01-07 12000/36000 Padi

ஏழாம் திருவாய்மொழி
பிறவித்துயர்: ப்ரவேஶம்

*****

      – ஏழாந்திருவாய்மொழியில், இப்படி ஸ்வாராதனானாலும் குடிநீர்போலே ஆஶ்ரயணம் ஸரஸமாயிராதாகில் அஹ்ருத்யமாயிருக்குமென்று நினைத்து, ஆஶ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக, ஆஶ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும், நிரதிஶயாநந்த யோகத்தையும், பரதஶையிலும் அவதாரம் அத்யந்த ஸரஸ மென்னுமிடத்தையும், இப்படி ஸரஸனானவனைப் பிரிய விரகில்லை யென்னுமிடத்தையும், தாம் விட க்ஷமரல்லரென்னு மிடத்தையும், அவன்தான் அகலத்தேடிலும் தம்•டைய இசைவில்லாமையையும், தாம் அகலிலும் அவன் நெகிழவிடா னென்னுமிடத்தையும், தம்மை அகற்றிலும் தம்நெஞ்சை அகற்றவொண்ணாமையையும், ஸர்வப்ரகாரஸம்ஶ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல ப்ரஸங்கமில்லை யென்னுமிடத்தையும், நிரந்தராநுபவம்பண்ணிலும் த்ருப்தி பிறவாமையாலே தவிர அரிதென்னுமிடத்தையும் அருளிச்செய்து, ஆஶ்ரயண ஸாரஸ்யத்தை உபபாதித்தருளுகிறார்.

     ஈடு – கீழில் திருவாய்மொழியிலே ஸ்வாராத4னென்றார்; அதில் சொன்ன ஆஶ்ரயணந்தான் போ43ரூபமாயிருக்கும் என்கிறார் இதில்.  ப43வத் ஸமாஶ்ரயணமாகிறதுதான்,  இதுக்கு இட்டுப்பிறவாத ஸர்வேஶ்வரனும் ஆசைப்படும்படி போ43ரூபமாயிருப்பதொன்றிறே.

     “அஶ்ரத்344ாநா: புருஷா:” – விஶ்வாஸபூர்வக த்வரா ரஹிதரானவர்கள். “அஸ்ய த4ர்மஸ்ய” – என்றானிறே,  தனக்கும் இனிதாயிருக்கையாலே. “பரந்தப” – விரோதி4வர்க்க3த்தை உதறவல்லாய் நீயன்றோ. “அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே” – செய்த குற்றங்களையடையப் பொறுத்துத் தங்களை நல்வழிப்போக்கும் என்னை விட்டு, தந்தாமுடைய விநாஶத்தைச் சூழ்ப்பதான ஸம்ஸாரத்தை விரும்பி அவ்வழியே போகாநிற்பர்கள். இதுதான் இருந்தபடி பாராய் என்கிறான்.

     “ப்ரத்யக்ஷாவக3மம்”, “ந மாம்ஸசக்ஷுரபி4வீக்ஷதே தம்” – என்கிற நான் ப்ரத்யக்ஷபூ4தனானவன்.  “த4ர்ம்யம்” – நம்மைக் காண்கை ஒருதலையானால் அத4ர்ம்யமானாலும் மேல்விழவேணும்,  இது அங்ஙனன்றிக்கே, த4ர்மாத் அநபேதமுமாயிருக்கும்.  “ஸுஸுக2ம் கர்த்தும்”  – ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே தானும் போ43ரூபமாயிருக்கும்.  “அவ்யயம்” – கோலின ப2லங்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதலழியாதே கிடக்கும்.

     ஶ்ரிய:பதியாய், ஸமஸ்தகல்யாண கு3ணாத்மகனாய், ஸகலாத்மாக்களுக்கும் ஶேஷியாய், நிரதிஶயாநந்த3யுக்தனாய், “ஏஷ ஹ்யேவாநந்த3யாதி” என்கிறபடியே தன்னைக் கிட்டினாரையும் ஆநந்தி3ப்பிக்கக்கடவனாய்; மோக்ஷத3ஶையில் அநுப4வம் இனிதாகிறதும் அவனைப்பற்றி வருகையாலே யிறே; அப்படியே ஆஶ்ரயணமும் அவனைப்பற்றி வருகையாலே போ43ரூபமா யிருக்குமிறே.  இப்படி ஸாத4நஸமயமே தொடங்கி இனிய விஷயத்தைப் பற்றாநிற்கச் செய்தே, அவனைவிட்டு க்ஷுத்3ரப்ரயோஜநத்தைக் கொண்டு அகலுவதே! என்று கேவலரை நிந்தி3யாநின்று கொண்டு இத்தையொழியில் தாம் உளராகாதபடி தமக்கு இனிதாயிருக்கையாலே இவ்வாஶ்ரயணத்தினுடைய இனிமையைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

முதல் பாட்டு

பிறவித் துயரற ஞானத்துள் நின்று*
துறவிச் சுடர்விளக்கம் தலைப் பெய்வார்*
அறவனை ஆழிப் படைஅந் தணனை*
மறவியை யின்றி மனத்துவைப் பாரே.

      – முதற்பாட்டில், பஜநீயனுடைய பாவநத்வத்தை அருளிச்செய்கிறார்.

     பிறவித்துயர் – பிறப்பால்வருந்துயர், அற – அறுகைக்காக, ஞானத்துள் – (ஆத்மாவலோகநமாகிற) ஜ்ஞாநத்திலே, நின்று – நிஷ்ட்டராய், துறவி – ஸர்வோபாதிவிநிர்முக்தமாய், சுடர் – தேஜோரூபமான ஆத்மாவினுடைய, விளக்கம் – ஆவிர்பாவத்தை, தலைப்பெய்வார் – தலைப்பட வேண்டியிருக்குமவர்கள், அறவனை – (ஏவம்விதாதிகாரிகளுக்கும் பலநிர்வாஹகனாகையாலே) பரமதார்மிகனாய், ஆழிப்படை – (மநஶ்ஶுத்திஹேதுபூதனான) திருவாழியையுடையனாய், அந்தணனை – பரமபாவநபூதனான ஈஶ்வரனை, மறவியையின்றி – ஸாதநத்வேந, மனத்துவைப்பார் – நினைப்பதே! என்று க்ஷேபித்தாராயிற்று.  அன்றியே, ஜந்மப்ரயுக்தது:கம் தீருகைக்காக யோக ரூபஜ்ஞாநத்திலே நின்று, அவித்யாகர்ம தேஹாதி ஸமஸ்தோபாதிநிவ்ருத்தனாய்த் தேஜோமயனான ஆத்மாவினுடைய விஶதாநுபவத்தைப் பெறவேண்டுவார், உபாஸநதர்ம நிர்வாஹகனாய், அஜ்ஞாநதமோநிவர்த்தகமான திருவாழியையுடையனாய், அத்யந்த பாவநபூதனான ஸர்வேஶ்வரனை விச்சேதரஹிதமாம்படி நிரந்தரபாவநாமுகத்தாலே நெஞ்சிலே வைப்பார்கள் – என்று உபாஸகரைச் சொல்லவுமாம்.

     ஈடு – முதற்பாட்டு. இப்படி நிரதிஶய போ4க்3யனானவனை விட்டு, ப்ரயோஜநாந் தரத்தைக்கொண்டு அகலுவதே! என்று கேவலரை நிந்தி3க்கிறார்.

     (பிறவித்துயரற ஞானத்துள்நின்று) “ஜராமரணமோக்ஷாய” என்று இருப்பாருமுண்டு கேவலர்; அவர்களைச் சொல்லுகிறது.  ஐஶ்வர்யார்த்தி2க்கும், ஆத்மப்ராப்தி காமனுக்கும், ப43வத்ப்ராப்தி காமனுக்கும் ஒக்குமாயிற்று ஸர்வேஶ்வரனை உபாஸிக்கையும், அந்திமஸ்ம்ருதியும்; இனி, பேற்றில் தாரதம்யம் வருகிறபடி என்னென்னில்: உபாஸந ஸமயத்திலே சிறுகக்கோலுகையாலே.  அதாவது – அவனளவும் செல்லாதே நடுவே வரம்பிட்டுக்கொள்ளுகை.  அத்தையிறே “வரம்பொழி வந்து” (திருப்பல்லாண்டு-4) என்கிறது.

     அதுதனக்கு அடி – அவர்கள் ஸுக்ருததாரதம்யம்.  “சதுர்வித4ா ப4ஜந்தே மாம் ஜநாஸ்ஸுக்ருதிநோ‍ர்ஜுந” என்று அருளிச்செய்தானிறே.  ஸுக்ருதத்துக்கு அநுரூபமாகவாயிற்று புருஷார்த்த2ங்களில் ருசி பிறப்பது; ருச்யநுகு3ணமாகவாயிற்று உபாஸிப்பது.  உபாஸநாநுகு3ணமாக இருக்கக்கடவது ப2லம்.

