ஆறாம் திருவாய்மொழி
பரிவதில்: ப்ரவேஶம்
*****
ப – ஆறாந்திருவாய்மொழியில், ‘இப்படி ஶீலவானாகிலும், ஶ்ரிய:பதியாகையாலே அவாப்தஸமஸ்தகாமனான பூர்ணனை ஆராதிக்குமிடத்தில் ததநுரூபமான உபகரணாத்யபாவத்தாலே துஷ்கரமாகில் செய்வதென்?’ என்று கூசவேண்டாதபடி, பூர்த்திதானே, ஆபிமுக்யமே பற்றாசாக அங்கீகரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஶ்ரயணம் ஸுகரமென்று ப்ரதிபாதிக்கைக்காக; ஆராதநோபகரண ஸௌகர்யத்தையும், ஆராதகனுடைய அதிகாரஸௌகர்யத்தையும், அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷகுணம் பாராமையையும், தன்பெருமை பாராதே அங்கீகரிக்கும் பந்தவிசேஷத்தையும், அநந்யப்ரயோஜநவிஷயத்தில் ஆதராதிஶயத்தையும், அவர்களுக்கு அத்யந்தபோக்யனாம்படியையும், அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய ஆஶ்ரயணம் காலக்ஷேப ப்ரகாரமென்னுமிடத்தையும், அஞ்ஜலிமாத்ரத்தாலே அநிஷ்டநிவ்ருத்தியையும் இஷ்டப்ராப்தியையும் பண்ணுமென்னுமிடத்தையும், அநிஷ்டநிவ்ருத்தி அவனுடைய ஸங்கல்பாதீநமென்னு மிடத்தையும், அநிஷ்டத்தை அவிலம்பேந நிவர்த்திப்பிக்கையையும் சொல்லி, ஸ்வாராததையை உபதேஶிக்கிறார்.
ஈடு – முதல் திருவாய்மொழியிலே, அவன் ஸர்வஸ்மாத்பரனாயிருக்கிறபடியைத் தாம் அநுப4வித்தார்; இரண்டாம் திருவாய்மொழியிலே, இப்படி பரனானவனை ப4ஜியுங்கோள் என்றார்; அநந்தரம், ப4ஜநத்துக்குறுப்பாக அவனுடைய ஸௌலப்4யத்தை அருளிச்செய்தார்; அதுக்குறுப்பாக அவனுடைய அபராத4 ஸஹத்வத்தை அருளிச்செய்தார்; அதுக்குறுப்பாக ஶீலவானென்றார். இவை யெல்லாம் உண்டானாலும் பசையில்லையிறே பரிமாற்றத்திலே அருமை தட்டியிருக்குமாகில் என்ன; அது வேண்டா, ஸ்வாராத4ன் என்கிறார்.
கீழில் திருவாய்மொழியிலே, “அயோக்3யன்” என்று அகன்ற இவரைப் பொருந்த விட்டுக்கொண்ட இதுக்கு ஒரு ப்ரயோஜநம் கண்டிலோமீ!; பொருந்த விட்டுக்கொள்ளுகிறதுதான் ஒரு பரிமாற்றத்துக்கிறே. அதில், க்ஷுத்3ரனான இவனாலே க்ஷுத்3ரோபகரணங்களைக்கொண்டு ஸர்வேஶ்வரனை ஆஶ்ரயித்துத் தலைக்கட்டப்போகாமையாலே, ஸம்ஸாரியான இவனாலே நேர்கொடுநேராய் ஆஶ்ரயித்துத் தலைக்கட்டவொண்ணாதபடி அவாப்த ஸமஸ்தகாமனாயிருக்கையாலும், இவனிட்டதுகொண்டு த்ருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாகையாலும், இவ்விரண்டுக்கும் அடியாக ஶ்ரிய:பதியாயிருக்கையாலும், இவன் அவனை ஆஶ்ரயிக்கை என்றொரு பொருளில்லையீ என்ன? அதுவேண்டா, அப்படிகளடைய ஆஶ்ரயணத்துக்கு உறுப்பு, இவன் தன் ஸ்வரூபலாப4த்துக்கு உறுப்பாகக் கிஞ்சித்கரிக்குமிதுதான் தன்பேறாக நினைத்திருக்கும்; இதுக்கு மேற்படத் தனக்கு வேறொன்று தேடவேண்டாதபடி எல்லாம் கைப்புகுந்திருப்பானொருவனாகையாலும், இவனிட்டதுகொண்டு த்ருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாயிருக்கையாலே, இவன்பக்கல் பெற்றதுகொண்டு முகங்காட்டுகைக்கு உடலாயிருக்கையாலும், ஶ்ரிய:பதியாகையாலே ஸுஶீலனாயிருக்கையாலும், இதரஸமாஶ்ரயணம்போலே ப4க3வத்ஸமாஶ்ரயணம் அருமைப்பட்டிராது. இனி, இதுதன்னிலே இழியவே, விரோதி4களடங்கலும் நஶிக்கும்; ஆஶ்ரயணந்தான் க்லேஶரூபமாயிருக்கையன்றியே போ4க3ரூபமா யிருக்கும்; இவனுக்கு வருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது உபகரணமாயிருக்கும்; ப4க3வத் ஸமாஶ்ரயணமாகையாலே ப்ரத்யவாய ப்ரஸங்க3மில்லை; த்3ரவ்யநியதி, காலநியதி, அதி4காரிநியதி இல்லை; இப்படியிருக்கையாலே ஆஶ்ரயணம் ஸுகரம்; ஆஶ்ரயியுங்கோள் என்கிறார். “த்வத3ங்க்4ரிமுத்3தி3ஶ்ய” – அல்லாத ஆஶ்ரயணீயரிற்காட்டில் இவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும், இவன்பக்கல் ஶேஷபூ4தனுக்கு இழியும் துறை திருவடிகளென்னுமிடமும் சொல்லுகிறது. “கதா3பி” – காலநியதியை விதி4க்கிற கர்மத்திற்காட்டில் வ்யாவ்ருத்தி. “கேநசித்” – அதி4காரி நியதியை விதி4க்கிறவற்றிற்காட்டில் வ்யாவ்ருத்தி. “யதா2ததா2” – க்ரம நியதியை அபேக்ஷித்திருக்கும் கர்மங்களில் வ்யாவ்ருத்தி. “வா” “அபி” – என்கையாலே – விகல்ப ஸமுச்சயங்களில் ஒன்றே ஆகக்கடவது (எல்லாம் கூடியே ஆகக்கடவது) என்கிற கர்மத்திற்காட்டில் வ்யாவ்ருத்தி. “ஸக்ருத்” – தீ3ர்க்க4ஸத்ராதி3களில் வ்யாவ்ருத்தி. “க்ருத:” – ஆதி3கர்மணிக்தவாய், உத்3யோக3மாத்ரத்திலே ப2லமாகச் சொல்லுகிறது. “அஞ்ஜலி:” – வித்தவ்யயாயாஸ ஸஹகாரி ஸாத்4யமான அஶ்வமேதா4தி3களில் வ்யாவ்ருத்தி. “ததை3வ” – தே3ஶாந்தரே காலாந்தரே நின்று ப2லிப்பனவாகச் சொல்லுகிற கர்மங்களில் வ்யாவ்ருத்தி. “முஷ்ணாதி” – “இவன்தான் தொடர்ந்து பிடிக்கும்” என்று இவனை அறியாமே போம் என்கை. “சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தன” (பெரியாழ்வார் திருமொழி 5-4–3) என்கிறபடியே. “அஶுபா4நி” – ஒரு கர்மம் ஒரு பாபத்தைப் போக்குவதாகச் சொல்லுகிற அதில் வ்யாவ்ருத்தி. “அஶேஷத:” – வாஸனைகிடக்கப் போக்கும் கர்மங்களில் வ்யாவ்ருத்தி. “ஶுபா4நி” – ஒரு ஸுக்ருதம் ஒரு ப2லத்தைப் ப2லிப்பதாகச் சொல்லுவதில் வ்யாவ்ருத்தி. “புஷ்ணாதி” – தீமையைப் போக்கிவிடுமளவன்றிக்கே, அது போனவிடமெங்கும் நன்மையாலே நிறைக்கும். “ந ஜாது ஹீயதே” – ப2லத்தைக் கொடுத்துத் தான் நஶித்துப்போமதில் வ்யாவ்ருத்தி.
