02-07 12000/36000 Padi

ஏழாம் திருவாய்மொழி
கேசவன் – ப்ரவேசம்

*****

– ஏழாம் திருவாய்மொழியில் – ஸ்வஸம்பந்தி பரம்பராபர்யந்தமாக ஈஸ்வரன் பண்ணின பக்ஷபாதத்தாலே தம்மளவில் அவனுடைய அபிநிவேசாதிசயத்தைக் கண்டு உகந்து; ஸ்வஸாந்தாநிக விஷயத்தில் அவனுடைய ப்ரஸாதவிசேஷத்தையும், அதுக்கடியான தம்மளவில் பக்ஷபாதத்தையும், தத்கார்யமான உபகாரத்தையும், அவ்வுபகாரம் தம் குலத்திலுள்ளார்க்கும் ப்ராப்திபர்யந்தமானபடியையும், இதடியாக ஈஸ்வரனுக்குப் பிறந்த ஔஜ்ஜ்வல்யத்தையும், இதுக்கடைய ஹேதுவான க்ருபாபாரவஸ்யத்தையும், அநுபவிக்கைக்கு உறுப்பாக ஸத்வோத்தரமான சித்தப்ரதாநத்தையும், பொல்லாநெஞ்சைப் போக்கினபடியையும், ப்ரேமயுக்தமான நல்ல நெஞ்சிலே புகுந்தபடியையும், அந்த நெஞ்சு அவனை விடாதொழிய வேணுமென்கிற அபேக்ஷையையும், இன்னின்னபடியாக அவன் தன்னை முழுக்கக் கொடுத்த ஔதார்யத்தையும், இவ்வௌதார்யாதிசயம் அதிசயிதஜ்ஞாநர்க்கும் அபரிச்சேத்யம் என்னுமிடத்தையும் அருளிச்செய்து; ஸ்வவிஷயத்தில் ஆதரம் ஈஸ்வரனுக்கு ஸம்பந்தித்ரயஸந்தாந ஸம்ரக்ஷணபர்யந்தமானபடியை அவனுடைய ஆஸ்ரிதரக்ஷணார்த்த குணசேஷ்டித ப்ரகாசகங்களான திருத்வாதசநாமங்களோடே கூட அருளிச்செய்கிறார்.

ஈடு – ஆடியாடியில் (2-4) “வாடிவாடும்” (2-4-1) என்கையாலே – ஒரு நீர்ச்சாவியாய் வாடினபடி சொல்லிற்று; அந்த ஒரு நீர்ச்சாவியானது தீர, காரார் கருமுகில் கலந்து வர்ஷித்தபடி சொல்லிற்று அந்தாமத்தன்பில்(2-5); அப்படி வர்ஷித்தபடியாலே “ஈறிலின்பத் திருவெள்ளம் யான்மூழ்கினன்” (2-6-8) என்று – வெள்ளமிட்டுப் பெருகினபடி சொல்லிற்று ‘வைகுந்தா மணிவண்ணனில்’ (2-6); “எமர் கீழ் மேல் ஏழெழுபிறப்பும் மாசதிரிது பெற்று” (2-7-1) என்கையாலே – அவ்வெள்ளம் இருகரையும் புரண்டபடி சொல்லுகிறது – கேசவன் தமரில்.  இவர் ‘ஆடியாடியில்’ பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்தபடி சொல்லிற்று – ‘அந்தாமத்தன்பு’; அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று ‘வைகுந்தா மணிவண்ணன்’ (2-6); அந்த ப்ரீதிதான் ஆழ்வார் ஒருவரளவிலுமன்றிக்கே, தம்மோடு பரம்பரயா ஸம்ப3ந்த4முடையாரளவும் வெள்ளமிட்டுப் பெருகினபடியைச் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில்.  ஸர்வேஸ்வரன் ஆழ்வாரோடே வந்து ஸம்ஸ்லேஷித்து, அத்தால் பிறந்த ப்ரீதி தம் ஒருவரளவிலுமன்றிக்கே, தம்மோடு பரம்பரயா ஸம்ப3ந்த4முடையாரளவும் பெருகினபடியைக்கண்டு “இது இவன் என்பக்கல் பண்ணின பக்ஷபாதாதிசயமிறே” என்று இனியராய், தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான கு3ணசேஷ்டிதாதி3களை அநுஸந்தி4த்து, அவற்றுக்கு வாசகமான திருத்3வாத3ச நாமத்தாலே அவனைப் பேசி அநுப4விக்கிறார். ஸர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால், அதுபின்னை அவனளவிலே நில்லாதிறே.  (மரணாந்தாநி வைராணி) ருஷிகள் குடியிருப்பை அழித்து, மைதி2லியைப் பிரித்து, நம் உயிர் நிலையிலே நலிந்தாப்போலே ஸ்ரீஜடாயுமஹாராஜரை நலிந்து,  இவையெல்லாம் செய்ய மாட்டானே இவன் இனி.  (நிர்வ்ருத்தம் ந: ப்ரயோஜநம்) இவன் ஜீவிக்கிற நாளிலே “நாம் செய்யும் நன்மை இவன் விலக்காதொழிவது காண்” என்றிருந்தோம்; அது அந்நாளில் பெற்றிலோம்.  நாம் தேடியிருந்தது முந்துற முன்னம் ஸித்3தி4க்கப்பெற்றோமிறே.  (க்ரியதாமஸ்ய ஸம்ஸ்கார:) இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்கவேணுமோ? வேண்டுவன செய்யப்பாரும்.  (மமாப்யேஷ யதா2 தவ) நீர் இறாய்த்து இருந்தீராகில், குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யுமித்தனையன்றோ; நாம் இவனுக்கு வேண்டுவனசெய்ய, நீர் பின்னைக் கடக்க நில்லீர் என்றாரிறே.

ஸ்ரீவிபீ4ஷணாழ்வான்பக்கல் ஓரம் ராவணனளவும் சென்றதிறே. “மஹாராஜர்க்கு ஸத்ரு” என்று வாலியை நிரஸித்துவைத்து, மஹாராஜர் கண்ணநீர் பொறுக்கமாட்டாதே, “ஸஞ்ஜாதபா3ஷ்ப:” என்று தாமும் கண்ணநீர் விழவிட்டாரிறே.  “த4ர்மே மநஸ்ச தே ப4த்3ர” ஸ்ரீமாலாகாரர் பக்கல் விஷயீகாரம் அவர் ஸந்தாநத்தளவும் சென்றதிறே.  ஸ்ரீக4ண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவன் தம்பியளவும் சென்று, “நீ அவனுக்கு நல்லையாகில் அவன் முன்னாகப் போ” என்று அருளிச்செய்தானிறே.

எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப்புக்கால், “ஸ்ரீவைஷ்ணவனானேன் என்கிறார்” என்பராம்;  வைஷ்ணவத்வசிஹ்நமிறே திருத்3வாத3சநாமம்.  ஆழ்வாருடைய நெடுமாற்கடிமை(8-10)யும், எம்பெருமானுடைய நெடுமாற்கடிமையும் இரண்டாயிற்று நெடுமாற்கடிமை; அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கடிமை இத்திருவாய்மொழி.

முதல் பாட்டு

கேச வன்தமர் கீழ்மே லெமரே ழெழுபிறப்பும்*
மாசதி ரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா*
ஈசன் என்கரு மாணிக்கம்என் செங்கோலக் கண்ணன்விண்ணோர்
நாயகன்* எம்பிரான் எம்மான் நாரா யணனாலே.

– முதற்பாட்டில் தம்முடைய குலத்திலுள்ளார் பகவதபிமாநாந்தர்- கதரானபடியை அருளிச்செய்கிறார்.

ஈசன் – (ஸர்வஸாதாரணமான) ஸ்வாமித்வத்தையுடையவனாய், என் கருமாணிக்கம் – (அப்படியே பொதுவன்றியே) நீலரத்நம்போன்ற வடிவை எனக்குக் காட்டி, என் செங்கோலக்கண்ணன் – (அவ்வடிவுக்குப் பரபாகமாம்படி) சிவந்தழகிய திருக்கண்களாலே என்னை அநந்யார்ஹனாக்கி, விண்ணோர் நாயகன் – பரமபத வாஸிகளோபாதி அங்கீகரித்து, எம்பிரான் – என்னை அநுபவிப்பித்து, எம்மான் – எனக்கு நாதபூதனான உறவடியாக, நாராயணனாலே – (நிரதிசயவாத்ஸல்ய யுக்தனான) நாராயணனாலே, கீழ்மேல் ஏழெழு பிறப்பும் – கீழ்மேல் ஏழெழுபிறப்பும், கேசவன்தமர் – (ஸர்வாதிகனான) கேசவன் தமரான, எமர் – எமரானவர்கள், இது – (நிர்ஹேதுக பகவதங்கீகாரமாகிற) இந்த, மா – பெரிய, சதிர் – சதிரை, பெற்று – பெற்று, (அத்தாலே) நம்•டைய – நம்முடைய, வாழ்வு – ஸ்ரீவைஷ்ணவத்வ ஸ்ரீயானது, வாய்க்கின்றவா – வளருகிறபடியே!

ஈடு – முதற்பாட்டு – ஸம்ப3ந்தி4ஸம்ப3ந்தி4கள் பக்கலிலும் எம்பெருமான் அபி4நிவிஷ்டனானபடியைக் கண்டு ‘இதெல்லாம் என்பக்கலுண்டான விஷயீகாராதிசயமிறே’ என்று ஹ்ருஷ்டராகிறார்.

(கேசவன் தமர்) ப்ரஸஸ்தகேஶனான நிலையிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்; விரோதி4நிரஸநஶீலதையிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்; “தஸ்மாத் கேசவநாமவாந்” என்கிறபடியே, ஸர்வநிர்வாஹகனான நிலையிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்.  “ஸர்வேஸ்வரனுடையார்” என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது.  “எமர்” என்கிற – ஆழ்வாருடைய ஸம்ப3ந்த4ங் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது.  இத்தால் – ஒரு வைஷ்ணவாபி4மாநமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்கு என்றபடி.

(கேசவன் தமர்) அவனுடைய அவயவஸௌந்த3ர்யத்திலே தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.  (கீழ்மேல் இத்யாதி3) எமர் கீழ்மேல் ஏழேழு பிறப்பும் கேசவன் தமரானார்கள்.  “ஏகாஹமபி கௌந்தேய! பூ4மிஸ்த2முத3கம் குரு | குலம் தாரயதே தாத! ஸப்த ஸப்த ச ஸப்த ச ||”  என்கிறபடியே; “த3ஸ பூர்வாந் த3ஸாபராந் ஆத்மாநஞ்ச”.

