02-05 12000/36000 Padi

ஐந்தாம் திருவாய்மொழி
அந்தாமத்தன்பு – ப்ரவேசம்

*******

– அஞ்சாம் திருவாய்மொழியில் – இப்படி இவருடைய ஆர்த்தியை க்கண்டு த்வரிதனாய் ஸம்ஸ்லேஷித்த ஸர்வேஸ்வரனுக்கு, ப்ரீதியாலே வந்த ஸௌந்தர்யாதிசயத்தை அருளிச்செய்கிறதாக; ப்ரதமத்திலே ஸங்க்ரஹேண பூஷணாவயவாயுதசோபா விசிஷ்ட மான வடிவழகையும், அத்தோடே கூடின விபூத்யுந்மேஷத்தையும், ஸம்ஸ்லேஷகாரிதமான ரக்ஷகத்வோந்மேஷத்தையும், ஸ்திரௌஜ் ஜ்வல்யத்தையும், உபமாநராஹித்யத்தையும், அபர்யந்தபூஷணாதி யோகத்தையும், தர்சநீயசேஷ்டிதத்வத்தையும், ஸம்ஸ்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசாமகோசரதையையும் சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னுமிடத்தையும், சொல்லுகை அரிதென்னுமிடத்தையும் அருளிச்செய்து, தம்முடைய ஸம்ஸ்லேஷ ப்ரீதிகாரித ஸௌந்தர்யபாரம்யத்தை அருளிச்செய் கிறார்.

 

ஈடு – “க3ஜ ஆகர்ஷதே தீரே க்3ராஹ ஆகர்ஷதே ஜலே” என்னுமாபோலேயிறே கீழ் “ஆடியாடியில்” ஆழ்வார்க்குப் பிறந்த வ்யஸநம்.  அதெல்லாம் ஆறும்படியாக, “அதந்த்ரிதசமூபதிப்ரஹிதஹஸ்தம்” என்கிறபடியே பெரிய த்வரையோடே ஆயுதா44ரணங்களை அக்ரமமாக த4ரித்துக்கொண்டு மடுவின் கரையிலே அரைகுலையத் தலைகுலைய வந்து உள்ளே போய்ப்புக்கு,  ஆனையை ஒரு கையாலும் முதலையை ஒருகையாலுமாக அணைத்தெடுத்துக் கொண்டு கரையிலே ஏறி, “க்3ராஹம் சக்ரேண மாத4வ:” என்கிறபடியே – ப்ரஜையின் வாயிலே முலையைக்கொடுத்து க்3ரந்தி2யைச் சிகித்ஸிப்பிக்குமாபோலே, பெரிய பிராட்டியாரும் தானுமாக இரண்டுக்கும் நலிவுவாராமே திருவாழியாலே விடுவித்து, சாத்தியருளின திருப்பரிவட்டத் தலையைச் சுருட்டித்  திருப்பவளத்திலே வைத்து அதினுடைய புண்வாயை வேதுகொண்டு, திருக்கையாலே குளிர ஸ்பர்சித்து நின்றாற்போலே, இவரும் “வலங்கொள் புள்ளுயர்த்தாய்” (244)
என்று கூப்பிட்ட ஆர்த்தநாத3ம் செவிப்பட்டு, “அழகிதாக நாம் ஜக3ந்நிர்வஹணம் பண்ணினோம்! நாம் ஆரானோம்?” என்று பிற்பாட்டுக்கு லஜ்ஜாப4யங்களினாலே விஹ்வலனாய், தன்னுடைய ஸ்வரூபரூபகு3ணங்கள், ஒப்பனை, தி3வ்யாயுத4ங்கள், சேர்ந்தசேர்த்தி, இவை எல்லாவற்றோடும் வந்து ஸம்ஸ்லேஷித்து அத்தாலே ஹ்ருஷ்டனாய், க்ருதக்ருத்யனாயிருக்கிற இருப்பை அநுப4வித்து அவ்வநுப4வஜநித ஹர்ஷப்ரகர்ஷத்தாலே தாம் பெற்றபேற்றைப் பேசி அநுப4விக்கிறார்.

முதல் பாட்டு

*அந்தாமத் தன்புசெய்துஎன் ஆவிசேர் அம்மானுக்கு*
அந்தாம வாழ்முடிசங்கு ஆழிநூல் ஆரமுள*
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்*
செந்தா மரையடிக்கள் செம்பொன் திருவுடம்பே.

– முதற்பாட்டில், பூஷணாதிவிசிஷ்டமான விக்ரஹஸோபையை அநுபவிக்கிறார்.

அந்தாமத்து – பரமபதத்தில், அன்பு – விருப்பத்தை, செய்து – பண்ணி, என் ஆவி – (ஹேயனான) என் நெஞ்சுக்குள்ளே, சேர் – பொருந்தின, அம்மானுக்கு – நிருபாதிக ஸ்வாமியானவனுக்கு, (சேஷித்வஸூசகமான) அம் – அழகிய, தாமம் – மாலையையுடைத்தான, வாள் – உஜ்ஜ்வலமான, முடி – திருவபிஷேகம், சங்கு ஆழி – திவ்யாயுதங்கள், நூல் – திருயஜ்ஞோபவீதம், ஆரம் – திருவாரம், உள – (இவை) ஸ்புரித்துத் தோன்றாநின்றன; கண் – திருக்கண்கள், செந்தாமரைத்தடம் – சிவந்த தாமரைத் தடாகமாயிராநின்றன; செம் – சிவந்த, கனி – பக்வப2லம் போன்ற, வாய் – அதரம், செம் – சிவந்த, கமலம் – தாமரையாயிராநின்றது; அடிக்கள் – திருவடிகள், செம் – சிவந்த, தாமரை – தாமரையாயிராநின்றன; திருவுடம்பு – திருவுடம்பு, செம்பொன் – செம்பொன்னாயிராநின்றது.

இப்பாட்டு – அந்தராதித்யவித்யையிற்சொன்ன ஹிரண்மய விக்ரஹ யோகத்தையும், புண்டரீகாக்ஷத்வாத்யவயவஶோபையையும்,  கிரீடமகுடாத்யாபரணஶோபையையும் த்ருதசங்கசக்ரத்வத்தையும் சொல்லி, இப்படி ஆதித்யமண்டலாந்தர்வர்த்தியானவன், “ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சாஸாவாதித்யே ஸ ஏக:” என்கிறபடியே – அழகிய ஆதித்யமண்டலத்திற்பண்ணும் விருப்பத்தை என் நெஞ்சிலே பண்ணிப்புகுந்து, அந்த வ்யக்த்யைக்யம் இங்கே ஸ்புரிக்கும்படி அத்யுஜ்ஜ்வலனாயிராநின்றான் என்றும் சொல்லும்.

ஈடு – முதற்பாட்டு.  “அடியார்கள் குழாங்களை – உடன்கூடுவதென்றுகொலோ” (23-10) என்று இவர் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தான் என்கிறார்.

(அந்தாமத்தன்பு செய்து) அழகிய தா4மத்திலே பண்ணக்கடவ ஸ்நேஹத்தை என்பக்கலிலே பண்ணி.  தா4மமென்று ஸ்தா2நமாய், ‘மஞ்சா: க்ரோஶந்தி’ போலே, பரமபத3த்திலுள்ளார்பக்கலிலே பண்ணக்கடவ ஸ்நேஹத்தை என்பக்கலிலே பண்ணி. ஒரு விபூ4தியிலுள்ளார்பக்கலிலே பண்ணக்கடவ ஸ்நேஹத்தைக் கிடீர் என் ஒருவன்பக்கலிலும் பண்ணிற்று! தாமே அருளிச் செய்தாரிறே – “முற்றவும் நின்றனன்” (1-2-6)  என்று.  (என்னாவி) அவன் மேல்விழ, தாம் இறாய்த்தமை தோன்றுகிறது.  இவர் பூர்வவ்ருத்தத்தை அநுஸந்தி4த்து இறாயாநின்றார்; அதுவே ஹேதுவாக அவன் மேல்விழாநின்றான்.  கமர் பிளந்தவிடத்திலே நீர் பாய்ச்சுவாரைப்போலே, “உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து” (2-4-7)  என்கிற ஆவியிலே காணும் வந்து சேருகிறது.  (சேர்) விடாயர் மடுவிலே சேருமாபோலே வந்து சேராநின்றான்.

