[highlight_content]

श्रीरङ्गगद्यम्- பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

ஶ்ரீ43வத்3ராமாநுஜார்ய க்ருத ஶ்ரீரங்க33த்3யம்

श्री भगवद्रामानुजार्य कृत श्रीरङ्गगद्यम्॥

श्रीरङ्गगद्यम्

பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ஶ்ரீரங்க33த்3 வ்யாக்2யானம்

அவதாரிகை

            “ஸ்வாதீ4நேத்யாதி3”  (स्वाधीनेत्यादि) இக்க3த்3யத்தால் செய்ததாகிறது ப்ராப்யமான கைங்கர்யத்தை ப்ரத2மத்திலே ப்ரார்த்தி2த்து, தத்ஸித்3த்4யர்த்த2மாக ஆகிஞ்சந்யத்தை முன்னிட்டு, ஸ்வதோ3ஷக்2ஞாபந பூர்வகமாக திருவடிகளையே உபாயமாக ஸ்வீகரித்து, அநந்தரம் அர்த்த2நா மாத்ரத்தாலே இவ்விலக்ஷணமாயிருந்துள்ள தா3ஸ்யத்தைத் தந்தருளவேணுமென்று விஶ்வாஸ பூர்வகமாக ப்ராப்யந்தன்னையே பின்னையும் ப்ரார்த்தி2த்து, இவ்விஶ்வாஸந்தன்னையும் காருண்யாதி3 கல்யாணகு3ண பரிபூர்ணரான தேவரே எனக்குத் தந்தருளவேணுமென்றபேக்ஷித்து, தேவரீருக்கே அநந்யார்ஹ ஶேஷபூ4தமான இவ்வஸ்துவை ஸ்வரூபாநுகூலமான வ்ருத்தி பர்யந்தமாக தேவரீரே பண்ணியருளவேணுமென்று பெரியபெருமாள் திருவடிகளிலே அபேக்ஷித்துத் தலைக்கட்டுகிறார்.

            இப்ப்ரபத்யதி4காரத்திலே இழிந்த முமுக்ஷுக்கள் யாவதா3யுஷம் காலக்ஷேபம் பண்ணும்படி எங்ஙனே என்னில்; “வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது” [நான்.திரு. 63] என்கிறபடியே உகந்தருளின நிலங்களிலே அநுகூலவ்ருத்தியுடனே காலக்ஷேபம் பண்ணுதல், “மற்றவரைச் சாற்றியிருப்பார் தவம்” [நான். திரு. 18] என்றும், “ததீ3யாராதா4நம் பரம்” (111. तदीयाराधनं परं) என்றும் சொல்லுகிறபடியே உகந்தருளின நிலங்களிலே ப்ரவண ஹ்ருத3யரான ததீ3யருடைய ஆராத4னமாகிற (ஶ்ரீவைஷ்ணவர்கள் திறத்தில்) அநுகூலவ்ருத்தியுடனே காலக்ஷேபம் பண்ணுதல், அதிலே அஶக்தராயிருப்பார் “பாம்பணையான் சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை என்னினைந்து போக்குவரிப்போது” [பெரியதிரு 86] என்கிறபடியே ப43வத்3 கு3ணாநுப4வத்தாலே காலக்ஷேபம் பண்ணுதல், அவ்வளவு ப43வத்ப்ராவண்யம் போராதவர்கள் “த்3வயமர்த்தா2நுஸந்தா4நேந ஸஹ” என்கிறபடியே த்3வயத்தினுடைய அர்த்தா2நுஸந்தா4நத்தை பண்ணாநின்றுகொண்டு காலக்ஷேபம் பண்ணுதலாயாய்த்திருப்பது.

            அதில், இவர் த்3வயத்தினுடைய அர்த்தா2நுஸந்தா4நத்துடனே காலக்ஷேபம் பண்ண நினைத்து, அதில் பெரிய க3த்3யத்தில் விஸ்த்ருதமாக அநுஸந்தி4த்தவர்த்த2த்தை ஶ்ரோதாக்களுக்கு ஸுக்3ரஹமாகவும் பெருமாளுக்குத் திருச்செவி சாத்துகைக்கு ஏகாந்தமாகவுமாய், அந்த த்3வயத்தினுடைய அர்த்த2த்தையே பாசுரப்பரப்பறத் திருமுன்பே விண்ணப்பம் செய்யலாம்படி ஸங்க்3ரஹேண அருளிசெய்கிறார்.

மூ: சித3சித்பரதத்வாநாம் தத்வயாதா2த்ம்ய வேதி3நே

ராமாநுஜாயமுநயே நமோ மம 3ரீயஸே

चिदचित्परतत्त्वानां तत्त्वयाथात्म्य वेदिने

रामानुजाय मुनये नमो मम गरीयसे

முதல் சூர்ணை அவதாரிகை: இதில் முதல் சூர்ணையிலே பரம புருஷார்த்த2மாக நிர்ணீதமான கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார். கைங்கர்ய ப்ரதிஸம்ப3ந்தி4யாவான் நாராயணனிறே. அந்நாராயண ஶப்33த்துக்கு அர்த்த2ம் உப4ய விபூ4தியோக3மும், ஹேய ப்ரதிப4டத்வமும், ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகத்வமுமிறே. அதில் உப4ய விபூ4தி யோக3த்தை ப்ரத2மத்திலே அருளிச்செய்கிறார்.

மூ: ஸ்வாதீ4 த்ரிவித4 சேதநாசேதந ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திபே43ம்  (स्वाधीन त्रिविध चेतनाचेतन स्वरूपस्थितिप्रवृत्तिभेदं)      

வ்யா: ஸ்வாதீ4 த்ரிவித4 சேதநாசேதந ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திபே43ம்  (स्वाधीन त्रिविध चेतनाचेतन स्वरूपस्थितिप्रवृत्तिभेदं)            ஸ்வாதீ4நமான, த்ரிவித4 சேதந வர்க்க3ங்களென்ன, த்ரிவிதா4சேதந வர்க3ங்களென்ன; இவற்றினுடைய ஸ்வரூபபே43மென்ன; ஸ்தி2திபே43மென்ன; ப்ரவ்ருத்திபே43மென்ன; இவற்றை ஸ்வாதீ4நமாக உடையவன். சேதந த்ரைவித்3யமாவது- ப3த்34 முக்த நித்ய பே43த்தாலே.  அசேதந த்ரைவித்3யமாவது- ஶுத்34ஸத்வாமகத்தையாலும், கு3ணத்ரயாத்மகதையாலும், ஸ்ருஷ்ட்யாதி3களுக்கு நிர்வாஹகமான காலரூபத்வத்தாலும்.

            இதில் ப3த்3தா4த்மாக்கள் – ஜ்ஞாநஸங்கோசார்ஹ ஸ்வரூபராய், புண்யபாப ப2லமான ஸுக2து3:கா2நுப4வத்திலே ஸ்தி2தியையுடையராய் தத்3தே4துவான புண்யபாப கர்ம ப்ரவ்ருத்திகராயிருப்பர்கள். முக்தாத்மாக்கள்- ஜ்ஞாந ஸங்கோசரூபமான தேஹ ஸம்ப3ந்தா4தி3களில் நின்று ப43வத்3 ப்ரஸாத3த்தாலே நிவ்ருத்தராகையாலே ஆவிர்பூ4த ஸ்வரூபராய், கைங்கர்ய ஸுக2த்திலே ஸ்தி2தியையுடையராய், தத3நுரூபமாக, “ஸோஶ்நுதே ஸர்வான் காமாந்” (112.सोऽश्नुते सर्वान् कामान्) என்கிறபடியே ப43வத்3கு3ணாநுப4வ ப்ரவ்ருத்திகராயும், “யேந யேந தா4தா 3ச்ச2தி தேநதேந ஸஹ 3ச்ச2தி” (113.येन येन धाता गच्छति तेन तेन : गच्छति) என்கிறபடியே காயிகமான கைங்கர்ய ப்ரவ்ருத்திகராயும், அத்தாலே களித்து, “ஹா வுஹா வுஹா வு” (70. हा वुहा वुहा वु) என்கிறபடியே வாசிக ப்ரவ்ருத்திகராயிருப்பர்கள். நித்யஸித்34ர் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார க3ந்த4 ஸ்வரூபராய், முக்தரைப்போலே பாஶ்சாத்யரன்றிக்கே அநாத்3யநந்த கைங்கர்ய ஸுக2த்திலே ஸ்தி2தியையுடையராய் ஸதா33ர்ஶந ப்ரவ்ருத்திகராய், நித்யாஞ்ஜலிபுடராய், நித்ய ஸ்துதி ப்ரவ்ருத்திகராயுமிருப்பர்கள். [ஆகையாலேயாயிற்று நித்யரென்று இவர்களுக்குப் பேராயிற்று.]

