02-10 12000/36000 Padi

பத்தாம் திருவாய்மொழி
கிளரொளி – ப்ரவேசம்

******

– பத்தாம்திருவாய்மொழியில் – கீழ் புருஷார்த்ததயா நிர்ணீதமான அத்யந்த பாரதந்த்ர்யயுக்தமாயிருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்தபடியே காலவிளம்பம் பிறவாதபடி இங்கே கொடுத்தருளுகைக்காகத் தெற்குத் திருமலையிலே எழுந்தருளி நிற்கிறபடியை ப்ரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய்; அழகருடைய ஔஜ்ஜ்வல்யத்தையும், ஆபி4ரூப்யத்தையும், ஔதா3ர்யத்தையும், ரக்ஷகத்வத்தையும், ரக்ஷணோபகரணவத்தையையும், ஆஸ்ரிதவ்யாமோஹத்தையும், ஆபத்ஸகத்வத்தையும், ஆஸ்ரிதாநுகூலதையையும், விரோதி4நிரஸநஶீலதையையும், ஜ்ஞாநப்ரத3த்வத்தையும் அநுஸந்தித்து, “ஏவம்வித4னான ப்ராப்யபூ4தன் தானும் விரும்பும்படியான திருமலையே பரமப்ராப்யம்” என்று நிஷ்கர்ஷித்து, முதலிட்டு ஐந்து பாட்டாலே திருவுள்ளத்தையும், மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து அவன் போ4க்3யதையை உபதே3ஶித்து முடித்தருளுகிறார்.

ஈடு – “கீழ் எம்மாவீட்(2-9)டிலே நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் பெறுகைக்குத் திருமலையை ஆஸ்ரயிக்கிறார்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிக்கும்படி.  எம்பெருமானார், – அங்ஙனல்ல, இவர் பாட்டுத்தோறும் “ஒல்லை” (2-9-1) “ஒல்லை” (2-9-10) என்றும், “காலக்கழிவு செய்யேல்” (2-9-2) என்றும் – த்வரிக்கப்புக்கவாறே, “நமக்கும் அறிவித்து, நாமும் இவர் காரியம் செய்யக்கடவதாக அறுதியிட்டால், ‘சரீரஸமநந்தரம் பேறு தப்பாது’ என்று அறுதியிட்டிருக்கலாயிருக்க,  இவர் இப்படி த்வரிக்கிறது ‘இச்சரீரத்தோடே நாம் அடிமைகொள்ளவேணும்’ என்றுபோலேயிருந்தது;  இனி இவர்க்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான தே3சம் ஏதோ?” என்று ஞாலத்தூடே நடந்துழக்கி(10-7-4)ப் பார்த்துவரச்செய்தே, ‘இவ்விடம் சால ஏகாந்த  ஸ்த2லமாயிருந்தது’ என்று திருமலையிலே ஸந்நிதி4பண்ணியருளி, “நாம் உமக்கு முக2ந்தருகைக்காக வந்துநின்றோம்; நீர் இங்கேவந்து நினைத்த வகைகளெல்லாம் பரிமாறி அநுப4வியும்” என்று தெற்குத் திருமலையிலே நிற்கிற நிலையைக் காட்டிக்கொடுக்க, இவரும் அத்தை அநுஸந்தி4த்து, ப43வான் ப்ராப்யனானால் அவன் வர்த்திக்கும் தே3சமும் ப்ராப்யமாகக் கடவதிறே; அத்தாலே, திருமலையோடு, அத்தோடு சேர்ந்த அயன்மலையோடு, புறமலையோடு, திருப்பதியோடு, போம்வழியோடு, ‘போகக்கடவோம்’ என்று துணியும் துணிவோடு வாசியற ப்ராப்யாந்தர்க்க3தமாய் அநுப4வித்து இனியராகிறார் – என்று.

முதல் பாட்டு

கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம்*
வளரொளி மாயோன் மருவிய கோயில்*
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*
தளர்வில ராகில்(ச்) சார்வது சதிரே.

– முதற்பாட்டில், நிரதிசயௌஜ்ஜ்வல்யவிசிஷ்டனான ஸர்வேஸ்வரன் விரும்பின திருமலையே ப்ராப்யம் என்கிறார்.

கிளர் – கிளர்ந்து வருகிற, ஒளி – ஜ்ஞாநௌஜ்ஜ்வல்யத்துக்கு யோக்யதையுண்டான, இளமை – (யௌவநாரம்ப4ரூபமான) இளமை, கெடுவதன் முன்னம் – (விஷயாந்தரக3தமாய்க்) கெடுவதற்கு முன்னே, வளர் – (ஆஶ்ரிதார்த்தமாக இங்கே எழுந்தருளினபின்பு) வளர்ந்து வருகிற, ஒளி – (சீலஸௌலப்4யாதி3) கு3ணௌஜ்ஜ்வல்யத்தையுடைய, மாயோன் – ஆஸ்சர்யரூபனான ஸர்வேஸ்வரன், மருவிய – பொருந்தி வர்த்திக்கிற, கோயில் – தி3வ்யஸ்தா2நமாய், வளர் – வளராநிற்கச் செய்தே, இளம் – இளமையையுடையத்தான, பொழில் – பொழில்களாலே, சூழ் – சூழப்பட்டு, மாலிருஞ்சோலை – அத்தாலே “மாலிருஞ்சோலை” என்று திருநாமமான திருமலையை, தளர்வு – (ப்ரயோஜநாந்தர ஸம்ப3ந்த4மாகிற) தளர்த்தி, இலராகி – அற்று, சார்வதே – ப்ராபிக்குமதுவே, சதிர் – சதிர்.

“இதொழிய ப்ரயோஜநாந்தரமுண்டு” என்றிருக்கை இளமை என்று கருத்து.  ‘சேதநர் பா3ல்யத்திலே விவேகாத்மாக்களாய்க்கொண்டு அநந்யப்ரயோஜநராய்ப் பற்றும் இது சதிரிறே’ என்று தம் திருவுள்ளத்தைக் குறித்து உரைத்தாராயிருக்கிறது.

ஈடு – முதற்பாட்டு.  திருமலையை ப்ராபிக்கையே இவ்வாத்மாவுக்கு நிரதிஶய புருஷார்த்த2ம் என்கிறார்.