     (பிறவித்துயர் இத்யாதி3) இவனைப்பற்றி இப்பேற்றைப் பெற்றுப் போவதே! என்கிறார்.  “பிறவி” என்கிற இத்தால் – ஜந்மம் தொடக்கமாக உண்டான மற்ற ஐந்து விகாரங்களையும் நினைக்கிறது.  ஆக, ஜந்மஜராமரணாதி3 ஸாம்ஸாரிக ஸகல து3ரிதங்களும் போம்படியாக.  “இந்நின்ற நீர்மையினி யாமுறாமை” (திருவிருத்தம் – 1) என்று – இவர்தாமும் கழிக்கிறதாயிராநிற்கச்செய்தே, இவர்களை நிந்தி3க்கிறதுக்குக் கருத்து என்னென்னில்; இவர்க்கு விரோதி4 போமது ஆநுஷங்கி3கமாய், ப43வத3நுப4வம் உத்3தே3ஶ்யமாயிருக்கும்; அவர்களுக்கு து3:க்க2நிவ்ருத்திதானே உத்3தே3ஶ்யமாயிருக்கும்.  (ஞானத்துள்நின்று) இவ்வநுஸந்த4ாநம் அவ்வருகே போகாநிற்கச்செய்தேயும், ஆத்மஜ்ஞாநமாத்ரத்திலே கால் ஊன்ற அடியிட்டாயிற்று நிற்பது.  “துறவி” என்கிற இது துறக்கையைச் சொன்னபடி.  “பிறவித்துயரற” என்றதினுடைய ப2லரூபமான ப்ரக்ருதிவிநிர்முக்தவேஷத்தை.  “சுடர்விளக்கம் தலைப்பெய்வார்” என்கிற இது – “ஞானத்துள் நின்று” என்ற அதினுடைய ப2லரூபமாயிருக்கிறது.  ஸம்ஸார த3ஶையில் கர்மமடியாக வரக்கடவ ஸங்கோசமில்லையிறே; மோக்ஷத3ஶையில் விகஸிதமாயிருக்குமிறே.  ஜ்ஞாந கு3ணகமுமாய், ஜ்ஞாதாவுமாயிறே வஸ்துதான் இருப்பது.  ‘பிறவித்துயரற ஞானத்துள் நின்று’ என்றது உபாஸநமானால், துறவிச் சுடர்விளக்கம் தலைப்பெய்கை ப2லமாயிருக்குமிறே.

     (பிறவி இத்யாதி3) “ஸாம்ஸாரிக ஸகல து3:க்க2ங்களும் போகவேணும்” என்று ஆத்மஜ்ஞாநத்திலே ஊன்ற நின்று ப்ரக்ருதிவிநிர்முக்தமான ஆத்மஸ்வரூபத்தை ப்ராபிக்கவேண்டி யிருப்பார்.  (அறவனை) அவர்கள் படியையும், ப2லம்கொடுக்கிறவன் படியையும் பாரா, ‘என்ன பரமோதா3ரனோ!’ என்கிறார்.  ஏதேனும் ஒரு ப்ரயோஜநத்துக்கும் தன்னையே அபேக்ஷிக்குமத்தனையாகாதே வேண்டுவது.  “எங்களுக்கு நீ வேண்டா, க்ஷுத்3ரப்ரயோஜநம் அமையும்’ என்று இருக்கிறவர்களுக்கும் அத்தைக் கொடுத்துவிடுவதே! என்ன தா4ர்மிகனோ!” என்கிறார்.

     (ஆழிப்படை அந்தணனை) ஆத்மாநுப4வவிரோதி4யைப் போக்குகைக்குப் பரிகரமான திருவாழியைக் கையிலேயுடையவன்.  அந்தணனென்று – சாணிச்சாற்றோபாதி “ஶுத்34ன்” என்று கொண்டார்களித்தனை; போ4க்3யதையில் நெஞ்சு சென்றதில்லை.  “ஶுத்3தி4குண விஶிஷ்டன்” என்றாயிற்று அவர்கள் அநுஸந்தி4ப்பது.  ‘கையும் திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் ப்ரயோஜநத்துக்கு உறுப்பான ஶுத்3தி4மாத்ரத்தையே பற்றுவதே!’ என்கிறார்.

     (மறவியையின்றி)  இவர்க்குக் கையும் திருவாழியுமான அழகைக் கண்டால் முன்னடி தோற்றாது; “சக்கரத்தண்ணலே” (4-7-10) என்றால், பின்னைத் தரைப்படுமித்தனையிறே இவர்; திருமங்கையாழ்வாரும் “ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னாரென்று அறியேன்” (திருமொழி 10-10-9)என்று உத்3தே3ஶ்ய வஸ்துவையும் மறக்கும்படி கலங்குவர். பிள்ளாய்! நல்லத்தை மறக்கப்பண்ணாநிற்க இவ்விஷயம், தீயத்தை மறவாதொழிவதே! (மறவியை யின்றி) அவனுடைய போ4க்3யதையையும் கண்டுவைத்து, தங்கள் புருஷார்த்த2த்தை மறவாதே ஆஶ்ரயியாநிற்பர்கள்.  மறவியை – மறப்பை; மறப்பின்றிக்கே; மறவாதே மனத்துவைப்பாரே.

     உபாஸகபரமானால், சுடர் விளக்கம் – கு3ணப்ரகாஶகமான விக்3ரஹமாகக் கடவது.  அவனுடைய போ4க்3யதையை அநுஸந்தி4த்துவைத்தும், பின்னையும் இந்நிலை குலையாதே நிற்பதே! இவ்வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியராவதே இவர்கள்! “பிறவித்துயரற ஞானத்துள் நின்று துறவிச்சுடர் விளக்கம் தலைப்பெய்வார், மறவியையின்றி, அறவனை ஆழிப்படை அந்தணனை மனத்துவைப்பாரே” இத்யந்வய:

இரண்டாம் பாட்டு

வைப்பாம் மருந்தாம் அடியரைவல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக் கொடான் அவன்*
எப்பால் யவர்க்கு(ம்) நலத்தால் உயர்ந்துயர்ந்து*
அப்பா லவன் எங்க ளாயர் கொழுந்தே.

      அநந்தரம், அநந்யப்ரயோஜநராய் அநந்யஸாதநராயிருக்கும் விஶேஷாதிகாரிகளுக்கு அநுபாவ்யமான அதிஶயிதாநந்தயோகத்தையுடையவ னென்கிறார்.

     அடியரை – (தனக்கு அஸாதாரண) ஶேஷபூதரானவர்களை, வல்வினை – ப்ரபலமான கர்மங்களினுடைய, துப்பாம் – மிடுக்கின்வழியிலேயான, புலனைந்தும் – இந்த்ரியங்களைந்திலும் அகப்பட்டு, துஞ்சக்கொடான் – நஶிக்கும்படி விட்டுக்கொடாதவனானவன், வைப்பாம் – (அவர்களுக்குப் புருஷார்த்தமான) நிதியுமாய், மருந்தாம் – (தத்ப்ராப்திவிரோதி நிவ்ருத்தி ஸாதநமுமான) மருந்துமாம்: (எங்ஙனேயென்னில்), எப்பால் – (மநுஷ்யாநந்தம் தொடங்கி ப்ரஹ்மாநந்தம் ஈறான) எல்லாஸ்த்தலத்திலுமுள்ள, யவர்க்கும் – எல்லாச்சேதநர்க்கும், நலத்தால் – ஆநந்தத்தால், உயர்ந்துஉயர்ந்து – மிக்கு, அப்பாலவன் – (வாங்மநஸங்களுக்கு எட்டாதபடி) அவ்வருகானவனாய், எங்கள் – (அநந்யரான) எங்களுக்கே கூறாய், ஆயர் – (அறிவிலிகளான) இடையர்க்கு, கொழுந்து – தலைவனானவன், என்று – ப்ராப்யப்ராபகவேஷத்தை அருளிச்செய்தாராயிற்று.  வைப்பாம் மருந்தாமவன் என்று – மேலோடே கூட்டவுமாம்.

     ஈடு – இரண்டாம் பாட்டு.  ஸர்வேஶ்வரனை ஆஶ்ரயித்து க்ஷுத்3ர ப்ரயோஜநத்தைக் கொண்டுபோவதே! என்று கேவலரை நிந்தி3த்தார்; அவன்தன்னையே பற்றியிருக்குமவர்களுக்கு, அவன்தான் இருக்கும்படி சொல்லுகிறார் இப்பாட்டில்.

