடையிலே என்றபடி.)  “பொன்பெயரோன்றனது உரம் பிளந்து” (பெரியதிருமொழி (4-2-7) என்னக் கடவதிறே. பெரிய பிராட்டியார் நெருக்கி அணைக்கும் மார்வைக் கிடீர் கயிற்றாலே  நெருக்கிக் கட்டக் கட்டுண்டது.  அன்றியே, மிடுக்கையுடைய ருஷப4ம்போலே இருக்கிறவன் கிடீர் கட்டுண்டான்.  (உரவிடையாப்புண்டு) உத3ரவிடையாப்புண்டு.  உத3ரம் என்கிற இத்தை “உரம்” என்று இடைக்குறைத்தலாய்க் கிடக்கிறது.  தா3மோத3ரன் என்று பிள்ளை பெற்றுப் பேரிடும்படியிறே கட்டுண்டது.  “தா3ம்நா சைவோத3ரே ப3த்3த்4வா ப்ரத்யப3த்4நாது3லூக2லே” என்றும், “யதி3 ஶக்நோஷி க3ச்ச2  த்வமதிசஞ்சலசேஷ்டித | இத்யுக்த்வாத2  நிஜம் கர்ம ஸா சகார குடும்பி3நீ ||” என்றும் சொல்லுகிறபடியிறே எளியனாயிருக்கும்படி; தான் தாயான பரிவுதோற்ற இவனைக் களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓருரலோடே  அடுத்துக்கட்டி, மறுகண்ணியும் பொத்தி “துருதுருக்கைத்தனமடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க்காணாய்!” என்று உறுக்கி விட்டால் போகமாட்டாதேயிருக்கும்; “பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே” என்று ஓதப்படுகிற வஸ்து இவளுக்கு எளியதானபடியிறே இங்ஙனே சொல்லலாகிறது; “ஸம்ஸாரப3ந்த4 ஸ்தி2தி மோக்ஷ ஹேது”வான தானிறே இப்படி கட்டுண்டிருக்கிறான்; ப்3ரஹ்மாதி3களைத் தன் ஸங்கல்பத்தாலே கட்டுவது விடுவதாகிறவனிறே இப்போது அப3லை கையாலே கட்டுண்டிருக்கிறான்; “த்யக்த்வா தே3ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி” என்கிறபடியே நம்முடைய கட்டை அவிழ்க்கவிறே தான் கட்டுண்டிருக்கிறது.  (உரலினோடு இணைந்திருந்து) “உரலுக்கு ஒரு வ்யாபாரக்ஷமதை உண்டாமன்று தனக்கு ஒரு வ்யாபாரக்ஷமதை உள்ளது”  என்று தோற்ற இருந்தபடி.  (ஏங்கிய) உரலிற்காட்டில் வ்யாவ்ருத்தி இத்தனையே காணும்! அழப்புக்கவாறே “வாய் வாய்” என்னுமே; பின்னை அழமாட்டாதே ஏங்கியிருக்குமித்தனை. எளிவுண்டு – எளிவந்தபடி.  (எத்திறம்) பிரானே! இதென்ன ப்ரகாரம்! இன்னம் மேன்மை தரைகாணலாம்; நீர்மை தரைகாணவொண்ணாதாய் இருந்ததீ! “உயர்வற உயர்நல முடையவன்” (1-1-1) என்கிற மேன்மையிலே போவேன் என்கிறார்; நியாம்யனாயிருக்கிற இருப்பில் நியந்தாவாய் இருக்கிற இருப்புப்பேசலாய் இருந்ததீ! பேசப்புக்க வேத3ங்களும்  “யதோ வாசோ நிவர்த்தந்தே” என்றதும் மேன்மையிலேயிறே; நிலமன்றென்கைக்கும் நிலமன்றிறே நீர்மை.  இத்தனை தாழ நில்லாமையாலே ஸம்ஸாரிகள் பக்கல் காணவொண்ணாது;  பரத்வத்தில் இந்நீர்மை இல்லை; இதென்ன ப்ரகாரம்! என்கிறார்.  பெரியவன் தாழ்ச்சியாகையாலே பொறுக்கமாட்டுகிறிலர்.

இரண்டாம்பாட்டு

எளிவரும் இயல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்*
ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்*
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்*
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே.     

      – அநந்தரம், ப்ரஸக்தமான அவதார வைலக்ஷண்யத்தை உபதேஶிக்கிறார்.

     (ஜந்மவ்ருத்தங்களில் ஏற்றத்தாழ்வுகள் பாராமையாலே), நிலை – ஒருநிலையும், வரம்பு – ஒருநியதியும், இல – இல்லாத, பல பிறப்பாய் – பலவகைப்பட்ட பிறப்பையுடையனாய், முதலிலகேடில முழுநலம் – முதலுமின்றியே முடிவுமின்றியே யுள்ள முழுநலம், ஒளிவரும் – ஒளிவரும்படியான, எளிவருமியல்வினன் – எளிவருதலை இயல்பாகவுடையனாய், (அவ்வளவிலும்), வீடாம் – வீடாகிற, தெளிதரும் – தெளிவைத்தரும், அது நிலைமை – அந்த நிலைமையை, முழுவதும் – அடங்கலும், ஒழிவிலன் – ஒழிவிலனான, இறையோன் – ஸ்வாமியானவன், அளிவரும் – உபகாரஶீலமான, அருளினோடு – அருளோடே, அமைந்து – சமைந்து, அகத்தனன் – (அடியவர்க்கு) அகத்தனனாய், புறத்தனன் – (அல்லாதார்க்குப்) புறத்தனனாயிருக்கும்.  நலம் – கல்யாணகுணங்கள்.  இத்தால் அவதாரதஶையிலே ஐஶ்வரமான ஸ்வபாவங்களுக்கு ஔஜ்ஜ்வல்யம் மிகுந்திருக்கு மென்றதாயிற்று.

     ஈடு – இரண்டாம்பாட்டு.  “எத்திறம்” என்று ஆறு மாஸம் மோஹித்துக் கிடந்தார் என்று ப்ரஸித்34மிறே;  இவர் மோஹித்துக் கிடக்க – பெருமாளும் பிராட்டியும் பள்ளிகொண்டருளினவிடத்தை ஸ்ரீகு3ஹப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற் போலே ஸ்ரீமது4ரகவி ப்ரப்4ருதி ஸஜ்ஜநங்களடங்கலும், ப2லிதமான வ்ருக்ஷத்தைப் பக்ஷிஜாதங்கள் மொய்த்துக்கொண்டு கிடக்குமாபோலே இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள்;  “மந்யே ஸாப4ரணா ஸுப்தா ஸீதா‍ஸ்மிந் ஶயநோத்தமே” – வழி நடந்த விடாயாலே ஆப4ரணங்கள் கழற்றாதேயாயிற்றுப் பள்ளிகொண்டது.  “தத்ர தத்ர ஹி த்3ருஶ்யந்தே ஸக்தா: கநகபி3ந்த3வ:” – பசியருக்குத்தந்தாம் ஜீவநத்தைப் பகுந்து இடுவாரைப்போலே, அந்த ஸ்ரீப4ரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக் கொண்டு கிடந்த இடத்தைக் காட்டுகிறானிறே. அவ்விடத்தைக் கண்டவாறே, “ஶத்ருக்4நோ‍நந்தரஸ்தி2த:” என்னும்படி அவ்விடத்தைக்காணா, மோஹித்துக் கிடந்தானாயிற்று ஸ்ரீப4ரதாழ்வான்;  அப்படியே மோஹித்துக்கிடந்த இவர் “சிரேண ஸம்ஜ்ஞாம் ப்ரதிலப்4ய சைவ விசிந்தயாமாஸ விஶாலநேத்ரா” என்கிறபடியே அநுப4விதாக்கள் பா4க்3யத்தாலே காலமுணர்த்த உணர்ந்தார்.

     ‘நல்லார் நவில் குருகூரிறே’ (திருவிரு.100); ஸத்துக்களடங்கலும் இவரைப்பற்றிப் படுகாடு கிடந்தது; உணர்ந்த அநந்தரம் “நான் இங்கு சொல்லிற்றென்” என்று கேட்டார்; “பத்துடையடியவர்க் கெளியவன்” என்று ப்ரஸக்தாநுப்ரஸக்தமாகச் சிலவற்றைச் சொல்லா, ‘எத்திறம்’ என்ற மோஹித்துக் கிடந்தீர்” என்றார்கள்; “தப்பச் சொன்னோம், அழித்து ப்ரதிஜ்ஞை பண்ணவேணும்” என்கிறார் இரண்டாம் பாட்டில்.  ஆவதென்னென்னில்; பரோபதே3ஶம் பண்ணப்புக்குத்  தாமநுப4வித்தார் முதற்பாட்டில்.  இப்பாட்டுத் தொடங்கி பரோபதே3ஶம் பண்ணுகிறார்.  கீழ் ப்ரஸ்துதமான ஸௌலப்4யத்தை ஸப்ரகாரமாக அருளிச்செய்கிறாரிதில்.

     (எளிவருமியல்வினன்) எளிமையை இயல்வாக ஸ்வபா4வமாக உடையவன்; ஸ்நேஹிகளுக்கு ஸ்நேஹியாயிருக்குமென்னுமிது குற்றமன்றோ.  எல்லார்க்கும் காதா3சித்கமாக எளிமை கூடும்; இவனுக்கு எளிமை ஸ்வரூபமென்கிறார்.  (நிலைவரம்பில) “இன்ன அவதாரம், இன்ன சேஷ்டித மென்றில்லை” என்று பூர்வாசார்யர்கள் நிர்வாஹம்.  ப4ட்டர் இவ்விரண்டையும் நிலையில்லாமையிலே கொண்டு, “இனி வரம்பில்லாமையாவது – அவதரித்து எளியனாய் நின்ற நிலைதன்னிலே பரத்வம் தோற்ற நிற்கிலும் நிற்கும்” என்று.  ஸாரத்2யவேஷத்தோடே தாழநிற்கச்செய்தே ஸ்ரீவிஶ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்ரார்த்த2மாகப் போகாநிற்கச் செய்தே க4ண்டாகர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு திருநக்ஷத்ரத்திலே கோ3வர்த4நகி3ரியை த4ரித்துக் கொண்டு நின்றும் செய்தவை.  இத்தாற் சொல்லிற்றாயிற்றது – ஒன்றிலும் ஒரு நியதியில்லை; ரக்ஷணத்துக்கு உறுப்பாமத்தனையே வேண்டுவது; ஏதேனுமாகவமையும் இவனுக்கு என்கை.

     (பல பிறப்பாய்) தெளிவுடைய தான் சொல்லும்போதும் “ப3ஹூநி” என்னும்.  யதா2பூ4தவாதி3யான வேத3ம் “ப3ஹுதா4 விஜாயதே” என்னும்.  அவன் கொடுத்த அறிவுகொண்டு சொல்லுவார் “பல பிறப்பு”  (1.3.2) என்பர்கள்.  (பிறப்பாய்) “பரார்த்த2மாகத் தாழநின்றோம்” என்று தன்பக்கலிலும் புரையின்றிக்கேயிருக்கை; “ஆத்மாநம் மாநுஷம் மந்யே”, “அஹம் வோ பா3ந்த4வோ ஜாத:”

     (ஒளிவருமுழுநலம்) அபஹதபாப்மத்வாதி3கள் ஜீவாத்மாவுக்கு முண்டிறே; இங்ஙனேயிருக்கச்செய்தே ஜந்மநிப3ந்த4நமான திரோதா4நம் பிறவாநின்றதிறே ஸ்வரூபத்துக்கு.  அவனுக்கு ஜந்மத்தால் வரும் விகாராதி3களுண்டு; இவன் தன்னைத் தாழவிட்டுப் பிறக்கப் பிறக்க, கல்யாணகு3ணங்கள் புகர்பெற்றுவாராநிற்கும்.  “ஸ உ ஶ்ரேயாந் ப4வதி ஜாயமாந:”. கர்மநிப3ந்த4ந ஜந்மமாகிலிறே பிறக்கப் பிறக்கப் புகர் அழிவது; அநுக்3ரஹமடியாக வருகிற ஜந்மமாகையாலே புகர்பெற்றுவாராநிற்கும்.  “ஸ ஏவ ஶ்ரேயாந்” என்றபடி.