(கிளரொளி இளமை இத்யாதி3) “திருமலையை ஆஸ்ரயியுங்கோள்” என்றார்; “செய்கிறோம்” என்று ஆறியிருந்தார்கள்; “கெடுவிகாள்!  எத்தை விஸ்வஸித்துத்தான் நீங்கள் ஆறியிருக்கிறது? “வயோ‍ஸ்யா ஹ்யதிவர்த்ததே” அன்றோ; வாள்களாகி நாள்கள் செல்ல(திருச்சந்தவிருத்தம் – 112)வன்றோ நீங்கள் ஆறியிருக்கிறது; கழிந்த பருவத்தை உங்களாலேதான் மீட்கப்போமோ? (கிளரொளி இளமை) என்றது – மாநஸஸ்ரத்3தை4யாய், பிறந்த இஸ்ரத்3தை4  இதில்நின்றும் மாறி, விஷயாந்தரத்திலே பிறப்பதற்கு முன்னே.  ஒருவனுக்கு ஒரு விஷயத்திலே ஒருகால் ஸ்ரத்3தை4 பிறக்கும்; அவன்தனக்கே அவ்விஷயத்திலே அஸ்ரத்3தை4பிறக்கக்கடவதாயிருக்கும்; ஆக, பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே என்னுதல்; அங்ஙனன்றிக்கே, “ப்ராப்யம்” என்னும் ப்ரதிபத்தி பிறந்தாலும், “கரணபாடவமில்லையே” என்று கைவாங்கவேண்டாதபடி கரணபாடவமுள்ளபோதே என்னுதல்; “பா3ல்யே க்ரீட3நகாஸக்தா:” என்னா, “தஸ்மாத்3 பா3ல்யே விவேகாத்மா யதேத” என்னா நின்றதிறே.  (வளரொளி) ஸ்வத: வ்ருத்3தி4க்ஷயாதி3கள் இல்லாதவனுக்கு விகாரத்தைப் பிறப்பிக்கவற்றாயிற்று தே3சஸ்வபா4வம். நாட்செல்ல நாட்செல்ல வளராநின்றுள்ள புகரையுடையனாய், ஆஸ்சர்யசக்தியுக்தனான ஸர்வேஸ்வரன், அவதாரங்கள்போலே தீர்த்த2ம் ப்ரஸாதி3யாதே நித்யவாஸம் பண்ணுகிற தே3ஶம்.  (வளர் இளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை) அடிமைசெய்கிறவர்கள் கிளரொளி இளமையை யுடைவர்கள்; அடிமைகொள்ளுகிறவன் வளரொளி மாயோன்; அடிமை செய்கிற தே3சம் வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை; ஆக, இப்படி அடிமை செய்யுமவனும், அடிமைகொள்ளுமவனும், அடிமைசெய்யும் தே3ஶமும் ஒத்தபருவமாயாயிற்றிருப்பது.  வளரவளர இளகிப்பதித்துச் செல்லாநிற்குமதாயிற்று சோலை.

(தளர்விலராகில்) “யந்முஹூர்த்தம் க்ஷணம் வாபி” இத்யாதி3; ஸர்வப்ரகாரத்தாலும் வரும் அநர்த்த2மாகிறது – திருமலையைக் கிட்டாமை என்றிருக்கிறார்.  “திருமலை ப்ராப்யம்” என்னும் பு3த்3தி4 பிறந்து, லபி4க்கைக்கு விரோ4தியாய் வரும் அநர்த்த2பா4கி3களன்றியே ஒழியவேண்டில்.  (சார்வது சதிரே) திருமலையைக் கிட்டுமிதுவே இவ்வாத்மாவுக்குச் சதிர்; அல்லாதவையெல்லாம் இளிம்பு.  “கண்ணுக்கிலக்கான விஷயங்களை விட்டு வேறே சிலவற்றைப் பெறுகைக்கு யத்நியாநின்றிகோளீ ” என்று நீங்கள் நினைத்திருக்குமதுவே இளிம்பு; இதுவே சதிர்.

இரண்டாம் பாட்டு

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது*
அதிர்குரல் சங்கத்து அழகர்தம் கோயில்*
மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலை*
பதியது ஏத்தி எழுவது பயனே.

– அநந்தரம், அழகருடைய திருமலையோடு சேர்ந்த திருப்பதியை ஏத்துமதே ப்ரயோஜநம் என்கிறார்.

சதிர் – (அர்த்தா2நுரூபமாகவும், ஸ்வதோ3ஷத்துக்கு ஈடாகவும் ஒதுக்கி உடம்புகொடுக்கும்) சதிரையுடையராய், இளம் – இளமையாலே மதி மயக்கி, செல்லாமை தோன்ற இருக்கும், மடவார் – ஸ்த்ரீகளுடைய, தாழ்ச்சியை – தாழ்ச்சி தோற்ற இருக்கும் உக்திசேஷ்டிதாதிகளை, மதியாதே – ப்ரீதிபண்ணாதே, அதிர் குரல் – (ஸம்ஸ்லேஷஜநிதப்ரீதியாலே) முழங்குகிற, சங்கத்து – ஸ்ரீபாஞ்சஜந்யத்தையுடையராகையாலே, நிரதிசய ஸௌந்த3ர்யத்தையுடைய, அழகர் – அழகருக்கு, தம் கோயில் – அஸாதா4ரண ஸ்தா2நமாய், மதி – சந்த்ரனானவன், தவழ் – தவழும் படியோங்கின, குடுமி – சிகரஸிகைகளையுடைத்தான, மாலிருஞ்சோலை – திருமலையில், பதி – திருப்பதியாகிற, அது – ப்ரஸித்34ஸ்த2லத்தை, ஏத்தி – ஸ்தோத்ரம் பண்ணி, எழுவதே – உச்சரிதராகையே, பயன் – ப்ரயோஜநம்.

இதுவும் நெஞ்சுநோக்கி உரைத்தல்.

ஈடு – இரண்டாம் பாட்டு. திருமலையோடு சேர்ந்த ஸ்ரிய:பதியைக் கிட்டுகையே பரமப்ரயோஜநம் என்கிறார்; அன்றிக்கே, திருமலைதன்னையே சொல்லுகிறதாதல்; (அன்றிக்கே, திருப்பதியையாதல்).

(சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது) சதிரிள மடவார் விஷயமாக நீங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றாக பு3த்3தி4பண்ணாதே என்னுதல்; சதிரிளமடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை மதியாதே என்னுதல்; மதித்தால் ப்ரயோஜநமில்லாமையேயன்று; மேல் நரகம்; இங்கு ஸிஷ்டக3ர்ஹை. “ப4க்தாநாம்” என்று பரார்த்த2மாய், நிரதிசயபோ4க்3யமாயிருக்கும் விஷயமன்றே.  சதிரையுடையராயிருப்பர்கள் – பிறரை அகப்படுத்திக்கொள்ளுகைக்கு ஈடான விரகையுடையராயிருப்பர்கள்.  செத்துக்காட்டவுங்கூட வல்லராயிருக்கை.  சதிரையும் பருவத்தின் இளமையையும் காட்டியாயிற்று அகப்படுத்துவது.  கீழே “கிளரொளி இளமை” என்றதே; அப்பருவம் கண்டவிடத்தே இழுத்துக்கொள்ளும் முதலைகளாயிற்று விஷயங்கள்.

(அதிர்குரல் இத்யாதி3) திருக்கையின் ஸ்பர்சத்தாலே எப்போதும் ஒக்க முழங்காநின்றுள்ள ஸ்ரீபாஞ்சஜந்யத்தைத் திருக்கையிலேயுடையராய், அச்சேர்த்தி யழகாலே அதுதன்னையே தமக்குத் திருநாமமாகவுடையவர்.   “ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பாங்கான நிலம்” என்று திருவுள்ளத்தாலே விரும்பி, “என்னது” என்று ஆத3ரித்து வர்த்திக்கிற கோயில்.  (மதிதவழ் குடுமி) சூற்பெண்டுகள் சுரமேறுமாபோலே, சந்த்3ரன் தவழ்ந்து ஏறாநின்றுள்ள சிக2ரத்தையுடைய திருமலை.  மாலிருஞ்சோலையாகிற – பதியென்னுதல், மாலிருஞ்சோலையில் பதியென்று திருப்பதியைச் சொல்லுதல்.  (பதியது ஏத்தி எழுவது பயனே) ஸ்வரூபாநுரூபமான வ்ருத்திவிசேஷத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்குமிதுவே இவ்வாத்மாவுக்கு ப்ரயோஜநம்; அல்லாதவை நிஷ்ப்ரயோஜநம்.  ப்ரயோஜநம் என்றது – ப்ராப்யம் என்றபடி.

