[highlight_content]

Thiruvoymozhi 7-6

திருவாய்மொழி

ஏழாம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

பாமரு மூவுலகும் படைத்த, பற்பநாபா ஓ ! *

பாமரு மூவுலகு மளந்த, பற்ப பாதா ஓ ! *

தாமரைக் கண்ணா ஓ ! தனியேன் தனியாளா ஓ ! *

தாமரைக் கையா ஓ ! உன்னை என்று கொல் சேர்வதுவே?        7.6.1

என்று கொல் சேர்வது ?அந்தோ ! அரன் நான்முகனேத்தும் * செய்ய

நின் திருப் பாதத்தை யான் நிலம் நீரெரி கால் * விண்ணுயிர்

என்றிவை தாம் முதலா முற்றுமாய் நின்ற, எந்தாயோ ! *

குன்றெடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ !           7.6.2

காத்த எங்கூத்தாவோ ! மலையேந்திக் கல்மாரி தன்னைப் * பூத்தண் துழாய் முடியாய்! புனை கொன்றையஞ் செஞ்சடையாய் !*

வாய்த்த என் நான் முகனே ! வந்து என்னாருயிர் நீயானால் *

ஏத்தரும் கீர்த்தியினாய்! உன்னை எங்குத் தலைப் பெய்வனே?     7.6.3

எங்குத் தலைப் பெய்வன் நான்? எழில் மூவுலகும் நீயே *

அங்கு உயர் முக்கண் பிரான், பிரம பெருமா னவன் நீ *

வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன், முதலாத் தெய்வம் நீ *

கொங்கலர் தண்ணந் துழாய்முடி, என்னுடைக் கோவலனே !         7.6.4

என்னுடைக் கோவலனே ! என்பொல்லாக் கருமாணிக்கமே ! *

உன்னுடை உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து *

உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பாலுன்னைக் கண்டுகொண்டிட்டு *

என்னுடை யாருயிரார் எங்ஙனே கொல் வந்தெய்துவரே?    7.6.5

வந்தெய்துமாறு அறியேன் மல்குநீலச் சுடர் தழைப்பச் *

செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் *

அந்தர மேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்வு கண் வாய் *

செஞ்சுடர்ச் சோதி விடவுறை என் திருமார்பனையே.          7.6.6

என் திருமார்பன் தன்னை, என்மலைமகள் கூறன் தன்னை *,

என்றும் என் நாமகளை, அகம்பால் கொண்ட நான்முகனை *

நின்ற சசீபதியை, நிலங்கீண்டு எயில் மூன்றெரித்த *

வென்று புலம் துரந்த, விசும்பாளியைக் காணேனோ !       7.6.7

ஆளியைக் காண்பரியாய் அரிகாண் நரியாய் * அரக்கர்

ஊளையிட்டு, அன்று இலங்கை கடந்து பிலம் புக்கொளிப்ப *

மீளியம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று * பின்னும்

ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ ?      7.6.8

காண்டுங் கொலோ ? நெஞ்சமே ! கடிய வினையே முயலும் *

ஆண் திறல் மீளி மொய்ம்பின், அரக்கன் குலத்தைத் தடிந்து *

மீண்டும் அவன் தம்பிக்கே, விரிநீரிலங்கை யருளி *

ஆண்டு தன்சோதி புக்க, அமரர் அரியேற்றினையே.   7.6.9

ஏற்றரும் வைகுந்தத்தை, அருளும் நமக்கு * ஆயர் குலத்து

ஈற்றிளம் பிள்ளை யொன்றாய்ப் புக்கு, மாயங்களே இயற்றிக் *

கூற்றியல் கஞ்சனைக் கொன்று, ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து *

ஆற்றல் மிக்கான், பெரிய பரஞ்சோதி புக்க அரியே.        7.6.10

புக்க அரியுருவாய், அவுணனுடல் கீண்டுகந்த *

சக்கரச் செல்வன் தன்னைக், குருகூர்ச் சடகோபன் சொன்ன *

மிக்க ஓராயிரத்துள், இவை பத்தும் வல்லாரவரைத் *

தொக்குப் பல்லாண்டிசைத்துக், கவரி செய்வர் ஏழையரே.          7.6.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.