[highlight_content]

शरणागतिगद्यम्- பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநம்

॥ ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ॥

ஶ்ரீவிஶிஷ்டாத்3வைத ஸித்3தா4ந்த நிர்தா4ரண து3ரந்தர: ।

ஶ்ரீப43வத்ராமாநுஜ விரசிதம் க3த்3யத்ரயம் ॥

भगवरामानुजाचार्यविरचितं

गद्य त्रयम्

शरणागतिगद्यम्

தநியன்கள்

ஶ்ரீஶைலேஶத3யாபாத்ரம் தீ44க்த்யாதி3 கு3ணார்ணவம் ।

யதீந்த்ரப்ரவணம் வந்தே3 ரம்யஜாமாதரம் முநிம்॥

லக்ஷ்மீநாத2 ஸமாரம்பா4ம் நாத2யாமுநமத்3யமாம் ।

அஸ்மதா3சார்யபர்யந்தாம் வந்தே3 கு3ருபரம்பராம் ॥

யோநித்யமச்யுதபதா3ம்பு4ஜ யுக்3மருக்3

வ்யாமோஹதஸ்ததி2தராணி த்ருணாயமேநே ।

அஸ்மத்கு3ரோர் ப43வதோஸ்ய த3யைக ஸிந்தோ4:

ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்3யே ॥

மாதாபிதா யுவதயஸ்தநயாவிபூ4திஸ்

ஸர்வம் யதே3வ நியமேந மதந்வயாநாம்।

ஆத்3யஸ்யந: குலபதேர்வகுளாபி4ராமம்

ஶ்ரீமத்த3தங்க்4ரியுக3ளம் ப்ரணமாமி மூர்த்4நா ॥

பூ4தம் ஸரஶ்ச மஹதாஹ்வயப4ட்டநாத2

ஶ்ரீப4க்திஸார குலஶேக2ர யோகி3வாஹாந் ।

4க்தாங்க்4ரிரேணு பரகால யதீ3ந்த்ரமிஶ்ராந்

ஶ்ரீமத்3பராங்குஶமுநிம் ப்ரணதோ2ஸ்மி நித்யம்॥

பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த

ஶரணாக3திக3த்3 வ்யாக்2யாநம்

ஶ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே।

யத்கடாக்ஷணலக்ஷ்யாணாம் ஸுலப4ஶ்ஶ்ரீத4ரஸ்ஸதா3

அவதாரிகை:

ஶ்ரீபா4ஷ்யத்தில் “தத்த்வமஸி” (1. तत्त्वमसि)இத்யாதி3 வாக்யஜந்யஜ்ஞாநமே மோக்ஷஸாத4நமென்றும், கர்மஜ்ஞாந ஸமுச்ச்யமே மோக்ஷஸாத4நமென்றும் சொல்லுகிற குத்3ருஷ்டிகளை நிரஸிக்கைக்காக, கர்மாங்க3மாய் வேத3ந த்4யாநோபாஸநாதி3 ஶப்33வாச்யமாய் ப4க்திரூபாபந்நமான உபாஸநாத்மகஜ்ஞாநமே வேதா3ந்தப்ரதிபாத்3ய மான மோக்ஷஸாத4னமென்று இவர் நிஶ்சயித்தருளிச்செய்கையாலே, இவர் மோக்ஷஸாத4நமாக அறுதியிட்ட அர்த்த2ம் இதுவேயென்று கொண்டு தம்முடைய ருசிபரிக்3ருஹீதமான அர்த்த2த்தையே விஶ்வஸித்திருக்கும் ஸாத்விகர் இத்தையே விஶ்வஸித்திருக்கக்கூடுமென்று பார்த்தருளி ஆசார்ய ருசிபரிக்3ருஹீதமுமாய் தமக்குத் தஞ்சமாகத் தாம் அறுதியிட்டிருக்கும் அர்த்த2ம் ப்ரபத்தியென்னுமிடத்தை இக்க3த்3யரூபேண வெளியிட்டருளுகிறார்.

            ஆனால், இப்ப்ரபத்தி தன்னையேகொண்டு குத்3ருஷ்டி நிரஸநம் பண்ணாதொழிவானென்னென்னில்; ப்3ராஹ்மணன் சண்டா3ளனுக்கு வேத3த்தை உபதே3ஶித்தாப்போலே தூ3ரஸ்த2ரானவர்களுக்கு பரமரஹஸ்யமான இவ்வர்த்த2த்தை வெளியிடவொண்ணாதென்று பார்த்து, அவர்களிழிந்த ஶாஸ்த்ரமுக2த்தாலேயே அவர்களை நிரஸித்து ஶாஸ்த்ரதாத்பர்யமான ஸ்வஸித்3தா4ந்தத்தை இம்முக2த்தாலே வெளியிடுகிறார்.

            வேதா3ந்தங்களிலே மஹாபத2(पथ)மாகச்சொல்லுகிற ப4க்தியைக்காட்டில் இப்ப்ரபத்திக்கு ஏற்றமென்னென்னில்; அது அதி4க்ருதாதி4காரமாய், து3ஷ்கரமுமாய், விளம்ப்3யப2லப்ரத3முமாய், ப்ரமாத3 ஸம்பா4வநையுள்ளதுமாய், ஸாத்4யமுமாய், ஸ்வரூபாநுரூபமாய், ப்ராப்யத்துக்கு விஸத்3ருஶமாயிருக்கும். இதுவோவென்றால், அதுக்கு எதிர்த்தட்டாம்படி ஸர்வாதி4காரமுமாய், ஸுகரமுமாய், அவிளம்ப்3ய ப2லப்ரத3முமாய் ப்ரமாத3ஸம்பா4வநையுமின்றிக்கே, ஸித்34முமாய், ஸ்வரூபாநுரூபமுமாய், ப்ராப்யத்துக்கு ஸத்3ருஶமுமாயிருக்கும்.

ஆனால் இவ்வுபாயம்- வேதா3ந்தஸித்34மோ, அன்றோவென்னில்:- யாஜ்ஞிகீயமான உபநிஷத்திலே, “ஸத்யம் தபோத3மஶ்ஶமோதா3நம் த4ர்ம: ப்ரஜநநமக்3நயோऽக்3நிஹோத்ரம் யஜ்ஞோமாநஸம்” (2. सत्यं तपो दम: शमो दानं धर्म: प्रजननमग्नयोऽग्निहोत्रं यज्ञो मानसं) என்று ஒன்றுக்கொன்று உத்க்ருஷ்டமாகச் சொல்லிப்போந்து எல்லாவற்றுக்கும் மேலாக, “தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு:” (3. तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहु:) என்று “தபஸ்ஸுக்களில் வைத்துக்கொண்டு அதிரிக்தமான தபஸ்ஸு ப்ரபத்தி” என்று இதனுடைய உத்கர்ஷம் சொல்லிற்று. அதுக்குமேலே “த4ர்மஜ்ஞஸமய: ப்ரமாணம் வேதா3ஶ்ச” (4. धर्मज्ञसमय: प्रमाणं वेदाश्च) என்று ப்ரப3லப்ரமாணமான ஆசார்யருசி பரிக்3ருஹீதத்வமாகிற ஏற்றமும் இதுக்குண்டு. “வேதா3ஶ்ச” (4. वेदाश्च) என்று வேத3மும் அப்ரதா4நப்ரமாணமாம்படியிறே வைதி3க பரிக்3ருஹீதத்வத்தின் ப்ராமாண்யாதிஶயமிருப்பது. அளவுடையராயிருப்பார்கு இதுவே போருமாயிற்று ப்ராமாண்யத்துக்கு. இதுதான் அளவில்லாதார்க்கு வேதா3ந்தஸித்34முமாயிருக்கும்.

            ஆக, இப்படி வேதா3ந்த ஸித்34முமாய் ஸ்வரூபப்ராப்தமுமாய், ஆசார்யருசி பரிக்3ருஹீதமுமாய், ஶரண்ய ஹ்ருத3யாநுஸாரியுமாயிருக்கையாலே அதிலும் இதுவே அநுஷ்டே2யமென்னுமிடத்தைத் தம்மைவிஶ்வஸித்திருக்கும் ஸாத்விகர் இழக்கவொண்ணாதென்று பார்த்து, தாமும் பெரியபெருமாளும் அறிந்ததாக அநுஸந்தி4த்துவிட  அமைந்திருக்க, தம்முடைய பரமக்ருபையாலே க3த்3யமுகே2ந வெளியிடுகிறார்.

             இதுதான் அவதரித்தபடி எங்ஙனேயென்னில்; பங்குனி உத்திரத்திருநாளிலே பெருமாளும் நாய்ச்சிமாரும் புறப்பட்டு ஏறியருளா நிற்குமளவிலே எம்பெருமானார் எழுந்தருளித் திருவடி தொழாநின்றார். அஸ்யாமவஸ்தா2யாம், திருவுள்ளத்திலே ஸம்ஸாரபீ4தி நடையாட, திருவடிகளிலே விழுந்து ஶரணம்புக்கு ஶரணம்புக்க ப்ரகாரத்துக்குப் பாசுரமிட்டபடி.

            முதலிலே ஸம்ஸாரப4யபீ4தராய்க் கொண்டு பெரியநம்பி ஶ்ரீபாத3த்தை ஆஶ்ரயித்தபோதே பெரிய பெருமாள் திருவடிகளிலே ஶரணம் புக்கிலரோ? “ஸக்ருதே3வ” (5. सकृदेव) என்றன்றோ ஶரண்யஹ்ருத3யமிருப்பது; ஆனபின்பு, “தத்தஸ்ய ஸத்3ருஶம் ப4வேத்” (6. तत्तस्य सदृशं भवेत्) என்றும், “உன்னாலல்லால் யாவராலும் ஒன்றும்  குறைவேண்டேன்” (திருவாய்மொழி 5-8-3) என்றும், “களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்’ (திருவாய்மொழி 5-8-8) என்றும், சொல்லுகிறபடியே, “உடையவன் உடைமையைச் செய்தபடி செய்கிறான்” என்று ஆறியிருக்க ப்ராப்தமாயிருக்க, திரியட்டும் இப்போது ஶரணம் புகவேண்டுவானென்னென்னில்; இவ்வளவு ஆறியிருக்கமாட்டாத தம் ப்ராப்யத்வரையாலே ஶரணம் புகுகிறார். இதிறே ஆழ்வாகளுக்கும் ரீதி, அவர்களை அடியொற்றுகிற ஆசார்யர்களுக்கும் இதுவே ரீதியாமத்தனையன்றோ? ஸம்ஸாரபீ4தியும் ப்ராப்யருசியும் கனக்கக் கனக்க ஒருகால் ஶரணம் புக்காப்போலே ஒன்பதின்கால் ஶரணம் புகுமித்தனையிறே அவர்கள். ஆக, ஸம்ஸார நிவ்ருத்திபூர்வகமாகக் கைங்கர்யஸித்3தி4க்குப் பெரியபெருமாள் திருவடிகளிலே ஶரணம் புகுகிறார்.

            முதல் சூர்ணை அவதாரிகை: இதுதான் த்3வயத்துக்கு வ்யாக்2யாநமாயிருக்கிறது. இதில் முதல் சூர்ணையிலே ஶரணம் புகுவார்க்கு ஶரணம்புக யோக்3யதையுள்ளது- கண்ணழிவற்ற  உபேய ருசியும், உபாயாத்4யவஸாயமும் உண்டானாலாகையாலே தத்ஸித்3த்4யர்த்த2மாகப் பிராட்டி திருவடிகளிலே ஶரணம் புகுகிறார்.

            அதுவென்? “ஸகலப2லப்ரதோ3 ஹி விஷ்ணு:” (7. सकलफलप्रदो हि विष्णु:) என்று ஸர்வாபேக்ஷைகளுக்கும் ப2லப்ரதன் அவனன்றோ?” ஆனபின்பு, அந்தயோக்3யதாஸித்3தி4க்குமாக அவன் திருவடிகளிலே ஶரணம்புகத்தட்டென்? என்னில்; “ஸுஹ்ருத3ம் ஸர்வபூ4தாநாம்” (8. सुहृदं सर्वभुतानाम्) என்கிறபடியே ஸர்வபூ4த ஸுஹ்ருத்தாயிருக்க ஈஶ்வரனையும் நீரிலே நெருப்பு கிளருமாபோலே “க்ஷிபாமி”(9. क्षिपामि) “ந க்ஷமாமி” (10. क्षमामि) என் அபராத4ங்களை பண்ணிப்போந்த நாம் நேர் கொடு நேரேநின்று ஶரணம்புக்கால் பூர்வவ்ருத்தத்துக்கு ஸ்மாரகமாவுதோமென்று தம்மையஞ்சி, தம் திறத்தில் ஈஶ்வரனுக்குண்டான சீற்றத்தை ஆற்றுமவளுமாய், மாத்ருத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கையுடையளுமாய், இவர்கள் சொல்லும் வார்த்தையை செவி தாழ்த்துக் கேட்குமவளுமாய், அவனைத்தன் போ4க்3யதையாலே துவக்கிக் கேட்பிக்குமவளுமாய், அதக்கு மேலே ஸ்தநந்த4ய ப்ரஜைக்குத் தாய் கீழே ஒதுங்குகை ப்ராப்தவானவோபாதி ஸ்வரூப ப்ராப்தையுமாயிருக்கையாலே பிராட்டி திருவடிகளிலே ஶரணம் புகுகிறார். நெடுங்காலம் விஷயப்ரவணனாய்ப் போந்த ப்ரஜை நிவ்ருத்தனானவன்று பிதாவின் பக்கல் நேர் முகம் பார்த்துச்செல்லுகை அரிதாய், மாதாவின் பக்கல் சொல்லுகை எளிதாயிருக்குமிறே. ப்ரத2மத்தில் ஆஶ்ரயிக்கைக்கும் கூட, இறாய்த்த இவர் இவளை, ஆஶ்ரயித்தவனந்தரம் பண்ணின அபராத4ங்களையும் “க்ஷமஸ்வ” (க்ஷமஸ்வ) என்றாரிறே, அந்த: புரபரிகரமாகையாலே.

அவதாரிகை முற்றிற்று

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

ஶ்ரீப43வத்3ராமாநுஜ விரசித க3த்3யத்ரயே ஶரணாக3தி க3த்3யம்

யோநித்யமச்யுதபதா3ம்பு4ஜ யுக்3மருக்3

வ்யாமோஹதஸ்ததி2தராணி த்ருணாயமேநே ।

அஸ்மத்கு3ரோர்ப43வதோஸ்ய த3யைக ஸிந்தோ4:

ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்3யே ॥

வந்தே3 வேதா3ந்த கர்பூர சாமீகர கரண்ட3கம்।

ராமாநுஜார்யமார்யாணாம் சூடா3மணிமஹர்நிஶம்॥

மூலம்: ப43வந் நாராயண (भगवन्नारायण)

வ்யா: (பகவந்நாராயண)  (भगवन्नारायण) 43வச்ச2ப்33த்தாலே “விநா ஹேயைர் கு3ணாதி3பி4:” (11.विना हेयैर्गुणादिभि:) என்கிறபடியே ஹேய ஸம்ப3ந்த4ரஹித பூர்ண ஷாட்3கு3ண்யத்தைச் சொல்லுகிறது. “ஜ்ஞாநஶக்திப3லைஶ்வர்ய வீர்ய தேஜாம்ஸ்யஶேஷத: । ப43வச்ச2ப்33வாச்யாநி விநா ஹேயைர் கு3ணாதி3பி4:॥” (11.ज्ञानशक्तिबलैश्वर्यवीर्यतेजांस्यशेषत: भगवच्छब्दवाच्यानि विना हेयैर्गुणादिभि: ௥) என்னக்கடவதிறே. இத்தால் பயிருக்கு நீர் நிலைபோலே ஸர்வாத்மாக்களுக்கும் கூட உஜ்ஜீவநஹேதுவாந கு3ணபூர்ணனுமாய், பிறருடைய தோ3ஷம் தட்டாதபடியான ஹேயராஹித்யத்தையும் உடையவன் என்கிறது. (நாராயண) (नारायण) ப43வச்ச2ப்33த்திலே ஸர்வமுமில்லையோ? இனி நாராயண ஶப்3தா3பேக்ஷை உண்டோ என்னில், “அந்யத்ர ஹ்யுபசாரத:” (12. अन्यत्र ह्युपचारत:) என்கிறபடியே ப43வச்ச2ப்33த்துக்கும் ப்3ரஹ்மஶப்33த்தோபாதி வ்யக்த்யந்தரங்களிலே ஔபசாரிகமாகவாகிலும் ப்ரயோக3முண்டு. அதுவுமின்றியே அநந்யபரமான நாராயணாநுவாக ஸித்34மாய், யோக3ரூடி4யாலே நாராயணஶப்34ம் ஸர்வேஶ்வரனுக்கே வாசகமாயிருக்கும். அத்தாலே விஶேஷிக்கிறது. ஆக “ப43வந்நாராயண” (भगवन्नारायण) என்று ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனாய் உப4யவிபூ4தி நாத2னான ஸர்வேஶ்வரனைச் சொல்லிற்றாயிற்று.

            பிராட்டி திருவடிகளில் ஶரணம் புகுகிறாராகில் இவ்விடத்தில் இது சொல்லவேண்டுவானென்னென்னில்; ஆற்றுக்கு ஸஹ்யம் போலேயும், விளைநிலத்துக்கு ஏரிக்கட்டு போலேயும், இவளுடைய கல்யாணகு3ணங்களுக்கடியான கல்யாண கு3ணயோக3த்தையும், இவளுடைய விபூ4திக்கடியான உப4யவிபூ4தி யோக3த்தையும் சொல்லுகிறது. அவனைச்சொல்லும் போது ஶ்ரீமான் (13.श्रीमान्) என்ன வேண்டினவோபாதி, இவளைச் சொல்லும் போதும் “விஷ்ணுபத்நீ” (14. विष्णुपत्नी) என்ன வேண்டியிறே யிருப்பது. நிரூபகத்தையொழிய நிரூப்யத்துக்கு ஸ்தி2தியில்லாதவோபாதி நிரூப்யத்தையொழிய நிரூபத்துக்கும் ஸ்தி2தியில்லையே.

மூ: அபி4மதாநுரூப (अभिमतानुरूप)

வ்யா: (அபி4மத) (अभिमत) ஏவம் வித4னாயிருந்துள்ள இவனுக்கு அபி4மதமாயிருக்கை, (அநுரூப) (अनुरूप) ராஜாக்கள் நீச ஸ்த்ரீகாற்கடையிலே துவளுமாபோலே அபி4மதமேயாஹிலும் அநநுரூப மாயிருப்பன உண்டு; அங்ஙனன்றிக்கே “உனக்கேற்கும்” (திருவாய்மொழி 10-10-6) என்னும்படியே அநுரூபமாயிருக்கை. இப்படி அபி4மதமாய், அநுரூபமாயிருக்கிறவை எவையென்னில்; ஸ்வரூபரூபரூப கு3ணவிபவைஶ்வர்ய ஶீலாதி3கள்.

மூ: ஸ்வரூபரூப (स्वरूपरूप)

வ்யா:- ஸ்வரூபம். அவனுக்கு இவள் ஸ்வரூபம் அபி4மதமாயிருக்கையாவது.  இவள் ஸ்வரூபம் அவன் ஸ்வரூபத்துக்கு தா4ரகமாயிருக்கை. ராவணன்  மாயாஶிரஸ்ஸைக்காட்டின போதும், இந்த்ரஜித்து மாயாஸீதையைக் காட்டின  போதும், இருவரும் மெய்யென்று ப்4ரமிக்கச்செய்தே அந்யோந்யம் த4ரித்துக்கிடந்தவிடம் ஸ்வரூபஸத்தையாலிறே. அவன் ஸ்வரூபம் இவளுக்கு தா4ரகமாகிறது- ஸ்வரூபத:;  இவள் ஸ்வரூபம் அவனுக்கு தா4ரகமாகிறது அபி4மதத்வத்தாலே. அநுரூபமாகையாவது. “யதா2ஸர்வக3தோ விஷ்ணுஸ் ததை2வேயம்” (15.यथा सर्वगतो विष्णुस्तथैवेयं ) என்றும், “த்வயா ச விஷ்ணுநா சாம்ப3” (16. त्वया विष्णुना चाम्ब) என்றும், “யுக்தா ராமஸ்ய ப4வதீ” (17.युक्ता रामस्य भवती )என்றும்,  “தவைவோசிதயா” (18. तवैवोचितया) என்றும் சொல்லுகிறபடியே இவளுடைய ஸ்வரூபம் அவனோடொக்கச் சொல்லலாம்படியிருக்கை.

            (ரூப) ரூபமாவது விக்3ரஹம். ஸ்வரூபத்தைச் சொன்னவநந்தரம் ஸ்வரூபகு3ணங்களைச் சொல்லப்ராப்தமாயிருக்க விக்3ரஹத்தைச் சொல்லிற்று ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூபாஶ்ரிதமான கு3ணங்களுக்கும் ப்ரகாஶகமாகையாலே. ஸ்வரூபம் அபி4மதமாகாநின்றால், ரூபம் அபி4மதமென்னுமிடம் சொல்லவேண்டாவிறே. அதுதான் ஸ்வரூபாஶ்ரிதமென்றிறே அபி4மதமாயிற்று. ரூபம் அபி4மதமாகையாவது- “அகலகில்லேனிறையும்” (திருவாய்மொழி 6-10-10) என்று அவள் துணுக்கு துணுக்கு என்னும் படியான அவன்தானும்  மேல் விழும்படியாயிருக்கை. “மெல்லியல் தோள் தோய்ந்தாய்” (திருநெடுந்தாண்டகம்-13) “மாமலர் மங்கைமணநோக்கமுண்டான்”  (பெரிய திருமொழி 3-7-8) என்று அவனுக்கு “உண்ணும் சோறு பருகுநீரும்”  (திருவாய்மொழி 6-7-1)இவள் வடிவேயாயிறே இருப்பது. இது அநுரூபமாகையாவது- ஶீலத்தாலும் வயஸ்ஸாலும் வ்ருத்தத்தாலும் துல்யமாயிருக்கை.

மூ: கு3ணவிப4வ (गुणविभव)

வ்யா: (கு3ண) (गुण)ரூபாந்தர பா4வித்வத்தாலே ஸௌந்த3ர்யாதி3களாகக்கடவது. இவையும் ரூபத்துக்கு நிறம் கொடுத்து போ43வர்த்தகங்களுமாகையாலே அபி4மதமாயிருக்கும். அத ஏவ அநுரூபமாயிருக்கும்.

            (விப4வ) (विभव) “அர்த்தோ2 விஷ்ணுரியம் வாணீ” (19. अर्थो विष्णुरियं वाणी)என்று அர்த்தா2ம்ஶம் அவனதாய், ஶப்3தா3ம்ஶம் இவனதாயிருக்கை. “புந்நாமா ப43வாந் ஹரி:। ஸ்த்ரீநாம்நீ லக்ஷ்மீ:” (20. पुन्नामा भगवान् हरि: स्त्रीनाम्नी लक्ष्मी:) என்னும்படி புல்லிங்க3 பதா3ர்த்த2ங்கள் அவனதாய், ஸ்த்ரீலிங்க3 பதா3ர்த்த2ங்கள் இவளதாயிருக்கை. (ஸர்வாந்போகாந் பரித்யஜ்ய) (21. सर्वान् भोगान् परित्यज्य) ஸர்வபோ43ங்களையும் விட்டுக் காடேறப் புறப்பட்டாள் என்கையாலே, லீலோபகரணங்களும் போ4கோ3பகரணங்களும் அவன் விபூ4தியிலும் விஞ்சியிருக்கை. அவையாவன: “முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழும்கோதை” என்றும், “பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்” என்றும், ஸ்ரக்சந்த3நாதி3களும்; இவைதான் ஸாமாந்யமாயும் அந்த:புரபரிகரமாயுமிருக்கும். அங்ஙனன்றியே, “யோ யோ ஜகதி பும்பாவம்” (22. यो यो जगति पुंभाव:) “ஶேஷித்வே பரம:புமாந்” (23. शेषित्वे परम: पुमान्) என்னும்படியே ஸவிபூ4திகனான ஈஶ்வரனென்றுமாம். இது அபி4மதமாகிறதும் அந்த:புர பரிகரமாகையாலே.

மூ: ஐஶ்வர்ய ஶீலாதி (ऐश्वर्यशीलादि)

வ்யா: (ஐஶ்வர்ய)(ऐश्वर्य) ஸர்வபதா3ர்த்த2 நியமந ஸாமர்த்2யம். த்ரிவித4 சேதநரையும் ஸ்வரூபேண நியமிக்கும். ஈஶ்வரனை ப்ரணயித்வத்தாலே நியமிக்கும். நியமிக்கும் ப்ரகாரமென்னென்னில், ப3த்34ரை கர்மாநுகு3ணமாக நியமிக்கும். நித்யமுக்தரை ஸ்வரூபாநுகு3ணமாக நியமிக்கும். ஈஶ்வரனை ரக்ஷணாநுகு3ணமாக நியமிக்கும். இது அபி4மதமாகிறது. புருஷோத்தமத்வ ஸூசகமாகையாலே. ப்ரணயினினுடைய நியமனம் ப்ரணயிக்குப் பும்ஸ்த்வாவஹமாயிருக்குமிறே. இது ஜ்ஞாநாதி3 கு3ணங்களுக்கும் உபலக்ஷணம்.

            (ஶீல) (शील) ஶீலம்- ராக்ஷஸிகள் பக்கல் ப்ரஸித்34ம். ராவணனைக்குறித்து “மித்ரமௌபயிகம் கர்தும்” (24. मित्रमौपयिकं कर्तुं) என்றும், “விதி3தஸ்ஸஹி த4ர்மஜ்ஞ:” (25. विदित: हि धर्मज्ञ:) என்றும் ராக்ஷஸிகளைக்குறித்து “ப4வேயம் ஶரணம் ஹி வ:” (26. भवेयं शरणं हि :) என்றும், “ராஜஸம் ஶ்ரய வஶ்யாநாம்” (27.राजसंश्रयवश्यानां) “பாபாநாம் வா ஶுபா4நாம் வா” (28. पापानां वा शुभानां वा) என்றும் திருவடியோடே அலைந்தும் ரக்ஷித்தாளிரே. இக்கு3ணம் அபி4மதமாகிறது. தனக்கு ஸ்வரூபமான ரக்ஷணத்துக்கு உபயோகியாகையாலே. ‘ஆதி3’ ஶப்33த்தாலே- அநுகதமான கு3ணவிஶேஷங்களை நினைக்கிறது. ஸமஸ்த கல்யாணகு3ணாத்மகனைப்பேசிலும் இவளைப்பேசிமுடியாது என்கை.

மூ: அநவதிகாதி4ஶயாஸம்க்2யேய கல்யாண (अनवधिकाशयासंख्येय कल्याण)

வ்யா: அநவதி4காதிஶய (अनवधिकाशय) இவைதான் ஓரொன்றே அபரிச்சே2த்3யமாயிருக்கும். அஸம்க்2யேய (असंख्येय) – இவைதான் எண்ணிறந்திருக்கை. கல்யாண (कल्याण)  “இயம் து ப4வதோ பா4ர்யா தோ3ஷைரேதைர்விவர்ஜிதா” (29. इयं तु भवतो भार्या दोषैरेतैर्विवर्जिता) என்கிறபடியே உள்ளதெல்லாம் அழகியதாயிருக்கை. இவள் கு3ணங்களுக்கு வ்யாவர்தகம்- அவன் கு3ணங்கள்; அவன் கு3ணங்களுக்கு தோ3ஷமேதென்னில், அவனுக்கு ஸ்வரூபாநுப3ந்தி4யான நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யமுண்டு.

     “க்ரோத4மாஹாரயத்” (30. क्रोधमाहारयत्)என்று கோபத்தை அருளப்பாடிட்டுக் காரியம் கொள்ளவேண்டும் த3ஶையுமுண்டு. அவை இவளுக்கு இன்றிக்கேயிருக்கை.

மூ: கு3ணக3ணாம் (गुणगणाम्)

வ்யா: கு3ணக3ணாம் (गुणगणाम्) இவைதான் திரள் திரளாயிருக்கை.

மூ: பத்3மவநாலயாம் (पद्मवनालयाम्)

வ்யா: பத்3மவநாலயாம் (पद्मवनालयाम्) பத்3மஶப்33ம்- மங்க3ளங்களுக்கு உபலக்ஷணமாய், ஸர்வமங்க3ள நிவாஸிநீ” என்கை. அங்ஙனன்றியே “ஸர்வக3ந்த4:” (31.सर्वगन्ध🙂 என்கிற வஸ்துவையும் ஸ்வஸம்ப3ந்த4த்தாலே பரிமளிதமாக்குகை என்றுமாம். பத்3மஶப்33த்தாலே- போ4க்3யதையைச்சொல்லிற்றாய், அத்தாலே நிரதிஶயபோ4க்3ய பூ4தை என்றுமாம். பரிமளமிறே வடிவுக்கு உபாதா3நம். “ஸர்வக3ந்த4ஸ் ஸர்வரஸ:” (31. सर्वगन्ध: सर्वरस:) என்னும் இவையிரண்டும் இத்தலையிலே கிடந்தபடி.

மூ:43வதீம் ஶ்ரியம் (भगवतीम्  श्रियम् )

வ்யா:43வதீம் (भगवतीम्) ப43வச்ச2ப்33ம்- பூஜ்யவாசி.  “தத்ரபூஜ்யபதா3ர்த்தோ2க்தி பரிபா4ஷாஸமந்வித: । ஶப்3தோ3யம் நோபசாரேண” (12. तत्र पूज्यपदार्त्थोक्ति परिभाषासमन्वित:।शब्दोऽयं नोपचारेण  ) என்கிறவனுக்கும் பூஜ்யையாயிருக்கை. ஆக, “பத்3மவநாலயாம் ப43வதீம்” (पद्मवनालयाम् भगवतीम्) என்கிற இத்தால் தன்வழியாக அவனைப் பற்றினால் குற்றம் பாராதபடி அவனைத் தன்போ4க்3யதையாலே துவக்கிப் பொறுப்பிக்குமவளென்கை.

ஶ்ரியம் (श्रियम्) தன்னைப்பற்றி ஸர்வமுமுண்டாம்படியாய், தான் அவனைப்பற்றி உள்ளுமாயிருக்கை. இதிலே நிருக்தி ப்ரக்ரியையும் நடக்கக்கடவது.

மூ: தே3வீம் நித்யாநபாயிநீம் (देवीम् नित्यानपायिनीम् )

வ்யா: தே3வீம் (देवीम्)வடிவில் புகரிருக்கிறபடி. அவனோநோட்டைச் சேர்த்தியாலே த்3யோதமாநையாயிருக்கிறவளை. நித்யாநபாயிநீம் (नित्यानपायिनीम्)  “விஷ்ணோஶ்ஶ்ரீரநபாயிநீ” (15. विष्णो: श्रीरनपायिनी) என்கிறபடியே அவனோடுண்டான நித்யஸம்ஶ்லேஷத்தாலே அபாயமின்றியேயிருக்கை. அபாய:- விஶ்லேஷ: (अपाय:–विश्लेष:)

மூ: நிரவத்3யாம்(निरद्याम्)

வ்யா: நிரவத்3யாம் (निरद्याम्) கீழ்ச்சொன்ன ஏற்றமெல்லாம் ஸ்வார்த்த2மாயிராதே அத்தலைக்கேயாம்படி யிருக்கை. ஏதேனுமொன்று ‘எனக்கு’ என்கை அவத்3யம். ‘பிறர்க்கு’ என்கை நிரவத்3யம். இனி விஷயவிபா43மேயுள்ளது. அது வகுத்த விஷயமாமித்தனையே வேண்டுவது. அவன்தானும் தன்னையும் தன்னுடைமையையும் “ப4க்தாநாம்” (भक्तानाम् ) என்றிறே இருப்பது.

மூ: தே3வதே3வதி3வ்ய மஹிஷீம் (देवदेवदिव्यमहिषीम्)

வ்யா: தே3வதே3வதி3வ்ய மஹிஷீம் (देवदेवदिव्यमहिषीम्) ஸர்வேஶ்வர ஸாம்ராஜ்யத்திலே தேவர்க்கும் தேவனானவனோடொக்க அபி4ஷிக்தையானவள். “க்ருதாபி4ஷேகா மஹிஷீ” (33. कृताभिषेका महिषी)

மூ: அகி2லஜக3ந்மாதரம் (अखिलजगन्मातरम्)

வ்யா: அகி2லஜக3ந்மாதரம் (अखिलजगन्मातरम्) இந்தப் பெரிய மேன்மையைக்கண்டு இறாய்க்க வேண்டாதபடி ஸகலசேதநரோடுண்டான அவிநாபூ4தமான குடல் தொடக்கைச் சொல்லுகிறது. ஸார்வபௌ4மன் மஹிஷி, தன் ப்ரஜை சேற்றையளைந்து மடியிலே ஏறப்புக்கால் அணைத்து உச்சியை முகக்குமித்தனையிறே. ப்ரஜையின் பக்கல் ப்ராப்தியேயிறே ஜீவிப்பது. அகி2ல ஶப்33த்தில் தாமும் அந்தர்பூ4தராகையாலே தம்மையும் கூட்டிக் கொள்ளுகிறார்.

மூ: அஸ்மந்மாதரமஶரண்ய ஶரண்யாம் (अस्मन्मातरम् अशरण्यशरण्याम् )

வ்யா: அஸ்மந்மாதரம் (अस्मन्मातरम्) என்று.

அஶரண்யஶரண்யாம் (अशरण्यशरण्याम्) கு3ணலேஶ மாத்ரத்தாலே குற்றங்களை அடையப்பொறுத்து உகக்குமவள்; அங்ஙனன்றிக்கே “தேந மைத்ரீ ப4வது” (25. तेन मैत्री भवतु) என்று குற்றத்தோடே உகக்குமவள். புறம்பு புகலற்றார்க்கு ப43வத்3விஷயம் புகலாயிருக்கும். ப43வத்3விஷயத்துக்கும்  புறம்பாயிருப்பார்க்கும் புகலாயிருக்கும் இவள். “செய்தாரேல் நன்றுசெய்தார்” (பெரியாழ்வார் திருமொழி 4-9-2) என்னுமவர் சீறிக் கையும் வில்லுமானவன்றும், இவள்  திருவடிகளே புகலாயிருக்கும். “ஸர்வலோகஶரண்யர்” என்று காளமூதித்திரிகிறவர் அஶரண்யரானவன்றும், இவள் ஶரண்யையாயிருக்கும். ஶரணம் என்கிற உக்தியைப் பற்றி ஶரண்யர்- அவர்; ஸம்ப3ந்த4மே ஹேதுவாக ஶரண்யையாயிருக்கும் இவள்.

மூ: அநந்ய ஶரணஶ்ஶரணமஹம் ப்ரபத்3யே. (अनन्यशरण: शरणमहं प्रपद्ये)

வ்யா: “ஸ பித்ரா ச பரித்யக்த:” (34. पित्रा परित्यक्त:)  “மித்ரமௌபயிகம் கர்தும்” (24. मित्रमौपयिकं कर्तुं) “விதி3தஸ்ஸஹி த4ர்மஜ்ஞ:”(25.विदितस्स हि धर्मज्ञ:) “ராஜஸம்ஶ்ரய வஶ்யாநாம்” (27.राजसंश्रयवश्यानां) “பாபா நாம் வா ஶுபா4நாம் வா” (28.पापानां वा शुभानां वा)

“அநாலோசித விஶேஷாऽஶேஷலோக ஶரண்ய” (अनालोचित विशेषाऽशेषलोक शरण्य) என்கிறபடியே ஸமாஶ்ரயணீயமான ப43வத்3விஷயத்துக்குப் புறம்பாயிருப்பாருமுண்டோவென்னில்;

“அநந்யஶரணோஹம்” (अनन्यशरणोहम्) அந்த அநந்யஶரணனாகிறேன் நான் என்கிறார். “ஶரணம் ப்ரபத்யே” (शरणं प्रपद्ये) அஶரண்யர்க்கும் ஶரண்யரான தேவர் திருவடிகளையே உபாயமாக அத்4யவஸிக்கிறேன். அஶரண்யர்க்கும் ஶரண்யையாவதென்னென்னில்; அகி2லஜக3ந்மாதாவாகையாலே அபேக்ஷா நிரபேக்ஷமாகப்பரிக்3ரஹிக்கும் தேவர்கும், பரிக்3ரஹித்தல்லது நிற்கவ்வொண்ணாதபடியான அபேக்ஷையையும் பண்ணினேன். “தாம் பத்3மநேமீம் ஶரணமஹம் ப்ரபத்3யே” (35. तां पद्मनैमिं शरणमहं प्रपद्ये)

இரண்டாவது சூர்ணை அவதாரிகை:

“பாரமார்த்தி2க”:- கீழ் பிராட்டியுடைய ஶரண்யதையையும் அதுக்கடியான ஊற்றுவாயையும், தம்முடைய அநந்யக3தித்வத்தையும் சொல்லி, அவள் திருவடிகளிலே ஶரணம் புக்கு நின்றார். அநந்தரம் ‘உமக்கு அபேக்ஷிதமென்’ என்று பிராட்டி திருவுள்ளமாக, “கைங்கர்ய ருசியும் ப்ரபத்திநிஷ்டை2யும் எனக்கு உண்டாகவேணும்” என்கிறார். ஈஶ்வரன் திருவடிகளிலே கைங்கர்யஸித்3தி4க்கிறே ஶரணம் புகுவது. அவ்வளவன்றிக்கே, ருசிவிஶ்வாஸங்களென்று தனித்தனியே அபேக்ஷித்துப் பெறவேண்டுவன சில அதி4காரி விஶேஷணங்களுண்டிறே. இப்போது அபேக்ஷித்துப்பெற வேண்டும்படி இதுக்கு முன்பு இவர்க்கு இன்றிக்கேயிருந்ததோ? என்னில்: உண்டானாலும், தந்தாமுக்கு என்றுமில்லையாகவிறே தந்தாமை நினைத்திருப்பது.