மூன்றாம் பாட்டு

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே!*
புயல்மழை வண்ணர் புரிந்துறை கோயில்*
மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ் சோலை*
அயல்மலை யடைவது அதுக ருமமே.

– அநந்தரம், பரமோதா3ரன் வர்த்திக்கிற திருமலையோடு சேர்ந்த அயல்மலையை ப்ராபிக்கையே கார்யம் என்கிறார்.

நெஞ்சே  – நெஞ்சே! பயனல்ல – ப்ரயோஜநஸூந்யமானவற்றை, செய்து – செய்து, பயன் – ப்ரயோஜநம், இல்லை – இல்லை; புயல் – தூறலும் துளியுமான, மழை – காளமேகம்போலே, வண்ணர் – ஜலஸ்த2லவிபா43மற வர்ஷிக்கும் ஸ்வபா4வத்தையுடையவர், புரிந்து – அபி4முக2ராய்க்கொண்டு, உறை – நித்யவாஸம்பண்ணுகிற, கோயில் – வாஸஸ்தா2நமாய், மயல்மிகு – கண்டார் நெஞ்சு கலங்கும்படி த3ர்சநீயமான, பொழில் – பொழில், சூழ் – சூழ்ந்த, மாலிருஞ்சோலை – திருமலையினுடைய, அயல் – அருகின, மலை – மலையை, அடைவது அதுவே – அடைகையாகிற அதுவே, கருமம் – கர்த்தவ்யம் – ஸ்வரூபப்ராப்தம்.

ஈடு – மூன்றாம் பாட்டு.  உத்3தே3ஸ்யத்துக்கு இதெல்லாம் வேணுமோ? திருமலையோடு சேர்ந்த அயன்மலையையடைய அமையும் என்கிறார்.

(பயனல்ல இத்யாதி3) பயனல்லவாக நினைத்திருக்கிறது – பரமபத3த்தில் இருப்பையும், அல்லாத அவதாரங்களையும்.  அன்றியே (பயன் இத்யாதி3) ப்ரயோஜந ஸூந்யமானவற்றைச் செய்து ஒரு ப்ரயோஜமில்லை.  செயலும் ப2லமும் இரண்டும் ப்ரயோஜநமாயிற்று தாம் பற்றின விஷயம்; “ஸுஸுக2ம் கர்த்தும்” என்னக்கடவதிறே; ஸாத4நத3சையிலும் து3:க்க2ரூபமாய், ப2ல வேளையிலும் து3:க்க2மிஶ்ரமாயிருக்கிற ஸ்வர்க்க3தத்ஸாத4நங்களையாயிற்று இவர் நினைத்திருக்கிறது.  (நெஞ்சே) விஷயாந்தரத்துக்கும், இவ்விஷயத்துக்குமுண்டான நெடுவாசி உனக்கு அநுபூ4தமிறே.  (நெஞ்சே) ப3ந்த4மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாயிறே நெஞ்சுதான் இருப்பது;  இவ்வளவிலும் இவ்விஷயத்தை அகலுகைக்குக் காரியம் பார்த்தாய் நீயிறே.

(புயல்மழை வண்ணர் புரிந்துறை கோயில்) பயனான விஷயந்தானிருக்கிறபடி.  வர்ஷுகவலாஹகம் போலேயிருக்கிற வடிவழகையுடையவர், அவ்வடிவழகை ஸர்வஸ்வதா3நம்பண்ணி வர்த்திக்கிற கோயில்.  வர்ஷுகமான மேக4ம்போலே ஜலஸ்த2லவிபா43மின்றிக்கே ஸர்வஸ்வதா3நம்பண்ணி வர்த்திக்கிற தே3சம் என்றுமாம்.  இத்தால் – தமக்கு ப்ராப்யப்ராபகங்கள் ஒருவனேயாயிருக்கிறபடி.  (மயல்மிகு பொழில்சூழ்) சோலைச்செறிவாலே புக்கார்க்கு இருண்டிருக்கும் என்னுதல்; அன்றியே போ4க்3யதாப்ரகர்ஷத்தாலே நெஞ்சை இருளப்பண்ணும் என்னுதல்.  (மாலிருஞ்சோலை அயன்மலை) திருமலையோட்டை ஸம்ப3ந்த4த்தையே தனக்குப் பேராக உடைத்தானமலை.  “அக3ஸ்த்யப்4ராதா” என்னுமாபோலே.  (அடைவதது கருமமே) அதொன்றுமே கர்த்தவ்யம்; அல்லாதவையடைய அகர்த்தவ்யம் என்கிறார்.

நான்காம் பாட்டு

கருமவன் பாசம் கழித்துழன் றுய்யவே*
பெருமலை யெடுத்தான் பீடுறை கோயில்*
வருமழை தவழும் மாலிருஞ் சோலை*
திருமலை யதுவே அடைவது திறமே.

– அநந்தரம், ரக்ஷகனானவன் வர்த்திக்கிற பெரிய பொழில் சூழ்ந்த திருமலையை ஆஸ்ரயிக்குமதுவே செய்யக்கடவபடி என்கிறார்.

கருமம் – (ப3ந்த4கமான) கர்மங்களாகிற, வன் – கழற்ற அரிய, பாசம் – பாசங்களை, கழித்து – கழற்றி, உழன்று – (அடிமைசெய்து) வ்யாபரித்து, உய்யவே – (சேதநர்) உஜ்ஜீவிக்கைக்காகவே, (ஆர்த்தமான கோ3ப கோ3பீஜநங்களுடைய ஆர்த்தி தீரும்படி) பெரு – பெரிய, மலை – மலையை, எடுத்தான் – எடுத்து ரக்ஷித்தவன், பீடு – (தன்னுடைய) ரக்ஷணைஸ்வர்யம், உறை – விளங்கும்படி நித்யவாஸம் பண்ணுகிற, கோயில் – ஸ்தா2நமாய், வரு – (வர்ஷோந்முக2மாய்) வருகிற, மழை – மேகங்கள், தவழும் – தவழும்படி, மால் – மிகவும் உயர்ந்து, இரும் – பரந்த, சோலை – சோலையையுடையத்தான, திருமலை அதுவே – திருமலை தன்னையே, அடைவதே – அடைவதே, திறம் – செய்யும்படி, மால் – உயர்த்தி, இருமை – பரப்பு.  மாலிருஞ்சோலைத் திருமலை என்கையாலே – திருமலையில் சோலையினுடைய ப்ராப்யதை தோற்றுகிறது.

ஈடு – நாலாம் பாட்டு.  கர்மப3ந்த4த்தைப் போக்கி ஆஸ்ரிதரானவர்கள் அடிமை செய்து வாழுகைக்கு ஈடாம்படி ஸர்வேஸ்வரன் வர்த்திக்கிற திருமலையை ஆஸ்ரயிக்கையே ஸத்3ருசம் என்கிறார்.