     அக்கு3ணங்கள்தானிருக்கும்படியென்னென்றால் (முதலில கேடில) ஒருநாள் வரையிலே தோன்றி ஒருநாள் வரையிலே முடியுமவையன்றே; ஸ்வரூபாந்தர்க3தமாயுள்ளன.  (வீடாந்தெளி இத்யாதி3) இக்கு3ணம்  “ஒளிவருமுழுநலம்” என்ற இதில் புகாதோவென்னில்; மோக்ஷப்ரத3த்வமும் தனியே சொல்லவேண்டுவதொரு கு3ணமாகையாலே சொல்லுகிறார்;  அவதாரத்துக்கு ப்ரயோஜநம் இதுவேயிறே.  (வீடாமித்யாதி3) மோக்ஷமாகிற தெளிவு – பரமபத3ம்.  அத்தைத்தரும் ஸ்வபா4வம் என்றும் ஒத்திருக்குமவன்; அவன் இங்கே வந்து அவதரிக்கிலும் ஶோகமோஹங்களைப் பண்ணும் இவ்விடம்; இவன் அங்கே செல்லிலும் தெளிவைப்பண்ணும் அவ்விடம்.  “தெளிவிசும்பு” (9-7-5) என்னக்கடவதிறே. (முழுவதுமொழிவிலன்) கீழ்ச்சொன்ன இரண்டையும் கூட்டிச்சொல்லுகிறார்.

     (இறையோன்) மோக்ஷப்ரத3த்வம் ஈஶ்வரனுக்கே  உள்ளதொன்றிறே.  அவதரிக்கச் செய்தே ஈஶ்வரத்வத்தில் குறையாதேநிற்கை.  (அளிவருமருளினோடு) குளிர்ந்து பக்வமான அருளோடே.  நிர்ஹேதுகமான அருளோடே.  (அகத்தனன்) ஆஶ்ரிதர்க்கு, கழுத்திலே ஓலைகட்டி “தூதுபோ” என்னலாம்படியிருக்கும்.  (புறத்தனன்) அநாஶ்ரிதர்க்கு, அந்நிலைதன்னிலே கிட்டவொண்ணாதபடியிருக்கும்.  (அமைந்தே) இப்படி சமைந்து.

     “இறையோன் அளிவருமருளினோடகத்தனன் புறத்தனனாயமைந்து, முதலிலகேடிலவா மொளிவருமுழுநலம், வீடாந்தெளிதருநிலைமையது முழுவதுமொழிவிலனாய், நிலைவரம்பில பலபிறப்பாய், எளிவருமியல்வினன்” என்று அந்வயம்.

மூன்றாம் பாட்டு

அமைவுடை அறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து*
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்*
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்*
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.

      – அநந்தரம், அவதாராஶ்சர்யம் ஒருவர்க்கும் அறியப்போகா தென்கிறார்.

     அமைவு உடை – சமைவை உடைத்தான, அறம் நெறி – தர்மத்தினுடைய வரலாறு, முழுவதும் – எல்லாவற்றிலும், உயர்வற உயர்ந்த – மிகவுமுயர்ந்த, அமைவு – சமைவை, உடை – உடையவான, முதல்கெடல் – ஸ்ருஷ்டிஸம்ஹாரங்கள், இடையொடிவு – இடையொடிவான அவாந்தரஸம்ஹாரம் இவை, அற – மிகவும், நிலமதுவாம் – நிலமான, அமைவு – சமைவை, உடை – உடையரான, அமரரும் – ப்ரஹ்மாதி தேவர்களும், யாவையும் – எல்லா அசேதநங்களும், யாவரும் – எல்லாச்சேதநங்களும், தானாம் – தானேயாம்படியான, அமைவு – சமைவை, உடை – உடையனான, நாரணன்-  நாராயணனுடைய, மாயையை – அவதாராஶ்சர்யத்தை, யார் அறிபவர் – யார் அறியவல்லார்? அமைவு – நிரப்பம்.

     ஈடு – மூன்றாம் பாட்டு.  எளியன் என்றார்; எளிமையை ஸப்ரகாரமாக அருளிச் செய்தார்; இவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர்! என்கிறார் இதில்.

     (அமைவுடையறநெறி இத்யாதி3) ஒரு த4ர்மத்தை அநுஷ்டி2யாநிற்கச்செய்தே, இப்போதே ப2லம் பெறாதொழியிலும் ஒழியும்; இடையிலே சில விக்4நங்கள் வரிலும் வரும்; அங்ஙனன்றியே, சக்ரவர்த்தி, நாலாஹுதி பண்ணி நாலு ரத்நத்தை எடுத்துக்கொண்டாற்போலே ப2லத்தோடே ஸந்தி4ப்பிக்கக்கடவ த4ர்ம மார்க்க3ம் எல்லாவற்றாலும், “உயர்வறவுயர்நலமுடையவன்” (1-1-1) என்று ஸர்வேஶ்வரன் கு3ணங்களால் உயர்ந்திருக்குமாபோலே, “இதுக்கு இவனுக்கு அவ்வருகு ஒருவருமில்லை” என்னும்படி சமைந்திருக்கை.

     (அமைவுடை முதல் இத்யாதி3) ப்3ரஹ்மா ஜக3த்ஸ்ருஷ்டி பண்ணினால் “ஸர்வேஶ்வரனோ!” என்று ஶங்கிக்கவேண்டும் படியிருக்கை.  இப்படி சமைவையுடைத்தான ஸ்ருஷ்டி என்ன, அப்படியிருந்துள்ள ஸம்ஹாரம் என்ன, இடையொடிவு என்ன, இடை – இடையிலே – நடுவே, ஒடிவு – ஸம்ஹாரம்; அவாந்தர ஸம்ஹாரம் என்றபடி; இவை (அறநிலமதுவாம்) இவை தங்களுக்கு நிலையிட்டுக்கொடுத்த ஸர்வேஶ்வரனையும் மறுத்துக் கேள்விகொள்ள  வேண்டாதபடி மிகவும் விதே4யமாம்படி சமைந்த ப்3ரஹ்மாதி3களும்.  (யாவையும்) அசேதநங்களும். (யாவரும்) சேதநரும்.

     (தானாம் அமைவுடை நாரணன்) சேதநாசேதநங்களெல்லாம் தான் என்கிற சொல்லுக்குள்ளே ப்ரகாரமாய் அந்வயிக்கும்படியான சமைவையுடையனாகையாலே நாராயணன் என்னும் திருநாமத்தையுடையவனுடைய. (மாயையை அறிபவர் யாரே) இவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலமல்ல என்கிறார்.  ப்ரகாரியான தான் – ப்ரகாரமான வஸ்துவிலே ஒன்று, “என் மகன்” என்று அபி4மாநிக்கும்படி வந்து பிறந்த இவ்வாஶ்சர்யம் ஒருவர்க்கும் நிலமல்ல என்கிறார்.  (தானாம் அமைவுடை நாரணன்) ஒருவன் ஒருவனை “உனக்கு ஜீவநம் என்ன வேணும்” என்றால், தன் புத்ராதி3களையும்  கூட்டிக்கொண்டு “எனக்குக் கலநெல்லுவேணும்” என்னா நின்றானிறே; அப்படியே இவை அடங்கலும் தன் அஹம்ஶப்33த்துக்குள்ளே அடங்கி, தான் இவற்றுக்கு அபி4மாநியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.

     (அறிபவர் யாரே) நித்யஸூரிகள் பரத்வாநுப4வம் பண்ணுகையாலே அறியார்கள்; ஸம்ஸாரிகள் நாஸ்திகராகையாலே அறியார்கள்; ப்3ரஹ்மாதி3கள் தந்தாம் அறிவாலே அறியவிருக்கிறவர்களாகையாலேஅறியார்கள்; ‘மயர்வற மதிநலமருளப்’ பெற்றவர்கள் மோஹித்துக் கிடப்பர்கள்; ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான தானும் “ஜந்ம கர்ம ச மே தி3வ்யம்” என்னுமாகையாலே ஒருவர்க்கும் நிலமல்ல என்கிறார்.

நான்காம் பாட்டு

யாரும் ஓர் நிலைமைய னெனஅறி வரிய எம்பெருமான்*
யாரும் ஓர் நிலைமைய னெனஅறி வெளிய எம்பெருமான்*
பேரும் ஓராயிரம் பிறபல வுடைய எம்பெருமான்*
பேரும் ஓருருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே.

      அநந்தரம், அவதாரக்ருதமான அஸங்க்யேயரூப நாமங்களையுடையவனை ப்ரதிகூலர் அறியமாட்டாதே, அநுகூலர் அறியவல்லராய், நித்யவிவாதமாய் நடக்கு மென்கிறார்.

     பேரும் – (விக்ரஹவாசகமான) திருநாமங்களும், பிற – (அந்தநாமவாச்யங்களான) மற்ற விக்ரஹங்களும், பல ஆயிரம் உடைய – அநேகமாயிரம் உடையனாய்க்கொண்டு தோற்றி, எம்பெருமான் – எனக்கு நாதனானவனாய், யாரும் – எத்தனையேனும் ஜ்ஞாநாதிகளால் அதிகராகிலும் அநாஶ்ரிதரால், ஓர்நிலைமையன் – ஒருபடியையுடையன், என – என்று, அறிவரிய – அறிய அரியனாம்படியைக்காட்டி, எம்பெருமான் – என்னை அடிமைகொண்ட நாதனாய், யாரும் – எத்தனையேனும் அறிவிலிகளாகிலும் ஆஶ்ரிதர்க்கு, ஓர்நிலைமையன் – வ்யவஸ்த்திதஸ்வபாவன், என – என்று, அறிவெளிய – அறிய எளியனாம்படியைக்காட்டி, எம்பெருமான் – என்னை அடிமைகொண்ட நாதனானவனுக்கு, ஓர்பேரும் – ஒருபேரும், ஓருருவமும் – ஒருரூபமும், உளதில்லை – உண்டாயிருப்பதில்லையென்று ப்ரதிகூலர்க்கும், இலதில்லை – ஒருபேரும் ஒருரூபமுமில்லையாயிருப்பதில்லையென்று அநுகூலர்க்கும், பிணக்கு – நித்ய பிணக்காயிருக்கும்.

     இங்கு பலவிடத்திலும் “எம்பெருமான்” என்றது – அந்த அந்த உபகாரங்களாலுண்டான உகப்பாலே.

     ஈடு – நாலாம் பாட்டு.  இப்படியிருக்கிற அவதார ஸௌலப்4யம் ஒருவர்க்கும் அறிய நிலமன்றோ? என்னில், ஆஶ்ரிதர்க்கு அத்யந்த ஸுலப4னாய் அநாஶ்ரிதர்க்கு அத்யந்த து3ர்லப4னாயிருக்கும் என்கிறார்.