“பத்ரம் புஷ்பம் இத்யாதி3” – த்3ரவ்யதாரதம்யம் பார்ப்பதில்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமேயாயிற்றுப் பார்ப்பது. “அஶ்நாமி” – இப்படித் தரைப்பட்டவற்றை மநோரத2பத2த்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற் போலே நினைத்திருப்பனென்னுதல்; அவன் கலங்கித் தருமாபோலே, நானும் கலங்கி அடைவுகெட விநியோக3ம் கொள்ளுவன் என்னுதல்.
“அந்யத் பூர்ணாத3பாம் கும்பா4தி3த்யாதி3”, “ந சேச்ச2தி” – இவனுடைய உத்3யோக3மாத்ரத்திலே வயிறு நிறையுமாயிற்று அவனுக்கு.
“யா: க்ரியாஸ் ஸம்ப்ரயுக்தாஸ்ஸ்யு:” – அபி4மதவிஷயத்தின் பரிமாற்றம் போலே எல்லாம் உத்3தே3ஶ்யமாய்த்தோற்றும். “ஏகாந்த க3தபு3த்3தி4பி4:” – இதொன்றுமே வேண்டுவது. “தாஸ்ஸர்வா:” – அவற்றில் ஒன்றும் விட்டுப்பிடியான். “ஶிரஸா ப்ரதிக்3ருஹ்ணாதி” – இவன் காலாலே பொகட்டவற்றையும் அவன் தலையாலே சுமக்கும். “தே3வ:” – காலாலே கொள்ளப் பிறந்தவன். “ஸ்வயம்” – செல்வக்கிடப்பு உண்டென்னா, மஹிஷீஸ்வேத3த்துக்கு ஆளிட வொண்ணாதே. ஆக இப்படிகளாலே, அவனுடைய ஸ்வாராத4தையைச் சொல்லுகிறார் இத்திருவாய்மொழியாலே.
முதல் பாட்டு
*பரிவதில் ஈசனைப் பாடி*
விரிவது மேவ லுறுவீர்*
பிரிவகை யின்றிநன் னீர்தூய்*
புரிவது வும்புகை பூவே.
ப – முதற்பாட்டில், ஆராதநோபகரண ஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.
பரிவதில் – து:காதி ஹேயப்ரதிபடனாய், ஈசனை – (நிகிலநியந்த்ருத்வாதி ஸமஸ்தகல்யாணகுண பூர்ணனான) ஸர்வேஶ்வரனை, பாடி – (அநுபவஜநிதப்ரீதிகாரித ஸாமகாநமுகத்தாலே) பாடி, விரிவது – ஆவிர்பூதமான ஸ்வரூபவிகாஸத்தை, மேவல் – பெறுகையிலே, உறுவீர் – உறுதியை யுடையவர்களே! பிரிவகை இன்றி – (ப்ரயோஜநத்தைக்கொண்டு) கடக்கப்போகையின்றிக்கே அநந்யராய், நல்நீர் – ஶுத்த ஜலத்தை, தூய் – (ப்ரேமத்தாலே அக்ரமமாகப்) பரிமாறி, புரிவதுவும் – ஸமர்ப்பிக்குமதுவும், புகை பூவே – கேவலம் புகையும் பூவும். “புரிவதுமாவது பூவே” என்று பாடமாய் – ‘தேட எளியபூ’ என்று சொல்லுவாருமுளர்.
ஈடு – முதற்பாட்டு. எம்பெருமான் பரிபூர்ணனாகையாலே ஸ்வாராத4ன்
என்கிறார்.
(பரிவது) து3:க்க2மாகவுமாம், பக்ஷபாதமாகவுமாம். (இல்) இல்லென்பது இல்லாமை. இத்தால் – து3:க்க2மில்லை என்னுதல், பக்ஷபாதமில்லை என்னுதல். து3:க்க2மாவது – “நாம் இடுகிறவை அவன் கொள்ளுமோ கொள்ளானோ?” என்று ஆஶ்ரயிக்கிற இவன் நெஞ்சிலே து3:க்க2முண்டாமன்று ஆஶ்ரயணீயனுக்கு து3:க்க2மாமிறே. அன்றிக்கே, பக்ஷபாதமானபோது – ஒருவன் கு3ருவாக த்3ரவ்யத்தைக் கொடுத்தால் அவன்பக்கலிலே பக்ஷபதித்திருக்குமாகில், “து3ஷ்ப்ராபன்” என்று ஆஶ்ரயணீயனுக்கு ஹேயமிறே. இவையில்லாதபடி யிருக்கையாலே ஹேயப்ரத்யநீகன் என்றபடி.
தரதமவிபா4க3ம் பாராதேயிருக்கைக்கு அடியென்னென்னில் (ஈசனை) வகுத்த ஸ்வாமியாகையாலே. ஹேயப்ரத்யநீகதை புக்கவிடத்தே கல்யாணகு3ணங்களும் புகுமிறே; ஆக, ஹேயப்ரத்யநீகதையும் கல்யாணகு3ணயோக3மும் சொல்லிற்றாயிற்று. (ஈசனை) புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும்போது, நெடுநாள் பச்சை தேடி விருந்திட்டால், “இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ!” என்று நெஞ்சாறலோடே தலைக்கட்டவேண்டிவரும். புத்ரன் பிதாவுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய், நெஞ்சாறல் படவேண்டாதிருக்குமிறே. அப்படிப்பட்ட ஸம்ப3ந்த4த்தைப்பற்ற “ஈசன்” என்கிறது.