     (வைப்பாம்) ஆடறுத்து ப3லியிட்டு, அரைப்பையாக்கி, இஷ்ட விநியோகா3ர்ஹமாம்படி க்ஷேமித்து வைக்கும் நிதி4போலே, இவனுக்கு நினைத்த வகைகளெல்லாம் அநுப4விக்கலாம்படி தன்னை இஷ்டவிநியோகா3ர்ஹமாக்கி வைக்கும் என்றிட்டு ப்ராப்யத்வம் சொல்லுகிறது.  (மருந்தாம்) ஆனாலும், க்ஷுத்3ரவிஷயங்களையும் உண்டறுக்கமாட்டாத ஸம்ஸாரிசேதநனுக்கிறே ஸர்வாதி4கனான தன்னை விஷயமாக்குகிறது;  இவன்தன்னை அநுப4விக்கும்படி யென்?  என்னில்; அக்குறைகள் வாராதபடி அநுப4வவிரோதி4களைப் போக்கித் தன்னை அநுப4விக்கைக்கீடான ஶக்தியோக3த்தையும் கொடுத்துத் தன்னையும் கொடுக்கும் என்று அவனுடைய ப்ராபகத்வம் சொல்லுகிறது.  “ய ஆத்மதா3 ப3லதா3:” என்கிறபடியே.  ஆக, ப்ராப்யத்வமும் ப்ராபகத்வமும் சொல்லிற்று. இப்படி செய்வது ஆர்க்கு? என்னில்: (அடியரை) “ந நமேயம்” என்னும் நிர்ப3ந்த4ம் தவிர்ந்தார்க்கு; அவனைப்பற்றி ஒரு ப்ரயோஜநத்தைக் கொண்டு அகலாதே, அவன்தன்னையே பற்றி அவன் படிவிட ஜீவித்திருப்பாரை வலிய வினைகளிலே கொண்டுபோய் மூட்டுகைக்கு ஈடான ஸாமர்த்2யத்தை உடைத்தான இந்த்3ரியங்கள் ஐந்தாலும் துஞ்சக்கொடான் என்னுதல்.  அஞ்சிலும் புக்குத் துஞ்சக்கொடான் என்னுதல்.  துப்பென்று – ஸாமர்த்2யம்.

     “அவன்” என்கிறது எவனைப்பற்ற? அவன்தான் இப்படி செய்ய எங்கே கண்டோம்? என்னில்; அத்தை உபபாதி3க்கிறது மேல். (எப்பால் இத்யாதி3) ஸ்தா2ந விஶேஷங்களாலும், மநுஷ்யாதி3பே43ங்களாலும் வரக்கடவன சில உயர்த்திகளுண்டிறே;  பூ4மிபோலன்றிறே ஸ்வர்க்க3ம்; மநுஷ்யர்களைப் போலல்லவிறே தே3வர்கள்.  எப்பால் – எல்லாவிடத்திலும் என்றபடி.  பாலென்றது இடம்.  “அப்பால், இப்பால்”  என்னக்கடவதிறே – அவ்விடம், இவ்விடம் என்றபடியிறே.  எல்லாவிடத்திலும் உண்டான எல்லார்க்கும், நலத்தால் – ஆநந்த3த்தாலே மேலே மேலே போய், பின்னையும் அதுதன்னைச் சொல்லப் புக்கால் “யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று மீளவேண்டும்படியான ஆநந்த3 ப்ராசுர்யத்தையுடையவன்.  ஶதகு3ணிதோத்தர க்ரமத்தாலே அப்4யஸ்யமாநமாகாநின்றுள்ள நிரதிஶயாநந்த3யுக்தன்; “ஆநந்த3மய:” என்னக்கடவதிறே.  (எங்கள் ஆயர் கொழுந்தே) இப்படி ஸர்வாதி4கனானவன் இதர ஸஜாதீயனாய் வந்து அவதரித்தது – தன்னை ஆஶ்ரயித்தார் விஷயப்ரவணராய் முடியும்படி விட்டுக் கொடுக்கவோ? தான் ஶோகமோஹங்களை அநுப4விக்கிறது – தன்னைப் பற்றினார் ஶோகமோஹங்களை அநுப4விக்கைக்காகவோ? மேன்மைக்கு எல்லையானவன் தாழ்வுக்கு எல்லையாயிற்றது – இவர்களை அநர்த்த2ப்பட விடவோ?

     (எங்கள் ஆயர் கொழுந்தே) க்ருஷ்ணன் திருவவதரித்த ஊரிலுள்ளாரோடே தமக்கொரு ப்ராக்ருத ஸம்ப3ந்த4ம் தேட்டமாயிருக்கிறபடி.  அன்றியே (எங்கள்) அவதாரம்தான் ஆஶ்ரிதார்த்த2மாயிருக்குமிறே.  நவநீதசௌர்ய நக3ரக்ஷோப4ம் பழையதாக எழுதிக்கிடக்கச் செய்தேயும், “எத்திறம்” (1-3-1) என்றார் இவரேயிறே.

     (ஆயர்கொழுந்தே) இடையர் தங்களுக்குத்தான் ப்3ரஹ்மாதி3கள் கோடியிலேயாம்படி அவர்களில் ப்ரதா4நனானவன் துஞ்சக்கொடான்.  ((எப்பால் எவர்க்கும்) முதலாக அந்வயம்.)

மூன்றாம் பாட்டு

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்*
மாயப் பிரானைஎன் மாணிக்கச் சோதியை*
தூய அமுதைப் பருகிப் பருகி*என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே.

      அநந்தரம், பரத்வஸூசகமான நிரதிஶயாநந்தத்திலும் அவதாரப்ரயுக்தமான ஆஶ்ரிதபவ்யத்வம் அத்யந்தஸரஸமென்கிறார்.

     ஆயர் – கோபர்க்கு, கொழுந்தாய் – ப்ரதாநனாய் வைத்து, (நவநீதசௌர்யாதி நிமித்தமாக), அவரால் – அவர்களாலே, புடையுண்ணும் – அடியுண்டு, மாயப்பிரானை – (ததநுரூபமாக அழுகை தொடக்கமான) ஆஶ்சர்ய சேஷ்டிதங்களைப் பண்ணுமவனாய் அதடியாக அவர்களை உகப்பித்து, என்மாணிக்கச்சோதியை – (சாணையில் ஏறிட்ட) மாணிக்கம்போலே அவர்கள் நியமநத்தாலே ஒளிபெற்ற வடிவை எனக்காக்கினவனாய், தூய அமுதை – (பரத்வம் கலசாத சீலத்தையுடையனாய்) ஶுத்தாம்ருதமானவனை, பருகிப்பருகி – நிரந்தரமாக அநுபவித்து, (போகார்த்தமாகப் பால்குடித்தவனுக்குப் பித்தம் தன்னடையே நசிக்குமாபோலே), என் – என்னுடைய, மாயம் – ப்ரக்ருதிகார்யமாய் வரும், பிறவி – ஜந்மப்ரயுக்தமான, மயர்வு – அஜ்ஞாநத்தை, அறுத்தேன் – நசிப்பித்தேன்.

     ஈடு – மூன்றாம் பாட்டு. ப்ரயோஜநாந்தரபரரான கேவலரை நிந்தி3த்தார்; அநந்ய ப்ரயோஜநர்திறத்தில் அவன் இருக்கும்படி சொன்னார்.  நீர் இவ்விரண்டு கோடியிலும் ஆர்? என்ன “நான் ப்ரயோஜநாந்தரபரனல்லேன், அநந்யப்ரயோஜநனாய் அவனைப் பற்றினேன்”  என்று நேர்கொடுநேரே சொல்லவும் மாட்டாரே.  அவனை அநுப4வியாநிற்க, விரோதி4 தன்னடையே போய்க்கொடுநின்றவன் நான் என்கிறார்.

