02-03 12000/36000 Padi

மூன்றாம் திருவாய்மொழி
ஊனில்வாழ் – ப்ரவேசம்

*******

– மூன்றாம் திருவாய்மொழியில் – இப்படி உத்துங்கலலிதனான இவனுடைய ஸர்வவித ஸாரஸ்யாதிசய ப்ரயுக்தமான திவ்யபோக்யதையை அருளிச்செய்வதாக; அவனுடைய ஸர்வரஸாத்மகத்வத்தையும், ஸாரஸ்யயுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகாரஸ்ம்ருதியையும், ஸ்வவிஷயத்தில் தம்மை அவன் அபிநிவேசிப்பித்தபடியையும், அவ்வுபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமில்லாதபடியையும், தன்னுடைய அப்ராக்ருத போக்யதையையும் ப்ரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்டபடியையும், இந்த ஸம்ஸ்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமானபடியையும், போக்யதாதிசயத்தாலே வ்யதிரேகத்தில் த4ரிக்க அருமையையும், அவ்வநுபவம் தமக்குக் கைப்புகுந்தமையையும், ஸர்வப்ரகாராநுபவத்தால் பிறந்த ஆநந்தவிசேஷத்தையும், இப்படி அநுபவித்து ஆநந்திகளான ஸூரிகளோடு தாம் கூடி அநுபவிக்கையிலுண்டான ஆசையையும் அருளிச்செய்து, கீழ்ச்சொன்ன ஸர்வப்ரகாரஸாரஸ்யம் ஸூரிபோக்யம் என்னுமிடத்தையும் உபபாதித்தருளுகிறார்.

ஈடு – ‘வாயுந்திரையுகளில்’ (2-1) ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்; நடுவு ப்ராஸங்கி3கமாக ப்ரஸ்துதமான வித்தனை ஈஸ்வரத்வம்.  தாம்பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;  அது தாம் அடியாக வந்ததாகிலிறே அளவுபட்டிருப்பது; ஸர்வேஸ்வரனடியாக வந்ததாகையாலே கனத்திருக்குமிறே.  தாம் அநுப4வித்த அநுப4வத்துக்குள்ளே எல்லா ரஸங்களுமுண்டாய், அதுதான் ஸமாப் 4யதி4கவர்ஜிதமுமாயிருந்தது.

“இப்படிப்பட்ட பேற்றுக்கு உசாத்துணையாவாரார்?” என்று பார்த்தவிடத்தில் ஸம்ஸாரத்தில் ஆளில்லாமையாலே, “அவன்தன்னோடு ஒக்க ப்ராப்யருமாய், அவனை நித்யாநுப4வம் பண்ணாநிற்பாருமாய், ப43வத3நுப4 வத்துக்கு தே3சிகருமாயிருக்கிற நித்யஸூரிகள் திரளிலே போய்ப்புக்கு ‘போ34யந்த: பரஸ்பரம்’ பண்ணி அநுப4விக்கப்பெறுவது எப்போதோ?”  என்னும் அநவாப்தியோடே தலைக்கட்டுகிறார்.  ‘வாயுந்திரையுகளில்’ ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதநங்களையும் சேர்த்தார் அங்கு; இங்கு, ஸம்ஸ்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு, அறிவு நைஸர்க்கி3கமான நித்யஸூரிகளைத் தேடுகிறார்.

(ராமஸ்து) பெருமாளும் பிராட்டியும் “ஏகதத்த்வம்” என்னலாம்படி கலந்த கலவியைச் சொல்லுகிறது.  “பித்ருஸுஸ்ரூஷணபரரானார், த4ர்மங்களை ப்ரவர்த்திப்பித்தார், தே3வதாஸமாராத4நம் பண்ணினார்” என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது;  இப்படிப் போந்த இவர் இப்போது “வாத்ஸ்யாயநம் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப்போந்தது?” என்னும்படி வேறுபட்டார்.  (ஸீதயா ஸார்த்த4ம்) பரமபத3த்தில் செவ்வியோடே வந்தவளும் பிற்பாடையாம்படி போ43ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார்.  (விஜஹார) இப்படி பரிமாறச் செய்தேயும் போ4கோ3போத்3கா4தத்துக்கு அவ்வருகுபட்டிலர்.  (ப3ஹூந் ருதூந்) “ப3ஹூந் ஸம்வத்ஸராந்” என்னாதேயொழிந்தது “அவ்வோகாலவிசேஷங்களுக்கு அடு(டை)த்த போ4கோ3பகரணங்களைக்கொண்டு பு4ஜித்தார்” என்னுமிடம் தோற்றுகைக்காக. (மநஸ்வீ) ஸம்ஸ்லேஷத்தில் பிராட்டி கோலினவளவுக்கு அவ்வருகுபட்டுப் பரிமாறினார்.  (தத்33த:) (தஸ்யாம் க3த:)  – ஜாதிகு3ணங்கள் த்3ரவ்யத்துக்கு ப்ரகாரமாய்ப் பிரிக்கவொண்ணாத படியாயிருக்குமாபோலே, பிரிக்கவொண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. (தஸ்யா நித்யம் ஹ்ருதி3 ஸமர்ப்பித:) இவருயர்த்தியை அறிந்திருப்பாளொருத்தியாகையாலே “அப்பெரியவன் இப்படித் தாழவிடுவதே!” என்று அச்செயலிலே தன்னெஞ்சு துவக்குப்பட்டு “அது அது” என்று கிடக்குமாயிற்று.  அப்படியாயிற்று இங்குக்கலந்த கலவிதான்.

முதல் பாட்டு

*ஊனில்வா ழுயிரே! நல்லைபோ உன்னைப்பெற்று*
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்*
தானும்யா னுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்*
தேனும்பா லும்நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.

– முதற்பாட்டில், ஸர்வரஸமான வஸ்துவோடு தமக்கு உண்டான ஸம்ஸ்லேஷம் தம்முடைய திருவுள்ளமடியாகவாதலால் நெஞ்சைப் பார்த்து உகக்கிறார்.

ஊனில் – மாம்ஸமயமான சரீரத்திலே, வாழ் – (இந்தளத்தில் தாமரைபோலே பகவதநுபவத்தைப்பெற்று) வாழுகிற, உயிரே – நெஞ்சே! நல்லைபோ – நல்லைகாண்! (எங்ஙனேயென்னில்;) உன்னை – உன்னை, பெற்று – (எனக்கு விதேயமாகப்) பெறுகையாலே, வானுளார் – பரமபதவாஸிகளான நித்யஸூரிகளுக்கும், பெருமான் – மேலான மேன்மையையுடையனாய், மதுசூதன் – (தன்னை அநுபவிக்கப்பாரித்த) என்னுடைய ப்ரதிபந்தகத்தை மதுவை முடித்தாற்போலே முடித்து, என்னம்மான் தானும் – என்னை அடிமைகொண்டருளின தன்மையுடைய அவனும், யானும் – (அவனை அநுபவிக்க ஆசைப்பட்டு அடிமைபுக்க) நானும், தன்னுள்ளே – தனக்குள்ளே, எல்லாம் – எல்லா இனிமையுமாம்படி, தேனும் – தேனும் தேனும், பாலும் – பாலும் பாலும், நெய்யும் – நெய்யும் நெய்யும், கன்னலும் – கன்னலும் கன்னலும், அமுதுமொத்து – அமுதமும் அமுதமும்போல, கலந்தொழிந்தோம் – கலந்துவிட்டோம்.

இத்தாலே – ஏகஜாதி த்ரவ்யம் கலந்தாற்போலே என்றபடி.  அநேக த்ருஷ்டாந்த தாத்பர்யம் – ஸர்வவித ஸாரஸ்யமும் தோற்றுகைக்காக.  தேனென்று ஸர்வரஸ ஸமவாயம்.  பாலென்று – ஸ்வாபாவிகரஸம்.  நெய்யென்று – ப்ரும்ஹணரஸம். கன்னலென்று – கரும்பாய், அதினுடைய பாகஜரஸத்தை நினைக்கிறது. அமுதென்று – நித்யரஸம். உயிரென்று – ப்ராணாஸ்ரயமான நெஞ்சைச் சொல்லுகிறது.  போவென்று – ஸாதரமான ஸம்புத்தி ஸூசகம்.

ஈடு – இதில் முதற்பாட்டில் – ராஜ்யத்தை இழந்த ராஜபுத்ரனை, ஒருவன் ராஜ்யத்திலே ப்ரவேசிப்பித்தால், “இவனாலே நாம் இப்பேறு பெற்றோம்” என்று அவனைக்கொண்டாடுமாபோலே, “கைங்கர்ய ஸாம்ராஜ்யத்துக்கு இட்டுப் பிறந்துவைத்து நெடுநாள் இழந்து கிடக்க, இன்னெஞ்சிறே இத்தைத் தந்தது” என்று திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.

(ஊனில் வாழுயிரே) ஊனென்று – சரீரமாய், வாழுகையாவது – வர்த்திக்கையாய், சரீரத்திலே வர்த்திக்கிற உயிரென்னுதல்; சரீரத்தைப் பற்றி அவ்வருகொன்று அறியாதே வாழ்ந்துபோன உயிரென்னுதல்.  மாம்ஸளமான சரீரத்திலே இருந்துவைத்து வாழுகிற உயிரே! பரமபத3த்தைப்பெற்று அங்கே நாநாப4வநத்தோடே அநுப4விக்கிற இடத்தேயோ நீ உதவிற்று? “மாம்ஸாஸ் ருக்பூயவிண்மூத்ரஸ்நாயுமஜ்ஜாஸ்தி2” களான சரீரத்திலே, நித்யஸூரிகள் அநுப4விக்கும் அநுப4வத்தையன்றோ நீ உபகரித்தது! இத்தால் வாழுகையாவது – அநுப4விக்கையாய், நெடுநாள் ப்ராக்ருத போ43ங்களை பு4ஜித்துப்போந்த நீ அப்ராக்ருத போ43த்துக்குக் கைதர நிற்பதே! என்றபடி.  மநஸ்ஸை – “உயிர்” என்பானென்? என்னில்; ஆத்மாவுக்கு த4ர்மபூ4தஜ்ஞாநம் நித்யமாயிருக்கச் செய்தே, “மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் ப3ந்த4மோக்ஷயோ:” என்று ப3ந்த4மோக்ஷங்களுக்கு ஹேது மநஸ்ஸு என்கிற ப்ராதா4ந்யத்தைப்பற்ற, “உயிரே!” என்று – ஆத்மாவை ஸம்போ3தி4க்குமாபோலே ஸம்போ3தி4க்கிறார்.  (நல்லைபோ) நல்லைவா என்றபடி.  நல்லைநல்லை என்று கொண்டாடுகிறார்.  போ4! என்று ஸம்போ34நமாகவுமாம்.  நல்லைபோ என்று முழுச்சொல்லாய், நல்லைநல்லை என்னுதல்.

