Thirumozhi 8-7

பெரிய திருமொழி

எட்டாம் பத்து

ஏழாம் திருமொழி

வியமுடை விடையினம், உடைதர மடமகள் *

குயமிடை, தடவரை அகலம துடையவர் *

நயமுடை நடை அனம், இளையவர் நடை பயில் *

கயமிடை கணபுரம், அடிகள் தம் இடமே.           8.7.1      திருக்கண்ணபுரம்

இணைமலி மருதினொடு, எருதிற இகல் செய்து *

துணைமலி முலையவள், மணமிகு கலவியுள் *

மணமலி விழவினொடு, அடியவ ரளவிய *

கணமலி கணபுரம், அடிகள் தம் இடமே.  8.7.2      திருக்கண்ணபுரம்

புயலுறு வரை மழை, பொழிதர * மணிநிரை

மயலுற, வரை குடை எடுவிய நெடியவர் *

முயல்துளர் மிளை முயல் துள, வளவிளை வயல் *

கயல் துளு கணபுரம், அடிகள் தம் இடமே.         8.7.3      திருக்கண்ணபுரம்

ஏதலர் நகை செய, இளையவ ரளை வெணெய் *

போது செய்து அமரிய, புனிதர் * நல் விரை மலர்

கோதிய மதுகரம் குலவிய மலர் மகள் *

காதல் செய் கணபுரம், அடிகள் தம் இடமே.        8.7.4      திருக்கண்ணபுரம்

தொண்டரும் அமரரும், முனிவரும் தொழுதெழ *

அண்டமொடு, அகலிடம் அளந்தவர் * அமர் செய்து

விண்டவர் பட, மதிள் இலங்கை முன் எரியெழக் *

கண்டவர் கணபுரம், அடிகள் தம் இடமே.            8.7.5      திருக்கண்ணபுரம்

மழுவியல் படையுடை யவனிடம், மழைமுகில் *

தழுவிய உருவினர், திருமகள் மருவிய *

கொழுவிய செழுமலர் முழுசிய, பறவை பண்

எழுவிய கணபுரம், அடிகள் தம் இடமே.  8.7.6      திருக்கண்ணபுரம்

பரிதியொடு அணிமதி, பனிவரை திசை நிலம் *

எரிதியொடென, இன இயல்வினர் செலவினர் *

சுருதியொடு, அருமறை முறை சொலும் அடியவர் *

கருதிய கணபுரம், அடிகள் தம் இடமே.     8.7.7      திருக்கண்ணபுரம்

படி புல்கும் அடியிணை, பலர் தொழ * மலர் வைகு

கொடி புல்கு, தடவரை யகலம துடையவர் *

முடி புல்கு நெடு வயல், படை செல அடி மலர் *

கடி புல்கு கணபுரம், அடிகள் தம் இடமே.           8.7.8      திருக்கண்ணபுரம்

புலமனு மலர் மிசை, மலர் மகள் புணரிய *

நிலமகளென, இன மகளிர்க ளிவரொடும் *

வலமனு படையுடை மணிவணர், நிதி குவை *

கலமனு கணபுரம், அடிகள் தம் இடமே.   8.7.9      திருக்கண்ணபுரம்

மலிபுகழ், கணபுர முடைய எம் அடிகளை *

வலிகெழு மதிளயல், வயலணி மங்கையர் *

கலியன தமிழிவை, விழுமிய இசையினொடு *

ஒலிசொலும் அடியவர், உறுதுயரிலரே.  8.7.10    திருக்கண்ணபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.