            இனி ப்ரக்ருதிதத்வம் – கு3ணத்ரயாத்மகமாய் ஸதத பரிணாமஸ்வரூபமாய், சேதநருடைய கர்மாநுகு3ணமாகப் பரிணமிக்கையிலே ஸ்தி2தியையுடைத்தாய், சேதநர்க்கு, ஸ்வஸ்வரூப பரஸ்வரூப புருஷார்த்த2ஸ்வரூப, உபாயஸ்வரூப, விரோதி4ஸ்வரூப ஸம்ப3ந்த4ஸ்வரூப திரோதா4ந ப்ரவ்ருத்திகமாயிருக்கும். பஞ்சோபநிஷண்மயமான அசித்து – ஶுத்34ஸத்வமயமாய், ஸதை3க ஸ்வரூபமாய், நித்யமுக்தாதி3களுடைய கைங்கர்யத்துக்கு உபகரணரூபேணவும் ஈஶ்வரனுடைய ரக்ஷணகார்யத்துக்கு அநுகூலமாக வ்யூஹ விப4வரூபேணவும் ஸ்தி2தியையுடைத்தாய் ஸர்வத்ர ப்ரகாஶ ப்ரவ்ருத்திகமாயிருக்கும். காலம்- ப்ரக்ருதியிற்காட்டில் வ்யாவ்ருத்தமாய், ஏகரூப ஸ்வரூபமாய் நிமேஷகாஷ்டா2த்3யவஸ்தா2யுக்தமாய்க் கொண்டு ப்ராக்ருத பதா2ர்த்த2ங்களென்ன; தத்ஸம்ஸ்ருஷ்டசேதநரென்ன, இவற்றினுடைய நிர்வஹணத்திலே ஸ்தி2தியையுடைத்தாயும் ஸகலத்தினுடைய உத்பத்தி விநாஶாதி3 ப்ரவ்ருத்திகமாயுமிருக்கும். இவற்றை ஸ்வாதீ4நமாகவுடையனாகையாவது – அந்தராத்மதயா நின்று நியமிக்கை.

            ஆக ஸகலசேதநாசேதநங்களுடைய ஸத்தாஸ்தி2தி ப்ரவ்ருத்திகள் ஈஶ்வராதீ4நமாகையாலே இவற்றினுடைய ஶரீரத்வமும் அவனுடைய ஆத்மத்வமும் சொல்லிற்றாயிற்று. ஶரீரத்தினுடைய ஸத்தாஸ்தி2தி ப்ரவ்ருத்திகள் ஆத்மாதீநமாயிறேயிருப்பது. ஆக, இத்தால் ஈஶ்வரனுடைய விபூ4தியோக3ம் சொல்லிற்று.

மூ: க்லேஶ கர்மாத்3யஶேஷ தோ3ஷாஸம்ஸ்ப்ருஷ்டம். (क्लेशकर्माद्यशेषदोषासंस्पृष्टं)

வ்யா: க்லேஶ கர்மாத்3யஶேஷ தோ3ஷாஸம்ஸ்ப்ருஷ்டம். (क्लेशकर्माद्यशेषदोषासंस्पृष्टं) சேதநாசேதநங்கள் இரண்டும் ஶரீரமாய் ஈஶ்வரன் ஶரீரியாயிருக்கிறானாகில், ஶரீரஸம்ப3ந்த4 ப்ரயுக்தமான தோ3ஷம் ஶரீரிக்கு வாராதோ? என்னில்; தத்33த தோ3ஷைரஸம்ஸ்ப்ருஷ்டனென்கிறது. க்லேஶமாவது – அவித்3யாஸ்மிதாபி4நிவேஶ ராக3த்3வேஷா: பஞ்ச க்லேஶா: (114. अविद्यास्मिताभिनिवेश रागद्वेषा: पञ्चक्लेशा:) இவையென்ன, இந்த க்லேஶாதிகளுக்குக் காரணமுமாய் இவற்றினுடைய கார்யமுமான புண்யபாப ரூபகர்மமும், ஆதி3 (आदि) ஶப்3தோ3க்தமான விபாகாஶயங்களென்ன, இவை முதலான அஶேஷதோ3ஷங்களாலும் ஸ்பர்ஶிக்கப்படாதவன். விபாகமாகிறது – தே3வாதி3ஜாதியோக3மென்ன; ஆயுஸ்ஸென்ன இத்யாதி3கள். ஆஶயமாகிறது – தத்தஜ்ஜாத்யநுகு3ணமான பு3த்3தி4 பே43ங்கள். அஶேஷ ஶப்33த்தாலே – அசித்33தமான பரிணாமத்தையும் சேதநக3தமான து3:கா2ऽஜ்ஞாநாதி3களையும் நினைத்துக் கொள்வது. அஸம்ஸ்பர்ஶத்தாலே ப்ராக3பா4வத்தைநினைத்துக் கொள்வது.

மூ: ஸ்வாபா4விகாநவதி4காதிஶய (स्वाभाविकानवधिकातिशय)

வ்யா: ஸ்வாபா4விகேத்யாதி3 ஸர்வஸாதா4ரணமாயும், ஆஶ்ரிதவிஷயமாயும், ஆஶ்ரிதவிரோதி4 விஷயமாயும் மூன்றுவகைப்பட்ட கு3ணங்களைச்சொல்லுகிறது. ஸ்வாபா4விகமாகிறது – ஜலத்துக்கு ஶைத்யம் போலேயும் அக்3நிக்கு ஔஷ்ண்யம் போலேயும் யாவத்3த்3ரவ்ய பா4வியாயிருக்கை. அநவதி4காதிஶய (अनवधिकातिशय) “ஏகைக கு3ணாவதீ4ப்ஸயா ஸதா3ஸ்தி2தா:” (115. एकैक गुणावधीप्सया सदास्थिता:) என்கிறபடியே தனித்தனியே நிஸ்ஸீமமாய் ஆஶ்சர்யாவஹமுமாயிருக்கை.

மூ: ஜ்ஞாந 3லைஶ்வர்ய வீர்யஶக்திதேஜ: (ज्ञानबलैश्वर्य वीर्य शक्तितेज🙂

வ்யா: ஜ்ஞாந (ज्ञान) ஈஶ்வரஜ்ஞாநமாகிறது – “யோ வேத்தி யுக3பத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா3ஸ்வத:” (41. यो वेत्ति युगपत्सर्वं प्रत्यक्षेण सदा स्वत🙂 என்கிறபடியே ஸர்வகாலமும் ஸர்வவஸ்துக்களையும் யுக3பதே3வ ஸாக்ஷாத்கரிக்கும் ஸாமர்த்2யம்; அதாவது – விஷம ஸ்ருஷ்டியிலே கர்மீ ப4வித்திருந்துள்ள அஸங்க்2யாதமான ஆத்மாக்களுடைய ஸ்வரூப பே43த்தையும் [நாமபே43த்தையும்] தத்தத் கர்மபே43த்தையும் ஸாக்ஷாத்கரிக்கும் ஶக்தி.

            3 (बल) ஸ்ருஷ்டமான ஸகல பதா3ர்த்த2ங்களையும் ஸ்வஸங்கல்ப ஸஹஸ்ரைக தே3ஶத்தாலே த4ரிக்கும் தா4ரண ஸாமர்த்2யம். ஐஶ்வர்ய (ऐश्वर्य) த்3ருதரான ஸர்வாத்மாக்களையும் கர்மாநுகு3ணமாக நியமிக்கும் நியமந ஸாமர்த்2யம். வீர்ய (वीर्य) ஸ்ருஷ்ட்யாதி3 ஸகல வ்யாபாரங்களையும் பண்ணாநின்றாலும் அநாயாஸ ரூபமான அவிகாரித்வம். “யதா2 ஸந்நிதி4 மாத்ரேண 3ந்த4: க்ஷோபா4 ஜாயதே மநஸோ நோபகர்த்ருத்வாத் ததா2ஸௌ பரமேஶ்வர:” (116. यथा सन्निधिमात्रेण गन्ध: क्षोभाय जायते। मनसो नोपकर्तृत्वात् तथाऽसौ परमेश्वर:) ஶக்தி (शक्ति) ப்ரவ்ருத்யுந்முக2ரான சேதநர்க்கு ஶக்தியைக் கொடுத்து ப்ரவர்திப்பிக்கும் ப்ரவர்த்தகத்வ ஸாமர்த்2யம். அக4டித க4டநா ஸாமர்த்2யமாகவுமாம். ஜக3து3பாதா3ந ஶக்தியென்னவுமாம். தேஜ: (:) பராபி44வந ஸாமர்த்2யம். “குரூந் ப்ரச்சா23யந் ஶ்ரியா (117. 1.कुरून् प्रच्छादयन्श्रिया) “தமேவ பா4ந்தமநுபா4தி ஸர்வம்”(117. 2. तमेव भान्तमनुभाति सर्वम् )  இந்த ஜ்ஞாநாதி ஷட்கு3ணங்களும்  ஸர்வவிஷயம்.

மூ: ஸௌஶீல்ய வாத்ஸல்ய மார்த3வார்ஜவ ஸௌஹார்த3 (सौशील्य वात्सल्य मार्दवार्जव सौहार्द)

வ்யா: இப்படி ஸர்வோத்க்ருஷ்டநுக்கு ஆஶ்ரிதவிஷயமாக அநந்தரம் பன்னிரண்டு கு3ணம் சொல்லுகிறார். “ஸௌஶீல்ய” (सौशील्य) ஶீலமாவது – மஹதோ மந்தை3ஸ்ஸஹ நீரந்த்4ரேண ஸம்ஶ்லேஷஸ்வபா4வத்வம் (43. महतो मनदैस्सह नीरन्ध्रेण संश्लेषस्वभावात्वं. ஸௌஶீல்யமாவது – அந்தமஹத்வம் திருவுள்ளத்திலுமின்றிக்கேயிருக்கை. “ஆத்மாநம் மாநுஷம் மந்யே (44.आत्मानं मानुषं मन्ये) “வாத்ஸல்ய” (वात्सल्य) ஆஶ்ரிதக3தமான தோ3ஷமும் கு3ணமாய்த் தோற்றும் ப்ரேமம். அதாவது – ஆஶ்ரிதருடைய தோ3ஷத்தைத்தன் பேறாகப் போக்கி ஸ்வகு3ணங்களாலே த4ரிப்பிக்கை. செய்த குற்றம் நற்றமாகவே கொண்டு [திருச்சந்த 111] பாலேபோல் சீறில்  [பெரிய திருவ. 58] த4ரிப்பிக்கை. அதாவது – அத்3யஜாதமான வத்ஸத்தின் பக்கல் தே4நுவிருக்கும்படி. கோ3பாலத்வம் ஜுகு3ப்ஸிதம் (45. गोपालत्वं जुगुप्सितं) “மார்த3” (मार्दव) இது ரூபகு3ணமாயிருக்க, ஆத்மகு3ண ப்ரகரணமாகையாலே மாநஸ தௌ3ர்ப3ல்யத்தைக் காட்டுகிறது. அதாவது-ஆஶ்ரித விஶ்லேஷத்தைப் பொறுக்கமாட்டாதாமென்கை. “ஸம்ஸ்மராம்யஸ்ய வாக்யாநி” (118. संस्मरांयस्य  वाक्यानि)  “அநித்3ரஸ் ஸததம் ராம:” (46 अनिद्रस्सततं राम🙂ஆர்ஜவ” (आर्जव) ஆஶ்ரித ஸம்ஶ்லேஷார்த்த2மாகத் தன்னுடைய மநோவாக்காயங்களேகரூபமாயிருக்கை. அதாவது – அவர்களுடைய செவ்வைக்கேடே செவ்வையாய் விழும்படி தான் செவ்வியனாகை. “ஸௌஹார்த3” (सौहार्द)  “ஶோபநா ஶம்ஸீதி– ஸுஹ்ருத்” (शोभनाशंसीति सुहृत्) என்று ஆஶ்ரிதருடைய ஸந்நிதி4யோடு அஸந்நிதி4யோடு வாசியற அவர்களுடைய ஸர்வமங்க3ளங்களையும் அந்வேஷியா நிற்கை.