மூ: பாரமார்த்தி2க (पारमार्थिक)

வ்யா: “பாரமார்த்தி2க” (पारमार्थिक) அர்த்த2மென்று- ப்ரயோஜநத்துக்கும் மெய்க்கும் பெயர். இது பரப4க்திக்கு விஶேஷணமானபோது அதினுடைய அக்ருத்ரிமத்வம் சொல்லுகிறது. திருவடிகளுக்கு விஶேஷணமான போது அதினுடைய பரமப்ரயோஜநத்வம் சொல்லுகிறது. இப்பிரிவுக்கு ப்ரயோஜநமென்னென்னில்; -ப4க்திவிஷயமானபோது திருவடிகள் பரமப்ரயோஜநமாகக்கடவது. திருவடிகள் விஷயமானபோது ப4க்தி அக்ருத்ரிமையாகக்கடவது.

மூ:43வச்ச2ரணாரவிந்த3 யுக3ளைகாந்திகாத்யந்திக (भगवच्छरणारविन्द युगलैकान्तियन्तिक)

வ்யா: “ப43வச்ச2ரணாரவிந்த3” (भगवच्छरणारविन्द) கீழ்ச்சொன்ன ப43வச்ச2ப்தம் ஸர்வோத்கர்ஷவாசி. இது கு3ணயோக3த்தால் வந்த ரஸ்யதையைச் சொல்லுகிறது. கு3ணங்களும் போ4க்3யமாயிருக்கையாலே பரப4க்தி ஜநகம். “சரணாரவிந்த3” (चरणारविन्द) விக்3ரஹவத்தையால் வந்தபோ4க்3யதை சொல்லுகிறது. “யுகள” (युगल) சேர்த்தியால் வந்த போ4க்3யதை. “ஐகாந்திக” (ऐकान्तिक) ஏகமே அந்தமாயிருக்கை. அதாவது- வேறொரு விஷயத்தை உடைத்தன்றிக்கேயிருக்கை. “ஆத்யந்திக” (आत्यन्तिक) அந்தத்தை அதிக்ரமித்திருக்கை. அதாவது- நித்யமாயிருக்கை.

மூ: பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திக்ருத (परभक्ति परज्ञान परमभक्तिकृत)

வ்யா: “பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்தி” (परभक्ति परज्ञान परमभक्ति) பரப4க்தியாவது- ஸம்ஶ்லேஷ விஶ்லேஷ ஸுகது3:க2ராம்படியான ப்ரேமவிஶேஷம். பரஜ்ஞாநமாவது- இதனுடைய விபாகத3ஶையான ஸாக்ஷாத்காரம். பரமப4க்தியாவது- க்ஷணகாலமும் விஶ்லேஷத்தை பொறுக்கமாட்டாத த3ஶை. “உப4ய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய” (उभय परिकर्मित स्वान्तस्य) என்கிறபடியே ஜ்ஞாநகர்மங்களாலே ஸம்ஸ்க்ருதாந்த:கரணனாய் ப4க்தி பிறந்து, அதினுடைய விபாகத3ஶை பரமப4க்தியாகக்கடவது உபாஸகனுக்கு. இவர்க்கு அந்த ஸ்தா2னத்திலே ப43வத3நுக்3ரஹம் நிற்க, மேலுள்ள த3ஶைகளை அபேக்ஷிக்கிறார். “க்ருத” (कृत) இவற்றாலே பண்ணப்பட்ட.

மூ: பரிபூர்ணாநவரத நித்யவிஶத3தம (परिपूर्णानवरत नित्यविशदतम)

வ்யா: “பரிபூர்ண” (परिपूर्ण) பரிபூர்ணமாகையாவது- ஸ்வரூபரூபகு3ண விபூ4திகளித்தனையும் ஒருகாலே அநுப4வ விஷயமாகை. “அநவரத” (अनवरत) அவிச்சி2ந்நமாயிருக்கை. அதாவது- இடை விடாதே செல்லுகை. “நித்ய” (नित्य) யாவதா3த்மபா4வியாயிருக்கை. “விஶத3தம” (विशदतम) விஶத3மாவது-பரப4க்தி த3ஶையில் அநுப4வம். விஶத3தரமாவது- பரஜ்ஞாந த3ஶையில் அநுப4வம். விஶத3தமமாவது- பரமப4க்தி த3ஶையில் அநுப4வம்.

மூ: அநந்யப்ரயோஜநாநவதி4காதிஶய ப்ரிய ப43வதநுப4வ ஜநிதாநவதி4காதிஶய ப்ரீதிகாரித (अनन्यप्रयोजनानवधिकातिशय प्रिय भगवदनुभवजनितानवधिकातिशय प्रीतिकारित)

வ்யா: “அநந்ய ப்ரயோஜந” (अनन्यप्रयोजन) அநுப4வஜநித ப்ரீதியும், ப்ரீதிகாரித கைங்கர்யமும் வேண்டா; இதுதானே அமையுமென்னும் படியாயிருக்கை. “அநவதி4காதிஶயப்ரிய” (अवधिकातिशय प्रिय) அநவதி4கமான அதிஶயத்தையுடைத்தான ப்ரீதி. “ப43வதநுப4வ” (भगवदनुभव) சரமஶரீராவஸாந ஸமநந்தரமாக அர்ச்சிராதி33தியாலே போய் பரமபத3த்திலநுப4விக்கும் அநுப4வம். “ஜநிதாநவதி4காதி ஶய ப்ரீதிகாரித” (जनितानवधिकातिशय प्रीतिकारित) அத்தால் பிறந்த ப்ரீதியாலே பண்ணுவிக்கப்பட்ட;

மூ: அஶேஷாவஸ்தோ2சிதாஶேஷ அஶேஷதைகரதிரூப (अशेषावस्थोचिताशेषाशेषतैकरतिरूप)

வ்யா: “அஶேஷாவஸ்தோ2சித” (अशेषावस्थोचित) ஸ்வாத்த2ணிஜந்தோ வா  ஸர்வாவஸ்தைகளிலும் அனுகூலமாயிருக்கை. “அஶேஷ ஶேஷ தைகரதிரூப” (अशेष शेषतैकरतिरूप) நிவாஸஶய்யே (36. निवासशय्या) இத்யாதி3ப்படியே ஸர்வவித4ஶேஷதையிலுமுண்டான அபி4நிவேஶத்தையே வடிவாக உடைத்தாயிருக்கை.

மூ: நித்யகைங்கர்ய ப்ராப்த்யபேக்ஷயா (नित्यकैङ्कर्य प्राप्त्यपेक्षया)

வ்யா: “நித்ய” (नित्य) அபுநராவ்ருத்தி லக்ஷணமாயிருக்கை. “கைங்கர்ய ப்ராப்த்யபேக்ஷயா” (कैङ्कर्य प्राप्त्यपेक्षया) கைங்கர்யப்ராப்தியிலுண்டான அபேக்ஷையாலே.

மூ: பாரமார்தி2கீ ப43வச்சரணாரவிந்த3 ஶரணாக3தி: (पारमार्थिकी भगवच्चरणाविन्द शरणागति:)

வ்யா: “பாரமார்தி2கீ” (पारमार्थिकी)ஆர்தரூபையாயிருக்கை. “ப4க3வத்” (भगवत्) ஜ்ஞாந ஶக்த்யாதிஹளால் பூர்ணமான விஷயமாகையாலே நிரபேக்ஷமான உபாய பௌஷ்கல்யம் சொல்லுகிறது. “சரணாரவிந்த3” (चरणाविन्द) விக்3ரஹத்தினுடைய பரமோபாயத்வம் சொல்லுகிறது. “ஶரணாக3தி:” (शरणागति🙂 ஸலக்ஷணமாயிருக்கை.

மூ: யதா2வஸ்தி2தா (यथावस्थिता)

வ்யா: உபாயாந்தரங்களிநுடைய அநுபாயத்வ பு3த்3தி4பூர்வகமாக அத்தைப்  பற்றுகை போலே காணும். அதாகிறது- பற்றி விடுகையுமன்றிக்கே பற்றிப்பற்றுகையுமன்றிக்கே. “ஸ்நாத்வாபு4ஞ்ஜீத” (स्नात्वाभुञ्जीत) என்னுமாபோலே விட்டுப்பற்றுகை. யதா2வஸ்தி2தா (यथावस्थिता) என்றது – இருந்தபடியே என்றபடி. இது இப்படிபோலே காணுமிருப்பது. ரஹஸ்யமாகையாலே நேராக வெளியிடாதொழிகிறார்.

மூ: அவிரதாऽஸ்து மே. (अविरताऽस्तु मे)

வ்யா: “அவிரதாऽஸ்து மே” (अविरताऽस्तु मे)அநந்யக3தியாயிருந்துள்ள எனக்கு யாவத்ப்ராப்தி விச்சே23மின்றிக்கே ஒழியவேணும்.

மூன்றாவது சூர்ணை வ்யாக்யானம்:

மூ: அஸ்து தே (अस्तु ते)

வ்யா: “அஸ்து தே” (अस्तु ते) பிராட்டியருளிச்செய்கிறார். உமக்கு அப்படியே உண்டாயிடுக.

நான்காவது சூர்ணை வ்யாக்யானம்:

மூ: தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே. (तयैव सर्वं सम्पत्स्यते)

வ்யா: “தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே” (तयैव सर्वं सम्पत्स्यते) அப்படிப்பட்ட உபாயந்தன்னாலேயே பரமப4க்தி தொடக்கமாகக் கைங்கர்யமீறாக நடுவுள்ள த3ஶைகளடைய உண்டாகக்கடவது.

ஐந்தாவது சூர்ணை அவதாரிகை:

மேல்- ஆஶ்ரயணீய வஸ்துநிர்தே3ஶம் பண்ணுகிறார். ஆஶ்ரயணீயனானவன்  நாராயணனிறே. அதில், ‘நார’ ஶப்3தா3ர்த்த2ம் மேல் சொல்லுவதாகக்கோலி அதுக்காஶ்ரயமாய், ‘அயந’ ஶப்3தா3ர்த்த2மான  தி3வ்யாத்ம ஸ்வரூபத்தை முதலிலே அருளிச்செய்கிறார்.

ஐந்தாவது சூர்ணை வ்யாக்யானம்:

மூ: அகி2லஹேய ப்ரத்யநீக (अखिलहेय प्ररत्यनीक)

வ்யா: “அகி2லஹேய ப்ரத்யநீக” (अखिलहेय प्ररत्यनीक) “நிர்க்கு3ணம்” (37. निर्गुणं) என்கிற வஸ்து இருக்கிறபடி. ஹேயங்களான அசித்33தமான பரிணாமமும், சேதநக3தமான து3:கா2ஜ்ஞாநாதி3களும், நித்யமுக்தர் பக்கலுண்டான பாரதந்த்ர்யமும்; அகி2ல ஶப்33த்தாலே- உப4யவிபூ4தியிலுமுண்டான சேதநாசேதநங்களைச் சொல்லுகிறது. பாரதந்த்ர்யமும் ஹேயமாமோ வென்னில், புருஷனுக்கு ஸ்தநோத்3பே43மும்; ஸ்த்ரீக்கு ஶ்மஶ்ருஸம்யோக3மும்போலே பரதந்த்ரனுக்கு ஸ்வாதந்த்ர்யம் ஹேயம். அப்படியே ஸ்வதந்த்ரனான ஈஶ்வரனுக்குப் பாரதந்த்ர்யம் ஹேயமாகக்கடவது. ப்ரத்யநீகத்வமாவது- பதா3ர்த்தா2ந்தர ஸம்ஸர்கா3பா4வாதா4ரத்வம். ஆஶ்ரிதருடைய ஹேய நிரஸநத்துக்கு அடியான ஹேயப்ரத்யநீகத்வமென்றுமாம்.

மூ: கல்யாணைகதாந (कल्याणैकतान)

வ்யா: “கல்யாணைகதாந”  (कल्याणैकतान) கல்யாணைக விஸ்தார. அக2ண்டை2கரஸம்போலே இஶ்ஶப்33ம்.

மூ: ஸ்வேதரஸமஸ்த வஸ்துவிலக்ஷணாऽநந்த (स्वेतरसमस्त वस्तुविलक्षण)

வ்யா: “ஸ்வேதர ஸமஸ்தவஸ்துவிலக்ஷண” (स्वेतरसमस्त वस्तुविलक्षण) அத ஏவ ஸமஸ்தவஸ்து விலக்ஷண; “அநந்த” (अनन्त) த்ரிவித4 பரிச்சே2தரஹித. விபு4த்வாத்தே3ஶ பரிச்சே23ராஹித்யம். நித்யத்வாத் காலபரிச்சே23ராஹித்யம். ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களுக்கும் தான் ப்ரகாரியாய், தனக்கு ப்ரகார்யந்தரமில்லாதபடி நிற்கையாலே ஸத்3ருஶவஸ்த்வ பா4வத்தாலே வஸ்துபரிச்சே23ராஹித்யம். *துலையாலேயாதல், ப்ரஸ்தா2தி3களாலேயாதல் வரும் பரிச்சே23ராஹித்யத்தைச் சொல்லிற்றாகவுமாம். [* துலை: தராசு, ப்ரஸ்தம்படிக்கல்; பரிமாணத்தையளக்கும் படி முதலான பாத்திரமுமாம்]

மூ: ஜ்ஞாநாநந்தைகஸ்வரூப (ज्ञानानन्दैकस्वरूप)

வ்யா: “ஜ்ஞாநாநந்தைகஸ்வரூப” (ज्ञानानन्दैकस्वरूप) அநந்யாதீ4ந ப்ரகாஶத்வாஹ்லாத3கரத்வ ஜ்ஞாநமேவ யஸ்ய ஸ்வரூபம்- ஸ: ஜ்ஞாநாநந்தைகஸ்வரூப:. (अनन्याधीन प्रकाशत्वाह्लादकरत्वज्ञानमेव यस्य स्वरूपं: ज्ञानानन्दैकस्वरूप:) அதாவது- ஸ்வயம்ப்ரகாஶத்வ ஸுக2ரூபத்வங்களே ஸ்வரூபமாயிருக்கை. இப்படி தி3வ்யாத்மஸ்வரூபம் சொல்லப்பட்டது.

மூ: ஸ்வாபி4மதாநுரூப (स्वाभिमतानुरूप)

வ்யா:  அநந்தரம் நாரஶப்33வாச்யங்களில் ஸ்வரூபகு3ணங்களுக்கு ப்ரகாஶகமுமாய் பஞ்சோபநிஷண்மய மான தி3வ்யமங்க3ள விக்3ரஹத்தை யருளிச்செய்கிறார். “ஸ்வாபி4மத” (स्वाभिमत) கீழ்ச்சொன்ன ஸ்வரூபத்துக்கு கு3ணங்களிற்காட்டில் ப்ரகாஶகமுமாய், விலக்ஷணமுமாய் அந்தரங்க3முமாயிருக்கையாலே கு3ணங்களுக்கு முன்னே விக்3ரஹத்தையருளிச்செய்கிறார். “ஸ்வாபி4மத” (स्वाभिमत) “இச்சா2க்3ருஹீதாபி4மதோருதே3ஹ:” (38.इच्छागृहीताभिमतोरुदेह:) என்கிறபடியே தி3வ்யாத்ம ஸ்வரூபத்திற்காட்டில் அபி4மதமாயிருக்கை. “அநுரூப” (अनुरूप) ஸ்வரூபாநுப4வத்துக்குத் திரோதா4யகமாயிருக்கையன்றிக்கே ஸ்வரூபாநுப4வத்துக்கு வர்த்த4கமாயிருக்கை.

மூ: ஏகரூபாऽசிந்த்ய (एकरूपाऽचिन्त्य)

வ்யா: “ஏகரூப” (एकरूप) ஷட்3பா4வ விகாரரஹிதமாயிருக்கை. “ஸதை3கரூபரூபாய” (39. सदैकरूपरूपाय) என்றிருக்கை. அத ஏவ “அசிந்த்ய” (अचिन्त्य) இதர ஸஜாதீயதயா சிந்தயிதும்  அஶக்யமாயிருக்கை.

மூ: தி3வ்யாத்3பு4தநித்யநிரவத்3ய (दिव्याद्भुतनित्यनिरवद्य)

வ்யா: “தி3வ்ய” (दिव्य) வருந்தியும் உபமானமின்றிக்கேயிருக்கை. அப்ராக்ருதமாயிருக்கை என்றுமாம். “அத்3பு4த” (अद्भुत) க்ஷணந்தோரும் அபூர்வமாயிருக்கை. அத ஏவ ஆஶ்சர்யாவஹமாயிருக்கை,  “நித்யநிரவத்3ய” (नित्यनिरवद्य) நித்யநிர்தோ3ஷமாயிருக்கை. அதாவது – என்றுமொக்க ஸ்வார்த்த2மாயிராதொழிகை. “ப4க்தாநாம்” (32. भक्तानां) என்றிருக்குமிருப்பு.

மூ: நிரதிஶயௌஜ்ஜ்வல்ய ஸௌந்த3ர்ய ஸௌக3ந்த்4ய ஸௌகுமார்யலாவண்ய

(निरतिशयौज्ज्वल्य सौन्दर्य सौगन्ध्य सौकुमार्यलावण्य)

வ்யா: “நிரதிஶயௌஜ்ஜ்வல்ய” (निरतिशयौज्ज्वल्य)  ஸர்வதேஜஸ்ஸுக்களையும் கீழ்ப்படுத்திக் கொண்டிருக்கும் ஔஜ்ஜ்வல்யம். இத்தால் ப்3ரஹ்மாதி3களுக்குமமைத்துக்காட்ட வேண்டும்படியாயிருக்கை. இத்தால் விக்3ரஹ வைலக்ஷண்யம் சொல்லிற்று.  அத2 விக்3ரஹகு3ணாநாஹ “ஸௌந்த3ர்ய” (सौन्दर्य)  அவயவஶோபை4.  “ஸௌக3ந்த்4ய” (सौगन्ध्य) “ஸர்வக3ந்த4:” (31. सर्वगन्ध🙂 என்கிறபடியே ஸர்வத்தையும் பரிமளிதமாக்கவற்றாயிருக்கை. “ஸௌகுமார்ய”(सौकुमार्य) நாய்ச்சிமாரும் உறைக்கப்பார்க்கப் பொறாதபடி புஷ்பஹாஸ ஸுகுமாரமாயிருக்கை. “லாவண்ய” लावण्य) ஸமுதா3யஶோபை4.  அதாவது – லவணம் போலே எங்குமொக்க வ்யாபித்துநின்று ரஸத்தைத் தரவற்றாயிருக்கை.

மூ: யௌவநாத்3யநந்த கு3ணநிதி4தி3வ்யரூப, ஸ்வாபா4விகாநவதி4காதிஶய

(यौवनाद्यनन्त गुणनिधिदिव्यरूप स्वाभाविकानवधिकातिशय)

வ்யா: “யௌவந” (यौवन) “யுவாऽகுமார:” (40. युवाऽकुमार:)என்கிறபடியே நித்யயுவாவாயிருக்கும் பருவம். “ஆதி3” ()இவை தொடக்கமான, “அநந்தகு3ணநிதி4” (अनन्तगुणनिधि)அஸங்க்2யாதமான கு3ணங்களுக்கு கொள்கலமாயிருக்கும். “தி3வ்யரூப” (दिव्यरूप) தி3விஸ்தி2தரூப. அதாவது- இவ்விபூ4தியிலடங்காதிருக்கை.

            விக்3ரஹகு3ணங்கள் விக்3ரஹத்துக்கு பூ4ஷணமாயிருக்குமாபோலே தி3வ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பூ4ஷணமான ஸ்வரூபகு3ணங்களைச் சொல்லுகிறது. “ஸ்வாபா4விக” (स्वाभाविक)ஜலத்துக்கு ஶைத்யம்போலே ஸ்வபா4வஸித்34மாயிருக்கை. அதாவது யாவத்த்ரவ்யபாவிகையாலே நித்யமாயிருக்கை. “அநவதி4காதிஶய” (अनवधिकाशय) நிஸ்ஸீமமுமாய் ஆஶ்சர்யகரமுமாயிருக்கை. ப்ரத2மத்தில் ஜ்ஞாநாதி3கள் ஆறும் ஸர்வவிஷயங்கள். அவற்றில்,

மூ: ஜ்ஞாநப3லைஶ்வர்ய (ज्ञानबलैश्वर्य)

வ்யா: “ஜ்ஞாந” (ज्ञान) “யோ வேத்தி யுக3பத்ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா3 ஸ்வத:” (41. यो वेत्ति युगपत्सर्वं प्रत्यक्षेण सदा स्वत:) என்கிறபடியே எல்லாவற்றையும் ஒருகாலே எப்போதுமுள்ளபடி அரியவற்றாயிருக்கை. “ப3ல” (बल)ஸங்கல்பமாத்ரத்தாலே ஸர்வபதா3ர்த்த2ங்களையும் த4ரிக்கும் தா4ரணஸாமர்த்2யம், “ஐஶ்வர்ய” (ऐश्वर्य) ஸமஸ்த பதா3ர்த்த2நியமநஸாமர்த்2யம்.

மூ: வீர்யஶக்தி தேஜ: (वीर्यशक्तितेज:)

வ்யா: “வீர்ய” (वीर्य)ஸர்வத்தையும் த4ரித்து நியமித்துப் போராநின்றால் புருவம் வேராத அநாயாஸம். எல்லாவற்றையும் உண்டாக்கா நின்றால், தான் அவிக்ருதனாயிருக்கும் அவிகாரதை என்னவுமாம். “ஶக்தி” (शक्ति) ப்ரவ்ருத்யுந்முக2ரான சேதநருக்கு ஶக்தியைக்கொடுத்து ப்ரவர்திப்பிக்கும் ப்ரவர்தகத்வ ஸாமர்த்2யம், அக4டிதக4டநா ஸாமர்த்2யம் என்னவுமாம். ஜக3து3பாதா3ந ஶக்தியென்னவுமாம். “தேஜ:” (तेज:) பராபி44வநஸாமர்த்2யம். “தமேவ பா4ந்தமநுபா4தி ஸர்வம்” (42. तमेव भान्तमनुभाति सर्वं)இத்யாதி3.

            இப்படி ஸர்வோத்க்ருஷ்டனானவனுக்கு இனி பன்னிரண்டு கு3ணம் ஆஶ்ரிதவிஷயம். ஸௌஶீல்யாதி3 த்3வாத3ஶம்- ப4க்தரக்ஷணாஸாதா4ரணம்.(सौशील्यादि द्वादशं भक्तरक्षणासाधारणम्)

மூ: ஸௌஶீல்ய வாத்ஸல்ய (सौशील्य वात्सल्य)   

வ்யா: “ஸௌஶீல்ய” (सौशील्य) “மஹதோ மந்தை3ஸ் ஸஹ நீரந்த்4ரேண ஸம்ஶ்லேஷஸ்வபா4வத்வம்- ஶீலம்”  (43. महतो मन्दैस्सहनीन्ध्रेण संश्लेषस्वभावत्वंशीलं). அந்த மஹத்த்வம் தம் திருவுள்ளத்திலுமின்றிக்கே ஒழிகை ஸௌஶீல்யம் (सौशील्यं) “ஆத்மாநம் மாநுஷம் மந்யே” (44.आत्मानं मानुषं मन्ये) என்னுமாபோலே. “வாத்ஸல்ய” (वात्सल्य) தன் ப்ரேமத்தாலே ஆஶ்ரிதக3தமான தோ3ஷமும் கு3ணமாகத் தோற்றுகை. “கோ3பாலத்வம் ஜுகு3ப்ஸிதம்” (45.गोपालत्वं जुगुप्सितम्)

மூ: மார்த3வாऽऽர்ஜவ ஸௌஹார்த3ஸாம்ய (मार्दवार्जवसौहार्दसाम्य)

வ்யா: “மார்த3வ” (मार्दव)ஆஶ்ரித விஶ்லேஷம் பொறுக்கமாட்டாத திருவுள்ளத்தில் மென்மை. “அநித்3ரஸ்ஸததம் ராம:” (46. अनिद्रस्सततं राम:) “ஆர்ஜவ” (आर्जव) ஆஶ்ரிதஸம்ஶ்லேஷத்தில் தன்னுடைய மநோவாக்காயங்கள் ஏகரூபமாயிருக்கை. அதாவது– அவர்களுக்குத் தன்னை நியமித்துக்கொடுக்கை. “ஸௌஹார்த3” (सौार्द) ஆஶ்ரிதர்க்கு ஸர்வமங்க3ளாந்வேஷணபரனாகை. “ஶோப4நாஶம்ஸீதி- ஸுஹ்ருத்” (शोभनाशंसीतिसुहृत्) “ஸௌம்ய” (सौम्य) ஜாதிகு3ண வ்ருத்தாதி3களைப்பாராதே அவர்களுக்கு ஆஶ்ரயணீயத்வத்தில் ஸமநாயிருக்கை. “கு3ஹேந ஸஹித:”(47. गुहेन सहित:) “ஶப3ர்யாபூஜித:” (48. शबर्या पूजित:)

மூ: காருண்யமாது4ர்ய(कारुण्य माधुर्य)

வ்யா: “காருண்ய” (कारुण्य) “ஸ்வார்த்த2நிரபேக்ஷ பரது3:க்கா2ऽஸஹிஷ்ணுத்வம் (49.स्वार्थनिरपेक्ष परदु:खाऽसहिष्णुत्वं) “ரிஷேர்த4ர்மாத்மநஸ்தஸ்ய காருண்யம்” (50.ऋषेर्धर्मात्मनस्तस्य कारुण्यम्) “மாது4ர்ய” (माधुर्य) ஹந்தும் ப்ரவ்ருத்தத்வேऽபி ரஸாவஹத்வம். “ஏஹ்யேஹி பு2ல்லாம்பு3ஜபத்ரநேத்ர”(51.एह्येहि फुल्लाम्बुजपत्रनेत्र) “அஸூர்யமிவ ஸூர்யேண நிவாதமிவ வாயுநா। க்ருஷ்ணேந ஸமுபேதேந ஜஹ்ருஷே பா4ரதம் புரம்॥” (52. असूर्यमिव सूर्येण निवातमिव वायुना। कृष्णेन समुपेतेन जहृषे भारतं पुरम्) “ஸர்வவரஸ:” (31.सर्वरस🙂 

மூ: கா3ம்பீ4ர்யௌதா3ர்ய சாதுர்ய (गाम्भीर्यौदार्य चातुर्य)

வ்யா: “கா3ம்பீ4ர்ய” (गाम्भीर्य) ஆஶ்ரிதருக்குச்செய்ய நினைத்திருக்குமவை ஒருவராலும் பரிச்சே2தி3க்கவரிதாயிருக்கை, அதாவது- தன் கொடையின் சீர்மையும் கொள்ளுகிறவன் சிறுமையும் பாராதிருக்கை. “ய ஆத்மதா33லதா3:” (53. आतमदा बलदा:) “ஔதா3ர்ய” (औदार्य)ஆஶ்ரிதருடைய அபேக்ஷிதங்களைத் தானே இரந்து கொடுக்கை. “ஸ ஸர்வாநர்தி2நோ த்3ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்3ய ச”(54. सर्वानर्थिनो दृष्ट्वा समेत्य प्रतिनन्द्य )  “உதா3ராஸ்ஸர்வ ஏவைதே” (55.उदारास्सर्व एवैते)  “சாதுர்ய” (चातुर्य) ஆஶ்ரித தோ3ஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்துக்கொண்டிருக்கை. ஆஶ்ரிதருடைய அதிஶங்கையைப்போக்கி ரக்ஷிக்கையென்னவுமாம். “பாதா3ங்கு3ஷ்டே2ந சிக்ஷேப ஸம்பூர்ணம் த3ஶயோஜநம்” (56. पादाङ्गुष्ठेन चिक्षेप संपूर्णं दशयोजनम्)

மூ: ஸ்தை2ர்ய தை4ர்ய ஶௌர்ய பராக்ரம (स्थैर्य धैर्य शौर्य पराक्रम)

வ்யா: “ஸ்தை2ர்ய” (स्थैर्य)  “ப்ரத்யூஹ ஶதைரபி ஆஶ்ரிதரக்ஷண ப்ரதிஜ்ஞா ப4ங்க3ம் ந கரோதி”.  “ந த்யஜேயம் கத2ஞ்சந” (57. त्यजेयं कथञ्चन) “தை4ர்ய” (धैर्य) அதுக்கடியான நெஞ்சில் திண்ணிமை.

            அநந்தரம் இரண்டு கு3ணம் ப்ரதிபக்ஷ விஷயம். “ஶௌர்ய” (शौर्य) ஆஶ்ரிதவிரோதி4களை அழியச்செய்யவல்லனாயிருக்கை. “பராக்ரம” (पराक्रम) அளவற முடுகினாலும் வினை செய்யவல்லனாயிருக்கை. அத2வா தை4ர்யாதி3 த்ரயோகு3ணா: ப்ரதிபக்ஷவிஷயா: (अथवा धैर्यादि त्रययोगुणा: प्रतिपक्षविषया:)“தை4ர்ய” (धैर्य) மூலப3லே ஸந்நிஹிதேऽபி பூர்வக்ஷணாத் ந விஶேஷ: (मूलबले सन्निहितेऽपि पूर्वक्षणात् विशेष:)“ஶௌர்ய” (शौर्य) அவ்வளவன்றிக்கே அநுகூல இவ தத்33லப்ரவேஶநம். “பராக்ரம” (पराक्रम) “ப்ரஹர்தா ச” (58. प्रहर्ता ) “சி2ந்நம் பி4ந்நம் ஶரைர் த3க்34ம்” (59. छिन्नं भिन्नं शरैर्दग्धम्)

மூ: ஸத்யகாம ஸத்யஸங்கல்ப (सत्यकाम सत्यसङ्कल्प)

வ்யா: “ஸத்யகாம” (सत्यकाम) “காம்யந்த இதி காமா:” (काम्यन्त इति कामा:)- காம்யம் என்றது காமிக்கப்படும் விஷயத்தை. “ஸத்யா:காமா: யஸ்ய :- ஸத்யகாம:” (सत्या: कामा: यस्य : — सत्यकाम:) கல்யாணகு3ணங்களையும் விபூ4திகளையும் சொல்லுகிறது. ஆஶ்ரிதர்க்கு அநுபா4வ்யமான கு3ணவி4பூதிகளென்கை. “ஸத்யஸங்கல்ப” (सत्यसङ्कल्प)அமோக4மான அபூர்வபோ4க்3யங்களை ஸ்ருஷ்டிக்க க்ஷமனாகை. “ஆஶ்ரித ஸம்ரக்ஷண விஷயோ மநோரத2: -காம: ஸோப்ரதிஹதோ4வதீதி ஸத்யகாம:. (आश्रित संरक्षण विषयो मनोरथ: —काम: सोऽप्रतिहतो भवतीति सत्यकाम:௥) தத்3ரக்ஷணாய தே3 மநுஷ்யாத்3யவதார ஸங்கல்போ மநோரத2: ஸோப்ரதிஹதோ2வதீதி ஸத்யஸங்கல்ப: (तद्रक्षणाय देव मनुष्याद्वतार सङ्कल्पो मनोरथ:।सोऽप्रतिहतो भवतीति सत्यसङ्कल्प:) இக்கு3ணங்களிரண்டும் ஜக3ஸ்த்ருஷ்டிக்கு உறுப்பாகையாலே மத்4யஸ்த2 ஜக3த்3ரக்ஷணார்த்த2மாகவுமாம்.

மூ: க்ருதித்வ க்ருதஜ்ஞதா (कृतित्व कृतज्ञता)

வ்யா: “க்ருதித்வ” (कृतित्व) ஆஶ்ரிதர் அபேக்ஷிதம்பெற்றால் அந்தலாப4ம் தன்னதாயிருக்கை. “அபி4ஷிச்யச லங்காயாம்” (60.अभिषिच्य लङ्कायां) இவர்கள் கர்தவ்யங்களை யடையத்தானே ஏறிட்டுக்கொண்டிருக்கை என்னவுமாம். “ஆதி3கர்மணி க்திந்நந்த:” (आदिकर्मणिक्तिन्नन्त:) “க்ருதஜ்ஞதா” (कृतज्ञता) ஒருகால் ஶரணமென்னும் உக்தி மாத்ரத்தாலே பின்பு செய்யும் குற்றங்கள் பாராதே அத்தையே நினைத்திருக்கை. ஆஶ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் அவற்றை மறந்து அவர்கள் செய்த ஸுக்ருதலவத்தையே நினைத்திருக்கை என்னவுமாம். “ஹ்ருத3யாந்நா பஸர்பதி” (61.हृदयान्नापसर्पति ) ஆஶ்ரிதவிஷயத்தில் தான் செய்த அபகாரத்தையே நினைத்திருக்கை என்னவுமாம். “ஶிரஸா யாசதஸ்தஸ்ய வசநம் ந க்ருதம் மயா” (62.शिरसा याचतस्तस्य वचनं कृतं मया) “ஆதி3” (आदि)ஶப்33த்தாலே அநுக்த கு3ணங்களை நினைக்கிறது.

மூ: ஆத்யஸங்க்யேய கல்யாணகுணகணௌக மஹார்ணவ (आद्यसंख्येय कल्याणगुणगणौघ महार्णव)

வ்யா: “அஸங்க்யேய” (असंख्येय) இக்கு3ணங்கள் எண்ணிறந்திருக்கை. “அநவதி4காதிஶய” (अनवधिकातिशय) என்று- நிஸ்ஸீமத்வம். இத்தால் நிஸ்ஸங்க்2யேயத்வம். “கல்யாண” (कल्याण) உள்ளதெல்லாம் நன்றாயிருக்கை. “கு3ணக3ணௌக4” (गुणगणाौघ) அவைதான் திரள் திரளாயிருக்கை. க்ரோதா4தி3களும் ஆஶ்ரிதர்க்கு ப்ராப்யமாயிருக்கை. “மஹார்ணவ” (महार्णव) அஸ்மிந்மநோகோ3சரா: கேசிதே3வோக்தா: (अस्मिन्मनोगोचरा: केचिदेवोक्ता:)  “வர்ஷாயுதைர் யஸ்ய கு3ணா ந ஶக்யா:” (63. वर्षायुतैर्यस्य गुणा शक्या:) “சதுர்முகா2யு:” (64. चतुर्मुखायु:)

மூ: ஸ்வோசித விவித4விசித்ராऽநந்தாஶ்சர்ய (स्वोचित विविधविचित्राऽनन्ताश्चर्य)

வ்யா: “ஸ்வோசிதேதி” # (स्वोचितेति) ஏவம் வித4னானவனுக்கு ஶோபா4வஹமான தி3வ்யாப4ரணங்களைச் சொல்லுகிறது. ஜ்ஞாநாதி3கள் ஆத்மஸ்வரூபத்துக்கு அலங்காரமானவோபாதி விக்3ரஹத்துக்கு ஆப4ரணங்கள் அலங்காரமாகையாலே அவற்றைச் சொல்லுகிறார். “ஸ்வோசித” (स्वोचित) அவயவங்கள் தான் ஒருபடி பூத்தாப்போலே தகுந்திருக்கை. “விவித4” (विविध) அவைதான் நாநாவாயிருக்கை. அதாவது – கிரீடாதி3 பே43த்தாலே பலவகைப்பட்டிருக்கை. “விசித்ர” (विचित्र) அங்கு3லீயகமென்றால் இடைச்சரி, கடைச்சரி என்னுமாப்போலே ஓரோ வகைகளிலே நாநாவித4மாயுருக்கை. “விவித4” (विविध) முத்தின்படி, மாணிக்கப்படி என்கிற விவித4 பே43த்தைச் சொல்லுகிறது. “விசித்ர” (विचित्र)கிரீடாதி3 நூபுராந்தமான வைசித்ர்யத்தைச் சொல்லுகிறது என்னவுமாம். “அநந்தாஶ்சர்ய” (अनन्ताश्चर्य) எல்லையிறந்த ஆஶ்சர்யத்தை உடைத்தாயிருக்கை. ஓரோ ஆப4ரணச்சேர்த்தியை அநுப4வித்து முடிக்கவொண்ணாதிருக்கை.

[#–பாட2பே43ம்–விக்3ரஹ கு3ணமான ஸௌந்த3ர்யாதி3களோபாதி பூத்தாப்போலே சாத்தின கிரீடமகுடாதி3 தி3வ்யாப4ரணங்களை அநுஸந்தி4த்தருளுகிறார்]

 மூ: நித்ய நிரவத்3ய நிரதிஶய ஸுக3ந்த4 நிரதிஶய ஸுக2ஸ்பர்ஶ நிரதிஶயௌஜ்வல்ய

(नित्य निरवद्य निरतिशय सुगन्ध निरतिशय सुखस्पर्श निरततिशयौज्ज्वल्य)

வ்யா: “நித்யநிரவத்3ய” (नित्य निरवद्य) நிரவத்3யங்களாயிருக்குமவற்றுக்கும் காதா3சித்கமான அவத்3யங்களுண்டாயிருக்கும். அங்ஙனன்றிக்கே நித்யநிரவத்3யங்களாயிருக்கை. அத2வா, “நித்ய” (नित्य) உத்பத்தி விநாஶரஹிதமாயிருக்கை. “நிரவத்3ய” (निरवद्य) “ஸ்ரக்3வஸ்த்ராப4ரணைர் யுக்தம்” (65. स्रग्वस्त्राभरण युक्तं) என்கிறபடியே தி3வ்யாப4ரணாழ்வார்கள் சேதநராகையாலே தந்தாமுடைய ஶோபை4 ஸ்வார்த்த2மன்றிக்கேயிருக்கை. சேதநராயிருப்பார்க்கு ஸ்வார்த்த2மென்றிருக்கை அவத்4யமிறே.  “நிரதிஶய ஸுக3ந்த4” (निरतिशय सुगन्ध) “ஸர்வக3ந்த4:” (31.सर्वगन्ध:) என்கிறவிஷயத்துக்கும் ஸ்ப்ருஹா விஷயமாயிருக்கை, அதாவது- திருவாப4ரணம் சாற்றினால் திருமாலை சாத்துகை பரிமளத்துக்கு உறுப்பன்றிக்கே அலங்காரத்துக்கு உறுப்பாம்படியிருக்கை. “நிரதிஶய ஸுக2ஸ்பர்ஶ” (निरतिशय सुखस्पर्श) அல்லாத ஆப4ரணங்கள் அழகுக்குறுப்பாகையாலே, போ43த்தில் வந்தால் கழற்றவேண்டிவரும். இவையோவென்னில், பிரட்டிமாரோட்டைக் கலவியிலும் கழற்ற வேண்டாதபடி ஸ்ரக்சந்த3நாதி3களோபாதி அநுகூலமாயிருக்கும். “நிரதிஶயௌஜ்ஜ்வல்ய” (निरततिशयौज्ज्वल्य) விக்3ரஹ காந்தியையும் அமுக்கும் ஔஜ்ஜ்வல்யத்தையும் உடைத்தாயிருக்கை.