     (யாரும்) எத்தனையேனும் அதிஶயிதஜ்ஞாநராயிருக்குமவர்களே யாகிலும், ஸ்வயத்நத்தாலே காணுமன்று “இன்னபடிப்பட்டிருப்பதொரு ஸ்வபா4வத்தை யுடையவன்” என்று அறிய ஒண்ணாத என் ஸ்வாமியானவன்.  (யாரும்) இந்த யச்ச2ப்3தம் தாழ்ச்சிக்கு எல்லையிலே நிற்கிறது.  ஜந்மவ்ருத்தஜ்ஞாநங்களால் ஓர் அளவில்லையேயாகிலும் தானேகாட்டக்காணுமவர்களுக்குத் தன் படிகளெல்லாம் அறியலாயிருக்கும்.  எங்கே கண்டோமென்னில், ஒரு குரங்கு, வேடச்சி, இடைச்சி இவர்களுக்கு எளியனாயிருக்கக்கண்டோமிறே.  (எம்பெருமான்) ஆஶ்ரிதர்க்கு எளியனாய் அநாஶ்ரிதர்க்கு அரியனான என் நாயன் நிலை இருந்தபடியென்! என்று எழுதிக்கொடுக்கிறார், “நமோ நமோ வாங்மநஸாதிபூ4மயே நமோ நமோ வாங்மநஸைகபூ4மயே” என்றாப்போலே.

     (பேருமோர் ஆயிரம்) அநுப4விதாக்களுக்கு இழிந்த இடமெல்லாம் துறையாம்படி அநேகம் திருநாமங்களை உடையனாயிருக்கை.  கு3ணத்துக்கு வாசகமாயும் ஸ்வரூபத்துக்கு வாசகமாயும் வருமவற்றுக்கு ஓர் எல்லை யில்லையிறே.  “தே3வோ நாமஸஹஸ்ரவாந்” என்கிறபடியே.  (பிற பலவுடைய) அந்த நாமத்3வாரா காணும் அநேகம் திருமேனிகளை உடையனாயிருக்கை.  “பிற” என்ன – திருமேனியைக் காட்டுமோவென்னில், “நாமரூபஞ்ச பூ4தாநாம்”, “நாமரூபே வ்யாகரவாணி” என்று நாமத்தோட சேர ரூபத்தையும் சொல்லக்கடவது.  அவ்வளவேயல்ல; இவர்தாமும் இத்தை அநுபா4ஷிக்கிற இடத்திலே “பேருமோருருவமும்” என்று அருளிச்செய்து வைத்தார்.

     (பேருமோருருவமும்) இவற்றிலே ஒரு திருநாமமும், ஒரு விக்3ரஹமும்.  (உளதில்லை) அநாஶ்ரிதர்க்கு ஸ்தூ2ல ப்ரதிபத்தியும் அரிதாயிருக்கும்.  (இலதில்லை) ஆஶ்ரிதர்க்கு எல்லாம் காணலாமாகையாலே இலதில்லை.  (பிணக்கே) ஆஶ்ரிதர் எல்லாம் காண்கையாலே மங்க3ளாஶாஸநம் பண்ணி நிற்பர்கள்; அநாஶ்ரிதர் இதை இல்லை என்றிருக்கையாலே முதலிலே கிட்டார்கள்; இரண்டுக்கும் நடுவே வஸ்து நித்யமாகப் பெற்றோமே! என்று தாம் இனியராகிறார்.  (அன்றியே, (பேருமோருருவமுமுளது) திருநாமமும், திருநாமத்துக்கு வாச்யமான திருமேனியும் நித்யம்.  (இலது இல்லை) (இல்லை பிணக்கே) இவ்விடையாட்டத்தில் விவாத3ம் வேண்டா என்கிறார்.)

ஐந்தாம் பாட்டு

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த*
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்*
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு*
உணக்குமின் பசையற அவனுடை யுணர்வுகொண் டுணர்ந்தே.

      அநந்தரம், இப்படி ஸுலபனானவனை ஆ­­ஶ்ரயிப்பது அவன் அருளிச்செய்த கீதோபநிஷத்ப்ரமாணஸித்தமான பஜநத்தாலே யென்கிறார்.

     அறுவகைச்சமயமும் பிணக்கற – ஆறுவகைச்சமும் (தன்னில் தானும் வைதிகரோடும்) பிணக்கறும்படி, நெறி – வேதமார்க்கத்தை, உள்ளி – ஆராய்ந்து, உரைத்த – அருளிச்செய்த, கணக்கறு நலத்தனன் – எண்ணிறந்த ஔதார்யாஶ்ரித வாத்ஸல்யாதி கல்யாணகுணங்களையுடையனாய், அந்தமில் – முடிவில்லாத, ஆதி – முதலாகையாலே நித்யனாய், அம் – ஹேயப்ரதிபடனாய், பகவன் – (கல்யாணரூபமான ஜ்ஞாநஶக்த்யாதிகுணவிஶிஷ்டனான) பகவானுடைய, வணக்கு உடை – நமஸ்யாதிகளை உடைத்தான, தவநெறிவழி – பக்திமார்க்கத்திலே, நின்று – நிலைநின்று, புறநெறி – (“அந்யா வாசோ விமுஞ்சத2” என்கிற) அல்லாத வழிகளாகிற, களை – களையை, கட்டு – அறுத்து, அவனுடை – அவனுடைய விஷயமான, உணர்வுகொண்டு – பக்திரூப ஜ்ஞாநத்தைக்கொண்டு, உணர்ந்து – தர்ஶித்து, பசை – (வாஸநாரூபமான) பசை, அற – அறும்படி, உணக்குமின் – உலர்த்திவிடுங்கோள்.

     ஈடு – அஞ்சாம் பாட்டு.  பலகாலும் ப4ஜியுங்கோள் என்னாநின்றீர்; ப4ஜநோபாய மிருக்கும்படியை அருளிச்செய்யீர் என்ன; இன்று நான் உபதே3ஶிக்கவேணுமோ? அவன்றான் ஸ்ரீகீ3தையிலே அருளிச்செய்த ப4க்திமார்க்க3த்தாலே அவனை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

     (பிணக்கற அறுவகைச்சமயமும்) வைதி3க ஸமயத்துக்கும், பா3ஹ்யஷட் ஸமயங்களுக்கும் தன்னில்தான் உண்டான பிணக்கு அறும்படியாக.  (நெறியுள்ளி உரைத்த) தான் சொல்லிற்றடைய வேதா3ர்த்த2மாயிருக்கச்செய்தே, தந்தாமுக்கென்ன ஓர் அர்த்த2ம் போ3தி4யாதார் ஆராய்ந்து சொல்லுமாபோலே விசாரித்து அருளிச்செய்தான்.  அதுக்கு நினைவு என்னென்னில்; அஹ்ருத3யமாகச் சொல்லிலும் நன்றாயிருக்கச்செய்தே, ப்ரஜைகளுடைய ஹிதத்திலுண்டான ஆத3ராதிஶயத்தாலே, சடக்கெனச்சொன்னால் “வாய்வந்தபடி சொன்னான் நிரூபியாதே”’ என்பர்களென்று ஆராய்ந்து சொன்னானாகச் சொன்னபடி.

     (கணக்கறு நலத்தனன்) எல்லையில்லாத கு3ணத்தையுடையவ னென்னுதல்; எல்லையில்லாத ஸ்நேஹத்தையுடையவனென்னுதல்; ஆர் இரக்கச் செய்தான்? தன் வாத்ஸல்யத்தாலே அருளிச்செய்தானித்தனையிறே.  வாத்ஸல்யத்தாலே சொல்லிற்று எல்லாம் அர்த்த2மாமித்தனையோ என்னில்? (அந்தமிலாதி) ஆப்ததமன்.  எல்லார்க்கும் உத்பத்திவிநாஶங்களாலேயிறே ஜ்ஞாநஸங்கோசம் பிறப்பது; இவனுக்கு அவை இல்லாமையாலே அகர்மவஶ்யன் என்கிறது.

     (அம்பகவன்) ஜ்ஞாநாதி3களால் அல்பம் உத்கர்ஷமுடையவன் பக்கலிலே ப43வச்ச2ப்34ம் வர்த்தியாநின்றதிறே; “அந்யத்ர ஹ்யுபசாரத:” ப43வச்ச2ப்34ம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே; அல்லாதார்பக்கல் ஔபசாரிகம்.  (அம்பகவன் வணக்குடைத் தவவெறி வழிநின்று) “நமஸ்யந்தஶ்ச மாம் ப4க்த்யா” என்று ப4க்தி ஶரீரத்திலே நின்று அருளிச்செய்தானிறே. அங்க3நாபரிஷ்வங்க3ம் போலே போ43 ரூபமாயிறே இதுதானிருப்பது.  (வணக்குடைத் தவநெறி வழிநின்று) வணக்கத்தையுடைய ப4க்திமார்க்க3மாகிற வழியிலே நின்று.  ப4க்தி ஶரீரத்திலே “மாம் நமஸ்குரு” என்கையாலே “வணக்குடை” என்கிறது.

     தபஶ்ஶப்33த்தாலே ப4க்தியைச் சொல்லிற்று – ப4க்தி ஜ்ஞாநவிஶேஷ மாகையாலே; “யஸ்ய ஜ்ஞாநமயம் தப:” என்கிற ந்யாயத்தாலே என்னுதல்; இவனுடைய ப்ரேமமாத்ரத்தையே குவாலாக நினைத்திருக்கும் ப43வத3பி4ப்ராயத்தாலேயாதல்.  (புறநெறி களை கட்டு) புறநெறியாகிற களையைக் கடிந்து. பறித்து.  கட்டல் – களைதல்.  ப4க்திவிஷயமானபோது, ப2லாந்தரத்திலே போம் விலக்கடிகளைத் தள்ளி என்றாகிறது;  ப்ரபத்திவிஷயமானபோது, இதர ஸாத4நங்களைத் தள்ளி என்றாகிறது.

     (உணக்குமின் பசையற) “ரஸவர்ஜம்” என்கிறபடியே பா3ஹ்யவிஷய ப்ராவண்யத்தை ருசிவாஸநைகளோடே விடுங்கோள்.  இதெல்லாம் என்கொண்டுதான்? என்னில் (அவனுடை உணர்வு கொண்டுணர்ந்து) தத்3விஷய ஜ்ஞாநத்தைக்கொண்டு என்னுதல், தது3க்த ஜ்ஞாநத்தைக் கொண்டு என்னுதல்; ப4க்தி மார்க்க3த்தைக்கொண்டு என்னுதல்.  அவன் அருளிச்செய்த சரமஶ்லோகத்திற்படியைப் பற்றி நின்று என்னுதல்.

ஆறாம் பாட்டு

உணர்ந்துணர்ந் திழிந்தகன்று உயர்ந்துரு வியந்தஇந் நிலைமை*
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள்!*
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரியய னரனென்னும் இவரை*
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே.