     (ஆயர் கொழுந்தாய்) இடையர்க்கு ப்ரதா4நனாயிருக்குமிருப்புச் சொல்லிற்று கீழ்; இங்கு, அவர்களில் ஏகதே3ஶஸ்த2னாயிருக்கும்படி சொல்லுகிறது. அதாவது அவர்கள் வேராக, தான் கொழுந்தாயிருக்குமவன் என்கிறது.  இடையர் காட்டிலே பசுக்களின் பின்னே திரிந்து, அவர்களுக்கு அடி கொதித்தால் வாடுவது க்ருஷ்ணன் முகமாயிருக்கை; வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்திறே முற்பட வாடுவது.  (அவரால் புடையுண்ணும்) அவனால் என்னுதல், அவளால் என்னுதல் செய்யாமையாலே – திருவாய்ப்பாடியில் பஞ்சலக்ஷம் குடியிலும் இவனை நியமிக்க உரியரல்லாதாரில்லை.  “ம(ர)த்தாலே ஓரடி அடிப்பார்கள்போலே காணும்” என்று ப4ட்டர் அருளிச்செய்யும்படி.  (மாயப்பிரானை) அவாப்தஸமஸ்தகாமனான ஸர்வேஶ்வரன், தனக்கு ஒரு குறையுண்டாய் வந்து அவதரித்து, ஆஶ்ரிதஸ்பர்ஶமுள்ள த்3ரவ்யத்தாலல்லது த4ரியாதானாய், அதுதான் நேர்கொடு நேரே கிடையாமையாலே களவுகாணப்புக்கு, தலைக்கட்டமாட்டாதே வாயதுகையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை அநுஸந்தி4த்து (மாயப் பிரானை) என்கிறார்.  (என் மாணிக்கச்சோதியை) ஆஶ்ரிதர் கட்டி அடிக்க அடிக்க, களங்கமறக் கடையுண்ட மாணிக்கம்போலே திருமேனி புகர்பெற்றுவருகிறபடி.  கட்டின அளவுக்கு வெட்டென்றிருக்குமவன், கட்டியடிக்கப் புக்கால் புகர்பெறச் சொல்லவேணுமோ? “கண்ணியார் குறுங்கயிற்றால் கட்ட வெட்டென்றிருந்தான்” (திருமொழி 5.9.7) இறே.  (என்) அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கினவன்.  (தூய அமுதைப் பருகிப் பருகி) தே3வர்கள் அதி4காரிகளாய், ப்3ரஹ்மசர்யாதி3 நியமங்கள் வேண்டி, ஸக்ருத்ஸேவ்யமாயிருக்குமிறே அது;  ஸர்வாதி4காரமுமாய், ஒரு நியதியும் வேண்டாதே, ஸதா3ஸேவ்யமுமான அம்ருதமிறே இது.

     (என் இத்யாதி3) ஆஶ்சர்யமான ஜந்மமடியாக உண்டான அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கினேன்.  ஜந்மத்துக்கு ஆஶ்சர்யமாவது – ஒருபடிப்பட்டிராமை. “மயர்வறுத்தேன்” என்கிறது – “இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை” (திருவிருத்தம் – 1) என்று அபேக்ஷித்தபடியே ப2லாநுப4வம் தம்மதாகையாலே அருளிச்செய்கிறார்.

நான்காம் பாட்டு

மயர்வற என்மனத்தே மன்னினான் தன்னை*
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை*
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தைஎன்
இசைவினை என்சொல்லி யான்விடு வேனோ?

      – அநந்தரம், இப்படி ஸரஸனான இவனை நான் விடுகைக்கு விரகு உண்டோ? என்கிறார்.

     மயர்வு – அஜ்ஞாநம், அற – அறும்படி, என்மனத்தே – என்நெஞ்சுக்குள்ளே, மன்னினான்தன்னை – நித்யவாஸம்பண்ணுமவனாய், (எனக்கு), உயர்வினையே – ஜ்ஞாநபக்த்யாத்யபிவ்ருத்தியை, தரும் – தருமவனாய், ஒண் சுடர்க்கற்றையை – நிரதிஶயபோக்யமாம்படி தேஜோராசியான வடிவையுடையனாய், அயர்வு இல் – மறப்பு இல்லாத, அமரர்கள் – நித்யஸூரிகளுக்கு, ஆதிக்கொழுந்தை – ஸத்தாதிஹேதுபூதனான தலைவனாய், என் இசைவினை – (தன்னைக்கிட்டுகைக்கு) என் இசைவும் தானிட்ட வழக்காம்படியானவனை, என்சொல்லி – எத்தைச்சொல்லி, யான் – (அவனடியறிந்த) நான், விடுவேன் – விடுவேன்? அஜ்ஞாநத்தைப்போக்கிற்றில னென்று விடவோ? அஸந்நிஹிதனென்று விடவோ? உத்கர்ஷகரனல்லனென்று விடவோ? உஜ்ஜ்வலனல்லனென்று விடவோ? அவிலக்ஷண போக்யனென்று விடவோ? அநுமதி ஸ்வாதீநையென்று விடவோ? என்று கருத்து.

     ஈடு – நாலாம் பாட்டு. (“இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை” (திருவிருத்தம் – 1) என்று – அடியிலே நீர் அபேக்ஷித்தபடியே) உம்முடைய அபேக்ஷிதம் தலைக்கட்டிற்றே! இனி இவ்விஷயத்தை விட்டுப்பிடிக்குமித்தனையன்றோ? என்ன; நான் என்ன ஹேதுவாலே விடுவேன்? என்கிறார்.

     (மயர்வற) அஜ்ஞாநமானது வாஸனையோடே போக.  (என் மனத்தே மன்னினான் தன்னை) “இன்னமும் மயர்வு குடிகொள்ளவொண்ணாது” என்று என்னுடைய ஹ்ருத3யத்திலே புகுந்து ஸ்தா2வரப்ரதிஷ்டை2யாக இருந்தவனை.  செடிசீய்த்துக் குடியேற்றின படைவீடுகளை விடாதேயிருக்கும் ராஜாக்களைப் போலே.  “புறம்பேயும் ஒரு க3ந்தவ்யபூ4மியுண்டு” என்று தோற்ற இராமை.  இப்படியிருந்து செய்கிறதென்? என்னில்; (உயர்வினையே தரும்) ஜ்ஞாந விஸ்ரம்ப4 ப4க்திகளைத் தாராநின்றான் என்னுதல்; யமாதி3கள் தலையிலே அடியிடும்படியான உத்கர்ஷத்தைத் தாராநின்றான் என்னுதல்.  (தரும்) தந்து சமைந்தானாயிருக்கிறிலன்; “காதல் கடல் புரைய” (5-34)  “காதல் கடலின் மிகப் பெரிதால்” (7-3-6) “நீள்விசும்பும் கழியப்பெரிதால்” (7-3-8) “சூழ்ந்ததனிற்பெரிய” (10-10-10). (ஒண் சுடர்க் கற்றையை) இத்தால், எனக்கு உபகரித்தானாயிருக்கை யன்றியே, “தான் உபகாரம் கொண்டான்” என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற இராநின்றான் என்னுதல்; தம்மை வஶீகரித்த அழகைச் சொல்லிற்றாகவுமாம்; “தேஜஸாம் ராஶிமூர்ஜிதம்” என்னுமாபோலே. இப்படி தன் பேறாக உபகரித்தவன், தன் உபகாரம் கொள்வாரில்லாதானொருவனோ? என்னில் – (அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை) தான் உபகரியாதவன்று, தங்கள் ஸத்தை கொண்டு ஆற்றமாட்டாதாரை ஒரு நாடாக உடையவன்.  ப43வத3நுப4வ விஸ்ம்ருதிக்கு ப்ராக3பா4வத்தையுடையராய், அவ்வநுப4வத்துக்கு விச்சே23 ஶங்கையின்றிக்கே, தாங்கள் பலராயிருக்கிறவர்களுக்கு தா4ரகாதி3களெல்லாம் தானேயாயிருக்கிறவனை.

     (என்னிசைவினை) நான் “அல்லேன்” என்று அகலாதபடி என் இசைவு தானாய்ப் புகுந்தவனை  (என்சொல்லி யான் விடுவேனோ) “சிறிது மயர்வு கிடந்தது” என்று விடவோ? “மயர்வைப்போக்கி, தான் கடக்கவிருந்தான்” என்று விடவோ? “எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித்தந்திலன்” என்று விடவோ? “தான் பண்ணின உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரம் கொள்ளவிருந்தான்” என்று விடவோ? வடிவழகில்லை என்று விடவோ? “மேன்மை போராது” என்று விடவோ? “இப்பேற்றுக்கு க்ருஷிபண்ணினேன் நான்” என்று விடவோ? எத்தைச் சொல்லி நான் விடுவது? என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

விடுவேனோ என் விளக்கைஎன் னாவியை*
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை*
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்*
விடவேசெய்து விழிக்கும் பிரானையே?

      – அநந்தரம், அவன் எனக்குப் பண்ணின உபகாரத்தை அறிந்த நான் விட க்ஷமனல்ல னென்கிறார்.