நடுவே என்னைக்கொண்டாடுகிறதென்? என்ன (உன்னைப்பெற்று) ப3ந்த4ஹேதுவாய்ப்போந்த நீ மோக்ஷஹேதுவாகப் பெற்று; ஈஸ்வரனும் என்றுமுண்டு; தத்ஸம்ப3ந்த4மும் அநாதி3; அவன் ‘எதிர்சூழல் புக்கு’ (2-7-6)த் திரியாநிற்கவும், நீ ஆபி4முக்2யம் பண்ணாமையாலேயன்றோ நெடுங்காலம் இழந்தது;  இன்று நீ ஆபி4முக்2யம் பண்ணியன்றோ இப்பேறு பெற்றது.  நீர் பெற்ற பேறேதென்ன, சொல்லுகிறார் மேல் (வானுளார் பெருமான் மதுசூத னென்னம்மான் தானும் யானும்) ‘அயர்வறும் அமரர்களதிபதி’ (1-1-1)யாயிருந்து வைத்து அவதரித்து, மது4வாகிற அஸுரனைப் போக்கினாற்போலே என்னோட்டை ஸம்ஸ்லேஷ விரோதி4யைப்போக்கி என்னைத் தோற்பித்து, தன் பக்கலிலே கைங்கர்யத்திலே மூட்டின தானும், கைங்கர்யத்துக்கு விஷயபூ4தனான நானும்; ‘வாயுந்திரை யுகளில்’ (2-1) – கண்ணாற்கண்ட பதா3ர்த்த2ங்களடங்கலும் ப43வத3லாப4த்தாலே நோவுபடுகிறனவாக நினைத்து விடாய்த்த நானும், நெடுநாள் என்னைப் பெறுகைக்கு ‘எதிர்சூழல் புக்கு’ (2-7-6)  விடாய்ப்பித்த தானும்; க்ருஷி பண்ணின தானும், க்ருஷிக்கு விஷயபூ4தனான நானும்.

(எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்) ஆயிரத்திலொன்றும், கடலிற் குளப்படியும்போலே, தானும் நானுமான சேர்த்தியிலே எல்லா ரஸங்களும் பிறக்கும்படி ஸம்ஸ்லேஷித்தோம்.  (ஒழிந்தோம்) நித்யவிபூ4தியில் புக்காலும் இப்பேற்றை அசையிட்டிருக்குமித்தனை; அங்கு ஏற்றமாகச் செய்யலாவதில்லை;  இதினுடைய அவிச்சே23மே அங்குள்ளது.  இப்படி இங்கே கலந்திருக்க, இனி பரமபத3த்தேறப்போகத் தேடுகிறது – உசாத்துணைக்காகவும், இதுதான் விச்சே2தி3யாமைக்குமாயிற்று.

என்போலே கலந்தது? என்றால் (தேனும் பாலும் இத்யாதி3) இதுக்கு ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிக்கும்படி – “ஏகஜாதீய த்3ரவ்யங்கள் தன்னிலே கலந்தாற்போலே” என்று; அதாவது – “தேனும் தேனும் கலந்தாற்போலவும், பாலும் பாலும் கலந்தாற்போலவும், நெய்யும் நெய்யும் கலந்தாற்போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற்போலவும், அமுதும் அமுதும் கலந்தாற்போலவும்” என்று.  அங்ஙனன்றியே, எம்பெருமானார் அருளிச்செய்யும்படி – “இவற்றை ரஸவத்பதா3ர்த்த2ங்களுக்கெல்லாம் உபலக்ஷணமாக்கி, ‘தானும் நானுமான கலவிக்குள்ளே எல்லா ரஸங்களும் பிறக்கும்படி ஸம்ஸ்லேஷித்தோம்’ என்கிறார்” என்று.  “ஸர்வக3ந்த4ஸ்ஸர்வரஸ:” என்கிற வஸ்துவோடேயிறே கலக்கிறது; ஜ்ஞாநாநந்த3 வஸ்துக்களுடைய சேர்த்தியிலே ஸர்வரஸங்களும் பிறக்கும்படியாயிற்று கலந்தது. இவையெல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லும்போது வருவதொரு பரிமாணாதி4க்யமுண்டிறே; அதுதானேயிறே த்3ரவ்யஸத்3பா4வத்தில் ப்ரமாணம்.

இரண்டாம் பாட்டு

ஒத்தார்மிக் காரை இலையாய மாமாயா!*
ஒத்தாய்எப் பொருட்கும் உயிராய்* என்னைப்பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து*
அத்தா!நீ செய்தன அடியேன் அறியேனே.

– அநந்தரம், ஏவம்விதஸாரஸ்யயுக்தன் தம் விஷயத்தில் பண்ணின உபகாரம் அபரிச்சேத்யம் என்கிறார்.

ஒத்தார் மிக்காரை இலையாய – (இந்த ஸாரஸ்யாதிஶயத்துக்கு) ஸமாப்யதிகதரித்ரனாய், மாமாய – (ப்ரதிக்ஷணம் அநுபவியாநின்றாலும் அபூர்வவத்விஸ்மயாவஹமான) மஹாஸ்சர்யயுக்தனாய், ஒத்தாய் எப்பொருட்கும் – ஸர்வபதார்த்த ஸஜாதீயனாய் வந்து அவதரித்து அநுபவிப்பிக்குமவனாய், உயிராய் – (ஆத்மா சரீரத்துக்கு தா4ரகனாமோபாதி) ஸர்வபதார்த்ததாரகனாய், என்னை – என்னை, பெற்ற – உத்பாதித்த, அ – அந்த அஸாதாரண ஸம்பந்தத்தையுடைய, தாயாய் – தாயாம்படி ப்ரியபரனாய், அ – ததாவிதோத்பத்தி ஹேதுவான, தந்தையாய் – பிதாவாம்படி ஹிதபரனுமாய், (ஆசார்யனோபாதி) அறியாதன – அஜ்ஞாதமான அநுபவாதிகளை, அறிவித்து – அறிவிப்பதுஞ்செய்து, அத்தா! – (இவ்வுபகாரங்களுக்கடியான) ஸம்பந்தத்தையுமுடையவனே! நீ – (ஸோபாதிகரான அவர்களைப் போலன்றியே நிருபாதிக ஸம்பந்தயுக்தனான) நீ, செய்தன – செய்த உபகாரங்கள், அடியேன் – அடியேனான உறவாலே என்றிருக்குமதொழிய, அறியேன் – (அளவிட்டு) அறியமாட்டுகிறிலேன்.

ஸர்வவிதபந்துவான நாராயணனிறே மாதாவும் குருவும் என்று கருத்து.

 

ஈடு – இரண்டாம் பாட்டு.  இப்பாட்டு ப்ரஸ்துதமானவளவிலே எம்பார் கோ3ஷ்டி2யிலே “இவ்வாத்மாவுக்கு ப்ரத2மகு3ரு ஆர்?” என்று பிறந்ததாய், இருந்த முதலிகளிற்சிலர், “ஆசார்யனன்றோ” என்றார்கள்; சிலர் “ஆசார்யன் ஸ்ரீபாத3த்திலே ‘ஆஸ்ரயிக்கப்போரு’ என்று அழைத்துக்கொண்டுபோய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷ்ணவன் ப்ரத2மகு3ரு” என்றார்கள்;  “அங்ஙனன்றுகாண், அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி ‘இசைவித்தென்னை’ (5-8-9) என்கிறபடியே அகவாயிலே இருந்து இசைவித்த ஸர்வேஸ்வரன்காண் ப்ரத2மகு3ரு” என்று அருளிச்செய்தார்.  “அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேரவிட்டது நெஞ்சிறே” என்று இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புக்கவாறே, “நீர் வழிபோவாரைக்கொண்டாடுகிறதென் அடியறியாதே?” என்ன; “ஆராய்ந்தவாறே, அதுக்கும் அடி  அவனாயிருந்தது; நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனையாகாதே!” என்று அத்தைவிட்டு – “என்னையும் இசைவித்த ஸர்வேஸ்வரனைக்கொண்டாடீர்” என்ன; தம் திருவுள்ளத்தை விட்டு – ஸர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.

(ஒத்தார் மிக்காரையிலையாய மாமாய) என்னை இப்படி விஷயீகரித்த நீதான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ? ஸ்ரிய:பதிக்கும் தன்னால் கழிக்க வொண்ணாதபடியிருப்பதொரு தா3ரித்3ர்யமுண்டு; “ந தத்ஸமஸ்சாப்4யதி4கஸ்ச த்3ருஸ்யதே” என்கிறபடியே ஸமாதி4கத3ரித்3ரனாயிருக்கும். (மாமாய) இதென்ன ஆஸ்சர்யந்தான்!