இப்படி மேல்விழுகைக்கு ஹேதுவென்? என்னில் (அம்மானுக்கு) வகுத்த ஸ்வாமியாகையாலே; நித்யவிபூ4தியிலுள்ளாரோபாதி லீலாவிபூ4தியிலுள்ளார்க்கும் வந்து முக2ங்காட்ட வேண்டும் ப்ராப்தியையுடையவனுக்கு.  இவரைப் பெற்றபின்பாயிற்று அவன் ஸர்வேஸ்வரனாயிற்று.  (அந்தாமம் இத்யாதி3) “அடியார்கள் குழாங்களை – உடன் கூடுவதென்றுகொலோ” (23-10)  என்று இவர் ஆசைப்பட்டபடியே, நித்யஸூரிகளோடே வந்து கலந்தான் – என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிக்கும்படி.  ஆனால், அவர்களை “ஆழிநூலாரம்” என்றோ சொல்லுவதென்னில்; சிந்மயராயிருக்கச்செய்தே பாரதந்த்ர்ய ஸித்3தி4க்காகத் தங்களை அமைத்துவைக்கிற இத்தனையிறே.  அங்ஙனன்றிக்கே, எம்பெருமானார் அருளிச்செய்யும்படி – “இவரோடு ஸம்ஸ்லேஷிப்பதற்கு முன்பு அவனோடொக்க இவையும் அநுஜ்ஜ்வலமாய் அஸத்ஸமமாய், இவரோடு கலந்தபின்பு உஜ்ஜ்வலமாய் ஸத்தை பெற்றபடி சொல்லுகிறது” என்று; கல்பகதரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுமிறே.

(அந்தாமவாழ்முடி) அழகிய மாலையானது முடிசூடி வாழத் தொடங்கிற்று.  அன்றியே, “வாண்முடி” என்றாய், “வாள்” என்று – ஒளியாய், நிரவதி4க தேஜோ ரூபமான முடி என்றுமாம்.  தா4மம் – தேஜஸ்ஸாகவுமாம்.  தேஜோரூபமான ஸ்ரீபாஞ்சஜந்யம், தேஜோரூபமான திருவாழி, நூல் – திருயஜ்ஞோபவீதம், ஆரம் – திருவாரம்; இவை நித்யஸூரிகளுக்கு உபலக்ஷணம்.

(உள) நித்யரான இவர்கள் உளராகையாவதென்? என்னில்; “ஸ ஏகாகீ ந ரமேத” என்கிறபடியே, இவரோடு கலப்பதற்கு முன்பு அந்த விபூ4தியும் இல்லையாய்த் தோற்றுகையாலே.  (செந்தாமரைத் தடங்கண்) ஆர்த்தியெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடு கலந்தபின்பாயிற்று திருக்கண்கள் செவ்விபெற்றதும், விகஸிதமாயிற்றதும்.  ஏகரூபமானவற்றுக் கெல்லாம் இதொரு விகாரம் பிறக்கிறதிறே.  “ஸதை4கரூபரூபாய” என்கிறவிடத்தில் – கர்மமடியாக வரும் விகாரமில்லை என்கிற இத்தனையிறே.  (செங்கனிவாய் செங்கமலம்) சாடுஸதங்கள் சொல்லுகிற திருவத4ரமிருக்கிறபடி.  சிவந்து கனிந்த அத4ரமானது, சிவந்த கமலம்போலே இராநின்றது.

(செந்தாமரை அடிக்கள்) நோக்குக்கும் ஸ்மிதத்துக்கும் தோற்று விழும் திருவடிகள்.  திருவடிகளிலே விழுந்து அநுப4விக்கும் திருமேனி – (செம்பொன் திருவுடம்பே) “ருக்மாப4ம்” என்னும்படியாயிற்று இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான்.

இரண்டாம் பாட்டு

திருவுடம்பு வான்சுடர்செந் தாமரைக்கண் கைகமலம்*
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்*
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ*
ஒருவிடமொன் றின்றிஎன் னுள்கலந் தானுக்கே.

– அநந்தரம், இவ்வவயவ சோபையையுடையவன் ப்ரஹ்ம ருத்ராதிகளான விபூதிபூதர்க்கும் பிராட்டியோபாதி திருமேனியிலே இடங்கொடுத்த ஔஜ்ஜ்வல்யத்தை அருளிச்செய்கிறார்.

ஒருவிடமொன்றின்றி – (ஸ்வரூபரூபகுணவிபூதிகள்) ஒன்றும் சோராதபடி, என்னுள் – என்னுள், கலந்தானுக்கு – கலந்த, எந்தை பெருமாற்கு – என் குலநாதனுக்கு, திரு – ஸ்லாக்யமான, உடம்பு – வடிவு, வான் சுடர் – ஆதித்யவர்ணமாயிராநின்றது; கண் கை கமலம் – திருக்கண்ணும் திருக்கையும், செம் – சிவந்த, தாமரை – தாமரைபோலே செவ்விபெற்றது; மார்வம் – திருமார்வு, திருவிடமே – லக்ஷ்மீஸ்தா2நமே ஆயிற்று; கொப்பூழ் – கொப்பூழ், அயன் – ப்ரஹ்மாவுக்கு, இடமே – ஸ்தா2நமே ஆயிற்று; ஒருவிடமும் – நீக்கியுள்ளவிடம், அரனே – ருத்ரனேயாயிராநின்றது; ஓ – இதென்ன ஆஸ்சர்யம்!

ஒருவுதல் – நீங்குதல்.  தன் திருவுள்ளத்திலே அவன் கலந்த பின்பு ரூபௌஜ்ஜ்வல்யமும் அவயவௌஜ்ஜ்வல்யமும் உண்டானவோபாதி, விபூத்யௌஜ்ஜ்வல்யமும் உண்டாயிற்று என்று கருத்து.

ஈடு – இரண்டாம் பாட்டு.  தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, தன் உடம்பைப் பற்றி ப்3ரஹ்மேஸாநாதி3கள் ஸத்தையாம்படியிருக்கிறவன்தான், என் உடம்பைப் பற்றித் தன் ஸத்தையாம்படியிராநின்றான் என்கிறார்.

(திருவுடம்பு வான்சுடர்) அணைத்தபோதை ஸ்பர்ஸஸுக2ங்கொண்டு அருளிச்செய்கிறாரிறே.  ‘ஈஸ்வரனுக்கு விக்3ரஹமில்லை, விபூ4தியில்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்ததமரான இவர் ‘திருவுடம்பு வான்சுடர்’ என்னப் பெறுவதே!; ‘ஈஸ்வரனுக்கு விக்3ரஹமில்லை, கு3ணமில்லை’ என்கிறவர்கள் பண்ணிவைக்கமாட்டாத பாபமில்லை; அவர்களை அநுவர்த்தித்து அது கேட்க இராதபடி பெருமாள் நமக்குப் பண்ணின உபகாரமென்! – என்று அருளிச்செய்வர் ஜீயர்.

மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் துவக்குண்கிற திருமேனியிறே.  “இச்சா2க்3ருஹீதாபி4மதோருதே3ஹ:” என்று தனக்கும் அபி4மதமாயிருப்பதொன்றிறே.  தான் மதித்தார்க்கு “ஏஷ ஸர்வஸ்வபூ4தஸ்து” என்று கொடுப்பதும் திருமேனியையே.

(வான்சுடர்) முதலிலே தேஜோரூபமான திருமேனி மிகவும் ஒளிபெற்றது இவரோட்டைக் கலவியாலே.  புறம்பு ஒளியாய் உள்ளு மண்பற்றியிருக்கை யன்றிக்கே, நெய் திணுங்கினாற்போலே தேஜஸ்தத்த்வமேயாயிருக்கை.  “தேஜஸாம் ராசிமூர்ஜிதம்” என்கிறபடியே.  பஞ்சஸக்திமயமாயிருக்கச்செய்தே, ஷாட்3கு3ண்ய விக்3ரஹன் என்கிறது கு3ணங்களுக்கு ப்ரகாசகமாகை சுட்டியிறே.  (செந்தாமரைக் கண்) கடாக்ஷத்தாலே வவ்வலிட்டுச் சொல்லுகிற வார்த்தை.  (கைகமலம்) “கரேண ம்ருது3நா” என்கிறபடியே அணைத்த கை.  இவர் ஒருகால் சொன்னத்தைப் பலகால் சொல்லுவானென்? என்னில்; முத்துக்கோக்கவல்லவன் முகம்மாறிக் கோத்தவாறே விலைபெறுமாபோலே, இவரும் ஓரோ முக2பே43த் தாலே மாறிமாறி அநுப4விக்கிறார்.