மூ: ஸாம்ய காருண்ய மாது4ர்ய காம்பீ4ர்யௌதா3ர்ய (साम्य कारुण्य माधुर्य गाम्भीर्य औदार्य)

வ்யா: “ஸாம்ய”  (साम्य) அதாவது ஜாதி கு3ணவ்ருத்தாதி3களாலுண்டான தாழ்வேற்றங்களைப் பாராதே ஆபி4முக்2யமே ஹேதுவாக ஆஶ்ரயணீயத்வே ஸமநாயிருக்கை. “கு3ஹேநஸஹித:” (47. गुहेन सहित🙂ஶப3ர்யாபூஜிதஸ் ஸம்யக்” (48. शबर्या पूजितस्सम्यक्) “காருண்ய” (कारुण्य)  அதாவது —ஸ்வார்த்த2 நிரபேக்ஷ பரது3:காஸஹிஷ்ணுத்வம் (49. स्वार्थ निरपेक्ष परदु:खाऽसहिष्णुत्वं) ப்4ருஶம் 4வதி து3:கி2:” (119: भृशं भवति दु:खित🙂  “ஸ்த்ரீ ப்ரணஷ்டேதி காருண்யாத்” (120. स्त्री प्रणष्टेति कारुण्यात्)மாது4ர்ய” (माधुर्य) அதாவது — ஸ்வரூப ரூபகு3ணவிபூ4திகளாலே ஸர்வதோமுக2மான ஸாரஸ்யம். ஹந்தும் ப்ரவ்ருத்தனானாலும் ரஸாவஹனாயிருக்கை. “அஸூர்யமிவ ஸூர்யேண நிவாதமிவவாயுநா க்ருஷ்ணேந ஸமுபேதேந ஜஹர்ஷே பாரதம் புரம்” (52. असूर्यमिवा सूर्येण निवातमिव वायुना। कृष्णेन समुपेतेन जहर्षे भारतं पुरं ) ஏஹ்யேஹி புல்லாம்பு3 பத்ர நேத்ர” (51. एह्येहि पुल्लाम्बुज पत्रनेत्र) ஸர்வக3ந்த4ஸ் ஸர்வரஸ:” (31 सर्वगन्धस्सर्वरस🙂கா3ம்பீ4ர்ய” (गाम्भीर्य) அதாவது — ஆஶ்ரிதர்குச்செய்ய நினைத்துத்திருக்குமவை ஒருவரால் பரிச்சே2தி3க்கவொண்ணாதாயிருக்கை. அதாகிறது- தன்னுடைய கொடையின் சீர்மையையும் கொள்ளுகிறவன் சிறுமையையும்  பாராதேயிருக்கையும், எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாயிருக்கை. ஆத்மதா3 3லதா3:” (53. आत्मदा बलदा🙂உன்னடியார்க்கென் செய்வனென்றே இருத்தி நீ[பெரிய திருவ. 53]ஔதார்ய”(औदार्य) அதாவது — ஆஶ்ரிதருடைய அபேக்ஷிதங்களைத்தான் இரந்து கொடுக்கை, ஸர்வாநர்த்தி2நோ த்3ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்3” (54. सर्वानर्त्थिनो दृष्ट्वा समेत्य प्रतिनन्द्य )  “உதா3ராஸ்ஸர்வ ஏவைதே” (55. उदारास्सर्व एवैते)

மூ: சாதுர்ய ஸ்தை2ர்ய தை4ர்ய ஶௌர்ய பராக்ரம (चातुर्य स्थैर्य धैर्य शौर्य पराक्रम)

வ்யா:சாதுர்ய” (चातुर्य) அதாவது-  ஆஶ்ரிதருடைய தோ3ஷங்களைப் புருஷகார பூதையான பிராட்டியறியாதபடி மறைக்கை. ஆஶ்ரிதர் தன்னுடைய ரக்ஷணத்திலே அதிஶங்கைப்பண்ணினால் அவ்வதிஶங்கையைப் போக்கி ரக்ஷிக்கையென்னவுமாம். “பாதா3ங்கு3ஷ்டே2 சிக்ஷேப ஸம்பூர்ணம் 3ஶயோஜநம் பி3பே43 புநஸ்ஸாலாந் (121. पादाङ्गुष्ठेन चिक्षेप सम्पूर्णं दशयोजनं। बिभेद पुनस्सालान्) “ஸ்தை2ர்ய” (स्थैर्य) அதாவது– ப்ரத்யூஹ ஸஹஸ்ரம் உண்டானாலும் ஆஶ்ரிதரக்ஷண ப்ரதிஜ்ஞை குலையாதொழிகை. மஹாராஜ ப்ரப்4ருதிகள் அநேகர் விரோதி4க்கச் செய்தேயும் “ த்யஜேயம் கத2ஞ்சந” (57. त्यजेयं कथञ्चन) என்றானிறே. ஆக இப்பன்னிரண்டு கு3ணங்களும் ஆஶ்ரிதவிஷயம்.

            அநந்தரம் மூன்றுகு3ணம் ஆஶ்ரிதப்ரதிபக்ஷ விஷயம்; “தை4ர்ய”(धैर्य) அதாவது — எதிரியை மதி3யா தொழிகை. லங்கையிலே ராவணனும் ப3லமுமெல்லாம் குறியழியாதிருக்கச்செய்தே அவன் தம்பியைக் கடற்கரையிலே லங்கா ராஜ்யத்துக்கு ராஜாவாக அபி4ஷேகத்தைப் பண்ணுவிக்கை. “அப்3தி4ம் தேரித2 (122. अब्धिं तेरिथ) மூலப3லம் ஸந்நிஹிதமான அன்று பெருமாளுடைய திருவுள்ளம் பூர்வ க்ஷணத்திற் காட்டில் ஒருவிக்ருதியன்றியிலே இருந்தபடியைச் சொல்லிற்றாகவுமாம். “ஶௌர்ய” (शौर्य) அதாவது– பரப3லத்திலே சென்று புகும்போது ஸ்வப3லம்போலே இருக்கையும் “சி2ன்னம் பி4ன்னம் ஶரைர் 3க்34ம்” (59. भिन्नं शरैर्दग्धं) என்கிறபடியே ப்ரஹர்த்தாவாயிருக்கையும். “பராக்ரம” (पराक्रम) அதாவது — சாரிகை வரும்போது கையும் வில்லுமாய் ஸஞ்சரிக்கும் ஸஞ்சாரத்திலே எதிரிகள் துவக்குண்டு ஶத்ரு என்று அறிய மாட்டாதபடி ஸஞ்சரிக்கை. “ப்ரஹர்த்தாரம் ஶரீரேஷு” (123. प्रहर्तारं शरीरेषु)

மூ: ஸத்யகாம ஸத்யஸங்கல்ப க்ருதித்வ (सत्यकाम सत्यसङ्कल्प कृतित्व)

வ்யா: ஸத்யகாம” (सत्यकाम) அநந்தரம் ஆஶ்ரித விஷயமாயும் உபாய விஷயமாயும் உபேய விஷயமாயுமிருக்கும் நாலு கு3ணங்களும் சொல்லுகிறது. நித்யமான காம்யங்களை உடையவனென்றபடி. அதாவது – ஆஶ்ரிதர்கநுபா4வ்யமான கு3ணங்களையும் விபூ4தியையும் சொல்லுகிறது. “காம்யந்த இதி காமா: (कांयन्त इति कामा🙂 ஆஶ்ரித ரக்ஷண விஷயமான மநோரத2ம் காமமென்கிறது. அது – அப்ரதிஹதமாயிருக்கை என்றுமாம்.

            “ஸத்யஸங்கல்ப” (सत्यसङ्कल्प) அபூர்வமான போ4க்3யங்களை ஸங்கல்பித்து அநுப4விக்குமிடத்தில் அமோக4மாயிருக்கை. “காணவாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து” [திருவாய் 8-5-2]என்றிருக்குமவர்களுக்குக் கண்ணாலே கண்டநுப4விக்கைக்கு தே3வ மநுஷ்யாத்3யவதார ஸங்கல்பம் அப்ரதிஹதமாயிருக்குமென்றுமாம்.