(கரும வன் பாசம் கழித்துழன்று உய்யவே) “இது நம்மாற்செய்து தலைக் கட்டப்போமோ திருமலையை ஆஸ்ரயிக்குமதொழிய?” என்று இங்ஙனே ஆழ்வான் ஓருருவிலே பணித்தானாம்; அங்ஙனும் நிர்வஹிக்கக்கடவது.  அன்றிக்கே, “கருமவன் பாசம் கழிகைக்காகவும், உழன்று உய்கைக்காகவும்” என்று இங்ஙனே எம்பெருமானார் அருளிச்செய்யும்படி.  முராஸுரன் அநேகமாயிரம் பாசங்களாலே தன்னை மறைய வரிந்து கொண்டிருந்தாற்போலேயிறே அவித்3யாதி3களாலே தன்னை மறைய வரிந்துகொண்டிருக்கும்படி.  கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிக்கைக்காவும், தன்பக்கல் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காவும்.  “பரித்ராணாய ஸாதூ4நாம்” என்கிறபடியே – விரோதி4களைப்போக்கி உஜ்ஜீவிப்பிக்கையிறே அவதாரங்களுக்கு ப்ரயோஜநம்.  (பெருமலை எடுத்தான்) அரியன செய்தும் ஆஸ்ரிதரக்ஷணம் பண்ணுமவன்;  “கோ3கோ3பீஜந ஸங்குலம் – அதீவார்த்தம்” என்று – இடையரும் இடைச்சிகளும் நோவுபட, ஒரு மலையை எடுத்து நோக்கினவன், அந்த ஐஸ்வர்யத்தோடே வந்து நித்யவாஸம் பண்ணுகிற கோயில்.  (பெருமலை) பஞ்சலக்ஷங்குடியும் நிழலிலே ஒதுங்கலாம்படியிறே மலையின் பரப்பு.

பீடு – பெருமை; அதாவது ஐஸ்வர்யம்; ஆபத்ஸக2த்வாதி3கள்; ஒரு மலையை ஆதே4யமாகக்கொண்டு ரக்ஷித்தவன் ஒரு மலையை ஆதா4ரமாகக் கொண்டு ரக்ஷிக்க நிற்கிறவிடம்.  பசுக்களுக்கும் இடையருக்கும் ரக்ஷகனாகையால் வந்த ஐஸ்வர்யம் தோற்ற வர்த்திக்கிற கோயில்.  (வருமழை தவழும் மாலிருஞ்சோலை) “ஸமுத்3வஹந்தஸ்ஸலிலாதிபா4ரம் ப3லாகிநோ வாரித4ரா நத3ந்த: | மஹத்ஸு ஸ்ருங்கே3ஷு மஹீத4ராணாம் விஸ்ரம்ய விஸ்ரம்ய புந: ப்ரயாந்தி” என்கிறபடியே, சூல்பெண்டுகள் சுரமேறுமாபோலேயாயிற்று மேக4ங்கள் ஸஞ்சரிப்பது.  ஊர்க்கு இரண்டாயிற்று மழை; நின்றவிடத்திலே நின்று வர்ஷிப்பதொரு மேக4மும், போவதுவருவதாயிருப்பதொரு மேக4மும்; “புயல்மழை வண்ணர்” (3) என்கிறதிறே.  மாலிருஞ்சோலையாகிற திருமலையை ஆஸ்ரயிக்குமிதுவே திறம் – செய்திறம்; செய்யவடுப்பது இதுவே.  மாலிருஞ்சோலையையுடைத்தான திருமலையை என்னுதல்.  ‘மால்’ என்று – பெருமை.  ‘இருமை’ என்றும் – பெருமை.  ஒன்று – ஓக்கத்திலே; ஒன்று பரப்பிலே.

ஐந்தாம் பாட்டு

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது*
அறமுய லாழிப் படையவன் கோயில்*
மறுவில்வண் சுனைசூழ் மாலிருஞ் சோலை*
புறமலை சாரப் போவது கிறியே.

– அநந்தரம், ரக்ஷணோத்யுக்தமான திருவாழியையுடையவன் வர்த்திக்கிற திருமலையின் புறமலையைக் கிட்டப்போவது நல்விரகு என்கிறார்.

திறமுடை – நாநாவித4மான, வலத்தால் – ப3லங்களாலே, (அக்ருத்யகரணாதிகளான) தீ – கொடிய, வினை – பாபங்களை, பெருக்காது – வர்த்திப்பியாதே, அறம் – (ஆஸ்ரித ரக்ஷணமாகிற) தர்மத்திலே, முயல் – உத்யோகத்தையுடைய, ஆழி – திருவாழியை, படையவன் – ஆயுதமாகவுடையவனுடைய, கோயில் – வாஸஸ்தா2நமாய், மறு – (ஶைவலகர்த்த3மாதி3களாகிற) களங்கம், இல் – அற்று, வண் – கிட்டினார்க்கு ஸர்வப்ரகாரோபஜீவ்யமான, சுனை – சுனைகளாலே, சூழ் – சூழப்பட்ட, மாலிருஞ்சோலை – திருமலையின், புறமலை – புறமலையை, சார – கிட்ட, போவது – போகிறவது, கிறி – நல்விரகு கிட்டுமதிலும், கிட்ட ப்ரவர்த்திக்குமது நல்விரகு என்று கருத்து.  இப்பாட்டளவும் – உபதேசத்தை நெஞ்சோடே கூட்டி, மேல் – பிறரைக்குறித்து உபதேசிக்கிறார்.

ஈடு – அஞ்சாம் பாட்டு. திருமலைக்குப் புறம்பான மலையை ப்ராபிக்கையே நல்விரகு என்கிறார்.

(திறமுடை வலத்தால்) திறம் – ஸமூஹம்.  வலம் – ப3லம்.  திரண்ட ப3லத்தாலே ப்ரயோஜநாந்தர ப்ராவண்யமாகிற மஹாபாபத்தைக் கூடுபூரியாதே.  (அறமுயல் இத்யாதி3) “லக்ஷ்மணஸ்ய ச தீ4மத:” என்கிறபடியே – ஸர்வேஸ்வரனிலும் ஆஸ்ரிதரக்ஷணத்திலே முயலாநின்றுள்ள திருவாழியை ஆயுத4மாகவுடையவன் வந்து வர்த்திக்கிற தே3சம்.  ஸர்வேஸ்வரன் கடைக் கணித்துவிட, அரைக்ஷணத்திலே வாராணஸியை த3ஹித்துவந்து நின்றானிறே.

(மறுவில் இத்யாதி3) “ரமணீயம் ப்ரஸந்நாம்பு3 ஸந்மநுஷ்யமநோ யதா2” என்கிறபடியே, மறுவற்று ஆழ்வார் திருவுள்ளம்போலே தெளிவையுடைத்தாய், த3ர்சநீயமாய், ஊற்றுமாறாத சுனைகளாலே சூழப்பட்ட மாலிருஞ்சோலைப் புறமலை சாரப்போமிதுவே ப43வத்ப்ரத்யாஸத்தி வேண்டியிருப்பார்க்கு வருத்தமற லபி4க்கலாம் நல்விரகு.

ஆறாம் பாட்டு

கிறியென நினைமின் கீழ்மைசெய் யாதே*
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்*
மறியொடு பிணைசேர் மாலிருஞ் சோலை*
நெறிபட அதுவே நினைவது நலமே.

– அநந்தரம், ஆஸ்ரிதவ்யாமுக்34ன் வர்த்திக்கிற திருமலைக்குப்போகிற வழியையுட்பட்ட நினைக்குமதுவே நன்மை என்கிறார்.