(திருவிடமே மார்வம்) அக்கையாலே அணைப்பிக்கும் பெரிய பிராட்டியார்க்கு இருப்பிடம் திருமார்வு.  (அயனிடமே கொப்பூழ்) சதுர்த3சபு4வந ஸ்ரஷ்டாவான ப்3ரஹ்மா, திருநாபி4கமலத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும்.  (ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனே) ஓரிடம் என்னாதே ஒருவிடம் என்கிறது – ஒருவுதல் நீங்குதலாய், நீங்கின இடம் என்றபடி.  என் நாயனான ஸர்வேஸ்வரனுக்கு நீங்கினவிடமும் ருத்3ரனுக்கு இருப்பிடமாயிருக்கும்.  தாமஸ தே3வதை இருப்பிடமாகையாலே “நீங்கினவிடம்” என்று அநாத3ரோக்தி இருக்கிறபடி.  (ஒருவிடமொன்றின்றி என்னுள் கலந்தானுக்கே) என்னோடே வந்து கலக்கிறவிடத்தில், நீங்குமிடமொன்றுமின்றிக்கே வந்து கலந்தான். (ஓ) “அநந்யபரையான பெரியபிராட்டியோடொக்க,  அந்யபரரான ப்3ரஹ்மருத்3ரர்களுக்கும் திருமேனியிலே இடங்கொடுத்து வைப்பதே!” என்று இந்த சீலகு3ணத்தை
அநுஸந்தி4த்து வித்34ராயிருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே, “அது பரத்வம்” என்று தோற்றி, இது என்ன சீலாதிஶயமோ! என்கிறார்.  “ஒருவிடமொன்றின்றி என்னுள் கலந்தானுக்கு திருவுடம்பு”  – என்று தொடங்கி, “அரனே ஓ” என்று அந்வயம்.

மூன்றாம் பாட்டு

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்*
மின்னும் சுடர்மலைக்குக் கண்பாதம் கைகமலம்*
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள*
தன்னுள் கலவாதது எப்பொருளும் தானி(ல்)லையே.

– அநந்தரம், தன்னுள் இராத வஸ்துவுக்கு ஸத்தையில்லையாமோபாதி, என்னுள் தான் கலவாதபோது தனக்கு ஸத்தையில்லையாக நினைத்து, என்னுள்ளே கலந்து உஜ்ஜ்வலனானான் என்கிறார்.

என்னுள் – என்னுள்ளே, கலந்தவன் – கலந்தவனாய், மின்னும் – (அத்தாலே) விளங்கின, சுடர் – சுடரையுடைய, மலைக்கு – மலைபோன்றவனுக்கு, செங்கனிவாய் செங்கமலம் கண்பாதம் கைகமலம் – (முன்பு சொன்ன) அவயவஸோபையும் யதாபூர்வம் அத்யுஜ்ஜ்வலமாய் இராநின்றது; மன்னும் – ஸ்திரமாய், முழு – பூர்ணமான, ஏழுலகும் – ஸகலலோகங்களும், வயிற்றின் – அவன் வயிற்றிலேயாய், உள – ஸத்தைபெறாநின்றன; தன்னுள் – தனக்குள்ளே, கலவாதது – ஸம்பந்தியாதிருப்பது, எப்பொருளுந்தான் – ஏதேனும் ஒரு பொருளும், இல்லை – இல்லை.

ஸர்வவஸ்துவுக்கும் தத்வ்யதிரேகத்தில் ஸத்தாஹாநி ஸ்வரூப ப்ரயுக்தை; “ஈஸ்வரனுக்கு இவருடைய வ்யதிரேகத்தில் ஸத்தை இல்லை” என்று நினைக்கிறவிடம் சீலக்ருதம் என்று கருத்து.

ஈடு – மூன்றாம் பாட்டு.  ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தன்னைப் பற்றி உளவாம்படியிருக்கிற ஸர்வேஸ்வரன், தான் என்னைப்பற்றி உளனாய், என்னோடே வந்து கலந்தான் என்கிறார்.

(என்னுள் கலந்தவன்) “அக3ஸ்த்யப்4ராதா” என்னுமாபோலே நிரூபகமிருக்கிறபடி.  “நாராயணன்” “வாஸுதே3வன்” என்னுமாபோலே “என்னுள் கலந்தவன்” என்றுகாணும் அவனுக்குத் திருநாமம்! (செங்கனிவாய் செங்கமலம்) சிவந்து கனிந்த வாய் செங்கமலம்போலே இராநின்றது.

(மின்னும் சுடர்மலைக்கு) ‘வாட்டமில் புகழ் வாமனன்’ (24-11) கலந்தபின்பு வளர்ந்தபடியும், புகர்பெற்றபடியும்; தரையிலே கால் பாவி த4ரித்தபடியும், திண்மையை உடையனானபடியும் பற்ற (மலை) என்கிறார்.  (கண்பாதம் கைகமலம்) முகமறிந்து கோத்தவாறே முத்து விலைபெறுமாபோலே,  இவரும் தி3வ்யாவயவங்களைச் சேர்த்து அநுப4விக்கிறார்.  (மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள) ப்ரவாஹரூபத்தாலே நித்யமான ஸகல லோகங்களும் தன் ஸங்கல்பத்தைப்பற்றிக் கிடக்கின்றன.

(தன்னுள் இத்யாதி3) தன் திருவுள்ளத்தை அபாஸ்ரயமாகவுடைத்தன்றிக்கே யிருக்கிற வஸ்து யாதொன்று, அது நாஸ்திசப்33த்துக்கு அர்த்த2மாகிறது.  அப்3ரஹ்மாத்மகமாயிருப்பதொரு பதா3ர்த்த2ந்தான் இல்லை, “ந தத3ஸ்தி விநா யத் ஸ்யாத்” என்றானிறே.  (தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இல்லையே) அவை இவனைப் பற்றாதபோது ஸத்தையின்றிக்கேயிருக்கிறது ஸ்வரூபத்தாலே; இவன் இவரைக் கலவாதபோது ஸத்தையின்றிக்கேயிருக்கிறது ப்ரணயித்வ கு3ணத்தாலே.

நான்காம் பாட்டு

எப்பொருளும் தானாய் மரதகக் குன்றமொக்கும்* அப்பொழுதைத் தாமரைப்பூக் கண்பாதம் கைகமலம்*
எப்பொழுதும் நாள்திங்கள் ஆண்டுஊழி யூழிதொறும்*
அப்பொழுதைக் கப்பொழுதுஎன்னாரா வமுதமே.

– அநந்தரம், நிரதிசயபோக்யபூதனானவன் என்னுள்ளே புகுந்தபின்பு ஸ்திரஸ்வபாவனானான் என்கிறார்.

எப்பொழுதும் – எல்லா க்ஷணம், எந்நாள் – எல்லா நாள், எத்திங்கள் – எல்லா மாஸம், எவ்வாண்டு – எல்லா ஆண்டு, எவ்வூழியூழிதொறும் – எல்லாவகைப்பட்ட ஊழிதோறும், அப்பொழுதைக்கு அப்பொழுது – அவ்வோ காலங்களிலே, என் – என்னுள்ளே கலந்து, ஆரா – அத்ருப்திகரமான, அமுதம் – அம்ருதமானவன், (அத்தால் வந்த தன்னுடைய ப்ரீத்யதிசயத்தாலே) எப்பொருளும் – எல்லாப் பொருளும், தானாய் – தானான ஸர்வாத்மபாவமும் நிறம்பெற்று, மரதகக்குன்றம் ஒக்கும் – மரதகமலைபோலே உயர்த்தியும், நிறமும், உரமும் உடையனானான்; அப்பொழுதை – அப்போதலர்ந்த, தாமரைப்பூ – தாமரைபோலே, கண் – கண்ணும், அப்பொழுதைக்கமலம் – அப்போதைக் கமலம்போலே, பாதம் – பாதமும், கை – கையும் புதுமை பெற்றன.