     என்விளக்கை – என்னுடைய ஸ்வரூபவிஷயமான ஜ்ஞாநதீப ப்ரகாஶகனாய், என் ஆவியை – என் ஆத்மாவை, (அவகாஶம்பார்த்து), நடுவே – நடுவே, வந்து – புகுந்து, உய்யக் கொள்கின்ற – (அஹங்காராதிகளால் அழியாதபடி) பிழைப்பித்துக்கொண்ட, நாதனை – நாதனாய், தொடுவே – க்ருத்ரிமசேஷ்டிதங்களை, செய்து – பண்ணி, இள ஆய்ச்சியர் – அநந்யயோக்யமான பருவத்தையுடைய இடைச்சியர், கண்ணினுள் – கண்ணுக்குள்ளே, விடவேசெய்து – தானும் அவர்களுமறிந்த தூர்த்தக்ருத்யத்தைப் பண்ணி, விழிக்கும் – கண்கலப்புச்செய்யும், பிரானை – உபகாரகனை, விடுவேனோ – விடவல்லேனோ? விடவு – தௌர்த்த்யம்.  பிரானென்று – தமக்கு ப்ரகாஶிப்பித்த உபகாரந் தோற்றுகிறது.

     ஈடு – அஞ்சாம் பாட்டு. திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் க்ருஷ்ணனை விட்டுப் பரமபத3த்தை விரும்புமன்றன்றோ நான் இவனைவிட்டுப் புறம்பே போவது! என்கிறார்.

     (விடுவேனோ என் விளக்கை) ஸ்வவிஷயமான அஜ்ஞாநாந்த4காரம் போம்படி நிர்ஹேதுகமாகத் தன்னுடைய ஸ்வரூப ரூப கு3ண விபூ4திகளை எனக்கு ப்ரகாஶிப்பித்தவனை.  “என் விளக்கை” என்பானென்? அல்லாதார்க்கும் ஒவ்வாதோ? என்னில்; இவரைப்போலே அல்லாதார்க்கு ஸ்நேஹமில்லையே; ஸ்நேஹமுண்டாகிலிறே இவ்விளக்கும் ப்ரகாஶிப்பது.  விளக்காவது – தன்னையும் காட்டி, பதா3ர்த்த2ங்களையும் காட்டுவதொன்றிறே.  இவர்க்குத் தன்னையும் காட்டி ஸ்வஸ்வரூபத்தையும் விரோதி4ஸ்வரூபத்தையுமிறே காட்டிக்கொடுத்தது.  (என்னாவியை இத்யாதி3) “தானொருவன் உளன்” என்னுமறிவாதல், தன்பக்கல் அபேக்ஷையாதல் இன்றிக்கே, ப்ரக்ருதிவஶ்யனாய் உருமாய்ந்து போந்த என் ஆத்மாவை.  (நடுவே வந்து) நிர்ஹேதுகமாக வந்து.  விஷயப்ரவணனாய்ப் போகாநிற்க, நடுவே வந்து மீட்டவித்தனை.  (உய்யக்கொள்கின்ற) கொண்டு விட்டிலன்; மேன்மேலெனக் கொள்ளாநிற்கிறவித்தனை.  “அஸந்நேவ ஸ ப4வதி” என்கிறபடியே அஸத்கல்பனான என்னை “ஸந்தமேநம் ததோ விது3:” என்னப்பண்ணினான்.  “என் ஆவி” என்று உம்மதாகச் சொன்னீர்; உம்முடைய ஆத்மாவை அவன் வந்து உய்யக்கொள்ள நிப3ந்த4நமென்? என்ன (நாதனை) ஆருடைய வஸ்து அழியப்புக்கது? “நான்” என்று ஒருவனுண்டோ? உடையவ னாகையாலே செய்தான்.

     ஆரேனும் பேற்றுக்கு ஆரேனும் யத்நம் பண்ணுவார்களோ? என்ன, திருவாய்ப்பாடியில் பெண்கள் பேற்றுக்கு யத்நம் பண்ணினார் ஆர்? (தொடுவே செய்து) ஆராய்ச்சிப்படும் செயல்களைச்செய்து.  ஓரிடத்திலே போய்க் களவுகண்டு, அங்கே அகப்படுமே; “கள்ளனைக் காணவேணும்” என்றிருப்பாருமுண்டே; இவனாலே புண்பட்டவர்கள் எல்லாரும் காண வருவர்களே; புருஷர்களுக்கும் வ்ருத்3தை4களுக்கும் ஒரு ப4யமில்லை; அருகே நின்றார்க்குத் தெரியாமே பருவம் நிரம்பின இடைப்பெண்கள் கண்ணுக்குள்ளே விடும்படியைச் செய்து விழிக்கும் – தூதுவிடும்படியைச் செய்து விழிக்கும்; தூதுவிடுகையாகிற செயலைச் செய்து என்னுதல்; விடருடைய செயலைச் செய்து என்னுதல்.  “தூது செய் கண்கள்” (9-9-9) என்னக்கடவதிறே; அதுவாதல் – தூ4ர்த்தருடைய வ்யாபாரங்களைப் பண்ணுதல்.  (“தவாஸ்மி, தா3ஸோ‍ஸ்மி” என்றாற்போலே சொல்லுகை.) (பிரானையே) அந்நோக்காலே இடைப்பெண்களை அநந்யார்ஹைகளாக்கினாற்போலே என்னையும் அநந்யார்ஹமாக்கிவிட்டவனை விடுவேனோ?.

ஆறாம் பாட்டு

பிரான் பெருநிலம் கீண்டவன்பின்னும்
விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்*
மராமரம் எய்த மாயவன்என்னுள்
இரானெனில் பின்னை யானொட்டு வேனோ?

      அநந்தரம், அவன்தான் அகலத்தேடிலும் நான் இசையே னென்கிறார்.

     பிரான் – உபகாரகனாய்க்கொண்டு, பெருநிலம் – மஹாப்ருதிவியை, கீண்டவன் – எடுத்தவனாய், பின்னும் – தொடுக்கப்பட்டு, விராய் மலர் – விரவின மலரையுடைத்தான, துழாய் – திருத்துழாயாலே, வேய்ந்த – செறியச்சூழப்பட்ட, முடியன் – திருமுடியை யுடையனாய், மராமரமெய்த – (மஹாராஜர் விஶ்வஸிக்கைக்காக) மராமரத்தை யெய்த, மாயவன் – ஆஶ்சர்யபூதனானவன், என் – என்னுடைய, உள் – நெஞ்சுக்குள், இரானெனில் – இரானென்னுமளவில், பின்னை – பின்னை, யான் – (அவனையொழியச் செல்லாத) நான், ஒட்டுவேனோ – இசைவேனோ? தொங்குவேனோ? என்றுமாம்.  மாயவனென்று – மராமரம் ஒன்றளவில் நில்லாதே, ஏழுமரமும் மலையும் பாதாளமும் உருவ எய்த ஆஶ்சர்யம்.  விராய்மலர்த்துழாயென்று – பரிமளத்தையுடைய செவ்வித்துழா யென்றுமாம்.

     ஈடு – ஆறாம் பாட்டு. “இப்போது விடோம் என்கிறீரித்தனைபோக்கிப் பின்னையும் நீரல்லீரோ, உம்முடைய வார்த்தையை வி­ஶ்வஸிக்கப்போமோ?” என்ன; “அவனாலே அங்கீ3க்ருதனான நான் அவனை விடுவேனோ?” என்றார் கீழிற்பாட்டில்; “உம்மை அவன் தான் விடில் செய்வதென்?” என்ன; “தன் கு3ண சேஷ்டிதங்களாலே என்னைத் தோற்பித்து என்னோடே கலந்தவனை நான் விட ஸம்வதி3ப்பேனோ?” என்கிறார் இதில்.

     (பிரான்) நிலா, தென்றல், சந்த3நம் பிறர்க்கேயாயிருக்குமாபோலே, தன் படிகளையடையப் பிறர்க்காக்கிவைக்குமவன்.  ஸர்வவிஷயமாகவும் ஆஶ்ரித விஷயமாகவும் பண்ணும் உபகாரத்தை நினைத்து “பிரான்” என்கிறது.  அத்தை உபபாதி3க்கிறது மேல் – (பெருநிலம் கீண்டவன்) ஸர்வவிஷயமாகப் பண்ணும் உபகாரம்.  ப்ரளயங்கொண்ட பூ4மியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தாற்போலே, ஸம்ஸார ப்ரளயங்கொண்ட என்னை எடுத்தவன்.  (பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்) ஒப்பனையோடேயாயிற்று ப்ரளயத்திலே முழுகிற்று.  நெருங்கத் தொடையுண்டு, பரிமள ப்ரசுரமாய், செவ்வி பெற்றிருந்துள்ள திருத்துழாய் மாலையாலே சூழப்பட்ட திருவபி4ஷேகத்தை உடையவன்.  விரையை “விராய்” என்று நீட்டிக் கிடக்கிறது.  அன்றியே, மலர் விரவின திருத்துழாய் என்றுமாம்.

