Thiruvoymozhi 3-3

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

ஒழிவில் காலமெல்லாம், உடனாய் மன்னி *

வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் *

தெழிகுரலருவித், திருவேங்கடத்து *

எழில்கொள் சோதி, எந்தை தந்தை தந்தைக்கே.          3.3.1      திருவேங்கடம் திருப்பதி

எந்தை தந்தை தந்தை, தந்தை தந்தைக்கும்

முந்தை * வானவர், வானவர் கோனொடும் *

சிந்து பூ மகிழும், திருவேங்கடத்து *

அந்தமில் புகழ்க், காரெழிலண்ணலே.       3.3.2      திருவேங்கடம் திருப்பதி

அண்ணல் மாயன், அணிகொள் செந்தாமரைக்

கண்ணன் * செங்கனிவாய்க், கருமாணிக்கம் *

தெண்ணிறைச் சுனைநீர்த், திருவேங்கடத்து *

எண்ணில் தொல் புகழ், வானவரீசனே.    3.3.3      திருவேங்கடம் திருப்பதி

ஈசன் வானவர்க் கென்பன், என்றால் * அது

தேசமோ, திருவேங்கடத்தானுக்கு ? *

நீசனேன், நிறைவொன்றுமிலேன் * என் கண்

பாசம் வைத்த, பரஞ்சுடர்ச் சோதிக்கே.      3.3.4      திருவேங்கடம் திருப்பதி

சோதியாகி, எல்லா வுலகும் தொழும் *

ஆதிமூர்த்தி யென்றால், அளவாகுமோ ? *

வேதியர் முழு வேதத்து, அமுதத்தைத் *

தீதில் சீர்த், திருவேங்கடத்தானையே.       3.3.5      திருவேங்கடம் திருப்பதி

வேங்(ம்) கடங்கள் மெய், மேல் வினை முற்றவும் *

தாங்கள் தங்கட்கு, நல்லனவே செய்வார் *

வேங்கடத் துறைவார்க்கு, நமவென்ன

லாம் கடமை * அது, சுமந்தார் கட்கே.      3.3.6      திருவேங்கடம் திருப்பதி

சுமந்து, மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு *

அமர்ந்து வானவர், வானவர் கோனொடும் *

நமன்றெழும், திருவேங்கடம் நங்கட்குச்*

சமன் கொள் வீடு தரும், தடங்குன்றமே.             3.3.7      திருவேங்கடம் திருப்பதி

குன்றமேந்திக், குளிர் மழை காத்தவன் *

அன்று, ஞாலம் அளந்த பிரான் * பரன்

சென்று சேர், திருவேங்கட மாமலை *

ஒன்றுமே தொழ, நம் வினை ஓயுமே.      3.3.8      திருவேங்கடம் திருப்பதி

ஓயு மூப்புப், பிறப்பு இறப்புப் பிணி *

வீயுமாறு செய்வான், திருவேங்கடத்து

ஆயன் * நாள் மலராம், அடித் தாமரை *

வாயுள்ளும் மனத்துள்ளும், வைப்பார்கட்கே.      3.3.9      திருவேங்கடம் திருப்பதி

வைத்த நாள் வரை எல்லை குறுகிச், சென்று *

எய்த்திளைப்பதன் முன்னம், அடைமினோ *

பைத்த பாம்பணையான், திருவேங்கடம் *

மொய்த்த சோலை, மொய் பூந்தடம் தாழ்வரே.        3.3.10    திருவேங்கடம் திருப்பதி

தாள் பரப்பி, மண் தாவிய ஈசனை *

நீள்பொழில், குருகூர்ச் சடகோபன் சொல் *

கேழிலாயிரத்து, இப்பத்தும் வல்லவர் *

வாழ்வர் வாழ்வெய்தி, ஞாலம் புகழவே.            3.3.11    திருவேங்கடம் திருப்பதி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.