கீழ்மை – (விஷயாந்தரங்களை நோக்கிப் போக நினைக்கும்) நீசதையை, செய்யாதே – பண்ணாதே, (இத்தை) கிறி – நல்விரகு, என – என்று, நினைமின் – நினையுங்கோள்; (ஏனென்னில்) உறி – உறியிலே, அமர் – பொருந்தச் சேமித்து வைத்த, வெண்ணெய் – வெண்ணெயை, உண்டவன் – அமுதுசெய்த க்ருஷ்ணனுடைய, கோயில் – கோயிலாய், மறியொடு – (தன்னுடைய) கன்றுகளோடேகூட, பிணை – மான்பேடைகள், சேர் – சேருகிற, மாலிருஞ்சோலை – திருமலையினுடைய, நெறி – வழியிலே, பட – உட்படவேணுமென்கிற, அதுவே – அத்தையே, நினைவது – நினைக்கை, நலம் – புருஷார்த்தம்.

மறி – குட்டி.  பிணை – மான்பேடை.

ஈடு – ஆறாம் பாட்டு.  திருமலைக்குப்போம் மார்க்க3சிந்தை பண்ணுமிதுவே இவ்வாத்மாவுக்கு நல்லது என்கிறார்.

(கிறியென நினைமின்) இது நல்விரகு என்று பு3த்3தி4பண்ணுங்கோள். (கீழ்மை செய்யாதே) நான் சொல்லுகிற இதொழிய, தண்ணிதானவற்றைச் செய்ய நில்லாதே; அதாவது – ப்ரயோஜநாந்தர ப்ராவண்யம்.  (உறி இத்யாதி3) உறிகளிலே சேமித்துக் கள்ளக்கயிறுருவிவைத்த வெண்ணெயை “தெய்வங்கொண்டதோ” என்னலாம்படி களவுகண்டு அமுதுசெய்தவன் வந்து வர்த்திக்கிற தே3சம்.  இத்தால் – அநுகூலஸ்பர்சமுள்ள த்3ரவ்யத்தாலல்லது த4ரிக்கமாட்டாதவன் என்கை.  (மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை) குட்டியும் தாயும் பிரியாதே வர்த்திக்கிற தே3சம்.  ரக்ஷ்யரக்ஷகங்கள் தம்மில் பிரியாதே வர்த்திக்கும் தே3சம் என்கை. (நெறி இத்யாதி3) நெஞ்சிலே அடிபடும்படியாகத் திருமலையை அநுஸந்திக்குமதுவே நன்மையாவது என்னுதல்; அன்றிக்கே, நெறிபடுகைக்கு நினைக்குமதுவே – மார்க்க3 சிந்தைபண்ணுமதுவே இவ்வாத்மாவுக்கு நன்மையாவது என்னுதல்.  (அதுவே நினைவதுநலம்) அத்தை நினைக்குமதுவே விலக்ஷணம்; அதொழிந்தவை எல்லாம் பொல்லாதது என்கை.

ஏழாம் பாட்டு

நலமென நினைமின் நரகழுந் தாதே*
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்*
மலமறு மதிசேர் மாலிருஞ் சோலை*
வலமுறை யெய்தி மருவுதல் வலமே.

– அநந்தரம், ப்ரளயாபத்ஸகன் வர்த்திக்கிற திருமலையில் ஆநுகூல்யமே ப்ரபலம் என்கிறார்.

(ப3ஹிஷ்ட2ராய்) நரகு – ஸம்ஸாரநிரயத்தில், அழுந்தாதே – அழுந்தாதே (இத்தை), நலம் – பரமப்ரயோஜநம், என – என்று, நினைமின் – புத்திபண்ணுங்கோள்; முனம் – (ப்ரளயங்கொண்ட) முற்காலத்திலே, நிலம் – பூமியை, இடந்தான் – (வராஹவேஷத்தைக் கொண்டு) இடந்தெடுத்தவன், நீடுறை – நித்யவாஸம்பண்ணுகிற, கோயில் – கோயிலாய், மலமறு – (சிகரங்களிலே தேய்கையாலே) களங்கரஹிதனான, மதி – சந்த்ரன், சேர் – பொருந்துகிற, மாலிருஞ்சோலை – திருமலையை, முறை – (சேஷசேஷிபா4வமாகிற) முறைப்பாட்டாலுள்ள, வலம் – ஆநுகூல்யத்தை, எய்தி – பெற்று, மருவுதலே – பொருந்துகையே, வலம் – ப3லோத்தரம்.

ஈடு – ஏழாம் பாட்டு. திருமலையைச்சென்று கிட்டி நிரந்தர வாஸம் பண்ணுகையே இவ்வாத்மாவுக்கு வெற்றி என்கிறார்.

(நலமென நினைமின்) நான் சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று பு3த்3தி4 பண்ணுங்கோள். விலக்ஷணமான புருஷார்த்த2ம் என்று பு3த்3தி4 பண்ணுங்கோள். (நரகழுந்தாதே) நரகங்களும் இவர்களுக்கு வ்யவஸ்தி2தமாயிறே யிருப்பது; “யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க3:” “காட்டிலே – போமது து3க்க2ம்; படைவீட்டிலேயிருக்குமது ஸுக2ம்” என்றாயிற்று பெருமாள் அருளிச்செய்தது; அங்ஙனல்ல; ஸுக2:து3க்க2ங்கள் வ்யக்திதோறும் வ்யவஸ்திதமாய்க் காணுமிருப்பது; யாதொன்று உம்மோடே பொருந்துகிறது, அது ஸுக2மாகிறது; உம்மையொழியப் படைவீட்டிலிருக்கும் இருப்பு து3க்க2மாகிறது. (இதி ஜாநந்) தந்தாமுக்கில்லாதவை, பிறர்பக்கலிலே கற்றறியவேணுங்காணும்! (பராம் ப்ரீதிம்) உம்மைப்போலே நிறுத்தல்லகாணும் என்னுடைய ப்ரீதியிருப்பது. ‘நம்மில் உனக்கு ப்ரீதி பரையாகச் சொன்னாய்; அதுக்கு நம்மைச் சொல்லுகிறதென்?’  என்ன “க3ச்ச2 ராம மயா ஸஹ”, “அக்3ரதஸ்தே க3மிஷ்யாமி” என்று – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போகவிட்டுப் பின்னே வரப்பாரும். “ந ச ஸீதா த்வயா ஹீநா” என்றாரிறே இளையபெருமாள். (நரகழுந்தாதே) பிரிவால் வரும் க்லேசாநுப4வம் பண்ணாதே.

(நிலம் இத்யாதி3) வராஹகல்பத்தின் ஆதி3யிலே மஹாவராஹமாய், அண்ட3பி4த்தியிலே சேர்ந்து உருமாய்ந்த பூ4மியை ஒட்டுவிடுவித்து எடுத்துக்கொண்டேறின நிருபாதி4க ஸௌஹார்த்த3முடையவன், அவதாரங்கள் போலே தீர்த்த2ம் ப்ரஸாதி3யாதே நித்யவாஸம் பண்ணுகிற தே3சம்.  (மலமறு) சந்த்3ரபத3த்துக்கு அவ்வருகே வளர்ந்து நிற்கையாலே, அவன் போம்போது சிக2ரங்களிலே தேய்ப்புண்டு சாணையிலேயிட்டாற்போலே களங்கம் அறாநிற்குமென்னுதல்; அன்றிக்கே, “திருமலையாழ்வார்தாம் ஜ்ஞாநலாப4த்தை உண்டாக்குவர்” என்று பிள்ளான் வார்த்தை.  (வலமுறையெய்தி) கால யவந ஜராஸந்தா4தி3களைப்போலேயன்றிக்கே, அநுகூலமான முறையிலே கிட்டி. மருவுதல் வலமென்னுதல், வரமென்னுதல்; ப3லவத்தரமென்னுதல், ஸ்ரேஷ்ட2மென்னுதல்.