(பாடி) ஸர்வேஶ்வரனைக் கிட்டினால், வாங்நியதியோடே நிற்கை யன்றிக்கே, ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டுப் பாடி. (பாடி விரிவது மேவலுறுவீர்) “ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே” என்று பாடி, விஸ்த்ருதராகையாகிற பேறு பெறவேண்டியிருப்பீர். பேறு க4னத்திருந்தது; நாங்கள் செய்யவேண்டுவது என்னென்னில் (பிரிவகையின்றி) பிரிகையாகிற வகையின்றி – “இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் – உன்பெருமை மாசூணாதோ” (1-5-2) என்று அகல வகையிட்டுக்கொண்டு அகலாதே. (நல் நீர்) ஏலாதி3ஸம்ஸ்காரமுமின்றிக்கே யிருக்கை. கேவல ஜலமும் அமையும். (தூய்) “யதா2 ததா2 வாபி”. (புரிவதுவும்) இவன் அவனுக்கு அருட்கொடையாகக் கொடுக்குமதுவும். (புகை பூவே) அகிற்புகை, கருமுகைப்பூ என்று விஶேஷியாமையாலே, ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும்.
“செதுகையிட்டுப் புகைக்க அமையும், கண்டகாலி இடவும் அமையும்” என்று பட்டர் அருளிச்செய்யும்படி. இத்தை பட்டர் அருளிச்செய்தவாறே –
“ந கண்டகாரிகாபுஷ்பம் தே3வாய விநிவேத3யேத்” என்னாநின்றதே! என்று நஞ்ஜீயர் கேட்க, “அவனுக்கு ஆகாது என்கிறதல்ல, ‘பறிக்கிற ஆஶ்ரிதன் கையிலே முள் பாயும்’ என்றதுக்காகத் தவிர்ந்ததுகாணும்” என்று அருளிச்செய்தார். “கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியுமாம்பலும்” (திருமொழி 11-7-6) என்று விஸஜாதீயங்களைச் சேர எடுக்கிறது கண்டீரே, த்3ரவ்யதாரதம்யம் பார்ப்பதில்லை என்கைக்காக; (‘புள்ளாயோரேனமுமாய்ப் புக்கிடந்தான்’ (திருமொழி 11-7-6);) “அப்ராக்ருத த்3ரவ்யம் வேணும்” என்றிருந்தானாகில் ஸ்ரீவைகுண்ட2த்தில் இரானோ? வாராஹகல்பம் பாராநிற்கச்செய்தே “ஸ்ரீவராஹநாயனார்க்கு முத்தக்காசை அமுதுசெய்விப்பது” என்று கிடந்ததாய், “இதென்ன மெய்ப்பாடுதான்!” என்று நஞ்ஜீயர் போர வித்3த4ராய் அருளினார். (உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே) (திருமொழி 11.7.6) “இப்படி அநுஸந்தி4யாதாருடைய ஹ்ருத3யத்தை ஹ்ருத3யமாக நினைத்திரோம் நாங்கள் பதின்மரும்” என்று தம்மையொழிந்த ஆழ்வார்களையும்.
இரண்டாம் பாட்டு
மதுவார் தண்ணந் துழாயான்*
முதுவேத முதல் வனுக்கு*
எதுவேது என்பணி என்னாது*
அதுவே ஆட்செய்யு மீடே.
ப – அநந்தரம், அதிகாரிஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.
அம் – (ஸர்வேஶ்வரத்வத்துக்கு) ஸூசகமாய், மது வார் – மதுஸ்யந்தியாய், தண் துழாயான் – குளிர்ந்த திருத்துழாயையுடையனாய், முது வேதம் – பழையதான வேதங்களுக்கு, முதல்வனுக்கு – ப்ரதாநதயா ப்ரதிபாத்யனானவனுக்கு, எது – (அநுரூபமாகச் செய்யும்படி) எது?, என்பணி ஏது – நான் செய்யும்பணி ஏது? என்னாததுவே – என்னாதே “அஹம் ஸர்வம்கரிஷ்யாமி” என்று ஸர்வத்திலும் ஆதரமுடையனாமதுவே, ஆட்செய்யும் ஈடு – அடிமைசெய்கைக்குத் தகுதி. “புரிவதுவும் புகைபூவே” என்கிற பாடத்தில், “வதுவார்” என்றெடுத்த அந்தாதி – உடலெழுத்தான அகரத்தை முதலாக எடுத்ததென்று கொள்வது; “ஏபாவம்” என்கிற பாட்டில், உயிரெழுத்து முதலானவோபாதி.
ஈடு – இரண்டாம் பாட்டு. ஆஶ்ரயிக்குமவனுக்கு த்3ரவ்யத்தில் குறை பார்த்து அகலவேண்டா என்றார் முதற்பாட்டில்; “நான் அதி4காரி அல்லேன்” என்று அகலவேண்டா என்கிறார் இதில்.
(மதுவார் தண்ணந்துழாயான்) “புரிவதும் புகை பூவே” என்றது கீழ்; இதில் “மதுவார் தண்ணந்துழாயான்” என்று தொடங்கிற்று; இது சேரும்படி என்னென்ன; “பூவாகில் மதுவோடே கூடியல்லதிராமையாலே சேரும்” என்று சொல்லுவர்கள் தமிழர்; “வதுவார் தண்ணந்துழாயான்” என்று பாட3மானபோது போரச்சேரும்; வதுவையென்று – மணம். ஆர்தல் – பூர்ணம். வதுவை “வது” என்று – கடைக் குறைத்தலாய், நறுநாற்றத்தையுடைய துழாய் என்றுமாம். இது தமிழர் போரச்சேரும் என்பர்.
(மதுவார் இத்யாதி3) ஒரு வாடல் மாலையைக் கொண்டுவந்து திருக்குழலிலே வளையமாக வைத்தால், திருக்குழலோட்டை ஸ்பர்ஶத்தாலே செவ்விபெற்று மது4நிரம்பி, சினையாறுபட்டு, வார்ந்து வெள்ளமிடாநிற்கும். (முதுவேத முதல்வனுக்கு) இவ்வொப்பனை அழகு பேசும்போது, இன்னமும் பாசிபூத்த வேத3மே பேசவேண்டாவோ? நித்யமாய் அபௌருஷேயமான வேத3ப்ரதிபாத்யனாயுள்ளவனுக்கு. வேதமுதல்வனாகையாவது – “ஶாஸ்த்ர யோநித்வாத்” என்கிறபடியே வேத3ப்ரதிபாத்3யன் என்கை. “மதுவார் தண்ணந் துழாயான்” என்கையாலே – ஸர்வாதி4கன் என்றதாயிற்று. “முதுவேத முதல்வன்” என்கையாலே – பரிபூர்ணன் என்றதாயிற்று; இரண்டும் ஸ்வாராத4ன் என்கைக்கு உறுப்பாகிறது.
(எதுவேது இத்யாதி3) முதுவேத முதல்வனுக்கு எது பணி? என் பணி ஏது? என்னாததுவே, ஆட்செய்கைக்கு அதி4காரமாவது; “நித்யஸூரிகளன்றோ அவனுக்கு ஈடான அடிமை செய்யவல்லார், நான் செய்யுமது ஏது?” என்று தன்னைக்கொண்டு கைவாங்காதொழியுமதுவே. அன்றிக்கே, “முதுவேத முதல்வனுக்கு எது பணி? ஏது என் பணி?” என்னாததுவே – “இது அவனுக்கு ஈடன்று” என்று சிலவற்றை விடாதே, ஸகல கைங்கர்யத்திலும் அந்வயிக்குமதுவே ஆட்செய்கைக்கு அதி4காரமாவது என்னுதல்.