     (மராமரம் எய்த மாயவன்) ஆஶ்ரிதவிஷயமாக உபகரிக்கும்படி.  மஹாராஜர், வாலி மிடுக்கையும் பெருமாள் ஸௌகுமார்யத்தையும் அநுஸந்தி4த்து, “நீர் வாலியைக் கொல்லமாட்டீர்” என்ன, “நான் வல்லேன்” என்று மழுவேந்திக்கொடுத்துக்கார்யம் செய்யும் வ்யாமோஹத்தை உடையவன்.  (என்னுள் இரான் எனில்) இப்படி ஆஶ்ரிதரை விஷயீகரித்து அவர்கள் பேற்றுக்குத் தான் க்ருஷி பண்ணுமவன், என்னுள் இரான் எனில்; “எனில்” என்கையாலே – விட ஸம்பா4வநையில்லை என்கை.  (பின்னை யான் ஒட்டுவேனோ) “எப்ரகாரத்தாலும் இரேன்” என்னுமாகில், பின்னை, நான் அவன்போக்கை இசைவேனோ? என்னுடைய கர்மபாரதந்த்ர்யம்போலே அவனுடைய ஆஶ்ரிதபாரதந்த்ர்யத்துக்கும் ஏதேனும் கண்ணழிவுண்டோ? என் இசைவின்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ? அன்றியே, “நான் தொங்குவேனோ” என்று பிள்ளான் பணிக்கும்படி.

ஏழாம் பாட்டு

யானொட்டி யென்னுள் இருத்துவ மென்றிலன்*
தானொட்டி வந்து என் தனிநெஞ்சை வஞ்சித்து*
ஊனொட்டி நின்று என் னுயிரில் கலந்(து)* இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே?

      – அநந்தரம், நான் நெகிழ்ந்துக்கொடுபோகிலும் அவன் இசையா னென்கிறார்.

     யான் – நான், ஒட்டி – இசைந்து, என்னுள் – என்னுள்ளே, இருத்துவம் – இருத்துவோம், என்றிலன் – என்று நினைத்திலேன்; தான் – தானே, ஒட்டிவந்து – ப்ரதிஜ்ஞை பண்ணிவந்து, என் – என்னுடைய, தனி – ஸ்வதந்த்ரமான, நெஞ்சை – நெஞ்சை, வஞ்சித்து – நான் அறியாதபடி வஶீகரித்து, (அதுஅடியாகவே), ஊன் – சரீரத்திலே, ஒட்டி – பொருந்தி, நின்று – புகுந்துநின்று, என்உயிருள் – என் ஆத்மாவிலே, கலந்து – கலந்து, இயல்வான் – (அத்தாலே ஸத்தை பெற்றானாய்) நடக்கிறவன், இனி – இனி, என்னை – என்னை, நெகிழ்க்க – நெகிழ்த்துக்கொள்ள, ஒட்டுமோ – ஒட்டுமோ?

     ஈடு – ஏழாம் பாட்டு.  “கு3ணத்ரயவஶ்யராய்ப் போந்தீர்; காதா3சித்கமாக ‘அவனை விடேன்’ என்கிறீர்; உம்முடைய வார்த்தையை விஶ்வஸிக்கப்போமோ?” என்ன; “நான் அவனை விட்டாலும் அவன்தான் என்னை விடான்” என்கிறார்.

     (யான் இத்யாதி3) இசைவு என்னாலே வந்ததாகிலன்றோ விடுகையும் என்னாலே வந்ததாவது; “ஆழ்வீர்! நாம் உம்முடையபாடே இருப்போம்” என்றால், “ஒட்டேன்” என்பரே; “ஆகில் இங்கே இருக்கக் கடவோம்” என்று ப்ரதிஜ்ஞை பண்ணியாயிற்று வந்திருப்பது; நான் இசைந்து “என்னுடைய ஹ்ருத3யத்திலே இருக்கவேணும்” என்றிலேன்.  (தானொட்டி வந்து) “அத்3ய மே மரணம் வா‍பி தரணம் ஸாக3ரஸ்ய வா” என்று, ‘இத்தை முடித்தல் (இற்றை முடிதல்) கடத்தல் செய்யுமதுக்கு மேற்பட இல்லை’ என்றாற்போலே ப்ரதிஜ்ஞைபண்ணியாயிற்றுப் புகுந்தது.

     (என் தனி நெஞ்சை) தன்னாலும் திருத்தவொண்ணாதபடி ஸ்வதந்த்ரமாய்,  அவிதே4யமான நெஞ்சை.  (வஞ்சித்து) தன்னுடைய ஶீலாதி3கு3ணங்களாலும் வடிவழகாலும் தனக்கு விதே4யமாம்படி பண்ணி. பின்னைச் செய்ததென்? என்னில்:  (ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து) “ஶரீரத்தைப் பற்றி நிற்கிற என் உயிரிலே கலந்து” என்கிறார் என்பாருமுண்டு; அன்றிக்கே, “அபி4மத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப்போலே என்னுடைய ஶரீரத்தைப் பற்றிநின்று, பின்னை என்பக்கலிலே விலக்காமை பெற்றவாறே என் ஆத்மாவோடே வந்து கலந்தான்” என்று ஜீயர் அருளிச்செய்யும்படி.  (இயல்வான்) இப்படியை ஸ்வபா4வமாக உடையவன் என்னுதல்; இப்படி ‘எதிர்சூழல்புக்கு’ (2-7-6) உத்ஸஹித்தவன் என்னுதல்.  (ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே) இப்படி நிர்ஹேதுகமாக என்னை விஷயீகரித்தவன், நான் தன்பக்கலில்நின்றும் நெகிழ்ந்துபோவேன் என்றால் அவன்  இசையுமோ? எனக்கு ஜ்ஞாநம் பிறக்கைக்கு க்ருஷிபண்ணி, பிறந்த ஜ்ஞாநம் ப2லிக்குமளவாகக்கொண்டு, நான் அகன்று போவேன் என்றால், அவன் ஸம்வதி3க்குமோ?

எட்டாம் பாட்டு

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல்நெஞ்சந்
தன்னைஅகல்விக்கத் தானும்கில் லான்இனி*
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை*
முன்னை அமரர் முழுமுதலானே.

      அநந்தரம், இப்படிக்கொத்தவன் விடில் செய்வதென்? என்னில், – என்னைப் பிரிக்கிலும் என்நெஞ்சை அவனாலும் பிரிக்க அரிது என்கிறார்.

     என்னை – (தான்தந்த ஜ்ஞாநப்ரேமங்களையுடையனாய்த் தன்னை யொழியச் செல்லாத) என்னை, நெகிழ்க்கிலும் – நெகிழ்க்கிலும், நல் – (தன்னால் வஞ்சிதமாய்த் தனக்கு) நலப்பட்ட, என்னுடை நெஞ்சந்தன்னை – என்னுடைய நெஞ்சுதன்னை, அகல்விக்க – தனித்து அகல்விக்க, தானும் – (ஸர்வஶக்தியான) தானும், இனி கில்லான் – இனி மாட்டான்; (முன்போலே விஷயாந்தரஸக்தமன்றே.) (அவன்தான்), பின்னை – நப்பின்னைப் பிராட்டியுடைய, நெடும் – நெடியதாய், பணை – சுற்றுடைத்தான, தோள் – தோளோடே சேர்ந்த, மகிழ் – மகிழ்ச்சியாகிற, பீடுடை – மேன்மையையுடையனாய், முன்னை – பூர்வரான, அமரர் – நித்யஸூரிகளுக்கு, முழு – தாரகாதி ஸமஸ்தத்துக்கும், முதலானே – தானே முதல்வனானவனன்றோ? ஆதலால், அவர்களை விடிலன்றோ என்னையும் என்நெஞ்சையும் விடுவது என்று கருத்து.  பணைத்தோளென்று – வேய் போன்ற தோளென்றுமாம்.

     ஈடு – எட்டாம் பாட்டு. “நான் விடேன், அவன் விடான்” என்றாற்போலே சொல்லுகிறதென்? இனி அவன்தான் “பிரிப்பேன்’ என்னிலும் தன்னுடைய கல்யாணகு3ணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப்போகாது என்கிறார்.