(மாசதிரிது பெற்று) “விதி சூழ்ந்ததால்” (6) என்கிற – ஆகஸ்மிக ப43வத் க்ருபையாதல், “மாதவனென்றதே கொண்டு” (3) என்கிற உக்தி மாத்ரத்தையாதல், தாம் பெற்ற பேற்றைத் தம்மோடு ஸம்ப3ந்த4முடையாரும் பெறும்படியான பேற்றைப்பெற்று என்னுதல். (மாசதிரிது பெற்று) பெரும் சதிரைப் பெற்று.  தடக்கைச் சதுரனைப் பெற்று என்றபடி; தந்தலையாலே வந்ததாகிலிறே ஸாவதி4யாயிருப்பது.  (இது பெற்று) காணக்காண அவன் சிரஸா வஹிக்கிறபடி.  (நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா) நம்மோடு ஸம்ப3ந்த4முடையாரையும் அவன் இப்படி விஷயீகரிக்கிறது நம்முடைய ஸம்பத்திறே.  (நம்முடை வாழ்வு) ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்து.  (வாய்க்கின்றவா) ஊற்று மாறாதே மேன்மேலெனப் பெருகிவருகிறபடி.   “ஏழ்படிகால்” என்றதுதான் ஓரளவில்லை; இன்று நம்மளவும் வரச் சொல்லுகிறதிறே.  இப்படி விஷயீகரிக்கைக்கு ஹேதுவென்? என்னில் (ஈசன்) வகுத்த ஸ்வாமியாகையாலே.  (என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்) கண்ணழகாலே என்னை அநந்யார்ஹனாக்கி, தன்வடிவழகை என்னை அநுப4விப்பித்தவன்.  (விண்ணோர்நாயகன் எம்பிரான் எம்மான்) நித்யஸூரிகளைத் தோற்பிக்குமாபோலே, என்னை அவ்வடிவழகைக் காட்டித் தோற்பித்து, என்னை அவ்வடிவழகை அநுப4விப்பித்த உபகாரகன்.  (நாராயணனாலே) தன் மேன்மையைப் பாராதே,  உகவாதாரையும் விடமாட்டாதபடி வத்ஸலனாயுள்ளவனாலே.  ஸமிதை பாதி ஸாவித்ரி பாதியாகவன்றிக்கே, அவனுடைய நிர்ஹேதுகக்ருபையாலே.

நாராயணனாலே எமர் – கீழ்மேல் ஏழெழு பிறப்பும் – கேசவன்தமரானார்கள்.  மாசதிரிது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றனவா.  “நாராயணனாலே” என்றவிடம் – மாசதிரினுடைய உபபாத3நம்.

இரண்டாம் பாட்டு

நாரணன் முழுவே ழுலகுக்கும் நாதன் வேதமயன்*
காரணம் கிரிசை கரும மிவை முதல்வன் எந்தை*
சீரணங் கமரர் பிறர்பல ரும்தொழு தேத்தநின்று*
வாரணத் தைமருப் பொசித்த பிரான்என் மாதவனே.

:- அநந்தரம், கீழுக்தமான நாராயண சப்தார்த்தத்தை உபபாதியாநின்றுகொண்டு ஸ்வவிஷய பக்ஷபாதத்தை அருளிச்செய்கிறார்.

நாரணன் – நாராயண சப்தவாச்யனாய், (அதினுடைய அர்த்தமான) முழுவேழுலகுக்கும் – ஸமஸ்தலோகத்துக்கும், நாதன் – ஸ்வாமியாய், வேதமயன் – (அந்த சப்தத்தையே ப்ரதாநமாக ப்ரதிபாதிக்கிற) வேதப்ரதிபாத்யனாய், காரணம் – க்ரியாஹேது, கிரிசை – க்ரியை, கருமம் – க்ரியாப2லமான கார்யம், இவை – இவற்றுக்கு, முதல்வன் – காரணபூதனாய், சீர் – குணோத்தரராய், அணங்கு – திவ்யரான, அமரர் – தேவர்களும், பிறர் – ருஷிகளும் மநுஷ்யாதிகளுமான, பலரும் – எல்லாரும், தொழுது – வணங்கி, ஏத்த – ஸ்தோத்ரம்பண்ணும்படியாக, நின்று – நின்று, வாரணத்தை – குவலயாபீடத்தை, மருப்பு – கொம்பை, ஒசித்த – முறித்த, பிரான் – மஹோபகாரகனாய், என் – (இப்படி நார சப்தார்த்தங்கள் தமக்கு விபூதியானபடியை) எனக்கு ப்ரகாசிப்பித்த, மாதவன் – ஸ்ரிய:பதியான க்ருஷ்ணன், எந்தை – என்னை அநந்யார்ஹனாக்கின சேஷி.

சீரணங்கு என்று லக்ஷ்மியாகவுமாம்.

ஈடு:- இரண்டாம் பாட்டு. “நாராயணனாலே” என்று நாராயண சப்33ம் ப்ரஸ்துத மாயிற்றே; அதுக்கு அர்த்த2ம் அருளிச்செய்வதாக சப்33த்தை உபாதா3நம் பண்ணுகிறார் – (நாரணன்) இதுக்கு அர்த்த2மென்? என்னில் (முழுவேழுலகுக்கும் நாதன்) ஸர்வஸ்வாமி.  இவ்வர்த்த2த்தில் ப்ரமாணமென்? என்னில் (வேதமயன்) “நாராயணபரம் ப்3ரஹ்ம” இத்யாதி3களாலே, “ஸர்வஸ்வாமி” என்று ஓதப்படுகிறவன்.  (காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்) தன் விபூ4தியில், காரணமாயும், கார்யமாயும், உத3காஹரணமாகிற ப2லமாயும் வரக்கடவதான இவற்றுக்கு நியந்தாவாயுள்ளான்.  க்ரியாஸாத4நம், அதடியாக வரும் க்ரியை, தத்ஸாத்4யமான கார்யம் இவற்றுக்கு நிர்வாஹகனாயிருக்கும் என்றுமாம்.

(எந்தை) எனக்கு ஜநகனானவன்.  (சீரணங்கு) ஸ்ரீயான அணங்கு; அணங்கு என்று – தெய்வப்பெண் என்றபடி; பெரியபிராட்டியார்.  அன்றியே, (சீரணங்கமரர்) என்று – நித்யஸூரிகளுக்கு விசேஷணமாகவுமாம்.  சேஷத்வாநுரூபமான ஆத்மகு3ணங்களை த4ரியாநிற்பாராய், அப்ராக்ருத ஸ்வபா4வரான நித்யஸூரிகள், இவ்வருகுண்டன ஸம்ஸாரிகள், இப்படி, “சிறியார் பெரியார்” என்று வாசியின்றிக்கே எல்லாரும் எழுத்துவாங்கி ஏத்தும்படியாக நின்று, குவலாயபீட3த்தின் கொம்பை அநாயாஸேந முறித்த உபகாரகன். “ந ஸமம் யுத்34மித்யாஹு:” என்னும்படியாக.  (என் மாதவனே) நான் தோற்ற துறை.  மாதவனான நாராயணன் எந்தை – ஸ்ரீமந்நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்.

மூன்றாம் பாட்டு

மாதவன் என்றதே கொண்டுஎன்னை யினிஇப்பால் பட்டது*
யாத வங்களும் சேர்கொடே னென்றுஎன்னுள் புகுந்திருந்து*
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாம ரைக்கண்குன்றம்*
கோதவ மிலென்கன்னற் கட்டிஎம் மான்என் கோவிந்தனே.

– அநந்தரம், இப்பக்ஷபாதமடியாக ஸ்வவிஷயத்தில் உக்தி மாத்ரத்தையே பற்றாசாகக்கொண்டு பண்ணின உபகாரத்தை அருளிச்செய்கிறார்.

என் – எனக்காக, கோவிந்தன் – க்ருஷ்ணனாய் வந்து அவதரித்த, எம்மான் – என்னுடைய ஸ்வாமியானவன், மாதவன் – ஸ்ரீமான், என்றதே – என்று நான் சொன்ன இந்த அஹ்ருதயோக்தியையே, கொண்டு – பற்றாசாகக்கொண்டு, என்னை – (உக்தியில் வாசியறியாத) என்னை, இனி – உக்த்யநந்தரமாக, இப்பாற்பட்டது – மேலுள்ள காலமெல்லாம், அவங்கள் – அவித்யாதிகளான குறைகள், யாதும் – ஏதேனுமொன்றையும், சேர்கொடேன் – சேர்கொடேன், என்று – என்று ஸங்கல்பித்து (அதுக்கீடாக), என்னுள் – என் நெஞ்சுக்குள்ளே, புகுந்து – புகுந்து, இருந்து – அநந்யபரனாயிருந்து, தீது – (புத்திபூர்வகமான) தீமையையும், அவம் – (ப்ராமாதி3கமான) அவத்தையும், கெடுக்கும் – கெடுக்கும்படியான, அமுதம் – (நித்யபோக்யபூதனாய்), (இஸ்ஸம்ஸ்லேஷத்தாலே) செம் – சிவந்த, தாமரை – தாமரைபோலேயிருக்கிற, கண் – திருக்கண்களையும், குன்றம் – ஸுஸ்திரமாய் வளர்ந்த வடிவையும் அநுபவிப்பித்து, கோது – கோதும், அவம் – அவமும், இல் – இல்லாத, என் கன்னற்கட்டி – கன்னற்கட்டிபோலே எனக்கு இனியனானான்.

கன்னற்கட்டி – கருப்புக்கட்டி; அதுக்குக் கோதும், அவமும் – நீரஸமான வஸ்த்வந்தர ஸம்ஸர்க்கமும் பாகதோஷமும்; ஈஸ்வரனுக்குக் கோதும், அவமுமாவது – உபகாரத்தினுடைய ஹேதுஸாபேக்ஷத்வமும், ஸ்வப்ரயோஜநார்த்தத்வமும்.

ஈடு – மூன்றாம் பாட்டு.  கீழே “மா சதிரிது பெற்று” என்றார்; இந்நன்மைக்கு அடியென்? என்ன; நினைவின்றிக்கேயிருக்க அந்த:புரவாஸிகள் சொல்லும் வார்த்தையைச் சொன்னேன் என்கிறார்.  “ஜாமாதா த3யிஸ்தவேதி ப4வதீஸம்ப3ந்த4 த்3ருஷ்ட்யா ஹரிம் பஸ்யேம” என்றாரிறே ப4ட்டர்.