ஈடு – நாலாம் பாட்டு.  நீர் ஒருகால் சொன்னத்தை ஒன்பதின்கால் சொல்லி இங்ஙனே கிடந்து படுகிறதென்? என்ன, “நான் அது தவிருகிறேன்; நீங்கள் இவ் விஷயம் ஒருகாலிருந்தபடியே எப்போதுமிருக்கும்படி பண்ணவல்லிகோளோ?” என்கிறார்.

(எப்பொருளும் தானாய்) ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் “தான்” என்கிற சொல்லுக்குள்ளே ப்ரகாரமாம்படி தான் ப்ரகாரியாய்.  ஸ்வாதீ4நமல்லாததொரு பதா3ர்த்த2த்தைப் பெற்றுத்தான் இப்பாடுபடுகிறானோ? (மரதகக் குன்றம் ஒக்கும்) கீழ் – ஜக3தா3காரனாய் நிற்கும் நிலை சொல்லிற்று; இங்கு – அஸாதா4ரண விக்3ரஹந்தன்னையே சொல்லுகிறது.  கீழ் ‘மின்னும் சுடர்’ (2-5-3) என்று – தம்மோட்டைக் கலவியால் வந்த புகரைச் சொல்லிற்று; அதுக்கு ஆஸ்ரயமான அஸாதா4ரண விக்3ரஹத்தைச் சொல்லுகிறது இங்கு.  (அப்பொழுதை)  “கீழ் – தாமரையை ஒப்பாகச் சொன்னவிடம் தப்பச்சொன்னோம்” என்று அழித்து ப்ரதிஜ்ஞை பண்ணுகிறார்.  கேவலம் தாமரையை ஒப்பாகச் சொல்லில், செவ்வியழிந்த ஸமயத்திலும் ஒப்பாகத் தொடங்குமே; அப்போது அலர்ந்த – செவ்வியையுடைத்தான தாமரை.  (கண்பாதம்) கண் – ப3ந்த4த்தை விளைக்கும் கண். பாதம் – ப3ந்த4மறிந்தால் அநுப4விக்க இழியும் துறை (கைகமலம்) தம்மோட்டை ஸ்பர்சத்தாலே செவ்விபெற்றபடி.  இவையெல்லாம் அப்போது அலர்ந்த கமலம்போலேயிருக்கும்.

(எப்பொழுதும் இத்யாதி3) கலாகாஷ்டா2தி3களாலும் பே4தி3க்கவொண்ணாத அத்யல்பகாலம் அநுப4விப்பது, ஒருநாள் அநுப4விப்பது, ஒரு மாஸம் அநுப4விப்பது, ஓராண்டு அநுப4விப்பது, கல்பந்தோறும் கல்பந்தோறும் அநுப4விப்பது, இப்படி காலமெல்லாம் அநுப4வியாநின்றாலும், கீழ்ச்சொன்ன அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமே – பூர்வக்ஷணத்தில் அநுப4வம் போலல்லவாயிற்று உத்தரக்ஷணத்தில் அநுப4வமிருப்பது.  தா4ராவாஹிக விஜ்ஞாநத்தில் காலோபஷ்டம்பா4திக3ளாலே வருவதொரு பே43முண்டிறே ஜ்ஞாநத்துக்கு; இங்கு விஷயந்தானே பே4தி3யாநின்றதாயிற்று.

ஐந்தாம் பாட்டு

ஆரா வமுதமாய் அல்லாவி யுள்கலந்த*
காரார் கருமுகில்போல் என்னம்மான் கண்ணனுக்கு*
நேராவாய் செம்பவளம் கண்பாதம் கைகமலம்*
பேரார நீள்முடிநாண் பின்னும் இழைபலவே.

– அநந்தரம், தம்முடைய திருவுள்ளத்திலே கலந்தவனுடைய அவயவசோபைக்கு உபமையில்லை என்கிறார்.

ஆராவமுதமாய் – நிரதிசயபோக்யபூதனாய், அல் – ஒன்றல்லாத, ஆவியுள் – என் நெஞ்சுக்குள்ளே, கலந்த – கலந்து, (அத்தாலே) கார் – கார்காலத்திலே, ஆர் – பூர்ணமான, கருமுகில்போல் – காளமேகம்போலேயிருக்கிற, என் அம்மான் – என் நாதனான, கண்ணனுக்கு – க்ருஷ்ணனுக்கு, செம் – சிவந்த, பவளம் – பவளம், வாய் – அதரத்தை, நேராது – ஒவ்வாது; கமலம் – கமலங்கள், கண் பாதம் கை – கண் பாதம் கைகளை, நேரா – ஒவ்வா; (அதுக்குமேலே) பேர் – பெரிய, ஆரம் – ஆரமும், நீள் – உயர்ந்த, முடி – முடியும், நாண் – நாணும் முதல், பின்னும் – மற்றுமுண்டான, இழை – ஆபரணங்களும், பல – அஸங்க்யாதங்கள்.

ஈடு – அஞ்சாம் பாட்டு.  இத்தனைபோதும் தாமரையை சிக்ஷித்து உபமாநமாகச் சொல்லிப் போந்தார்; விஷயத்திலே அவகா3ஹித்தவாறே நேர்கொடு நேரே உபமாநமாய் நின்றதில்லை; அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே சொல்லுகிறார்.

(ஆராவமுதமாய்) எப்போதும் பு4ஜியாநின்றாலும் மேன்மேலென த்ருஷ்ணையை விளைக்கும் அம்ருதம்போலே நிரதிசயபோ4க்3யனாய். (அல் ஆவியுள் கலந்த) இப்படி போ4க்3யம் குறைவற்றால், போ4க்தாக்களும் அதுக்கு அநுரூபமாகப் பெற்றதோ? – (அல்லாவி) ஒரு வஸ்துவாக எண்ணவொண்ணாத என்னுடைய ஆவியோடேகிடீர் வந்து கலந்தது! தன்னையும்அறிந்திலன், என்னையும் அறிந்திலன்.  (அல் ஆவி) அசித்திற்காட்டில் தம்மைக் குறைய நினைத்தபடி.  அசித்துக்கு இழவில்லையே; தன் ஸ்வரூபத்திலே கிடந்ததே; சேதநனாயிருந்துவைத்து ஜ்ஞாநப2லமில்லாமையாலே அசித்திற்காட்டில் தம்மைக் குறைய நினைத்திருக்கிறார்.  (உள் கலந்த) “பெருமக்களுள்ளவரான” (3-7-5)  நித்யஸூரிகளளவில் கலக்குமாபோலே தான் கலந்தானோ? என்னை ஆராவமுதாக நினைத்து, என்னளவாகத் தன்னை நினைத்துக்கிடீர் கலந்தது! (உள்கலந்த) “ஏகதத்த்வம்” என்னலாம்படி கலந்தானாயிற்று.

அவன் இப்படி கலந்தமை நீர் என்கொண்டு அறிந்தது? என்னில்; வடிவிலே தொடைகொண்டேன் என்கிறார்.  (காரார் கருமுகில்போல்) என்னோட்டைக் கலவி பெறாப்பேறு என்னுமிடம் தன் வடிவிலே தோற்ற இராநின்றான்.  கார்காலத்தில் ஆர்ந்த கருமுகில்போல் என்னுதல்; காரென்று – கறுப்பாய், கருமை மிக்க முகில் என்னுதல்.  இவ்வடிவையுடையவன்கிடீர் என்னோடே வந்து கலந்தான்! என்கிறார்.  (என் அம்மான் கண்ணனுக்கு) அவ்வடிவழகாலே என்னை எழுதிக்கொண்ட க்ருஷ்ணனுக்கு.  (நேரா வாய் செம்பவளம்) பவளமாகில் சிவந்தன்றோ இருப்பது? என்னில்; ப்ரவாளத்தை ஸ்ப2டிகஸ்தா2நத்திலேயாக்கி அவ்வருகே சிவந்த பவளத்தைக் கற்பித்தால் அப்படி சிவந்த பவளமாயிற்று ஜாதியாகத் திருப்பவளத்துக்கு ஒப்பாகாதது.