(ஒத்தாய் எப்பொருட்கும்) நீ ஆராய் என்பட்டாய்? ஸமாதி4க த3ரித்3ரனா யிருக்கிற நீயே இதர ஸஜாதீயனாய் வந்து அவதரித்தாய்! (எப்பொருட்கும் ஒத்தாய்) ப்3ரஹ்மருத்3ரர்கள் நடுவே விஷ்ணுநாமாவாயும், இந்த்3ராநுஜனாயும், ராமக்ருஷ்ணாத்3யவதாரங்களைப் பண்ணியும், திர்யக்குகளோடொக்க மஹாவராஹமாய், ஸ்தா2வரங்களோடொக்க கு3ப்ஜாம்ரமாயும் நிற்கும் நிலை.  குப்3ஜாம்ரமாய் நின்றதுக்குக்கருத்து – “செவ்வே நின்றால் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏறவொண்ணாது” என்று எல்லார்க்குமொக்க ஸுலப4னாகைக்கு.  இப்படி நிற்கிறதென்? என்னில்; மேன்மையோடே வரில் “கிட்டவொண்ணாது” என்று அகலுவர்கள்; தாழவிட்டு வரில் காற்கடைக்கொள்ளுவர்கள்;  ஆகையாலே ஸஜாதீயனாய் வந்து அவதரிக்கவேணும்; – “ப்3ரஹ்மேஶமத்4  யக3ணநாக3ணநார்க்கபங்க்தாவிந்த்3ராநுஜத்வமதி3தேஸ்தநயத்வயோகா3த்| இக்ஷ்வாகுவம்ஶயது3வம்ஸஜநிஸ்ச ஹந்த! ஸ்லாக்4யாந்யமூந்யநுபமஸ்ய பரஸ்ய தா4ம்ந: ||” என்னக்கடவதிறே.

இப்படி அவதரித்துச் செய்வதென்? என்னில் (உயிராய்) இச்சேதனன் தான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக் கடவனாயிருக்கை.  தா4ரகனாய் என்னவுமாம்.  (என்னைப்பெற்ற அத்தாயாய்) தான் உண்டாகிலிறே தான் தனக்கு ஹிதம் பார்ப்பது வளர்த்துக்கொண்ட தாயன்றிக்கே, “பெறவேணும்” என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தை ஒறுத்துப் பெற்று, இவன் ப்ரியத்தையே நடத்தக்கடவ தாயாய்.  (தந்தையாய்) இப்படி நோன்பு நோற்று வருந்தி வரங்கிடந்து பெற்ற தாயும் இட்டுவைக்கைக்கு ஒரு பைமாத்ரமாம்படி, இவனுக்கு உத்பாத3கனாய் ஹிதம்பார்க்கும் தந்தையாய்.

அவ்வளவன்றிக்கே – (அறியாதன அறிவித்து) “சரீரமேவ மாதாபிதரௌ ஜநயத:” என்னுமளவன்றிக்கே, ஜ்ஞாநவிகாஸத்தைப் பண்ணித்தரும் ஆசார்யனுமாய்; “ஸ ஹி வித்3யாதஸ்தம் ஜநயதி தச்ச்2ரேஷ்ட2ம் ஜந்ம” என்கிறபடியே.  “ஏதத்3வ்ரதம் மம” “மாமேகம் சரணம் வ்ரஜ” என்னுமவனிறே.  (அத்தா) மஹோபகாரகனானவனே! இவ்வுபகாரங்களை, உடையவனாகையாலே செய்தான் என்கிறார்.

“மாதா பிதா ப்4ராதா நிவாஸஸ்ஸரணம் ஸுஹ்ருத்33திர்நாராயண:” என்கிறார்.  “பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையாராவாரும் நீ” (பெரியதிருவ.5) என்றாரிறே.  (நீ செய்தன) ஒன்றிரண்டாகிலிறே “இன்னது” என்னலாவது; ஆகையாலே “நீ செய்தன” என்னுமித்தனை.  ஸ்வாமியான நீ சேஷபூ4தனான என்பக்கல் பண்ணின உபகாரங்கள்.  (அடியேன் அறியேனே) உபகரித்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப்போமோ அனுப4வித்துக் குமிழிநீருண்டு போமித்தனையொழிய? என்கிறார்.

மூன்றாம் பாட்டு

அறியாக்  காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து*
அறியா  மாமாயத்து அடியேனை வைத்தாயால்*
அறியா  மைக்குறளாய்  நிலம்மாவலி!  மூவடியென்று*
அறியாமை  வஞ்சித்தாய் எனதாவி  யுள்கலந்தே.

– அநந்தரம், தன் பக்கலிலே அவன் தம்மை அபிநிவேசிப்பித்தபடியை அருளிச்செய்கிறார்.

அறியாமை – (பிறர் தன்னை உள்ளபடி அறியாதபடி வடிவழகாலே) மதிமயக்கின, குறளாய் –  வாமநனானவனாய், நிலம் மாவலி மூவடி என்று – நிலம் மாவலி மூவடி என்று (அநந்விதபதமாய் அபரிஸமாப்தமான வாக்யத்தாலே), அறியாமை – (“இவன் ஈஸ்வரன்” என்று அறிவிக்கிற ஸுக்ராதிகள் பாசுரமும்) நெஞ்சில் படாதபடியாக, வஞ்சித்தாய் – (அவன் “தன்னது” என்றிருந்த ஜகத்தை) வஞ்சித்துக் கொண்டவனே! எனதாவியுள் கலந்து – (இவ்வபதாநத்தை எனக்கு ப்ரகாசிப்பித்து) என்னெஞ்சுக்குள்ளே கலந்து, (அக்கணக்கிலே), அறியா – அறியாமையை விளைப்பதாய், மா – துஸ்தரமான பெருமையையுடைத்தாய், மாயத்து – மாயாகார்யமான ஸம்ஸாரத்திலே, அடியேனை – (ஸ்வதஸ்ஸித்தமான சேஷத்வ ஸம்பந்தம் பற்றாசாக) என்னை, அறியாக்காலத்துள்ளே – அந்த சேஷத்வமறிகைக்கு ஸம்பாவனையில்லாக் காலத்திலே, அடிமைக்கண் – தத்பலமான சேஷவ்ருத்தியிலே, அன்பு – ஆதரத்தை, செய்வித்துவைத்தாயால் – பிறப்பித்து வைத்தாயிறே.

இது, உன்னுடைமை நழுவவிடாமைக்கிறே என்று கருத்து.

ஈடு – மூன்றாம் பாட்டு.  ஆளவந்தார் அருளிச்செய்ததாகத் திருமாலையாண்டான்  பணிக்கும்படி – “ ‘அறிவு நடையாடாத த3சையிலே ஸம்ப4ந்த4 ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து, பிறந்த ஜ்ஞாநத்தை அழிக்கக் கடவதான தே3ஹஸம்ப3ந்த4த்தோடே பின்னையும் வைத்தாய்’ என்கிற இழவாலே சொல்லுகிறார்” என்றாம்.  இத்தை எம்பெருமானார் கேட்டருளி, “முன்னிற்பாட்டுக்களும், பின்னிற்பாட்டுக்களும் ப்ரீதியோடே நடவாநிற்க, நடுவே அப்ரீதிதோற்றச் சொல்லுமது சேராது; ஆனபின்பு இங்ஙனேயாமித்தனை – ‘அறியா மா மாயத்து அடியேனை – அறியாக்காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாயால்’ என்கிறார்” என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச்செய்தார்.  “அத்தா நீ செய்தன” என்று – நாம் பண்ணின உபகாரங்களைச் சொல்லா நின்றீர்; அவற்றிலே நீர் மதித்திருப்பதொரு உபகாரத்தைச் சொல்லிக்காணீர் என்ன, அத்தைச் சொல்லுகிறார்.

(அறியாக் காலத்துள்ளே) “பா3ல்யாத் ப்ரப்4ருதி ஸுஸ்நிக்34:” என்கிறபடியே, அறிவு நடையாடாத பா3ல்யத்திலே.  (அடிமைக்கண் அன்பு செய்வித்து) அடிமைக்கண் – அடிமையிலே.  “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்கிறபடியே, அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரக3ந்த4ரான நித்யஸூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னை அந்வயிப்பித்தது.  (அன்பு செய்வித்து) “வரில் பொகடேன், கெடில் தேடேன்” என்றிருக்கையன்றிக்கே, “குருஷ்வ” என்னும்படி பெறாவிடில் முடியும்படியன்றோ பண்ணிற்று.  (அறியா இத்யாதி3) பிள்ளாய்! ஊமத்தங்காய் தின்று ப்4ரமித்தாரைப்போலே அசித்ஸம்ஸ்ருஷ்டனாயிருக்கிற என்னைக் கிடீர் இப்படி பண்ணிற்று!

அறிவுகேட்டைப் பண்ணக்கடவதான ப்ரக்ருதிஸம்ஸ்ருஷ்டனாயிருக்கிற அடியேனை, “இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது, நம் வஸ்துவன்றோ” என்று, வைத்தாயால் – இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயால் என்கிறார்.  அறியா மாமாயத்து அடியேனை – அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாயால். இதுக்கு நல்ல நித3ர்சநமுண்டு – (அறியாமை இத்யாதி3) நெஞ்சறியாதபடி கார்யம் செய்வாரைப்போலே, திருமார்விலிருக்கிற நாய்ச்சியாருங்கூட அறியாமே வாமநவேஷத்தைப் பரிக்3ரஹித்து, “கொள்வன் நான் மாவலி” (3-8-9) என்றாற்போலே, ‘நிலம் மாவலி மூவடி’ என்று – அநந்வித பா4ஷணங்களைப் பண்ணி.  பண்டும் இரந்து பழக்கமுண்டாகிலிறே அந்வித பா4ஷணம் பண்ணுவது. (அறியாமை வஞ்சித்தாய்) ஸுக்ராதி3கள் “இவன் ஸர்வேஶ்வரன், தே3வகார்யம் செய்ய வந்தான், உன் ஸர்வஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான்” என்றால், அவர்கள் பாசுரம் செவிப்படாதபடி தன் பேச்சாலே அவனை அறிவுகெடுத்து வஞ்சித்தானாயிற்று.

அப்படியே – (எனதாவியுள் கலந்து) – நான் இருக்கிறவிடத்தளவும் வந்து என்னோடே கலந்து; அத்யந்தம் அந்யபரனான என் ஆத்மாவிலே புகுந்து உன் கு3ணசேஷ்டிதங்களாலே வஶீகரித்து.  “அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி யென்று அறியாமை வஞ்சித்தாற்போலே, எனதாவியுள் கலந்து – அறியா மாமாயத்து அடியேனை – அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாயால்” என்று அந்வயம்.

நான்காம் பாட்டு

எனதாவியுள் கலந்தபெரு நல்லுதவிக் கைம்மாறு*
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே*
எனதாவி யாவியும்நீ பொழிலேழு முண்டஎந்தாய்*
எனதாவி யார்?யான்ஆர்? தந்தநீகொண் டாக்கினையே.

