Thiruvoymozhi 4-10

திருவாய்மொழி

நான்காம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

ஒன்றும்தேவும் உலகும்உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று *

நான்முகன் தன்னொடு, தேவருலகோடு உயிர் படைத்தான் *

குன்றம் போல் மணி மாட நீடு, திருக் குருகூரதனுள்

நின்ற * ஆதிப்பிரான் நிற்க, மற்று எத் தெய்வம் நாடுதிரே?      4.10.1    திருக்குருகூர் (ஆழ்வார்திருந

நாடி நீர் வணங்கும் தெய்வமும், உம்மையும் முன் படைத்தான் *

வீடில் சீர்ப் புகழாதிப் பிரான் அவன், மேவி யுறை கோயில் *

மாட மாளிகை சூழ்ந்தழகாய, திருக்குருகூரதனைப் *

பாடி யாடிப் பரவிச் சென்மின்கள், பல்லுலகீர் பரந்தே.       4.10.2    திருக்குருகூர் (ஆழ்வார்திருந

பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து, அன்று உடனே விழுங்கிக் *

கரந் துமிழ்ந்து கடந் திடந்தது கண்டும், தெளிய கில்லீர் *

சிரங்களால் அமரர் வணங்கும், திருக்குருகூரதனுள் *

பரன் திறமன்றிப் பல்லுலகீர் ! தெய்வம் மற்றில்லை பேசுமினே.     4.10.3      திருக்குருகூர் (ஆழ்வார்திருந

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும், பிறர்க்கும்

நாயகன் அவனே * கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் *

தேசமா மதிள் சூழ்ந்தழகாய, திருக்குருகூரதனுள் *

ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே.    4.10.4    திருக்குருகூர் (ஆழ்வார்திருந

இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் *

மலிந்து வாது செய்வீர்களும் மற்று நுந் தெய்வமுமாகி நின்றான் *

மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூரதனுள் *

பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும்பொய்யில்லை போற்றுமினே.         4.10.5                திருக்குருகூர் (ஆழ்வார்திருந

போற்றி மற்றோர் தெய்வம் பேணப்புறத்திட்டு * உம்மையின்னே

தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை யென்றே *

சேற்றில் செந்நெல் கமல மோங்கு திருக்குருகூரதனுள் *

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்தோடுமினே.      4.10.6    திருக்குருகூர் (ஆழ்வார்திருந

ஓடி யோடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம் *

பாடி யாடிப் பணிந்து பல்படி கால், வழியேறிக் கண்டீர் *

கூடி வானவ ரேத்த நின்ற, திருக்குருகூரதனுள் *

ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு, அடிமை புகுவதுவே.       4.10.7    திருக்குருகூர் (ஆழ்வார்திருந

புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை *

நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணனருளே *

கொக்கலர் தடந்தாழை வேலித் திருக்குருகூரதனுள் *

மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்று எத்தெய்வம் விளம்புதிரே ?         4.10.8    திருக்குருகூர் (ஆழ்வார்திருந

விளம்பும் ஆறு சமயமும் அவை யாகியும் மற்றும் தன் பால் *

அளந்து காண்டற் கரியனாகிய ஆதிப்பிரா னமரும் *

வளம் கொள் தண்பணை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனை *

உளம்கொள்ஞானத்துவைம்மின் உம்மைஉய்யக்கொண்டு போகுறிலே.     4.10.9       திருக்குருகூர் (ஆழ்வார்திருந

உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால் *

மறுவில் மூர்த்தியோடொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே *

செறுவில் செந்நெல் கரும்பொடோங்கு திருக்குருகூரதனுள் *

குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.   4.10.10  திருக்குருகூர் (ஆழ்வார்திருந

ஆட்செய்து ஆழிப்பிரானைச்சேர்ந்தவன் வண்குருகூர்நகரான் *

நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் *

வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள், இப்பத்தும் வல்லார் *

மீட்சியின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே.      4.10.11  திருக்குருகூர் (ஆழ்வார்திருந

**********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.