(கண்பாதம் கைகமலம் நேரா) குளிர நோக்கின கண், நோக்குக்குத் தோற்றுவிழும் திருவடிகள், திருவடிகளிலே விழுந்தாரை எடுத்தணைக்கும் கை, இவற்றுக்குத் தாமரை ஜாதியாக ஒப்பாகா.  (பேர் ஆரம்) “பெரிய வரை மார்பில் பேராரம்” (மூன்றாம் திருவந்தாதி – 55) என்கிறபடியே, திருக்கழுத்துக்கு இருமடியிட்டுச் சாத்தவேண்டும் படியான ஆரம்.  (நீள்முடி) ஆதி4ராஜ்யஸூசகமான திருவபி4ஷேகம்.  (நாண்) விடுநாண்.  (பின்னும் இழை பலவே) அநுப4வித்துப் போமித்தனைபோக்கி, என்னால் சொல்லித் தலைக்கட்டப்போமோ?

ஆறாம் பாட்டு

பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே*
பலபலவே சோதி வடிவுபண்பு எண்ணில்*
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்*
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ.

– அநந்தரம், பூஷணாத்யபரிச்சேதத்தை அநுபவிக்கிறார்.

பாம்பணை மேலாற்கு – திருவநந்தாழ்வானைப் படுக்கையாகக் கொண்டாற்போலே என்னோடு கலந்தவனுக்கு, பண்பு எண்ணில் – ஸ்வபாவநிரூபணம் பண்ணில், ஆபரணம் – ஆபரணம், பல பல – கிரீடாதிரூபபேதத்தாலும், ஓரொன்றில் ஸம்ஸ்தாநபாஹுள்யத்தாலும் பலபலவாயிருக்கும்; பேரும் – நாமமும், பலபல – வ்யக்திபேதத்தாலும் நிர்வசநமுகத்தாலும் ஓரொன்று அநேகநாமாத்மகமாகையாலே பலபலவாயிருக்கும்; சோதி – ஜ்யோதீரூபமான, வடிவு – அப்ராக்ருத விக்ரஹமும், பல பல – பரவ்யூஹாதிபேதத்தாலும், அவாந்தரபேதத்தாலும் பலபலவாயிருக்கும்; கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் – இந்த்ரியத்வாரா தத்தத் விஷயஸம்யோகத்தால் வருகிற ஸுகமும், பல பல – வ்யக்திபேதத்தாலும் அவாந்தரபேதத்தாலும் பலபலவாயிருக்கும்; ஞானமும் – தத்த்வாரா பதார்த்தங்களில் பிறக்கிற ஜ்ஞாநமும், பலபல – அப்படியே பலபலவாயிருக்கும்.

இந்த்ரியத்வாரா வருகிற ஸுகஜ்ஞாநங்களில் ஈஸ்வரனுக்கு யதாக்ரமத்தாலும் வ்யுத்க்ரமத்தாலும் வரும் அநியமத்தாலே பன்மை சொல்லவுமாம்.

ஈடு – ஆறாம் பாட்டு.  தம்முடனே கலந்து ஆற்றானாய், அநேக சரீர பரிக்3ரஹம் பண்ணி என்னை அநுப4வியாநின்றான்கிடீர்! என்கிறார்.

(பலபலவே ஆபரணம்) ஜாதிபே43மும் வ்யக்திபே43மும் இருக்கிறபடி.  திருக்கைக்குச் சாத்துமவை என்றால் அநேகம்; அவைதன்னிலே “இடைச்சரி, கடைச்சரி” என்று அநேகமாயிருக்குமிறே.  (பேரும் பலபலவே) அநுப4வ ஸமயத்தில் நாமக்3ரஹணத்துக்கு இழிந்தவிடமெல்லாம் துறை; சீலப்பேர், வீரப்பேர் அநேகமாயிருக்குமிறே.

(பலபலவே சோதிவடிவு) திருநாமத்3வாரா காணும் வடிவுகளும் பல.  அப்ராக்ருத தி3வ்யஸம்ஸ்தா2நத்தை இதர ஸஜாதீயமாக்குகையாலே, எல்லாம் சோதி வடிவாயே இருக்குமிறே.  ஸௌப4ரியைப்போலே அநேகம் வடிவுகொண்டாயிற்று இவரை அநுப4விக்கிறது.  முக்தன் தன்னை அநுப4விக்கும்போது படுமாபோலே, தான் என்னை அநுப4விக்கப் பல வடிவு கொள்ளாநின்றான்.  (பண்பெண்ணில்) ப்ரகாரங்களை அநுஸந்தி4க்கில்.  (பலபல இத்யாதி3) கண்டு, உண்டு, கேட்டு, உற்று, மோந்து உண்டாகக்கடவதான ஐந்த்3ரியஸுக2ங்களும் பலபல.  த்3ருஷ்டி ப்ரியமாயிருக்குமவையும், பு4ஜிக்குமவையும், ஸ்ரவணேந்த்3ரிய விஷயமாயிருக்கு மவையும், ஸ்பர்ச விஷயமாயிருக்குமவையும், க்4ராணேந்த்3ரிய விஷயமாயிருக்கு மவையுமாய் அநேகமிறே.  (பலபலவே ஞானமும்) விஷயங்களைச் சொல்லுதல், அவற்றை அறிகைக்கு ஸாமக்3ரியான ஜ்ஞாநங்களைச் சொல்லுதல்.  ஜ்ஞாநமும் பலவுண்டோ? என்னில்: விஷயங்கள்தோறும் பே4தி3க்குமிறே ஜ்ஞாநமும்.  ஸ்வவ்யதிரிக்தங்களை யெல்லாம் விஷயமாகவுடையனாய், அவற்றையெல்லாம் அறியவும் வல்லனாய், அவற்றையெல்லாம் அநுப4வித்தால் வரும் ஏற்றத்தையுமுடையனாயிருக்குமிறே.

(பாம்பணைமேலாற்கேயோ) இவையெல்லாம் ஒரு விஷயத்திலேயுண்டாய் அநுப4விக்கும் என்னுமிடத்துக்கு உதா3ஹரணம் காட்டுகிறார்.  ஸ்பர்ஸேந்த்3ரியத்துக்கு உண்டு; க்4ராணேந்த்3ரியத்துக்கு உண்டு; கண்ணுக்கு இனிதாயிருக்கும்.  இவை தொடக்கமானவையெல்லாம் உண்டிறே.  பாம்பணை மேலாற்கு – பண்பெண்ணில் – பல பலவேயாபரணம் இத்யாதி3 தொடங்கி, ஓ! என்று அந்வயம்.

ஏழாம் பாட்டு

பாம்பணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்*
காம்பணைதோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதுவும்*
தேம்பணைய சோலை மராமரமேழ் எய்ததுவும்*
பூம்பிணைய தண்துழாய்ப் பொன்முடியம் போரேறே.

– அநந்தரம், தம்மோட்டை ஸம்ஸ்லேஷத்தாலே அவனுடைய திவ்யசேஷ்டிதங்கள் தமக்கு ப்ரகாசித்து நிறம்பெற்றபடியை அநுபவிக்கிறார்.

பாற்கடலுள் – பாற்கடலிலே, பாம்பணைமேல் – பாம்பணையின்மேலே, பள்ளி – கண்வளர்ந்தருளுகையை, அமர்ந்ததுவும் – பொருந்தினதும், காம்பணை – மூங்கில் போன்ற, தோள் – தோளையுடைய, பின்னைக்காய் – நப்பின்னைப் பிராட்டிக்காக, ஏறேழு – ஏறேழையும், உடன் – ஏகோத்யோகத்திலே, செற்றதுவும் – கொன்றதுவும், தேம் – தேனையும், பணைய – பணையையுமுடைய, சோலை – (அத்தால்) சோலையாகத் தழைத்த, மராமரம் – மராமரம், ஏழு – ஏழு, எய்ததுவும் – எய்ததுவும், பூ – அழகிய, பிணைய – தொடையையுடைத்தாய், தண் – குளிர்ந்த, துழாய் – திருத்துழாயாலே அலங்க்ருதமாய், பொன் – அத்யுஜ்ஜ்வலமான, முடி – முடியையுடைத்தாய், அம் – தர்சநீயமாய், போர் – விரோதிநிரஸநோத்யோகசீலமாய் செருக்கையுடைத்தான, ஏறு – ருஷபம்போன்ற வஸ்து.