மூ: கிரீடமகுட சூடா3வதம்ஸ மகரகுண்ட3ல க்3ரைவேயக ஹார கேயூர கடக ஶ்ரீவத்ஸ கௌஸ்துப4 முக்தாதா4மோத3ரப3ந்த4

(किरीटमकुट चूडावतंस मकरकुण्डल ग्रैवेयक हारकेयूरकटकश्रीवत्स कौस्तुभमुक्ताधामोदरबन्धन)

வ்யா: “கிரீடமகுட” (किरीटमकुट) கிரீடமாகிறது- திருவபி4ஷேகத்தின் சுற்று. மகுடமாகிறது –மேலில் கவிப்பு. “சூட3” (चूडा) – *திருச்சுட்டி. [* (பா)–திருச்சுட்டு] “அவதம்ஸ” (अवतंस)- திருச்செவிமலர். “மகரகுண்ட3ல” (मकरकुण्डल)- மகராகாரமான திருத்தோடுகள். “க்3ரைவேயக” (ग्रैवेयक) திருக்கழுத்தில் சாத்தும்# [# (பா) ரேகா2த்ரயங்களுக்கும் ஆப4ரணமான முத்துத் திருக்கட்டு] திருவட்டமணி முதலானவை. “ஹார” (हार) [ மூன்.திருவ. 55] “பெரிய வரைமார்பில் பேராரம்பூண்டு” என்னுமாபோலே திருமார்பில் மடித்துச்சாத்தவேண்டும்படியான திருவாரம். “கேயூர” (केयूर) திருத்தோள் வளை. “கடக” (कटक) முன்கையில் சாத்தும் திருவளைகள். “ஶ்ரீவத்ஸ” (श्रीवत्स)திருமறு. கீழுள்ள ஆப4ரணங்கள் போலே ப்ருத2க்ஸ்தி2தி யோக்3யமன்றிக்கே ஸர்வேஶ்வரத்வ சிஹ்நமான ஆப4ரணம். “கௌஸ்து4ப” (कौस्तु) ஶ்ரீகௌஸ்துப4ம். ஒருகாலமும் பிரியாதபடி அபி4மதமாய் ஸர்வேஶ்வரத்வ சிஹ்நமாயிருக்கும் ரத்னம். “முக்தாதாம” (मुक्ताधाम) ஏகாவளீ, த்ரிஸரம், பஞ்சஸரம் தொடக்கமான திருமுத்துவடங்கள். “உத3ரப3ந்த4ந” (उदरबन्धन) திருவுத3ரப3ந்த4நம். ப்ரளயாபத்துக்களிலே ஜக3த்தை திருவயிற்றிலே வைத்துப்போந்த ஆபத்ஸக2த்வத்துக்குப் பட்டங்கட்டினாப்போலே யிருக்கை.

மூ: பீதாம்ப3ர காஞ்சீகு3ண நூபுராத்3யபரிமித தி3வ்யபூ4ஷண

(पीताम्बर काञ्चीगुण नूपुराद्यपरिमित दिव्यभूषण)

வ்யா: “பீதாம்ப3ர” (पीताम्बर) ஸர்வேஶ்வரத்வ லக்ஷணமாய் திருவரையிலே பூத்தாற்போலே ஸுஸங்க3தமாய் பும்ஸ்த்வாவஹமாயிருந்துள்ள திருப்பீதாம்ப3ரம். “காஞ்சீகுண” (काञ्चीगुण) அந்தத் திருப்பீதாம்பர3த்துக்கு ஶோபா4வஹமாய் அந்தரங்க3மாயிருந்துள்ள அரை நூல் பட்டிகை. “நூபுர” (नूपुर) ப43வத்விஷயத்தில் இழிவார் எல்லார்க்கும் இழியும் துறையான திருவடிகளுக்கு ப்ரகாஶகமான திருச்சிலம்பு. “ஆதி3” ஶப்33த்தாலே # [#- திருவாய் 3-7-4] “புடையார் பொன் நூலினன்” என்கிறபடியே அநுக்தமான திருயஜ்ஞோபவீதம் கணையாழி மோதிரம் முதலானவற்றைச் சொல்லுகிறது. “அபரிமித” (अपरिमित) “எண்ணில் பல்கலன்”# [#- திருவாய் 4-3-5]  என்றும் “பலபலவேயாப4ரணம்”& [&-திருவாய் 2-5-6]  என்றும் சொல்லுகிறபடியே திருவாப4ரணங்களுக்குத் தொகையில்லையென்கிறது. “தி3வ்யபூ4ஷண” (दिव्यभूषण) ஶுத்34ஸத்வாத்மகமாய் தி3வ்யாவயவங்களுக்கும் ஆப4ரணங்களுக்கும் உண்டான சேர்த்தியழகுக்கும் அடியான த்3ரவ்யவைலக்ஷண்யம்.

மூ: ஸ்வாநுரூபாசிந்த்ய ஶக்தி ஶங்க2சக்ரக3தா3ऽஸி ஶார்ங்கா3த்3யஸங்க்2யேய

(स्वानुरूपाचिन्त्य शक्तिशङ्खचक्रगदाऽसि शार्ङ्गाद्यसंख्येय)

வ்யா: “ஸ்வாநுரூப” (स्वानुरूप) கீழ்ச்சொன்ன ஆப4ரணங்களோடு விகல்ப்பிக்கலாம்படியான தி3வ்யாயுத3வர்க்க3த்தைச் சொல்லுகிறது. கீழ்ச்சொன்ன ப3லவீர்யாதி3களையுடைய தனக்கு அநுரூபமாயிருக்கை. அத2வா, ஆஶ்ரிதவிரோதி4களை அழியச்செய்யும்போது ஆயுத4மாய், ஆஶ்ரிதரை உகப்பிக்கும்போது ஆப4ரணமாயிருக்குமென்றுமாம். “அசிந்த்யஶக்தி” (अचिन्त्य शक्ति) ஸர்வஶக்தியினுடைய ஶக்தியைப் பரிச்சே2தி3க்கிலும் பரிச்சே2தி3க்கவொண்ணாத ஶக்தியை உடைத்தாயிருக்கை. “ஶங்க2சக்ரக3தா3 ஶார்ங்க3” (शङ्खचक्रगदा शार्ङ्गा) இவை அஞ்சுக்குமுபலக்ஷணம். அஸி ஶப்33விது4ரமாகவே கிடக்கிறது. “பத்3யவத் க3த்3யத்துக்கும் ஒருநியதியு ண்டாயிருக்குமிறே” என்று பிள்ளை அருளிச்செய்வர். “ஆதி3” (आदि) இவை முதலான “அஸங்க்2யேய” (असंख्येय)இவைதான் எண்ணிறந்திருக்குமிறே. ஆப4ரணங்களோபாதி தி3வ்யாயுத3ங்களுக்கும் தொகையில்லாமையாலே ப்ரதா4நமான பஞ்சாயுத4ங்களைச் சொன்னவித்தனை.

மூ: நித்யநிரவத்3யநிரதிஶய கல்யாண தி3வ்யாயுத4 (नित्य निरवद्यनिरतिशय कल्याणदिव्यायुध)

வ்யா: “நித்ய” (नित्य) உத்பத்தி விநாஶரஹிதங்களாயிருக்கை. “நிரவத்3ய” (निरवद्य) சிந்மயராகையாலே ப்ரதிகூலநிரஸநாதி3களில் ஶக்திப்ரவ்ருத்திகள் ஸ்வார்த்த2மாயிராதே ஶேஷிக்கு உறுப்பாயிருக்கை அத2வா “நித்யநிரவத்3ய” (नित्यनिरवद्य) நாள் செல்ல நாள் செல்ல மழுங்குகையன்றிக்கே “மழுங்காத வைந்நுதிய” [திருவாய் 3-1-9] என்கிறபடியே ஶத்ரு ஶரீரங்களிலே தைக்கத் தைக்கச் சாணையிலிட்டாப்போலே கூர்மை மிக்கிருக்கை. “நிரதிஶயகல்யாண” (निरतिशय कल्याण) ஸ்வஸம்ப3ந்த4த்தாலே ஸர்வமங்க3ளங்களையும் அத்தலைக்கு உண்டாக்கவற்றாயிருக்கை. அதாவது- ஆஶ்ரிதவிரோதி4 நிரஸநத்தில் வந்தால் ஈஶ்வர ஸங்கல்பத்திலும் முற்பாடராயிருக்கை. “அறமுயலாழி” யிறே [திருவாய் 2-10-5] “தி3வ்யாயுத4” (दिव्यायुध) அப்ராக்ருத விக்3ரஹராயிருக்கை.

மூ: ஸ்வாபி4மதநித்ய நிரவத்3யாநுரூப ஸ்வரூபரூபகு3ண விப4வைஶ்வர்ய ஶீலாத்3யநவதி4காதிஶயா ஸங்க்2யேய கல்யாணகு3ணக3ண ஶ்ரீவல்லப4  (स्वाभिमतनित्य निरवद्यानुरूप स्वरूपरूपगुणविभवैश्वर्य शीलाद्यनवधिकातिशयासंख्येयकल्याणगुणगण श्रीवल्लभ)

வ்யா: “ஸ்வாபி4மதநித்ய நிரவத்3யாநுரூப ஸ்வரூபரூபகு3ண விப4வைஶ்வர்ய ஶீலாத்3யநவதி4காதிஶயா ஸங்க்2யேய கல்யாணகு3ணக3ணேத்யாதி3” (स्वाभिमतनित्य निरवद्यानुरूप स्वरूपरूपगुणविभवैश्वर्य शीलाद्यनवधिकातिशयासंख्येयकल्याणगुणगणेत्यादि) கீழ்ச்சொன்ன விக்3ரஹாதி3 வைலக்ஷண்யமடையக் காட்டிலெரித்த நிலாவாகாதபடி போ4க்த்ரிகளான மஹிஷி வர்க்க3த்தைச்சொல்லுகிறது. ப்ரத2ம சூர்ணையிலும் இக்கு3ணங்கள் உக்தமாயிருக்கத் திரியட்டும் சொல்லுகிறது. புநருக்தமன்றோவென்னில்; இவர் தாம் பிறர்க்கு உபதே3ஶிக்கிறாரன்றியிலே அநுப4விக்கிறாராய், அத்தாலே வந்த ஆத3ராதிஶயம் சொல்லுவிக்கச் சொல்லுகிறாராகையாலே புநருக்தி தோ3ஷமில்லை. அத2வா, அங்கு ஶரண்யதைக்கு உறுப்பாக அருளிச்செய்தார்; இங்கு வால்லப்4யத்துக்கு உறுப்பாக அருளிச்செய்கிறார். இங்குள்ள பத3ங்களு அர்த்த2மதுவே. “ஶ்ரீவல்லப4” (श्रीवल्लभ) ஏவம்வித4 வைலக்ஷண்யோபேதையான பிராட்டிக்கு நாயகனானவனே! பசியன் சோற்றின் மேலே விழுமாபோலே அவன்தானும் மேல்விழும்படியாயிருக்கை. “பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு” [திருநெடு 18]என்னக்கடவதிறே. இவ்வால்லப்4யம் புருஷகாரபா4வத்துக்கும் ப்ராப்யதைக்கும் உறுப்பாயிருக்குமிறே.

மூ: ஏவம்பூ4த பூ4மிநீளாநாயக (एवंभूत भूमिनीलानायक)

வ்யா: “ஏவம்பூ4த” (एवंभूत) ஏவம்வித4 வைலக்ஷண்யோபேதைகளான. “பூ4மிநீளாநாயக” (भूमिनीलानायक)  “வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள்” [திருவாய் 9-2-10] என்னக்கடவதிறே. கீழ் “ஶ்ரீவல்லப4” (श्रीवल्लभ) என்றது; இங்கு “நாயக” (नायक) என்கிறது- இவர்கள் பக்கல் முறையாலே பரிமாறுகையும், அவள் பக்கல் முறைகெடப் பரிமாறுகையும்; இம்முறைகேடுதனக்கு இவர்கள் தங்களை எழுதிக்கொடுத்திறே இருப்பது.

மூ: ஸ்வச்ச2ந்தா3நுவர்த்தி ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திபே43 (स्वच्छन्दानुवर्त्ति स्वरूपस्थिति प्रवृत्तिभेद)

வ்யா: “ஸ்வச்ச2ந்தா3நுவர்த்தி” (स्वच्छन्दानुवर्त्ति) இப்படிபிராட்டிமாரோட்டைச் சேர்த்தியே தங்களுக்கு ஸ்வரூப லாப4மாய் அவர்களோட்டைக் கலவிக்குக் கைதொடுமானமாயிருக்கிற பரிஜநத்தைச் சொல்லுகிறது. “ஸ்வச்ச2ந்தா3நுவர்த்தி” (स्वच्छन्दानुवर्त्ति)நித்யஸூரிகள் முகமறிந்து பரிமாறுமவர்களாகையாலே ஸ்வச்ச2ந்தா3நுவர்த்திகளயிருப்பார்கள். ஸம்ஸாரிகள் முறையறியாதே பரிமாறுகையாலே ஸங்கல்பாநுவர்த்திகளயிருக்கும். “ஸ்வச்ச2ந்தா3நுவர்த்தி ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திபே43ங்களாவது— ஈஶ்வரன் யாவர் சிலரைக்கொண்டு யாதோரடிமை கொள்ள நினைத்தருளுகிறான், அந்தவடிமைக்கநுரூபமான ஸ்வரூபமும் ஸ்தி2தியும் ப்ரவ்ருத்தியுமாயிருக்கை. “பா4வஜ்ஞேந க்ருதஜ்ஞேந” (66. भावज्ञेन कृतज्ञेन) என்னக்கடவதிறே.

மூ: அஶேஷஶேஷதைகரதிரூப நித்யநிரவத்3ய நிரதிஶயஜ்ஞாந க்ரியைஶ்வர்யாத்3யநந்த

(अशेषशेषतैकरतिरूप नित्यनिरवद्य निरतिशयज्ञान क्रियैश्वर्याद्यनन्त)

வ்யா: “அஶேஷஶேஷதைகரதிரூப” (अशेषशेषतैकरतिरूप) ஈஶ்வரனடிமை கொள்ளும்போது அவ்வோ அடிமைகளில் வ்யவஸ்தி2தராயிருக்கும் அத்தனைப்போக்கி அவ்வாத3ரத்தைப் பார்த்தால் ஸர்வஶேஷவ்ருத்தியிலும் உண்டான ஆத3ரத்தையே வடிவாக உடையராயிருப்பர்கள்.

தா3ஸ்யோபகரணங்களைச் சொல்லுகிறது மேல். “நித்ய” (नित्य) முக்தரைப்போலே ஒருகால் இல்லாமல் ஒருகால் உண்டாகையன்றிக்கே எப்போதுமுண்டாயிருக்கை. “நிரவத்3ய” (निरवद्य) ஜ்ஞாநாதி3கள் ஸ்வோத்கர்ஷ ஹேதுவாயிருக்கையன்றிக்கே “ப்ரஹர்ஷயிஷ்யாமி” (67. प्रहर्षयिष्यामि) என்று கைங்கர்யத்துக்கு அநுகூலமாயிருக்கை. அஜ்ஞராய், அக்ரியராய் இருக்கிலும் இருப்பார்கள்.  “நிரதிஶயஜ்ஞாந” (निरतिशयज्ञान) அடிமைக்கு உறுப்பான அஸங்குசித ஜ்ஞாநம். “க்ரியா” (क्रिया) ஜ்ஞாநாநுரூபமான வ்யாபாரம். “ஐஶ்வர்ய” (ऐश्वर्य) அடிமைக்கு உறுப்பான நியமனம். [பா. உப4யத்துக்கும் ஸத்3ருஶமான நியமநம்]  ஸேநைமுதலியார் பிரம்பும் கையுமாய் பிறரை நியமிக்குமதுவும் அங்குற்றைக்கு உறுப்பாயிருக்குமிறே. “ஆதி3” ஶப்33த்தாலே அநுக்தங்களான கு3ணவிஶேஷங்களை நினைக்கிறது.

மூ: அநந்த (கல்யாண) கு3ணக3ண ஶேஷ ஶேஷாஶந க3ருட3 ப்ரமுக2 நாநாவிதா4நந்த பரிஜந பரிசாரிகா பரிசரித சரணயுக3ள (अनन्त (कल्याण) गुणगण शेष शेषाशन गरुड प्रमुखनानाविधानन्त परिजन परिचारिका परिचरित चरणयुगल)

வ்யா: “அநந்த” (अनन्त)ஈஶ்வரனுக்கு ரக்ஷண விஷயமான கு3ணங்களுக்குத் தொகையில்லாதாப்போலே கைங்கர்யவிஷயமான கு3ணங்களுக்குத் தொகையின்றிக்கேயிருக்கை. “கு3ணக3ண” (गुणगण) திரள் திரளாக அறியுமத்தனை போக்கித் தனித்தனியே காணவரிதாயிருக்கை. “ஶேஷ” (शेष) திருவநந்தாழ்வான். “ஶேஷாஶந” (शेषाशन) ஸேநைமுதலியார். “க3ருட3” (गरुड) பெரியதிருவடி.  “ப்ரமுக2” (प्रमुख) இவர்கள் தொடக்கமான “நாநாவித4” (नानाविध) சண்டா3தி3 த்4வார பாலர்கள் குமுதா3தி33ணாதி4பர்கள் முதலான விவித4பே43ங்கள்.  “அநந்தபரிஜந” (अनन्त परिजन) கு3ணங்களுக்குத் தொகையில்லாதாப்போலே இவர்களுக்கும் தொகையின்றிக்கேயிருக்கை. “பரிசாரிகாபரிசரித சரணயுக3ள” (परिचरित चरणयुगल) ஏவம்வித4 ஜ்ஞாநாதி3களையுடைய விமலாதி3களென்ன; “ஶதம்மாலாஹஸ்தா:” (68. शतं मालाहस्ता:)என்கிறபடியே மதிமுகமடந்தையரென்ன, [திருவாய் 10-9-10]ஸூத்ரவதீ முதலான இவர்கள் மஹிஷிகளென்ன; இவர்களாலே அடிமை செய்யப்பட்ட ஏற்றத்தையுடைய திருவடிகளையுடையவனே! இவர்கள் மஹிஷிகள் தம் போ43த்துக்கு உறுப்பாகையன்றிக்கே அங்குத்தைக்கு உறுப்பாயிருப்பரிறே. “அயர்வருமமரர்கள் அதிபதி” [திருவாய் 1-1-1]என்றிறே ஏற்றம்.

மூ: பரமயோகி3 வாங்மநஸாऽபரிச்சே2த்3ய ஸ்வரூபஸ்வபா4வ  (परमयोगि वाङ्मनसाऽपरिच्छेद्य स्वरूपस्वभाव)

வ்யா: “பரமேதி” (परमेति) ஸூரிபோ4க்3யமான கைங்கர்யத்தினுடைய ஸ்வரூபம் சொல்லிற்று கீழ். அந்தக் கைங்கர்யத்துக்கு வர்த்த4கமான தே3ஶவிஶேஷத்தைச் சொல்லுகிறது மேல். “பரமயோகி3 வாங்மநஸாऽபரிச்சே2த்3ய ஸ்வரூபஸ்வபா4வ” (परमयोगि वाङ्मनसाऽपरिच्छेद्य स्वरूपस्वभाव)– “முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத்3யச்ச்2வேதத்3வீபவாஸிநாம்” (69. मुक्तानां लक्षणं ह्येतद्यच्छ्वेतद्वीपवासिनाम्) என்கிற ஸநகாதி3களுடைய வாங்மநஸ்ஸுக்களால் பரிச்சே2தி3க்கவொண்ணாத ஸ்வரூப ஸ்வபா4வங்களையுடைத்தாயிருக்கை. அதாவது- பஞ்சோபநிஷண்மயம், ஶுத்34ஸத்வமயமென்று திரள நினைத்தல், சொல்லுதல் செய்யுமத்தனையொழிய “ஏவம்ஸ்வரூபம், ஏவம்ஸ்வபா4வம்” (एवंस्वरूपं एवं स्वभावम्) என்று பரிச்சே2தி3க்கவரிதாயிருக்கை. பஞ்சோப நிஷண்மயமாகையாலே ஏகத்3ரவ்யமென்ன ஒண்ணாது; அநேக த்3ரவ்யோபசயாத்மகமாகையாலே நித்யத்3ரவ்யமென்னவொண்ணாது. அவஸ்தா2ந்தராபத்தியில்லாமையாலே பரிணாமஸ்வபா4வமென்னவொண்ணாது. ப43வத்ஸங்கல்பத்தாலே சிலவுண்டாகச் சொல்லுகையாலே ஏகரூபமென்னவொண்ணாது. ஆகையால் அளவுடையராயிருக்கும் பரமயோகி3களாலும் பரிச்சே2தி3க்க ஒண்ணாதாயிருக்குமாய்த்து தே3ஶம்.

மூ: ஸ்வாபி4மத விவித4 விசித்ராநந்த போ4க்3ய போ4கோ3பகரண போ43ஸ்தா2நஸம்ருத்3தா4நந்தாஶ்சர்யாநந்த (स्वाभिमत विविधविचित्रानन्त भोग्य भोगोपकरण भोगस्थानसमृद्धानन्ताश्चर्यानन्त)

வ்யா: “ஸ்வாபி4மத” (स्वाभिमत) “அன்புற்றமர்ந்துறைகின்ற” [திருவாய் 7-10-1] என்கிறபடியே ஆத3ரித்து வர்த்திக்கிறபடியாலே அபி4மதமாய். “விவித4 விசித்ர” (विविधविचित्र) நாநாவித4மாய், “அநந்த” (अनन्त) முடிவின்றிக்கேயிருப்பதான.  “போ4க்3ய போ4கோ3பகரண போ43ஸ்தா2நஸம்ருத்34” (भोग्य भोगोपकरण भोगस्थानसमृद्ध) போ4க்3யங்களான அப்ராக்ருத ஶப்3தா3தி3 விஷயங்களென்ன, போ4கோ3பகரணங்களான சூட்டு நன்மாலைகள் [திருவிருத்தம் 21] பரிஜநபரிச்ச2தா3தி3களென்ன, போ43ஸ்தா2நங்களான அப்ராக்ருத ரத்நமயமண்ட3பாதி3 தே3ஶ விஶேஷங்களென்ன, இவற்றாலே ஸம்ருத்34மாயிருந்துள்ள. “அநந்தாஶ்சர்ய” (अनन्ताश्चर्य) அளவிறந்த ஆஶ்சர்யத்தையுடைத்தான.

மூ: அநந்தமஹாவிப4வாநந்த பரிமாண நித்யநிரவத்3யநிரதிஶய வைகுண்ட2நாத2! (अनन्तमहाविभवानन्त परिमाण नित्यनिरवद्यनिरतिशय वैकुण्ठनाथ)

வ்யா: “அநந்தமஹாவிப4வ” (अनन्तमहाविभव) அநந்த உத்3யாந நதீ3 தடாகாதி3 லக்ஷணமான விப4வத்தையுடைத்தாயிருக்கை. அநந்தாஶ்சர்யமாகையாவது –க்ருதகம் என்றாதல், நவம் என்றாதல், புராதநம் என்றாதல் சொல்லவொண்ணாதே அக்ருத்ரிமமாய் ப்ரதிக்ஷணம் அபூர்வமாயிருக்கை. மஹத்த்வமாவது- இவற்றுள் ஓரொன்றே போ4க்தாக்களாலநுப4வித்து முடிக்கவொண்ணாதாயிருக்கை. “அநந்தபரிமாண” (अनन्त परिमाण)ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்திருக்கை. “நித்யநிரவத்3ய நிரதிஶய வைகுண்ட2நாத2” (नित्यनिरवद्यनिरतिशय वैकुण्ठनाथ) ஸதா3 ஏகரூபமாய் ஹேயப்ரத்யநீகமாய் ஸர்வப்ரகாரத்தாலும் அதிஶயிதமான ஶ்ரீவைகுண்ட2த்துக்கு நாத2னானவனே!

மூ: வைகுண்ட2நாத2. (वैकुण्ठनाथ)

வ்யா: பரமபத3த்தில்போ4க்தாக்களைச் சொல்லாதொழிந்தது “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப” [திருவாய் 4-9-10]என்கிறபடியே இவர்கள் போ43த்துக்குக் கைதொடுமானமாம் ஆகாரமொழிய, “அஹம், மம” (अहं, मम) என்றிருப்பாரில்லாமையாலே. ஆனால், ஶ்ருதி “அந்நாத3:” (70. अन्नाद🙂 என்று போ4க்தாக்களைச் சொல்லிற்றில்லையோ வென்னில்; தான்- அங்குத்தைக்கு ஸ்ரக்சந்த3நாதி3களோபாதி போ4கோ3பகரணமாயிருக்குமிருப்பு புருஷார்த்த2மாகையாலே சொல்லிற்றித்தனை. அங்ஙனன்றாகில் “அஹமந்நம்” (70.अहमन्नं) என்றத்தோடு விரோ4திக்குமிறே.

மூ: ஸ்வஸங்கல்பாநுவிதா4யி ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்தி (स्वसङ्कल्पानुविधायि स्वरूपस्थितिप्रवृत्ति)

வ்யா: “ஸ்வஸங்கல்பேதி” (स्वसङ्कल्प) இப்படி அப்ராக்ருதமான நித்யவிபூ4தியுக்தனுக்கு ஆவதழிவதாய் லீலாரஸ ஹேதுவாந லீலாவிபூ4தியோக3ம் சொல்லுகிறது மேல். “ஸ்வஸங்கல்பாநுவிதா4யி ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்தி” (स्वसङ्कल्पानुविधायि स्वरूपस्थितिप्रवृत्ति) ஸ்வஸங்கல்பத்தைப்பின் செல்லா நின்றுள்ள ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திகளை யுடைத்தாய். ப்ரக்ருதியாவது- ஸத்வாதி3 கு3ணத்ரயாத்மகமாய், அநந்தமாய், விசித்ரமான அவஸ்தா2 விஶேஷ ரூபபரிணாமத்துக்கு ஸமர்த்த2மாயிருந்துள்ள ப்ரதா4நம். ப்ரக்ருதிக்கு ஸ்வரூபமாவது- ஸத்வாதி3கு3ணகமான ஜட3த்வம். ஸ்தி2தியாவது- சேதநருக்கு போ43மோக்ஷ ஸாத4நாநுஷ்டா2நத்துக்கும் ப2லாநுப4வத்துக்கும் உபகரணமாயிருக்கை. ப்ரவ்ருத்தியாவது – தத3ர்த்த2மாக போ4க்3ய போ4கோ3பகரண போ43ஸ்தா2ந ரூபேண பரிணமிக்கை. ஸம்ஸாரி சேதநனுக்கு ஸ்வரூபமாவது- அசித்3விஶிஷ்டாகாரத்வம். ஸ்தி2தியாவது- அந்நாதி3களால் த4ரிக்கை, ப்ரவ்ருத்தியாவது – புண்யபாபரூப கர்மாநுஷ்டா2னமென்ன, தத்ப2லாநுப4வமென்ன இவை. காலத்துக்கு ஸ்வரூபமாவது – அசித்த்வம். ஸ்தி2தியாவது – சேதநாऽசேதநங்களிநுடைய பரிணாமங்களுக்கு நிர்வா ஹகமாயிருக்கை. ப்ரவ்ருத்தியாவது- நிமேஷகலாகாஷ்டா2தி3 ரூபத்தாலே உத்பத்தி விநாஶாதி3களை ப்ரவர்திப்பிக்கை.

மூ: ஸ்வஶேஷதைக ஸ்வபா4வ ப்ரக்ருதிபுருஷகாலாத்மக (स्वशेषतैक स्वभाव प्रकृतिपुरुषकालात्मक)

வ்யா: “ஸ்வஶேஷதைக ஸ்வபா4வ” (स्वशेषतैक स्वभाव) அநந்யார்ஹ ஶேஷமாயிருக்கை. “ப்ரக்ருதிபுருஷ காலாத்மக” (प्रकृतिपुरुषकालात्मक) இப்படிப்பட்ட ப்ரக்ருதி புருஷ கால ரூபமாய்,

மூ: விவித4 விசித்ராநந்த போ4க்3ய போ4க்த்ருவர்க3 போ4கோ3பகரண போ43ஸ்தா2நரூப நிகி2லஜகது33ய விப4வலயலீல (विविध विचित्रानन्त भोग्य भोक्तृवर्ग भोगोपकरण भोगस्थानरूप निखिलजगदुदय विभवलयलील)

வ்யா: “விவித4” (विविध) அத ஏவ விவித4மாய் “விசித்ர” (विचित्र) விசித்ரமாய். “அநந்த” (अनन्त) அநந்தமான, “போ4க்3ய” (भोग्य) போ4க்3யமென்ன “போ4க்த்ருவர்க” (भोक्तृवर्ग) போ4க்த்ருவர்க3மென்ன, “போ4கோ3பகரண” (भोगोपकरण) போ4கோ3ப கரணங்களென்ன, “போ43ஸ்தா2ந” (भोगस्थान) போ43யோக்3யமான ஸ்தா2ந விஶேஷங்களென்ன, “ரூப” (रूप)இவற்றை வடிவாகவுடைய. “நிகி2லஜகது33ய விப4வலயலீல” (निखिलजगदुदय विभवलयलील) ஸகல லோகங்களினுடைய உத்பத்தி ஸ்தி2தி ஸம்ஹாரங்களை லீலையாக வுடையவனே! விசித்ரமாகையாவது – நாநாவித4மாயிருக்கை. அநந்த மாகையாவது – தொகையின்றிக்கேயிருக்கை, போ4க்த்ரு வர்க3மாவது – தே3வாதி3 ஶரீரங்களிலே அஹம்புத்3தி4யாலே ஸ்வதந்த்ரராய், ஶப்தா3தி3 விஷயங்களுக்கு போ4க்தாக்களாகை. ப்3ரஹ்மாதி3களுக்கு ஸ்ரஷ்ட்ருத்வாதி3களுண்டாகிறது- ஈஶ்வரனுக்கு உபகரணதயா வல்லது, ஸ்வதந்த்ரதயாவல்ல. ஆனால் து3:க்க2ரூபமாயிராதோ? என்னில், அவர்களுக்குத் தப:ப2லமாய் வந்ததாகையாலே ஸுக2ரூபமாயிருக்கும். நித்யவிபூ4தியோக3த்தால் வந்த பூர்த்தியை உடையனாகையால் ஈஶ்வரனுக்கு இது லீலையாயிருக்கும். ஆக நாராயண ஶப்3தா3ர்த்த2ம் சொல்லிற்றாயிற்று.

            [ஸர்வேஶ்வரன் திருவடிகளை ஆஶ்ரயிக்கலாவது உபேயருசியும் உபாயாத்4யவஸாயமும் உண்டானாகையாலே அதினுடைய ஸித்3த்4யர்த்த2மாக முதல் சூர்ணையிலே பிராட்டி திருவடிகளிலே ஶரணம் புக்கார். இரண்டாம் சூர்ணையிலே பிராட்டி ப்ரஸாத3த்தாலே அத்தை ப்ராப்தரானார். அநந்தரம், ஆஶ்ரயணியராவார் ஆரென்னும் அபேக்ஷையாலே “காரணம் து த்4யேய:” (71. कारणं तु ध्येय:) என்றும், “யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம்” (72. यो ब्रह्माणं विदधाति पूर्वं) என்றும் இத்யாதி3யாலே ஸகல ஜக3த்காரண பூ4தனான நாராயணனே ஆஶ்ரயணீயனாக வேண்டுகையாலே “அகி2லஹேய” (अखिलहेय) என்கிற சூர்ணையாலே நாரஶப்33வாச்யங்களுக்காஶ்ரயமான தி3வ்யாத்ம ஸ்வரூபத்தைச் சொல்லி, அநந்தரம் ஸ்வரூப கு3ணங்களுக்கு ப்ரகஶகமான தி3வ்யமங்க3ள விக்3ரஹத்தைச் சொல்லி, அநந்தரம், அவ்விக்3ரஹத்துக்கு அலங்காரமான தி3வ்யாப4ரணங்களைச்சொல்லி அநந்தரம், ஏவம் வித4மானவற்றுக்குக் காவலான தி3வ்யாயுத4 வர்க்க3ங்களைச்சொல்லி, அநந்தரம், இப்போ4க்3யதை காட்டிலெரித்த நிலாவாகாதபடி தலைநீர்ப்பாட்டிலே யிருந்தநுப4விக்கும் மஹிஷிகளைச் சொல்லி, அநந்தரம் இச்சேர்த்தியழகைக் கண்டநுப4விதுத் தோற்று எழுதிக்கொடுத்து எடுத்துக்கைநீட்டிப்பரிமாறும் தி3வ்ய பரிஜநங்களைச்சொல்லி, அநந்தரம் கைங்கர்யத்துக்கேகாந்தமாய் தத்3வர்தக்க4முமாந நித்யவிபூ4தியைச் சொல்லி, அநந்தரம் ஸ்ருஷ்ட்யாதி3களுக்கு விஷயமான லீலாவிபூ4திநாத2த்வத்தைப் பேசியருளினார்.

            இனி ஆஶ்ரயிக்கையிறே உள்ளது: அவ்வாஶ்ரயணத்துக்கு உபயோகி3யான கு3ணங்களைச் சொல்லுகிறது மேல் “அபாரகாருண்ய” (अपारकारुण्य) இத்யாதியாலே. நடுவே எட்டுகு3ணங்கள் சொல்லாநின்றதே; இவற்றால் சொல்லுகிறதென்? என்னில்: மேல் பண்ணப்புகுகிற ஆஶ்ரயணத்துக்கு உறுப்பாய், கீழ் சொன்னவற்றை அநுபா4ஷிக்கிறதுமாயிருக்கிறது. கீழ் ஆஶ்ரயணீயனைச் சொல்லிற்றாகில், அநந்தரம் ஆஶ்ரயிக்கவமையாதோ? என்னில், அமையாது. ஆசார்யோபதே3ஶ பூர்வகமாயிறே ஆஶ்ரயணமிருப்பது. அவ்விடத்தில் ஆசார்யோபதே3ஶ முக2த்தாலே அவனே ப்ராப்ய ப்ராபகங்களென்று அத்4யவஸித்து அநந்தரமாஶ்ரயிக்கவேண்டும். அல்லாதபோது அவனுடைய ரக்ஷகத்வத்திலேயாதல், உபாயத்வத்திலேயாதல், அதிஶங்கை நடக்குமாகில், ஆஶ்ரயித்தவனாகமாட்டான். ஆகையாலே “அநந்ய ஸாத்4யே ஸ்வாபீ4ஷ்டே மஹாவிஶ்வாஸபூர்வகம்। ததே3கோ பாயதாயச்ஞா ப்ரபத்தி:॥” (73. अनन्यसाध्ये स्वाभीष्टे महाविश्वासपूर्वकम्। तदेकोपायतायच्ञा प्रपत्ति:௥) என்னும் ந்யாயத்தாலே கீழ்ச் சொன்ன நாராயணத்வத்தை அநுபா4ஷித்துக்கொண்டு அவனே உபாயோபேயங்களென்று அத்4யவஸிக்கிறார்.

            இரண்டாம்சூர்ணையாலே பிராட்டி ப்ரஸாத3த்தாலே தாம் பெற்ற அர்த்த2த்தை அநுஸந்தி4க்கிறார். “ஸத்ய காம!” (सत्यकाम)

முதல் நாலு கு3ணங்களும் ஸ்ருஷ்டிக்குறுப்பு. மேல் நாலு கு3ணங்களும் ப்ராப்யத்வத்துக்குறுப்பு. “ஸத்யகாம, ஸத்ய ஸங்கல்ப, பரப்3ரஹ்மபூ4த” (सत्यकाम, सत्यसङ्कल्प परब्रह्मभूत) என்கிறவை லீலாவிபூ4தி சூர்ணையோடே அந்வயித்துக் கிடக்கிறது. “புருஷோத்தம, நாராயண” (पुरुषोत्तम नारायण) என்கிறவை கு3ணசூர்ணையோடே அந்வயித்து க்கிடக்கிறது. “மஹாவிபூ4தே, ஶ்ரீவைகுண்ட2நாத2” (महाविभूते श्रीवैकुण्ठनाथ) என்கிறவை நித்ய விபூ4திசூர்ணையோடே அந்வயித்துக்கிடக்கிறது. “ஶ்ரீமந்” (श्रीमन् ) என்னுமது மஹிஷீசூர்ணையோடே அந்வயித்துக் கிடக்கிறது. “ஶ்ரீவைகுண்ட2நாத2” (श्रीवैकुण्ठनाथ) என்கிறவிது- ஆஶ்ரயித்தாலடிமைகொள்ளும் தே3ஶத்தைச் சொல்லுகிறது. ஆஶ்ரயத்தால் பின்னை அடிமை செய்கைபோலே காணும் ஶேஷபூ4தனுக்கு க்ருத்யம். இத்தால் அடிமைகொள்ளும்படி ஆஶ்ரயிக்கையே ஆஶ்ரயணம் என்றாய்த்து.

