[highlight_content]

Thirumozhi 6-6

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

ஆறாம் திருமொழி

அம்பரமும் பெருநிலனும் திசைகளெட்டும்

அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் *

கொம்பமரும் வடமரத்தி னிலைமேல், பள்ளி

கூடினான் திருவடியே கூடுகிற்பீர் ! *

வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு

மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகு *

செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.                6.6.1      திருநறையூர்

கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்ட காலம்

குலவரையின் மீதோடி அண்டத்தப்பால் *

எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை

இணையடிக்கீழ் இனிதிருப்பீர் ! இனவண்டாலும் *

உழும் செறுவில் மணிகொணர்ந்து கரை மேல் சிந்தி

உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள *

செழும் பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.                6.6.2      திருநறையூர்

பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப்

பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா *

செவ்வி மாதிரமெட்டும் தோளா, அண்டம்

திருமுடியா நின்றான் பால் செல்லகிற்பீர் ! *

கவ்வை மாகளிறுந்தி விண்ணியேற்ற

கழல் மன்னர் மணிமுடிமேல், காகமேறத் *

தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.                6.6.3      திருநறையூர்

பைங்கணாளரி யுருவாய் வெருவ நோக்கிப்

பருவரைத் தோளிரணியனைப் பற்றி வாங்கி *

அங்கை வாளுகிர் நுதியால் அவனதாகம்

அங்குருதி பொங்குவித்தானடிக் கீழ் நிற்பீர் ! *

வெங்கண் மாகளிறுந்தி விண்ணியேற்ற

விறல் மன்னர் திறலழிய வெம்மா வுய்த்த *

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.                6.6.4      திருநறையூர்

அன்றுலக மூன்றினையும் அளந்து, வேறோர்

அரியுருவாய் இரணியனதாகம் கீண்டு *

வென்றவனை விண்ணுலகில் செலவுய்த்தாற்கு

விருந்தாவீர் ! மேலெழுந்து விலங்கல் பாய்ந்து *

பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப்

புலம்பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் *

தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.                6.6.5      திருநறையூர்

தன்னாலே தன்னுருவம் பயந்ததானாய்த்

தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய் *

தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய்த்

தானாயனாயினான் சரணென்று உய்வீர் ! *

மின்னாடு வேலேந்து விளைந்த வேளை

விண்ணேறத் தனிவேலுய்த்து உலகமாண்ட *

தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.                6.6.6      திருநறையூர்

முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி

முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே *

இலைத் தடத்த குழலூதி, ஆயர் மாதர்

இனவளை கொண்டானடிக் கீழ் எய்துகிற்பீர் ! *

மலைத்தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய

வளங்கொடுக்கும் வருபுனல் அம்பொன்னி நாடன் *

சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.                6.6.7      திருநறையூர்,

துவாரகை (துவரை)

முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்

மன்னெல்லாம் முன்னவியச் சென்று * வென்றிச்

செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்

சிரம் துணித்தான் திருவடி, நும் சென்னி வைப்பீர் ! *

இருக்கிலங்கு திருமொழி வாயெண் தோளீசற்கு

எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட *

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.             6.6.8      திருநறையூர்

தாராளன் தண்ணரங்கவாளன், பூமேல்

தனியாளன் முனியாளரேத்த நின்ற

பேராளன் * ஆயிரம் பேருடைய வாளன்

பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் ! *

பாராளர் அவரிவரென்று அழுந்தை யேற்ற

படை மன்னருடல் துணியப் பரிமா வுய்த்த

தேராளன் * கோச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.       6.6.9      திருவரங்கம்,

திருநறையூர்

செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்

திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலைப் *

பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்

புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த *

அம்மொழிவாய்க் கலிகன்றி இன்பப் பாடல்

பாடுவார், வியனுலகில் நமனார் பாடி *

வெம்மொழி கேட்டு அஞ்சாதே, மெய்ம்மை சொல்லில்

விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே.          6.6.10    திருநறையூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.