– அநந்தரம், இவ்வுபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமில்லை என்கிறார்.

பொழிலேழும் – ஸமஸ்தலோகங்களும், (ப்ரளயத்திலே அழியப்புக) உண்ட – வயிற்றிலே வைத்துநோக்கின, எந்தாய் – ஸ்வாமியே! (அப்படி நானும் அழிந்து போகாதபடி), எனதாவியுள் – (அத்யந்தஹேயமான) என் ஆத்மாவுக்குள்ளே, கலந்த – ஒரு நீராகக் கலந்த, பெரு – (அது தன் பேறாம்படி) பெருத்து, நல் – (நிர்ஹேதுகமாகையாலே) நன்றான, உதவி – உதவிக்கு, கைம்மாறு – ப்ரத்யுபகாரமாக, எனதாவி – என் ஆத்மாவை, தந்தொழிந்தேன் – (உனக்குத்) தந்தேவிட்டேன்; இனி – இனி, மீள்வது – (அதுக்கு) மீட்சி என்பதொன்று, உண்டே – இல்லை; (இதுதான் ஆரதென்று ஆராயில்), எனதாவியும் – என் ஆத்மாவுக்கும், ஆவி – ஆத்மா, நீ – நீ, (ஆதலால்) எனதாவி ஆர் – (தரப்படுகிற) என் ஸ்வரூபத்தினுடைய கர்மத்வமும் நானிட்ட வழக்கல்ல; யான் ஆர் – தருகிற என்னுடைய கர்த்ருத்வமும் நானிட்ட வழக்கல்ல; தந்த – (தாத்ருத்வ கர்த்ருத்வாதி விஶிஷ்டமான இவ்வஸ்துவினுடைய ஸத்தையை அடியிலே) உண்டாக்கித்தந்த, நீயே – நீதானே, கொண்டாக்கினை – பின்னையும் ஸ்வீகரித்தாய்.

ஆதலால், உனக்கே சேஷமென்றிட்டு எனக்கு ஸமர்ப்பணத்தில் கர்மத்வமுமில்லை, கர்த்ருத்வமுமில்லை.  கைம்மாறு – ப்ரத்யுபகாரம்.

ஈடு – நாலாம் பாட்டு.  “வைத்தாயால்” (233) என்று அவன் பண்ணின உபகாரத்தை அநுஸந்தி4த்து இங்ஙனே கிடந்து நெஞ்சாறல் படாநில்லாதே, ப்ரத்யுபகாரமாக உம்மதாயிருப்பதொரு வஸ்துவைக்கொடுத்து நெஞ்சாறல் தீரமாட்டீரோ? என்ன; “அப்படியேயிறே செய்வது” என்று அவன் திருவடிகளிலே ஆத்ம ஸமர்ப்பணத்தைப் பண்ணி அநுஸயிக்கிறார்.

(எனதாவியுள்கலந்த) அநாதி3காலம் ஸம்ஸாரத்திலே வாஸனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்மவஸ்துவிலே கிடீர் வந்து கலந்தது.  (எனதாவி) வஸிஷ்ட2ன் சண்டா3ளஸ்ரேணியிலே புகுந்தாற்போலே தம்மை அநுஸந்தி4க்கிறார்; “நீசனேன்” (334) என்றிறே தம்மை அநுஸந்தி4ப்பது. (உள்கலந்த) அதுதன்னிலும் கடக்கநின்று சில போ43மோக்ஷங்களைத் தந்துபோகையன்றிக்கே, “எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்” (23-1) என்னும்படி கலப்பதே! (உதவி, நல்லுதவி, பெருநல்லுதவி) உதவியாவது – உபகரிக்கை.  நல்லுதவியாவது – பச்சை கொள்ளாதே உபகரிக்கை; பெருநல்லுதவியாவது – தன்பேறாக உபகரிக்கை.  இம்மஹோபகாரத்துக்கு கைம்மாறாக – ப்ரத்யுபகாரமாக.

(எனதாவி தந்தொழிந்தேன்) என்னுடைய ஆத்மவஸ்துவை தேவர் திருவடிகளிலே ஸமர்ப்பித்தேன்.  ‘அழகிது, இதுதான் எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் ஈஸ்வரன், – (இனி மீள்வதென்பதுண்டே) ஸத்3யோத3ஸாஹமாகத் தந்தேன்.  “அழகிது, நீர்தாம் ஆரத்தை யாருக்குத் தந்தீர் என்று ஆராய்ந்து பார்த்துக் காணும்” என்றான் ஈஸ்வரன்; ஆராய்ந்தவாறே அவனத்தை அவனுக்குக் கொடுத்ததாயிருந்தது – (எனதாவியாவியும் நீ) என் ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய்ப் புகுந்து நிற்கிறாயும் நீயாயிருந்தாய்.  ப43வதீ3யமான வஸ்துவை நெடுநாள் “நம்மது” என்றிருந்து, இத்தை இன்று அவன் பக்கலிலே ஸமர்ப்பித்தோம்; ஸர்வஜ்ஞனானவன் என் நினைத்திருக்கும்? என்று, தாம் அத்தை அறிந்து அதுக்கு லஜ்ஜிக்கிறார்.

ஆத்மஸமர்ப்பணம் பண்ணாவிடில் ஸர்வமுக்திப்ரஸங்க3மாம்; ஸமர்ப்பிக்கில் அவனதான வஸ்துவை அவனுக்குக் கொடுத்ததாம்; ஆனாற்செய்ய அடுப்பதென்? என்னில்; ப்4ராந்திஸமயத்தில் ஸமர்ப்பிக்கவும் வேணும்; தெளிந்தால் “கொடுத்தோம்” என்றிருக்கக் கடவனல்லன்; “மயா ஸமர்ப்பித: – அத2வா கிந்நு ஸமர்ப்பயாமி தே” என்றாரிறே.

(பொழிலேழும் உண்ட எந்தாய்) ஸ்வாபா4விகமான சேஷித்வங்கொண்டு சொல்லவேணுமோ? ப்ரளயாபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கின அது போராதோ “நீ சேஷி” என்கைக்கு? (எந்தாய்) ப்ரளயாபத்திலே நசியாதபடி ஜகத்தை ரக்ஷித்தாற்போலே, பிரிந்து நசியாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்டவன் என்றுமாம்.  (எனதாவியார்யானார்) ப்ரதே3யமான வஸ்து ஆரது? ப்ரதா3தா ஆருடையவன்? “நான் என் ஆத்மாவை ஸமர்ப்பித்தேன்” என்னக் கடவேனோ? (தந்த நீ கொண்டாக்கினையே) முதலிலே இத்தை உண்டாக்கின நீயே கொண்டாயானாய்.  உண்டாக்குகையாவதென் நித்யவஸ்துவை? என்னில்; “இச்சா2த ஏவ தவ விஶ்வபதா3ர்த்த2ஸத்தா” என்று அவனுடைய நித்யேச்சை2 யாலேயிறே இதினுடைய நித்யத்வம்.

ஐந்தாம் பாட்டு

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாதஎந்தாய்*
கனிவார் வீட்டின்பமே! என்கடல் படாஅமுதே!*
தனியேன் வாழ்முதலே! பொழிலேழும் ஏனமொன்றாய்*
நுனியார் கோட்டில்வைத்தாய் உனபாதம் சேர்ந்தேனே.

– அநந்தரம், உன்னுடைய அப்ராக்ருத போக்யதையைக் காட்டி ருசி ஜநகனானபடியாலே உன் திருவடிகளைப் பெற்றேனல்லேனோ? என்கிறார்.

யார் – எத்தனையேனும் அதிசயிதரானவர்களுடைய, ஞானங்களால் – ஜ்ஞானங்களால், எடுக்கல் – எடுக்கைக்கு, எழாத – எடுப்புண்ணாத, எந்தாய் – ஸ்வாமியாய், கனிவார் – (உன் பக்கல் ஸ்நேஹத்தாலே) பரிபக்வஹ்ருதயரானவர்களுக்கு, வீட்டின்பமே – மோக்ஷாநந்தபூதனாய், என் – (உபயவ்யாவ்ருத்தனான) எனக்கு (மதநாதியத்நத்தால்), கடல் – கடலிலே, படா – உண்டாகாத, அமுதே – (அப்ராக்ருதமான) அம்ருதமாய், தனியேன் – (ஸம்ஸாரத்தில் பொருந்தாமையாலே) தனியனான என்னுடைய, வாழ் – (த்வதநுபவரூபமான) வாழ்வுக்கு, முதலே (ருசிஜநகத்வாதியாலே) ப்ரதமஹேதுபூதனாய், (என்னை ஸம்ஸாரார்ணவத்தினின்றும் எடுக்கைக்கு ஸூசகமாக) பொழிலேழும் – ஸப்தத்வீபயுக்தமான ஜகத்தை, ஒன்று – அத்விதீயமான, ஏனமாய் – மஹாவராஹமாய்க் கொண்டு, நுனியார் – கூர்மைமிக்க, கோட்டில் – கொம்பிலே, வைத்தாய் – வைத்தவனே! இனி – இனி (நீயே ஹேதுபூதனாய் நிர்வஹிக்கிற பின்பு), உன பாதம் – உன் திருவடிகளை, சேர்ந்தேனே – ப்ராபித்தேனேயன்றோ.  ஏகாரம் தேற்றம்.

எடுக்கல்தம் வசமாக்குதல்.

ஈடு – அஞ்சாம் பாட்டு.  ‘ஜ்ஞாநலாப4மே அமையுமோ, ப்ராப்தி வேண்டாவோ?’ என்ன; ‘எனக்கு ப்ரத2மஸுக்ருதம்மும் நீயேயாய், என்னை ஸம்ஸாரிகளில் வ்யா வ்ருத்தனாக்கின அன்றே பெற்றேனேயன்றோ’ என்கிறார்.

