ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
भगवरामानुजाचार्यविरचितं
गद्य त्रयम्
श्रीवैकुण्ठगद्यम्
यामुनार्यसुधाम्भोधिमवगाह्य यथामति ।
आदाय भक्तियोगाख्यं रत्नं सन्दर्शयाम्यहम् ॥
மூ: யாமுநார்ய ஸுதா4ம்போ4தி4மவகா3ஹ்ய யதா2மதி ।
ஆதா3ய ப4க்தி யோகா3க்2யம் ரத்நம் ஸந்த3ர்ஶயாம்யஹம் ॥
பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
ஶ்ரீவைகுண்ட2 க3த்4ய வ்யாக்2யாநம்
ப்ரவேஶம்
பா4ஷ்யகாரர் தம் திருவுள்ளக்கருத்தில் அறுதியிட்டு அர்த்த2ம் பனைநிழல் போலே தம்மொருவரளவிலே பர்யவஸிக்கையன்றிக்கே கல்பக வ்ருக்ஷச்சா2யைப் போலே பரோபகாரார்த்த2மாக உபாயோபேயங்களை அநுஷ்டி2ப்பானென்று பரோபதே3ஶம் பண்ணுகிறார் ஶ்ரீவைகுண்ட2க3த்3யத்தில்; பெரிய க3த்3யத்தில், ஸாமாந்ய ப4க3வத்3விஷயமாக அவரைநோக்கி ஸ்வப்ரார்த்த2நையாக அருளிச்செய்தார். ஶ்ரீரங்க3க3த்3யத்தில் ஸௌலப்4யத்துக்கெல்லை நிலமான பெரிய பெருமாள் விஷயமாக அவரைநோக்கி ஸ்வப்ரார்த்த2நையாக அருளிச்செய்தார். இதில் பரத்வத்துக்கெல்லைநிலமான ஶ்ரீவைகுண்ட2நாத2ன் விஷயமாகப் பிறரைநோக்கிக் கர்த்தவ்யோபதே3ஶம் பண்ணுகிறார்.
ஶ்ரீபா4ஷ்யத்தில், லோகத்திலே து3ராசாரமுபாயம் என்பார், தே3வதாந்தரோபாஸநம் உபாயம் என்பார், தே3வதையை ஒழிய கேவலகர்மம் உபாயம் என்பார், கேவலம் ஜ்ஞாநம் உபாயம் என்பார், கர்மஜ்ஞாந ஸமுச்சயம் உபாயம் என்பாராய்க் கொண்டு வேத3வாக்யங்களை விகல்பிக்கிற பா3ஹ்ய குத்3ருஷ்டிகளை நிரஸிக்கைக்காக, “நீங்கள் சொல்லுகிற வாக்யங்களுக்குப் பொருள் நீங்கள் சொல்லுகிறபடியன்று; யுக்திகளிருந்தபடியாலும் ப்ரமாணங்களிருந்தபடியாலும் கர்மஜ்ஞாந ஸஹக்ருதையான ப4க்தியே உபாயமென்று சொல்லுகிற இதுவே பொருள்” என்று ஸாதி4க்க வேண்டுகையாலே ப்ரபத்தியும் உள்ளே ஸூசிதமாய்க் கிடக்கச்செய்தேயும், ப4க்தியிலே நோக்காக உபபாதி3த்தருளினார்.
இவ்வளவாலே து3ஶ்ஶகையான ப4க்தியே உபாயமென்று ப்4ரமித்து மந்த3மதிகள் ப4யப்படாமைக்கு, அந்த ப4க்தி தன்னுடைய ஸித்3தி4க்கும் புருஷார்த்த2 ஸித்3தி4க்கும் சரமமான உபாயம் ப்ரபத்தியென்னுமிடத்தை உபபாதி3த்தருளினார் பெரியக3த்3யத்திலே. ப4க்தி ஸாத்3கு3ண்யத்துக்கும் ப்ரபத்தியே வேணுமென்று ப்ரபத்தி வைப4வம் சொன்ன இவ்வளவாலே “ப்ரபத்தியும் அங்க3ம், ஸ்வதந்த்ரோபாயம் ப4க்தியேயோ?” என்று ஶங்கை பிறவாமைக்காக ஸுஶகமாய் ஸ்வரூபாநுரூபமாய் நிரபேக்ஷமாய் ஸ்வதந்த்ரமான உபாயம் ப்ரபத்தியென்னுமிடத்தை வெளியிட்டார் ஶ்ரீரங்க3க3த்3யத்தில். இதில் இப்படி உபாய நிஷ்கர்ஷம் பிறந்த பின்பு இவ்வுபாய ப்ராப்யமான தே3ஶ வைப4வத்தையும், அத்3தே3ஶாதி4பதியாய் அநுபா4வ்யமான அவ்வஸ்து வைப4வத்தையும், அவ்வஸ்து வைப4வ ஜநிதமான கைங்கர்யத்தையும் ஶ்ரோதாக்களுக்கு ருசிபிறக்கும்படியாக அருளிச்செய்து இவ்வர்த்த2த்தில் ருசி உடைய பா4க்3யவான்கள் இப்பேறு பெற்று வாழ்வதென்று உபாயாம்ஶத்தை ஸங்குசிதமாக அநுஸந்தி4த்து உபேயாம்ஶத்தைப் பரக்க அருளிச்செய்து தலைக்கட்டுகிறார்.
இப்ப்ரப3ந்த4ம் ஆறு சூர்ணையாய், அதில் முதல் சூர்ணையாலே ஶரண்யமான வஸ்துவினுடைய ஸ்வரூபரூபகு3ண விபூ4தி வைலக்ஷண்யத்தையுமநுப4வித்து இதுக்கெதிர்த்தட்டான தன்னுடைய வைலக்ஷண்யத்தையும் அநுஸந்தி4த்து இப்படியிருந்துள்ள எனக்கு அவ்வஸ்துவைப் பெறுகைக்கு உபாயம் ப்ரபத்தியேயொழிய வேறில்லை என்றறுதியிட்டு, அவனுடைய ஸௌஶீல்யாதி3களே பற்றாசாக அவன் திருவடிகளிலே ஶரணம் புகுவானென்கிறார். இரண்டாம் சூர்ணையில் ப2லத்துக்கு ஸக்ருதே3வ அமைந்திருக்கச்செய்தேயும் வேறொன்றில் மநஸ்ஸு கவலை போகாமைக்கும் தனக்கு காலக்ஷேபார்த்த2மாகைக்குமாக நித்யாநுஸந்தா4நம் பண்ணுவானென்கிறது.
மூன்றாம் சூர்ணையில் இவ்வுபாய நிஷ்ட2னானவனுக்கு ப2லப்ராப்திக்கு உறுப்பான அர்ச்சிராதி3வழியே போய் ப்ரக்ருதிமண்ட3லத்தைக் கடக்கும்படியையும், கடந்தால் சென்று ப்ரவேஶிக்கிற நித்ய விபூ4தி வைப4வத்தையும், தே3ஶப்பண்பையும், அங்குள்ள அலங்காரங்களையும் அப்படி அலங்க்ருதமான தே3ஶத்தில், உலகுடைய நாய்ச்சிமாரும் தானுமாய் எழுந்தருளியிருக்கிற இருப்பையும், அவர்களாலே பரிசர்யமாணனாயிருக்கிற ஶ்ரீவைகுண்ட2நாத2னையும், அந்நாய்ச்சிமாருக்கு அநுபா4வ்யமான அவயவ ஸௌந்த3ர்யத்தையும், தி3வ்யாப4ரணவர்க3த்தையும் இவற்றைக் காத்தூட்டும்படியான தி3வ்யாயுத4 வர்க3த்தையும் இஸ்ஸமுதா3யத்தைக் கண்ட நுப4வித்து கைங்கர்யம் பண்ணுகிற ஸூரிபரிஷத்தையும், அவர்களாலே ஸேவ்யமானனாய் எழுந்தருளியிருக்கிற இருப்பையும் அநுஸந்தி4த்து ‘இப்பேற்றை நாம் எப்போது பெறுவது’ என்று அநுஸந்தி4த்து மநோரதா2நுகு3ணமாகச் சென்று கிட்டி நித்யகைங்கர்யம் கொண்டருளவேணுமென்று ப்ரார்தித்து ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுவானென்கிறது.
நாலாம் சூர்ணையில் இவன் அநபேக்ஷாநுகூலமாக அவனாலே ஸ்வீக்ருதனாய்க்கொண்டு அநுகூல வ்ருத்தியைப் பண்ணியிருப்பானென்கிறது. ஐந்தாம் சூர்ணையில் நெடுங்காலமிழந்த இழவு தீர அநந்யபரனாய் இமையாத கண்ணனாய்க் கொண்டு ஸதா3த3ர்ஶநம் பண்ணிக்கொண்டிருக்குமிருப்பைச் சொல்லுகிறது. ஆறாம் சூர்ணையில் அவன் இவனை வினவிக் குளிரக் கடாக்ஷித்துத் திருவடிகளைத் தலையிலே வைக்க, அடிசூடுமரசராய் ஸ்வராஜ்யது4ரந்த4ரனாயிருக்குமிருப்பைச் சொல்லுகிறது.
முதல் சூர்ணை அவதாரிகை:
அதில் முதல் சூர்ணையாலே “ஸ்வாதீ4ந” (स्वाधीन) என்று தொடங்கி “நாராயணம்” (नारायणं) என்று அறுதியாக சேதநாऽசேதந விலக்ஷண ஸ்வரூபத்தையும் ஸ்வரூபாநுகு3ணமான கு3ணங்களையும் சொல்லுகிறது.
மூ: ஸ்வாதீ4நத்ரிவித4 சேதநாऽசேதந ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திபே4த3ம்
(स्वाधीनत्रिविधचेतनाचेतनस्वरूपस्थितिप्रवृत्तिभेदं,
क्लेशकर्माद्यशेषदोषासंस्पृष्टं)
வ்யா: “ஸ்வாதீ4ந” (स्वाधीन) என்கிற பத3த்தால் பராதீ4நவ்யாபாரமான சேதநாசேதநங்கள் போலன்றியிலே ஸ்வாதீ4ந ஸ்வவ்யாபாரனாயிருக்கும் என்கிறது; இத்தால் 133. “ஜக3த்3வஶே வர்த்ததேத3ம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்” (जगद्वशे वर्ततेदं कृष्णस्य सचराचरम् ) என்கிறபடியே தன்னையொழியந்தவையை அடையத்தான் இட்டவழக்காயிருக்கும் என்கிறது. அவையெவை என்னில், “த்ரிவித4 சேதநாசேதந” (त्रिविधचेतनाचेतन) பத்3த4 முக்த நித்ய ரூபமான ஆத்மவர்க்க3மென்ன, ப்ராக்ருதாப்ராக்ருத காலரூபமான அசித்தென்ன, இவை.
இவைதானேயோ பரதந்த்ரமாயிருப்பனவென்னில், “ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்திபே4த3ம்” (स्वरूपस्थितिप्रवृत्तिभेदं) இவற்றினுடைய த4ர்மியான ஸ்வரூபமென்ன, த4ர்மமான ஸ்வபா4வமென்ன, இவற்றினுடைய வ்யாபாரமென்ன, இவை. “ஸ்தி2தி:- வ்யவஸ்தி2த ஸ்வபா4வம், 134. “நித்யோ நித்யாநாம்” (नित्यो नित्यानां) என்றும், 135. “நித்யா ஸததவிக்ரியா” (नित्या सततविक्रिया) என்றும் சேதநாசேதந ஸ்வரூபங்கள் நித்யமாகையாலே “ஸ்வரூபஸ்தி2தி” (स्वरूपस्थिति) என்று ஸத்தாநுவ்ருத்தி சொல்லவேண்டா. சேதனனுக்கு ஸ்வரூப பே4த3மாவது- மாயா3களைப் போலே ஏகாத்மாவாயிருக்கை அன்றியிலே 134. “ஏகோ ப3ஹூ நாம்” (एको बहूनां) என்றும், 136. “நாநாத்மாநோ வ்யவஸ்தா2த:” (नानात्मनो व्यवस्थात🙂 என்றும், ஸுக2து3:கா2தி3 பே4த3த்தாலே ஆத்மாக்கள் அனேகராயிருக்கை. ஸ்வபா4வ பே4த3மாவது – ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போ4க்த்ருத்வ நித்யத்வ ஸ்வயம்ப்ரகாஶத்வ ஶேஷத்3கள்.
ப்ரவ்ருத்தி பே4த3மாவது – ஜ்ஞாந சிகீர்ஷாப்ரயத்நாதி3கள். அசேதநத்துக்கு ஸ்வரூபபே4த3மாவது – ப்ரக்ருதி மஹத3ஹங்கார தந்மாத்ராகாஶாதி3 பே4த3த்தாலும் கலாகாஷ்டா2 முஹூர்தாதி3 பே4த3த்தாலும் பி4ன்னமான கார்யகாரணாவஸ்த2வஸ்துக்கள். ஸ்வபா4வமாவது – ஜட3த்வ பரிணாமித்வ நித்யத்வ பரார்த2த்வ ஸத்வாதி3 கு3ணாஶ்ரயத்வாதி3கள். ப்ரவ்ருத்தி பே4த3மாவது – கார்யாரம்ப4கத்வ உபாதா3நத்வ திரோதா4யகத்வ அப்ரகாஶத்வாதி3கள்.
‘க்3ருஹோபகரண ப்4ருத்யாதி3களினுடைய ஸ்வரூப ஸம்பாத3நாதி3 வ்யாபாராதி3கள், ராஜாதி3களுக்கும் ஸ்வாதீ4நமாய் அன்றோ இருப்பது.
மூ: க்லேஶகர்மாத்3யஶேஷ தோ3ஷாஸம்ஸ்பஸ்ப்ருஷ்டம் ஸ்வாபா4விகாநவதி4காதிஶய ஜ்ஞாநப3லைஶ்வர்ய வீர்ய ஶக்திதேஜ: (क्लेशकर्माद्यशेषदोषासंस्पृष्टं स्वाभाविकानवधिकातिशय ज्ञानबलैश्वर्यवीर्यशक्तितेजः)
வ்யா: அவ்வோ மாத்ரமோவென்னில், “க்லேஶகர்மாத்3யஶேஷ தோ3ஷாஸம்ஸ்பஸ்ப்ருஷ்டம்” (क्लेशकर्माद्यशेषदोषासंस्पृष्टं) அவர்களுக்கு க்லேஶகர்மாதி3 தோ3ஷமுண்டாயிருக்கும். இவனுக்கு 137. “க்லேஶகர்ம விபாகாஶயைரபராம்ருஷ்ட: புருஷவிஶேஷ ஈஶ்வர:” (क्लेशकर्मविपाकाशयैरपरामृष्ट: पुरुष विशेष ईश्वर🙂 என்கிறபடியே ஈத்3ருஶ ஸமஸ்த தோ3ஷங்களுமின்றியிலே இருக்கும், க்லேஶமாவது –114. “ராக3த்3வேஷாபி4நிவேஶா: க்லேஶா:” (रागद्वेषाभिनिवेशा: क्लेशा🙂 கர்மமாவது – புண்ய பாப ரூபகர்மம். விபாகமாவது – 138. “ஜாத்யாயுர் போ4கா3 விபாகா:” (जात्यायुर्भोगा विपाका🙂 ஆஶயமாவது – 139. “ஆஶயோ நாம வாஸநா” (आशयोनाम वासना) இவற்றுக்கு வஶ்யன் அன்றிக்கேயிருக்கை. இது ஹேயங்களுக்கெல்லாம் உபலக்ஷணமாய், 140. “ஸமஸ்த ஹேய ரஹிதம்” (समस्त हेय रहितं) 11. “விநாஹேயைர்கு3ணாதி3பி4:” (विना हेयैर्गुणादिभि🙂 என்றும் சொல்லுகிறபடியே ஸமஸ்த ஹேய ப்ரத்யநீகனென்னுமிடம் சொல்லுகிறது.
இப்படி ஹேயப்ரத்யநீகனாய் இருக்குமளவேயோவென்னில், “ஸ்வாபா4விகேத்யாதி3” (स्वाभाविकेत्यादि) ஸமஸ்த கல்யாண கு3ணங்களுக்கும் ஒருஸாக3ரம் என்கிறது. “ஸ்வாபா4விக” (स्वाभाविक) 141. “ஸ்வாபா4விகீ ஜ்ஞாந ப3ல க்ரியா ச” (स्वाभाविकी ज्ञान बल क्रिया च) என்றும், 142. “த இமே ஸத்யா: காமா:” (त इमे सत्या: कामा🙂 என்றும் சொல்லுகிறபடியே ஒரு ஸாத4நாநுஷ்டா2னத்தாலேயாதல், ஒரு தே3வதா ப்ரஸாத3த்தாலேயாதல், ஒருநாள் வரையில் வருதல் போதல் செய்கையன்றிக்கே கு3ணங்கள் த4ர்மிக்கு ஸத்தாப்ரயுக்தம் என்கை. இப்படி ஸ்வபா4வ ஸித்3த4மான கு3ணங்கள் பரிச்சி2ன்னமாயிருக்குமோவென்னில்; “அநவதி4காதிஶய” (अनवधिकातिशय), 143. “யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” (यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह) என்றும். “உயர்வர வுயர் நலமுடையவன்” (திருவாய் 1-1-1)என்றும் சொல்லுகிறபடியே கு3ணங்களினுடைய மிகுதிக்கு எல்லையற்றிருக்கும்.
உள்ளகு3ணங்களுக்கு எல்லையற்றிருந்தாலும் இல்லாத கு3ணங்களுமுண்டாயிருக்குமோ?; உள்ளகு3ணங்கள் தான் எவை என்றகிற அபேக்ஷையிலே கிளம்புகிறது “ஜ்ஞாந ப3லைஶ்வர்ய” (ज्ञानबलैश्वर्य) என்று தொடங்கி. “ஜ்ஞாந” (ज्ञान) 41. “யோவேத்தி யுக3பத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா3ஸ்வத:” (यो वेत्ति युगपत् सर्वं प्रत्यक्षेण सदास्वत🙂 என்கிறபடியே ஸர்வகாலமுமுண்டான ஸர்வ பதா3ர்த்த2 ஸாக்ஷாத்காரம். “ப3ல” (बल) 144. “ஸ தா3தா4ர ப்ருதி2வீம் த்3யாமுதே மாம்” (स दाधार पृथिवीं द्यामुते मां) என்றும், 145. “விஷ்டப்4யாஹமித3ம் க்ருத்ஸ்நமேகாம்ஶேந ஸ்தி2தோ ஜக3த்” (विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत्) என்றும் சொல்லுகிறபடியே உப4யவிபூ4தியையும் அக்லேஶேந ஸஹிக்க வல்லமிடுக்கு.
“ஐஶ்வர்ய” (ऐश्वर्य) 146. “க்ஷராத்மாநாவீஶதே தே3வ ஏக:” (क्षरात्मानावीशते देव एक🙂 என்கிறபடியே இப்படி த4ரித்த ஜக3த்தைத் தன் குடைக்கீழே அமுக்கியாள வல்லனான நியந்த்ருத்வம். “வீர்ய” (वीर्य) 147. “ந ஶ்ரமோ ந ச கே2த3ஸ்தே ஜக3த்3தா4ரணஶாஸநே” (न श्रमो न च खेदस्ते जगतद्धारणशासने) என்றும் சொல்லுகிறபடியே ஜக3த்3தா4ரண நியமங்களாலே ஶாரீரமான [ஸமான ஸர்வ] க்லேஶங்களுமின்றியிலே இருக்கை. “ஶக்தி” (शक्ति) 141. “பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே” (परास्य शक्तिर्विविधैव श्रूयते) என்றும், 148. “ந ஹி பாலந ஸாமர்த்2யம் ருதே ஸர்வேஶ்வரம் ஹரிம்” (न हि पालन सामर्थ्यं ऋते सर्वेश्वरं हरिं) என்றும் 149. “சேஷ்டா தஸ்யாऽப்ரமேயஸ்ய வ்யாபிநோவ்ऽயாஹதாத்மிகா” (चेष्टा तस्याऽप्रमेयस्य व्यापिनोऽव्याहतात्मिका) என்றும் சொல்லுகிறபடியே ஏறிட்டுக் கொண்டதொருகார்யம் முட்டுப் படாதபடி செய்து தலைக்கட்டவற்றான ஸாமர்த்2யம். “தேஜ:” (तेज🙂 150. “ரகாராதீ3நி நாமாநி ராமத்ரஸ்தஸ்ய ராவண । ரத்நாநி ச ரதா2ஶ்சைவ த்ராஸம் ஸஞ்ஜநயந்தி மே” (रकारादीनि।नामानि रामत्रस्तस्य रावण। रत्नानि च रथाश्चैव त्रासं सञ्जनयन्ति मे॥) என்கிறபடியே வ்யாபாராந்தர நிரபேக்ஷமாக இவன் பேர் சொன்னபோதே எதிரிகள் குலையும்படியான மதி3ப்பு. இத்தால், ப3ஹுப்ரயத்ந ஸாத்4யமானதை அல்பயத்நத்தாலே தலைக் கட்டவல்லனென்றபடி. அன்றியிலே 151. “தஸ்யநாம மஹத்யஶ:” (तस्यनाम महत्यश🙂 என்கிறபடியே வீர்ய ஶக்த்யாதி3களால் பிறக்கும் புகழ்களாகவுமாம். ஆனாலிப்படி ஷாட்3கு3ண்யமேயோ உள்ளதென்னில், “ப்ரப்4ருதி” (प्रभृति) 152. “தவாநந்த கு3ணஸ்யாபி ஷடே3வ ப்ரத2மே கு3ணா:” (तवानन्तगुणस्यापि षडेव प्रथमे गुणा🙂 என்கிறபடியே இவை தொடக்கமான கு3ணங்கள் பலவுமுள என்கிறது.