“ஏறு” என்ற சொற்கு ஈடாக – அமர்ந்ததுவும், செற்றதுவும், எய்ததுவும் என்று அஃறிணை.

ஈடு – ஏழாம் பாட்டு.  அயர்வறும் அமரர்களதிபதி(1-1-1)யாயிருந்துவைத்து, க்ஷீராப்3தி4யிலே கண்வளர்ந்தருளி, ராமக்ருஷ்ணாத்3யவதாரங்களைப் பண்ணிற்றெல்லாம் எனக்காகக் கிடீர்! என்கிறார்.

(பாம்பணை) ஆர்த்தரக்ஷணத்துக்காக, திருப்பாற்கடலிலே நீர் உறுத்தாமைக்கு, ஸைத்ய ஸௌக3ந்த்4ய ஸௌகுமார்யங்களையுடையனான திருவனந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளிற்றும்.  (காம்பு இத்யாதி3) சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில்போலேயிருந்துள்ள தோளழகையுடைய நப்பின்னைப் பிராட்டியோட்டை ஸம்ஸ்லேஷத்துக்கு ப்ரதிப3ந்த4கங்களான ருஷப4ங்கள் ஏழையும் ஒரு காலே ஊட்டியாக நெரித்துப் பொகட்டதும்.  (தேம் பணைய) மஹாராஜர், “நீர் வாலியைக் கொல்லமாட்டீர்” என்ன, அவரை விஸ்வஸிப்பிக்கைக்காக – தேனையுடைத்தாய், பணைத்து, அடிகண்டு இலக்குக் குறிக்கவொண்ணாதபடியாயிருக்கிற மராமரங்கள் ஏழையும் எய்ததும்.

(பூ இத்யாதி3) பூவையுடைத்தாய்த் தொடையுண்ட என்னுதல்; நல்ல தொடையையுடைத்தான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய், ஆதி4ராஜ்ய ஸூசகமான திருவபி4ஷேகத்தையுடையனாய், இவ்வழகுதன்னை நித்யஸூரிகளை அநுப4விப்பித்து அத்தால் வந்த மேன்மைதோற்ற, அழகியதாய் யுத்3தோ4ந்முக2மான  ருஷப4ம்போலே மேனாணித்திருக்கிற இருப்பு. பொன்முடியம் போரேறு – பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும் – பாம்பணைமேல் என்று தனித்தனியே க்ரியையாகக்கடவது.  இவையெல்லாம் எனக்காகக்கிடீர்! என்றுமாம்.

எட்டாம் பாட்டு

பொன்முடியம் போரேற்றை எம்மானை நால்தடந்தோள்*
தன்முடிவொன் றில்லாத தண்டுழாய் மாலையனை*
என்முடிவு காணாதே யென்னுள் கலந்தானை*
சொல்முடிவு காணேன்நான் சொல்லுவதுஎன் சொல்லீரே.

– அநந்தரம், ஸம்ஸ்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசாமகோசரதையை அருளிச்செய்கிறார்.

பொன் – உஜ்ஜ்வலமான, முடி – அபிஷேகத்தையுடைய, அம் போரேற்றை – பெரும் செருக்கனாய், எம்மானை – (அந்த ஸ்வாதந்த்ர்யச் செருக்கைக் காட்டி) என்னை அடிமைகொண்ட நாதனாய், நால் – நாலுவகைப்பட்ட, தடம் – பெரிய, தோள் – திருத்தோளையுடையனாய், தன் – தன் பெருமைக்கு, முடிவொன்றில்லாத – முடிவில்லாதவனாய், (இந்த மேன்மைக்கும் போக்யதைக்கும் ஸூசகமான) தண் – குளிர்ந்த, துழாய்மாலையனை – திருத்துழாய் மாலையையுடையனாய், என் முடிவு காணாதே – (தன் உத்கர்ஷத்துக்கு எல்லைகாணாதவோபாதி) என் நிகர்ஷத்தின் முடிவுகாணாதே, என்னுள் – என் நெஞ்சுக்குள்ளே, கலந்தானை – கலந்தவனை, நான் – நான், (ஸ்வஸம்வேத்யமாக அறியுமதொழிய) சொல் – பாசுரமிட்டுச் சொல்லும், முடிவு – ப்ரகாரம், காணேன் – காண்கிறிலேன்; சொல்லுவது – (நீங்கள் அநுபவித்த விஷயம் வ்ருத்தகீர்த்தநம் பண்ணுமோபாதி) இங்குச் சொல்லுவது, என் – ஏது? சொல்லீர் – (உண்டாகில்) சொல்லுங்கோள் – என்று லௌகிகரைக்குறித்து உரைக்கிறார்.

லோகவ்யாவ்ருத்தனுடைய ஸம்ஸ்லேஷ ஸாரஸ்யம் வாசாமகோசரம் என்று கருத்து.  விஸ்லேஷ தஶையில் என் முடிவு காணாதே என்றுமாம்.

ஈடு – எட்டாம் பாட்டு.  அயர்வறும் அமரர்களதிபதி(1-1-1)யாயிருந்துவைத்து என் தண்மையைப் பாராதே என்னோடே வந்து கலந்த இம்மஹாகு3ணத்தை என்னால் பேசி முடியாது என்கிறார்.

(பொன்முடியும் போரேற்றை) உப4யவிபூ4திக்கும் கவித்த முடியையுடையனாய், அத்தால் வந்த சேஷித்வவுறைப்புத் தோற்ற இருக்கிறவனை.  (எம்மானை) தன் சேஷித்வத்தில் எல்லையைக்காட்டி, என்னை ஶேஷத்வத்தின் எல்லையிலே நிறுத்தினவனை.  (நாற்றடந்தோள் இத்யாதி3) நாலாய்ப் பணைத்திருந்துள்ள தோள்களையுடையனாய், தன்னைப் பேசப்புக்கால் வேத3ங்களும் எல்லை காணமாட்டாதே “யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று மீளும்படியிருப்பானாயிருக்கிற தண்துழாய்மாலையனை.  எல்லைகாண வொண்ணாத வஸ்துவுக்கு லக்ஷணம்போலே திருத்துழாய்மாலை.  (என்முடிவு இத்யாதி3) அவன்பக்கல் நன்மைக்கு எல்லைகாணவொண்ணாதாப்போலேயாயிற்று இவர்பக்கல் தீமைக்கு எல்லைகாணவொண்ணாதாயிருக்கிறபடி.

(என்முடிவு காணாதே) என் அளவுபாராதே “அவிஜ்ஞாதா” என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் செம்பிளித்து வந்து கலந்தான் என்னுதல்; அன்றிக்கே, ‘ஆடியாடி’ (24)யில் விஶ்லேஷித்த வ்யஸநத்தாலே நான் முடியப்புக, அதுகாணமாட்டாதே என்னோடே கலந்தான் என்னுதல்.  (சொல்முடிவு காணேன் நான்) என்னோடு வந்து கலந்த ஒரு கு3ணத்தையும் சொல்லில், ஆநந்த3 கு3ணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேத3ம் பட்டது படுமித்தனை; அவன் என்னை அநுப4விப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரஸம் அநுப4வித்துவிடுமத்தனை யல்லது, பாசுரமிட்டுச் சொல்லிமுடியாது என்றுமாம்.  (சொல்லுவதென் சொல்லீரே) இதர விஷயங்களை அநுப4வித்து, அவற்றுக்குப் பாசுரமிட்டுச் சொன்னிகளாயிருக்கிற நீங்கள்தான் சொல்லவல்லிகளோ?

ஒன்பதாம் பாட்டு

சொல்லீர்என் னம்மானை என்னாவி ஆவிதனை*
எல்லையில் சீர்என் கருமாணிக் கச்சுடரை*
நல்ல அமுதம் பெறற்கரிய வீடுமாய்*
அல்லி மலர்விரையொத்து ஆணல்லன் பெண்ணல்லனே.

– அநந்தரம், நிரதிசயபோக்யபூதனானவனைச் சொல்லவல்லிகோளாகில் சொல்லுங்கோள் என்கிறார்.