      அநந்தரம், ப்ரஹ்மருத்ரமத்யகதமான ப்ரதமாவதாரம் தத்ஸஜாதீயபுத்தி விஷயமாகையாலே விவேகிக்க அரிது, அத்தை விவேகித்து ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

     உணர்ந்துஉணர்ந்து – (ஜ்ஞாத்ருத்வ ஸ்வபாவனாகையாலே என்றுமொக்க) உணருகையே ஸ்வபாவமாகவுடையனாய், இழிந்தகன்றுயர்ந்து – (அந்த ஜ்ஞாநம் நிஷ்க்ருஷ்டவேஷத்தில் அபரிச்சிந்நமாகையாலே தத்த்வாரா) பத்துத்திக்கிலும் வ்யாபித்து, உரு – ரூபயோக்யமான அசித்திற்காட்டில், வியந்த – வேறுபட்டிருக்கிற, இந்நிலைமை – இந்த ஆத்மாவின் நிலைமையை, உணர்ந்து – (ஶ்ரவணத்தாலே) உணர்ந்து, உணர்ந்து – (அதுக்குமேலே மநநத்தாலே) உணர்ந்து, உணரிலும் – (யோகத்தாலே ஸாக்ஷாத்கரித்து) உணர்ந்தாலும், இறைநிலை – ஸர்வேஶ்வரன் (ப்ரஹ்மருத்ரர்கள் நடுவே தன்னை மறைத்துநிற்கிற) நிலை, உணர்வரிது – விவேகித்தறிய அரிது; உயிர்காள் – (சேதநரானபடியாலே) விவேகித்தறியும் ஸ்வபாவரானவர்களே! அரி அயன் அரன் என்னும் இவரை – அரி அயன் அரனென்று ப்ரஸித்தரானவர்களை, உணர்ந்துணர்ந்து – (அவர்கள் குணவிபூத்யாதிகளையிட்டுப்) பலகாலும் ஆராய்ந்து, உரைத்துரைத்து – (தத்ப்ரதிபாதகமான ப்ரமாணங்களையும் பலகாலும்) வ்யவஹரித்துப் பார்த்துப்பார்த்து, மனப்பட்டதொன்று – நெஞ்சில் ஈஶ்வரனாகப்பட்டதொருவஸ்துவை, (“வ்யாஹரந் மாமநுஸ்மரந்” என்கிறபடியே), உணர்ந்துணர்ந்து – (தத்குணவிக்ரஹாதிகளைப்) பலகாலும் அநுஸந்தித்து, உரைத்துரைத்து – (தத்வாசகமான மந்த்ரநாமாதிகளைப்) பலகாலும் வ்யவஹரித்து, இறைஞ்சுமின் – உபாஸியுங்கோள்.

     இயத்தல் – வேறுபாட்டாலே விலக்ஷணமா யிருத்தல்.  ‘இந்நிலைமை’ என்று உக்தப்ரகாரவைலக்ஷண்யம் ஆத்மாவுக்கொழிய இல்லை என்கிற ஸம்ப்ரதிபத்தியைச் சொல்லுகிறது.

     ஈடு – ஆறாம் பாட்டு.  அவதாரத்திலே ஆஶ்ரயியுங்கோள் என்று நின்றீர்; “மத்4யேவிரிஞ்சகி3ரிஶம் ப்ரத2மாவதார:” என்கிறபடியே ப்3ரஹ்மருத்3ரர்கள் நடுவே அவதீர்ணனாய் நிற்கிற நிலையாய் இருந்தது ப்ரத2மாவதாரம்; அதில் மூவரும் ஒத்த கார்யத்திலே அதி4கரித்து நின்றார்கள்; இப்படி நிற்கையாலே “மூவரும் ப்ரதா4நரோ? மூவரிலே ஒருவன் ப்ரதா4நனோ? மூவர்க்கும் அவ்வருகே ஒருவன் ப்ரதா4நனோ?”  என்று எங்களால் விவேகிக்கப் போகாமையாலே ஆஶ்ரயணத்திலே அருமை கூடும்படியாயிருந்தது.  ஆஶ்ரயணீய வஸ்துவை நிரூபித்துத் தரலாகாதோ நாங்கள் ஆஶ்ரயிக்கும்படி – என்ன; “காண்கிற தேஹமே ஆத்மாவென்று இருக்கும் நிலை தவிர்ந்து, தே3ஹாதிரிக்தமாயிருப்பதொரு ஆத்மவஸ்து உண்டென்று அறிகைதானே அரிது; வருந்தி அத்தை அறிந்தானே யாகிலும், ப்3ரஹ்ம ருத்3ராதி3களை ஶரீரமாகக் கொண்டு தான் ஶரீரியாய் நிற்கிற ஸர்வேஶ்வரன்படிதானே அறியப்போகாது; ஆனபின்பு இவ்வழியே இழிந்து ஆஶ்ரயிக்கப் பாருங்கோள்”  என்று, ஆஶ்ரயணீய வஸ்து இன்னதென்றும், ஆஶ்ரயிக்கும் ப்ரகாரம் இன்னதென்றும் அருளிச்செய்கிறார்.

     (உணர்ந்து) உணர்வு என்னாதே “உணர்ந்து” என்கையாலே, “ஜ்ஞப்திமாத்ரமே உள்ளது, ஜ்ஞாத்ரம்ஶமில்லை” என்கிற பக்ஷத்தைத் தவிர்க்கிறது.  “உணர்ந்துணர்ந்து” என்கிற வீப்ஸைக்குக் கருத்து – “சைதந்யம் ஆக3ந்துகம்; முக்த்யவஸ்தை2யிலும் பாஷாணகல்பமாயிருக்கும்” என்கிற பக்ஷத்தைத் தவிர்த்து, சைதந்யம் நித்யமாயிருக்குமென்னுமிடத்தைச் சொல்லுகிறது.  ஜ்ஞாத்ருத்வம் நித்யமா(யிருக்)கையாலே – “ஜ்ஞாநக்ரியா கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வம்.  அதுதான் அநித்யம்” என்கிற க்ரியாவாதி3யையும் நிரஸிக்கிறது.

     (இழிந்தகன்றுயர்ந்து) இச்சேதநன்தான் அணுபரிமாணனாயிருக்கச் செய்தேயும், ஈஶ்வரன் ஸ்வரூபத்தாலே எங்கும் வ்யாபித்திருக்குமாபோலே ஜ்ஞாநத்தாலே எங்கும் வ்யாபித்திருக்கும் என்கிறது.  “பாதே3 மே வே3தநா, ஶிரஸி மே வேத3நா” என்றிருக்கும்படியைச் சொல்லுகிறது.  (உருவியந்த இந்நிலைமை) உருவிற்காட்டில் வியந்து – வேறுபட்டிருக்கிற இந்நிலைமையுண்டு – இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்.  அன்றியே, உருவு இயந்த, என்று பத3பே43மானபோது, இயத்தல் – கடத்தலாய், உருவிற்காட்டிலும் கடந்திருக்கும் – வேறுபட்டிருக்கும் என்னவுமாம்.

     ஆக இரண்டாலும், ஜட3மான ஶரீரத்திற்காட்டில் வேறுபட்டிருக்கிற ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை, கேவல ஶ்ரவணமநநாதி3களாலே ஸாக்ஷாத்கரிக்கக் கூடிலும்;  தே3ஹாதிரிக்தமாயிருக்கிற ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை யோக3ஶாஸ்த்ரத்தில் சொல்லுகிற க்ரமத்தாலே இழிந்து வருந்தி ஒருபடி அறிந்தானானாலும்.  (இறைநிலை உணர்வரிது) ஸர்வேஶ்வரன் ப்3ரஹ்ம ருத்3ரர்களுக்கு அந்தராத்மாவாய் அவர்களை ஶரீரமாகக்கொண்டு தான் ஶரீரியாய் நிற்கிற நிலை அறியப்போகாது.  (உயிர்காள்) சைதந்ய யோக்3யமன்றிக்கே இருப்பதொன்றாய்த்தான் இழக்கப்பெற்றதோ? சேதநரான பின்பு அதின் கார்யம் பிறக்கப்பெற்றதில்லையே! அறிவுகேடராய் நீங்கள் பட்டதென்!

     எங்கள் அறிவும் அறியாமையும் கிடக்கிடீர், அறிந்த நீர் அருளிச்செய்யீர் நாங்களப்படி ஆஶ்ரயிக்க என்ன, அருளிச்செய்கிறார் மேல் (அரி அயன் அரனென்னும் இவரை உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து) (உணர்ந்துணர்ந்து) ஒரு உணர்த்தி – ஸ்வரூபபரம்.  ஒரு உணர்த்தி – ஸ்வபா4வபரம்.  உரைத்துரைத்து – ஸ்வரூபபரமான ப்ரமாணங்களையும், ஸ்வபா4வபரமான ப்ரமாணங்களையும்.  விரோதி4 நிரஸந ஶீலனாய் ரக்ஷகனாய் இருக்கும் ஒருவன்; ஒருவன் திருநாபீ4கமலத்திலே அவ்யவதா4நேந பிறந்தவனாய் இருக்கும்; ஒருவன் ஸம்ஹாரம் ஒன்றுக்கே கடவனாய் இருக்கும்;  இவர்களை ப்ரதிபாதி3க்கிற ப்ரமாணங்களை ஆராய்ந்து பார்த்து, அவைதன்னைப் பலகாலும் சொல்லிப் பார்த்து, ‘லிங்க3த்துக்கே உத்கர்ஷம் தோற்றும்படியாய் இருப்பது ஒரு ப்ரப3ந்த4ம் பண்ணித்தரவேணும்’ என்பாரைப்போலே, ஒரு வ்யக்தியிலே பக்ஷபதிக்கப் பாராதே, இவர்கள் ஸ்வரூப ஸ்வபா4வங்களைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து, கோல்விழுக்காட்டாலே உத்கர்ஷம் கிடந்த வ்யக்தியைப் பற்றப் பார்ப்பது.  இப்படி ஆராய்ந்தவாறே ஒரு வஸ்துவே ப்ரதா4நம் என்று உங்கள் நெஞ்சிலே தோற்றும்.  அவ்வஸ்துவை ஶ்ரவணமநநாதி3களாலே “கைப் புகுந்தது” என்று விஶ்வஸிக்கலா மளவும் ஆஶ்ரயிக்கப் பாருங்கோள்.

ஏழாம் பாட்டு

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற*
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும் இவரை*
ஒன்றநும் மனத்துவைத்து உள்ளிநும் இருபசை யறுத்து*
நன்றென நலஞ்செய்வது அவனிடை நம்முடை நாளே.

      அநந்தரம், விவேகப்ரகாரத்தை விஶதமாக உபதேஶித்து, ‘சடக்கென ஆஶ்ரயியுங்கோள்’ என்கிறார்.

     ஒன்றெனப் பலவென – ஏகாத்மப்ரகாரமென்றும் அநேகாத்மாதிஷ்ட்டிதமென்றும், (ஒருவன் ப்ரதாநனென்றும் தனித்தனியே ப்ரதாநரென்றும்), அறிவரும் – அறிவரிதான, வடிவினுள் – வடிவுக்குள்ளே, நின்ற – வர்த்திக்கிற, நன்று – விலக்ஷணமான, எழில் – (அபஹதபாப்மத்வாதி) குணௌஜ்ஜ்வல்யத்தையுடையனாய், நாரணன் – நாராயணாநுவாகாதிஸித்தனாய் ஸமஸ்த சிதசித் அந்தராத்மாவான நாராயணன், நான்முகன் – (சதுர்வேதபாராயணத்துக்கும் பஹுமுக ஸ்ருஷ்டிக்கும் உபயுக்தமான முகபேதத்தையுடைய) சதுர்முகன், அரன் – (ஸம்ஹரணைகஸ்வபாவனான) ஹரன், என்னுமிவரை – என்று தத்தத்ஸ்வபாவவைஶத்யம் பிறக்கும்படி ப்ரமாணங்களாலே சொல்லப்பட்டவர்களை, ஒன்ற – (ஒருவர்பக்கல் ப்ராதாந்யபக்ஷபாதமற) ஏகாகாரதயா, நும்மனத்துவைத்து – உங்கள்நெஞ்சிலே வைத்து, உள்ளி – (அவர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை) ஸப்ரமாணமாக ஆராய்ந்து, நும் இருபசை யறுத்து – உங்கள் ப்ரதிபத்திதோஷத்தாலே இருவர்பக்கலிலுமுண்டான ஈஶ்வரஸங்கத்தை யறுத்து, அவனிடை – அந்தநன்றெழில் நாரணன்பக்கலிலே, நம்முடை – நம்முடைய, நாள் – ஆயுஸ்ஸுள்ளகாலத்திலே, (“ஏகபக்தி:” என்கிறபடியே) நன்றென – நன்றான, நலம் – ஸ்நேஹத்தை, செய்வது – பண்ணுவது.