மூ: அஸம்க்2யேய கல்யாணகு3ணக3ணௌக4 மஹார்ணவம். (असङ्ख्येयकल्याणगुणगणौघमहार्णवं)
வ்யா: இப்படி பலவுமுண்டானாலும் இத்தனை என்று எண்ணப்பட்டிருக்குமோவென்னில்; “அஸம்க்யேய” (असङ्ख्येय) 153. “ஸம்க்2யாதும் நைவ ஶக்யந்தே கு3ணா:” (सङ्ख्यातुं नैव शक्यन्ते गुणा🙂 என்றும், 64. “ஸ தே கு3ணா நாமயுதைகதே3ஶம் வதே3ன்ன வா” (स ते गुणा नामयुतैकदेशं वदेन्न वा) என்றும் சொல்லுகிறபடியே எண்ணிறந்திருக்கும்; இப்படி எண்ணிறந்திருக்கைக்கடி தோ3ஷகு3ணங்கள் கூடியோவென்னில்; “கல்யாண” (कल्याण) 145. “ப3ஹவோ ந்ருப கல்யாணகு3ணா:” (बहवो नृप कल्याणगुणा🙂 என்றும், 153. “ஸம்க்2யாதும் நைவ ஶக்யந்தே கு3ணா தோ3ஷாஶ்ச ஶார்ங்கி3ண:। ஆநந்த்யாத் ப்ரத2மோ ராஶி: அபா4வா தே3வ பஶ்சிம:” (सङ्ख्यातुं नैव शक्यन्ते गुणा दोषाश्च शार्ङ्गिण:। आनन्त्यात् प्रथमो राशि: अभावा देव पश्चिम:॥) என்றும், 140. “ஸமஸ்த ஹேயரஹிதம் விஷ்ண்வாக்2யம்” (समस्त हेयरहितं विष्ण्वाक्यं) என்றும், 38. “ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகோऽஸௌ” (समस्त कल्याण गुणात्मकोऽसौ) என்றும் சொல்லுகிறபடியே ஹேயக3ந்த4ரஹிதமான கு3ணங்களுக்கு முடிவில்லை என்கிறது.
“கல்யாண” (कल्याण) ஆஶ்ரயமானவன் தன்னோடு அநுபோ4க்தாக்களோடு வாசியற மங்க3ளாவஹமாய் ஸுகா2வஹமுமாயிருக்கும். 155. “கல்யாணம் மங்க3ளம் ஶுப4ம்” (कल्याणं मङ्गलं शुभं) என்னக்கடவதிறே. லோகத்திலும், ‘இங்குத் திரளென்?’ து3:க2மோ? கல்யாணமோ என்று து3:க2 ப்ரதியோகி3யாக ஸுக2த்தைச் சொல்லக்கடவதிறே. “கு3ண” (गुण) கேட்டபோதே செவி புதைக்க வேண்டும்படியாயிருக்கையன்றிக்கே. “கு3ண்யந்த இதிகு3ணா:” (गुण्यान्त इति गुणा🙂 என்றும், “ஈர்க்கின்ற கு3ணங்களையுடையாய்” (திருவாய் 8-1-6) என்கிறபடியே “அஹோ அஹோ” என்று கிளவி நூற்கொண்டு பலகாலும் ஆவர்த்திக்கும்படியாயிருக்கை.
இப்படி ஓரோ கு3ணங்களேயோ ஸம்க்2யையும் அவதி4யுமின்றிக்கே இருப்பதென்னில். “கு3ணக3ண” (गुणगण) 156. “தேஜஸாம் ராஶிம்” (तेजसां राशिं) என்றும், “ஒண் சுடர்க்கற்றை” (திருவாய் 7-7-6) என்றும் சொல்லுகிறபடியே ஸ்வாமித்வாநுப3ந்தி4யான ஶௌர்யமென்ன, வீர்யமென்ன, பராக்ரமமென்ன, சாதுர்யமென்ன, ஸ்தை2ர்யமென்ன, தை4ர்யமென்ன, ஏவமாதி3கள், ஸௌலப்4யாநுப3ந்தி4யான ப4வ்யதையென்ன, க்ருபையென்ன, அபராத4 ஸஹத்வமென்ன, க்லேஶாஸஹிஷ்ணுத்வமென்ன, தோ3ஷத்தில் கு3ணபு3த்3தி4 என்ன, ப்ரத்யுபகாரநைரபேக்ஷ்யமென்ன ஏவமாதி3கள்; ஸௌஶீல்யாநு ப3ந்த4னமான ஸ்வ வைப4வாஜ்ஞாநமென்ன, பரஹேயத்வா ஜ்ஞாநமென்ன, அக்ருத்ரிமத்வமென்ன ஏவமாதி3கள்; வாத்ஸல்யாநுப3ந்தி4யான பக்ஷபாதமென்ன, தோ3ஷத்தில் கு3ணபு3த்3தி4யென்ன, உபகாரநைரபேக்ஷ்யமென்ன ஏவமாதி3கள்; ஸந்தோஷாநுப3ந்தி4யான ப்ரிய மோத3 ப்ரமோதா3நந்த3ங்களென்ன ஏவமாதி3யாய், ஓரோகு3ணங்களைப் பற்றித் திறம் திறமாக வரும் கு3ணங்களுக்கு எல்லையில்லை என்கிறது.
இப்படிக்கொத்த கு3ணங்கள்தான் தனித்தனியே அலகலகாயோ இருப்பதென்னில், “ஓக4” (ओघ) ஊர் வாரியும் காட்டுவாரியும் மலைவாரியும் ஏரிகளுடைந்தவாரியும் ஓரிடத்திலே கூடினால் கங்கும் கரையுமழிந்து கரைகாணவொண்ணாதே திரைமேல் திரையாக ஒருவெள்ளமாக வருமாபோலே ஸமஸ்தகு3ணங்களும் ஒருவழிப்பட்டிருக்கும் என்கிறது. எல்லாம் கூடினாலும் ஆற்று வெள்ளம்போலே நீர்களைப் பிரித்தறிய வொண்ணாதபடியாலும், கரையழியப் பெருகினாலும் ஓரிடத்தில் வந்தநீர் அவ்விடத்தில் நிலைநில்லாதே கழியக்கடவது மாய் மலையிலடியற்றவாரே வற்றக்கடவதுமாயிறே யிருப்பது. அப்படி இவ்வாஶ்ரயத்தில் நிலைநில்லாதபடி அஸ்தி2ர கு3ணங்களுமாய் அநித்ய கு3ணங்களுமாயோ இருப்பதென்னில், அர்ணவமென்கிறது;- 158. “ஸமுத்3ர இவஸிந்து4பி4:” (समुद्र इवसिन्धुभि🙂 என்கிறபடியே எல்லாவாரிகளும் கூடிக்கடலிலே பர்யவஸிக்கவும் அவ்விடத்தைவிட்டுப் போகாதொழியவும் வற்றாதொழியவும் கடவதாயிருக்குமாபோலே இங்கு எல்லாகு3ணங்களும் சேர இருக்கக்கடவதுமாய் நித்யமுமாயிருக்கும். “அர்ணவம்” (अर्णवं) அர்ணவமாகிறது- ஜலமாகையாலே லவணேக்ஷு ஸுரா ஸர்ப்பி த3தி4 க்ஷீரங்களாகிற இவ்வருகில் பரிச்சி2ன்னங்களான ஷட்ஸமுத்3ரங்கள் போலன்றியிலே இவை இத்தனைக்கும் அவ்வருகாய் அதி4க பரிணாம ஶுத்3த4 ஜலம்போலே பெருத்திருக்குமென்கிறது.
இப்படி என்றாலும், லோகாலோக ஶ்வேத த்3வீபாதி3களாலே பரிச்சி2ன்னமாயன்றோ இருப்பது. அப்படியேயோ எங்குமென்ன; “மஹார்ணவம்” (महार्णवं) 158. “கு3ணாநாமாகரோ மஹாந்” (गुणानामकरो महान्) என்றும் 159. “ஸமஸ்த கல்யாணகு3ணாம்ருதோத3தி4:” (समस्त कल्याणगुणामृतोदधि🙂 என்கிறபடியே அம்ருதமயமாயிருப்பதொரு ‘பெரும்புறக்கடல்’ (பெரிய திரு 7-10-1) என்கிறது. இப்படிக்கொத்த ஸ்வரூபரூபகு3ணங்களை யுடைத்தான வஸ்துவேதென்னில்,
மூ: பரமபுருஷம் (परमपुरुषं)
வ்யா: “பரமபுருஷமித்யாதி3” ஏவம் பூ4தனான நாராயணனென்கிறது. கீத்3ருக்3பூ4த னென்னில், “பரமபுருஷம்” (परमपुरुषं) புருஷஶப்3த3ம் ஜீவனுக்கும் ஸாதா4ரணமாகையாலே பரமபுருஷமென்று வ்யாவர்த்திக்கிறது. “பரோமா அஸ்மாதி3தி பரம:” (परमो अस्मादिति परम🙂 என்று இவனுக்கு மேலாயிருப்பாரில்லை என்கிறது. இப்படி ஸர்வாதிஶாயியான வஸ்துவுக்குப் பேரென்? என்னில்,
மூ: ப4க3வந்தம் நாராயணம் (भगवन्तं, नारायणं)
வ்யா: “ப4க3வந்தம்” (भगवन्तं) “ஸ்வாதீ4ந த்ரிவித4” (स्वाधीनत्रिविध) என்றுதொடங்கி ஸ்ருஷ்டி ஸ்தி2த்யாதி3 கர்த்ருத்வம் சொல்லுகையாலும், “ஜ்ஞாநப3லைஶ்வர்ய” (ज्ञानबलैश्वर्य) என்று ஷாட்3கு3ண்யயோக3ம் சொல்லுகையாலும் 11. “ஸம்ப4ர்தேதி ததா2 ப4ர்தா ப4காரோர்ऽத2 த்3வயாந்வித:। நேதா க3மயிதா ஸ்ரஷ்டா க3காரார்த2ஸ்ததா2 முநே” (संभर्तेति तथा भर्ता भकारोऽर्थद्वयान्वित:। नेता गमयिता स्रष्टा गकारार्थस्तथा मुने॥) இத்யாதி3 ஶ்லோகங்களாலும், 11. “ஜ்ஞாநஶக்தி ப3லைஶ்வர்ய வீர்யதேஜாம்ஸ்யஶேஷத: । ப4க3வச்ச2ப்த3 வாச்யாநி விநா ஹேயைர்கு3ணாதி3பி4:” (ज्ञानबलैश्वर्य वीर्यतेजांश्य शेषत:। भगवच्छब्द वाच्यानि विना हेयैर्गुणादिभि:॥ ) என்கிற ஶ்லோகத்தாலும் ப்ரதிபாதி3தமான நிர்வசனத்தால் ப2லிதமான திருநாமம் சொல்லுகிறது. இத்தால் பூர்ணஷாட்3கு3ண்யனென்றும், ஜக3த்காரண பூ4தனென்றும் சொல்லிற்றாயிற்று.
ப்3ரஹ்மாதி3களுக்கும் தத்3கு3ணலேஶத்தால் ஔபசாரிகமாக ப4க3வச்ச2ப்த3 வாச்யத்வமுண்டாயிராதோ என்னில், அதுக்காக, “நாராயணம்” (नारायणं) அநந்யபரமான நாராயணாநுவாக ஸித்3த4னாய், 160. “நாராயணாத் ப்3ரஹ்மா ஜாயதே, நாராயணாத் ருத்3ரோ ஜாயதே” (नारायणात् ब्रह्मा जायते, नारायणात् रुद्रो जायते) என்கிறபடியே ப்3ரஹ்ம ருத்3ராதி3களுக்குங்கூடக் காரணனுமாய் ப்ராப்யநுமானவனென்கிறது. “நாராயணம்” (नारायणं) ப4க3வச் ச2ப்த3த்தாலும் ஷாட்3கு3ண்யமாத்ரமேயிறே சொல்லிற்று. “ப்ரப்4ருத்யஸம்க்2யேய கல்யாண கு3ண க3ணௌக மஹார்ணவம்” (प्रभृत्य संयकख्येय कल्याण गुणगणौघमहार्णवं) என்று ஸமஸ்தகு3ணாஶ்ரயத்வம் சொல்லுகையாலே அத்தால் பலிதமான திருநாமம் சொல்லுகிறது.
“நாராயணம் பரமபுருஷம்” (नातायणं परमपुरुषं) என்கையாலே ஶ்ரீபுருஷஸூக்த ப்ரதிபாத்3யத்வம் சொல்லுகிறது. “ப4க3வந்தம்” (भगवन्तं) என்கையாலே 161. “ப4க3வான் பவித்ரம் வாஸுதே3வ:” (भगवान् पवित्रं वासुदेव🙂 162. “பவித்ரம் வாஸுதே3வோ ப4க3வான் ( पवित्रं वासुदेवो भगवान्), 163. ஸங்கர்ஷணோ ப4க3வான், (सङ्कर्षणो भगवान् ) 164. ப்ரத்3யும்நோ ப4க3வான்” (प्रध्युम्नो भगवान्) இத்யாதி3 ரஹஸ்யாம்நாய ப்ரதிபாத்3யத்வம் சொல்லுகிறது. “நாராயணம்” (नारायणम्) என்கையாலே நாராயணாநுவாக ப்ரதிபாத்3யத்வம் சொல்லுகிறது. ஆக இத்தால், 165. “ஆதௌ3 மத்4யே ததா2ऽந்தே ச விஷ்ணுஸ் ஸர்வத்ர கீ3யதே” (आदौ मध्ये तथाऽन्ते च विष्णुस्सर्वत्र गीयते) 166. “வேதை3ஶ்ச ஸர்வைரஹமேவ வேத்3ய:” (वेदैश्च सर्वैरहमेव वेद्य🙂 என்றும் சொல்லுகிறபடியே க்ருத்ஸ்ந வேத3 ப்ரதிபாத்3யன் நாராயணன் என்னும் அர்த்த2த்தைச் சொல்லுகிறது.
இதுக்கு முன்பு ப்ராப்ய விஷய வைலக்ஷண்யம் சொல்லிற்று. இனி இவ்விஷயத்தில் பண்ணும் கைங்கர்ய ப்ரார்த்த2னையைச் சொல்லுகிறது “தத்ப்ராப்தயே ” (तत्प्राप्तये) என்றறுதியாக.
மூ: ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்த்வேந கு3ருத்வேந ச பரிக்3ருஹ்ய (स्वामित्वेन सुहृत्त्वेन गुरुत्वेन च परिगृह्य)
வ்யா: “ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்த்வேந கு3ருத்வேந ச பரிக்3ருஹ்ய” (स्वामित्वेन सुहृत्त्वेन गुरुत्वेन च परिगृह्य)
நாராயண ஶப்3த3த்தால் ப்ரதிபாதி3க்கிற அர்த்த2த்தை அநுஸந்தி4க்கிறபடி. ஸ்வாமித்வ ஸௌஶீல்ய ஸௌலப்4ய வாத்ஸல்யாதி3களிலே நாராயண ஶப்3தா3ர்த்தம். ஸ்வாமித்வேந என்கையாலே ஸ்வாமித்வம் சொல்லுகிறது. கு3ருத்வேந என்கையாலே- “பீதகவாடைப் பிரானார் பிரமகு3ருவாகி” என்கிற ஸௌலப்4யம் சொல்லுகிறது. ஸுஹ்ருத்த்வேந என்கையாலே – ஸௌஶீல்யம் சொல்லுகிறது. சகாரத்தாலே வாத்ஸல்யம் சொல்லுகிறது. அன்றியே சகாரத்தாலே ஸமுச்சயமாய், வாத்ஸல்யம் உபலக்ஷிதமாகவுமாம்.
அன்றியிலே ஸ்வாமித்வேந என்று “பரமபுருஷம்” என்று பரமபுருஷ ஶப்3த3த்தாலே ஸூசிதமான புருஷஸூக்தத்தில் ப்ரதிபாதி3தமான ஸ்வாமித்வத்தைச் சொல்லுகிறது. குருத்வேந என்று “ப4க3வந்தம்” என்று ப4க3வச்ச2ப்த3 ஸூசிதமான ரஹஸ்யாம்நாயத்தில் 163. “ஸங்கர்ஷணோப4க3வான்” () என்று ஸங்கர்ஷண ரூபேண ஜ்ஞாநப்ரதா3நம் பண்ணின கு3ருத்த்வத்தைச் சொல்லுகிறது. ஸுஹ்ருத்த்வேந என்று – “நாராயணம்” என்று நாராயண ஶப்3த3த்தாலே ஸூசிதமான நாராயணாநுவாகத்தில், 167. “அந்தர்ப3ஹிஶ்ச தத்ஸர்வம் வ்யாப்யநாராயணஸ்தி2த:” (अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायण: स्थित🙂 என்றும் 168. “தஸ்யாஶ்ஶிகா2யா மத்4யே பரமாத்மா வ்யவஸ்தி2த:” (तस्या: शिखाया मध्ये परमात्मा व्तवस्थित🙂 என்றும், இவற்றை விடமாட்டாதே உள்ளேபுகுந்து கலந்திருக்குமென்று ப்ரதிபாதி3தமான ஸௌஹார்த3ம் சொல்லுகிறது. ஸ்வாமித்வேந என்கையாலே ஶரணாக3தி பண்ணுகைக்குப் பற்றாசான ஸ்வ ஸ்வாமி ஸம்ப3ந்த4ம் சொல்லுகிறது. கு3ருத்வேந என்கையாலே ஶிஷ்யாசார்ய ஸம்ப3ந்த4ம் சொல்லுகிறது. ஸுஹ்ருத்த்வேந என்கையாலே 99. “ஶரணம் ஸுஹ்ருத் க3திர்நாராயண:” (शरणं सुहृत् गतिर्नातायण🙂 என்று ஸக்2ய நிப3ந்த4நமான ஸம்ப3ந்த4ம் சொல்லுகிறது. ஸௌஶீல்யம் சொல்லுகிறது என்றும் சொல்லுவர்கள். இத்தால் ஸர்வவித ஸம்ப3ந்த4மும் அவனென்றபடி. “பரிக்3ருஹ்ய” () என்று ஒருத்தலை மாத்தமாகத்தான் ப்ரதிபத்தி பண்ணுகையன்றிக்கே ஸர்வாவிகீ3தமாக லோகபரிக்3ருஹீதமானவர்த்த2ம் என்கை.
“பரிக்3ருஹ்ய” (परिगृह्य) பரிதோ க்3ருஹீத்வா. ஶாஸ்த்ராவலோகனத்தாலும் ஆசார்யோபதே3ஶத்தாலும் ப4க3வத3நுஷ்டா2னத்தாலுமாகிற ஸர்வப்ரகாரத்தாலும் நெஞ்சிலே ஸ்வீகரித்து. இப்படி அத்தலையில் ஸ்வாமித்வாநுஸந்தா4நம் பண்ணினவநந்தரம் 169. “ஆத்மதா3ஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம்” (आत्मदास्यं हरे: स्वाम्यं) என்று ஸ்வாமித்வ ப்ரதிஸம்ப3ந்தி4யான தா3ஸ்யாநுகு3ண வ்ருத்திவிஶேஷத்தை ஆசைப்படும்படிச் சொல்லுகிறது, “ஐகாந்திக தத்பாதா3ம்பு3ஜத்3வய பரிசர்யைக மநோரத2:” (ऐकान्तिक तत्पादाम्बुजद्वय परिचर्यैक मनोरथ🙂 என்கிற பத3த்தாலே.
மூ: ஐகாந்திகாத்யந்திக (ऐकान्तिकात्यन्तिक)
வ்யா: “ஐகாந்திக” (ऐकान्तिक) ஏகாந்த ஸம்ப3ந்தி4யாயிருக்கை. அதாவது – அந்தரங்க3மென்றபடி. அதாவது – ‘தத்’ பத3த்தோடே அந்வயிக்கவுமாம். தத்பாதா3ம்பு3ஜ த்3வயத்தோடே அந்வயிக்கவுமாம். பரிசர்யையோடே அந்வயிக்கவுமாம். ‘தத்’ பத3த்தோடே அந்வயித்தபோது நிருபாதி4க ப3ந்து4வானவனென்றபடி, தத்பாதா3ம்பு3ஜத்தோடே அந்வயித்தபோது 170. “த்வத்பாத3பங்கஜ பரிக்3ரஹ த4ந்யஜந்மா பூ4யாஸம் இத்யபி4நிவேஶ கத३ர்த்2யமாந:” (त्वत्पादपङ्कज परिग्रह धन्यजन्मा भूयासं इत्यभिनिवेश कदर्थ्यमान🙂 என்றும், 171. “அங்கே நிதா4ய கரபோ4ரு யதா2 ஸுக2ம் தே ஸம்வாஹயாமி சரணௌ” (अङ्के निधाय करभोरुयथासुखं ते सम्वाहयानि चरणौ) என்றும், பா3ஹ்ய விஷயங்களில் காதல் போலே அப்ராப்தமாயிருக்கையன்றிக்கே ஶேஷியுடைய திருவடிகளே ஶேஷபூ4தனுக்கு பிறக்கும் காமம் ஸ்வத: ப்ராப்தம் என்கை. பரிசர்யையோடே அந்வயித்தபோது ஸ்வரூப ப்ராப்தம் என்கை.
