Thirumozhi 8-10

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

பத்தாம் திருமொழி

வண்டார் பூமாமலர் மங்கை, மணநோக்க

முண்டானே ! * உன்னை உகந்துகந்து, உன்தனக்கே

தொண்டானேற்கு * என்செய்கின்றாய் ? சொல்லு, நால்வேதம்

கண்டானே ! * கண்ணபுரத்துறை யம்மானே !  8.10.1    திருக்கண்ணபுரம்

பெருநீரும் விண்ணும், மலையும் உலகேழும் *

ஒரு தாரா நின்னுளொடுக்கிய, நின்னை யல்லால் *

வருதேவர் மற்றுளரென்று, என் மனத்து இறையும்

கருதேன் நான் * கண்ணபுரத்துறை யம்மானே !           8.10.2    திருக்கண்ணபுரம்

மற்றும் ஓர் தெய்வம் உளதென்று, இருப்பாரோடு

உற்றிலேன் * உற்றதும், உன்னடியார்க் கடிமை *

மற்றெல்லாம் பேசிலும், நின் திருவெட்டெழுத்தும்

கற்று நான் * கண்ணபுரத்துறை யம்மானே !     8.10.3    திருக்கண்ணபுரம்

பெண் ஆனாள், பேரிளங் கொங்கையி னாரழல் போல் *

உண்ணா நஞ்சுண்டுகந்தாயை, உகந்தேன் நான் *

மண்ணாளா ! வாள் நெடுங் கண்ணி மதுமலராள்

கண்ணாளா ! * கண்ணபுரத்துறை யம்மானே !               8.10.4    திருக்கண்ணபுரம்

பெற்றாரும் சுற்றமும், என்று இவை பேணேன் நான் *

மற்றாரும் பற்றிலேன், ஆதலால் நின்னடைந்தேன் *

உற்றானென் றுள்ளத்து வைத்து, அருள் செய் கண்டாய் *

கற்றார் சேர், கண்ணபுரத்துறை யம்மானே !       8.10.5    திருக்கண்ணபுரம்

ஏத்தி உன்சேவடி, எண்ணி யிருப்பாரைப் *

பார்த்திருந்து, அங்கு நமன் தமர் பற்றாது *

சோத்தம் நாமஞ்சுதும் என்று, தொடாமை நீ

காத்தி போல் * கண்ணபுரத்துறை யம்மானே !              8.10.6    திருக்கண்ணபுரம்

வெள்ளை நீர் வெள்ளத்து, அணைந்த அரவணைமேல் *

துள்ளு நீர் மெள்ளத் துயின்ற, பெருமானே ! *

வள்ளலே ! உன் தமர்க்கு என்றும், நமன் தமர்

கள்ளர் போல் * கண்ணபுரத்துறை யம்மானே !           8.10.7    திருக்கண்ணபுரம்,

திருப்பாற்கடல்

மாணாகி, வைய மளந்ததுவும் * வாளவுணன்

பூணாகம் கீண்டதுவும், ஈண்டு நினைந்திருந்தேன் *

பேணாத வல்வினையேன், இடரெத்தனையும்

காணேன் நான் * கண்ணபுரத்துறை யம்மானே !           8.10.8    திருக்கண்ணபுரம்

நாட்டினாய் என்னை, உனக்கு முன் தொண்டாக *

மாட்டினேன் அத்தனையே கொண்டு, என் வல்வினையைப் *

பாட்டினால் உன்னை, என் நெஞ்சத் திருந்தமை

காட்டினாய் * கண்ணபுரத்துறை யம்மானே !     8.10.9    திருக்கண்ணபுரம்

கண்ட சீர்க், கண்ணபுரத்துறை யம்மானைக் *

கொண்ட சீர்த் தொண்டன், கலியனொலி மாலை *

பண்டமாய்ப் பாடும், அடியவர்க்கு எஞ்ஞான்றும்

அண்டம் போய் * ஆட்சி அவர்க்க தறிந்தோமே.      8.10.10  திருக்கண்ணபுரம்

********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.