     ஈடு – ஏழாம் பாட்டு.  “அப்படியே செய்கிறோம்” என்று ஆறியிருந்தார்கள்; ஐயோ! நீங்கள், உங்களுடைய ஆயுஸ்ஸினுடைய ஸ்தி2தியும், இழக்கிற விஷயத்தின் நன்மையும் அறியாமையிறே ஆறியிருக்கிறது; நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே நிர்ணயோபாயங்களாலே வஸ்து இன்னதென்று நிர்ணயித்து, நிர்ணீதனானவன்பக்கலிலே கடுக ப4க்தியைப் பண்ணப்பாருங்கோள் என்று கீழிற் பாட்டுக்கு ஶேஷமாயிருக்கிறது இப்பாட்டும்.  நீங்கள் மந்தா3யுஸ்ஸுக்க ளாகையாலே கடுகச் செய்துகொடுநின்று, “செய்கிறோம்” என்னவேணும்; “செய்கிறோம்” என்று செய்யவொண்ணாது என்கிற இதுவே விஶேஷம் கீழிற் பாட்டிற்காட்டில்.

     (ஒன்றென) மூவர் ப்ரதா4நராய், மூவர்க்கும் மூன்று ஶரீரமுண்டாய்த் தோற்றுகையாலே, மூன்று ஶரீரத்திலும் ஒருவனே அதி4ஷ்டி2த்துக்கொண்டு நிற்கிறானோ? அன்றியே, மூன்றிலும் மூன்று சேதநர் அதி4ஷ்டி2த்துக்கொண்டு நிற்கிறார்களோ? என்று அறிய அரிய வடிவுகளை உடையராய் நிற்கிற.  “ஏகாத்மாதி4ஷ்டி2தமோ? அநேகாத்மாதி4ஷ்டி2தமோ” என்று அறிய அரிதான வடிவை உடையராய் நின்ற.

     (நன்றெழில் நாரணன்) அநந்யபரமான நாராயணாநுவாகாதி3களை நினைக்கிறார்.  எழிலென்று – “அபஹதபாப்மா தி3வ்யோ தே3வ ஏகோ நாராயண:” என்கிற புகரை நினைக்கிறது.  (நன்றெழில்) ரூபஸ்ரீயைப் பார்த்தவாறே “கண்டவாற்றால் தனதே உலகென நின்றான்” (4-5-10) என்கிறபடியே ஸர்வரக்ஷகன் இவனே என்னலாம்.

     (நாரணன்) திருநாமத்தைப் பார்த்தவாறே தன்னையொழிந்ததடைய ப்ரகாரமாய்க் கொண்டு தான் ப்ரகாரியாய் இருப்பானொருவன் என்று தோற்றியிருக்கும்.  (நான்முகன்) ஒருவன் ஸ்ருஷ்டி காலத்திலே வந்தால் நாலு வேத3ங்களையும் உச்சரிக்கைக்கு நாலு முக2த்தையுடையனாய் ஸ்ருஷ்டி கார்யம் ஒன்றிலும் அந்விதன் என்று தோற்றியிருக்கும்.  (அரன்) ஒருவன், ஸம்ஹர்த்ருத்வம் ஒன்றிலும் அந்விதன் என்று தோற்றியிருக்கும்.  “ஸ்ருஷ்டிஸ்தி2த்யந்தகரணீம் ப்3ரஹ்ம விஷ்ணு ஶிவாத்மிகாம் | ஸ ஸம்ஜ்ஞாம் யாதி ப43வாநேக ஏவ ஜநார்த3ந: ||” என்கிறபடியே ஸம்ஜ்ஞைகளில் வந்தால் ஒக்கவெடுக்கலாய் விஷ்ணு ஶப்33த்தோடு பர்யாயமான ஜநார்த3ந ஶப்33த்தையிட்டுத் தலைக்கட்டுகையாலே தானே ப்ரதா4நன் என்று தோற்றும்படியாய் இருக்கும்.

     இப்படி விஸத்3ருஶ ஸ்வபா4வராய் இருக்கிற இவர்களை (ஒன்ற நும் மனத்து வைத்து) அவனையொழிந்த இருவரிலே ஒருவனுக்கு உத்கர்ஷம் வேணும் என்றாதல்.  நிர்ணயிப்பதற்கு முன்னே இவனுக்கு உத்கர்ஷம் வேணும் என்றாதல் பாராதே ஒருபடிப்பட உங்கள் நெஞ்சிலே வைப்பது.  (உள்ளி) உள்ளுவது – ஶ்ருதி ந்யாயங்களாலே ஆராய்வது.  அவர்கள் ஸ்வரூப ஸ்வப4ாவங்களை இப்படி ஆராய்ந்தவாறே ஒரு வஸ்து ப்ரதா4நமாய், இரண்டு அப்ரதா4நமாய்த் தோற்றும்; தோற்றினவாறே (நும் இரு பசை அறுத்து) அவ்விரண்டிலும் நீங்கள் பண்ணுகிற நசையைத் தவிருவது.  வஸ்துக3தமாய் வருவதொரு உத்கர்ஷம் இல்லை; நீங்கள் ஏறிடுகிற இவற்றைத் தவிருவது.  (நன்றென நலஞ்செய்வதவனிடை) இப்படி நிர்ணீதனானவன்பக்கலிலே “இவன் நமக்குக் கைப்புகுந்தான்” என்று உங்களுக்கேறத் தேற்றம் பிறக்கும்படி அநந்ய ப்ரயோஜநமான ப4க்தியைப் பண்ணப்பாருங்கோள்.  க்ரமத்திலே செய்கிறோம் என்றிருந்தார்கள்; (நம்முடை நாளே) கெடுவிகாள்! நம்முடைய ஆயுஸ்ஸின் நிலை அறிவிகோளே! கடுக ஆஶ்ரயிக்கப் பாருங்கோள்.  “நம்முடை நாள்” என்னுங்காட்டில் – ஆயுஸ்ஸின் நிலையை அறிந்தபடி என்னென்னில், முன்பே “மின்னின் நிலையில” (1-22) என்று அருளிச்செய்தாரிறே.  ஒருவன் இரண்டு கதவையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்காநின்றால், நெருப்புப்பற்றி எரியாநின்றால், “அவிக்கிறோம்” என்று ஆறியிருக்கலாமோ? “நந்த3ந்த்யுதி3த ஆதி3த்யே நந்த3ந்த்யஸ்தமிதே ரவௌ | ஆத்மநோ நாவபு3த்4யந்தே மநுஷ்யா ஜீவிதக்ஷயம் ||” ஆதி3த்யோத3யத்திலே வந்தவாறே “த்3ரவ்யார்ஜநகாலம் வந்தது” என்று உகப்பர்கள்; அவன் அஸ்தமித்தவாறே “அபி4மதவிஷயங்களோடே ரமிக்கைக்குக் காலம் வந்தது” என்று உகப்பர்கள்.  சாலிலெடுத்த நீர்போலே தங்கள் ஆயுஸ்ஸு குறைகிறதென்று அறியாதிராநின்றார்கள் என்னாநின்றதிறே.

எட்டாம் பாட்டு

நாளும்நின் றடுநம பழமைஅங் கொடுவினை யுடனே
மாளும்ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி*
நாளும்நம் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி*
மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.

      அநந்தரம், ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரன் திருவடிகளை ஆஶ்ரயிக்கில் ஆஶ்ரயணத்துக்கும் ப்ராப்திக்கும் ப்ரதிபந்தகங்களானவையெல்லாம் குலையும் என்கிறார்.

     மனனகம் – மனனகத்தை, மலம் அற (த்ரிமூர்த்திஸாம்யாஶங்கையாலுண்டான ஸம்ஶயமாகிற) மலம் அறும்படி, கழுவி – (விவேகத்தாலே) பரிஶுத்தமாக்கி, நாளும் – (நமக்கு அபிமதமான) நாள்தோறும், நம் – நமக்கேகூறுபட்ட, திருவுடை – ஸ்ரீமானான, அடிகள்தம் – ஸ்வாமியினுடைய, நலம் கழல் – ஸர்வஸமாஶ்ரயணீயமாய் போக்ய•மான திருவடிகளை, வணங்கில் – ஆஶ்ரயிக்கில், நாளும் – நாள்தோறும், நின்று அடும் – விடாதேநின்று பரிதபிப்பதாய், நம – (நாம் புத்திபூர்வகமாக) நமக்குத்தேடின, பழமை – அநாதிஸித்தமாய், அங்கொடுவினை – மிகவும் க்ரூரமான அக்ருத்யகரணாதிபாபங்கள், உடனே – ஆஶ்ரயணஸமகாலத்திலே, மாளும் – நஶிக்கும்; ஓர்குறைவில்லை – (ஸ்வாபிமதத்தில்) குறைகிடப்பதொன்றுமில்லை; (இப்படி ஆஶ்ரயிக்குமிடத்தில்) மாளுமோரிடத்திலும் – ஶரீரவிஶ்லேஷதஶையிலும், வணக்கொடு – ஆஶ்ரயணத்தோடே, மாள்வது – முடியிலும், அதுவே, வலம் – ப்ரபலம்.  (“ஸ்தித்வாஸ்யாமந்தகாலேபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி” என்னுமாபோலே).  “வணங்கி” என்று பாடமாய் – வணங்கவென்று திருத்திச் சொல்லுவாருமுளர்.

     ஈடு – எட்டாம் பாட்டு.  ஒரு நாளாகிலும் முற்பட்டது உடலாக ஆஶ்ரயிக்கச் சொல்லாநின்றீர், அநாதி3காலம் நாங்கள் பண்ணிவைத்த பாபங்கள் விலக்காவோ? இனி காலந்தான் உண்டோ? என்ன; நீங்கள் ஆஶ்ரயணத்திலே ஒருப்படவே விரோதி4கள் அடங்கலும் நஶிக்கும்; ஶ்ரிய:பதிஸமாஶ்ரயணமாகையாலே காலம் கழிந்தது என்றிருக்கவும் வேண்டா; நீங்கள் ‘தண்டு காலா ஊன்றி – ஊன்றித் தள்ளி’ (திருமொழி 1.3.5) நடக்கும்போது அக்கோலோடே சாயவும் அமையும் என்கிறார்.

     (நாளும் நின்றடும்) நாள்தோறும் இடைவிடாதே நின்று ஹிம்ஸிக்கக் கடவதான.  பரமாணுக3தமான பாரிமாண்ட3ல்யாதி3கள் நித்யமாயிருக்கச் செய்தே நித்யபரதந்த்ரமாயிருக்குமாபோலவும், ப43வத் ஸ்வரூபத்தோபாதி கு3ணங்கள் நித்யமாயிருக்கச்செய்தே நித்யபரதந்த்ரமாயிருக்குமாபோலவும், நித்யவஸ்துவாய் நித்ய பரதந்த்ரமாய்ப் போராநிற்கச் செய்தே அசித்ஸம்ஸர்க்க3மும் நித்யமாய்ப் போருகிறதிறே.

