Thirumozhi 8-6

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

ஆறாம் திருமொழி

தொண்டீர் ! உய்யும் வகை கண்டேன்

துளங்கா அரக்கர் துளங்க, முன் *

திண்தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திருமார்பன் *

வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மான் நோக்கம்

கண்டான் * கண்டு கொண்டுகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே.      8.6.1                திருக்கண்ணபுரம்

பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப்

பொன்ற அன்று புள்ளூர்ந்து *

பெருந்தோள் மாலி தலை புரளப் பேர்ந்த அரக்கர் * தென்னிலங்கை

இருந்தார் தம்மை உடன் கொண்டு

அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒளிப்பக் *

கருந்தாள் சிலை கைக்கொண்டானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.   8.6.2                திருக்கண்ணபுரம்

வல்லியிடையாள் பொருட்டாக மதிள் நீரிலங்கையார் கோவை *

அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் *

வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியைக் *

கல்விச் சிலையால் காத்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.                8.6.3                திருக்கண்ணபுரம்

மல்லை முந்நீர் அதர்பட வரிவெஞ்சிலை கால் வளைவித்துக் *

கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோ னிலங்கை புகலுற்றுத் *

தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவக் *

கல்லால் கடலை யடைத்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.              8.6.4                திருக்கண்ணபுரம்

ஆமையாகி அரியாகி அன்னமாகி * அந்தணர் தம்

ஓமமாகி ஊழியாகி உலகு சூழ்ந்த நெடும் புணரிச் *

சேமமதிள் சூழிலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து * முன்

காமற் பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.        8.6.5                திருக்கண்ணபுரம்

வருந்தாதிரு நீ மடநெஞ்சே ! நம்மேல் வினைகள் வாரா * முன்

திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீயுண்ணச் சிவந்து * ஒருநாள்

பெருந்தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி * முன்

கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.  8.6.6                திருக்கண்ணபுரம்

இலையார் மலர்ப்பூம் பொய்கை வாய்

முதலை தன்னால் அடர்ப்புண்டு *

கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய

அதனுக்கு அருள் புரிந்தான் *

அலை நீரிலங்கைத் தசக்கிரீவற்கு

இளையோற்கு அரசை யருளி * முன்

கலை மாச்சிலையால் எய்தானூர்

கண்ணபுரம் நாம் தொழுதுமே.   8.6.7      திருக்கண்ணபுரம்

மாலாய் மனமே அருந்துயரில் வருந்தாதிரு நீ * வலி மிக்க

காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும் *

மாலார் விடையும் மதகரியும் மல்லருயிரும் மடிவித்துக் *

காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.       8.6.8                திருக்கண்ணபுரம்

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேரிடையாள் பொருட்டாக *

வன்தாள் விடையேழ் அன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன் *

சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்துக் *

கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே.            8.6.9                திருக்கண்ணபுரம்

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ணபுரத்தெம்மடிகளைத் *

திருமாமகளால் அருள் மாரி செழுநீராலி வளநாடன் *

மருவார் புயற்கைக் கலிகன்றி மங்கை வேந்தனொலி வல்லார் *

இருமா நிலத்துக்கரசாகி இமையோரிறைஞ்ச வாழ்வாரே.             8.6.10                திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.