என் – எனக்கு, அம்மானை – ஸ்வாமியாய், என் ஆவி – என் ஆத்மாவுக்கு, ஆவிதனை – ஆத்மாவாய், எல்லையில் – எல்லையில்லாத, சீர் – (ஸௌகுமார்யாதி) குணங்களையுடைத்தான, என் கருமாணிக்கச் சுடரை – நீலரத்ந ஜ்யோதிஸ்ஸு போலேயிருக்கிற வடிவை என்னை அநுபவிப்பித்தவனை, சொல்லீர் – (எல்லாரும் சேர்ந்து சொல்லலாமாகில்) சொல்லுங்கோள்; (சொல்லவொண்ணாமைக்கு அடியென்? என்னில்) நல்ல – (லௌகிகாம்ருதத்தில்) விலக்ஷணமான, அமுதம் – நித்யபோக்யாம்ருதமுமாய், (பரமயோகிகளுக்கும்) பெறற்கு – பெறுதற்கு, அரிய – அரிதான, வீடுமாய் – மோக்ஷஸ்தாந நிர்வாஹகனுமாய், அல்லி மலர் – தாமரைப் பூவில், விரையொத்து – பரிமளம்போலே நிஷ்க்ருஷ்ட போக்யரூபனாய், பெண்ணல்லன் – (பும்ஸ்த்வத்தாலே) ஸ்த்ரீகளில் வ்யாவ்ருத்தனானவோபாதி, ஆணல்லன் – புருஷோத்தமத்வத்தாலே ஸமஸ்த புருஷ வ்யாவ்ருத்தனாயிருக்கும்.

ஆதலால் சொல்ல அரிது என்று கருத்து.

ஈடு – ஒன்பதாம் பாட்டு.  “பாசுரமில்லை” என்னா கைவாங்கமாட்டாரே.  ஸம்ஸாரிகளைப் பார்த்து, ‘என் நாயனான ஸர்வேஸ்வரனை எல்லாரும் கூடியாகிலும் சொல்லவல்லிகோளோ?’ என்கிறார்.

(சொல்லீர் என் அம்மானை) க்ஷுத்3ரவிஷயங்களை அநுப4வித்து அவற்றுக்குப் பாசுரமிட்டுச் சொல்லியிருக்கிற நீங்களாகிலும் சொல்லவல்லிகோளோ? (என் அம்மானை) தன் கு3ணசேஷ்டிதங்களாலே என்னை முறையிலே நிறுத்தினவனை.  (என்னாவி ஆவிதனை) என் ஆத்மாவுக்கு அந்தராத்மாவாயுள்ளவனை.  (எல்லை இத்யாதி3) தி3வ்யாத்ம ஸ்வரூபகு3ணங்களுக்கு எல்லை காணிலும் விக்3ரஹகு3ணங்களுக்கு  எல்லையின்றிக்கேயிருக்கிறபடி.  அளவிறந்த கல்யாணகு3ணங்களையும், நீலமணிபோலே குளிர்ந்த வடிவழகையும் என்னை அநுப4விப்பித்தவனை.

(நல்ல அமுதம்) நித்யமுமாய் போ4க்3யமுமான அம்ருதம்.  ப்ராக்ருத போ4க்3யங்களில் தலையான அம்ருதம்.  (பெறற்கரிய வீடுமாய்) ஒருவராலும் ஸ்வயத்நத்தால் ப்ராபிக்கவொண்ணாத மோக்ஷபுருஷார்த்த2முமாய்.  (அல்லிமலர் விரையொத்து)  போ4க்3யதைக்குத் தாமரைப்பூவில் பரிமளத்தோடு ஒத்து.  (ஆணல்லன் பெண்ணல்லனே) இதரபுருஷஸஜாதீயனல்லன்.  பெண்ணல்லன் என்றவோபாதி, ஆணல்லன் என்று – அதுதன்னையும் கழிக்கிறது.  இத்தால் – உபமாநரஹிதன் என்றபடி.

பத்தாம் பாட்டு

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்*
காணலு மாகான் உளனல்லன் இல்லையல்லன்*
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்*
கோணை பெரிதுடைத்துஎம் பெம்மானைக் கூறுதலே.

– அநந்தரம், அவன் ஸ்வபாவத்தைச் சொல்லுகை மிகவும் அரிது என்கிறார்.

ஆண் – ஆணும், அல்லன் – அன்றியே, பெண் – பெண்ணும், அல்லன் – அன்றியே, அல்லா – ப்ரயோஜநவத்தல்லாத, அலியும் – அலியும், அல்லன் – அன்றியே, காணலும் – (அவற்றைக் காணும் ப்ரமாணத்தால்) காணவும், ஆகான் – ஒண்ணாதே, உளனல்லன் – (ப்ரதிகூலர்க்கு) உளனன்றியே, இல்லையல்லன் – (அநுகூலர்க்கு) இலனன்றியே, பேணும் – (ஆஶ்ரிதராய்) ஆதரித்த, கால் – காலத்தில், பேணும் – (அவர்கள்) ஆதரித்த, உருவாகும் – வடிவையுடையனாய், அல்லனுமாய் – (ஆதரமில்லாதவளவில் அப்படி) அல்லனாயிருக்கும், எம்பெம்மானை – என் ஸ்வாமியை, கூறுதல் – (இப்ரகாரம் அவன் காட்டக்கண்ட நான்) கூறுமிடத்து, பெரிது – மிகவும், கோணை உடைத்து – மிறுக்குடைத்து.

கோணை – மிறுக்கு. ஸர்வவிஸஜாதீயனாகையாலே, “ஏவம்விதன்” என்று சொல்ல அரிது என்று கருத்து.

ஈடு – பத்தாம் பாட்டு.  என்னோடு கலந்த எம்பெருமான்படி பேசப் பெரிது மிறுக்குடைத்து என்கிறார்.

(ஆணல்லன் இத்யாதி3) நாட்டில் காண்கிற ஆண்களின்படியல்லன்;  அப்படியே ஸ்த்ரீகளின்படியுமல்லன்; உபயோக3யோக்3யமல்லாத நபும்ஸக பதா3ர்த்த2த்தின்படியுமல்லன். “நைநம் வாசா ஸ்த்ரியம் ப்3ருவந்நைநம ஸ்த்ரீபுமாந் ப்3ருவந் | புமாம்ஸம் ந ப்3ருவந்நைநம் வத3ந் வத3தி கஸ்சந || அ இதி ப்3ரஹ்ம ||”  ஆரணத்தில் இரண்டாமோத்து. (“ஸ வை ந தே3வாஸுர மர்த்யதிர்யங்ந ஸ்த்ரீ நஷண்டோ3 ந புமாந்ந ஜந்து: | நாயம் கு3ண: கர்ம ந ஸந்ந சாஸந்நிஷேத3ஸேஷோ ஜயதாத3ஸேஷ: ||” என்று) இப்படி ப4ட்டர் அருளிச்செய்தவாறே, ஒரு தமிழன், “ஜீயா! நாட்டில் காண்கிற மூன்றின் படியுமல்லனாகில், சொல்லிற்றாகிற வஸ்து ஸூந்யமோ பின்னை” என்று கேட்க, ப4ட்டரும், “பிள்ளை இயலறிவுக்குப் போந்திருந்ததில்லையீ! ‘ஆணல்லன் பெண்ணல்லள் அல்லாவலியுமல்லது’ என்றதில்லையே; ‘அல்லன், அல்லன்’ என்கையாலே – ‘புருஷோத்தமன்’ என்று ஸப்33ந்தானே தோற்றுவிக்கிறதில்லையோ?” என்று அருளிச்செய்தார்.  “ஆணல்லன், பெண்ணல்லன்” என்கிற இத்தால் – ஸஜாதீய விஜாதீய நிஷேத4ம் பண்ணினபடி.