     (என்னை நெகிழ்க்கிலும்) ‘மயர்வற மதிநலமருள’(1-1-1)ப்பெற்ற என்னைத்தானே அகற்ற அரிது; இவ்வரியசெயலைச் செய்யிலும்.  (என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்க) “நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” (பெரியதிருவந்தாதி-1) என்றும், “தொழுதெழு என் மனனே” (1-1-1) என்றும் சொல்லலாம்படி தன்பக்கலிலே அவகா3ஹித்த நெஞ்சந்தன்னை அகல்விக்க.  (தானும் கில்லான்) ஸர்வஶக்தியென்னா, எல்லாம் செய்யப்போமோ? என்? செய்து போந்திலனோ இது நெடுங்காலம்? என்ன (இனி) அவனும் இனிமேலுள்ள காலம் மாட்டான்.  “இனி” என்கிற உரப்பு எத்தைப்பற்ற? என்னில், அத்தைச் சொல்லுகிறது மேல். (பின்னை இத்யாதி3) நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக, நித்யஸூரிகள் ஓலக்கமிருக்க அடிமைபுக்கு அந்த:புரபரிகரமான வஸ்துவை அகற்றப்போமோ? நப்பின்னைப் பிராட்டியுடைய நெடிதாய், சுற்றுடைத்தாய், பசுமையையுடைத்தான மூங்கில்போலேயிருக்கிற தோளோடே அணைகையால் வந்த பெருமையையுடையனாய், “யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:” என்கிறபடியே பழையராயிருந்துள்ள நித்யஸூரிகளுடைய ஸ்வரூப ஸ்தி2த்யாதி3கள் தன்னதீ4நமாம்படியிருக்கிறவன் தானும் கில்லான்.  “ஹர்ய்ருக்ஷ க3ணஸந்நிதெ4ள” என்கிறபடியே அவர்கள் ஸந்நிதி4யிலே ப்ரதிஜ்ஞை பண்ணிற்று; நப்பின்னைப் பிராட்டி புருஷகாரம் எங்ஙனே அகற்றும்படி?

ஒன்பதாம் பாட்டு

அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை*
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை*
அமர வழும்பத் துழாவிஎன் னாவி*
அமரத் தழுவிற்று இனி அகலுமோ?

      அநந்தரம், ஸர்வப்ரகாரத்தாலும் அவனை ஸம்ஶ்லேஷித்த என் ஆத்மா இனி அகல ப்ரஸங்கமுண்டோ? என்கிறார்.

     அமரர் – நித்யஸூரிகளுடைய, முழு – ஸ்வரூபஸ்த்திதி ப்ரவ்ருத்திகளெல்லாவற்றுக்கும், முதலாகிய – ஹேதுவாய்க்கொண்டு, ஆதியை – ப்ரதாநனானவனாய், அமரர்க்கு – அமரர்க்கு, அமுது – (அவர் ஆசைப்பட்ட) அம்ருதத்தை, ஈந்த – கொடுத்தவனாய், ஆயர் – (தன்னோடு உறவுடையரான) ஆயர்களுக்கு, கொழுந்தை – தலைவனானவனை, என் ஆவி – என் ஆத்மாவானது, அமர – (அநந்யார்ஹமான) பொருத்தம் பிறக்கும்படியாகவும், அழும்ப – (ஸ்வாதந்த்ர்யாதிகளான இடைத்துரும்பு அறும்படி) கலப்புப் பிறக்கவும், துழாவி – (ஸ்வரூபாதிஸமஸ்தவிஷயத்திலும்புக்கு) ஸஞ்சரித்து, அமர – இப்படிப்ருதக்ஸ்தித்யாதிகளில்லாதபடி, தழுவிற்று – உகந்துகலந்தது; இனி அகலுமோ – இனி அகல ப்ரஸங்கமுண்டோ? அழும்புதல் – செறியக்கலத்தல்.

     ஈடு – ஒன்பதாம் பாட்டு.  “தானும் கில்லான்” (1.7.8) என்கிற ப்ரஸங்க3ந்தான் என்? ஏகத்3ரவ்யம் என்னலாம்படியான இத்தை எங்ஙனே பிரிக்கும்படி? என்கிறார்.

     (அமரர் முழு முதலாகிய) நித்யஸூரிகளுடைய ஸ்வரூபஸ்தி2த்யாதி3கள் தன்னதீ4நமாம்படி இருக்கிறவனை.  (ஆதியை) இது தொடங்கி லீலாவிபூ4தி விஷயமாயிருக்கிறது.  தன்பக்கல் பா4வப3ந்த4ம் ஸத்தாப்ரயுக்தமன்றிக்கே யிருக்கிறவர்களுக்கும் தன்னை வழிபடுகைக்கு உறுப்பாகக் கரணகளேப3ரங்களைக் கொடுக்குமவனை.  (அமரர்க்கு அமுது ஈந்த) அவன் கொடுத்த கரணங்களைக் கொண்டு, “எங்களுக்கு நீ வேண்டா, உப்புச்சாறு அமையும்” என்பார்க்குக் கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுக்குமவனை.  (ஆயர் கொழுந்தை) “அவ்வம்ருதம் வேண்டா, நீ அமையும்” என்பார்க்காக வந்து அவதரித்துத் தன்னைக் கொடுக்குமவனை.

     (அமர இத்யாதி3) இப்படி உப4யவிபூ4தியுக்தனாயிருக்கிறவனைக் கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அநுப4வித்து, என்னுடைய ஆத்மாவானது ஏகத்3ரவ்யம் என்னலாம்படி கலந்தது.  (இனி அகலுமோ) இரண்டு வஸ்துவாகிலன்றோ பிரிக்கலாவது; ப்ரகாரப்ரகாரிகளுக்கு ஏகத்வபு3த்3தி4 பிறந்தால் பிரிக்கப்போமோ? ஜாதி கு3ணங்களோபாதி த்ரவ்யமானதுக்கும் நித்யதத3ாஶ்ரயத்வம் உண்டாகில் பிரிக்கப்போமோ?

பத்தாம் பாட்டு

அகலில் அகலும் அணுகில் அணுகும்*
புகலும் அரியன்  பொருவல்லன் எம்மான்*
நிகரில் அவன்புகழ் பாடி இளைப்பிலம்*
பகலும் இரவும் படிந்து குடைந்தே.

      – அநந்தரம், இப்படிப்பட்டவனை நிரந்தராநுபவம் பண்ணினாலும் த்ருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்கிறார்.

     அகலில் – (ப்ரயோஜநாந்தரங்களைக் கொண்டு) அகலில், அகலும் – (செய்யலாவது அற்று) அகலுமவனாய், அணுகில் – (அநந்யப்ரயோஜநராய்) அணுகில், அணுகும் – (அவர்களோடு ஒரு நீராகக்) கலக்குமவனாய், புகலும் அரியன் – (அந்யபரர்க்குக்) கிட்ட அரியனாய், பொருவல்லன் – (அநந்யர்க்குத்) தடையற்றவனாய், எம்மான் – (இந்த ஶீலத்தாலே) எனக்கு ஸ்வாமியாய், நிகரிலவன் – (இப்படிக்கு) ஒப்பில்லாதவனுடைய, புகழ் – புகழை, பகலும் இரவும் – பகலுமிரவும் விடாமல், படிந்து – உள்புக்கு, குடைந்து – எங்குங்கலந்து, பாடி – (ப்ரேமயுக்தராய்ப்) பாடி, இளைப்பிலம் – ஓவுதலுண்டாகிறிலோம்.  தவிரமாட்டுகிறிலோமென்று கருத்து.  பொரு என்று – எதிராய், தடையைக் காட்டுகிறது; அன்றியே, பொரு என்று – பொருத்தமாய், அநந்யரைச் சேரவல்ல னென்றுமாம்.

     ஈடு – பத்தாம் பாட்டு. என்னோடு கலந்த எம்பெருமானுடைய கு3ணங்களைக் காலதத்வமுள்ளதனையும் அநுப4வியாநின்றாலும் த்ருப்தனாகிறிலேன் என்கிறார்.

     (அகலில் அகலும்) இவன் அகன்றபடியே நிற்கில், “யதி3 வா ராவண: ஸ்வயம்” என்கிற சாபலமும் கிடக்கச்செய்தே, கண்ண நீரோடே கைவாங்கும்.  “த்3விதா4 ப4ஜ்யேயமப்யேவம் ந நமேயம்” என்னும் நிர்ப3ந்த4த்தோடே  நிற்கில் முடித்தேவிடும்.  (அணுகில் அணுகும்) தன்பக்கலிலே ஆபி4முக்2யம் பண்ணினால், “ஆக்2யாஹி மம தத்த்வேந” என்னும்; இளையபெருமாள் நிற்க, நாலடி வரநின்றவனையிறே “ராஜகார்யம் செய்யும்படி சொல்லீரோ” என்றது; “ராக்ஷஸாநாம் ப3லாப3லம்” இவனை ராக்ஷஸஜாதீயனாக நினைக்கை யின்றிக்கே, இக்ஷ்வாகு வம்ஶ்யனாகவே பு3த்3தி4பண்ணி, “ராக்ஷஸருடைய ப3லாப3லம் சொல்லீரோ” என்றாரிறே.  இத்திருவாய்மொழியில் முதற்பாட்டு – “அகலில் அகலும்” என்கிறவிடம் சொல்லிற்று.  இரண்டாம் பாட்டு –  “அணுகில் அணுகும்” என்கிறவிடம் சொல்லிற்று.