(மாதவனென்றதே கொண்டு) நான் “மாதவன்” என்ற உக்திமாத்ரத்தைக் கொண்டு; இத்தையே திருவுள்ளத்திலே குவாலாகக்கொண்டு.  “அல்லாத திருநாமங்களுக்கும் இதுக்கும் வாசியறிவதே!” என்று இத்தையே குவாலாகக் கொண்டு.   (என்னை) அல்லாத திருநாமங்களுக்கும் இதுக்கும் வாசியறியாத என்னை. (இனி) முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டதிறே; மேல் அத்யல்பகாலமாய்த் தோற்றாநின்றதாயிற்று ஈஶ்வரனுக்கு.  “பழுதே பலபகலும் போயின” (முதல் திருவந்தாதி – 16) என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதநன் இருக்குமிருப்பைத் தான் என்பக்கலிலே இராநின்றான்.  “பு3த்3த்4வா காலமதீதஞ்ச முமோஹ” என்றிராநின்றானாயிற்று.  (இப்பாற்பட்டது) அணைக்குக் கிழக்குப்பட்ட நீரோபாதியிறே போன காலம்; இனி மேலுள்ள காலமாகிலும்.  (யாதவங்களும் சேர்கொடேனென்று) உன்னை யாதொரு தபஸ்ஸிலும் புக்கு க்லேஶிக்கவிடேன் என்று.  அம்மி துணையாக ஆறிழிகையிறே இவனைவிட்டு உபாயாந்தரத்தைப்பற்றுகை. அவங்கள் – நரகஹேதுவான அவித்3யாதி3கள்.  புறம்பே சில ப்ரயோஜநங்களைக்கொண்டு போகவிடுதல், அயோக்3யன் என்று அகலவிடுதல், உபாயாந்தர பரிக்3ரஹம் பண்ணவிடுதல் செய்யேன் என்று.  (என்று) “ஏதத்3வ்ரதம் மம” என்கிறபடியே ஸங்கல்பித்து.

இப்படி ஸங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கையன்றிக்கே, என் ஹ்ருத3யத்திலே வந்து புகுந்து.  “புகுந்தாலும் போக்குவரத்து உண்டாமாகில், வாலி போன வழியை அடைத்து, மஹாராஜர் குறும்புசெய்தாற்போலேயாம்” என்று ஸ்தா2வரப்ரதிஷ்டை2யாக இருந்து.  (புகுந்திருந்து) இவரை வரநிறுத்தவொண்ணாதே இவர்க்குமாகத் தான் புகுந்து இருந்தானத்தனை.  புகுந்து செய்த க்ருஷியேதென்னில், – (தீதவங்கெடுக்கும்) தீதாவது – பொய்ந்நின்ற ஞான(திருவிருத்தம்-1)த்துக்கு முன்பு பு3த்3தி4பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்.  அவமாவது – ஜ்ஞாநம் பிறந்த பின்பு ப்ராமாதி3கமாகப் பண்ணினவை.  இரண்டாலுமாக – ப43வத்ப்ராப்திப்ரதிப3ந்த4க கர்மங்களைச் சொல்லுகிறது.  அன்றியே, “கோ3க்4நே சைவ ஸுராபே ச சோரே ப4க்3நவ்ரதே ததா2| நிஷ்க்ருதிர்விஹிதா ஸத்3பி4: க்ருதக்4நே நாஸ்தி நிஷ்க்ருதி: ||” என்கிறபடியே, நிஷ்க்ருதியுள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்றாகவுமாம்.  இவற்றைக் கெடுப்பது கஷாயபாநத்தைப் பண்ணுவித்தோ? என்னில் – (அமுதம்) தன்னுடைய போ4க்3யதையை அநுப4விப்பித்தாயிற்று.  (செந்தாமரைக்கண் குன்றம்) ரஸநேந்த்3ரியத்துக்கேயன்றியே கண்ணுக்கும் போ4க்3யமாயிருக்கை. (குன்றம்) இத்தலையில் தீதும் அவமும் போக்கினானாயிருக்கையன்றிக்கே, “தனக்குண்டாய்க் கழிந்தது” என்று தோற்றும்படியாயிற்று வடிவிற்பிறந்த ஔஜ்ஜ்வல்யம்; “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்4ருஸம் ப4வதி து3:க்கி2த:” என்றிருக்குமவனிறே.

(கோதவமிலென் கன்னற்கட்டி) கோதாவது – த்3ரவ்யாந்தர ஸம்ஸர்க்க3த்தாலே வருமது.  அவமாவது – பாகத்தாலே வருமது.  தா3ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமுமாகிறது – ஆந்ருஸம்ஸ்யத்துக்காகவாதல், இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீகரிக்கை.  தனக்குப் புறம்பாயிருப்பதொரு போ4க்3யவஸ்துவில்லாதபடி தான் போ4க்3யனாயிருக்கும்.  (எம்மான்) நான் “வேறொன்று போ4க்3யம்” என்றிராதபடி என்னைத் தோற்பித்தவன்.  (என் கோவிந்தனே) க்ருஷ்ணாவதாரமும் தமக்கு என்றிருக்கிறார்; ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங்கோ(பெரியாழ்வார் திருமொழி 1-6-11)விறே.

நான்காம் பாட்டு

கோவிந் தன்குடக் கூத்தன்  கோவலனென் றென்றேகுனித்து*
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி* என்னைக்கொண்டுஎன்
பாவந் தன்னையும் பாறக்கைத்துஎமரே ழெழுபிறப்பும்*
மேவும் தன்மைய மாக்கினான் வல்லன்எம் பிரான்விட்டுவே.

– அநந்தரம், இவ்வுபகாரம் ஸ்வஸம்பந்திகுலபர்யந்தமாம்படி பண்ணின ஸாமர்த்யத்தை அருளிச்செய்கிறார்.

வல்லன் – (நினைத்தது செய்யவல்ல) சக்திமானாய், விட்டு – ஸமஸ்த பதார்த்தங்களையும் வ்யாபித்து, எம்பிரான் – (ஊரை வளைத்து ஒருவனைப் பிடிக்குமா போலே) என்னை அங்கீகரித்த ஸ்வாமியானவன், கோவிந்தன் – (ஜாத்யுசிதமான) கோஸம்ருத்தியையுடையவன், குடக்கூத்தன் – (அந்த ஸம்ருத்த்யுசிதமான ஹர்ஷவ்யாபாரமாயுள்ள) குடக்கூத்தையுடையவன், கோவலன் – (இந்த ஐஸ்வர்ய சேஷ்டிதங்களுக்கு அநுரூபமான) கோபால ஜந்மத்தையுடையவன், என்றென்றே – என்றென்று இவற்றைத் தனித்தனியே சொல்லி, குனித்து – ப்ரீதியாலே கூத்தாடி, தேவும் – (இந்த ஸௌலப்யத்துக்கு அடியான) பரத்வத்தையும், தன்னையும் – தனக்கு அஸாதாரண ஸ்வபாவமான நீர்மையையும், பாடி – (ப்ரீதிக்குப்போக்குவீடாகப்) பாடி, ஆட – ஸஞ்சரிக்கும்படி, திருத்தி – (இருப்பைப் பொன்னாக்குவாரைப்போலே நித்யஸூரி ஸமாநனாம்படி) திருத்தி, என்னை – என்னை, கொண்டு – (தன்னுடையவனாகக்) கைக்கொண்டு, (ஸ்வாங்கீகார விரோதியான), என் – என்னுடைய, பாவந்தன்னையும் – பாபங்களையும், பாற – ஓடிப்போம்படி, கைத்து – துரத்தி, எமர் – என்னோடு அந்வயமுடையார், ஏழேழு பிறப்பும் – ஏழேழு ஜந்மமும், மேவும் தன்மையம் – தன்னை ப்ராபிக்கும் தன்மையையுடையோமாம்படி, ஆக்கினான் – பண்ணினான்.

இதொரு சக்தியோகமிருந்தபடியென்! என்று கருத்து.  பாற – ஓட.

ஈடு – நாலாம் பாட்டு.  என்னோடு பரம்பரயா ஸம்ப3ந்த4முடையாரையுங்கூட என்னைப்போலேயாக்கினான்;  ஒருவனுடைய ஸாமர்த்2யமிருக்கும்படியே! என்று விஸ்மிதராகிறார்.

(கோவிந்தன்) ஸ்ரீவைகுண்ட2த்தில் இல்லாததொரு ஸம்பத்திறே இது.  கோ3ஸம்ருத்3தி4யால் உண்டான ஐஸ்வர்யமுள்ளது இங்கேயிறே.  (குடக்கூத்தன்) ப்3ராஹ்மணர், ஐஸ்வர்யம் விஞ்சினால் யாக3ங்கள் பண்ணுமாபோலே, இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குக்குப் போக்குவிடுவதொன்றாயிற்று – குடக்கூத்தாவது – “அவாக்யநாத3ர:” என்றிருக்கக்கடவ வஸ்து, தை4ர்யப4ங்க3ம் பிறந்து செருக்குக்குத் தலைச்சாவி வெட்டி ஆடினபடியிறே.

(கோவலன்) இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்.  பிறந்து படைத்த ஐஸ்வர்யமிறே இது.  (என்றென்றே குனித்து) இக்கு3ணங்களை மாறாதே சொல்லா நின்றுகொண்டு, உடம்பு இருந்தவிடத்திலிராதே ஆடி; அவனுடைய ஆஸ்ரிதபார தந்த்ர்யத்தை அநுஸந்தி4த்தால் இவர்க்குப் பேசாதிருக்கவொண்ணாதிறே.  (தேவும்) தேவுமென்கிறது ஐஸ்வர்யத்தை; தன்னையென்கிறது ஆஸ்ரிதபாரதந்த்ர்யத்தை;  அதிறே தானான தன்மை; “ஆத்மாநம் நாதிவர்த்தே2தா:” என்றானிறே. “ஆத்மபூ4தம் ப4ரதம் நாதிவர்த்தேத2ா:” என்கிறாள் – என்று சிலர் சொல்லுவர்கள்.  பட்டர், “நீரான தன்மையாகிறது ஆஸ்ரித பரதந்த்ரராகை.  உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறான்” என்று.