            “க்ருதித்வ” (कृतित्व) அதாவது — ஆஶ்ரிதர் அபி4மதம் பெற்றால் அப்பேறு தன்னதாயிருக்கை. “அபி4ஷிச்ய ச லங்காயாம்” (60. अभिषिच्य लङ्कायां) இவர்களுடைய கர்தவ்யங்களைத் தான் நேரிட்டுக்கொண்டு செய்கை என்னவுமாம். ஆதி3 கர்மணி க்தின்னந்த: (आदि कर्मणि क्तिन्नन्त🙂

மூ: க்ருதஜ்ஞதாத்3யஸங்க்2யேய கல்யாண கு3ணக3ணௌக4 மஹார்ணவம்

(कृतज्ञताद्यसङ्ख्येय कल्याण गुणगणौघमहार्णवं)

வ்யா:க்ருதஜ்ஞதா” (कृतज्ञता) அதாவது — ஆஶ்ரிதர் ஒருகால் ஶரணமென்ன உக்திமாத்ரத்தாலே பின்பு செய்யும் குற்றம் பாராதே அத்தையே நினைத்திருக்கை. ஆஶ்ரித விஷயத்தில் தான் செய்தவற்றை ஒழிந்து அவர்கள் செய்தவற்றையே நினைத்திருக்கை என்னவுமாம். ஆஶ்ரிதர்க்கெல்லாம் செய்தாலும் அத்தைமறந்து ப்ரத2மத்திலே ஶரணமென்ற உக்திமாத்ரத்தையே நினைத்திருக்கை என்னவுமாம். “ஶிரஸா யாசதஸ்தஸ்ய வசநம் ந க்ருதம் மயா” (62. शिरसा याचतस्तस्य वचनं कृतं मया )

            “அஸங்க்2யேய கல்யாண கு3ணக3ணௌக4 மஹார்ணவம்” (असङ्ख्येय कल्याण गुणगणौघमहार्णवंஆதி3 (आदि) இவை முதலான என்னுடைய மநஸ்ஸுக்கு கோ3சரமாயிருப்பன சில கல்யாணகு3ணங்கள் சொல்லப்பட்டவித்தனைபோக்கி. அநுக்தமான கு3ணங்களுக்கு எண்ணில்லை.  ஒரு மஹார்ணவத்தில் ஜலபரமாணுவுக்கு ஸங்க்2யையுண்டாகிலாய்த்து ப43வத்3 கு3ணங்களுக்கும் ஸங்க்2யையுண்டாவது. “வர்ஷாயுதைர் யஸ்ய கு3ணா ந ஶக்யா:” (63. वर्षायुतैर्यस्य गुणा शक्या:) “சதுர்முகா2யுர் யதி3 கோடிவக்த்ர:”  (64. चतुर्मुखायुर्यदि कोटिवक्त्र🙂

மூ: பரப்3ரஹ்மபூ4தம் புருஷோத்தமம் ஶ்ரீரங்க3ஶாயிநம் (परब्रह्मभूतं, पुरुषोत्तमं, श्रीरङ्गशायिनं)

வ்யா:பரப்3ரஹ்மபூ4தம் புருஷோத்தமம்” (परब्रह्मभूतं  पुरुषोत्तमं ) பரப்3ரஹ்ம ஶப்33த்தாலும் புருஷோத்தம ஶப்33த்தாலும் வேதா3ந்தங்களிலே ப்ரஸித்34மானவன். பரப்3ரஹ்மமாவது- ப்3ருஹத்வ ப்3ரும்ஹணத்வ கு3ணயோக3த்தாலே ப்3ரஹ்ம ஶப்33வாச்யத்வம். ப்3ருஹத்த்வமாவது – தான் பெரியனாகை. ப்3ரும்ஹணத்வமாவது – “தம்மையே யொக்கவருள் செய்வர்[பெரிய திரு. 11-3-5]என்றும் “மம ஸாத4ர்ம்யமாக3தா:” (124. मम साधर्म्यमागता🙂 என்றும் சொல்லுகிறபடியே ஆஶ்ரிதரைத் தன்னைப்போலேயாக்குகை. “தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளும்” [திருவாய் 3-9-4], புருஷோத்தமத்வமாவது – “யஸ்மாத் க்ஷரமதிதோ மக்ஷராத3பி சோத்தம: அதோஸ்மி லோகே வேதே3 ப்ரதி2: புருஷோத்தம:” (125 यस्मात्क्षरमतितोऽहमक्षरादपि चोत्तम।: अतोऽस्मि लोके वेदे प्रथित: पुरुषोत्तम:) என்று ஸர்வாதி4கனென்றும், “புரு3ஹு, ஸுநோதி3தா3தீதிபுருஷ:” என்றும், ஸர்வாபேக்ஷித ப2லப்ரத3னாகையாலே பரமோதா3ரனென்றும் சொல்லுகிறது.

            “ஶ்ரீரங்க3ஶாயிநம்” (श्रीरङ्गशायिनं) இப்படி என்றுமொக்க ஓலைப்புறத்திலே (ஶ்ருதி ஸ்ம்ருதிகளில்) கேட்டுப்போகையன்றிக்கே கண்ணாலே கண்டநுப4விக்கலாம்படி கோயிலிலே கண்வளர்ந்தருளுகிற நீர்மையைச் சொல்லுகிறது.

மூ: அஸ்மத் ஸ்வாமிநம் ப்ரபு3த்34 நித்யநியாம்ய நித்யதா3ஸ்யைக ரஸாத்ம ஸ்வபா4வோஹம்,  (अस्मत्स्वामिनं, प्रबुद्धनित्यनियाम्य नित्यदास्यैकरसात्मस्वभावोऽहं)

வ்யா:அஸ்மத்ஸ்வாமிநம்” (अस्मत्स्वामिनं) இத்தால், “கிடந்ததோர் கிடக்கை” [திருமாலை 23] என்கிறபடியே கோயிலிலே வந்து கண் வளர்ந்தருளுகிறவழகாலும் ஶீலத்தாலும் தம்மோடு எனக்குண்டான முறையையுணர்த்தினவரை; “கு3ணைர் தா3ஸ்யமுபாக3:” (126. गुणैर्दास्यमुपागत🙂 என்னக்கடவதிறே.

இதுக்குக்கீழே கைங்கர்ய ப்ரதிஸம்ப3ந்தி4யைச் சொல்லிற்றாய்த்து.  இதுக்குமேல் கைங்கர்யத்துக்காஶ்ரயமான ஸ்வரூபத்தைச் சொல்லுகிறார். “ப்ரபு3த்34 நித்யநியாம்ய நித்யதா3ஸ்யைக ரஸாத்ம ஸ்வபா4வோஹம்” (प्रबुद्धनित्यनियाम्य नित्यदास्यैकरसात्मस्वभावोऽहं)  ப்ரபுத்34மான நித்யநியாம்யமாய், நித்ய தா3ஸ்யத்தையே ஏக ரஸமாக உடைத்தாயிருந்துள்ள ஆத்ம ஸ்வபா4வம் உள்ளபடி ப்ரகாஶித்த நான்; இத்தால் ஸ்வாதந்த்ர்யமும் விஷயாந்தர ப்ராவண்யமும் ஆத்மவிநாஶகமென்றபடி.

மூ: ததேகாநுப4: ததே3கப்ரிய: பரிபூர்ணம் 43வந்தம் (तदेकानुभवः तदेकप्रियः, परिपूर्णं भगवन्तं)

வ்யா: ததேகாநுப4: ததே3கப்ரிய: (तदेकानुभवः तदेकप्रियः)43வத்3 விஷயமென்றுமே ஜ்ஞாநத்துக்கு விஷயமாம்படியாய் அவனையே ப4க்திக்கும் விஷயமாக்கினவனாய். இத்தால் ப43வதநுப4வ ஹேதுவாயிருந்துள்ள பரப4க்த்யாதி3களை நினைத்துக் கொள்வது.

மூ: விஶத3தமாநுப4வேந நிரந்தரமநுபூ4, தத3நுப4வஜநிதாநவதி4காதிஶய ப்ரீதிகாரிதா (विशदतमानुभवेन निरन्तरमनुभूय, तदनुभवजनितानवधिकातिशय प्रीतिकारिता)

வ்யா: பரிபூர்ணம் 43வந்தம் விஶத3தமாநுப4வேந நிரந்தரமநுபூ4” (परिपूर्णं भगवन्तं विशदतमानुभवेन निरन्तरमनुभूय) ஜ்ஞாநதி3களால் குறைவற்றிருக்கிற ப43வானைப் பரிபூர்ணமாக விஶத3தமாநுப4வத்தாலே இடைவிடாதே அநுப4வித்து. பரிபூர்ணாநுப4வமாகிறது- ஸ்வரூபரூப கு3ண விபூ4திகளெல்லாம் அநுப4வத்துக்கு விஷயமாகை. விஶதா3நுப4வமாகிறது – ப்ரத்யக்ஷாநுப4வமென்னலாம்படி தத்ஸமமாயிருக்கை. அதுதான் பரப4க்தித3ஶாநுப4வம். விஶத3தரநுப4வம்- பரஜ்ஞாநத3ஶையிலநுப4வம். விஶத3தமாநுப4வம்- பரமப4க்தி யுக்தனாயநுப4விக்குமநுப4வம். நிரந்தராநுப4வமாகிறது- நடுவு விஷயாந்தர ஸ்பர்ஶமன்றிக்கே ஒழிகை.

            “தத3நுப4வஜநிதாநவதி4காதிஶய ப்ரீதிகாரிதா” (तदनुभवजनितानवधिकातिशय प्रीतिकारिता) அந்த அநுப4வத்தாலே பிறந்த ப்ரீதியாலே பண்ணப்படுமதாய் ஸர்வாவஸ்தை2யிலுமுசிதமான ஸகல ஶேஷவ்ருத்தியொன்றையுமே பற்றின ஆசையை வடிவாகவுடையத்தாய், யாவதா3த்மபா4வியாயிருந்துள்ள கைங்கர்யத்துக்காஶ்ரய பூ4தனாகவேணும். அநவதி4காதிஶயத்வமாவது – யாவதா3த்மபா4வியான கைங்கர்யத்துக்கு அடியாயிருக்கையும் பரப4க்த்யாதி3களிற்காட்டில் அதிஶயித்திருக்கையும்.