            “ஸத்யகாம” (सत्यकाम) “காம்ய: ஸ்ப்ருஹா ஸ்மர: காம:” (74. काम्य: स्पृहा स्मर: काम:) என்று நிக4ண்டு. காமஶப்33ம் ஸ்மரனையும் இச்சி2க்கபடுமத்தையும், இச்சை2யையும் சொல்லுகிறது. கீழே “ஸத்யகாம”  என்கிறது- ஆஶ்ரயித்தார்க்கு அநுபா4வ்யமாய், அவ்வழியாலே தனக்கும் காமவிஷயமான விபூ4தியைச் சொல்லுகிறது. இங்கு, “ஸத்யகாம” (सत्यकाम) என்றது- லீலார்த்த2மாக ப்ரக்ருதிபுருஷ காலங்களை ஸ்ப்ருஹா விஷயமாக உடையவனென்கிறது. கீழ் காமிக்கபடுமவற்றைச் சொல்லிற்று. இங்கு காமத்தைச் சொல்லுகிறது. ‘ஸத்ய’ ஶப்33ம்- நித்யவாசி. ஸ்ருஷ்டிக்கு விஷயமான புருஷ ஸமஷ்டி. ஸ்ருஷ்டரான சேதநர்க்கு போ4க்3ய போ4கோ3பகரண போ43ஸ்தா2ந ரூபையான ப்ரக்ருதி, இவற்றைக் கர்மாநுகு3ணமாக நிர்வஹிக்கைக்கு காலம். ஜக3த்ஸ்ருஷ்ட்யாதி3கள் ப்3ரஹ்மாதி3களுக்குத் தப:ப2லமாகையாலே போ43 ரூபமாயிருக்கும். ஈஶ்வரனுக்கு லீலையாயிருக்கும் ஐச்சி2கமாகையாலே.

            லீலையென்கிறது- சேதநனுக்கு ப3ந்த4கமுமாய், நாஶஹேதுவுமாய், ஈஶ்வரனையும் மறைத்து அநர்தா2வஹமாயிருக்க, ஈஶ்வரனுக்கு ஸ்ப்ருஹாவிஷயமாவானென்னென்னில், “ஶுகோ முக்த:, வாமதே3வோ விமுக்த:” (75. शुको मुक्त: वामदेवोविमुक्त:) என்கிறபடியே ஒன்றிரண்டு வ்யக்தியிலே ப2லிக்கக்காண்கிறதிறே. அந்நசையாயிற்று இவனுக்கு ஸ்ப்ருஹையை விளைக்கிறது. ஆகையிறே அழித்தழித்து ஸ்ருஷ்டிப்பது, ஸ்தி2திப்பது, அதிப்ரவ்ருத்தமானவாறே ஸம்ஹரிப்பது. பின்னையும் இது தன்னையே செய்வதாகா நிற்கிறது. என்போலவென்னில், ஒருக்ஷேத்ரம் நெடுங்காலம் இட்டிறையாய்ப் போகாநின்றாலும் ஒருகால் ப2லிக்கக்காண்கையாலே அழித்தழித்துப் பயிர் செய்யும் கர்ஷகனைப் போலே. “ஸத்யஸங்கல்ப” (सत्यसङ्कल्प) கீழே “ஸத்யஸங்கல்ப” என்றது- ஆஶ்ரயித்தார்க்கு அநுபா4வ்யமான அபூர்வபோ43ங்களைத் தன் நினைவாலே ஸ்ருஷ்டிக்க வல்லவன் என்கைக்காக. இங்கு ‘ஸத்ய’ஶப்33ம்- அமோக4வாசி. இங்கு “ஸத்யஸங்கல்ப”  என்றது – லீலைக்கு ஹேதுவாந ஸங்கல்பம் – அப்ரதிஹதமாய் இருக்கும் என்கைக்காக. அதாவது- இவற்றைஅமோக4மாக தன் நினைவிலே ஸ்ருஷ்டிக்கவல்லனாகை. ப்3ரஹ்மாவிநுடைய ஸங்கல்பமும் மோக4மாயிருக்கும். எங்ஙனேயென்னில், ஸநகாதி3களை தன் நினைவாலே ஜக3த்ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக ஸ்ருஷ்டித்தான். அவர்களோவென்றால், முமுக்ஷுக்களான எங்களுக்கு இச்செயலாகாது. உனக்கேயாமித்தனை என்று இகழ்ந்து போனார்கள். தான் ஸ்ருஷ்டித்த அஸுரர்கள் கையிலே வேத3த்தைப் பறிகொடுத்துத் தான் ஈஶ்வரன் காலிலே விழுந்து “வேதா3 மே பரமம் சக்ஷு:” (76. वेदा मे परमं चक्षु:)என்று கூப்பிட்டான்].

[அடைப்புக் குறியுள் கொடுக்கப்பட்ட உரை அதி4க பாட2ம்]

            மேலே அவனுடைய திருவடிகளிலே ஶரணம் புகைக்கு உறுப்பாக, ஸ்ருஷ்டிமுதலாக ப்புருஷார்த்த2த்துக் எல்லையான கைங்கர்ய பர்யந்தமான நடுவுள்ளவையடங்க அவனிட்ட வழக்கென்று அருளிச்செய்கிறார் எட்டு ஸ்வபா4வத்தாலே.

மூ: ஸத்யகாம, ஸத்யஸங்கல்ப (सत्यकाम सत्यसङ्कल्प)

வ்யா: “ஸத்யகாம” (सत्यकाम सत्यसङ्कल्प) சேதநருடைய ஶரீர ஸம்ப3ந்த4த்துக்கடியான ஸ்ருஷ்டிக்கு உபகரணமான நித்யபதா3ர்த்தங்களை உடையவனென்கிறது. “ஸத்யஸங்கல்ப” (सत्यसङ्कल्प) ஸ்ருஷ்ட்யர்த்த2மாக ஸங்கல்பிக்கும் ஸங்கல்பம் அமோ4கமாயிருக்குமென்கிறது. கு3ணசூர்ணையிலே இவ்விரண்டு கு3ணமும் உக்தமாயிருக்க, இங்கும் சொன்னால் புநருக்தமன்றோ வென்னில், அங்கு கு3ண ஸத்3பா4வத்துக்கு உறுப்பாகச் சொல்லிற்று. இங்கு ஸ்ருஷ்ட்யர்த்த2மாகச் சொல்லுகிறதாகையாலே தோ3ஷமில்லை.

மூ: பரப்3ரஹ்மபூ4த, புருஷோத்தம (परब्रह्मभूत पुरुषोत्तम)

வ்யா: “பரப்ரஹ்மபூத” (परब्रह्मभूत) “பஹுஸ்யாம்” (77. बहु स्यां)என்கிறபடியே ஜக3தா3காரனாய் ப்3ரும்ஹிதனாகை. ஸ்தூ2லசித3சித்3 விஶிஷ்ட ப்3ரஹ்மமேயிறே கார்யமான ஜக3த்தும். “புருஷோத்தம” ( पुरुषोत्तम) “புருஷாணாமுத்தம:” “புருஷாணாம்” (पुरुषाणां) என்கிற ப3ஹுவசநத்தாலே த்ரிவித4சேதநரையும் வ்யாவர்த்திக்கிறது. புருஷ:, உத்புருஷ:. உத்தரபுருஷ:, உத்தமபுருஷ:, (पुरुष:, उत्पुरुष:, उत्तरपुरुष:, उत्तमपुरुष:) புருஷராகிறார் – அசித்3வ்யாவ்ருத்தரான ப3த்34 சேதநர். உத்புருஷராகிறார் – ப3த்34ரில் வ்யாவ்ருத்தரான முக்தர். உத்தரபுருஷராகிறார் – முக்தரில் வ்யாவ்ருத்தரான நித்யர். உத்தமபுருஷனாகிறான் – ஸூரிகளிலும்  வ்யாவ்ருத்தனான ஈஶ்வரன் ப3த்34ர்- ஹேயாக(கா)ரராயிருப்பர். முக்தர் ஹேயத்தில் நின்றும் ஒருநாள் குளித்தேறினவராயிருப்பர். நித்யர்- ஹேயரஹிதராயிருப்பதொழிய ஹேயப்ரதிப4டரல்லர். ஈஶ்வரன் ஹேய ப்ரதிப4டனாயிருப்பன். ஈஶ்வரன் த்ரிவித3 சேதநா சேதநங்களிலும் அந்தராத்மதயா கலந்து நிற்கச்செய்தே அவற்றினுடைய ஹேயக3ந்த4ம் தட்டாதவனாய், ஆஶ்ரிதருடைய ஹேயத்தை போக்கவல்லனுமாயிருக்கும். இத்தால், ஸ்ருஷ்டமான ஜக3த்தினுடைய வ்யாபந ப4ரண ஸ்வாம்யத்தாலுண்டான வைலக்ஷண்யம் சொல்லுகிறது. இத்தால் உஜ்வலனாகா நிற்கும் என்றாய்த்து. அங்ஙனன்றிக்கே ஸ்ருஷ்டரான ப்3ரஹ்மாதிகளுக்கு அபேக்ஷித புருஷார்த்த2ங்களைக் கொடுக்குமவனாகையாலே புருஷோத்தமனென்னவுமாம். “புரு-ப3ஹு, ஸநோதி- த3தா3தி” (पुरुबहु; सनोतिददाति) என்றிறே இதுக்கு வ்யுத்பத்தி.

மூ: மஹாவிபூ4தே ஶ்ரீமந் (महाविभूते श्रीमन्)

வ்யா: “மஹாவிபூ4தே” (महाविभूते) கீழேயும் விபூ4தியைச் சொல்லிற்று. மேலும் விபூ4தியைச் சொல்லப்புகா நின்றது. இப்படிச் சொல்லுகை புநருக்த,அன்றோ என்னில், “விபூ4திமாந்” (विभूतिमान्) என்கைக்காக விபூ4தி யோக3ம் சொல்லிற்று கீழ். அநந்ய ப்ரயோஜநராயிருப்பார்க்கு அவ்விபூ4தியைக் கொடுக்குமென்று விபூ4த்யௌதா3ர்யம் சொல்லுகிறது. இங்கு. மேல், அடிமைக்கு ஏகாந்தமான தே3ஶமென்று விபூ4தி (விநி)யோக3ம் சொல்லுகிறது. ஆகையாலே புநருக்தி தோ3ஷமில்லை. “ஶ்ரீமந்” (श्रीमन्) கொடுத்த தே3ஶத்தில் போ4க்3ய விஷயத்தைச் சொல்லுகிறது. அங்கு இருவருமாயிறே அடிமை கொள்வது. “வைகுண்டே2 து பரே லோகே ஶ்ரியா ஸார்த4ம் ஜக3த்பதி:- ஆஸ்தே” (78. वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पति: आस्ते) என்னக்கடவதிறே.

மூ: நாராயண, வைகுண்ட2நாத2 (नारायण वैकुण्ठनाथ)

வ்யா: “நாராயண” (नारायण) அநந்தமங்க3ள கு3ணங்களோடே குறைவற இருந்து அடிமை கொள்ளுமவனென்கிறது. ஆக, “ஶ்ரீமந்நாராயண” (श्रीमन्नारायण) என்கையாலே ஒரு மிது2நமே ப்ராப்யம் என்கிறது.  “ஶ்ரீவைகுண்ட2நாத2” (श्रीवैकुण्ठनाथ) அடிமை கொள்ளுகைக்கு ஏகாந்தமான பரமபத3த்திலே நாத2னாயிருந்தடிமை கொள்ளுமென்கிறது. இவற்றில், கீழ் நாலு கு3ணங்களும் – ஸ்ருஷ்டிக்குறுப்பாயிருக்கும். மேல் நாலு கு3ணங்களும் ப்ராப்யத்வத்துக்கு உறுப்பாயிருக்கும். காரணமாய், ப்ராப்யமுமான வஸ்துவிறே ப்ராபகம்.

மூ: அபாரகாருண்ய ஸௌஶீல்ய (अपारकारुण्य सौशील्य)

வ்யா: அநந்தரம், ஆஶ்ரயணீயத்வத்தில் ப்ரக்ருஷ்டோபகாரகங்களான கு3ணங்களைச் சொல்லுகிறது- “அபாரகா ருண்ய” இத்யாதி3 (अपारकारुण्य) காருண்யமாகிறது- க்ருபை. அதாகிறது – பரது3:க்கா2ऽஸஹிஷ்ணுத்வம். (परदु:खाऽसहिष्णुत्वं) இது – அபாரமாகையாவது- “யதி3 வா ராவண: ஸ்வயம்” (79.यदि वा रावण:स्वयं ) என்னுமளவும் செல்லுகை. அங்ஙனன்றியே என்னளவும் வர வெள்ளம் கோக்கும் கு3ணமென்னவுமாம். “ஸௌஶீல்ய” (सौशील्य) உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு வந்து கலவாநின்றால் “இவன் நம்முடையான்” என்று புறையறக் கலக்கலாம்படியிருக்கை. இதுக்கு அபாரத்வமாவது – தே3வ மநுஷ்யாத்3யவதாரங்கள் போலன்றிக்கே மத்ஸ்ய கூர்மாத்3யவதாரங்களிலும், இவை நம்முடையதென்றிருக்கையும், தானும் அவற்றிலே ஒன்றாயிருக்கையும், “இவற்றிலே நம் ஒன்று” என்று நினைத்திருக்கையும். “அஹம் வோ பா3ந்த4வோ ஜாத:” (80. अहं वो बान्धवो जात: ) “ஆத்மாநம் மாநுஷம் மந்யே” (44. आत्मानं मानुषं मन्ये)

மூ: வாத்ஸல்ய ஔதா3ர்ய (वात्सल्य औदार्य)

வ்யா: “வாத்ஸல்ய” (वात्सल्य) வாத்ஸல்யமாவது – ப்ரேமத்தாலே ஆஶ்ரிதக3தமாந தோ3ஷமும் கு3ணமாகத் தோற்றுகை. “குன்றனைய குற்றம் செய்யினும் கு3ணங்கொள்ளும்” [முதல் திருவ 41]இதுக்கு அபாரத்வமாவது –ஆஶ்ரிதரளவன்றிக்கே “ ரிபூணாமபி வத்ஸல:” (81.रिपूणामपि वत्सल:) என்று ஶத்ருக்கள் பக்கலிலும் அப்படியிருக்கை. ஆனால், பையல் தலையை அறுத்து விடுவானென்னென்னில், அவர்கள் பக்கலிலும் அவன் படியில் குறையில்லை. அதுவும்கூட ஜீவியாதபடியிறே இம்மஹாபாபிகள் சூழ்த்துக்கொண்டவித்தனை. அங்ஙனன்றி யே தலையறுக்கை தானும் வாத்ஸல்யமாகவுமாம். எங்ஙனேயென்னில், விளையாடக்கொடுத்த கோலைக் கொண்டு ப்ரஜை கண்ணைக் கலக்கிக்கொள்ளப் புக்கால், கையில் கோலைவாங்கியிட்டு வைக்கும் தாயைப்போலே. “ஔதா3ர்ய” (औदार्य) ஔதா3ர்யமாவது – ஆஶ்ரிதர்க்கு ஸ்வரூபாநுரூபமான வபேக்ஷிதங்களை தன்பேறாகக் கொடுக்கை. இதுக்கு அபாரத்வமாவது – ஆஶ்ரிதர்க்கெல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்திலனாக எப்போதும் நெஞ்சாறல் பட்டுக்கொண்டிருக்கை.  “ருணம் ப்ரவ்ருத்34மிவ” (61. ऋणं प्रवृद्धमिव) “உன்னடியார்க்கென் செய்வனென்றே இருத்தி” [பெரிய திருவ. 53]

மூ: ஐஶ்வர்ய ஸௌந்த3ர்ய மஹோத3தே4 (ऐश्वर्य सौन्दर्यमहोदधे)

வ்யா: “ஐஶ்வர்ய” (ऐश्वर्य) ஐஶ்வர்யமாவது – அர்த்தி2கள் அர்த்தி2த்தவையெல்லாம் கொடுக்கும்படியான அடியுடைமை. இதுக்கு அபாரத்வமாவது – அவ்வடியுடைமைத்தான் – இவ்வளவென்றிருக்கையன்றிக்கே, கொடுக்கக் கொடுக்க மேன்மேலென வளர்ந்து கொடு செல்லுகை. “ஸௌந்த3ர்ய மஹோத3தே4” (सौन्दर्यमहोदधे) ஸௌந்த3ர்யமாவது – அழகு, இதுக்கு அபாரத்வமாவது – “பும்ஸாம் த்3ருஷ்டி சித்தாபஹாரிணம்” (82. पुंसां दृष्टिचित्तापहारिणं) என்கிறபடியே சரகிலை தின்னிகளான ருஷிகளையுங்கூட மடலெடுக்கப்பண்ணவற்றாயிருக்கை. அநுகூலரையன்றிக்கே ப்ரதிகூலையான ஶூர்ப்பணகி போல்வாரையும் மடலெடுக்கப்பண்ணுகை என்றுமாம்.

மூ: அநாலோசித விஶேஷாஶேஷலோக ஶரண்ய, ப்ரணதார்திஹர (अनालोचित विशेषाशेषलोक शरण्य, प्रणतार्तिहर)

வ்யா: “அநாலோசித விஶேஷாஶேஷலோக ஶரண்ய” (अनालोचित विशेषाशेषलोक शरण्य) ஜந்ம வ்ருத்தஜ்ஞாநங்|கள் பாராதே இருந்ததே குடியாக ஶரணவரணார்ஹனானவனே! “ப்ரணதார்திஹர” (प्रणतार्तिहर) இப்படி அத்4யவஸித்த ஆஶ்ரிதருடைய ஆர்த்தியைப் போக்குமவனே!.

மூ: ஆஶ்ரிதவாத்ஸல்யைகஜலதே4, அநவரதவிதி3த நிகி2லபூ4தஜாத யாதா2த்ம்ய,

(आश्रित वात्सल्यैक जलधे, अनवरतविदित निखिलभुतजात याथात्म्य)

வ்யா: “ஆஶ்ரிதவாத்ஸல்யைக ஜலதே4” (आश्रित वात्सल्यैक जलधे) கீழ்ச் சொன்ன கு3ணங்களெல்லாம் ஒருதலையானாலும் அவற்றையெல்லாம் கீழ்ப்படுத்தும்படியான நிரவதி4க வாத்ஸல்யத்தையுடையவனே! “நிகரில் புகழாய்” [திருவாய் 1-10-10]என்கிறபடியே, ஆக, கீழ் ஆஶ்ரயணார்ஹதை சொல்லி, ஆஶ்ரிதருடைய ஆர்த்தியைப் போக்குமவனென்று சொல்லி, அதுக்கடியான வாத்ஸல்யம் சொல்லிற்று. “அநவரதவிதி3த நிகி2லபூ4தஜாத யாதா2த்ம்ய” (अनवरतविदित निखिलभुतजात याथात्म्य) ஸத்தா யோகி3 ஸகல பதா3ர்த்த2ங்களினுடைய உண்மையை எப்போதுமொக்க அறியுமவனே! இத்தால் ‘அநுத்தமமான பாத்ரம்’ [ஸ்தோ..-24]என்று நான் என்படி சொல்ல வேண்டாவிறே என்கிறார்.

மூ: அஶேஷ சராசரபூ4த நிகி2ல நியமந நிரத, அஶேஷ சித3சித்3வஸ்து ஶேஷிபூ4த, நிகி2ல ஜக3தா3தா4ர (अशेष चराचरभूत निखिल नियमननिरत अशेष चिदचिद्वस्तु शेषिभूत निखिल जगदाधार)

வ்யா: “அஶேஷ சராசரபூ4த நிகி2ல நியமந நிரத” (अशेष चराचरभूत निखिल नियमननिरत) ஜங்க3ம ஸ்தா2வராத்மகமான ஸகல பதா3ர்த்த2ங்களுக்கும் ஸர்வகாலத்திலும் ஸர்வநியந்தாவானவனே! இத்தால், உனக்கு அவிதே4யமாயிருப்பதொன்று உண்டாகிலிறே எனக்கு இழக்கவேண்டுவது என்கை. ப3த்34னானவனோடு ப3ந்த4கமான ப்ரக்ருதியோடு வாசியற நீ இட்ட வழக்கன்றோ என்கிறார். “அஶேஷ சித3சித்3வஸ்து ஶேஷிபூ4த” (अशेष चिदचिद्वस्तु शेषिभूत) ஸகல சேதநாऽசேதநங்களுக்கும் ஶேஷியானவனே! இத்தால் என் கார்யம் உன் பேறாகச் செய்ய வேண்டும் ஸம்ப3ந்த4முடையவனல்லையோ என்கை. “நிகி2ல ஜக3தா3தா4ர” (निखिल जगदाधार) ப43வத்பா43வத விஷயங்களில் அபராத4ம்பண்ண! ஜக3த்துக்கும் ஆதா4ரபூ4தனே! இத்தால் எனக்கு ஸத்தாதா4ரகனல்லையோ என்கிறார்.

மூ: அகி2லஜக3த்ஸ்வாமிந் அஸ்மத்ஸ்வாமிந், ஸத்யகாம (अखिलजगत्स्वामिन् अस्मत्स्वामिन् सत्यकाम)

வ்யா: “அகி2லஜக3த்ஸ்வாமிந்” (अखिलजगत्स्वामिन्) அபராத4த்தைத்தவிர்ப்பித்து ஆபி4முக்2யத்தையுண்டாக்கி தேவர் திருவடிகளிலே புகுர நிறுத்துகைக்கு வேறு நிர்வாஹகருண்டோ? அத ஏவ “அஸ்மத்ஸ்வாமிந்” (अस्मत्स्वामिन्) கீழும் ஶேஷித்வம் சொல்லிற்று. அங்கு ஸம்ப3ந்த4பரம், இங்கு ஸம்ப3ந்தா4நுகு3ண நியமநபரம். இத்தால் என்னை இவ்வளவாகப் புகுரநிறுத்திநவன் நீயல்லையோ என்கிறார். “ஸத்யகாம” (सत्यकाम) கீழ் கு3ணசூர்ணையிலே ஆஶ்ரிதர்க்கு அநுபா4வ்யமான வழியாலே தனக்கும் இனிதான் கு3ணவிபூ4தியைச் சொல்லிற்று. நடுவு, “ஸத்யகாம” (सत्यकाम) என்றது- லீலார்த்த2மாக ப்ரக்ருதி புருஷகாலங்களை ஸ்ப்ருஹா விஷயமாக உடையவனென்கைக்காக. இங்கு “ஸத்யகாம” (सत्यकाम) என்கிறது – ஆஶ்ரயிக்குமிடத்தில் இவனிட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டாதபடி அவாப்தஸமஸ்தகாமதயா வந்த பூர்த்தியை உடையவன் என்கைக்காக. இத்தால் “அகிஞ்சநோऽநந்யக3தி:” (83. अकिञ्चनोऽनन्यगति:) என்று அகிஞ்சநனான என் கார்யம் பூர்ணனான உனக்கு ப4ரமன்றோ என்கிறார்.

மூ: ஸத்யஸங்கல்ப, ஸகலேதரவிலக்ஷண (सत्यसङ्कल्प सकलेतरविलक्षण)

வ்யா: “ஸத்யஸங்கல்ப” (सत्यसङ्कल्प) கீழ் கு3ணசூர்ணையிலே – “ஸத்யஸங்கல்ப”  என்றது – அபூர்வமான போ4க்3யங்களை அமோக4மாக ஸ்ருஷ்டிக்க க்ஷமன் என்கைக்காக. நடுவே “ஸத்யஸங்கல்ப”  என்றது – லீலைக்கு ஹேதுவான ஸங்கல்பம் அப்ரதிஹதம் என்கைக்காக. இங்குச் சொன்னது – அக4டிதங்களையும் ஸங்கல்பமாத்ரத்தாலே கர்த்தும் க்ஷமன் என்கைக்காக. இத்தால் நித்யஸம்ஸாரியான என்னையும் நித்ய ஸூரிகளோடு ஒருகோவையாக்க நினைத்தால் செய்து முடிக்க வல்லனல்லையோ நீ என்கிறார். “ஸகலேதரவிலக்ஷண” (सकलेतरविलक्षण) சேதநருடைய ஜீவநம் சொல்லுகிறது. ஸ்வரூபதோ கு3ணதஶ்ச விலக்ஷண! ஆஶ்ரிதர்க்கு அநுபா4வ்யமான ஸ்வரூபரூபகு3ணங்களை உடையவனே! இவை தன்னை யாருக்காகப் படைத்தது? ஸ்வார்த்த2மாகவோ? என்கிறார். த்ரிபாத்3விபூ4தியாக அநுப4விப்பாரும் அநுப4விப்பிப்பாருமாய்ச் செல்லாநிற்க ஸ்வார்த்த2மாகவோ என்கிறாரிறே. இவரையொழிய எல்லாரும் அநுப4வித்தாலும், இவரையொழிய எல்லாரையும் அநுப4விப்பித்தாலும் குறையாயிருக்குமிறே. இவரை அநுப4விப்பித்தாலாய்த்து அவனுடைய ரக்ஷகத்வம் பூர்ணமாவது. பூர்ணாநுப4வம் பண்ணுவார்க்கு ஒன்று குறைந்தாலும் நெடும்பாழாய்த் தோற்றுமிறே. ஆகையால் இவரோடுங்கூட அநுப4வித்தாலாய்த்து அவர்களநுப4வம் பூர்ணமாவது.

மூ: அர்த்தி2கல்பக (अर्थिकल्पक)

வ்யா: அதுக்கு ஹேது சொல்லுகிறது மேல். “அர்த்தி2கல்ப” (अर्थिकल्पक) தன் தலையாலே இரந்து கொடுக்குமவனுக்கு, இரந்தார்க்குக் கொடாதொழிகை போருமோ ?[பா. குறையன்றோ?] அர்த்தி2ப்பார்க்குக் கடக்க நின்று தன்னையொழிந்த சிலவற்றைக் [பா. சீலையை நாரைக்] கொடுத்து விடும் பூண்டு [கற்பக மரம்] போலேயோ அர்த்தி2களையுமுண்டாக்கித்தானே இரந்து ஸகலப2ல ப்ரத3னான உன்னையும் தருகிற நீ. “என்னையாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” [திருவாய் 2-7-11] என்னக்கடவதிறே. அதுபோலே நாரும் நரம்புமாயிருக்கையன்றிக்கே “அபாரஸௌந்த3ர்ய மஹோத3தே4” (अपारसौन्दर्यमहोदधे) என்னும்படியாயிறே இருப்பது. இரந்து கொடுக்குமத்தனை ஒழிய இரந்தார்க்குக் கொடுக்கலாகாதென்றுண்டோ?

மூ: ஆபத்ஸக2 ஶ்ரீமந் (आपत्सख श्रीमन्)

வ்யா: “ஆபத்ஸக2” (आपत्सख) ஆபத்து வந்தவாரே தோழனாயிருக்கை. அதாவது – துணையாயிருக்கை. ஸர்வரக்ஷகனானவனே: அறச்செய்ய வேண்டும்படியான ஆபத்திலும் தானே துணையாயிருக்கை. மாதாபிதாக்களும், ப3ந்து4க்களும் தள்ளிக்கதவையடைக்கும் த3ஶையிலும் “ப்ரணத இதி த3யாளு:” (84. प्रणत इति दयालु:) என்றும் “தமேவ ஶரணம் க3த:” (85. तमेव शरणं गत:) என்றும் தேவரே துணையாயிருக்கை. “ஶ்ரீமந்”(श्रीमन्) இப்படியிருக்கிற உன்னையும் ஆஶ்ரயித்துப் புருஷகாரபூ4தையான பிராட்டியைப்பார்த்து ரக்ஷிக்கவேணும்.

மூ: நாராயண, அஶரண்யஶரண்ய, அநந்யஶரண: (नारायण अशरण्यशरण्य अनन्यशरण:)

வ்யா: “நாராயண” (नारायण) இவள் புருஷகாரமாவதர்கு முன்னமே ஸ்ருஷ்ட்யர்த்தா2நுப்ரவேஶத்தாலே ஸத்தையை நோக்கினவனல்லையோ? இத்தால், எனக்கு ஸத்தாதா4ரகனல்லையோவென்றபடி. “அஶரண்யஶரண்ய” (अशरण्यशरण्य) கிம் புந: அஶரண்யஶரண்யத்வம்? – அதாகிறது- இப்படியிருக்கிற தேவர்க்கும் புறம்பாய், பின்னையும் தேவரையொழியப் புறம்பு புகலற்றார்க்கு ஶரண்யனானவனே என்கிறார். இப்படியிருப்பாருண்டோவென்னில்; “அநந்யஶரணோऽஹம்” (अनन्यशरणोऽहं) ததா2விதோ4ऽஹம்; (तथाविधोऽहं)  அந்த அஶரண்யனானவன் நனென்கிறார். “பற்றிலார் பற்றநின்றானே” [திருவாய் 7-2-7]

மூ: த்வத்பாதா3ரவிந்த3யுக3ளம் ஶரணமஹம் ப்ரபத்3யே  (त्वत्पादारविन्दयुगलं शरणमहं प्रपद्ये)

வ்யா: “த்வத்பாதா3ரவிந்த3யுக3ளம் ஶரணமஹம் ப்ரபத்3யே” (त्वत्पादारविन्दयुगलं शरणमहं प्रपद्ये)இப்படியிருக்கிற நான் நிரதிஶய போ4க்3யமான தேவர் திருவடிகளையே உபாயமாக அத்4யவஸிக்கிறேன்.

அத்ர த்3வயம்” (अत्र द्वयम्)

ஆறாவ்து சூர்ணை அவதாரிகை:

[ஶரணம் புகும்போது தத3நுகு3ணமான ப்ராப்யருசியும் ப்ராபகத்தில் கனக்க அத்4யவஸாயமும் உண்டாக வேண்டுகையாலே அதினுடைய ஸித்3த்4யர்த்த2மாக முதல் சூர்ணையிலே பிராட்டி திருவடிகளிலே ஶரணம் புக்கு, இரண்டாம் சூர்ணையிலே பிராட்டி ப்ரஸாத3த்தாலே பெற்றார். அநந்தரம் ஆஶ்ரயணீயனானவான ஆர் என்னுமபேக்ஷையிலே, நாராயணனே ஆஶ்ரயணீயனாக வேண்டுகையாலே நார ஶப்33 வாச்யங்களுக்கும் அயநமான தி3வ்யாத்ம ஸ்வரூபத்தைஅகி2லஹேய” (अखिलहेय) என்கிற சூர்ணையிலே சொல்லி, பின்பு நார ஶப்33 வாச்யங்களைநிகி2 ஜக3து33 விப4 லய லீல” (निखिल जगदुदय विभव लयलील) என்னுமளவாக அவனுடைய உப4 விபூ4திநாத2த்வம் சொல்லி; அநந்தரம் அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்4யவஸித்து, ‘இப்படி மேன்மையை உடைத்தான வஸ்துவை நம்மால் கிட்டப்போமோஎன்னும் அபேக்ஷையிலே, இருந்ததேகுடியாக எல்லார்க்கும் கிட்டும்படி யான ஶீலாதி3களை முன்னிட்டு பிராட்டி புருஷகாரமாக ஶரணம் புக்கு நின்றார் இவ்வளவால்]

            அநந்தரம் “ஶரணம் புக்கோம் நாமன்றோ” என்று தம்மை அஇச்சித்து, பூர்வர்களுடைய ப்ரக்ரியையை முன்னிட்டு ஶரணம் புகுகிறார். அநந்தரம் ஶரணம் புகும்போது விடவேண்டுவன முன்னாக விட்டு, வகுத்த விஷயத்தைப் பற்றவேண்டியிருப்பதோர் ஆகாரமுண்டாயிருக்கையாலே, அது கீழிரண்டிடத்திலும் செய்யாமையாலே “அத்தால் ஏதேனும் குறையுண்டாகிறதோ?” என்று பார்த்து புராண புருஷர்களுடைய ஶரணாகதி3 ப்ரக்ரியையான இதிஹாஸ புராண வசநங்களை முன்னிட்டு ஶரணம் புகுகிறார்.

            [ஆனால் கீழே செய்யாதவற்றுக்குக் குறையுண்டாகிறதோ? என்னில், குறைவில்லாமையே அன்று; இத்தால் ஏற்றமுண்டாகிறது. எங்ஙனேயென்னில்:- த்3வயத்தில் த்யாக3பூர்வகமாக ஸ்வீகரிக்கவேண்டிற்றாகில் ஸர்வாதி4காரகமாட்டாது. ஆகையால் ஏற்றமுண்டாகிறது. பூர்வ புருஷர்களுடைய ஹ்ருத3யம்வகுத்த விஷயத்தில் ஸ்வரூபாநுரூபமாக ஶரணாக3தியைப் பண்ணுமதொழிய இவன் விடவேண்டுவதுண்டோ பற்றவேண்டுவதுண்டோ  என்றாய்த்து இருப்பது; ஈஶ்வர விஷயீகாரத்துக்கு த்ருப்த ப்ரபத்தியே அமையும்; அதி4காரியாகைக்கு ஸம்ஸார 4யபீ4தனாய்க்கொண்டு திருவடிகளிலே ஶரணம் புகுவதுவேயமையும்; இவர் ப்ராப்யருசி செய்விக்கமாட்டிற்றில்லாமையாலே ருசி ப்ரேரிக்கச்செய்வர். ஆகையாலே இவர் செய்யாததெல்லாம் குறையாகக்கடவது. இவர் தாம் இதுக்கு அவ்வருகு ஶரணம் புகக்காணாமையாலே மீண்டாரத்தனையல்லது அமையுமென்று மீண்டாரல்லர். ஆகையாலே ஶரணம் புகுகிறார்.]

வ்யா: “பிதரம் மாதரமித்யாதி3” (पितरं मातरं) பூர்வார்த்த4த்தாலே சேதநரையும் உத்தரார்த்த4த்தாலே அசேதநங்களையும் சொல்லுகிறது. இவைதான் உபாயாந்தர ஸஹகாரியுமாய், ஸ்வயம் ப்ரயோஜநமாகையாலே உபேயமுமாய் இரண்டுக்கும் பொதுவாயிருக்கும். “ஸர்வத4ர்மாம்ஶ்ச” (सर्वधर्मांश्च) என்று, உபாயாந்தரமான கர்மயோகா3தி3களைச் சொல்லுகிறது. “ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந்” (सर्वकामांश्च साक्षरान्) என்று – உபேயாந்தரமான ஐஶ்வர்ய கைவல்யங்களைச் சொல்லுகிறது. “ஸந்த்யஜ்ய” (संत्यज्य) என்றது- ஸவாஸநமாக விட்டென்றபடி, “ஸர்வத4ர்மாம்ஶ்ச” (सर्वधर्मांश्च) “ஸர்வ காமாம்ஶ்ச” (सर्वकामांश्च) என்று இரண்டையும் கூட எடுத்துவிடச் சொல்லுகையாலே உபாயாந்தரங்கள் ஸ்வரூப நாஶகமாமோபாதி உபாயாந்தரங்களும் ஸ்வரூபநாஶகமென்று கருத்து. இவற்றை ஸ்வரூபநாஶகமென்னலாமோ வென்னில்; அவற்றில் ஸ்வயம்ப்ரயோஜநமாக இழிகையே ஸ்வரூபம், இத்தையொழிந்ததெல்லாம் ஸ்வரூபநாஶபர்யாயம். இவைதான் ஸ்வரூபோஜ்ஜீவநமாகிறதில்லையோ என்னில்: “இவன் இவைதன்னை ஸாத4நமாக்கினாற் போலே இதுக்குப் புறம்பேயொன்றை ப்ரயோஜநமாக்காதே நம்மையே ப்ரயோஜநமாக்கப்பெற்றோமே” என்னும் ஈஶ்வரன் நினைவாலே உஜ்ஜீவனமாகிறது. ப்ரயோஜநாந்தரத்துக்கு மடியேற்பாரையும் “உதா3ரா:” (86. उदारा:)என்னுமவன் ஸ்வபா4வத்தாலே உஜ்ஜீவநமாகிறதித்தனை. மேல் பற்றப்படும் விஷயம் சொல்லுகிறது. “லோகவிக்ராந்த சரணௌ ஶரணம் தேऽவ்ரஜம் விபோ4” (लोकविक्रान्त चरणौ शरणं तेऽव्रजं विभो) ஶீலாதி3 கு3ணயுக்தனுமாய் வகுத்த ஸ்வாமியுமாய், ஜ்ஞாந ஶக்த்யாதி3 கு3ணபூர்ணனுமான உன் திருவடிகளையே உபாயமாகப் பற்றுகிறேன் என்கிறது.

மூ: பிதரம் மாதரம்  (पितरं मातरं)

வ்யா: “பிதரம் மாதரம்” (पितरं मातरं) “மாத்ருதே3வோப4வ” (मातृदेवोभव) “பித்ருதே3வோ ப4வ” (पितृदेवोभव) என்று ஈஶ்வரனோபாதி மாதாபித்ரநுவர்த்தநத்தையும்  உபாஸநாங்க3மாக ஶாஸ்த்ரம் விதி4க்கையாலே, உபாயாந்தர ஸஹகாரிகளுமாய் உள்ளதனையும் அநுவர்தித்து விடுகையன்றிக்கே இவர்களுடைய வியோக3ம் அஸஹ்யமாயிருக்கையாலே ஸ்வயம்ப்ர யோஜநமாமுயிருப்பர்கள்.