மூன்றாம் பாட்டு
ஈடும் எடுப்பும்இல் ஈசன்*
மாடு விடாதென் மனனே*
பாடும்என்நா அவன் பாடல்*
ஆடும் என்அங்கம் அணங்கே.
ப – அநந்தரம், அதிகாரியினுடைய தோஷகுணம் பாராத ஆராத்யனான ஈஶ்வரன் பக்கலிலே தம்முடைய கரணத்ரயமும் அவகாஹித்தமையை அருளிச்செய்கிறார்.
ஈடும் – (தோஷநிபந்தநமாக) விட்டுவைக்கையும், எடுப்பும் – (குணநிபந்தநமாக) எடுத்துக்கொள்ளுகையும், இல் – இல்லாமையாலே, ஈசன் – (ஸர்வஸாதாரண ஸம்பந்தத்தையுடையனான) ஈஶ்வரனுடைய, மாடு – பரிஸரத்தை, என்மனன் – என்நெஞ்சு, விடாது – விடுகிறதில்லை; என்நா – என்னுடைய நாவானது, அவன்பாடல் – அவன் விஷயமானபாடலான திருவாய்மொழியை, பாடும் – பாடாநின்றது; என் அங்கம் – என் ஶரீரம், அணங்கு – தைவாவிஷ்டம்போலே, ஆடும் – ஆடாநின்றது. தனித்தனி “என், என், என்” என்று – கரணத்ரயத்திலும் தம்முடைய உகப்புத் தோற்றுகிறது. ஏகாரம் – “விடாது, (பாடும்), ஆடும்” என்னும் வினைகளுடனே கூடிக்கிடக்கிறது.
ஈடு – மூன்றாம் பாட்டு. அவனுடைய இஸ்வபா4வத்தை அநுஸந்தி4த்து, தாம் அதி4கரித்த கார்யத்தை மறக்கும்படி தம்முடைய மநோவாக்காயங்களுக்கு அவன் பக்கலிலே உண்டான ப்ராவண்யத்தை அருளிச்செய்கிறார்.
(ஈடும் எடுப்புமில் ஈசன்) சிலரை உபேக்ஷித்தல், சிலரை ஸ்வீகரித்தல் செய்யாத ஸர்வேஶ்வரன்; ஸம்ப3ந்த4ம் ஸர்வஸாதா4ரணமாயிருக்கையாலே, சிலரை விடப்போகாதிறே. “தே3வாநாம் தா3நவாநாஞ்ச ஸாமாந்யமதி4தை3வதம்” என்று – ஸ்வீகரிக்குமவனோடு உள்ள ஸம்ப3ந்த4ம் விடுமவன் பக்கலிலும் உண்டிறே. (ஈசன் மாடு விடாது என் மனனே) ஒரு ஸாத4நபு3த்3த்4யா கிட்டிற்றாகிலிறே ப2லம் கைப்புகுந்தவாறே விடுவது. நான் அதி4கரித்த கார்யத்துக்கு எனக்கு நெஞ்சு ஒழிகிறதில்லை.
“நாவியலாலிசை மாலைகளேத்தி”(4.5.4)யன்றோ; மநஸ்ஸஹகாரம் வேணுமோ உமக்கு? உம்முடைய அஹ்ருத3யமான உக்தி அமையாதோ எங்களுடைய ஹிதத்துக்கு? என்ன, – (பாடும் என் நா அவன் பாடல்) என்னுடைய வாகி3ந்த்3ரியமும் மநஸ்ஸு அதி4கரித்த காரியத்திலே அதி4கரித்தது. ஆனால் உம்முடைய ஹஸ்தமுத்3ரை அமையாதோ எங்களுக்கு அர்த்த2நிஶ்சயம் பண்ணுகைக்கு? என்ன, – (ஆடும் என் அங்கம் அணங்கே) அதுவும் அவ்விஷயத்திலே ப்ரவணமாயிற்று.
நான்காம் பாட்டு
அணங்கென ஆடும் எனங்கம்*
வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்*
குணங்கெழு கொள்கையி னானே.
ப – அநந்தரம், இப்படி என்னையும் அங்கீகரித்த ஸ்வாமி, நித்யஸூரிகளுக்கு நிரந்தராநுபாவ்யமான குணவைபவத்தை யுடையனென்கிறார்.
அணங்கென – அணங்கேறினாற்போலே, ஆடும் – (ப்ரேமத்தாலே) ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணுகிற, என் – என்னுடைய, அங்கம் – ஶரீரம், வணங்கி வழிபடும் – ப்ரணாமாதிமுகத்தாலே ஆராதிக்கும்படியான, ஈசன் – ஸ்வாமியானவன், அமரர் – நித்யாநுபவபரரான ஸூரிகள், பிணங்கிப்பிதற்றும் – (ஸ்வாநுபூத குணதாரதம்யமுகத்தாலே) ஸரஸவிவாதகோலாஹலோக்தி பண்ணும்படியான; குணம்கெழு – குணங்கள்செறிவு, கொள்கையினான் – கோட்பாட்டையுடையவன்கிடீர்!. கொள்கையென்று – ஆஶ்ரயவிஷயமாகவுமாம். இப்படி ஸர்வாதிகன்கிடீர் பந்தத்தாலே என்னை அடிமைகொண்டான் என்று கருத்து.
ஈடு – நாலாம் பாட்டு. தம்முடைய மநோவாக்காயங்களுக்கு அவன்பக்கல் உண்டான ப்ராவண்யம் காதா3சித்கமாய்விடுகையன்றிக்கே, நித்யஸூரிகளைப் போலே யாத்ரையானபடி சொல்லுகிறார்.
“அணங்கென ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன் பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான்” கிடீர் என்னுதல்; “பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினானான ஈசனை அநுப4வித்து, அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும்” என்னுதல்; தை3வாவிஷ்டம் என்னலாம்படி ஆடுகிற என் அங்க3ம், வணங்கி அதுதானே யாத்ரையாய்ச் செல்லும்படியிருக்கிற ஈசன். ((பிணங்கி அமரர் பிதற்றும்) தாந்தாம் அநுப4விக்கிற கு3ணங்களுக்கு ஏற்றஞ்சொல்லப்புக்கு, எதிரி சொல்லுகிற கு3ணங்களுக்கு ஏற்றம் சொல்லித்தலைக்கட்டுகை.) தாந்தாம் அகப்பட்ட கு3ணங்களைச் சொல்லி, “நான் முந்துறச் சொல்ல நான் முந்துறச் சொல்ல” என்று பிணங்கி நித்யஸூரிகள் ஜ்வரஸந்நிபதிதரைப்போலே அடைவுகெடக் கூப்பிடுகிற கு3ணங்கள் வந்து சேருகைக்கு ஆஶ்ரயமானவன். ரத்நாகரம்போலே கு3ணங்கள் சேருகைக்கு ஆஶ்ரயமாயுள்ளானென்னுதல்; இக்கு3ணங்கள் வந்து கெழுமுகையை ஸ்வபா4வமாக உடையவன் என்னுதல். ஸர்வஜ்ஞரானவர்கள் படுகிற பாடு என்னுடைய கரணங்களுக்கும் உண்டாகாநின்றது கிடீர் என்கிறார்.