மூ: அஶேஷாவஸ்தோ2சிதாஶேஷ ஶேஷதைகரதிரூப நித்யகிங்கரோ 4வாநி;

(अशेषावस्थोचित अशेषशेषतैकरतिरूप नित्यकिङ्करो भवानि)

வ்யா: “அஶேஷ” (अशेष) அஶேஷாவஸ்தை2களாவன – அந்த:புரமென்ன, திருவோலக்கமென்ன, பூஞ்சோலை, நீர் வாவி இவைமுதலானவையென்னுதல், பர வ்யூஹ விப4வார்சாவதாரங்களாகிற இவைமுதலான அவஸ்தை2களென்னுதல். “அஶேஷ ஶேஷதைகரதிரூப நித்யகிங்கரோ 4வாநி;  (अशेषशेषतैकरतिरूप नित्यकिङ्करो भवानि)  அஶேஷ ஶேஷதைகரதியாகிறது. “நிவாஸ ஶய்யாஸந பாது3காம்ஶுகோபதா4நவர்ஷாதபவாரணாதி3பி4:” (127. निवास शय्यासान पादुकांशुकोपधानवर्षातपवारणादिभि🙂என்றும், “சென்றால் குடையாம்[முதல் திரு 53]என்றும், “யதா3 யதா3 ஹி” (128. यदा यदा हि) என்றும் சொல்லுகிற நாநா வித4மான அடிமைகள்.

மூ: ஸ்வாத்ம நித்ய நியாம்ய நித்யதா3ஸ்யைகரஸாத்ம ஸ்வபா4வாநுஸந்தா4நபூர்வக 43வத3நவதி4காதிஶய ஸ்வாம்யாத்யகி2 கு3ணக3ணாநுப4வஜநிதாநவதி4காதிஶய ப்ரீதிகாரிதாஶேஷாவஸ்தோ2சிதாஶேஷ ஶேஷதைக ரதிரூப நித்ய (स्वात्म नित्यनियाम्य नित्यदास्यैकरसात्म स्वभावानुसन्धानपूर्वक भगवदनवधिकातिशय स्वाम्याद्यखिलगुणगणानुभवजनित अनवधिकातिशय प्रीतिकारिताशेषावस्थोचित अशेषशेषतैकरतिरूप नित्य)

இரண்டாவது சூர்ணை அவதாரிகை:

 “ஸ்வாத்ம்ய நித்ய நியாம்யேதி(स्वात्म नित्यनियाम्य) ப்ராப்யத்தை ப்ரார்த்தி2த்தார் கீழ். இத்தால் அநந்யக3தித்வமென்ன; ஆகிஞ்சந்யமென்ன; ஸ்வதோ3ஷமென்ன, இவற்றை முன்னிட்டுக்கொண்டு இந்த கைங்கர்யத்தினுடைய ஸித்3த்4யர்த்த2மாக திருவடிகளிலே ஶரணம் புகுகிறார்.

வ்யா: ஸ்வஸ்வரூபாநுஸந்தா4ந ப்ரீதியாலும் ப43வத்3கு3ணாநுப4வ ப்ரீதியாலும் கைங்கர்ய ஸ்வரூபகத2ந ப்ரீதியாலும், “ஸ்வாத்மநித்யநியாம்ய” (स्वात्म नित्यनियाम्य) என்றுதொடங்கி “நித்யகைங்கர்ய” என்னுமளவும் செல்ல உக்தத்தை அநுபா4ஷிக்கிறார். பாரதந்த்ர்ய ரஸத்தாலே ஸ்வரூபாநுஸந்தா4நமும் ப43வத்3 வைலக்ஷண்யத்தாலே தத்3கு3ணாநுப4வமும் உப4யாநுகூலமாய் ப்ரீதிகாரிதமாகையாலே கைங்கர்யமும் அபி4மதமாயிருக்குமிறே.

            “அநவதி4காதிஶய ஸ்வாம்ய (अनवधिकातिशय स्वाम्य) என்று- ஔபாதி4க ஸ்வாமித்வங்களை வ்யாவர்த்திக்கிறது. மாதா பிதா ப்ரப்4ருதிகளுடைய ஸ்வாமித்வம் ஓரோ ரக்ஷணங்களுக்குறுப்பாய், ஒருநாளிலே முடியவும் கடவதாயிருப்பது. அங்ஙனன்றிக்கே, இந்த ஸ்வாமித்வம் ஸர்வவித4ர ரக்ஷணங்களுக்குமுறுப்பாய் ஸத்தாப்ரயுக்தமாயிறே இருப்பது. ஸ்வாமித்வ ப்ரயுக்தமான கு3ணங்களைச் சொல்லிற்று கீழ்ச்சூர்ணையிலே. அவற்றுக்கடியான ஸ்வாமித்வத்தை முதலாகச்  சொல்லுகிறதிங்கு. கைங்கர்ய ப்ராப்த்யுபாய [பூ4த] ப4க்தியாகிறது –பரப4க்தி.

மூ: கைங்கர்ய ப்ராப்த்யுபாய [பூ4] 4க்திதது3பாய ஸம்யக் ஜ்ஞாநதது3பாய ஸமீசீநக்ரியா தத3நுகு3 ஸாத்விகதாஸ்திக்யாதி3 ஸமஸ்தாத்மகு3ணவிஹீந: (कैङ्कर्य प्राप्त्युपायभूतभक्ति तदुपाय सम्यग्ज्ञान तदुपाय समीचीनक्रिया तदनुगुण सात्विकतास्तिक्यादि समस्तात्मगुणविहीनः)

வ்யா:தது3பாய ஸம்யக் ஜ்ஞாந” (तदुपाय सम्यग्ज्ञान) ஸம்யக்ஜ்ஞாநமாகிறது – ஜீவ பர யாதா2த்ம்ய விஷயமாய், அநவரத பா4வநாரூபமாம்படி பரிபக்வமாநஜ்ஞாநம். “தது3பாயஸமீசீநக்ரியா (तदुपाय समीचीनक्रिया) ஸமீசீந க்ரியையாவது – ஆத்மயாதா2த்ம்யஜ்ஞாநத்தை யுடைத்தாய் த்ரிவித4 பரித்யாக3யுக்தமான கர்மயோக3ம். “தத3நுகு3 ஸாத்விகதாஸ்திக்யாதி3 ஸமஸ்தாத்மகு3ணவிஹீந:” (तदनुगुण सात्विकतास्तिक्यादि समस्तात्मगुणविहीनः🙂  கீழ்ச்சொன்ன கர்மயோக3ங்களுக்கு அநுகு3ணமாய் ஸத்வப்ரதா4நமாய்” “ஶமோ 3மஸ் தபஶ் ஶௌசம் க்ஷாந்திரார்ஜவமேவச ஜ்ஞாநம் விஞ்ஞானமாஸ்திக்யம் (128. शमोदमस्शौचं क्षान्तिरार्जवमेव च। ज्ञानं विज्ञानमास्तिक्यं॥)” என்கிறபடியே ஶமத3மாத்3யாஸ்திக்ய பர்யந்தமான  கு3ணங்களாலும் அமாநித்வாதி3களுமான ஸமஸ்தாத்ம கு3ணங்களால் ஶூந்யனாய் இருந்தேனே ஆகிலும்,

மூ: து3ருத்தராநந்த தத்3விபர்யய ஜ்ஞாநக்ரியாநுகு3ணாநாதி3 பாபவாஸநா மஹார்ணவந்தர்நிமக்3: (दुरुत्तरानन्त तद्विपर्यय ज्ञानक्रियानुगुणाऽनादि पापवासना महार्णवान्तर्निमग्नः)

வ்யா:து3ருத்தரேத்யாதி3”  இதுக்குக்கீழ் “அகிஞ்சந:” (129. अकिञ्चन:) என்கிறபடியே தம்முடைய ஆகிஞ்சந்யத்தைச் சொன்னார். இதுக்குமேலே “அஹமஸ்ம்யபராதா4நாமாலய:(129. अहमस्म्यपराधानामालय:) என்கிறபடியே ஸ்வதோ3ஷக்2ஞாபனம் பண்ணுகிறார். கடக்கவரிதாய் அவதி4யின்றிக்கே கீழ்ச்சொன்ன கர்ம ஜ்ஞாநங்களுக்கு விபரீதமான ஜ்ஞாநவ்ருத்தாதி3களுக்கனுகு3ணமாய் அநாதி3யாயிருந்துள்ள பாபவாஸநையாகிற பெருங்கடலிலேயழுந்துகை; பாபவாஸநையாகிறது – பாபத்தாலே வந்த வாஸநையாதல், பாபத்துக்கு ஹேதுவான வாஸநையாதல்.