மூ: தா3ராந் புத்ராந் ப3ந்தூ4ந் ஸகீ2ந் கு3ரூந் (दारान् पुत्रान् बन्धून् सखीन् गुरून्)

வ்யா: “தா3ராந்” (दारान्) ஸ்த்ரீயும் ஸஹத4ர்மசாரிணியாகையாலே உபாயாந்தர ஸஹகாரிணியு மாய் அபி4மத விஷயமாகையாலே உபேயாந்தர்பூ4தையுமாயிருக்கும். “புத்ராந்” (पुत्रान्) புத்ரஹீநனான போது “புத் என்கிற நரகத3ர்ஶநம் பண்ணவேண்டுகையாலே புத்ரோத்பாத3நம் “புந்நாம்நோ நரகாத் த்ராயத இதி புத்ர:” (पुन्नाम्नो नरकात्त्रायत इति पुत्र:) என்கிறபடியே அந்த நரகத3ர்ஶநத்துக்கடியான பாபவிமோசந ஹேதுவாகிற முக2த்தாலே உபாயாந்தர ஸஹகாரியுமாய், அவ்வளவன்றிக்கே தத்3வியோக3ம் அஸஹ்யமாயிருக்கையாலே உபேயமுமாயிரு க்கும். “ப3ந்தூ4ந்” (बन्धून्)  அவர்களாகிறார் – இவனைக்குடிப்பழியாக வர்த்தியாதபடி நியமித்து நல்வழி நடத்துமவர்களாகையாலே உபாயாந்தர ஸஹகாரிகளுமாய், இன்ன “பெருங்குடியாட்டத்திலே [பா. பெருங்குடிப்பாட்டிலே] பிறந்தான் என்கிற செருக்காலே உபேயபூ4தருமாயிருப்பர்கள்” “ஸகீ2ந்” (सखीन्) தோழனும் இவனுக்கு ஹிதைஷியாய் ஹிதத்தையே ப்ரவர்திப்பிக்கையாலே உபாயாந்தர ஸஹகாரியுமாய் அபி4மதனாகையாலே உபேயபூ4தனுமாயிருக்கும். “கு3ரூந்” (गुरून्) அவர்களாகிறார்- [ப43வத் ப்ராப்தியாகிற உபேயத்தைக் குறித்து உபாயாந்தரங்களை உபதே3ஶித்தும் உபாயாந்தரங்களைக் குறித்து உபாயாந்தரங்களை உபதே3ஶித்தும் போருகையாலே] உபாயாந்தர ஸஹகாரிகளுமாய் ஹிதபரராகையாலே உபேயபூ4தருமாயிருப்பர்.

மூ: ரத்நாநி த4நதா4ந்யாநி க்ஷேத்ராணி ச க்3ருஹாணி ச।

ஸர்வத4ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந்।

(रत्नानि धनधान्यानि क्षेत्राणि गृहाणि च। सर्वधर्मांश्च संत्यज्य सर्वकामांश्च साक्षरान्)

வ்யா: “ரத்நாநீத்யாதி” (रत्नानि इत्यादि) ‘ரத்நம்’ தொடக்கமானவையும் உபாயாந்தரங்களுக்கு இதிகர்தவ்யதயா ஸஹகாரிகளாகையாலே உபாயாந்தர ஸஹகாரிகளுமாய், அவற்றை அழியமாறியும் விநியோகி3க்கலாமாகையாலே உபேயமும் ஆயிருக்கும். “க்3ருஹாணி ச” (गृहाणि ) க்3ருஹங்களும், கீழ்ச்சொன்னவற்றுக்கெல்லாம் ஆவாஸஸ்தா2நமாகிற ரக்ஷகத்வமுக2த்தாலே உபாயாந்தர ஸஹகாரமுமாய் மாடமாளிகையாக எடுக்கும்படியான அபி4மதத்வத்தாலே உபேயமுமாயிருக்கும். “ஸர்வத4ர்மாம்ஶ்ச” (सर्वधर्मांश्च) ‘த4ர்ம’ ஶப்33த்தாலே உபாயரூபமான கர்மயோகா3தி3களைச்சொல்லுகிறது. ‘ஸர்வ’ ஶப்33த்தாலே அதி4கார ஸம்பத்தி த4ர்மங்களைச் சொல்லுகிறது. “ஸர்வகாமாம்ஶ்ச” (सर्वकामांश्च) என்று- புத்ரபஶ்வந்நாதி3 தொடக்கமாக ஸ்வர்கை3ஶ்வர்யம் நடுவாக ப்3ரஹ்மைஶ்வர்ய பர்யந்தமானவற்றையெல்லாம் சொல்லுகிறது. “ஸாக்ஷராந்” (साक्षरान्) என்றது- கைவல்யத்தை. “ஸந்த்யஜ்ய” (संत्यज्य) லஜ்ஜா புரஸ்ஸரமாக விட்டு.

மூ: லோகவிக்ராந்த சரணௌ (लोकविक्रान्त चरणौ)

வ்யா: “லோகவிக்ராந்தசரணௌ” (लोकविक्रान्त चरणौ) தொடங்கிப்பற்றுகிற விஷயம். வரையாதே வைத்த திருவடிகளாகையாலே ஸௌஶீல்யம் சொல்லுகிறது. உறங்குகிற ப்ரஜையைத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமாபோலே தானறிந்த ஸம்ப3ந்த4மே ஹேதுவாக விடமாட்டாதே விமுக2ரானார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே வாத்ஸல்யம் சொல்லுகிறது. இத்தனையும் அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கைகையாலே ஸௌலப்4யம் சொல்லிற்று.

மூ: ஶரணம் தேऽவ்ரஜம் விபோ4॥ த்வமேவ (शरणं तेऽव्रजं विभो॥ त्वमेव)

வ்யா: “தே” (ते) என்று வகுத்த ஶேஷி என்று ஸ்வாமித்வம் சொல்லுகிறது. “விபோ4” (विभो) என்கையாவது – ப்ரபு4த்வம். அதாகிறது, ஜ்ஞாந ஶக்த்யாதி3 கு3ணபூர்த்தி. இத்தால், ‘அஹம்’ [கீ3தா சரமஶ்லோகம்] ஶப்33வாச்யமும் இதிலே அநுஸந்தே4யம். ஆக இத்தனையும் நாரயண ஶப்3தா3ர்த்த2ம். “தே” (ते) என்கிறவிடத்தில் ஸ்வரூபாநுப3ந்தி4யான லக்ஷ்மீஸம்ப3ந்த4மும் அநுஸந்தே4யம். இத்தால் புருஷகாரபா4வம் சொல்லுகிறது. “சரணௌ” (चरणौ)என்கையாலே விக்3ரஹயோக3ம் சொல்லுகிறது. “ஶரணம்” (शरणं) என்கையாலே உபாய பா4வம் சொல்லுகிறது. “அவ்ரஜம்” (अव्रजं) அத்4யவஸித்தேன் என்றபடி. ஆக இஶ்லோகங்களாலே விடுமவற்றை விட்டு பற்றுமவற்றைப்பற்றி நின்றது. ஆனால் கீழ் விட்டவையெல்லாம் இழவேயாகிறதோ? என்னில்; அங்ஙனே இருப்பதொரு ஸாபேக்ஷதையுண்டோ ஸர்வப்ரகார பரிபூர்ணவிஷயத்தை பற்றினவனுக்கு? ஆகையாலே, கீழ் விட்டவை எல்லாம் ஈஶ்வரனே என்கிறார்.

மூ: மாதாச பிதாத்வமேவ த்வமேவ ப3ந்து4ஶ்ச கு3ருஸ்த்வமேவ (माता पितात्वमेव त्वमेव बन्धुश्च गुरुस्त्वमेव)

வ்யா: அநந்தரம் கீழ் விட்டவை எல்லாம் ஈஶ்வரனே என்கிறார். “த்வமேவ மாதாச” (त्वमेव माता ) பிறந்தபின்பு ஹிதபரனான பிதாவைப்போலன்றியே க3ர்ப்ப4 வாஸமே தொடங்கி ரக்ஷித்துப்போருமவளிறே மாதா. இத்தால், இவர் நினைக்கிறதென்னென்னில்,மேல் ஸ்ருஷ்டிக்குறுப்பாக முதலழியாத படி ‘தாயிருக்கும் வண்ணமே’ [பெரிய திருமொழி 11-6-6] திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்துப் போந்தவன் என்கிறார். “பிதாத்வமேவ” (पितात्वमेव) மாதாவுக்கு முன்னே பிறக்க க்ருஷிபண்ணுவான் பிதாவிறே. இத்தால் “பூர்வஜ” (88.पूर्वज) என்கிறத்தை நினைக்கிறது; “பிறப்பித்த தந்தை நீ” [பெரிய திருவந்தாதி 5] “த்வமேவ ப3ந்து4ஶ்ச” (त्वमेव बन्धुश्च)  ப3ந்து4க்களும் இவன் வழிகெட வர்த்தியாதபடி நியமித்து நல்வழியே நடத்துமவர்களிறே. அப்படியே நான் வழிகட வர்த்தியாதபடி அந்தராத்மதயா இருந்து நியமித்து நல்வழியாக்கும் ப3ந்து4வும் நீயே. “கு3ருஸ்த்வமேவ” (गुरुस्त्वमेव)  “கு3 ஶப்34ஸ்த்வந்த4காரஸ்ஸ்யாத்- கு3ருரித்யபி4தீ4யதே” (89. गुशब्दस्त्वन्धकार: स्यात् . . . गुरुरित्यभिधीयते) இருள் தருமா ஞாலத்தைப் [திருவாய் 10-6-1] போக்கி தெளிவிசும்பைக் [திருவாய் 9-7-5] கொடுக்கையாலே எனக்கு அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ணுமாசார்யநும் நீயே. “அறியாதன அறிவித்தவத்தா” [திருவாய் 2-3-2] என்னக்கடவதிறே. ஆசார்யரில் வைத்துக்கொண்டு ப்ரத2மாசார்யனாவான் ஈஶ்வரனிறே. “லக்ஷ்மீநாத2 ஸமாரம்பா4ம்” (90. लक्ष्मीनाथसमारम्भां) என்னக்கடவதிறே. “இசைவித்தென்னை” [திருவாய் 5-8-9] என்கிறபடியே முதலடியிலே ருசி ஜநகனாகையாலே ப்ரத2மாசார்யனென்னக் குறையில்லையே.

மூ: த்வமேவ வித்3யா த்3ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மமதே3வதே3வ  (त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं ममदेवदेव)

வ்யா: “த்வமேவ வித்3யா” (त्वमेव विद्या) உபதே3ஶித்த ஜ்ஞாநமும் நீயே. அதாவது –“ஜ்ஞாநக்கலைக்களுக்கெல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே” [திருவாய் 1-9-8] என்கிறபடியே ஜ்ஞாநத்தினுதினுடைய ஸத்தாதி4கள் அவனதீ4னமாகையாலும், ஜ்ஞாந ப்ரதிபாத்3யன் அவனாகையாலும், ஜ்ஞாநமும் நீயே என்கிறது. “த்3ரவிணம் த்வமேவ” (द्रविणं त्वमेव) த்3ரவிணமாகிறது- த்3ரவ்யம். அதாவது – போ43த்துக்கு உபகரணமாயிருக்கை. இத்தால் போ4கோ3பகரணமான பரப4க்த்யாதி3களும் நீயே என்கிறார். அன்றிக்கே “த4நம் மதீ3யம்” (90. धनं मदीयं) என்கிறபடியே ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் நீயே என்கிறாராகவுமாம். “த்வமேவஸர்வம்” (त्वमेव सर्वं) சொல்லிச் சொல்லாதவையெல்லாம் நீயே. “மமதே3வதே3வ” (ममदेवदेव) ஸர்வத்தையும் விட்டு உன்னையே பற்றின எனக்கு விட்டவை எல்லாமும் “அயர்வறுமமரர்ர்களதிபதி யான நீயே [திருவாய் 1-1-1] என்கிறார்.

எட்டாவது சூர்ணை அவதாரிகை: ‘இதுதான் உமக்கு ஒருவருக்குமேயோ?’ என்னில்; ‘என்னளவேயன்று; ஸகலலோகங்களிலும் வர்த்திக்கிற ஸகலசேதநருக்கும் ஸகல வித43ந்து4வும் ஸர்வாதி4கனான நீயே’ என்கிறார்.

மூ: பிதாऽஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யஶ்ச கு3ருர்க3ரீயாந்।

ந த்வத் ஸமோऽஸ்த்யப்4யதி4க: குதோऽந்யோ லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபா4வ॥

(पिताऽसि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् त्वत्समोऽस्तियभ्यधिक: कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव)

வ்யா: “பிதாஸிலோகஸ்ய சராசரஸ்ய” (पिताऽसि लोकस्य चराचरस्य) ஸர்வலோகங்களிலுமுண்டான ஜங்க3ம ஸ்தா2வராத்மகமான ஸகல பதா3ர்த்த2ங்களுக்கும் உத்பாத3கனானவனே. “த்வமஸ்ய பூஜ்யஶ்ச” (त्वमस्य पूज्यश्च) ஆகையாலே ஸர்வத்துக்கும் பூஜ்யந் நீயல்லையோ? “கு3ருர்க3ரீயாந்” (गुरुर्गरीयान्) ஶ்ரேஷ்ட2னான ஆசார்யனும் நீயே. கீழ்ச்சொன்ன பூஜ்யதை பித்ருத்வத்தளவிலே நிற்குமது; இத்தால், “க3ரீயாந் ப்3ரஹ்மத3:பிதா” (91. गुरुर्गरीयान् ब्रह्मद:पिता) என்று பூஜ்யதையின் எல்லை சொல்லுகிறது. “ந த்வத் ஸமோऽஸ்த்யப்4யதி4க: குதோந்ய:” ( त्वत्समोऽस्तियभ्यधिक: कुतोऽन्य:) ‘ஸர்வலாபாய’(92. सर्वलाभाय) ஆகையாலே த்வத்3யதிரிக்த ஸமஸ்த பதா3ர்த்த2ங்களிலும் உனக்கு ஸத்3ருஶர் இல்லையென்றால், அதி4கர் இல்லை என்னுமிடம் சொல்லவேணுமோ? “ஒத்தார் மிக்காரையிலையாய” [திருவாய் 2-3-2] இறே. “லோகத்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ” (लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव) ஆகையாலே த்ரிவித4 சேதநரிலுங்காட்டில் ஒப்பில்லாத ப்ரபா4வத்தையுடையவனே!

ஒன்பதாவது சூர்ணை அவதாரிகை:— அநந்தரம், கீழ் ஶரணம் புக்கவதுக்கு க்ஷாமணம் பண்ணுகிறது. ஆருடைய ஹ்ருத3யத்தாலேயென்னில்; ஸ்வஹ்ருத3யத்தாலே. அதென்னென்னில்; அநாதி3காலம் அபராத4த்தைப்பண்ணிக் கூடு பூரித்தவன், இன்றாக ஆபி4முக்2யம் பண்ணினானேயாகிலும் “ரிபூணாமபி வத்ஸல:” (81.रिपूणामपि वत्सल: ) “யதி3 வா ராவண:  ஸ்வயம்” (79.यदि वा रावण:स्वयं) என்கிற அவன்படி பார்த்தால் இவனைக் கைக்கொள்ளுகைக்கு ஒருகுறையுமில்லை. ஆகிலும் பதிவ்ரதையாயிருப்பாள் நெடுநாள் வ்யபி4சரித்து, பின்பு ப4ர்த்தாவானவன் பழியாளன் என்கிறவிதுவே ஆலம்ப3னமாக வந்து “என்னை ரக்ஷிக்கவேணும்” என்று முன்னே நின்றால் வருகைதானே அபராத4மாய், அதுக்குமேலே “என்னை ரக்ஷிக்கவேணும்” என்கையாவது- அபராத4த்துக்கு மேலெல்லையாய், ஸ்த்ரீத்வஹாநியுமாயிருக்குமிறே. அப்படியே இவனும் அநந்யார்ஹ ஶேஷபூ4தனுமாயிருந்து வைத்து, கனக்க அபராத4த்தைப் பண்ணிப்போந்து, இன்று வந்து ஶரணம் புகுருகையாவது- அபராத4த்துக்கு மேலெல்லையுமாய், ஶேஷத்வஹாநியுமாயிருக்கக் கடவதிறே. ஆனால் ஶரணம் புகுருகையும் அபராத4த்துக்கு மேலெல்லையாகில் ஶரணம் புகுகிறதென்,  க்ஷாமணம் பண்ணுகிறதென்? என்னில், “தமேவ ஶரணம் க3த:” (34. तमेव शरणं गत:)என்று காகத்தோபாதி புறம்பு புகலில்லாமையாலே ஶரணம் புகவும் வேணும். பூர்வ வ்ருத்தத்தைப் பாரா, பண்ணின இதுவும் அபராத4ம் என்று ப4யஹேதுவாகையாலே க்ஷாமணம் பண்ணவும் வேணும்.

மூ: தஸ்மாத் (तस्मात्)

வ்யா: “தஸ்மாத்” (तस्मात्) “த்வமேவ” (त्वमेव) இத்யாதி3ப்படியே நீயே ஸகலவித43ந்து4வுமாகையாலே செய்தகுற்றம் பொறுக்கும்போது ஸகலவித43ந்து4வுமாகவேணும்போலே காணும். அதுதன்னிலும்  ப4ர்த்தாவென்றாற்போலே ஒரு முறையேயாய், ஒரு வழிப்பட்டு இருக்குமாகில் குற்றமேயாய்த் தலைக்கட்டுகையன்றிக்கே, ஸகலவித43ந்து4வுமாயிருக்கையாலே இவனுக்குச் செய்யலாகாததில்லை. அவனுக்குப் பொறுக்கலாகாததுமில்லை என்கை.

மூ: ப்ரணம்ய ப்ரணிதா4ய காயம் ப்ரஸாத3யே த்வாமஹமீஶமீட்3யம் (प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यं)

வ்யா: “ப்ரணம்ய” (प्रणम्य) மானஸமான த3ண்ட3ன். “ப்ரணிதா4ய காயம்” (प्रणिधाय कायं) காயிகமான த3ண்ட3ன். இரண்டையும் சொல்லுகையாலே வாசிகம் அர்த்தா2த் ஸித்34ம்; ஆக த்ரிவித4 கரணங்களாலும் ஶரணம் புக்கபடி சொல்லிற்று. ஏதுக்காகவென்னில்; “ப்ரஸாத3யே” (प्रसादये) ப்ரஸாதி3ப்பிக்கைக்காக, ஆரையென்னில் “ஈஶமீட்3யம் த்வாம்” (ईशमीड्यं त्वां) ஶேஷியாய் ஸ்துத்யனுமாயிருந்துள்ள உன்னை. ஆரென்னில், “அஹம்” (अहं) அநந்யார்ஹ ஶேஷபூ4தனுமாயிருந்து வைத்து, அபராத4த்தைப் பண்ணிப்போந்து இன்று வந்து ஶரணம் புக்க நான். ஈஶனென்கையாலே, உடையவனென்றபடி. ஈட்3யனென்றது- ஸ்துத்யனென்றபடி. நினைத்தபடி செய்யப்புக்கால் நிவாரகரில்லாமைக்காக உடையவனென்கிறது. ஸ்துதிக்கவேண்டும் விஷயத்திலே த்3வேஷித்துப் போந்தேனென்று தம்முடைய இழவு தோன்ற ‘ஈட்3யன்’ என்கிறார். பொறுக்கைக்கு ஹேது சொல்லுகிறது மேல்.

மூ: பிதேவ புத்ரஸ்ய ஸகே2வ ஸக்2யு: ப்ரிய:ப்ரியாயார்ஹஸி தே3வஸோடு4ம். (पितेव पुत्रस्य सखेवसख्यु: प्रिय:प्रियायार्हसि देवसोढुम्)

வ்யா: “பிதேவபுத்ரஸ்ய” (पितेव पुत्रस्य) புத்ரன் பண்ணின குற்றத்தைப் பிதா பொறுக்குமா போலவும். “ஸகே2வ ஸக்2யு:” (सखेवसख्यु:) தோழன் செய்த குற்றத்தைத் தோழன் பொறுக்குமாபோலவும். “ப்ரிய:ப்ரியாயா:” (प्रिय:प्रियाया:) ப்ரியையினுடைய குற்றத்தை ப்ரியனானவன் பொறுக்குமாபோலவும். ஸந்தி4ரார்ஷ:. “ஸோடு4ம்” (सोढुम्) பொறுக்கைக்கு ஸர்வவித43ந்து4வுமாயிருக்கையாலே . “தே3வ அர்ஹஸி” (देव अर्हसि) தே3வரும் அப்படிக்கு அர்ஹர்.

பத்தாவது சூர்ணை அவதாரிகை:–ஆக, முதல் சூர்ணையாலே ப்ராப்யருசிக்கும் ப்ராபகவ்யவஸாயத்துக்குமாகப் பிராட்டி திருவடிகளிலே ஶரணம் புக்கு, இரண்டாம் சூர்ணையிலே பிராட்டி ப்ரஸாத3த்தாலே பெற்று, அநந்தரம் ஆஶ்ரயிக்கைக்குறுப்பான உப4ய விபூ4திநாத2த்வம் சொல்லி, அநந்தரம் ஆஶ்ரயிக்கைக்குத் துணையான ஶீலாதி3கு3ணங்களை முன்னிட்டுப் பிராட்டி புருஷகாரமாகத் தாம் ஶரணம்புக்கு, அநந்தரம் பூர்வர்களுடைய ப்ரக்ரியையாலே ஶரணம் புக்கு அநந்தரம் இதிஹாஸ ப்ரக்ரியையாலே ஶரணம் புக்கு, அநந்தரம் கீழ் விட்டவையடைய ஈஶ்வரனேயாகப்பற்றி “இதுதான் என்னளவேயன்று; ஸகல சேதநர்க்கும் ஒக்கும்” என்று கீழ் பண்ணின ப்ரபத்திக்கு க்ஷாமணம் பண்ணி நின்றார். [பூர்வர்களுடைய ருசிபரிக்3ருஹீதமான அர்த்த2மேயாகிலும் அவர்கள் பாசுரத்தை முன்னிடவே ஈஶ்வரன் திருவுள்ளம் ப்ரஸந்நமாம் என்று பார்த்து, அவர்கள் பாசுரத்தாலே ஶரணம் புகுந்தார். அத2வாஸக்ருதே3 ப்ரபந்நாய” (5.सकृदेव प्रपन्नाय) என்று ஸக்ருத் ப்ரபத்திக்குக் கார்யம் செய்கைக்கு ஈஶ்வரன் சமைந்து நிற்க ப்ராப்ய த்வராதிஶயத்தாலும் இதொழியச் செல்லாமையாலும், யார் பாசுரத்துக்கு ஈஶ்வரன் இரங்குமென்று அறியாதே 3ஹுமுக2மாக ப்ரபத்தி பண்ணினார்] ஆக இவ்வளவாலும் பூர்வக2ண்டா3ர்த்த2த்தை அநுஸந்தி4த்தாராய் நின்றார்.  இனி உத்தர க2ண்டா3ர்த்த2த்தை அருளிச் செய்கிறார். அதில், அநிஷ்ட நிவ்ருத்தியுண்டானாலல்லது இஷ்டப்ராப்தி கிடையாமையாலே முந்துற நமஶ்ஶப்3தா3ர்த்த2த்தை அருளிச்செய்கிறார். அது தனக்கு தே3ஹாத்மாபி4மானம் தொடக்கமாக, கைங்கர்யத்தில் மமதாபு3த்3தி4 ஈறாக நடுவுள்ள விரோதி4யையடையப் போக்கித்தரவேணும் என்றிறே அர்த்த2மாக நிர்வஹித்துப் போருவது. அதுதான் ஸகல கர்மக்ஷயத்தாலேயாய்த்து உண்டாவது. ஆகையாலே முந்துறக் கர்மத்தை அருளிச் செய்கிறார்.  ஆழ்வார், “பொய் நின்ற ஞானமும்” [திருவிருத்தம்-1]என்று அவித்3யையை முதலாக அருளிச் செய்தார். இவர், “கர்மம், கர்மத்துக்கடி அஜ்ஞாநம்; அஜ்ஞாநத்துக்கடி தே3ஹஸம்ப3ந்த4ம்”, என்று கர்மத்தை முந்துற அருளிச்செய்கிறார். ஆழ்வாருக்கு ஸ்வாநுப4வமாயிருக்கையாலே தே3ஹாத்மாபி4மான த்3வாரா நின்று அஹங்காரம் நலிகிற ப்ரகாரத்தாலே அவித்3யை முன்னாக அருளிச்செய்தார். இவர்க்கு ஸ்வாநுப4வமாயிருக்கச் செய்தே தர்ஶனத்துக்கு கர்மப்ராதா4ந்யம் சொல்லிப்போருவதொரு நிர்ப3ந்த4முண்டாகையாலே, அதினுடைய ஸ்தி2திக்கு உறுப்பாகவும், மாயாவாதி3, “அவித்3யா நிவ்ருத்தி- மோக்ஷம்” (अविद्या निवृत्ति मोक्षं) என்று அவித்3யையை ப்ரதா4நமாகச் சொல்லுகையாலே அதினுடைய ப்ரதிக்ஷேபார்த்த2மாகவும், இவர் கர்மம் முதலாக அருளிச்செய்கிறார். அவர் காரணபரம்பரையை அருளிச்செய்தார். இவர் கார்யபரம்பரையை அருளிச்செய்கிறார்.

மூ: மநோவாக்காயை: (मनोवाक्कायै:)

வ்யா: “மநோவாக்காயை:” (मनोवाक्कायै:) கர்மத்துக்கு பரிகரமேதென்று பார்த்தால் மநோவாக்காயங்கள். இவைதான் ஈஶ்வரனை லபி4க்கைக்கும், அவனை இழந்து அநர்த்த2ப்படுகைக்கும் உடலாயிருக்கும். “மந ஏவமநுஷ்யாணாம் காரணம் ப3ந்த4மோக்ஷயோ:” (93. मन एव मनुष्याणां कारणं बन्धमोक्षयो:) என்றிறே யிருப்பது.

மூ: அநாதி3கால ப்ரவ்ருத்தாநந்தாக்ருத்யகரணக்ருத்யாऽகரண ப43வத3பசார (अनादिकाल प्रवृत्तानन्ताकृत्यकरणकृत्याऽकरण भगवदपचार)

வ்யா: “அநாதி3கால ப்ரவ்ருத்த” (अनादिकाल प्रवृत्त) அநாதி3காலம் பண்ணிப்போந்த. “அநந்த” (अनन्त) இவைதான் அளவிறந்திருக்கை. இவைதான் இருக்கும்படி என்னென்னில்; “அக்ருத்யகரண” (अकृत्यकरण) இதுவென்ன, “க்ருத்யாऽகரண” (कृत्याऽकरण) இதுவென்ன. “ப43வத3பசார” (भगवदपचार) இதுவென்ன;

மூ: பா43வதாபசாராஸஹ்யாபசாரரூப நாநாவிதா4நந்தாபசாராந் (भागवतपचाराऽसह्यापचाररूप नानाविधानन्तापचारान्)

வ்யா: “பா43வதாபசார” (भागवतपचार) இதுவென்ன; “அஸஹ்யாபசார” (असह्यापचार) இதுவென்ன; “நாநாவித4” (नानाविध) இப்படிப3ஹுவித4மாய். “அநந்தாபசாராந்” (अनन्तापचारान्) இவற்றில் ஓரோவித4மே அநந்தமாய், இப்படியுள்ளவைதான் அஸங்க்2யாதமாயிருக்கை. இதிறே அபசாரத்தினுடைய அநல்பத்தையிருந்தபடி. “யத் ப்3ரஹ்ம கல்பநியுதாநுப4வேऽப்யநாஶ்யம் தத்கில்பி3ஷம்  ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்தே4” (यत् ब्रह्म कल्पनियुतानुभवेऽप्यनाश्यं तत्किल्बिषं सृजति जन्तुरिह क्षणार्धे) என்று நூறாயிரம் ப்3ரஹ்மகல்பம் கூடினாலும் அநுப4வித்து முடிக்க வொண்ணாத பாபத்தையிறே இச்சேதனன் ஒருக்ஷணார்த்த4த்திலே பண்ணுவது.

மூ: ஆரப்34 கார்யாந் அநாரப்34 கார்யாந் க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாநஶேஷத: க்ஷமஸ்வ. (आरब्ध कार्यान् अनारब्ध कार्यान् कृतान् क्रियमाणान् करिष्यमाणांश्च सर्वान् अशेषत: क्षमस्व)

வ்யா: “ஆரப்34 கார்யாந்” (आरब्ध कार्यान्) ப2லப்ரதா3நத்தில் ஒருப்பட்டவை. “அநாரப்34 கார்யாந்” (अनारब्ध कार्यान्) ப்ரப3ல கர்மதி3ரோதா4நத்தாலே அவஸரப்ரதீக்ஷமானவை. “க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாம்ஶ்ச” (कृतान् क्रियमाणान् करिष्यमाणांश्च) காலத்ரயத்திலுள்ளவையையும். “ஸர்வாந்” (सर्वान्) இவைதான் சிலவற்றைச் சொல்லிற்றித்தனை. என்னால் சொல்லிமுடிக்க வொண்ணாத எல்லாப் பாபங்களையும். “அஶேஷத: க்ஷமஸ்வ” (अशेषत: क्षमस्व) ஸவாஸநமாகப் பொறுத்தருளவேணும். அக்ருத்யகரணமாவது- ஶாஸ்த்ரவிருத்34மானவற்றை அநுஷ்டி2க்கை. க்ருத்யாகரணமாவது- ஶாஸ்த்ர விஹிதமானவற்றை அநுஷ்டி2யாதொழிகை. “விது3ஷோऽதிக்ரமே த3ண்ட3பூ4யஸ்த்வம்” (95. विदुषोऽतिक्रमे दण्डभूयस्त्वम्) “ஶக்தஸ்யாதீவ தோ3ஷவத்” (96. शक्तस्यातीव दोषवत्) என்று ஶக்தனாயிருக்க அநுஷ்டி2யாதொழிந்தால் தோ3ஷம் கனத்திருக்குமிறே. ப43வத3பசாரமாவது- அமுதுபடி, சாத்துப்படிகு அர்ஹமாமவற்றை விச்சே23ம் பண்ணுகை. அதாவது – அவற்றைத்தான் வாங்கி ஜீவித்தல், பிறர்க்கு உபகரித்தல், அத்தாலே ஜீவிப்பார் பக்கலிலே யாசிதமாயாதல், அயாசிதமாயாதல் பரிக்3ரஹித்து ஜீவித்தலும், அவதாரங்களில் ஸஜாதீய பு3த்3தி4 பண்ணுகையும் அர்ச்சாவதாரத்தில் உபாதா3நஸ்ம்ருதியும், ஈஶ்வரன் பக்கல் தே3வதாந்தரங்களோடு ஸஜாதீயதாபு3த்3தி4யும், அவனதான வஸ்துக்களில், மமதாபு3த்3தி4யும்; இதுவும் அக்ருத்ய கரணங்களிலொன்றாயிருக்க, பிரியவெடுக்கவேண்டிற்று, இதனுடைய க்ரௌர்யாதி3ஶயமிருந்தபடி. பா43வதாபசாரமாவது – அர்த்த2 காமாऽபி4மான நிமித்தமாக ஶ்ரீவைஷ்ணவர்களோடு விவாத3ம் பண்ணுகையும், ஜந்ம வ்ருத்தாதி3களாலே அவர்களைக் குறைய நினைக்கையும், விகலகரணர் பக்கல் க்ஷேபோக்தி பண்ணுகையும், அஸஹ்யாபசாரமாவது – நிர்நிப3ந்த4நமாக ப43வத்3பா43வத ஸம்ருத்3தி4யைக்கண்டால் பொறுக்கமாட்டாதே முட்டிக்கொள்ளுதல், நான்று கொள்ளுதல் செய்கை. ஶ்ரீவைஷ்ணவனென்னுமதுவே ஹேதுவாக ப்ரத்3வேஷம் பண்ணுகை. புத்ரவாத்ஸல்யம் செல்லா நிற்கத் திருநாமம் சொன்னதுவே ஹேதுவாக அக்3நிதா3ஹம் முதலான ஹிம்ஸையைப் பண்ணினானிறே ஒருவன். பிதாவானவன்.  ஶிஶுபாலாதி3கள் பண்ணினவை ப43வத3பசாரம். ராவணாதி3கள் பிராட்டி போல்வார் விஷயத்தில் பண்ணினவை பா43வதாபசாரம். ஹிரண்யாதி3கள் ஶ்ரீப்ரஹ்லாதா3தி3கள் விஷயத்தில் பண்ணினவை- அஸஹ்யாபசாரம். 

பதினொன்றாவது சூர்ணை அவதாரிகை:

கீழ் “பொல்லாவொழுக்கும்”  [திருவிருத்தம்-1]என்கிறபடியே அக்ருத்ய கரணாத்3யபராத4ங்களைப் பொறுக்கவேணுமென்றார். இங்கு, அதுக்கடியான விபரீதவ்ருத்தத்தாலுண்டான அபராத4த்தைப் பொறுக்கவேணுமென்கிறார். வ்ருத்தஹாநி கீழே சொல்லிற்றிலையோ என்னில், அங்கு “அக்ருத்யகரண க்ருத்யாऽகரண” (अकृत्यकरण कृत्याऽकरण) என்று ஶாஸ்த்ர விருத்34மானவற்றை அநுஷ்டி2க்கையும், விஹிதாநுஷ்டா2னம் பண்ணாதொழிகையுமாகிற வ்ருத்தஹாநி சொல்லிற்று. வேதா3ந்தவிஷய ஜ்ஞாநாபா4வத்தால் வரும் சில வ்ருத்தஹாநிகளுண்டு, அவற்றையாய்த்து இங்குச் சொல்லுகிறது; ஆகையாலே புநருக்தி தோ3ஷமில்லை.

மூ: அநாதி3கால ப்ரவ்ருத்த (अनादिकाल प्रवृत्त)

வ்யா: “அநாதி3கால ப்ரவ்ருத்த” (अनादिकाल प्रवृत्त) அநாதி3 காலம் பண்ணிப்போந்த.

மூ: விபரீத ஜ்ஞாநமாத்மவிஷயம் க்ருத்ஸ்ந ஜக3த்3விஷயஞ்ச (विपरीत ज्ञानमात्मविषयं कृत्स्न जगत्विषयं )

வ்யா: “விபரீதஜ்ஞாநம்” (विपरीत ज्ञानं) இது ஸ்வரூபஸ்பர்ஶியன்று. ஆனால் ஒருநாளளவிலே வந்தேறிற்றோவென்னில்; அங்ஙன் சொல்லவொண்ணாது, அநாதி3 என்னுமத்தனை. ஸ்வரூபஸ்பர்ஶி என்னலாம்படியிறே இதின் அநாதி3த்வமிருப்பது. ப43வத்ப்ரஸாத3த்தாலே ஒருநாள் வரையிலே கழியக்காண்கையாலே வந்தேறி என்று அறிந்தவித்தனை. விபரீதஜ்ஞாநமாவது – ஓரர்த்த2த்தில் அர்த்தா2ந்தர பு3த்3தி4 பண்ணு கை. அதாவது – ரஜ்ஜுவிலே ஸர்ப பு3த்3தி4யும் ஶுக்தியிலே ரஜத பு3த்3தி4யும். இதுக்கு விஷயம் ஏதென்னில், “ஆத்மவிஷயம் க்ருத்ஸ்ந ஜக3த்3விஷயஞ்ச” (आत्मविषयं कृत्स्न जगत्विषयं ) ஆத்ம விஷயமாகவும் க்ருத்ஸ்ந ஜக3த்3 விஷயமாகவும். ஆத்மவிஷயமான விபரீத ஜ்ஞாநமாவது – தே3ஹாத்மாபி4மானம். க்ருத்ஸ்ந ஜக3த்3 விஷயமான விபரீத ஜ்ஞாநமாவது- தே3வ திர்யங் மநுஷ்ய ஸ்தா2வர ஶரீரங்களிலே தத்தத்3பு3த்3தி4 பண்ணுகை.

மூ: விபரீதவ்ருத்தஞ்சாऽஶேஷ விஷயமத்3யாபி வர்த்தமானம் வர்த்திஷ்யமாணஞ்ச ஸர்வம் க்ஷமஸ்வ (विपरीतवृत्तंचाऽशेष विषयमद्यापि वर्त्तमानं वर्त्तिष्यमाणं सर्वं क्षमस्व)

வ்யா: “விபரீதவ்ருத்தஞ்ச” (विपरीतवृत्तं ) அதாவது- விருத்34மாக அநுஷ்டி2க்கை. க்ருத்ஸ்ந ஜக3த்3 விஷயமான விபரீத வ்ருத்தமாவது – ஒருவன் தனக்கு ஓரபகாரம் பண்ணினால் ஸ்வகர்மப2லமென்றும், தத்தத்கர்மாநுகு3ணமாக ஈஶ்வரன் ப்ரவர்த்தகன் என்றும் நினையாதே நிமித்தமாத்ரமான சேதனனை ஸ்வதந்த்ரநாக பு3த்3தி4 பண்ணி அவன் செய்தான் என்று அவனுக்கு அபகரிக்கை. ஆத்ம விஷயமான விபரீத வ்ருத்தமாவது – பரதந்த்ரனான தன்னை ஸ்வதந்த்ரனென்று நினைத்துத் தான் ப்ரவர்த்திக்கை. “அஶேஷ விஷயம்” (अशेष विषयं) – ஐஶ்வர்யாதி3 புருஷார்த்த2ங்களை அபேக்ஷிக்கையும்; இப்படி ஸர்வ விஷயமாகவும். முன்பு செய்தவற்றையும். “அத்3யாபி வர்த்தமானம்” (अद्यापि वर्त्तमानं) இப்போது செய்கிறவற்றையும் “வர்திஷ்யமாணஞ்ச” (वर्त्तिष्यमाणं ) மேல் செய்யப்புகுகிறவற்றையும். “ஸர்வம் க்ஷமஸ்வ” (सर्वं क्षमस्व) அஜ்ஞனாகையாலே என்னால் அறிந்து தலைக்கட்டவொண்ணாது. ஸர்வஜ்ஞரான தேவரீர் அறிந்த எல்லாவற்றையும் பொறுத்தருள வேணும்.

