Thiruvoymozhi 3-10
திருவாய்மொழி மூன்றாம் பத்து பத்தாம் திருவாய்மொழி சன்மம் பலபல செய்து வெளிப் பட்டுச் சங்கொடு சக்கரம் வில் * ஒண்மை யுடைய உலக்கை ஒள்வாள் தண்டு கொண்டு, புள்ளூர்ந்து * உலகில் வன்மை யுடைய அரக்கர் அசுரரை, மாளப் படை பொருத * நன்மை யுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே. 3.10.1 குறைவில் தடங்கடல் கோள் அரவேறித் தன்கோலச் செந்தாமரைக் கண் * உறைபவன் போல ஓர் […]
Thiruvoymozhi 3-9
திருவாய்மொழி மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி சொன்னால்விரோதமிது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ * என்னாவிலின் கவி, யானொருவர்க்கும் கொடுக்கிலேன் * தென்னா தெனா வென்று, வண்டு முரல் திருவேங்கடத்து * என்னானை என்னப்பன் எம்பெருமான், உளனாகவே. 3.9.1 திருவேங்கடம் திருப்பதி உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை * வளனா மதிக்கும், இம் மானிடத்தைக் கவி பாடியென்? * குளனார் கழனிசூழ், கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே * உளனாய எந்தையை […]
Thiruvoymozhi 3-8
திருவாய்மொழி மூன்றாம் பத்து எட்டாம் திருவாய்மொழி முடியானே ! மூவுலகும் தொழுதேத்தும் சீர் அடியானே ! * ஆழ்கடலைக் கடைந்தாய் !, புள்ளூர் கொடியானே ! * கொண்டல் வண்ணா !, அண்டத்து உம்பரில் நெடியானே ! * என்று கிடக்கும், என் நெஞ்சமே. 3.8.1 நெஞ்சமே நீள் நகராக இருந்த, என் தஞ்சனே ! * தண்ணிலங்கைக்கு, இறையைச் செற்ற நஞ்சனே ! * ஞாலம் கொள்வான், குறளாகிய வஞ்சனே […]
Thiruvoymozhi 3-7
திருவாய்மொழி மூன்றாம் பத்து ஏழாம் திருவாய்மொழி பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப், பங்கயக் கண்ணனைப் * பயில இனிய, நம் பாற்கடல் சேர்ந்த பரமனைப் * பயிலும் திருவுடையார் யவரேலும், அவர் கண்டீர் * பயிலும் பிறப்பிடை தோறு, எம்மை யாளும் பரமரே. 3.7.1 திருப்பாற்கடல் ஆளும் பரமனைக் கண்ணனை, ஆழிப்பிரான் தன்னைத் * தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன், எம்மான் தன்னைத் * தாளும் தடக்கையும் கூப்பிப், பணியுமவர் கண்டீர் […]
Thiruvoymozhi 3-6
திருவாய்மொழி மூன்றாம் பத்து ஆறாம் திருவாய்மொழி செய்ய தாமரைக் கண்ணனாய் உலகேழும் உண்ட அவன் கண்டீர் * வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்ச்* செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டிவை படைத்தான் * பின்னும்மொய்கொள் சோதியோடாயினான் ஒருமூவராகியமூர்த்தியே. 3.6.1 மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச் * சாவ முள்ளன நீக்குவானைத் தடங்கடல் கிடந்தான் தன்னைத் * தேவ தேவனைத், தென்னிலங்கை யெரியெழச் செற்ற […]
Thiruvoymozhi 3-5
திருவாய்மொழி மூன்றாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற * கைம்மாவுக்கு அருள்செய்த கார்முகில்போல் வண்ணன் கண்ணன் * எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் * கருமமென்? சொல்லீர் தண்கடல் வட்டத்துள்ளீரே! 3.5.1 தண்கடல் வட்டத்துள்ளாரைத் தமக்கிரையாத் தடிந்துண்ணும் * திண்கழற் காலசுரர்க்குத் தீங்கிழைக்கும் திருமாலைப் * பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழலாதார் * மண்கொளுலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே. […]
Thiruvoymozhi 3-4
திருவாய்மொழி மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி புகழும் நல்ஒருவனென்கோ? பொருவில்சீர்ப் பூமியென்கோ ? * திகழும் தண்பரவையென்கோ ? தீயென்கோ ? வாயுவென்கோ ?* நிகழும் ஆகாசமென்கோ? நீள் சுடரிரண்டுமென்கோ ? * இகழ்வில் இவ்வனைத்து மென்கோ? கண்ணனைக் கூவுமாறே. 3.4.1 கூவுமாறறிய மாட்டேன், குன்றங்க ளனைத்து மென்கோ ? * மேவுசீர் மாரியென்கோ ? விளங்கு தாரகைகளென்கோ ? * நாவியல் கலைகளென்கோ ? ஞான நல்லாவி யென்கோ ? * பாவுசீர்க் கண்ணன் […]
Thiruvoymozhi 3-3
திருவாய்மொழி மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி ஒழிவில் காலமெல்லாம், உடனாய் மன்னி * வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் * தெழிகுரலருவித், திருவேங்கடத்து * எழில்கொள் சோதி, எந்தை தந்தை தந்தைக்கே. 3.3.1 திருவேங்கடம் திருப்பதி எந்தை தந்தை தந்தை, தந்தை தந்தைக்கும் முந்தை * வானவர், வானவர் கோனொடும் * சிந்து பூ மகிழும், திருவேங்கடத்து * அந்தமில் புகழ்க், காரெழிலண்ணலே. 3.3.2 திருவேங்கடம் திருப்பதி அண்ணல் […]
Thiruvoymozhi 3-2
திருவாய்மொழி மூன்றாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி முந்நீர் ஞாலம் படைத்த, என்முகில் வண்ணனே ! * அந்நாள் நீ தந்த, ஆக்கையின் வழி உழல்வேன் * வெந்நாள் நோய் வீய, வினைகளை வேரறப் பாய்ந்து * எந்நாள் யான் உன்னை, இனி வந்து கூடுவனே? 3.2.1 வன்மா வைய மளந்த, எம் வாமனா ! * நின் பன்மாமாயப் பல்பிறவியில், படிகின்ற யான் * தொன்மா வல்வினைத் தொடர்களை, முதலரிந்து * […]
Thiruvoymozhi 3-1
திருவாய்மொழி மூன்றாம் பத்து முதல் திருவாய்மொழி முடிச்சோதியாய், உனது முகச்சோதி மலர்ந்ததுவோ ? * அடிச்சோதி, நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ ? * படிச்சோதி யாடையொடும், பல்கலனாய் * நின் பைம் பொன் கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே. 3.1.1 கட்டுரைக்கில், தாமரை நின் கண் பாதம் கையொவ்வா * சுட்டுரைத்த நன் பொன், உன் திருமேனி யொளி யொவ்வாது * ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப், புகழ்வெல்லாம் பெரும்பாலும் […]