     (நம) “த்3விஷந்த: பாபக்ருத்யாம்” என்கிறபடியே பிறரதாய் அசல்பிளந்தேறிட வந்ததல்ல;  நெஞ்சுணர நாமே பண்ணிவைத்தவை.  “அபூ4தபூர்வம் மம பா4வி கிம் வா” – எனக்கு, முன்பு அநுப4வியாததாய், மேல் அநுபா4வ்யமா யிருப்பதொன்றுண்டோ? “ஸர்வம் ஸஹே” – எல்லாம் பொறுக்க வல்லேன்.  “மே ஸஹஜம் ஹி து3:க்க2ம்” –
தன் காய்பொறாத கொம்புண்டோ? என்று சொல்லலாம்படியாயிறே நாமே பண்ணிவைக்குமவை இருப்பது.  (பழமை) அதுதான் இன்றுநேற்றன்றியே பழையதாயிருக்கை.  (அம்) “அம்” என்று – க்ரௌர்யத்தைப் பற்றச் சொல்லுகிறது.  (கொடு வினை) அநுப4வவிநாஶ்யமாயிருக்கை.  (உடனே மாளும்) ஆஶ்ரயணகாலத்திலே நஶிக்கும்.  “யதே2ஷீகதூலமக்3நௌ ப்ரோதம் ப்ரதூ3யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூ3யந்தே”, “மேருமந்த3ரமாத்ரோ‍பி” என்று சொல்லுகிறபடியே.  விரோதி4 போமளவேயோ? (ஒர் குறைவில்லை) மேலும் ஒரு விரோத4ங்கள் வாராது என்னுதல்; ஸ்வாபி4மதங்களும் பூர்ணமாம் என்னுதல்.

     “கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே ப4க்த: ப்ரணஶ்யதி” – அர்ஜுந! இவ்வர்த்த2த்தில் நம்மை விஶ்வஸித்து ப்ரதிஜ்ஞை பண்ணு; நம்மைப் பற்றினவர்களுக்கு அநர்த்த2ம் வாராதுகாண்! ப43வத்ஸமாஶ்ரயணம் பண்ணுகைக்கும் வினை கிடக்கைக்கும் “அக்3நிநா ஸிஞ்சேத்” போலே, என்ன சேர்த்தியுண்டு? அஸங்க3தம்.

     “து3ராசாரோபி” – செய்யக்கடவதல்லாதவற்றைச் செய்துபோருவது.  “ஸர்வாஶீ” – அபோ4ஜ்யபோ4ஜநங்களைப் பண்ணுவது.  “க்ருதக்4ந:” – உபகரித்த விஷயத்திலே அபகாரத்தைப் பண்ணுவது.  “நாஸ்திக:” – வைதி3க மர்யாதை3யை இல்லையென்று போருவது.  “புரா” – இதுதான் பழையதாய் போருவது.  “ஸமாஶ்ரயேத்” இத்யாதி3, “இவன் அநுகூலிப்பது எப்போதோ?” என்று ஏற்கவே அவஸரம் பார்த்திருக்கிறவனைப் பற்றி அநுகூலிக்குமாகில், பின்பு அவனை நிர்தோ3ஷனாக ப்ரதிபத்திபண்ணுவது.  என்தான்? என்னில்: “ப்ரபா4வாத் பரமாத்மந:” – இவனைக் குறைய நினைக்கையாவது, ப43வத் ப்ரபா4வத்தைக் குறைய நினைக்கையிறே.  “ந வாஸுதே3வப4க்தாநாமஶுப4ம் வித்3யதே க்வசித்” என்னுமாபோலே.

     இனி, செய்யவேண்டுவதொன்றுண்டு – (மனனக மலமறக் கழுவி) ஸர்வேஶ்வரன் ப்3ரஹ்மருத்3ரர்கள் நடுவே கலசி நின்றால் “இவனோ கடவான், மற்றையவர்களோ?” என்று ஸம்ஶயிக்குமது தவிர்ந்து “ஸர்வேஶ்வரனே கடவான்” என்கிற அந்த:கரண ஶுத்3தி4யுண்டாகவேணும்.  ‘திருவடிதன்னாமம் மறந்தும் புறந்தொழா’ (நான்முகன் திருவந்தாதி – 68)தொழியுமித்தனையே வேண்டுவது.  (நாளும்) அபர்வணி கடல் தீண்டலாகாது என்னுமாபோலே ஒரு நியதியில்லை.  (நம் திருவுடையடிகள் தம்) ஸ்ரீமானான ஸ்வாமியானவனுடய.  இத்தால் நித்யயோக3த்தைச் சொல்லுகிறது.  “ஸர்வேஶ்வரனை ஆஶ்ரயித்தானாகில் அவன் ப2லப்ரத3னாகிறான்; பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டுகிறதென்?” என்று நஞ்ஜீயர் ப4ட்டரைக் கேட்க, “நாளும் தம் திருவுடையடிகள் தம் நலங்கழல் வணங்கி” என்று அவள்•ன்னாக ஆஶ்ரயிக்கவேணும் என்னா நின்றது கண்டீரே!” என்று அருளிச்செய்து, “அவனை ஆஶ்ரயிக்குமிடத்தில் இவன்குற்றம் பாராதே தன்நிழலிலே இவனை வைத்து, அவன்பக்கல் முகம்பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள்முன்னாகப் பற்றவேணும்.” (நலங்கழல்) அவள்முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக்கொள்ளும் திருவடிகள்.  “வணங்கி” என்றது வணங்க என்றபடி.  “வணங்கி” என்கிற இது – வினையெச்சமாய், வணங்க என்னும் அர்த்த2மாயிருக்கும்.  வணங்க, நாளும் நின்றடும் நம் பழமையங்கொடுவினை உடனே மாளும், ஓர் குறைவில்லை.  ஆனாலும், ஆஶ்ரயணத்துக்குக் காலம் தப்பி நின்றதே என்ன (மாளுமோரிடத்திலும்)  முடிகிற ஒரு  க்ஷணத்திலும்.

     (வணக்கொடு மாள்வது வலம்) “த்3விதா4 ப4ஜ்யேயமப்யேவம் ந நமேயம்” என்னாதே, கிடக்கிற சீரைப்பாயைக் கவ்விக் கவிழ்ந்துகிடந்து சாவவும் அமையும்.  (வலமே) வரமென்னுதல் – ஶ்ரேஷ்ட2மென்னுதல்; ப3லவத்தரமென்னுதல்.  அவனையும் ஆஶ்ரயித்து வேறுசிலர்பக்கலிலும் தலைசாய்க்க இராதே, முடிகிற ஸமயத்திலே ஆஶ்ரயிக்கவே, பின்னைப் பேற்றோடே தலைக்கட்டும்.  இத்தால், ஜந்மப்ரப்4ருதி ஆஶ்ரயித்தாலும் ப2லமில்லை ப43வத்3வ்யதிரிக்தர் பக்கல்; ஆஶ்ரயணத்திலே உபக்ரமித்து முடிந்தாலும் ப2லம் தப்பாது ப43வத்3விஷயத்தில் என்கை.

ஒன்பதாம் பாட்டு

வலத்தனன் திரிபுர மெரித்தவன் இடம்பெறத் துந்தித்
தலத்துஎழு திசைமுகன் படைத்தநல்லுலகமும் தானும்
புலப்பட* பின்னும்தன் னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில்* இவைபின்னும் வயிற்றுள இவைஅவன் துயக்கே.

      அநந்தரம், கீழ்ச்சொன்ன ப்ரஹ்மருத்ரர்களும் இவனாலே லப்தஸ்வரூபராயிருக்க, ஸ்வவிபூத்யந்தர்ப்பூதனாய் அவதரித்து தத்தத்ஸாஜாத்யாதிகளாலே நெஞ்சு கலங்கப்பண்ணு மென்கிறார்.

     எழுதிசைமுகன் – (சதுர்த்தஶபுவந நிர்வாஹகமான) எழுச்சியையுடைய திசைமுகன், படைத்த – ஸ்வஸ்ருஷ்டமான, நல்உலகமும் தானும் – விலக்ஷணலோகமும் தானும், துந்தித்தலத்து இடம்பெற – (அஸங்குசிதமாகத்) திருநாபியிலே இடம் பெற்றிருக்க, திரிபுரமெரித்தவன் – த்ரிபுரதஹநம் பண்ணின ருத்ரன், வலத்தனன் – (“பஶ்யைகாதஶ மே ருத்ராந் தக்ஷிணம் பார்ஶ்வமாஶ்ரிதாந்” என்கிறபடியே) வலபார்ஶ்வத்திலான், பின்னும் – (ஈஶ்வராபிமாநிகளுக்கும் தன் திருமேனியிலே இடங்கொடுத்து ரக்ஷிக்கிறதுக்கு) மேலே, (அவன்), புலப்பட – (காணவாராய் என்றிருப்பார்க்குக்) கண்ணுக்கு இலக்காக்கைக்காக, தானே – தானே (கர்மாதிபரதந்த்ரனன்றியிலே), தன் உலகத்தில் – தன்னதான லோகத்தினுள்ளே, அகத்தனன் – அவதரித்து நிற்கும்; சொலப்புகில் – இப்படிச் சொல்லப் பார்த்தோமாகில், இவை – ஏவம்விதமான குணங்கள், பின்னும் – பின்னையும், வயிற்றுள – உள்ளேயுள்ளே அகாதமாய்த் தொலையாது; இவை அவன் துயக்கு – இவை அவன் ப்ரமிப்பிக்கும்படி.  “வயிற்றுள” என்று ப்ரளயத்திலே வயிற்றுக்குள்ளே வைத்ததாகவுமாம்.  துந்தி – நாபி.

     ஈடு – ஒன்பதாம் பாட்டு.  கீழ் ப்3ரஹ்மாதி3களுடைய அபரத்வமும், ஸர்வேஶ் வரனுடைய பரத்வமும் சொன்னார்; இப்பாட்டில் அவர்கள்தாங்கள் இவனைப்பற்றி லப்34ஸ்வரூபராயிருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

     ப்3ரஹ்மாதி3களுக்கும் உத்பாத3கனாய், அவர்களுக்கு ரக்ஷகனான ஸர்வேஶ்வரன் – அவர்கள்தாங்களும் காலிடமாட்டாத பூ4மியிலே வந்து அவதரிக்கைக்கு ஹேதுவென்னென்னில்; அவன்தான் அருளிச்செய்து வைத்ததுவே ஹேது;  “பரித்ராணாய ஸாதூ4நாம்” என்றானிறே.  “ஆஶ்ரயிக்குமவர்களுக்கு இதிலே த்வரை பிறக்கைக்காகவும், ருசிஜநகனாகைக்காகவும், வந்து பிறப்பன்; அதின் ப2லமாய் வருமதிறே து3ஷ்க்ருத்துக்களுடைய விநாஶம்” என்று அருளிச்செய்ததுவே ஹேது என்கிறார்.