பன்னிரண்டாவது சூர்ணை அவதாரிகை:

கீழ் கர்மத்தையும் சொல்லி, அதுக்கடியான அஜ்ஞாநத்தையும் சொல்லி நின்றார், இவ்வஜ்ஞாநத்துக்கடியான தே3ஹஸம்ப3ந்த4த்தைக் கடத்தியருளவேண்டும் என்கிறார் இங்கு.  கீழ் “க்ஷமஸ்வ” (क्षमस्व) என்றார், இங்கு “தாரய” (तारय)என்கிறார். இங்ஙனே வேண்டுவானென்? என்னில்; கர்மமும் அஜ்ஞாநமும் நிக்3ரஹரூபமாய்க் கொண்டு அவன் திருவுள்ளத்திலே கிடப்பதொன்றாகையாலே அவன் க்ஷமிக்க நஶிக்கும், இவ்வசித்துத்தான் நித்யமாகையாலே நஶிக்கவென்பதொன்றில்லை; இனி இதில் நின்றும் கழலுகையேயாயித்து உள்ளது; ஆகையாலே “தாரய” (तारय) என்கிறார். ஈஶ்வர விபூ4தியை அழிக்கவேணுமென்றன்றே இவருக்குக் கருத்து. இதில் நின்றும் தம்மை எடுக்கவிறேயுள்ளது. பிரிக்கவென்னுதல், விடுவிக்கவென்னுதல் செய்யலாவது ஸ்வரூபம் தோற்றக்க்கிடக்கிலிறே. ஸ்வரூபம் நேராக நஶித்துத் தே3ஹமாய்க் கிடக்கையாலே எடுக்கவேணும் என்கிறார். பாலும் நீரும் தன்னிலே கலந்தால் “பால் இது, நீரிது” என்று பிரித்துக் காணவொண்ணாதபடியும், அது- ஒருபதார்த்த2த்தின் கைப்பட்டவாறே ஸாரமான பாலை க்3ரஹித்து ருஜீஷமான நீரைக் கழிக்குமா போலே, ஒரு ஸர்வஶக்தி பிரித்தல், இல்லையாகில் நஶித்தல் காணுமுள்ளது. “மம மாயா து3ரத்யயா” (97. मम माया दुरत्यया)என்றும், “மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்திதே” (97. मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते) என்றும் நான் பண்ணின மாயை ஒருவராலும்  கடக்கவொண்ணாதென்றும், என்னையேபற்றிக் கடக்கவேணுமென்றும் அருளிச்செய்கையாலே நீயேகடத்தியருள வேணும் என்கிறார்.

மூ: மதீ3யாநாதி3 கர்மப்ரவாஹ ப்ரவ்ருத்தாம் (मदीयानादि कर्मप्रवाह प्रवृत्ताम्)

வ்யா: “நாதி3 கர்மப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்” (अनादि कर्मप्रवाह प्रवृत्ताम्) அநாதி३காலம் பண்ணிப்போந்த கர்மபரம்பரையாலே உண்டானதாய், “மதீய” (मदीय) இதுதான் பிறருண்டாக்கினது ஒன்றன்றிக்கே ப43வத்ப்ரஸாத3த்தாலே வந்ததொன்றுமன்றிக்கே என்னாலே ஸம்பாதி3க்கப்பட்டதொன்று என்கை. இதுசெய்யும் கார்யமென்னென்னில்;

மூ:43வத்ஸ்வரூப திரோதா4நகரீம் (भगवत्स्वरूपतिरोधानकरीं)

வ்யா: “ப43வத்ஸ்வரூப திரோதா4நகரீம்” (भगवत्स्वरूपतिरोधानकरीं) வகுத்த ஶேஷியான தேவரீருடைய ஸ்வரூபத்துக்கு திரோதா4நத்தைப் பண்ணக்கட வதாய், அதாவது- மறைக்கை என்றபடி. ப43வத்ஸ்வரூபத்தை இது மறைக்கையாவதென் என்னில். ஶ்ரிய:பதியாய், புருஷோத்தமனாய், ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனாய், அயர்வரும் அமரர்கள் அதிபதியாய், உப4யவிபூ4தி நாத2னாயிறே ஈஶ்வரனிருப்பது. இப்படியிருக்க குத்3ருஷ்டிமுக2த்தாலே “நிர்விஶேஷ சிந்மாத்ரமாயிருப்பதொரு வஸ்து உண்டு; அல்லாதவையெல்லாம் அபரமார்த்த2ம்” என்னும் மாயாவாதி3 “சித3சிதீ3ஶ்வர தத்வங்கள் மூன்றுமுண்டு; அதில் சித3சித்துக்கள் இரண்டும் ஈஶ்வரஶேஷமாய், ஈஶ்வரன் அவற்றுக்கு ஶேஷியாய் இருக்கிறானல்லன். எல்லாங்கூடி  ஏக த்3ரவ்யபரிணாமம்” என்னும் பே4தா3பே43வாதி3. “கர்மம் பண்ணுகைக்குத் தானுண்டாகில், அதின் ப2லம் பு4ஜிப்பிக்கைக்குக் கர்மமுண்டாகில் இனி, ஈஶ்வராபேக்ஷைதான் என்? அது கொண்டொரு தேவையில்லை காண்” என்னும் ஸாங்க்2ய வைஶேஷிகர்கள். ஆக இதுவாய்த்து மறைக்கையாவது. இதுக்கடி தே3ஹ ஸம்ப3ந்த4மாயிறேயிருப்பது.

மூ: விபரீதஜ்ஞாந ஜநநீம் ஸ்வவிஷயாயாஶ்ச போ4க்3யபு3த்3தே4ர் ஜநநீம் தே3ஹேந்த்3ரியத்வேந போ4க்3யத்வேந ஸூக்ஷ்மரூபேண சாவஸ்தி2தாம்

(विपरीत ज्ञानजननीं स्वविषयायाश्च भोग्यबुद्धेर्जननीम्, देहेन्द्रियत्वेन भोग्यत्वेन सूक्ष्मरूपेण चावस्थिताम्)

வ்யா: “விபரீதஜ்ஞாநஜநநீம்” (विपरीत ज्ञानजननीं) அதுக்கு மேலே விபரீதஜ்ஞாநத்துக்கு உத்பாதி3கையாய்; விபரீத ஜ்ஞாநமாகையாவது- அநாத்மந்யாத்மபு3த்3தி4. அதாவது- தே3ஹத்தி லாத்மபு3த்3தி4 பண்ணுகை. இத்தால் ஸ்வஸ்வரூபத்தை மறைத்தபடி சொல்லிற்று. ஆக தன்னையும் மறைத்து அவனையும் மறைத்ததிறே. இனி தே3ஹமேயிறே உள்ளது, இத்தால் தன்னரசு நாடாய் விட்டது என்றபடி. “ஸ்வவிஷயாயாஶ்ச போ4க்3யபு3த்3தே4ர் ஜநநீம்” (स्वविषयायाश्च भोग्यबुद्धेर्जननीम्) தன்னரசு நாடாய்த்தே; இனி, கள்ளர் பள்ளிகள் ஸாம்ராஜ்யம் பண்ணுமித்தனையிறே ஸ்வகார்யபூ4தமான ஶப்3தா3தி3களிலே போ4க்3ய பு3த்3தி4யைப் பண்ணுவிப்பதுமாய். “தே3ஹேந்த்3ரியத்வேந போ4க்3யத்வேந ஸூக்ஷ்மரூபேண சாவஸ்தி2தாம் ” (देहेन्द्रियत्वेन भोग्यत्वेन सूक्ष्मरूपेण चावस्थिताम्) போ4கா3யதனமான தே3ஹரூபத்தாலும், போ4கோ3பகரணமான இந்த்3ரிய ரூபத்தாலும், போ4க்3யமான ஶப்3தா3தி3 ரூபத்தாலும், இத்தனைக்கும் கிழங்கன ஸூக்ஷ்ம ப்ரக்ருதி ரூபத்தாலும் அவஸ்தி2தையாய், நாலுவகைப் பட்ட பரிணாமத்தையுடைத்தாய்.

மூ: தை3வீம் கு3ணமயீம் மாயாம் (दैवीम् गुणमयीम् मायाम्)

வ்யா: “தை3வீம்” (दैवीम्) தேவரீருக்கு க்ரீடா3பரிகரமாய். “கு3ணமயீம்” (गुणमयीम्) கு3ணத்ரய ப்ரசுரையுமாய், அதாவது – ஸ்வரூபந்தான் கு3ண த்ரயாத்மகமாயிருக்கையும் இதில் சேதநர் பரிக்3ரஹித்த ஶரீரங்கள் தம:ப்ரசுரமாயும் ரஜ:ப்ரசுரமாயும் ஸத்வப்ரசுரமாயுமிருக்கும். “மாயாம்” (मायाम्) விசித்ர கார்யகரத்வத்தாலே மாயாஶப்33வாச்யையாய் விசித்ர பரிணாமினியாகையாலே ஆஶ்சர்யத்தையுடைத்தாய். ஆஶ்சர்யம் எத்தாலேயென்னில், பஞ்ச பூ4த த்ரவ்யங்களும் ஏகத்3ரவ்யபரிணாமமாயிருக்க அந்யோந்யம் பி4ந்நரூபமாயும் போ4க்3யபோ4கோ3பகரண போ43ஸ்தா2நங்களாயும் சித்ரபடம் போலே ஆஶ்சர்யமாயிருக்கை. “மாம் தாரய” (मां तारय) இப்படிப்பட்ட ப்ரக்ருதியிலே அகப்பட்ட என்னைக் கடப்பித்தருளவேணும். கடப்பிக்கவேணும் என்கிறார். “நாம் எடுத்து விடுகைக்கடியாக நீர் செய்து வைத்தது ஏதேனும் உண்டோ? என்கொண்டு என்னை கடப்பிக்கச் சொல்லுகிறதென்று பெரிய பெருமாள் கேட்டருள,

மூ: தா3ஸபூ4தம்  “ஶரணாக3தோऽஸ்மி, தவாஸ்மி தா3ஸ:” இதி வக்தாரம் மாம் தாரய (दासभूतम्शरणागतोऽस्मि, तवास्मि दास:” इति वक्तारं मां तारय )

வ்யா: “தா3ஸபூ4தம்” (दासभूतम्) என்பக்கலேதேனும் கைம்முதல் உண்டாய்ச் சொல்லுகிறேனோ? அநாதி3காலம் து3ஷ்கர்மங்களையே பண்ணிப்போந்தேனாகிலும் தே3ஹாத்மாபி4மானியாய்ப் போந்தேனேயாகிலும் ஶப்3தா3தி3 விஷயப்ரவணனாய்ப் போந்தேனேயாகிலும், ஸ்வரூபத்தை நிரூபித்தவாறே, உனக்கு அநந்யார்ஹ ஶேஷமாயன்றோ இருக்கிறது; அத்தாலே சொல்லுகிறேன். அது வார்த்தை அன்று காணும் என்ன; அது வார்த்தையன்றிக்கே ஒழிகிறதென்? அப்படியேயன்றோவென்ன; அது உமக்கேயன்று காணும்; ஸகல சேதநருடைய ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் நமக்கு அநந்யார்ஹமாயன்றோவிருப்பது. அங்ஙனேயானால் ஸர்வர்க்கும் கார்யம் செய்யவேணுங்காணுமென்ன; அதுக்குமேலே ஒரு வ்யாவ்ருத்தியுண்டென்கிறார். அதேதென்ன; “ஶரணாக3தோऽஸ்மி, தவாஸ்மி தா3ஸ: இதி வக்தாரம்” (शरणागतोऽस्मि, तवास्मि दास:” इति वक्तारं) “ஶரணாக3தோऽஸ்மி” (शरणागतोऽस्मि) என்றும், “தவாஸ்மி” (तवास्मि) என்றும் “தா3ஸ:” (दास🙂 என்றும் சொன்னேன். தேவரே உபாயமென்றும், தேவரே உபேயமென்றும் தேவர்க்கு அநந்யார்ஹ ஶேஷமென்றும், “வக்தாரம் மாம்” (वक्तारं मां) இப்படி உக்திப்ரத3னாயிருந்துள்ள வென்னை, “தாரய” (तारय) இவ்வுக்திமாத்ரத்தையே பற்றாசாகக்கொண்டு கடப்பித்தருளவேணும்.

பதின்மூன்றாவது சூர்ணை அவதாரிகை:

கீழ் நமஶ்ஶப்3தா3ர்த்த2ம் சொல்லிற்றாய் நின்றது. நமஶ்ஶப்33த்துக்கர்த்த2ம்- விரோதி4 நிவ்ருத்தியிறே; அவ்வளவும் போராதே இவர்க்குப் பரமபுருஷார்த்த2 லக்ஷணமோக்ஷமான கைங்கர்ய ஸித்3தி4யும் வேணும். இக்கைங்கர்யோபயோகி3யுமாய், இக்கைங்கர்யத்தோபாதி ப்ரியவிஷயமுமாய் ப்ராப்ய பூ4மியிலும் அநுவர்த்திக்குமவையான பரபக்தி பரஜ்ஞாந பரமப4க்தியை, அபேக்ஷிக்கநினைத்து அவைதானுண்டாவது அவற்றுக்கு பூர்வபா4வியாயிருந்துள்ள அநந்யப்ரயோஜநதயா ப4க்திரூபாபந்ந ஜ்ஞாநமுடையார்க்கு ஆகையாலே அதினுடைய ஸித்3த்4யர்த்த2மாக கீ3தோபநிஷதா3சார்யன் அருளிச்செய்த ஶ்லோகத்ரயத்தையும் முன்னிட்டு அந்த ஜ்ஞாநத்தையுமுண்டாக்கி அருளவேணுமென்கிறார்.

மூ: தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப4க்திர்விஶிஷ்யதே  (तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते)

வ்யா: “தேஷாம் ஜ்ஞாநீ” (तेषां ज्ञानी) “தேஷாம்” (तेषां) “ஆர்த்தோ2 ஜிஜ்ஞாஸுரர்த்தா2ர்த்தீ ஜ்ஞாநீ ச ப4ரதர்ஷப4” (98. आर्तो जिज्ञासुरर्थाथी ज्ञानी) என்று சொல்லுகிற ஐஶ்வர்ய கைவல்ய ப43வச்ச2ரணார்த்திகளில் வைத்துக்கொண்டு, “ஜ்ஞாநீ” (ज्ञानी) ஜ்ஞாநியானவன். அவனென்னென்னில், “விஶிஷ்யதே” (विशिष्यते) விஶேஷமுண்டு. அவனுக்கேத்தமென்னென்னில். “நித்யயுக்த:- ஏகப4க்தி:” (नित्ययुक्त एकभक्ति:) இது ஏற்றம். நித்ய யுக்தனாகையாவது- ப்ரயோஜநத்துக்காக என்னைப்பற்றி  ப்ரயோஜநம் கைப்பட்டவாறே அகன்று போகையன்றிக்கே என்னையே ப்ரயோஜநமாகப் பற்றினவன். “ஏகப4க்தி:” (एकभक्ति🙂 ப்ரயோஜநத்திலே ஸ்நேஹத்தைப் பண்ணி ப்ரயோஜந ஶ்ரத்3தை4 மிகுதியாலே என் பக்கலிலும் ஸ்நேஹத்தைப் பண்ணுகையன்றிக்கே என்னையே ப்ரயோஜநமாகப் பற்றினவனாகையாலே ஸ்நேஹத்துக்கும் என்னையே விஷயமாக்குகை.

மூ: ப்ரியோஹி ஜ்ஞாநிநோऽத்யர்த்த2மஹம் ஸ ச மமப்ரிய: (प्रियो हि ज्ञानिनोऽत्यर्त्थमहं मम प्रिय:)

வ்யா: “ப்ரியோஹி ஜ்ஞாநிநோऽத்யர்த்த2மஹம்” (प्रियो हि ज्ञानिनोऽत्यर्त्थमहं)  [ஜ்ஞாநிநோऽஹமத்யர்த்த2ம் ப்ரியோஹி] ஜ்ஞாநிக்கு நான் அத்யர்த்த2ம் ப்ரியனாயிருப்பன்; என்பக்கல் அவனுக்குண்டான ப்ரியத்துக்குப் பாசுரமிடப்போகாது. “அபி4தே4ய வசநோऽர்த்த2ஶப்33:. (अभिधेय वचनोऽर्त्थशब्द:) “ஸ ச மம ப்ரிய:” ( मम प्रिय:🙂 அவனும் எனக்கு ப்ரியனாயிருக்கும்; அவனுக்கு நான் அத்யர்த்த2 ப்ரியனென்றும், அவனும் எனக்கு ப்ரியனென்றும், அவன் பக்கல் தனக்குண்டான ப்ரேமத்தைக் அத்யர்த்த2ம் என்று சொல்லி, அவனிடத்தில் தனக்குண்டான ப்ரேமத்தைக் குறையச் சொல்லுகிறது என் கொண்டு? அவனுடைய ப்ரேமத்துக்குக் குறைந்ததோ  தன்னுடைய ப்ரேமம்? என்னில்: அவன் தன்னளவிலேயாய் இருக்கும் அவன் ப்ரீதி. தன் ப்ரீதி தன்னளவிலேயாயிருக்கும். அணுபூ4தனுக்குள்ளவளவேயோ விபு4வுக்கும்? குளப்படி கலங்கினாப்போலன்றே கடல் கலங்குவது; ஆயிருக்க, அவன் ப்ரேமத்துக்கு என் ப்ரேமம் எங்கே கிடப்பது என்று அருளிச்செய்கிறான் தன் வாத்ஸல்யாதிஶயத்தாலே. அன்றிக்கே, ஸர்வ ஶக்தியான தன்னாலும் அபரிஹார்யமாயிருக்கையாலே அதுவே கனத்திருக்குமென்கிறானாகவும்; ப4யாநாமாபஹாரியாலும் [வி.பு. 1-17-36]பரிஹரிக்கவொண்ணாத ப4யத்தை விளைப்பிப்பதொன்றிறே. ப4யநிவ்ருத்திக்குடலாமவையே ப4யத்துக்குடலாம்படியிறே அவன் ப்ரேமமிருப்பது.

மூ: உதா3ராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்। ஆஸ்தி2தஸ்ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாங்க3திம்॥ (उदारास्सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम्।आस्थितस्स हि युक्तात्मा मामेवानित्तमां गतिम्)

வ்யா: “உதா3ராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்। ஆஸ்தி2தஸ்ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாங்க3திம்॥” (उदारास्सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम्।आस्थितस्स हि युक्तात्मा मामेवानित्तमां गतिम्) “உதா3ராஸ்ஸர்வ ஏவ” (उदारास्सर्व एव) யாதொன்று யாவர் சிலரபேக்ஷிக்குமிடத்து தே3வதாந்தரங்களைப்பற்றி யாதல், மநுஷ்யாந்தரங்களைப் பற்றியாதலன்றிக்கே என்னையே பற்றி அபேக்ஷிக்கிறார்கள். அவர்கள் அனைத்தவரும் உதா3ரர். அவர்களில் வைத்துக் கொண்டு “ஜ்ஞாநீ து” (ज्ञानी तु) ஜ்ஞாநிக்கு விஶேஷமுண்டு. விஶேஷமென்னென்னில், “ஆத்மைவ” (आत्मैव) ஜ்ஞாநியானவன் எனக்காத்மா எனக்கு தா4ரகனென்றபடி. “ஏவ” (एव) என்கிற அவதா4ரணத்தாலே ஒருகாலத்திலே இவனுக்கு தா4ரகனாய் காலாந்தரத்திலே வேறொன்று தா4ரகமாயிருக்குமோ வென்னில், ஸர்வகாலமும் இவன் எனக்கு தா4ரகன். ப43வத் ஜ்ஞாநம் பிறந்தானொருவன் “உண்ணும் சோறு  பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” [திருவாய் 6-7-1]என்று தா4ரக போஷக போ4க்3யங்களடைய ஈஶ்வரனென்றன்றோ நினைத்திருப்பது. அது விபரீதமாயிருந்ததீ என்ன; “மே மதம்” (मे मतम्) அவன் நினைத்தபடி நினைத்திருக்கிறான். எனக்கு நினைவு இப்படியே, “ஆஸ்தி2தஸ் ஸஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாங்க3திம்॥” (आस्थितस्स हि युक्तात्मा मामेवानित्तमां गतिम्) [அநுத்தமாங்க3திம் மாமேவயுக்தாத்மா ஆஸ்தி2தஸ்ஸஹி] இப்படி ஆஸ்தா2நம் பண்ண அநுத்தமக3தியான என்னை. அநுத்தமமான க3தியாகிறது – தனக்கு மேலுத்தமத்தையுடைத்தன்றிக்கே இருப்பதொன்று. பரம ப்ராப்யனான என்னையே “யுக்தாத்மா” (युक्तात्मा) கூடுகிறவன். “ஆஸ்தி2தஸ்ஸஹி” (आस्थितस्स हि) இப்படி ஆஸ்தா2நம் பண்ணாநிற்கும்; த்4யானம் பண்ணா நிற்கும்.

மூ: “ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதே। வாஸுதே3வஸ் ஸர்வமிதி ஸமஹாத்மா ஸுது3ர்லப4: இதி ஶ்லோகத்ரயோதி3த ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ. (बहूनां जम्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते। वासुदेवस्सर्वमिति महात्मा सुदुर्लभ: इति श्लोकत्रयोदित ज्ञानिनं मां कुरुष्व॥)

வ்யா: “ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதே। வாஸுதே3வஸ் ஸர்வமிதி ஸமஹாத்மா ஸுது3ர்லப4: ” (बहूनां जम्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते। वासुदेवस्सर्वमिति महात्मा सुदुर्लभ:) யாவனொருவன் அநேக ஜந்மங்கள் கூட என்னையே ஆராதி4த்து ஜந்மாந்தரத்திலே “ஜ்ஞாநவாந்” (ज्ञानवान् ) மதே3கவிஷய ஜ்ஞாநவானாய், “மாம்” (माम् ) என்னை. “வாஸுதே3வஸ் ஸர்வம்” (वासुदेवस्सर्वम् ) “சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே இனியாவார்” [திருவாய் 5-1-8]என்றும், “மாதாபிதா ப்4ராதா நிவாஸஶ் ஶரணம் ஸுஹ்ருத் க3திர் நாராயண:” (99. माता पिता भ्राता निवासश्शरणं सुहृद्गतिर्नारायण:) என்றும், “எல்லாம் கண்ணன்” [திருவாய் 6-7-1] என்றும் சொல்லுகிறபடியே, த்யஜித்தவையெல்லாம் அவனேயென்று.  ஸர்வவித43ந்து4வுமாக “ப்ரபத்3யதே” (प्रपद्यते) யாவனொருவன் பற்றுகிறான். அத்4யவஸிக்கிறான் என்றபடி. “ஸ மஹாத்மா” ( महात्मा) “இதி” (इति) இப்படியிருக்கிறவன். “ஸ:” (:) அவன், “மஹாத்மா” (महात्मा) அறப்பெரியவனன்றோ? நமக்கு ஸம்ப3ந்த4ஜ்ஞாநமுண்டாகலாம். அவனையொப்பாரில்லை. அவனுக்கு நாமுமொப்பல்லோம். ஆவதென்? இது ப்ரஶம்ஸையோ வென்னில்; அன்று. உண்மை. இதுக்கு ஹேதுவென்னென்னில், நமக்கு ஸம்ஸார து3ரிதமாகிற கலக்கம் தட்டாதிருக்கையாலே ஸம்ப3ந்த4த்தை உணர்ந்திருக்கலாம். அங்ஙனன்றிக்கே ஸம்ஸாரத்திலே ப4த்34னாய் கலங்கியிருக்கிறவன் ஸம்ப3ந்4தத்தை உணர்ந்திருக்கையாலே அவனுக்கு நாமும் ஒப்பல்லோம். “து3ர்லப4:” (दुर्लभ🙂 அவனை ஸம்ஸாரத்தில் கிடையாது. “ஸுது3ர்லப4:” (सुदुर्लभ🙂 பரமபத3த்திலும் கிடையாது. இப்படிக் கலக்கத்திலும் தெளிந்திருக்குமவனை உப4யவிபூ4தியிலும் கிடையாது காணென்றபடி நாமும் ஆசைப்பட்டே போமித்தனையல்லது, அவனை நமக்குங்கூடக்கிடையாது காண் என்கிறான். அதாவதென்னென்னில்; “தெளி விசும்பு” [திருவாய் 9-7-5]என்கிறபடியே தெளிவிக்கையே ஸ்வபா4வமாயிறேயிருப்பது அத்தேஶம். இது “இருள் தருமா ஞாலம்” [திருவாய் 10-6-1]என்கிறபடியே அத்தே3ஶிகர் இங்கே வரிலும் கலக்குகையே ஸ்வபா4வமாயிறேயிருப்பது.  “இதி ஶ்லோகத்ரயோதித ஜ்ஞாநிநம் மாம் குருஷ்வ” (इति श्लोकत्रयोदित ज्ञानिनं मां कुरुष्व) இப்படி ஶ்லோகத்ரயத்திலும் சொல்லுகிற ஜ்ஞாநத்தையுடையேனாம்படி பண்ணியருளவேணும். முதல் ஶ்லோகத்தாலே அவன் எனக்கு ப்ரியனென்றான். இரண்டாம் ஶ்லோகத்தாலே அவன் எனக்கு தா4ரகனென்றான். மூன்றாம் ஶ்லோகத்தாலே அவையிரண்டுக்கும் விஷயமுள்ளது அவனைக் கிடக்கிலன்றோ?. அவனைக் கிடையாது காணென்றான்.

பதினாலாவது சூர்ணை அவதாரிகை:–ஆகக்கீழ் பரப4க்த்யாதி3களுக்கு பூர்வபா4வியான ப4க்திரூபாபந்ந ஜ்ஞாநத்தை அபேக்ஷித்தார், இனி அநந்தரம் கைங்கர்யத்துக்குப் பூர்வபா4விகளான பரப4க்த்யாதி3களை அபேக்ஷிக்கிறார்.

மூ: “புருஷஸ் ஸ பர: பார்த்த24க்த்யாலப்4யஸ் த்வநந்யயா” , “ப4க்த்யா த்வநந்யயா ஶக்ய:”, “மத்34க்திம் லப4தே பராம்” இதி ஸ்தா2நத்ரயோதி3த பரமப4க்தியுக்தம் மாம் குருஷ்வ. (पुरुषस्स पर: पार्थ! भक्त्या लभ्यस्त्वनन्यया, भक्त्या त्वनन्यया शक्य:, मद्भक्तिं लभते पराम्इति स्थानत्रयोदितपरभक्तियुक्तं मां कुरुष्व॥)

வ்யா:  அதில் பரஜ்ஞாந பரமப4க்திகள் பரப4க்திகார்யமாய் இது உண்டானால் அதுதனக்குத்தானேயுண்டாம் ஆகையாலே அத்தையே ப்ரதா4நமாய், எட்டாம் ஓத்திலும் பதினோராம் ஓத்திலும், பதினெட்டாம் ஓத்திலுமாக மூன்று ப்ரதே3ஶத்தில் பரப4க்தியினுடைய வேஷத்தை கீ3தோபநிஷதா3சார்யன் அருளிச்செய்தபடி “புருஷஸ் ஸ பர: பார்த்த24க்த்யாலப்4யஸ் த்வநந்யயா” (पुरुषस्स पर: पार्थ! भक्त्या लभ्यस्त्वनन्यया) [கீ3தை 8-22] “ப4க்த்யா த்வநந்யயா ஶக்ய:” (भक्त्या त्वनन्यया शक्य:) [கீ3தை 11-54] “மத்34க்திம் லப4தே பராம்” (मद्भक्तिं लभते पराम्) [கீ3தை 18-54] என்றும் உபாதா3நம் பண்ணி “இதி ஸ்தா2நத்ரயோதி3த” (इति स्थानत्रयोदित) இப்படி மூன்று ப்ரதே3ஶத்திலும் சொல்லுகிற “பரமப4க்தியுக்தம் மாம் குருஷ்வ” (परभक्तियुक्तं मां कुरुष्व) [கீ3தை 18-54] பரப4க்தியுக்தனாக என்னைப் பண்ணியருள வேணுமென்கிறார்.

பதினைந்தாவது சூர்ணை வ்யாக்2யாநம்:

மூ: பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்த்யேகஸ்வபா4வம் மாம் குருஷ்வ (परभक्ति परज्ञान परमभक्त्येकस्वभावं मां कुरुष्व॥)

வ்யா: “பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்த்யேகஸ்வபா4வம் மாம் குருஷ்வ” (परभक्ति परज्ञान परमभक्त्येकस्वभावं मां कुरुष्व॥) இப் பரப4க்தியும் பரப4க்தி கார்யமான பரஜ்ஞாநமும் பரஜ்ஞாநகார்யமான பரமப4க்தியும் எனக்கு ஸ்வபா4வமாக வேணுமென்றபேக்ஷிக்கிறார் யாவதா3த்மபா4வி ஒருபடிப்பட உண்டாகவேணுமென்று அபேக்ஷிக்கிறார். அதுவென்?. அத்தே3ஶ விஶேஷத்திலநுப4வம் பரமப4க்தி க்ருதமாயிருக்குமாகில் அதுவே அமையாதோ?; பரப4க்தி பரஜ்ஞாநங்களும் யாவதா3த்மபா4வியாக வேணுமென்றபேக்ஷிக்கிற இதுக்கு ஹேதுவென்னென்னில், அத்தே3ஶ விஶேஷத்தில் அநுபூ4தாம்ஶமே நாள்தோறும் அநுப4வித்துப் போருகிறதாகில் அதுவே அமையும். தம் விடாயாலே அதுவும் நித்யமாகவும் தட்டில்லை. எதுபோலேயென்னில், நாள்தோறும் சோற்றையே ஜீவியாநிற்கச் செய்தே அதில் ரஸாந்தரமின்றிக்கே இருக்கச்செய்தேயும் தன் விடாயாலே அது நித்யாநுப4வமாகிறாப்போலே. அங்ஙனன்று ப43வத்விஷயம்; த்ரிபாத்3விபூ4தியும் யாவதா3த்மபா4வியாய் அநுப4வியா நின்றாலும் அநுபூ4தாம்ஶம் அல்பமாய் அநுபா4வ்யாம்ஶம் விஞ்சியிருக்கும்படியான அபரிச்சே2த்3யத்தை அவ்விஷயத்துக்கு உண்டாகையாலே அநுபா4வ்யாம்ஶம் அபூர்வமாயிருக்கும். அதில் ஈஶ்வரன் அநுப4வார்த்த2மாக இவனுக்கும் அபூர்வத3ர்ஶநத்தைப் பண்ணுவிக்கும். அப்போது கண்டபோதே மேல் விழுகையும் அநந்தரம் இதிலே ஜ்ஞாநம் ஸஞ்சரிக்கையும் பின்பு பெறாவிடில் முடியும்படியான த3ஶை பிறக்கையுமான இப்பாகம் அபூர்வத3ர்ஶநத்திலே உண்டாமவையாகையாலே “இப்பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளுடைய ஸ்வபா4வம் யாவதா3த்மபா4வி ஒருபடிப்பட எனக்கு உண்டாகவேணும்” என்று அபேக்ஷிக்கிறார். பரப4க்தி தன்னைக் கைங்கர்யோபகரணதயா அல்லது உபாயபு3த்3த்4யா அபேக்ஷிக்கிறாரல்லர். “த்வத்பாதா3ரவிந்த3 யுக3ளம் ஶரணமஹம் ப்ரபத்3யே” (त्वत्पातारविन्द युगलं शरणमहं प्रपद्ये) என்று ஸாத4நாந்தர நிரபேக்ஷமாக உபாயத்தைப் பற்றினவராகையாலும், “ஸ்வபா4வம் மாம் குருஷ்வ” (स्वभावं मां कुरुष्व) என்று ப4க்தி தன்னையன்றிக்கே ஸ்வபா4வத்தை அபேக்ஷிக்கிறாராகையாலும்.

பதினாறாவது சூர்ணை அவதாரிகை:–பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திக்ருத கைங்கர்ய ஸ்வரூபத்தை இரண்டாம் சூர்ணையாலே பரக்கவருளிச்செய்தது, இங்கேயும் சொல்லுகை  புநருக்தமன்றோ என்னில், பரோபதே3ஶமாக அருளிச்செய்கிறாரல்லாமையாலே புநருக்ததோ3ஷமில்லை. தோ3ஷமில்லாமையே யன்று; கு3ணமாக பு3த்3தி4 பண்ணத்தட்டில்லை. அங்ஙனன்றிக்கே அர்த்த2 விநியோக3 பே43முமுண்டு. கீழ், பிராட்டி திருவடிகளிலே ஶரணம்புக்கு கைங்கர்யருசியை அபேக்ஷிக்கிறாராகையாலே இப்படிப்பட்ட கைங்கர்யத்திலே ருசியைத் தந்தருளவேணுமென்கைக்காக கைங்கர்யஸ்வரூபத்தை அருளிச்செய்தார். இங்கு ருசிபூர்வகமாக பெரிய பெருமாள் திருவடிகளிலே ஶரணம்புக்கு அக்கைங்கர்யம் தன்னையே அபேக்ஷிக்கிறாராகையாலே புநருக்தி தோ3ஷமில்லை.

மூ: பரப4க்திபரஜ்ஞாந பரமப4க்திக்ருத பரிபூர்ணாऽநவரத நித்ய விஶத3தமாऽநந்ய ப்ரயோஜநாऽநவதி4காதிஶய ப்ரிய ப43வத3நுப4வோஹம். ததா2வித443வத3நுப4வஜநிதாऽநவதி4காதிஶய ப்ரீதிகாரிதாऽஶேஷாவஸ்தோ2சிதாஶேஷ ஶேஷதைகரதிரூப நித்ய கிங்கரோ ப4வாநி (परभक्तिपरज्ञान परमभक्तिकृत परिपूर्णाऽनवरत नित्य विशदतमाऽनन्य प्रयोजनाऽवधिकातिशय प्रिय भगवदनुभवोहं तथाविध भगवदनुभवजनिताऽनवधिकातिशय प्रीतिकारिताऽशेषावस्थोचिताशेषशेषतैकरतिरूप नित्य किङ्करो भवानि॥

வ்யா: “பரப4க்திபரஜ்ஞாந பரமப4க்திக்ருத” (परभक्तिपरज्ञान परमभक्तिकृत) இப்பரப4க்த்யாதி3களாலே பண்ணப்படுவதான, “பரிபூர்ண” (परिपूर्ण) பரிபூர்ணமாவது – ஸ்வரூபரூப கு3ணவிபூ4திகளித்தனையும் ஒருபோ4கி3யாக அநுப4விக்கை. “அநவரத” (अनवरत) அவிச்சி2ந்நமாயிருக்கை. விஷயாந்தரங்கள் கலசாதொழிகை. “நித்ய” (नित्य) யாவதாத்மபா4வியாயிருக்கை. “விஶத3தம” (विशदतम) பரமப4க்திக்ருதமாயிருக்கை. விஶத3மாவது – பரப4க்தித3ஶையிலநுப4வம் விஶத3தரமாவது – பரஜ்ஞாநத3ஶையிலநுப4வம்; விஶத3தமமாவது – பரமப4க்தித3ஶையிலநுப4வம். “அநந்யப்ரயோஜந” (अनन्य प्रयोजन) இவ்வனுப4வத்தாலே பிறக்கும் ப்ரீதியும் வேண்டா, ப்ரீதிகாரிதமான கைங்கர்யமும் வேண்டாவென்னும்படி தானே ரஸ்யமாயிருக்கை. “அநவதி4காதிஶய ப்ரியப43வதநுப4வோஹம்” (अनवधिकातिशय प्रिय भगवदनुभवोहं) அநவதி4கமான அதிஶயித்தையுடைத்தான ப்ரீதியாலே அநுப4விப்பதான ப43வதநுப4வத்தை தானுடையனாய். “ததா2வித443வத3நுப4வஜநிதாऽநவதி4காதிஶய ப்ரீதி” (तथाविध भगवदनुभवजनिताऽनवधिकातिशय प्रीति) அப்படிப்பட்ட அநுப4வத்தாலே பிறப்பதாய் அநவதி4கமான அதிஶயத்தையுடைத்தான ப்ரீதி. “காரிதாऽஶேஷாவஸ்தோ2சித” (कारिताऽशेषावस्थोचित) இப்படிப்பட்ட ப்ரீதிகாரிதமாய் எல்லாவஸ்தை2களிலும் அநுகூலமாயிருக்கை. “அஶேஷஶேஷதைகரதிரூப” (अशेषशेषतैकरतिरूप) ஸகல ஶேஷ வ்ருத்தியொன்றிலுமுண்டான அபி4நிவேஶத்தை வடிவாக உடையனாய் கொண்டு, “நித்ய” (नित्य) புநரா வ்ருத்திரஹிதமான தே3ஶத்திலே “கிங்கரோ ப4வாநி” (किङ्करो भवानि)  கைங்கர்யத்தைப்பெற்று அநுப4விப்பேன் ஆகவேணும். அங்ஙனன்றிக்கே நித்யஶப்33ம் கைங்கர்ய விஶேஷணமாய், நித்யகைங்கர்யத்தைப் பெற்று, அநுப4விக்கப் பெறவேணும் என்னவுமாம்.