எட்டாம் பாட்டு

வலஞ்செய்துவைகல் வலங்கழியாதே*
வலஞ்செய்யும் ஆயமாயவன்கோயில்*
வலஞ்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை*
வலஞ்செய்துநாளும் மருவுதல்வழக்கே.

– அநந்தரம், ஆஸ்ரிதாநுகூலனான க்ருஷ்ணன் வர்த்திக்கிற திருமலையிலே நிரந்தராநுகூலவ்ருத்தியே ஸ்வரூபப்ராப்தம் என்கிறார்.

(கரணங்களுக்கு) வலம் – ப3லத்தை, செய்து – உண்டாக்கி, வைகல் – நிரந்தரமாக, வலம் – அந்த ப3லத்தை, கழியாதே – இதர விஷயமாக்கிக் கெடாதே, வலம் – ஆஸ்ரிதர்க்கு ப4வ்யதையாகிற ஆநுகூல்யத்தை, செய்யும் – பண்ணும், ஆயன் – க்ருஷ்ணனான, மாயவன் – ஆஸ்சர்யபூ4தனுடைய, கோயில் – கோயிலான, வானோர் – பரமபதவாஸிகள், வலம் – அநுகூலவ்ருத்தி, செய்யும் – பண்ணும், மாலிருஞ்சோலை – திருமலையைக்குறித்து, வலம் – ப்ரதக்ஷிணாத்யநுகூலவ்ருத்தியை, செய்து – பண்ணி, நாளும் – நிரந்தரம், மருவுதல் – ஸம்ஸ்லேஷம் பண்ணுகை, வழக்கு – ந்யாயம்.

ஈடு – எட்டாம் பாட்டு. திருமலையை நிரந்தரமாக வலஞ்செய்கையே வழக்கு என்கிறார்.

(வலஞ்செய்து இத்யாதி3) ஸர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கைக்குறுப்பாகத் தந்த மநுஷ்ய சரீரத்தைக்கொண்டு ப3லத்தை உண்டாக்கி, பின்னை அவனை ஆஸ்ரயிக்கையன்றிக்கே இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி அநர்த்த2ப்படாதே. (வலஞ்செய்யும்) திருச்சித்ரகூட பரிஸரத்திலே பிராட்டியையுங் கூடக்கையைப்பிடித்துக்கொண்டு உலாவினாற்போலே, பிராட்டி கையைப் பிடித்துக்கொண்டு அழகர் ஆத3ரத்தோடே ஸஞ்சரிக்கிற தே3சம். “ய ஆத்மதா3 ப3லதா3:” என்கிறபடியே – தன்னையுங்கொடுத்து, தன்னை அநுப4விக்கைக்கு ஈடான சக்தியையுங் கொடுக்கும் ஆஸ்சர்யபூ4தனான க்ருஷ்ணன் வர்த்திக்கிற தே3சம். (வலம்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை) கீழ் “விண்ணோர் வெற்பன்” என்றார்; இங்கே (வானோர் மாலிருஞ்சோலை) என்கிறார்; இதுக்கு நினைவென் உகந்தருளின தே3சமெல்லாங் கிடக்க? என்னில்; ப்ரஜைக்குத் தாயினுடைய அவயவமெல்லாங் கிடக்க முலைக்கண்ணிலேயிறே வாய்வைக்கலாவது; அப்படியே இங்கு “தென்னனுயர் பொருப்பும் தெய்வ வடமலையும்” என்கிற முலையாகையாலே, அவர்களுக்கேயாயிருக்கிறது.

(வானோர் மாலிருஞ்சோலை) பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிறபோது லக்ஷ்மண ப4ரதர்கள் பின்தொடர்ந்தாற்போலே, ஸர்வேஸ்வரன் இங்கே போருகையாலே நித்யஸூரிகளும் போந்து வலஞ்செய்யாநிற்பர்கள்.  (வலஞ் செய்து) நாமும் இவர்களோடே கூட அங்கே அநுகூல வ்ருத்திகளைப்பண்ணி, “பிள்ளை திருநறையூறையரும், ப4ட்டரும் ப்ரத3க்ஷிணம் பண்ணாநிற்க, பின்னே ஸேவித்துக் கொண்டு போனேன்; அல்லாதார் கடுங்குதிரை போலே வாரா நிற்க, இவர்கள் திருக்கோபுரங்களையும் திருமாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப்போலே பார்த்துக்கொண்டு வந்தார்கள்” என்று நஞ்ஜீயர் அருளிச்செய்வர்.  (நாளும் மருவுதல் வழக்கே) நித்யஸூரிகளுடைய யாத்ரையே தனக்கு யாத்ரையானால் பின்னை மறுவலிடாதிறே; இதுவே வழக்கு.

ஒன்பதாம் பாட்டு

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது*
அழக்கொடி யட்டான் அமர்பெருங் கோயில்*
மழக்களிற் றினம்சேர் மாலிருஞ் சோலை*
தொழக்கரு துவதே துணிவது சூதே.

– அநந்தரம், ‘பூதநாநிரஸநம் பண்ணினவன் வர்த்திக்கிற திருமலையைத் தொழவேணும்’ என்கிற நினைவில் துணிவு வெற்றிக்கு அடி என்கிறார்.

வல் – (கடக்க அரிதாம்படி) ப்ரப3லமான, வினை – பாபங்களிலே, மூழ்காது – முழுகாதே, வழக்கு – இது ஸ்வரூபாநுரூபம், என – என்று, நினைமின் – நினையுங்கோள்; அழன் – பேயான, கொடி – பெண்ணை, அட்டான் – நசிப்பித்தவன், அமர் – பொருந்தி வர்த்திக்கும், பெரும் – அஸங்குசிதமான, கோயில் – கோயிலாய், மழ – கன்றுகளான, களிற்றினம் – ஆனைத்திரள், சேர் – சேருகிற, மாலிருஞ்சோலை – திருமலையை, தொழ – தொழவேணுமென்கிற, கருதுவதே – நினைவிலே, துணிவதே – துணிகையே, சூது – (ஸம்ஸாரத்தை வெல்லுகைக்கு) ஹேது.

அழன் – பேய், கொடி – பெண்.

ஈடு – ஒன்பதாம் பாட்டு.  “திருமலையைத் தொழுவோம்” என்று அத்4யவஸித்து நினைக்கை அமையும் விஜயஹேது என்கிறார்.

(வழக்கென நினைமின்) நான் சொல்லுகிற இதுவே முறையென்று பு3த்3தி4பண்ணுங்கோள்.  (வல்வினை மூழ்காது) உங்களால் போக்கிக்கொள்ள வொண்ணாத மஹாபாபங்களைப் பரிஹரிக்க வேண்டியிருந்திகோளாகில். அழனென்று- பேய்க்குப் பேர்; கொடியென்று – பெண்ணுக்குப் பேர்; பேய்ப்பெண் என்றபடி.  அழனென்று – பிணமாய், அத்தால் – பேய் என்றபடி.  பூதனையை முடித்தவன், “இங்ஙனொத்த விரோதி4கள் வந்தபோதாக நம்மை நெடுங்கை நீட்டாக்கி வைக்கவொண்ணாது” என்று நித்யவாஸம் பண்ணுகையாலே ஸ்லாக்4யமான கோயில்.