மூ: தத்பாதா3ம்பு3ஜ த்3வய பரிசர்யைக மநோரத2: (तत्पादाम्बुजद्वयपरिचर्यैकमनोरथः)
வ்யா: “தத்பாதா3ம்பு3ஜ த்3வய” (तत्पादाम्बुजद्वय) தச்ச2ப்3த3ம் ப்ரக்ருத பராமர்ஶியாகையாலே நாராயணமென்று ப்ரஸ்துதமானவனைப் பராமர்ஶிக்கிறது. இத்தால் “நாராயண சரணௌ” (த்3வயம்) என்கிறத்தை நினைத்துக் கொள்வது. “பாதா3ம்பு3ஜ த்3வய” (पादाम्बुजद्वय) “தத்” (तत्) என்று த4ர்மி ப்ரஸ்துதமாயிருக்கச் செய்தேயும், பாத3 என்று – திருவடிகளைச் சொல்லுகிறது- ஸ்தநந்த4ய ப்ரஜைக்கு மாதாவினுடைய முலைக்கண் அபேக்ஷிதமானாப்போலே ஶேஷபூ4தநுக்கும் ஸ்வரூப ப்ராப்தமாகை. அங்குமுலைக் கண்ணில் பாலூறுமாபாலே 172. “விஷ்ணோ: பதே3 பரமேமத்4வௌத்ஸ:” (विष्णो: पदे परमे मध्व उत्स:) 173. “தவாம்ருதஸ்யந்தி3நி பாத3பங்கஜே” (तवामृतस्यन्दिनि पादपङ्कजे) என்று இவனுக்குத் திருவடிகளில் போ4க்3யதை ஊற்றிருக்கும். “அம்பு3ஜ” (अम्बुज) இதுதான் வைத4மாய் கஷாயபாநம் போலேயிருக்கையன்றிக்கே ராக3ப்ராப்தமாம்படி போ4க்3யமுமாயிருக்கும். “அம்பு3ஜ” (अम्बुज) அமரர் சென்னிப்பூவாகையாலே [திருக்குறு-6 மயிரும் பூவுமிருக்கும்போது]குளித்து மயிருக்குப் பூவைக்கும்போது “ஶிரஸா தா4ரயேத்” (शिरसा धारयेत्) என்று விதி4க்கவேண்டாவிறே. “த்3வய” (द्वय) உபாயம் த்3வயமாயிருக்கையாலே உபேயமும் த்3வயமாயிருக்கிறேபடி. 174. “சரண த்3வந்த்3வம் வ்ரஜாமி” (चरण द्वन्द्वं व्रजामि) என்னக்கடவதிறே. இத்தால், “சரணௌ” (चरणौ) என்கிற த்3வி வசநத்தை நினைத்துக் கொள்வது.
“பரிசர்யா” (परिचर्या) சர்யா- சரித்திரம்; அநுஷ்டா2னம், கைங்கர்யமென்றபடி. பரிசர்யையாவது – ஸர்வவித4 கைங்கர்யமென்றபடி. இவ்வவயவ ஶக்தியையொழிய பரிசர்யை என்கிறே ரூடி4யாலே கௌ3ரவ விஷயத்தில் பண்ணும் அநுவ்ருத்திக்குப் பேராய், அத்தாலே கைங்கர்யத்தை விவக்ஷிக்கிறேதாகவுமாம். அன்றிக்கே, பரிதஶ்சர்யையாய், அதாவது- 175. “விஶ்வத: பர்யேதி” (विश्वत: पर्येति) என்றும், “கொண்ட கோயிலை வலம் செய்து” [திருவாய் 10-1-5] என்றும் “வலம் செய்துநாளும் மருவுதல் வழக்கு” [திருவாய் 2-10-8] என்றும், சொல்லுகிறபடியே ப்ரத3க்ஷிணாத்3யுபலக்ஷணமான அநுகூலவ்ருத்தியைச் சொல்லித்தாகவுமாம்.
“ஏகமநோரத2:” (एकमनोरथ🙂 புறம்புள்ள ப2லங்களையெல்லாம் விட்டுக் கைங்கர்யம் ஒன்றுமே பெற வேணுமென்னும்படியான அபி4நிவேஶத்தையுடையேனாய்,
மூ: தத்ப்ராப்தயே ச (तत्प्राप्तये च)
வ்யா: “தத்ப்ராப்தயே ச” (तत्प्राप्तये च) கீழ் ப்ரஸ்துதமாய் மநோரத2 விஷயமான பரிசர்யையைப் பெறுகைக்காக. “ச” (च) என்று கீழ் வேறொன்றினுடைய ப்ராப்தியைச் சொல்லி, இதினுடைய ப்ராப்திக்குமென்று ஸமுச்சயிக்கிறேதல்லவே. சகாரத்துக்குப் பொருளென்னென்னில், அநுக்த ஸமுச்சயமாய் “மஹாத்மபி4ர்மாமவ லோக்யதாம் நய” (महात्मभिर्मामव लोक्यतां नय) என்றும், “அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன்” [அமல. 1] என்றும் சொல்லுகிறபடியே தத்ப்ராப்திப2லமான ததீ3ய ஶேஷத்வ ப்ராப்திக்குமாக என்று அநுக்த ஸமுச்சயமாகவுமாம்.
அன்றியிலே, “ச” (च) என்று- “நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென்றருளும் வான்” [பெரிய திரு. 59] என்றும் 177. “த்வத்3க3தோ மே மநோரத2: । யதி3 நாஶம் ந விந்தே3த தாவதாऽஸ்மி க்ருதீ ஸதா3॥” ( त्वद्गतो मे मनोरथ:।यति नाशं न विन्देत तावताऽस्मि कृती सदा॥) என்றும் சொல்லுகிறபடியே இப்பரிசர்யா மநோரத2ந்தானே போந்திருக்க, அதுக்குமேலே இது பெற வேணுமென்றிருந்தேனாகில் என்று ப்ராப்தியை ஸமுச்சயிக்கிறேதென்னவுமாம்.
இதுக்குக்கீழ் உபேயஸ்வரூபம் சொல்லிற்று. மேல் இதுக்கு ஸத்3ருஶமான உபாயநிஷ்கர்ஷமும் தத3நுஷ்டா2ன ப்ரகாரமும் சொல்லுகிறது. “ஶரணமநுவ்ரஜேத்” (शरणमनुव्रजेत्) என்றது அறுதியாக; “தத்பாதா3ம்பு3ஜ த்3வய ப்ரபத்தே:” (तत्पादाम्बुज द्वय प्रपत्ते🙂 என்றுதொடங்கி “மந்வாந:” (मनवान🙂 என்றது அறுதியாக உபாய நிஷ்கர்ஷம் சொல்லுகிறது. தஸ்ய (तस्य) என்று தொடங்கி, சரணாரவிந்த3ம்(चरणारविन्दं) அறுதியாக உபாயவேஷம் சொல்லுகிறது. அநந்யாத்ம(अनन्यात्म) தொடங்கி, அநுவ்ரஜேத்(अनुव्रजेत्) என்றறுதியாக உபாயஸ்வீகாரம் சொல்லுகிறது.
மூ: தத்பாதா3ம்பு3ஜ த்3வய ப்ரபத்தே: (तत्पादाम्बुज द्वय प्रपत्ते🙂
வ்யா: “தத்பாதா3ம்பு3ஜ த்3வய” (तत्पादाम्बुज द्वय) ப்ராப்யமானது தானே ப்ராபகம் என்கிறது. ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் ஒன்றாகில் கார்யகாரணயோரைக்யம் ப்ரஸங்கி3க்கும். ஐக்யப்ரஸங்க3த்தாலே ஸாத்4யஸாத4நங்களன்றியிலேயொழியும். இன்றியிலே ஒழிந்தவாரே அவற்றில்ல் ப்ரவர்தகர் அன்றியிலே ஒழியும். ப்ரவ்ருத்தி இல்லாமையாலே ப்ரவர்த்தக ஶாஸ்த்ரத்துக்கு வையர்த்2யமும் அப்ராமாண்யமும் பிறக்கும். இத்தனை அநர்த்த2ங்களுண்டாயிருந்தன, இதுக்குப் பரிஹாரமேதென்னில், தத்பாதா3ம்பு3ஜத்வய பரிசர்யை ப்ராப்யம்; தத்பாதா3ம்பு3ஜ த்3வயப்ரபத்தி உபாயம் என்றிட்டு பே4த3முண்டாகையாலே ஒரு விரோத4முமில்லை.
பரிசர்யா ப்ரபத்திகள் உபாயோபேயங்களாகில் 178. “ப்3ரஹ்மவேத3 ப்3ரஹ்மைவ ப4வதி” (ब्रह्मवेद ब्रह्मैवा भवति) என்றும், 179. “ப்3ரஹ்ம விதா3ப்நோதிபரம்” (ब्रह्म विदाप्नोतिपरं) என்றும் “மாமேகம் ஶரணம்வ்ரஜ” (मामेकं शरणं व्रज) என்றும், 129. “த்வமேவோபாயபூ4தோ மே ப4வ” (त्वमेवोपायभूतो मे भव) என்றும் ப்ராப்யப்ராபகங்களிரண்டும் ஒன்றென்றும், எம்பெருமானே உபாயோபேயங்களென்றும் சொல்லுகிற ப்ரமாண வ்யவஹாரங்கள் செய்யும்படி என்னென்னில்; பரிசர்யா விஷயமும் ப்ரபத்தி விஷயமும் ஒன்றாகையாலே. விஷயம் ஒன்றானால் பே4த3ம் நடக்குமோவென்னில்; பே4த3கம் (भेदकं) விஶேஷணம், பே4த்3யம் விஶேஷ்யமென்கிற ந்யாயத்தாலே பரிசர்யா ஜநித ப்ரீதி விஶிஷ்ட விஷயமும் ப்ரபத்திஜநித ப்ரஸாத3 விஶிஷ்ட விஷயமும் விஶேஷண பே4த3த்தாலே, வஸ்து ஒன்றானாலும் பே4த3த்துக்குக்குறையில்லை. ஆனால், “அஜோ க3ஜோ மஹிஷ:” (अजो गजो महिष🙂 என்கிறவிடத்தில் விஶேஷண பே4தா3தீ4நமாக விஶேஷ்ய ஸ்வரூபத்துக்கும் பே4த3ம் பிறந்ததில்லையோவென்னில், விருத்3த4 விஶேஷணமான அவ்விடத்தில் அப்படியாகிலும், “தே3வத3த்த: ஶ்யாமோ யுவா ஸமபரிமாண:” (देवदत्त: श्यामो युवा समपरिमाण🙂 என்கிற இடம்போலே அவிருத்3த4 விஶேஷணமானவிடத்தில் விஶேஷண பே4தா3யத்த விஶிஷ்டாகார பே4த3ம் வரச்செய்தேயும் ஸ்வரூபபே4த3ம் பிறவாது; 180. “ ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச ஸர்க்க3 கர்த்தா” (स एव सृज्यस्स च सर्ग कर्ता) என்று ப்3ரஹ்மம் ஒன்றுமே கார்யகாரணமாமிடத்தில் ஸூக்ஷ்ம சித3சித்3 விஶிஷ்ட ப்3ரஹ்மம் காரணம், ஸ்தூ2ல சித3சித்3 விஶிஷ்டம் ப்3ரஹ்மம் கார்யமென்று அவிரோதே4ந நிர்வஹிக்கிறோப்போலே.
“ப்ரபத்தே:” (प्रपत्ते🙂 73. “ததே3கோபாய தாயாஞ்சா ப்ரபத்தி:” (तदेकोपाय तायाञ्चा प्रपत्ति🙂 என்று து3ரநுஷ்டே2யமான உபாயங்களில் எனக்கு அந்வயமில்லை. ரக்ஷகனானவனே உபாயமாகவேணுமென்று பிறக்கிற ப்ரார்த்த2நாத்4யவஸாயம் ப்ரபத்தி. “அந்யத்” (अन्यत्) இப்ப்ரபத்தியையொழிய மற்று உபாயாந்தரங்களில்லையோவென்னில்; “அந்யத்” (अन्यत्) தொடங்கி, ‘மந்வாந:’ (मन्वान🙂 அறுதியாக, அவையெல்லாம் நெஞ்சுடையார்க்கு நல்ல தீர்த்த2ம்; நமக்கதி4காரமில்லை என்றிருப்பனென்கிறார்.
மூ: அந்யந்நமே கல்பகோடிஸஹஸ்ரேணாபி ஸாத4நமஸ்தீதி மந்வாந:
(अन्यन्न मे कल्पकोटिसहस्रेणापि साधनमस्तीति मन्वान🙂
வ்யா: “அந்யத்” (अन्यत्) ப4க்தி தத்3பே4த3மான ஸத்3வித்3யை தொடக்கமானவை, தத3ங்க3மான ஜ்ஞாநகர்மங்கள் தொடக்கமான ப்ரபத்தி வ்யதிரிக்தமான உபாயம்;
இப்படி ஶாஸ்த்ரங்களிலே தாத்பர்யம் பண்ணி விதி4க்கிற இவை உபாயங்களன்றோ என்னில்; “ந மே” (न मे) இங்கே அஸ்தியைக் கூட்டி, “ந மேऽஸ்தி” (न मेऽस्ति) – இவையெல்லாம் ஶக்தாதி4காரம், அஜ்ஞனாய் அஶக்தனாய், கர்மப்ரவாஹத்திலே அழுந்தி அதடியாக ‘மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்து’, [திருவாய் 2-6-8] ‘மாதரார் வனமுலைப்பயனே பேணி’ [பெரிய திரு. 1-6-1] இப்படி விபரீத ப்ரவ்ருத்தி பண்ணி, 9. “க்ஷிபாமி” (क्षिपामि), 10. “ந க்ஷமாமி”க்கு (न क्षमामि) இலக்காயிருக்கிற எனக்கு உபாயமல்ல.
இப்படி மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கிற பிறவிகளில் இதுக்கு முன்பில்லையேயாகிலும், இனிப்பிறக்கும் பிறவிகளிலேயாகிலும் ஸாத4நாநுஷ்டா2னம் பண்ணத்தட்டென்ன என்னில்; “கல்பகோடி ஸஹஸ்ரேணாபி” (कल्पकोटिसहस्रेणापि) ஒட்டடையை ஆயிரநாள் நீரிலேயிட்டு வைத்தாலும் முளையாதாப்போலே கால தத்வமுள்ளதனையும் திரிந்தாலும் அதி4காரமுண்டாகமாட்டாது. “ஸாத4நமஸ்தி” (साधनमस्ति) இத்தைக் கீழே கூட்டினாப்போலே கீழையதாந நஞ்ஞை இங்கே கூட்டி “ஸாத4நம் நாஸ்தி” (साधनम् नास्ति) என்றாகிறது. எல்லாம் செய்தாலும் க்ருத ப்ராயஶ்சித்தமாமத்தனை போக்கி அபி4மதப2லத்தை ஸாதி4த்துத் தர மாட்டாது. “ஸாத4நம் நாஸ்தி” (साधनम् नास्ति)) என்றால் ஸ்வரஸமாகத் தோற்றுவது ஸாத4நமில்லை என்றிறே; அங்ஙனல்ல “ஸாத4நம் ந ப4வதி” (साधनम् न भवति)) எனக்கு ஸாத4நமாகமாட்டாதென்றபடி. “இதி மந்வாந:” (इति मन्वान🙂 இப்ப்ரகாரத்திலே அறுதியிட்டு. “மந்வாந:” (मन्वान🙂இந்நினைவு உருவ நடக்கவேணும் என்கிறது- வர்த்தமானத்தாலே.
மூ: தஸ்யைவ ப4க3வதோ நாராயணஸ்ய அகி2லஸத்வத3யைகஸாக3ரஸ்ய அநாலோசித கு3ணாऽக3ணாக2ண்ட ஜநாநுகூலாऽமர்யாத3ஶீலவத: (तस्यैव भगवतो नारायणस्याखिलसत्त्व– दयैकसागरस्यानालोचितगुणगणाखण्डजनानुकूलमर्यादाशीलवतः)
வ்யா: “தஸ்யைவப4க3வதோ நாராயணஸ்ய” (तस्यैव भगवतो नारायणस्य) கீழ்- “பரமபுருஷம் ப4க3வந்தம் நாராயணம்” (परमपुरुषं भगवन्तं नारायणं) என்று – ப்ரஸ்துதமானவன் தன்னுடைய, கீழ், “ப4க3வந்தம் நாராயணம்” (भगवन्तं नारायणं) என்று 112. “ஸோऽஶ்நுதே ஸர்வான் காமாந்ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா” (सौऽश्नुते सर्वान् कामान्सह ब्रह्मणा विपश्चिता) என்கிறபடியே ப்ராப்யத்வோபயோகி3யான கு3ணங்களையும் கு3ணாஶ்ரயமான த4ர்மியையும் சொல்லிற்று. இங்கு “ப4க3வதோ நாராயணஸ்ய” (भगवतो नारायाणस्य) என்று ப்ராபகத்வோப யோகி3யான கு3ணங்களையும் கு3ணியையும் சொல்லுகிறது. இனிமேல், ப4க3வந்நாராயண ஶப்3த3ங்களால் ஸூசிதமான கு3ணங்களையும் கு3ணியையும் விவரிக்கிறது.
“அகி2லஸத்வ த3யைகஸாக3ரஸ்ய” (अखिल सत्व दयैकसागरस्य) ஸகலஸத்வவிஷயமான த3யைக்கு ஒரு கடலாயிருக்கும். “அகி2ல ஸத்வ” (अखिल सत्व) இன்னான் இனையானென்று வரையாதே ஸகலஜந்து விஷயமென்றபடி. “த3யா” (दया) ஸ்வார்த்த2 நிரபேக்ஷபர து3:க்கா2ஸஹிஷ்ணுத்வம்; – தான் ஒரு ப்ரயோஜநத்தைக் கணிசியாதே பிறர் நோவு கண்டால் ஐயோ என்கை. “ஏக ஸாக3ரஸ்ய” (एक सागरस्य) த3யையாகிற ஜலத்துக்கு வேறோர் ஆஶ்ரயமின்றிக்கே இவனே ஆஶ்ரயமாயிருக்கை.
“அகி2லஸத்வ த3யைகஸாக3ரஸ்ய” (अखिल सत्व दयैकसागरस्य) என்றது- பரபீடா3 நிரூபணம் பண்ணியோவென்னில்; அநாலோசித கு3ணாऽக3ணாக2ண்ட ஜநாநுகூலாऽமர்யாத3ஶீலவத: (अनालोचितगुणगणाखण्डजनानुकूलमर्यादाशीलवतः) இப்படி கு3ணதோ3ஷ நிரூபணம் பண்ணவொண்ணாதபடியான ஶீலகு3ணமுடையவனென்கிறது. திருவுள்ளத்தால் ஆராயப்படாதபடியான நன்மைகளையுடையரா யிருக்கிற அக2ண்ட3 ஜநமுண்டு. பிரியப்படாத மநுஷ்யர்கள்; அவர்கள் உஜ்ஜீவிக்கைக்கீடாம்படியான நிரவதி4க ஶீலத்தை உடையவனுடைய தோ3ஷம் திருவுள்ளத்தில் படாதவம்ஶம் ஏற்றமாகிறது. உள்ள கு3ணங்களை அங்கீ3கரித்தில் என்னென்றால், இது ஓர் ஏற்றமோவென்னில்; நிக்3ரஹிக்கைக்கடியான தோ3ஷங்களை நிரூபியாத மாத்ரம். ரக்ஷிக்கைக்குப் பற்றாசான கு3ணங்களையும் அபேக்ஷியான் என்றபடி. தான் ரக்ஷிக்கும்போது கு3ணாபேக்ஷை இல்லை என்ற கருத்து.
“அநாலோசித” (अनालोचित) ஆலோசிதமாவது – இவ்வாஶ்ரயத்திலே நன்மை உண்டோ தீமையுண்டோ என்று விடுத்து ஆராய்கை; அது இன்றிக்கேயொழிகை. “கு3ணாகு3ண” (गुणागुण) அவையாவன – நன்மை தீமைகள். அதாவது – “அஜ்ஞனோ, ப்ராஜ்ஞனோ, நாஸ்திகனோ, ஆஸ்திகனோ, தா4ர்மிகனோ, அதா4ர்மிகனோ, விநீதனோ, அவிநீதனோ” என்று ஏவமாதி3கள். “அக2ண்ட3ஜந” (अखण्डजन) தே3வமநுஷ்யர்களோடு ப்3ராஹ்மண க்ஷத்ரியாத்3யநுலோம ஜாதியோடு, ப்ரதிலோமஜாதியோடு வாசியற ஸர்வவிஷயமாக, “அநுகூல” (अनुकूल) இவை குமார்க்க3ங்களைத் தவிர்ந்து நல்வழி போய்க் கரைமரம் சேருகைக்கு உறுப்பாம்படியிருக்கை. “அமர்யாத3” (अमर्याद) மர்யாதை3யாகிறது – அவதி4; நிரவதி4கமென்றபடி. “ஶீல” (शील) பெரியவன் தாழ்ந்தவனோடு கலக்குமிடத்தில் தன் மேன்மை பார்த்து இறுமாத்தல். மற்றை அவன் தண்மை பார்த்துக் கூசுதல் செய்யாதபடி புரையறப் பறிமாருகிற நீர்மை. “ஶீலவத:” (शीलवत🙂 மதுப்பாலே 181. “பூ4மநிந்தா3ப்ரஶம்ஸாஸு நித்யயோகே3ऽதிஶாயநே । ஸம்ப3ந்தே4ऽஸ்தி விவக்ஷாயாம் ப4வந்தி மதுபா3த3ய:॥” (भूमिनिन्दाप्रशंसासु नित्ययोगेऽतिशायने। संबन्धेऽस्तिविवक्षायां मतुबादय:॥) என்று நித்யயோகே3 மதுப்பாய் இக்கு3ணம் இவனுக்கு நித்யஸித்3த4ம் என்கிறது.