மூ: திலதைலவத்தா3ருவந்ஹிவத், து3ர்விவேச த்ரிகு3ணக்ஷணக்ஷரண ஸ்வபா4வாசேதந ப்ரக்ருதிவ்யாப்திரூப (तिलतैलवत् दारुवह्निवत् दुर्विवेच त्रिगुण क्षणक्षरणस्वभाव अचेतनप्रकृतिव्याप्तिरूप)

வ்யா:திலதைலவதித்யாதி3” (तिलतैलवत्) பாபவாஸநையிலே அகப்படுகைக்கடியான ப்ரக்ருதிஸம்ப3ந்த4 நிப3ந்த4நமான ஸ்வரூப திரோதா4நத்தைச் சொல்லுகிறது. “திலதைலவத்தா3ருவந்ஹிவத், து3ர்விவேச” (तिलतैलवत् दारुवह्निवत् दुर्विवेच) ப்ரக்ருத்யாத்மவிவேகம் பண்ணுமிடத்துச் சிலரால் பிரிய அநுஸந்தி4க்க அரிதென்னுமிடத்துக்கு இரண்டு  த்3ருஷ்டாந்தம் சொல்லுகிறார். விரகராய், ஶக்தநுமாயிருப்பர் பிரிக்கில் பிரிக்குமத்தனையிறே, எள்ளிலெண்ணை போலவும் அரணியிலே அக்நி போலவும் இருக்கை. இப்படி ஜ்ஞாந வாஸநையாலும் ப43வத்3 ப்ரஸாத3த்தாலும் ப்ரக்ருதியையும் ஆத்மாவையும் பிரிய அநுஸந்தி4க்குமதொழிய அல்லாதார்க்குப் பிரியவநுஸந்தி4க்கவெண்ணாத படியிறே ப்ரக்ருதியிலே ஆத்மா அழுந்தித் திரோஹிதமாய்க் கிடக்கிறபடி. “தா3ருண்யக்3நிர் யதா2 தைலம் திலே தத்3வத் புமாநபி ப்ரதா4நேவஸ்தி2தோ வ்யாபீ சேதநாத்மாத்மவேத3:” (दारुण्यग्निर्यथा तैलं तिले तद्वत् पुमानपि। प्रधानेऽवस्थितो व्यापी चेतनात्मात्मवेदन:) என்னக்கடவதிறே.

            “த்ரிகு3ணக்ஷணக்ஷரண ஸ்வபா4” (त्रिगुण क्षणक्षरणस्वभाव ) ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களையும் ஸததபரிணாமித்வங்களையும் ஸ்வபா4வமாகவுடைத்தாய். “அசேதந ப்ரக்ருதிவ்யாப்திரூப” (अचेतनप्रकृतिव्याप्तिरूप) ஜட3 ஸ்வபா4மான ப்ரக்ருதியிலே அவர்ஜநீயமான  ஸம்ப3ந்த4த்தையுடைத்தாய்.

மூ: து3ரத்யய 43வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ:, அநாத்3யவித்3யா ஸஞ்சிதாநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்ரதி2:,(दुरत्यय भगवन्मायातिरोहित स्वप्रकाशःअनाद्यविद्यासञ्चितानन्ताशक्य विस्रंसन कर्मपाशप्रग्रथितः)

வ்யா:து3ரத்யய 43வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ:” (दुरत्यय भगवन्मायातिरोहित स्वप्रकाशः🙂

து3ரத்யய” (दुरत्यय) என்கிறபடியே கடக்கவரிதாய், “மம மாயா து3ரத்யயா” (97. मम माया दुरत्यया) என்கிறபடியே கடக்கவரிதாய், ஒரு ஸர்வ ஶக்தியாலே ப3ந்தி4க்கப்படுமதாய், “மாயாம் து ப்ரக்ருதிம் வித்3யாத்” (131. मायां तु प्रकृतिं विद्यात् என்கிறபடியே மாயா ஶப்33 வாச்யையாயிருந்துள்ள ப்ரக்ருதியாலே மறைக்கப்பட்ட ஆத்ம ப்ரகாஶத்தையுடையனாய்,

            “அநாத்3யவித்3யா ஸஞ்சிதாநந்தாஶக்ய விஸ்ரம்ஸந கர்மபாஶ ப்ரக்ரதி2: (अनाद्यविद्या सञ्चितानन्ताशक्य विस्रंसन कर्मपाशप्रग्रथितः)  அநாதி3யான அஜ்ஞாநத்தாலே திரட்டப்பட்டதாய், அஸங்க்2யேயமாய் என்னோடு பிறரோடு வாசியற ஒருவராலும் அவிழ்க்க ஶக்யமின்றிக்கேயிருந்துள்ள புண்ய பாபரூப கர்மமாகிற கயிற்றாலே “புறமறக் கட்டிக்கொண்டு[திருவாய் 5-1-6] என்கிறபடியே கட்டுண்டவனாய், இவ்வளவும் வர- அபராதா4நாமாலயத்வம்” (129. अपराधानां आलयत्वं) சொல்லிற்றாய்த்து. “வாஸநா மஹார்ணவந்தர்நிமக்3::” (वासना महार्णवान्तर्निमग्न🙂 என்றும் “43வந்மாயா திரோஹித ஸ்வப்ரகாஶ:” (भगवन्मायातिरोहित स्वप्रकाशः🙂 என்றும், “கர்மபாஶ ப்ரக்ரதி2:” (कर्मपाशप्रग्रथितः🙂 என்றும் சொல்லுகையாலே வாஸநா கார்யம் ஸ்வரூப திரோதா4ந ஸ்வரூப மாநவஜ்ஞாநமாம். தத்கார்யம் கர்மமாயிருக்கிறபடியைச் சொல்லிற்றாய்த்து.

மூ: அநாக3தாநந்தகால ஸமீக்ஷயாப்யத்3ருஷ்ட ஸந்தாரோபாய: நிகி2 ஜந்துஜாத ஶரண்ய (अनागतानन्तकाल समीक्षयाऽपि अदृष्टसन्तारोपायः निखिलजन्तुजात शरण्य)

வ்யா:அநாக3தாநந்தகால ஸமீக்ஷயாப்யத்3ருஷ்ட ஸந்தாரோபாய:” (अनागतानन्तकाल समीक्षयाऽपि अदृष्टसन्तारोपायः) ஆகையாலே இதுக்கு முன்பு பாராதே மேலும் முடிவின்றிக்கே யிருந்துள்ள கால பரம்பரைகளை அடையப் பார்த்தாலும் காணப்படாதேயிருந்துள்ள ஸம்ஸார ஸாக3ர ஸமுத்தரணோபாயத்தை உடையனாயிருந்துள்ள நான்.

            “நிகி2 ஜந்துஜாத ஶரண்ய” (निखिलजन्तुजात शरण्य) இப்படி அநுகூலங்களில் ஒன்றுமின்றிக்கே ப்ரதிகூலங்களில்லாததன்றிக்கே ஜநந மாத்ரயோகி3களான ஸகல ஜந்துக்களுக்கும் ஶரணவரணார்ஹனானவனே! இத்தால் எனக்கும் ஶரணவரணார்ஹனென்று கருத்து. “அகி2லஜக3த் ஸ்வாமிந்” (अखिलजगत्स्वामिन्) என்று வைத்து  “அஸ்மத்ஸ்வாமிந்” (अस्मत्स्वामिन्) என்னுமாப்போலே  

மூ: ஶ்ரீமந்நாராயண தவசரணாரவிந்த3யுக3ளம் ஶரணமஹம் ப்ரபத்3யே

(श्रीमन्नारायण, तव चरणारविन्दयुगलं शरणमहं प्रपद्ये)

வ்யா:ஶ்ரீமந்” (श्रीमन्) பூர்வவ்ருத்தம் பார்த்து, “க்ஷிபாமி” (9. क्षिपामि) என்ன அவஸரமின்றிக்கே அருகேயிருந்தும் சேர்ப்பாரும் உண்டென்கிறார். “நாராயண” (नारायण) இஜ்ஜந்துக்கள் விமுக2ராய்க் கிடக்கும் த3ஶையிலும்  ஸத்தையை நோக்கிக்கொண்டு போந்தவனல்லையோ? ஆக, அருகேயிருந்த பிராட்டியைப் பார்த்து ரக்ஷித்தருளவேணும். தேவரீரைப் பார்த்தாலும் ரக்ஷிக்கவேணுமென்றபடி. “தவ சரணாரவிந்த3யுக3ளம் ஶரணமஹம் ப்ரபத்3யே” (तव चरणारविन्दयुगलं शरणमहं प्रपद्ये) பரம காருணிகரான தேவரீருடையதாய் ஸர்வ ஸுலப4மாய் நிரதிஶய போ4க்3யமாய் ஒன்றுக்கொன்று உபமானமாமதொழியச் சலித்துப்பார்த்தாலும்  வேறு உபமானமின்றிக்கே இருக்கிற  திருவடிகளையே உபாயமாக அத்4யவஸிக்கிறேன். இது, க3த்யர்த்த2மானாலும், “3த்யர்த்தா2 பு3த்3த்4யர்த்தா2:” என்கிற ந்யாயத்தாலே அத்4யவஸாயத்தைக் காட்டுகிறது.

மூ: ஏவமவஸ்தி2தஸ்யாப்யர்தி2த்வமாத்ரேண (एवमवस्थितस्यापि अर्थित्वमात्रेण)

மூன்றாவது சூர்ணை அவதாரிகை: ஏவமவஸ்தி2தேத்யாதி3”  உபாயவரணாநந்தரம் அர்த்தி2த்வ மாத்ரத்தாலே தமக்கு தா3ஸ்யரஸத்தைத் தந்தருள வேணுமென்கிற மஹாவிஶ்வாஸத்தை முன்னிட்டுக்கொண்டு ப்ராப்யத்தை ப்ரார்த்தி2க்கிறார்.

வ்யா: ஏவமவஸ்தி2தஸ்யாபி” (एवमवस्थितस्यापि) உக்தப்ரகாரத்தாலே நின்றவெனக்கும். அதாவது – அபராதா4னாம் ஆலயனாய், அகிஞ்சநனாய்க்கொண்டு தேவரீர் திருவடிகளையே உபாயமாக பற்றின எனக்குமென்றபடி. “அர்த்தி2த்வமாத்ரேண” (अर्थित्वमात्रेण) விரோதி4வர்க3த்திலுபேக்ஷையாதல், ப்ராப்யத்தில் த்வரையாதலின்றிக்கேயிருக்க, ப்ராப்யத்தில் நிரபேக்ஷனாயிராதே அபேக்ஷிதாமாத்ரத்தாலே.