(மழம் இத்யாதி3) அங்குண்டான திர்யக்குகளும் அழகரோடு ஓரினமாயா யிற்றிருப்பது.  இளவானைக்கன்றுகள் இனமினமாகச் சேராநின்றுள்ள திருமலையை.  லக்ஷணோபேதமாயிருப்பதொரு ஆனை நின்றவிடத்தே ஆயிரம் ஆனை வந்து சேராநிற்கும்; அங்கு நிற்கிறதும் சோலைமழகளிறிறே.  தென்னானையிறே.  திருமலையைத் தொழவேணும் என்னும் மநோரத2த்திலே துணிவதே இவ்வாத்மாவுக்கு விஜயஹேது.

பத்தாம் பாட்டு

சூதென்று களவும் சூதும்செய் யாதே*
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்*
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை*
போதவிழ் மலையே புகுவது பொருளே.

– அநந்தரம், ‘வைதிகஜ்ஞாந ப்ரவர்த்தகன் வர்த்திக்கிற திருமலையிலே ப்ரவேசிக்கிற இது புருஷார்த்த2ம்’ என்று உபக்ரமித்த உபதே3சத்தை நிகமித்தருளுகிறார்.

சூது – ஸுகரமான அர்த்த2ஸாத4நம், என்று – என்று நினைத்து, களவும் – களவுகாணுதல், சூதும் – பார்த்திருக்க அபஹரித்தல், செய்யாதே – செய்யாதே, முன் – முற்காலத்திலே, (கீ3தோபநிஷதா3தி3முக2த்தாலே) வேதம் – வேதார்த்தத்தை, விரித்தான் – விவரித்தவன், விரும்பிய – விரும்பி வர்த்திக்கிற, கோயில் – கோயிலாய், மாது – மாதிமை, உறு – உடைத்தான, மயில் – மயில்கள், சேர் – சேர்ந்து வர்த்திக்கிற, மால் – ஓங்கி, இரும் – பரந்த, சோலை – சோலைகளில், போது – பூவானது, அவிழ் – மலருகிற, மலை – திருமலையிலே, புகுவதே – சென்று புகுவதே, பொருள் – புருஷார்த்தம்.

மாதிமை – மென்மை.  மாதுறு – என்று பேடையோடே சேர்ந்த என்றுமாம்.

ஈடு – பத்தாம் பாட்டு.  பலபடியாலும் திருமலையே பரமப்ராப்யமென்று உபக்ரமித்தபடியே உபஸம்ஹரிக்கிறார்.

(சூதென்று) நமக்கு நல்ல வாய்ப்பாயிருந்ததென்று சூதும் களவும் செய்யாதே.  சாஸ்த்ரங்கள் இவற்றை நிஷேதி4க்கையாலே அவற்றையும் சொல்லவுமாம்.  அன்றிக்கே, களவாவது “சோரேணாத்மாபஹாரிணா” என்கிற ஆத்மாபஹாரமாய், சூதாவது – ஸாத்த்விகனாய், ப்ராமாணிகனாயிருப்பானொருவன் “ஸர்வேஸ்வரன் ரக்ஷகன்” என்று விஸ்வஸித்திருந்தால், “காண்கிற தே3ஹத்துக்கு அவ்வருகே ஓர் ஈஸ்வரனாவதென்? ஆத்மாவாவதென்?” என்று காணக் காண அபஹரிக்கை.

(வேத3ம் இத்யாதி3) இவை ஒருவர்க்கு வாராதபடி வேதா3ர்த்த2த்தை விசதீ3கரித்த கீ3தோபநிஷதா3சார்யன் வர்த்திக்கிற கோயில்.  (மாதுறு மயில்) மாது என்று – மார்த்த3வத்தைச் சொல்லுகிறதாய், ஸுகுமாரமாய் த3ர்சநீயமான மயில் என்னுதல்; பேடையை உற்ற மயில் என்னுதல்.  அங்குள்ள ஸத்த்வங்களெல்லாம் மிது2நமேயாய் வர்த்திக்கும் என்கை.  (போதவிழ் மலையே) கொடியும் தண்டும் சருகும் இடையிடையிலே பூவுமாயிருக்கையன்றிக்கே, திருமலை தன்னை முட்டாக்கிடப் பூத்துக் கிடக்குமித்தனை.  திருமலையைக் கிட்டுமதுவே இவ்வாத்மாவுக்கு ப்ரயோஜநமாய்த் தலைக்கட்டுவது; அல்லாதவையெல்லாம் வ்யர்த்த2வ்ருத்திகள் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

பொருளென்றுஇவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல்*
மருளில்வண் குருகூர் வண்சட கோபன்*
தெருள்கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து* அருளுடை யவன்தாள் அணைவிக்கும் முடித்தே.

ஆழ்வார் திருவடிகளே சரணம்

– அநந்தரம், இத்திருவாய்மொழிக்குப் ப2லமாக ப43வத்ப்ராப்தியை அருளிச்செய்கிறார்.

பொருள் – (ஆஸ்ரிதாபி4முக்2யம்) ப்ரயோஜநம், என்று – என்று, இ – இந்த, உலகம் – லோகத்தை, படைத்தவன் – ஸ்ருஷ்டித்தவனுடைய, புகழ்மேல் – (த3யாக்ஷமௌதா3ர்யாதி3) கு3ணப்ரதை2 விஷயமாக, மருளில் – அஜ்ஞாநக3ந்த4ரஹிதராய், வண் – விலக்ஷணமான, குருகூர் – திருநகரிக்கு நிர்வாஹகராய், வண் – மஹோதா3ரரான, சடகோபன் – ஆழ்வார், தெருள் – தத்வஜ்ஞாநமானது, கொள்ள – (சேதநர்) ஸ்வீகரிக்கும்படி, சொன்ன – அருளிச்செய்த, ஓர் – அத்3விதீயமான, ஆயிரத்துள் – ஆயிரத்துள், இப்பத்து – இப்பத்தும், முடித்து – ஸம்ஸாரத்தை நஶிப்பித்து, அருளுடையவன் – க்ருபாபரிபூர்ணரான அழகருடைய, தாள் – திருவடிகளை, அணைவிக்கும் – அடைவிக்கும்.

முடித்து என்று – கர்த்தவ்யங்களைத் தலைக்கட்டி என்றுமாம்.  இது கலிவிருத்தம்.

வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் திருவடிகளே சரணம்

ஈடு – நிக3மத்தில் – இத்திருவாய்மொழி கற்றாரை, இத்திருவாய்மொழி தானே ஜந்மத்தைப் போக்கி அழகர் திருவடிகளிலே சேர்த்துவிடும் என்கிறார்.