இப்படி அவன் த(ந)ன்னீர்மையாலே எல்லாரோடும் கலந்தாலும், அவர்கள் தன்னைக் கண்டால் வெருவும்படியாயிருக்குமோவென்னில்; “தே3வதிர்யங்மநுஷ்யாத்3யகி2லஜந ஹ்ருத3யாநந்த3நஸ்ய” (देवतिर्यङ्मनुष्याद्यखिल जनहृदयान्नदनस्य) விவேகிகளோடு அவிவேகிகளோடு வாசியற எல்லாருடைய நெஞ்சும் உருகும்படியாயிருக்கும். இப்படி செய்கைக்கடி என்னென்னில். “து” (तु) ஒருவிஶேஷமுண்டு. அதுதான் ஏதென்னில்;
மூ: ஸ்வாபா4விகாநவதி4காதிஶய கு3ணவத்தயா தே3வதிர்யங்மநுஷ்யாத்3யகி2ல ஜநஹ்ருத3யாநந்த3நஸ்ய (स्वाभाविकानवधिकातिशयगुणवत्तया देवतिर्यङ्मनुष्याद्यखिल जनहृदयान्नदनस्य)
வ்யா: “ஸ்வாபா4விகாநவதி4காதிஶய கு3ணவத்தயா” (स्वाभाविकानवधिकातिशयगुणवत्तया) ஸ்வதஸ் ஸித்3த4மான எல்லையில்லாத மிகுதியையுடைத்தாயிருக்கிற கு3ணவத்தையாலே.
அடியே தொடங்கி ஒருபடிப்பட கு3ணங்களைச் சொல்லி வரச்செய்தே புதுமைபோலே “கு3ணவத்தயா” (गुणवत्तया) என்று சொல்லுகிறது என்னென்பது? என்னில்; அவையெல்லாம் ஆத்மகு3ணங்களைச்சொல்லுகிறது. இங்கு, 182. “ராம ராம நயாநாபி4ராமதாமாஶயஸ்ய ஸத்3ருஶீம் ஸமுத்3வஹந்। ஸர்வதே3வ ஹ்ருத3யங்க3மோऽஸி” (राम राम नयनाभिरामतामाशयस्य सदृशीं समुद्वहन्।सर्वदेवहृदयङ्गमोऽसि) என்கிறபடியே கண்ணுக்குப் பிடிக்கும்படியான காந்தி ஸௌகுமார்யாதி3களான விக்3ரஹ கு3ணங்களைச் சொல்லுகிறது.
தே3வதிர்யங்மநுஷ்யாத்3யகி2ல ஜநஹ்ருத3யாநந்த3நஸ்ய (स्वाभाविकानवधिकातिशयगुणवत्तया देवतिर्यङ्मनुष्याद्यखिल जनहृदयान्नदनस्य), 183. “ப3பூ4வேந்த்3ரோபமம் த்3ருஷ்ட்வா ராக்ஷஸீ காமமோஹிதா” (बभूवेन्द्रोपमं दृष्ट्वा राक्षसी काममोहिता), 184. “தருணௌ ரூபஸம்பன்னௌ” (तरुणौ रूपसम्पन्नौ) என்று தே3வயோநியான ராக்ஷஸியும் அகப்பட்டாளிறே. அன்றிக்கே,
185. “அதி4ஜ்ய த4ந்வாநமவேக்ஷ்ய ராமம் சரந்தமேகாந்தவிலாஸிநீபி4:। நூநம் ப3பூ4வுர் வநதே3வதாஶ்ச மர்த்யாங்க3நா ஜந்மகுதூஹலிந்ய:” (अधिज्य धन्वानमवेक्ष्य रामं सरन्तमेकान्तविलासिअीभि:। नीनं बभूवुर्वनदेवताश्च मर्त्यङ्गना जन्मकुतूहलिन्य🙂 என்று வநதே3வதைகள் அகப்பட்டதாகவுமாம். “திர்யக்” 186. “ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வஸத்வமநோஹர:” (राम: कमल पत्राक्ष: सर्वसत्वमनोहर🙂 என்று திருவடியும் அகப்பட்டானிறே. “வாதமாமகன் மர்க்கடம் விலங்கு” [பெரிய திரு. 5-8-1] என்று மூன்றுக்கும் இதுதானே உதா3ஹரணமாகவுமாம். “மநுஷ்ய” 187. “ரூபஸம்ஹநநம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸுவேஷதாம் த3த்3ருஶு:” (रूपसंहननं लक्ष्मीं सौकुमार्यं सुवेषतां ददृशु🙂 என்று ருஷிகளகப்பட்டார்கள். “தத்ருஶுர்விஸ்மிதாகாராராமஸ்ய வநவாஸிந:” (:) என்று. ஆதி3 ஶப்3த3த்தாலே ஸ்தா2வரங்கள். அதாவது 188. “பாஷாண கௌ3தம வதூ4வபுராப்திஹேது:” (पाषाण गौतम वधूवपुराप्तिहेतु🙂 என்று கல்லுருகிப் பெண்ணாம்படியாயிருக்கை. “அகி2லஜந” (अखिलजन)அநுகூலரோடு ப்ரதிகூலரோடு வாசியற. “ஹ்ருத3யாநந்த3நஸ்ய” (हृदयानन्दनस्य) கண்ணுக்கு அழகியனாய் அநபி4மத விஷயமாய் நெஞ்சுக்குப் பிடியாதிருக்கையன்றிக்கே, 82. “சித்தாபஹாரிணம்” (चित्तापहारिणं) என்றும், “கண்டவர் தம் மனம் வழங்கும்” [பெருமாள் திரு 8-2] என்றும் சொல்லுகிறபடியே எல்லார் நெஞ்சையுருக்கும் படியாயும் நெஞ்சுடையார் நெஞ்சை இழந்து, “என்னெஞ்சினாரைக் கண்டால்” [திரு விரு 30] என்று தன்னெஞ்சுக்குத் தூதுவிடும்படியாயுமிறே வடிவழகு இருப்பது.
இப்படி ஸர்வ ஸாதா4ரணமாயிருக்குமித்தனை போக்கி ஆஶ்ரித விஷயத்திலோரமில்லையோவென்னில்.
மூ: ஆஶ்ரிதவாத்ஸல்யைக ஜலதே4: (आश्रितवात्सल्यैकजलधेः)
வ்யா: “: ஆஶ்ரிதவாத்ஸல்யைக ஜலதே4:” (आश्रितवात्सल्यैकजलधेः) அவர்கள் விஷயத்தில் தோ3ஷந்தானே போ4க்3யமாக நினைத்துத்திருக்கும் என்கிறது “ஆஶ்ரித” 189. “ப4க3வத் விஷயவாஸிந:” (भगवत् विषयवासिन🙂 என்றும் 5.“ஸக்ருதே3வ ப்ரபன்னாய” (सकृदेव प्रपन्नाय) என்றும், 190. “பத்ரம் புஷ்பம் ப2லம் தோயம் யோ மே ப4க்த்யாப்ரயச்ச2தி” (पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्याप्रयच्छति) என்றும் சொல்லுகிறபடியே அவன் எல்லைக்குள்ளே கிடத்தல், ஒரு பச்சிலை நேர்தல், ஒருமலராதல், ஓருக்தியாதல் நேர்ந்தவர்கள், “வாத்ஸல்ய” (वात्सल्य) கன்றின் உடம்பில் வழும்பைத் தாய் போ4க்3யமாக நக்குமாப் போலே “குன்றனைய குற்றம் செய்யினும் கு3ணங்கொள்ளும்” [முதல் திரு 41] என்னும்படி ஸ்நேஹவிஷயமாகை. அதாவது – 57. “தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்–ந த்யஜேயம் கத2ஞ்சந” (दोषो यद्यपि तस्य स्यात् न त्यजेयं कदञ्चन) என்றிருக்கை. “ஏகஜலதே4:” (एकजलधे🙂 ஏகாஶ்ரயமாயிருக்கை.
மூ: பக்தஜந ஸம்ஶ்லேஷைக போ4க3ஸ்ய நித்யஜ்ஞாந க்ரியைஶ்வர்யபோ4க3 ஸாமக்3ரீ ஸம்ருத்3த4ஸ்ய (भक्तजनसंश्लेषैकभोगस्य नित्यज्ञानक्रियैश्वर्यभोगसामग्रीसमृद्धस्य)
வ்யா: இப்படி இவன் ஆஶ்ரயித்தால் இத்தலைக்கு ப2லம் கொடுத்துவிட்டானாயிருக்கும் அத்தனைப் போக்கித்தன் பேறாக இருக்குமதில்லையோ வென்னில், “பக்தஜந ஸம்ஶ்லேஷைக போ4க3ஸ்ய” (भक्तजनसंश्लेषैकभोगस्य) தனக்கு நல்லராயிருப்பாரோடு சேருகையே பரம ப்ரயோஜநமாயிருக்கை. “ப4க்தஜந” (भक्तजन) ப4க்தியாகிறது –191. “ப4ஜ இத்யேஷ தா4துர் வை ஸேவாயாம் பரிகீர்தித: । தஸ்மாத் ஸேவா பு3தை4: ப்ரோக்தா ப4க்திஶப்3தே3ந பூ4யஸீ” (भज इत्येष धातुर्वै सेवायां परिकीर्तित:। तस्मात् सेवा बुधै: प्रोक्ता भक्तिशब्देन भूयसी॥) என்கிறபடியே ஸ்நேஹரூபமாய், இது ப4க்த ப்ரபன்னாதி3 ஸாதா4ரணம். “ஸம்ஶ்லேஷைக போ4க3ஸ்ய” (संश्लेषैक भोगस्य) 176. “க்ஷணேऽபி தே யத்3விரஹோऽதி து3ஸ்ஸஹ:” (क्षणेऽपि ते यद्विरहोऽतिदुस्सह🙂 “ஒருமா நொடியும் பிரியான்” [திருவாய் 10-7-8] என்கிறபடியே இப்படி அநந்ய ப்ரயோஜநராயிருப்பாரோடு க்ஷணமாத்ர விஶ்லேஷமும் பொறாதபடி கூடவிருக்கையே தனக்கு தா4ரகபோஷக போ4க்3யங்களாயிருக்கும்.
இப்படி அநந்தாத்மாக்களோடு பு4ஜிக்குமிடத்தில் பரிகர வைகல்யமுண்டாயிருக்குமோ வென்னில்; “நித்யஜ்ஞாந க்ரியைஶ்வர்யபோ4க3 ஸாமக்3ரீ ஸம்ருத்3த4ஸ்ய ( नित्यज्ञानक्रियैश्वर्यभोगसामग्रीसमृद्धस्य) நித்யமாய், போது செய்யாததாய் போ4க்3ய ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப ரூப கு3ண சேஷ்டா ப்ரயோஜந காலாதி3 விஷய ஜ்ஞாநமென்ன, க்ரியையென்ன, போ4க்3யங்கள் தான் நினைத்துத்தபோது கைபுகுரும்படியாயிருக்கிற ப்ரபு4த்வமாதல், ஸம்பத்தாதலான ஐஶ்வர்ய மென்ன, ஏவமாதி3யான போ4க3 ஸாமக்3ரியுண்டு, புஷ்கலகாரணம்; இவற்றால் பூர்ணனானவனுடைய.
மூ: மஹாவிபூ4தே:, ஶ்ரீமச்சரணாரவிந்த3யுகளமநந்யாத்ம ஸம்ஜீவநேந
(महाविभूतेः श्रीमच्चरणारविन्दयुगलमनन्यात्मसञ्जीवनेन)
வ்யா: இப்படி போ4க3மும் போ4க3 ஸாமக்3ரியுமுண்டானாலும் போ4க3 ஸ்தா2நமில்லையாகில் ப்ரயோஜநமில்லையாகாதேயென்ன “மஹாவிபூ4தே:” (महाविभूतेः) லீலா விபூ4திபோலே கால் கூறாய் பரிச்சி2ன்னமாயிருக்கை யன்றிக்கே இதில் மும்மடங்கு பெருமையையுடைத்தாய் போ4க3த்துக்கேகாந்தமான நித்யவிபூ4தியை யுடையவனுடைய.
இப்படிப்பட்ட ஸ்தா2நத்திலேயிருந்து அநந்தாநந்த3 போ4க3ம் பண்ணுமிடத்தில் கூட்டின்றியே ப்3ரஹ்மசாரி நாராயணனாயோ இருப்பதென்னில், “ஶ்ரீமத:” (श्रीमत🙂 போ4க3 ஸ்ரோதஸ்ஸில் கரை காண்கைக்கு ஸஹாய பூ4தையாக ஸாக்ஷால் லக்ஷ்மியைத் தனக்கு ப்ரதா4ந மஹிஷியாகவுடையவனுடைய, [இவனுக்கு ஸம்ஸாரி ஸாதா4ரணமான போ4க3மன்றே]. அவாப்த ஸமஸ்தகாமதயா ஆநந்த3மயனாயுள்ளவனுக்கு. நாய்ச்சிமாரோட்டைச் சேர்த்தியாலே பிறக்கும் போ4க3மாவதென்? அதில் ஸஹாயமாவது – என்னம்பதுவென்னில், இவனுக்கு போ4க3மாவது- ஆஶ்ரிதோஜ்ஜீவநம். அதுக்குப் புருஷகார பூ4தையாய் நின்று சேரவிடுகை. ஸஹாய பூ4தையாகையாவது.
இப்படியிருக்கிறவன் தன்னையோ பற்றுவதென்னில், “சரணாரவிந்த3யுக3ளம்” (चरणारविन्दयुगलं) ஸ்வரூப ப்ராப்தமாய் நிரதிஶய போ4க்3யமுமாய் தன்சேர்த்தி அழகே நித3ர்ஶநமாம்படியாக எல்லாரையும் சேர்த்துக்கொள்ளக் கடவதாயிருக்கிற இத்திருவடித் தாமரைகளிரண்டையும். பற்றும்படி என்னென்னில், “அநந்யாத்மஸஞ்ஜீவநேந” (अनन्यात्मसञ्जीवनेन) ஆத்மோஜ்ஜீவநம் இதொழிய வேறொன்றில்லை என்கிற நினைவோடே.
மூ: தத்3க3தஸர்வபா4வேந ஶரணமநுவ்ரஜேத். ததஶ்ச ப்ரத்யஹமாத்மோஜ்ஜீவநாய ஏவம் அநுஸ்மரேத் (तद्गतसर्वभावेन शरणमनुव्रजेत् ॥ ततश्च प्र्यहं आत्मोज्जीवनाय एवमनुस्मरेत्)
வ்யா: “தத்3க3தஸர்வபா4வேந” (तद्गतसर्वभावेन) வேறொன்றில்லாமையாலே இதுவே ரக்ஷகமென்கிற நினைவோடே.
இந்நினைவுகளோடுகூடச் செய்யப் புகுகிற கார்யமென்னென்னில்; “ஶரணமநுவ்ரஜேத்” (शरणमनुव्रजेत्) புருஷார்த்த2த்துக்கு ஸாத4நம் இவனே என்று அத்4யவஸிப்பான். பு3த்3த்4யர்த்த2த்துக்கு வேண்டுவது- ‘வ்ரஜேத்’ அன்றோ; ‘அநு’ என்னென்னில்; “வ்ரஜ க3தௌ” (व्रज गतौ) என்கிறது க3தியாகிறது- ஜ்ஞாந மாத்ரவாசியாய், அத்4யவஸாயமாகிறே அதிஶயத்தை விவக்ஷிக்கிறதாகவுமாம். “அநுஸ்யூதம் வ்ரஜேத்” (अनुस्यूतं व्रजेत्) என்று “த்3வயமர்த்தா2நுஸந்தா4நேந ஸஹ ஸதை3வம் வக்தா” (द्वयमर्थानुसन्धानेन सह सदैवं वक्ता) என்கிறபடியே ஸர்வகாலாநுவ்ருத்தியைச் சொல்லுகிறதாகவுமாம். அன்றிக்கே “ஶரணமநு” (शरणमनु) என்று உபாயோத்3தே3ஶேந அடைவான் என்றாகவுமாம்.
இரண்டாம் சூர்ணை அவதாரிகை: இப்படி ஒருகால் ஶரணம் புக்கு விடுமித்தனையோவென்னில்; “ததஶ்ச ப்ரத்யஹமாத்மோஜ்ஜீவநாய” ( ततश्च प्र्यहं आत्मोज्जीवनाय) ப2லத்துக்கு ஒருகாலமைந்திருந்தாலும் ஸத்தா தா4ரணத்துக்கு நாள்தோறும் ஆநுஸந்தி4ப்பானென்கிறது.
வ்யா: “ததஶ்ச” (ततश्च) 192. “தத்3த்3வயம் ஸக்ருது3ச்சாரோ ப4வதி” (तद्द्वयं सकृदुच्चारो भवति) என்றும், 5. “ஸக்ருதே3வ ப்ரபன்னாய” (सकृदेव प्रपन्नाय) என்றும், உபாயாம்ஶத்துக்கு ஒரு காலமையுமாயிருக்க, பின்னையும் வேணும் என்கிறேதாகிறது; அதுக்கவதி4 என்னென்னில்; “ப்ரத்யஹம்” (प्र्यहं) ஒருகால் அநுஸந்தி4த்தோமென்று விடுத்தயன்றிக்கே நாள்தோறும்.
இப்படி நாள்தோறும் அநுஸந்தி4க்கிறது ஸாத4ந பூர்த்தி போராமையோவென்னில் “ஆத்மோஜ்ஜீவநாய” (आत्मोज्जीवनाय) 193. “யந்முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸுதே3வோ ந சிந்த்யதே । ஸா ஹாநிஸ் தந்மஹச்சி2த்3ரம் ஸா ப்4ராந்திஸ் ஸா ச விக்ரியா॥” (यन्मुहूर्तं क्षणं वापि वासुदेवो न चिन्त्यते।सा हानिस्तन्महच्छिद्रं सा भ्रान्तिस्सा च विक्रिया॥) என்கிறபடியே க்ஷணமாத்ரமும் ப4க3வத3நுஸந்தா4நம் பண்ணாதபோது ஆத்மவிநாஶமாகையாலே நித்யாநுஸந்தா4நத்தாலே ஆத்மா உஜ்ஜீவிக்கும்படியாக.
மூ: ஏவமநுஸ்மரேத். சதுர்த3ஶ பு4வநாத்மகமண்ட3ம் த3ஶ கு3ணிதோத்தரஞ்சாவரணஸப்தகம்
(एवमनुस्मरेत् चतुर्दशभुवनात्मकमण्डं दशगुणितोत्तरं चावरणसप्तकं)
வ்யா: ஆத்மோஜ்ஜீவநார்த்த2மாக அநுஸந்தி4க்குமிடத்துப்போலியாக அநுஸந்தி4க்க அமையுமோவென்னில், “ஏவம்” (एवं) ப்ரத2ம பர்வத்தில் யாதொரு ஆத3ரம்; யாதொரு க்ரமம், அப்ப்ரகாரத்தில் ஒன்றும் குறையாதபடி. “அநுஸ்மரேத்” (अनुस्मरेत्) ப்ரத்யஹம்” (प्र्यहं) என்னச்செய்தே “அநுஸ்மரேத்” (अनुस्मरेत्) என்றது- நாள்தோறுமென்றால் ஒருநாளைக்கொருகால் நினைத்தாலும் போதுமிறே; அங்ஙனன்றிக்கே “த்3வயமர்த்தா2நுஸந்தா4நேந ஸஹ ஸதை3வம் வக்தா” (द्वयमर्थानुसन्धानेन सह सदैवं वक्ता) என்கிறபடியே அநவரதாநுஸந்தா4நம் பண்ணவேணும் என்கிறது.
மூன்றாம் சூர்ணை அவதாரிகை: இவ்வுபாயம் கைவந்தவன் அர்ச்சிராதி3 மார்க்க3த்தாலே போய் ப்ராப்திக்கும் நித்ய விபூ4தியையும், அங்குள்ள ப்ரகாரங்களையும் சொல்லுகிறது மேல் “சதுர்த3ஶ பு4வநாத்மகம்” (चतुर्दशभुवनात्मकं) இத்யாதி3யாலே.