ஐந்தாம் பாட்டு
கொள்கைகொ ளாமை இலாதான்*
எள்கல் இராகம் இலாதான்*
விள்கைவிள் ளாமைவி ரும்பி*
உள்கலந் தார்க்கு ஓரமுதே.
ப – அநந்தரம், அநந்யரான அதிகாரிகளுக்கு போக்ய னென்கிறார்.
கொள்கை – (குணம்பார்த்துக்) கனக்கக் கொள்ளுகையும், கொளாமை – (குணஹாநியாலே) கைவிடுகையும், இலாதான் – இல்லாதவனாய், எள்கல் – (கைவிடுகைக்கு அடியான) நெஞ்சில் நெகிழ்ச்சியும், இராகம் – (கைக்கொள்ளுகைக்கு அடியான) ராகமும், இலாதான் – இல்லாத ஸாதாரணனானவன்; விள்கை – (ப்ரயோஜநாந்தரங்களைக்கொண்டு) விட்டுப்போகையையும், விள்ளாமை – (அநந்யப்ரயோஜநராய்) விடாதொழிகையையும், விரும்பி – விரும்பிப் பார்த்து, உள்கலந்தார்க்கு – (தன்னோடு) அநந்யராய் உட்புகுந்தார்க்கு, ஓர் அமுது – அத்விதீயமான நித்யபோக்யமாம்.
ஈடு – அஞ்சாம் பாட்டு. திரியட்டும் தாம் அதி4கரித்த கார்யத்திலே போந்து, ஸர்வேஶ்வரன், தன்பக்கலிலே சிலர் வந்து கிட்டினால் “இவர்கள் ப்ரயோஜநாந்தரத்தைக் கொண்டு அகலுவர்களோ? நம்மையே ப்ரயோஜநமாகப் பற்றுவர்களோ?” என்று ஆராய்ந்து, தன்னையே ப்ரயோஜநமாகப் பற்றினவர்களுக்குத் தானும் நிரதிஶயபோ4க்3யனாயிருக்கும் என்கிறார்.
(கொள்கை கொளாமை இலாதான்) “இவன் ஜந்மவ்ருத்த ஜ்ஞாநங்களால் உயர்ந்தானொருத்தன், இவனை அந்தரங்க3வ்ருத்தி கொள்வோம்; இவன் அவற்றால் தாழ்ந்தானொருவன், இவனைப் புறந்தொழில் கொள்வோம்” என்னுமவை இல்லாதான். வ்ருத்தி கொள்ளும்போது இல்லையாகில், திருவுள்ளத்தாலே தான் நினைத்திருக்குமோ? என்னில் (எள்கல் இராகம் இலாதான்) திருவுள்ளத்தாலே சிலரை இகழ்ந்திருத்தல், சிலரை ஆத3ரித்தல் செய்யான். “ஈடும் எடுப்புமில் ஈசன்” (1.6.3) என்றவிடம் – ஸ்வீகார ஸமயத்தில் குறை பாரான் என்றது. இங்கு – பரிமாற்றத்தில் தரமிட்டுக் கொள்ளான் என்கை.
(விள்கை இத்யாதி3) இதொன்றுமே பார்ப்பது. விள்கை – ப்ரயோஜநங்களைக் கொண்டு விடுகை. விள்ளாமை – அநந்ய ப்ரயோஜநனாகை. விரும்பி – ஆத3ரித்து, உள்கலந்தார்க்கு – இவனையே ப்ரயோஜநமாகப் பற்றி இவனுடனே ஒருநீராகக் கலந்தவர்களுக்கு. ஓரமுதே – அத்3விதீயமான அம்ருதமாயிருக்கும்; ஆராவமு (5-8-1)திறே.
ஆறாம் பாட்டு
அமுதம் அமரர்கட் கீந்த*
நிமிர்சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்*
நிமிர்திரை நீள்கட லானே.
ப – அநந்தரம், ப்ரயோஜநாந்தரபரர்க்கு அபேக்ஷிதபலத்தைக் கொடுத்து, அநந்யர்க்கு அதிஶயிதபோக்யம் தானேயா மென்கிறார்.
அமரர்கட்கு – (சாவாமைக்கு ஆசைப்பட்ட) தேவர்களுக்கு, அமுதம் – (அதுக்கு மருந்தான) அம்ருதத்தை, ஈந்த – கொடுத்தவனாய், நிமிர் சுடர் – வளருகிற சுடரையுடைய, ஆழி – திருவாழியையுடையனாய், நெடுமால் – நிரவதிகமாஹாத்ம்யயுக்தனுமாய்க் கொண்டு, நிமிர் – (தன்னோட்டை ஸ்பர்ஶத்தாலே) வளர்ந்துவருகிற, திரை – திரைகளையுடைத்தாய், நீள் – (தன்னுடைய பெருமைக்கீடான) பரப்பையுடைய, கடலான் – திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவன், அமுதிலும் – (அக்கடலிற்பட்ட) அம்ருதத்திலும், ஆற்ற இனியன் – மிகவும் இனியன். கடலிலே தோற்றியிருக்கச் செய்தே, கடைந்த அம்ருதத்துக்கும் கிடந்த அம்ருதத்துக்கும் வாசி யிருக்கிறபடி.
ஈடு – ஆறாம் பாட்டு. “அவன்படி இதுவாயிருக்க, அவனை விட்டு ப்ரயோஜ நத்தைக் கொண்டு அகலுவதே!” என்று ப்ரயோஜநாந்தரபரரான தே3வர்களை நிந்தி3க்கிறார்.
(அமுதம் அமரர்கட்கு ஈந்த) “என்ன பரமோதா3ரனோ!” என்கிறார். “நீ வேண்டா, எங்களுக்குச் சாவாமைக்குப் பரிஹாரம் பண்ணித்தரவேணும்” என்றவர்களுக்கு அவர்கள் உகந்த பதார்த்தத்தைக் கொடுத்துவிடுவதே!
அவர்கள் ப்ரயோஜநத்தை அருவருத்து, தாம் உகந்த ப்ரயோஜநத்துக்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்லுகிறார், – (நிமிர் சுடராழி நெடுமால்) இவருடைய அம்ருதமிருக்கிறபடி. ‘நால்தோள் அமுது’ (6-10-9) இறே இவர்க்கு அமுது; “அமுதென்றும் தேனென்றும் ஆழியானென்றும்” (இரண்டாம் திருவந்தாதி – 85) என்று கையும் திருவாழியுமாயிறே இருப்பது இவருடைய அம்ருதம். இவர்கள் ப்ரயோஜநத்தைத் தலைக்கட்டிக்கொடுக்கையாலே உண்டான புகர் திருவாழியிலே தோற்றும்படி இருக்கை. (நெடுமால்) “நம்பக்கலிலே கொள்ளப்பெற்றோமே வேறொரு ப்ரயோஜநமாகிலும்!” என்று பண்ணின வ்யாமோஹாதிஶயம்.