(பொருள் இத்யாதி3) ப்ரயோஜநப்படுமென்று இந்த லோகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாணகு3ண விஷயமாக அஜ்ஞாநக3ந்த4மில்லாத ஆழ்வார் அருளிச்செய்தது இதுதான்.  இவற்றையுண்டாக்கி, கரணகளேப3ரங்களைக் கொடுத்துவிட்டால், கொடுத்த உபகரணங்களைக்கொண்டு சப்3தா3தி3 விஷயங்களிலே ப்ரவணராய்க் கைகழியப்புக்கால், “நம் நினைவு தப்பிற்றிறே” என்று நெகிழ்ந்து கைவாங்குகையன்றிக்கே, “ஒரு நாளல்லா ஒரு நாளாகிலும் ப்ரயோஜநப்படாதோ?” என்று பலகாலும் உண்டாக்காநிற்கும்; மயர்வறமதிநலமருள(1-1-1)ப் பெற்றவராகையாலே அவனுடைய கு3ணவிஷயமாக மருளில்லாதவராயிற்று இவ்வாழ்வார்.  ப்ரப3ந்த4மோவென்னில் – (தெருள்கொள்ளச் சொன்ன ஓராயிரம்) மருளுண்டாய்க் கழியவேண்டிற்று இவர்க்கு.  இவருடைய ப்ரப3ந்த4ம் அப்4யஸித்தார்க்கு முதலிலே அஜ்ஞாநந்தானில்லை.  கேட்டார்க்குத் தெளிவைப் பிறப்பிக்கும்படியாயிற்று அருளிச்செய்தது.  தம்முடைய ஞானத்துக்கு அடி ஈஸ்வரன்; இவர்களுக்குத் தாமடியாக வந்தது. ப்ரப3ந்த4ந்தான் செய்வதென்? என்னில் (அருளுடை இத்யாதி3)  அருளையிட்டாயிற்று வஸ்துவை நிரூபிப்பது.  அருளையுடைவன் திருவடிகளிலே சேர்த்துவிடும்.  அதுசெய்யுமிடத்தில் – (முடித்தே) ஸம்ஸார ஸம்ப3ந்த4த்தை வாஸனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்துவிடும்.  ஒரு ஜ்ஞாநலாப4த்தைப் பண்ணித் தந்துவிடுமளவன்றிக்கே, அர்த்த2க்ரியாகாரியாயிருக்கும்.

முதற்பாட்டில், கடுகத் திருமலையாழ்வாரை ஆஸ்ரயியுங்கோள் என்றார்; இரண்டாம் பாட்டில், திருமலையோடு ஸம்ப3ந்தி4த்த ஸ்ரிய:பதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்; மூன்றாம் பாட்டில், அத்தோடு சேர்ந்த அயன்மலை அமையும் என்றார்; நாலாம் பாட்டில், “திரிதந்தாகிலும்” (கண்ணிநுண்சிறுத்தாம்பு –3) என்கிறபடியே, திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்; அஞ்சாம் பாட்டில், அத்தோடு சேர்ந்த புறமலையை ஆஸ்ரயியுங்கோள் என்றார்; ஆறாம் பாட்டில், திருமலைக்குப் போம் மார்க்க3சிந்தை பண்ண அமையும் என்றார்; ஏழாம் பாட்டில், அவ்வழியோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச்சொன்னார்; எட்டாம் பாட்டில், நித்யஸூரிகளுக்குங்கூட ப்ராப்யமாகையாலே திருமலையே பரமப்ராப்யம் என்றார்; ஒன்பதாம் பாட்டில், “திருமலையைத் தொழக்கடவோம்”  என்கிற துணிவே வேண்டுவது என்றார்; பத்தாம் பாட்டில், எல்லாப்படியாலும் திருமலையாழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த2மென்று தலைக்கட்டினார்; நிக3மத்தில், இது கற்றார்க்குப் ப2லமருளிச்செய்தார்.

முதல் திருவாய்மொழியாலே – “மணியை வானவர் கண்ணனைத் தன்னதோ ரணியை” (1-10-11) என்ற விலக்ஷணவிஷயமாகையாலே, பிரிந்தார் கண்ணாஞ் சுழலையிடப்பண்ணும் என்றார்; இரண்டாந்திருவாய்மொழியாலே – அவ்வோபாதி  கூடினாலும் மறப்பிக்கும் என்றார்; மூன்றாந்திருவாய்மொழியாலே – கூடின விஷயந்தான் நிரதிஶய ஸுக2ரூபம் என்றார்; நாலாந்திருவாய்மொழியிலே – அவ்விஷயத்துக்கு தே3சிகரோடு அநுப4விக்கப்பெறாமையாலே மோஹங்க3தரானார்; அஞ்சாந்திருவாய்மொழியாலே – தாம் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தபடி சொன்னார்; ஆறாந்திருவாய்மொழியாலே – தம் இழவுக்கும் அவன் அதிசங்கை பண்ணும் என்றார்; ஏழாந்திருவாய்மொழியாலே – தம்முடைய ஸம்ப3ந்தி4 ஸம்ப3ந்தி4களையும் விஷயீகரித்தபடி சொன்னார்; எட்டாந் திருவாய் மொழியாலே – அவனுடைய மோக்ஷப்ரத3த்வத்தை அருளிச்செய்தார்; ஒன்பதாந் திருவாய்மொழியாலே – ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்; பத்தாந் திருவாய் மொழியாலே – நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்தை லபி4க்கைக்குத் திருமலையாழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

த்3ரமிடோ3பநிஷத் ஸங்க3தி– கிளரொளி

ஏதந்நிஜார்த்தி2தமிஹைவ ஹரி: ப்ரதா3தும்
ஆஸேதி3வான் வநமஹீத4ரமித்யவேக்ஷ்ய |
ப்ராப்யம் தமேவ ச தத3ந்வயிநஞ்ச ஸர்வம்
ப்ராசீகஶத் ஸ த3ஶமே த3ஶகே முநீந்த்3ர: ||                20

வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் திருவடிகளே சரணம்

த்3ரமிடோ3பநிஷத் தாத்பர்யரத்நாவளிகிளரொளி

தீ3ப்தாஶ்சர்யஸ்வபா4வம் முக2ரிதஜலஜம் வர்ஷுகாம்போ43வர்ணம்
ஶைலச்ச2த்ராபி4கு3ப்தாஶ்ரிதமதிவிலஸத்3தே4திமாபீதக3வ்யம் |
ஸம்ரம்போ4த்க்ஷிப்தபூ4மிம் ப்ரணமத3நுகுணம் பூதநாசேதநாந்தம்
பூர்வாசார்யம் ஶ்ருதீநாம் ஶுப4ஸவித4கி3ரிஸ்தா2நதோ நிர்விவேஶ ||        22

இத்யப்3ரூதாத்யஸஹ்யக்ஷணவிரஹதயா மாநுஷத்வே பரத்வாத்
ஸர்வாஸ்வாத3த்வபூ4ம்நா வ்யஸநஹரதயா ஸ்வாப்திஸம்ப்ரீதிமத்த்வாத் |
வைமுக்2யத்ராஸயோகா3த் நிஜஸுஹ்ருத3வநாத் முக்திஸாரஸ்யதா3நாத்
கைங்கர்யோத்3தே3ஶ்யபா4வாச்சு24நிலயதயா சாதிபோ4க்3யம் த்3விதீயே ||  23

வேதாந்தாசார்யர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி நூற்றந்தாதி

கிளரொளிசேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளிமால் சோலை மலைக்கே – தளர்வறவே
நெஞ்சைவைத்துச் சேருமெனும் நீடுபுகழ் மாறன்தாள்
முன்செலுத்து வோமெம் முடி.         20

பெரியஜீயர் திருவடிகளே சரணம்

ஆழ்வார் திருவடிகளே சரணம்

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

ஜீயர் திருவடிகளே சரணம்

******

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.