[highlight_content]

Thiruvoymozhi 4-4

திருவாய்மொழி

நான்காம் பத்து

நான்காம் திருவாய்மொழி

மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும் *

விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும் *

கண்ணை உள் நீர்மல்க நின்று கடல்வண்ண னென்னுமன்னே ! * என்

பெண்ணைப் பெருமயல்செய்தாற்கு என்செய்கேன்? பெய்வளையீரே!       4.4.1      பரமபதம்

பெய்வளைக் கைகளைக்கூப்பிப் பிரான் கிடக்கும் கடலென்னும்*

செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈதென்னும் *

நையும் கண்ணீர் மல்க நின்று நாரணனென்னும் அன்னே ! * என்

தெய்வ வுருவிற் சிறுமான் செய்கின்ற தொன்றறியேனே.    4.4.2

அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதனென்னும், மெய் வேவாள் *

எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும் *

வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற *

செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கொன்றே.           4.4.3

ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே ! என்னும் *

நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும் *

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தானென்று ஆலும் *

என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.    4.4.4

கோமளவான்கன்றைப் புல்கிக் கோவிந்தன்மேய்த்தனவென்னும் *

போமிள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈதென்னும் *

ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற *

கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே.           4.4.5

கூத்தர் குடமெடுத்தாடில் கோவிந்தனா மெனா ஓடும் *

வாய்த்த குழலோசை கேட்கில் மாயவனென்று மையாக்கும் *

ஆய்ச்சியர்வெண்ணெய்கள்காணில்அவனுண்டவெண்ணெய்ஈதென்னும்*

பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்கொடி யேறிய பித்தே !        4.4.6

ஏறிய பித்தினோடு, எல்லாவுலகும் கண்ணன் படைப்பென்னும் *

நீறு செவ்வே யிடக் காணில் நெடுமாலடியா ரென்றோடும் *

நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈதென்னும் *

தேறியும் தேறாதும், மாயோன் திறத்தனளே இத்திருவே.     4.4.7

திருவுடைமன்னரைக் காணில் திருமாலைக்கண்டேனேயென்னும்*

உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந்தானென்று துள்ளும் *

கருவுடைத் தேவில்களெல்லாம் கடல்வண்ணன் கோயிலேயென்னும் *

வெருவிலும் வீழ்விலும் ஓவா கண்ணன் கழல்கள் விரும்புமே.         4.4.8

விரும்பிப், பகவரைக் காணில் வியலிட முண்டானே யென்னும் *

கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணனென்றேறப் பறக்கும் *

பெரும்புல வாநிரை காணில் பிரானுளனென்று பின் செல்லும் * அரும்பெறல் பெண்ணினைமாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.      4.4.9

அயர்க்கும்சுற்றும்பற்றிநோக்கி அகலவேநீள்நோக்குக்கொள்ளும்*

வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்கொள்ளும் மெய்சோரும் *

பெயர்த்தும் கண்ணா ! என்று பேசும் பெருமானே! வாவென்று கூவும்*

மயல்பெருங்காதலென்பேதைக்கு என்செய்கேன்? வல்வினையேனே.    4.4.10

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குருகூர்ச் சடகோபன் *

சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் *

நல்வினை யென்று கற்பார்கள் நலனுடை வைகுந்தம் நண்ணித் *

தொல் வினை தீர, எல்லோரும் தொழுதெழ வீற்றிருப்பாரே.      4.4.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.