(அமுதிலும் ஆற்றவினியன்) இவர்கள் வாசியறிவர்களாகில் இவனைக் கிடீர் பற்ற அடுப்பது. நம்பி திருவழுதிநாடுதா3ஸர், “இத்தே3வஜாதி வெறும் மரையோ? ‘உப்புச்சாறு கிளறுவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே, இவன் அழகையும் போ4க்3யதையையும் விட்டு!” என்பராம். ஆற்ற இனியன் – மிகவும் இனியன். (நிமிர்திரை நீள்கடலானே) “அஸந்நிஹிதன்” என்றுதான் விடுகிறார்களோ? அவ்வம்ருதம் படுகிற கடலிலேகிடீர் அவன் சாய்ந்தருளிற்று. தன் வாசியறியாதிருப்பார்க்கும் எழுப்பிக் கார்யங் கொள்ளலாம்படி கண்வளர்ந்தருளுகிறவன். “தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பலபரப்பி” (8-10-8) என்கிறபடியே கண்வளர்ந்தருளுகைக்கு ஈடான பரப்பையுடைத்தாய், ஸ்வஸந்நிதா4நத்தாலே திரைக்கிளப்பத்தையுடைத்தான கடலிலேயாயிற்று சாய்ந்தருளிற்று. “மாலும் கருங்கடலே! என் நோற்றாய்” (முதல் திரு. 19) என்னக்கடவதிறே.
ஏழாம் பாட்டு
நீள்கடல் சூழ் இலங் கைக்கோன்*
தோள்கள் தலைதுணி செய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி*
நாள்கடலைக் கழிமினே.
ப – அநந்தரம், “தஸ்ய வீரஸ்ய சரிதம்” என்னுங் கணக்கிலே விரோதிநிரஸந ஶீலனான சக்ரவர்த்தி திருமகனை ஆஶ்ரயித்துக் காலத்தைக் கழியுங்கோ ளென்கிறார்.
நீள்கடல் – நீண்ட கடலாலே, சூழ் – சூழப்பட்ட, இலங்கை – லங்கைக்கு, கோன் – நாயகனானவனுடைய, தோள்கள் – இருபது தோளையும், தலை – பத்துத்தலையையும், துணிசெய்தான் – துணித்தவனுடைய, தாள்கள் – (யுத்தகாலத்தில் புகுந்திட்ட) திருவடிகளை, தலையில் வணங்கி – தலையாலே வணங்கி, நாள் கடலை – காலமாகிற கடலை, கழிமின் – கடவுங்கோள். தலையில் என்று ஐந்தாம் வேற்றுமை. ‘தலைதுணி செய்தான்’ என்கிற ஒருமை – ஜாதிபரம். “தஶேந்த்ரியாநநம்” இத்யாதி கணக்கிலே, காலக்ஷேப விரோதியான இந்த்ரியபாரவஶ்யாதிகளை அறுத்துத் தருவான், ராவணாந்தக னென்று கருத்து.
ஈடு – ஏழாம் பாட்டு. அவன் நிரதிஶயபோ4க்3யன் என்றீர்; அவனை ப்ராபிக்கு மளவும் நடுவு காலக்ஷேபம் பண்ணும்படியென்? என்ன; அதுக்கன்றோ ‘மனத்துக் கினியா’(திருப்பாவை-12)னுடைய கு3ணங்களிருக்கிறது என்கிறார்.
(நீள்கடல் சூழ் இலங்கைக்கோன் இத்யாதி3) “பரந்த கடலை அகழாகவுடைத்தாய், அதுதானும் மிகையாம்படியான அரணையுடைத்தாயிருந்துள்ள லங்கைக்கு நிர்வாஹகனல்லேனோ” என்னும் து3ரபி4மாநத்தாலே “சக்ரவர்த்தி திருமகன்” என்று மதியாதே எதிரிட்ட பையலுடைய. (தோள்கள் தலை துணிசெய்தான்) “அகப்படாதவன் அகப்பட்டான், தப்பாமல் கொன்று விடுவோம்” என்று பாராதே, தோளைக்கழித்துத் தலையைச் சரித்துப் போதுபோக்காக நின்றுகொன்றபடி. அவனுடைய வீரசரிதங்களைக்கொண்டு திருவடியைப்போலே போதுபோக்கி. (நாள் கடலைக் கழிமினே) அவனுடைய போ4க்3யதை நெஞ்சிலே பட்டால், அவனை ப்ராபிப்பதற்கு முன்பு நடுவுபட்ட நாள் ஒரு கடல்போலே தோற்றுமாயிற்று. அன்றிக்கே, சக்ரவர்த்தி திருமகனை ஆஶ்ரயித்து, ஸம்ஸாரது3ரிதத்தைக் கழித்துக்கொள்ளுங்கோள் என்கிறாராதல்.
எட்டாம் பாட்டு
கழிமின்தொண் டீர்கள் கழித்து*
தொழுமின் அவனைத் தொழுதால்*
வழிநின்ற வல்வினை மாள்வித்து*
அழிவின்றி ஆக்கம் தருமே.
ப – அநந்தரம், அவன் விஷயத்தில் அஞ்சலிமாத்ரமே அநாதிஸித்தவிரோதியைக் கழித்து நித்யபுருஷார்த்தத்தைத் தருமென்கிறார்.
தொண்டீர்கள் – சபலரான நீங்கள், கழிமின் – (உங்கள் சாபல்யத்தைக்) கழியுங்கோள்; கழித்து – (அத்தைக்) கழித்து, அவ?ைன – (கீழ்ச்சொன்ன) சக்ரவர்த்தி திருமகனை, தொழுமின் – தொழுங்கோள்; தொழுதால் – ஓரஞ்ஜலிபண்ணின வளவாலே, வல் – (அநாதிஸித்தமாய் அநுபவித்துக் கழிக்க) அரிதான, வழிநின்ற வினை – ப்ராப்யப்ரதிபந்தகபாபங்களை, மாள்வித்து – இல்லையாக்கி, அழிவின்றி – மீட்சியில்லாதபடி (நித்யமாய்), ஆக்கம் – (ஸ்வப்ராப்திரூபமான) ஐஶ்வர்யாபிவ்ருத்தியை, தருமே – அவன் தந்தருளுகை அறுதி. தொண்டீரென்று – பகவத்ப்ரவணரைச் சொல்லி, கழிமினென்று – இதரநிவ்ருத்தியைச் சொல்லிற்றாகவுமாம்.
ஈடு – எட்டாம் பாட்டு. சக்ரவர்த்தி திருமகனுடைய வீரசரிதத்தை அநுஸந்தி4த்து, இதர விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே, அவன்தானே ப்ரதிப3ந்த4கங்களைப் போக்கி நித்யகைங்கர்யத்தைத் தந்தருளும் என்கிறார்.
(கழிமின்) பா3ஹ்யவிஷயங்களிலுண்டான ருசியைக் கழியுங்கோள். கழிக்கையாவது – “பொல்லாது” என்றிருக்கை. இந்த ருசியைப் பூண்கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச்சொன்னால் கழியார்களிறே; ப4க3வத்3 விஷயத்தில் சாபலமுடையீர்! கழிக்கப்பாருங்கோள். (கழித்துத் தொழுமின்) “அவனைத் தொழாநிற்கச்செய்தே இதுவும் க்ரமத்தாலே கழிகிறது” என்றிராதே, அவஶ்யம் கழித்தே தொழுங்கோள். “கழிமின்” என்றுவைத்து, “கழித்து” என்றது – இதரவிஷயங்களில் விரக்திதானே ப்ரயோஜநமாகப் போரும் என்கை. “தொழுமின்” என்றுவைத்து, “தொழுதால்” என்கிறது – கரும்பு தின்னக் கூலிபோலே, மேல் ஒரு ப2லமில்லையேயாகிலும் தொழுகைதானே ப2லம் போரும் என்கை.