வ்யா: “சதுர்த3ஶ பு4வநாத்மகம்” (चतुर्दशभुवनात्मकं) பூ4ம்யந்தரிக்ஷாதி3யான உபரிதந லோகங்களேழும், அதல விதலாதி3களாகிற பாதாள லோகங்களேழுமாகிற பதினாலு லோகங்களுமாயிருக்கை. இப்படியிருக்கிறது தானேதென்னில், “அண்ட3ம்” (अण्डं) இப்படிப்பட்ட லோகங்களுக்கெல்லாம் ஆஶ்ரயமாய் பஞ்சாஶத்கோடி விஸ்தீர்ணமாயிருக்கிறே அண்ட3ம்.
த3ஶ கு3ணிதோத்தரஞ்சாவரணஸப்தகம் (दशगुणितोत्तरं चावरणसप्तकं) “உத்தரோத்தர த3ஶகு3ணிதம்” (उत्तरोत्तर दशगुणितं) ஓராவரணத்துக்கோராவரணம் த3ஶகு3ணிதமாய், த3ஶகு3ணிதமான அவ்வாவரணத்துக்கு அவ்வருகில் ஆவரணம் அதில் த3ஶகு3ணிதமாய், இப்படி உக்த க்ரமத்தாலே உத்தரோத்தர த3ஶகு3ணிதமான ஏழு ஆவரணங்களையுடைத்தாய்; ஆவரண ஸப்தகமாவது – வாரி வந்ஹ்யநிலாகாஶ அஹங்கார மஹத3வ்யக்தங்களாகிறவிவை.
மூ: ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய பரமவ்யோம ஶப்3தா3பி4தே4யே ப்3ரஹ்மாதீ3நாம் வாங்மநஸாऽகோ3சரே ஶ்ரீமதி வைகுண்டே2 தி3வ்யலோகே
(समस्तं कार्यकारणजातमतीत्य परमव्योमशब्दाभिधेये ब्रह्मादीनां वाङ्मनसाऽगोचरे श्रीमति वैकुण्ठे दिव्यलोके)
வ்யா: “ஸமஸ்தம்” (समस्तं) ஓரண்ட3மிறே இப்படியிருப்பது. 194. “அண்டா3நாந்து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்யயுதாநி ச। ஈத்3ருஶாநாம் ததா2 தத்ர கோடிகோடிஶதாநிச॥” (अण्डानान्तु सहस्राणां सहस्राण्ययुतानि च।इदृशानां तथा तत्र कोटिकोटिशतानि च॥) “எண்மீதியன்ற புறவண்டம்” [திருவாய் 6-9-5] என்கிறபடியே ஈத்3ருஶமான ஸமஸ்தலோகங்களையும்.
“கார்யகாரண ஜாதம்” (कार्यकारणजातं) ஒன்றினாலே உத்பாத்3யமாயும், ஒன்றை உண்டாக்கக்கடவதாயுமிருந்துள்ள வஸ்து ஸமூஹத்தை. “அதீத்ய” (अतीत्य) 195. “ஆப்3ரஹ்ம பு4வநால்லோகா: புநராவர்திநோऽர்ஜுந” (आब़्रह्म भुवनाल्लोका: पुनरावर्तिनोऽर्जुन) என்கிறபடியே கர்ம ஶேஷமுள்ளவர்கள் மீண்டு திரியும்படியான ப்ராக்ருதமண்ட3லத்தை அபுந: ப்ராப்தியாகக்கழித்து.
இத்தைக் கடந்துபோய், புகுகிற தே3ஶமிருக்கும்படி என்னென்னில், “பரம” (परम) இதுக்கவ்வருகில்லை என்னும்படியாயிருக்கை. “வ்யோமஶப்3தா3பி4தே4யே” (व्योमशब्दाभिधेये) 104. “பரமே வ்யோமந் ப்ரதிஷ்டி2தா” (परमे व्योमन् प्रतिष्ठिता) என்று கர்ம பூ4மிபோலே தமியாயிருக்கையன்றிக்கே தெளிவிசும்பாயிருக்கை. இப்படியிருக்கிறது தான் பரிச்சி2ன்னமாயிருக்குமோவென்னில், “ப்3ரஹ்மாதீ3நாம் வாங்மநஸாऽகோ3சரே” (ब्रह्मादीनां वाङ्मनसाऽगोचरे) அல்ப ஜ்ஞாநராய் அஶக்தரான நம்மளவன்றிக்கே அதி4கரான ப்3ரஹ்ம ருத்3ராதி3களுக்கும் அகப்பட வாக்குக்கும் நெஞ்சுக்கும் விஷயமன்றியிலேயிருக்கும். இப்படியிருக்கும் தே3ஶத்தின் பேரென்னென்னில்; “ஶ்ரீமதி வைகுண்டே2 தி3வ்யலோகே” (श्रीमति वैकुण्ठे दिव्यलोके) [ஶ்ரீவைகுண்ட2மென்று பேர். “ஶ்ரீமதி” (श्रीमति) கர்மபூ4மி போலே கைங்கர்யஶ்ரீ உண்டானாலும் விச்சே2த3ம் பிறக்கையன்றிக்கே கைங்கர்யஶ்ரீ நித்யமாயிருக்கை. “வைகுண்டே2” (वैकुण्ठे) கர்ம திரோதா4நமில்லாமையாலே ஜ்ஞாந ஶக்த்யாதி3கள் குண்டி2தமன்றிக்கேயிருக்கும் தே3ஶம். “தி3வ்யலோகே” (दिव्यलोके) மாநுஷலோகமாயிருக்கையன்றிக்கே அதில் வ்யாவ்ருத்தமாயிருக்கை.
மூ: ஸநக விதி4 ஶிவாதி3பி4ரப்ய சிந்த்ய ஸ்வபா4வைஶ்வர்யைர் நித்ய ஸித்3தை4ரநந்தைர் ப4க3வதா3நுகூல்யைக போ4கை3ர் தி3வ்யபுருஷைர் மஹாத்மபி4ராபூரிதே,
(सनकविधिशिवादिभिरपि अचिन्त्यस्वभावैश्वर्यैः नित्यसिद्धैरनन्तैः भगवदानुकूल्यैकभोगैः दिव्यपुरुषैः
महात्मभिरापूरिते )
வ்யா: தே3ஶம் சொல்லிற்று; தே3ஶாதி4பதிகளைச் சொல்லுகிறது மேல். “ஸநக விதி4 ஶிவாதி3பி4ரப்ய சிந்த்ய ஸ்வபா4வைஶ்வர்யை:” (सनकविधिशिवादिभिरपि अचिन्त्यस्वभावैश्वर्यैः) ப்3ரஹ்மபா4வநா நிஷ்ட2ரான ப்3ரஹ்மாதி3களோடு கர்மபா4வநாநிஷ்ட2ரான ஸநகாதி3களோடு வாசியற நினைத்துக்க வொண்ணாதபடியான ப்ரகார வைப4வங்களையுடையராய், “நித்யஸித்3தை4:” (नित्यसिद्धै:) முக்தரைப்போலே காதா3சித்க ப4க3வல்லாபராய் இருக்கையன்றிக்கே ஸர்வதா3 லப்3த4 ப4க3வத3நுப4வபரராயிருக்கை, “அநந்தை:” (अनन्तैः🙂 இப்படியிருக்கும் அவர்களுக்கு ஓரவதியில்லை. இவர்கள் தங்களுக்கு ஓரந்தமில்லையென்னவுமாம். “ப4க3வதா3நுகூல்யைகபோ4கை3:” (भगवदानुकूल्यैकभोगैः🙂 ப4க3வதநுப4வமே யாத்ரையாயிருக்கை. “தி3வ்யபுருஷை:” (दिव्यपुरुषैः🙂 பூ4மியில் கால் பாவாதிருக்கை. “மஹாத்மபி4:” (महात्मभि🙂 176. “க்ஷணேऽபி தே யத்3விரஹோऽதி து3ஸ்ஸஹ:” (क्षणेऽपि ते यद्विरहोऽति दुस्सह🙂 ‘ஒருமாநொடியும் பிரியான்” [திருவாய் 10-7-8] என்றும் சொல்லுகிறபடியே ஸர்வேஶ்வரன் தானும் அவர்களோட்டை க்ஷணமாத்ர விஶ்லேஷமும் பொறுக்க மாட்டாதானாம் படியான பெருமையையுடையராயிருக்கை. “ஆபூரிதே” (आपूरिते) ஏகதே3ஶமும் பாழே கிடவாமே அவர்களாலே நிரந்தரமாயிருக்கை.
மூ: தேஷாமபி இயத் பரிமாணமியதை3ஶ்வர்யமீத்3ருஶ ஸ்வபா4வமிதி பரிச்சே2த்தும் அயோக்3யே தி3வ்யாவரண ஶத ஸஹஸ்ராவ்ருதே,
(तेषामपि इयत्परिमाणमियदैश्वर्यं ईदृशस्वभावमिति परिच्छेत्तुमयोग्ये दिव्यावरणशतसहस्रावृते)
வ்யா: தே3ஶந்தான் ப்3ரஹ்மாதி3களால் அளவிடப் போகாதபடியிருந்ததே ஆகிலும் இவர்களுக்குத்தான் அளவிடலாயிருக்குமோ என்னில்; “தேஷாமபி” (तेषामपि) தங்களைப் பிறராலளவிடவொண்ணாதிருக்கிறேவர்களுக்கும். “தேஷாமபி” (तेषामपि) அநந்தமாயிருக்கிற அவர்களிலே ஒருவரால் தான் அளவிடலாயிருக்குமோவென்னில்; ஓரொருத்தருக்குங்கூட அளவிடவொண்ணாதிருக்கும் என்கிறது. மேல் வாக்யமேதென்னில்; “பரிச்சே2த்துமயோக்3யே” (परिच्छेत्तुमयोग्ये) பரிச்சே2தி3க்கைக்கு அயோக்3யம் என்கிறது. இப்படிப் பரிச்சே2தி3க்கைக்குத்தான் அயோக்3யமாயிருக்கிறேதே என்னில்; “இயத் பரிமாணம்” (इयत्परिमाणं) இவ்வளவு என்றும், “இயதை3ஶ்வர்யம்” (इयदैश्वर्यं) இவ்வளவு ஸம்பத் என்றும், “ஈத்3ருஶ ஸ்வபா4வம்” (ईदृशस्वभावं) இப்படிப்பட்ட ஸ்வபா4வத்தையுடையது என்றும் “இதி பரிச்சே2த்துமயோக்3யே” (इति परिच्छेत्तुमयोग्ये) இப்புடைகளில் இன்னபடி என்று அளவிடப்போகாது.
“தி3வ்யாவரண ஶதஸஹஸ்ராவ்ருதே” (दिव्यावरणशतसहस्रावृते) லோகவ்யாவ்ருத்தமான ஆயிரம் திருமதிளையுடைத்தாயிருக்கும், ஸமஸ்த க்லேஶ ரஹிதமான தே3ஶத்துக்குத் திருமதிள்கள் என்னென்னில்; 196. “புரம் ஹிரண்மயம்” (पुरं हिरण्यं) என்று எழுந்தருளியிருக்கும் திருப்படை வீடாகையாலே, இதுக்குள்ள லக்ஷணங்களடைய வேண்டுகையாலும், 197. “ததஸ்த்வஹம் சோத்தம சாப பா3ண த்4ருக் ஸ்தி2தோऽப4வம்ஸ் தத்ர ஸ யத்ர லக்ஷ்மண: । அதந்த்3ரிபி4ர் ஜ்ஞாதிபி4ராத்த கார்முகைர் மஹேந்த்3ர கல்பம் பரிபாலயம் ஸ்ததா2” (ततस्त्वहं चोत्तमचापबाण धृक् स्थितोऽभवम्स्तत्र स यत्र लक्ष्मण:। अतन्द्रिभिर्ज्ञातिभिरात्त कार्मुकैर्महेन्द्र कल्पं परिपालयं स्तथा॥) என்றும், “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு” [திருப்பல்லாண்டு] என்றும் அஸ்தா2நே ப4யஶங்கைப் பண்ணி அத்தலை இத்தலையாய் ரக்ஷகனையும் ரக்ஷிக்கத் தொடங்குவர்களிறே. ஆகையால் அநேகம் திருமதிள்களுண்டாயிருக்கும்.
மூ: தி3வ்யகல்பகத ரூபஶோபி4தே தி3வ்யோத்3யாந ஶதஸஹஸ்ரகோடிபி4ராவ்ருதே, அதிப்ரமாணே தி3வ்யாயதநே, கஸ்மிம்ஶ்சித்3விசித்ர தி3வ்ய ரத்நமயே தி3வ்யாஸ்தா2நமண்ட3பே (दिव्यकल्पकतरूपशोभिते दिव्योद्यानशतसहस्रकोटिभिरावृते अतिप्रमाणे दिव्यायतने कस्मिंश्चिद्विचित्रदिव्यरत्नमयदिव्यास्थानमण्डपे)
வ்யா: இப்படி ரக்ஷகமேயாய் போ4க்3யத்தை அற்று இருக்குமோவென்னில், “தி3வ்யகல்பகத ரூபஶோபி4தே” (दिव्यकल्पकतरूपशोभिते) அர்வாசீந ஸ்வர்கா3தி3களில் கல்பக தருக்கள் போலன்றிக்கே அப்ராக்ருதமான கல்பகச் சோலையாலே நிரதிஶய போ4க்3யமாயிருக்கும். “தி3வ்யோத்3யாந ஶதஸஹஸ்ரகோடிபி4ராவ்ருதே” (दिव्योद्यानशतसहस्रकोटिभिरावृते) நாய்ச்சிமாருக்கும் ஶ்ரீவைகுண்ட2நாதனுக்கும் லீலாவிஹாரம் பண்ணுகைக்கு ஈடாயிருந்துள்ள திருத்தோப்புக்கள் அனேகங்களாலே சூழப்பட்டிருக்கும். “அதிப்ரமாணே” (अतिप्रमाणे) இத்தனை அகலமும் உயரமுமென்று சொல்லவொண்ணாதபடி இருக்கும். “தி3வ்யாயதநே” (दिव्यायतने) இப்படியிருக்கும் ஶ்ரீவைகுண்ட2க் கோயிலிலே, “கஸ்மிம்ஶ்சித்” (कस्मिंश्चित्) ஒரு ப்ரதே3ஶத்திலே. “விசித்ரரத்நமயே” (चित्रदिव्यरत्नमये) நாநாவித4மான ரத்நங்களாலே ப்ரசுரமாயிருப்பதான. “தி3வ்யாஸ்தா2நமண்ட3பே” (दिव्यास्थानमण्डपे) திருவோலக்க மண்டபத்திலே.
மூ: தி3வ்யரத்நஸ்தம்ப4 ஶதஸஹஸ்ரகோடிபி4ருபஶோபி4தே, தி3வ்ய நாநாரத்ந க்ருதஸ்த2ல விசித்ரிதே, தி3வ்யாலங்காராலங்க்ருதே, பரித: பதிதை: பதமாநை: பாத3பஸ்தை2ஶ்ச நாநாக3ந்த4 வர்ணைர் தி3வ்யபுஷ்பைஶ்ஶோப4மாநைர்தி3வ்ய புஷ்போபவனைருப ஶோபி4தே, ஸங்கீர்ண பாரிஜாதாதி3 கல்பத்3ருமோபஶோபி4தை ரஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித3ந்தஸ்த2 புஷ்ப ரத்நாதி3 நிர்மித தி3வ்ய லீலா மண்டப ஶதஸஹஸ்ரோபஶோபி4தை:
(दिव्यरत्नस्तम्भशतसहस्रकोटिभिरुपशोभिते दिव्यनानारत्नकृतस्थलविचित्रिते दिव्यालङ्कारालङ्कृते परितः पतितैः पतमानैः पादपस्थैश्च नानागन्धवर्णैः दिव्यपुष्पैः शोभमानदिव्यपुष्पोपवनैरुपशोभिते, सङ्कीर्णपारिजातादिकल्पद्रुमोपशोभिते सङ्कीर्णपारिजातादिकल्पद्रुमोपशोभितैरसङ्कीर्णैश्च कैश्चिदन्तस्थपुष्परत्नादिनिर्मितदिव्यलीलामण्टपशतसहस्रोपशोभितै🙂
வ்யா: “தி3வ்யரத்நஸ்தம்ப4 ஶதஸஹஸ்ரகோடிபி4ருபஶோபி4தே” (दिव्यरत्नस्तम्भशतसहस्रकोटिभिरुपशोभिते) அநேகமாயிரம் மாணிக்கத் தூண்களாலே அலங்க்ருதமாய், “தி3வ்ய நாநாரத்ந க்ருதஸ்த2ல விசித்ரிதே” (दिव्यनानारत्नकृतस्थलविचित्रिते) நாநாவித4மான மாணிக்கங்களாலே செறிந்த ஸ்த2லத்தையுடைத்தாய் “தி3வ்யாலங்காராலங்க்ருதே” (दिव्यालङ्कारालङ्कृते) திருமேற்கட்டி, திருத்திரை, தூக்கன், தூணுடைத்தூங்கு பள்ளிக்கட்டில் தொடக்கமான அலங்காரங்களாலே அலங்க்ருதமாய். “பரித: பதிதை:” (परितः पतितैः) நாலு தி3க்குக்களிலும் உதிர்ந்து நிற்பனவாய். “பதமாநை:” (पतमानैः) விழுந்து கொடு நிற்பனவாய். “பாத3பஸ்தை2ஶ்ச” (पादपस्थैश्च) மரங்களிலே நிற்பனவாய், “நாநாக3ந்த4 வர்ணை:” (नानागन्धवर्णैः🙂 நாநாவித4மாயிருக்கிறே நாற்றமென்ன; நிறமென்ன, இவற்றையுடைத்தாய். “தி3வ்யபுஷ்பைஶ்ஶோப4மாநை:” (दिव्यपुष्पैः शोभमानै🙂 இப்படிப்பட்ட தி3வ்யபுஷ்பங்களாலே விளங்கா நிற்பனவாய். “தி3வ்ய புஷ்போபவனைருப ஶோபி4தே” (दिव्य पुष्पोपवनैरुपशोभिते) ஊரடைய வளைந்து கொடு நிற்கிற திருத்தோப்புக்களாலே சோஶோபி4தமாய்.
“ஸங்கீர்ண பாரிஜாதாதி3 கல்பத்3ருமோபஶோபி4தை:” (सङ्कीर्णपारिजातादिकल्पद्रुमोपशोभितै🙂 பாரிஜாதம், ஸந்தாநம், ஹரிசந்த3நம் தொடக்கமான வ்ருக்ஷ விஶேஷங்களோடு கூடின ஸாமாந்ய கல்பக வ்ருக்ஷங்களாலே ஶோபி4தமாய் “ஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித்” (सङ्कीर्णैश्च कैश्चित्) தன்னில் தான் சேர்ந்திருக்கை அன்றிக்கே இருப்பன சிலவற்றாலே. “அந்தஸ்த2 புஷ்ப ரத்நாதி3 நிர்மித தி3வ்ய லீலா மண்டப ஶதஸஹஸ்ரோபஶோபி4தை:” (अन्तस्थपुष्परत्नादिनिर्मितदिव्यलीलामण्टपशतसहस्रोपशोभितै:) இத்தோப்புக்குள்ளே சமைந்த புஷ்பமண்ட3பம் மாணிக்க மண்ட3பம், இவற்றினுடைய அநேகங்களாலே அலங்க்ருதங்களாய்,
மூ: ஸர்வதா3 அநுபூ4யமாநைரப்ய பூர்வவதா3ஶ்சர்யமாவஹத்பி4: க்ரீடா3ஶைல ஶத ஸஹஸ்ரை ரலங்க்ருதை: கைஶ்சிந் நாராயண தி3வ்யலீலாऽஸாதா4ரணை: கைஶ்சித்பத்3மவநாலயா தி3வ்யலீலாऽஸாதா4ரணை:, கைஶ்சிச்சு2கஶாரிகா மயூரகோகிலாதி3பி4: கோமலகூஜிதைராகுலைர் தி3வ்யோத்3யாந ஶதஸஹஸ்ரகோடிபி4 (ஸ்தை)ராவ்ருதே.
(सर्वदानुभूयमानैरप्यपूर्ववदाश्चर्यमावहद्भिः क्रीडाशैलशतसहस्रैरलङ्कृतैः कैश्चिन्नारायणदिव्यलीलाऽसाधारणैः कैश्चित्पद्मवनालया दिव्यलीलासाधारणैः कैश्चिच्छुकशारिकामयूरकोकिलादिभिः कोमलकूजितैराकुलैः दिव्योद्यानशतसहस्रकोटिभिरावृते)
வ்யா: “ஸர்வதா3 அநுபூ4யமாநைரப்ய பூர்வவதா3ஶ்சர்யமாவஹத்பி4:” (सर्वदानुभूयमानैरप्यपूर्ववदाश्चर्यमावहद्भिः🙂 எப்போதும் அநுப4வியா நின்றாலும் புதுமைபோலே விஸ்மயநீயமாய் இருப்பவைகளாய், “க்ரீடா3ஶைல ஶத ஸஹஸ்ரை ரலங்க்ருதை:” (क्रीडाशैलशतसहस्रैरलङ्कृतैः🙂 அநேகமாயிரம் க்ரீடா3 ஶைலங்களாலே அலங்க்ருதங்களாய்.