(பாடியாடத்திருத்தி) “என்றென்றே குனித்து” என்கிறவிடத்துக்கும், “பாடியாட” என்கிறவிடத்துக்கும் வாசியென்? என்னில்; கீழ் ஸௌலப்4யபரம்; இங்கு ஐஸ்வர்யமும் ஸௌலப்4யமும் இரண்டுமுண்டு; விஷயபே43த்தாலே சொல்லவுமாம்.  அன்றிக்கே, என்றென்று என்கிறவிடம் அஹ்ருத3யமான உக்திமாத்ரமாய், குனிக்கையாவது – உத்3யோக3த்தளவாய், இங்கு – ஸஹ்ருத3யமாகப் பாடுவதாடுவதானபடியாய், என்றென்றே குனித்துப் பாடுவதாடுவதாம்படி என்றதாதல்.  (திருத்தி) தரிசுகிடந்த தரையைச் செய்காலாம்படி திருத்துவாரைப்போலே, நித்யஸூரிகள் யாத்ரையே யாத்ரையாம்படி திருத்தி.  (என்னைக்கொண்டு) என்னைக் கைக்கொண்டு.  ஓர் உபாயாநுஷ்டா2நத்தைப் பண்ணுவித்து என்னில், இப்போது இவர்க்கு அபஸித்3தா4ந்தமாம்; ப43வத்ப்ரஸாத3த்தாலே பெற்றாராகச் சொல்லுமதுக்கும் சேராது.  ஆனால் என் சொல்லுகிறது? என்னில்; சேற்றிலே விழுந்த மாணிக்கத்தை எடுத்துக் கழுவி விநியோக3ம் கொள்ளுமாபோலே,  என்னை ஸ்வீகரித்து, என்னால் போக்கிக் கொள்ளவொண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஓட்டி.   (எமர் இத்யாதி3) இதுதான் என்னொருவனளவன்றிக்கே என்னோடு ஸம்ப3ந்த4 முடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே ஸ்வபா4வமாக வுடையோமாம்படி பண்ணினான்.  (எம்பிரான் விட்டு வல்லன்) எனக்கு உபகாரகனான ஸர்வேஶ்வரன், நினைத்த கார்யம் செய்து தலைக்கட்டவல்லன்.  ஸர்வஶக்தி மாட்டாததுண்டோ? வ்யாப்தியும் தமக்காக என்றிருக்கிறார்.

ஐந்தாம் பாட்டு

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள்கண்கள்*
விட்டிலங்கு கருஞ் சுடர் மலையே திருவுடம்பு*
விட்டிலங்கு மதியம் சீர்சங்கு சக்கரம் பரிதி*
விட்டிலங்கு முடி யம்மான் மதுசூதனன் தனக்கே.

– அநந்தரம், ஸபரிகரமாகத் தம்மை அங்கீகரித்தபடியாலே அவனுக்குப் பிறந்த ஔஜ்ஜ்வல்யத்தை அருளிச்செய்கிறார்.

இப்பாட்டில் முதலடியில், விட்டு என்று திருநாமமாகப் பிரித்து, “விட்டிலங்கு முடியம்மான்” என்று நாலாமடியோடே அந்வயித்துக் கிடக்கிறது; அல்லாதபோது, திருநாமம் முதலாயெழுகிற பாட்டுக்களின் மர்யாதை, குலையும்.  “விட்டு” என்னும் இவ்விடத்தில் உகரம் குற்றியலாகக்கொள்க.

விட்டு – விஷ்ணுவாய், விட்டு – பரந்து, இலங்கு – விளங்குகிற, முடி – அபிஷேகத்தையுடையனாய், அம்மான் – ஸ்வாமியான, மதுசூதனன் தனக்கு – மதுஸூதநன்தனக்கு, இலங்கு – இலங்கி, செம் – சிவந்த, சோதி – ஒளியையுடைய, தாமரையே – தாமரைபோன்றன, பாதம் – திருவடிகளும், கைகள் – திருக்கைகளும், கண்கள் – திருக்கண்களும், விட்டு – விகஸிதமாய், இலங்கு – விளங்காநிற்கிற, கரும் – நீலமான, சுடர் – ப்ரபையையுடையத்தான, மலையே – மலை போன்றது, திரு – அழகிய, உடம்பு – வடிவு, சீர் – அழகிய, சங்கு – சங்கு, விட்டு – பரம்பி, இலங்கு – விளங்குகிற, மதியமே – சந்த்ரனைப்போன்றது; சக்கரம் – சக்ரம், விட்டிலங்கு – அப்படிப்பட்ட, பரிதியே – ஆதித்யனைப்போன்றது.

ஸாமாநாதிகரண்யம் உபமாநோபமேயபா4வத்தாலே.

ஈடு – அஞ்சாம் பாட்டு.  திருமாலையாண்டானோடே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்டருளுகிற நாளில், பாட்டுக்கள்தோறும் சில வார்த்தைகளை அருளிச்செய்து “இது அர்த்த2மானாலோ?” என்றால், “இது விஸ்வாமித்ரஸ்ருஷ்டி; ஆளவந்தார் அருளிச்செய்யக் கேட்டறியேன்” என்று பணிக்குமாம் ஆண்டான்; ஆண்டான் “இப்பாட்டுக்கு விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி வேண்டாதாயிருந்ததீ!” என்ன, “இப்பாட்டால் தன் அவயவ ஸௌந்த3ர்யத்தாலே என்னைத் தனக்காக்கினான் என்கிறார்” என்று அருளிச்செய்தருளினாராம்.  அதுவுங்கிடக்க, பட்டர் அருளிச்செய்வதொன்றுண்டு – “ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும் விஷயீகரித்து, அத்தாலே திருமேனியில் பிறந்த ஔஜ்ஜ்வல்யத்தைச் சொல்லுகிறது” என்று; “விஸோதி4தஜட: ஸ்நாதஸ்சித்ரமால்யாநுலேபந: | மஹார்ஹவஸநோ ராமஸ்தஸ்தெ2ள தத்ர ஸ்ரியா ஜ்வலந் ||” என்று நின்றாற்போலே.

(விட்டிலங்கு இத்யாதி3) மதகுதிறந்தாற்போலே விட்டு விளங்கா நின்றுள்ள, சிவந்த ஒளியையுடைத்தான தாமரைபோலேயாயிற்று தாம் தோற்று விழும் திருவடிகள், தம்மை அணைத்த கை, குளிரநோக்கின திருக்கண்கள், இவை.  உபமேயத்துக்கு உபமாநம் நேராகப் போராமையாலே, அதுதன்னையே ஸிக்ஷித்துச் சொல்லுகிறார்.  அன்றிக்கே, “விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித்தாமரை பாதம்” என்று அந்வயம்.

(விட்டிலங்கு இத்யாதி3) “ஸோப4யந் த3ண்ட3காரண்யம்” என்னுமாபோலே இராநின்றது வடிவழகு; தம்மை அணைத்தபோதைக் குளிர்ந்த வடிவிருந்தபடி.  விட்டிலங்குகிற ப்ரகாசத்தையுடைய சந்த்3ரனைப்போலேயாயிற்று ஸ்ரீபாஞ்சஜந்யம்.  (சீர்சங்கு) ப43வத்ப்ரத்யாஸத்தியாலே வந்த ஐஸ்வர்யம். “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண்படைகொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே” (நாச்சியார் திருமொழி 7-8) ப்ரஸாத3த்தைச் சூடிக் கைப்புடையிலே கிடப்பாரைப்போலே, அவன் வாயாலே ஊட்ட உண்டு, வடிவைப் பாராத் திருக்கையிலே சாயுமித்தனை.  (சீர் சங்கு) “உன்செல்வம் சாலவழகியது” (நாச்சியார் திருமொழி 7-7) என்னும்படி வாயது கையதான ஐஶ்வர்யமிறே.

(சக்கரம் பரிதி) கண்டதில் மின்னிற்றொன்றை உபமாநமாகச் சொல்லுமித் தனையிறே; ஆதி3த்யனைப்போலேயன்றே திருவாழியாழ்வானிருப்பது.  (விட்டிலங்குமுடி) இவையித்தனையும் தன் புகராலே முட்டாக்கிடுமாயிற்று திருவபி4ஷேகம்.  (அம்மான் மதுசூதனன்தனக்கே) ஸர்வேஸ்வரனாயிருந்து வைத்து ஆஸ்ரிதவிரோதி4நிரஸந ஸ்வபா4வனானவனுக்கு. விட்டுவுக்கு – இலங்கு இத்யாதி3 – என்று முதலாக அந்வயம்.

ஆறாம் பாட்டு

மதுசூ தனையன்றி மற்றிலேனென்றுஎத்தாலும் கருமமின்றி*
துதிசூழ்ந்த பாடல்கள்  பாடியாட நின்றுஊழி யூழிதொறும்*
எதிர்சூழல் புக்குஎனைத் தோர்பிறப்பும்எனக்கே அருள்கள்செய்ய*
விதிசூழ்ந்த தால்எனக் கேல்அம்மான்  திரிவிக் கிரமனையே.

– அநந்தரம், கீழ்ச்சொன்ன உபகாரத்துக்கும் தத்க்ருதௌஜ்ஜ்வல்யத்துக்கும் ஹேதுவான க்ருபாபாரவஶ்யத்தை அருளிச்செய்கிறார்.

மதுசூதனையன்றி – (என் விரோதியைப்போக்கின) மதுசூதனையன்றி, மற்று – மற்று ப்ராப்யம், இலேன் – உடையேனல்லேன், என்று – என்று, எத்தாலும் – ஏதேனும் ஒரு பதார்த்தத்தாலும், கருமம் – ஒரு கார்யம், இன்றி – அற்று, துதி – ஸ்தோத்ரரூபத்தாலே, சூழ்ந்த – (அவன் குணகணாதிகளைச்) சூழ்ந்த, பாடல்கள் – பாடல்களை, நின்று – (ப்ரயோஜநார்த்தமன்றியே ஸ்வயம்ப்ரயோஜநமாக) நின்று, பாடி – பாடி, ஆட – ஆடும்படி, ஊழியூழிதொறும் – கல்பந்தோறும் கல்பந்தோறும்.  எனைத்து – அநேகங்களாய், ஓர் – அத்விதீயங்களான, பிறப்பும் – பிறப்புக்கள்தோறும், எதிர் – எனக்கு அபிமுகனாகைக்கு ஈடான, சூழல்புக்கு – சூழ்ச்சியோடே அவதரித்து, எனக்கே – எனக்கே அஸாதாரணமாக, அருள்கள் – (ப்ரதமகடாக்ஷம் தொடங்கி பரபக்திபர்யந்தமான) உபகாரங்களை, செய்ய – பண்ணுகைக்கு, எனக்கு – எனக்குறுப்பான, ஏல் – ஏன்றுகோளையுடையவனாய், அம்மான் – ஸ்வாமியான, திரிவிக்கிரமனை – திருவிக்ரமனை, விதி – (தப்பவொண்ணாத) விதியென்னலாம்படியான க்ருபையானது, சூழ்ந்தது – சூழ்ந்துகொண்டது.