இப்படி செய்தால் (வழிநின்ற வல்வினை மாள்வித்து) “இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபாநுப3ந்தி4யோ!” என்னும்படி பொருந்தியிருக்கிற ப்ரப3லகர்மங்களை வாஸநையோடே போக்கி. வழிநின்ற வல்வினை – நடுவே நின்று ப4க3வத் ப்ராப்தியை நிரோதி4க்கிற கர்மம் என்றுமாம். (அழிவின்றி ஆக்கம் தருமே) “ந ச புநராவர்த்ததே” என்கிறபடியே அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைத் தரும்.
ஒன்பதாம் பாட்டு
தரும வரும்பய னாய*
திருமக ளார்தனிக் கேள்வன்*
பெருமை யுடைய பிரானார்*
இருமை வினைகடிவாரே.
ப – அநந்தரம், ஶ்ரிய:பதியான அவன் ப்ரதிபந்தகத்தைத் தன் ஸங்கல்பத்தாலே போக்கு மென்கிறார்.
தருமம் – தர்மங்களுக்கும், அரு – பெறுதற்கரிய, பயனாய – ப்ரயோஜநமாயிருக்கிற, திருமகளார் – லக்ஷ்மியாகிற நாரீணாமுத்தமைக்கு, தனிக்கேள்வன் – அத்விதீயப்ரணயியென்கிற, பெருமையுடைய – பெருமையையுடைய, பிரானார் – ஸர்வேஶ்வரன், இருமை – புண்யபாபரூபமான இரண்டு வகைப்பட்ட, வினை – கர்மத்தையும், கடிவார் – முனிவர். கடிதல் – முனிதல். “அவ்வரும்பயனாயவற்றைத் தருந்திருமகளார்” என்னவுமாம். இவையிரண்டு விசேஷணமும் தனிக்கேள்வனோடே ஒட்டியும் சொல்லுவர்.
ஈடு – ஒன்பதாம் பாட்டு. தன்னைப் பற்றின மாத்ரத்திலே, இப்படி விரோதி4களைப் போக்கி இப்பேற்றைத் தரக்கூடுமோ? என்னில், வெறும் அவன்படியையோ பார்ப்பது, அருகே இருக்கிறார்படியையும் பார்க்க வேண்டாவோ? “ந கஶ்சிந்நாபராத்4யதி” என்பாரன்றோ அருகிருக்கிறார் என்கிறார்.
(தரும்) இவ்வர்த்த2த்தில் ஸம்ஶயமில்லை. (அவ்வரும் பயனாய) பெறுதற்கரிதாக ஶாஸ்த்ரங்களிலே ப்ரஸித்3த4மான ப்ரயோஜநரூபமானவற்றை. அன்றிக்கே, த4ர்மத்தினுடைய பரமப்ரயோஜநந்தான் வடிவுகொண்டாப்போலே யிருக்கிற பெரியபிராட்டியார்க்கு வல்லப4னாகையாலே அத்3விதீயநாயகனா யிருக்கிறவன் என்றுமாம். “அப்ரமேயம் ஹி தத்தேஜ:” என்கிறபடியே ஶ்ரிய:பதியாகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமிறே.
லக்ஷ்மீபதியாகையாலே வந்த மேன்மையையுடைய உபகாரகரானவர். பிரானார் – ஆஶ்ரிதாநுக்3ரஹமே ஸ்வரூபமாயுள்ளவர். (இருமை வினை கடிவாரே) பேர்வாசியேயாம்படி நாம் பண்ணிவைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும்
போக்குவார். புண்யபாபங்களுக்குத் தன்னில்தான் வைஷம்யமுண்டேயாகிலும், மோக்ஷவிரோதி4த்வாத் த்யாஜ்யமாகாநின்றனவிறே.
பத்தாம் பாட்டு
கடிவார் தீய வினைகள்*
நொடியா ரும்அள வைக்கண்*
கொடியா அடுபுள் உயர்த்த*
வடிவார் மாதவ னாரே.
ப – அநந்தரம், விரோதியைப் போக்குமிடத்தில், கொடிகட்டிச் சடக்கெனப் போக்குமென்கிறார்.
தீய வினைகள் – கொடிதான வினைகளை, நொடியாரும் – நொடிநிரம்பும், அளவைக் கண் – அளவிடத்து, கடிவார் – கடியுமவர், அடு – (ஆஶ்ரித விரோதிகளை) அழியச்செய்யும், புள் – பெரிய திருவடியை, கொடியா – கொடியாக, உயர்த்த – எடுத்த, வடிவார் – விலக்ஷணவிக்ரஹயுக்தரான, மாதவனார் – ஶ்ரிய:பதியானவர்.
ஈடு – பத்தாம் பாட்டு. இப்படி அவனும் அவளுமாகக் குற்றங்களைப் போக்குவது எத்தனைகாலங்கூடி? என்னில்: தன் திருவடிகளிலே தலை சாய்த்தவளவிலே என்கிறார்.
(கடிவார் தீய வினைகள்) காலதத்வமுள்ளதனையும் தன்னால் போக்கிக் கொள்ளவொண்ணாத கொடிய பாபங்களைப் போக்குவார். “வழிநின்ற வல்வனைமாள்வித்து” (1.6.8) என்கிறவிடத்தில் – ஆஶ்ரயித்த மாத்ரத்திலே பாபங்களைப் போக்கும் என்றார். “இருமை வினை கடிவார்” (1.6.9) என்கிற விடத்தில் – அவன் தானானதுக்கு மேலே, பிராட்டியும் கூட இருக்கையாலே போக்கும் என்றார். எவ்வளவில் போக்குவது? என்னில்; க்ஷணகாலத்திலே என்கிறார் இதில்.
(நொடியாரும் அளவைக்கண்) நொடிநிறையும் அளவிலே. (கொடியா அடு புள் உயர்த்த வடிவார்) தூ3ரத்திலே காணவே ப்ரதிபக்ஷம் மண்ணுண்ணும்படியான பெரிய திருவடியை த்4வஜமாக எடுக்கையை ஸ்வபா4வமாக உடையவர் என்னுதல்; வடிவார் – ஆர்ந்த வடிவையுடையவர். அழகிய வடிவை உடையவர் என்னுதல்.
“வடிவார்மா” என்று – நாய்ச்சியார்க்கு விஶேஷணமாதல். வடிவிலே ஆர்ந்திருக்கிறவள் என்னுதல்; அழகிய வடிவை உடையவள் என்னுதல்; வடிவிலே பொருந்தி இருக்கிறவள் என்னுதல். (மாதவனார்) பிராட்டி அருகே இருந்து போக்குவிக்கவாயிற்றுப் போக்குவது. “ஒருதலை ஜந்மம்; ஒருதலை மரணம், நடுவே ஆதி4வ்யாதி4கள்; இவை செய்த குற்றங்களைப் பார்க்கக்கடவதோ? குற்றங்கண்டுவிடில் விபூ4தியாக விடவேண்டாவோ? பொறுத்தருளீர்” என்றால், அவளுக்காக, “பொறுத்தோம்” என்னுமித்தனை.