“கைஶ்சிந் நாராயண தி3வ்யலீலாऽஸாதா4ரணை:” ( कैश्चिन्नारायणदिव्यलीलाऽसाधारणैः) என்று தொடங்கி, “ஸாதா4ரணை: கைஶ்சித்” (साधारणैः कैश्चित्) என்கிறதறுதியாக- எம்பெருமானதாயும், நாய்ச்சிமாரதாயும், இருவர்க்கும் பொதுவாயுமுள்ள திருத்தோப்புக்களாலே, “ஶுகஶாரிகா மயூரகோகிலாதி3பி4:” (शुकशारिकामयूरकोकिलादिभिः🙂 கிளிகள், அவற்றில் அவாந்தர ஜாதியான ஶாரிகைகள், மயில்கள், குயில்கள், இவை தொடக்கமான பக்ஷிகளாலே, அவற்றில்- ஶுகமாகிறது- பைங்கிளிகள், ஶாரிகையாகிறது- பூவை, ஆதி3ஶப்3த3த்தாலே, அன்னம் குருகு தொடக்கமானவை. “கோமலகூஜிதைராகுலை:” (कोमलकूजितैराकुलैः) இனியபேச்சையுடைய பக்ஷிகளாலே ஆகுலங்களாயுள்ள, “தி3வ்யோத்3யாந ஶதஸஹஸ்ரகோடிபி4 (ஸ்தை)ராவ்ருதே” (दिव्योद्यानशतसहस्रकोटिभिरावृते) இப்படிப்பட்ட அநேகம் தோப்புக்களாலே சூழப்பட்டிருப்பதாய்.
மூ: மணிமுக்தா ப்ரவாளக்ருத ஸோபாநைர் தி3வ்யாऽமலாம்ருத ரஸோத3கைர் தி3வ்யாண்ட3ஜவரை: அதிரமணீய த3ர்ஶநை: அதிமநோஹர மது4ரஸ்வரை: ஆகுலை: அந்தஸ்த2 முக்தாமய தி3வ்ய க்ரீடா3 ஸ்தா2நோப ஶோபி4தைர் தி3வ்ய ஸௌக3ந்தி4க வாபீஶத ஸஹஸ்ரைர் தி3வ்ய ராஜஹம்ஸாவளீவிரஜிதைராவ்ருதே.
(मणिमुक्ताप्रवालकृतसोपानैः दिव्यामलामृतरसोदकैः दिव्याण्डजवरैरतिरमणीयदर्शनैः अतिमनोहरमधुरस्वरैराकुलैः अन्तस्स्थमुक्तामयदिव्यक्रीडास्थानोपशोभितैः दिव्यसौगन्धिकवापीशतसहस्रैः दिव्यराजहंसावलीविराजितैरावृते)
“நிரஸ்தாதிஶயாநந்தை3க ரஸதயா ச அநந்த்யாச்ச ப்ரவிஷ்டாநுந்மாத3யத்3பி4: க்ரீடோ3த்3தே3ஶைர்விராஜிதே” (निरस्तातिशयनानन्दैकरसतया चानन्त्याच्च प्रविष्टानुन्मादयद्भिः क्रीडोद्देशैर्विराजिते)
வ்யா: “மணிமுக்தா ப்ரவாளக்ருதஸோபாநை:” (मणिमुक्ताप्रवालकृतसोपानैः🙂 ரத்நம், முத்து, பவளம் தொடக்கமானவைகளாலே பண்ணப்பட்டபடி ஒழுங்குகளை உடைத்தாயிருப்பனவாய், “தி3வ்யாऽமலாம்ருத ரஸோத3கை:” (दिव्याऽमलामृतरसोदकैः) அப்ராக்ருதமாய், நிர்மலமாய், அம்ருதம்போலே ரஸவத்தான நீர்பரப்பை உடையவையாய், “தி3வ்யாண்ட3ஜவரை:” (दिव्याण्डजवरै:) அப்ராக்ருதமான பக்ஷிஶ்ரேஷ்ட2ங்களாலே. “அதிரமணீய த3ர்ஶநை:” (अतिरमणीयदर्शनैः) கண்ணுக்கழகியவாய் இருப்பனவாய், “அதிமநோஹர மது4ரஸ்வரை:” (अतिमनोहरमधुरस्वरैराकुलैः) மிக்க மநோஹாரியான பேச்சிலினிமை யுடையவனாய், “ஆகுலை:” (आकुलैः)இவற்றாலே ஆகுலமாயிருப்பனவாய், “அந்தஸ்த2 முக்தாமய தி3வ்ய க்ரீடா3 ஸ்தா2நோப ஶோபி4தை:” (अन्तस्स्थमुक्तामयदिव्यक्रीडास्थानोपशोभितैः) உள்ளேயுண்டான முத்துக்களாலே சமைந்த லீலாஸ்தா2நங்களாலே ஶோபி4தங்களாய், “தி3வ்ய ஸௌக3ந்தி4க வாபீஶத ஸஹஸ்ரை:” (दिव्यसौगन्धिकवापीशतसहस्रैः) அப்ராக்ருதமான செங்கழுநீரையுடைத்தான நீர் வாவிகளுடைய நூறாயிரங்களாலே. “தி3வ்ய ராஜஹம்ஸாவளீவிரஜிதைராவ்ருதே” (दिव्यराजहंसावलीविराजितैरावृते) ஶுத்3த4 ஸத்வமயமான ராஜஹம்ஸங்களினுடைய ஒழுங்குகளாலே விளங்கா நின்றுள்ள முன் சொன்னவற்றாலே சூழப்பட்டிருப்பதாய்,
“நிரஸ்தாதிஶயாநந்தை3க ரஸதயா ச” (निरस्तातिशयनानन्दैकरसतया च) நிரஸ்தமான மிகுதியையுடைத்தாய், ஆநந்த3மாய் முடிவின்றியிலேயிருக்கிற ஶுக2மாயிருக்கையாலும், “அநந்த்யாச்ச” (अनन्त्याच्च) முடிவில்லாமையாலும், “ப்ரவிஷ்டாநுந்மாத3யத்3பி4:” (प्रविष्टानुन्मादयद्भिः🙂 ரஸ்யதையாலே உள் புகுந்தவர்களைப் பிச்சேற்றவற்றான, “க்ரீடோ3த்3தே3ஶைர்விராஜிதே” (क्रीडोद्देशैर्विराजिते) இப்படிப்பட்ட க்ரீடோ3த்3தே3ஶங்களாலே விளங்கா நிற்பதாய்,
மூ: தத்ர தத்ர க்ருததி3வ்ய புஷ்பபர்யங்கோபஶோபி4தே, நாநா புஷ்பாஸவாஸ்வாத3 மத்தப்4ருங்கா3வளீபி4ருத்3கீ3யமான தி3வ்யகா3ந்த4ர்வேணாபூரிதே, சந்த3நாக3ரு கர்பூர தி3வ்யபுஷ்பாவகா3ஹி மந்தா3நிலாஸேவ்யமாநே, மத்4யே புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே மஹதி தி3வ்யயோக3 பர்யங்கே அநந்தபோ4கி3நி, ஶ்ரீமத்3வைகுண்டை2ஶ்வர்யாதி3 தி3வ்யலோகமாத்மகாந்த்யா விஶ்வமாப்யாயயந்த்யா ஶேஷ ஶேஷாஶநாதி3 ஸர்வம் பரிஜநம் ப4க3வதஸ்தத்தத3வஸ்தோ2சித பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா ஶீலரூபகு3ண விலாஸாதி3பி4ராத்மாநுரூபயா ஶ்ரியாஸஹாஸீநம்,
(तत्र तत्र कृतदिव्यपुष्पपर्यङ्कोपशोभिते, नानापुष्पासवास्वादमत्तभृङ्गावलीभिरुद्गीयमान दिव्यगान्धर्वेणापूरिते चन्दनागरुकर्पूरदिव्यपुष्पावगाहि मन्दानिलासेव्यमाने, मध्ये पुष्पसञ्चयविचित्रिते, महति दिव्ययोगपर्यङ्के अनन्तभोगिनि, श्रीमद्वैकुण्ठैश्वर्यादि दिव्यलोकमात्मकान्त्या विश्वमाप्याययन्त्या शेषशेषाशनादि सर्वं परिजनं भगवतस्तत्तदवस्थोचितपरिचर्यायामाज्ञापयन्त्या, शीलरूपगुणविलासादिभिरात्मानुरूपया श्रिया सहासीनं)
வ்யா: “தத்ர தத்ர க்ருததி3வ்ய புஷ்பபர்யங்கோபஶோபி4தே” (तत्र तत्र कृतदिव्यपुष्पपर्यङ्कोपशोभिते) அவ்வோவிடங்களிலே பண்ணப்பட்ட பூம்படுக்கைகளாலே அலங்க்ருதமாய், “நாநா புஷ்பாஸவாஸ்வாத3 மத்தப்4ருங்கா3வளீபி4ருத்3கீ3யமான தி3வ்யகா3ந்த4ர்வேணாபூரிதே” (नानापुष्पासवास्वादमत्तभृङ्गावलीभिरुद्गीयमान दिव्यगान्धर्वेणापूरिते) நாநாவித4மான புஷ்பங்களிலுண்டான மது4வைப் பானம் பண்ணி அத்தாலே களித்த வண்டுகளின் ஒழுங்குகளாலே பாடப்படாநின்ற கா3ந்த4ர்வ வித்3யையாலே நிறைந்திருப்பதாய், “சந்த3நாக3ரு கர்பூர தி3வ்யபுஷ்பாவகா3ஹி மந்தா3நிலாஸேவ்யமாநே” (चन्दनागरुकर्पूरदिव्यपुष्पावगाहि मन्दानिलासेव्यमाने) சந்த3நம், அகில், கற்பூரம், பூக்கள் இவற்றிலே உட்புகுந்து அங்குள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருகிற தென்றலாலே ஸேவிக்கப்படுமதாய் “மத்4யே புஷ்ப ஸஞ்சய விசித்ரிதே” (मध्ये पुष्पसञ्चयविचित्रिते) நடுவில் விடுபூக்களாலே விசித்ரிதமாய் “மஹதி தி3வ்யயோக3 பர்யங்கே” (महति दिव्ययोगपर्यङ्के) பெரிய திருப்பள்ளிக் கட்டிலாயிருக்க்கிறதிலே, “அநந்தபோ4கி3நி” (अनन्तभोगिनि) திருவனந்தாழ்வான் மேலே.
இப்படியிருக்கிற படுக்கையிலே நாய்ச்சிமாருடன் கூடியெழுந்தருளியிருக்கும்படி சொல்லுகிறது மேல். “ஶ்ரீமத்3வைகுண்டை2ஶ்வர்யாதி3 தி3வ்யலோகம்” (श्रीमद्वैकुण्ठैश्वर्यादि दिव्यलोकम्) இப்படியிருக்கிற தி3வ்யலோகத்தை. “ஆத்மகாந்த்யா” (आत्मकान्त्या) தன்னுடைய காந்தியாலே “விஶ்வமாப்யாயயந்த்யா” (विश्वमाप्याययन्त्या) விஶ்வத்தையும் ஆப்யாயநம் பண்ணுவிப்பியா நின்றுகொண்டு. “ஶேஷ ஶேஷாஶநாதி3 ஸர்வம் பரிஜநம்” (शेषशेषाशनादि सर्वं परिजनं) திருவனந்தாழ்வான் ஸேனை முதலியாருள்ளிட்ட பரிஜநமெல்லாவற்றையும் “ப4க3வதஸ்தத்தத3வஸ்தோ2சித பரிசர்யாயாம் ஆஜ்ஞாபயந்த்யா” (भगवतस्तत्तदवस्थोचितपरिचर्यायामाज्ञापयन्त्या) ஸர்வேஶ்வரனுக்கு அந்தந்த அவஸ்தை2களுக்கீடாம்படியான கைங்கர்யத்திலே நியமியா நிற்பாளாய், “ஶீலரூபகு3ண விலாஸாதி3பி4ராத்மாநுரூபயா” (शीलरूपगुणविलासादिभिरात्मानुरूपया) ஶீலகு3ணோபலக்ஷிதமான ஆத்மகு3ணமென்ன, ரூபகு3ணோபலக்ஷிதமான ஸௌந்த3ர்யாதி3 கு3ணமென்ன, விலாஸமென்ன இவை தொடக்கமானவற்றாலே ஸர்வேஶ்வரனுக்கு ஸத்3ருஶையாயுள்ளவளாய், “ஶ்ரியா ஸஹாஸீநம்” (श्रिया सहासीनं) இப்படிப்பட்ட பெரியபிராட்டியாரோடே கூடியிருப்பானாய்,
மூ: ப்ரத்யக்3ரோந்மீலித ஸரஸிஜ ஸ்த்3ருஶநயந யுக3ளம், ஸ்வச்ச2நீலஜீமூத ஸங்காஶம் (प्रत्यग्रोन्मीलितसरसिज सदृशनयनयुगलं, स्वच्छनीलजीमूतसङ्काशं) அத்யுஜ்வலபீதவாஸஸம் ஸ்வயா ப்ரப4யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச2யா மாணிக்யாப4யா க்ருத்ஸ்நம் ஜக3த்பா4ஸயந்தம், (अत्युज्वलपीतवाससं स्वया प्रभयाऽतिनिर्मलयाऽतिशीतलयाऽतिकोमलया स्वच्छया माणिक्याभया कृत्स्नं जगद्भावयन्तं) அசிந்த்ய தி3வ்யாத்3பு4தநித்ய யௌவ்வநஸ்வபா4வலாவண்யமயாऽம்ருத ஸாக3ரம், (अचिन्त्यदिव्याद्भुतनित्ययौवनस्वभावलावण्यमयाऽमृतसागरं) அதிஸௌகுமார்யாதீ3ஷத் ப்ரஸ்விந்நவதா3லக்ஷ்யமாண லலாடப2லக தி3வ்யாலகாவலீ விராஜிதம், (अतिसौकुमार्यादीषत्प्रस्विन्नवदालक्ष्यमाणललाटफलक–दिव्यालकावलीविराजितं) ப்ரபு3த்3த4முக்தா4ம்பு3ஜ சாருலோசநம் ஸவிப்4ரம ப்4ரூலத முஜ்வலாத4ரம் ஶுசிஸ்மிதம் கோமலக3ண்ட3முந்நஸம், (प्रबुद्धमुग्धाम्बुजचारुलोचनं सविभ्रमभ्रूलतमुज्वलाधरं, शुचिस्मितं, कोमलगण्डमुन्नसं) உத3க்3ரபீநாம்ஸவிளம்பி3 குண்ட3லாலகாவலீ ப3ந்து4ரகம்பு3கந்த4ரம் ப்ரியாவதம்ஸோத்பல கர்ணபூ4ஷண ஶ்லதா2லகாப3ந்த4 விமர்த3ஶம்ஸிபி4ஶ் சதுர்பி4ராஜாநு விலம்பி3பி4ர் பு4ஜைர்விராஜிதம், (उदग्रपीनांसविलम्बिकुण्डलालकावली बन्धुरकम्बुकन्धरं प्रियावतंसोत्पल कर्णभूषणश्लथालकाबन्ध विमर्दशंसिभिः चतुर्भिराजानुविलम्बिभिर्भुजैर्विराजितं) அதிகோமலதி3வ்ய ரேகா2லங்க்ருதாதாம்ரகரதலம் தி3வ்யாங்கு3லீயக விராஜிதம், (अतिकोमल दिव्यरेखालङ्कृताताम्रकरतलं, दिव्याङ्गुलीयकविराजितं) அதிகோமல தி3வ்யநகா2வலீ விராஜிதாதிரக்தாங்குலீபி4ரலங்க்ருதம் தத்க்ஷணோந்மீலித புண்ட3ரீக ஸத்3ருஶசரணயுக3ளம், (अतिकोमल दिव्यनखावलीविराजितमतिरक्ताङ्गुलीभिरलङ्कृतं, तत्क्षणोन्मीलित पुण्डरीकसदृशचरणयुगलम्)
வ்யா: “ப்ரத்யக்3ரோந்மீலித ஸரஸிஜ ஸ்த்3ருஶநயந யுக3ளம்” (प्रत्यग्रोन्मीलितसरसिज सदृशनयनयुगलं) அப்போதலர்ந்த தாமரைப்போலேயிருக்கிற திருக்கண்களையுடையவனை. “ஸ்வச்ச2நீலஜீமூத ஸங்காஶம்” (स्वच्छनीलजीमूतसङ्काशं) தெளிந்த காளமேக4ம் போலேயிருக்கிறவனை. “அத்யுஜ்வலபீதவாஸஸம்” (अत्युज्वलपीतवाससं) அறப் பளபளத்த திருப்பீதாம்ப3ரத்தையுடையவனை. “ஸ்வயா ப்ரப4யா” (स्वया प्रभया) தன்னுடையதான காந்தியாலே. “அதிநிர்மலயா” (अतिनिर्मलया) மிகவும் அழுக்கற்று. “அதிஶீதலயா” (अतिशीतलया) அறக் குளிர்ந்திருப்பதாய், “ஸ்வச்ச2யா” (स्वच्छया) மிகவும் அச்ச2மாயிருப்பதாய் “மாணிக்யாப4யா” (माणिक्याभया) மாணிக்கம் போலேயிருக்கிற ப்ரபை4யை உடைத்தான தன் காந்தியாலே “க்ருத்ஸ்நம் ஜக3த்பா4ஸயந்தம்” (कृत्स्नं जगद्भावयन्तं) எல்லா ஜக3த்தையும் ப்ரகாஶிப்பிப்பானாய்
“அசிந்த்ய” (अचिन्त्य) சிந்தயிதுமஶக்யமாய் “தி3வ்ய” (दिव्य) அப்ராக்ருதமாய் “அத்3பு4த” (अद्भुत) மிகவுமாஶ்சர்யபூ4தமாய் “நித்ய யௌவ்வநஸ்வபா4வலாவண்யமயாऽம்ருத ஸாக3ரம்” (नित्ययौवनस्वभावलावण्यमयाऽमृतसागरं) போது செய்யாதபடியான நித்ய யௌவனத்தையே ஸ்வபா4வமாகவுடைத்தாய், அழகாகிற அம்ருதத்துக்குக் கடலாய், “அதிஸௌகுமார்யாதீ3ஷத் ப்ரஸ்விந்நவதா3லக்ஷ்யமாண லலாடப2லக தி3வ்யாலகாவலீ விராஜிதம்” (अतिसौकुमार्यादीषत्प्रस्विन्नवदालक्ष्यमाणललाटफलक–दिव्यालकावलीविराजितं) அற மெல்லியதாகையாலே தளிர் போலே புரைந்து தோற்றுகிற திருநெற்றியிலே அலையெறிகிற திருக்குழல் கற்றையாலே விளங்கா நிற்பானாய், ப்ரபு3த்3த4 (प्रबुद्ध) தொடங்கி- “விராஜிதம்” (विराजितं) அறுதியாகவுள்ள பத3ங்களுக்குப் பொருள் ஸ்தோத்ர பாஷ்யத்தில் கண்டுகொள்வது.
“அதிகோமலதி3வ்ய ரேகா2லங்க்ருதாதாம்ரகரதலம்” (अतिकोमल दिव्यरेखालङ्कृताताम्रकरतलं,) அதிகோமலமாய், சால அழகியதாயிருக்கிற தி3வ்ய ரேகை2யுண்டு. தாமரை, ஶங்க2ம், சக்ரம், கொடிதொடக்கமான ரேகை2கள், அவற்றாலே அலங்க்ருதமாய் மிகவும் சிவந்திருக்கிற திருக் கைத்தலத்தை உடையவனாய், “தி3வ்யாங்கு3லீயக விராஜிதம்” (दिव्याङ्गुलीयकविराजितं) திருவிரலில் சாற்றின அறுகாழி மோதிரத்தாலே விளங்கா நிற்பானாய், “அதிகோமல தி3வ்யநகா2வலீ விராஜிதம்” (अतिकोमल दिव्यनखावलीविराजितम्)
மிகவும் ஸுகுமாரமாயிருக்கிற திருவுகிர் ஒழங்குகளாலே விளங்கா நிற்பானாய், “அநுரக்தாங்குலீபி4ரலங்க்ருதம்” (अनुरक्ताङ्गुलीभिरलङ्कृतं) சிவந்த திருவிரல்களாலே விளங்கா நிற்பானாய் “தத்க்ஷணோந்மீலித புண்ட3ரீக ஸத்3ருஶசரணயுக3ளம்” (तत्क्षणोन्मीलित पुण्डरीकसदृशचरणयुगलम्) அப்போதலர்ந்த தாமரை போலேயிருக்கிறே இரண்டு திருவடிகளையுடையவனாய்.