ஏலுதல் – கொள்கையாதல்; தகுதியாகவுமாம்.

ஈடு – ஆறாம் பாட்டு.  தன்பக்கல் நான் ப்ரவணனாகைக்கு எம்பெருமான் வருந்திற்றெல்லாம் தன் க்ருபையாலே என்கிறார்.

(மதுசூதனையன்றி மற்றிலேன் என்று) விரோதி4நிரஸந ஸ்வபா4வனான- வனையொழிய வேறு சிலரைத் தஞ்சமாகவுடையேனல்லேன் என்றாயிற்று இவர் இருப்பது. ஸத்த்வம் தலையெடுத்தபோது ஒருகால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளதொன்றிறே; இவர்க்கு வாசியென்? என்னில், (எத்தாலும் கருமமின்றி) அந்த உக்திக்குச் சேர்ந்த அநுஷ்டா2நமுண்டாயிருக்கும்.  ப்ராப்யாபா4ஸங்களிலும் ப்ராபகாபா4ஸங்களிலும் நெகிழ்ந்து, அவனையொழிந்த எல்லாவற்றாலும் ஒரு ப்ரயோஜநமின்றிக்கேயிருப்பர்.  (துதி இத்யாதி3) ஸ்தோத்ராத்மகமான பாடல் என்னுதல், ஸ்துத்யகு3ணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல். கல்பந்தோறும், கல்பந்தோறும் துதிசூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவதாடுவதாம்படி பண்ணினான்.  (நின்று) “தே3ஹி மே” என்று ப்ரயோஜநங்களைப் பற்றி அகலுகையன்றிக்கேயிருக்கை.

இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேதுவென்? என்னச் சொல்லுகிறார் (விதி சூழ்ந்ததால்) (எதிர்சூழல்புக்கு) ஒருவனைப்பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர்வரம்பே வருமாபோலே, இவர் பிறந்த ஜந்மங்கள்தோறும் தானும் எதிரே பிறந்து வந்தானாயிற்று.  இவர் கர்மமடியாகப் பிறக்க, அவன் அநுக்3ரஹத்தாலே பிறந்துவந்த இத்தனை.  சூழலென்று அவதாரத்தைச் சொல்லக்கடவதிறே; “எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கேயருள்கள் செய்ய விதிசூழ்ந்ததால்” என்கிறார்.  விதி4யென்கிறது – ப43வத் க்ருபையை.  ப43வத் க்ருபையை விதி4யென்பானென்? என்னில்; *அவனுக்குத் தப்பவொண்ணாததாகையாலே; நாம் நினைத்தவை தலைக்கட்ட வொட்டாத கர்மம்போலே, ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபாபரதந்த்ரனாய்த் தலைக் கட்டமாட்டான்; “வதா4ர்ஹமபி காகுத்ஸ்த2: க்ருபயா பர்யபாலயத்” (காகுத்ஸ்த2🙂 தங்களிலும் க்ருபையே விஞ்சி ரக்ஷித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்.  வதா4ர்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்குட்படக் கண்ணழிவு பண்ணுமவரிறே.

(எனக்கேல் இத்யாதி3) ஸர்வேஸ்வரனாயிருந்துவைத்து, ஸ்ரீவாமநனாய் வந்து அவதரித்து, மூன்றடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு, எல்லாரோடும் பொருந்தின ஸௌலப்4யந்தான் பரத்வமென்னும்படி, என்னை விஷயீகரிக்கைக்கு ஒரு விதி4 சூழ்ந்தது.  அம்மான் திரிவிக்கிரமனை எனக்கே அருள்கள்செய்ய – எனக்கென்னவே ஒரு விதி4 சூழ்ந்தது.

ஏழாம் பாட்டு

திரிவிக் கிரமன் செந்தாமரைக்கண்எம் மான்என் செங்கனிவாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்த(ன) னென்றென்று*உள்ளிப்
பரவிப் பணிந்து பல்லூழி யூழிநின் பாதபங்கயமே*
மருவித் தொழும்மன மேதந்தாய் வல்லைகாண்என் வாமனனே!

– அநந்தரம், ஸ்வாநுபவத்துக்கு உறுப்பாக ஸத்வோத்தரமான மநஸ்ஸைத் தந்தான் என்கிறார்.

திரிவிக்கிரமன் – த்ரைவிக்ரமாபதாநத்தாலே லோகத்தை அநந்யார்ஹமாக்கினவனாய், (அதுபோலே) செம் – சிவந்த, தாமரை – தாமரைபோன்ற, கண் – கண்ணாலே, எம்மான் – (ஜிதம் என்னும்படி) என்னை அடிமைகொண்ட ஸ்வாமியானவன், என் செங்கனிவாய் உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தன் – சிவந்த கனிபோலேயிருக்கிற திருப்பவளத்தின் வடிவிலே பரம்பி வளர்ந்து வருகிற, வெளுத்த, பளிங்குபோலேயிருக்கிற திருமுத்தின் நிறத்தை எனக்கு அநுபவிப்பித்தவன், என்றென்று – என்றென்று தனித்தனியே, உள்ளி – (சேஷ்டிதத்தையும் கண்ணழகையும் முறுவலழகையும்) நெஞ்சாலே அநுபவித்து, பரவி – (அது உள்ளடங்காமையாலே) அக்ரமமாகப் பரவி, பணிந்து – (அந்த ப்ரீதி ப்ரேரிதனாய்க்கொண்டு திருவடிகளிலே) விழுந்து, பல் – பலவகைப்பட்ட, ஊழியூழி – கல்பவிபாகத்தையுடைத்தான காலதத்வமுள்ளதனையும், நின் – (ப்ராப்தனான) உன்னுடைய, பாதபங்கயமே – போக்யமான திருவடிகளிலே, மருவி – (அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு) பொருந்தி, தொழும் – அடிமைசெய்யும், மனமே – மநஸ்ஸையே, தந்தாய் – தந்தாய், என் வாமனனே – என் வாமனனே! வல்லைகாண் – வல்லைகாண்.

மஹாபலியினுடைய நெஞ்சை வஞ்சித்து அநுகூலமாக்கின நீ, என் நெஞ்சையும் அநுகூலிப்பிக்க ஶக்தன் என்று கருத்து.

ஈடு – ஏழாம் பாட்டு.  உன்னுடைய கு3ணாநுஸந்தா4ந பூர்வகமாக ஸ்துதி ப்ரணாமங்களைப் பண்ணிக்கொண்டு, உன்னை அநுப4விக்குமிதுவே ப்ரயோஜநமாயிருக்கும் மநஸ்ஸை எனக்குத் தந்தாய் என்கிறார்.

(திரிவிக்கிரமன்) மூன்றடியாலே ஸகலலோகங்களையும் தன் காற்கீழே இட்டுக்கொண்டவன்.  (செந்தாமரைக்கண் எம்மான்) நோக்காலே என்னைத் தன் காற்கீழேயிட்டுக் கொண்டவன்.  (என் செங்கனிவாய் இத்யாதி3) இவர் “ஜிதம்” என்ற பின்பு, அவன் ஸ்மிதம் பண்ணினபடி.  என்னை அநந்யார்ஹனாக்குகையாலே சிவந்து கனிந்த திருவத4ரத்தின் உருவிலே – அழகிலே – நிறத்திலே, பொலிந்த பரபா43த்தாலே ஸம்ருத்34மாய், பரிஸுத்34மான ஸ்ப2டிகம்போலேயிருக்கிற திருமுத்துநிரையினுடைய நிறத்தையுடையவன்.  (என்றென்று உள்ளி) இதர விஷயங்களினுடைய ஸ்மிதத்திலுண்டான ஸ்ம்ருதி, அகவாய் கண்டவாறே விட்டல்லது நிற்கவொண்ணாதாயிருக்குமிறே; இது மாறாதே அநுஸந்தி4க்கலாமிறே.  (பரவிப்பணிந்து) அக்ரமமாகக் கூப்பிட்டு, நிர்மமனாய்த் திருவடிகளிலே விழுந்து.

இப்பேறுதான் ஒருநாள் உண்டாய் மற்றைநாள் மறுக்கையன்றிக்கே – (பல்லூழியூழி) கல்பந்தோறும் கல்பந்தோறும்.  பரமபோ4க்3யமான உன் திருவடிகளையே அநந்யப்ரயோஜநனாய்க்கொண்டு தொழும் மநஸ்ஸைத் தந்தாய்.  விஷயாந்தரங்கள் அஸ்தி2ரமாகையாலும், அபோ4க்3யமாகையாலும் ஒன்றையே பற்றிநிற்க விஷயமில்லையாகையாலே, மநஸ்ஸு “சஞ்சலம் ஹி மந:” என்று சஞ்சலமாயிறேயிருப்பது; அப்படியன்றியே, நித்யமுமாய், நிரதிசயபோ4க்3யமுமா யிருக்கையாலே, மருவித்தொழும் மநஸ்ஸைத் தந்தாய் என்றுமாம்.  பழைய நெஞ்சைத் திருத்தினவளவன்றிக்கே, கருவுகலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய், “தி3வ்யம் த3தா3மி” போலே.  “பழைய நெஞ்சு இது” என்று ப்ரத்யபி4ஜ்ஞை பண்ணவொண்ணாதபடி இராநின்றது.  (என் வாமனனே வல்லைகாண்) கொள்கைக்கும், கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்? வாமந வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்; அவ்வழகாலே, மஹாப3லி, “என்னது” என்றிருந்த பூ4மியை அபஹரித்தாய்; வல்லைகாண் என்று – உகக்கிறார்.

எட்டாம் பாட்டு

வாமனன்என்மரதக வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய்!* என்றென்றுஉன் கழல்பாடி யேபணிந்து* தூமனத் தனனாய்ப் பிறவித் துழதி நீங்க* என்னைத்
தீமனங் கெடுத்தாய்உனக்குஎன் செய்கேன்என் சிரீதரனே!

– அநந்தரம், அநுபவத்துக்குறுப்பல்லாத பொல்லாத நெஞ்சைப் போக்கின உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமுண்டோ? என்கிறார்.