இனி – மேலே அந்வயம்.  (ஆர் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்) எத்தனையேனும் அதிசயிதஜ்ஞாநரானவர்களுடைய ஜ்ஞாநவிசேஷங்களாலும் ஸ்வயத்நத்தாலே அறியப்பார்க்குமன்று பேர்க்கப் பேராதிருக்கிற என் நாயனே! அதாவது – து3ர்யோத4நனாலே பரிச்சே2தி3த்தல், ராவணனாலே எடுக்கலாயிருத்தல் செய்ய அரிதாயிருக்கை.  (கனிவார் வீட்டின்பமே) “நீ” என்றால் உள்கனிந்து பக்வமாயிருக்குமவர்களுக்கு மோக்ஷஸுக2மானவனே! அன்றியே, “நீ” என்றால் இனியராயிருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆநந்த3த்தை விளைக்குமவனே! அப்படி எங்கே கண்டோம்? என்னில்; யசோதைப்பிராட்டி, ‘தொல்லையின்பத்திறுதி கண்டா’ (பெருமாள் திருமொழி 7-8)ளிறே.

(என்கடற்படா வமுதே) அவ்விரண்டு கோடியிலும் எண்ணவொண்ணாதபடி யிருக்கிற எனக்கு அயத்நஸித்34 போ4க்3யனானவனே! (தனியேன் வாழ்முதலே) தனியேனான என்னுடைய அநுப4வத்துக்கு ப்ரத2மஸுக்ருதமானவனே! ஏகாக்ஷி ஏககர்ணிகள் நடுவேயிருந்தாற்போலே பிராட்டி, இவருக்கும் தனியாயிருக்குமிறே ஸம்ஸாரத்தில் இருப்பு. (பொழில் இத்யாதி3) தனிமையிலே வந்து உதவும்படியைச் சொல்லுகிறது.  அத்3விதீய மஹாவராஹ வேஷத்தைப் பரிக்3ரஹித்து, ப்ரளயங் கொண்ட பு4வநங்களேழையும் எடுத்து.  (நுனியார் கோட்டில் வைத்தாய்) நுனியென்று – கூர்மை. ஆருகை – மிகுதி.  கூர்மைமிக்க கோட்டிலே வைத்தாய் என்றபடி.  இத்தால் – ரக்ஷ்யவர்க்க3த்தின் அளவல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பைச் சொல்லுகிறது.

(இனி உனபாதம் சேர்ந்தேனே) ப்ரளயங்கொண்ட பூமியை எடுத்தாற் போலே ஸம்ஸார ப்ரளயங்கொண்ட என்னை எடுத்தபோதே, தேவர் திருவடிகளை நான் கிட்டினேனேயன்றோ.  “இமையோர் தலைவா – இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை” (திருவிரு.1) என்னும்படி அறிவைத் தந்தபோதே, உன் திருவடிகளைப் பெற்றேனேயன்றோ.

ஆறாம் பாட்டு

சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியைத்*
தீர்ந்தார் தம்மனத்துப் பிரியா தவருயிரைச்*
சோர்ந்தே போகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை* அடியேன் அடைந்தேன் முதல்முன்னமே.

– அநந்தரம், இந்த ப்ராப்தி ஸ்வரூபப்ரயுக்தமாகையாலே அநாதிஸித்தமன்றோ என்கிறார்.

சேர்ந்தார் – (உன்னை) அடைந்தவர்களுடைய, தீ – க்ரூரமான, வினைகட்கு – பாபங்களுக்கு, அரு – ஆற்றவரிய, நஞ்சை – நஞ்சாய், திண்மதியை – திண்ணிதான மதியாகிற வ்யவஸாயந்தானாய் நிற்கிறான் என்னலாம்படி இதுக்கு உத்பாதகனாய், தீர்ந்தார் தம் – அந்த அத்யவஸாயத்தையுடையவர்களுடைய, மனத்து – மனஸ்ஸிலே, பிரியாது – விடாதே, அவர் உயிரை – அவர்கள் ஆத்மவஸ்துவை, சோர்ந்தே – (என்றும் விஷயாந்தரங்களிலே புக்குச்) சோர்ந்து, போகல்கொடா – போகக்கொடாதே, சுடரை – (தன் வடிவையே அவர்களுக்கு விஷயமாக்கும்) உஜ்ஜ்வல ஸ்வபாவனாய், (அவர்கள் விஷயருசியை) அரக்கியை – சூர்ப்பணகியை, மூக்கீர்ந்தாயை – அழித்தாற்போலே அழித்துக்கொடுக்கவல்ல உன்னை, அடியேன் – உனக்கு சேஷபூதமான ஸ்வரூபத்தையுடைய நான், முதல் முன்னமே – முதலுக்கு முன்னே, அடைந்தேனே – அடைந்தேனல்லவோ?

மயறர்வற மதிநலம் அருளுவதற்கு முன்னே ப்ராப்தி உண்டல்லவோ என்று கருத்து.

ஈடு – ஆறாம் பாட்டு.  “இனி உன பாதம், சேர்ந்தேனே” (2.3.5) என்றார்; “இனி” என்று விசேஷிக்கவேணுமோ? ‘பொய்ந்நின்ற ஞான’ (திருவிருத்தம்-1)த்திலே நீ விசேஷ கடாக்ஷம் பண்ணினபோதே கிட்டிற்றிலேனோ? என்னுதல்; அன்றிக்கே, ஸ்வரூபத்தை அநுஸந்தி4த்தவாறே ஸ்வாபா4விக ஶேஷத்வமேயாய் நிலைநின்ற ஆகாரம், நடுவுள்ளது வந்தேறியாய்த் தோற்றுகையாலே சொல்லுகிறாராகவுமாம்.

சேர்ந்தாருண்டு – “த்2விதா4 ப4ஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்” என்னும் நிர்ப்ப3ந்த4மில்லாதவர்கள்.  (சேர்ந்தார்) கெடுமரக்கலம் கரைசேர்ந்தாற்போலே இவனைக் கிட்டினவர்கள்.  அநாதி3காலம் ஸம்ஸரித்துப் போந்த ஆத்மா ஸர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது – கரைசேருகையிறே.  ‘இக்கரையேறி’ (பெரியாழ்வார் திருமொழி 5-3-7)னார்களிறே அவர்கள். (தீவினைகட்கரு நஞ்சை) அவர்களுடைய ப்ராப்திப்ரதிப3ந்த4க கர்மங்களுக்குக் காற்ற வொண்ணாத ((பா)காக்க வொண்ணாத) நஞ்சானவனை. (திண்மதியை) முன்பே சேர்ந்திருக்குமவர்களுக்குத் திண்ணியதான மதியைக் கொடுக்குமவனை.  அம்ப4ரீஷன் தபஸ்ஸு பண்ணா நிற்க, ஸர்வேஸ்வரன் இந்த்3ர வேஷத்தை த4ரித்துக்கொண்டு சென்று, “உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்” என்ன, “நான் உன்னை ஆராதி4க்குமவனல்லேன்காண்; என்னை ஸமாதி44ங்க3ம் பண்ணாதே போகவல்லையே? உன்னைக் கும்பிடுகிறேன்” என்றானிறே.  “நாஹமாராத4யாமி த்வாம் தவ ப3த்3தோ‍4யமஞ்ஜலி:” என்று தானே அழிக்கப்பார்க்குமன்றும் அழிக்க வொண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவனை.  (தீர்ந்தார் இத்யாதி3) “ஜலாந்மத்ஸ்யாவிவோத்3த்4ருதௌ” என்று தன்னைப் பிரியமாட்டாதே யிருக்குமவர்கள் நெஞ்சைவிட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர் தன்னைப் பிரிந்து த்3ரவீபூ4தமாய் மங்கிப்போகக் கொடாதே, “அது தன்பேறு” என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை.  தீர்ந்தாருண்டு – உபாயத்தில் துணிவுடையார்.  அவர்களாகிறார் – “ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் அவனே” என்றிருக்குமவர்கள்.  அவர்கள் தன்னைப் பிரிந்து நோவுபடாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்றுமாம்.  (அரக்கியை மூக்கீர்ந்தாயை) பிராட்டி யோட்டை ஸம்ஸ்லேஷ விரோதி4யைப் போக்குமாபோலேயாயிற்று அவர்களுடைய விரோதி4களைப் போக்கும்படியும்.  ஆனால் இவனோ பின்னை அவள் மூக்கறுத்தான்? என்னில்; ஆம்; கையாலே அறுக்கவேணுமே; “ராமஸ்ய த3க்ஷிணோ பா3ஹு:” என்னக்கடவதிறே.

(அடியேன் இத்யாதி3) சேஷபூ4தனான நான் பண்டே அடைந்தேனே யன்றோ.  (அடியேன் அடைந்தேன் முதன்முன்னமே) அநாதி3காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே இன்றோ பெற்றது, இவ்வாத்மா உள்ளவன்றே பெற்றேனல்லேனோ? என்றுமாம். ‘வாயும் திரையுகளில்’ (2-1) கீழ் ஸம்ஸ்லேஷித்த தேற்றம் போய்க் கலங்கி விஸ்லேஷமேயாய்ச் சென்றாற்போலே, இங்கு கலவியின் மிகுதியாலே அத்தை மறந்து முன்பே பெற்றேனல்லேனோ? என்கிறார் என்றுமாம்.  முதல் முன்னமே – பழையதாக என்றபடி.

ஏழாம் பாட்டு

முன்நல் யாழ்பயில்நூல் நரம்பின் முதிர்சுவையே!*
பன்ன லார்பயிலும் பரனே! பவித்திரனே!*
கன்னலே! அமுதே! கார்முகிலே! என்கண்ணா!* நின்னலால் இலேன்காண் என்னைநீ குறிக்கொள்ளே.

– அநந்தரம், இப்படி உபகரித்த நிரதிசயபோக்யனான உன்னையொழிந்தால் எனக்கு ஸத்தையுண்டோ? என்கிறார்.

