[highlight_content]

Thiruvoymozhi 3-9

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

சொன்னால்விரோதமிது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ *

என்னாவிலின் கவி, யானொருவர்க்கும் கொடுக்கிலேன் *

தென்னா தெனா வென்று, வண்டு முரல் திருவேங்கடத்து *

என்னானை என்னப்பன் எம்பெருமான், உளனாகவே.          3.9.1      திருவேங்கடம் திருப்பதி

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை *

வளனா மதிக்கும், இம் மானிடத்தைக் கவி பாடியென்? *

குளனார் கழனிசூழ், கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே *

உளனாய எந்தையை எந்தை பெம்மானை, ஒழியவே.         3.9.2      திருக்குறுங்குடி

ஒழிவொன் றில்லாத, பல்லூழி தோறூழி நிலாவப் * போம்

வழியைத் தரும், நங்கள் வானவரீசனை நிற்கப் போய்க் *

கழிய மிக நல்ல வான் கவி கொண்டு, புலவீர்காள் ! *

இழியக் கருதி, ஓர் மானிடம் பாடல் என்னாவதே ?    3.9.3

என்னாவது? எத்தனை நாளைக்குப் போதும் ? புலவீர்காள் ! *

மன்னா மனிசரைப் பாடிப், படைக்கும் பெரும் பொருள் *

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப், பாடினால் *

தன்னாகவே கொண்டு, சன்மஞ் செய்யாமையும் கொள்ளுமே.      3.9.4

கொள்ளும் பயனில்லைக், குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை *

வள்ளல் புகழ்ந்து, நும் வாய்மை யிழக்கும் புலவீர்காள் ! *

கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும், கோதி(ல்என்)லன் *

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.            3.9.5

வம்மின் புலவீர் ! நும்மெய் வருத்திக், கைசெய்து உய்ம்மினோ *

இம் மன்னுலகில் செல்வர் இப்போதில்லை, நோக்கினோம் *

நும் இன் கவி கொண்டு, நும் நும் இட்டா தெய்வ மேத்தினால் *

செம்மின் சுடர்முடி, என் திருமாலுக்குச் சேருமே.       3.9.6

சேரும் கொடை புகழ், எல்லை யிலானை * ஓராயிரம்

பேருமுடைய பிரானை யல்லால், மற்று யான் கிலேன் *

மாரியனைய கை, மால்வரை யொக்கும் திண் தோளென்று *

பாரிலோர் பற்றையைப், பச்சைப் பசும் பொய்கள் பேசவே.             3.9.7

வேயின் மலி புரை தோளி, பின்னைக்கு மணாளனை *

ஆய பெரும் புகழ், எல்லை யிலாதன பாடிப் போய்க் *

காயம் கழித்து, அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன் *

மாய மனிசரை, என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே ?           3.9.8

வாய் கொண்டு மானிடம் பாட வந்த, கவியே னல்லேன் *

ஆய் கொண்ட சீர் வள்ளல், ஆழிப் பிரான் எனக்கே உளன் *

சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும் *

நீ கண்டு கொள்ளென்று வீடும் தரும், நின்று நின்றே.          3.9.9

நின்று நின்று பல நாளுய்க்கும், இவ்வுடல் நீங்கிப் போய்ச் *

சென்று சென்றாகிலும் கண்டு, சன்மம் கழிப்பா னெண்ணி *

ஒன்றி யொன்றி உலகம் படைத்தான், கவி யாயினேற்கு *

என்றுமென்றும் இனி, மற்றொருவர் கவியேற்குமே?  3.9.10

ஏற்கும் பெரும்புகழ் வானவரீசன் கண்ணன் தனக்கு *

ஏற்கும் பெரும் புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் *

ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள், இவையும் ஓர் பத்து *

ஏற்கும் பெரும் புகழ், சொல்ல வல்லார்க்கு, இல்லை சன்மமே.    3.9.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.