பதினேழாவது சூர்ணை அவதாரிகை:

இப்படி த்3வயம் வ்யாக்2யாதம். த்3வயம் வ்யாக்2யாதமாயிற்றாகில், இனிமேல் செய்கிறதென்? என்னில். இப்படி உபாயோபேயாத்4யவஸிதனான இவ்வதி4காரி பக்கல் “சோம்பரையுகத்திபோலும்” [திருமாலை 37] என்கிறபடியே பெரிய பெருமாள் தமக்குண்டான ப்ரீத்யதிஶயத்தாலே கீழ்ச் சொன்னவற்றைப் பரக்க அநுபா4ஷித்துக்கொண்டு, ’உமக்கு மத்ப்ரஸாத3த்தாலே ஸர்வமும் குறைவற உண்டாகவேணும்’ என்று அருளிச்செய்து, இவருடைய   ஹ்ருத3யத்தை ஸந்துஷ்டமாக்குகிறார். “இப்படிப் பெரியபெருமாள் அருளிச்செய்தாரென்று நாங்கள் விஶ்வஸித்திருக்கும் படியென்?” என்று எம்பார் கேட்டருள “எனக்குப் பெரியபெருமாள் தம்முடைய ஶீலாதி3 கு3ணங்களை ஹஸ்தாமலகமாக  காட்டித்தந்தார். அங்கு திருவுள்ளமாகாதது என் வாயால் புறப்படாதே, அவர் சொல்லுவிக்கச் சொன்ன வார்த்தையாகையாலே அவர் அருளிச்செய்த வார்தையென்று விஶ்வஸித்திருக்கத்தட்டில்லை” என்று உடையவர் அருளிச்செய்தார்.

மூ: ஏவம்பூ4த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயாऽவக்லுப்த ஸமஸ்த வஸ்து விஹீநோऽபி (एवं भूतमत्कैङ्कर्य प्राप्त्युपायतयाऽवकॢप्त समस्त वस्तुविहीनोऽपि)

வ்யா: “ஏவம்பூ4த மத் கைங்கர்ய ப்ராப்தி” (एवं भूतमत्कैङ्कर्य प्राप्ति) இப்படிபட்ட என்னுடைய கைங்கர்ய ப்ராப்திக்கு “உபாயதயாऽவக்லுப்த” (उपायतयाऽवकॢप्त) உபாயமாக வேதா3ந்தத்திலே சொல்லுப்பட்ட உபாஸநாத்மகமான கர்ம ஜ்ஞாந ப4க்திகள் உமக்கு இல்லையேயாகிலும். “ஸமஸ்த வஸ்து விஹீநோऽபி” (समस्त वस्तुविहीनोऽपि) இவ்வுபாஸநாங்க3மான ஜீவபர யாதா2த்ம்ய ஜ்ஞாந மென்ன, இதுக்கு அடியான வர்ணாஶ்ரமாநுஷ்டா2னமென்ன, இதுக்கெல்லாவற்றுக்கும் அடியான அமாநித்வாத்3யாத்ம கு3ணங்களென்ன, இப்படிச் சொல்லுகிற ஸர்வமும் உமக்கில்லையாகிலும்.

மூ: அநந்த தத்3விரோதி4 பாபாக்ராந்தோऽபி, அநந்த மத3பசாரயுக்தோऽபி, அநந்தமதீ3யாபசார யுக்தோऽபி, அநந்தாஸஹ்யாபசாரயுக்தோऽபி (अनन्ततद्विरोधि पापाक्रान्तोऽपि, अनन्त मदपचारयुकदतोऽपि, अनन्तमदीयापचारयुक्तोऽपि, अनन्तासह्यापचारयुक्तोऽपि )

வ்யா: “அநந்த தத்3விரோதி4 பாபாக்ராந்தோऽபி” (अनन्ततद्विरोधि पापाक्रान्तोऽपि) இவையில்லாமையேயன்றியே இவற்றுக்கும் விரோதி4யான அநந்த பாபங்களாலே  ஆக்ராந்தராயிருந்தீரேயாகிலும், இவற்றில் இழியவொட்டாதேயிருக்கிற ஸகல பாபங்களாலே நெருக்குண்டிருந்தீரேயாகிலும். “அநந்த மத3பசாரயுக்தோऽபி” (अनन्त मदपचारयुकदतोऽपि) முடிவில்லாத நம் விஷயமான அபசாரத்தோடே கூடியிருந்தீராகிலும், கீழ்ச் சொன்ன விரோதி4 பாபங்களும் அபசாரமாகின்றன. அவையாகிறன- ஶாஸ்த்ர விருத்34மானத்தைச் செய்கையும், விஹிதமானவற்றைச் செய்யாதொழிகையும். அவைதான் ஈஶ்வராஜ்ஞாதிலங்க4நமாகையாலே ப43வதபசாரமாகக்கடவது. அதில் ப43வதபசாராதி3களுடைய க்ரௌர்யாதிஶயத்தாலே பிரியச் சொல்லுகைக்காக அக்ருத்யகரண க்ருத்யாகரணங்களைக் கீழே பாபஶப்33த்தாலே சொன்னார். “அநந்தமதீ3யாபசார யுக்தோऽபி, அநந்தாஸஹ்யாபசாரயுக்தோऽபி” (अनन्तमदीयापचारयुक्तोऽपि, अनन्तासह्यापचारयुक्तोऽपि) இப்படி மத்3விஷயத்திலும் மதீ3யர் பக்கலிலும் அஸஹ்யமாயுமுள்ள அஸங்க்2யாதமான அபராத4ங்களையுடையீராயிருந்தீரே யாகிலும்.

மூ: ஏதத்கார்யகாரணபூ4தாநாதி3 விபரீதாஹங்கார விமூடா4த்மஸ்வபா4வோऽபி (एतत्कार्यकारणभूतानादि विपरीताहङ्कार विमूढात्मस्वभावोऽपि)

வ்யா: “ஏதத்கார்யகாரணபூ4தாநாதி3 விபரீதாஹங்கார” (एतत्कार्यकारणभूतानादि विपरीताहङ्कार) இப்படிப்பட்ட பாபங்களுக்குக் கார்யமும் காரணமுமாயிருக்கும் அநாதி3யான விபரீதாஹங்காரம். தே3ஹாத்மாபி4மாநத்துக்கடி பாபங்களாகையாலே கார்யமுமாய், பாபங்களுக்கடி தே3ஹாத்மாபி4மானமாகையாலே காரணமுமாயிருக்கும். விபரீதாஹங்காரமாவது – அஹமல்லாததிலே அஹம்பு3த்3தி4 பண்ணுகை. அதாவது – அஹமர்த்த2ம் ஜ்ஞாநாநந்த3 ஸ்வரூபமாய் ஏகரூபமாய் ப்ரக்ருதே:பரமாயிருக்க, து3:க்க2ரூபமாய் ஜட3ரூபமாய் ஸதத பரிணாமிநியான ப்ரக்ருதியிலே அஹம்பு3த்3தி4 பண்ணுகை. இத்தால் ப2லித்த கார்யமேதென்னில், “விமூடா4த்மஸ்வபா4வோऽபி” (विमूढात्मस्वभावोऽपि) ஆத்மாவுக்கு ஸ்வபா4வமான ஶேஷத்வம் மறையுண்டது. ஶேஷத்வம் ஆத்மாவுக்கு அந்தரங்க3 ஸ்வரூபமாயிருக்க, ஸ்வபா4வமென்பானென்னென்னில்; ஶேஷத்வம் ஸ்வரூபமே: அத்தை இவனால் செய்யலாவதில்லை. அவன் கையிலே கிடக்கையாலே. இனி, ஸ்வரூபம் ஶேஷத்வமானால் ஸ்வபா4வமும் “ஶேஷோऽஹம்” (शेषोऽहम्) என்றிருக்கை; அத்தைத் தவிர்ந்து “ஸ்வதந்த்ரோஹம்” என்னப்பண்ணுகை. இப்படிப்பட்ட விபரீதாஹங்காரத்தாலே மறைக்கப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை உடையீராயிருந்தீரேயாகிலும்.

மூ: ஏதது34ய கார்யகாரண பூ4தாऽநாதி3 விபரீத வாஸநா ஸம்ப3த்3தோ4ऽபி (एतदुभय कार्यकारण भूतानादि विपरीत वासना सम्बद्धोऽपि)

வ்யா: “ஏதது34ய கார்யகாரண பூ4தாऽநாதி3 விபரீத வாஸநா ஸம்ப3த்3தோ4ऽபி” (एतदुभय कार्यकारण भूतानादि विपरीत वासना सम्बद्धोऽपि) இப்படிப்பட்ட பாபங்களுக்கும் அஹங்காரத்துக்கும் கார்யமுமாய் காரணமுமாயிருந்துள்ள விபரீத வாஸநையாலே ஸம்ப3த்34ராயிருந்தீரேயாகிலும், பாபத்திலும் அஹங்காரத்திலும் பழகிப்போந்த வழக்கத்தாலே வாஸநை கார்யமுமாய், பாபத்திலும் அஹங்காரத்திலும் மூட்டமது- வாஸநையாகையாலே காரணமுமாயிருக்கும். விபரீத வாஸநையாவது – து3ர்வாஸநை. இப்படிப்பட்ட து3ர்வாஸநையாலே கட்டுண்டிருந்தீரேயாகிலும்.

மூ: ஏதத3நுகு3ண ப்ரக்ருதிவிஶேஷ ஸம்ப3த்3தோ4ऽபி, ஏதந்மூலாத்4யாத்மிகாதி4பௌ4திகாதி4தை3விக (एतदनुगुण प्रकृतिविशेष सम्बद्धोऽपि, एतन्मूलाध्यात्मिकाधिभौतिकाधिदैविक)

வ்யா: “ஏதத3நுகு3ண ப்ரக்ருதிவிஶேஷ ஸம்ப3த்3தோ4ऽபி” (एतदनुगुण प्रकृतिविशेष सम्बद्धोऽपि) ஏதத3நு கு3ணமாவது – இவற்றையெல்லாம் விளைப்பதாயிருக்கை. விஶேஷ ப்ரக்ருதியாவது – து3ஷ்ப்ரக்ருதியென்றபடி. ப3த்3தோ4ऽபி என்னவமைந்திருக்க, “ஸம்ப3த்3தோ4ऽபி” (सम्बद्धोऽपि) என்றது. ஒரு ஸர்வஶக்தி பிரிக்கப்பார்த்தாலும் பிரிக்கவரிதாம்படியாகப் பிணையுண்ட உறைப்பைச் சொன்னபடி. இப்படிப்பட்ட து3ஷ்ப்ரக்ருதியிலே ஸம்ப3ந்தி4த்திருந்தீரேயாகிலும். “ஏதந்மூலாத்4யாத்மிகாதி4பௌ4திகாதி4தை3விக” (एतन्मूलाध्यात्मिकाधिभौतिकाधिदैविक) இப்ப்ரக்ருதியடியாக வருகிற தாபத்ரயங்கள். ஆத்4யாத்மிகமாவது – ஆதி4யாயும் வ்யாதி4யாயுமிருக்கும். ஆதி4யாவது “காமக்ரோத44யத்3வேஷ லோப4 மோஹவிஷாத3ஜ: । ஶோகாऽஸூயாவமாநேர்ஷ்யா மாத்ஸர்யாதி3 மயஸ்ததா2॥” (100. कामक्रोध भयद्वेषलोभमोहविषादज: शोकाऽसूयावमानेर्ष्या मात्सर्यादि मयस्तथा) என்கிறவிவை. வ்யாதி4யாவது – “ஶிரோரோக3 ப்ரதிஶ்யாய ஜ்வரஶூலப43ந்த4ரை:। கு3ல்மஶ்வாஸ ஶ்வயது4பி4ஶ்ச2ர்த்3யாதி3பி4ரநேகதா4॥ (101. शिरोरोग प्रतिश्याय ज्वरशुलभगन्धरै: गुल्मश्वास श्वयधुभिश्छरद्यादिभिरनेकधा)  “ததா2ऽக்ஷிரோகா3திஸார குஷ்டா2ங்கா3மய ஸம்ஜ்ஞகை:॥” (101. तथाऽक्षिरोगातिसार कुष्ठाङ्गामय संज्ञकै:) என்கிறவிவை. ஆதி4பௌ4திகமாவது- “பஶுபக்ஷிமநுஷ்யாத்3யை: பிஶாசோரக3 ராக்ஷஸை: । ஸரீஸ்ருபாத்3யைஶ்ச ந்ருணாம் ஜந்யந்தே சாதி4பௌ4திகா:॥” (102. पशुपक्षिमनुष्याद्यै: पिशाचोरगराक्षसै:।सरीसृपाद्यैश्च नृणां जन्यन्ते चाधिभौतिका: )ஆதி4தை3விகமாவது – “ஶீதோஷ்ண வாத வர்ஷாம்பு3 வைத்3யுதாதி3 ஸமுத்34வ:” (103. शीतोष्णवात वर्षाम्बु वैद्युतादिसमुद्भव🙂 என்கிறவிவை.

மூ: ஸுக2து3:க்க2 தத்3தே4து ததி3தரோபேக்ஷணீய விஷயாநுப4வஜ்ஞாந ஸங்கோசரூப (सुखदु:खतद्धेतु तदितरोपेक्षणीय विषयानुभवज्ञान सङ्कोचरूप)

வ்யா: “ஸுக2து3:க்க2 தத்3தே4து” (सुखदु:खतद्धेतु) இவை ஸுக2து3:க்க2 ஹேதுவாயிருக்கும். இவை ஹேதுவானால் விஷயத்தைப் பற்றியன்றோ ஸுக2து3:க்க2ங்களுண்டாவது. அதுக்கு விஷயமேதென்னில்; “ததி3தரோபேக்ஷணீய” (तदितरोपेक्षणीय) ஸ்வவிஷயமும் இதரவிஷயமும் உபேக்ஷணீயவிஷயமும். ஸ்வவிஷயத்தில் ஸுக2து3:க்க2 ப்ரகாரமேதென்னில், ஸ்வவிஷயத்தில் காமம் அந்வயத்தில் ஸுக2ஹேதுவாய் வ்யதிரேகத்தில் து3:க்க2ஹேதுவாயிருக்கும். ஸ்வவிஷயத்தில் க்ரோத4மானது – எதிரியை நியமித்தல் முடித்தல் செய்யும்போது ஸுக2ஹேதுவாய், எதிரியைக்காணா தொழிதல், கண்டுமேல் விழவொண்ணாதொழிதல் செய்தால் க்ரோத4ம் விஞ்சித் தன்னையே நலிகையாலே து3:க்க2 ஹேதுவாயிருக்கும். ஒரு ரோகா3தி3களில் கனத்த வ்யாதி4 து3:க்க2ஹேதுவாய், அத்தைக்குறித்து நொய்ய வ்யாதி4 ஸுக2ஹேதுவாயிருக்கும் ஒருவன் நோய் கொண்டுகிடந்தால் அதுக்குமேலே தண்டலிலேயிட்டுக் கனக்க நலியப்புக்கு நோயென்று விட்டுப்போந்தால் அந்நோய் ஸுக2ஹேதுவாயிருக்கும். இதர விஷயத்தில் ஸுக2து3:க்க2ங்களில் வந்தால் அநுகூல விஷயத்தில் வ்யஸநம் து3:க்க2ஹேதுவாய் ப்ரதிகூலவிஷயத்தில் வ்யஸநம் ஸுக2ஹேதுவாயிருக்கும். மத்4யஸ்த2ங்களில் உபேக்ஷாவிஷயமாயிருக்கும். “ததி3தரோபேக்ஷணீய விஷயாநுப4வஜ்ஞாந ஸங்கோசரூப” (तदितरोपेक्षणीय विषयानुभवज्ञान सङ्कोचरूप) இப்படி ஸ்வவிஷயமாயும் அநுகூல விஷயமாயும் ப்ரதிகூல விஷயமாயும் மத்4யஸ்த2 விஷயமாயுமிருந்துள்ள அநுப4வம்- ஜ்ஞாந ஸங்கோசரூபமாயிருக்கும், எதுக்கு ஸங்கோசமென்னில், ப43வத் விஷயமான ஜ்ஞாநத்துக்கு ஸங்கோசரூபமாயிருக்கும். இந்த ஜ்ஞாநந்தானேதென்னில்; பரப4க்த்யாதி3களுக்கும் பூர்வ காலீநமான அநந்யப்ரயோஜநதயா ப4க்திரூபாபந்நஜ்ஞாநம். இந்த ஜ்ஞாநத்துக்கு ஸங்கோசரூபமாகையாலே இதடியாகப் பிறப்பதான ப4க்த்யாதி3களுக்கு விக்4நமாய் முடியும்.

மூ: மச்சரணாரவிந்த3யுக3ளைகாந்திகாத்யந்திக பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்தி விக்4ந ப்ரதிஹதோऽபி (मच्चरणारविन्दयुगलैकान्त्यन्तिक परभक्ति परज्ञान परमभक्ति विघ्नप्रतिहतोऽपि)

வ்யா: ஆகையாலே “மச்சரணாரவிந்த3யுக3ளைகாந்திகாத்யந்திக பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்தி விக்4ந ப்ரதிஹதோऽபி” (मच्चरणारविन्दयुगलैकान्त्यन्तिक परभक्ति परज्ञान परमभक्ति विघ्नप्रतिहतोऽपि) என்னுடைய நிரதிஶய போ4க்3யமான திருவடிகளிலே நித்யமாய் ஏகரூபமாயிருந்துள்ள பரப4க்த்யாதி3களுக்கும் விக்4நமாய் முடியும். “ப்ரதிஹதோऽபி” (प्रतिहतोऽपि) ஹதமாகையாவது – நஶிக்கை. அதாவது – நஷ்டகல்பமாகை. ஆக, மச்சரணாரவிந்த3ங்களிலே ஏகாந்திகமாய் ஆத்யந்திகமாயிருந்துள்ள பரப4க்த்யாதி3களுக்கு விக்4நமாயிருந்துள்ள ததி3தரோபேக்ஷணீயமான இதர விஷயஜ்ஞாநங்களாலே நஷ்டகல்பராயிருப்பீரேயாகிலும்.

மூ: யேநகேநாபி ப்ரகாரேண த்3வய வக்தா த்வம் (येन केनापि प्रकारेण द्वय वक्ता त्वं)

வ்யா: “யேநகேநாபி ப்ரகாரேண” (येन केनापि प्रकारेण)ஆக வேதா3ந்தஸித்34மான கர்மஜ்ஞாந ப4க்திகள் உமக்கில்லையேயாகிலும், இவற்றுக்கு அங்க3மான அமாநித்வாத்3யாத்மகு3ணங்கள் உமக்கில்லையேயாகிலும், இவை இல்லாமையேயன்றியே இவற்றுக்கு விரோதி4யான மத3பசாராதி3 ஸகலபாபங்களாலே நெருக்குண்டிருந்தீரேயாகிலும். இவற்றுக்கடியான விபரீதாஹங்காரத்தாலே மறையுண்டிருந்தேயாகிலும், இவை இரண்டுக்குமடியான விபரீத வாஸநையாலே கட்டுண்டிருந்தீரேயாகிலும், இவையெல்லாவற்றுக்குமடியான து3ஷ்ப்ரக்ருதியிலே ஸம்ப3ந்தி4த்திருந்தீரேயாகிலும், மச்சரணாரவிந்த3ங்களிலே ஏகாந்திகமாய் ஆத்யந்திகமாயிருந்துள்ள பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளுக்கு விக்4நமாயிருந்துள்ள இதரவிஷயங்களாலே நஷ்டகல்பராயிருந்தீரேயாகிலும். “யேந கேநாபி ப்ரகாரேண” (येन केनापि प्रकारेण) ஏதேனுமொரு ப்ரகாரத்தாலே என்றது – அஹ்ருத3யமாகவுமாம்; ஸஹ்ருத3யமாகவுமாம்; ஆர்த்தராகவுமாம், த்3ருப்தராகவுமாம்; அர்த்த2ஸஹிதமாகவுமாம்; அர்த்த2விது4ரமாகவுமாம், அதிலொரு நிர்ப3ந்த4மில்லை. த்3வயமாமித்தனையே வேண்டுவது, மந்த்ராந்தரங்களாகவொண்ணாது. அதொழிந்தால் மோக்ஷஸாத4நங்களேயாகிலும் அர்த்த2பூர்தியுண்டான வ்யாபகாந்தரங்களுமாகவொண்ணாது. அதுவுமொழிந்தால் திருமந்த்ரமாகவும் போராது. த்3வயமேயாகவேணும். அதுதன்னிலும் பூர்வார்த்த4மேயாகையும் போராது. உத்தரார்த்த4மாகையும் போராது. த்3வயமேயாகவேணும். அதனால் வருவதென்னென்றால், பூர்வார்த்த4த்தையே சொன்னானாகில் அது ஸகல புருஷார்த்த2 ஸாதா4ரணமாகையாலே ‘புருஷார்த்த2மேதோ?’ என்ன வேண்டிவரும். உத்தரார்த்த4ம் சொன்னானாகில் ஸாத4நாந்தரங்களும் ஸஞ்சரிக்கையாலே ‘ஸாத4நமேதோ?’ என்ன வேண்டிவரும். அவை இரண்டு குறையும் தீரும்போது த்3வயமேயாகவேணும். “த்3வய வக்தா த்வம்” (द्वय वक्ता त्वं) இப்படி த்3வயத்தை வாயாலே உச்சரித்த நீர்.

மூ: கேவலம் மதீ3யயைவ த3யயா நிஶ்ஶேஷ விநஷ்டஸஹேதுக மச்சரணாரவிந்த3 யுக3ளைகாந்திகாத்யந்திக பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திவிக்4ந: (केवलं मदीययैव दयया निश्शेष विनष्टसहेतुक मच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिक परभक्ति परज्ञान परमभक्तिविघ्न:)

வ்யா: “கேவலம் மதீ3யயைவ த3யயா நிஶ்ஶேஷ விநஷ்டஸஹேதுக” (केवलं मदीययैव दयया निश्शेष विनष्टसहेतुक) த்3வயவசந ப்ரேரிதையாயிருந்துள்ள க்ருபையொன்றாலும் ஸஹேதுகமாகவும் நிஶ்ஶேஷமாகவும் நஷ்டமாக உடையராயிருக்கக்கடவீர். த்3வயவசநம் ப்ரேரிக்குமிடத்தில் ஸ்வக்ருத்யமும் கூடியிருக்குமோவென்னில்; “கேவலம் மதீ3யயைவ த3யயா” (केवलं मदीययैव दयया) வெறும் இத்3வயவசநமே புக்கு ப்ரேரித்துப் புறப்படவிட்ட என்னுடைய க்ருபையொன்றினாலும் ஸஹேதுகமாகவும் நிஶ்ஶேஷமாகவும் விநஷ்டமாக உடையீராகக்கடவீர். விநஷ்டமாவதென்னென்னில், “மச்சரணாரவிந்த3 யுக3ளைகாந்திகாத்யந்திக பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திவிக்4ந:” (मच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिक परभक्ति परज्ञान परमभक्तिविघ्न:) என்னுடைய நிரதிஶய போ4க்3யமான திருவடிகளிலே ஐகாந்திகமாய், ஆத்யந்திகமாயிருந்துள்ள பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளுக்கு விக்4நமாயிருந்துள்ள இதர விஷயஜ்ஞாநங்கள், இவ்விடத்தில் நிஶ்ஶேஷமாகக்கடவது. எதுதான் நிஶ்ஶேஷமாக விநஷ்டமாகிறது. இதரவிஷய ஜ்ஞாநமேயோ? என்னில், “ஸஹேதுக” (सहेतुक) இதர விஷயஜ்ஞாநமும், இதுக்கடியாயிருந்துள்ள ப்ரக்ருதிஸம்ப3ந்த4மும், இதுக்கடியாயிருந்துள்ள விபரீதவாஸநையும், இதுக்கடியாயிருந்துள்ள விபரீதாஹங்காரமும், இதுக்கடியாயிருந்துள்ள ப43வத3பசாராதி3 ஸகல விரோதி4பாபங்களும், என்னுடைய நிரதிஶய போ4க்3யமான திருவடிகளிலே ஐகாந்திகமாய் ஆத்யந்திகமாயிருந்துள்ள பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளுக்கு விக்4நமாயிருந்துள்ள இதர விஷயஜ்ஞாநங்களும் இந்த த்3வயவசநமென்றுமே புக்குப் புறப்படவிட்ட [பாட2பே43ம்: அடியாக இருகரையுமழியப் பெருகின] என்னுடைய க்ருபையொன்றினாலுமே. “ஸஹேதுக” (सहेतुक) ஸஹேதுகமாகவும் விநஷ்டமாகவுடையீராகக்கடவீர்.

மூ: மத்ப்ரஸாத3லப்34 மச்சரணாரவிந்த3 யுக3ளைகாந்திகாத்யந்திக பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்தி: (मद्प्रसादलब्ध मच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिक परभक्ति परज्ञान परमभक्ति🙂

வ்யா: “மச்சரணாரவிந்த3 யுக3ளைகாந்திகாத்யந்திக பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்தி:” (मच्चरणारविन्दयुगलैकान्तिकात्यन्तिक परभक्ति परज्ञान परमभक्ति🙂 இவற்றுக்கு விரோதி4யான ஸகலபாபங்களும் நிஶ்ஶேஷமாக நஷ்டமாய்த்தே, இனி இவையுண்டாமத்தனையிறே. இவையுண்டாமிடத்து இவற்றுக்கு விரோதி4யான பாபங்கள் போனவாறே தனக்குத்தானே உண்டாகிறானவோ? என்னில்; “மத்ப்ரஸாத3லப்34” (मद्प्रसादलब्ध) அதுக்குமேலே இதுவும் என்னுடைய ப்ரஸாத3த்தாலே உடையீராய். என்னுடைய நிரதிஶய போ4க்3யமான திருவடிகளில் ஐகாந்திகமாய், ஆத்யந்திகமாயிருந்துள்ள பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகள் என்னுடைய ப்ரஸாத3த்தாலே உடையீராகக்கடவீர்.

மூ: மத்ப்ரஸாதா3தே3வ ஸாக்ஷாத்க்ருத யதா2வஸ்தி2த மத்ஸ்வரூபரூப கு3ணவிபூ4தி லீலோபகரண விஸ்தார: (मत्प्रसादादेव साक्षात्कृत यथावस्थित मत्स्वरूपरूप गुणविभूति लीलोपकरण विस्तार:)

வ்யா: “மத்ப்ரஸாதா3தே3வ ஸாக்ஷாத்க்ருத யதா2வஸ்தி2த மத்ஸ்வரூபரூப கு3ணவிபூ4தி லீலோபகரண விஸ்தார:” (मत्प्रसादादेव साक्षात्कृत यथावस्थित मत्स्वरूपरूप गुणविभूति लीलोपकरण विस्तार:) “மத்ப்ரஸாதா3தே3வ ஸாக்ஷாத்க்ருத” (मत्प्रसादादेव साक्षात्कृत) என்னுடைய ப்ரஸாத3த்தாலே ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட “ஏவ” (एव) என்கிற அவதா4ரணத்தாலே இவற்றை ஸாக்ஷாத்கரிக்குமிடத்தில் இப்ப்ரஸாத3ம் ஸஹகாரி ஸாபேக்ஷமன்றென்கிறது. ‘ஸஹகாரிகள் தானுண்டோ ப்ரஸாத3த்துக்கு? உண்டானாலன்றோ வ்யாவர்திக்கவேண்டுகிறது’ என்னில், ப்ரஸாத3வான் ஸஹகாரியாகலாம். அவனும் வேண்டா, ப்ரஸாத3மே செய்யவற்று என்கை. “யதா2வஸ்தி2த” (यथावस्थित)  யதா2வாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட. யதா2வென்கிறதென்? ஸாக்ஷாத்காரமாகில் அயதா2வான ஸாக்ஷாத்காரமுமுண்டோவென்னில்; உண்டு எங்ஙனேயென்னில், வேதா3ந்தத்திலே ஒரு ப்ரதே3ஶத்திலே “வாருணீ பா4ர்க3வீ வித்3யா” (104. वारुणी भार्गवी विद्या) என்கிற வித்3யையிலே எழுதிற்று; அங்ஙனன்றியே (யதா2வாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட) நீயடியாக இழிந்தவன்றிறே து3:க்க2மெல்லாமுள்ளது, நானடியாக வருகிறதாகையாலே இருந்தபடியே அநாயாஸேந ஸாக்ஷாத்கரிக்கை. எதைத்தான் ஸாக்ஷாத்கரிக்கிறதென்னில்; “மத்ஸ்வரூபரூப கு3ணவிபூ4தி லீலோபகரண விஸ்தார:” (मत्स्वरूपरूप गुणविभूति लीलोपकरण विस्तार:) என்னுடையதான ஸ்வரூபமென்ன, ரூபமென்ன, கு3ணமென்ன, உப4ய விபூ4தியுமென்ன, இவற்றினுடைய ஸர்வத்தையும். என்னுடைய ப்ரஸாத3மொன்றினாலும் என்னுடைய ஸ்வரூபரூப கு3ணவிபூ4திகளிநுடைய ஸர்வத்திலும் யதா2வாந ஸாக்ஷாத்காரத்தையுமுடையீராய்.

மூ: அபரோக்ஷ ஸித்34மந்நியாம்யதாமத்3தா3ஸ்யைக ஸ்வபா4வாத்ம ஸ்வரூப: (अपरोक्षसिद्ध मन्नियाम्यतामद्दास्यैक स्वभावात्मस्वरूप:)

வ்யா: “அபரோக்ஷ ஸித்34” (अपरोक्षसिद्ध) அபரோக்ஷஸித்34மாகையாவது- ஶ்ரவண மனனாதி3களாலே ஸித்34மாகையன்றிக்கே ஸாக்ஷாத்காரஸித்34மாகை. எதுதான் ஸாக்ஷாத்கார ஸித்34மாகிறதென்னில், “மந்நியாம்யதாமத்3தா3ஸ்யைக ஸ்வபா4வாத்ம ஸ்வரூப:” (मन्नियाम्यतामद्दास्यैक स्वभावात्मस्वरूप:) என்னுடையதான நியமநத்தையும் என்னுடையதான தா3ஸ்யத்தையும் ஸ்வபா4வமாகவுடைத்தான ஆத்மஸ்வரூபம். “மத்3தா3ஸ்யைக” (मद्दास्यैक) என்கிற அவதா4ரணம் ப்ரத2மபத3த்தில் சதுர்த்தி2க்கு மேலே அவதா4ரணம் போலேயிருக்கிறது. என்னுடைய நியமநத்தையும் என்னுடைய தா3ஸ்யத்தையுமே ஸ்வபா4வமாக உடைத்தான ஆத்மஸ்வரூப ஸாக்ஷாத்காரத்தையுடையீராய். ஸ்வரூபஸாக்ஷாத்காரம் பிறந்தால் தத்33தமான ஈஶ்வரைகநியாம்யத்வமும், ஈஶ்வரைகதா3ஸத்வமும் தன்னடையே வெளியாமிறே.

மூ: மதே3காநுப4வ: (मदेकानुभव:)

வ்யா: “மதே3காநுப4வ:” (मदेकानुभव:) ஸ்வரூப ஸாக்ஷாத்காரம் பிறந்தால் அவனை விஷயீகரித்துக் கொண்டல்லது நில்லாதே ஸ்வரூப மாத்ரத்தையன்றே ஸாக்ஷாத்கரிப்பது; ஸ்வரூப யாதா2த்ம்யத்தையிறே. அதாவது – ப43வத3த்யந்த பாரதந்த்ர்யாதி3களிறே. ஜ்ஞாநாநந்த3 ஶப்33ங்களையன்றே ஸாக்ஷாத்கரிப்பது. “மந்நியாம்யதாமத்3தா3ஸ்யைக” (मन्नियाम्यतामद्दास्यैक) என்றிறே ஸாக்ஷாத்கரிப்பித்தது. ஆகையாலே கைவல்யம் போலன்றிக்கே என்னை ஒருவனையுமே அநுப4வ விஷயமாக உடையீராய். இந்த அவதா4ரணத்தால் ஆரை வ்யாவர்த்திக்கிறதென்னில், ஸ்வரஸத்துக்குடலாக அநுப4விக்கும் அதி4காரியை வ்யாவர்த்திக்கிறது. தானும் அவன் பக்கலிலே புகுமித்தனை; அல்லாதபோது கைவல்யத்தோபாதியாமத்தனை.  ஆகவித்தால் சொல்லுகிறதென்? என்னில்; ஸ்வரூப த3ர்ஶநத்தில் வந்தால் ‘எனக்கு ஶேஷி’ என்று அவனைத் த3ர்ஶிக்கையன்றியே, ‘அவனுக்கு ஶேஷம்’ என்று தன்னை த3ர்ஶிக்கையும், த3ர்ஶித்தால் அநுப4வத்தில் அவனே விஷயமாயிருக்கையும். “அஹமந்நம்” (105. अहमन्नं) என்றதுவே அர்த்த2ம் அது புருஷார்த்த2மாகைக்காக “அந்நாத3:” (105. अन्नाद:)என்றவித்தனை.

மூ: மத்3தா3ஸ்யைக ப்ரிய: பரிபூர்ணாநவரத நித்ய விஶத3தமாநந்ய ப்ரயோஜநாऽநவதி4காதிஶய ப்ரிய மத3நுப4வஸ்த்வம்  ததா2வித4 மத3நுப4வஜநிதாநவதி4காதிஶய ப்ரீதிகாரிதாऽஶேஷாவ ஸ்தோ2சிதாஶேஷ ஶேஷதைக ரதிரூப நித்யகிங்கரோ ப4வ;  ஏவம் பூ4தோஸி (मद्दास्यैक प्रिय: परिपूर्णानवरत नित्य विशदतमानन्यप्रयोजनाऽनवधिकाशय प्रिय मदनुभवस्त्वं तथाविधमदनुभवजनितानवधिकाशय प्रीतिकारिताऽशेषास्थोचिताशेष शेषतैकरतिरूप नित्यकिङ्करो भव; एवं भूतोसि!)

வ்யா: “மத்3தா3ஸ்யைக ப்ரிய:” (मद्दास्यैक प्रिय:) அவனையநுப4வித்தால் அவனளவிலே பர்யவஸிக்கும்படியாயன்றே இருப்பது, ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய்ச்’ செய்வதென்? [திருவாய் 3-3-1] என்றால், ‘வழுவில்லாதே அடிமை செய்யவேணும்’ [திருவாய் 3-3-1] என்றிறே ப்ரார்த்த2னை. “எம்மா வீட்டுத்திறமும் செப்பம் நின்  செம்மாபாத பற்புத் தலைசேர்த்து” [திருவாய் 2-9-1] என்றிறே ஸ்வரூபமிருப்பது. அநுப4வஜநித ப்ரீதிகாரிதமிறே, கைங்கர்யம். இந்த அவதா4ரணத்தால் தனக்கினிதான கைங்கர்யம் அஹங்கார க3ர்ப்ப4மென்கை. இத்தை கழித்ததிறே உத்தர க2ண்ட3த்தில் நமஶ்ஶப்33ம். என்னுடைய தா3ஸ்யத்தையே ப்ரிய விஷயமாகவுடையீராய், “பரிபூர்ணாநவரத நித்ய விஶத3தமாநந்ய ப்ரயோஜநாऽநவதி4காதிஶய ப்ரிய மத3நுப4வஸ்த்வம்” (परिपूर्णानवरत नित्य विशदतमानन्यप्रयोजनाऽनवधिकाशय प्रिय मदनुभवस्त्वं) பரிபூர்ணமாய் க்ஷணந்தோறும் இடைவிடாதே நித்யமாய் ப்ரத்யக்ஷஸமாநாகாரமாய் அநந்ய ப்ரயோஜநமாய் ப்3ரஹ்மாதி3களதிஶயத்தையும் காற்கடைகொண்ட என்னுடைய அநுப4வத்தை நீர் உடையீராய். “ததா2வித4 மத3நுப4வஜநிதாநவதி4காதிஶய ப்ரீதிகாரித” (तथाविधमदनुभवजनितानवधिकाशय प्रीतिकारित) அப்படிப்பட்ட என்னுடைய அநுப4வத்தாலே பிறப்பதான அநவதி4கமான அதிஶயத்தையுடைத்தான ப்ரியத்தாலே பண்ணப்படுவதாய், “அஶேஷாவ ஸ்தோ2சிதாஶேஷ ஶேஷதைக ரதிரூப நித்யகிங்கரோ ப4வ” (अशेषास्थोचिताशेष शेषतैकरतिरूप नित्यकिङ्करो भव) எல்லா அவஸ்தைகளிலும் அநுகூலமாய் எல்லா அடிமைகளிலும் உண்டான அபி4நிவேஶத்தையே வடிவாக உடையீராய்க்கொண்டு யாவதா3த்மபா4வி அநுபா4வ்யமான கைங்கர்யத்தைப் பெற்று அநுப4விக்கக் கடவீர்.

பதினெட்டாவது சூர்ணை அவதாரிகை:

“ஏவம் பூ4தோஸி” (एवं भूतोसि) “பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளுக்கு விக்4நமான இதர விஷய ஜ்ஞாநமும், இதுக்கடியான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4மும், இதுக்கடியாயிருந்துள்ள விபரீத வாஸனையும், இதுக்கடியாயிருந்துள்ள விபரீதாஹங்காரமும், இதுக்கடியாயிருந்துள்ள மத3பசாராதி3 ஸகலவிரோதி4 பாபங்களும் ஸஹேதுகமாகவும் நிஶ்ஶேஷமாகவும் விநஷ்டமாகவுமுடையீராய், அதுக்கு மேலே பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளை உடையீராய், என்னுடைய ஸ்வரூப ரூப கு3ண விபூ4திகளுடைய ஸர்வத்தையும் யதா2வாக ஸாக்ஷாத்கரிக்கக்கடவீராய், ஸ்வரூப ஸாக்ஷாத்காரத்தையுடையீராய், என்னையொருவனையுமே அநுப4வவிஷயமாக உடையீராய், என்னுடைய தா3ஸ்யத்தையே ப்ரிய விஷயமாக உடையீராய், பரிபூர்ணாதி3 விஶேஷண விஶிஷ்டமான என்னுடைய அநுப4வத்தை உடையீராய், அநுப4வஜநித ப்ரீதிகாரிதமான நித்யகைங்கர்யத்தை உடையீராகக்கடவீர்” என்று பெரியபெருமாள் அருளிச்செய்தவாறே,  இவையெல்லாவற்றுக்கும் ஹேதுவேதென்று பார்த்தார். “த்3வயவக்தா” (द्वयवक्ता) என்று த்3வயத்தை வாயாலே உச்சரித்த இதுவே ஹேதுவாயிருப்பது. ‘இதிருந்தபடி என்?’ என்ன, “ஏவம் பூ4தோஸி” (एवं भूतोसि) என்கிறார் பெரியபெருமாள்.