முன் – அநாதியாய், நல் – விலக்ஷணமாய், யாழ் – யாழைப்பற்றியிருப்பதாய், பயில் – (வ்யுத்பித்ஸுக்களாலே) பயிலப்படுவதான, நூல் – கீதசாஸ்த்ரத்தில் லக்ஷணம் தப்பாத, நரம்பில் – நரம்பிலே கிளர்ந்த, முதிர், முதிர்ந்த சுவையே – கீதரஸம்போலே நிரதிசயபோக்யபூதனாய், பல் – (இந்த ரஸஜ்ஞராய்) பஹுவிதராயிருக்கிற, நலார் – (அஸ்கலிதஜ்ஞாநாதி) வைலக்ஷண்யத்தையுடையார், பயிலும் – நித்யாநுபவம் பண்ணுவதற்கு, பரனே – மேலாயிருக்குமவனாய், பவித்திரனே – (இந்த ரஸஜ்ஞரல்லாதார்க்கும் அஜ்ஞாநாதிதோஷங்களைப்போக்கி புஜிப்பிக்கும்) பாவநபூதனாய், கன்னலே – இக்ஷுரஸம்போலே பர்வந்தோறும் நிரதிசயபோக்யபூதனாய், அமுதே – (அழிந்தாரையும் ஆக்குவதான) அம்ருதரஸமாய், கார்முகிலே – (ஏவம்வித ஸாரஸ்யத்துக்கு ஆஸ்ரயமான) கார்காலத்தில் மேகம்போலே உதாரவிக்ரஹயுக்தனாய், என் – (அவ்வடிவழகோடே) எனக்கு அநுபாவ்யனாகைக்கு, கண்ணா – க்ருஷ்ணனானவனே! நின்னலால் – (இப்படி நிரதிசயபோக்யபூதனான) உன்னையொழிந்தால், இலேன்காண் – (எனக்கு) ஸத்தையில்லைகாண்! என்னை – (வ்யதிரேகத்தில் அழியும்படியான) என்னை, நீ – (வ்யதிரேகத்தில் அழிக்கும்படியான போக்யதையையுடைய) நீ, குறிக்கொள் – (இரண்டு தலையையுமறிந்து) திருவுள்ளம் பற்றவேணும்.

ஈடு – ஏழாம் பாட்டு.  இப்படி தாம் பெற்ற பேற்றின் க4னத்தையும் அநுஸந்தி4த்து, இவ்விஷயத்தினுடைய போ4க்3யதையையும் அநுஸந்தி4த்து, “இதிருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலேயிருந்தது” என்று அதிசங்கைபண்ணி, “தேவர் என்னைக் கைவிடில் நான் உளேனாகேன்; என்னைக் கைவிடாதொழிய வேணும்” என்கிறார்.

(முன்னல் இத்யாதி3) “முன்னல்” என்கிற ஒற்றைப்போக்கி முனலாக்கி, முரலாக்கி நிர்வஹிப்பாரும் உண்டு.  (அன்றிக்கே, முன்னல் என்றது – உன்னலாய், உன்னல் – நினைத்தலாய், இனிமையாலே “அது அது” என்று வாய்புலற்றும்படியிருக்கை) அன்றிக்கே, முன் சாஸ்த்ரத்தினுடைய பழமையாய், ஆதி3யிலே உண்டாய், நல் – அதுதான் நன்றாய், யாழ்பயில் நூல் – யாழ்விஷயமாக அப்4யஸிக்கப்படுவதான நூலுண்டு – சாஸ்த்ரம், அந்த சாஸ்த்ரோக்தமானபடியே.  (நரம்பின் முதிர் சுவையே) நரம்பிலே தடவப்பட்ட – அதிலே பிறந்த பண்பட்ட ரஸம்போலே போ4க்3யனானவனே! மிடற்றைச் சொல்லாதொழிந்தது – கர்மாநுகு3ணமாகப் போதுசெய்யுமது உண்டாகையாலே அதுக்கு.

இப்படி போ4க்3யதை குறைவற்றால் போ4க்தாக்கள் வேணுமே; அவர்களைச் சொல்லுகிறது மேல் – (பன்னலார் பயிலும் பரனே!) “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்” (நாச்சியார் திருமொழி 4-1) என்கிறபடியே – தாங்கள் பலராய்,  ப43வத்3கு3ணங்களுக்கு தே3சிகராயிருந்துள்ள நித்யஸூரிகள் ஸதா3நுப4வம் பண்ணாநின்றாலும், அநுபூ4தாம்ஶம் அளவுபட்டு அநுபா4வ்யாம்ஶமே பெருத்திருக்கை.  (பவித்திரனே) நித்யஸம்ஸாரிகளுக்கும் நித்யஸித்34ரோபாதி உன்னை அநுப4விக்கைக்கு யோக்3யராம்படியான ஸுத்3தி4யைப் பிறப்பிக்குமவன். அன்றிக்கே, பன்னலார் என்று – முமுக்ஷுக்களையாக்கி, அவர்கள் எப்போதும் அநுப4வியாநின்றாலும் தொலையாத போ4க்3யதையையுடையையாய், அவர்களுக்கு த்வத3நுப4வ விரோதி4யைப் போக்கும் ஸுத்3தி4யோக3த்தை யுடையவனே! என்றுமாம்.

(கன்னலே) எனக்கு நிரதிசயபோ4க்3யனானவனே!  (அமுதே) என்னைச் சாவாமல் ஜீவிப்பித்துக்கொண்டு போருகிறவனே! (கார்முகிலே) ஔதா3ர்யத்தைப் பற்ற.  (என் கண்ணா) தன்னைக்கொடுத்தபடி.  இவ்வளவும் இவருடைய ஸங்காஹேது. (நின்னலாலிலேன்காண்) உன்னையொழிய அரைக்ஷணம் ஜீவிக்கமாட்டேன்.  உன்னையொழிய ரக்ஷகரையுடையேனல்லேன் என்றுமாம்.  (என்னை நீ குறிக்கொள்ளே) என்னைப் பார்த்தருளவேணும் என்னுதல், என்னைத் திருவுள்ளம்பற்றவேணும் என்னுதல்.  (என்னை) உன்னையொழிந்தவன்று அசித்ப்ராயனான என்னை.  (நீ) இதுக்கு தா4ரகனான நீ என்றுமாம்.

எட்டாம் பாட்டு

குறிக்கொள் ஞானங்களால் எனையூழி செய்தவமும்*
கிறிக்கொண்டு இப்பிறப்பே சிலநாளில் எய்தினன்யான்*
உறிக்கொண்ட வெண்ணெய்பால் ஒளித்துண்ணும் அம்மான்பின்*
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர்கடிந்தே.

– அநந்தரம், இவ்வனுபவம் தமக்குக் கைவந்தபடியை அருளிச்செய்கிறார்.

உறி – உறியிலே, கொண்ட – சேமித்துவைத்துக்கொண்ட, வெண்ணெய் – வெண்ணெயையும், பால் – பாலையும், ஒளித்து – (உடையவர்களறியாமல்) க்ருத்ரிமத்தாலே புக்கு, உண்ணும் – அமுதுசெய்த செயலாலே, அம்மான் – (அடிமைகொண்ட) ஸ்வாமியான க்ருஷ்ணனுடைய, பின் – பின்னே, (அவ்வபதாநத்துக்குத்தோற்று) நெறி – (அவன்போன) வழியே, கொண்ட – போய்த்திரிகிற, நெஞ்சனாய் – நெஞ்சையுடையேனாய், பிறவித்துயர் – ஜந்மப்ரயுக்த துரிதங்களை, கடிந்து – காற்கடைக் கொண்டு அநாதரித்து, குறிக்கொள் – (கர்த்ருத்வாதி த்யாகத்தாலும் யமநியமாதிகளாலும்) குறிக்கொள்ளப்படுவதான, ஞானங்களால் – (வேதநத்யாநோபாஸநரூப பர்வபேதங்களாலும், ஸத்வித்யாதஹரவித்யாதிவ்யக்தி பேதங்களாலும்) பலவகைப்பட்ட ஜ்ஞாநயோகங்களாலே, ‘ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு’ ‘பஹூநாம் ஜந்மநாமந்தே’ என்கிறபடியே.  எனையூழி – அநேக காலங்களிலே, செய் – செய்யப்பட்ட, தவமும் – (பக்தியோகமாகிற) தபஸ்ஸினுடைய ப2லத்தை, கிறிக்கொண்டு – (பகவத் க்ருபையாகிற) நல்விரகைக்கொண்டு, இப்பிறப்பே – இஜ்ஜந்மத்திலே, சில நாளில் – அல்பகாலத்திலே, யான் – (அநுபவத்துக்கு அடைவில்லாத) நான், எய்தினன் – கிட்டப்பெற்றேன்.  கிறி – விரகு.

ஈடு – எட்டாம்பாட்டு. “என்னை நீ குறிக்கொள்ளே” (23-7) என்றவாறே அவன் குளிரக் கடாக்ஷித்தான்; அத்தாலே ஸகலவ்யஸநங்களும்போய் அவனை அநுப4விக்கிறார்.

(குறிக்கொள் ஞானங்களால்) யமநியமாத்3யவஹிதராய்க்கொண்டு ஸம்பாதி3க்கவேண்டும் ஜ்ஞாநவிசேஷங்களாலே.  அவையாவன – வேத3நத்4யாநோபாஸநாத்3யவஸ்தா2விசேஷங்கள்.  (எனையூழி செய் தவமும்) அநேககல்பங்கள் கூடி ஶ்ரவணமாய் மநநமாய் த்4ருவாநுஸ்ம்ருதியாய், இங்ஙனே வரக்கடவதான தப:ப2லத்தை.