(காணலும் ஆகான்) ஆண், பெண், அலி என்கிற இவற்றைக் காணும் ப்ரமாணங்களால் காணப்படாதான்.  இத்தால் – ஏகப்ரமாண க3ம்யத்வ ஸாம்யமுமில்லை என்கை.  (உளனல்லன்) அநாஸ்ரிதர்க்கு.   (இல்லையல்லன்) ஆஸ்ரிதர்க்கு.  அத்தை உபபாதி3க்கிறது மேல் (பேணுங்கால் பேணும் உருவாகும்) “நீ எங்களுக்குப் புத்ரனாய் வந்து பிறக்கவேணும்” என்று சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறந்து,  “ஸப2லம் தே3வி ஸஞ்ஜாதம் ஜாதோ‍ஹம் யத் தவோத3ராத்” என்று நிற்கும்.  அன்றியே பேணுங்கால் – தன்னை அர்த்தி2க்குங் காட்டில், பேணும் உருவாகும் – தன்னைப் பேணி மறைக்கவேண்டும்படி வந்து அவதரிக்கும் என்றுமாம்.  (அல்லனுமாம்) இப்படி தாழநிற்கச்செய்தே சிசுபாலாதி3களுக்குக் கிட்ட அரிதாம்படியிருக்கும்.  (கோணை பெரிது இத்யாதி3) இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த ஸர்வேஸ்வரன்படிகளைப் பேசவென்றால், சால மிறுக்குடைத்து.

பதினொன்றாம் பாட்டு

*கூறுதலொன் றாராக் குடக்கூத்த அம்மானை*
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்*
கூறினஅந் தாதிஓராயிரத்துள் இப்பத்தும்*
கூறுதல்வல் லாருளரேல் கூடுவர்வை குந்தமே.

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் ப2லமாகப் பரமபதப்ராப்தியை அருளிச்செய்கிறார்.

ஒன்று – ஒரு குணத்தை, கூறுதல் – சொல்லிலும், ஆரா – சொல்லிமுடிய வொண்ணாத, குடக்கூத்த – குடக்கூத்து முதலான சீலாதிகுணங்களையுடைய, அம்மானை – ஸ்வாமியை, கூறுதல் – (உள்ளபடியே) சொல்லுவதாக, மேவி – உத்யோகித்து, குருகூர்ச்சடகோபன் – (அவனாலே லப்தஜ்ஞாந ப்ரேமரான) ஆழ்வார், கூறின – அருளிச்செய்த, அந்தாதி – அந்தாதியாகையாலே அடைவு குலைக்கவொண்ணாத, ஓர் – அத்விதீயமான, ஆயிரத்துள் – ஆயிரத்தில், இப்பத்தும் – இப்பத்தையும், கூறுதல் – சொல்ல, வல்லார் – வல்லார், உளரேல் – உண்டாகில், வைகுந்தம் – பரமபதத்தை, கூடுவர் – கூடுவர், இது கலிவிருத்தம்.

ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை அப்4யஸிக்கவல்லார் உண்டாகில், அவர்கள் பரமபத3த்திலே போய் நித்யாநுப4வம் பண்ணப்பெறுவர் என்கிறார்.

(கூறுதல் இத்யாதி3) தன்படிகளைப் பேசப்புக்கால், ஆநந்த3வல்லியில் சொல்லுகிறபடியே பேசித் தலைக்கட்டவொண்ணாதிருக்கிறவனை.  பேச வொண்ணாதொழிகிறது பரத்வமல்ல; குடக்கூத்தாடின செயலொன்றுமாயிற்று.  (அம்மானை) குடக்கூத்தாலே என்னை அநந்யார்ஹமாக்கினவனை.  “விஷ்ணோர் ஜிஷ்ணோர்வஸுதே3வாத்மஜஸ்ய”.

(கூறுதலே மேவி) “பேச நிலமன்று” என்று வேத3ங்கள் மீண்ட விஷயம் என்று, தாமும் “பேசவொண்ணாது” என்று கைவாங்காதே, அழகிதாகப் பேசக் கடவோமென்று அத்4யவஸித்தார் “நான் சொல்லுவதென்? சொல்லீரே” (2-5-8) என்னா, திரியவும் “சொல்லீர் என்னம்மானை” (2-5-9) என்று தொடங்குமவரிறே.  அத்4யவஸித்தவித்தனையோ, கூறிற்றுமுண்டோ? என்னில்; குருகூர்ச்சடகோபனன்றோ, கூறச்சொல்லவேணுமோ? *மயர்வறமதிநலமருளப்பெற்றவர்க்குப் பேசத்தட்டுண்டோ?

(கூறின அந்தாதி) விஷயத்துக்கு அநுரூபமாகப் பேசித் தலைக்கட்டின அந்தாதி3 ஆயிரத்திலும் இப்பத்தையும் அப்4யஸிக்கவல்லார் உண்டாகில்.  (கூடுவர் வைகுந்தமே) “அடியார்கள் குழாங்களை – உடன்கூடுவது என்றுகொலோ?” (23-10) என்று ஆசைப்பட்டுப் பெறாதே ‘ஆடியாடி’ (24)யாய் வ்யஸநப்படாதே, இப்பாசுர மாத்ரத்தைச் சொல்லவே, நான் ப்ரார்த்தி2த்துப் பெற்ற பேறு பெறுவர்கள்.  பித்ருத4நம்  கிடந்தால் புத்ரன் அழித்து ஜீவிக்குமத்தனையிறே.  ஆழ்வார் பட்ட வ்யஸநம் படவேண்டா;  இது கற்றார்க்கு இவர் பேற்றிலே அந்வயம்.

முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்டபடியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்; இரண்டாம் பாட்டில் “தம்மோடே கலந்தபின்பு அவன் திருமேனியும் தி3வ்யாவயவங்களும் தி3வ்யாயுத4ங்களும் நிறம்பெற்றது” என்றார்;  மூன்றாம் பாட்டில், “தம்மோடே கலந்து தன் ஸத்தைபெறுதல், இல்லையாகில் இல்லையாம்படியாய் வந்து கலந்தான்” என்றார்; நாலாம் பாட்டில், கீழ் இவனுக்கு த்3ருஷ்டாந்தமாகச் சொன்னவை நேர் நில்லாமையாலே, அவற்றை ஸிக்ஷித்துச் சேர்த்து அநுப4வித்தார்; அஞ்சாம் பாட்டில், அதுதானும் உபமாநமாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அநுப4வித்தார்; ஆறாம் பாட்டில், “இப்படி விலக்ஷணனானவன், முக்தன் தன்னை அநுப4விக்குமா போலே தான் என்னை அநுபவித்தான்” என்றார்; ஏழாம் பாட்டில், “தமக்காக ராம க்ருஷ்ணாத்3யவதாரங்களைப் பண்ணினான்” என்றார்; எட்டாம் பாட்டில், “அவனை என்னால் பேசமுடியாது” என்றார்; ஒன்பதாம் பாட்டில், துணைதேடிக் கொண்டு, திரியவும் பேசுகையிலே உபக்ரமித்தார்; பத்தாம் பாட்டில், “ ‘இப்படிகளால் என்னோடே கலந்த இம்மஹாகு3ணமொன்றையும் பேச’ என்றால் சால மிறுக்குடைத்து” என்றார்; நிக3மத்தில், இது கற்றார்க்குப் ப2லஞ்சொல்லித் தலைக்கட்டினார்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்.

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– அந்தாமத்தன்பு

ஆக3ம்ய ஸூரிஸஹிதஸ் ஸமபாக்ருதார்த்தி:
அத்யுஜ்ஜ்வலந்மரதகாசலஸந்நிபா4ங்க3: |
ஈஶ: ப்ரபு2ல்லகமலாக்ஷிகராங்க்4ரிராஸீத்
தத்பஞ்சமே ஸ கத2யந் முநிராநநந்த3 || 15

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிஅந்தாமத்தன்பு

ஸ்வப்ராப்த்யா ஸித்34காந்திம் ஸுக4டிதத3யிதம் விஸ்பு2ரத்துங்க3மூர்த்திம்
ப்ரீத்யுந்மேஷாதிபோ4க்3யம் நவக4நஸரஸம் நைகபூ4ஷாதி3த்3ருஶ்யம் |
ப்ரக்2யாதப்ரீதிலீலம் து3ரபி4லபரஸம் ஸத்3கு3ணாமோத3ஹ்ருத்3யம்
விஶ்வவ்யாவ்ருத்தசித்ரம் வ்ரஜயுவதிக3ணக்2யாதரீத்யாந்வபு4ங்க்த || 17

திருவாய்மொழி நூற்றந்தாதி

அந்தாமத் தன்பா லடியார்க ளோடிறைவன்
வந்தாரத் தான் கலந்த வண்மையினால்-சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்தவன்பை நாடோறும் வை. 15

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

*****

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.