     (வலத்தனன் திரிபுரமெரித்தவன்) கீழில் பாட்டுக்குக் கீழ் இரண்டு பாட்டாலும் சொன்ன அர்த்த2த்தை அநுபா4ஷிக்கிறார்.  த்ரிபுரத3ஹநத்தாலே ஸஞ்ஜாதாபி4மாநியான ருத்3ரன், திருமேனியில் வலவருகைப் பற்றி லப்34 ஸ்வரூபனாயிருக்கும். “பஶ்யைகாத3ஶ மே ருத்3ராந் த3க்ஷிணம் பார்ஶ்வமாஶ்ரிதாந்” என்கிறபடியே.  (இடம்பெறத்துந்தித்தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகமும் தானும்) எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அஸங்குசிதமாகத் திருநாபி4 கமலத்திலே இருக்கும்.  “ப்3ரஹ்மாணமீஶம் கமலாஸநஸ்த2ம்” என்கிறபடியே.  இவை இவர்களுடைய ஸர்வப்ரகார ரக்ஷணத்துக்கும் உபலக்ஷணம்.  எழுச்சியாவது -சதுர்த3ஶபு4வநத்துக்கும் நிர்வாஹகனான அளவுடைமை.  ஈஶ்வரன் விரும்பிவந்து அவதரிக்கையாலே “நல்லுலகம்” என்கிறது.

     “ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளும் தனியுடம்பன்” (4-8-1) என்கிறபடியே, பிராட்டிக்கும் ப்3ரஹ்மாதி3களுக்கும் ஒக்கத் திருமேனியிலே இடங்கொடுத்துவைத்தால், அந்த:புரத்திலுள்ளவர்களென்று அவர்கள் இருப்பிடத்தில் இவர்களுக்கு நலியவொண்ணாதபடி கூறாகக் கொடுத்து வைக்கும்.  ஸர்வாபாஶ்ரயமாயிறே திருமேனிதான் இருப்பது.  (இடம்பெற) ஸவிகாஸமாயிருக்கும்.  ருத்3ரனுக்கும் இவ்வருகுள்ளார்க்கும் நிர்வாஹகனாய், சதுர்த3ஶபு4வந ஸ்ரஷ்டாவான சதுர்முக2ன் – தான் உண்டாக்கின நன்றான லோகமும் தானும் திருநாபி4க்கமலத்தைப்பற்றி லப்34ஸ்வரூபனாயிருக்கும்.  “உந்தி” என்றும், “துந்தி” என்றும் – திருநாபி4க்குப் பேர்.  (இடம்பெறத்துந்தி) “இடம்பெற, அத்து, உந்தித்தலம்”  என்றாய் பத3ம், அதில், “அத்து” என்கிற பத3ம் – சாரியைச் சொல்லாய்ப் பொருளின்றியேபோய்,  “இடம் பெற உந்தித்தலம்” என்கிறது.  “பூ4தலம்” என்னுமாபோலே.  (திசைமுகன்படைத்த நல்லுலகமும் தானும் உந்தித் தலத்தனன்) ஸ்தநந்த4யப்ரஜை தாய்முலையை அகலில் நாக்கு ஒட்டுமாபோலே, திருநாபீ4கமலத்தை விடில் தன் ஸத்தை இல்லையாம்படி யிருக்கை.

     இப்படி பின்னை ஸர்வகாலமும் இவர்களும் இருப்பார்களோ? என்னில்: ஆபத்துக்களிலே திருமேனியிலே இடங்கொடுக்கும்.  அது மஹாகு3ணமாகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச்செய்துகொண்டு போருவர்கள்.  ஸாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும், மாளிகைக்குள்ளே செம்பாலே
நாழியரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்திருப்பர்களிறே; அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணிவைக்கும் ப்ராப்தி விடார்களிறே.  ஒரு கலகங்களிலே அடையவளைந்தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து, காலம் தெளிந்தவாறே புறம்பே புறப்பட்டாலும், “இவ்விடமின்னார் பற்று, இவ்விடமின்னார் பற்று” என்று பின்னும் ப்ராப்தி சொல்லிவைக்குமாபோலே.

     (பின்னும்) ப்3ரஹ்மாதி3களுக்குத் தன் திருமேனியிலே இடங்கொடுத்ததுக்கு மேலே.  (தன்னுலகத்திலகத்தனன்) தான் உண்டாக்கின ப்3ரஹ்மாவாலே உண்டான லோகங்களிலே வந்து அவதரிக்கும். ப்3ரஹ்மருத்3ரர்களும் தன் திருமேனியில் ஏகதே3ஶத்தைப் பற்றி லப்34ஸ்வரூபராம்படியிருக்கிறவன், அவர்களுங்கூடக் காலிட அருவருக்கிற ஸம்ஸாரத்திலே வந்து அவதரிக்கைக்கு ஹேது என்னென்னில் (புலப்பட) ‘காணவாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து’(8-5-2) இருக்குமவர்களுக்குத் தன் ஸங்கல்பத்தாலே ஸம்விதா4நம் பண்ணவொண்ணாதே; அவர்கள் சக்ஷுராதி3கரணங்களுக்கு விஷயமாகவேணும் என்று.

     என்?, ஸங்கல்பத்தாலே ஸம்விதா4நம் பண்ணினால் என் செய்யும்? என்னில், “மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்களித்தால் உன் சுடர்ச்சோதி மறையும்” (3-1-9) என்பர்கள்.  இதுதனக்குத்தான் அடியென்? என்னில்; (தானே) “ஆத்மமாயயா”, “ஆத்மேச்ச2யா”; ஒரு கர்மம் ப்ரேரிக்கவன்று, இச்சை2யாலே.

     (சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள) அவன் இப்படி அவதரித்துப் பண்ணும் ரக்ஷணங்களில் ஏகதே3ஶம்சொல்லில் சொல்லுமத்தனை; எல்லாம்சொல்லில் தலைக்கட்டப்போகாது.  சொலப்புகில் உள்ளேயுள்ளேயாமித்தனை; அன்றியே, தன்னாலே ஸ்ருஷ்டரான ப்3ரஹ்மாதி3களாலே ஸ்ருஷ்டரானவர்களுக்கு “என் மகன்” என்று அபி4மானிக்கலாம்படி வந்து பிறந்து, “உனக்கு ராஜ்யத்தைத் தந்தேன், அதுதன்னை வாங்கினேன், போ” என்றும், கையிலே கோலைக்கொடுத்து “பசுக்களின் பின்னே போ” என்றும் சொல்லலாம்படி எளியனாயிருக்கிற தான், இவர்களுக்கு ஓர் ஆபத்து வந்தால் இவர்களை வயிற்றிலே வைத்து நோக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்.

     இப்படி இதுவே அர்த்த2மென்னுமிடம் நீர் அருளிச்செய்தபோது தெரிந்து, அல்லாதபோது எங்களுக்குத் தெரியாதபடியிராநின்றதீ! என்ன (இவை அவன் துயக்கே) “மம மாயா து3ரத்யயா” என்கிறபடியே அவன்தானே ப்ரக்ருதியாகிற விலங்கையிட்ட பா4க்3யஹீநரானவர்கள் தன்பக்கல் அணுகாதபடி பண்ணி, அவர்கள் அகலப்புக்கால் அவன் அநுமதிதா3நம் பண்ணி; உங்கள்பக்கல் அவன் உதா3ஸீநனாயிருக்கையாலே தெரியாதொழிகிறது என்கிறார்.  துயக்கு – ஸம்ஶயம்.

பத்தாம் பாட்டு

துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்*
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்*
புயற்கரு நிறத்தனன் பெருநிலம் கடந்தநல் லடிப்போ(து)*
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.

      – அநந்தரம், அவனுடைய அஸங்க்யாதமான ப்ராமகத்வம் கிடக்க, அவனழகையே அநுபவிப்போ மென்று பாரிக்கிறார்.

     துயக்கறு – (ஸம்ஶயவிபர்யயமில்லாமையாலே) கலக்கமற்ற, மதியில் – நெஞ்சிலே பிறந்த, நல்ஞானத்துள் – நன்றான ஜ்ஞானத்தையுடையரான, அமரரை – தேவர்களையும், துயக்கும் – கலங்கப்பண்ணும், மயக்கு – ப்ராமகத்வஶக்தியை, உடை – உடைய, மாயைகள் – ஆஶ்சர்யமான ஆகாரங்கள், வானிலும் – (எல்லையில்லாத) ஆகாஶத்திலும், பெரியன வல்லன் – அதிஶயிக்கப்பண்ண வல்லனாய், புயல் – காளமேகம்போலே, கருநிறத்தனன் – கருகின நிறத்தையுடையனானவனுடைய, பெருநிலம் – பூமிப்பரப்பை, கடந்த – அநாயாஸேந அளந்த, நல் – விலக்ஷணமான, அடிப்போது – திருவடித்தாமரைகளை, அமர்ந்து – (ப்ரயோஜநாந்தரத்தில் பற்றற்று) அமர்ந்து, அயர்ப்பிலன் – மறப்பில்லாதவனாய், அலற்றுவன் – (அக்ரமமாக குணங்களை) வாயாலே சொல்லுவன்; தழுவுவன் – (அத்யந்த ப்ரேமயுக்தனாய்க்கொண்டு) ஸம்ஶ்லேஷிப்பன்; வணங்குவன் – (தலையாலே) வணங்குவன்; இப்படி கரணத்ரயத்தாலும் அநுபவிப்பே னென்கிறார்.

     ஈடு – பத்தாம் பாட்டு.  அவன் விமுக2ர்பக்கல் பண்ணுமவை கிடக்கிடீர்; அவன் காட்டின வழியே காணப்புக்க நாம் மநோவாக்காயங்களாலே நம் விடாய்கெடத் திருவுலகளந்தருளின திருவடிகளை அநுப4விப்போம் என்று பாரிக்கிறார்.

     (துயக்கறு மதியில்) துயக்கற்ற மதியையுடைய; ஸம்ஶயவிபர்யய ரஹிதமான மதியையுடையராகையாலே.  (நன் ஞானத்துள் அமரர்) உள் – மனமும், இடமும், மேலும்.  இங்கு, மேலான அமரர் என்றபடி.  நன்றான ஜ்ஞாநத்தை யுடையரான அமரரையுங்கூட.  (துயக்கும் மயக்குடை மாயைகள்) துயக்கு – மனந்திரிவு.  அறிவுகெடும்படி தெரியாமையைப் பண்ணக்கடவதான கு3ணசேஷ்டிதங்களோடு கூடின அவதாரங்கள்.  (வானிலும் பெரியன வல்லன்) ஆகாஶத்தைப் பரிச்சே2தி3க்கிலும் பரிச்சே2தி3க்கப் போகாது.  “அமரர்” என்கிறது – இந்த்3ராதி3களை.

     ரஜஸ்தமஸ்ஸுக்கள் மிக்கிருக்கச்செய்தே, ஸத்வம் தலையெடுத்தாலும் அப்படியே கனத்திருக்குமிறே அவர்கள்தங்களுக்கு; அப்போது, “நம் கார்யம் நம்மாற்செய்யப்போகாது, அவனே நம் கார்யத்துக்குக் கடவன்‘’ என்றிரா, அநந்தரக்ஷணத்திலே எதிரிடாநிற்பர்கள்;  தங்கள் இருப்பிடமும் இழந்து, ஸ்த்ரீகளும் பிடியுண்டு, எளிமைப்பட்டவளவிலே அத்தைப் பரிஹரித்துத் தரவேணுமென்று இரந்து, பின்னை இவனும்போய் நரகவத4ம்பண்ணி, சிறைகிடந்த ஸ்த்ரீகளையும் மீட்டுக்கொடுத்துப் போராநிற்கச்செய்தே, புழைக்கடைக்கே நின்றதொரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு போர, வஜ்ரத்தைக்கொண்டு தொடர்ந்தானிறே.  அன்றிக்கே, “நன்ஞானத்து உள் அமரர்” என்கிறது – நித்யஸூரிகளையாய், ஜ்ஞாநாதி4கனான பெரியதிருவடியும் “தேவரீரையும் நாய்ச்சிமாரையும் வஹித்தேன் நானன்றோ” என்றாற்போலே சிவியார் சொல்லும் வார்த்தையைச் சொன்னானிறே.

