Thiruvoymozhi 3-10

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

சன்மம் பலபல செய்து வெளிப் பட்டுச்

சங்கொடு சக்கரம் வில் *

ஒண்மை யுடைய உலக்கை ஒள்வாள்

தண்டு கொண்டு, புள்ளூர்ந்து * உலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை, மாளப் படை பொருத *

நன்மை யுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே.          3.10.1

குறைவில் தடங்கடல் கோள் அரவேறித்

தன்கோலச் செந்தாமரைக் கண் *

உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த

ஒளிமணி வண்ணன் கண்ணன் *

கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி

அசுரரைக் காய்ந்த அம்மான் *

நிறை புகழேத்தியும் பாடியும் ஆடியும்

யான் ஒரு முட்டிலனே.        3.10.2

முட்டில் பல்போகத் தொரு தனி நாயகன் மூவுலகுக்குரிய *

கட்டியைத் தேனை அமுதை நன்பாலைக் கனியைக் கரும்பு தன்னை *

மட்டவிழ் தண்ணந்துழாய் முடியானை வணங்கி, அவன் திறத்துப்

பட்ட பின்னை * இறையாகிலும், யான் என் மனத்துப் பரிவிலனே.       3.10.3

பரிவின்றி வாணனைக் காத்து மென்று

அன்று படையொடும் வந்தெதிர்ந்த *

திரிபுரம் செற்றவனும் மகனும்

பின்னும் அங்கியும் போர் தொலையப் *

பொருசிறைப் புள்ளைக் கடாவிய

மாயனை, ஆயனைப் பொற் சக்கரத்து

அரியினை * அச்சுதனைப் பற்றி

யான் இறையேனும் இடரிலனே.     3.10.4

இடரின்றியே ஒரு நாளொரு போழ்தில் எல்லாவுலகும் கழியப் *

படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடனேறத் திண்தேர் கடவிச் *

சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன்பிள்ளைகளை *

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே.     3.10.5    பரமபதம்

துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்றவண்ணம் நிற்கவே *

துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக், கண் காண வந்து *

துயரங்கள் செய்து தன் தெய்வ நிலையுலகில் புகவுய்க்கும் அம்மான் *

துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர்துன்பமிலனே.           3.10.6

துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய் *

இன்பமில் வெந்நரகாகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய் *

மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குக்களால் *

இன்புறும் இவ்விளையாட்டுடையானைப்பெற்று ஏதும் அல்லலிலனே.         3.10.7

அல்லலிலின்ப மளவிறந்து, எங்கும் அழகமர் சூழொளியன் *

அல்லி மலர்மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் *

எல்லையில்ஞானத்தன் ஞானமஃதேகொண்டுஎல்லாக்கருமங்களும்செய்*

எல்லையில்மாயனைக் கண்ணனைத்தாள்பற்றி, யான்ஓர்துக்கமிலனே.            3.10.8

துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாயலங்கல் பெருமான் *

மிக்க பல் மாயங்களால் விகிருதம் செய்து வேண்டு முருவு கொண்டு *

நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் * தன்னுள்

ஒக்கவொடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்விலனே.          3.10.9

தளர்வின்றியே என்றும்எங்கும்பரந்த தனிமுதல்ஞானமொன்றாய்*

அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் *

வளரொளி யீசனை மூர்த்தியைப் பூதங்களைந்தை இருசுடரைக் *

கிளரொளிமாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யான்என்றும்கேடிலனே.         3.10.10

கேடில்விழுபுகழ்க் கேசவனைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *

பாடலோராயிரத்துள் இவையுமொருபத்தும் பயிற்றவல்லார்கட்கு*அவன்

நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி *

வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும், ஒரு நாயகமே.        3.10.11

***********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.