வாமனன் – (ஸர்வஸுலபனான) வாமனனே! என் – எனக்கு அநுபாவ்யமான, மரதகவண்ணன் – மரதகம்போன்ற வடிவழகையுடையவனே! (போக்தாக்களைக் கண்டு உகந்து பூர்ணமாக நோக்கும்), தாமரை – தாமரைபோலும், கண்ணிணன் – கண்ணையுடையவனே! காமனை – (எல்லாரும் ஆசைப்படும் அழகையுடைய) காமனுக்கும், பயந்தாய் – உத்பாதகனானவனே! என்றென்று – என்றென்று சொல்லி, உன் கழல் – உன் திருவடிகளை, பாடியே – பாடியே, பணிந்து – பணிந்து, தூமனத்தனனாய் – (ப்ரயோஜநாந்தரங்களில் போகாத) ஸுத்தமநஸ்ஸையுடையேனாய், பிறவி – ஜந்மப்ரயுக்தமான, துழதி – அலமாப்பு, நீங்க – தீரும்படியாக, என்னை-, தீமனம் கெடுத்தாய் – (விஷயாந்தரங்களிலே அந்யபரமான) தீய மனம் கெட்டுப்போம்படி பண்ணினாய்; என் – இப்படி எனக்கு உபகாரகனான, சிரீதரனே – ஸ்ரீமானே! உனக்கு – (பரிபூர்ணனான) உனக்கு, என் – எத்தை, செய்கேன் – செய்கேன்.

ஸ்ரிய:பதியாகையாலே பூர்ணனான உனக்குச் செய்யலாவது ஒரு ப்ரத்யுபகாரமில்லை என்று கருத்து.

ஈடு – எட்டாம் பாட்டு. எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரங்காணாமல் தடுமாறுகிறார்.

(வாமனன்) வடிவழகைச் சொல்லுகிறது என்னுதல், நன்மைகளைத் தருமவன் என்னுதல்.  (என் மரதக வண்ணன்) ஸ்ரமஹரமான வடிவழகை என்னை அநுப4விப்பித்தவன்.   (தாமரைக் கண்ணினன்) வடிவழகேயன்றிக்கே, அகவாயில் தண்ணளிக்கு ப்ரகாசகமான திருக்கண்களையுடையவன்.  (காமனைப் பயந்தாய்) வடிவழகாலே நாட்டை வெருட்டித்திரிகிற காமனுக்கு உத்பாத3கனானவனே! அநுஸந்தா4நத்திலே ஒரு வைஸத்3யம் பிறந்தவாறே முன்னிலைபோலே தோற்றும்; அப்படியும் சொல்லிக் கூப்பிடுவர்; அதுக்குமேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக்கூப்பிடுவர்; இவை இரண்டுக்கும் அடி அபி4நிவேசம்.  (என்றென்று இத்யாதி3) இத்திருநாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லாநிற்கத் திருவடிகளிலே விழுந்து.

(தூமனத்தனனாய்) ப3ந்த4மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான நெஞ்சின்றிக்கே, மோக்ஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சையுடையனாய்; பரிஸுத்3தா4ந்த:கரணனாய்.  அதின் ப2லமாய் வருமதிறே ஜந்மம்போமது; பிறவித் துழதியுண்டு – தூர் – து3:க்க2ம், அது நீங்கும்படியாக.  (என்னைத் தீமனங் கெடுத்தாய்) அம்ருதத்தையும், விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப்போலே, உன்னையும் உகந்து க்ஷுத்ரவிஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்.  நல்ல நெஞ்சைத் தந்தவளவன்றிக்கே, பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய்.  (உனக்கு இத்யாதி3) பண்ணின உபகாரத்தின் கனத்தாலே ப்ரத்யுபகாரம் பண்ணியல்லது த4ரிக்கமாட்டுகிறிலேன்; அதுக்கு விரகு காண்கிறிலேன்.  நான் ஒரு உபகாரம் கொள்ளாதொழிதல், நீ குறைவாளனாதல் செய்யப்பெற்றிலேன்.  புஷ்கலனாயிருக்கிற உனக்கு நான் எத்தைச் செய்வேன்? என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணனென்றென்று இராப்பகல்வாய்
வெரீஇ* அலமந்து கண்கள்நீர் மல்கிவெவ் வுயிர்த்துயிர்த்து*
மரீஇய தீவினை மாள இன்பம்வளர வைகல்வைகல்
இரீஇ* உன்னைஎன் னுள்வைத் தனைஎன் இருடீகேசனே!

– அநந்தரம், விஸ்லேஷ து:க்கம் தீரும்படி என் நெஞ்சுக்குள்ளே புகுந்து, நான் ஹ்ருஷ்டனாம்படி அநுபவிப்பித்தான் என்கிறார்.  தூமனத்திலே தோற்றுவித்த பக்திக்கு விஷயமாய்க்கொண்டு நான் உகக்கும்படி புகுந்தான் என்கிறார் என்றுமாம்.

சிரீஇதரன் – ஸ்ரிய:பதியானவன், செய்ய – (அவளோட்டை ஸம்ஸ்லேஷ ப்ரீதியாலே) செவ்விபெற்ற, தாமரை – தாமரைபோலும், கண்ணன் – கண்ணையுடையவன், என்றென்று – என்றென்று, (“இவளிராப்பகல் வாய்வெரீஇ” என்கிறபடியே) இராப்பகல் – இரவும் பகலும், வாய்வெரீஇ – வாய்வெருவி, அலமந்து – (“எங்கும் நாடி நாடி” என்கிறபடியே) அலமந்து, கண்கள் நீர்மல்கி – (குவளையொண் கண்ணநீர் கொண்டாள் “கேழிலொண் கண்ணநீர் கொண்டாள்” என்கிறபடியே) கண்ணநீர் மல்கி, வெவ்வுயிர்த்துயிர்த்து (“உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும்”, “நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும்” என்கிறபடியே) பலகாலும் வெவ்விதமாக நெடுமூச்செறிந்து, மரீஇய – (இப்படி ஆடியாடியில்) மருவின, தீவினை – தீவினை, மாள – போம்படியாக, இன்பம் வளர – (அந்தாமத்தன்பு தொடங்கி) இன்பம் வளரும்படி, வைகல் வைகல் – ஸர்வகாலமும், என்னிருடீகேசனே – என் இந்திரியங்களுக்கு நியாமகனாகையாலே, என்னுள் – (உனக்கு விதேயமான) என் நெஞ்சிலே, உன்னை – (நியந்தாவாய், போக்யனான) உன்னை, இரீஇ – (“பக்கநோக்கறியான்” என்கிறபடியே) இருத்தி, வைத்தனை – வைத்தாய்.

பக்திபாரவஸ்யத்தாலே வந்த விகாரத்தை – வெவ்வுயிர்த்துயிர்த்து அறுதியாகச் சொல்லி, ப்ராப்திப்ரதிபந்தகநிவ்ருத்தி பிறந்து அநுபவாநந்தம் வளரும்படி ஸம்ஸ்லேஷித்த ப்ரகாரத்தைச் சொல்லிற்றாகவுமாம்.

ஈடு – ஒன்பதாம் பாட்டு.  ஆடியாடி(24)யில் பிறந்த வ்யஸநமெல்லாம் நான் மறந்து மிகவும் ப்ரீதனாம்படிபண்ணி, இந்த்3ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார்.  ப4க்திபூர்வகமாக உன்னை அநுப4வியாநிற்கச் செய்தே, ப்ரதிப3ந்த4கங்களும் நீங்கி நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதராகிறாராகவுமாம்.

(சீரீதரன்) பெரியபிராட்டியாரைத் திருமார்விலேயுடையவன்.  (செய்ய தாமரைக்கண்ணன்) நீர் பாய்ந்த பயிர் செவ்விபெற்றிருக்குமாபோலே, அவள் திருமார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண்ணழகையுடையவன்.  “வக்ஷஸ்ஸ்த2லேந ஸ்ரியமுத்3வஹந் விபு4: | விஸ்தாரிபத்3மோத்பலபத்ர லோசந:” என்கிறபடியே.  (என்றென்று) இப்படி மாறாதே சொல்லி.

(இராப்பகல் இத்யாதி3) “இவர் ப4க்திபரவஶராகையாலே இவருடைய தே3ஹயாத்ரையிருக்கும்படி” என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி.  அன்றிக்கே, ப4ட்டர் “ ‘மரீஇய தீவினைமாள’ என்கிறவிடத்தளவும் – ஆடியாடி(2-4) யில் இவர்க்கு ஓடின த3ஶையாய், ‘இன்பம் வளர’ என்கிற இது – அந்தாமத்தன்பு (2-5) தொடங்கி, கேசவன்தமர(2-7)ளவும் வர உண்டான ப்ரீதியைச் சொல்லுகிறது” என்று.  “இராப்பகல் வாய்வெரீஇ” என்கிறது – “இவள் இராப்பகல் வெய்வெரீஇ”  (2-4-5) என்றத்தை.  “அலமந்து” என்கிறது “எங்கும் நாடி நாடி” (2-4-1) என்றத்தை.  “கண்கள் நீர்மல்கி” என்கிறது –  “தன குவளையொண் கண்ணநீர் கொண்டாள்” (2-45) என்றத்தை.  “வெவ்வுயிர்த்துயிர்த்து” என்கிறது – “உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும்”(2-4-4) என்றத்தை.  (மரீஇய தீவினை மாள) ஆயிரமாண்டு முதலையின் கையிலே ஆனை இடர்பட்டாற்போலே, ஆடியாடியில் ஆற்றாமை.  இவர்க்கு இப்படி பொருந்தின விஸ்லேஷவ்யஸநம் ஆறும்படியாக.  (இன்பம் வளர) அந்தாமத்தன்பு தொடங்கிப் பிறந்த ப்ரீதி. (வைகல் வைகல்) கழிகிற காலந்தோறும்.  (உன்னை என்னுள் – இரீஇ – வைத்தனை) உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை.

(என் இருடீகேசனே) எனக்குப் பரிகரமாய், விரோதி4த்த இந்த்3ரியங்களும் உன்பக்கலிலே படையற்றன. பரமஶேஷியைக் கண்டார் த்3வாரசேஷிகளளவில் நில்லார்களிறே.

பத்தாம் பாட்டு

இருடீ கேசன் எம்பிரான் இலங்கை யரக்கர்குலம்*
முருடு தீர்த்த பிரான்எம்மான் அமரர்பெம்மா னென்றென்று*
தெருடி யாகில் நெஞ்சே! வணங்குதிண்ணம் அறிஅறிந்து*
மருடி யேலும் விடேல்கண்டாய் நம்பிபற்ப நாபனையே.

