Thiruvoymozhi 7-10

திருவாய்மொழி

ஏழாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

இன்பம் பயக்க, எழில் மலர் மாதரும்

தானும் * இவ்வேழுலகை

இன்பம் பயக்க, இனிதுடன் வீற்றிருந்து

ஆள்கின்ற எங்கள் பிரான் *

அன்புற்றமர்ந் துறைகின்ற

அணி பொழில் சூழ் திருவாறன்விளை *

அன்புற் றமர்ந்து வலஞ்செய்து

கைதொழு நாள்களு மாகுங் கொலோ ?     7.10.1    திருவாறன்விளை

ஆகுங் கொல் ? ஐயமொன்றின்றி

அகலிடம் * முற்றவும் ஈரடியே

ஆகும் பரிசு நிமிர்ந்த

திருக்குறளப்பன் அமர்ந்துறையும் *

மாகம் திகழ் கொடி மாடங்கள்,

நீடு மதிள் திருவாறன்விளை *

மாகந்த நீர் கொண்டு தூவி, வலஞ் செய்து

கை தொழக் கூடுங் கொலோ ?        7.10.2    திருவாறன்விளை

கூடுங் கொல் வைகலும்

கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை *

ஆடும் பறவை மிசைக் கண்டு

கை தொழுதன்றி, அவனுறையும் *

பாடும் பெரும் புகழ் நான்மறை, வேள்வி

யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ் *

நீடு பொழில் திருவாறன்விளை தொழ

வாய்க்குங் கொல்? நிச்சலுமே.            7.10.3    திருவாறன்விளை

வாய்க்குங் கொல்? நிச்சலும்

எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற *

வாய்க்கும் கரும்பும் பெருஞ் செந்நெலும்

வயல் சூழ் திருவாறன்விளை *

வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன்

வடமதுரைப் பிறந்த *

வாய்க்கும் மணிநிறக் கண்ணபிரான் தன்

மலரடிப் போதுகளே.   7.10.4    திருவாறன்விளை,

வடமதுரை

மலரடிப் போதுகள், என்னெஞ்சத்து

எப்பொழுதும் இருத்தி வணங்க *

பலரடியார் முன்பருளிய

பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் *

மலரின் மணி நெடு மாடங்கள்

நீடு மதிள் திருவாறன்விளை *

உலகமலி புகழ்பாட

நம்மேல் வினையொன்றும் நில்லா கெடுமே.   7.10.5    திருவாறன்விளை

ஒன்று நில்லா கெடும் முற்றவும் தீவினை

உள்ளித் தொழுமின் தொண்டீர் ! *

அன்றங்கமர் வென்று, உருப்பிணி நங்கை

அணிநெடுந் தோள் புணர்ந்தான் *

என்று மெப்போது மென்னெஞ்சம் துதிப்ப

உள்ளே யிருக்கின்ற பிரான் *

நின்ற அணி திருவாறன்விளை

யென்னும் நீள் நகரமதுவே.  7.10.6    திருவாறன்விளை

நீணகர மதுவே மலர்ச் சோலைகள் சூழ்

திருவாறன்விளை *

நீணகரத் துறைகின்ற பிரான்

நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் *

வாண புரம் புக்கு முக்கட் பிரானைத்

தொலைய வெம் போர்கள் செய்து *

வாணனை ஆயிரந் தோள் துணித்தான்

சரணன்றி, மற்றொன்றிலமே.       7.10.7    திருவாறன்விளை

அன்றி மற்றொன்றிலம் நின் சரணே யென்று

அகலிரும் பொய்கையின் வாய் *

நின்று தன் நீள் கழலேத்திய

ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் *

சென்று அங்கி னிதுறைகின்ற

செழும் பொழில் சூழ் திருவாறன் விளை

ஒன்றி * வலஞ் செய்ய ஒன்றுமோ ?

தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.         7.10.8    திருவாறன்விளை

தீவினை உள்ளத்தின் சார்வல்லவாகித்

தெளி விசும்பே றலுற்றால் *

நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்

அமைந்த தொழிலினுள்ளும் நவின்று *

யாவரும் வந்து வணங்கும் பொழில்

திருவாறன்விளை யதனை *

மேவி வலஞ் செய்து கை தொழக் கூடுங் கொல்?

என்னும் என் சிந்தனையே.   7.10.9    திருவாறன்விளை

சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை

தேவபிரானறியும் *

சிந்தையினால் செய்வதானறியாதன

மாயங்கள் ஒன்றுமில்லை *

சிந்தையினால் சொல்லினால் செய்கையால்

நிலத்தேவர் குழு வணங்கும் *

சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை

தீர்த்தனுக்கு அற்ற பின்னே.     7.10.10  திருவாறன்விளை

தீர்த்தனுக் கற்ற பின்

மற்றோர் சரணில்லை யென்றெண்ணித் *

தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனனாகிச்

செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன *

தீர்த்தங்க ளாயிரத்துள்

இவை பத்தும் வல்லார்களை *

தேவர் வைகல் தீர்த்தங்களே யென்று பூசித்து

நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.         7.10.11  திருவாறன்விளை

*********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.