     அவனுடைய ஆஶ்சர்யங்கள் நம்மால் பரிச்2சே3திக்கப்போமோ? அது கிடக்கிடீர்; அவன் அநுக்3ரஹத்தாலே காட்டின வடிவழகை அநுப4விப்போம் நாம் என்கிறார் – (புயற்கருநிறத்தனன்) வர்ஷுகவலாஹகம்போலேயிருக்கிற திருமேனியையுடையவன்.  (பெருநிலம் இத்யாதி3) “மநோவாக்காயங்களாலே அநுப4விக்கப் பெற்றேன் என்கிறார்” என்று பிள்ளான் பணிக்கும்படி.  “இவற்றாலே அநுப4விக்கப் பாரிக்கிறார்” என்று ஜீயர் அருளிச்செய்யும்படி.  (பெருநிலம் கடந்த) பரப்பையுடைத்தான பூ4மியை அளக்கிற இடத்தில், வஸிஷ்ட2சண்டா3ள விபா43மற எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான்.  இவர்கள் நன்மைதீமை பாராதே, தன்னுடைய ஶுத்3தி4யே இவர்களுக்குமாம்படி பண்ணினான்.  (நல்லடிப்போது) “படிக்களவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கணியாய்” (9-22) என்று ஆசைப்பட வேண்டும்படியிறே இருப்பது.  “கதா3 புந:” என்று ப்ரார்த்தி2த்துக்கிடக்குமதிறே; செவ்விப்பூச்சூட ஆசைப் படுவாரைப்போலே.  (அயர்ப்பிலன்) மறக்கக் கடவேனல்லேன்.  (அலற்றுவன்) அக்ரமமாகப் பேசக்கடவேன். (தழுவுவன்) “ஸுகா34ம் பரிஷஸ்வஜே” என்னுமாபோலே, கட்டிக்கொள்ளக் கடவேன்.  (வணங்குவன்) நிர்மமனாய்த் திருவடிகளிலே விழக்கடவேன்.  (அமர்ந்தே) அநந்ய ப்ரயோஜநனாய் இப்படி செய்யக்கடவேன்.

பதினொன்றாம் பாட்டு

*அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னைஅமர்பொழில் வளங்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள்*
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவைபத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில்சென்று அறுவர்தம் பிறவியஞ் சிறையே.

      – அநந்தரம், இத்திருவாய்மொழிவல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப்போய்ப்பெற்று ஸம்ஸாரஸம்பந்தத்தை அறுத்தவ ரென்கிறார்.

     அமரர்கள் – சாவாமைக்கு மருந்து ஆசைப்பட்ட தேவர்கள், தொழுதெழ – (“தொழுதெழு” என்ற தம்மைப்போலே) கையும் அஞ்சலியுமாய்க்கொண்டு கிளரும்படி, அலைகடல் – அலைகிற கடலை, கடைந்தவன்தன்னை – (க்ஷுபிதமாம்படி) கடைந்த அக்ஷோப்யஸ்வபாவனைப்பற்ற, அமர் – பொருந்தின, பொழில்வளம் – பொழிலினழகையுடைய, குருகூர் – திருநகரிக்குக்கடவ, சடகோபன் – ஆழ்வாருடைய, குற்றேவல்கள் – அந்தரங்கவ்ருத்திகளாய், (வாசிககைங்கர்யமாகையாலே), சுவை – ஶப்தஸாரஸ்ய•ம் அர்த்தஸாரஸ்யமும், அமர் – பொருந்தின, ஆயிரத்தவற்றினுள் – ஆயிரமான அவற்றினுள், இவை பத்தும் – (திருப்பாற்கடலில் அம்ருத தடாகம்போலே யிருக்கிற) இவைபத்தையும், வல்லார் – (அப்யஸிக்க) வல்லார், உயர்வில் – உயர்த்தியில், அமரரோடுசென்று – அமரரோடொக்கச் சென்று, தம்பிறவி – தம்முடைய பிறவியாகிற, அஞ்சிறையறுவர் – சிக்கென்ற சிறை அறுவர்.  இத்திருவாய்மொழி ஐஞ்சீராய் நெடிலடிநான்கும் ஒத்திருக்கையாலே கலித்துறை.  “நேரசைபதினாறே நிரையசைபதினேழே” என்று அடியெழுத்து ஒவ்வாதிருந்தது – கட்டளைக்கலித்துறையல்லாமையால்.

     ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லார் – முற்பட நித்யஸூரிகள் வரிசையைப் பெற்று, பின்னை ஸம்ஸாரமாகிற அறவைச்சிறை வெட்டிவிடப் பெறுவர்கள் என்கிறார்.

     (அமரர்கள் தொழுதெழ) கவிழ்ந்து “உப்புச்சாறு கிளறுவதெப்போதோ?” என்று கிடக்கிற தே3வஜாதியானது எழுத்துவாங்கும்படியாகவாயிற்று தோளும் தோள்மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாபோலே கடைந்தபடி.  (தொழுதெழ) கு3ணங்களுக்குத் தோற்று “தொழுதெழு” (1-1-1) என்கிற தம் பாசுரமேயாய்விட்டது அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் என்கிறார்.  (அமர்பொழில்) சேர்ந்த பொழில்.  (வளங்குருகூர்) வளப்பத்தையுடைத்தாய் – ஸம்பத்தையுடைத்தான திருநகரி.  (சடகோபன் குற்றேவல்கள்) இத்திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் வாசிகமான அடிமை செய்தபடியாயிற்று இதுதான்.  பூர்ண விஷயத்தில் வாசிகமான வ்ருத்திக்கு மேற்படச் செய்யலாவதில்லையே.  “தத்3விப்ராஸோ விபந்யவ:” என்று நித்யஸூரிகளுக்கும் இதுவேயிறே வ்ருத்தி.  (அமர் சுவையாயிரம்) ரஸக4நமாயாயிற்று ஆயிரந்தானிருப்பது.  இத்தால் – வாசிகமான அடிமை “முறை” என்று கார்யபு3த்3த்4யா செய்யவேண்டா என்றபடி.

     (அவற்றினுளிவைபத்தும்) “விண்ணவரமுதுண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட” (திருமொழி 6.1.2) என்னுமாபோலே, அவைதன்னிலே ரஸக4நமாயிருக்குமாயிற்று இத்திருவாய்மொழி.  இவற்றை அப்4யஸிக்கவல்லார், நித்யஸூரிகளோடொத்த உச்ச2ராயத்தை உடையராய், தங்களுடைய ஜந்மமாகிற விலங்கு அறப்பெறுவர்கள்.  இப்பத்தைக் கற்றபோதே இவனை நித்யஸூரிகளிலே ஒருவனாக நினைப்பிடும்; ஶரீரவிஶ்லேஷம் பிறந்தால் போய்ப்புகுமித்தனை; ராஜா ஒருவனுக்கு நாடிட்டால் க்ரமத்திலே போய்ப்புகுமித்தனையிறே.  ராஜபுத்ரன் தலையிலே முடியை வைத்து, பின்னை விலங்கு வெட்டிவிடுமாபோலே, நித்யஸூரிகளிலே ஒருவராம்படியான தரத்தைப் பெற்று, பின்னை ஸம்ஸாரநிக3லவிச்சேதத்தைப் பெறுவர்கள்.

     அன்றியே, (அமரரோடுயர்வில் சென்று) ஆதிவாஹிகரோடே விரஜையிலே சென்று.  (அறுவர் தம் பிறவியஞ்சிறையே) ஸூக்ஷ்மஶரீர விதூ4நநம் பெறுவர்.  “த்யக்த்வா தே3ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி” என்று அருளிச்செய்த அதுவே ப2லமாகக்கடவது.

     முதற்பாட்டில் ஸுலப4னென்றார்; இரண்டாம்பாட்டில் – கீழ் ப்ரஸ்துதமான ஸௌலப்4யத்தை ஸப்ரகாரமாக அருளிச்செய்தார்; மூன்றாம்பாட்டில் – அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய நிலமல்ல என்றார்; நாலாம் பாட்டில் – அப்படிகள்தான் ஆஶ்ரிதர்க்கு அறியலாம், அநாஶ்ரிதர்க்கு அறியப்போகாது என்றார்; அஞ்சாம்பாட்டில் – இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த ப4க்திமார்க்க3த்தாலே ஆஶ்ரயியுங்கோள் என்றார்; ஆறாம்பாட்டில் – ஆஶ்ரயணீயவஸ்து இன்னதென்றும், ஆஶ்ரயிக்கும் ப்ரகாரம் இன்னதென்றும் அருளிச்செய்தார்.  ஏழாம்பாட்டில் – நீங்கள் மந்தா3யுஸ்ஸுக்களாகையாலே விளம்பி3க்கவொண்ணாது, கடுக ஆஶ்ரயியுங்கோள் என்றார்; எட்டாம் பாட்டில் – ஆஶ்ரயிக்கவே விரோதி4களடங்கலும் நஶிக்கும் என்றார்; ஒன்பதாம்பாட்டில் – ப்3ரஹ்மேஶாநாதி3களுக்கும் காரணபூ4தனானவன் வந்து அவதரிக்கைக்கு ஹேது அருளிச்செய்தார்; பத்தாம்பாட்டில் – இப்படி ஸுலப4னானவனை த்ரிவித4கரணங்களாலும் அநுப4விக்கப் பாரித்தார்; இத்தை அப்4யஸித்தார்க்குப் ப2லம் சொன்னார் நிக3மத்தில்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3திபத்துடை

தூ3ரஸ்த2மப்யத2 முநி: கமலாஸஹாயம்
ஐச்சை2: ஸமுத்34வஶதை: ஸுலபீ44வந்தம் |
ஆக்2யாய ப4க்திமபி தத்ர விதா4ய தஸ்ய
ஸேவாம் சகாங்க்ஷ கரணத்ரயதஸ்த்ருதீயே || 3

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிபத்துடை

3ந்தா4ர்ஹத்வாத் ஸ்வப4க்தை: அதி4கதரகு3ணாநந்ததி3வ்யாவதாராத்
ஸர்வேஷ்வாஸக்திமத்த்வாத் நதஸுக3மதயா ஸ்வப்ரபோ34ப்ரத3த்வாத் |
க்2யாதாபி4க்2யாதிசிஹ்நாத் ஸ்வருசிவிதரணாத் ஸர்வகாலாஶ்ரயத்வாத்
ஶர்வாதே3: ஸ்வாங்க3தா3நாத் ப்ரஹிதபத3தயா‍நந்தஸௌலப்4யமாஹ || 3

திருவாய்மொழி நூற்றந்தாதி

பத்துடையோர்க் கென்றும் பரனெளிய னாம்பிறப்பால்*
முத்திதரு மா நிலத்தீர் மூண்டவன்பால்*– பத்திசெயும்
என்றுரைத்த மாறன்தன் இன்சொல்லாற் போம்* நெடுகச்
சென்றபிறப் பாமஞ் சிறை. 3

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.