(கிறிக்கொண்டு) ஒரு யத்நமின்றிக்கேயிருப்பதொரு விரகைப்பெற்று; அதாவது – அவன்தன்னையே கொண்டு என்றபடி.  கிறியென்ன அவனைக் காட்டுமோ? என்னில்; “பெருங்கிறியான்” (திருவிருத்தம் – 91) என்னக்கடவதிறே. இதுதான் எத்தனை ஜந்மம்கூடி?  என்னில் – (இப்பிறப்பே) இஜ்ஜந்மத்திலே. இஜ்ஜந்மமெல்லாம் கூடியோ? என்னில் – (சிலநாளில்) அல்பகாலத்திலே,  அழகிது; ப்ராபிக்கக்கடவீராய் நின்றீரோ? என்ன – (எய்தினன்) ப்ராபித்தேன்.  (யான்) இப்பேற்றுக்கு ஒரு யத்நம் பண்ணாத நான்.
(உறிக்கொண்ட இத்யாதி3)  “தவமெய்தினன்” என்கிற ப2லத்தைச் சொல்லுகிறதாதல், “கிறிக்கொண்டு” என்கிற உபாயத்தைச் சொல்லுகிறதாதல்.  (உறி இத்யாதி3) உறிகளிலே சேமித்துக் கள்ளக்கயிறுருவிவைத்த வெண்ணெயையும் பாலையும் “தெய்வங் கொண்டதோ?” என்னும்படி மறைத்து அமுதுசெய்த அச்செயலாலே ஜக3த்தை எழுதிக்கொண்டவனுடைய.  (பின்நெறிக்கொண்ட நெஞ்சனாய்) அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய்; “யேந யேந தா4தா க3ச்ச2தி, தேந தேந ஸஹ க3ச்ச2தி” என்கிறபடியே.  அன்றியே, பின்நெறிக்கொண்ட என்கிறது, ப்ரபத்தியை; பின்நெறி என்கிறது – பின்னே சொன்ன நெறி என்றபடி.  நெறி – வழி.

(பிறவித்துயர் கடிந்தே) ப2லத்தைச் சொன்னவிடத்திலே விரோதி4நிவ்ருத்தியையும் சொல்லிக்கிடந்ததிறே; அத்தைச் சொல்லுகிறது.  அன்றியே, (பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்) பா4ரதஸமரத்திலே அர்ஜுநனுக்கு ஓர் அவஸ்தை2யைப் பிறப்பித்திறே உபாயத்தை உபதே3சித்தது; இவர் வெண்ணெய் களவுகாணப் போனவிடத்திலே அடியொற்றிக்கொண்டு சென்று, அவன்புக்க க்3ருஹத்திலே படலைத்திருகி வைத்தாயிற்று கேட்டுக்கொண்டது.  (பிறவித்துயர் கடிந்தே) “ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி” என்றே வைத்தானிறே.

ஒன்பதாம் பாட்டு

கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன்விண் ணவர்பெருமான்*
படிவா னமிறந்த பரமன் பவித்திரன்சீர்*
செடியார் நோய்கள்கெடப் படிந்து குடைந்தாடி*
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே.

– அநந்தரம், இப்படி அவன் குணங்களை அநுபவித்து ஆநந்தியானேன் என்கிறார்.

கடி – பரிமளம், வார் – ப்ரவஹியாநிற்கிற, தண்ணந்துழாய் – செவ்வித் திருத்துழாயையுடையனாய்க்கொண்டு, கண்ணன் – (ஆஸ்ரிதபவ்யனான) க்ருஷ்ணனாய், விண்ணவர் பெருமான் – (இவ்வடிவழகை அநுபவிக்கிற) பரமபதவாஸிகளுக்கு அவ்வருகான மேன்மையுடைய தனக்கு, வானம் – பரமபதத்திலும், படி – ஒப்பு, இறந்த – இல்லையாகையாலே, பரமன் – தனக்கு மேலில்லையான பெரியவனாய், பவித்திரன் – (இப்பெருமை அறியாதார் அறிவுகேட்டையும் போக்கி அநுபவிப்பிக்கும்) பாவநபூதனுடைய, சீர் – (பரத்வஸௌலப்ய போக்யத்வபாவநத்வ ப்ரகாஶகமான) குணங்களிலே, செடியார் – ஒன்றோடொன்று மிடைந்து தூறுமண்டினாற்போலேயிருக்கிற, நோய்கள் – (விஷயருசி தொடக்கமான) மஹாவ்யாதிகள், கெட – நசிக்கும்படி, படிந்து – கிட்டி, குடைந்து – எங்கும் உட்புக்கு, ஆடி – முழுகி, அடியேன் – (அவனையொழியச் செல்லாதபடி) அநந்யார்ஹனான நான், வாய்மடுத்து – (புஜிக்கைக்கு உபகரணமான அபிநிவேஶமாகிற) வாயை மடுத்து, பருகி – (பெருவிடாயன் தண்ணீர் குடித்தாற்போலே) நிரம்ப புஜித்து, களித்தேன் – நிரதிசயமான ஆனந்தத்தைப் பெற்றேன்.

“படிவானமிறந்த” என்று வடிவழகுக்கு மேகம் ஒப்பல்ல என்றுமாம்.

ஈடு – ஒன்பதாம் பாட்டு. “ஸோ‍ஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஸ்சிதா” என்கிறபடியே, என்னுடைய ஸகல து3ரிதங்களும் போம்படி ஸர்வேஸ்வரனை அநுப4விக்கப்பெற்றேன் என்று ஹ்ருஷ்டராகிறார்.

(கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன்) பரிமளப்ரசுரமான திருத்துழாய் மாலையையுடைய க்ருஷ்ணன் என்னுதல், மது4 ஸ்யந்தி3யாநின்றுள்ள திருத்துழாயையுடையவன் என்னுதல்.  (விண்ணவர் பெருமான்) இவ்வொப்பனை யழகாலே எழுதிக்கொள்வது, அநந்தவைநதேயாதி3களையாயிற்று.  (படிவான மிறந்தபரமன்) தன் படிக்கு வானிலுள்ளார் ஒப்பாகாதபடியிருக்கிற பரமன்.  பரமஸாம்யாபந்நரான நித்யஸூரிகளும் தன் படிக்கு ஒப்பாகாதபடியான மேன்மையையுடையவன் என்னுதல்; தன் திருமேனிக்கு, வானமுண்டு – மேக4ம், அது ஒப்பாகாதபடியிருக்கிறவன் என்னுதல்.  (பவித்திரன்) இவ்வடிவழகை ஸம்ஸாரிகளும் அநுப4விக்கைக்கு யோக்3யராம்படி பண்ணும் ஸுத்3தி4யையுடையவனுடைய சீருண்டு – கல்யாணகு3ணங்கள்; அவற்றை அடிகாண வொண்ணாதபடி தூறு மண்டிக்கிடக்கிற ஸாம்ஸாரிக ஸகலது3ரிதங்களும் போம்படி வந்து கிட்டி, நாலு மூலையும் புக்கு, அவகா3ஹித்து, அநந்யார்ஹனான நான் முழுமிடறு செய்து அநுப4வித்து யமாதி3கள் தலையிலேயும் அடியிட்டுக் களிக்கப்பெற்றேன்.  படிந்து – கிட்டி.  குடைந்து – எங்கும் புக்கு.  ஆடி – அவகா3ஹித்து.  அடியேன், வாய்மடுத்துப்பருகி – பெருவிடாயோடே அநுப4வித்து.  (களித்தேனே) இதரவிஷய ஸ்பர்ஸம் து3:க்க2மேயானாற்போலே, ப43வத்3 கு3ணாநுப4வம் களிப்பேயாகக் கடவது.

பத்தாம் பாட்டு

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப்பிணி மூப்பிறப்பற்று*
ஒளிக்கொண்ட சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ*
துளிக்கின்ற வானிந்நிலம் சுடராழி சங்கேந்தி*
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.

– அநந்தரம், ஏவம்விதபோகாநந்தத்துக்கு முக்யபோக்தாக்கள் ஸூரிகளாகையாலே, அவர்களோடே கூடுகையை அர்த்திக்கிறார்.

களிப்பும் – (விஷய லாபத்தில்) களிப்பும், கவர்வும் – (ததலாபத்தில்) அபிநிவேசமும், அற்று – அற்று, பிறப்புப் பிணிமூப்பு இறப்பு அற்று – (அதுக்கடியான) ஜந்ம வ்யாதி ஜரா மரணங்களுமற்று, ஒளிக்கொண்ட – (ஆவிர்பூதமான ஜ்ஞாநாதிகளாகிற) ஒளிகளுக்கு ப்ரகாசகமான, சோதியமாய் – ஜ்யோதிர்மயவிக்ரஹத்தை யுடையோமாய்க் கொண்டு, துளிக்கின்ற – வர்ஷிக்கிற, வான் – ஆகாசத்தையும், இந்நிலம் – (அத்தாலே தரிக்கிற) பூமியையும், (பாதகரஹிதமாம்படி) சுடர் – பேரொளியையுடைய, ஆழி – திருவாழியையும், சங்கு – திருச்சங்கையும், ஏந்தி – ஏந்தி, அளிக்கின்ற – ரக்ஷித்தருளுகிற, மாயப்பிரான் – மஹோபகாரகனுடைய, அடியார்கள் – நித்யதாஸ்யைகநிரூபணீயரான ஸூரிகளுடைய, குழாங்களை – ஸங்கங்களை, உடன் – (ஒரு நீராம்படி) உடன்பட்டு, கூடுவது – கூடுவது, என்று கொலோ – என்றோ?

ஸமஸ்தவிரோதிநிவ்ருத்தி பிறந்து ஆவிர்பூத ஸ்வரூப ஸ்வபாவரானவர்க்கு ப்ராப்யம் அடியரான ஸூரிகள் என்று கருத்து.

ஈடு – பத்தாம் பாட்டு.  “களித்தேனே” (23-9) என்னா, “திரியட்டும் ஸம்ஸாரிகளோடேயிருக்கையன்றியே, இவ்வநுப4வத்துக்கு தே3சிகரான நித்யஸூரிகள் திரளிலே போய்ப்புகுவது எப்போதோ?” என்கிறார்.

(களிப்பும்) இதரவிஷயாநுப4வத்தாலே வரும் களிப்பும்.  (கவர்வும்) அவை பெறாதபோது ஆசைப்பட்டு வரும் க்லேசமும்; (அற்று) போய்.  இவை இரண்டுக்கும் அடியான ஜந்மம், அது புக்கவிடத்தே புகக்கடவதான வ்யாதி4, அநந்தரம் வரும் ஜரை.  “இத்தோடேயாகிலும் இருந்தாலாகாதோ?” என்று நினைத்திருக்கச்செய்தே வரும் நிரந்வயவிநாசம், இவையடைய அற்று.  (ஒளிக்கொண்ட சோதியமாய்) ரஜஸ்தமஸ்ஸுக்கள் கலசின இந்த சரீரம்போலன்றியே, ஸுத்34ஸத்த்வமயமாய், நிரவதி4கதேஜோரூபமான சரீரத்தையுடையோமாய்.