     (புகலும் அரியன்) அர்ஜுநனும் து3ர்யோத4நனும் கூடவரச்செய்தே, அர்ஜுநனுக்குத் தன்னைக்கொடுத்து, து3ர்யோத4நனுக்குத் தன்னை யொழிந்த பங்களத்தைக் கொடுத்துவிட்டானிறே.  உகவாதார்க்குக்கிட்ட அரியனாயிருக்கும்.  (பொருவல்லன்) ஆஶ்ரிதர் தன்னைக் கிட்டுமிடத்தில் தடை உடையனல்லன்.  “யத்ர க்ருஷ்ணௌ ச க்ருஷ்ணா ச ஸத்யபா4மா ச பா4மிநீ” புத்ரர்களுக்கும் புகவொண்ணாத ஸமயத்திலேயிறே ஸஞ்ஜயனை அழைத்துக் காட்சிகொடுத்தது.  பொரு என்று ஒப்பாய், ஒப்பாவது நேர் நிற்குமதாய், அத்தால் தடையைச் சொல்லிற்றாய், தடை உடையனல்லன் என்கை.  (எம்மான்) இஸ்ஸ்வப4ாவங்களைக்காட்டி என்னை அநந்யார்ஹனாக்கினவன்.

     (நிகரில் அவன்புகழ்பாடி இளைப்பிலம்) அவனுடைய ஒப்பிலாத கல்யாண கு3ணங்களைப் பாடி, ஒரு காலமும் விச்சே2தி3க்க க்ஷமனாகிறிலேன்.  இப்படி விடுகைக்கு க்ஷமனன்றிக்கேயொழிகிறது காலம் ஸாவதி4யாயோ? என்னில் (பகலும் இரவும்) ஸர்வகாலமும்.  ஆனால் விஷயத்தைக் குறைய அநுப4வித்தோ? என்னில் (படிந்து குடைந்தே) எங்கும் கிட்டி விஷயத்தை அநுப4வியா நிற்கச்செய்தே விடமாட்டுகிறிலேன்.

பதினொன்றாம் பாட்டு

*குடைந்துவண் டுண்ணுந் துழாய்முடி யானை*
அடைந்த தென்குரு கூர்ச்சட கோபன்*
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து*
உடைந்து நோய்களை ஓடு விக்குமே.

      – அநந்தரம், இத்திருவாய்மொழிக்கு பலமாக ஸாம்ஸாரிக மஹாவ்யாதி நிவ்ருத்தியை அருளிச்செய்கிறார்.

     வண்டு – வண்டுகள், குடைந்து – புக்கு, உண்ணும் – மதுவையுண்கிற, துழாய் – திருத்துழாயை, முடியானை – திருமுடியிலே யுடைய ஸர்வேஶ்வரனை, அடைந்த – (ஸர்வப்ரகாரத்தாலும்) செறிந்த, தென் – பரமோதாரரான, குருகூர்ச்சடகோபன் – ஆழ்வாருடைய, மிடைந்த – நெருங்கின, சொல் – சொல்லின், தொடை – தொடையையுடைய, ஆயிரத்து இப்பத்து – ஆயிரத்து இப்பத்து, நோய்களை – (அஹங்காரார்த்தகாமங்களின் செயல்களாகிற) மஹாவ்யாதிகளை, உடைந்து – உருக்குலைந்து, ஓடுவிக்கும் – சடக்கெனப் போம்படி பண்ணும்.  இது கலிவிருத்தம்.

     ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழிதானே இது கற்றவர்களுடைய ப்ராப்தி ப்ரதிப3ந்த3கங்களை  உந்மூலிதமாக்கும் என்கிறார்.

     (குடைந்து இத்யாதி3) மது4பாநம் பண்ண இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப்போலே உள்ளே உள்ளே இடங்கொண்டு பு4ஜியா நிற்குமத்தனைபோக்கி, மது4 வற்றிக் கைவாங்கவொண்ணாதபடியிருக்கிற திருத்துழாய்மாலையாலே அலங்க்ருதமாயிருக்கிற திருவபி4ஷேகத்தை உடையவனைக் கவிபாடிற்று.  (அடைந்த தென்குருகூர்ச் சடகோபன்) அம்மது4விலே படிந்தவண்டுகள் விடமாட்டாதாப்போலே ப43வத்3விஷயத்தை விடமாட்டாத ஆழ்வாராயிற்று அருளிச்செய்தார்.  (மிடைந்த சொற்றொடை) அநுப4வஜநித ப்ரீதியாலே பிறந்தவையாயிருக்கச்செய்தேயும், சொற்கள்தான் “நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோமாகவேணும்” என்று, “என்னைக்கொள், என்னைக்கொள்” என்று மேல்விழுந்தன. ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் அப்4யஸிக்க வல்லவர்களுக்கு, ஐஶ்வர்ய கைவல்யங்கள் புருஷார்த்த2ம் என்கைக்கு அடியான பாபங்கள் ஓடிப்போம்.  (நோய்களை உடைந்தோடுவிக்கும்) இவனை விட்டுப்போம்போதும் திரளப்போகப்பெறாது.  “வள்ளலே! உன்தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்போல்” (திருமொழி 8-10-7) என்கிறபடியே இருவர் ஒருவழி போகப்பெறார்கள்; இப்பாபங்கள் ஆஶ்ரயாந்தரத்தில் கிடந்தாலும் மறுமுட்டுப்பெறாதபடி உடைந்தோடும்.

     முதற்பாட்டில், கேவலரை நிந்தி3த்தார்; இரண்டாம் பாட்டில், அநந்யப்ரயோஜநர்திறத்தில் இருக்கும்படியைச் சொன்னார்; மூன்றாம்பாட்டில், இவ்விரண்டுகோடியிலும் நீர் ஆர்? என்ன, ‘உன்னை அநுப4வியாநிற்க விரோதி4 கழிந்தவன் நான்’ என்றார்; நாலாம்பாட்டில், ‘என்னை இவ்வளவாகப் புகுர நிறுத்தினவனை என்னஹேதுவாலே விடுவது?’ என்றார்; அஞ்சாம்பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் பெண்கள் க்ருஷ்ணனை விடுமன்றன்றோ நான் அவனை விடுவது’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘அவன்தான் விடிலோ?’ என்ன, ‘அவன் போக்கை இசையேன்’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘நீர்தான் விடிலோ?’ என்ன, ‘அவன் என்னைப்போகவொட்டான்’ என்றார்; எட்டாம்பாட்டில், ‘இந்நாள்வரை போக விட்டிலனோ?’ என்ன, ‘நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாகப்பற்றின என்னை இனி அவனாலும் விடவொண்ணாது’ என்றார்; ஒன்பதாம்பாட்டில், ‘இப்ரஸங்க3ந்தான் என்? ஒருநீராகக் கலந்தத்தை ஒருவராலும் பிரிக்க வொண்ணாது’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘அவனுடைய கல்யாணகு3ணங்களை ஸர்வகாலமும் அநுப4வித்து ஶ்ரமமுடையேனல்லேன்’ என்றார்; இத் திருவாய்மொழியை அப்4யஸித்தார்க்கு ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.

நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே ஶரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3திபிறவித்துயர்

பும்ஸ: ஶ்ரிய: ப்ரணயிந: புருஷார்த்த2ஸீம்நோ
நிந்த3ந் ப2லாந்தரபராந் நிரவத்3யக3ந்தா4த் |
3த்ரஸ்யதார்ஹகு3ணஜாதஸமர்த்த2நேந
தத்ஸேவநம் ஸரஸமாஹ ஸ ஸப்தமேந  || 7

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிபிறவித்துயர்

ஸச்சிதாகர்ஷஹேதோரக4ஶமநநிதே4ர்நித்யபோ4க்3யாம்ருதஸ்ய
த்யாகே3 ஹேதூஜ்ஜி4தஸ்ய ப்ரவஹது3பக்ருதேர்து3ஸ்த்யஜஸ்வாநுபூ4தே: |
த்யாகா3காங்க்ஷாநிரோத்3து4: ஶ்ரிதஹ்ருத3யப்ருத2க்காரநித்யாக்ஷமஸ்ய
ஸ்வாத்மஶ்லிஷ்டஸ்ய கா3யச்ச்2ரமஹரயஶஸஸ் ஸேவநம் ஸ்வாத்3வவோசத் || 7

திருவாய்மொழி நூற்றந்தாதி

பிறவியற்று நீள்விசும்பில் பேரின்ப முய்க்கும்*
திறமளிக்கும் சீலத் திருமால்* — அறவினியன்
பற்றுமவர்க் கென்று பகர்மாறன் பாதமே*
உற்றதுணை யென்றுள்ளமே யோடு.    7

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.