Thiruvoymozhi 3-2

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

முந்நீர் ஞாலம் படைத்த, என்முகில் வண்ணனே ! *

அந்நாள் நீ தந்த, ஆக்கையின் வழி உழல்வேன் *

வெந்நாள் நோய் வீய, வினைகளை வேரறப் பாய்ந்து *

எந்நாள் யான் உன்னை, இனி வந்து கூடுவனே?           3.2.1

வன்மா வைய மளந்த, எம் வாமனா ! * நின்

பன்மாமாயப் பல்பிறவியில், படிகின்ற யான் *

தொன்மா வல்வினைத் தொடர்களை, முதலரிந்து *

நின்மாதாள் சேர்ந்து நிற்பது, எஞ்ஞான்று கொலோ?    3.2.2

கொல்லா மாக்கோல், கொலை செய்து * பாரதப் போர்

எல்லாச் சேனையும், இரு நிலத்து அவித்த எந்தாய் ! *

பொல்லா வாக்கையின் புணர்வினை அறுக்கலறா *

சொல்லாய், யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே.               3.2.3

சூழ்ச்சி ஞானச் சுடர், ஒளியாகி * என்றும்

ஏழ்ச்சிக் கேடின்றி, எங்கணும் நிறைந்த எந்தாய் ! *

தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து, நின் தாளிணைக் கீழ்

வாழ்ச்சி * யான் சேரும் வகை, அருளாய் வந்தே.        3.2.4

வந்தாய் போலே வந்தும், என் மனத்தினை நீ *

சிந்தாமல் செய்யாய், இதுவே இதுவாகில் *

கொந்தார் காயாவின் கொழுமலர்த் திருநிறத்த

எந்தாய் ! * யான் உன்னை, எங்கு வந்தணுகிற்பனே?               3.2.5

கிற்பன் கில்லேனென்றிலன், முனநாளால் *

அற்ப சாரங்கள் அவை, சுவைத்தகன்றொழிந்தேன் *

பற்பல்லாயிரம் உயிர் செய்த, பரமா! நின்

நற் பொற் சோதித் தாள், நணுகுவது எஞ்ஞான்றே?     3.2.6

எஞ்ஞான்று நாம் இருந்திருந்து, இரங்கி நெஞ்சே ! *

மெய்ஞ்ஞானமின்றி, வினையியல் பிறப்பழுந்தி *

எஞ்ஞான்றும் எங்கும், ஒழிவற நிறைந்து நின்ற *

மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை, மேவுதுமே.       3.2.7

மேவு துன்ப வினைகளை, விடுத்துமிலேன் *

ஓவுதலின்றி, உன் கழல் வணங்கிற்றிலேன் *

பாவு தொல் சீர்க் கண்ணா ! என்பரஞ் சுடரே ! *

கூவுகின்றேன் காண்பான், எங்கெய்தக் கூவுவனே?      3.2.8

கூவிக் கூவிக், கொடுவினைத் தூற்றுள் நின்று *

பாவியேன் பலகாலம், வழி திகைத்து அலமருகின்றேன் *

மேவியன்று ஆநிரை காத்தவன், உலகமெல்லாம்

தாவிய அம்மானை * எங்கு, இனித் தலைப்பெய்வனே ?       3.2.9

தலைப் பெய்காலம், நமன்தமர் பாசம் விட்டால் *

அலைப்பூணுண்ணும், அவ்வல்லலெல்லாம் அகலக் *

கலைப்பல் ஞானத்து, என் கண்ணனைக் கண்டு கொண்டு *

நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது, நீடுயிரே.       3.2.10

உயிர்களெல்லா, உலகமு முடையவனைக் *

குயில் கொள் சோலைத், தென்குருகூர்ச் சடகோபன் *

செயிரில் சொல்லிசை மாலை ஆயிரத்துள், இப்பத்தும் *

உயிரின் மேலாக்கை, ஊனிடை யொழிவிக்குமே.      3.2.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.