(உடன்கூடுவதென்றுகொலோ) “நான், எனக்கு” என்று அகலவேண்டாத இவ்வுடம்புடையார் திரளிலே போய்ப் புக்கு நெருக்கப்பெறுவது என்றோ? (துளிக்கின்ற இத்யாதி3) வர்ஷிக்கையே ஸ்வபா4வமாகவுடைத்தான ஆகாசம், அத்தாலே விளையக்கடவதான இந்த பூ4மி, இவற்றைக் கடற்கரைவெளியிலே நோக்கினாற்போலே, தி3வ்யாயுத4ங்களை த4ரித்து நோக்குகிற ஆஸ்சர்யபூ4தன்.  (சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான்) பரமபத3த்தில் ஆப4ரணமாய்க் காட்சிதரும்; இங்கு ஆயுத4மாயிறேயிருப்பது.  இப்படி ரக்ஷிக்கிறவனுடைய அந்த ரக்ஷணத்திலே தோற்றிருப்பாராய், அவன் தன்னோடொக்க ப்ராப்யருமாய், ப43வத்3கு3ணங்களுக்கு தே3சிகராயிருப்பாருமாய், போ34யந்த:பரஸ்பரத்துக்குத் துணையாயிருக்கிறவர்களுடைய குழாங்களை.  கலியர் “கலவரிசிச்சோறுண்ண” என்னுமாபோலே, அத்திரள்களிலே போய்ப் புகப்பெறுவது எப்போதோ? என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனை*
குழாங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த*
குழாங்கொ ளாயிரத்துள் இவைபத்தும் உடன்பாடி*
குழாங்களாய் அடியீருடன் கூடிநின் றாடுமினே.

– அநந்தரம், ‘இத்திருவாய்மொழியைப்பாடி பரஸ்பர ஸங்கதராய் ஸங்கீபவித்து ப்ரீதிப்ரேரிதராய் அர்த்தியுங்கோள்’ என்று ப2லத்தை அருளிச்செய்கிறார்.

குழாங்கொள் – (பாதகரான ராக்ஷஸரைத்) திரள் திரளாக உடையனாயிருக்கிற, பேர் – பெருமையையுடையனான ராவணனாகிற, அரக்கன் – ராக்ஷஸனுடைய, குலம் – குலமகப்பட, வீய – நசிக்கும்படி, முனிந்தவனை – முனிந்தருளினவனை. குழாங்கொள் – (ஸ்ரீவைஷ்ணவர்கள்) திரளையுடைத்தான, தென்குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், தெரிந்து – ஆராய்ந்து, உரைத்த – அருளிச்செய்த, குழாங்கொள் – பத்தான திரள்களை வடிவாகவுடைத்தான, ஆயிரத்துள் – ஆயிரம் திருவாய்மொழியிலும், இவை பத்தும் – இவை பத்தையும், உடன் – (அர்த்தத்தோடே) உடன்பட்டு, பாடி – (ப்ரீதிக்குப் போக்குவீடாகப்) பாடி, குழாங்களாய் – (பரஸ்பர ஸம்ஸ்லிஷ்டராய்க் கொண்டு) பல திரளாய், அடியீருடன் – அடியீரான உங்கள் ஸ்வரூபத்துக்கு அநுரூபமாம்படி ஏக கண்டராய், கூடி – ஸம்ஶ்லேஷித்து, நின்று – (இடைவிடாதே) நின்று, ஆடுமின் – ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணப் பாருங்கோள்.

இது கலிவிருத்தம்.

ஈடு – நிக3மத்தில். இத்திருவாய்மொழியை, ப43வதே3கபோ44ராயிருப்பார் என்னைப்போலே தனிப்படாதே திரளாக அனுப4வியுங்கோள் என்கிறார்.

(குழாங்கொள் இத்யாதி3) புத்ரபௌத்ராதி3களும், ப3ந்து4க்களுமான இவர்களாலே குழாங்கொண்டு, வரப3ல பு4ஜப3லத்தாலே தழைத்து வேரூன்றின ரக்ஷஸ்ஸினுடைய ஜாதியாகக் கிழங்கெடுத்த சக்ரவர்த்தி திருமகனை; (கரிஷ்யே மைதி2லீஹேதோரபிஶாசமராக்ஷஸம்) என்கிறபடியே.  (குழாங்கொள் தென்குருகூர்ச்சடகோபன்) ஜநஸ்தா2நம் அடியறுப்புண்ட பின்பு த3ண்ட3 காரண்யம் குடியேறினாற்போலே, “வாயுந்திரையுகளு(2-1)க்குத் தப்பின ஆழ்வாரைக் காணவேணும்” என்று ஸ்ரீவைஷ்ணவர்களடையத் திரண்டதாயிற்று;  நல்லார் நவில்குருகூ(திருவிருத்தம் -100)ரிறே.  ஸத்துக்கள் இருந்தவிருந்த இடங்களிலே வாய்புலற்றும்படியான தே3சமானால், அத்3தே3சத்திலுள்ளார் திரளச் சொல்லவேண்டாவிறே. (தெரிந்துரைத்த) உள்ளபடி அநுஸந்தி4த்துச் சொன்ன.  (இவைபத்தும்) திரண்டவர்களுக்கு ஜீவநம்வேணுமே.  (குழாங்கொளாயிரம்) “தொண்டர்க்கமுதுண்ண” (9-4-9) என்கிறபடியே.  பத்துப்பாட்டு ஒரு திருவாய்மொழியாய்.  பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய், இப்படி பத்துப் பத்தான ஆயிரம்.  திரண்ட ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜீவநம்வேணுமே.  (இவைபத்தும் உடன்பாடி) ஸாபி4ப்ராயமாக அப்4யஸித்து.  (குழாங்களாய்) என்னைப் போலே, “பருகிக்களித்தேனே” (23-9) என்னா, குழாம்தேட இராதே, முற்படவே திரளாக இழியப்பாருங்கோள்.  (அடியீருடன் கூடி நின்று ஆடுமினே) அவன் பக்கலிலே நிக்ஷிப்தப4ரராயிருக்கிற நீங்கள் நால்வரிருவர் இங்கிருக்கும் நாலு நாளும், த்யாஜ்யமான அர்த்த2காமங்களைப்பற்றி “சீறு பாறு” என்னாதே, நம் பெரியகுழாத்திலே போய்ப் புகுமளவும் ஒருமிடறாய் அநுப4விக்கப் பாருங்கோள்.

முதற்பாட்டில், திருவுள்ளத்தைக் கொண்டாடினார்; இரண்டாம் பாட்டில், அத்தையும் இசைவித்த ஸர்வேஸ்வரனைக் கொண்டாடினார்; மூன்றாம் பாட்டில், தம் நெஞ்சிற்பட்டதொரு உபகாரத்தைச் சொன்னார்; நாலாம் பாட்டில், அதுக்கு ப்ரத்யுபகாரமாக ஆத்மஸமர்ப்பணம்பண்ணி அதுதனக்கு அநுசயித்தார்; அஞ்சாம் பாட்டில், எனக்கு ப்ரத2மஸுக்ருதமும் நீயேயானபின்பு உன் திருவடிகளைக் கிட்டினேனேயன்றோ என்கிறார்;  ஆறாம் பாட்டில், “இன்றோ கிட்டிற்று; தேவர் எனக்கு விசேஷ கடாக்ஷம் பண்ணினவன்றே பெற்றேனேயல்லேனோ?” என்றார்; ஏழாம் பாட்டில், அவனுடைய போ4க்3யதையை அநுஸந்தி4த்து, ‘உன்னைப் பிரியில் த4ரியேன்’ என்றார்; எட்டாம் பாட்டில் ‘இப்படி நிரதிசயபோ4க்3யனானவனை எளியதொரு விரகாலே லபி4க்கப்பெற்றேன்’ என்றாராதல்; அன்றியே, ‘அநேககாலங்கூடிப்பண்ணி லபி4க்கக்கடவ தப:ப2லத்தை அவனைப் பின்சென்று எளிதாக லபி4த்தேன்’ என்னுதல்; ஒன்பதாம் பாட்டில், ‘என்னுடைய ஸகல க்லேசங்களும் போம்படி அநுப4வித்துக் களித்தேன்’ என்றார்;  பத்தாம் பாட்டில், ‘இப்படி இவனை அநுப4வித்துக் களிப்பார் திரளிலே போய்ப் புகப்பெறுவது  எப்போதோ?’ என்றார்; நிக3மத்தில், ‘இத்திருவாய்மொழியை ஸாபி4ப்ராயமாக அப்4யஸித்து, நாலுநாளும் நால்வரிருவருள்ளார் கூடியிருந்து அநுப4விக்கப் பாருங்கோள்’ என்றார்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

 

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– ஊனில்வாழ்

அந்தஸ்ஸ்த2ஸர்வரஸமம்பு3ஜலோசநஸ்ய
ஸம்யோக3ரூபமவகா3ஹ்ய ஸுகா2ம்ருதாப்3தி4ம் |
தத்3தே3ஶிகப்ரத2மஸூரிக3ணை: கதா3 ஸ்யாத்
ஸங்கோ3 மமேத்யகத2யத்ஸ முனிஸ்த்ருதீயே ||      13

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிஊனில்வாழ்

சித்ராஸ்வாதா3நுபூ4திம் ப்ரியமுபக்ருதிபி4ர்தா3ஸ்யஸாரஸ்யஹேதும்
ஸ்வாத்மந்யாஸார்ஹக்ருத்யம் ப4ஜத3ம்ருதரஸம் ப4க்தசித்தைகபோ4க்3யம் |
ஸர்வாக்ஷப்ரீணநார்ஹம் ஸபதி3 ப3ஹுப2லஸ்நேஹமாஸ்வாத்3யஶீலம்
ஸப்4யைஸ் ஸாத்4யைஸ் ஸமேதம் நிரவிஶத3நகா4ஶ்லேஷநிர்வேஶமீஶம் ||     15

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஊனமற வேவந் துள்கலந்த மாலினிமை
யானதனு பவித்தற் காந்துணையா-வானில்
அடியார் குழாங்கூட வாசையுற்ற மாறன்
அடியா ருடன் நெஞ்சே யாடு. 13

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

*******

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.