மூ: அதிமநோஹர கிரீட மகுட சூடா3வதம்ஸ மகரகுண்ட3ல க்3ரைவேயக ஹார கேயூர கடக ஶ்ரீவத்ஸகௌஸ்துப4 முக்தா தா3மோத3ரப3ந்த4ந பீதாம்ப3ர காஞ்சீகு3ண நூபுராதி3பி4ரத்யந்த ஸுக2 ஸ்பர்ஶைர் தி3வ்யக3ந்தை4ர் பூ4ஷணைர் பூ4ஷிதம்,
(अतिमनोहर किरीट मकुट चूडावतंस मकर कुण्डल ग्रैवेयक हार केयूर कटक श्रीवत्स कौस्तुभ मुक्ता दामोदरबन्धन पीताम्बर काञ्ची गुण नूपुरादिभिरत्यन्त सुखस्पर्शैर्दिव्य गन्धैर्भूषणैर्भूषितं)
வ்யா: “அதிமநோஹர கிரீட இத்யாதி3” (अतिमनोहर किरीट) கண்டார் நெஞ்சும் பறியுண்ணும்படியான கிரீடா3திகளாலே அலங்க்ருத “கிரீடமகுட” (किरीट मकुट) கிரீடமென்ன மகுடமென்ன; அன்றிக்கே, கிரீடமான மகுடமென்ன; “சூடா3” (चूडा) அதிலே சாற்றின திருச்சூட்டென்ன, “அவதம்ஸ” (अवतंस) திருச்செவிமலரென்ன; “மகரகுண்ட3ல” (मकर कुण्डल) திருமகரக்குழையென்ன; “க்3ரைவேயக” (ग्रैवेयक) திருக்கழுத்துப் பணியென்ன; “ஹார” (हार) திருமார்விலே தழையச்சாத்தும் திருவாரமென்ன; “கேயூர” (केयूर) பா3ஹுவளையமென்ன; “கடக” (कटक) முன் கையில் சாத்தும் கடக வளையமென்ன, “ஶ்ரீவத்ஸ” (श्रीवत्स) திருமார்பில் அநிதர ஸாதா4ரணமான திருமறுவென்ன; “கௌஸ்துப4” (कौस्तुभ) ஶ்ரீகௌஸ்துப4மென்ன; “முக்தா தா3ம” (मुक्ता दाम) திருமுத்துவடமென்ன; “உத3ரப3ந்த4ந” (उदरबन्धन) திருவுத3ரப3ந்த4நமென்ன; “பீதாம்ப3ர” (पीताम्बर) கநகசேலமென்ன; “காஞ்சீகு3ண” (काञ्ची गुण) அரைநூல் பட்டிகையென்ன, “நூபுர” (नूपुरा) திருச்சிலம்பென்ன , “ஆதி3பி4:” (आदिभि:) இவைதொடக்கமான, “அத்யந்த ஸுக2ஸ்பர்ஶை:” (अत्यन्त सुखस्पर्शै🙂 திருமேனிக்குப் பூத்தொடுமாபோலே ஸ்பர்ஶிக்கும்போது ஸுக2கரமாயிருப்பனவாய், “தி3வ்யக3ந்தை4:” (र्दिव्य गन्धै🙂 அப்ராக்ருதமான தி3வ்ய பரிமளத்தையுடைத்தாயிருப்பனவாய், “பூ4ஷணைர் பூ4ஷிதம்” (भूषणैर्भूषितं) இப்படிப்பட்ட தி3வ்யாப4ரண ஆழ்வார்களாலே அலங்க்ருதனா இருப்பானாய்,
மூ: ஶ்ரீமத்யா வைஜந்த்யா வநமாலயா விராஜிதம், ஶங்க2சக்ரக3தா3ஸி ஶார்ங்கா3தி3 தி3வ்யாயுதை4: ஸேவ்யமாநம் ஸ்வஸங்கல்ப மாத்ராவக்லுப்த ஜக3ஜ்ஜந்மஸ்தி2தி த்4வம்ஸாதி3கே ஶ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்தாத்மைஶ்வர்யம் வைநதேயாதி3பி4: ஸ்வபா4வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிகஸ்வபா4வை: ப4க3வத் பரிசர்யா கரண யோக்3யைர்ப4க3வத்பரிசர்யைக போ4கை3: நித்ய ஸித்3தை4ரநந்தைர்யதா2யோக3ம் ஸேவ்யமானம்
(श्रीमत्या वैजयन्त्या वनमालया विराजितं, शङ्खचक्रगदासि शार्ङ्गादिदिव्यायुधैः सेव्यमानं स्वसङ्कल्प मात्रावकॢप्त जगज्जन्मस्थिति ध्वंसादिके श्रीमति विष्वक्सेने न्यस्तसमस्तात्मैश्वर्यं वैनतेयादिभिः स्वभावतो निरस्त समस्त सांसारिकस्वभावैः भगवत्परिचर्याकरण–योग्यैर्भगवत्परिचर्यैक भोगैःनित्यसिद्धैरनन्तैर्यथायोगं सेव्यमानं )
வ்யா: “ஶ்ரீமத்யா வைஜயந்த்யா வநமாலயா விராஜிதம்” (श्रीमत्या वैजयन्त्या वनमालया विराजितं) அழகையுடைத்தாய் வைஜயந்தி என்று பேர் பெற்றிருக்கிற வநமாலையாலே விளங்கா நிற்பானாய் “ஶங்க2சக்ரக3தா3ஸி ஶார்ங்கா3தி3 தி3வ்யாயுதை4: ஸேவ்யமாநம்” (शङ्खचक्रगदासि शार्ङ्गादिदिव्यायुधैः सेव्यमानं) ஸ்நேஹத்தாலே அஸ்தா2ந ஶங்கா வ்யஸநிகளான பஞ்சாயுத4ம் தொடக்கமான தி3வ்யாயுத4ங்களாலே சூழ்ந்திருந்தேத்தப்படுமவனாய்,
“ஸ்வஸங்கல்ப மாத்ராவக்லுப்த ஜக3ஜ்ஜந்மஸ்தி2தி த்4வம்ஸாதி3கே” (स्वसङ्कल्प मात्रावकॢप्त जगज्जन्मस्थिति ध्वंसादिके) நினைத்த மாத்திரத்தாலே நிர்வஹிக்கப்பட்ட ஸ்தா2வர ஜங்க3மாத்மகமான ஸமஸ்தவஸ்துக்களினுடைய உத்பத்தி ஸ்தி2தி விநாஶங்களென்ன, நியமாதி3களென்ன, இவற்றையுடையதாய் “ஶ்ரீமதிவிஷ்வக்ஸேநே” (श्रीमति विष्वक्सेने) கைங்கர்ய லக்ஷ்மிக்கு இட்டுப்பிறந்த ஸேநை முதலியார் பக்கலிலே “ந்யஸ்தஸமஸ்தாத்மைஶ்வர்யம்” (न्यस्तसमस्तात्मैश्वर्यं) வைக்கப்பட்ட தம்முடைய எல்லா நியந்த்ருத்வத்தையுடையவனாயுள்ளவனை.
பெரியதிருவடி நாயனார் தொடக்கமான ஸூரிபரிஷத்தாலே ஸேவ்யனா இருக்குமென்கிறதுமேல். “வைநதேயாதி3பி4:” (वैनतेयादिभिः) பெரியதிருவடி நாயனார் தொடக்கமான பாரிஷத்யர், க3ணநாயகர் தொடக்கமானவர்களாலே; பாரிஷதா3த்3யராகிறார். க3ஜவக்த்ராதி3கள், க3ணநாயகராகிறார். குமுதா3தி3கள். “ஸ்வபா4வதோ நிரஸ்த ஸமஸ்த ஸாம்ஸாரிகஸ்வபா4வை:” (स्वभावतो निरस्त समस्त सांसारिकस्वभावैः) ஒருநாள் வரையின்றிக்கே ஸ்வஸத்தா நிப3ந்த4நமாக இன்றியிலேயிருக்கிற ஸகல ஸாம்ஸாரிக ஸ்வபா4வத்தையுடையராய். “ப4க3வத்பரிசர்யாகரணயோக்3யை:” (भगवत्परिचर्याकरण–योग्यै:)உடையவன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணுகைக்கு இட்டுப் பிறந்தவர்களாய், “ப4க3வத்பரிசர்யைக போ4கை3:” (र्भगवत्परिचर्यैक भोगैः) ப4க3வத் கைங்கர்யமொழியத் தங்களுக்கு தா4ரகமின்றியிலே யிருப்பாராய் “நித்ய ஸித்3தை4:” (नित्यसिद्धै:) இப்படியிருக்கிறே நித்யஸூரிகளாலே, “அநந்தை” (अनन्तै:) இன்னதனை என்று முடிவில்லாதவர்களாலே “யதா2யோக3ம் ஸேவ்யமானம்” (यथायोगं सेव्यमानं) நின்ற நிலைகளுக் கீடாக ஸேவிக்கப்படுமவனை
மூ: ஆத்மபோ4கே3நாநுஸம்ஹித பராதி3கால தி3வ்யாமல கோமலாவலோகநேந விஶ்வமாஹ்லாத3யந்தம், ஈஷது3ந்மீலிதமுகா2ம்பு3ஜோத3ர விநிர்க3தேந தி3வ்யாநநாரவிந்த3 ஶோபா4ஜநகேந, தி3வ்ய கா3ம்பீ4ர்யௌதா3ர்ய ஸௌந்த3ர்ய மாது4ர்யாத்3யநவதி4க கு3ணக3ண விபூ4ஷிதேந, அதிமநோஹர தி3வ்யபா4வக3ர்பே4ண தி3வ்யலீலாலாபாம்ருதேந அகி2லஜந ஹ்ருத3யாந்தராண்யாபூரயந்தம் ப4க3வந்தம் நாராயணம் த்4யாநயோகே3ந த்3ருஷ்ட்வா (आत्मभोगेनानुसंहित परादिकाल दिव्यामलकोमलावलोकनेन विश्वमाह्लादयन्तमीषदुन्मीलित– मुखाम्बुजोदरविनिर्गतेन दिव्याननारविन्दशोभाजनकेन दिव्यगाम्भीर्यौदार्य सौन्दर्यमाधुर्याद्यनवधिक गुणगणविभूषितेन अतिमनोहरदिव्यभावगर्भेण दिव्यलीलालापामृतेन अखिलजनहृदयान्तराण्यापूरयन्तं भगवन्तं नारायणं ध्यानयोगेन दृष्ट्वा)
வ்யா: “ஆத்மபோ4கே3நாநுஸம்ஹித பராதி3கால தி3வ்யாமல கோமலாவலோகநேந ” (आत्मभोगेनानुसंहित परादिकाल दिव्यामलकोमलावलोकनेन) இக்கடாக்ஷம் பரார்த்த2மாகவன்றிக்கே காலதத்வமுள்ளதனையும் ஸ்வயம் ப்ரயோஜநமாக அநுஸந்தி4க்கப்பட்டு விலக்ஷணமாய், அபராத4ங்களை நினைத்துக் கலங்குகையன்றிக்கே ஸுப்ரஸந்ந ஸுந்த3ரமான கடாக்ஷத்தாலே, “விஶ்வமாஹ்லாத3யந்தம்” (विश्वमाह्लादयन्तं) ஸமஸ்த வஸ்துக்களையும் உகப்பிக்கக்கடவனாய், “ஈஷது3ந்மீலிதமுகா2ம்பு3ஜோத3ர விநிர்க3தேந” (ईषदुन्मीलित– मुखाम्बुजोदरविनिर्गतेन) சிறிதலர்ந்த திருமுகத்தாமரையுடையிநின்றும் புறப்பட்டிருப்பதாய் “தி3வ்யாநநாரவிந்த3 ஶோபா4ஜநகேந” (दिव्याननारविन्दशोभाजनकेन) திருப்பவளத்துக்காப4ரணம் சாற்றினாற்போலே அழகையுண்டாக்கக் கடவதாய், “தி3வ்ய கா3ம்பீ4ர்யௌதா3ர்ய ஸௌந்த3ர்ய மாது4ர்யாத்3யநவதி4க கு3ணக3ண விபூ4ஷிதேந” (दिव्यगाम्भीर्यौदार्य सौन्दर्यमाधुर्याद्यनवधिक गुणगणविभूषितेन) பெரிய முழக்கமென்ன; அர்த்த2 போ4த4கத்வமென்ன, இனிமையென்ன; ஓஜ:ப்ரஸாதா3தி3களென்ன; இவை தொடக்கமான எண்ணிறந்த கு3ண க3ணங்களாலே அலங்க்ருதமாயிருப்பதாய். “அதிமநோஹர தி3வ்யபா4வக3ர்பே4ண” (अतिमनोहरदिव्यभावगर्भेण) நெஞ்சை வருத்தக்கடவதாய், தி3வ்யமான அபி4ப்ராயத்தையுள்ளே உடையதாய், “தி3வ்யலீலா லாபாம்ருதேந” (दिव्यलीलालापामृतेन) ஹர்ஷம் வழிந்த சொல்லாகிற அம்ருதத்தாலே “அகி2லஜந ஹ்ருத3யாந்தராண்யாபூரயந்தம்” (अखिलजनहृदयान्तराण्यापूरयन्तं) எல்லாருடைய நெஞ்சுகளின் அவகாஶமடைய நிறைப்பானாய் உள்ளவனை. “ப4க3வந்தம் நாரயணம்” (भगवन्तं नारायणं) இப்படி ஹேய ப்ரதிப4டமான கல்யாண கு3ணங்களுக்கு ஆகரனான நாராயணனை, “த்4யாநயோகே3ந த்3ருஷ்ட்வா” (ध्यानयोगेन दृष्ट्वा) மானஸஸாக்ஷாத்காரம் பண்ணி,
“த்4யாநயோகே3ந த்3ருஷ்ட்வா” (ध्यानयोगेन दृष्ट्वा) என்கையாலே- ப4க்தியைப் பண்ணினால் தத்ப2லமாக வரும் ஸாக்ஷாத்காரம் சொன்னாப்போலேயிராநின்றது. “ஶரணமநுவ்ரஜேத்” (शरणमनुव्रजेत्) என்று ப்ரபத்தி பண்ணினது நிஷ்ப2லமாமோவென்னில்; அன்று, ப்ரபத்தி ப2லமான ஸாக்ஷாத்காரத்தையே சொல்லுகிறது. ஆனால், “த்4யாநயோகே3ந ” (ध्यानयोगेन) என்றது செய்யும்படி என்னென்னில்; த்4யாந யோக3த்தாலே காணுமாப்போலே கண்டு என்கிறது. “த்4யாநயோகே3ந த்3ருஷ்ட்வா” (ध्यानयोगेन दृष्ट्वा) என்று, “ப்ரத்யஹமாத்மோஜ்ஜீவநாயை அநுஸ்மரேத்” (प्रत्यहमात्मोज्जीवनायै अनुस्मरेत्) என்று சொன்ன காலக்ஷேபார்த்தாநுஸந்தானந்தான் முற்றி வெளிப்பட்டதாகவுமாம்.
மூ: ததோ ப4க3வதோ நித்யஸ்வாம்யமாத்மநோ நித்யதாஸ்யம் ச யதா2வஸ்தி2தமநுஸந்தா4ய, கதா3ஹம் ப4க3வந்தம் நாராயணம் மமகுலநாத2ம் மமகுல தை3வதம் மமகுலத4நம் மமபோ4க்3யம் மம மாதரம் மம பிதரம் மம ஸர்வம் ஸாக்ஷாத்கரவாணி சக்ஷுஷா, கதா3ஹம் ப4க3வத்பாதா3ம்பு3ஜத்3வயம் ஶிரஸா ஸங்க்3ரஹீஷ்யாமி, (ततो भगवतो नित्यस्वाम्यमात्मनो नित्यदास्यं च यथावस्थितमनुसन्धाय कदाहं भगवन्तं नारायणं मम कुलनाथं मम कुलदैवतं मम कुलधनं मम भोग्यं मम मातरं मम पितरं मम सर्वं साक्षात्करवाणि चक्षूषा । कदाहं भगवत्पादाम्बुजद्वयं शिरसा सङ्ग्रहीष्यामि)
வ்யா: “ப4க3வதோ நித்யஸ்வாம்யமாத்மநோ நித்யதாஸ்யம் ச யதா2வஸ்தி2தமநுஸந்தா4ய” (भगवतो नित्यस्वाम्यमात्मनो नित्यदास्यं च यथावस्थितमनुसन्धाय) இருவருடையவும் ஶாஸ்த்ர ஸித்3த4மான ஸ்வஸ்வாமி ஸம்ப3ந்த4த்தையுணர்ந்து, இனி அந்த ஸாக்ஷாத்கார லாப4மான பேற்றில் மநோரத2ப்ரகாரம் சொல்லுகிறது மேல். “கதா3ஹம்– இத்யாதி3யாலே”. “கதா3” (कदा) அந்நாள் எந்நாள் ?என்ற பதறுகிறார்). “அஹம்” (अहं) அவ்யபி4சாரியான உபாயம் கைபுகுந்து பேற்றில் பதற்றத்தை உடையனான நான், “ப4க3வந்தம் நாராயணம்” (भगवन्तं नारायणं) ஆறியிருக்கவொண்ணாதபடியான கு3ணங்களையும் ப்ராப்தியையுமுடையவனை.
“மமகுலநாத2ம்” (मम कुलनाथं ) எனக்கு வகுத்த ஶேஷியாயுள்ளவனை. “மமகுல தை3வதம்” (मम कुलदैवतं) ஸாமாந்யமாயிருக்கையன்றிக்கே எங்களுக்கு குலக்ரமாக3தனாயுள்ளவனை. “மமகுலத4நம்” (मम कुलधनं) எனக்குக் குலக்ரமமாக ஆபத்துக்கு ஜீவிக்கக் கைம்முதலாயுள்ளவனை. “மமபோ4க்3யம்” (मम भोग्यं ) எனக்கு போ4க்3யமானவனை. “மம மாதரம்” (मम मातरं) எனக்கு தா4ரகனுமாய் போஷகனுமாயுள்ளவனை “மம பிதரம்” ( मम पितरं) எனக்கு உத்பாத3கனுமாய், ஹிதப்ரவர்தகனுமாயுள்ளவனை. “மமஸர்வம்” ( मम सर्वं) 99. “மாதாபிதா ப்4ராதா நிவாஸஶ் ஶரணம் ஸுஹ்ருத் க3திர் நாராயண:” (माता पिता भ्राता निवास: शरणं सुहृत् गतिर्नातायण🙂 என்றும், “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ” (त्वमेव माता च पिता त्वमेव) என்றும், “சேலேய் கண்ணியரும்” [திருவாய் 1-5-8] என்றும் சொல்லுகிறபடியே அநுக்தமான ஸமஸ்த வஸ்துக்களுமானவனை. “ஸாக்ஷாத்கரவாணி சக்ஷுஷா” () இப்போதை மானஸ ஸாக்ஷாத்காரமொழிய 198. “ஸதா3 பஶ்யந்தி” () என்கிறபடியே “கண்டுகொண்டேன் கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாள்” [பெருமாள் திரு 1-1] என்கிறார்.
“கதா3ஹம் ப4க3வத்பாதா3ம்பு3ஜத்3வயம் ஶிரஸா ஸங்க்3ரஹீஷ்யாமி” (कदाहं भगवत्पादाम्बुजद्वयं शिरसा सङ्ग्रहीष्यामि) 199. “மதீ3யமூர்தா4நமலம்கரிஷ்யதி” (मदीयमूर्धानमलङ्करिष्यति) என்றும், “தளிர் புரையும் திருவடிஎன் தலைமேலவே” [திருநெடு 1] என்றும் சொல்லுகிறபடியே வகுத்த ஶேஷியானவனுடைய நிரதிஶயபோ4க்3யமான திருவடித்தாமரைகளை நான் ஶிரஸாவஹிப்பதென்றோ என்கிறார்.
மூ: கதா3ஹம் ப4க3வத்பாதா3ம்பு3ஜ த்3வயபரிசர்யாகரண யோக்3யஸ்ததே3க போ4க3ஸ்தத்பாதௌ3 பரிசரிஷ்யாமி ( कदाहं भगवत्पादाम्बुजद्वय परिचर्याकरणयोग्यस्तदेक भोगस्तत्पादौ परिचरिष्यामि )
வ்யா: “கதா3ஹம் ப4க3வத்பாதா3ம்பு3ஜ த்3வயபரிசர்யாகரண யோக்3யஸ்ததே3க போ4க3ஸ்தத்பாதௌ3 பரிசரிஷ்யாமி ( कदाहं भगवत्पादाम्बुजद्वय परिचर्याकरणयोग्यस्तदेक भोगस्तत्पादौ परिचरिष्यामि ) இத்திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுகைக்கு யோக்3யனாய் கைங்கர்யம் பண்ணுவது என்றுகொலோ என்கிறார்.
மூ: கதா3ऽஹம் ப4க3வத்பாதா3ம்பு3ஜ த்3வய பரிசர்யாऽऽஶயா நிரஸ்தஸமஸ்தேதர போ4கா3ஶ: அபக3த ஸமஸ்த ஸாம்ஸாரிகஸ்வபா4வ: தத்பாதா3ம்பு3ஜத்3வயம் ப்ரவேக்ஷ்யாமி. (कदाऽहं भगवत्पादाम्बुजद्वयं परिचर्याऽऽशया निरस्तसमस्तेतर भोगाशोऽपगतसमस्तसांसारिकस्वभावः तत्पादाम्बुजद्वयंप्रवेक्ष्यामि)
வ்யா: “கதா3ऽஹம் ப4க3வத்பாதா3ம்பு3ஜ த்3வய பரிசர்யாऽऽஶயா நிரஸ்தஸமஸ்தேதர போ4கா3ஶ: அபக3த ஸமஸ்த ஸாம்ஸாரிகஸ்வபா4வ: தத்பாதா3ம்பு3ஜத்3வயம் ப்ரவேக்ஷ்யாமி. (कदाऽहं भगवत्पादाम्बुजद्वयं परिचर्याऽऽशया निरस्तसमस्तेतर भोगाशोऽपगतसमस्तसांसारिकस्वभावः तत्पादाम्बुजद्वयंप्रवेक्ष्यामि) ஸர்வேஶ்வரன் திருவடிகளில் கைங்கர்ய ருசியாலே போக்கடிக்கபட்ட புறம்புள்ள விஷயம்களாலுண்டான போ4க3 ஶ்ரத்3தை4யையுடையனாய், தன்னிடையே பாறிப்போன ராக3த்3வேஷாதி3களாகிற ஸமஸ்த ஸாம்ஸாரிக ஸ்வபா4வத்தையுடையனாய்க்கொண்டு, நான் என்றைக்கு அந்த பாதா3ம்பு3ஜ த்3வயத்தைக் கிட்டுவேனென்கிறார்.