– அநந்தரம், இப்படி ஸர்வப்ரகாரோபகாரகனை விடாமையில் உண்டான அபேக்ஷையை அருளிச்செய்கிறார்.

இருடீகேசன் – (த3சேந்த்3ரியாநநமான என்னுடைய) மாநஸேந்த்ரியத்தை நியமித்து, எம்பிரான் – எனக்கு உபகாரகனாய், (அதுக்கு உதாஹரணம் என்னலாம்படி) இலங்கை – லங்கையில், அரக்கர்குலம் – ராக்ஷஸ குலத்துக்கு, முருடு – முருடான ராவணனை, தீர்த்த – அழித்த, பிரான் – (நாட்டுக்கு) உபகரித்தவன், அமரர் பெம்மான் – நித்யஸூரிகளோபாதி, எம்மான் – என்னை அநுபவிப்பித்த ஸ்வாமியானவன், என்றென்று – என்று பலபடியும் அநுஸந்தித்து, நெஞ்சே – நெஞ்சே! தெருடியாகில் – அறிவுடையையாகில், வணங்கு – (அவனை) வணங்கும்படி பார்; (இத்தை) திண்ணம் – சிக்கென, அறி – புத்திபண்ணு, அறிந்து – இவ்வறிவுக்குமேல், மருடியேலும் – (அயோக்யதையடியான) கலக்கம் வந்ததேயாகிலும், நம்பி – குணபரிபூர்ணனாய், பற்பநாபனை – (காரணபூதமான) திருநாபிகமலத்தை உடைய இம்மஹோபகாரகனை, விடேல் கண்டாய் – விடாதே கிடாய் – என்று நெஞ்சை அபேக்ஷிக்கிறார்.

ஈடு – பத்தாம் பாட்டு.  நமக்கு மிகவும் உபகாரகனானவனை நீ ஒருகாலும் விடாதே கிடாய்! என்று திருவுள்ளத்தைக்குறித்து அருளிச்செய்கிறார் இப்பாட்டில்.

(இருடீகேசன் எம்பிரான்) தன்னை அறிகைக்குப் பரிகரமாகத் தந்த இந்த்3ரியங்களைக் கொண்டு சப்3தா3திவிஷயங்களை விரும்பி நான் அநர்த்த2ப்படாமே, தன்னையே அறிகைக்குப் பரிகரமாம்படிபண்ணி உபகரித்த மஹோபகாரகன்.  (இலங்கை இத்யாதி3) இவருடைய இந்த்3ரியவஶ்யதையைத் தவிர்த்தபடி. லங்கையில் ராக்ஷஸ ஜாதியில் விபீ4ஷணாதி3களை வைத்து, முருடரான ராவணாதி3களை நிரஸித்தாற்போலேயாயிற்று.  (எம்மான் அமரர் பெம்மான்) இந்த்3ரியங்களினுடைய இதர விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்த மாத்ரமன்றிக்கே, நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுப4விக்கக் கொடுக்குமாபோலே, எனக்குத் தன்னை அநுப4விக்கத் தந்தவன்.  இப்படி சொல்லாநின்றுகொண்டு. (தெருடியாகில்) தெருளுதியாகில்; ஜ்ஞாநப்ரஸரத்3வாரமாகில்.  (நெஞ்சே வணங்கு) ஜ்ஞாநேந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உனக்கு உண்டாகில், உபகாரகனானவன் திருவடிகளிலே விழப்பார்.

(திண்ணம் அறி) இத்தை “ஓலக்க வார்த்தை” என்றிராதே த்3ருட4மாக பு3த்3தி4பண்ணு. (அறிந்து) அறிகைதானே போரும் ப்ரயோஜநம்; அதுக்குமேலே – (மருடியேலும் விடேல் கண்டாய்) உனக்கு ஒரு பிச்சுண்டிறே.  அவன் வைலக்ஷண்யத்தைப் பாரா வருவது – “நாம் இவ்விஷயத்தை தூ3ஷிக்கை யாவதென்?” என்று அயோக்3யதாநுஸந்தா4நத்தாலே அகலப்பார்ப்பதொன்றுண்டு; அத்தைத் தவிரப்பார்கிடாய்.  (நம்பி பற்பநாபனையே) கெடுவாய்! இவ்விஷயத்தை விட்டுப் புறம்பே போய் மண்ணை முக்கவோ? அவன் கு3ணபூர்த்தி இருந்தபடி கண்டாயே; வடிவழகு இருந்தபடி கண்டாயே; முன்பு நமக்கு உபகரித்தபடி கண்டாயே.

பதினொன்றாம் பாட்டு

பற்ப நாபன் உயர்வற வுயரும் பெருந்திறலோன்*
எற்பரன்என்னை யாக்கிக்கொண்டுஎனக்கே தன்னைத்தந்த
கற்பகம்* என்அமுதம் கார்முகில் போலும் வேங்கடநல்
வெற்பன்* விசும்போர் பிரான்எந்தை தாமோ தரனே.

– அநந்தரம், இப்படி அறிவு பிறந்த நெஞ்சை உடைய எனக்கு, அவன் ஸர்வப்ரகாரோபகாரகனானான் என்கிறார்.

பற்பநாபன் – (ஜகதுத்பத்தி ஹேதுவான) திருநாபிகமலத்தையுடையனாய், (உத்பந்நஜகத்ரக்ஷணார்த்தமாக) உயர்வற உயரும் – மிகவும் உயராநின்ற, பெரும் – அபரிச்சிந்நையான, திறலோன் – சக்தியை உடையனாய், எற்பரன் – (இம்மேன்மையோடே) என்பக்கலிலே தத்பரனாய், (அதடியாக) என்னை – என்னை, ஆக்கி – உண்டாக்கி, கொண்டு – அங்கீகரித்து, எனக்கே – எனக்கே அஸாதாரணமாம்படி, தன்னை – தன்னை, தந்த – தந்த, கற்பகம் – கல்பகமாய், என் – எனக்கு, அமுதம் – போக்யமாய், கார்முகில்போலும் – (தரம்பாராமல் உபகரிக்கும்) காளமேகஸத்ருஶனாய், (அதுக்கு யோக்யஸ்தலமான) வேங்கடம் – திருவேங்கடம் என்று பேராய், நல் – விலக்ஷணமான, வெற்பன் – திருமலையில் நிலையை உடையனாய், (இந்நிலையிலே) விசும்போர் – நித்யஸூரிகளை, பிரான்  அநுபவிப்பிக்கிற ஆஸ்ரிதபவ்யதையை உடையனான, தாமோதரன் – தாமோதரன், எந்தை – என்னை அடிமை கொண்டான்.

கல்பகத்திற்காட்டில் இவனுக்கு வாசி – அர்த்தியை உண்டாக்குகையும், அவனைத் தானே ஸ்வீகரிக்கையும், அவன் அபேக்ஷித்ததைக் கொடுக்கையன்றியே தன்னைக்கொடுக்கையும், தானே போ4க்3யமாகையும்.

ஈடு – பதினோராம் பாட்டு.  அத்யந்த விலக்ஷணனாயிருந்துவைத்து, அத்யந்த ஸுலப4னாய் என்னை அடிமைகொண்டவன் என்னையல்லது அறியானானான் என்கிறார்.

(பற்பநாபன்) ஸகல ஜக3து3த்பத்திகாரணமான திருநாபி4கமலத்தை யுடையவன்.  (உயர்வற இத்யாதி3) பேசப்புக்கால் பரிச்சே2தி3த்துப் பேசவொண்ணாதபடியான ஸௌர்யவீர்யாதி3கு3ண ப்ரதை2யையுடையவன்.  திறல் – பராபி44வந ஸாமர்த்2யம். அல்லாத கு3ணங்களுக்கும் உபலக்ஷணம் இது.  காரணத்வப்ரயுக்தமான மேன்மை அது; பராபி44வந ஸாமர்த்2யம் தொடக்கமான கு3ணங்கள் அவை;  இப்படியிருக்கிறவன் – (எற்பரன்) மதே3கசித்தன், (என்னை இத்யாதி3) ஔதா3ர்யத்தில் ப்ரஸித்34மாயிருப்பது கல்பகமிறே; அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது.  (என்னையாக்கிக்கொண்டு) அர்த்தி2களை உண்டாக்கிக் கொடுக்குமதில்லையிறே அதுக்கு.  (எனக்கே) ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமதில்லையிறே அதுக்கு.  (தன்னைத் தந்த) சில ப்ரயோஜநங்களைக் கொடுக்குமதல்லது தன்னைக் கொடுக்குமதில்லையிறே அதுக்கு.  (என்னமுதம்) தான் போ4க்3யமாயிருக்குமதில்லையிறே அதுக்கு; எனக்கு நிரதிசயபோ4க்3யமானவன். (கார்முகில்போலும் வேங்கட நல் வெற்பன்) இந்த ஔதா3ர்யத்துக்கு அடி திருமலையின் ஸம்ப3ந்த4ம்; ஸஹ்யம்பற்றின ஔதா3ர்யமிறே.  கொடுத்தத்தை, நினையாதே கொடுக்கும் மேக4ம்போன்ற ஸ்வபா4வத்தையுடைய திருமலையைத் தனக்கு வாஸஸ்தா2நமாக உடையவன்.  (விசும்போர் பிரான் இத்யாதி3)  நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனாயிருந்து வைத்து, ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம்படி வந்து அவதரித்து, அச்செயலாலே என்னை அடிமை கொண்டவன்.

பன்னிரண்டாம் பாட்டு

தாமோ தரனைத் தனிமுதல்வனை ஞால முண்டவனை*
ஆமோ தரமறிய ஒருவர்க் கென்றே தொழுமவர்கள்*
தாமோ தரனுரு வாகிய சிவற்(ர்க்)கும் திசைமுகற்(ர்க்)கும்*
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே.

– அநந்தரம், தம்மளவில் அவன் பண்ணின உபகாரம் அதிசயிதஜ்ஞாநர்க்கும் அளவிடவொண்ணாது என்கிறார்.