மூ: பரமகாருணிகோ 43வான் ஸ்வாநுப4வப்ரீத்யோபநீதைகாந்திகாத்யந்திக நித்யகைங்கர்யைகரதிரூப (परमकारुणिको भगवान्, स्वानुभवप्रीत्य उपनीतैकान्तिकात्यन्तिक नित्यकैङ्कर्यैकरतिरूप)

வ்யா:பரமகாருணிகோ 43வான்” (परमकारुणिको भगवान्) என்னுடைய ஸாம்ஸாரிகமான து3:க்க2த்தைக்கண்டு ப்4ருஶம் 4வதி து3:க்கி2:” (119. भृशं बति दु:खित🙂 என்கிறபடியே மிகவும் பொறுக்கமாட்டாத ஸ்வபா4வத்தை யுடையனாய், ஆத்மோஜ்ஜீவநத்துக்கும் ஹேதுவான ஜ்ஞாநஶக்த்யாதி3களால் பரிபூர்ணனாயிருந்துள்ள தேவரீர். இவ்விஶேஷகு3ணங்களிரண்டும் அர்த்த2நாமாத்ரத்தாலே புருஷார்த்த2 ப்ரத3னாகைக்கு ஹேது சொல்லுகிறது.

            மேல் அபேக்ஷிதந்தன்னைச் சொல்லுகிறது. “ஸ்வாநுப4வப்ரீத்யோபநீதைகாந்திகாத்யந்திக நித்யகைங்கர்யைகரதிரூப (स्वानुभवप्रीत्य उपनीतैकान्तिकात्यन्तिक नित्यकैङ्कर्यैकरतिरूप) தன்னுடைய அநுப4வ ப்ரீதியாலே உண்டாவதாய், ஒருபடிப்பட்டு முடிவின்றிக்கே இருந்துள்ள கிங்கர ஸ்வபா4வத்தைப் பற்றியிருக்கிற ஆசையை வடிவாக உடைத்தாயிருந்துள்ள,

மூ: நித்யதா3ஸ்யம் தா3ஸ்யதீதி விஶ்வாஸபூர்வகம் 43வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த2யே தவாநுபூ4தி ஸம்பூ4 ப்ரீதிகாரித தா3ஸதாம் தே3ஹிமேக்ருபயாநாத2 ஜாநே 3திமந்யதா2 (नित्यदास्यं दास्यतीति विश्वासपूर्वकं भगवन्तं नित्यकिङ्करतां प्रार्थये तवानुभूतिसम्भूत प्रीतिकारितदासताम् देहि मे कृपया नाथ जाने गतिमन्यथा )

வ்யா: நித்யதா3ஸ்யம் தா3ஸ்யதீதி விஶ்வாஸபூர்வகம் (नित्यदास्यं दास्यतीति विश्वासपूर्वकं) யாவதா3த்ம பா4வியான தா3ஸ்யத்தைத் தந்தருளவேணுமென்கிற மஹாவிஶ்வாஸத்தை முன்பாகக்கொண்டு “43வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த2யே” (भगवन्तं नित्यकिङ्करतां प्रार्थये) பூஜ்யனான ஸர்வேஶ்வரனைக் குறித்து நித்யகைங்கர்யத்தை ப்ரார்த்தி2க்கிறேன். தா3ஸ்யமென்றும் கைங்கர்யமென்றும் பர்யாயம்.

நாலாவது  சூர்ணை அவதாரிகைதவாநுபூ4தீத்யாதி3” தம்முடைய பாசுரத்தாலே ப்ராப்யத்தை ப்ரார்த்தி2த்தார்கீள்; இதில் ஐதிஹாஸிகர் ப்ரார்தி2த்த ப்ரகாரத்தே ப்ரார்த்தி2க்கிறார். எந்தப் பாசுரத்துக்கு இரங்கும் ஈஶ்வரன் என்றறியாத படியான தம்முடைய ப்ராப்யத்வரையாலே.

தவாநுபூ4தி ஸம்பூ4 ப்ரீதிகாரித தா3ஸதாம் தே3ஹிமேக்ருபயாநாத2 ஜாநே 3திமந்யதா2 (तवानुभूतिसम्भूत प्रीतिकारितदासताम् देहि मे कृपया नाथ जाने गतिमन्यथा )

வ்யா:  உன்னுடைய அநுபூ4தியாலேயுண்டான ப்ரீதியாலே பண்ணப்பட்ட தா3ஸ்ய ரஸத்தைத் தந்தருளவேணும். “மே” (मे) ருசிக்கு மேற்பட இன்றியிலேயிருக்கிறே எனக்கு “க்ருபயா நாத2” (कृपया नाथ) இத்தலையில் து3ர்க3தியைக்கண்டு இரங்கின இரக்கத்தாலும் அவர்ஜநீயமான ஸம்ப3ந்த4த்தாலும் ஜாநே 3திமந்யதா( जाने गतिमन्यथा॥) இப்ப்ரகாரமொழிய வேறு எனக்கு ஓருபாயமறிகிலேன்.

மூ: ஸர்வாவஸ்தோ2சிதாஶேஷ ஶேஷதைகரதிஸ்தவ

4வேயம் புண்ட3ரீகாக்ஷ த்வமே வைவம் குருஷ்வமாம்

(सर्वावस्थोचिताशेषशेषतैकरतिस्तव भवेयं पुण्डरीकाक्ष त्वमेवैवं कुरुष्व माम् )

ஐந்தாவது  சூர்ணை வ்யாக்2யானம்: ஸர்வாவஸ்தோ2சிதாஶேஷ ஶேஷதைகரதிஸ்தவ” (सर्वावस्थोचिताशेषशेषतैकरतिस्तव) இத்தா3ஸ்யத்துக்கடியான ப்ரீதியும் எனக்குண்டாம்படி தேவரீரே கடாக்ஷித்தருளவேணுமென்கிறார். தேவர் திருவடிகளிலே ஸர்வாவஸ்தோ2சிதமாயிருந்துள்ள ஸர்வ ஶேஷத்வத்தையொன்றுமே பற்றியிருந்துள்ள ப்ரேமத்தையுடையனாக வேணும். “4வேயம் புண்ட3ரீகாக்ஷ” (भवेयं पुण्डरीकाक्ष) இப்ப்ரேமத்தை “ஜிதந்தே புண்ட3ரீகாக்ஷ” (88. जितन्ते पुण्डरीकाक्ष) என்கிறபடியே ருசிஜநகமான விஶேஷ கடாக்ஷத்தாலே பண்ணியருளவேணும். “த்வமே வைவம் குருஷ்வமாம்” (त्वमेवैवं कुरुष्व माम्) என்பக்கலொரு ஸஹகார்யந்தரத்தை அபேக்ஷியாதே ஸர்வாபேக்ஷிதங்களுக்கும் தேவரீரையே பார்த்திருக்குமென்னை தேவரீரே இப்படிப் பண்ணியருளவேணும்.

மூ: ஏவம்பூ4 தத்வயாதா2த்ம்யாவபோ34 ததி3ச்சா2ரஹிதஸ்யாபி

(एवम्भृततत्त्वयाथात्म्यावबोधितदिच्छारहितस्यापि)

ஆறாவது  சூர்ணை அவதாரிகை: ஏவம்பூ4தேதி”   உம்முடைய பக்கல் அபேக்ஷிதத்தைத் தருகைக்கு ப்ராப்யத்தினுடைய யதா2ஜ்ஞாநமும் தத்3ருசியுமின்றிக்கேயிருக்க, உம்முடைய அபேக்ஷிதத்தைத் தருகைக்கு முதலேதென்ன, “ இப்பாசுரத்தைச் சொன்னமாத்ரத்திலே இதில் சொன்ன வாக்யத்தினுடைய தாத்பர்யத்திலே என்னுடைய மநஸ்ஸு  நிஷ்ட2மாம்படி தேவரீரே பார்த்தருளவேணுமென்கிறார்.

வ்யா: ஏவம்பூ4 தத்வயாதா2த்ம்யாவபோ34 ததி3ச்சா2ரஹிதஸ்யாபி” (एवम्भृततत्त्वयाथात्म्यावबोधतदिच्छारहितस्यापि) ஜீவஸ்வரூபமென்ன, பரஸ்வரூபமென்ன, ப்ராப்திப2லமான கைங்கர்யமென்ன இவற்றினுடைய யாதா2த்ம்ய ஜ்ஞாநமின்றிக்கே இருந்ததேயாகிலும். “ததி3ச்சா2ரஹிதஸ்யாபி” (तदिच्छारहितस्यापि) அதிலே இச்சை2யுமின்றிக்கே இருந்ததேயாகிலும்;

மூ: ஏதது3ச்சாரணமாத்ராவலம்ப3நேந உச்யமாநார்த2 பரமார்த2நிஷ்ட2ம் மேமநஸ்த்வமேவாத்3யைவ காரய (एतदुच्चारणमात्रावलम्बनेन, उच्यमानार्थ परमार्थनिष्ठं मे मनः त्वमेवाद्यैव कारय )

வ்யா:ஏதது3ச்சாரணமாத்ராவலம்ப3நேந” (एतदुच्चारणमात्रावलम्बनेन) உக்தமான பாசுரத்தினுடைய உச்சாரணமாத்ரத்தையே பற்றாசாகக் கொண்டு “உச்யமாநார்த2 பரமார்த2நிஷ்ட2ம் மே மந:” (उच्यमानार्थ परमार्थनिष्ठं मे मनः🙂 ஒரு கைம்முதலின்றிக்கே இருக்கிற என்னுடைய “நின்றவா நில்லா[பெரிய திரு. 1-1-4]ப்ரமாதி3யான மனஸ்ஸை” [கீ3தை 6-34]  இதிலே சொல்லப்படா நின்றுள்ள அர்த்த2த்தினுடைய யாதாத்ம்யத்திலே நிஷ்டமாம்படி சபல ஸ்வபாவமான மநஸ்ஸை. “த்வமேவாத்3யைவ காரய” (त्वमेवाद्यैव कारय) ஸஹகாரி நிரபேக்ஷரான தேவரீரே விளம்பி3யாதபடி இப்போதே பண்ணியருளவேணும்.