மூ: கதா3மாம் ப4க3வான் ஸ்வகீயயா அதிஶீதலயா த்3ருஶாவலோக்ய ஸ்நிக்3த4க3ம்பீ4ரமது4ரயா கி3ரா பரிசர்யாயாமாஜ்ஞாபயிஷ்யதீதி ப4க3வத்பரிசர்யாயாமாஶாம் வர்த4யித்வா (कदा मां भगवान् स्वकीययाऽतिशीतलया दृशाऽवलोक्य स्निग्धगम्भीरमधुरया गिरा परिचर्यायां आज्ञापयिष्यतीति भगवत्परिचर्यायामाशां वर्धयित्वा)
வ்யா: “கதா3மாம் ப4க3வான் ஸ்வகீயயா அதிஶீதலயா த்3ருஶாவலோக்ய ஸ்நிக்3த4க3ம்பீ4ரமது4ரயா கி3ரா பரிசர்யாயாமாஜ்ஞாபயிஷ்யதி” (कदा मां भगवान् स्वकीययाऽतिशीतलया दृशाऽवलोक्य स्निग्धगम्भीरमधुरया गिरा परिचर्यायां आज्ञापयिष्यति) புருஷோத்தமனானவன் தன்னுடைய அறக்குளிர்ந்த திருக்கண்களாலே கடாக்ஷித்து முழங்கி இனிதான பேச்சாலே “முகப்பே கூவிப்பணி கொள்ளாய்”[திருவாய் 8-5-7] என்கிறபடியே கைங்கர்யத்தில் என்னை ஏவப் புகுகிறதெப்போதோ? “இதி ப4க3வத்பரிசர்யாயாமாஶாம் வர்த4யித்வா” (भगवत्परिचर्यायामाशां वर्धयित्वा) என்று இப்புடைகளிலே ப4க3வத் கைங்கர்யத்தில் ஆசையை வளர்த்தி.
மூ: தயைவாஶயா தத்ப்ரஸாதோ3பப்3ரும்ஹிதயா ப4க3வந்தமு்பேத்ய தூ3ராதே3வ ப4க3வந்தம் ஶேஷபோ4கே3 ஶ்ரியா ஸஹாஸீநம் வைநதேயாதி3பி4ஸ்ஸேவ்யமானம் “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி ப்ரணம்யோத்தா2யோத்தா2ய புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்4வஸவிநயாவநதோ பூ4த்வா ப4க3வத்பாரிஷத3 க3ணநாயகைர்த்3வாரபாலை: க்ருபயா ஸ்நேஹக3ர்ப4யா த்3ருஶாவலோகித: ஸம்யக3பி4வந்தி3தை ஸ்தைஸ்தைரேவாநு மதோ ப4க3வந்தமு்பேத்ய ஶ்ரீமதா மூலமந்த்ரேண மாமைகாந்திகாத்யந்திக பரிசர்யாகரணாய பரிக்3ருஹ்ணீஷ்வேதி யாசமான: ப்ரணம்யாத்மானம் ப4க3வதே நிவேத3யேத்
(तयैवाशया तत्प्रसादोपबृंहितया भगवन्तमुपेत्य दूरादेव भगवन्तं शेषभोगे श्रिया सहासीनं वैनतेयादिभिः सेव्यमानं “समस्तपरिवाराय श्रीमते नारायणाय नम” इति प्रणम्योत्थायोत्थाय पुनः पुनः प्रणम्य अत्यन्त साध्वसविनयावनतो भूत्वा भगवत्पारिषदगणनायकैर्द्वारपालैः कृपया स्नेहगर्भया दृशाऽवलोकितः सम्यगभिवन्दितैः तैस्तैरेवानुमतो भगवन्तमुपेत्य श्रीमता मूलमन्त्रेण मां ऐकान्तिकात्यन्तिकपरिचर्याकरणाय परिगृह्णीष्वेति याचमानः प्रणम्यात्मानं भगवते निवेदयेत्)
வ்யா: “தயைவாஶயா தத்ப்ரஸாதோ3பப்3ரும்ஹிதயா ப4க3வந்தமு்பேத்ய” (तयैवाशया तत्प्रसादोपबृंहितया भगवन्तमुपेत्य) ப4க3வத்ப்ரஸாத4த்தாலே மேன்மேலே கரை புரண்டு பெருகிவருகிற அந்தவாஶையோடேகூட ஸர்வேஶ்வரனைக்கிட்டி. “தூ3ராதே3வ ப4க3வந்தம் ஶேஷபோ4கே3 ஶ்ரியா ஸஹாஸீநம்– இத்யாதி3” (दूरादेव भगवन्तं शेषभोगे श्रिया सहासीनं) “தூ3ராதே3வ– ப்ரணம்ய” (दूरादेव–प्रणम्य) என்றுமேலே அந்வயம். திருவனந்தாழ்வான் மடியிலே பெரிய பிரட்டியாரோடேகூட இருப்பானாய், பெரியதிருவடிநாயனார் தொடக்கமான நித்யஸூரிகளால் ஸதா3 ஸேவ்யமானனாயிருக்கிற ப4க3வானை. “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாயநம:” (समस्तपरिवाराय श्रीमते नारायणाय नम🙂 என்று தூ3ரத்திலே தெண்டனிட்டு விழுவதெழுவதாய், பின்னையும் ஆத3ராதிஶயத்தாலே பலகால் தெண்டனிட்டு,
“அத்யந்த ஸாத்4வஸ–இத்யாதி3” (अत्यन्त साध्वस) மிகவுமுண்டான உள்ளச்சத்தாலே புடவை ஒதுக்குவது, வாயைப் புதைப்பதாய் கொண்டு தலைசாய்த்து ப4க3வானுடைய பாரிஷத3த் திருவோலக்கத்திலவர்கள், க3ணநாயகர், படைத்தலைவர், திருவாசல் காப்பார், இவர்களாலே ஸ்நேஹத்தைப் பொதிந்து கொண்டிருக்கிற க்ருபையாலே பார்க்கப்பட்டு, “ஸம்யக3பி4வந்தி3தை ஸ்தைஸ்தைரேவாநு மதோ ப4க3வந்தமு்பேத்ய ஶ்ரீமதா மூலமந்த்ரேண மாமைகாந்திகாத்யந்திக பரிசர்யாகரணாய பரிக்3ருஹ்ணீஷ்வேதி யாசமான: ப்ரணம்யாத்மானம் ப4க3வதே நிவேத3யேத்” (सम्यगभिवन्दितैः तैस्तैरेवानुमतो भगवन्तमुपेत्य श्रीमता मूलमन्त्रेण मां ऐकान्तिकात्यन्तिकपरिचर्याकरणाय परिगृह्णीष्वेति याचमानः प्रणम्यात्मानं भगवते निवेदयेत्) பு3த்3தி4 பூர்வகமாக தெண்டனிடப் பட்டிருக்கிற அவர்களாலே அநுமதனாய்க் கொண்டு ஶ்ரீவைகுண்ட2நாத2னருகே சென்று பெரியதிருமந்த்ரத்தாலே அடியேனை அநந்யபரனாக்கி, நிரவதி4கமான கைங்கர்யத்தின் பொருட்டு கைங்கர்யம் கொண்டருளவேணுமென்று ப்ரார்த்தி2யாநிற்கிற தன்னை எம்பெருமானுக்கு ஸமர்பிக்கக்கடவன்.
நான்காம் சூர்ணை அவதாரிகை:
மூ: ததோ ப4க3வதா ஸ்வயமேவாத்ம ஸஞ்ஜீவநேந அமர்யாத3 ஶீலவதா அதி ப்ரேமாந்விதேநாவலோகநேந அவலோக்ய ஸர்வதே3ஶஸர்வகால ஸர்வாவஸ்தோ2சிதாத்யந்த ஶேஷபா4வாய ஸ்வீக்ருதோநுஜ்ஞாதஶ்சாத்யந்த ஸாத்4வஸவிநயாவநத: கிங்குர்வாண: க்ருதாஞ்ஜலிபுடோ ப4க3வந்தமுபாஸீத
(ततो भगवता स्वयमेवात्मसञ्जीवनेन मर्यादाशीलवता अतिप्रेमान्वितेनावलोकनेनावलोक्य सर्वदेशसर्वकाल–सर्वावस्थोचितात्यन्तशेषभावाय स्वीकृतोऽनुज्ञातश्च अत्यन्तसाध्वसविनयावनतः किङ्कुर्वाणः कृताञ्जलिपुटो भगवन्तमुपासीत)
வ்யா: இனிமேல் இப்படி ப்ரார்த்த2நாநுகு3ணமாக அங்கீ3க்ருதனாய், கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருப்பானென்கிறது “ததோ ப4க3வதா இத்யாதி3யாலே”.(ततो भगवता) “தத:” (तत🙂 ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணின அநந்தரம், “ப4க3வதா” (भगवता) புருஷோத்தமனாலே, “ஸ்வயமேவ” (स्वयमेव) இனி இவன் அபேக்ஷித்தபடித்தானே, “ஆத்ம ஸஞ்ஜீவநேந அமர்யாத3 ஶீலவதா அதி ப்ரேமாந்விதேநாவலோகநேந” (आत्मसञ्जीवनेनऽमर्यादाशीलवता अतिप्रेमान्वितेनावलोकनेन) ஆத்ம ஸமுஜ்ஜீவந ஹேதுவான பார்வையாலே “அவலோக்ய” (अवलोक्य) கடாக்ஷித்து; “ஸர்வதே3ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ2சிதாத்யந்த ஶேஷபா4வாய” (सर्वदेशसर्वकाल–सर्वावस्थोचितात्यन्तशेषभावाय) எல்லா தே3ஶத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லாவவஸ்தை2களிலும் உசிதமான முடிவில்லாத ஶேஷபா4வத்தின்பொருட்டு. “ஸ்வீக்ருதோऽநுஜ்ஞாதஶ்ச” (स्वीकृतोऽनुज्ञातश्च) அங்கீ3கரிக்கப்பட்டவனாயும் அநுமதி பண்ணப்பட்டவனாயும் கொண்டு.
“அத்யந்தஸாத்4வஸவிநயாவநத:” (अत्यन्तसाध्वसविनयावनतः) மிகவுமுள்ள அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும் தலை சாய்த்து. “கிங்குர்வாண:” (किङ्कुर्वाणः) கிங்கரனாயிருந்து கொண்டு. “க்ருதாஞ்ஜலிபுட:” (कृताञ्जलिपुट:) ஸ்வரூபாநுரூபமான அஞ்சலியைப் பண்ணிக்கொண்டு “ப4க3வந்தமுபாஸீத” (भगवन्तमुपासीत) 112. “ஸோऽஶ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ ப்3ரஹ்மணாவிபஶ்சிதா” (सोऽस्नुते सर्वान् कामान् सह ब्रह्मणाविपश्चिता) என்கிறபடியே ஶ்ரீவைகுண்ட2 நாதனுடைய ஜ்ஞாநஶக்த்யாதி3 கல்யாணகு3ணங்களை அநுஸந்தி4த்து 70. “ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே” (एतत् साम गायन्नास्ते) என்றும், “அடியரோடிருந்தமை” [திருவாய் 10-9-11] என்றும் சொல்லுகிறபடியே ஸேவித்திருப்பானென்கிறார்.
ஐந்தாம் சூர்ணை அவதாரிகை:
மூ: ததஶ்சாநுபூ4யமான பா4வவிஶேஷ: நிரதிஶயப்ரீத்யா அந்யத்கிஞ்சித் கர்தும் த்3ரஷ்டும் ஸ்மர்துமஶக்த: புநரபி ஶேஷபா4வமேவ யாசமாநோ ப4க3வந்தமேவாவிச்சி2ந்ந ஸ்ரோதோரூபேணாவலோகநேநா வலோகயந்நாஸீத (ततश्चानुभूयमानभावविशेषः निरतिशयप्रीत्याऽन्यत्किञ्चित् कर्तुं द्रष्टुं स्मर्तुमशक्तः पुनरपि शेषभावमेव याचमानो भगवन्तमेव अविच्छिन्नस्त्रोतोरूपेणावलोकयन्नासीत)
வ்யா: அநுப4வஜநித ப்ரீதிப்ரகர்ஷத்தாலே வேறொன்றுக்கு ஆளாகாத படி ஸதா3 த3ர்ஶநம் பண்ணிக்கொண்டிருப்பான் என்கிறது “ததஶ்ச –இத்யாதி3யாலே”. “ததஶ்ச” (ततश्च) பின்னையும். “அநுபூ4யமான பா4வவிஶேஷ:” (अनुभूयमानभावविशेषः) அநுப4விக்கப்படா நிற்கிறே ஸர்வேஶ்வரனுடைய ரக்ஷகத்வதி3 ஸ்வபா4வ விஶேஷத்தை யுடையனாய்க் கொண்டென்னுதல், அன்றியே, 200. “தத்3பா4வ பா4வமாபந்ந:” (तद्भाव भावमापन्न🙂 என்கிறபடியே ப4க3வத் ஸ்வபா4வமான அபஹதபாப்மத்வாத்3கு3ணாஷ்டகத்தை அநுப4வித்துக்கொண்டிருக்குமவனாய் என்றுமாம். “நிரதிஶய ப்ரீத்யா” (निरतिशयप्रीत्या) தன்னோபாதி புறம்பில் மிகுதியில்லையென்னும்படியான ப்ரீதியாலே, “அந்யத்கிஞ்சித் கர்தும் த்3ரஷ்டும் ஸ்மர்துமஶக்த:” (अन्यत्किञ्चित् कर्तुं द्रष्टुं स्मर्तुमशक्तः) 201. “ப்ரஹர்ஷேணாऽவருத்3தா4 ஸா வ்யாஜஹார ந கிஞ்சந” (प्रहरषेणाऽवरुद्धा सा व्याजहात न किञ्चन) என்று பிராட்டி, ப்ரீதி ப்ரகர்ஷம் மிடறு பிடிக்கப் பேசாதிருந்தாப்போலே ஆநந்தா3திஶயத்தாலே வேறொன்றைப் பண்ணுதல், நினைத்தல் பார்த்தல் செய்யமட்டாதானாய் என்னுதல், 202. “நோபஜநம் ஸ்மரந்நித3ம் ஶரீரம்” (नोपजनं स्मरन्निदं शरीरं) என்கிறபடியே ஸாம்ஸாரிக வ்யாபாரங்களைத் தவிர்த்தென்னவுமாம்.
“புநரபி ஶேஷபா4வமேவ யாசமாந:” (पुनरपि शेषभावमेव याचमान:) ஶேஷபா4வம் பெற்றிருக்கச் செய்தேயும் அதின் இனிமையாலே “இது நிலைநிற்கப் போகிறேதோ” என்கிற அதிஶங்கையாலே பின்னையுமிப்படிப்பட்ட இந்த ஶேஷபா4வம் குலையாதே நிலைநிற்க வேணுமென்று வேண்டிக்கொண்டு. “ப4க3வந்தமேவ” (भगवन्तमेव) ஶ்ரீவைகுண்ட2நாத2னையே “அவிச்சி2ந்ந ஸ்ரோதோரூபேணாவலோகநேந” (अविच्छिन्नस्त्रोतोरूपेणावलोक) இடைவிடாமலிருக்கும் தா4ராரூபமான பார்வையாலே. “அவலோகயந்நாஸீத” (वलोकयन्नासीत) பார்த்துக்கொண்டிருக்கக்கடவன்.
“அந்யத்கிஞ்சித்கர்தும்–இத்யாதி3” (अन्यत्किञ्चित् कर्तुं) 203. “நாஶ்நந்தி ந பிப3ந்தி ஏததே3வாऽம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி” (नाश्नन्ति न पिबन्ति एतदेवाऽमृतं दृष्ट्वा तृप्यन्ति) என்கிறபடியே புறம்புள்ள அன்னபானாதி3களைப் பண்ணாதே ஸதா3 த3ர்ஶநம் பண்ணியிருப்பானென்றாகவுமாம்.
ஆறாம் சூர்ணை அவதாரிகை:
மூ: ததோ ப4க3வதா ஸ்வயமேவாத்ம ஸஞ்ஜீவநேநாவலோகநேநாவலோக்ய ஸஸ்மிதமாஹூய ஸமஸ்தக்லேஶாபஹம் நிரதிஶய ஸுகா2வஹமாத்மீயம் ஶ்ரீமத்பாதா3ரவிந்த3யுக3ளம் ஶிரஸி க்ருதம் த்4யாத்வா அம்ருதஸாக3ராந்தர்நிமக்3ந ஸர்வாவயவஸ்ஸுக2மாஸீத. (ततो भगवता स्वयमेवात्मसञ्जीवनेनावलोकनेनावलोक्य सस्मितमाहूय समस्तक्लेशापहं निरतिशयसुखावहमात्मीयं श्रीमत्पादारविन्दयुगलं शिरसि कृतं ध्यात्वाऽमृतसागरान्तः निमग्नसर्वावयवः सुखमासीत)
லக்ஷ்மீபதேர்யதி4பதேஶ்ச த3யைகதா4ம்நோ யோऽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜக3த்3தி3தார்த2ம்। ப்ராப்யம் ப்ரகாஶயது ந: பரமம் ரஹஸ்யம் ஸம்வாத3 ஏஷ ஶரணாக3தி மந்த்ரஸார: ॥
(लक्षमीपतेर्यधिपतेश्च दयैकधाम्नो योऽसौपुरा समजनिष्ट जगद्दितार्थं। प्राप्यं प्रकाशयतु न: परमं रहस्यं सम्वाद एष शरणागति मन्त्रसार:॥)
॥ இதி ஶ்ரீப4க3வத்3ராமாநுஜவிரசிதம் ஶ்ரீவைகுண்ட2க3த்3யம் ஸம்பூர்ணம் ॥
(॥ इति श्रीभगवद्रामानुजविरचित श्रीवैकुण्ठगद्यं सम्पूर्णम् ॥)
வ்யா: அநந்தரம் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்திலே முடிசூடுமரசாய் ஸுக2மே வர்த்திப்பானென்கிறது “ததோ ப4க3வதேத்யாதி3” (ततो भगवत्) “அவன் எவ்விடத்தான் யான் ஆர்” [திருவாய் 5-1-7] என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலநிற்க, அழகிய கடாக்ஷத்தாலே குளிரப் பார்த்து “ஈஶ்வரோஹம்” என்றிருந்தவன் “தா3ஸோஹம்” என்று ஒதுங்குவதே!” என்று ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே முறுவல் செய்து 204. “ஆஶயா யதி3வா ராம: புநஶ்ஶப்3தா3வயேதி3தி” (आशया यदिवा राम: पुनश्शब्दावयेदिति) என்று ஸுமந்த்ரன் ஆசைப்பட்டாப்போலே அழகிய திருமிடற்றோசையாலே அருளப் பாடிட்டு, “ஸமஸ்தக்லேஶாபஹம்” (समस्तक्लेशापहं) ஸாம்ஸாரிகமான ஸமஸ்த க்லேஶங்களையும் போக்கக்கடவதாய் “நிரதிஶய ஸுகா2வஹம்” (निरतिशय सुखावहं) நிரதிஶயமான ஸுக2த்தை பண்ணக்கடவதாய் “ஆத்மீயம்” (आत्मीयं) தன்னுடையதாய் “ஶ்ரீமத்” (श्रीमत्) நிரதிஶய போ4க்3யமான “பாதா3ரவிந்த3யுக3ளம்” (पादारविन्दयुगलं) திருவடித்தாமரைகளை, “ஶிரஸி க்ருதம் த்4யாத்வா” (शिरसि कृतं ध्यात्वा) தன் தலையிலே வைத்தானாக த்4யாநம் பண்ணி “அம்ருதஸாக3ராந்தர்நிமக்3ந ஸர்வாவயவஸ்ஸுக2மாஸீத” (अमृतसागरान्तः निमग्नसर्वावयवः सुखमासीत) ஆநந்த3மாகிறே அம்ருத ஸமுத்3ரத்துக்குள்ளே அழுந்தின ஸர்வாவயவங்களையுடையனாய் கொண்டு ஸுக2மே வர்த்திப்பார். ஒன்றாகச் சொல்லிற்றாயிற்று; ஸ்வரூபநுரூபமான ப்ரபத்தியையே உபாயமாகக் கொண்டு ப்ராக்ருத மண்ட3லத்தை விட்டு அப்ராக்ருதமான தே3ஶத்திலே ஸூரிபரிஷத் ஸேவ்யனான ஶ்ரீவைண்ட2நாத2னைக் கிட்டி கைங்கர்ய ப்ரார்த்த2னா பூர்வகமாக கைங்கர்யத்தைப் பெற்று யாவதா3த்மபா4வி ஆநந்த3 நிர்ப4ரனாயிருக்கும் என்கிறது.
॥ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே ஶரணம் ॥
॥ பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த க3த்3யத்ரய வ்யாக்யாநம் முற்றிற்று॥