தாமோதரனை – ஆஸ்ரிதபாரதந்த்ர்யத்தையும், தனி முதல்வனை – ஸமஸ்தஜகதேக காரணத்வத்தையும், ஞாலமுண்டவனை – ப்ரளயாபத்ஸகத்வத்தையும் உடையவனை, தரம் – பரிச்சேதித்து, அறிய – அறிய, ஒருவர்க்கு – ஒருவர்க்கும், ஆமோ – போமோ, என்று – என்று, தொழுமவர்கள் – தொழுமவர்களாய், தாமோதரன் – அந்த தாமோதரனுக்கு, உருவாகிய – ப்ரகாரதயா சேஷபூதரான, சிவற்கும் – ருத்ரனுக்கும், திசைமுகற்கும் – ப்ரஹ்மாவுக்கும், (கடுகிலே கடலை மடுத்தாற்போலே) என் – என்பக்கலிலே, ஆழிவண்ணன் – தன் குணார்ணவத்தை வைத்து, எம்மானை – என்னை அடிமைகொண்ட ஸ்வாமியை, தரம் – அளவிட்டு, அறிய ஆமோ – அறியப்போமோ?

ஸாமாந்யமான உபகாரங்களை அறிந்தாலும், என்பக்கல் பண்ணின விசேஷோபகாரம் அறிய அரிது என்று கருத்து.

ஈடு – பன்னிரண்டாம் பாட்டு.  “எற்பரன்” என்கிறபடியே – என்னளவில் அவன் செய்தாற்போலே செய்வார்க்கு அவனைக் காணலாமல்லது, “ஸ்வயத்நத்தாலே அறிவோம்” என்பார்க்கு அறியப்போகாது என்கிறார்.

தாமோதரனைத் தனிமுதல்வனை ஞாலமுண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்க்கு என்றாயிற்று ப்3ரஹ்மாதி3கள் சொல்லுவது.  (தாமோதரனை) அவன் ஆஸ்ரிதபரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப்போமோ? (தனி முதல்வனை) “ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீத்” என்கிறபடியே த்ரிவித4 காரணமும் தானேயாயிருக்கிற இருப்பை அறியப்போமோ? (ஞாலமுண்டவனை) உண்டாக்கி விடுகையன்றிக்கே, ஆபத்ஸக2னாய் நிற்கும் நிலையை அறியப்போமோ? ஆமோ தரமறிய ஒருவர்க்கு? என்னாநிற்பர்கள், தாங்கள் எல்லாமறிந்தார்களாக நினைத்து.  ஆமோ தரமறிய ஒருவர்க்கு என்றே தொழுமவராய், தாமோதரனுருவாகிய ஸர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதே4யரான சிவர்க்(ற்)கும் திசைமுகர்க்(ற்)கும் தரமறிய ஆமோ? அல்லாதாரிற்காட்டில் தாங்கள் அறிந்தார்களாக  அபி4மாநித்திருக்கிறவர்களாலேதான் அறியப்போமோ? ஆரைத்தான்? என்னில் (எம்மானை என்னாழிவண்ணனை) குளப்படியிலே கடலை மடுத்தாற்போலே, தான் கு3ணார்ணவமாயிருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை.  இப்படி அவன் தானே காட்ட, நான் கண்டாற்போலே காண்பார்க்குக் காணலாமித்தனை யல்லது, ஸ்வயத்நத்தால் காண்பார்க்கு அறியப்போமோ?

“எம்மானை என்னாழிவண்ணனை – தாமோதரனைத் தனிமுதல்வனை ஞாலமுண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்க்கென்றே தொழுமவர்களாய், தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும் தரமறிய ஆமோ” என்று அந்வயம்.

பதிமூன்றாம் பாட்டு

*வண்ண மாமணிச் சோதியை அமரர் தலைமகனை*
கண்ணனை நெடுமாலைத் தென்குரு கூர்ச்சட கோபன்*
பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள் இவைபன் னிரண்டும்*
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல்தாள் அணைவிக்குமே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் ப2லமாக பகவத்ப்ராப்தியை அருளிச்செய்கிறார்.

வண்ணம் – நிறத்தையுடைத்தாய், மா – பெருவிலையனான, மணி – நீலமணியினுடைய, சோதியை – ஒளிபோலேயிருக்கிற தேஜஸ்ஸையுடையனாய், (இவ்வழகு) அமரர் – நித்யஸூரிகளுக்கும், தலைமகனை – பரிச்சேதிக்கவொண்ணாத பெரியவனாய், கண்ணனை – ஆஸ்ரிதரைத் தானே அநுபவிக்குமவனாய், நெடுமாலை – (அதுக்கு அடியான) நிரதிசய வ்யாமோஹத்தை உடையனானவனைப்பற்ற, தென் – அழகிய, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகரான, சடகோபன் – ஆழ்வார், பண்ணிய – செய்தவையாய், தமிழ்மாலை – ஸர்வாதிகாரமான த்ராவிடஸந்தர்ப்ப ரூபமான, ஆயிரத்துள் – ஆயிரம் திருவாய்மொழிக்குள்ளும், பண்ணில் – பண்ணிலே வர்த்திப்பதாய், பன்னிரு நாமப்பாட்டு – திருத்வாதசநாமத்தைப்பற்றி வருகிற பாட்டான, இவை பன்னிரண்டும் – இவை பன்னிரண்டும், அண்ணல் – ஸர்வேஸ்வரன், தாள் – திருவடிகளை, அணைவிக்கும் – ப்ராபிப்பிக்கும்.  இது கலித்துறை.

ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழி கற்றவர்களை, இத்திருவாய்மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்துவிடும் என்கிறார்.

(வண்ணம்) அழகிய நிறத்தையுடைத்தாய், பெருவிலையனான ரத்நம் போலேயிருக்கிற விக்3ரஹத்தையுடையவனை.  (வண்ணமாமணிச் சோதியை) வண்ணம் – நிறம்.  (மாமணி) மா – கறுப்பு; கறுத்த மணி போலே – நீலரத்நம் போன்ற வடிவில் தேஜஸ்ஸையுடையவன் என்றுமாம்.  இவ்வழகைக் கொள்ளை கொள்ளும்
போக்தாக்களைச் சொல்லுகிறது – (அமரர் தலைமகனை) ஒருநாடாக அநுப4வியாநின்றாலும், தன் அழகைப் பரிச்சே2திக்கவொண்ணாதிருக்கிறவனை.  (கண்ணனை) அவர்களே அநுப4வித்துப்போகாமே, இங்குள்ளாரும் அநுப4விக்கும்படி க்ருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.  (நெடுமாலை) ஒருவனை விஷயீகரித்தால், அவனளவில் தலைக்கட்டாத வ்யாமோஹத்தை யுடையவனை.

(தென்குருகூர்ச்சடகோபன் பண்ணிய) வேத3ம்போலே பிறப்பிலியன்று; “அபௌருஷேயம்” என்னும் அதிலும் வீறுண்டாயிருக்கிறதாயிற்று வக்த்ரு விசேஷத்தாலே.  இவை பண்ணிலேயாயிற்று நடந்தது.   (பன்னிருநாமப் பாட்டு) வைஷ்ணவத்வ சிஹ்நமான திருநாமங்களை வைத்துப் பாடினவை.  இவை செய்வதென்? என்னில் (அண்ணல் தாள் அணைவிக்கும்) ஸர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்துவிடும்; இத்திருவாய்மொழியோட்டை ஸம்ப3ந்த4ம், தானே கேசவன்தமர் ஆக்கிவிடும்.

முதற்பாட்டில், தம்மோடு ஸம்ப3ந்தி4 ஸம்ப3ந்தி4களும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீக்ருதரானார்கள் என்றார்; இரண்டாம் பாட்டில், அதுக்கு அடி நாராயணனாகையாலே என்றும், அந்நாராயண சப்3தா3ர்த்த2த்தையும் அருளிச் செய்தார்;  மூன்றாம் பாட்டில், இப்படி விஷயீகரிக்கைக்கு ஹேது சொன்னார்; நாலாம் பாட்டில், ஸர்வகாலமும் தன்னையே அநுப4விக்கும்படி பண்ணினான் என்றார்; அஞ்சாம் பாட்டில், இப்படி தம்மை அநுப4விப்பித்ததனாலே அவன் வடிவில் புகரைச் சொன்னார்; ஆறாம் பாட்டில், இப்படி என்னை விஷயீகரிக்கைக்கு அடி நிர்ஹேதுக க்ருபை என்றார்;  ஏழாம் பாட்டில், தன்னையே ஸர்வகாலமும் அநுப4விக்கும்படியான நெஞ்சைத் தந்தான் என்றார்; எட்டாம் பாட்டில், தந்தவளவன்றிக்கே, விரோதி4யான நெஞ்சையும் போக்கினான் என்றார்; ஒன்பதாம் பாட்டில், தன்னுடைய கல்யாண கு3ணங்களையே நான் அநுப4விக்கும்படி என் ஹ்ருத3யத்திலே புகுந்தான் என்றார்; பத்தாம் பாட்டில், அநுப4வவிரோதி4யான இந்த்3ரியங்களையும் தன் வழியாக்கிக் கொண்டான் என்றார்; பதினோராம் பாட்டில், ஏவம்பூ4தனானவன் என்னையல்லதறியானானான் என்றார்; பன்னிரண்டாம் பாட்டில், என்னைப்போலே காண்பார்க்குக் காணலாமதொழிய ஸ்வயத்நத்தால் அறியப்போகாது என்றார்; நிக3மத்தில், ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– கேசவன் தமர்

தே கேஶவாபி4மததாமப4ஜந்த ஹந்த!
யே மாமகா இதி வத3ந்நதி4ஸப்தமம் ஸ: |
தஸ்ய ஸ்வரூபகு3ணசேஷ்டிதவாசிநாம-
பூ4தத்3விஷட்கமுக2ரோ முமுதே3 முநீந்த்3ர: ||         17

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிகேசவன் தமர்

ஸர்வாதி3ஸ் ஸர்வநாத2ஸ் த்ரிபு4வநஜநநீவல்லப4ஸ் ஸ்வாஶ்ரிதார்த்தீ2
விஷ்வக்3வ்யாப்த்யாண்திதீ3ப்தோ விமதநிரஸநஸ் ஸ்வாங்க்4ரிஸத்34க்திதா3யீ |
விஶ்வாப்த்யை வாமநாங்க3ஸ் ஸ்வவிப4வரஸத3ஸ் ஸ்வாந்தநிர்வாஹயோக்3ய:
ஸ்வார்தே2ஹோ ப3ந்த4மோக்தா ஸ்வஜனஹிததயா த்3வாத3ஶாக்2யாபி4ரூசே || 19

திருவாய்மொழி நூற்றந்தாதி

கேசவனா லெந்தமர்கள் கீழ்மே லெழுபிறப்பும்
தேசடைந்தா ரென்று சிறந்துரைத்த-வீசுபுகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல் லாமுய்கைக்(கு)
ஆறென்று நெஞ்சே யணை. 17

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

******

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.