பத்தொன்பதாவது சூர்ணை அவதாரிகை:

“ஏவம் பூ4தோஸி” (एवं भूतोसि) என்றது என்னென்றால், “இது த்3வய வசநமாத்ரமேயாய், இத்தாலே எல்லாமுண்டாகக்கடவதென்று சொல்லவேண்டும்படியாயோ உமக்கிருக்கிறது? எல்லாம் குறைவற உண்டாயன்றோயிருக்கிறது. இச்சரீரத்தோடே ஒருதே3ஶ விஶேஷத்திலுள்ளாரைப்போலே அடிமைசெய்யும் ப்ரகாரமில்லையோ உமக்கு” என்ன, “தாபத்ரயாதி3களுக்கடியான ஶரீரஸம்ப3ந்த4ம் கிடந்தது. இஶ்ஶரீரத்தினுடைய அவஸாநமறிகிறிலேன். இஶ்ஶரீரத்தோடேயிருக்கும் நாளைக்குக் காலக்ஷேபம் பண்ணும் ப்ரகாரமறிகிறிலேன்; வஸ்தவ்ய பூ4மி ஏதென்றுமறிகிறிலேன். இப்படியிருக்க எல்லாம் குறைவற்றேனாக அருளிச்செய்தது. உபச்ச2ந்த3ந வாக்யம்போலே இராநின்றதீ” என்ன; “இவையே நீர் சொல்லிற்று. இவை செய்யும் ப்ரகாரம் கேளீர்” என்கிறார் பெரியபெருமாள்.

மூ: ஆத்4யாத்மிகாதி4பௌ4திகாதி4தை3விக து3:க்க2விக்4நக3ந்த4 ரஹிதஸ்த்வம் (आध्यातमिकाधिभौतिकाधिदैविक दु:खविघ्नगन्धरहितस्त्वं)

வ்யா: “ஆத்4யாத்மிகாதி4பௌ4திகாதி4தை3விக து3:க்க2விக்4நக3ந்த4 ரஹிதஸ்த்வம்” (आध्यातमिकाधिभौतिकाधिदैविक दु:खविघ्नगन्धरहितस्त्वं) தாபத்ரயாதி3களால் வந்த து3:க்க2மாகிற விக்4நத்தினுடைய க3ந்த4மில்லையாம்படி வர்த்தியும். தாபத்ரயாதி3களால் வரும் து3:க்க2ம் ப43வதநுப4வத்துக்கு விக்4நமாகக் கடவதிறே. “ஶரீர ஸம்ப3ந்த4த்தோடே இருக்கச்செய்தே  து3:க்க23ந்த4மில்லையாம்படி வர்த்திக்கப் போமோ?” என்ன; “த்வம்” (त्वं) நீர் வர்த்தியுமென்கிறார். நீர் வர்த்தியுமென்றதேது? என்னில்; “ஏவம் பூ4தோஸி” (एवं भूतोसि) என்றும், “த்வம்” (त्वं) என்றும் நான் சொல்லப்பட்ட நீர் வர்த்தியுமென்கிறார். அதாவது – ‘காலம் குறுகாநின்றது; கர்மம் க்ஷயியா நின்றது; கர்மம் க்ஷயிக்கக்ஷயிக்க ப்ராப்யமும் முக2ம் காட்டாநின்றது’ என்றுகொண்டு, அநந்தரம் பெறப்புகுகிற பேற்றின் சீர்மையை அநுஸந்தி4த்து ‘இவற்றால் வரும் து3:க்க2ங்களையும் மதியாதே வர்த்தியும்’ என்றபடி. எதுபோலவென்னில், அபி4ஷேகப் பட்டினி போலே. அங்ஙனே போனாலும் ஶரீரத்தோடிருக்கும் நாள் போதுபோக்கு ஏதாகக்கடவதென்னில்;

மூ: த்3வயமர்த்தா2நுஸந்தா4நேந ஸஹ (द्वयमर्थानुसन्धानेन सह)

வ்யா: “த்3வயமர்த்தா2நுஸந்தா4நேந ஸஹ” (द्वयमर्थानुसन्धानेन सह) த்3வயத்தினுடைய அர்த்தா2நுஸந்தா4னத்தைப் பண்ணிக்கொண்டு, அதுவே துணையாக இரும். “நாட்டாரோடியல்வொழிந்து” [திருவாய் 10-6-2] என்று ஸம்ஸாரத்தில் வ்யாவ்ருத்தனாய் கைங்கர்யத்தில் தூ3ரஸ்தனாய் “நாரணனை நண்ணினம்” [திருவாய் 10-6-2] என்று ப43வதி ந்யஸ்தப4ரனாயிருக்குமவனுக்கு த்3வயத்தினுடைய அர்த்தா2நுஸந்தா4னமேயாய்த்து துணையாயிருப்பது. கீழ் “த்3வயவக்தா” (द्वयवक्ता) என்று சொல்லிற்று. இங்கு “த்3வயமர்த்தா2நுஸந்தா4நேந ஸஹ” (द्वयमर्थानुसन्धानेन सह) என்பானென்? என்னில், ப43வத் விஷயீகாரத்துக்குப் பாசுரமாத்ரமே அமையும்; காலக்ஷேபத்துக்கு அர்த்த2ஸஹிதமாகவேணும்.

மூ: ஸதை3வம் வக்தா (सदैवं वक्ता)

வ்யா: “ஏவம் வக்தா” (एवं वक्ता) “ஏவம்” என்றது – இப்ரகாரத்தாலே என்றபடி. இப்ரகாரத்தாலே யாவதென்னென்னில்; கீழ், தாம் ஒருப்ரகாரத்தாலும் பூர்வர்களுடைய ப்ரகாரத்தாலும், இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலுமாக மூன்று ப்ரகாரத்தாலே ஶரணம் புக்கார். இதில் பூர்வர்களுடைய ப்ரகாரமுமொழிய, இதிஹாஸ புராண ப்ரக்ரியையுமொழிய இக்க3த்3ய ப்ரகாரத்தாலே என்றபடி. இன்னம் இருபதுபடி ஶரணம் புக்காலும் மறித்து மறித்து ஶரணம் புகாநிற்குமத்தனை போக்கி, உபாயாந்தர மில்லையே இவர்க்கு. இப்படி ஶரணம் புகுகிறது அவன் ப்ரஸாத3த்துக்க்காகவிறே. அதில் ப்ரஸாதா3திஶயம் இதினாலே உண்டாகையாலே ஏவம் ப்ரகாரத்தாலே என்கிறார். “வக்தா” (वक्ता) நெஞ்சுக்குள்ளே அநுஸந்தி4க்க வேணுமென்னும் நிர்ப3ந்த4முண்டோ? என்ன, ‘அது வேண்டா; அநுப4வம் வழிந்து வாயாலே சொல்லவுமாம்’ என்கிறார்.  அங்ஙனன்றியே, “ஏவம் வக்தா த்3வயமர்தா2நுஸந்தா4நேந” (एवं वक्ता द्वयमर्थानुसन्धानेन सह) இக்க3த்3யத்தை வாயாலே சொல்லிக்கொண்டு த்3வயத்தினுடைய அர்த்த2த்தை அநுஸந்தி4யும் என்கிறார். இரண்டும் அர்த்த2மொன்றாயிறே இருப்பது. அதுக்குப் பாசுரம் இதுவாமித்தனையிறே. “ஸதா3” (सदा)என்றது – ‘எப்போதும்’ என்றபடி. எப்போதுமென்றதென்? என்னில், உபாயாந்தரங்களும் உபேயாந்தரங்களும் ஸஞ்சரிக்கிற ஸம்ஸாரமாகையாலே அவை நெஞ்சில் புகுராமைக்காக எப்போதுமென்கிறது.  அங்ஙனன்றிக்கே ப்ரக்ருதி ஸ்பர்ஶமும் ப43வத் ஸ்பர்ஶமும் கலசிப்போருகையாலே இப்ரக்ருதி ஸ்பர்ஶமும் ப்ரக்ருத்யநுகூலமான விஷயாந்தரங்களிலே மூட்டக்கடவதாயிருக்கும். ப43வத் ஸ்பர்ஶமும் ஸ்வரூபாநுருபமான கைங்கர்யத்திலே மூட்டக்கடவதாயிருக்கும், அடியிலே விஷயாந்தரங்களுக்கு அஞ்சி ப43வத் விஷயத்தைப் பற்றினவராகையாலே அதில் அந்வயமில்லை.  இனி கைங்கர்யம் ஒரு தே3ஶ விஶேஷத்திலேயாகையாலே தூ3ரஸ்த2மாயிருந்தது. இனி, இருக்கும் நாளைக்குப் போதுபோக்கு இதுவேயாகையாலே ‘எப்போதும்’ என்கிறது.  அது எங்ஙனே ஆனாலும் இவ்விருப்பு தனக்கு அவஸாநமேதென்ன;- யாவச்ச2ரீரபாதம் என்கிறார் பெரிய பெருமாள். இவர் தாம் இப்படி கேட்கிறது உபாயாந்தர பரிக்3ரஹத்தைப் பண்ணி உபாஸந ஸமாப்தியிலேயோ? அங்ஙனன்றியிலே உபாஸநம் ஸமாபித்தாலும் “ப்ரதீக்ஷந்தே” (106. प्रतीक्षन्ते) என்று கர்மாவஸாநம் பார்த்திருக்க வேண்டுகையாலும், கர்மாவஸாநத்திலேயோ? என்று ஸம்ஶயத்துக்குக் கேட்கிறாரல்லர். உபாயாந்தரத்தில் அந்வயமில்லாமையாலே அதொழிந்தால் இவ்வதி4காரி தனக்கு ‘ஶரீராவஸாநத்திலேயோ?’ என்று கேட்கவேண்டாதபடி “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” [திருவாய்மொழி 9-10-5] என்று பரமாசார்யர் அருளிச் செய்துவைத்தார். இனி இவர் தான் கேட்டானென்? என்னில். ப்ராப்ய த்வரையாலும் காலம் நெடுகித் தோற்றுகையாலும், பரிக்3ரஹித்த உபாயத்தைப் பார்த்தவாறே கண்ணழிவற்றிருந்தது. இனி, ருசியைப் பார்த்தவாரே கண்ணழிவற்றிருந்தது. இனி இவ்விருப்பு ஈஶ்வரநிப3ந்த4னமாமித்தனையிறே, ஆகையால் நிர்ப3ந்தி4த்து அவன் தன்னையே கேட்குமித்தனையிறே.

மூ: யாவச்ச2ரீரபாதமத்ரைவ ஶ்ரீரங்கே3 ஸுக2மாஸ்வ (यावच्छरीरपातमत्रैव श्रीरङ्गे सुखमास्व)

வ்யா: “யாவச்ச2ரீரபாதம்” (यावच्छरीरपातं) ஶரீரமேயன்றோ விளம்பம். ஆரம்பி4த்த கர்மமெல்லாம் பார்த்திருக்கவேணுமோ? அதுதான் நாளுக்குநாள் க்ஷயித்தன்றோ செல்லுகிறது. ஆகையாலே சென்றன்றோ நிற்கிறதென்று பெரியபெருமாள் அருளிச்செய்ய, ஆனால் அவ்வளவும் “ப்ரதீக்ஷந்தே” (प्रतीक्षन्ते) என்றிருக்கிறேன், இருக்கிறது ஸம்ஸாரமாயிராநின்றது. நான் வர்த்திக்கும் தே3ஶமேதென்னில், “அத்ரைவ ஶ்ரீரங்கே3 ஸுக2மாஸ்வ” (श्रीरङ्गे सुखमास्व) லீலாவிபூ4தியான ஸம்ஸாரம் அன்றிக்கே நித்யவிபூ4தியான பரமபத3ம் அன்றிக்கே த்ருதீயவிபூ4தியாய் ஸம்ஸாரத்துக்கு ஆப4ரணமான கோயிலிலே ஸுக2மே வர்த்தியும். லீலாவிபூ4தி ஸம்ஸாரிக்கு தே3ஶம். நித்ய விபூ4தி முக்தர்க்கு தே3ஶம். இனிக்கோயிலிலேயிறே முமுக்ஷுக்களுக்கு தே3ஶம், அதிலும் ஸம்ஸாரிகளிலும் நித்ய முக்தரிலும் வ்யாவ்ருத்தராய் விரோதி4யான இவ்வுடம்போடே ப43வத3நுப4வம் பண்ணப்பெற்ற உமக்குப் போர வஸ்தவ்யபூ4மி இதுவேயிறே. “அத்ரைவ ஶ்ரீரங்கே3” (अत्रैव श्रीरङ्गे) என்றது- இந்தக் கோயிலிலே என்றபடி. “வடிவுடை வானோர் தலைவன்- வண் திருவரங்கன்” [திருவாய்மொழி 7-2-10] என்றதிறே. ‘இந்தக்கோயிலிலே என்றதென்?’ என்றால், நாம் பரமபத3த்தையும் காற்கடைகொண்டுவந்து படுகாடு கிடக்கிற கோயிலிலே என்றபடி. “ஸுக2மாஸ்வ” (सुखमास्व) ஸுக2மே வர்த்தியும். ஸுக2ம் எத்தாலே என்னில் முக்தப்ராயராகையாலே ஸுக2மே வர்த்தியும் என்கிறார். 

இருபதாவது சூர்ணை அவதாரிகை:–“ஏவம் பூ4தோஸி” (एवं भूतोसि) என்று தொடங்கி இவ்வளவும் வர ஶரீர ஸமநந்தரம் பெறும் பேற்றையும் ஶரீரத்தோடே இருக்கும் நாள் பண்ணும் காலக்ஷேபத்தையும் அருளிச்செய்தாராகில், இனிமேல் செய்கிறதென்? என்னில்; ஶரீர விஶ்லேஷ த3ஶையிலே அந்திம ஸ்ம்ருதி ஒன்று உண்டாக வேண்டியிருப்பது, அது செய்யும்படியென்? என்ன, “அதுக்கு நீர் என்? நாமன்றோ கடவோம்” என்று ஶரீர விஶ்லேஷ த3ஶையிலே இவ்வதி4காரிக்குச் செய்யும் ஏற்றங்களை அருளிச்செய்கிறார்.

மூ: ஶரீரபாதஸமயே து கேவலம் மதீ3யயைவ த3யயா அதிப்ரபு3த்34: (शरीरपातसमये तु केवलं मदीययैव दयया अतिप्रबुद्ध:)

வ்யா: ஶரீரபாதஸமயே து கேவலம் மதீ3யயைவ த3யயா அதிப்ரபு3த்34: (शरीरपातसमये तु केवलं मदीययैव दयया अतिप्रबुद्ध:) ஶரீரபாதமுண்டு- இந்த ஶரீரத்தின் முடிவு, அந்த ஸமயத்தில், ஶரீர விஶ்லேஷ த3ஶையிலே; “து” (तु) உமக்கு விஶேஷமுண்டு. விஶேஷம் ஏதென்ன; “அதிப்ரபு3த்34:” (अतिप्रबुद्ध🙂 ஸ்வஸ்த23ஶையிற் காட்டில் ப்ரபோ34முண்டாம். இவ்வதிப்ரபோ34ந்தான் கீழ் பிறந்த பாக விஶேஷங்களாலே தனக்குத்தானே உண்டாகிறதோ? என்னில்;  “கேவலம் மதீ3யயைவ த3யயா அதிப்ரபு3த்34:” (केवलं मदीययैव दयया अतिप्रबुद्ध:) ‘இப்போது பிறந்த ப்ரஸாத3மே’, தானே தானே; உபாஸகனைப் போலே கர்மயோக3ம் ஜ்ஞாநஹேதுவாய், கர்மஜ்ஞாநங்களிரண்டும் ப4க்தி ஹேதுவாய் ப4க்த்யுபாயம் முற்றிப் பரப4க்தியாய், அது முற்றிப் பரஜ்ஞாநமாய், அதுமுற்றிப் பரம ப4க்தியும், இப்படி அவஸ்தை2 அவஸ்தா2ந்தரத்துக்கு ஹேதுவாய் இருக்கிறாப் போலேயிருக்கிறது அன்று இவனுக்குக் கீழ்  பிறந்த பாக விஶேஷங்களடைய போ4கோ3பகரணமாய் கார்யம் செய்கைக்கு உறுப்பாகிறதோ? என்னில், “கேவலம்” (केवलं) வெறும் இப்போது பிறந்த ப்ரஸாத3மே. கீழேயும் “கேவலம் மதீ3யயைவ த3யயா நிஶ்ஶேஷ விநஷ்டஸஹேதுக” (केवलं मदीययैव दयया निश्शेष विनष्टसहेतुक) என்றருளிச்செய்து, இங்கேயும் “கேவலம் மதீ3யயைவ த3யயா அதிப்ரபு3த்34:” (केवलं मदीययैव दयया अतिप्रबुद्ध:) என்ன வேண்டுவானென்? என்னில், விஷயீகார த3ஶையோடு விஷயீக்ருத த3ஶையோடு அவனுடைய விரோதி4களைப் போக்கும் த3ஶையோடு அநுகூலங்களை உண்டாக்கும் த3ஶையோடு வாசியற இவனுக்குப் பரிகரமாயுள்ளது வெறுமையே. கார்யம் செய்கைக்கு உறுப்பு அத்தலையில் ப்ரஸாத3மே என்கை. உணர்த்தியுண்டு என்கைக்கு “ப்ரபு3த்34:” (प्रबुद्ध🙂 என்ன அமைந்திருக்க, “அதிப்ரபு3த்34:” (अतिप्रबुद्ध) என்கிறது பூர்வாவஸ்தை2யிலே ஏற்றமுண்டு என்கைக்காக.

மூ: மாமேவாऽவலோகயந் (मामेवाऽवलोकयन्)

வ்யா: “மாமேவாऽவலோகயந்” (मामेवाऽवलोकयन्) பூர்வாவஸ்தை2யில் உணர்த்திக்கு இரண்டு ஶிரஸ்ஸு விஷயமாயிருக்கும். ப்ரக்ருதி ஸ்பர்ஶமும்  ப43வத் ஸ்பர்ஶமும் கலஶிப்போருகையாலே இரண்டு விஷயமாயிருக்கும். அங்ஙனன்றியிலே என்னுடைய ப்ரஸாத3த்தாலே பிறந்த உணர்த்தியாகையாலே என்னை ஒருவனையும் விஷயமாக உடையீராய்.

மூ: அப்ரச்யுத பூர்வஸம்ஸ்கார மநோரத2: (अप्रच्युत पूर्वसम्स्कार मनोरथ:)

வ்யா: “அப்ரச்யுத பூர்வஸம்ஸ்கார மநோரத2:” (अप्रच्युत पूर्वसम्स्कार मनोरथ:) பூர்வஸம்ஸ்காரத்துக்கு ப்ரச்யுதியில்லாத மநோரத2த்தை உடையீராய்க்கொண்டு; “பூர்வ ஸம்ஸ்காரமாகிறது- ப43வத் ஸமாஶ்ரயணம் பண்ணி வைத்துப் பின்புள்ள காலம் அந்யபரனாய் திரிந்து, சாகும்போதாக “நாமோ சாகாப்புகா நின்றோம். நம்முடைய திறத்தில் ஈஶ்வர ஹ்ருத3யம் எங்ஙனேயிருக்கிறது? நமக்குப் பேறு எங்ஙனேயிருக்கிறது? நாம் அநந்தரம் என்னென்புதாகப் புகுகிறோம்? இதுக்கு நம்மாலே செய்யலாவதென்?” என்று கலங்குகையன்றிக்கே ப43வத் ப்ரஸாத3த்தாலே பிறந்த ஆசார்ய விஷயீகாரமும் விஷயீகாராநுகூலமான உபதே3ஶமும் தத3நுகூலமான ப43வத் ஸமாஶ்ரயணமும், ஸமஶ்ரயணத்தால் பின்பு ப43வத் விஷயத்தில் பிறக்கும் வ்யவஸாயமும், வ்யவஸாயத்தினுடைய அநந்தரம் ஈஶ்வரன் பிறப்பிக்கும் பாக விஶேஷங்களையும் அநுஸந்தி4யா நின்றுகொண்டு, “கீழ் நின்றநிலை இது; மேலுள்ள பாக விஶேஷங்களையும் பிறப்பித்துப் பேற்றையும் தருகைக்கு ஒரு குறையில்லை” என்று மநோரதி2க்கிற அம்மநோரத2த்துக்கு ப்ரச்யுதியில்லாதே ஸந்துஷ்ட மநோரத2ராய் கொண்டு.

மூ: ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே2நேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூ2லஸூக்ஷ்மரூபாம் விஸ்ருஜ்ய (जीर्णमिव वस्त्रं सुखेनेमां प्रकृतिं स्थूलसूक्ष्मरूपां विसृज्य)

வ்யா: “ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸுகே2நேமாம் ப்ரக்ருதிம்” (जीर्णमिव वस्त्रं सुखेनेमां प्रकृतिं) [ஸ்தூ2ல ஸூக்ஷ்மரூபாமிமாம் ப்ரக்ருதிம் – ஜீர்ணமிவவஸ்த்ரம் ஸுகே2ந விஸ்ருஜ்ய] (स्थूलसूक्ष्मरूपमिमां प्रकृतिंजीर्णमिव वस्त्रं सुखेन विसृज्य) என்று அந்வயம். ஸ்தூ2ல ஸூக்ஷ்ம ரூபையாயிருந்துள்ள இந்த ப்ரக்ருதியை ஜீர்ணமான வஸ்த்ரத்தைக் கழிக்குமாபோலே ஸுகே2ந விட்டு. ஜீர்ணமான புடவையைப் பொகடுமாபோலே என்பானென்? என்னில், புதுப் புடவையுமாய் வெளுத்திருக்குமாகில் அதிலே ஸ்ப்ருஹையுண்டாகவும் கூடுமே, அங்ஙனன்றியிலே ஜீர்ணமாகையாலே துணியுமாய், அழுக்குமாயிருக்கையாலே ஜுகு3ப்ஸையோடே பொகட வேண்டிவரும்; அப்படியே இஶ்ஶரீரமும் மாம்ஸாஸ்ருகா3தி3 ஜுகு3ப்ஸையை உடைத்தாயிருக்கையாலே ஜுகு3ப்ஸையோடே விட்ட வஸ்த்ரத்தை த்3ருஷ்டாந்தமாகச் சொல்லிற்று.

            உடம்போடு வஸ்த்ரத்துக்குண்டான ஸம்ப3ந்த4மே உடம்புக்கும் ஆத்மாவோடு உள்ளதென்கைக்காக, ஸுகே2ந விட்டு என்றது.  ப்ரக்ருதியும் ஆத்மாவும் கூடப்பிணையுண்ட உரப்பாலே விடுவிக்கப்புக்கால் மஹா து3:க்க2முண்டாகக்கடவது; அங்ஙனன்றியே, என்னுடைய ப்ரஸாத3த்தாலே கழிகிறதாகையாலே தலையிலே பா4ரம் பொகடுமாபோலே அநாயாஸேந விட்டு;

            இப்படி ஶரீரத்தோடே பிறக்கும் பாக விஶேஷங்களை அருளிச்செய்தவாரே, “இப்பாக விஶேஷம் எல்லார்க்கும் உண்டாகாதே; இவ்வளவில்லாதார் இப்பேற்றை இழக்குமத்தனையோ? இவ்வளவுண்டானாலும் இன்னமும் மேலே சிலபாக விஶேஷங்கள் அவஶ்யாபேக்ஷிதங்களாகக்கடவது. அவை உண்டாம்படியெங்ஙனே? என்னில்;

மூ: ததா3நீமேவ மத்ப்ரஸாத3லப்34 (तदानीमेव मत्प्रसादलब्ध)

வ்யா: “ததா3நீமேவ” (तदानीमेव) ஶரீரஸமநந்தரத்தில் தத்காலத்திலே பரமப4க்தி பர்யந்தமாக முன்பில்லாத பாக விஶேஷமெல்லாம் உண்டாகக்கடவது; கீழே சிலவுண்டாகையும் இல்லையாகையும் பேற்றுக்கு அப்ரயோஜகம்; உண்டான அம்ஶம் உண்டாகில் போ43த்துக்கு உறுப்பாகிறது. இல்லையாகில் ஶரீர ஸமநந்தரத்தில் க்ஷணகாலத்திலே எல்லாவற்றையுமுடையனாம் என்கிறார். உபாஸகனுக்கு உபாஸந ஸமாப்தியளவிலே ஒரு குறைவரிலும் “யோக3 ப்4ரஷ்டோऽபி4ஜாயதே” (107. योग भ्रष्टोऽभिजायते) என்றுகொண்டு கீழது மேலதாக ஜந்மாந்தரம் ப2லியா நின்றது, நடுவே ஒருகுறை வரிலும் அதுவே குறையாய் அநர்த்த2ப்படாநின்றது; இத்தனையும் இல்லையாகிலும் அந்திம ஸ்ம்ருதி இல்லாதபோது பழைய நிலையேயாய் ப2லியாநின்றது, ஆனபின்பு இது இங்ஙனே கூடும் என்னில், “மத்ப்ரஸாத3லப்34” (मत्प्रसादलब्ध) தன் தலையிலே உபாய பா4வம் கிடக்குமவனுக்கு அவையெல்லாம் அவன்தனக்கே உண்டாக வேண்டியிருக்கும், என் தலையிலே உபாய பா4வம் கிடத்தியிருக்கும் அவனுக்கு என்னுடைய ப்ரஸாத3த்தாலே எல்லா பாக விஶேஷங்களையுமுடையனாய், பேற்றையும் லபி4க்கைக்கு ஒருகுறையில்லை என்கிறார், தன் தலையிலே ஸாத4ந பா4வம் கிடத்தினவன் கார்யம் தனக்கு ப4ரமானவோபாதி என் தலையிலே ஸாத4ந பா4வத்தைக் கிடத்தின இவன் கார்யம் எனக்கே ப4ரம். எங்கேனுமாக உபாய பா4வம் புக்க இடத்தேயிறே உபாய கார்யமும் கிடப்பது. புருஷார்த்த2 லாப4த்துக்கு ஒருதட்டில்லை.

மூ: மச்சரணாரவிந்த யுக3ளைகாந்திகாத்யந்திக பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திக்ருத பரிபூர்ணாநவரத நித்யவிஶத3தமாநந்ய ப்ரயோஜனானவதி4காதிஶய ப்ரியமத3நுப4வஸ்த்வம், ததா2வித4 மத3நுப4வ ஜநிதாऽநவதி4காதிஶய ப்ரீதிகாரிதாऽஶேஷாவஸ்தோ2சிதாऽஶேஷ ஶேஷதைகரதிரூப நித்யகிங்கரோ ப4விஷ்யஸி. (मच्चरणारविन्द युगलैकान्तिकात्यन्तिक परभक्ति परज्ञान परमभक्तिकृत परिपूर्णानवरत नित्यविशदतमानन्य प्रयोजनानवधिकातिशय प्रियमदनुभवस्त्वं, तथाविधमदनुभव जनिताऽनवधिकातिशय प्रीतिकारिताऽशेषावस्थोचिताऽशेष शेषतैकरतिरूप नित्यकिङ्करो भविष्यसि)

வ்யா: தேவரீருடைய ப்ரஸாத3த்தாலே லபி4க்கிறவைதான் எவையென்னில், “மச்சரணாரவிந்த யுக3ளைகாந்திகாத்யந்திக பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்தி” (मच्चरणारविन्द युगलैकान्तिकात्यन्तिक परभक्ति परज्ञान परमभक्ति) என்னுடைய நிரதிஶய போ4க்3யமான திருவடிகளிலே ஐகாந்திகமாய், ஆத்யந்திகமாயிருந்துள்ள பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகள், “க்ருத பரிபூர்ணாநவரத நித்யவிஶத3தமாநந்ய ப்ரயோஜனானவதி4காதிஶய ப்ரியமத3நுப4வ” (कृत परिपूर्णानवरत नित्यविशदतमानन्य प्रयोजनानवधिकातिशय प्रियमदनुभव) இப்படி பரப4க்த்யாதிகளாலே பண்ணப்படுவதாய் பரிபூர்ணாதி3 விஶேஷண விஶிஷ்டமாய் அநவதி4கமான அதிஶயத்தையுடைத்தான ப்ரீதியாலே அநுப4விப்பதான என்னுடைய அநுப4வமும் “ஜநிதாऽநவதி4காதிஶய ப்ரீதிகாரிதாऽஶேஷாவஸ்தோ2சிதாऽஶேஷ ஶேஷதைகரதிரூப நித்யகிங்கரோ ப4விஷ்யஸி” (जनिताऽनवधिकातिशय प्रीतिकारिताऽशेषावस्थोचिताऽशेष शेषतैकरतिरूप नित्यकिङ्करो भविष्यसि) அவ்வநுப4வத்தாலே பிறப்பதாய், அநவதி4கமான அதிஶயத்தையுடைத்தான ப்ரீதியாலே பண்ணப்படுவதாய் எல்லா அவஸ்தை2களிலும் அநுகூலமாய் எல்லா அடிமைகளிலும் உண்டான அபி4நிவேஶத்தையே வடிவாக உடைத்தாய், அபுநராவ்ருத்தி லக்ஷணமான கைங்கர்யமும் உமக்குண்டாகக்கடவது என்று பெரியபெருமாள் அருளிச்செய்கிறார்.

இருபத்தோராவது சூர்ணை வ்யாக்2யானம்:–பேற்றைப் பார்த்தவாறே கனத்திரா நின்றது, ப்ரவ்ருத்தியைப் பார்த்தவாறே அநாயாஸமாயிரா நின்றது. க்ஷுத்3ரப2லங்களுக்கு கனத்த ப்ரவ்ருத்திகளாலே பேறாயிரா நின்றால், கனத்த பேற்றுக்கு ஒருகை முறிய இழிந்தாலும் கிடையாதென்னும்படி இருக்க, எல்லாம் உண்டாகக்கடவதென்று அருளிச் செய்த இது, இஙஙன் உண்டாகக் கூடுமோ? என்று தம்மைப் பார்த்து ஸம்ஶயிக்க, “மா தே பூ43த்ர ஸம்ஶய:” (मा ते भूदत्र सम्शय🙂 என்கிறார்.

மூ: “மா தே பூ43த்ர ஸம்ஶய:” (मा ते भूदत्र सम्शय:)

வ்யா: “அத்ர” (अत्र) இவ்வர்த்த2த்தில், “தே” (ते) உமக்கு “மா ஸம்ஶய:” (मा सम्शय:🙂 ஸம்ஶயமில்லை; உமக்கென்றது என்” என்றால், உம்முடைய கையிலொரு முதலின்றிக்கே என் பக்கலிலே ந்யஸ்தப4ரரான உமக்குப் பேற்றுக்கொரு ஸம்ஶயமில்லை. “மா பூ4த் ஸம்ஶய:” (मा भूत् सम्शय:🙂 இதுதான் நான் சொன்னவார்த்தையாகையாலேயும் ஸம்ஶயமில்லை.

இருபத்திரண்டாவது சூர்ணை வ்யாக்2யானம்:

மூ: “அந்ருதம் நோக்தபூர்வம் மே ந ச வக்ஷ்யே கதா3சந” (अनृतं नोक्तपूर्वं मे वक्ष्ये कदाचन)

வ்யா: உம்முடைய வார்த்தைக்கு ஏற்றமென்? என்னில், “அந்ருதம் நோக்தபூர்வம் மே ந ச வக்ஷ்யே கதா3சந” (अनृतं नोक्तपूर्वं मे वक्ष्ये कदाचन) “மே” (मे) நமக்கு, “உக்தபூர்வம்” (उक्तपूर्वं) முன்பு சொன்ன வார்த்தைகளில் “அந்ருதம்ந” (अनृतं ) அந்ருதமில்லை, அந்ருதமில்லையென்றது அந்ருதம் சொல்லோம் என்றபடியோ? என்னில், அன்று; அந்ருதத்தில் வாஸநையுமில்லை; முதலிலே அறியோமென்றபடி. “ந ச வக்ஷ்யே கதாசந” (न च वक्ष्ये कदाचन) ஆகையாலே மேலுள்ளகாலத்திலும் அந்ருதபா4ஷணமில்லை.

மூ: “ராமோ த்3விர்நாபி4 பா4ஷதே” (रामो द्विर्नाभि भाषते)

“ஸக்ருதே3வ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே ।

அப4யம் ஸர்வ பூ4தேப்4யோ த3தா3ம்யேதத்3வ்ரதம் மம”

(सकृदेव प्रपन्नाय तवास्मीति याचते। अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद्व्रतं मम)

“ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ।

அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச:”

(सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। अहं त्वा सर्व पापेभ्यो मोक्षयिष्यामि माशुच:௥)

வ்யா: ‘இது கோவலனாய் வெண்ணையுண்டவாயனான [அமல-10] உம்முடைய வார்த்தையன்றோ’ என்ன; “ராமோ த்3விர்நாபி4 பா4ஷதே” (रामो द्विर्नाभि भाषते) இது நம் கோ3ஷ்டி2யிலே வார்த்தையன்றே. ஆந்ருஶம்ஸ்யப்ரதா4நரான ருஷிகள் கோ3ஷ்டி2யோடு நம் கோ3ஷ்டி2யோடு வாஶியற இப்படியேயன்றோ ப்ரஸித்34ம், “ராமனாகில் இரண்டு வார்த்தை சொல்லான்” என்னுமிடம் எங்கும் ப்ரஸித்34மன்றோ என்ன; ஆனால் இரண்டு வார்த்தையில்லையாகிறது. அந்த வார்த்தைதான் ஏதென்னில்; “வேதோ3பப்3ரும்ஹணார்த்தா2ய தாவக்3ராஹயத ப்ரபு4:” (108. वेदोपबृंहणार्थाय तावग्राहयत प्रभु:) என்கிறபடியே வேதோ3பப்3ரும்ஹணமாய் சதுர்வேத3ங்களோடேகூட “இதிஹாஸபுராணம் பஞ்சமம்” (109. इतिहासपुराणं पञ्चमं) என்கிறபடியே பஞ்சம வேத3மென்னலாம் படியுமாய் இதிஹாஸ ஶ்ரேஷ்ட2முமான ஶ்ரீராமாயணத்திலும், மஹாபா4ரதத்திலும் கடற்கரையிலும் தேர்த்தட்டிலும் நாம் சொன்னதாக எழுதிவைத்த “ஸக்ருதே3வ” (सकृदेव) “ஸர்வத4ர்மாந்” (सर्वधर्मान्) இத்யாதி3 வார்த்தைகள்.

மூ: இதி மயைவ ஹி உக்தம். அதஸ்த்வம் தவ தத்த்வதோ மத்3ஜ்ஞாந த3ர்ஶநப்ராப்திஷு  (इति मयैव हि उक्तं अतस्त्वं तव तत्त्वतो मद्ज्ञानदर्शनप्राप्तिषु)

வ்யா: “இதி மயைவ ஹி உக்தம்” (इति मयैव हि उक्तं) இதுதான் ஶ்ருதிமுக2த்தாலேயாதல், வைதி3க முக2த்தாலேயாதலன்றிக்கே ஶரண்யனான என்னாலே சொல்லப்பட்டது.

இருபத்திமூன்றாவது சூர்ணை வ்யாக்2யானம்:

“அத:” (अत🙂 ஆகையாலே, “த்வம்” (त्वं) இப்படிப்பட்ட நம்முடைய மெய்ம்மைப் பெருவார்த்தையைக் [நாச். திரு. 11-10] கேட்டு நம்மை விஶ்வஸித்திருக்கிற மெய்யடியாரான நீர். “மத்” (मत् ) என் விஷயமாக, “தவ” (तव) உமக்கு, “தத்வத:” (तत्वत:) மெய்யாக உண்டான “ஜ்ஞாந த3ர்ஶநப்ராப்திஷு” (ज्ञानदर्शनप्राप्तिषु)  “ஜ்ஞாதும் த்3ரஷ்டும்ச தத்வேந ப்ரவேஷ்டும்ச” (110. ज्ञातुं द्रष्टुं तत्वेन प्रवेष्टुंच ) என்கிற ஜ்ஞாந த3ர்ஶந ப்ராப்திகளில்.

மூ: நிஸ்ஸம்ஶயஸ்ஸுக2மாஸ்வ (निस्संशयस्सुखमास्स्व)

அந்த்யகாலே ஸ்ம்ருதிர்யா து தவகைங்கர்யகாரிதா।

தாமேநாம் ப43வந்நத்3ய க்ரியமாணாம் குருஷ்வ மே॥

(अन्त्यकाले स्मृतिर्या तु तवकैङ्कैर्यकारिता। तामेनां भगवन्नद्य क्रियमाणं कुरुष्व मे)

இதி ஶ்ரீ ப43வத்3ராமாநுஜ விரசிதே க3த்3யத்ரயே ஶரணாக3திக3த்3யம் ஸம்பூர்ணம்.

(इति श्रीभगवद्रामानुज विरचिते गद्यत्रये शरणागतिगद्यं संपूर्णम्)

வ்யா: “நிஸ்ஸம்ஶயஸ்ஸுக2மாஸ்வ” (निस्संशयस्सुखमास्स्व) நிஸ்ஸம்ஶயராய் கொண்டு ஸுக2மேவர்த்தியும்.

பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ஶரணாக3தி 3த்3 வ்யாக்2யாநம் ஸம்பூர்ணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.