மூ: அபாரகருணாம்பு3தே4! அநாலோசிதவிஶேஷாஶேஷலோக ஶரண்ய

(अपारकरुणाम्बुधे, अनालोचितविशेषाशेषलोकशरण्य)

ஏழாவது சூர்ணை அவதாரிகை: அபாரேத்யாதி”  இப்படி அபேக்ஷிதம் செய்கைக்கு ஹேது அத்தலையில் ஸ்வபா4வங்களையருளிச்செய்கிறார்.

வ்யா:அபாரகருணாம்பு3தே4” (अपारकरुणाम्बुधे) கரைகடந்த க்ருபாஸமுத்3ரமானவரே. கருணையாகிறது – “து3:காऽஸஹிஷ்ணுத்வம்”.  அதுதான் அபரிச்சே2த்3யமாகையாலே ஸமுத்3ரமாகப் பேசுகிறார்; அதுக்கு அபாரத்வமாகிறது “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்4ருஶம்ப4வதி து3:கி2:” (119. व्यसनेषु मनुष्याणां भृशं भवति दु:खित🙂 என்கிறபடியே ஆஶ்ரிதரளவின்றிக்கே மநுஷ்ய ஸாமாந்யத்திலும் வந்தேறுகை. இத்தால் என்னளவும் வரவெள்ளம் கோத்தது  என்கிறார்.

            “அநாலோசிதவிஶேஷாஶேஷலோக ஶரண்ய ( अनालोचितविशेषाशेषलोकशरण्य) ஜந்ம வ்ருத்த ஞானங்களால் வந்த தாழ்வேற்றங்களென்ன; கு3ணத்தாலும் ஜ்ஞாநத்தாலும் வந்த தாழ்வேற்றங்களென்ன, இப்பே43ங்கள் ஒன்றையும் பாராதேயிருந்ததே குடியாக எல்லார்க்கும் ஶரண வரணார்ஹனானவனே: இத்தால் கீழ்ச்சொன்ன க்ருபா கார்யமான  ஸர்வலோக ஶரண்யத்வம் சொல்லிற்றாயிற்று.

மூ: ப்ரணதார்திஹர! ஆஶ்ரிதவாத்ஸல்யைக மஹோத3தே4! (प्रणतार्तिहर, आश्रितवात्सल्यैक महोदधे)

வ்யா:ப்ரணதார்திஹர” (प्रणतार्तिहर) உக்தமான க்ருபையையும் ஶரண்யத்தையையும் அநுஸந்தி4த்துத் திருவடிகளிலே தலை சாய்ந்தார் இழவுகளைத் தீர்க்குமவனே, “ஆஶ்ரிதவாத்ஸல்யைக மஹோத3தே4! (आश्रितवात्सल्यैक महोदधे) அன்று ஈன்ற கன்றினுடைய மலத்தை ஸ்வயம் ப்ரயோஜநமாகப் போக்கும் தே4நுவைப்போலே ஆஶ்ரிதருடைய தோ3ஷத்தைத் தேவரீரே தன்பேறாகப் போக்குகையாகிற இஸ்ஸ்வபா4வம் அநுஸந்தா4தாக்களுக்குப் பரிச்சே2தி3க்கவொண்ணாதாயிருக்கும் பெருமையையுடையவனே “மஹோத3தே4!” (महोदधे) என்று – உக்தமான கருணாம்பு3தி4யில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது.

மூ: அநவரதவிதி3 நிகி2 பூ4தஜாத யாதா2த்ம்ய! அஶேஷசராசரபூ4 நிகி2 நியமன நிரத அஶேஷசித3சித்3வஸ்துஶேஷிபூ4 நிகி2லஜக3தா3தா4 அகி2லஜக3த்ஸ்வாமின், அஸ்மத்ஸ்வாமின் ஸத்யகாம! ஸத்யஸங்கல்ப!

(अनवरतविदित निखिलभूतजात याथात्म्य, अशेषचराचरभूत, निखिलनियमनिरत, अशेषचिदचिद्वस्तुशेषीभूत,

निखिलजगदाधार, अखिलजगत्स्वामिन्, अस्मत्स्वामिन्सत्यकाम, सत्यसङ्कल्प)

வ்யா: “அநவரதேத்யாதி”  ஸர்வகாலமும் அறியப்பட்டிருந்துள்ள ஸகல பூ4த ஜாதங்களினுடைய உண்மையை யுடையவனே! இத்தால் ஸ்வதஸ் ஸர்வஜ்ஞரான தேவரீருக்கு என்னுடைய தன்மையை நான் அறிவிக்கவேண்டாவிறே என்கை. “ஸத்யகாம” (सत्यकाम) நித்யமான காமங்களையுடையவனே! இத்தால், ஆஶ்ரிதருடைய அபேக்ஷிதங்களைக் கொடுக்கைக்கடியான அவாப்த ஸமஸ்தகாமத்வம் சொல்லுகிறது.

            “ஸத்யஸங்கல்ப” (सत्यसङ्कल्प) அமோக4 ஸங்கல்பத்தையுடையவனே! அபூர்வமாக போ43ங்களை ஸங்கல்பித்துக் கொடுக்குமிடத்தில் அவை தப்பாதிருக்கை.

மூ: ஸகலேதர விலக்ஷண அர்த்தி2கல்பக ஆபத்ஸக2 காகுத்ஸ்த2! ஶ்ரீமந்நாராயண! (सकलेतरविलक्षण, अर्थिकल्पक, आपत्सख, काकुत्स्थ, श्रीमन्नारायण)

வ்யா:ஆபத்ஸக2” (आपत्सख) ஆபத்து நேரிடுமாகில், அங்குத்தைக்குத் துணையானவனே! தன்னால் வந்த ஆபத்துக்கும் பிறரால் வந்த ஆபத்துக்கும் துணையாகை ஒழிய ரக்ஷகரான தேவரீர் கைவிட்டவளவிலும் தேவரீரையே துணையாகப் பற்றலாயிருக்கை. “காகுத்ஸ்த2” (काकुत्स्थ) நம்மால் வந்த அநர்த்த2த்துக்கும் நாமே துணையென்னுமிடம் எங்ஙனே கண்டீரென்ன; ககுத்ஸ்த2வம்ஶ ப்ரஸூதரான தேவரீராசரித்த அர்த்த2மன்றோ!. வதா4ர்ஹ மபி காகுத்ஸ்த2: க்ருபயாபர்யபாலயத்” (132. वधार्हमपि काकुत्स्थ: कृपया पर्यपालयत्) என்னக்கடவதிறே.

            “ஶ்ரீமந்” (श्रीमन्) தேவரீருபேக்ஷித்தாலும் தேவரால் விடவொண்ணாதபடி அருகேயிருந்து சேரவிடுவாரும் உண்டென்கை. இத்தால், அருகேயிருக்கிறே பிராட்டியைப் பார்த்து ரக்ஷித்தருளவேணுமென்கை. “நாராயண” (नारायण) அவள் தானே சில குற்றம் சொல்லிலும் “என்னடியாரது செய்யார்[பெரியாழ். திருமொழி 4-10-2] என்னும் தேவரோடுண்டான ஸம்ப3ந்த4த்தைப் பார்த்து ரக்ஷித்தருளவேணும்.

மூ: புருஷோத்தம! ஶ்ரீரங்க3நாத2! ( पुरुषोत्तम श्रीरङ्गनाथ)

வ்யா:புருஷோத்தம” (पुरुषोत्तम) அர்த்தி2ப்பாரை “உதா3ரா:”  என்னும் தேவரீருடைய ஔதா3ர்யத்தைப் பார்த்து ரக்ஷித்தருளவேணும்.

            “ஶ்ரீரங்க3நாத2” (श्रीरङ्गनाथ) கீழ்ச் சொன்ன ஸ்வபா4வங்களெல்லாம் ஶாஸ்த்ரங்களிலே கேட்டுப்போகாமே ப்ரத்யக்ஷிக்கலாம்படி அன்றோ தேவரீர் கோயிலிலேவந்து கண் வளர்ந்தருளுகிறது.

மூ: மம நாத2 நமோஸ்துதே. ( मम नाथ, नमोऽस्तुते )

॥ இதி ஶ்ரீ ப43வத்3ராமாநுஜ விரசிதே க3த்3யத்ரயே ஶ்ரீரங்கக3த்3யம் ஸம்பூர்ணம்.॥

வ்யா:மம நாத2” (मम नाथ) “கோயிலிலே வந்து கண் வளர்ந்தருளுகிறது எனக்கு இம்முறையை உணர்த்துகைக்காக  என்கிறார். “நமோஸ்துதே” (नमोऽस्तुते) முறையை உணர்ந்தார்க்கு அபேக்ஷிதமாய் ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்த2த்தையபேக்ஷித்துத் தலைக்கட்டுகிறார். “உண்டிட்டாய் இனி உண்டொழியாய்” [திருவாய் 10-10-6] என்னக்கடவதிறே. தேவரீர்க்கே ஶேஷமான இவ்வாத்மவஸ்து தேவரீருக்கே போ4க்3யமாய்த் தலைக்கட்டவேணும்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே ஶரணம்

பரம காருணிகரான ஶ்ரீபெரியவாச்சான் பிள்ளையருளிச்செய்த ஶ்ரீரங்கக3த்3யவ்யாக்யாநம் முற்றிற்று

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.