பதினொன்றாம் பாட்டு
*மாதவன் பால்சட கோபன்*
தீதவ மின்றி உரைத்த*
ஏதமில் ஆயிரத்து இப்பத்து*
ஓதவல் லார்பிற வாரே.
ப – அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு பலமாக ஜந்மநிவ்ருத்தியை அருளிச்செய்கிறார்.
சடகோபன் – ஆழ்வார், மாதவன்பால் – ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரன்பக்கல், தீது – (தன்மேன்மை பார்த்து நெகிழநிற்கும்) தீதும், அவம் – (ஆஶ்ரிததோஷம் பார்த்துக் கைவிடும்) அவமும், இன்றி – இல்லாதபடியாக, உரைத்த – சொன்னதாய், ஏதம் இல் – (லக்ஷணவைகல்யாதியான) குற்றம் அற்ற, ஆயிரத்து – ஆயிரத்தில் வைத்துக்கொண்டு, இப்பத்து – ஸ்வாராததையைச் சொன்ன இப்பத்தை, ஓதவல்லார் – (ஆசார்யமுகத்தாலே) அதிகரிக்கவல்லார், பிறவார் – (ஸம்ஸாரத்தில்) பிறவார்கள். தீதென்று – பாட்டுண்கிறவன் குற்றமும், அவமென்று – பாடுகிறவன் குற்றமும், ஏதமென்று – பாட்டின் குற்றமுமாகவுஞ் சொல்லுவர். இது – முச்சீராய்ச் சிந்தடி நான்கும் ஒத்திருத்தலால் வஞ்சிவிருத்தம்.
ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லவர்கள் ஸம்ஸாரத்தில் வந்து பிறவார் என்கிறார்.
(மாதவன் இத்யாதி3) “தீதும், அவமும், ஏதமும்” என்று – மூன்றாய், இம்மூன்றையும் – ப்ரதிபாத்3யனுக்கும், வக்தாவுக்கும், ப்ரப3ந்த4த்துக்குமாக்கி, இவை யில்லாமையைச் சொல்லுகிறது – என்று நிர்வஹிப்பாருமுண்டு. ப4ட்டர், அங்ஙனன்றிக்கே, – “ஏதமிலாயிரம்” என்று – ப்ரப3ந்த4லக்ஷணம் சொன்னபோதே, த்ரிவித4 தோ3ஷராஹித்யமும் சொல்லிற்றாம்; இனி, தீதும் அவமுமாவது செய்வதென்? என்னில்; “சடகோபன் மாதவன்பால் தீது அவமின்றி உரைத்த” என்றாகக்கடவது – என்று அருளிச்செய்தார். அதாவது, – தீதாவது – “நான் ஶ்ரிய:பதியல்லேனோ!” என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்கவிருக்குமது; அவமாவது – “ஆஶ்ரயிக்கிறவன் நித்யஸம்ஸாரியன்றோ!” என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது; இவையில்லாமையைச் சொன்ன இப்பத்து என்றபடி. ஆயிரத்திலும் இந்தப் பத்தையும் அப்4யஸிக்க வல்லவர்கள்; பிறவார் – பிறக்கை சுட்டியிறே, “மாத்ருஸம்ரக்ஷணம் அழகிது” என்னுமோபாதி, “ப4க3வத் ஸமாஶ்ரயணம் எளிது” என்று உபதே3ஶிக்க வேண்டுகிறது; இத்திருவாய்மொழியை அப்4யஸிக்க வல்லவர்கள் உபதே3ஶ நிரபேக்ஷமாக, ஸம்ஸார ஸம்ப3ந்த4மற்று ப4க3வத3நுப4வமே யாத்ரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அநுப4விக்கப்பெறுவர்கள் என்கிறார்.
முதற்பாட்டில், ஆஶ்ரயிக்குமவனுக்கு த்3ரவ்ய நியதியில்லை என்றார்; இரண்டாம்பாட்டில், அதி4காரி நியதியில்லை என்றார்; மூன்றாம்பாட்டில், தம்முடைய கரணத்ரயமும் ப4க3வத்3விஷயத்திலே ப்ரவணமானபடியை அருளிச்செய்தார்; நாலாம் பாட்டில், நித்யஸூரிகளைப்போலே அதுதானே யாத்ரையாயிற்று என்றார்; அஞ்சாம் பாட்டில், தன்னையே ப்ரயோஜநமாகப் பற்றினார்க்கு அவன் நிரதிஶயபோ4க்3யபூ4தன் என்றார்; ஆறாம் பாட்டில், ‘இப்படி போ4க்3யபூ4தனானவனைவிட்டு ப்ரயோஜநத்தைக்கொண்டு அகலுவதே!’ என்று ப்ரயோஜநாந்தரபரரை க3ர்ஹித்தார்; ஏழாம் பாட்டில், இவனையே ப்ரயோஜநமாகப் பற்றினார்க்குக் காலக்ஷேபம் இன்னதென்றார்; எட்டாம் பாட்டில், ப்ராப்திவிரோதி4களையும் அவன்தானே போக்குமென்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘இதுகூடுமோ!’ என்று ஶங்கையாக; ‘வெறும் அவன்படியையோ பார்ப்பது, அருகிருக்கிறார்படியையும் பார்க்கவேண்டாவோ?’ என்றார்; பத்தாம்பாட்டில், ‘இவர்கள் எத்தனை காலங்கூடி விரோதி4களைப் போக்குவது?’ என்ன, க்ஷணகாலத்திலே என்றார்; நிக3மத்தில், இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவே ஸம்ஸரிக்கவேண்டா என்றார்.
நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்
த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி–பரிவதில்
தா3ஸ்யேஷு தே3ஶஸமயாங்க3கலாபகர்த்ரு-
த்3ரவ்யாதி3நா ந நியம: புருஷோத்தமஸ்ய |
ப4க்தி: பரம் ப3ஹுமதா தத ஏவ ஸோயம்
ஸ்வாராத4 இத்யுபதி3தே3ஶ முநிஸ்து ஷஷ்டே2 || 6
த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளி — பரிவதில்
அக்ரீதைரர்ச்யபா4வாதநியதவிவிதா4ப்யர்ச்சநாத3ல்பதுஷ்டே:
ப்ரஹ்வாவர்ஜ்யேஶபா4வாத் ஸ்வவிஷயநியதேஷ்வாத3ராத் ஸ்வாது3பூ4ம்நா |
பாதா3ஸக்தப்ரஸக்தேஸ் ஸக்ருது3பஸத3நே மோக்ஷணாத் த4ர்மஸௌஸ்த்2யாத்
க்ஷிப்ரக்ஷிப்தாஹிதத்வாத் ஸுகரப4ஜநதாம் மாத4வஸ்யாப்4யத4த்த || 6
திருவாய்மொழி நூற்றந்தாதி
பரிவதிலீ சன்படியைப் பண்புடனே பேசி*
அரியனல னாராத னைக்கென்று*–உரிமையுடன்
ஓதியருள் மாறன் ஒழிவித்தா னிவ்வுலகில்*
பேதையர்கள் தங்கள் பிறப்பு. 6
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்